வினோத விடிகதை
சுட்டி கதைகள்
Back
வினோத விடிகதை
சிறுமணவூர் முனிசாமி முதலியார்
௳ கடவுள் துணை.
* * *
வினோத விடிகதை
* * *
* * *
இவை-சிறுமணவூர்,
முனிசாமி முதலியா ரவர்களால்
இபற்றப்பட்டு,
* * *
ஆதிபுரி
இரத்தினவேலு முதலியாரது
வாணீவிலாச அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது.
* * *
1911.
* * *
சென்னை நாராயணமுதலி வீதி
52-வது நெ. வீடு.
௳
கடவுள் துணை.
வினோதவிடிகதை.
வருங்காலங் நிகழ்ந்துரைப்பான் சாஸ்திரியல்ல, வாங்கி யுண்ண வழிகார்ப்பான் முடவனல்ல, கரும்பழுகல் மலா முடிப்பான் சுதனுமல்ல, துகளில் பசும்பால் காப்பான் தோட்டியல்ல, பருமமுடல் நீரணிவான் பரமனல்ல, பலரில்லம் தான் புசிக்கும் பர தசியல்ல, சிறந்தவனக் கிளிபோன்ற மொழியினாளே சீறாவிக் கதையை செப்புவாயே. (விநாயகர்)
கூத்துகனக்கே யலைவான் குடியனல்ல, குலமில்லாக் குலம்பு குந்தான் பிடியனல்ல, வாத்திதனை யேபடிக்கான் வம்பனல்ல, மயில்கோழி மிகவளர்த்தான் புறவனல்ல, தோற்றுந்தேன் தினை யுண்டான் வேடனல்ல, திகழ்வேடந் தான் தரிக்கான் சித்தனல்ல, பூத்த மலர்க்கணையுடையாள் தேவியாளே பெண்மயிலே இக்கதையை புகலுவாயே. (சுப்பிரமண்யா)
காணுவதிற் கண்ணிற்படான் அறைந்து போகான் கண்பூதம் நிகரிடஞ் சஞ்சரிப்பான், பூணுகின்ற வஸ்திரமுந் தனை பரிப்பான் புவியெங்கும் போர் புரிந்துக் கோஷ்டங் கொள்வான், கோணமடை மேருவையும் வேர்பரிப்பான், கொடிபலத் தருக்களையு மொடியச் செய்வான், வேணபேர்க கானந்தம் விளையச் செய்வான், விபரமாயி க்கதையை விளம்புவாயே. (காற்று)
ஈரிரண்டு கம்பமுண்டு பண்டபமுமல்ல, இலை பரித்து குலைவ ளர்க்கும் வாழையல்ல, கோர்கொம்புகளை யேந்தும் வேடனல்ல, கூசாமலே புடைக்கு முறமுமல்ல, தாரகுழை மிகவிருக்குஞ் ஜலதாரியல்ல, கட்டி கறந்தாள் விளக்குந் துடப்பமல்ல, கூறுகின்ற விக்கதையின் பொருளைச் சொன்னால் குருவென்றே ஆயிரம் பொன் கொடுக்கலாமே. (யானை)
கட்டியடித்தே யகற்றுங் கருணையல்ல, கான்மாரிப் பாயவிடும் வாய்க்காலல்ல, வெட்டி மரித்துத் திரும்பும் மடையுமல்ல, விலங் கினத்தின் தோல் சுமக்கும் பொதியுமல்ல, பட்டமுடி தான் தரிக்கும் வேங்கனல்ல, பலநாளுமிருப்பை யுண்ணும் பசி தீராது, துட்டனமன் ஜெயிக்கும் போர் வடியினாளே சுந்தரியே யிக்கதையைச்செப்புவாயே. (குதிரை)
கொண்டையிட்டு தான் மினுக்கும் பெண்டுமல்ல, குலவுமணி கழுத்திலிடும் பூஷணமுமல்ல, துண்டுவெளை கொம்புமுண்டு, மரமுமல்ல, துவரைமரை பில்லுமுண்டு புவனமல்ல, செண்டிப்பூ கொளம்புமுண்டு நதியுமல்ல, செலங்கை கொப்பி தார் தரிக்குஞ் சித்தல்ல, வண்டு நிசர் விழியாளே மானே தேனே வளமான விக்கதையை வருந்துவாயே. (மாடு)
கிட்டநின்றால் எட்டிவிடும் பாவையல்ல, கேவலா யொடுங்கி நிற்கும் லஞ்சையல்ல, கட்டு துணி சவளி கொள்ளும் செட்டியல்ல கனத்தமுத்து கல்லெடுக்கும் சவரையல்ல, குட்டியிட்டுச் சுவரிலொ ண்டுந் தேளுமல்ல, குலத்திலே யிகழ்ச்சி யென்பார் புலையனல்ல, வட்டமதிபோலிருக்கும் முகத்தினாளே வஞ்சியரே கொஞ்சதுகுவரு ந்துவாயே. (கழுதை)
குலை குலுக்கும் அழுகலுண்டு தேங்குமல்ல, குலத்திலிசைக் தொழுகாது வேசியல்ல, வலியசண்டைக் கேபுகரும் வண்டவனலல, மனைபுகுந்து அடிமயக்குந் திருடனல்ல, அலைந்துமிகத் தானுழலும் பித்தனல்ல, அதட்டி நின்றால் கால் தூக்கிக் காட்டச்சொல்லு, கலை போன்ற மிரண்டவழி யாரணங்கே கண்மணியே யிக்கதையின் கருத்தைச் சொல்லே. (காய்)
பள்ளம் வெட்டி குழிபறிக்கும் ஒட்டனல்ல, பருத்தன்றுங் கிழ ங்கெடுக்கும் வில்லியல்ல, பிள்ளைகளை மிகப்பெருக்கும் பிரமநல்ல பேதையிடஞ் சஞ்சரிக்குந் தரித்திரமல்ல, உள்ளதெல்லாம் வாங்கி யுண்ணுந் தொழும்பனல்ல, ஊரைசுத்திப் படுத்துழுவா னுறங்கமா ட்டான், சொல்லுகின்ற யிக்கதையின் பொருளைச்சொன்னால் சுற்ற மென்றே உன்வாக்கை சூழலாமே. (பன்றி)
பார்த்து முகம் பலகாட்டுங் கண்ணாடியல்ல பசகளிடசேஷ்டை செய்யும் வேசியல்ல, கூத்தாடி பணம் பரிக்குந் தாசியல்ல, குந்திச த்து மிருக்காது நாயுமல்ல, போற்றுகின்ற கொடியாகும் பனலும் அல்ல, போர்புகுந்து ஜெயமடையும் விஜயனல்ல, சாற்றுகின்ற விக்கதையின் பயனைச் சொன்னால் சாணமென்றே அவரடியைச் சாரலாமே. (குரங்கு)
படுக்கைக்கே யரைதேடுங் கக்தியல்ல, பாலுக்குப் பாத்திரங் தேடும் பசுவுமல்ல, துடுக்குக்கே யிருள் தேடுங் கூத்தியல்ல, சொல் லுக்கே பதுங்கிநிற்குக் தோகையல்ல, இடுக்குக்கே தானோடுந் தே ளுமல்ல, இறைச்சிக்கே வழிபார்க்கும் நாயுமல்ல, படித்து விட்ட இக்கதைக்குப் பயனைச் சொன்னால் பரமெனென்றே அவரடியைப்பணி யலாமே. (பூனை)
நீலக்கண்ணாடி கொள்ளுங் கரையல்ல, நேத்தியுடன் தான் விரிக்குங் கடையுமல்ல, கால் தூக்கி நடனமிடுங் காளியல்ல, காலில் கொண்டே பாம்பாட்டுஞ் ஜோகியல்ல, மேல் நிறைந்த பொட்டுமுண்டு வானமல்ல, மேன்மைமிக்க கொண்டாடும் வேந்தனல்ல, பாலுக்கு நிகரான மொழியினாளே, பத்தினியே யிக்கதையை பகருவா யே. (மயில்)
பச்சைநிற மேனியுண்டு விஜயனல்ல, பவழயிதழ் வாயுமுண்டு கோவையல்ல, உச்சிதலை பேடியுண்டு மைநாவல்ல, உட்கழுத்தில் நீலமுண்டு நக்கனல்ல, இச்சையுடன் சிறையிலிருந் திருடனல்ல, இ னிமைமொழி தான் புகழும் மனிதனல்ல, கச்சைதனக் கேயடங்கா ஸ்எனத்தினாலே காதழியே யிக்கதையைக் கழறுவாயே (கிளிப்பிள்)
கருகருத்த நிறமுடனுங் காலனல்ல, கண்கலந்தே பார்வைகொ ளுங்கபோதியல்ல, திருச்சலெண்ணைக் குடிபுகழும் மடந்தையல்ல, சிறுவரிடம் பரித் துண்ணும் திருடனல்ல, பருப்பரிசைக் கண்டலை வான் பார்ப்பானலல, பார்த்திருக்கக் கொள்ளை கொள்ளுஞ் சிகப்பனல்ல, திருநிலத்தின் நிகறாளே தெய்வமானே தேவியரே யிக்கதையை தெளியச்சொல்லே. (கப்பல்)
மண்ணலைந்து சேர் துவைக்குங் குயவனல்ல, மதித்துவயல் போல் காக்கும் மனிதனல்ல, கண்ணிரண்டு குழிந்து நிற்கும் குருடனல்ல, கற்கோட்டை யுள்ளிருக்கும் வேந்தனல்ல, எண்ணமுடன் பகைஞர் பசியைத் தீர்ப்பான் ஈரைந்து நாமுடையோன் பரமனல்ல பெண்ணனங்கே யிக்கதையின் பயனைச்சொல்லி பக்குவமாய் ஆயி சம்பொன் பரித்திடாயே. (நண்டு)
மரத்திலொட்டியே வசிக்கும் வவ்வாளல்ல, மரவுரியைத் தரித்திருக்கும் யோகியல்ல, சிரசில் கங்கைச் சடையுண்டு முடமுமல்ல, உருவுகொண்ட பருத்திருக்கும் கட்டியல்ல, உச்சியிலே குடுமியுண் செட்டியல்ல, கரத்தின் வளை கலகலென கடையினானே கற்பகமே அற்புதத்தை கண்டிடாயே. (தேன்கூண்டு)
சொத்துக்கே வழிபார்ப்பான் பகையாளியல்ல, குளிநீருக்கே யிசைவான் தபசியல்ல, புத்திரனால் தானிறப்பா னிரண்யனல்ல, போற்றுமலர்க் காசளிப்பான் குபேரனல்ல. நத்தினவனுக்கே நான் குமுகமாயாவான், நந்தன் முகமாய்ப் போற்றியரைப் பெற்றெடுப் பான், சித்தத்தில் யிக்கதையின் பயனைக்கொண்டு சேயிழையே சபைநடுவே சொல்லுவாயே. (வாழைமரம்)
காதல் கொண்டே சாந்தொடுக்கும் மதனுமல்ல காயமெங்கும் வெளுத்திருக்கும் பாண்டுமல்ல, வேதனையாய் சேர்ந்தணையும் புரு டரல்ல, விலைகாட்டி பணம் பறிக்கும் விலக்குமல்ல மாதர்கள் மேல் வீற்றிருக்கும் பணியுமல்ல மணஞ்செய்கே வாழும் மணவாளனல்ல போகமரை கற்றுணர்ந்த பெரியோர் முன்னே பேசினேன் இதன் பொருளை புகல்வீரையா. (மல்லிகைப்பூ)
சோலை கண்டே யுள்ளிருக்கும் மந்தியல்ல துடிசிகப்பு மஞ்சலி டுந் தோகையல்ல, ஆலைவைத்தே யரைக்கவருந் தனவானல்ல அரு ட்சுவை தந் தேயளிக்குந் தேனுமல்ல, கோலுகொண்டுச் சார்விழியும் கள்ளுமல்ல, கொப்பறையிற் கொண்டுவிடும் எண்ணையல்ல, வாலை யெனப் பருவமுள மானே தேனே வண்மையாய் பிக்கதையை வழுத்திடாயே. (கரும்பு)
ஒற்றைக்கொம்பி லேறிநிற்கும் பட்சியல்ல, உட்கழுத்தி லரும் புமிட்டு புட்பமல்ல, கொத்துவட மணிதரிக்கும் கொட்டி கடபல்லி ளிக்கும் குரங்குமல்ல, வெற்றிசண்டை தானறியும் மல்லனல்ல, விருத்து கலம் புகுந்து ழலுங் கத்தியல்ல, கொத்து மணித் தாவடங்கள் பூண்டமாதே கோதையரே இக்கதையைக்கூறுவாயே. (சோளம்)
கட்டிகளம் போர்புரியும் வீரனல்ல, காளியெங்குஞ் சுற்றிவருங் கடம்பனல்ல, இட்டமுடன் மனையாலும் புருடனல்ல, இருப்பவர் மேற் துஜந்தொடுக்கும் பித்தனல்ல, சட்ட முடன் குத்துக்கே சளைக்கமாட்டான், சகலருக்கும் வைத்தெரிச்சல் தள்ளிக்கார்ப்பான், அட்டதிக்குச் சுத்திவரும் மதிக்கொப்பான ஆரணங்கே யிக்கதையை மறிந்திடாயே. (நெல்லு)
மஞ்சள் தனை மெய்யணியும் மடைந்தயல்ல, மணம் புணர்ந்தே மயக்கமிடுந் தாதியல்ல, கொஞ்சிபல பேரேந்திக் குழந்தையல்ல, கொற்றவர்களிடம்புகருந் திருவுமல்ல, பிஞ்சகன்மேல் நின்றாடும் பாம்புமல்ல, பிரியமுடன் தனையருத்தம் மதுவுமல்ல, கொஞ்சுகிளி மொழியணங்கே பருவமானே குணமான பிக்கதையைக்கூறுவாயே. (எலுமிச்சம்பழம்)
வழுத்துவே குடலுமுண்டு ஜீவிப்பதல்ல, வரிபிரம்பு முதுகி லுண்டு பிரம்புமல்ல, பழுத்தநிற மேனியுண்டு கிழவனல்ல, பலவி டத்தில் தான் படுக்கும் பித்தனல்ல, குழித்தபெரு வாயருமுண்டு பேழையல்ல, கொடியிட்டே தான் வசிக்கும் வேந்தனல்ல செழித்த மலர் முகத்தாளே மானே தேனே செண்பகமே யிக்கதையை செப்புவாயே. (பூசனிக்காய்)
தலைபெருத்துத் தடிமுழங்கு மகப்பையல்ல, தன்வாயால் மாங் கொத்தும் மாவையல்ல, வலிய புயந்தட்டி யேழும் மல்லரல்ல, வாழ்குலத்தையே யழித்தான் சகுனியல்ல, குலைகளவுக்கே யிசைவான் குரூரனல்ல, குவலயத்தில் நம்மாலே குலைஞ்ஞரானார் சிலையனைய வடிவாளே ரூபவல்லி சீரானயிக்கதையைச்செப்புவாயே. (கோடாலி)
காட்டிவிற்குக் குண்டுண்டு கோலியல்ல, கனியுண்டு வெட்டு ண்டு வங்கமல்ல, வாடியிட்டச் சுருளுண்டு வோலையல்ல வழுத்து களி மண்ணு முண்டு பூமியல்ல, பாட்டியைக்கும் சபைக்கு வரும் பரத்தையல்ல, பலரிடமு முன்னிருந்து பகாச் செய்யும், நாட்டி சலுனக் கீடல்லா நயன மானே நாயகமே மிக்கதையை நாட்டு வாயே. (கொட்டைப்பாக்கு)
கண்டித்தே குழிரிகுவான் குழியுங் கொள்வான் கசக்கி ஜலம் பிழிந்திடுவான், வண்ணானல்ல அண்டிநின்றுத் தானுழல்வார் தாசனல்ல, அகன்றிடுவார் பாமுழல்வார் விலைமாதரல்ல, கொண்டு குடமேந்தி நிற்பார் சோதியல்ல, கூச்ச விட்டே வகுபுகையின் வண்டி மல்ல, தண்டை சிலம் போசையிடும் பாதத்தாளே தந்திரமா யிக்க தையை சாற்றுவாயே. (செக்கு)
காலுமிரண்டுண் டெழுந்து நடக்க மாட்டாள் கண்ணிரண்டும் மேல்சிமிட்டி விழிக்கமாட்டாள் கோலுண்டு கானருப்பாள் கத்திய ல்ல, கூன்வளர்ந்து முதுகு முண்டு நிமிரமாட்டாள் பாலுகந்து குடித்தறியாள் பாக்குத் தின்பாள் பகருமணல் மூட்டி யிலைவடிதே வாழ்வாள் மேலினிய வாசமது விசுமானே மெல்லியரே கதை விபரம் விடிவிப்பாயே. (பாக்குவெட்டி)
உடல் நீண்ட பாதமுண்டு கிண்ணமல்ல, உச்சிதமெய்க்கண்களு முண்டிந்திரனல்ல, முடியில் கலசுங்குண்டு குல்லாவல்ல முழையைப்போல் துவாரமுண்டு புருசுமல்ல இடநிறைந்த சபையாடும் லவரல்ல இசையுடன் படி நடக்குந் தாசியல்ல குடைத்தநிகர் முகமாதே கோமளாங்கிநீ கூசாமல் கதை விபரம் கூறுவாயே. (நாகசுரம்)
வாய்தனிலே நெருப்பெரியும் பேயு மல்ல வாய்வையுண்டு வயர் வளர்க்கும் பாம்புமல்ல, தேய்வுடன் வாய்வைக் கூட்டுந் தேவனல்ல செங்கையால் மூடித்திறக்குஞ் சிமிழுமல்ல, பாய்படுத்துக்கால்கிளப்பும் பம்பரத்தையல்ல படியிலுள்ள சொல்லரில் வாழ்மங்கையல்ல, செய்போன்ற குகலைமொழி யாரணங்கே சித்திரமே யிக்கதையை செப்புவாயே. (துருத்தி)
மோதிரமும் வளை பூணும் மாது மல்ல, முழுதலைக் கெண்ணெய் இடும் வணிகனல்ல, சோதிடனல்ல சடைவிடுக்குங் கூந்தலல்ல குச் சுதொங்கல் சுங்குங் கூத்தாடியல்ல, சோதிமெய்யில் நூலணியும் ம றையோர் நல்ல கொடுத்திடக் கால்பிடித்தோடுஞ் சுனங்கனல்ல சீத மலர்போன் றயிரு அடியினாளே செண்பகமே யிக்கதையைச் செப்புவாயே. (செறுப்பு)
பஞ்சிதனைப் பூசித்து அகம் பாதுகார்க்கும் டலநாளும் போர்வையிட்டுப் படுத்துறங்குந் தஞ்சமென விழுந்தவர் கடலையைத்தூங்கும் காழ்வில்லாதுஞ் சகலமெத்தை தனிலே நானும் வஞ்சமுடன் மேல் விழுந்து மருவிப்பார்க்கும் வசியமுறு காசிவேசி யல்லத்தேறும் தஞ்சமென யோகி முதல் வணங்கச் செய்யும் தார்குழலேயிக்கதையை சாற்றுவாயே. (தலைகாணி)
அக்கினியில் நின்று விளையாடி பார்ப்பான் அம்புவியில் யாவருக்கு பச்சமீபாவான் பக்குவமாய்க் கொலை செய்து மருவி வாழ்வானது வேட்டைசெய்வான் தனிவழிக்குத் துணையாகிக் காவலாவான் முக்கனியும் சர்க்கரையு டாலோடொத்த மொழியணங்கே யிக்கதையை மொழிகுவாயே. (துப்பாக்கி)
கிள்ளுவது பாற்பதுவுந் தேய்ப்பதுண்டு கீர்த்தியுடன் தானொடிக்கி குலுக்கலுண்டு அள்ளியெண்ணெய் நீருடன் சேர்ந்தடலுண்டு அனைவர் பின்னே சித்திக்கை யேற்பதுண்டு கள்ளருந்துங் காளையைப் போற்றிரிவதுண்டு சுருதி மரியாதை கெட்டு நடப்பதுண்டு, பள்ளிமயில் போன்ற நடையுடை மானே பொற்கொடியே யிக்கதையைப் பகலுவாயே (பொடி)
விரித்து கீழ் போட்ட தனிற் படுப்பதுண்டு விரைந்தவரை பிடித்ததனில் படைப்பதுண்டு, கரித்து விழ நெருப்பிட்டு, மூட்டலுண்டு கண்கள் புகைந்தெழப் புரட்டிக் கொளுத்தலுண்டு, உரிந்த கடித் தெழுந்து கந்தவுமிநீண்டு, உலகிலிகை யறிவா யுணர்வை யுண்டு, நிருத்தமிடு மபில் போன்ற வழகினாளே நேரிழையே யிக்கதையை நிகழ்த்துவாயே. (சுருட்டு)
முரிப்பதுவும் பார்ப்பதுவும் முகர்வதுண்டு முன்வாயைக் திறக்காமல் நிக்கலுண்டு, விரிப்பதுவும் தூங்குவதும் சேர்ச்கலுண்டு, மெய்வாட்சிக் கண்டுஜலங் குளிப்பதுண்டு, பிரிப்பதுவுங் கட்டுவதுங்கொள்வதுண்டு, பிற்ற முற்றுப்போட்டணிந்துச் சுவல்வதுண்டு, பருத்தமுலை யாரணங்கே பருவமானே பக்குவமா யிக்கதையைப் பகருவாயே. (புகையிலை)
தாயாகிப் பிள்ளையுடன் தனித்து நிற்காள் கட்டாமல் பலரளிக்குக் கொத்துக் கொள்வாள், ஓயாமல் மேல்கீழாய் நின்றுந் தேய்வாள், உள்ள தெல்லாந் தானுருட்டிக் கழுவிச்சோ சொல்லால், வாயாடும் பெண்கள் கையின் வலுவைப்பார்ப்பாள் வனிதையல்லப் புருடனல்ல மற்றோரல்ல, வாயார யிக்கதையின் விபரஞ்சொன்னால் வஞ்சியே யுன்னடியை வணங்குவேனே. (அம்மி)
குலுக்கலுண்டு சிரிப்புண்டு குதிப்பு முண்டு கொத்து மணி முத்துவடங் கொள்வதுண்டு, அலுப்புண்டு வரைப்பதுண்டு வாட்டமுண்டு அரையில் கலை ஒட்டியான மணிவதுண்டு, தலுக்குண்டு மினுக்குண்டு தரிப்புமுண்டு தாசியவள் வேசியுங் கூத்தாடியல்ல, வலைக்குநிகர் விழியணங்கே வஞ்சிமானே வண்மையா யிக்கதையை வழுத்துவாயே. (பதுமை)
குடுவையைப்போல் வாயுமிரு கண்ணுமுண்டு கூரணிந்த வாலுடன் கூண்டைவதுண்டு, சுடுகையறு மன்னமதைக் கொள்வதுண்டு, துலங்குறு நங்கையற்கு ளமர்வதுண்டு, படுக்சைகொள்ள பிறப்படுப்பிற் செல்வதுண்டு, பாகமொடு செய்ததெல்லாம் படைப்பதுண்டு, வடிவமது மிகவுருவாய் உய்த்தமானே மாங்குயிலே இக்கதையை பதித்திடாயே. (அகப்பை)
விதைவிதைக்கப்பாத்தி சலமிறைப்பதுண்டு, வித்துவேர் கழையில்லாக் காய்ப்பதுண்டு, குரைக்காமற் பவிமடித்தே யெடுப்பதுண்டு, குற்றமென்றுங் கொள்ளாமற் கூய்ப்பதுண்டு, உரைத்தனை தானெடுத்துஞ் சமைப்பதுண்டு, உள்ளபடி சுவைக்குமற் றெவ்வகைக்குமுண்டு, கரைபுரளக் காமநீர் பெருகுமானே கண்மணியே யிக்கதையைக் கழறுவாயே. (உப்பு)
கூண்டிலே யிருக்குமது பட்சியல்ல கொழுந்தோடிப் போகுமது யிரை திணணாது, காட்டிலே விட்டு விட்டால் பறந்தே போகும் கனத்த மன்னர் வாசலிலே காவலாகும், ஈட்டிகத்தி பிடித்தவர்க்கு எதிரே நிற்கும் இரவிலே துணையாகுங் காலேயில்லை, நாட்டிலே யிக்கதையை சொல்வாராகில நமக்கவரை குருவென்றே நம்பலாமே. (அம்பு)
தாதுமாதுளைக் கோவைக் கணப்பழம் தண்டில்லாதவோர் தாமரைப்பூத்ததும், நீரில்லாத வேர் பொய்கை கரையின் மேல ஆளில்லாத ரெண்டன்னங்கள் போனதும், காலில்லாதவன் ஓடித்தடுத்ததும் கையில்லாதவன் கட்டியணைத்ததுங், வாயில்லாதவன் தின்றக்கனிப்பழம் கண்ணில்லாதவன் கண்டு மகிழ்ந்ததே. (சொக்கட்டான்)
அதிகாலக்தில் அப்பனை விட்டவள் அறிவுள்ளோர்கள் கையில் அடுத்தவள், வேதனையாகவே மேனிகிழிந்தவள், வெட்டுகள் குத்துகள் கட்டுப்பட்டுண்டவள் ஏது காணிவள் மஞ்சள் குளிக்கிறாள் ஏக் தமைவிட்டுத் தன் மனி மினுக்கிறாள் ஓது சாணிவள் தாசியுமல்லவே உரைத்தவர்க்காயிரம் பொன்னுக் தருவேனே. (பனவோலை)
கங்கை நதிபுனல் மூழ்கிக் கரையிலேறி கதிரவனை கண் டுடலங் காய்ந்து வெற்றி பொங்கு பாடல் சீனியுண்டு ரிஷபமேறி பூலோகம் காக்கவரும் சிவனுமல்ல இங்கிதனை அறிந்து சொல்லும் பெரியோர் தம்மை எப்போதும் குருவென்றே வணங்குவேனே. (கருவாடு)
முன்னாலே யறுப்புண்டு கட்டு முண்டு முனைகுலைந்து பெண்க ளெல்லாஞ் சீச்சீயென்ன பின்னாலே கிழியுண்டு தையனல்லாள் பிடித்திருப்பார் கைக்குள்ளான சுத்தக்காரி சொன்னாலும் போகொஞ்சம் வேலைக்காரி சொகுசான யிக்கதையைச் சொல்லுவீரே. (துடப்பம்)
பிஞ்சுண்டு பூவாது கசக்குங்காயும் வின்னலெனவே யிருக்குங் கொடிகளெல்லாந் துஞ்சிடவே நீரில் விழச் சுருட்டிக்கொள்ளும் சூரியனைக்கண்டாக்கால மலர்ந்திருக்கும் பஞ்சவரு மவருறவு மாலுக்காகார் பாருலகிவிக்கதையை பகருவிரே. (வலை)
பட்டத்து தேவியவள் சொகுசுக்காரி பரிகாயிளங் கொடியாள் பாரின் மீது கட்டுதற்கு மணைப்பதற்குக் கிள்ளுதற்குங் கட்டழகி பொருத்திருப்பாள் காசுக்கென்றால் இட்டமுடனே வருவாள் தாசியல்ல யேந்திழையே யின்னவெளென்றியம்புவாயே. (வெத்திலை)
வினோத விடிகதை.
முற்றிற்று.
* * *
கருத்துகள்
கருத்துரையிடுக