தேவாரப் பதிகங்கள் நான்காம் திருமுறை - இரண்டாம் பகுதி
பக்தி நூல்கள்
Back
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
நான்காம் திருமுறை இரண்டாம் பகுதி
பாடல்கள் (488 - 1070)
-
உள்ளுறை
- நீறுமெய் பூசி னானே
கற்றைப்புன் சடையி னானே
- கடல்விடம் பருகி னானே
செற்றவர் புரங்கள் மூன்றுஞ்
- செவ்வழல் செலுத்தி னானே
குற்றமில் குணத்தி னானே
- கோடிகா வுடைய கோவே.
4.51.1 - கடல்விடம் பருகி னானே
- கபாலங்கை யேந்தி னானே
வடிவுடை மங்கை தன்னை
- மார்பிலோர் பாகத் தானே
அடியிணை பரவ நாளும்
- அடியவர்க் கருள்செய் வானே
கொடியணி விழவ தோவாக்
- கோடிகா வுடைய கோவே.
4.51.2 490 நீறுமெய் பூசி னானே
- நிழல்திகழ் மழுவி னானே
ஏறுகந் தேறி னானே
- இருங்கடல் அமுதொப் பானே
ஆறுமோர் நான்கு வேதம்
- அறமுரைத் தருளி னானே
கூறுமோர் பெண்ணி னானே
- கோடிகா வுடைய கோவே.
4.51.3 491 காலனைக் காலாற் செற்றன்
- றருள்புரி கருணை யானே
நீலமார் கண்டத் தானே
- நீண்முடி யமரர் கோவே
ஞாலமாம் பெருமை யானே
- நளிரிளந் திங்கள் சூடுங்
கோலமார் சடையி னானே
- கோடிகா வுடைய கோவே.
4.51.4 492 பூணர வாரத் தானே
- புலியுரி அரையி னானே
காணில்வெண் கோவ ணமுங்
- கையிலோர் கபால மேந்தி
ஊணுமூர்ப் பிச்சை யானே
- உமையொரு பாகத் தானே
கோணல்வெண் பிறையி னானே
- கோடிகா வுடைய கோவே.
4.51.5 493 கேழல்வெண் கொம்பு பூண்ட
- கிளரொளி மார்பி னானே
ஏழையேன் ஏழை யேன்நான்
- என்செய்கேன் எந்தை பெம்மான்
மாழையொண் கண்ணி னார்கள்
- வலைதனில் மயங்கு கின்றேன்
கூழைஏ றுடைய செல்வா
- கோடிகா வுடைய கோவே.
4.51.6 494 அழலுமிழ் அங்கை யானே
- அரிவையோர் பாகத் தானே
தழலுமிழ் அரவம் ஆர்த்துத்
- தலைதனிற் பலிகொள் வானே
நிழலுமிழ் சோலை சூழ
- நீள்வரி வண்டி னங்கள்
குழலுமிழ் கீதம் பாடுங்
- கோடிகா வுடைய கோவே.
4.51.7 495 ஏவடு சிலையி னாலே
- புரமவை எரிசெய் தானே
மாவடு வகிர்கொள் கண்ணாள்
- மலைமகள் பாகத் தானே
ஆவடு துறையு ளானே
- ஐவரால் ஆட்டப் பட்டேன்
கோவடு குற்றந் தீராய்
- கோடிகா வுடைய கோவே.
4.51.8 496 ஏற்றநீர்க் கங்கை யானே
- இருநிலந் தாவி னானும்
நாற்றமா மலர்மேல் ஏறும்
- நான்முகன் இவர்கள் கூடி
ஆற்றலால் அளக்க லுற்றார்க்
- கழலுரு வாயினானே
கூற்றுக்குங் கூற்ற தானாய்
- கோடிகா வுடைய கோவே.
4.51.9 497 பழகநான் அடிமை செய்வேன்
- பசுபதீ பாவ நாசா
மழகளி யானை யின்றோல்
- மலைமகள் வெருவப் போர்த்த
அழகனே அரக்கன் திண்டோ ள்
- அருவரை நெரிய வூன்றுங்
குழகனே கோல மார்பா
- கோடிகா வுடைய கோவே.
4.51.10 - மார்பிலோர் பாகத் தானே
- பண்டியைப் பெய்த வாற்றாற்
கெடுவதிம் மனிதர் வாழ்க்கை
- காண்டொறுங் கேது கின்றேன்
முடுகுவர் இருந்துள் ஐவர்
- மூர்க்கரே இவர்க ளோடும்
அடியனேன் வாழ மாட்டேன்
- ஆரூர்மூ லட்ட னீரே.
4.52.1 - காண்டொறுங் கேது கின்றேன்
- புறமொரு தோலால் மூடி
ஒழுக்கறா ஒன்ப துவாய்
- ஒற்றுமை யொன்று மில்லை
சழக்குடை இதனுள் ஐவர்
- சங்கடம் பலவுஞ் செய்ய
அழிப்பனாய் வாழ மாட்டேன்
- ஆரூர்மூ லட்ட னீரே.
4.52.2 500 பஞ்சின்மெல் லடியி னார்கள்
- பாங்கரா யவர்கள் நின்று
நெஞ்சில்நோய் பலவுஞ் செய்து
- நினையினும் நினைய வொட்டார்
நஞ்சணி மிடற்றி னானே
- நாதனே நம்ப னேநான்
அஞ்சினேற் கஞ்ச லென்னீர்
- ஆரூர்மூ லட்ட னீரே.
4.52.3 501 கெண்டையந் தடங்கண் நல்லார்
- தம்மையே கெழும வேண்டிக்
குண்டராய்த் திரிதந் தைவர்
- குலைத்திடர்க் குழியில் நூக்கக்
கண்டுநான் தரிக்க கில்லேன்
- காத்துக்கொள் கறைசேர் கண்டா
அண்டவா னவர்கள் போற்றும்
- ஆரூர்மூ லட்ட னீரே.
4.52.4 502 தாழ்குழல் இன்சொல் நல்லார்
- தங்களைத் தஞ்ச மென்று
ஏழையே னாகி நாளும்
- என்செய்கேன் எந்தை பெம்மான்
வாழ்வதேல் அரிது போலும்
- வைகலும் ஐவர் வந்து
ஆழ்குழிப் படுத்த வாற்றேன்
- ஆரூர்மூ லட்ட னீரே.
4.52.5 503 மாற்றமொன் றருள கில்லீர்
- மதியிலேன் விதியி லாமை
சீற்றமுந் தீர்த்தல் செய்யீர்
- சிக்கன வுடைய ராகிக்
கூற்றம்போல் ஐவர் வந்து
- குலைத்திட்டுக் கோகு செய்ய
ஆற்றவுங் கில்லேன் நாயேன்
- ஆரூர்மூ லட்ட னீரே.
4.52.6 504 உயிர்நிலை யுடம்பே காலா
- உள்ளமே தாழி யாகத்
துயரமே ஏற்ற மாகத்
- துன்பக்கோ லதனைப் பற்றிப்
பயிர்தனைச் சுழிய விட்டுப்
- பாழ்க்குநீர் இறைத்து மிக்க
அயர்வினால் ஐவர்க் காற்றேன்
- ஆரூர்மூ லட்ட னீரே.
4.52.7 505 கற்றதேல் ஒன்று மில்லை
- காரிகை யாரோ டாடிப்
பெற்றதேற் பெரிதுந் துன்பம்
- பேதையேன் பிழைப்பி னாலே
முற்றினால் ஐவர் வந்து
- முறைமுறை துயரஞ் செய்ய
அற்றுநான் அலந்து போனேன்
- ஆரூர்மூ லட்ட னீரே.
4.52.8 506 பத்தனாய் வாழ மாட்டேன்
- பாவியேன் பரவி வந்து
சித்தத்துள் ஐவர் தீய
- செய்வினை பலவுஞ் செய்ய
மத்துறு தயிரே போல
- மறுகுமென் னுள்ளந் தானும்
அத்தனே அமரர் கோவே
- ஆரூர்மூ லட்ட னீரே.
4.52.9 507 தடக்கைநா லைந்துங் கொண்டு
- தடவரை தன்னைப் பற்றி
எடுத்தவன் பேர்க்க ஓடி
- இரிந்தன பூத மெல்லாம்
முடித்தலை யனைத்துந் தோளும்
- முறிதர இறையே யூன்றி
அடர்த்தருள் செய்த தென்னே
- ஆரூர்மூ லட்ட னீரே.
4.52.10 - ஒற்றுமை யொன்று மில்லை
- கோலவேற் கண்ணி தன்னைக்
கழல்வலங் கொண்டு நீங்காக்
- கணங்களக் கணங்க ளார
அழல்வலங் கொண்ட கையான்
- அருட்கதிர் எறிக்கும் ஆரூர்
தொழல்வலங் கொண்டல் செய்வான்
- தோன்றினார் தோன்றி னாரே.
4.53.1 - கணங்களக் கணங்க ளார
- நங்கையை மஞ்ஞை யென்று
வேகத்தைத் தவிர நாகம்
- வேழத்தின் உரிவை போர்த்துப்
பாகத்தின் நிமிர்தல் செய்யாத்
- திங்களை மின்னென் றஞ்சி
ஆகத்திற் கிடந்த நாகம்
- அடங்கும்ஆ ரூர னார்க்கே.
4.53.2 510 தொழுதகங் குழைய மேவித்
- தோட்டிமை யுடைய தொண்டர்
அழுதகம் புகுந்து நின்றார்
- அவரவர் போலும் ஆரூர்
எழிலக நடுவெண் முத்த
- மன்றியும் ஏர்கொள் வேலிப்
பொழிலகம் விளங்கு திங்கட்
- புதுமுகிழ் சூடி னாரே.
4.53.3 511 நஞ்சிருள் மணிகொள் கண்டர்
- நகையிருள் ஈமக் கங்குல்
வெஞ்சுடர் விளக்கத் தாடி
- விளங்கினார் போலும் மூவா
வெஞ்சுடர் முகடு தீண்டி
- வெள்ளிநா ராச மன்ன
அஞ்சுடர் அணிவெண் டிங்கள்
- அணியும்ஆ ரூர னாரே.
4.53.4 512 எந்தளிர் நீர்மை கோல
- மேனியென் றிமையோ ரேத்தப்
பைந்தளிர்க் கொம்ப ரன்ன
- படர்கொடி பயிலப் பட்டுத்
தஞ்சடைத் தொத்தி னாலுந்
- தம்மதோர் நீர்மை யாலும்
அந்தளிர் ஆகம் போலும்
- வடிவர்ஆ ரூர னாரே.
4.53.5 513 வானகம் விளங்க மல்கும்
- வளங்கெழு மதியஞ் சூடித்
தானக மழிய வந்து
- தாம்பலி தேர்வர் போலும்
ஊனகங் கழிந்த ஓட்டில்
- உண்பதும் ஒளிகொள் நஞ்சம்
ஆனகம் அஞ்சும் ஆடும்
- அடிகள்ஆ ரூர னாரே.
4.53.6 514 அஞ்சணை கணையி னானை
- அழலுற அன்று நோக்கி
அஞ்சணை குழலி னாளை
- அமுதமா அணைந்து நக்கு
அஞ்சணை அஞ்சும் ஆடி
- ஆடர வாட்டு வார்தாம்
அஞ்சணை வேலி ஆரூர்
- ஆதரித் திடங்கொண் டாரே.
4.53.7 515 வணங்கிமுன் அமரர் ஏத்த
- வல்வினை யான தீரப்
பிணங்குடைச் சடையில் வைத்த
- பிறையுடைப் பெருமை யண்ணல்
மணங்கம ழோதி பாகர்
- மதிநிலா வட்டத் தாடி
அணங்கொடி மாட வீதி
- ஆரூரெம் அடிக ளாரே.
4.53.8 516 நகலிடம் பிறர்கட் காக
- நான்மறை யோர்கள் தங்கள்
புகலிட மாகி வாழும்
- புகலிலி இருவர் கூடி
இகலிட மாக நீண்டங்
- கீண்டெழில் அழல தாகி
அகலிடம் பரவி யேத்த
- அடிகள்ஆ ரூர னாரே.
4.53.9 517 ஆயிரந் திங்கள் மொய்த்த
- அலைகடல் அமுதம் வாங்கி
ஆயிரம் அசுரர் வாழும்
- அணிமதில் மூன்றும் வேவ
ஆயிரந் தோளும் மட்டித்
- தாடிய அசைவு தீர
ஆயிரம் அடியும் வைத்த
- அடிகள்ஆ ரூர னாரே.
4.53.10 - வேழத்தின் உரிவை போர்த்துப்
- பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்518 பகைத்திட்டார் புரங்கள் மூன்றும்
- பாறிநீ றாகி வீழப்
புகைத்திட்ட தேவர் கோவே
- பொறியிலேன் உடலந் தன்னுள்
அகைத்திட்டங் கதனை நாளும்
- ஐவர்கொண் டாட்ட வாடித்
திகைத்திட்டேன் செய்வ தென்னே
- திருப்புக லூர னீரே.
4.54.1 519 மையரி மதர்த்த ஒண்கண்
- மாதரார் வலையிற் பட்டுக்
கையெரி சூல மேந்துங்
- கடவுளை நினைய மாட்டேன்
ஐநெரிந் தகமி டற்றே
- அடைக்கும்போ தாவி யார்தாஞ்
செய்வதொன் றறிய மாட்டேன்
- திருப்புக லூர னீரே.
4.54.2 520 முப்பதும் முப்பத் தாறும்
- முப்பதும் இடுகு ரம்பை
அப்பர்போல் ஐவர் வந்து
- அதுதரு கிதுவி டென்று
ஒப்பவே நலிய லுற்றால்
- உய்யுமா றறிய மாட்டேன்
செப்பமே திகழு மேனித்
- திருப்புக லூர னீரே.
4.54.3 521 பொறியிலா அழுக்கை யோம்பிப்
- பொய்யினை மெய்யென் றெண்ணி
நெறியலா நெறிகள் சென்றேன்
- நீதனேன் நீதி யேதும்
அறிவிலேன் அமரர் கோவே
- அமுதினை மண்ணில் வைக்குஞ்
செறிவிலேன் செய்வ தென்னே
- திருப்புக லூர னீரே.
4.54.4 522 அளியினார் குழலி னார்கள்
- அவர்களுக் கன்ப தாகிக்
களியினார் பாடல் ஓவாக்
- கடவூர்வீ ரட்ட மென்னுந்
தளியினார் பாத நாளும்
- நினைவிலாத் தகவில் நெஞ்சந்
தெளிவிலேன் செய்வ தென்னே
- திருப்புக லூர னீரே.
4.54.5 523 இலவினார் மாதர் பாலே
- இசைந்துநான் இருந்து பின்னும்
நிலவுநாள் பலவென் றெண்ணி
- நீதனேன் ஆதி உன்னை
உலவிநான் உள்க மாட்டேன்
- உன்னடி பரவு ஞானஞ்
செலவிலேன் செய்வ தென்னே
- திருப்புக லூர னீரே.
4.54.6 524 காத்திலேன் இரண்டும் மூன்றுங்
- கல்வியேல் இல்லை என்பால்
வாய்த்திலேன் அடிமை தன்னுள்
- வாய்மையால் தூயே னல்லேன்
பார்த்தனுக் கருள்கள் செய்த
- பரமனே பரவு வார்கள்
தீர்த்தமே திகழும் பொய்கைத்
- திருப்புக லூர னீரே.
4.54.7 525 நீருமாய்த் தீயு மாகி
- நிலனுமாய் விசும்பு மாகி
ஏருடைக் கதிர்க ளாகி
- இமையவர் இறைஞ்ச நின்று
ஆய்வதற் கரிய ராகி
- அங்கங்கே யாடு கின்ற
தேவர்க்குந் தேவ ராவார்
- திருப்புக லூர னாரே.
4.54.8 526 மெய்யுளே விளக்கை ஏற்றி
- வேண்டள வுயரத் தூண்டி
உய்வதோர் உபாயம் பற்றி
- உகக்கின்றேன் உகவா வண்ணம்
ஐவரை அகத்தே வைத்தீர்
- அவர்களே வலியர் சாலச்
செய்வதொன் றறிய மாட்டேன்
- திருப்புக லூர னீரே.
4.54.9 527 அருவரை தாங்கி னானும்
- அருமறை யாதி யானும்
இருவரும் அறிய மாட்டா
- ஈசனார் இலங்கை வேந்தன்
கருவரை எடுத்த ஞான்று
- கண்வழி குருதி சோரத்
திருவிரல் சிறிது வைத்தார்
- திருப்புக லூர னாரே.
4.54.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அக்கினீசுவரர்,
தேவியார் - கருந்தார்க்குழலியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.55 திருவலம்புரம் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்528 தெண்டிரை தேங்கி ஓதஞ்
- சென்றடி வீழுங் காலைத்
தொண்டிரைத் தண்டர் கோனைத்
- தொழுதடி வணங்கி யெங்கும்
வண்டுகள் மதுக்கள் மாந்தும்
- வலம்புரத் தடிகள் தம்மைக்
கொண்டுநற் கீதம் பாடக்
- குழகர்தாம் இருந்த வாறே.
4.55.1 529 மடுக்களில் வாளை பாய
- வண்டினம் இரிந்த பொய்கைப்
பிடிக்களி றென்னத் தம்மிற்
- பிணைபயின் றணைவ ரால்கள்
தொடுத்தநன் மாலை ஏந்தித்
- தொண்டர்கள் பரவி யேத்த
வடித்தடங் கண்ணி பாகர்
- வலம்புரத் திருந்த வாறே.
4.55.2 530 தேனுடை மலர்கள் கொண்டு
- திருந்தடி பொருந்தச் சேர்த்தி
ஆனிடை அஞ்சுங் கொண்டு
- அன்பினால் அமர வாட்டி
வானிடை மதியஞ் சூடும்
- வலம்புரத் தடிகள் தம்மை
நானடைந் தேத்தப் பெற்று
- நல்வினைப் பயனுற் றேனே.
4.55.3 531 முளைஎயிற் றிளநல் ஏனம்
- பூண்டுமொய் சடைகள் தாழ
வளைஎயிற் றிளைய நாகம்
- வலித்தரை யிசைய வீக்கிப்
புளைகைய போர்வை போர்த்துப்
- புனலொடு மதியஞ் சூடி
வளைபயில் இளைய ரேத்தும்
- வலம்புரத் தடிகள் தாமே.
4.55.4 532 சுருளுறு வரையின் மேலாற்
- றுளங்கிளம் பளிங்கு சிந்த
இருளுறு கதிர்நு ழைந்த
- இளங்கதிர்ப் பசலைத் திங்கள்
அருளுறும் அடிய ரெல்லாம்
- அங்கையின் மலர்கள் ஏந்த
மருளுறு கீதங் கேட்டார்
- வலம்புரத் தடிக ளாரே.
4.55.5 533 நினைக்கின்றேன் நெஞ்சு தன்னால்
- நீண்டபுன் சடையி னானே
அனைத்துடன் கொண்டு வந்தங்
- கன்பினால் அமைய வாட்டிப்
புனைக்கின்றேன் பொய்ம்மை தன்னை
- மெய்ம்மையைப் புணர மாட்டேன்
எனக்குநான் செய்வ தென்னே
- இனிவலம் புரவ னீரே.
4.55.6 534 செங்கயல் சேல்கள் பாய்ந்து
- தேம்பழ மினிய நாடித்
தங்கயந் துறந்து போந்து
- தடம்பொய்கை அடைந்து நின்று
கொங்கையர் குடையுங் காலைக்
- கொழுங்கனி யழுங்கி னாராம்
மங்கல மனையின் மிக்கார்
- வலம்புரத் தடிக ளாரே.
4.55.7 535 அருகெலாங் குவளை செந்நெல்
- அகவிலை யாம்பல் நெய்தல்
தெருவெலாந் தெங்கு மாவும்
- பழம்விழும் படப்பை யெல்லாங்
குருகினங் கூடி யாங்கே
- கும்மலித் திறகு லர்த்தி
மருவலா மிடங்கள் காட்டும்
- வலம்புரத் தடிக ளாரே.
4.55.8 536 கருவரை யனைய மேனிக்
- கடல்வண்ண னவனுங் காணான்
திருவரை யனைய பூமேல்
- திசைமுக னவனுங் காணான்
ஒருவரை உச்சி ஏறி
- ஓங்கினார் ஓங்கி வந்து
அருமையில் எளிமை யானார்
- அவர்வலம் புரவ னாரே.
4.55.9 537 வாளெயி றிலங்க நக்கு
- வளர்கயி லாயந் தன்னை
ஆள்வலி கருதிச் சென்ற
- அரக்கனை வரைக்கீ ழன்று
தோளொடு பத்து வாயுந்
- தொலைந்துடன் அழுந்த வூன்றி
ஆண்மையும் வலியுந் தீர்ப்பார்
- அவர்வலம் புரவ னாரே.
4.55.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வலம்புரநாதர், தேவியார் - வடுவகிர்க்கண்ணம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.56 திருஆவடுதுறை - திருநேரிசை
- பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்538 மாயிரு ஞால மெல்லாம்
- மலரடி வணங்கும் போலும்
பாயிருங் கங்கை யாளைப்
- படர்சடை வைப்பர் போலுங்
காயிரும் பொழில்கள் சூழ்ந்த
- கழுமல வூரர்க் கம்பொன்
ஆயிரங் கொடுப்பர் போலும்
- ஆவடு துறைய னாரே.
4.56.1 539 மடந்தை பாகத்தர் போலும்
- மான்மறிக் கையர் போலும்
குடந்தையிற் குழகர் போலுங்
- கொல்புலித் தோலர் போலுங்
கடைந்தநஞ் சுண்பர் போலுங்
- காலனைக் காய்வர் போலும்
அடைந்தவர்க் கன்பர் போலும்
- ஆவடு துறைய னாரே.
4.56.2 540 உற்றநோய் தீர்ப்பர் போலும்
- உறுதுணை யாவர் போலுஞ்
செற்றவர் புரங்கள் மூன்றுந்
- தீயெழச் செறுவர் போலுங்
கற்றவர் பரவி யேத்தக்
- கலந்துலந் தலந்து பாடும்
அற்றவர்க் கன்பர் போலும்
- ஆவடு துறைய னாரே.
4.56.3 541 மழுவமர் கையர் போலும்
- மாதவள் பாகர் போலும்
எழுநுனை வேலர் போலும்
- என்புகொண் டணிவர் போலுந்
தொழுதெழுந் தாடிப் பாடித்
- தோத்திரம் பலவுஞ் சொல்லி
அழுமவர்க் கன்பர் போலும்
- ஆவடு துறைய னாரே.
4.56.4 542 பொடியணி மெய்யர் போலும்
- பொங்குவெண் ணூலர் போலுங்
கடியதோர் விடையர் போலுங்
- காமனைக் காய்வர் போலும்
வெடிபடு தலையர் போலும்
- வேட்கையாற் பரவுந் தொண்டர்
அடிமையை அளப்பர் போலும்
- ஆவடு துறைய னாரே.
4.56.5 543 வக்கரன் உயிரை வவ்வக்
- கண்மலர் கொண்டு போற்றச்
சக்கரங் கொடுப்பர் போலுந்
- தானவர் தலைவர் போலுந்
துக்கமா மூடர் தம்மைத்
- துயரிலே வீழ்ப்பர் போலும்
அக்கரை ஆர்ப்பர் போலும்
- ஆவடு துறைய னாரே.
4.56.6 544 விடைதரு கொடியர் போலும்
- வெண்புரி நூலர் போலும்
படைதரு மழுவர் போலும்
- பாய்புலித் தோலர் போலும்
உடைதரு கீளர் போலும்
- உலகமு மாவர் போலும்
அடைபவர் இடர்கள் தீர்க்கும்
- ஆவடு துறைய னாரே.
4.56.7 545 முந்திவா னோர்கள் வந்து
- முறைமையால் வணங்கி யேத்த
நந்திமா காள ரென்பார்
- நடுவுடை யார்கள் நிற்பச்
சிந்தியா தேயொ ழிந்தார்
- திரிபுரம் எரிப்பர் போலும்
அந்திவான் மதியஞ் சூடும்
- ஆவடு துறைய னாரே.
4.56.8 546 பானமர் ஏன மாகிப்
- பாரிடந் திட்ட மாலுந்
தேனமர்ந் தேறும் அல்லித்
- திசைமுக முடைய கோவுந்
தீனரைத் தியக் கறுத்த
- திருவுரு வுடையர் போலும்
ஆனரை ஏற்றர் போலும்
- ஆவடு துறைய னாரே.
4.56.9 547 பார்த்தனுக் கருள்வர் போலும்
- படர்சடை முடியர் போலும்
ஏத்துவார் இடர்கள் தீர
- இன்பங்கள் கொடுப்பர் போலுங்
கூத்தராய்ப் பாடி யாடிக்
- கொடுவலி யரக்கன் றன்னை
ஆர்த்தவாய் அலறு விப்பார்
- ஆவடு துறைய னாரே.
4.56.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாசிலாமணியீசுவரர், தேவியார் - ஒப்பிலாமுலையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.57. திருஆவடுதுறை - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்548 மஞ்சனே மணியு மானாய்
- மரகதத் திரளு மானாய்
நெஞ்சுளே புகுந்து நின்று
- நினைதரு நிகழ்வி னானே
துஞ்சும்போ தாக வந்து
- துணையெனக் காகி நின்று
அஞ்சலென் றருள வேண்டும்
- ஆவடு துறையு ளானே.
4.57.1 549 நானுகந் துன்னை நாளும்
- நணுகுமா கருதி யேயும்
ஊனுகந் தோம்பும் நாயேன்
- உள்ளுற ஐவர் நின்றார்
தானுகந் தேயு கந்த
- தகவிலாத் தொண்ட னேன்நான்
ஆனுகந் தேறு வானே
- ஆவடு துறையு ளானே.
4.57.2 550 கட்டமே வினைக ளான
- காத்திவை நோக்கி ஆளாய்
ஒட்டவே ஒட்டி நாளும்
- உன்னையுள் வைக்க மாட்டேன்
பட்டவான் தலைகை யேந்திப்
- பலிதிரிந் தூர்கள் தோறும்
அட்டமா வுருவி னானே
- ஆவடு துறையு ளானே.
4.57.3 551 பெருமைநன் றுடைய தில்லை
- யென்றுநான் பேச மாட்டேன்
ஒருமையால் உன்னை உள்கி
- உகந்துவா னேற மாட்டேன்
கருமையிட் டாய வூனைக்
- கட்டமே கழிக்கின் றேன்நான்
அருமையா நஞ்ச முண்ட
- ஆவடு துறையு ளானே.
4.57.4 552 துட்டனாய் வினைய தென்னுஞ்
- சுழித்தலை அகப்பட் டேனைக்
கட்டனாய் ஐவர் வந்து
- கலக்காமைக் காத்துக் கொள்வாய்
மட்டவிழ் கோதை தன்னை
- மகிழ்ந்தொரு பாகம் வைத்து
அட்டமா நாக மாட்டும்
- ஆவடு துறையு ளானே.
4.57.5 553 காரழற் கண்ட மேயாய்
- கடிமதிற் புரங்கள் மூன்றும்
ஓரழல் அம்பி னாலே
- யுகைத்துத்தீ எரிய மூட்டி
நீரழற் சடையு ளானே
- நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய்
ஆரழல் ஏந்தி யாடும்
- ஆவடு துறையு ளானே.
4.57.6 554 செறிவிலேன் சிந்தை யுள்ளே
- சிவனடி தெரிய மாட்டேன்
குறியிலேன் குணமொன் றில்லேன்
- கூறுமா கூற மாட்டேன்
நெறிபடு மதியொன் றில்லேன்
- நினையுமா நினைய மாட்டேன்
அறிவிலேன் அயர்த்துப் போனேன்
- ஆவடு துறையு ளானே.
4.57.7 555 கோலமா மங்கை தன்னைக்
- கொண்டொரு கோல மாய
சீலமே அறிய மாட்டேன்
- செய்வினை மூடி நின்று
ஞாலமாம் இதனுள் என்னை
- நைவியா வண்ணம் நல்காய்
ஆலமா நஞ்ச முண்ட
- ஆவடு துறையு ளானே.
4.57.8 556 நெடியவன் மலரி னானும்
- நேர்ந்திரு பாலும் நேடக்
கடியதோர் உருவ மாகிக்
- கனலெரி யாகி நின்ற
வடிவின வண்ண மென்றே
- என்றுதாம் பேச லாகார்
அடியனேன் நெஞ்சி னுள்ளார்
- ஆவடு துறையு ளானே.
4.57.9 557 மலைக்குநே ராய ரக்கன்
- சென்றுற மங்கை அஞ்சத்
தலைக்குமேற் கைக ளாலே
- தாங்கினான் வலியை மாள
உலப்பிலா விரலால் ஊன்றி
- ஒறுத்தவற் கருள்கள் செய்து
அலைத்தவான் கங்கை சூடும்
- ஆவடு துறையு ளானே.
4.57.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.58 திருப்பருப்பதம் - திருநேரிசை
- பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்558 கன்றினார் புரங்கள் மூன்றுங்
- கனலெரி யாகச் சீறி
நின்றதோ ருருவந் தன்னால்
- நீர்மையும் நிறையுங் கொண்டு
ஒன்றியாங் குமையுந் தாமும்
- ஊர்பலி தேர்ந்து பின்னும்
பன்றிப்பின் வேட ராகிப்
- பருப்பத நோக்கி னாரே.
4.58.1 559 கற்றமா மறைகள் பாடிக்
- கடைதொறும் பலியுந் தேர்வார்
வற்றலோர் தலைகை யேந்தி
- வானவர் வணங்கி வாழ்த்த
முற்றவோர் சடையில் நீரை
- ஏற்றமுக் கண்ணர் தம்மைப்
பற்றினார்க் கருள்கள் செய்து
- பருப்பத நோக்கி னாரே.
4.58.2 560 கரவிலா மனத்த ராகிக்
- கைதொழு வார்கட் கென்றும்
இரவினின் றெரிய தாடி
- இன்னருள் செய்யும் எந்தை
மருவலார் புரங்கள் மூன்று
- மாட்டிய நகைய ராகிப்
பரவுவார்க் கருள்கள் செய்து
- பருப்பத நோக்கி னாரே.
4.58.3 561 கட்டிட்ட தலைகை யேந்திக்
- கனலெரி யாடிச் சீறிச்
சுட்டிட்ட நீறு பூசிச்
- சுடுபிணக் காட ராகி
விட்டிட்ட வேட்கை யார்க்கு
- வேறிருந் தருள்கள் செய்து
பட்டிட்ட வுடைய ராகிப்
- பருப்பத நோக்கி னாரே.
4.58.4 562 கையராய்க் கபால மேந்திக்
- காமனைக் கண்ணாற் காய்ந்து
மெய்யராய் மேனி தன்மேல்
- விளங்குவெண் ணீறு பூசி
உய்யரா யுள்கு வார்கட்
- குவகைகள் பலவுஞ் செய்து
பையரா அரையி லார்த்துப்
- பருப்பத நோக்கி னாரே.
4.58.5 563 வேடராய் வெய்ய ராகி
- வேழத்தி னுரிவை போர்த்து
ஓடரா யுலக மெல்லா
- முழிதர்வர் உமையுந் தாமுங்
காடராய்க் கனல்கை யேந்திக்
- கடியதோர் விடைமேற் கொண்டு
பாடராய்ப் பூதஞ் சூழப்
- பருப்பத நோக்கி னாரே.
4.58.6 564 மேகம்போல் மிடற்ற ராகி
- வேழத்தி னுரிவை போர்த்து
ஏகம்பம் மேவி னார்தாம்
- இமையவர் பரவி யேத்தக்
காகம்பர் கழற ராகிக்
- கடியதோர் விடையொன் றேறிப்
பாகம்பெண் ணுருவ மானார்
- பருப்பத நோக்கி னாரே.
4.58.7 565 பேரிடர்ப் பிணிகள் தீர்க்கும்
- பிஞ்ஞகன் எந்தை பெம்மான்
காருடைக் கண்ட ராகிக்
- கபாலமோர் கையி லேந்திச்
சீருடைச் செங்கண் வெள்ளே
- றேறிய செல்வர் நல்ல
பாரிடம் பாணி செய்யப்
- பருப்பத நோக்கி னாரே.
4.58.8 566 அங்கண்மா லுடைய ராய
- ஐவரா லாட்டு ணாதே
உங்கள்மால் தீர வேண்டில்
- உள்ளத்தா லுள்கி யேத்துஞ்
செங்கண்மால் பரவி யேத்திச்
- சிவனென நின்ற செல்வர்
பைங்கண்வெள் ளேற தேறிப்
- பருப்பத நோக்கி னாரே.
4.58.9 567 அடல்விடை யூர்தி யாகி
- அரக்கன்றோள் அடர வூன்றிக்
கடலிடை நஞ்ச முண்ட
- கறையணி கண்ட னார்தாஞ்
சுடர்விடு மேனி தன்மேற்
- சுண்ணவெண் ணீறு பூசிப்
படர்சடை மதியஞ் சேர்த்திப்
- பருப்பத நோக்கி னாரே.
4.58.10
இத்தலம் வடநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பருப்பதேசுவரர், தேவியார் - மனோன்மணியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.59 திருஅவளிவணல்லூர் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்568 தோற்றினான் எயிறு கவ்வித்
- தொழிலுடை யரக்கன் றன்னைத்
தேற்றுவான் சென்று சொல்லச்
- சிக்கெனத் தவிரு மென்று
வீற்றினை யுடைய னாகி
- வெடுவெடுத் தெழுந்த வன்றன்
ஆற்றலை அழிக்க வல்லார்
- அவளிவ ணல்லூ ராரே.
4.59.1 569 வெம்பினா ரரக்க ரெல்லாம்
- மிகச்சழக் காயிற் றென்று
செம்பினா லெடுத்த கோயில்
- சிக்கெனச் சிதையு மென்ன
நம்பினா ரென்று சொல்லி
- நன்மையான் மிக்கு நோக்கி
அம்பினால் அழிய வெய்தார்
- அவளிவ ணல்லூ ராரே.
4.59.2 570 கீழ்ப்படக் கருத லாமோ
- கீர்த்திமை யுள்ள தாகிற்
தோட்பெரு வலியி னாலே
- தொலைப்பன்யான் மலையை யென்று
வேட்பட வைத்த வாறே
- விதிர்விதிர்த் தரக்கன் வீழ்ந்து
ஆட்படக் கருதிப் புக்கார்
- அவளிவ ணல்லூ ராரே.
4.59.3 571 நிலைவலம் வல்ல னல்லன்
- நேர்மையை நினைய மாட்டான்
சிலைவலங் கொண்ட செல்வன்
- சீரிய கயிலை தன்னைத்
தலைவலங் கருதிப் புக்குத்
- தாக்கினான் தன்னை யன்று
அலைகுலை யாக்கு வித்தார்
- அவளிவ ணல்லூ ராரே.
4.59.4 572 தவ்வலி யொன்ற னாகித்
- தனதொரு பெருமை யாலே
மெய்வ்வலி யுடைய னென்று
- மிகப்பெருந் தேரை யூர்ந்து
செவ்வலி கூர்வி ழியாற்
- சிரமத்தான் எடுக்குற் றானை
அவ்வலி தீர்க்க வல்லார்
- அவளிவ ணல்லூ ராரே.
4.59.5 573 நன்மைதான் அறிய மாட்டான்
- நடுவிலா அரக்கர் கோமான்
வன்மையே கருதிச் சென்று
- வலிதனைச் செலுத்த லுற்றுக்
கன்மையான் மலையை யோடிக்
- கருதித்தான் எடுத்து வாயால்
அம்மையோ வென்ன வைத்தார்
- அவளிவ ணல்லூ ராரே.
4.59.6 574 கதம்படப் போது வார்கள்
- போதுமக் கருத்தி னாலே
சிதம்பட நின்ற நீர்கள்
- சிக்கெனத் தவிரு மென்று
மதம்படு மனத்த னாகி
- வன்மையான் மிக்கு நோக்க
அதம்பழத் துருவு செய்தார்
- அவளிவ ணல்லூ ராரே.
4.59.7 575 நாடுமிக் குழிதர் கின்ற
- நடுவிலா அரக்கர் கோனை
ஓடுமிக் கென்று சொல்லி
- ஊன்றினான் உகிரி னாலே
பாடுமிக் குய்வ னென்று
- பணியநற் றிறங்கள் காட்டி
ஆடுமிக் கரவம் பூண்டார்
- அவளிவ ணல்லூ ராரே.
4.59.8 576 ஏனமா யிடந்த மாலும்
- எழில்தரு முளரி யானும்
ஞானந்தா னுடைய ராகி
- நன்மையை அறிய மாட்டார்
சேனந்தான் இலாவ ரக்கன்
- செழுவரை எடுக்க வூன்றி
ஆனந்த அருள்கள் செய்தார்
- அவளிவ ணல்லூ ராரே.
4.59.9 577 ஊக்கினான் மலையை யோடி
- உணர்விலா அரக்கன் றன்னைத்
தாக்கினான் விரலி னாலே
- தலைபத்துந் தகர வூன்றி
நோக்கினான் அஞ்சத் தன்னை
- நோன்பிற வூன்று சொல்லி
ஆக்கினார் அமுத மாக
- அவளிவ ணல்லூ ராரே.
4.59.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சாட்சிநாயகேசுவரர், தேவியார் - சவுந்தரநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.60 திருப்பெருவேளூர் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்578 மறையணி நாவி னானை
- மறப்பிலார் மனத்து ளானைக்
கறையணி கண்டன் றன்னைக்
- கனலெரி யாடி னானைப்
பிறையணி சடையி னானைப்
- பெருவேளூர் பேணி னானை
நறையணி மலர்கள் தூவி
- நாடொறும் வணங்கு வேனே.
4.60.1 579 நாதனாய் உலக மெல்லாம்
- நம்பிரான் எனவும் நின்ற
பாதனாம் பரம யோகி
- பலபல திறத்தி னாலும்
பேதனாய்த் தோன்றி னானைப்
- பெருவேளூர் பேணி னானை
ஓதநா வுடைய னாகி
- உரைக்குமா றுரைக்கின் றேனே.
4.60.2 580 குறவிதோள் மணந்த செல்வக்
- குமரவேள் தாதை யென்று
நறவிள நறுமென் கூந்தல்
- நங்கையோர் பாகத் தானைப்
பிறவியை மாற்று வானைப்
- பெருவேளூர் பேணி னானை
உறவினால் வல்ல னாகி
- உணருமா றுணர்த்து வேனே.
4.60.3 581 மைஞ்ஞவில் கண்டன் றன்னை
- வலங்கையின் மழுவொன் றேந்திக்
கைஞ்ஞவில் மானி னோடுங்
- கனலெரி யாடி னானைப்
பிஞ்ஞகன் றன்னை அந்தண்
- பெருவேளூர் பேணி னானைப்
பொய்ஞ்ஞெக நினைய மாட்டாப்
- பொறியிலா அறிவி லேனே.
4.60.4 582 ஓடைசேர் நெற்றி யானை
- உரிவையை மூடி னானை
வீடதே காட்டு வானை
- வேதநான் காயி னானைப்
பேடைசேர் புறவ நீங்காப்
- பெருவேளூர் பேணி னானைக்
கூடநான் வல்ல மாற்றங்
- குறுகுமா றறிகி லேனே.
4.60.5 583 கச்சைசேர் நாகத் தானைக்
- கடல்விடங் கண்டத் தானைக்
கச்சியே கம்பன் றன்னைக்
- கனலெரி யாடு வானைப்
பிச்சைசேர்ந் துழல்வி னானைப்
- பெருவேளூர் பேணி னானை
இச்சைசேர்ந் தமர நானும்
- இறைஞ்சுமா றிறைஞ்சு வேனே.
4.60.6 584 சித்தராய் வந்து தன்னைத்
- திருவடி வணங்கு வார்கள்
முத்தனை மூர்த்தி யாய
- முதல்வனை முழுது மாய
பித்தனைப் பிறரு மேத்தப்
- பெருவேளூர் பேணி னானை
மெத்தனே யவனை நாளும்
- விரும்புமா றறிகி லேனே.
4.60.7 585 முண்டமே தாங்கி னானை
- முற்றிய ஞானத் தானை
வண்டுலாங் கொன்றை மாலை
- வளர்மதிக் கண்ணி யானைப்
பிண்டமே ஆயி னானைப்
- பெருவேளூர் பேணி னானை
அண்டமாம் ஆதி யானை
- அறியுமா றறிகி லேனே.
4.60.8 586 விரிவிலா அறிவி னார்கள்
- வேறொரு சமயஞ் செய்து
எரிவினாற் சொன்னா ரேனும்
- எம்பிராற் கேற்ற தாகும்
பரிவினாற் பெரியோ ரேத்தும்
- பெருவேளூர் பற்றி னானை
மருவிநான் வாழ்த்தி உய்யும்
- வகையது நினைக்கின் றேனே.
4.60.9 587 பொருகடல் இலங்கை மன்னன்
- உடல்கெடப் பொருத்தி நல்ல
கருகிய கண்டத் தானைக்
- கதிரிளங் கொழுந்து சூடும்
பெருகிய சடையி னானைப்
- பெருவேளூர் பேணி னானை
உருகிய அடிய ரேத்தும்
- உள்ளத்தால் உள்கு வேனே.
4.60.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரியாதநாதர், தேவியார் - மின்னனையாளம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.61 திருஇராமேச்சுரம் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்588 பாசமுங் கழிக்க கில்லா
- அரக்கரைப் படுத்துத் தக்க
வாசமிக் கலர்கள் கொண்டு
- மதியினால் மால்செய் கோயில்
நேசமிக் கன்பி னாலே
- நினைமின்நீர் நின்று நாளுந்
தேசமிக் கான் இருந்த
- திருஇரா மேச்சு ரமே.
4.61.1 589 முற்றின நாள்கள் என்று
- முடிப்பதே கார ணமாய்
உற்றவன் போர்க ளாலே
- உணர்விலா அரக்கர் தம்மைச்
செற்றமால் செய்த கோயில்
- திருஇரா மேச்சு ரத்தைப்
பற்றிநீ பரவு நெஞ்சே
- படர்சடை ஈசன் பாலே.
4.61.2 590 கடலிடை மலைகள் தம்மால்
- அடைத்துமால் கருமம் முற்றித்
திடலிடைச் செய்த கோயில்
- திருஇரா மேச்சு ரத்தைத்
தொடலிடை வைத்து நாவிற்
- சுழல்கின்றேன் தூய்மை யின்றி
உடலிடை நின்றும் பேரா
- ஐவர்ஆட் டுண்டு நானே.
4.61.3 591 குன்றுபோல் தோளு டைய
- குணமிலா அரக்கர் தம்மைக்
கொன்றுபோ ராழி யம்மால்
- வேட்கையாற் செய்த கோயில்
நன்றுபோல் நெஞ்ச மேநீ
- நன்மையை அறிதி யாயிற்
சென்றுநீ தொழுதுய் கண்டாய்
- திருஇரா மேச்சு ரமே.
4.61.4 592 வீரமிக் கெயிறு காட்டி
- விண்ணுற நீண்ட ரக்கன்
கூரமிக் கவனைச் சென்று
- கொன்றுடன் கடற் படுத்துத்
தீரமிக் கானி ருந்த
- திருஇரா மேச்சு ரத்தைக்
கோரமிக் கார்த வத்தாற்
- கூடுவார் குறிப்பு ளாரே.
4.61.5 593 ஆர்வலம் நம்மின் மிக்கார்
- என்றஅவ் வரக்கர் கூடிப்
போர்வலஞ் செய்து மிக்குப்
- பொருதவர் தம்மை வீட்டித்
தேர்வலஞ் செற்ற மால்செய்
- திருஇரா மேச்சு ரத்தைச்
சேர்மட நெஞ்ச மேநீ
- செஞ்சடை எந்தை பாலே.
4.61.6 594 வாக்கினால் இன்பு ரைத்து
- வாழ்கிலார் தம்மை யெல்லாம்
போக்கினாற் புடைத்த வர்கள்
- உயிர்தனை யுண்டு மால்தான்
தேக்குநீர் செய்த கோயில்
- திருஇரா மேச்சு ரத்தை
நோக்கினால் வணங்கு வார்க்கு
- நோய்வினை நுணுகு மன்றே.
4.61.7 595 பலவுநாள் தீமை செய்து
- பார்தன்மேற் குழுமி வந்து
கொலைவிலார் கொடிய ராய
- அரக்கரைக் கொன்று வீழ்த்தச்
சிலையினான் செய்த கோயில்
- திருஇரா மேச்சு ரத்தைத்
தலையினால் வணங்கு வார்கள்
- தாழ்வராந் தவம தாமே.
4.618 596 கோடிமா தவங்கள் செய்து
- குன்றினார் தம்மை யெல்லாம்
வீடவே சக்க ரத்தால்
- எறிந்துபின் அன்பு கொண்டு
தேடிமால் செய்த கோயில்
- திருஇரா மேச்சு ரத்தை
நாடிவாழ் நெஞ்ச மேநீ
- நன்னெறி யாகு மன்றே.
4.61.9 597 வன்கண்ணர் வாள ரக்கர்
- வாழ்வினை யொன்ற றியார்
புன்கண்ண ராகி நின்று
- போர்கள்செய் தாரை மாட்டிச்
செங்கண்மால் செய்த கோயில்
- திருஇரா மேச்சு ரத்தைத்
தங்கணால் எய்த வல்லார்
- தாழ்வராந் தலைவன் பாலே.
4.61.10 598 வரைகளொத் தேயு யர்ந்த
- மணிமுடி அரக்கர் கோனை
விரையமுற் றறவொ டுக்கி
- மீண்டுமால் செய்த கோயில்
திரைகள்முத் தால்வ ணங்குந்
- திருஇரா மேச்சு ரத்தை
உரைகள்பத் தாலு ரைப்பார்
- உள்குவார் அன்பி னாலே.
4.61.11
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - இராமலிங்கேசுவரர்; தேவியார் - பருவதவர்த்தனியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.62 திருவாலவாய் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்599 வேதியா வேத கீதா
- விண்ணவர் அண்ணா என்றென்
றோதியே மலர்கள் தூவி
- ஒடுங்கிநின் கழல்கள் காணப்
பாதியோர் பெண்ணை வைத்தாய்
- படர்சடை மதியஞ் சூடும்
ஆதியே ஆல வாயில்
- அப்பனே அருள்செ யாயே.
4.62.1 600 நம்பனே நான்மு கத்தாய்
- நாதனே ஞான மூர்த்தி
என்பொனே ஈசா என்றென்
- றேத்திநான் ஏசற் றென்றும்
பின்பினே திரிந்து நாயேன்
- பேர்த்தினிப் பிறவா வண்ணம்
அன்பனே ஆலவாயில் அப்பனே
- அருள் செயாயே.
4.62.2 601 ஒருமருந் தாகி யுள்ளாய்
- உம்பரோ டுலகுக் கெல்லாம்
பெருமருந் தாகி நின்றாய்
- பேரமு தின்சு வையாய்க்
கருமருந் தாகி யுள்ளாய்
- ஆளும்வல் வினைகள் தீர்க்கும்
அருமருந் தால வாயில்
- அப்பனே அருள்செ யாயே.
4.62.3 602 செய்யநின் கமல பாதஞ்
- சேருமா தேவர் தேவே
மையணி கண்டத் தானே
- மான்மறி மழுவொன் றேந்துஞ்
சைவனே சால ஞானங்
- கற்றறி விலாத நாயேன்
ஐயனே ஆல வாயில்
- அப்பனே அருள்செ யாயே.
4.62.4 603 வெண்டலை கையி லேந்தி
- மிகவுமூர் பலிகொண் டென்றும்
உண்டது மில்லை சொல்லில்
- உண்டது நஞ்சு தன்னைப்
பண்டுனை நினைய மாட்டாப்
- பளகனேன் உளம தார
அண்டனே ஆல வாயில்
- அப்பனே அருள்செ யாயே.
4.62.5 604 எஞ்சலில் புகலி தென்றென்
- றேத்திநான் ஏசற் றென்றும்
வஞ்சக மொன்று மின்றி
- மலரடி காணும் வண்ணம்
நஞ்சினை மிடற்றில் வைத்த
- நற்பொருட் பதமே நாயேற்
கஞ்சலென் றால வாயில்
- அப்பனே அருள்செ யாயே.
4.62.6 605 வழுவிலா துன்னை வாழ்த்தி
- வழிபடுந் தொண்ட னேன்உன்
செழுமலர்ப் பாதங் காணத்
- தெண்டிரை நஞ்ச முண்ட
குழகனே கோல வில்லீ
- கூத்தனே மாத்தா யுள்ள
அழகனே ஆல வாயில்
- அப்பனே அருள்செ யாயே.
4.62.7 606 நறுமலர் நீருங் கொண்டு
- நாடொறு மேத்தி வாழ்த்திச்
செறிவன சித்தம் வைத்துத்
- திருவடி சேரும் வண்ணம்
மறிகடல் வண்ணன் பாகா
- மாமறை யங்க மாறும்
அறிவனே ஆல வாயில்
- அப்பனே அருள்செ யாயே.
4.62.8 607 நலந்திகழ் வாயின் நூலாற்
- சருகிலைப் பந்தர் செய்த
சிலந்தியை அரச தாள
- அருளினாய் என்று திண்ணங்
கலந்துடன் வந்து நின்றாள்
- கருதிநான் காண்ப தாக
அலந்தனன் ஆல வாயில்
- அப்பனே அருள்செ யாயே.
4.62.9 608 பொடிக்கொடு பூசிப் பொல்லாக்
- குரம்பையிற் புந்தி யொன்றிப்
பிடித்துநின் றாள்க ளென்றும்
- பிதற்றிநா னிருக்க மாட்டேன்
எடுப்பனென் றிலங்கைக் கோன்வந்
- தெடுத்தலும் இருப துதோள்
அடர்த்தனே ஆல வாயில்
- அப்பனே அருள்செ யாயே.
4.62.10
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சொக்கநாதேசுவரர், தேவியார் - மீனாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.63 திருவண்ணாமலை - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்609 ஓதிமா மலர்கள் தூவி
- உமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கும் எண்டோ ள்
- சுடர்மழுப் படையி னானே
ஆதியே அமரர் கோவே
- அணியணா மலையு ளானே
நீதியால் நின்னை யல்லால்
- நினையுமா நினைவி லேனே.
4.63.1 610 பண்டனை வென்ற இன்சொற்
- பாவையோர் பங்க நீல
கண்டனே கார்கொள் கொன்றைக்
- கடவுளே கமல பாதா
அண்டனே அமரர் கோவே
- அணியணா மலையு ளானே
தொண்டனேன் உன்னை அல்லாற்
- சொல்லுமா சொல்லி லேனே.
4.63.2 611 உருவமும் உயிரு மாகி
- ஓதிய உலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய்
- நின்றவெம் பெருமான் மிக்க
அருவிபொன் சொரியும் அண்ணா
- மலையுளாய் அண்டர் கோவே
மருவிநின் பாத மல்லான்
- மற்றொரு மாடி லேனே.
4.63.3 612 பைம்பொனே பவளக் குன்றே
- பரமனே பால்வெண் ணீற்றாய்
செம்பொனே மலர்செய் பாதா
- சீர்தரு மணியே மிக்க
அம்பொனே கொழித்து வீழும்
- அணியணா மலையு ளானே
என்பொனே உன்னை யல்லால்
- யாதும்நான் நினைவி லேனே.
4.63.4 613 பிறையணி முடியி னானே
- பிஞ்ஞகா பெண்ணோர் பாகா
மறைவலா இறைவா வண்டார்
- கொன்றையாய் வாம தேவா
அறைகழல் அமர ரேத்தும்
- அணியணா மலையு ளானே
இறைவனே உன்னை யல்லா
- லியாதுநான் நினைவி லேனே.
4.63.5 614 புரிசடை முடியின் மேலோர்
- பொருபுனற் கங்கை வைத்துக்
கரியுரி போர்வை யாகக்
- கருதிய கால காலா
அரிகுலம் மலிந்த அண்ணா
- மலையுளாய் அலரின் மிக்க
வரிமிகு வண்டு பண்செய்
- பாதநான் மறப்பி லேனே.
4.63.6 615 இரவியும் மதியும் விண்ணும்
- இருநிலம் புனலுங் காற்றும்
உரகமார் பவனம் எட்டுந்
- திசையொளி உருவ மானாய்
அரவுமிழ் மணிகொள் சோதி
- அணியணா மலையு ளானே
பரவுநின் பாத மல்லாற்
- பரமநான் பற்றி லேனே.
4.63.7 616 பார்த்தனுக் கன்று நல்கிப்
- பாசுப தத்தை ஈந்தாய்
நீர்த்ததும் புலாவு கங்கை
- நெடுமுடி நிலாவ வைத்தாய்
ஆர்த்துவந் தீண்டு கொண்டல்
- அணியணா மலையு ளானே
தீர்த்தனே நின்றன் பாதத்
- திறமலாற் றிறமி லேனே.
4.63.8 617 பாலுநெய் முதலா மிக்க
- பசுவில்ஐந் தாடு வானே
மாலுநான் முகனுங் கூடிக்
- காண்கிலா வகையுள் நின்றாய்
ஆலுநீர் கொண்டல் பூகம்
- அணியணா மலையு ளானே
வாலுடை விடையாய் உன்றன்
- மலரடி மறப்பி லேனே.
4.63.9 618 இரக்கமொன் றியாது மில்லாக்
- காலனைக் கடிந்த எம்மான்
உரத்தினால் வரையை ஊக்க
- ஒருவிரல் நுதியி னாலே
அரக்கனை நெரித்த அண்ணா
- மலையுளாய் அமர ரேறே
சிரத்தினால் வணங்கி யேத்தித்
- திருவடி மறப்பி லேனே.
4.63.10
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அருணாசலேசுவரர், தேவியார் - உண்ணாமுலையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.64 திருவீழிமிழலை - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்619 பூதத்தின் படையர் பாம்பின்
- பூணினர் பூண நூலர்
சீதத்திற் பொலிந்த திங்கட்
- கொழுந்தர்நஞ் சழுந்து கண்டர்
கீதத்திற் பொலிந்த ஓசைக்
- கேள்வியர் வேள்வி யாளர்
வேதத்தின் பொருளர் வீழி
- மிழலையுள் விகிர்த னாரே.
4.64.1 620 காலையிற் கதிர்செய் மேனி
- கங்குலிற் கறுத்த கண்டர்
மாலையின் மதியஞ் சேர்ந்த
- மகுடத்தர் மதுவும் பாலும்
ஆலையிற் பாகும் போல
- அண்ணித்திட் டடியார்க் கென்றும்
வேலையின் அமுதர் வீழி
- மிழலையுள் விகிர்த னாரே.
4.64.2 621 வருந்தின நெருநல் இன்றாய்
- வழங்கின நாளர் ஆற்கீழ்
இருந்துநன் பொருள்கள் நால்வர்க்
- கியம்பினர் இருவ ரோடும்
பொருந்தினர் பிரிந்து தம்பால்
- பொய்யரா மவர்கட் கென்றும்
விருந்தினர் திருந்து வீழி
- மிழலையுள் விகிர்த னாரே.
4.64.3 622 நிலையிலா வூர்மூன் றொன்ற
- நெருப்பரி காற்றம் பாகச்
சிலையுநா ணதுவு நாகங்
- கொண்டவர் தேவர் தங்கள்
தலையினாற் றரித்த என்பும்
- தலைமயிர் வடமும் பூண்ட
விலையிலா வேடர் வீழி
- மிழலையுள் விகிர்த னாரே.
4.64.4 623 மறையிடைப் பொருளர் மொட்டின்
- மலர்வழி வாசத் தேனர்
கறவிடைப் பாலின் நெய்யர்
- கரும்பினிற் கட்டி யாளர்
பிறையிடைப் பாம்பு கொன்றைப்
- பிணையல்சேர் சடையுள் நீரர்
விறகிடைத் தீயர் வீழி
- மிழலையுள் விகிர்த னாரே.
4.64.5 624 எண்ணகத் தில்லை அல்லர்
- உளரல்லர் இமவான் பெற்ற
பெண்ணகத் தரையர் காற்றிற்
- பெருவலி யிருவ ராகி
மண்ணகத் தைவர் நீரில்
- நால்வர்தீ யதனில் மூவர்
விண்ணகத் தொருவர் வீழி
- மிழலையுள் விகிர்த னாரே.
4.64.6 625 சந்தணி கொங்கை யாளோர்
- பங்கினர் சாம வேதர்
எந்தையும் எந்தை தந்தை
- தந்தையு மாய ஈசர்
அந்தியோ டுதயம் அந்த
- ணாளர்ஆன் நெய்யால் வேட்கும்
வெந்தழ லுருவர் வீழி
- மிழலையுள் விகிர்த னாரே.
4.64.7 626 நீற்றினை நிறையப் பூசி
- நித்தல்ஆ யிரம்பூக் கொண்டு
ஏற்றுழி ஒருநா ளொன்று
- குறையக்கண் நிறைய விட்ட
ஆற்றலுக் காழி நல்கி
- யவன்கொணர்ந் திழிச்சுங் கோயில்
வீற்றிருந் தளிப்பர் வீழி
- மிழலையுள் விகிர்த னாரே.
4.64.8 627 சித்திசெய் பவர்கட் கெல்லாஞ்
- சேர்விடஞ் சென்று கூடப்
பத்திசெய் பவர்கள் பாவம்
- பறைப்பவர் இறப்பி லாளர்
முத்திசை பவள மேனி
- முதிரொளி நீல கண்டர்
வித்தினில் முளையர் வீழி
- மிழலையுள் விகிர்த னாரே.
4.64.9 628 தருக்கின அரக்கன் தேரூர்
- சாரதி தடைநி லாது
பொருப்பினை யெடுத்த தோளும்
- பொன்முடி பத்தும் புண்ணாய்
நெரிப்புண்டங் கலறி மீண்டு
- நினைந்தடி பரவத் தம்வாள்
விருப்பொடுங் கொடுப்பர் வீழி
- மிழலையுள் விகிர்த னாரே.
4.64.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீழியழகீசுவரர், தேவியார் - சுந்தராம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.65 திருச்சாய்க்காடு - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்629 தோடுலா மலர்கள் தூவித்
- தொழுதெழு மார்க்கண் டேயன்
வீடுநாள் அணுகிற் றென்று
- மெய்கொள்வான் வந்த காலன்
பாடுதான் செல்லு மஞ்சிப்
- பாதமே சரண மென்னச்
சாடினார் காலன் மாளச்
- சாய்க்காடு மேவி னாரே.
4.65.1 630 வடங்கெழு மலைமத் தாக
- வானவர் அசுர ரோடு
கடைந்திட எழுந்த நஞ்சங்
- கண்டுபல் தேவ ரஞ்சி
அடைந்துநும் சரண மென்ன
- அருள்பெரி துடைய ராகித்
தடங்கடல் நஞ்சம் உண்டார்
- சாய்க்காடு மேவி னாரே.
4.65.2 631 அரணிலா வெளிய நாவல்
- அருள்நிழ லாக ஈசன்
வரணிய லாகித் தன்வாய்
- நூலினாற் பந்தர் செய்ய
முரணிலாச் சிலந்தி தன்னை
- முடியுடை மன்ன னாக்கித்
தரணிதான் ஆள வைத்தார்
- சாய்க்காடு மேவி னாரே.
4.65.3 632 அரும்பெருஞ் சிலைக்கை வேட
- னாய்விறற் பார்த்தற் கன்று
உரம்பெரி துடைமை காட்டி
- ஒள்ளமர் செய்து மீண்டே
வரம்பெரி துடைய னாக்கி
- வாளமர் முகத்தின் மன்னுஞ்
சரம்பொலி தூணி ஈந்தார்
- சாய்க்காடு மேவி னாரே.
4.65.4 633 இந்திரன் பிரமன் அங்கி
- எண்வகை வசுக்க ளோடு
மந்திர மறைய தோதி
- வானவர் வணங்கி வாழ்த்தத்
தந்திர மறியாத் தக்கன்
- வேள்வியைத் தகர்த்த ஞான்று
சந்திரற் கருள்செய் தாருஞ்
- சாய்க்காடு மேவி னாரே.
4.65.5 634 ஆமலி பாலும் நெய்யும்
- ஆட்டிஅர்ச் சனைகள் செய்து
பூமலி கொன்றை சூட்டப்
- பொறாததன் தாதை தாளைக்
கூர்மழு வொன்றால் ஓச்சக்
- குளிர்சடைக் கொன்றை மாலைத்
தாமநற் சண்டிக் கீந்தார்
- சாய்க்காடு மேவி னாரே.
4.65.6 635 மையறு மனத்த னாய
- பகீரதன் வரங்கள் வேண்ட
ஐயமில் லமர ரேத்த
- ஆயிர முகம தாகி
வையகம் நெளியப் பாய்வான்
- வந்திழி கங்கை யென்னுந்
தையலைச் சடையில் ஏற்றார்
- சாய்க்காடு மேவி னாரே.
4.65.7 636 குவப்பெருந் தடக்கை வேடன்
- கொடுஞ்சிலை இறைச்சிப் பாரந்
துவர்ப்பெருஞ் செருப்பால் நீக்கித்
- தூயவாய்க் கலசம் ஆட்ட
உவப்பெருங் குருதி சோர
- ஒருகணை யிடந்தங் கப்பத்
தவப்பெருந் தேவு செய்தார்
- சாய்க்காடு மேவி னாரே.
4.65.8 637 நக்குலா மலர்பன் னூறு
- கொண்டுநன் ஞானத் தோடு
மிக்கபூ சனைகள் செய்வான்
- மென்மல ரொன்று காணா
தொக்குமென் மலர்க்கண் ணென்றங்
- கொருகணை யிடந்து மப்பச்
சக்கரங் கொடுப்பர் போலுஞ்
- சாய்க்காடு மேவி னாரே.
4.65.9 638 புயங்கள்ஐஞ் ஞான்கும் பத்து
- மாயகொண் டரக்க னோடிச்
சிவன்திரு மலையைப் பேர்க்கத்
- திருமலர்க் குழலி யஞ்ச
வியன்பெற எய்தி வீழ
- விரல்சிறி தூன்றி மீண்டே
சயம்பெற நாம மீந்தார்
- சாய்க்காடு மேவி னாரே.
4.65.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சாயவனேசுவரர்,
தேவியார் - குயிலின்நன்மொழியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.66 திருநாகேச்சரம் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்639 கச்சைசேர் அரவர் போலுங்
- கறையணி மிடற்றர் போலும்
பிச்சைகொண் டுண்பர் போலும்
- பேரரு ளாலர் போலும்
இச்சையால் மலர்கள் தூவி
- இரவொடு பகலுந் தம்மை
நச்சுவார்க் கினியர் போலும்
- நாகஈச் சரவ னாரே.
4.66.1 640 வேடுறு வேட ராகி
- விசயனோ டெய்தார் போலுங்
காடுறு பதியர் போலுங்
- கடிபுனற் கங்கை நங்கை
சேடெறி சடையர் போலுந்
- தீவினை தீர்க்க வல்ல
நாடறி புகழர் போலும்
- நாகஈச் சரவ னாரே.
4.66.2 641 கற்றுணை வில்ல தாகக்
- கடியரண் செற்றார் போலும்
பொற்றுணைப் பாதர் போலும்
- புலியத ளுடையார் போலுஞ்
சொற்றுணை மாலை கொண்டு
- தொழுதெழு வார்கட் கெல்லாம்
நற்றுணை யாவர் போலும்
- நாகஈச் சரவ னாரே.
4.66.3 642 கொம்பனாள் பாகர் போலுங்
- கொடியுடை விடையர் போலுஞ்
செம்பொனா ருருவர் போலுந்
- திகழ்திரு நீற்றர் போலும்
எம்பிரான் எம்மை யாளும்
- இறைவனே என்று தம்மை
நம்புவார்க் கன்பர் போலும்
- நாகஈச் சரவ னாரே.
4.66.4 643 கடகரி யுரியர் போலுங்
- கனல்மழு வாளர் போலும்
படவர வரையர் போலும்
- பாரிடம் பலவுங் கூடிக்
குடமுடை முழவம் ஆர்ப்பக்
- கூளிகள் பாட நாளும்
நடநவில் அடிகள் போலும்
- நாகஈச் சரவ னாரே.
4.66.5 644 பிறையுறு சடையர் போலும்
- பெண்ணொரு பாகர் போலும்
மறையுறு மொழியர் போலும்
- மால்மறை யவன்ற னோடு
முறைமுறை அமரர் கூடி
- முடிகளால் வணங்க நின்ற
நறவமர் கழலர் போலும்
- நாகஈச் சரவ னாரே.
4.66.6 645 வஞ்சகர்க் கரியர் போலும்
- மருவினோர்க் கெளியர் போலுங்
குஞ்சரத் துரியர் போலுங்
- கூற்றினைக் குமைப்பர் போலும்
விஞ்சையர் இரிய அன்று
- வேலைவாய் வந்தெ ழுந்த
நஞ்சணி மிடற்றர் போலும்
- நாகஈச் சரவ னாரே.
4.66.7 646 போகமார் மோடி கொங்கை
- புணர்தரு புனிதர் போலும்
வேகமார் விடையர் போலும்
- வெண்பொடி யாடு மேனிப்
பாகமா லுடையர் போலும்
- பருப்பத வில்லர் போலும்
நாகநா ணுடையர் போலும்
- நாகஈச் சரவ னாரே.
4.66.8 647 கொக்கரை தாளம் வீணை
- பாணிசெய் குழகர் போலும்
அக்கரை யணிவர் போலும்
- ஐந்தலை யரவர் போலும்
வக்கரை யமர்வர் போலும்
- மாதரை மையல் செய்யும்
நக்கரை யுருவர் போலும்
- நாகஈச் சரவ னாரே.
4.66.9 648 வின்மையாற் புரங்கள் மூன்றும்
- வெந்தழல் விரித்தார் போலும்
தன்மையால் அமரர் தங்கள்
- தலைவர்க்குந் தலைவர் போலும்
வன்மையான் மலையெ டுத்தான்
- வலியினைத் தொலைவித் தாங்கே
நன்மையால் அளிப்பர் போலும்
- நாகஈச் சரவ னாரே.
4.66.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சண்பகாரண்ணியேசுவரர்,
தேவியார் - குன்றமுலைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.67 திருக்கொண்டீச்சரம் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்649 வரைகிலேன் புலன்க ளைந்தும்
- வரைகிலாப் பிறவி மாயப்
புரையிலே அடங்கி நின்று
- புறப்படும் வழியுங் காணேன்
அரையிலே மிளிரு நாகத்
- தண்ணலே அஞ்ச லென்னாய்
திரையுலாம் பழன வேலித்
- திருக்கொண்டீச் சரத்து ளானே.
4.67.1 650 தொண்டனேன் பிறந்து வாளா
- தொல்வினைக் குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து நைந்து
- பேர்வதோர் வழியுங் காணேன்
அண்டனே அண்ட வாணா
- அறிவனே அஞ்ச லென்னாய்
தெண்டிரைப் பழனஞ் சூழ்ந்த
- திருக்கொண்டீச் சரத்து ளானே.
4.67.2 651 கால்கொடுத் தெலும்பு மூட்டிக்
- கதிர்நரம் பாக்கை யார்த்துத்
தோலுடுத் துதிர மட்டித்
- தொகுமயிர் மேய்ந்த கூரை
ஓலெடுத் துழைஞர் கூடி
- ஒளிப்பதற் கஞ்சு கின்றேன்
சேலுடைப் பழனஞ் சூழ்ந்த
- திருக்கொண்டீச் சரத்து ளானே.
4.67.3 652 கூட்டமாய் ஐவர் வந்து
- கொடுந்தொழிற் குணத்த ராகி
ஆட்டுவார்க் காற்ற கில்லேன்
- ஆடர வசைத்த கோவே
காட்டிடை யரங்க மாக
- ஆடிய கடவு ளேயோ
சேட்டிரும் பழன வேலித்
- திருக்கொண்டீச் சரத்து ளானே.
4.67.4 653 பொக்கமாய் நின்ற பொல்லாப்
- புழுமிடை முடைகொள் ஆக்கை
தொக்குநின் றைவர் தொண்ணூற்
- றறுவருந் துயக்க மெய்த
மிக்குநின் றிவர்கள் செய்யும்
- வேதனைக் கலந்து போனேன்
செக்கரே திகழும் மேனித்
- திருக்கொண்டீச் சரத்து ளானே.
4.67.5 654 ஊனுலா முடைகொள் ஆக்கை
- உடைகல மாவ தென்றும்
மானுலா மழைக்க ணார்தம்
- வாழ்க்கையை மெய்யென் றெண்ணி
நானெலா மினைய கால
- நண்ணிலேன் எண்ண மில்லேன்
தேனுலாம் பொழில்கள் சூழ்ந்த
- திருக்கொண்டீச் சரத்து ளானே.
4.67.6 655 சாணிரு மடங்கு நீண்ட
- சழக்குடைப் பதிக்கு நாதர்
வாணிகர் ஐவர் தொண்ணூற்
- றறுவரும் மயக்கஞ் செய்து
பேணிய பதியின் நின்று
- பெயரும்போ தறிய மாட்டேன்
சேணுயர் மாட நீடு
- திருக்கொண்டீச் சரத்து ளானே.
4.67.7 656 பொய்மறித் தியற்றி வைத்துப்
- புலால்கமழ் பண்டம் பெய்து
பைமறித் தியற்றி யன்ன
- பாங்கிலாக் குரம்பை நின்று
கைமறித் தனைய வாவி
- கழியும்போ தறிய மாட்டேன்
சென்னெறிச் செலவு காணேன்
- திருக்கொண்டீச் சரத்து ளானே.
4.67.8 657 பாலனாய்க் கழிந்த நாளும்
- பனிமலர்க் கோதை மார்தம்
மேலனாய்க் கழிந்த நாளும்
- மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்த நாளுங்
- குறிக்கோளி லாது கெட்டேன்
சேலுலாம் பழன வேலித்
- திருக்கொண்டீச் சரத்து ளானே.
4.67.9 658 விரைதரு கருமென் கூந்தல்
- விளங்கிழை வேலொண் கண்ணாள்
வெருவர இலங்கைக் கோமான்
- விலங்கலை எடுத்த ஞான்று
பருவரை யனைய தோளும்
- முடிகளும் பாரி வீழத்
திருவிர லூன்றி னானே
- திருக்கொண்டீச் சரத்து ளானே.
4.67.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பசுபதீசுவரர், தேவியார் - சாந்தநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.68 திருவாலங்காடு - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்659 வெள்ளநீர்ச் சடையர் போலும்
- விரும்புவார்க் கெளியர் போலும்
உள்ளுளே யுருகி நின்றங்
- குகப்பவர்க் கன்பர் போலுங்
கள்ளமே வினைக ளெல்லாங்
- கரிசறுத் திடுவர் போலும்
அள்ளலம் பழனை மேய
- ஆலங்காட் டடிக ளாரே.
4.68.1 660 செந்தழ லுருவர் போலுஞ்
- சினவிடை யுடையர் போலும்
வெந்தவெண் ணீறு கொண்டு
- மெய்க்கணிந் திடுவர் போலும்
மந்தமாம் பொழிற் பழனை
- மல்கிய வள்ளல் போலும்
அந்தமில் அடிகள் போலும்
- ஆலங்காட் டடிக ளாரே.
4.68.2 661 கண்ணினாற் காம வேளைக்
- கனலெழ விழிப்பர் போலும்
எண்ணிலார் புரங்கள் மூன்று
- மெரியுணச் சிரிப்பர் போலும்
பண்ணினார் முழவ மோவாப்
- பைம்பொழிற் பழனை மேய
அண்ணலார் எம்மை யாளும்
- ஆலங்காட் டடிக ளாரே.
4.68.3 662 காறிடு விடத்தை யுண்ட
- கண்டரெண் தோளர் போலுந்
தூறிடு சுடலை தன்னிற்
- சுண்ணவெண் ணீற்றர் போலுங்
கூறிடு முருவர் போலுங்
- குளிர்பொழிற் பழனை மேய
ஆறிடு சடையர் போலும்
- ஆலங்காட் டடிக ளாரே.
4.68.4 663 பார்த்தனோ டமர் பொருது
- பத்திமை காண்பர் போலுங்
கூர்த்தவா யம்பு கோத்துக்
- குணங்களை அறிவர் போலும்
பேர்த்துமோ ராவ நாழி
- அம்போடுங் கொடுப்பர் போலுந்
தீர்த்தமாம் பழனை மேய
- திருவாலங் காட னாரே.
4.68.5 664 வீட்டினார் சுடுவெண் ணீறு
- மெய்க்கணிந் திடுவர் போலுங்
காட்டில்நின் றாடல் பேணுங்
- கருத்தினை யுடையர் போலும்
பாட்டினார் முழவ மோவாப்
- பைம்பொழிற் பழனை மேயார்
ஆட்டினார் அரவந் தன்னை
- ஆலங்காட் டடிக ளாரே.
4.68.6 665 தாளுடைச் செங்க மலத்
- தடங்கொள்சே வடியர் போலும்
நாளுடைக் காலன் வீழ
- உதைசெய்த நம்பர் போலுங்
கோளுடைப் பிறவி தீர்ப்பார்
- குளிர்பொழிற் பழனை மேய
ஆளுடை யண்ணல் போலும்
- ஆலங்காட் டடிக ளாரே.
4.68.7 666 கூடினார் உமைதன் னோடே
- குறிப்புடை வேடங் கொண்டு
சூடினார் கங்கை யாளைச்
- சுவறிடு சடையர் போலும்
பாடினார் சாம வேதம்
- பைம்பொழிற் பழனை மேயார்
ஆடினார் காளி காண
- ஆலங்காட் டடிக ளாரே.
4.68.8 667 வெற்றரைச் சமண ரோடு
- விலையுடைக் கூறை போர்க்கும்
ஒற்றரைச் சொற்கள் கொள்ளார்
- குணங்களை உகப்பர் போலும்
பெற்றமே உகந்தங் கேறும்
- பெருமையை யுடையர் போலும்
அற்றங்கள் அறிவர் போலும்
- ஆலங்காட் டடிக ளாரே.
4.68.9 668 மத்தனாய் மலையெ டுத்த
- அரக்கனைக் கரத்தோ டொல்க
ஒத்தினார் திருவி ரலால்
- ஊன்றியிட் டருள்வர் போலும்
பத்தர்தம் பாவந் தீர்க்கும்
- பைம்பொழிற் பழனை மேய
அத்தனார் நம்மை யாள்வார்
- ஆலங்காட் டடிக ளாரே.
4.68.10
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஊர்த்ததாண்டவேசுவரர்,
தேவியார் - வண்டார்குழலியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.69 திருக்கோவலூர்வீரட்டம் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்669 செத்தையேன் சிதம்ப நாயேன்
- செடியனேன் அழுக்குப் பாயும்
பொத்தையே போற்றி நாளும்
- புகலிடம் அறிய மாட்டேன்
எத்தைநான் பற்றி நிற்கேன்
- இருளற நோக்க மாட்டாக்
கொத்தையேன் செய்வ தென்னே
- கோவல்வீ ரட்ட னீரே.
4.69.1 670 தலைசுமந் திருகை நாற்றித்
- தரணிக்கே பொறைய தாகி
நிலையிலா நெஞ்சந் தன்னுள்
- நித்தலும் ஐவர் வேண்டும்
விலைகொடுத் தறுக்க மாட்டேன்
- வேண்டிற்றே வேண்டி எய்த்தேன்
குலைகொள்மாங் கனிகள் சிந்தும்
- கோவல்வீ ரட்ட னீரே.
4.69.2 671 வழித்தலைப் படவு மாட்டேன்
- வைகலுந் தூய்மை செய்து
பழித்திலேன் பாச மற்றுப்
- பரமநான் பரவ மாட்டேன்
இழித்திலேன் பிறவி தன்னை
- என்னினைந் திருக்க மாட்டேன்
கொழித்துவந் தலைக்குந் தெண்ணீர்க்
- கோவல்வீ ரட்ட னீரே.
4.69.3 672 சாற்றுவர் ஐவர் வந்து
- சந்தித்த குடிமை வேண்டிக்
காற்றுவர் கனலப் பேசிக்
- கண்செவி மூக்கு வாயுள்
ஆற்றுவர் அலந்து போனேன்
- ஆதியை அறிவொன் றின்றிக்
கூற்றுவர் வாயிற் பட்டேன்
- கோவல்வீ ரட்ட னீரே.
4.69.4 673 தடுத்திலேன் ஐவர் தம்மைத்
- தத்துவத் துயர்வு நீர்மைப்
படுத்திலேன் பரப்பு நோக்கிப்
- பன்மலர்ப் பாத முற்ற
அடுத்திலேன் சிந்தை யார
- ஆர்வலித் தன்பு திண்ணங்
கொடுத்திலேன் கொடிய வாநான்
- கோவல்வீ ரட்ட னீரே.
4.69.5 674 மாச்செய்த குரம்பை தன்னை
- மண்ணிடை மயக்க மெய்து
நாச்செய்து நாலு மைந்தும்
- நல்லன வாய்தல் வைத்துக்
காச்செய்த காயந் தன்னுள்
- நித்தலும் ஐவர் வந்து
கோச்செய்து குமைக்க வாற்றேன்
- கோவல்வீ ரட்ட னீரே.
4.69.6 675 படைகள்போல் வினைகள் வந்து
- பற்றியென் பக்கல் நின்றும்
விடகிலா வாத லாலே
- விகிர்தனை விரும்பி யேத்தும்
இடையிலேன் என்செய் கேன்நான்
- இரப்பவர் தங்கட் கென்றுங்
கொடையிலேன் கொள்வ தேநான்
- கோவல்வீ ரட்ட னீரே.
4.69.7 676 பிச்சிலேன் பிறவி தன்னைப்
- பேதையேன் பிணக்க மென்னுந்
துச்சுளே அழுந்தி வீழ்ந்து
- துயரமே இடும்பை தன்னுள்
அச்சனாய் ஆதி மூர்த்திக்
- கன்பனாய் வாழ மாட்டாக்
கொச்சையேன் செய்வ தென்னே
- கோவல்வீ ரட்ட னீரே.
4.69.8 677 நிணத்திடை யாக்கை பேணி
- நியமஞ்செய் திருக்க மாட்டேன்
மணத்திடை ஆட்டம் பேசி
- மக்களே சுற்ற மென்னுங்
கணத்திடை ஆட்டப் பட்டுக்
- காதலால் உன்னைப் பேணுங்
குணத்திடை வாழ மாட்டேன்
- கோவல்வீ ரட்ட னீரே.
4.69.9 678 விரிகடல் இலங்கைக் கோனை
- வியன்கயி லாயத் தின்கீழ்
இருபது தோளும் பத்துச்
- சிரங்களும் நெறிய வூன்றிப்
பரவிய பாடல் கேட்டுப்
- படைகொடுத் தருளிச் செய்தார்
குரவொடு கோங்கு சூழ்ந்த
- கோவல்வீ ரட்ட னாரே.
4.69.10
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டேசநாதர், தேவியார் - சிவாநந்தவல்லி.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.70 திருநனிபள்ளி - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்679 முற்றுணை யாயி னானை
- மூவர்க்கு முதல்வன் றன்னைச்
சொற்றுணை ஆயி னானைச்
- சோதியை ஆத ரித்து
உற்றுணர்ந் துருகி யூறி
- உள்கசி வுடைய வர்க்கு
நற்றுணை யாவர் போலும்
- நனிபள்ளி அடிக ளாரே.
4.70.1 680 புலர்ந்தகால் பூவும் நீருங்
- கொண்டடி போற்ற மாட்டா
வலஞ்செய்து வாயின் நூலால்
- வட்டணைப் பந்தர் செய்த
சிலந்தியை அரைய னாக்கிச்
- சீர்மைகள் அருள வல்லார்
நலந்திகழ் சோலை சூழ்ந்த
- நனிபள்ளி அடிக ளாரே.
4.70.2 681 எண்பதும் பத்தும் ஆறு
- மென்னுளே இருந்து மன்னிக்
கண்பழக் கொன்று மின்றிக்
- கலக்கநான் அலக்க ழிந்தேன்
செண்பகந் திகழும் புன்னை
- செழுந்திரட் குரவம் வேங்கை
நண்புசெய் சோலை சூழ்ந்த
- நனிபள்ளி அடிக ளாரே.
4.70.3 682 பண்ணினார் பாட லாகிப்
- பழத்தினில் இரத மாகிக்
கண்ணினார் பார்வை யாகிக்
- கருத்தொடு கற்ப மாகி
எண்ணினார் எண்ண மாகி
- ஏழுல கனைத்து மாகி
நண்ணினார் வினைகள் தீர்ப்பார்
- நனிபள்ளி அடிக ளாரே.
4.70.4 683 துஞ்சிருள் காலை மாலை
- தொடர்ச்சியை மறந் திராதே
அஞ்செழுத் தோதின் நாளும்
- அரனடிக் கன்ப தாகும்
வஞ்சனைப் பால்சோ றாக்கி
- வழக்கிலா அமணர் தந்த
நஞ்சமு தாக்கு வித்தார்
- நனிபள்ளி அடிக ளாரே.
4.70.5 684 செம்மலர்க் கமலத் தோனுந்
- திருமுடி காண மாட்டான்
அம்மலர்ப் பாதங் காண்பான்
- ஆழியான் அகழ்ந்துங் காணான்
நின்மலன் என்றங் கேத்தும்
- நினைப்பினை அருளி நாளும்
நம்மலம் அறுப்பர் போலும்
- நனிபள்ளி அடிக ளாரே.
4.70.6 685 அரவத்தால் வரையைச் சுற்றி
- அமரரோ டசுரர் கூடி
அரவித்துக் கடையத் தோன்றும்
- ஆலநஞ் சமுதா வுண்டார்
விரவித்தம் அடிய ராகி
- வீடிலாத் தொண்டர் தம்மை
நரகத்தில் வீழ வொட்டார்
- நனிபள்ளி அடிக ளாரே.
4.70.7 686 மண்ணுளே திரியும் போது
- வருவன பலவுங் குற்றம்
புண்ணுளே புரைபு ரையன்
- புழுப்பொதி பொள்ள லாக்கை
----- ----- ----- -----
இப்பதிகத்தில் 8-ம் செய்யுளின்
பின்னிரண்டடிகளும் 9-ம்செய்யுளும்
மறைந்து போயின.4.70.8-9 687 பத்துமோர் இரட்டி தோளான்
- பாரித்து மலையெ டுக்கப்
பத்துமோர் இரட்டி தோள்கள்
- படருடம் படர வூன்றிப்
பத்துவாய் கீதம் பாடப்
- பரிந்தவற் கருள்கொ டுத்தார்
பத்தர்தாம் பரவி யேத்தும்
- நனிபள்ளிப் பரம னாரே.
4.70.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நற்றுணையப்பர், தேவியார் - பர்வதராசபுத்திரி.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.71 திருநாகைக்காரோணம் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்688 மனைவிதாய் தந்தை மக்கள்
- மற்றுள சுற்ற மென்னும்
வினையுளே விழுந்த ழுந்தி
- வேதனைக் கிடமா காதே
கனையுமா கடல்சூழ் நாகை
- மன்னுகா ரோணத் தானை
நினையுமா வல்லீ ராகில்
- உய்யலாம் நெஞ்சி னீரே.
4.71..1 689 வையனை வைய முண்ட
- மாலங்கந் தோண்மேற் கொண்ட
செய்யனைச் செய்ய போதிற்
- திசைமுகன் சிரமொன் றேந்துங்
கையனைக் கடல்சூழ் நாகைக்
- காரோணங் கோயில் கொண்ட
ஐயனை நினைந்த நெஞ்சே
- அம்மநாம் உய்ந்த வாறே.
4.71..2 690 நிருத்தனை நிமலன் றன்னை
- நீணிலம் விண்ணின் மிக்க
விருத்தனை வேத வித்தை
- விளைபொருள் மூல மான
கருத்தனைக் கடல்சூழ் நாகைக்
- காரோணங் கோயில் கொண்ட
ஒருத்தனை உணர்த லால்நாம்
- உய்ந்தவா நெஞ்சி னீரே.
4.71.3 691 மண்டனை இரந்து கொண்ட
- மாயனோ டசுரர் வானோர்
தெண்டிரை கடைய வந்த
- தீவிடந் தன்னை யுண்ட
கண்டனைக் கடல்சூழ் நாகைக்
- காரோணங் கோயில் கொண்ட
அண்டனை நினைந்த நெஞ்சே
- அம்மநாம் உய்ந்த வாறே.
4.71.4 692 நிறைபுனல் அணிந்த சென்னி
- நீணிலா அரவஞ் சூடி
மறையொலி பாடி யாடல்
- மயானத்து மகிழ்ந்த மைந்தன்
கறைமலி கடல்சூழ் நாகைக்
- காரோணங் கோயில் கொண்ட
இறைவனை நாளு மேத்த
- இடும்பைபோய் இன்ப மாமே.
4.71.5 693 வெம்பனைக் கருங்கை யானை
- வெருவவன் றுரிவை போர்த்த
கம்பனைக் காலற் காய்ந்த
- காலனை ஞால மேத்தும்
உம்பனை உம்பர் கோனை
- நாகைக்கா ரோண மேய
செம்பொனை நினைந்த நெஞ்சே
- திண்ணம்நாம் உய்ந்த வாறே.
4.71.6 694 வெங்கடுங் கானத் தேழை
- தன்னொடும் வேட னாய்ச்சென்
றங்கமர் மலைந்து பார்த்தற்
- கடுசரம் அருளி னானை
மங்கைமார் ஆட லோவா
- மன்னுகா ரோணத் தானைக்
கங்குலும் பகலுங் காணப்
- பெற்றுநாங் களித்த வாறே.
4.71.7 695 தெற்றினர் புரங்கள் மூன்றுந்
- தீயினில் விழவோ ரம்பால்
செற்றவெஞ் சிலையர் வஞ்சர்
- சிந்தையுட் சேர்வி லாதார்
கற்றவர் பயிலும் நாகைக்
- காரோணங் கருதி யேத்தப்
பெற்றவர் பிறந்தார் மற்றுப்
- பிறந்தவர் பிறந்தி லாரே.
4.71.8 இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 4.71.9 696 கருமலி கடல்சூழ் நாகைக்
- காரோணர் கமல பாதத்
தொருவிரல் நுதிக்கு நில்லா
- தொண்டிறல் அரக்க னுக்கான்
இருதிற மங்கை மாரோ
- டெம்பிரான் செம்பொ னாகந்
திருவடி தரித்து நிற்கத்
- திண்ணம்நாம் உய்ந்த வாறே.
4.71.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காயாரோகணேசுவரர்,
தேவியார் - நீலாயதாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.72 திருவின்னம்பர் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்697 விண்ணவர் மகுட கோடி
- மிடைந்தசே வடியர் போலும்
பெண்ணொரு பாகர் போலும்
- பேடலி யாணர் போலும்
வண்ணமால் அயனுங் காணா
- மால்வரை எரியர் போலும்
எண்ணுரு வநேகர் போலும்
- இன்னம்பர் ஈச னாரே.
4.72.1 698 பன்னிய மறையர் போலும்
- பாம்பரை யுடையர் போலுந்
துன்னிய சடையர் போலுந்
- தூமதி மத்தர் போலும்
மன்னிய மழுவர் போலும்
- மாதிடம் மகிழ்வர் போலும்
என்னையும் உடையர் போலும்
- இன்னம்பர் ஈச னாரே.
4.72.2 699 மறியொரு கையர் போலும்
- மாதுமை யுடையர் போலும்
பறிதலைப் பிறவி நீக்கிப்
- பணிகொள வல்லர் போலுஞ்
செறிவுடை அங்க மாலை
- சேர்திரு வுருவர் போலும்
எறிபுனற் சடையர் போலும்
- இன்னம்பர் ஈச னாரே.
4.72.3 700 விடமலி கண்டர் போலும்
- வேள்வியை அழிப்பர் போலுங்
கடவுநல் விடையர் போலுங்
- காலனைக் காய்வர் போலும்
படமலி அரவர் போலும்
- பாய்புலித் தோலர் போலும்
இடர்களைந் தருள்வர் போலும்
- இன்னம்பர் ஈச னாரே.
4.72.4 701 அளிமலர்க் கொன்றை துன்றும்
- அவிர்சடை யுடையர் போலுங்
களிமயிற் சாய லோடுங்
- காமனை விழிப்பர் போலும்
வெளிவளர் உருவர் போலும்
- வெண்பொடி யணிவர் போலும்
எளியவர் அடியர்க் கென்றும்
- இன்னம்பர் ஈச னாரே.
4.72.5 702 கணையமர் சிலையர் போலுங்
- கரியுரி உடையர் போலுந்
துணையமர் பெண்ணர் போலுந்
- தூமணிக் குன்றர் போலும்
அணையுடை அடியர் கூடி
- அன்பொடு மலர்கள் தூவும்
இணையடி உடையர் போலும்
- இன்னம்பர் ஈச னாரே.
4.72.6 703 பொருப்பமர் புயத்தர் போலும்
- புனலணி சடையர் போலும்
மருப்பிள வாமை தாங்கு
- மார்பில்வெண் ணூலர் போலும்
உருத்திர மூர்த்தி போலும்
- உணர்விலார் புரங்கள் மூன்றும்
எரித்திடு சிலையர் போலும்
- இன்னம்பர் ஈச னாரே.
4.72.7 704 காடிடம் உடையர் போலுங்
- கடிகுரல் விளியர் போலும்
வேடுரு வுடையர் போலும்
- வெண்மதிக் கொழுந்தர் போலுங்
கோடலர் வன்னி தும்பை
- கொக்கிற கலர்ந்த கொன்றை
ஏடமர் சடையர் போலும்
- இன்னம்பர் ஈச னாரே.
4.72.8 705 காறிடு விடத்தை யுண்ட
- கண்டரெண் டோ ளர் போலும்
நீறுடை யுருவர் போலும்
- நினைப்பினை அரியர் போலும்
பாறுடைத் தலைகை ஏந்திப்
- பலிதிரிந் துண்பர் போலும்
ஏறுடைக் கொடியர் போலும்
- இன்னம்பர் ஈச னாரே.
4.72.9 706 ஆர்த்தெழு மிலங்கைக் கோனை
- அருவரை அடர்ப்பர் போலும்
பார்த்தனோ டமர் பொருது
- படைகொடுத் தருள்வர் போலுந்
தீர்த்தமாங் கங்கை தன்னைத்
- திருச்சடை வைப்பர் போலும்
ஏத்தஏ ழுலகும் வைத்தார்
- இன்னம்பர் ஈச னாரே.
4.72.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - எழுத்தறிந்தவீசுவரர்,
தேவியார் - கொந்தார்பூங்குழலம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.73 திருச்சேறை - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்707 பெருந்திரு இமவான் பெற்ற
- பெண்கொடி பிரிந்த பின்னை
வருந்துவான் தவங்கள் செய்ய
- மாமணம் புணர்ந்து மன்னும்
அருந்திரு மேனி தன்பால்
- அங்கொரு பாக மாகத்
திருந்திட வைத்தார் சேறைச்
- செந்நெறிச் செல்வ னாரே.
4.73.1 708 ஓர்த்துள வாறு நோக்கி
- உண்மையை உணராக் குண்டர்
வார்த்தையை மெய்யென் றெண்ணி
- மயக்கில்வீழ்ந் தழுந்து வேனைப்
பேர்த்தெனை ஆளாக் கொண்டு
- பிறவிவான் பிணிக ளெல்லாந்
தீர்த்தருள் செய்தார் சேறைச்
- செந்நெறிச் செல்வ னாரே.
4.73.2 709 ஒன்றிய தவத்து மன்னி
- உடையனாய் உலப்பில் காலம்
நின்றுதங் கழல்க ளேத்தும்
- நீள்சிலை விசய னுக்கு
வென்றிகொள் வேட னாகி
- விரும்பிவெங் கான கத்துச்
சென்றருள் செய்தார் சேறைச்
- செந்நெறிச் செல்வ னாரே.
4.73.3 710 அஞ்சையும் அடக்கி ஆற்ற
- லுடையனாய் அநேக காலம்
வஞ்சமில் தவத்துள் நின்று
- மன்னிய பகீர தற்கு
வெஞ்சின முகங்க ளாகி
- விசையொடு பாயுங் கங்கைச்
செஞ்சடை யேற்றார் சேறைச்
- செந்நெறிச் செல்வ னாரே.
4.73.4 711 நிறைந்தமா மணலைக் கூப்பி
- நேசமோ டாவின் பாலைக்
கறந்துகொண் டாட்டக் கண்டு
- கறுத்ததன் தாதை தாளை
எறிந்தமா ணிக்கப் போதே
- எழில்கொள்சண் டீசன் என்னச்
சிறந்தபே றளித்தார் சேறைச்
- செந்நெறிச் செல்வ னாரே.
4.73.5 712 விரித்தபல் கதிர்கொள் சூலம்
- வெடிபடு தமரு கங்கை
தரித்ததோர் கோல காலப்
- பயிரவ னாகி வேழம்
உரித்துமை யஞ்சக் கண்டு
- ஒண்டிரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச்
- செந்நெறிச் செல்வ னாரே.
4.73.6 713 சுற்றுமுன் இமையோர் நின்று
- தொழுதுதூ மலர்கள் தூவி
மற்றெமை உயக்கொள் என்ன
மன்னுவான் புரங்கள் மூன்றும்
உற்றொரு நொடியின் முன்னம்
- ஒள்ளழல் வாயின் வீழச்
செற்றருள் செய்தார் சேறைச்
- செந்நெறிச் செல்வ னாரே.
4.73.7 714 முந்தியிவ் வுலக மெல்லாம்
- படைத்தவன் மாலி னோடும்
எந்தனி நாத னேயென்
- றிறைஞ்சிநின் றேத்தல் செய்ய
அந்தமில் சோதி தன்னை
- அடிமுடி யறியா வண்ணஞ்
செந்தழ லானார் சேறைச்
- செந்நெறிச் செல்வ னாரே.
4.73.8 இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 4.73.9 715 ஒருவரும் நிக ரிலாத
- ஒண்டிறல் அரக்கன் ஓடிப்
பெருவரை யெடுத்த திண்டோ ள்
- பிறங்கிய முடிகள் இற்று
மருவியெம் பெருமா னென்ன
- மலரடி மெள்ள வாங்கித்
திருவருள் செய்தார் சேறைச்
- செந்நெறிச் செல்வ னாரே.
4.73.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சென்னெறியப்பர், தேவியார் - ஞானவல்லியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.74 நெஞ்சம்ஈசனைநினைந்த - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்716 முத்தினை மணியைப் பொன்னை
- முழுமுதற் பவள மேய்க்குங்
கொத்தினை வயிர மாலைக்
- கொழுந்தினை அமரர் சூடும்
வித்தினை வேத வேள்விக்
- கேள்வியை விளங்க நின்ற
அத்தனை நினைந்த நெஞ்சம்
- அழகிதா நினைந்த வாறே.
4.74.1 717 முன்பனை யுலகுக் கெல்லாம்
- மூர்த்தியை முனிக ளேத்தும்
இன்பனை இலங்கு சோதி
- இறைவனை அரிவை யஞ்ச
வன்பனைத் தடக்கை வேள்விக்
- களிற்றினை யுரித்த எங்கள்
அன்பனை நினைந்த நெஞ்சம்
- அழகிதா நினைந்த வாறே.
4.74.2 718 கரும்பினு மினியான் றன்னைக்
- காய்கதிர்ச் சோதி யானை
இருங்கட லமுதந் தன்னை
- இறப்பொடு பிறப் பிலானைப்
பெரும்பொருட் கிளவி யானைப்
- பெருந்தவ முனிவ ரேத்தும்
அரும்பொனை நினைந்த நெஞ்சம்
- அழகிதா நினைந்த வாறே.
4.74.3 719 செருத்தனை யருத்தி செய்து
- செஞ்சரஞ் செலுத்தி யூர்மேல்
கருத்தனைக் கனக மேனிக்
- கடவுளைக் கருதும் வானோர்க்
கொருத்தனை யொருத்தி பாகம்
- பொருத்தியும் அருத்தி தீரா
நிருத்தனை நினைந்த நெஞ்சம்
- நேர்பட நினைந்த வாறே.
4.74.4 720 கூற்றினை யுதைத்த பாதக்
- குழகனை மழலை வெள்ளே
றேற்றனை இமையோ ரேத்த
- இருஞ்சடைக் கற்றை தன்மேல்
ஆற்றனை அடிய ரேத்தும்
- அமுதனை அமுத யோக
நீற்றனை நினைந்த நெஞ்சம்
- நேர்பட நினைந்த வாறே.
4.74.5 721 கருப்பனைத் தடக்கை வேழக்
- களிற்றினை யுரித்த கண்டன்
விருப்பனை விளங்கு சோதி
- வியன்கயி லாய மென்னும்
பொருப்பனைப் பொருப்பன் மங்கை
- பங்கனை அங்கை யேற்ற
நெருப்பனை நினைந்த நெஞ்சம்
- நேர்பட நினைந்த வாறே.
4.74.6 722 நீதியால் நினைப்பு ளானை
- நினைப்பவர் மனத்து ளானைச்
சாதியைச் சங்க வெண்ணீற்
- றண்ணலை விண்ணில் வானோர்
சோதியைத் துளக்க மில்லா
- விளக்கினை அளக்க லாகா
ஆதியை நினைந்த நெஞ்சம்
- அழகிதா நினைந்த வாறே.
4.74.7 723 பழகனை யுலகுக் கெல்லாம்
- பருப்பனைப் பொருப்போ டொக்கும்
மழகளி யானை யின்றோல்
- மலைமகள் நடுங்கப் போர்த்த
குழகனைக் குழவித் திங்கள்
- குளிர்சடை மருவ வைத்த
அழகனை நினைந்த நெஞ்சம்
- அழகிதா நினைந்த வாறே.
4.74.8 724 விண்ணிடை மின்னொப் பானை
- மெய்ப்பெரும் பொருளொப் பானைக்
கண்ணிடை மணியொப் பானைக்
- கடுவிருட் சுடரொப் பானை
எண்ணிடை யெண்ண லாகா
- இருவரை வெருவ நீண்ட
அண்ணலை நினைந்த நெஞ்சம்
- அழகிதா நினைந்த வாறே.
4.74.9 725 உரவனைத் திரண்ட திண்டோ ள்
- அரக்கனை யூன்றி மூன்றூர்
நிரவனை நிமிர்ந்த சோதி
- நீண்முடி யமரர் தங்கள்
குரவனைக் குளிர்வெண் டிங்கள்
- சடையிடைப் பொதியும் ஐவாய்
அரவனை நினைந்த நெஞ்சம்
- அழகிதா நினைந்த வாறே.
4.74.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.75 தனித் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்726 தொண்டனேன் பட்ட தென்னே
- தூயகா விரியின் நன்னீர்
கொண்டிருக் கோதி யாட்டிக்
- குங்குமக் குழம்பு சாத்தி
இண்டைகொண் டேற நோக்கி
- ஈசனை எம்பி ரானைக்
கண்டனைக் கண்டி ராதே
- காலத்தைக் கழித்த வாறே.
4.75.1 727 பின்னிலேன் முன்னி லேன்நான்
- பிறப்பறுத் தருள்செய் வானே
என்னிலேன் நாயி னேன்நான்
- இளங்கதிர்ப் பயலைத் திங்கட்
சின்னிலா எறிக்குஞ் சென்னிச்
- சிவபுரத் தமர ரேறே
நின்னலால் களைகண் ஆரே
- நீறுசே ரகலத் தானே.
4.75.2 728 கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க்
- காலத்தைக் கழித்துப் போக்கித்
தெள்ளியே னாகி நின்று
- தேடினேன் நாடிக் கண்டேன்
உள்குவார் உள்கிற் றெல்லாம்
- உடனிருந் தறிதி யென்று
வெள்கினேன் வெள்கி நானும்
- விலாவிறச் சிரித்திட் டேனே.
4.75.3 729 உடம்பெனு மனைய கத்துள்
- உள்ளமே தகளி யாக
மடம்படும் உணர்நெய் யட்டி
- உயிரெனுந் திரிம யக்கி
இடம்படு ஞானத் தீயால்
- எரிகொள இருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை
- கழலடி காண லாமே.
4.75.4 730 வஞ்சப்பெண் ணரங்கு கோயில்
- வாளெயிற் றரவந் துஞ்சா
வஞ்சப்பெண் இருந்த சூழல்
- வான்றவழ் மதியந் தோயும்
வஞ்சப்பெண் வாழ்க்கை யாளன்
- வாழ்வினை வாழ லுற்று
வஞ்சப்பெண் ணுறக்க மானேன்
- வஞ்சனேன் என்செய் கேனே.
4.75.5 731 உள்குவார் உள்ளத் தானை
- உணர்வெனும் பெருமை யானை
உள்கினேன் நானுங் காண்பான்
- உருகினேன் ஊறி யூறி
எள்கினேன் எந்தை பெம்மான்
- இருதலை மின்னு கின்ற
கொள்ளிமேல் எறும்பென் னுள்ளம்
- எங்ஙனங் கூடு மாறே.
4.75.6 732 மோத்தையைக் கண்ட காக்கை
- போலவல் வினைகள் மொய்த்துன்
வார்த்தையைப் பேச வொட்டா
- மயக்கநான் மயங்கு கின்றேன்
சீத்தையைச் சிதம்பு தன்னைச்
- செடிகொள்நோய் வடிவொன் றில்லா
ஊத்தையைக் கழிக்கும் வண்ணம்
- உணர்வுதா உலக மூர்த்தீ.
4.75.7 733 அங்கத்தை மண்ணுக் காக்கி
- ஆர்வத்தை உனக்கே தந்து
பங்கத்தைப் போக மாற்றிப்
- பாவித்தேன் பரமா நின்னைs
சங்கொத்த மேனிச் செல்வா
- சாதல்நாள் நாயேன் உன்னை
எங்குற்றாய் என்ற போதா
- இங்குற்றேன் என்கண் டாயே.
4.75.8 734 வெள்ளநீர்ச் சடைய னார்தாம்
- வினவுவார் போல வந்தென்
உள்ளமே புகுந்து நின்றார்க்
- குறங்குநான் புடைகள் போந்து
கள்ளரோ புகுந்தீ ரென்னக்
- கலந்துதான் நோக்கி நக்கு
வெள்ளரோ மென்று நின்றார்
- விளங்கிளம் பிறைய னாரே.
4.75.9 735 பெருவிரல் இறைதா னூன்ற
- பிறையெயி றிலங்க அங்காந்
தருவரை அனைய தோளான்
- அரக்கனன் றலறி வீழ்ந்தான்
இருவரும் ஒருவ னாய
- உருவமங் குடைய வள்ளல்
திருவடி சுமந்து கொண்டு
- காண்கநான் திரியு மாறே.
4.75.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.76 தனித் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்736 மருளவா மனத்த னாகி
- மயங்கினேன் மதியி லாதேன்
இருளவா அறுக்கும் எந்தை
- இணையடி நீழ லென்னும்
அருளவாப் பெறுத லின்றி
- அஞ்சிநான் அலமந் தேற்குப்
பொருளவாத் தந்த வாறே
- போதுபோய்ப் புலர்ந்த தன்றே.
4.76.1 737 மெய்ம்மையாம் உழவைச் செய்து
- விருப்பெனும் வித்தை வித்திப்
பொய்ம்மையாங் களையை வாங்கிப்
- பொறையெனும் நீரைப் பாய்ச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு
- தகவெனும் வேலி யிட்டுச்
செம்மையுள் நிற்ப ராகிற்
- சிவகதி விளையு மன்றே.
4.76.2 738 எம்பிரான் என்ற தேகொண்
- டென்னுளே புகுந்து நின்றிங்
கெம்பிரான் ஆட்ட ஆடி
- என்னுளே உழிதர் வேனை
எம்பிரான் என்னைப் பின்னைத்
- தன்னுளே கரக்கு மென்றால்
எம்பிரான் என்னி னல்லால்
- என்செய்கேன் ஏழை யேனே.
4.76.3 739 காயமே கோயி லாகக்
- கடிமனம் அடிமை யாக
வாய்மையே தூய்மை யாக
- மனமணி இலிங்க மாக
நேயமே நெய்யும் பாலா
- நிறையநீர் அமைய வாட்டிப்
பூசனை ஈச னார்க்குப்
- போற்றவிக் காட்டி னோமே.
4.76.4 740 வஞ்சகப் புலைய னேனை
- வழியறத் தொண்டிற் பூட்டி
அஞ்சலென் றாண்டு கொண்டாய்
- அதுவுநின் பெருமை யன்றே
நெஞ்சகங் கனிய மாட்டேன்
- நின்னையுள் வைக்க மாட்டேன்
நஞ்சிடங் கொண்ட கண்டா
- என்னென நன்மை தானே.
4.76.5 741 நாயினுங் கடைப்பட் டேனை
- நன்னெறி காட்டி ஆண்டாய்
ஆயிரம் அரவ மார்த்த
- அமுதனே அமுத மொத்து
நீயுமென் னெஞ்சி னுள்ளே
- நிலாவினாய் நிலாவி நிற்க
நோயவை சாரு மாகில்
- நோக்கிநீ அருள்செய் வாயே.
4.76.6 742 விள்ளத்தா னொன்று மாட்டேன்
- விருப்பெனும் வேட்கை யாலே
வள்ளத்தேன் போல நுன்னை
- வாய்மடுத் துண்டி டாமே
உள்ளத்தே நிற்றி யேனும்
- உயிர்ப்புளே வருதி யேனுங்
கள்ளத்தே நிற்றி அம்மா
- எங்ஙனங் காணு மாறே.
4.76.7 743 ஆசைவன் பாச மெய்தி
- அங்குற்றே னிங்குற் றேனாய்
ஊசலாட் டுண்டு வாளா
- உழந்துநான் உழித ராமே
தேசனே தேச மூர்த்தி
- திருமறைக் காடு மேய
ஈசனே உன்றன் பாதம்
- ஏத்துமா றருளெம் மானே.
4.76.8 744 நிறைவிலேன் நேச மில்லேன்
- நினைவிலேன் வினையின் பாச
மறைவிலே புறப்பட் டேறும்
- வகையெனக் கருளெ னெம்மான்
சிறையிலேன் செய்வ தென்னே
- திருவடி பரவி யேத்தக்
குறைவிலேன் குற்றந் தீராய்
- கொன்றைசேர் சடையி னானே.
4.76.9 745 நடுவிலாக் காலன் வந்து
- நணுகும்போ தறிய வொண்ணா
அடுவன அஞ்சு பூதம்
- அவைதமக் காற்ற லாகேன்
படுவன பலவுங் குற்றம்
- பாங்கிலா மனிதர் வாழ்க்கை
கெடுவதிப் பிறவி சீசீ
- கிளரொளிச் சடையி னீரே.
4.76.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.77 தனித் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்746 கடும்பகல் நட்ட மாடிக்
- கையிலோர் கபால மேந்தி
இடும்பலிக் கில்லந் தோறு
- முழிதரும் இறைவ னீரே
நெடும்பொறை மலையர் பாவை
- நேரிழை நெறிமென் கூந்தற்
கொடுங்குழை புகுந்த வன்றுங்
- கோவண மரைய தேயோ.
4.77.1 747 கோவண முடுத்த வாறுங்
- கோளர வசைத்த வாறுந்
தீவணச் சாம்பர் பூசித்
- திருவுரு இருந்த வாறும்
பூவணக் கிழவ னாரைப்
- புலியுரி அரைய னாரை
ஏவணச் சிலையி னாரை
- யாவரே எழுது வாரே.
4.77.2 748 விளக்கினாற் பெற்ற இன்பம்
- மெழுக்கினாற் பதிற்றி யாகுந்
துளக்கில்நன் மலர்தொ டுத்தால்
- தூயவிண் ணேற லாகும்
விளக்கிட்டார் பேறு சொல்லின்
- மெய்ஞ்ஞெறி ஞான மாகும்
அளப்பில கீதஞ் சொன்னார்க்
- கடிகள்தாம் அருளு மாறே.
4.77.3 749 சந்திரற் சடையில் வைத்த
- சங்கரன் சாம வேதி
அந்தரத் தமரர் பெம்மான்
- ஆன்நல்வெள் ளூர்தி யான்றன்
மந்திரம் நமச்சி வாய
- ஆகநீ றணியப் பெற்றால்
வெந்தறும் வினையும் நோயும்
- வெவ்வழல் விறகிட் டன்றே.
4.77.4 750 புள்ளுவர் ஐவர் கள்வர்
- புனத்திடைப் புகுந்து நின்று
துள்ளுவர் சூறை கொள்வர்
- தூநெறி விளைய வொட்டார்
முள்ளுடை யவர்கள் தம்மை
- முக்கணான் பாத நீழல்
உள்ளிடை மறைந்து நின்றங்
- குணர்வினா லெய்ய லாமே.
4.77.5 751 தொண்டனேன் பிறந்து வாளா
- தொல்வினைக் குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து நாளும்
- பெரியதோர் அவாவிற் பட்டேன்
அண்டனே அமரர் கோவே
- அறிவனே அஞ்ச லென்னாய்
தெண்டிரைக் கங்கை சூடுந்
- திகழ்தரு சடையி னானே.
4.77.6 752 பாறினாய் பாவி நெஞ்சே
- பன்றிபோல் அளற்றிற் பட்டுத்
தேறிநீ நினைதி யாயின்
- சிவகதி திண்ண மாகும்
ஊறலே உவர்ப்பு நாறி
- உதிரமே யொழுகும் வாசல்
கூறையால் மூடக் கண்டு
- கோலமாக் கருதி னாயே.
4.77.7 இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள்
சிதைந்து போயின.4.77.8-9 753 உய்த்தகால் உதயத் தும்பர்
- உமையவள் நடுக்கந் தீர
வைத்தகா லரக்க னோதன்
- வான்முடி தனக்கு நேர்ந்தான்
மொய்த்தகான் முகிழ்வெண் டிங்கள்
- மூர்த்தியெ னுச்சி தன்மேல்
வைத்தகால் வருந்து மென்று
- வாடிநான் ஒடுங்கி னேனே.
4.77.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.78 குறைந்த - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்754 வென்றிலேன் புலன்க ளைந்தும்
- வென்றவர் வளாகந் தன்னுள்
சென்றிலே னாத லாலே
- செந்நெறி யதற்குஞ் சேயேன்
நின்றுளே துளும்பு கின்றேன்
- நீசனேன் ஈச னேயோ
இன்றுளேன் நாளை யில்லேன்
- என்செய்வான் தோன்றி னேனே.
4.78.1 755 கற்றிலேன் கலைகள் ஞானங்
- கற்றவர் தங்க ளோடும்
உற்றிலே னாத லாலே
- உணர்வுக்குஞ் சேய னானேன்
பெற்றிலேன் பெருந்த டங்கண்
- பேதைமார் தமக்கும் பொல்லேன்
எற்றுளேன் இறைவ னேநான்
- என்செய்வான் தோன்றி னேனே.
4.78.2 756 மாட்டினேன் மனத்தை முன்னே
- மறுமையை உணர மாட்டேன்
மூட்டிநான் முன்னை நாளே
- முதல்வனை வணங்க மாட்டேன்
பாட்டினாய் போல நின்று
- பற்றதாம் பாவந் தன்னை
ஈட்டினேன் களைய மாட்டேன்
- என்செய்வான் தோன்றி னேனே.
4.78.3 757 கரைக்கடந் தோத மேறுங்
- கடல்விட முண்ட கண்டன்
உரைக்கடந் தோது நீர்மை
- யுணர்ந்திலே னாத லாலே
அரைக்கிடந் தசையு நாகம்
- அசைப்பனே இன்ப வாழ்க்கைக்
கிரைக்கிடைந் துருகு கின்றேன்
- என்செய்வான் தோன்றி னேனே.
4.78.4 758 செம்மைவெண் ணீறு பூசுஞ்
ச்வனவன் தேவ தேவன்
வெம்மைநோய் வினைகள் தீர்க்கும்
- விகிர்தனுக் கார்வ மெய்தி
அம்மைநின் றடிமை செய்யா
- வடிவிலா முடிவில் வாழ்க்கைக்
கிம்மைநின் றுருகு கின்றேன்
- என்செய்வான் தோன்றி னேனே.
4.78.5 759 பேச்சொடு பேச்சுக் கெல்லாம்
- பிறர்தமைப் புறமே பேசக்
கூச்சிலே னாத லாலே
- கொடுமையை விடுமா றோரேன்
நாச்சொலி நாளும் மூர்த்தி
- நன்மையை யுணர மாட்டேன்
ஏச்சுளே நின்று மெய்யே
- என்செய்வான் தோன்றி னேனே.
4.78.6 760 தேசனைத் தேச மாகுந்
- திருமாலோர் பங்கன் றன்னைப்
பூசனைப் புனிதன் றன்னைப்
- புணரும்புண் டரிகத் தானை
நேசனை நெருப்பன் றன்னை
- நிவஞ்சகத் தகன்ற செம்மை
ஈசனை அறிய மாட்டேன்
- என்செய்வான் தோன்றி னேனே.
4.78.7 761 விளைக்கின்ற வினையை நோக்கி
- வெண்மயிர் விரவி மேலும்
முளைக்கின்ற வினையைப் போக
- முயல்கிலேன் இயல வெள்ளந்
திளைக்கின்ற முடியி னான்றன்
- திருவடி பரவ மாட்டா
திளைக்கின்றே னிருமி யூன்றி
- என்செய்வான் தோன்றி னேனே.
4.78.8 762 விளைவறி விலாமை யாலே
- வேதனைக் குழியி லாழ்ந்து
களைகணு மில்லேன் எந்தாய்
- காமரங் கற்று மில்லேன்
தளையவிழ் கோதை நல்லார்
- தங்களோ டின்ப மெய்த
இளையனு மல்லேன் எந்தாய்
- என்செய்வான் தோன்றி னேனே.
4.78.9 763 வெட்டன வுடைய னாகி
- வீரத்தால் மலை யெடுத்த
துட்டனைத் துட்டுத் தீர்த்துச்
- சுவைப்படக் கீதங் கேட்ட
அட்டமா மூர்த்தி யாய
- ஆதியை ஓதி நாளும்
எட்டனை எட்ட மாட்டேன்
- என்செய்வான் தோன்றி னேனே.
4.78.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.79 குறைந்த - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்764 தம்மானங் காப்ப தாகித்
- தையலார் வலையு ளாழ்ந்து
அம்மானை அமுதன் றன்னை
- ஆதியை அந்த மாய
செம்மான ஒளிகொள் மேனிச்
- சிந்தையு ளொன்றி நின்ற
எம்மானை நினைய மாட்டேன்
- என்செய்வான் தோன்றி னேனே.
4.79.1 765 மக்களே மணந்த தார
- மவ்வயிற் றவரை யோம்புஞ்
சிக்குளே யழுந்தி ஈசன்
- திறம்படேன் றவம தோரேன்
கொப்புளே போலத் தோன்றி
- யதனுளே மறையக் கண்டும்
இக்களே பரத்தை யோம்ப
- என்செய்வான் தோன்றி னேனே.
4.79.2 766 கூழையே னாக மாட்டேன்
- கொடுவினைக் குழியில் வீழ்ந்து
ஏழினின் னிசையி னாலும்
- இறைவனை யேத்த மாட்டேன்
மாழையொண் கண்ணின் நல்ல
- மடந்தைமார் தமக்கும் பொல்லேன்
ஏழையே னாகி நாளு
- மென்செய்வான் தோன்றி னேனே.
4.79.3 767 முன்னையென் வினையி னாலே
- மூர்த்தியை நினைய மாட்டேன்
பின்னைநான் பித்த னாகிப்
- பிதற்றுவன் பேதை யேன்நான்
என்னுளே மன்னி நின்ற
- சீர்மைய தாயி னானை
என்னுளே நினைய மாட்டேன்
- என்செய்வான் தோன்றி னேனே.
4.79.4 768 கறையணி கண்டன் றன்னைக்
- காமரங் கற்று மில்லேன்
பிறைநுதற் பேதை மாதர்
- பெய்வளை யார்க்கு மல்லேன்
மறைநவில் நாவி னானை
- மன்னிநின் றிறைஞ்சி நாளும்
இறையேயு மேத்த மாட்டேன்
- என்செய்வான் தோன்றி னேனே.
4.79.5 இப்பதிகத்தில் 6,7,8,9-ம்செய்யுட்கள்
மறைந்து போயின.4.79.6-91 769 வளைத்துநின் றைவர் கள்வர்
- வந்தெனை நடுக்கஞ் செய்யத்
தளைத்துவைத் துலையை யேற்றித்
- தழலெரி மடுத்த நீரில்
திளைத்துநின் றாடு கின்ற
- ஆமைபோல் தெளிவி லாதேன்
இளைத்துநின் றாடு கின்றேன்
- என்செய்வான் தோன்றி னேனே.
4.79.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.80 கோயில் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்770 பாளையு டைக்கமு கோங்கிப்பன்
- மாடம்நெ ருங்கியெங்கும்
வாளையு டைப்புனல் வந்தெறி
- வாழ்வயல் தில்லைதன்னுள்
ஆளவு டைக்கழற் சிற்றம்ப
- லத்தரன் ஆடல்கண்டாற்
பீளையு டைக்கண்க ளாற்பின்னைப்
- பேய்த்தொண்டர் காண்பதென்னே.
4.80.1 771 பொருவிடை யொன்றுடைப் புண்ணிய
- மூர்த்தி புலியதளன்
உருவுடை யம்மலை மங்கைம
- ணாளன் உலகுக்கெல்லாந்
திருவுடை அந்தணர் வாழ்கின்ற
- தில்லைச்சிற் றம்பலவன்
திருவடி யைக்கண்ட கண்கொண்டு
- மற்றினிக் காண்பதென்னே.
4.80.2 772 தொடுத்த மலரொடு தூபமுஞ்
- சாந்துங்கொண் டெப்பொழுதும்
அடுத்து வணங்கும் அயனொடு
- மாலுக்குங் காண்பரியான்
பொடிக்கொண் டணிந்துபொன் னாகிய
- தில்லைச்சிற் றம்பலவன்
உடுத்த துகில்கண்ட கண்கொண்டு
- மற்றினிக் காண்பதென்னே.
4.80.3 773 வைச்ச பொருள்நமக் காகுமென்
- றெண்ணி நமச்சிவாய
அச்ச மொழிந்தேன் அணிதில்லை
- யம்பலத் தாடுகின்ற
பிச்சன் பிறப்பிலி பேர்நந்தி
- உந்தியின் மேலசைத்த
கச்சின் அழகுகண் டாற்பின்னைக்
- கண்கொண்டு காண்பதென்னே.
4.80.4 774 செய்ஞ்ஞின்ற நீல மலர்கின்ற
- தில்லைச்சிற் றம்பலவன்
மைஞ்ஞின்ற ஒண்கண் மலைமகள்
- கண்டு மகிழ்ந்துநிற்க
நெய்ஞ்ஞின் றெரியும் விளக்கொத்த
- நீல மணிமிடற்றான்
கைஞ்ஞின்ற ஆடல்கண் டாற்பின்னைக்
- கண்கொண்டு காண்பதென்னே.
4.80.5 775 ஊனத்தை நீக்கி உலகறிய
- என்னை யாட்கொண்டவன்
தேனொத் தெனக்கினி யான்தில்லைச்
- சிற்றம் பலவனெங்கோன்
வானத் தவருய்ய வன்னஞ்சை
- யுண்டகண் டத்திலங்கும்
ஏனத் தெயிறு கண்டாற்பின்னைக்
- கண்கொண்டு காண்பதென்னே.
4.80.6 776 தெரித்த கணையாற் திரிபுர
- மூன்றுஞ்செந் தீயின்மூழ்க
எரித்த இறைவன் இமையவர்
- கோமான் இணையடிகள்
தரித்த மனத்தவர் வாழ்கின்ற
- தில்லைச்சிற் றம்பலவன்
சிரித்த முகங்கண்ட கண்கொண்டு
- மற்றினிக் காண்பதென்னே.
4.80.7 777 சுற்று மமரர் சுரபதி
- நின்திருப் பாதமல்லால்
பற்றொன் றிலோமென் றழைப்பப்
- பரவையுள் நஞ்சையுண்டான்
செற்றங் கனங்கனைத் தீவிழித்
- தான்றில்லை யம்பலவன்
நெற்றியிற் கண்கண்ட கண்கொண்டு
- மற்றினிக் காண்பதென்னே.
4.80.8 778 சித்தத் தெழுந்த செழுங்கம
- லத்தன்ன சேவடிகள்
வைத்த மனத்தவர் வாழ்கின்ற
- தில்லைச்சிற் றம்பலவன்
முத்தும் வயிரமும் மாணிக்கந்
- தன்னுள் விளங்கியதூ
மத்த மலர்கண்ட கண்கொண்டு
- மற்றினிக் காண்பதென்னே.
4.80.9 779 தருக்கு மிகுத்துத்தன் றோள்வலி
- யுன்னித் தடவரையை
வரைக்கை களாலெடுத் தார்ப்ப
- மலைமகள் கோன்சிரித்து
அரக்கன் மணிமுடி பத்தும்
- அணிதில்லை யம்பலவன்
நெருக்கி மிதித்த விரல்கண்ட
- கண்கொண்டு காண்பதென்னே.
4.80.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருமூலத்தானநாயகர், சபாநாதர்,
தேவியார் - சிவகாமியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.81 கோயில் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்780 கருநட்ட கண்டனை அண்டத்
- தலைவனைக் கற்பகத்தைச்
செருநட்ட மும்மதி லெய்யவல்
- லானைச்செந் தீமுழங்கத்
திருநட்ட மாடியைத் தில்லைக்
- கிறையைச்சிற் றம்பலத்துப்
பெருநட்ட மாடியை வானவர்
- கோனென்று வாழ்த்துவனே.
4.81.1 781 ஒன்றி யிருந்து நினைமின்கள்
- உந்தமக் கூனமில்லை
கன்றிய காலனைக் காலாற்
- கடிந்தான் அடியவற்காச்
சென்று தொழுமின்கள் தில்லையுட்
- சிற்றம் பலத்துநட்டம்
என்றுவந் தாயெனும் எம்பெரு
- மான்றன் திருக்குறிப்பே.
4.81.2 782 கன்மன வீர்கழி யுங்கருத்
- தேசொல்லிக் காண்பதென்னே
நன்மன வர்நவில் தில்லையுட்
- சிற்றம் பலத்துநட்டம்
பொன்மலை யில்வெள்ளிக் குன்றது
- போலப் பொலிந்திலங்கி
என்மன மேயொன்றிப் புக்கனன்
- போந்த சுவடில்லையே.
4.81.3 783 குனித்த புருவமுங் கொவ்வைச்செவ்
- வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல்
- மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற்
- பாதமுங் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே
- இந்த மாநிலத்தே.
4.81.4 784 வாய்த்தது நந்தமக் கீதோர்
- பிறவி மதித்திடுமின்
பார்த்தற்குப் பாசு பதமருள்
- செய்தவன் பத்தருள்ளீர்
கோத்தன்று முப்புரந் தீவளைத்
- தான்றில்லை யம்பலத்துக்
கூத்தனுக் காட்பட் டிருப்பதன்
- றோநந்தங் கூழைமையே.
4.81.5 785 பூத்தன பொற்சடை பொன்போல்
- மிளிரப் புரிகணங்கள்
ஆர்த்தன கொட்டி யரித்தன
- பல்குறட் பூதகணந்
தேத்தென வென்றிசை வண்டுகள்
- பாடுசிற் றம்பலத்துக்
கூத்தனிற் கூத்துவல் லாருள
- ரோவென்றன் கோல்வளைக்கே.
4.81.6 786 முடிகொண்ட மத்தமும் முக்கண்ணின்
- நோக்கும் முறுவலிப்புந்
துடிகொண்ட கையுந் துதைந்தவெண்
- ணீறுஞ் சுரிகுழலாள்
படிகொண்ட பாகமும் பாய்புலித்
- தோலுமென் பாவிநெஞ்சிற்
குடிகொண்ட வாதில்லை யம்பலக்
- கூத்தன் குரைகழலே.
4.81.7 787 படைக்கல மாகவுன் னாமத்
- தெழுத்தஞ்சென் நாவிற்கொண்டேன்
இடைக்கல மல்லேன் எழுபிறப்
- பும்முனக் காட்செய்கின்றேன்
துடைக்கினும் போகேன் தொழுது
- வணங்கித்தூ நீறணிந்துன்
அடைக்கலங் கண்டாய் அணிதில்லைச்
- சிற்றம் பலத்தரனே.
4.81.8 788 பொன்னொத்த மேனிமேல் வெண்ணீ
- றணிந்து புரிசடைகள்
மின்னொத் திலங்கப் பலிதேர்ந்
- துழலும் விடங்கவேடச்
சின்னத்தி னான்மலி தில்லையுட்
- சிற்றம் பலத்துநட்டம்
என்னத்தன் ஆடல்கண் டின்புற்ற
- தாலிவ் விருநிலமே.
4.81.9 789 சாட எடுத்தது தக்கன்றன்
- வேள்வியிற் சந்திரனை
வீட எடுத்தது காலனை
- நாரணன் நான்முகனுந்
தேட எடுத்தது தில்லையுட்
- சிற்றம் பலத்துநட்டம்
ஆட எடுத்திட்ட பாதமன்
- றோநம்மை யாட்கொண்டதே.
4.81.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.82 திருக்கழுமலம் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்790 பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட
- ஞான்றுநின் பாதமெல்லாம்
நாலஞ்சு புள்ளினம் ஏந்தின
- என்பர் நளிர்மதியங்
கால்கொண்ட வண்கைச் சடைவிரித்
- தாடுங் கழுமலவர்க்
காளன்றி மற்றுமுண் டோ அந்த
- ணாழி அகலிடமே.
4.82.1 791 கடையார் கொடிநெடு மாடங்க
- ளெங்குங் கலந்திலங்க
உடையா னுடைதலை மாலையுஞ்
- சூடி உகந்தருளி
விடைதா னுடையவவ் வேதியன்
- வாழுங் கழுமலத்துள்
அடைவார் வினைக ளவையெள்க
- நாடொறும் ஆடுவரே.
4.82.2 792 திரைவாய்ப் பெருங்கடல் முத்தங்
- குவிப்ப முகந்துகொண்டு
நுரைவாய் நுளைச்சிய ரோடிக்
- கழுமலத் துள்ளழுந்தும்
விரைவாய் நறுமலர் சூடிய
- விண்ணவன் றன்னடிக்கே
வரையாப் பரிசிவை நாடொறும்
- நந்தமை யாள்வனவே.
4.82.3 793 விரிக்கும் அரும்பதம் வேதங்க
- ளோதும் விழுமியநூல்
உரைக்கில் அரும்பொருள் உள்ளுவர்
- கேட்கில் உலகமுற்றும்
இரிக்கும் பறையொடு பூதங்கள்
- பாடக் கழுமலவன்
நிருத்தம் பழம்படி யாடுங்
- கழல்நம்மை ஆள்வனவே.
4.82.4 794 சிந்தித் தெழுமன மேநினை
- யாமுன் கழுமலத்தைப்
பந்தித்த வல்வினை தீர்க்க
- வல்லானைப் பசுபதியைச்
சந்தித்த கால மறுத்துமென்
- றெண்ணி யிருந்தவர்க்கு
முந்தித் தொழுகழல் நாடொறும்
- நந்தம்மை ஆள்வனவே.
4.82.5 795 நிலையும் பெருமையும் நீதியுஞ்
- சால அழகுடைத்தாய்
அலையும் பெருவெள்ளத் தன்று
- மிதந்தவித் தோணிபுரஞ்
சிலையில் திரிபுரம் மூன்றெரித்
- தார்தங் கழுமலவர்
அலருங் கழலடி நாடொறும்
- நந்தமை ஆள்வனவே.
4.82.6 796 முற்றிக் கிடந்துமுந் நீரின்
- மிதந்துடன் மொய்த்தமரர்
சுற்றிக் கிடந்து தொழப்படு
- கின்றது சூழரவந்
தெற்றிக் கிடந்துவெங் கொன்றளந்
- துன்றிவெண் திங்கள்சூடுங்
கற்றைச் சடைமுடி யார்க்கிட
- மாய கழுமலமே.
4.82.7 797 உடலும் உயிரும் ஒருவழிச்
- செல்லும் உலகத்துள்ளே
அடையும் உனைவந் தடைந்தார்
- அமரர் அடியிணைக்கீழ்
நடையும் விழவொடு நாடொறும்
- மல்கும் கழுமலத்துள்
விடையன் தனிப்பதம் நாடொறும்
- நந்தமை ஆள்வனவே.
4.82.8 798 பரவைக் கடல்நஞ்ச முண்டது
- மில்லையிப் பார்முழுதும்
நிரவிக் கிடந்து தொழப்படு
- கின்றது நீண்டிருவர்
சிரமப் படவந்து சார்ந்தார்
- கழலடி காண்பதற்கே
அரவக் கழலடி நாடொறும்
- நந்தமை ஆள்வனவே.
4.82.9 799 கரையார் கடல்சூழ் இலங்கையர்
- கோன்றன் முடிசிதறத்
தொலையா மலரடி ஊன்றலும்
- உள்ளம் விதிர்விதிர்த்துத்
தலையாய்க் கிடந்துயர்ந் தான்றன்
- கழுமலங் காண்பதற்கே
அலையாப் பரிசிவை நாடொறும்
- நந்தமை ஆள்வனவே.
4.82.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர், தேவியார் - திருநிலைநாயகி.
திருத்தோணியில் வீற்றிருப்பவர் தோணியப்பர்.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.83 திருக்கழுமலம் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்800 படையார் மழுவொன்று பற்றிய
- கையன் பதிவினவிற்
கடையார் கொடிநெடு மாடங்க
- ளோங்குங் கழுமலமாம்
மடைவாய்க் குருகினம் பாளை
- விரிதொறும் வண்டினங்கள்
பெடைவாய் மதுவுண்டு பேரா
- திருக்கும் பெரும்பதியே.
4.83.1
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.84 ஆருயிர்த் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்801 எட்டாந் திசைக்கும் இருதிசைக்
- கும்மிறை வாமுறையென்
றிட்டார் அமரர்வெம் பூசல்
- எனக்கேட் டெரிவிழியா
ஒட்டாக் கயவர் திரிபுரம்
- மூன்றையும் ஓரம்பினால்
அட்டான் அடிநிழற் கீழதன்
- றோவென்றன் ஆருயிரே.
4.84.1 802 பேழ்வாய் அரவின் அரைக்கமர்ந்
- தேறிப் பிறங்கிலங்கு
தேய்வாய் இளம்பிறை செஞ்சடை
- மேல்வைத்த தேவர்பிரான்
மூவான் இளகான் முழுவுல
- கோடுமண் விண்ணுமற்றும்
ஆவான் அடிநிழற் கீழதன்
- றோவென்றன் ஆருயிரே.
4.84.2 803 தரியா வெகுளிய னாய்த்தக்கன்
- வேள்வி தகர்த்துகந்த
எரியார் இலங்கிய சூலத்தி
- னான்இமை யாதமுக்கட்
பெரியான் பெரியார் பிறப்பறுப்
- பானென்றுந் தன்பிறப்பை
அரியான் அடிநிழற் கீழதன்
- றோவென்றன் ஆருயிரே.
4.84.3 804 வடிவுடை வாணெடுங் கண்ணுமை
- யாளையோர் பால்மகிழ்ந்து
வெடிகொள் அரவொடு வேங்கை
- அதள்கொண்டு மேல்மருவிப்
பொடிகொ ளகலத்துப் பொன்பிதிர்ந்
- தன்னபைங் கொன்றையந்தார்
அடிகள் அடிநிழற் கீழதன்
- றோவென்றன் ஆருயிரே.
4.84.4 805 பொறுத்தான் அமரர்க் கமுதரு
- ளிநஞ்ச முண்டுகண்டங்
கறுத்தான் கறுப்பழ காவுடை
- யான்கங்கை செஞ்சடைமேற்
செறுத்தான் தனஞ்சயன் சேணா
- ரகலங் கணையொன்றினால்
அறுத்தான் அடிநிழற் கீழதன்
- றோவென்றன் ஆருயிரே.
4.84.5 806 காய்ந்தான் செறற்கரி யானென்று
- காலனைக் காலொன்றினாற்
பாய்ந்தான் பணைமதில் மூன்றுங்
- கணையென்னும் ஒள்ளழலால்
மேய்ந்தான் வியனுல கேழும்
- விளங்க விழுமியநூல்
ஆய்ந்தான் அடிநிழற் கீழதன்
- றோவென்றன் ஆருயிரே.
4.84.6 807 உளைந்தான் செறுத்தற் கரியான்
- றலையை உகிரொன்றினாற்
களைந்தான் அதனை நிறைய
- நெடுமால் கணார் குருதி
வளைந்தான் ஒருவிர லின்னொடு
- வீழ்வித்துச் சாம்பர்வெண்ணீ
றளைந்தான் அடிநிழற் கீழதன்
- றோவென்றன் ஆருயிரே.
4.84.7 808 முந்திவட் டத்திடைப் பட்டதெல்
- லாம்முடி வேந்தர்தங்கள்
பந்திவட் டத்திடைப் பட்டலைப்
- புண்பதற் கஞ்சிக்கொல்லோ
நந்திவட் டந்நறு மாமலர்க்
- கொன்றையு நக்கசென்னி
அந்திவட் டத்தொளி யானடிச்
- சேர்ந்ததென் ஆருயிரே.
4.84.8 809 மிகத்தான் பெரியதோர் வேங்கை
- யதள்கொண்டு மெய்ம்மருவி
அகத்தான் வெருவநல் லாளை
- நடுக்குறுப் பான்வரும்பொன்
முகத்தாற் குளிர்ந்திருந் துள்ளத்தி
- னாலுகப் பானிசைந்த
அகத்தான் அடிநிழற் கீழதன்
- றோவென்றன் ஆருயிரே.
4.84.9 810 பைம்மா ணரவல்குற் பங்கயச்
- சீறடி யாள்வெருவக்
கைம்மா வரிசிலைக் காமனை
- யட்ட கடவுள்முக்கண்
எம்மான் இவனென் றிருவரு
- மேத்த எரிநிமிர்ந்த
அம்மான் அடிநிழற் கீழதன்
- றோவென்றன் ஆருயிரே.
4.84.10 811 பழகவோ ரூர்தி யரன்பைங்கட்
- பாரிடம் பாணிசெய்யக்
குழலும் முழவொடு மாநட
- மாடி உயரிலங்கைக்
கிழவன் இருபது தோளும்
- ஒருவிர லாலிறுத்த
அழகன் அடிநிழற் கீழதன்
- றோவென்றன் ஆருயிரே.
4.84.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.85 திருச்சோற்றுத்துறை - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்812 காலை யெழுந்து கடிமலர்
- தூயன தாங்கொணர்ந்து
மேலை யமரர் விரும்பு
- மிடம்விரை யான்மலிந்த
சோலை மணங்கமழ் சோற்றுத்
- துறையுறை வார்சடைமேல்
மாலை மதியமன் றோவெம்
- பிரானுக் கழகியதே.
4.85.1 813 வண்டணை கொன்றையும் வன்னியும்
- மத்தமும் வாளரவுங்
கொண்டணைந் தேறு முடியுடை
- யான்குரை சேர்கழற்கே
தொண்டணைந் தாடிய சோற்றுத்
- துறையுறை வார்சடைமேல்
வெண்டலை மாலையன் றோவெம்
- பிரானுக் கழகியதே.
4.85.2 814 அளக்கு நெறியினன் அன்பர்கள்
- தம்மனத் தாய்ந்துகொள்வான்
விளக்கு மடியவர் மேல்வினை
- தீர்த்திடும் விண்ணவர்கோன்
துளக்குங் குழையணி சோற்றுத்
- துறையுறை வார்சடைமேற்
றிளைக்கும் மதியமன் றோவெம்
- பிரானுக் கழகியதே.
4.85.3 815 ஆய்ந்தகை வாளர வத்தொடு
- மால்விடை யேறியெங்கும்
பேர்ந்தகை மானட மாடுவர்
- பின்னு சடையிடையே
சேர்ந்தகைம் மாமலர் துன்னிய
- சோற்றுத் துறையுறைவார்
ஏந்துகைச் சூல மழுவெம்
- பிரானுக் கழகியதே.
4.85.4 816 கூற்றைக் கடந்ததுங் கோளர
- வார்த்ததுங் கோளுழுவை
நீற்றில் துதைந்து திரியும்
- பரிசது நாமறியோம்
ஆற்றிற் கிடந்தங் கலைப்ப
- அலைப்புண் டசைந்ததொக்குஞ்
சோற்றுத் துறையுறை வார்சடை
- மேலதோர் தூமதியே.
4.85.5 817 வல்லாடி நின்று வலிபேசு
- வார்கோளர் வல்லசுரர்
கொல்லாடி நின்று குமைக்கிலும்
- வானவர் வந்திறைஞ்சச்
சொல்லாடி நின்று பயில்கின்ற
- சோற்றுத் துறையுறைவார்
வில்லாடி நின்ற நிலையெம்
- பிரானுக் கழகியதே.
4.85.6 818 ஆய முடையது நாமறி
- யோம்அர ணத்தவரைக்
காயக் கணைசிலை வாங்கியு
- மெய்துந் துயக்கறுத்தான்
தூயவெண் ணீற்றினன் சோற்றுத்
- துறையுறை வார்சடைமேற்
பாயும்வெண் ணீர்த்திரைக் கங்கையெம்
- மானுக் கழகியதே.
4.85.7 819 அண்டர் அமரர் கடைந்
- தெழுந் தோடிய நஞ்சதனை
உண்டும் அதனை ஒடுக்க
- வல்லான் மிக்க உம்பர்கள்கோன்
தொண்டு பயில்கின்ற சோற்றுத்
- துறையுறை வார்சடைமேல்
இண்டை மதியமன் றோவெம்
- பிரானுக் கழகியதே.
4.85.8 820 கடல்மணி வண்ணன் கருதிய
- நான்முகன் றானறியான்
விடமணி கண்ட முடையவன்
- றானெனை ஆளுடையான்
சுடரணிந் தாடிய சோற்றுத்
- துறையுறை வார்சடைமேற்
படமணி நாகமன் றோவெம்
- பிரானுக் கழகியதே.
4.85.9 821 இலங்கைக் கிறைவன் இருபது
- தோளு முடிநெரியக்
கலங்க விரலினா லூன்றி
- அவனைக் கருத்தழித்த
துலங்கல் மழுவினன் சோற்றுத்
- துறையுறை வார்சடைமேல்
இலங்கு மதியமன் றோவெம்
- பிரானுக் கழகியதே.
4.85.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.86 திருவொற்றியூர் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்822 செற்றுக் களிற்றுரி கொள்கின்ற
- ஞான்று செருவெண்கொம்பொன்
றிற்றுக் கிடந்தது போலும்
- இளம்பிறை பாம்பதனைச்
சுற்றிக் கிடந்தது கிம்புரி
- போலச் சுடரிமைக்கும்
நெற்றிக்கண் மற்றதன் முத்தொக்குமா
- லொற்றி யூரனுக்கே.
4.86.1 823 சொல்லக் கருதிய தொன்றுண்டு
- கேட்கிற் றொண்டாயடைந்தார்
அல்லற் படக்கண்டு பின்னென்
- கொடுத்தி அலைகொள்முந்நீர்
மல்லற் றிரைச்சங்க நித்திலங்
- கொண்டுவம் பக்கரைக்கே
ஒல்லைத் திரைகொணர்ந் தெற்றொற்றி
- யூருறை யுத்தமனே.
4.86.2 824 பரவை வருதிரை நீர்க்கங்கை
- பாய்ந்துக்க பல்சடைமேல்
அரவ மணிதரு கொன்றை
- இளந்திங்கட் சூடியதோர்
குரவ நறுமலர் கோங்க
- மணிந்து குலாய சென்னி
உரவு திரைகொணர்ந் தெற்றொற்றி
- யூருறை யுத்தமனே.
4.86.3 825 தானகங் காடரங் காக
- வுடையது தன்னடைந்தார்
ஊனக நாறு முடைதலை
- யிற்பலி கொள்வதுந்தான்
தேனக நாறுந் திருவொற்றி
- யூருறை வாரவர்தாந்
தானக மேவந்து போனகம்
- வேண்டி உழிதர்வரே.
4.86.4 826 வேலைக் கடல்நஞ்ச முண்டுவெள்
- ளேற்றொடும் வீற்றிருந்த
மாலைச் சடையார்க் குறைவிட
- மாவது வாரிகுன்றா
ஆலைக் கரும்பொடு செந்நெற்
- கழனி அருகணைந்த
சோலைத் திருவொற்றி யூரையெப்
- போதுந் தொழுமின்களே.
4.86.5 827 புற்றினில் வாழும் அரவுக்குந்
- திங்கட்குங் கங்கையென்னுஞ்
சிற்றிடை யாட்குஞ் செறிதரு
- கண்ணிக்குஞ் சேர்விடமாம்
பெற்றுடை யான்பெரும் பேச்சுடை
- யான்பிரி யாதெனையாள்
விற்றுடை யானொற்றி யூருடை
- யான்றன் விரிசடையே.
4.86.6 828 இன்றரைக் கண்ணுடை யாரெங்கு
- மில்லை இமய மென்னுங்
குன்றரைக் கண்ணன் குலமகட்
- பாவைக்குக் கூறிட்டநாள்
அன்றரைக் கண்ணுங் கொடுத்துமை
- யாளையும் பாகம்வைத்த
ஒன்றரைக் கண்ணன்கண் டீரொற்றி
- யூருறை உத்தமனே.
4.86.7 829 சுற்றிவண் டியாழ்செயுஞ் சோலையுங்
- காவுந் துதைந்திலங்கு
பெற்றிகண் டால்மற்று யாவருங்
- கொள்வர் பிறரிடைநீ
ஒற்றிகொண் டாயொற்றி யூரையுங்
- கைவிட் டுறுமென்றெண்ணி
விற்றிகண் டாய்மற் றிதுவொப்ப
- தில்லிடம் வேதியனே.
4.86.8 830 சுற்றிக் கிடந்தொற்றி யூரனென்
- சிந்தை பிரிவறியான்
ஒற்றித் திரிதந்து நீயென்ன
- செய்தி உலகமெல்லாம்
பற்றித் திரிதந்து பல்லொடு
- நாமென்று கண்குழித்துத்
தெற்றித் திருப்பதல் லாலென்ன
- செய்யுமித் தீவினையே.
4.86.9 831 அங்கட் கடுக்கைக்கு முல்லைப்
- புறவம் முறுவல்செய்யும்
பைங்கட் டலைக்குச் சுடலைக்
- களரி பருமணிசேர்
கங்கைக்கு வேலை அரவுக்குப்
- புற்று கலைநிரம்பாத்
திங்கட்கு வானந் திருவொற்றி
- யூரர் திருமுடியே.
4.86.10 832 தருக்கின வாளரக் கன்முடி
- பத்திறப் பாதந்தன்னால்
ஒருக்கின வாறடி யேனைப்
- பிறப்பறுத் தாளவல்லான்
நெருக்கின வானவர் தானவர்
- கூடிக் கடைந்தநஞ்சைப்
பருக்கின வாறென்செய் கேனொற்றி
- யூருறை பண்டங்கனே.
4.86.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.87 திருப்பழனம் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்833 மேவித்து நின்று விளைந்தன
- வெந்துயர் துக்கமெல்லாம்
ஆவித்து நின்று கழிந்தன
- அல்லல் அவையறுப்பான்
பாவித்த பாவனை நீயறி
- வாய்பழ னத்தரசே
கூவித்துக் கொள்ளுந் தனையடி
- யேனைக் குறிக்கொள்வதே.
4.87.1 834 சுற்றிநின் றார்புறங் காவ
- லமரர் கடைத்தலையில்
மற்றுநின் றார்திரு மாலொடு
- நான்முகன் வந்தடிக்கீழ்ப்
பற்றிநின் றார்பழ னத்தர
- சேயுன் பணியறிவான்
உற்றுநின் றாரடி யேனைக்
- குறிக்கொண் டருளுவதே.
4.87.2 835 ஆடிநின் றாயண்டம் ஏழுங்
- கடந்துபோய் மேலவையுங்
கூடிநின் றாய்குவி மென்முலை
- யாளையுங் கொண்டுடனே
பாடிநின் றாய்பழ னத்தர
- சேயங்கோர் பால்மதியஞ்
சூடிநின் றாயடி யேனையஞ்
- சாமைக் குறிக்கொள்வதே.
4.87.3 836 எரித்துவிட் டாய்அம்பி னாற்புர
- மூன்றுமுன் னேபடவும்
உரித்துவிட் டாய்உமை யாள்நடுக்
- கெய்தவோர் குஞ்சரத்தைப்
பரித்துவிட் டாய்பழ னத்தர
- சேகங்கை வார்சடைமேற்
தரித்துவிட் டாயடி யேனைக்
- குறிக்கொண் டருளுவதே.
4.87.4 837 முன்னியும் முன்னி முளைத்தன
- மூவெயி லும்முடனே
மன்னியு மங்கும் இருந்தனை
- மாய மனத்தவர்கள்
பன்னிய நூலின் பரிசறி
- வாய்பழ னத்தரசே
உன்னியும் உன்னடி யேனைக்
- குறிக்கொண் டருளுவதே.
4.87.5 838 ஏய்ந்தறுத் தாய்இன்ப னாய்இருந்
- தேபடைத் தான்றலையைக்
காய்ந்தறுத் தாய்கண்ணி னாலன்று
- காமனைக் காலனையும்
பாய்ந்தறுத் தாய்பழ னத்தர
- சேயென் பழவினைநோய்
ஆய்ந்தறுத் தாயடி யேனைக்
- குறிக்கொண் டருளுவதே.
4.87.6 839 மற்றுவைத் தாயங்கோர் மாலொரு
- பாகம் மகிழ்ந்துடனே
உற்றுவைத் தாய்உமை யாளொடுங்
- கூடும் பரிசெனவே
பற்றிவைத் தாய்பழ னத்தர
- சேயங்கோர் பாம்பொருகை
சுற்றிவைத் தாய்அடி யேனைக்
- குறிக்கொண் டருளுவதே.
4.87.7 840 ஊரினின் றாய்ஒன்றி நின்றுவிண்
- டாரையும் ஒள்ளழலாற்
போரினின் றாய்பொறை யாயுயி
- ராவி சுமந்துகொண்டு
பாரிநின் றாய்பழ னத்தர
- சேபணி செய்பவர்கட்
காரநின் றாய்அடி யேனைக்
- குறிக்கொண் டருளுவதே.
4.87.8 841 போகம்வைத் தாய்புரி புன்சடை
- மேலோர் புனலதனை
ஆகம்வைத் தாய்மலை யான்மட
- மங்கை மகிழ்ந்துடனே
பாகம்வைத் தாய்பழ னத்தர
- சேயுன் பணியருளால்
ஆகம்வைத் தாய்அடி யேனைக்
- குறிக்கொண் டருளுவதே.
4.87.9 842 அடுத்திருந் தாய்அரக் கன்முடி
- வாயொடு தோள்நெரியக்
கெடுத்திருந் தாய்கிளர்ந் தார்வலி
- யைக்கிளை யோடுடனே
படுத்திருந் தாய்பழ னத்தர
- சேபுலி யின்னுரிதோல்
உடுத்திருந் தாய்அடி யேனைக்
- குறிக்கொண் டருளுவதே.
4.87.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.88 திருப்பூந்துருத்தி - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்843 மாலினை மாலுற நின்றான்
- மலைமகள் தன்னுடைய
பாலனைப் பான்மதி சூடியைப்
- பண்புண ரார்மதின்மேற்
போலனைப் போர்விடை யேறியைப்
- பூந்துருத் திமகிழும்
ஆலனை ஆதிபு ராணனை
- நானடி போற்றுவதே.
4.88.1 844 மறியுடை யான்மழு வாளினன்
- மாமலை மங்கையோர்பால்
குறியுடை யான்குண மொன்றறிந்
- தாரில்லை கூறிலவன்
பொறியுடை வாளர வத்தவன்
- பூந்துருத் தியுறையும்
அறிவுடை ஆதி புராணனை
- நானடி போற்றுவதே.
4.88.2 845 மறுத்தவர் மும்மதில் மாயவோர்
- வெஞ்சிலை கோத்தோரம்பால்
அறுத்தனை ஆலதன் கீழனை
- ஆல்விட முண்டதனைப்
பொறுத்தனைப் பூதப் படையனைப்
- பூந்துருத் தியுறையும்
நிறத்தனை நீல மிடற்றனை
- யானடி போற்றுவதே.
4.88.3 846 உருவினை ஊழி முதல்வனை
- ஓதி நிறைந்துநின்ற
திருவினைத் தேசம் படைத்தனைச்
- சென்றடைந் தேனுடைய
பொருவினை யெல்லாந் துரந்தனைப்
- பூந்துருத் தியுறையுங்
கருவினைக் கண்மூன் றுடையனை
- யானடி போற்றுவதே.
4.88.4 847 தக்கன்றன் வேள்வி தகர்த்தவன்
- சார மதுவன்றுகோள்
மிக்கன மும்மதில் வீயவோர்
- வெஞ்சிலை கோத்தோரம்பால்
புக்கனன் பொன்றிகழ்ந் தன்னதோர்
- பூந்துருத் தியுறையும்
நக்கனை நங்கள் பிரான்றனை
- நானடி போற்றுவதே.
4.88.5 848 அருகடை மாலையுந் தானுடை
- யான்அழ காலமைந்த
உருவுடை மங்கையுந் தன்னொரு
- பாலுல காயுநின்றான்
பொருபடை வேலினன் வில்லினன்
- பூந்துருத் தியுறையுந்
திருவுடைத் தேச மதியனை
- யானடி போற்றுவதே.
4.88.6 849 மன்றியுந் நின்ற மதிலரை
- மாய வகைகெடுக்கக்
கன்றியுந் நின்று கடுஞ்சிலை
- வாங்கிக் கனலம்பினாற்
பொன்றியும் போகப் புரட்டினன்
- பூந்துருத் தியுறையும்
அன்றியுஞ் செய்த பிரான்றனை
- யானடி போற்றுவதே.
4.88.7 850 மின்னிறம் மிக்க இடையுமை
- நங்கையோர் பான்மகிழ்ந்தான்
என்னிற மென்றம ரர்பெரி
- யாரின்னந் தாமறியார்
பொன்னிற மிக்க சடையவன்
- பூந்துருத் தியுறையும்
என்னிற வெந்தை பிரான்றனை
- யானடி போற்றுவதே.
4.88.8 851 அந்தியை நல்ல மதியினை
- யார்க்கும் அறிவரிய
செந்தியை வாட்டுஞ்செம் பொன்னினை
- சென்றடைந் தேனுடைய
புந்தியைப் புக்க அறிவினை
- பூந்துருத் தியுறையும்
நந்தியை நங்கள் பிரான்றனை
- நானடி போற்றுவதே.
4.88.9 852 பைக்கையும் பாந்தி விழிக்கையும்
- பாம்பு சடையிடையே
வைக்கையும் வானிழி கங்கையும்
- மங்கை நடுக்குறவே
மொய்க்கை அரக்கனை யூன்றினன்
- பூந்துருத் தியுறையும்
மிக்கநல் வேத விகிர்தனை
- நானடி போற்றுவதே.
4.88.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.89 திருநெய்த்தானம் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்853 பாரிடஞ் சாடிய பல்லுயிர்
- வானம ரர்க்கருளிக்
காரடைந் தகடல் வாயுமிழ்
- நஞ்சமு தாகவுண்டான்
ஊரடைந் திவ்வுல கிற்பலி
- கொள்வது நாமறியோம்
நீரடைந் தகரை நின்றநெய்த்
- தானத் திருந்தவனே.
4.89.1 854 தேய்ந்திலங் குஞ்சிறு வெண்மதி
- யாய்நின் திருச்சடைமேற்
பாய்ந்தகங் கைப்புனற் பன்முக
- மாகிப் பரந்தொலிப்ப
ஆய்ந்திலங் கும்மழு வேலுடை
- யாயடி யேற்குரைநீ
ஏந்திள மங்கையும் நீயும்நெய்த்
- தானத் திருந்ததுவே.
4.89.2 855 கொன்றடைந் தாடிக் குமைத்திடுங்
- கூற்றமொன் னார்மதின்மேற்
சென்றடைந் தாடிப் பொருததுந்
- தேசமெல் லாமறியுங்
குன்றடைந் தாடுங் குளிர்பொழிற்
- காவிரி யின்கரைமேற்
சென்றடைந் தார்வினை தீர்க்குநெய்த்
- தானத் திருந்தவனே.
4.89.3 856 கொட்டு முழவர வத்தொடு
- கோலம் பலஅணிந்து
நட்டம் பலபயின் றாடுவர்
- நாகம் அரைக் கசைத்துச்
சிட்டர் திரிபுரந் தீயெழச்
- செற்ற சிலையுடையான்
இட்ட முமையொடு நின்றநெய்த்
- தானத் திருந்தவனே.
4.89.4 857 கொய்மலர்க் கொன்றை துழாய்வன்னி
- மத்தமுங் கூவிளமும்
மெய்மலர் வேய்ந்த விரிசடைக்
- கற்றைவிண் ணோர்பெருமான்
மைமலர் நீல நிறங்கருங்
- கண்ணியோர் பால்மகிழ்ந்தான்
நின்மல னாடல் நிலயநெய்த்
- தானத் திருந்தவனே.
4.89.5 858 பூந்தார் நறுங்கொன்றை மாலையை
- வாங்கிச் சடைக்கணிந்து
கூர்ந்தார் விடையினை யேறிப்பல்
- பூதப் படைநடுவே
போந்தார் புறவிசை பாடவும்
- ஆடவுங் கேட்டருளிச்
சேர்ந்தார் உமையவ ளோடுநெய்த்
- தானத் திருந்தவனே.
4.89.6 859 பற்றின பாம்பன் படுத்த
- புலியுரித் தோலுடையன்
முற்றின மூன்று மதில்களை
- மூட்டி யெரித்தறுத்தான்
சுற்றிய பூதப் படையினன்
- சூல மழுவொருமான்
செற்றுநந் தீவினை தீர்க்குநெய்த்
- தானத் திருந்தவனே.
4.89.7 860 விரித்த சடையினன் விண்ணவர்
- கோன்விட முண்டகண்டன்
உரித்த கரியுரி மூடியொன்
- னார்மதில் மூன்றுடனே
எரித்த சிலையினன் ஈடழியா
- தென்னை ஆண்டுகொண்ட
தரித்த உமையவ ளோடுநெய்த்
- தானத் திருந்தவனே.
4.89.8 861 தூங்கான் துளங்கான் துழாய்கொன்றை
- துன்னிய செஞ்சடைமேல்
வாங்கா மதியமும் வாளர
- வுங்கங்கை தான்புனைந்தான்
தேங்கார் திரிபுரந் தீயெழ
- வெய்து தியக்கறுத்து
நீங்கான் உமையவ ளோடுநெய்த்
- தானத் திருந்தவனே.
4.89.9 862 ஊட்டிநின் றான்பொரு வானில
- மும்மதில் தீயம்பினால்
மாட்டிநின் றான்அன்றி னார்வெந்து
- வீழவும் வானவர்க்குக்
காட்டிநின் றான்கத மாக்கங்கை
- பாயவோர் வார்சடையை
நீட்டிநின் றான்றிரு நின்றநெய்த்
- தானத் திருந்தவனே.
4.89.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.90 திருவேதிகுடி - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்863 கையது காலெரி நாகங்
- கனல்விடு சூலமது
வெய்யது வேலைநஞ் சுண்ட
- விரிசடை விண்ணவர்கோன்
செய்யினில் நீல மணங்கம
- ழுந்திரு வேதிகுடி
ஐயனை ஆரா அமுதினை
- நாமடைந் தாடுதுமே.
4.90.1 864 கைத்தலை மான்மறி யேந்திய
- கையன் கனல்மழுவன்
பொய்த்தலை யேந்திநற் பூதி
- யணிந்து பலிதிரிவான்
செய்த்தலை வாளைகள் பாய்ந்துக
- ளுந்திரு வேதிகுடி
அத்தனை ஆரா அமுதினை
- நாமடைந் தாடுதுமே.
4.90.2 865 முன்பின் முதல்வன் முனிவனெம்
- மேலை வினைகழித்தான்
அன்பின் நிலையில் அவுணர்
- புரம்பொடி யானசெய்யுஞ்
செம்பொனை நன்மலர் மேலவன்
- சேர்திரு வேதிகுடி
அன்பனை நம்மை யுடையனை
- நாமடைந் தாடுதுமே.
4.90.3 866 பத்தர்கள் நாளும் மறவார்
- பிறவியை யொன்றறுப்பான்
முத்தர்கள் முன்னம் பணிசெய்து
- பாரிடம் முன்னுயர்த்தான்
கொத்தன கொன்றை மணங்கம
- ழுந்திரு வேதிகுடி
அத்தனை ஆரா அமுதினை
- நாமடைந் தாடுதுமே.
4.90.4 867 ஆனணைந் தேறுங் குறிகுண
- மாரறி வாரவர்கை
மானணைந் தாடு மதியும்
- புனலுஞ் சடைமுடியன்
தேனணைந் தாடிய வண்டு
- பயில்திரு வேதிகுடி
ஆனணைந் தாடு மழுவனை
- நாமடைந் தாடுதுமே.
4.90.5 868 எண்ணும் எழுத்துங் குறியும்
- அறிபவர் தாமொழியப்
பண்ணின் இசைமொழி பாடிய
- வானவர் தாம்பணிவார்
திண்ணென் வினைகளைத் தீர்க்கும்
- பிரான்றிரு வேதிகுடி
நண்ண அரிய அமுதினை
- நாமடைந் தாடுதுமே.
4.90.6 869 ஊர்ந்த விடையுகந் தேறிய
- செல்வனை நாமறியோம்
ஆர்ந்த மடமொழி மங்கையோர்
- பாகம் மகிழ்ந்துடையான்
சேர்ந்த புனற்சடைச் செல்வப்
- பிரான்றிரு வேதிகுடிச்
சார்ந்த வயலணி தண்ணமு
- தையடைந் தாடுதுமே.
4.90.7 870 எரியும் மழுவினன் எண்ணியும்
- மற்றொரு வன்றலையுள்
திரியும் பலியினன் தேயமும்
- நாடுமெல் லாமுடையான்
விரியும் பொழிலணி சேறு
- திகழ்திரு வேதிகுடி
அரிய அமுதினை அன்பர்க
- ளோடடைந் தாடுதுமே.
4.90.8 871 மையணி கண்டன் மறைவிரி
- நாவன் மதித்துகந்த
மெய்யணி நீற்றன் விழுமிய
- வெண்மழு வாட்படையான்
செய்ய கமல மணங்கம
- ழுந்திரு வேதிகுடி
ஐயனை ஆரா அமுதினை
- நாமடைந் தாடுதுமே.
4.90.9 872 வருத்தனை வாளரக் கன்முடி
- தோளொடு பத்திறுத்த
பொருத்தனைப் பொய்யா அருளனைப்
- பூதப் படையுடைய
திருத்தனைத் தேவர் பிரான்றிரு
- வேதி குடியுடைய
அருத்தனை ஆரா அமுதினை
- நாமடைந் தாடுதுமே.
4.90.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதபுரீசுவரர்,
தேவியார் - மங்கையர்க்கரசியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.91 திருவையாறு - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்873 குறுவித்த வாகுற்ற நோய்வினை
- காட்டிக் குறுவித்தநோய்
உறுவித்த வாவுற்ற நோய்வினை
- தீர்ப்பான் உகந்தருளி
அறிவித்த வாறடி யேனைஐ
- யாறன் அடிமைக்களே
செறிவித்த வாதொண்ட னேனைத்தன்
- பொன்னடிக் கீழெனையே.
4.91.1 874 கூர்வித்த வாகுற்ற நோய்வினை
- காட்டியுங் கூர்வித்தநோய்
ஊர்வித்த வாவுற்ற நோய்வினை
- தீர்ப்பான் உகந்தருளி
ஆர்வித்த வாறடி யேனைஐ
- யாறன் அடிமைக்களே
சேர்வித்த வாதொண்ட னேனைத்தன்
- பொன்னடிக் கீழெனையே.
4.91.2 875 தாக்கின வாசல மேவினை
- காட்டியுந் தண்டித்தநோய்
நீக்கின வாநெடு நீரினின்
- றேற நினைந்தருளி
ஆக்கின வாறடி யேனைஐ
- யாறன் அடிமைக்களே
நோக்கின வாதொண்ட னேனைத்தன்
- பொன்னடிக் கீழெனையே.
4.91.3 876 தருக்கின நான்றக வின்றியு
- மோடச் சலமதனால்
நெருக்கின வாநெடு நீரினின்
- றேற நினைந்தருளி
உருக்கின வாறடி யேனைஐ
- யாறன் அடிமைக்களே
பெருக்கின வாதொண்ட னேனைத்தன்
- பொன்னடிக் கீழெனையே.
4.91.4 877 இழிவித்த வாறிட்ட நோய்வினை
- காட்டி இடர்ப்படுத்துக்
கழிவித்த வாகட்ட நோய்வினை
- தீர்ப்பான் கலந்தருளி
அழிவித்த வாறடி யேனைஐ
- யாறன் அடிமைக்களே
தொழுவித்த வாதொண்ட னேனைத்தன்
- பொன்னடிக் கீழெனையே.
4.91.5 878 இடைவித்த வாறிட்ட நோய்வினை
- காட்டி இடர்ப்படுத்து
உடைவித்த வாறுற்ற நோய்வினை
- தீர்ப்பான் உகந்தருளி
அடைவித்த வாறடி யேனைஐ
- யாறன் அடிமைக்களே
தொடர்வித்த வாதொண்ட னேனைத்தன்
- பொன்னடிக் கீழெனையே.
4.91.6 879 படக்கின வாபட நின்றுபன்
- னாளும் படக்கினநோய்
அடக்கின வாறது வன்றியுந்
- தீவினை பாவமெல்லாம்
அடக்கின வாறடி யேனைஐ
- யாறன் அடிமைக்களே
தொடக்கின வாதொண்ட னேனைத்தன்
- பொன்னடிக் கீழெனையே.
4.91.7 880 மறப்பித்த வாவல்லை நோய்வினை
- காட்டி மறப்பித்தநோய்
துறப்பித்த வாதுக்க நோய்வினை
- தீர்ப்பான் உகந்தருளி
இறப்பித்த வாறடி யேனைஐ
- யாறன் அடிமைக்களே
சிறப்பித்த வாதொண்ட னேனைத்தன்
- பொன்னடிக் கீழெனையே.
4.91.8 881 துயக்கின வாதுக்க நோய்வினை
- காட்டித் துயக்கினநோய்
இயக்கின வாறிட்ட நோய்வினை
- தீர்ப்பான் இசைந்தருளி
அயக்கின வாறடி யேனைஐ
- யாறன் அடிமைக்களே
மயக்கின வாதொண்ட னேனைத்தன்
- பொன்னடிக் கீழெனையே.
4.91.9 882 கறுத்துமிட் டார்கண்டங் கங்கை
- சடைமேற் கரந்தருளி
இறுத்துமிட் டார்இலங் கைக்கிறை
- தன்னை இருபதுதோள்
அறுத்துமிட் டாரடி யேனைஐ
- யாறன் அடிமைக்களே
பொறுத்துமிட் டார்தொண்ட னேனைத்தன்
- பொன்னடிக் கீழெனையே.
4.91.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.92 திருவையாறு - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்883 சிந்திப் பரியன சிந்திப்
- பவர்க்குச் சிறந்துசெந்தேன்
முந்திப் பொழிவன முத்தி
- கொடுப்பன மொய்த்திருண்டு
பந்தித்து நின்ற பழவினை
- தீர்ப்பன பாம்புசுற்றி
அந்திப் பிறையணிந் தாடும்ஐ
- யாறன் அடித்தலமே.
4.92.1 884 இழித்தன ஏழேழ் பிறப்பும்
- அறுத்தன என்மனத்தே
பொழித்தன போரெழிற் கூற்றை
- யுதைத்தன போற்றவர்க்காய்க்
கிழித்தன தக்கன் கிளரொளி
- வேள்வியைக் கீழமுன்சென்
றழித்தன ஆறங்க மானஐ
- யாறன் அடித்தலமே.
4.92.2 885 மணிநிற மொப்பன பொன்னிற
- மன்னின மின்னியல்வாய்
கணிநிற மன்ன கயிலைப்
- பொருப்பன காதல்செய்யத்
துணிவன சீலத்த ராகித்
- தொடர்ந்து விடாததொண்டர்க்
கணியன சேயன தேவர்க்கை
- யாறன் அடித்தலமே.
4.92.3 886 இருள்தரு துன்பப் படல
- மறைப்பமெய்ஞ் ஞானமென்னும்
பொருள்தரு கண்ணிழந் துண்பொருள்
- நாடிப் புகலிழந்த
குருடருந் தம்மைப் பரவக்
- கொடுநர கக்குழிநின்
றருள்தரு கைகொடுத் தேற்றும்ஐ
- யாறன் அடித்தலமே.
4.92.4 887 எழுவாய் இறுவாய் இலாதன
- வெங்கட் பிணிதவிர்த்து
வழுவா மருத்துவ மாவன
- மாநர கக்குழிவாய்
விழுவார் அவர்தம்மை வீழ்ப்பன
- மீட்பன மிக்கவன்போ
டழுவார்க் கமுதங்கள் காண்கஐ
- யாறன் அடித்தலமே.
4.92.5 888 துன்பக் கடலிடைத் தோணித்
- தொழில்பூண்ட தொண்டர்தம்மை
இன்பக் கரைமுகந் தேற்றுந்
- திறத்தன மாற்றயலே
பொன்பட் டொழுகப் பொருந்தொளி
- செய்யுமப் பொய்பொருந்தா
அன்பர்க் கணியன காண்கஐ
- யாறன் அடித்தலமே.
4.92.6 889 களித்துக் கலந்ததோர் காதற்
- கசிவொடு காவிரிவாய்க்
குளித்துத் தொழுதுமுன் நின்றவிப்
- பத்தரைக் கோதில்செந்தேன்
தெளித்துச் சுவையமு தூட்டி
- யமரர்கள் சூழிருப்ப
அளித்துப் பெருஞ்செல்வ மாக்கும்ஐ
- யாறன் அடித்தலமே.
4.92.7 890 திருத்திக் கருத்தினைச் செவ்வே
- நிறுத்திச் செறுத்துடலை
வருத்திக் கடிமலர் வாளெடுத்
- தோச்சி மருங்குசென்று
விருத்திக் குழக்கவல் லோர்கட்கு
- விண்பட் டிகையிடுமால்
அருத்தித் தருந்தவ ரேத்தும்ஐ
- யாறன் அடித்தலமே.
4.92.8 891 பாடும் பறண்டையு மாந்தையு
- மார்ப்பப் பரந்துபல்பேய்க்
கூடி முழவக் குவிகவிழ்
- கொட்டக் குறுநரிகள்
நீடுங் குழல்செய்ய வையம்
- நெளிய நிணப்பிணக்காட்
டாடுந் திருவடி காண்கஐ
- யாறன் அடித்தலமே.
4.92.9 892 நின்போல் அமரர்கள் நீண்முடி
- சாய்த்து நிமிர்த்துகுத்த
பைம்போ துழக்கிப் பவளந்
- தழைப்பன பாங்கறியா
என்போ லிகள்பறித் திட்ட
- இலையும் முகையுமெல்லாம்
அம்போ தெனக்கொள்ளும் ஐயன்ஐ
- யாறன் அடித்தலமே.
4.92.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.93 திருவையாறு - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்893 மலையார் மடந்தை மனத்தன
- வானோர் மகுடமன்னி
நிலையா யிருப்பன நின்றோர்
- மதிப்பன நீணிலத்துப்
புலையாடு புன்மை தவிர்ப்பன
- பொன்னுல கம்மளிக்கும்
அலையார் புனற்பொன்னி சூழ்ந்தஐ
- யாறன் அடித்தலமே.
4.93.1 894 பொலம்புண் டரீகப் புதுமலர்
- போல்வன போற்றியென்பார்
புலம்பும் பொழுதும் புணர்துணை
- யாவன பொன்னனைய
சிலம்புஞ் செறிபா டகமுஞ்
- செழுங்கிண் கிணித்திரளும்
அலம்பும் திருவடி காண்கஐ
- யாறன் அடித்தலமே.
4.93.2 895 உற்றா ரிலாதார்க் குறுதுணை
- யாவன ஓதிநன்னூல்
கற்றார் பரவப் பெருமை
- யுடையன காதல்செய்ய
கிற்பார் தமக்குக் கிளரொளி
- வானகந் தான்கொடுக்கும்
அற்றார்க் கரும்பொருள் காண்கஐ
- யாறன் அடித்தலமே.
4.93.3 896 வானைக் கடந்தண்டத் தப்பால்
- மதிப்பன மந்திரிப்பார்
ஊனைக் கழித்துய்யக் கொண்டருள்
- செய்வன உத்தமர்க்கு
ஞானச் சுடராய் நடுவே
- யுதிப்பன நங்கையஞ்ச
ஆனை யுரித்தன காண்கஐ
- யாறன் அடித்தலமே.
4.93.4 897 மாதர மானில மாவன
- வானவர் மாமுகட்டின்
மீதன மென்கழல் வெங்கச்சு
- வீக்கின வெந்நமனார்
தூதரை யோடத் துரப்பன
- துன்பறத் தொண்டுபட்டார்க்
காதர மாவன காண்கஐ
- யாறன் அடித்தலமே.
4.93.5 898 பேணித் தொழுமவர் பொன்னுல
- காளப் பிறங்கருளால்
ஏணிப் படிநெறி யிட்டுக்
- கொடுத்திமை யோர்முடிமேல்
மாணிக்க மொத்து மரகதம்
- போன்று வயிரமன்னி
ஆணிக் கனகமு மொக்கும்ஐ
- யாறன் அடித்தலமே.
4.93.6 899 ஓதிய ஞானமும் ஞானப்
- பொருளும் ஒலிசிறந்த
வேதியர் வேதமும் வேள்வியு
- மாவன விண்ணுமண்ணுஞ்
சோதியுஞ் செஞ்சுடர் ஞாயிறு
- மொப்பன தூமதியோ
டாதியும் அந்தமு மானஐ
- யாறன் அடித்தலமே.
4.93.7 900 சுணங்கு முகத்துத் துணைமுலைப்
- பாவை சுரும்பொடுவண்
டணங்குங் குழலி யணியார்
- வளைக்கரங் கூப்பிநின்று
வணங்கும் பொழுதும் வருடும்
- பொழுதும்வண் காந்தளொண்போ
தணங்கும் அரவிந்த மொக்கும்ஐ
- யாறன் அடித்தலமே.
4.93.8 901 சுழலார் துயர்வெயிற் சுட்டிடும்
- போதடித் தொண்டர்துன்னும்
நிழலா வனவென்று நீங்காப்
- பிறவி நிலைகெடுத்துக்
கழலா வினைகள் கழற்றுவ
- கால வனங்கடந்த
அழலார் ஒளியன காண்கஐ
- யாறன் அடித்தலமே.
4.93.9 902 வலியான் றலைபத்தும் வாய்விட்
- டலற வரையடர்த்து
மெலியா வலியுடைக் கூற்றை
- யுதைத்துவிண் ணோர்கள்முன்னே
பலிசேர் படுகடைப் பார்த்துப்பன்
- னாளும் பலர்இகழ
அலியா நிலைநிற்கும் ஐயன்ஐ
- யாறன் அடித்தலமே.
4.93.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.94 திருக்கண்டியூர் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்903 வானவர் தானவர் வைகல்
- மலர்கொணர்ந் திட்டிறைஞ்சித்
தானவர் மால்பிர மன்னறி
- யாத தகைமையினான்
ஆனவ னாதிபு ராணனன்
- றோடிய பன்றியெய்த
கானவ னைக்கண்டி யூரண்ட
- வாணர் தொழுகின்றதே.
4.94.1 904 வான மதியமும் வாளர
- வும்புன லோடுசடைத்
தான மதுவென வைத்துழல்
- வான்றழல் போலுருவன்
கான மறியொன்று கையுடை
- யான்கண்டி யூரிருந்த
ஊனமில் வேத முடையானை
- நாமடி யுள்குவதே.
4.94.2 905 பண்டங் கறுத்ததோர் கையுடை
- யான்படைத் தான்றலையை
உண்டங் கறுத்ததும் ஊரொடு
- நாடவை தானறியுங்
கண்டங் கறுத்த மிடறுடை
- யான்கண்டி யூரிருந்த
தொண்டர் பிரானைக்கண் டீரண்ட
- வாணர் தொழுகின்றதே.
4.94.3 906 முடியின்முற் றாததொன் றில்லையெல்
- லாமுடன் தானுடையான்
கொடியுமுற் றவ்விடை யேறியோர்
- கூற்றொரு பாலுடையான்
கடியமுற் றவ்வினை நோய்களை
- வான்கண்டி யூரிருந்தான்
அடியுமுற் றார்தொண்டர் இல்லைகண்
- டீரண்ட வானவரே.
4.94.4 907 பற்றியோ ரானை யுரித்த
- பிரான்பவ ளத்திரள்போல்
முற்றும் அணிந்ததோர் நீறுடை
- யான்முன்ன மேகொடுத்த
கற்றங் குடையவன் றானறி
- யான்கண்டி யூரிருந்த
குற்றமில் வேத முடையானை
- யாமண்டர் கூறுவதே.
4.94.5 908 போர்ப்பனை யானை யுரித்த
- பிரான்பொறி வாயரவஞ்
சேர்ப்பது வானத் திரைகடல்
- சூழுல கம்மிதனைக்
காப்பது காரண மாகக்கொண்
- டான்கண்டி யூரிருந்த
கூர்ப்புடை ஒள்வாள் மழுவனை
- யாமண்டர் கூறுவதே.
4.94.6 909 அட்டது காலனை ஆய்ந்தது
- வேதமா றங்கமன்று
சுட்டது காமனைக் கண்ணத
- னாலே தொடர்ந்தெரியக்
கட்டவை மூன்று மெரித்த
- பிரான்கண்டி யூரிருந்த
குட்டமுன் வேதப் படையனை
- யாமண்டர் கூறுவதே.
4.94.7 910 அட்டும் ஒலிநீர் அணிமதி
- யும்மல ரானவெல்லாம்
இட்டுப் பொதியுஞ் சடைமுடி
- யான்இண்டை மாலையங்கைக்
கட்டும் அரவது தானுடை
- யான்கண்டி யூரிருந்த
கொட்டும் பறையுடைக் கூத்தனை
- யாமண்டர் கூறுவதே.
4.94.8 911 மாய்ந்தன தீவினை மங்கின
- நோய்கள் மறுகிவிழத்
தேய்ந்தன பாவஞ் செறுக்ககில்
- லாநம்மைச் செற்றநங்கைக்
காய்ந்த பிரான்கண்டி யூரெம்
- பிரான்அங்க மாறினையும்
ஆய்ந்த பிரானல்ல னோவடி
- யேனையாட் கொண்டவனே.
4.94.9 912 மண்டி மலையை யெடுத்துமத்
- தாக்கியவ் வாசுகியைத்
தண்டி அமரர் கடைந்த
- கடல்விடங் கண்டருளி
உண்ட பிரான்நஞ் சொளித்தபி
- ரான்அஞ்சி யோடிநண்ணக்
கண்ட பிரானல்ல னோகண்டி
- யூரண்ட வானவனே.
4.94.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டேசுவரர், தேவியார் - மங்கைநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.95 திருப்பாதிரிப்புலியூர் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்913 ஈன்றாளு மாயெனக் கெந்தையு
- மாயுடன் தோன்றினராய்
மூன்றா யுலகம் படைத்துகந்
- தான்மனத் துள்ளிருக்க
ஏன்றான் இமையவர்க் கன்பன்
- திருப்பா திரிப்புலியூர்த்
தோன்றாத் துணையா யிருந்தனன்
- றன்னடி யோங்களுக்கே.
4.95.1 914 பற்றாய் நினைந்திடப் போதுநெஞ்
- சேயிந்தப் பாரைமுற்றுஞ்
சுற்றாய் அலைகடல் மூடினுங்
- கண்டேன் புகல்நமக்கு
உற்றான் உமையவட் கன்பன்
- திருப்பா திரிப்புலியூர்
முற்றா முளைமதிக் கண்ணியி
- னான்றன மொய்கழலே.
4.95.2 915 விடையான் விரும்பியென் னுள்ளத்
- திருந்தான் இனிநமக்கிங்
கடையா அவலம் அருவினை
- சாரா நமனையஞ்சோம்
புடையார் கமலத் தயன்போல்
- பவர்பா திரிப்புலியூர்
உடையான் அடியார் அடியடி
- யோங்கட் கரியதுண்டே.
4.95.3 916 மாயமெல் லாமுற்ற விட்டிருள்
- நீங்க மலைமகட்கே
நேயம் நிலாவ இருந்தா
- னவன்றன் திருவடிக்கே
தேயமெல் லாநின் றிறைஞ்சுந்
- திருப்பா திரிப்புலியூர்
மேயநல் லான்மலர்ப் பாதமென்
- சிந்தையுள் நின்றனவே.
4.95.4 917 வைத்த பொருள்நமக் காமென்று
- சொல்லி மனத்தடைத்துச்
சித்த மொருக்கிச் சிவாய
- நமவென் றிருக்கினல்லால்
மொய்த்த கதிர்மதி போல்வா
- ரவர்பா திரிப்புலியூர்
அத்தன் அருள்பெற லாமோ
- அறிவிலாப் பேதைநெஞ்சே.
4.95.5 918 கருவாய்க் கிடந்துன் கழலே
- நினையுங் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்றன் நாமம்
- பயின்றேன் உனதருளாற்
திருவாய் பொலியச் சிவாய
- நமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீபா
- திரிப்புலி யூரரனே.
4.95.6 919 எண்ணா தமரர் இரக்கப்
- பரவையுள் நஞ்சமுண்டாய்
திண்ணார் அசுரர் திரிபுரந்
- தீயெழச் செற்றவனே
பண்ணார்ந் தமைந்த பொருள்கள்
- பயில்பா திரிப்புலியூர்க்
கண்ணார் நுதலாய் கழல்நங்
- கருத்தில் உடையனவே.
4.957 920 புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா
- வுன்னடி யென்மனத்தே
வழுவா திருக்க வரந்தர
- வேண்டுமிவ் வையகத்தே
தொழுவார்க் கிரங்கி யிருந்தருள்
- செய்பா திரிப்புலியூர்ச்
செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை
- மேல்வைத்த தீவண்ணனே.
4.95.8 921 மண்பா தலம்புக்கு மால்கடல்
- மூடிமற் றேழுலகும்
விண்பால் திசைகெட் டிருசுடர்
- வீழினும் அஞ்சல்நெஞ்சே
திண்பால் நமக்கொன்று கண்டோ ந்
- திருப்பா திரிப்புலியூர்க்
கண்பாவு நெற்றிக் கடவுட்
- சுடரான் கழலிணையே.
4.95.9 922 திருந்தா அமணர்தந் தீநெறிப்
- பட்டுத் திகைத்துமுத்தி
தருந்தா ளிணைக்கே சரணம்
- புகுந்தேன் வரையெடுத்த
பொருந்தா அரக்கன் உடல்நெரித்
- தாய்பா திரிப்புலியூர்
இருந்தாய் அடியேன் இனிப்பிற
- வாமல்வந் தேன்றுகொள்ளே.
4.95.10
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தோன்றாத்துணையீசுவரர்,
தேவியார் - தோகையம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.96 திருவீழிமிழலை - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்923 வான்சொட்டச் சொட்டநின் றட்டும்
- வளர்மதி யோடயலே
தேன்சொட்டச் சொட்டநின் றட்டுந்
- திருக்கொன்றை சென்னிவைத்தீர்
மான்பெட்டை நோக்கி மணாளீர்
- மணிநீர் மிழலையுள்ளீர்
நான்சட்ட வும்மை மறக்கினும்
- என்னைக் குறிக்கொண்மினே.
4.96.1 924 அந்தமும் ஆதியு மாகிநின்
- றீரண்டம் எண்டிசையும்
பந்தமும் வீடும் பரப்புகின்
- றீர்பசு வேற்றுகந்தீர்
வெந்தழல் ஓம்பு மிழலையுள்
- ளீரென்னைத் தென்றிசைக்கே
உந்திடும் போது மறக்கினும்
- என்னைக் குறிக்கொண்மினே.
4.96.2 925 அலைக்கின்ற நீர்நிலங் காற்றனல்
- அம்பர மாகிநின்றீர்
கலைக்கன்று சேருங் கரத்தீர்
- கலைப்பொரு ளாகிநின்றீர்
விலக்கின்றி நல்கும் மிழலையுள்
- ளீர்மெய்யிற் கையொடுகால்
குலைக்கின்று நும்மை மறக்கினும்
- என்னைக் குறிக்கொண்மினே.
4.96.3 926 தீத்தொழி லான்றலை தீயிலிட்
- டுச்செய்த வேள்விசெற்றீர்
பேய்த்தொழி லாட்டியைப் பெற்றுடை
- யீர்பிடித் துத்திரியும்
வேய்த்தொழி லாளர் மிழலையுள்
- ளீர்விக்கி அஞ்செழுத்தும்
ஓத்தொழிந் தும்மை மறக்கினும்
- என்னைக் குறிக்கொண்மினே.
4.96.4 927 தோட்பட்ட நாகமுஞ் சூலமுஞ்
- சுத்தியும் பத்திமையான்
மேற்பட்ட அந்தணர் வீழியும்
- என்னையும் வேறுடையீர்
நாட்பட்டு வந்து பிறந்தேன்
- இறக்க நமன்தமர்தம்
கோட்பட்டு நும்மை மறக்கினும்
- என்னைக் குறிக்கொண்மினே.
4.96.5 928 கண்டியிற் பட்ட கழுத்துடை
- யீர்கரி காட்டிலிட்ட
பண்டியிற் பட்ட பரிகலத்
- தீர்பதி வீழிகொண்டீர்
உண்டியிற் பட்டினி நோயில்
- உறக்கத்தில் உம்மையைவர்
கொண்டியிற் பட்டு மறக்கினும்
- என்னைக் குறிக்கொண்மினே.
4.96.6 929 தோற்றங்கண் டான்சிர மொன்றுகொண்
- டீர்தூய வெள்ளெருதொன்
றேற்றங்கொண் டீரெழில் வீழி
- மிழலை இருக்கைகொண்டீர்
சீற்றங்கொண் டென்மேல் சிவந்ததோர்
- பாசத்தால் வீசியவெங்
கூற்றங்கண் டும்மை மறக்கினும்
- என்னைக் குறிக்கொண்மினே.
4.96.7 930 சுழிப்பட்ட கங்கையுந் திங்களுஞ்
- சூடிச்சொக் கம்பயின்றீர்
பழிப்பட்ட பாம்பரைப் பற்றுடை
- யீர்படர் தீப்பருக
விழிப்பட்ட காமனை வீட்டீர்
- மிழலையுள் ளீர்பிறவிச்
சுழிப்பட்டு நும்மை மறக்கினும்
- என்னைக் குறிக்கொண்மினே.
4.96.8 931 பிள்ளையிற் பட்ட பிறைமுடி
- யீர்மறை யோதவல்லீர்
வெள்ளையிற் பட்டதோர் நீற்றீர்
- விரிநீர் மிழலையுள்ளீர்
நள்ளையிற் பட்டைவர் நக்கரைப்
- பிக்க நமன்தமர்தங்
கொள்ளையிற் பட்டு மறக்கினும்
- என்னைக் குறிக்கொண்மினே.
4.96.9 932 கறுக்கொண் டரக்கன் கயிலையைப்
- பற்றிய கையுமெய்யும்
நெறுக்கென் றிறச்செற்ற சேவடி
- யாற்கூற்றை நீறுசெய்தீர்
வெறிக்கொன்றை மாலை முடியீர்
- விரிநீர் மிழலையுள்ளீர்
இறக்கின்று நும்மை மறக்கினும்
- என்னைக் குறிக்கொண்மினே.
4.96.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீழியழகர், தேவியார் - சுந்தரகுஜாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.97 திருச்சத்திமுற்றம் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்933 கோவாய் முடுகி யடுதிறற்
- கூற்றங் குமைப்பதன்முன்
பூவா ரடிச்சுவ டென்மேற்
- பொறித்துவை போகவிடின்
மூவா முழுப்பழி மூடுங்கண்
- டாய்முழங் குந்தழற்கைத்
தேவா திருச்சத்தி முற்றத்
- துறையுஞ் சிவக்கொழுந்தே.
4.97.1 934 காய்ந்தாய் அனங்கன் உடலம்
- பொடிபடக் காலனைமுன்
பாய்ந்தாய் உயிர்செகப் பாதம்
- பணிவார்தம் பல்பிறவி
ஆய்ந்தாய்ந் தறுப்பாய் அடியேற்
- கருளாயுன் அன்பர்சிந்தை
சேர்ந்தாய் திருச்சத்தி முற்றத்
- துறையுஞ் சிவக்கொழுந்தே.
4.97.2 935 பொத்தார் குரம்பை புகுந்தைவர்
- நாளும் புகலழிப்ப
மத்தார் தயிர்போல் மறுகுமென்
- சிந்தை மறுக்கொழிவி
அத்தா அடியேன் அடைக்கலங்
- கண்டாய் அமரர்கள்தஞ்
சித்தா திருச்சத்தி முற்றத்
- துறையுஞ் சிவக்கொழுந்தே.
4.97.3 936 நில்லாக் குரம்பை நிலையாக்
- கருதியிந் நீணிலத்தொன்
றல்லாக் குழிவீழ்ந் தயர்வுறு
- வேனைவந் தாண்டுகொண்டாய்
வில்லேர் புருவத் துமையாள்
- கணவா விடிற்கெடுவேன்
செல்வா திருச்சத்தி முற்றத்
- துறையுஞ் சிவக்கொழுந்தே.
4.97.4 937 கருவுற் றிருந்துன் கழலே
- நினைந்தேன் கருப்புவியிற்
தெருவிற் புகுந்தேன் திகைத்தடி
- யேனைத் திகைப்பொழிவி
உருவிற் றிகழும் உமையாள்
- கணவா விடிற்கெடுவேன்
திருவிற் பொலிசத்தி முற்றத்
- துறையுஞ் சிவக்கொழுந்தே.
4.97.5 938 வெம்மை நமன்தமர் மிக்கு
- விரவி விழுப்பதன்முன்
இம்மையுன் தாளென்றன் நெஞ்சத்
- தெழுதிவை ஈங்கிகழில்
அம்மை அடியேற் கருளுதி
- யென்பதிங் காரறிவார்
செம்மை தருசத்தி முற்றத்
- துறையுஞ் சிவக்கொழுந்தே.
4.97.6 939 விட்டார் புரங்கள் ஒருநொடி
- வேவவோர் வெங்கணையாற்
சுட்டாயென் பாசத் தொடர்பறுத்
- தாண்டுகொள் தும்பிபம்பும்
மட்டார் குழலி மலைமகள்
- பூசை மகிழ்ந்தருளுஞ்
சிட்டா திருச்சத்தி முற்றத்
- துறையுஞ் சிவக்கொழுந்தே.
4.97.7 940 இகழ்ந்தவன் வேள்வி அழித்திட்
- டிமையோர் பொறையிரப்ப
நிகழ்ந்திட அன்றே விசயமுங்
- கொண்டது நீலகண்டா
புகழ்ந்த அடியேன்றன் புன்மைகள்
- தீரப் புரிந்துநல்காய்
திகழ்ந்த திருச்சத்தி முற்றத்
- துறையுஞ் சிவக்கொழுந்தே.
4.97.8 941 தக்கார்வ மெய்திச் சமண்தவிர்ந்
- துன்றன் சரண்புகுந்தேன்
எக்காதல் எப்பயன் உன்றிற
- மல்லால் எனக்குளதே
மிக்கார் திலையுள் விருப்பா
- மிகவட மேருவென்னுந்
திக்கா திருச்சத்தி முற்றத்
- துறையுஞ் சிவக்கொழுந்தே.
4.97.9 942 பொறித்தேர் அரக்கன் பொருப்பெடுப்
- புற்றவன் பொன்முடிதோள்
இறத்தாள் ஒருவிரல் ஊன்றிட்
- டலற இரங்கிஒள்வாள்
குறித்தே கொடுத்தாய் கொடியேன்செய்
- குற்றக் கொடுவினைநோய்
செறுத்தாய் திருச்சத்தி முற்றத்
- துறையுஞ் சிவக்கொழுந்தே.
4.97.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சிவக்கொழுந்தீசுவரர், தேவியார் - பெரியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.98 திருநல்லூர் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்943 அட்டுமின் இல்பலி யென்றென்
- றகங்கடை தோறும்வந்து
மட்டவி ழுங்குழ லார்வளை
- கொள்ளும் வகையென்கொலோ
கொட்டிய பாணி யெடுத்திட்ட
- பாதமுங் கோளரவும்
நட்டநின் றாடிய நாதர்நல்
- லூரிடங் கொண்டவரே.
4.98.1 944 பெண்ணிட்டம் பண்டைய தன்றிவை
- பெய்பலிக் கென்றுழல்வார்
நண்ணிட்டு வந்து மனைபுகுந்
- தாரும்நல் லூரகத்தே
பண்ணிட்ட பாடலர் ஆடல
- ராய்ப்பற்றி நோக்கிநின்று
கண்ணிட்டுப் போயிற்றுக் காரண
- முண்டு கறைக்கண்டரே.
4.98.2 945 படவேர் அரவல்ன்ற் பாவைநல்
- லீர்பக லேயொருவர்
இடுவார் இடைப்பலி கொள்பவர்
- போலவந் தில்புகுந்து
நடவார் அடிகள் நடம்பயின்
- றாடிய கூத்தர்கொலோ
வடபாற் கயிலையுந் தென்பால்நல்
- லூருந்தம் வாழ்பதியே.
4.98.3 946 செஞ்சுடர்ச் சோதிப் பவளத்
- திரள்திகழ் முத்தனைய
நஞ்சணி கண்டன்நல் லூருறை
- நம்பனை நானொருகாற்
துஞ்சிடைக் கண்டு கனவின்
- றலைத்தொழு தேற்கவன்றான்
நெஞ்சிடை நின்றக லான்பல
- காலமும் நின்றனனே.
4.98.4 947 வெண்மதி சூடி விளங்கநின்
- றானைவிண் ணோர்கள்தொழ
நண்ணில யத்தொடு பாட
- லறாதநல் லூரகத்தே
திண்ணிலை யங்கொடு நின்றான்
- திரிபுர மூன்றெரித்தான்
கண்ணுளும் நெஞ்சத் தகத்தும்
- உளகழற் சேவடியே.
4.98.5 948 தேற்றப் படத்திரு நல்லூ
- ரகத்தே சிவனிருந்தாற்
தோற்றப் படச்சென்று கண்டுகொள்
- ளார்தொண்டர் துன்மதியால்
ஆற்றிற் கெடுத்துக் குளத்தினிற்
- றேடிய ஆதரைப்போற்
காற்றிற் கெடுத்துல கெல்லாந்
- திரிதர்வர் காண்பதற்கே.
4.98.6 949 நாட்கொண்ட தாமரைப் பூத்தடஞ்
- சூழ்ந்த நல்லூரகத்தே
கீட்கொண்ட கோவணங் காவென்று
- சொல்லிக் கிறிபடத்தான்
வாட்கொண்ட நோக்கி மனைவியொ
- டுமங்கோர் வாணிகனை
ஆட்கொண்ட வார்த்தை யுரைக்குமன்
- றோவிவ் வகலிடமே.
4.98.7 950 அறைமல்கு பைங்கழ லார்ப்பநின்
- றானணி யார்சடைமேல்
நறைமல்கு கொன்றையந் தாருடை
- யானும்நல் லூரகத்தே
பறைமல்கு பாடலன் ஆடல
- னாகிப் பரிசழித்தான்
பிறைமல்கு செஞ்சடை தாழநின்
- றாடிய பிஞ்ஞகனே.
4.98.8 951 மன்னிய மாமறை யோர்மகிழ்ந்
- தேத்த மருவியெங்குந்
துன்னிய தொண்டர்கள் இன்னிசை
- பாடித் தொழுதுநல்லூர்க்
கன்னியர் தாமுங் கனவிடை
- யுன்னிய காதலரை
அன்னியர் அற்றவர் அங்கண
- னேயருள் நல்கென்பரே.
4.98.9 952 திருவமர் தாமரை சீர்வளர்
- செங்கழு நீர்கொள்நெய்தல்
குருவமர் கோங்கங் குராமகிழ்
- சண்பகங் கொன்றைவன்னி
மருவமர் நீள்கொடி மாட
- மலிமறை யோர்கள்நல்லூர்
உருவமர் பாகத் துமையவள்
- பாகனை உள்குதுமே.
4.98.10 953 செல்லேர் கொடியன் சிவன்பெருங்
- கோயில் சிவபுரமும்
வல்லேன் புகவும் மதில்சூழ்
- இலங்கையர் காவலனைக்
கல்லார் முடியொடு தோளிறச்
- செற்ற கழலடியான்
நல்லூ ரிருந்த பிரான்அல்ல
- னோநம்மை ஆள்பவனே.
4.98.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.99 திருவையாறு - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்954 அந்திவட் டத்திங்கட் கண்ணியன்
- ஐயா றமர்ந்துவந்தென்
புந்திவட் டத்திடைப் புக்குநின்
- றானையும் பொய்யென்பனோ
சிந்திவட் டச்சடைக் கற்றை
- யலம்பச் சிறிதலர்ந்த
நந்திவட் டத்தொடு கொன்றை
- வளாவிய நம்பனையே.
4.99.1 955 பாடகக் கால்கழற் கால்பரி
- திக்கதி ருக்கவந்தி
நாடகக் கால்நங்கை முன்செங்கண்
- ஏனத்தின் பின்னடந்த
காடகக் கால்கணங் கைதொழுங்
- காலெங்க ணாய்நின்றகால்
ஆடகக் காலரி மான்றேர்
- வலவன்ஐ யாற்றனவே.
4.99.2
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.100 திருவேகம்பம் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்956 ஓதுவித் தாய்முன் அறவுரை
- காட்டி அமணரொடே
காதுவித் தாய்கட்ட நோய்பிணி
- தீர்த்தாய் கலந்தருளிப்
போதுவித் தாய்நின் பணிபிழைக்
- கிற்புளி யம்வளாரால்
மோதுவிப் பாய்உகப் பாய்முனி
- வாய்கச்சி யேகம்பனே.
4.100.1 957 எத்தைக்கொண் டெத்தகை ஏழை
- அமணொ டிசைவித்தெனைக்
கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு
- வித்தென்னைக் கோகுசெய்தாய்
முத்தின் திரளும் பளிங்கினிற்
- சோதியும் மொய்பவளத்
தொத்தினை யேய்க்கும் படியாய்
- பொழிற்கச்சி யேகம்பனே.
4.100.2 958 மெய்யம்பு கோத்த விசயனோ
- டன்றொரு வேடுவனாய்ப்
பொய்யம்பெய் தாவ மருளிச்செய்
- தாய்புர மூன்றெரியக்
கையம்பெய் தாய்நுன் கழலடி
- போற்றாக் கயவர்நெஞ்சிற்
குய்யம்பெய் தாய்கொடி மாமதில்
- சூழ்கச்சி யேகம்பனே.
4.100.3 959 குறிக்கொண் டிருந்துசெந் தாமரை
- ஆயிரம் வைகல்வைகல்
நெறிப்பட இண்டை புனைகின்ற
- மாலை நிறையழிப்பான்
கறைக்கண்ட நீயொரு பூக்குறை
- வித்துக்கண் சூல்விப்பதே
பிறைத்துண்ட வார்சடை யாய்பெருங்
- காஞ்சியெம் பிஞ்ஞகனே.
4.100.4 960 உரைக்குங் கழிந்திங் குணர்வரி
- யான்உள்கு வார்வினையைக்
கரைக்கு மெனக்கை தொழுவதல்
- லாற்கதி ரோர்களெல்லாம்
விரைக்கொண் மலரவன் மால்எண்
- வசுக்கள்ஏ காதசர்கள்
இரைக்கும் அமிர்தர்க் கறியவொண்
- ணானெங்கள் ஏகம்பனே.
4.100.5 961 கருவுற்ற நாள்முத லாகவுன்
- பாதமே காண்பதற்கு
உருகிற்றென் னுள்ளமும் நானுங்
- கிடந்தலந் தெய்த்தொழிந்தேன்
திருவொற்றி யூரா திருவால
- வாயா திருவாரூரா
ஒருபற் றிலாமையுங் கண்டிரங்
- காய்கச்சி யேகம்பனே.
4.100.6 962 அரிஅயன் இந்திரன் சந்திரா
- தித்தர் அமரரெல்லாம்
உரியநின் கொற்றக் கடைத்தலை
- யார்உணங் காக்கிடந்தார்
புரிதரு புன்சடைப் போக
- முனிவர் புலம்புகின்றார்
எரிதரு செஞ்சடை ஏகம்ப
- என்னோ திருக்குறிப்பே.
4.100.7 963 பாம்பரைச் சேர்த்திப் படருஞ்
- சடைமுடிப் பால்வண்ணனே
கூம்பலைச் செய்த கரதலத்
- தன்பர்கள் கூடிப்பன்னாள்
சாம்பலைப் பூசித் தரையிற்
- புரண்டுநின் றாள்சரணென்
றேம்பலிப் பார்கட் கிரங்குகண்
- டாய்கச்சி யேகம்பனே.
4.100.8 964 ஏன்றுகொண் டாயென்னை எம்பெரு
- மானினி யல்லமென்னிற்
சான்றுகண் டாய்இவ் வுலகமெல்
- லாந்தனி யேனென்றென்னை
ஊன்றிநின் றாரைவர்க் கொற்றிவைத்
- தாய்பின்னை ஒற்றியெல்லாஞ்
சோன்றுகொண் டாய்கச்சி யேகம்ப
- மேய சுடர்வண்ணனே.
4.100.9 965 உந்திநின் றாருன்றன் ஓலக்கச்
- சூளைகள் வாய்தல்பற்றித்
துன்றிநின் றார்தொல்லை வானவ
- ரீட்டம் பணியறிவான்
வந்துநின் றாரய னுந்திரு
- மாலும் மதிற்கச்சியாய்
இந்தநின் றோமினி எங்ஙன
- மோவந் திறைஞ்சுவதே.
4.100.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.101 திருவின்னம்பர் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்966 மன்னு மலைமகள் கையால்
- வருடின மாமறைகள்
சொன்ன துறைதொறுந் தூப்பொரு
- ளாயின தூக்கமலத்
தன்ன வடிவின அன்புடைத்
- தொண்டர்க் கமுதருத்தி
இன்னல் களைவன இன்னம்ப
- ரான்றன் இணையடியே.
4.101.1 967 பைதற் பிணக்குழைக் காளிவெங்
- கோபம்பங் கப்படுப்பான்
செய்தற் கரிய திருநடஞ்
- செய்தன சீர்மறையோன்
உய்தற் பொருட்டுவெங் கூற்றை
- யுதைத்தன உம்பர்க்கெல்லாம்
எய்தற் கரியன இன்னம்ப
- ரான்றன் இணையடியே.
4.101.2 968 சுணங்குநின் றார்கொங்கை யாள்உமை
- சூடின தூமலரால்
வணங்கிநின் றும்பர்கள் வாழ்த்தின
- மன்னு மறைகள்தம்மிற்
பிணங்கிநின் றின்னன வென்றறி
- யாதன பேய்க்கணத்தோ
டிணங்கிநின் றாடின இன்னம்ப
- ரான்றன் இணையடியே.
4.101.3 969 ஆறொன் றியசம யங்களின்
- அவ்வவர்க் கப்பொருள்கள்
வேறொன் றிலாதன விண்ணோர்
- மதிப்பன மிக்குவமன்
மாறொன் றிலாதன மண்ணொடு
- விண்ணகம் மாய்ந்திடினும்
ஈறொன் றிலாதன இன்னம்ப
- ரான்றன் இணையடியே.
4.101.4 970 அரக்கர்தம் முப்புரம் அம்பொன்றி
- னாலட லங்கியின்வாய்க்
கரக்கமுன் வைதிகத் தேர்மிசை
- நின்றன கட்டுருவம்
பரக்கவெங் கானிடை வேடுரு
- வாயின பல்பதிதோ
றிரக்க நடந்தன இன்னம்ப
- ரான்றன் இணையடியே.
4.101.5 971 கீண்டுங் கிளர்ந்தும்பொற் கேழல்முன்
- தேடின கேடுபடா
ஆண்டும் பலபல வூழியு
- மாயின ஆரணத்தின்
வேண்டும் பொருள்கள் விளங்கநின்
- றாடின மேவுசிலம்
பீண்டும் கழலின இன்னம்ப
- ரான்றன் இணையடியே.
4.101.6 972 போற்றுந் தகையன பொல்லா
- முயலகன் கோபப்புன்மை
ஆற்றுந் தகையன ஆறு
- சமயத் தவரவரைத்
தேற்றுந் தகையன தேறிய
- தொண்டரைச் செந்நெறிக்கே
ஏற்றுந் தகையன இன்னம்ப
- ரான்றன் இணையடியே.
4.101.7 973 பயம்புன்மை சேர்தரு பாவந்
- தவிர்ப்பன பார்ப்பதிதன்
குயம்பொன்மை மாமல ராகக்
- குலாவின கூடவொண்ணாச்
சயம்புவென் றேதகு தாணுவென்
- றேசதுர் வேதங்கள்நின்
றியம்புங் கழலின இன்னம்ப
- ரான்றன் இணையடியே.
4.101.8 974 அயன்நெடு மால்இந் திரன்சந்தி
- ராதித்தர் அமரரெல்லாஞ்
சயசய என்றுமுப் போதும்
- பணிவன தண்கடல்சூழ்
வியனில முற்றுக்கும் விண்ணுக்கும்
- நாகர் வியன்நகர்க்கும்
இயபர மாவன இன்னம்ப
- ரான்றன் இணையடியே.
4.101.9 975 தருக்கிய தக்கன்றன் வேள்வி
- தகர்த்தன தாமரைப்போ
துருக்கிய செம்பொன் உவமன்
- இலாதன வொண்கயிலை
நெருக்கிய வாளரக் கன்றலை
- பத்தும் நெரித்தவன்றன்
இருக்கியல் பாயின இன்னம்ப
- ரான்றன் இணையடியே.
4.101.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.102 திருவாரூர் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்976 குலம்பலம் பாவரு குண்டர்முன்
- னேநமக் குண்டுகொலோ
அலம்பலம் பாவரு தண்புனல்
- ஆரூர் அவிர்சடையான்
சிலம்பலம் பாவரு சேவடி
- யான்றிரு மூலத்தானம்
புலம்பலம் பாவரு தொண்டர்க்குத்
- தொண்டராம் புண்ணியமே.
4.102.1 977 மற்றிட மின்றி மனைதுறந்
- தல்லுணா வல்லமணர்
சொற்றிட மென்று துரிசுபட்
- டேனுக்கு முண்டுகொலோ
விற்றிடம் வாங்கி விசயனோ
- டன்றொரு வேடுவனாய்ப்
புற்றிடங் கொண்டான்றன் தொண்டர்க்குத்
- தொண்டராம் புண்ணியமே.
4.102.2 978 ஒருவடி வின்றிநின் றுண்குண்டர்
- முன்னமக் குண்டுகொலோ
செருவடி வெஞ்சிலை யாற்புரம்
- அட்டவன் சென்றடையாத்
திருவுடை யான்றிரு வாரூர்த்
- திருமூலத் தானன்செங்கட்
பொருவிடை யானடித் தொண்டர்க்குத்
- தொண்டராம் புண்ணியமே.
4.102.3 979 மாசினை யேறிய மேனியர்
- வன்கண்ணர் மொண்ணரைவிட்
டீசனை யேநினைந் தேசறு
- வேனுக்கும் உண்டுகொலோ
தேசனை ஆரூர்த் திருமூலத்
- தானனைச் சிந்தைசெய்து
பூசனைப் பூசரர் தொண்டர்க்குத்
- தொண்டராம் புண்ணியமே.
4.102.4 980 அருந்தும் பொழுதுரை யாடா
- அமணர் திறமகன்று
வருந்தி நினைந்தர னேயென்று
- வாழ்த்துவேற் குண்டுகொலோ
திருந்திய மாமதில் ஆரூர்த்
- திருமூலத் தானனுக்குப்
பொருந்துந் தவமுடைத் தொண்டர்க்குத்
- தொண்டராம் புண்ணியமே.
4.102.5 981 வீங்கிய தோள்களுந் தாள்களு
- மாய்நின்று வெற்றரையே
மூங்கைகள் போலுண்ணு மூடர்முன்
- னேநமக் குண்டுகொலோ
தேங்கமழ் சோலைத்தென் னாரூர்த்
- திருமூலத் தானன்செய்ய
பூங்கழ லானடித் தொண்டர்க்குத்
- தொண்டராம் புண்ணியமே.
4.102.6 982 பண்ணிய சாத்திரப் பேய்கள்
- பறிதலைக் குண்டரைவிட்
டெண்ணிற் புகழீசன் றன்னருள்
- பெற்றேற்கு முண்டுகொலோ
திண்ணிய மாமதில் ஆரூர்த்
- திருமூலத் தானனெங்கள்
புண்ணியன் றன்னடித் தொண்டர்க்குத்
- தொண்டராம் புண்ணியமே.
4.102.7 983 கரப்பர்கள் மெய்யைத் தலைபறிக்
- கச்சுகம் என்னுங்குண்டர்
உரைப்பன கேளாதிங் குய்யப்போந்
- தேனுக்கும் உண்டுகொலோ
திருப்பொலி ஆரூர்த் திருமூலத்
- தானன் திருக்கயிலைப்
பொருப்பன் விருப்பமர் தொண்டர்க்குத்
- தொண்டராம் புண்ணியமே.
4.102.8 984 கையி லிடுசோறு நின்றுண்ணுங்
- காதல் அமணரைவிட்
டுய்யும் நெறிகண் டிங்குய்யப்
- போந்தேனுக்கு முண்டுகொலோ
ஐயன் அணிவயல் ஆரூர்த்
- திருமூலத் தானனுக்குப்
பொய்யன் பிலாவடித் தொண்டர்க்குத்
- தொண்டராம் புண்ணியமே.
4.102.9 985 குற்ற முடைய அமணர்
- திறமது கையகன்றிட்
டுற்ற கருமஞ்செய் துய்யப்போந்
- தேனுக்கும் உண்டுகொலோ
மற்பொலி தோளான் இராவணன்
- றன்வலி வாட்டுவித்த
பொற்கழ லானடித் தொண்டர்க்குத்
- தொண்டராம் புண்ணியமே.
4.102.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.103 திருவாரூர் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்986 வேம்பினைப் பேசி விடக்கினை
- யோம்பி வினைபெருக்கித்
தூம்பினைத் தூர்த்தங்கோர் சுற்றந்
- துணையென் றிருத்திர்தொண்டீர்
ஆம்பலம் பூம்பொய்கை ஆரூர்
- அமர்ந்தான் அடிநிழற்கீழ்ச்
சாம்பலைப் பூசிச் சலமின்றித்
- தொண்டுபட் டுய்ம்மின்களே.
4.103.1 987 ஆராய்ந் தடித்தொண்டர் ஆணிப்பொன்
- ஆரூர் அகத்தடக்கிப்
பாரூர் பரிப்பத்தம் பங்குனி
- உத்திரம் பாற்படுத்தா
னாரூர் நறுமலர் நாதன்
- அடித்தொண்டன் நம்பிநந்தி
நீரால் திருவிளக் கிட்டமை
- நீணா டறியுமன்றே.
4.103.2 988 பூம்படி மக்கலம் பொற்படி
- மக்கலம் என்றிவற்றால்
ஆம்படி மக்கல மாகிலும்
- ஆரூர் இனிதமர்ந்தார்
தாம்படி மக்கலம் வேண்டுவ
- ரேல்தமிழ் மாலைகளால்
நாம்படி மக்கலஞ் செய்து
- தொழுதுய் மடநெஞ்சமே.
4.103.3 989 துடிக்கின்ற பாம்பரை ஆர்த்துத்
- துளங்கா மதியணிந்து
முடித்தொண்ட ராகி முனிவர்
- பணிசெய்வ தேயுமன்றிப்
பொடிக்கொண்டு பூசிப் புகுந்தொண்டர்
- பாதம் பொறுத்தபொற்பால்
அடித்தொண்டன் நந்தியென் பானுளன்
- ஆரூர் அமுதினுக்கே.
4.103.4 990 கரும்பு பிடித்தவர் காயப்பட்
- டாரங்கோர் கோடலியால்
இரும்பு பிடித்தவர் இன்புறப்
- பட்டார் இவர்கள்நிற்க
அரும்பவிழ் தண்பொழில் சூழணி
- ஆரூர் அமர்ந்தபெம்மான்
விரும்பு மனத்தினை யாதொன்று
- நானுன்னை வேண்டுவனே.
4.103.5 991 கொடிகொள் விதானங் கவரி
- பறைசங்கங் கைவிளக்கோ
டிடிவில் பெருஞ்செல்வ மெய்துவர்
- எய்தியும் ஊனமில்லா
அடிகளும் ஆரூர் அகத்தின
- ராயினும் அந்தவளப்
பொடிகொண் டணிவார்க் கிருளொக்கு
- நந்தி புறப்படிலே.
4.103.6 இப்பதிகத்தில் 7,8,9-ம்செய்யுட்கள் சிதைந்து போயின. 4.103.7-8 992 சங்கொலிப் பித்திடு மின்சிறு
- காலைத் தடவழலில்
குங்கிலி யப்புகைக் கூட்டென்றுங்
- காட்டி இருபதுதோள்
அங்குலம் வைத்தவன் செங்குரு
- திப்புன லோடஅஞ்ஞான்
றங்குலி வைத்தான் அடித்தா
- மரையென்னை ஆண்டனவே.
4.103.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.104 திருநாகைக்காரோணம் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்993 வடிவுடை மாமலை மங்கைபங்
- காகங்கை வார்சடையாய்
கடிகமழ் சோலை சுலவு
- கடல்நாகைக் காரோணனே
பிடிமத வாரணம் பேணுந்
- துரகநிற் கப்பெரிய
இடிகுரல் வெள்ளெரு தேறுமி
- தென்னைகொல் எம்மிறையே.
4.104.1 994 கற்றார் பயில்கடல் நாகைக்கா
- ரோணத்தெங் கண்ணுதலே
விற்றாங் கியகரம் வேல்நெடுங்
- கண்ணி வியன்கரமே
நற்றாள் நெடுஞ்சிலை நாண்வலித்
- தகர நின்கரமே
செற்றார் புரஞ்செற்ற சேவக
- மென்னைகொல் செப்புமினே.
4.104.2 995 தூமென் மலர்க்கணை கோத்துத்தீ
- வேள்வி தொழிற்படுத்த
காமன் பொடிபடக் காய்ந்த
- கடல்நாகைக் காரோணநின்
நாமம் பரவி நமச்சிவா
- யவென்னும் அஞ்செழுத்துஞ்
சாமன் றுரைக்கத் தருதிகண்
- டாயெங்கள் சங்கரனே.
4.104.3 996 பழிவழி யோடிய பாவிப்
- பறிதலைக் குண்டர்தங்கள்
மொழிவழி யோடி முடிவேன்
- முடியாமைக் காத்துக்கொண்டாய்
கழிவழி யோதம் உலவு
- கடல்நாகைக் காரோணவென்
வழிவழி யாளாகும் வண்ணம்
- அருளெங்கள் வானவனே.
4.104.4 997 செந்துவர் வாய்க்கருங் கண்ணிணை
- வெண்ணகைத் தேமொழியார்
வந்து வலஞ்செய்து மாநட
- மாட மலிந்தசெல்வக்
கந்த மலிபொழில் சூழ்கடல்
- நாகைக்கா ரோணமென்றுஞ்
சிந்தைசெய் வாரைப் பிரியா
- திருக்குந் திருமங்கையே.
4.104.5 998 பனைபுரை கைம்மத யானை
- யுரித்த பரஞ்சுடரே
கனைகடல் சூழ்தரு நாகைக்கா
- ரோணத்தெங் கண்ணுதலே
மனைதுறந் தல்லுணா வல்லமண்
- குண்டர் மயக்கைநீக்கி
எனைநினைந் தாட்கொண்டாய்க் கென்னினி
- யான்செயும் இச்சைகளே.
4.104.6 999 சீர்மலி செல்வம் பெரிதுடை
- யசெம்பொன் மாமலையே
கார்மலி சோலை சுலவு
- கடல்நாகைக் காரோணனே
வார்மலி மென்முலை யார்பலி
- வந்திடச் சென்றிரந்து
ஊர்மலி பிச்சைகொண் டுண்பது
- மாதிமை யோவுரையே.
4.104.7 1000 வங்கம் மலிகடல் நாகைக்கா
- ரோணத்தெம் வானவனே
எங்கள் பெருமானோர் விண்ணப்பம்
- உண்டது கேட்டருளீர்
கங்கை சடையுட் கரந்தாயக்
- கள்ளத்தை மெள்ளவுமை
நங்கை அறியிற்பொல் லாதுகண்டா
- யெங்கள் நாயகனே.
4.104.8 இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் மறைந்து போயிற்று. 4.104.9 1001 கருந்தடங் கண்ணியுந் தானுங்
- கடல்நாகைக் காரோணத்தான்
இருந்த திருமலை யென்றிறைஞ்
- சாதன் றெடுக்கலுற்றான்
பெருந்தலை பத்தும் இருபது
- தோளும் பிதிர்ந்தலற
இருந்தரு ளிச்செய்த தேமற்றுச்
- செய்திலன் எம்மிறையே.
4.104.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.105 திருவதிகைவீரட்டானம் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்1002 மாசிலொள் வாள்போல் மறியும்
- மணிநீர்த் திரைத்தொகுதி
ஊசலை யாடியங் கொண்சிறை
- அன்னம் உறங்கலுற்றால்
பாசறை நீலம் பருகிய
- வண்டுபண் பாடல்கண்டு
வீசுங் கெடில வடகரைத்
- தேயெந்தை வீரட்டமே.
4.105.1 1003 பைங்காற் றவளை பறைகொட்டப்
- பாசிலை நீர்ப்படுகர்
அங்காற் குவளைமேல் ஆவி
- உயிர்ப்ப அருகுலவுஞ்
செங்காற் குருகிவை சேருஞ்
- செறிகெடி லக்கரைத்தே
வெங்காற் குருசிலை வீரன்
- அருள்வைத்த வீரட்டமே.
4.105.2 1004 அம்மலர்க் கண்ணியர் அஞ்சனஞ்
- செந்துவர் வாயிளையார்
வெம்முலைச் சாந்தம் விலைபெறு
- மாலை யெடுத்தவர்கள்
தம்மருங் கிற்கிரங் கார்தடந்
- தோள்மெலி யக்குடைவார்
விம்மு புனற்கெடி லக்கரைத்
- தேயெந்தை வீரட்டமே.
4.105.3 1005 மீனுடைத் தண்புனல் வீரட்ட
- ரேநும்மை வேண்டுகின்ற
தியானுடைச் சில்குறை ஒன்றுள
- தால்நறுந் தண்ணெருக்கின்
தேனுடைக் கொன்றைச் சடையுடைக்
- கங்கைத் திரைதவழுங்
கூனுடைத் திங்கட் குழவியெப்
- போதுங் குறிக்கொண்மினே.
4.105.4 1006 ஆரட்ட தேனும் இரந்துண்
- டகமக வன்றிரிந்து
வேரட்ட நிற்பித் திடுகின்ற
- தால்விரி நீர்ப்பரவைச்
சூரட்ட வேலவன் தாதையைச்
- சூழ்வய லாரதிகை
வீரட்டத் தானை விரும்பா
- வரும்பாவ வேதனையே.
4.105.5 1007 படர்பொற் சடையும் பகுவாய்
- அரவும் பனிமதியுஞ்
சுடலைப் பொடியு மெல்லா
- முளவேயவர் தூயதெண்ணீர்க்
கெடிலக் கரைத்திரு வீரட்ட
- ராவர்கெட் டேனடைந்தார்
நடலைக்கு நற்றுணை யாகுங்கண்
- டீரவர் நாமங்களே.
4.105.6 1008 காளங் கடந்ததோர் கண்டத்த
- ராகிக் கண்ணார்கெடில
நாளங் கடிக்கோர் நகரமு
- மாதிற்கு நன்கிசைந்த
தாளங்கள் கொண்டுங் குழல்கொண்டு
- மியாழ்கொண்டுந் தாமங்ஙனே
வேடங்கள் கொண்டும் விசும்புசெல்
- வாரவர் வீரட்டரே.
4.105.7 இப்பதிகத்தில் 8,9,10-ம் செய்யுட்கள் மறைந்து போயின. 4.105.8-10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.106 திருப்புகலூர் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்1009 தன்னைச் சரணென்று தாளடைந்
- தேன்றன் அடியடையப்
புன்னைப் பொழிற்புக லூரண்ணல்
- செய்வன கேண்மின்களோ
என்னைப் பிறப்பறுத் தென்வினை
- கட்டறுத் தேழ்நரகத்
தென்னைக் கிடக்கலொட் டான்சிவ
- லோகத் திருத்திடுமே.
4.106.1 1010 பொன்னை வகுத்தன்ன மேனிய
- னேபுணர் மென்முலையாள்
தன்னை வகுத்தன்ன பாகத்தனே
- தமியேற் கிரங்காய்
புன்னை மலர்த்தலை வண்டுறங்
- கும்புக லூரரசே
என்னை வகுத்திலை யேலிடும்
- பைக்கிடம் யாதுசொல்லே.
4.106.2 இப்பதிகத்தில் 3-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 4.106.3 1011 பொன்னள வார்சடைக் கொன்றையி
- னாய்புக லூர்க்கரசே
மன்னுள தேவர்கள் தேடு
- மருந்தே வலஞ்சுழியாய்
என்னள வேயுனக் காட்பட்
- டிடைக்கலத் தேகிடப்பார்
உன்னள வேயெனக் கொன்றுமி
- ரங்காத உத்தமனே.
4.106.4 இப்பதிகத்தில் 5,6,7,8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 4.106.5-9 1012 ஓணப் பிரானும் ஒளிர்மா
- மலர்மிசை உத்தமனுங்
காணப் பராவியுங் காண்கின்
- றிலர்கர நாலைந்துடைத்
தோணற் பிரானை வலிதொலைத்
- தோன்தொல்லை நீர்ப்புகலூர்க்
கோணப் பிரானைக் குறுகக்
- குறுகா கொடுவினையே.
4.106.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.107 திருக்கழிப்பாலை - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்1013 நெய்தற் குருகுதன் பிள்ளையென்
- றெண்ணி நெருங்கிச்சென்று
கைதை மடற்புல்கு தென்கழிப்
- பாலை யதனுறைவாய்
பைதற் பிறையொடு பாம்புடன்
- வைத்த பரிசறியோம்
எய்தப் பெறின்இரங் காதுகண்
- டாய்நம் மிறையவனே.
4.107.1 1014 பருமா மணியும் பவளமுத்
- தும்பரந் துந்திவரை
பொருமால் கரைமேற் றிரைகொணர்ந்
- தெற்றப் பொலிந்திலங்குங்
கருமா மிடறுடைக் கண்டனெம்
- மான்கழிப் பாலையெந்தை
பெருமா னவனென்னை யாளுடை
- யானிப் பெருநிலத்தே.
4.107.2 1015 நாட்பட் டிருந்தின்பம் எய்தலுற்
- றிங்கு நமன்தமராற்
கோட்பட் டொழிவதன் முந்துற
- வேகுளி ரார்தடத்துத்
தாட்பட்ட தாமரைப் பொய்கையந்
- தண்கழிப் பாலையண்ணற்
காட்பட் டொழிந்தவன் றேவல்ல
- மாயிவ் வகலிடத்தே.
4.107.3 இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைந்து போயின. 4.107.4-10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.108 திருக்கடவூர் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்1016 மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த
- மாணிமார்க் கண்டேயற்காய்
இருட்டிய மேனி வளைவாள்
- எயிற்றெரி போலுங்குஞ்சிச்
சுருட்டிய நாவில்வெங் கூற்றம்
- பதைப்ப வுதைத்துங்ஙனே
உருட்டிய சேவடி யான்கட
- வூருறை உத்தமனே.
4.108.1 1017 பதத்தெழு மந்திரம் அஞ்செழுத்
- தோதிப் பரிவினொடும்
இதத்தெழு மாணிதன் இன்னுயிர்
- உண்ண வெகுண்டடர்த்த
கதத்தெழு காலனைக் கண்குரு
- திப்புன லாறொழுக
உதைத்தெழு சேவடி யான்கட
- வூருறை உத்தமனே.
4.108.2 1018 கரப்புறு சிந்தையர் காண்டற்
- கரியவன் காமனையும்
நெருப்புமிழ் கண்ணினன் நீள்புனற்
- கங்கையும் பொங்கரவும்
பரப்பிய செஞ்சடைப் பால்வண்ணன்
- காலனைப் பண்டொருகால்
உரப்பிய சேவடி யான்கட
- வூருறை உத்தமனே.
4.108.3 1019 மறித்திகழ் கையினன் வானவர்
- கோனை மனமகிழ்ந்து
குறித்தெழு மாணிதன் ஆருயிர்
- கொள்வான் கொதித்தசிந்தைக்
கறுத்தெழு மூவிலை வேலுடைக்
- காலனைத் தானலற
உறுக்கிய சேவடி யான்கட
- வூருறை உத்தமனே.
4.108.4 1020 குழைத்திகழ் காதினன் வானவர்
- கோனைக் குளிர்ந்தெழுந்து
பழக்கமோ டர்ச்சித்த மாணிதன்
- ஆருயிர் கொள்ளவந்த
தழற்பொதி மூவிலை வேலுடைக்
- காலனைத் தானலற
உழக்கிய சேவடி யான்கட
- வூருறை உத்தமனே.
4.108.5 1021 பாலனுக் காயன்று பாற்கடல்
- ஈந்து பணைத்தெழுந்த
ஆலினிற் கீழிருந் தாரண
- மோதி அருமுனிக்காய்ச்
சூலமும் பாசமுங் கொண்டு
- தொடர்ந்தடர்ந் தோடிவந்த
காலனைக் காய்ந்த பிரான்கட
- வூருறை உத்தமனே.
4.108.6 1022 படர்சடைக் கொன்றையும் பன்னக
- மாலை பணிகயிறா
உடைதலைக் கோத்துழல் மேனியன்
- உண்பலிக் கென்றுழல்வோன்
சுடர்பொதி மூவிலை வேலுடைக்
- காலனைத் துண்டமதா
உடறிய சேவடி யான்கட
- வூருறை உத்தமனே.
4.108.7 1023 வெண்டலை மாலையுங் கங்கைக்
- கரோடி விரிசடைமேற்
பெண்டனி நாயகன் பேயுகந்
- தாடும் பெருந்தகையான்
கண்டனி நெற்றியன் காலனைக்
- காய்ந்து கடலின்விடம்
உண்டருள் செய்தபி ரான்கட
- வூருறை உத்தமனே.
4.108.8 1024 கேழல தாகிக் கிளறிய
- கேசவன் காண்பரிதாய்
வாழிநன் மாமலர்க் கண்ணிடந்
- திட்டவம் மாலவற்கன்
றாழியும் ஈந்து அடுதிறற்
- காலனை அன்றடர்த்து
ஊழியு மாய பிரான்கட
- வூருறை உத்தமனே.
4.108.9 1025 தேன்றிகழ் கொன்றையுங் கூவிள
- மாலை திருமுடிமேல்
ஆன்றிகழ் ஐந்துகந் தாடும்
- பிரான்மலை ஆர்த்தெடுத்த
கூன்றிகழ் வாளரக் கன்முடி
- பத்துங் குலைந்துவிழ
ஊன்றிய சேவடி யான்கட
- வூருறை உத்தமனே.
4.108.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.109 திருமாற்பேறு - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்முதலிரு செய்யுட்கள் சிதைந்து போயின 4.109.1-2 1026 மாணிக் குயிர்பெறக் கூற்றை
- யுதைத்தன மாவலிபால்
காணிக் கிரந்தவன் காண்டற்
- கரியன கண்டதொண்டர்
பேணிக் கிடந்து பரவப்
- படுவன பேர்த்துமஃதே
மாணிக்க மாவன மாற்பே
- றுடையான் மலரடியே.
4.109.3 1027 கருடத் தனிப்பாகன் காண்டற்
- கரியன காதல்செய்யிற்
குருடர்க்கு முன்னே குடிகொண்
- டிருப்பன கோலமல்கு
செருடக் கடிமலர்ச் செல்விதன்
- செங்கம லக்கரத்தால்
வருடச் சிவப்பன மாற்பே
- றுடையான் மலரடியே.
4.109.4 இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைந்து போயின. 4.109.5-10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.110 திருத்தூங்கானைமாடம் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்1028 பொன்னார் திருவடிக் கொன்றுண்டு
- விண்ணப்பம் போற்றிசெய்யும்
என்னாவி காப்பதற் கிச்சையுண்
- டேலிருங் கூற்றகல
மின்னாரு மூவிலைச் சூலமென்
- மேற்பொறி மேவுகொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை
- மாடச் சுடர்க்கொழுந்தே.
4.110.1 1029 ஆவா சிறுதொண்ட னென்நினைந்
- தானென் றரும்பிணிநோய்
காவா தொழியிற் கலக்குமுன்
- மேற்பழி காதல்செய்வார்
தேவா திருவடி நீறென்னைப்
- பூசுசெந் தாமரையின்
பூவார் கடந்தையுள் தூங்கானை
- மாடத்தெம் புண்ணியனே.
4.110.2 இப்பதிகத்தில் 3,4,5,6,7,8,9-ம் செய்யுட்கள்
சிதைந்து போயின.4.110.3-9 1030 கடவுந் திகிரி கடவா
- தொழியக் கயிலையுற்றான்
படவுந் திருவிர லொன்றுவைத்
- தாய்பனி மால்வரைபோல்
இடபம் பொறித்தென்னை ஏன்றுகொள்
- ளாயிருஞ் சோலைதிங்கள்
தடவுங் கடந்தையுள் தூங்கானை
- மாடத்தெந் தத்துவனே.
4.110.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.111 பசுபதி - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்1031 சாம்பலைப் பூசித் தரையிற்
- புரண்டுநின் றாள்பரவி
ஏம்பலிப் பார்கட் கிரங்குகண்
- டாயிருங் கங்கையென்னுங்
காம்பலைக் கும்பணைத் தோளி
- கதிர்ப்பூண் வனமுலைமேற்
பாம்பலைக் குஞ்சடை யாயெம்மை
- யாளும் பசுபதியே.
4.111.1 1032 உடம்பைத் தொலைவித்துன் பாதந்
- தலைவைத்த உத்தமர்கள்
இடும்பைப் படாமல் இரங்குகண்
- டாயிரு ளோடச்செந்தீ
அடும்பொத் தனைய அழன்மழு
- வாவழ லேயுமிழும்
படம்பொத் தரவரை யாயெம்மை
- யாளும் பசுபதியே.
4.111.2 1033 தாரித் திரந்தவி ராவடி
- யார்தடு மாற்றமென்னும்
மூரித் திரைப்பௌவ நீக்குகண்
- டாய்முன்னை நாளொருகால்
வேரித்தண் பூஞ்சுடர் ஐங்கணை
- வேள்வெந்து வீழச்செந்தீப்
பாரித்த கண்ணுடை யாயெம்மை
- யாளும் பசுபதியே.
4.111.3 1034 ஒருவரைத் தஞ்சமென் றெண்ணாதுன்
- பாத மிறைஞ்சுகின்றார்
அருவினைச் சுற்றம் அகல்விகண்
- டாயண்ட மேயணவும்
பெருவரைக் குன்றம் பிளிறப்
- பிளந்துவேய்த் தோளியஞ்சப்
பருவரைத் தோலுரித் தாயெம்மை
- யாளும் பசுபதியே.
4.111.4 1035 இடுக்கொன்று மின்றியெஞ் சாமையுன்
- பாத மிறைஞ்சுகின்றார்க்
கடர்க்கின்ற நோயை விலக்குகண்
- டாயண்டம் எண்டிசையுஞ்
சுடர்த்திங்கள் சூடிச் சுழற்கங்கை
- யோடுஞ் சுரும்புதுன்றிப்
படர்க்கொண்ட செஞ்சடை யாயெம்மை
- யாளும் பசுபதியே.
4.1115 1036 அடலைக் கடல்கழி வான்நின்
- னடியிணை யேயடைந்தார்
நடலைப் படாமை விலக்குகண்
- டாய்நறுங் கொன்றை திங்கள்
சுடலைப் பொடிச்சுண்ண மாசுணஞ்
- சூளா மணிகிடந்து
படரச் சுடர்மகு டாயெம்மை
- யாளும் பசுபதியே.
4.111.6 1037 துறவித் தொழிலே புரிந்துன்
- சுரும்படி யேதொழுவார்
மறவித் தொழிலது மாற்றுகண்
- டாய்மதின் மூன்றுடைய
அறவைத் தொழில்புரிந் தந்தரத்
- தேசெல்லு மந்திரத்தேர்ப்
பறவைப் புரமெரித் தாயெம்மை
- யாளும் பசுபதியே.
4.111.7 இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 4.111.8-9 1038 சித்தத் துருகிச் சிவனெம்
- பிரானென்று சிந்தையுள்ளே
பித்துப் பெருகப் பிதற்றுகின்
- றார்பிணி தீர்த்தருளாய்
மத்தத் தரக்கன் இருபது
- தோளு முடியுமெல்லாம்
பத்துற் றுறநெரித் தாயெம்மை
- யாளும் பசுபதியே.
4.111.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.112 சரக்கறை - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்1039 விடையும் விடைப்பெரும் பாகாவென்
- விண்ணப்பம் வெம்மழுவாட்
படையும் படையாய் நிரைத்தபல்
- பூதமும் பாய்புலித்தோல்
உடையு முடைதலை மாலையும்
- மாலைப் பிறையொதுங்குஞ்
சடையு மிருக்குஞ் சரக்கறை
- யோவென் றனிநெஞ்சமே.
4.112.1 1040 விஞ்சத் தடவரை வெற்பாவென்
- விண்ணப்பம் மேலிலங்கு
சங்கக் கலனுஞ் சரிகோ
- வணமுந் தமருகமும்
அந்திப் பிறையும் அனல்வா
- யரவும் விரவியெல்லாஞ்
சந்தித் திருக்குஞ் சரக்கறை
- யோவென் றனிநெஞ்சமே.
4.112.2 1041 வீந்தார் தலைகல னேந்தீயென்
- விண்ணப்பம் மேலிலங்கு
சாந்தாய வெந்த தவளவெண்
- ணீறுந் தகுணிச்சமும்
பூந்தா மரைமேனிப் புள்ளி
- யுழைமா னதள்புலித்தோல்
தாந்தா மிருக்குஞ் சரக்கறை
- யோவென் றனிநெஞ்சமே.
4.112.3 1042 வெஞ்சமர் வேழத் துரியாயென்
- விண்ணப்பம் மேலிலங்கு
வஞ்சமா வந்த வருபுனற்
- கங்கையும் வான்மதியும்
நஞ்சமா நாகம் நகுசிர
- மாலை நகுவெண்டலை
தஞ்சமா வாழுஞ் சரக்கறை
- யோவென் றனிநெஞ்சமே.
4.112.4 1043 வேலைக் கடல்நஞ்ச முண்டாயென்
- விண்ணப்பம் மேலிலங்கு
காலற் கடந்தா னிடங்கயி
- லாயமுங் காமர்கொன்றை
மாலைப் பிறையும் மணிவா
- யரவும் விரவியெல்லாஞ்
சாலக் கிடக்குஞ் சரக்கறை
- யோவென் றனிநெஞ்சமே.
4.112.5 1044 வீழிட்ட கொன்றையந் தாராயென்
- விண்ணப்பம் மேலிலங்கு
சூழிட் டிருக்குநற் சூளா
- மணியுஞ் சுடலைநீறும்
ஏழிட் டிருக்குநல் லக்கு
- மரவுமென் பாமையோடுந்
தாழிட் டிருக்குஞ் சரக்கறை
- யோவென் றனிநெஞ்சமே.
4.112.6 1045 விண்டார் புரமூன்று மெய்தாயென்
- விண்ணப்பம் மேலிலங்கு
தொண்டா டியதொண் டடிப்பொடி
- நீறுந் தொழுதுபாதங்
கண்டார்கள் கண்டிருக் குங்கயி
- லாயமுங் காமர்கொன்றைத்
தண்டார் இருக்குஞ் சரக்கறை
- யோவென் றனிநெஞ்சமே.
4.112.7 1046 விடுபட்டி ஏறுகந் தேறீயென்
- விண்ணப்பம் மேலிலங்கு
கொடுகொட்டி கொக்கரை தக்கை
- குழல்தாளம் வீணைமொந்தை
வடுவிட்ட கொன்றையும் வன்னியும்
- மத்தமும் வாளரவுந்
தடுகுட்ட மாடுஞ் சரக்கறை
- யோவென் றனிநெஞ்சமே.
4.112.8 1047 வெண்டிரைக் கங்கை விகிர்தாவென்
- விண்ணப்பம் மேலிலங்கு
கண்டிகை பூண்டு கடிசூத்
- திரமேற் கபாலவடங்
குண்டிகை கொக்கரை கோணற்
- பிறைகுறட் பூதப்படை
தண்டிவைத் திட்ட சரக்கறை
- யோவென் றனிநெஞ்சமே.
4.112.9 1048 வேதித்த வெம்மழு வாளீயென்
- விண்ணப்பம் மேலிலங்கு
சோதித் திருக்குநற் சூளா
- மணியுஞ் சுடலைநீறும்
பாதிப் பிறையும் படுதலைத்
- துண்டமும் பாய்புலித்தோல்
சாதித் திருக்குஞ் சரக்கறை
- யோவென் றனிநெஞ்சமே.
4.112.10 1049 விவந்தா டியகழல் எந்தாயென்
- விண்ணப்பம் மேலிலங்கு
தவந்தா னெடுக்கத் தலைபத்
- திறுத்தனை தாழ்புலித்தோல்
சிவந்தா டியபொடி நீறுஞ்
- சிரமாலை சூடிநின்று
தவந்தா னிருக்குஞ் சரக்கறை
- யோவென் றனிநெஞ்சமே.
4.112.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.113 தனி - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்1050 வெள்ளிக் குழைத்துணி போலுங்
- கபாலத்தன் வீழ்ந்திலங்கு
வெள்ளிப் புரியன்ன வெண்புரி
- நூலன் விரிசடைமேல்
வெள்ளித் தகடன்ன வெண்பிறை
- சூடிவெள் ளென்பணிந்து
வெள்ளிப் பொடிப்பவ ளப்புறம்
- பூசிய வேதியனே.
4.113.1 1051 உடலைத் துறந்துல கேழுங்
- கடந்துல வாததுன்பக்
கடலைக் கடந்துய்யப் போயிட
- லாகுங் கனகவண்ணப்
படலைச் சடைப்பர வைத்திரைக்
- கங்கை பனிப்பிறைவெண்
சுடலைப் பொடிக்கட வுட்கடி
- மைக்கண் துணிநெஞ்சமே.
4.113.2 1052 முன்னே யுரைத்தால் முகமனே
- யொக்குமிம் மூவுலகுக்
கன்னையும் அத்தனு மாவா
- யழல்வணா நீயலையோ
உன்னை நினைந்தே கழியுமென்
- னாவி கழிந்ததற்பின்
என்னை மறக்கப் பெறாயெம்
- பிரானுன்னை வேண்டியதே.
4.113.3 1053 நின்னையெப் போது நினையலொட்
- டாய்நீ நினையப்புகிற்
பின்னையப் போதே மறப்பித்துப்
- பேர்த்தொன்று நாடுவித்தி
உன்னையெப் போதும் மறந்திட்
- டுனக்கினி தாயிருக்கும்
என்னையொப் பாருள ரோசொல்லு
- வாழி இறையவனே.
4.113.4 1054 முழுத்தழல் மேனித் தவளப்
- பொடியன் கனகக்குன்றத்
தெழிற்பெருஞ் சோதியை எங்கள்
- பிரானை யிகழ்ந்திர்கண்டீர்
தொழப்படுந் தேவர் தொழப்படு
- வானைத் தொழுதபின்னை
தொழப்படுந் தேவர்தம் மால்தொழு
- விக்குந்தன் தொண்டரையே.
4.113.5 1055 விண்ணகத் தான்மிக்க வேதத்
- துளான்விரி நீருடுத்த
மண்ணகத் தான்திரு மாலகத்
- தான்மரு வற்கினிய
பண்ணகத் தான்பத்தர் சித்தத்
- துளான்பழ நாயடியேன்
கண்ணகத் தான்மனத் தான்சென்னி
- யானெங் கறைக்கண்டனே.
4.113.6 1056 பெருங்கடல் மூடிப் பிரளயங்
- கொண்டு பிரமனும்போய்
இருங்கடல் மூடி இறக்கும்
- இறந்தான் களேபரமுங்
கருங்கடல் வண்ணன் களேபர
- முங்கொண்டு கங்காளராய்
வருங்கடல் மீளநின் றெம்மிறை
- நல்வீணை வாசிக்குமே.
4.113.7 1057 வானந் துளங்கிலென் மண்கம்ப
- மாகிலென் மால்வரையுந்
தானந் துளங்கித் தலைதடு
- மாறிலென் தண்கடலும்
மீனம் படிலென் விரிசுடர்
- வீழிலென் வேலைநஞ்சுண்
டூனமொன் றில்லா ஒருவனுக்
- காட்பட்ட உத்தமர்க்கே.
4.113.8 1058 சிவனெனும் நாமந் தனக்கே
- யுடையசெம் மேனியெம்மான்
அவனெனை ஆட்கொண் டளித்திடு
- மாகில் அவன்றனையான்
பவனெனு நாமம் பிடித்துத்
- திரிந்துபன் னாளழைத்தால்
இவனெனைப் பன்னாள் அழைப்பொழி
- யானென் றெதிர்ப்படுமே.
4.113.9 1059 என்னையொப் பாருன்னை எங்ஙனம்
- காண்பர் இகலியுன்னை
நின்னையொப் பார்நின்னைக் காணும்
- படித்தன்று நின்பெருமை
பொன்னையொப் பாரித் தழலை
- வளாவிச்செம் மானஞ்செற்று
மின்னையொப் பார மிளிருஞ்
- சடைக்கற்றை வேதியனே.
4.113.10
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.114 தனி - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்1060 பவளத் தடவரை போலுந்திண்
- டோ ள்களத் தோள்மிசையே
பவளக் குழைதழைத் தாலொக்கும்
- பல்சடை அச்சடைமேற்
பவளக் கொழுந்தன்ன பைம்முக
- நாகமந் நாகத்தொடும்
பவளக்கண் வால மதியெந்தை
- சூடும் பனிமலரே.
4.114.1 1061 முருகார் நறுமலர் இண்டை
- தழுவிவண் டேமுரலும்
பெருகா றடைசடைக் கற்றையி
- னாய்பிணி மேய்ந்திருந்த
இருகாற் குரம்பை யிதுநா
- னுடைய திதுபிரிந்தாற்
தருவாய் எனக்குன் திருவடிக்
- கீழோர் தலைமறைவே.
4.114.2 1062 மூவா உருவத்து முக்கண்
- முதல்வமீக் கூரிடும்பை
காவா யெனக்கடை தூங்கு
- மணியைக்கை யாலமரர்
நாவா யசைத்த வொலியொலி
- மாறிய தில்லையப்பாற்
தீயாய் எரிந்து பொடியாய்க்
- கழிந்த திரிபுரமே.
4.114.3 1063 பந்தித்த பாவங்கள் அம்மையிற்
- செய்தன இம்மைவந்து
சந்தித்த பின்னைச் சமழ்ப்பதென்
- னேவந் தமரர்முன்னாள்
முந்திச் செழுமல ரிட்டு
- முடிதாழ்த் தடிவணங்கும்
நந்திக்கு முந்துற ஆட்செய்கி
- லாவிட்ட நன்னெஞ்சமே.
4.114.4 1064 அந்திவட் டத்திளங் கண்ணிய
- னாறமர் செஞ்சடையான்
புந்திவட் டத்திடைப் புக்குநின்
- றானையும் பொய்யென்பனோ
சந்திவட் டச்சடைக் கற்றை
- யலம்பச் சிறிதலர்ந்த
நந்திவட் டத்தொடு கொன்றை
- வளாவிய நம்பனையே.
4.114.5 1065 உன்மத் தகமலர் சூடி
- உலகந் தொழச்சுடலைப்
பன்மத் தகங்கொண்டு பல்கடை
- தோறும் பலிதிரிவான்
என்மத் தகத்தே இரவும்
- பகலும் பிரிவரியான்
தன்மத் தகத்தோர் இளம்பிறை
- சூடிய சங்கரனே.
4.114.6 1066 அரைப்பா லுடுப்பன கோவணச்
- சின்னங்கள் ஐயமுணல்
வரைப்பாவை யைக்கொண்ட தெக்குடி
- வாழ்க்கைக்கு வானிரைக்கும்
இரைப்பா படுதலை யேந்துகை
- யாமறை தேடுமெந்தாய்
உரைப்பார் உரைப்பன வேசெய்தி
- யாலெங்கள் உத்தமனே.
4.114.7 1067 துறக்கப் படாத உடலைத்
- துறந்துவெந் தூதுவரோ
டிறப்பன் இறந்தால் இருவிசும்
- பேறுவன் ஏறிவந்து
பிறப்பன் பிறந்தாற் பிறையணி
- வார்சடைப் பிஞ்ஞகன்பேர்
மறப்பன்கொ லோவென்றென் னுள்ளங்
- கிடந்து மறுகிடுமே.
4.114.8 1068 வேரி வளாய விரைமலர்க்
- கொன்றை புனைந்தனகன்
சேரி வளாயவென் சிந்தை
- புகுந்தான் திருமுடிமேல்
வாரி வளாய வருபுனற்
- கங்கை சடைமறிவாய்
ஏரி வளாவிக் கிடந்தது
- போலும் இளம்பிறையே.
4.114.9 1069 கன்னெடுங் காலம் வெதும்பிக்
- கருங்கடல் நீர்சுருங்கிப்
பன்னெடுங் காலம் மழைதான்
- மறுக்கினும் பஞ்சமுண்டென்
றென்னொடுஞ் சூளறும் அஞ்சல்நெஞ்
- சேயிமை யாதமுக்கண்
பொன்னெடுங் குன்றமொன் றுண்டுகண்
- டீரிப் புகலிடத்தே.
4.114.10 1070 மேலு மறிந்திலன் நான்முகன்
- மேற்சென்று கீழிடந்து
மாலு மறிந்திலன் மாலுற்ற
- தேவழி பாடுசெய்யும்
பாலன் மிசைச்சென்று பாசம்
- விசிறி மறிந்தசிந்தைக்
கால னறிந்தான் அறிதற்
- கரியான் கழலடியே.
4.114.11
- திருச்சிற்றம்பலம்
திருநாவுக்கரசுசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப்பதிகங்கள்
நான்காம் திருமுறை முற்றும். - பாறிநீ றாகி வீழப்
4.051 | திருக்கோடிகா | (488-497) | மின்பதிப்பு |
4.052 | திருவாரூர் | (498 -507) | மின்பதிப்பு |
4.053 | திருவாரூர் | (508 -517) | மின்பதிப்பு |
4.054 | திருப்புகலூர் | (518 - 527) | மின்பதிப்பு |
4.055 | திருவலம்புரம் | (528 -537) | மின்பதிப்பு |
4.056 | திருஆவடுதுறை | (538-547) | மின்பதிப்பு |
4.057 | திருஆவடுதுறை | (548- 557) | மின்பதிப்பு |
4.058 | திருப்பருப்பதம் | (558-567) | மின்பதிப்பு |
4.059 | திருஅவளிவணல்லூர் | (568-577) | மின்பதிப்பு |
4.060 | திருப்பெருவேளூர் | (578-587) | மின்பதிப்பு |
4.061 | திருஇராமேச்சுரம் | (588-598) | மின்பதிப்பு |
4.062 | திருவாலவாய் | (598 -608) | மின்பதிப்பு |
4.063 | திருவண்ணாமலை | (609-618 ) | மின்பதிப்பு |
4.064 | திருவீழிமிழலை | (619-628) | மின்பதிப்பு |
4.065 | திருச்சாய்க்காடு | (629-638) | மின்பதிப்பு |
4.066 | திருநாகேச்சரம் | (639-648) | மின்பதிப்பு |
4.067 | திருக்கொண்டீச்சரம் | (649-658) | மின்பதிப்பு |
4.068 | திருவாலங்காடு | (659-668) | மின்பதிப்பு |
4.069 | திருக்கோவலூர்வீரட்டம் | (669-678) | மின்பதிப்பு |
4.070 | திருநனிபள்ளி | (679-687) | மின்பதிப்பு |
4.071 | திருநாகைக்காரோணம் | (688-696) | மின்பதிப்பு |
4.072 | திருவின்னம்பர் | (697-706) | மின்பதிப்பு |
4.073 | திருச்சேறை | (707-716 ) | மின்பதிப்பு |
4.074 | நெஞ்சம்ஈசனைநினைந்த | (717-725) | மின்பதிப்பு |
4.075 | தனித் - திருநேரிசை | (726-735) | மின்பதிப்பு |
4.076 | தனித் - திருநேரிசை | (736-745) | மின்பதிப்பு |
4.077 | தனித் - திருநேரிசை | (746-753) | மின்பதிப்பு |
4.078 | குறைந்த - திருநேரிசை | (754-763) | மின்பதிப்பு |
4.079 | குறைந்த - திருநேரிசை | (764-769) | மின்பதிப்பு |
4.080 | கோயில் - திருவிருத்தம் | (770-779) | மின்பதிப்பு |
4.081 | கோயில் - திருவிருத்தம் | (780-789) | மின்பதிப்பு |
4.082 | திருக்கழுமலம் | (790-799) | மின்பதிப்பு |
4.083 | திருக்கழுமலம் | (800 ) | மின்பதிப்பு |
4.084 | ஆருயிர்த் - திருவிருத்தம் | (801-811) | மின்பதிப்பு |
4.085 | திருச்சோற்றுத்துறை | (812-821) | மின்பதிப்பு |
4.086 | திருவொற்றியூர் | (822-832) | மின்பதிப்பு |
4.087 | திருப்பழனம் | (833-842) | மின்பதிப்பு |
4.088 | திருப்பூந்துருத்தி | (843-852) | மின்பதிப்பு |
4.089 | திருநெய்த்தானம் | (853-862) | மின்பதிப்பு |
4.090 | திருவேதிகுடி | (863-872) | மின்பதிப்பு |
4.091 | திருவையாறு | (873-882) | மின்பதிப்பு |
4.092 | திருவையாறு | (883-892) | மின்பதிப்பு |
4.093 | திருவையாறு | (893-902 ) | மின்பதிப்பு |
4.094 | திருக்கண்டியூர் | (903-912) | மின்பதிப்பு |
4.095 | திருப்பாதிரிப்புலியூர் | (913-922) | மின்பதிப்பு |
4.096 | திருவீழிமிழலை | (923-932) | மின்பதிப்பு |
4.097 | திருச்சத்திமுற்றம் | (933-942) | மின்பதிப்பு |
4.098 | திருநல்லூர் | (943-952) | மின்பதிப்பு |
4.099 | திருவையாறு | (954-955) | மின்பதிப்பு |
4.100 | திருவேகம்பம் | (956-965) | மின்பதிப்பு |
4.101 | திருவின்னம்பர் | (966-975) | மின்பதிப்பு |
4.102 | திருவாரூர் | (976-985) | மின்பதிப்பு |
4.103 | திருவாரூர் | (986-992 ) | மின்பதிப்பு |
4.104 | திருநாகைக்காரோணம் | (993-1001) | மின்பதிப்பு |
4.105 | திருவதிகைவீரட்டானம் | (1002-1008) | மின்பதிப்பு |
4.106 | திருப்புகலூர் | (1009-1012) | மின்பதிப்பு |
4.107 | திருக்கழிப்பாலை | (1013-1015) | மின்பதிப்பு |
4.108 | திருக்கடவூர் | (1016-1025) | மின்பதிப்பு |
4.109 | திருமாற்பேறு | (1026-1027) | மின்பதிப்பு |
4.110 | திருத்தூங்கானைமாடம் | (1028-1030) | மின்பதிப்பு |
4.111 | பசுபதி | (1031-1038 | மின்பதிப்பு |
4.112 | சரக்கறை | (1039-1049) | மின்பதிப்பு |
4.113 | தனி - திருவிருத்தம் | (1050-1059 ) | மின்பதிப்பு |
4.114 | தனி - திருவிருத்தம் | (1060-1070) | மின்பதிப்பு |
4.51 திருக்கோடிகா - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
488 |
நெற்றிமேற் கண்ணி னானே | 489 | கடிகமழ் கொன்றை யானே |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கோடீசுவரர்; தேவியார் - வடிவாம்பிகையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.52 திருவாரூர் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
498 |
படுகுழிப் பவ்வத் தன்ன | 499 | புழுப்பெய்த பண்டி தன்னைப் |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.53 திருவாரூர் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
508 |
குழல்வலங் கொண்ட சொல்லாள் | 509 | நாகத்தை நங்கை அஞ்ச |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
கருத்துகள்
கருத்துரையிடுக