கூடில்லா குருவிகள்
சுட்டி கதைகள்
Back
கூடில்லா குருவிகள்
ஒலுவில் அமுதன்
கூடில்லா குருவிகள்
ஒலுவில் அமுதன்
(சிறுவர் இலக்கியம்)
தலைப்பு
- சிறுவர் கதைகள் - தமிழ்
- மனித இனம்
- நட்பின் இலக்கணம்
- தவறான முடிவு
- அறியாப் பருவம்
- திருடனைப் பிடித்த மந்திரி
- கூடில்லாகுருவிகள்
- திட்டங்களும் வட்டங்களும்
- திசைமாறிய குருவிகள்
- முகைதீன்பாய்
- நன்றி மறக்கலாமோ!
- தண்டனை
- பிஞ்சு நஞ்சானது
- இழப்பு
- வெளிச்சமரம்
கூடில்லா குருவிகள்
சமாதானம் சஞ்சிகையும் ஈழபாரதி மருதூர்வாணரும்
சட்டத்தரணி, பதில் நீதிபதி அல்ஹாஜ் A. M. பதுர்தீன் அவர்களின் வழிகாட்டலுடன் கிழக்கிலங்கையில் தொடர்ந்து வெளிவரும் ஒரு சஞ்சிகை சமாதானம். பதினோராவது இதழ் வெளிவரவிருக்கின்றது.
அதன் ஆசிரியர் ஈழபாரதி மருதூர்வாணர் தனித்திருந்து சாதனை படைத்து வருகின்றார். கவிதைப்போட்டிகள் வைத்து பரிசும் பாராட்டிதழும் வழங்கி வருகின்றார்.
திறமையான இலக்கியவாதிகளுக்கு பொன்னாடை போர்த்தி, பட்டமளித்து பரிசு வழங்குகின்றார். அது மாத்திரமல்ல சிறந்த படைப்புக்களை தாங்கி சமாதானம் வெளிவருகின்றது. துணிச்சலான கருத்துக்களை மருதூர்வாணர் கூறுகின்றார்.
கிழக்கிலங்கையில் ஒரு சஞ்சிகை பதினோராவது இதழை வெளியிடுகிறதென்றால் அது ‘சமாதானம்' சஞ்சிகை மாத்திரமே. மற்ற இதழ்களெல்லாம் ஐந்தாவது வெளியீட்டை காண்பதற்கு முதல் உறக்கம் போட தொடங்கிவிடும். மருதூர்வாணர் சமாதானம் சஞ்சிகை மாத்திரமல்ல பல நாவல்கள், சிறுகதை தொகுதிகள் வெளியிட்டவர்.
அவர் வாழ்க பல்லாண்டு! தொடர்க அவரது இலக்கியப் பணி!
ரக்ஷானா வெளியீட்டகம். அக்கரைப்பற்று - 05
அமுதன்
சிறுவர்களுக்கான நூலில் பெரியவர்களுக்கான என்னுரை.
எனினால் முடிந்தளவு நூல்களை வெளியிடுவதற்காக உருவாக்கப்பட்டதுதானி ரக்ஷானா வெளியீட்டகம். எனது நூல் வெளியீடுகளை சகிக்க முடியாத ஒருசிலர் பலவாறான கதைகளை கிளப்பியுள்ளார்கள்.
இலாபம் சம்பாதிப்பதற்காக உருவானதுதானி ரக்ஷானா வெளியீட்டகம் என்று சொல்கிறார்கள். நான் ஒரு வெளியீட்டிலாவது இலாபம் சம்பாதிக்கவில்லை. முதலைக் காப்பாற்றி சிரமதான சேவை புரிந்து (இலாபமின்றி) வெளியிட்டு வருகினிறேனர். இதுவே பெரியகாரியம். அனேகர் இரண்டொரு வெளியீட்டோடு முதலையும் இழந்து தவிக்கினிறபோது முதலைக் காப்பாற்றுவது பெரிய காரியம்தானி.
நூலை வெளியிட்டால் வெற்றியடைய முடியாது, சந்தைப்படுத்தல் உரிய முறையில் நிகழ்ந்தால்தானி நிலைக்கமுடியும். சந்தைப்படுத்தலை தெரிந்தவனி என்றபடியால் நூல் வெளியீட்டில் சாதனை புரிய காத்திருக்கின்றேன்.
வீரகேசரி, நவமணி, தினக்குரல், தினக்கதிர், இடி, மூன்றாவது மனிதனி, கலைமுத்து, சமாதானம், தினகரனி போன்ற பிரபல பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் எனி நூலைப் பாராட்டி எழுதுகின்றபோது கீறல் விழுந்த ஒரு சிற்றேடு மட்டும் தரக்குறைவாக எழுதியுள்ளமை எண் திறமைக்குச் சான்று.
நாவல், சிறுகதை, கவிதை போனிறவற்றை வெளியிட்ட நான் தற்போது சிறுவர் இலக்கிய நூலினை வெளியிடுகினிறேனர். 20 வருடங்களுக்கு முனினர் சிந்தாமணி, தினகரனி, சூடாமணி போன்ற தேசிய பத்திரிகைகளில் சிறுவர் கதை எழுதியிருக்கின்றேன். தற்போது புதிதாக எழுதி நூலாக்கி சிறுவரினி கரங்களுக்கு தந்துள்ளேனர்.
‘கரையைத் தொடாத அலைகள்’ இவ்வருடம் ஜனவரி வெளியிட்டேன். இவ்வருடமே ‘கூடில்லா குருவிகள்’ சிறுவர் இலக்கியத்தையும் வெளியிடுகிறேன். எனது படைப் புக்களை பத்திரிகை, சஞ்சிகைகளும் வெளியிடுவதால் சிலவேளை வருடம் ஒரு நூலை வெளியிடக்கூடிய நிலை ஏற்படலாம். பத்திரிகை, சஞ்சிகைகளுக்கும் எழுதத் தானே வேணடும். விமர்சனங்களை எதிர்பார்த்து விடைபெறும்.
உங்கள் எழுத்தாளர், கவிஞர், நாவலாசிரியர்.
ஒலுவில் அமுதனின் இரண்டாவது நாலான "மரணம் வரும் வரைக்கும்” வெளியீட்டு விழாவின்போது இலங்கை வங்கி முகாமையாளர் ஏ. எம். சுபையிர் அவர்களுக்கு நாலாசிரியர் முதற்பிரதியை வழங்குகின்றார். பிரபல எழுத்தாளர் அ. ஸ. அப்துஸ்ஸமத இடது புறத்திலும் கவிஞர் பாலமுனை பாறாக் வலது புறத்திலும் காணப்படுகின்றார்கள்.
மூன்றாவது நாலான “கலையாத மேகங்கள்’ வெளியீட்டு விழாவின்போது நாலாசிரியர் உரையாற்றுகிறார். அருகே மணிப்புலவர் மருதார் ஏ. மஜீட், கவிஞர் எஸ். முத்தமீரான் ஆகியோர் காணப்படுகின்றார்கள்.
ஐந்தாவது நாலான “மனங்களிலே நிறங்கள்” வெளியீட்டு விழாவின்போது சட்டத்தரணி, பதில் நீதிபதி அல்ஹாஜ் - ஏ. எம். பதுறத்தீன் உரையாற்றிக் கொண்டிருக்கின்றார்.
ஆறாவது நாலான “கரையை தொடாத அலைகள்” வெளியிட்டு விழாவின்போது பிரபல எழுத்தாளர், பன்னூலாசிரியர் ஹாஜி உஸ்மான் சாஹிப் உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். அருகே நாலாசிரியர் ஒலுவில் அமுதன், மணிப்புலவர் மருதார் ஏ. மஜிட் ஆகியோர் அமர்ந்துள்ளனர்.
கரையைத்தொடாத அலைகள்” வெளியீட்டுவிழா மேடையில் ஈழபாரதி மருதார்வாணர், செல்வன் நெளஷாட், ஒலுவில் அமுதன், அதிபர் அஸிஸ், சட்டத்தரணி பதுறத்தீன், கவிஞர் மணிவாசகர் ஆகியோர் அமர்ந்துள்ளார்கள்.
‘சமாதானம்” வெளியீட்டு கவியரங்கில் ஒலுவில் அமுதன் கவிபாடிக்கொண்டிருக்கிறார். அருகே ஈழபாரதி மருதூர் வாணர், கலாபூஷணம் ஏ. யு. எம். ஏ. கரீம், அக்கரைச்சக்தி ஆகியோர் காணப்படுகின்றார்கள்.
மனித இனம் செழித்து கிளைகள்விட்டு பரந்து வளர்ந்திருந்த அந்த ஆலமரத்தில் அனேக பறவைகள் தங்கள் தங்குமிடத்தைப் பெற்றிருந்தன.
சிட்டுக்குருவிகள் ஒருபுறம், காகங்கள் ஒருபுறம், கிளிகள் ஒருபுறம் என்று ஒவ்வொரு பறவையினமும் இனம் இனமாக தங்குமிடத்தை அலங்கரித்திருந்தன. இன்னொரு இனத்திற்குள் இன்னொரு இனம் பலாத்காரமாய் இருக்கவில்லை. இன்னொரு இனத்திற்குள் பிரிவுக்குள் இன்னொரு இனம் செல்வதுமில்லை. மாலையானால் அந்த ஆலமரம் பறவைகளால் பூத்துக்குலுங்கும்.
குயில்கள் மாத்திரம் கூடு அமைப்பதில் சோம்பேறித்தனம் காட்டுவதால் இலை, கிளைகளுக்குள் சும் மாவே தங்கிவிடும். கூட்டைப் பற்றி அது கவலைப்படுவதில்லை.
சிறுவர்களான சீவரெத்தினமும் நாகரெத்தினமும் ஆலமரத்திற்கு கீழே வந்து பறவைகளை வேடிக்கை பார்ப்பது அவர்களின் அன்றாட நடவடிக்கையாகும். வழமைபோல அன்றும் வந்திருந்தார்கள்.
காகக்கூடுகளின் பக்கத்தே குயில்கள் சில வந்தமர்ந்தன. நிறத்தில் அதுவும் கறுப்புத்தானே. காகக்குஞ்சுகள்தான் கூட்டினுள்ளே இருந்தன. தாய்க்காகம் வந்து சேரவில்லை. குஞ்சுகளுக்குக் கொண்டு வந்து வைத்த உணவுகளை உருசி பார்த்து உண்டு விட்டுப் பறந்தன குயில்கள்.
''பார்த்தாயா சீவரெத்தினம் காகம் கொண்டு வந்து குஞ்சுகளுக்கு வைத்த உணவை களவாக குயில்கள் சாப்பிட்டு செல்கின்றதே" என்றான் நாகரெத்தினம்.
''கூடு கட்டத்தெரியாத குயில்களுக்கு களவாக சாப்பிடத்தெரிகிறதே” என்றான் சீவரெத்தினம்.
''வந்த இடத்தில் கண்ட உணவை சாப்பிடுகிறது குயில். மனிதன் இதைவிட கேவலமாக இரவில் இருட்டில் வீடு உடைத்து, கடை உடைத்து களவெடுத்துச் செல்லுகின்றானே. இதைவிட பறவைகள் மேலல்லவா" என்றான் நாகரெத்தினம்.
''அப்படிப் பார்த்தால் மிருகங்கள் எல்லாவற்றிலும் மேல்தான்'' என்றான் சீவரெத்தினம்.
'இந்த ஆலமரம் நூற்றுக்கணக்கான பறவைகளுக்கு தங்குமிடம் அளித்து தலை நிமிர்த்துகிறது. மரமாக இருந்து எவ்வளவோ பயனை மனிதனுக்கும் அளிக்கின்றது. மனிதன் மனிதனுக்கே எதிரியாகி அநியாயம் புரிகின்றான்.'' என்றான் நாகரெத்தினம்.
''தத்துவம் வேறு பேசுகின்றாயே” என்று சிரித்துக் கொண்டான் சீவரெத்தினம். பறவைகளின் ஒலிகளையும் அதன் உருவங்களையும் இருவரும் ரசிக்கத் தொடங்கினார்கள்.
ஒவ்வொரு பறவை இனங்களுக்குள்ளும் உள்ள ஒற்றுமையை சிறுவர் களான சீவரெத்தினமும் நாகரெத்தினமும் உணர்ந்தார்கள். மனிதர்களுக்குள்தான் ஒற்றுமை இல்லை என்பதையும் தெளிவாக அறிந்து கொண்டார்கள்.
கூடில்லா குருவிகள் நட்பின் இலக்கணம்
சென்தோமஸ் கல்லூரியில் ஆண்டு ஐந்தில் கல்வி கற்கும் இந்திரனும் சந்திரனும் இணைபிரியாத நண்பர்கள். இருவரில் ஒருவரை எங்கும் தனியாக காணமுடியாது. அப்படிக் காண்பதென்றால் பாடசாலைக்கு ஒருவர் வராத நாளாக இருக்க வேண்டும். அந்தளவுக்கு நகமும் சதையுமாக இருந்தார்கள்.
வகுப்பிலும் அருகருகேதான் அமர்ந்தும் கொள்வார்கள். இவர்களின் உறவை விரும்பாத சில தீய மாணவர்களும் அவர்களின் வகுப்பில் இருக்கவே செய்தார்கள். இவர்களின் நட்பை எண்ணி பெருமைப்படும் அனேகம்பேர் அவ்வகுப்பில் இருந்தார்கள்.
''நாம முருகேசுக்கு என்ன அநியாயம் செய்தோம்? நம்மைக் கண்டால் விழுங்கிறவன் மாதிரிப் பார்க்கான்.'' என்றான் இந்திரன்.
''ஆமா இந்திரா. நானும் பார்த்துவாறன். மொறச்சுப் பார்க்கான். ஒண்டும் விளங்கலியே” என்றான் சந்திரன்.
''அன்பா இருந்தா நல்லதுதானே! மனசு நல்லா இருந்தாத்தானே கல்வியும் ஏறும்” என்றான் இந்திரன்.
''ரெண்டு கெழமைக்கு முன்ன ஒருநாள் எல்லாருக்கும் முன்ன நான் வகுப்புக்க வந்திற்றன். எனக்கு அடுத்தாப்போல முருகேசு வந்தான். காலை வணக்கம் என்றேன். செவிடன் மாதிரி பேசாம நின்டான். ஏன்தான் நம்மோட வெறுப்பா இரிக்கானோ நானறியேன்" என்றான் சந்திரன். சிறிதுநேரம் மௌனமாக இருந்தார்கள்.
''இந்த பிஞ்சு பருவத்திலேதான் அன்பையும் நட்பையும் வளக்கணும்'' மீண்டும் கூறினான் சந்திரன்.
படிப்பிலும் இந்திரனும் சந்திரனும் மிக கெட்டிதன் முள்ளவர்களாக இருந்தார்கள். ஒரு கணக்கை விளங்கப் படுத்தி மேலும் அதுபோல் இரண்டு கணக்குகளைக் கொடுத்து உடன் செய்து வாருங்கள் என்று ஆசிரியர் சொன்னால் அவர்கள் இருவரும் தான் செய்து கொண்டு போவார்கள். அடுத்தாற்போல்தான் மற்றவர்கள் போவார்கள். முருகேசு ஒருநாளும் செய்து காட்டியது கிடையாது. வீட்டுப் பயிற்சிகளை மற்றவர்களின் கொப்பியைப் பார்த்து எழுதிக் காட்டுவான்.
நாட்கள் நகர்ந்தன. பரீட்சையும் நெருங்கி வந்தது.
இடைவேளை சிற்றுண்டிச் சாலைக்குச் சென்ற இந்திரனும் சந்திரனும் சிறிது தாமதமாகியே வந்தார்கள்.
சந்திரனின் புத்தகப்பை பிளேட்டால் கீறிவெட்டப் பட்டிருந்தது.
“இந்திரா. இது யார் பார்த்த வேலையா இரிக்கும் என்ர பேக்.’ சிணுங்கினான் சந்திரன்.
‘இது நம்மோட கோபமுள்ள ஒருத்தரின் வேலையாகத்தான் இரிக்கும்” என்றான் இந்திரன்.
“இந்திரந்தான் பிளேட்டால் வெட்டிருக்கான். அவன்ட உறவை நம்பாதே’ என்றான் முருகேசு.
‘'நீ சொன்னா சந்திரன் நம்பிருவான் என்றா நினைக்காய்? எங்கள பிரிக்கத்தானே நீயெல்லாம் நெனைக்கிற. அது நடக்கா’ என்றான் இந்திரன்.
“என்ன கணக்குப்போர்ற? பிளேட் கொண்டுவந்து கூட்டாளி என்டும் பாராம பேக்க வெட்டிப்போட்டு நடிக்கிற? உன்ர பேக்குக்குள்ளதான் பிளேட் இரிக்கு’ என்றான் முருகேசு. யாருமில்லாத நேரத்தில் சந்திரனின் பேக்கை வெட்டிவிட்டு பிளேட்டை போட்ட முருகேசு உறவை பிரிக்கவே முயற்சி செய்தான்.
‘என்னடா உளர்ற? எனக்கிட்ட எங்க பிளேட் இரிக்கு?’ இந்திரன் கேட்டான்.
'உன்ர பேக்குள்ளே இருக்கு. பேக்கை திற?” என்றான் முருகேசு.
‘பைத்தியம் பேசாதே’ பேக்கைத் திறந்தான் இந்திரன். அதற்குள்ளே புத்தம்புது பிளேட் ஒன்று இருந்தது.
‘என்னடா இது? நான் வைக்காத பிளேட்” என்றான் இந்திரன்.
“எனக்கு தெரியா என்டா நெனைச்சிற்றாய்? உன்ர பேக்கிலே இருக்கிற உனக்குத் தெரியாம இருக்குமா?” என்றான் கோபமுள்ள முருகேசு. இதுவரையும் எதுவும் பேசாமல் இருந்த சந்திரன் வாய் திறந்தான்.
“யாருக்கும் தீங்கு செய்ய நினைக்காத சந்திரன் எனக்கா தீங்கு செய்வான்? முருகேசு. பேக்கை வெட்டினவன் எனக்குத் தெரியும். சந்தர்ப்பம் வந்தா செல்லுவேன். ஆனா. நிச்சயமா இந்திரன் வெட்டல்ல” என்றான் சந்திரன்.
‘அப்படின்டா பேக்கை வெட்டியவன் யார்” என்று கேளாமலே நகர்ந்தான் முருகேசு.
தவறான முடிவு
நிலாச்சோலை எனும் கிராமத்தில் கோவிந்தன் என்றழைக்கப்படும் முட்டாள் வாழ்ந்து வந்தான். அவன் திருமணம் செய்யாமலே காலத்தைக் கடத்தினான்.
தனியாக குடிசையில் வசிக்கும் அவனை மோகதாஸ் எனும் பெரியவர் சந்திக்கச்சென்றார்.
*" கோவிந்தன் திருமணம் செய்யாமல் ஏன் இருக்கிறாய்? அப்பா தந்த சொத்து ஏழு தலைமுறைக்கு போதுமே. இனியாவது திருமணம் செய்துக்கப்பார்” என்றார் பெரியவர் மோகதாஸ்.
* பொம்புளய நம்பாதே என்டு அப்பாவே சொல்லியிருக்கார். பொம்பள எல்லாத்தையும் உருகிடுவாள்” என்றான் முட்டாள் கோவிந்தன்.
“என்னத்துக்காக இப்படி செல்றாய் கோவிந்தா” என கேட்டார் பெரியவர் மோகதாஸ்.
“சும்மா சொல்லல்ல. நான் படிக்கிறப்போ எட்டாம் வகுப்பு என்டு நினைக்கன். என்னோட ஒரு பொம்புள புள்ள படிச்சிச்சி. பெயர் மறந்து போச்சி. நல்ல கெட்டிக்காரி அவட கொப்பிய வாங்கி பார்த்து எழுதுவன்.
தந்தா. யாருக்கும் தெரியாம வாசிச்சி பார்த்தன். என்னோட அன்பாம் என்டு எழுதியிருந்தா. பொறவு காசு, கொப்பி, பேனை கேட்பா. வாங்கிக் கொடுப்பன். அதுக்குப்பொறகு எல்லா பாடத்தையும் அவதான் எழுதித்தருவா. அப்பாக்கிட்டச் சொன்னன். அப்பா சென்னாரு பொம்புளகள நம் பாதே. பழகாதே. உண்ட எல்லாத்தையும் எடுத்துக்குவாள் என்டு. நானும் பார்த்தன் அது சரிதான். பொம்புளகள்ள உறவு தேவல்ல என்டு படிக்கிறபோது எடுத்த முடிவு. கல்யாணமும் வேணா. கஷ்டமும் வேணா” என்றான் முட்டாள் கோவிந்தன்.
"படிக்கிற காலத்தில சரியில்ல. வாழ்றகாலத்தில துணை தேவ தம்பி. இனி உன்ட விருப்பம்’ என்று கூறி போய்விட்டார் பெரியவர் மோகதாஸ்.
கோவிந்தன் தனது குடிசையை நோக்கி வந்தான். கதவுக்குரிய பூட்டு திறக்கப்பட்டு பூட்டிலேயே திறப்பும் இருந்தது. திறப்பு எப்படி பூட்டுக்கு வந்தது என்று சிந்தித்துப் பார்த்தான் கோவிந்தன்.
சட்டைப்பையிலே வைத்து அடிக்கடி தடவிப் பார்க்கும் திறப்பு எப்படி பூட்டுக்கு வந்தது என்பதை கோவிந்தனால் ஊகித்துக் கொள்ள முடியவில்லை.
யாரோ குடிசைக்குள் போய் வந்திருக்கிறார் என்ற காலடி அடையாளம் தெரிந்தது. மலைத்து நின்றான் முட்டாள் கோவிந்தன்.
தென்னம் பிள்ளைகளுக்கு நீரூற்றிவிட்டு போகும் போது எடுத்துப் போக வேண்டும் என்று வைத்த திறப்பை எடுக்காமல் சென்றமை இப்போதுதான் அவனுக்கு ஞாபகத்துக்கு வந்தது.
கதவை திறந்து போனான். பூனைகள் மீன்குளம்பை உருசி பார்த்துக்கொண்டிருந்தன. காலில் உள்ள செருப்பை கழற்றி வீசினான். பூனைகள் ஓடிவிட்டன. செருப்பு கறிச்சட்டிக்குள் சங்கமித்தது. கறிச்சட்டியில் இருந்த மீன்கள் அனைத்தையும் ஏற்கனவே பூனைகள் இரண்டும் தின்று தீர்த்திருந்தன.
மீண்டும் கறி சமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது கோவிந்தனுக்கு.
கட்டில் அருகே இருந்த சிறுபெட்டியை காணாது ஏமாற்றம் அடைந்தான். சேர்த்து வைத்த பணம் பத்தாயிரம் பெட்டியோடு களவு போய்விட்டது. வயது வந்த ஆணுக்கு ஒரு துணை தேவை என்ற நிலையை உணர்ந்தாலும் முட்டாள்தனத்தால் பெண்களை வெறுக்கிறான் கோவிந்தன். அதனால் கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டேயிருப்பான்.
அறியாப்பருவம்
அடர்ந்து வளர்ந்த காடு. அந்த சிற்றுாரின் முடிவில் தொடங்கும் அக்காடு. ஐனுாறு ஏக்கர் விஸ்தீரணம் கொண்டது. சிறுவர்களும் வயோதிபர்களும் அங்கு செல்லப் பயப்படும் அளவிற்கு கொடிய மிருகங்கள் நிறைந்த காடு. மிருகங்களை எதிர்க்க சக்தியுள்ள வாலிபர்கள் வேட்டையாடவும் பொழுது போக்கவும் அங்கு செல்வார்கள்.
காட்டிற்கு அருகாமையில் உள்ள சிற்றுார் வாசிகள் இரவானதும் பயத்துடனே இருப்பார்கள். இரவில் யானைகள் வெளிவந்து பலரின் குடிசைகளை அடித்து நொறுக் கி தரைமட்டமாக்கி இருக்கின்றன. நுாற்றுக் கணக் கான தென் னை மரங்களை முறித்துப்போட்டிருக்கின்றன. பாம்புகள் தீண்டி பலபேர் இறந்திருக்கின்றார்கள். இதனால்தான் இரவானதும் பயம் பற்றிக் கொள்ளும்.
இளைஞர்கள் இருவர் மூவராக சென்று வேட்டையாடி வருவார்கள். துப்பாக்கி இல்லாவிட்டால் அவர்களுக்கு துணிவு வராது.
வேட்டையாட சென்றவர்கள் புலி, கரடி போன்ற கொடிய மிருகங்களின் துன்புறுத்தலுக்கு ஆளானதும்
உண்டு. முடியாத போது துப்பாக்கியின் உதவியோடு தீர்த்துக் கட்டிவிட்டு வருவார்கள்.
முயல், மான், மரை போன்றவற்றை வேட்டையாடிக் கொண்டும் வருவார்கள். இப்படியான மிருகங்களை காட்டிற்குச் சென்று காண வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள் - பத்துவயது சிறுவர்களான குகதாசனும் ரவீந்திரனும். அவர்களிருவரும் நெருங்கிய நண்பர்களும் கூட.
‘‘கொடிய மிருகங்களும் இருக்கின்றதே. தனியாக நாம் போக முடியாதே’ என்பதை மறந்து போக தீர்மானித்தார்கள். பெற்றோர்களுக்கு தெரியாமல் பாடசாலை விடுமுறையில் கிளம்பினார்கள்.
அவர்களது கிராம எல்லை முடிந்து காடு கண்
முன்னே தெரிந்தது. நடந்து சென்று காட்டின் ஆரம்ப பகுதியை அடைந்தார்கள்.
‘ரவீந்திரன் நாம பயப்படாம போவம். இரவிலதான் பயப்படனும்” என்றான் குகதாசன். காட்டிற்குள் புகுந்து
நடந்தார்கள். முப்பது யார் நடந்திருப்பார்கள்.
இனிமையான ஒலி கேட்டது. மரத்தின் மேலிருந்து ஒருநீலநிற பறவை ஒலியெழுப்பிக் கொண்டிருந்தது.
“ஒலி மட்டுமல்ல அந்த நீலப்பறவையும் என்ன அழகா இருக்கி’ என்றான் ரவீந்திரன்.
**ஆமான்டா ரவி’ என்று கூறிய குகதாசன் கல்லொன்றை எடுத்து வீசினான். அப்போதும் கீதமென ஒலியெழுப்பி பறந்து சென்றது.
மேலும் சிறிதுதுரம் சென்றார்கள். “அங்கு பாரடா வெள்ளை முயல் கூட்டம் வெள்ளை உடை உடுத்தி பாடசாலைக்கு பிள்ளைகள் போவது போலிருக்கு” என்றான் ரவீந்திரன்.
‘' வாடா நாம ஆளுக் கொரு முயல் பிடித்துப்போவம் வளர்க்கலாம். இல்லாட்டி சமைக்கலாம்” என்றான் குகதாசன்.
இருவரும் ஓடிச் சென்றார்கள் . முயல் பொந்துகளுக்குள் புகுந்து கொண்டன. ஏமாற்றத்துடன் நடையைத் தொடர்ந்தார்கள். ஒரு கிலோ மீட்டர் நடந்திருப்பார்கள்.
புலியொன்று சீறியவாறு அவர்களுக்கு முன் நின்றது. ‘ஐயோ அம்மா. அப்பா.” என்று அலறியவாறு பின்புறம் நகர்ந்தார்கள். புலி மேலும் பலமாக சீறியது.
‘ஐயோ. அம்மா. எங்களைக் காப்பாத்துங்க” என்ற சத்தம் வேட்டையாடச் சென்ற இருவருக்கு கேட்டது. அவர்கள் சத்தம் கேட்ட திசையை நோக்கி ஓடிவந்தார்கள்.
இரு சிறுவர்கள். அவர்களின் முன் ஒரு புலி. இனி தாமதித்தால் சிறுவர்களை பதம்பார்க்கும் என்று தெரிந்து ஒருவன் துப்பாக்கியை அழுத்தினான். புலி சுருண்டு வீழ்ந்தது. இல்லையென்றால் சிறுவர்கள் தப்பியிருக்கவே முடியாது.
“இந்த பயங்கர காட்டிற்கு துப்பாக்கி இல்லாம நாங்க வருவதற்கே பயப்படுவோம். ஏன் நீங்க வந்தீங்க? போய் விடுங்க. பெற்றோருக்கு தெரியாம இப்படியான இடத்திற்கு வராதீங்க. போங்க” என்றான் வேட்டையாட வந்த ஒருவன்.
ஒட்டமாக வீடு வந்து சேர்ந்தார்கள். வேட்டையாட வந்தவன் இல்லையென்றால் நாம் உயிருடன் இருக்கவே மாட்டோம் என்று நினைத்தவாறு கடவுளைப் போற்றிக் கொண்டார்கள். இனி காட்டுப்பக்கமே வருவதில்லை என முடிவெடுத்தார்கள்.
திருடனைப்பிடித்த மந்திரி
வசந்தபுரம் என்ற நாட்டை ‘இந்திரஜித் என்ற அரசன் ஆட்சி புரிந்தான். நீதி தவறாத அவனது ஆட்சியை நாட்டிலுள்ளோர் பாராட்டினார்கள்.
அரசன் இந்திரஜித் நீடுழிவாழ பிரார்த்தனை புரிந்தார்கள். அரசமாளிகை விலையுயர்ந்த மாணிக்கக் கற்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பெறுமதியான தங்க பாத்திரங்கள், ஆடம்பர பொருட்கள் நிறைய இருந்தன.
மூன்று மாதங்களாக அரண்மணையிலிருந்து பெறுமதியான பொருட்கள் சில மாயமாக மறையத் தொடங்கின. அரசன் இந்திரஜித்துக்கு இது பெரும் மர்மமாகவே இருந்தது. “அரண்மணைக்கு வருபவர்கள் யாரோதான் திருட வேண்டும். யார் திருடுகிறார்?’ என்று மூளையைப் போட்டு குழப்பினான் அரசன் இந்திரஜித். விடை தென்படவில்லை.
மந்திரி குமரேசனை அரண்மணைக்கு வருமாறு செய்தி அனுப்பினார். குமரேசன் புத்திசாதுரியம் உள்ளவன்.
‘அழைத்தீர்களா? அரசரே என்ன விஷயம்” என்றவாறு கைகட்டி நின்றார் மந்திரி குமரேசன்.
முன்னால் போடப்பட்டிருந்த நாற்காலியைக் காட்டி ''அமருங்கள்” என்று சொன்னார் அரசன் இந்திரஜித். மந்திரி குமரேசன் அமர்ந்து கொண்டார்.
''பெறுமதியான வைரக்கற்கள், விலையுயர்ந்த பொருட்கள் தினமும் களவாடப்படுகின்றன. எவ்வளவோ முயற்சித்தும் திருடனைப் பிடிக்க முடியவில்லை. திருடனைப் பிடிக்க ஒரு வழி செய்யுங்க” என்றார் அரசன் இந்திரஜித்.
''அரண்மணையில் இருக்கின்ற பொருட்கள் களவாடப்படுகின்றன என்றால் இங்கு வேலை செய்கின்ற யாரோ ஒருவர்தான் இதற்குக் காரணமாக இருக்க வேண்டும். இதை லேசாகப் பிடிக்கலாம்" என்று கூறி நிறுத்தினார் மந்திரி குமரேசன்.
மந்திரி என்னவழி செய்யப்போகின்றார் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்தார் அரசன் இந்திரஜித். மந்திரி வாய் திறந்தார்.
''இன்றைக்கு மாலை அனைத்து வேலை ஆட்களையும் மகாநாட்டு அறைக்கு வரச்சொல்லுங்கள். அரசரே நீங்களும் வாருங்கள். நானும் வருகிறேன்” என்று சொல்லி மந்திரி கடமையைக் கவனிக்கச் சென்று விட்டார்.
மந்திரி எப்படி திருடனைப் பிடிக்கப்போகின்றார் என்ற வினாக்குறிக்கு விடை தெரியாது இருந்தார் அரசன் இந்திரஜித்.
மாலையானது. எடுபிடி வேலையாட்கள், சமையற்காரர்கள், அரண்மணைப் பாதுகாப்பு ஊழியர்கள் என்று சகலரும் குழுமியிருந்தார்கள். இறுதியாக அரசனும் மந்திரியும் வந்து சேர்ந்தார்கள்.
மந்திரி குமரேசன் உரையாற்றத் தொடங்கினார்.
''அரண்மணையிருந்து பெறுமதியான பொருட்கள் - தினமும் களவாடப்படுகின்றன. வெளியிலிருந்து யாரும் வந்து திருடிச் செல்ல முடியாது. இங்கு பணி புரிபவர்களில் ஒருவர்தான் இந்த வேலையைச் செய்து வருகிறார். அவரை யார் என்று கண்டு பிடிக்காவிட்டால் உங்கள் எல்லோர் மீதும்தான் அரசருக்கு சந்தேகம். அந்த சந்தேகத்தை தீர்க்க திருடனை பிடிக்கப் போகின்றேன். நாளைக் காலை வேலைக்கு வந்தவுடன் எல்லோரும் இவ்விடத்திற்கு வரவேண்டும். அப்போது திருடனைக் காட்டித்தரும் மந்திரவாதியும் வருவார். இப்போது எல்லோரும் போய் கடமைகளைக் கவனியுங்கள்" என்றார் மந்திரி குமரேசன். எல்லோரும் கலைந்து போய் விட்டார்கள்.
“யார் மந்திரவாதி” அரசன் இந்திரஜித் கேட்டார்.
‘எல்லாம் நான்தான் இருந்து நாளைக்குப் பாருங்க. புத்தியுள்ள மந்திரியாக இல்லாவிட்டால் உங்களுக்கு பிரச்சினைகளை தந்தவண்ணம் இருப்பார்கள்.” என்றான் மந்திரி குமரேசன்.
அடுத்தநாள் காலை. அரண்மணை ஊழியர்கள் அனைவரும் மகாநாட்டு அறையில் குழுமியிருந்தார்கள். எல்லோரும் வந்திருப்பதைப் போன்றே தெரிந்தார்கள். பெயர் பதிவு இடாப்பு கொண்டுவரப்பட்டது. வந்திருந்த ஊழியர்கள் அனைவரும் கையெழுத்திட்டிருந்தார்கள். காவலாளி ‘பொண்ணுச்சாமி” மாத்திரம் வரவில்லை மந்திரி பேசத் தொடங்கினார்.
‘மதிப்பிற்குரிய அரண்மனை ஊழியர்களே, நேர்மை தவறாத அரசரே, என் அன்பின் பணிவு. மந்திரவாதி வருவார். திருடன் பிடிபடுவார் என்று சொன்னேன் அல்லவா! திருட்டுப் பிடிபட்டுவிடும் என்று பயந்து காவற்காரன் “பொண்ணுச்சாமி வரவில்லை. இங்கு மந்திரவாதி இல்லாமலே பொண்ணுச்சாமி திருடன் என்பது தெரியவந்துள்ளது. இன்னும் சில நிமிடங்களில் அவரது வீட்டுக் குப் போய் திருடப்பட்ட அனைத்துப் பொருட்களையும் எடுத்து வரவிருக்கின்றோம். அது மாத்திரமல்ல நன்றிகெட்ட திருடன் பொண்ணுச்சாமியை ஆயுட்கால சிறையில் போட இருக்கின்றோம். நீங்கள் எல்லோரும் போய் உங்கள் வேலையைக் கவனியுங்கள்.” என்றான் மந்திரி குமரேசன்.
அரசனுக்கு பூரண திருப்தி ஏற்படவில்லை. குதிரை வண்டியில் அரசனையும் ஏற்றிக் கொண்டு புறப்பட்டான் மந்திரி. பொண்ணுச்சாமியின் வீட்டருகே நிறுத்தப்பட்டது குதிரை வண்டி.
போர்ப்படை வீரர்களுடன் அவனது வீட்டுக்குள் புகுந்தார்கள். சல்லடை போட்டுத் தேடினார்கள். அனைத்துப் பொருட்களும் படுக்கையறைக்குள் இருந்தன. அவற்றை எடுத்துக் கொண்டு பொண்ணுச்சாமியை மற்றக் குதிரை வண்டியில் ஏற்றினார்கள். குதிரை வண்டிகள் புழுதி கிளம்ப பறந்தன.
இப்போதுதான் அரசன் மந்திரியை மனப்பூர்வமாக பாராட்டினார். -
பொண்ணுச் சாமிக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. மந்திரி குமரேசனுக்கு தங்கக்கட்டிகளை
பரிசாக வழங்கினான் அரசன் இந்திரஜித்.
கூடில்லா குருவிகள்
சிட்டுக்குருவி ஒன்று தனது சோடி இழந்து மாதம் ஒன்று கடந்திருந்தது. அதன் நெஞ்சில் கவலை நிறைந்திருந்தது. சோடி இழந்திருந்த பெண்குருவியின் துன்பத்துக்கு சொல்லவும் வேண்டுமா?
ஆண் குருவியோடு தங்கிய கூடு சீரழிந்து காணப்பட்டது. அதனை திருத்த வேண்டும். சீராக்க வேண்டும் என்ற விருப்பில்லாது தங்கியிருந்தது பெண்குருவி.
பெண்குருவிக்கு ஆண்குருவி துணை கிடைத்து மூன்று மாதங்களில் அதனை பிரிய வேண்டி வந்தது பெண்குருவிக்கு. விடிந்து பெண்குருவி விழித்துப் பார்க்கும் போது ஆண்குருவி செத்துக்கிடந்தது. பதறிப்போய் சொண்டால் துருவிப் பார்த்தது. காயம் ஏதும் இருக்கவில்லை. உயிர் பிரிந்திருந்தது.
கத்திக் கத்தி அதன் தொண்டைக்குழி நீர் வற்றிப்போனது. நோவெடுத்தது. மாலைவரையும் பெண்குருவி எதனையும் தின் னவில் லை. அதற்கு பசியும் இருக்கவில் லை. தாகம் எடுத்தது.
குளக்கரையோரத்துக்குச் சென்று நீர் அருந்திவிட்டு வருவதற்கிடையில் செத்த ஆண்குருவியை பருந்து கெளவிக்கொண்டு பறந்தது.
எந்தக் குருவி செத்தாலும் இதுதானே நிலை என்று தெரிந்த பெண்குருவி மெளனமாகியது.
ஒட்டைக் கூட்டிற்குள் சிறகிழந்த பறவையாகி இருந்தது பெண்குருவி. வெயில் அதற்குள் விழுந்து சிதறும். மழை நீர் ஒட்டப்போட்டி நடத்தும். எல்லாம் பெண்குருவிக்கு பழகிப்போனது. ஆனால் ஆண்குருவியை இழந்த துயர் மட்டும் மாறாமல் இருந்தது.
நேற்று வீசிய பலமான காற்று அதன் கூட்டை எங்கு கொண்டு சென்றதோ பெண் குருவிக்கு தெரியவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பார்த்துவிட்டு மரமே கூடுதான் என்று காலம் கடத்தியது. துணையைப் பிரிந்து இரண்டு மாதங்கள் கடந்தமை இரண்டு வருடங்கள் போல் தோன்றியது பெண்குருவிக்கு இன்னும் நிறையக் குருவிகள் கூடுகட்டாமலே மரக்கிளைகளுக்குள் காலம் கடத்தியது.
“எத்தனையோ குருவிகள் கூடே இல்லாமல் வாழ்கின்றன. துணை இல்லாவிட்டால் கூடு எதற்கு? எந்த மரத்தில் இருந்தாலும் ஒன்று. எந்தக்கிளையில் இருந்தாலும் ஒன்று’ என்று எண்ணியது பெண்குருவி.
துயர் வருகின்ற போதுதான் இந்த நிலையும் வருகின்றது. இல்லையானால் இது எனது இருப்பிடம். எனது கூடு என்று வைராக்கியத்தோடு உரிமையோடு நினைக்கும் குருவிகள்.
தனிமையில் இருந்த பெண்குருவிக்கு பக்கத்தில் இன்னொரு பெண்குருவி வந்தமர்ந்தது.
‘என்ன தோழி உன் கூட்டக்காணோம்?” என்று கேட்டது.
‘ காற்றுக் கொண்டு பெய்த்து. இனி கூடு என்னத்துக்கு? எங்கென்டானே எந்த மரக்கிளையில் என்டானே இருந்து காலத்த போக்கவேண்டியதுதான்’ என்று பதில் உரைத்தது ஆண்துணை இழந்த பெண் சிட்டுக்குருவி.
“நான் அப்படித்தான் இருக்கன். எனக்கென்டு ஒரு ஆண்துணை வந்த பொறகு பார்ப்பம்” என்றது வந்த பெண்குருவி.
“ஒரு துணையை தேடவேண்டியதுதானே. சும்மா இருந்தா துணைவந்து சேரப்போவது இல்ல.” என்றது துணை இழந்த பெண்குருவி.
* பொருத்தமான துணைவந்து சேரணுமே! பொருத்தமில்லாம சேர்ந்தா பொறகு வருத்தப்படனும். அப்படி வருத்தப்படேலா. பொருத்தமான துணைவரும் வரையும் பொறுத்திருக்கிறேன். நீ இன்னொரு துணையை தேடி எடுத்து வாழலாமே” என்றது துணை தேடும் பெண்குருவி.
''இனி எனக்கு அந்த எண்ணம் இல்லே. நான் தேடி எடுத்த துணை என்னோடு உயிரை வச்சி நடந்திச்சு. நான் இல்லாம ஒரு நிமிசமும் அதால இருக்க முடியாம போயிச்சி. அப்படிப்பட்ட அன்புத்துணையை மறந்து இன்னொரு துணை தேடி என்னால வாழ முடியா” என்று கூறும் போது துணை இழந்த பெண்குருவியின் கண்களில் இருந்து நீர் பெருக்கெடுத்தது.
அன்பின் ஆழத்தை அறிந்த மற்றைய பெண்குருவி துக்கமடைந்தது.
''எல்லாம் அவரவர் விதி. இருக்கிற காலத்த எப்படியோ கடத்தவேண்டியதுதான். கவலைப்படாதீங்க என்று தேற்றியது பெண்குருவி. துணை இழந்த குருவிக்கு துயர் ஏற்படாமலா போகும்?
துணை இழந்த பெண் குருவி கூட்டையும் இழந்திருந்தது. கூடிழந்த பெண்குருவிக்கு மேலும் பல கூடில்லாத பெண்குருவிகள் துணையாகக் கிடைத்தன. நாளை ஒருநாள் துணை கிடைக்காத பெண்குருவிகள் துணைகிடைத்ததும் போய்விடும். துணை இழந்தவர்கள் தேடவேமாட்டார்கள்.
சிட்டுக்குருவிகள் ஆனாலும் அதன் கொள்கை மனிதனிலும் பார்க்க ஒருபடி மேல்தான்! மனிதன் இன்பத்துக்காக இழக்கக் கூடாதவற்றை எல்லாம் இழக்கின்றானே!
திட்டங்களும் வட்டங்களும்
முடிவே காணமுடியாத பெரும் காடு. கணக்கற்ற கொடிய மிருகங்கள் நிறைந்துவாழும் காடு. அந்தக்காட்டில் கொடிய மிருகங்கள் ஒருமகாநாட்டை நடத்த திட்டமிட்டன.
யானை, கரடி, புலி, சிங்கம் என்பன அங்கத்துவம் பெற்றிருந்தன. இந்த மிருகங்கள் ஒவ்வொரு தலைவரை தெரிவு செய்திருந்தன. மகாநாட்டுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் மாத்திரமே செல்வார்கள். தலைவர்கள் தீர்மானிப்பதை மற்றவர்கள் ஏற்று நடக்க வேண்டும்.
யானை தும்பிக்கையை நீட்டி விசிலடித்துவிட்டு பேசத் தொடங்கியது. கரடி, புலி, சிங்கம் என்பன கேட்டுக் கொண்டு இருந்தன.
''நாம் நான்கு பக்கமும் சிதறித்திரிவதாலும் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பதாலுமே முயல், மான் போன்ற மிருகங்களை பிடித்து சாப்பிட முடியாமல் போகின்றது. அவைகள் நாம் வரும் நேரமறிந்து பொந்துகளுக்குள் புகுந்துவிடுகின்றன” என்று யானை
கூறிக்கொண்டிருக்கும் போது புலி குறுக்கிட்டு
''யானை அண்ணன் சொல்வது சரிதான். நேற்று கூட சிங்கம் ஒன்று முயலை துரத்தியது. துரத்திப் பிடிக்கமுடியாத சிங்கம் துரத்தியதுதான் மிச்சம். முயல் ஓடி தப்பிற்று. நேற்று முழுக்க முயல் ஒன்றுகூட வெளியே வரல்ல. சிங்கம் பார்த்த மடத்தனமான வேலையினால் எல்லோருக்கும் உணவு கஷ்டமாகத்தான் இருந்திச்சி” என்றது.
சிங்கம் கர்ஜித்துவிட்டு பேச முனைந்தது.
‘இனி என்ர ஆக்கள நான் பார்த்துக்கிறன். நீங்களும் உங்கட உங்கட ஆக்கள பார்த்துக்கங்க” சிங்கம் கூறிவிட்டு தரையில் சாய்ந்தது.
கரடி பேச தயாரானது.
‘முடிந்தவரை ஒழிந்திருந்து வேட்டையாட பழகவேண்டும். ஒரு மிருகத்துக்கு தெரியாம மற்ற மிருகத்த வேட்டையாடி உண்ண பழக வேண்டும். இங்கு நாம் சில தீர்மானங்களை எடுக்க வேண்டும். நமது நடமாட்டம் சிறிய மிருகங்களுக்கு தெரியாம இருக்க வேண்டும். துரத்திப்பிடிப்பதை விட நம் அருகே வரும் மிருகங்களை லபக் என்று பிடித்து சாப்பிட வேண்டும்” என்று கரடி கூறிவிட்டு வாய்மூடியது.
யானை “இங்கே சொன்ன முறைகளை கவனிச்சு நடக்க வேண்டும்” என்றுகூறி கூட்டத்தை நிறைவு செய்து கலைந்தன.
இவர்களது உரையாடலை பக்கத்தில் இருந்த புற்றில் நுழைந்திருந்த முயல் கேட்டுக் கொண்டிருந்தது. அவர்கள் கலைந்து போனபின் தனது சுற்றத்தார், அயலவர் எல்லோரிடமும் முயல் சென்று விளக்கிக் கூறியது.
முயல்களுக்கு பயம் பீடித்தது. என்றாலும் இனி பகலில் கண்டபடி திரிவதில்லை என்ற தீர்மானத்தை எடுத்தது. இரவில் இருட்டில் இரைதேடுவதென்ற முடிவை முயலார்கள் எடுத்துக் கொண்டார்கள். யானை, புலி, கரடி, சிங்கம் போன்ற கொடிய மிருகங்கள் மேலும் திண்டாட வேண்டியதுதான்.
கந்தையாப் போடியாரின் செம்மண்புரி காணிக்குள் மாங்காய் குலை குலையாக காய்த்து தொங்கியது. அந்த தெருவால் போவோர் வருவோரின் கண்களில் இதுவே காட்சியாகத் தெரியும்.
சிறுவர்களுக்கு மாங்காய் என்றால் உயிர்தானே! எத்தனையோ சிறுவர்கள் கண்ணை மூக்கைப் பார்த்து கந்தையாப் போடியாரின் மாமரப் பக்கம் யாரும் இல்லாத வேளையில் மாங்காய் பறித்துச் செல்வார்கள்.
அந்த தெருவால் குமரன் வந்திருக்கிறான். அவனது கண்ணிலும் மாங்காய் பட்டது. குமரனுக்கு பத்து வயதிருக்கும். ஆண்டு ஐந்து கற்கிறான். சிறிதுநேரம் தெருவில் தாமதித்தான். தன்னோடு கற்கும் ரவீந்திரனும் வந்து கொண்டிருந்தான்.
‘எப்படியோ. ரவீந்தினையும் தட்டி எடுத்துக்கிட்டா ஆளுக்கு ஆறேழு மாங்காய் பிச்சுக்குப் போயிடலாம். கிட்ட வரட்டும் நாக்கில் நீர் ஊற சொல்ல வேண்டும்.” என்று நினைத்தான் குமரன்.
“என்னகுமரா இவடத்த அசையாம நிக்காய்?” என்று ரவீந்திரன் கேட்டான்.
‘'நீ இதெல்லாம் கவனிக்கமாட்டாய். உனக்கு எந்த நேரமும் படிப்பு படிப்பு படிப்புத்தான். முத்தல் மாங்காய் சரியான ருசியா, போதுமான புளியா இருக்கும் தானே?” என்று கேட்டான் குமரன்.
“அதுக்கென்ன இப்போ..?’ என்று ரவீந்திரன் கேட்டான்.
‘மேல பாரடா பார். மாங்காய் குலைகளா? தேங்காய் குலைகளா? கொஞ்சம் பிச்சுக்கு போனா வீட்ட போய் உப்புபோட்டு தின்னலாம்” என்றான் மீண்டும் குமரன். *,,
மாமரத்தை நோக்கிய ரவீந்திரன் மலைத்துப் போனான்.
“இலையைவிட காய்கள்தான் அதிகம். நல்ல பெரிய சைஸ்” என்றான் ரவீந்திரன்.
“அதைப்பார்த்துத்தான் நான் மலைச்சு நிக்கன். ஒருவரையும் வெளியே காணல்ல. மாங்காய்தானே கொஞ்சம் பிச்சுக்குப்போவோம் வாவன்’ என்று குமரன் கெஞ்சினான்.
அடிக்குமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்களே. அதுபோல நாக்கில் நீர் ஊறியது ரவீந்திரனுக்கும். பறித்துக் கொண்டு போனால் என்ன? இது சொத்தா? பொருளா? எனும் நிலைக்கு வந்தான் ரவீந்திரன்.
“ஏன் ரவி சிந்திக்காய்? வா உள்ளே போவம்” என்று கூறி முன்னுக்கு காலடி வைத்தான் குமரன்.
தயங்கித் தயங்கி பின்னால் சென்றான் ரவீந்திரன். குமரன் பயிற்சி எடுத்தவன்போல விர்விர்ரென மாமரத்தில் ஏறினான். இரண்டு குலைகளை முறித்துவிட்டான். பொல பொலவென மாங்காய் நிலத்தில் சிதறி விழுந்தன.
ரவீந்திரன் அவசர அவரசமாக அதனைப் பொறுக்கி பொறுக்கி எடுத்தான். குமரன் மரத்தில் இருந்து இறங்கி வந்தான். ஆளுக்கு அரைவாசியாக பங்கிட்டுக் கொண்டார்கள். தெருவுக்கு வருவதற்கு நடையைத் தொடரும்போது அவர்களுக்கு முன்னால் தடியோடு நின்றார் கந்தையாப் போடியார்.
‘வாங்கடா வாங்க. என்ர மாமரத்தில காய்க்கிற காய்கள்தானா உங்கட கண்களுக்கு தெரியிற? இன்டைக்குத்தான் வசமா மாட்டி இருக்கீங்க. வாங்கடா” என்று கூறி கையில் இருந்த தடியை சுழற்றினார் கந்தையாப் போடியார். சேட் அணியாததால் தொந்தி வயிறு அவரை ஒரு முரடன்போல காட்டியது.
‘‘கெட்டதனம் துளியும் இல்லாமல் இருந்த நான் குமரனின் பேச்சைக் கேட்டு ஏமாந்திட்டேனே! சிறிசோ. பெரிசோ. திருட்டுத்தானே’ என்று நினைத்து வெட்கமுற்றான் ரவீந்திரன்.
* இதை பெற்றோர் அறிந்தால் என்நிலை என்னவாகும்” என்று நினைத்து பீதியடைந்தான் ரவீந்திரன். இருவரும் மெல்ல மெல்ல நடந்தார்கள். இருவரையும் கெட்டியாக ஒரு கையால் பிடித்துக் கொண்டார் கந்தையா போடியார். மறு கையால் வெளிக்கதவை இழுத்து மூடினார். கீழே போட்ட தடியை மீண்டும் தூக்கினார்.
‘சொல்லுங்கடா நீங்க யார்? யார்ர மகன்? என்று கூறி ஒவ்வொருவரின் முதுகிலும் ஒவ்வொரு சராசரியான தட்டுத் தட்டினார். குமரனும் ரவீந்திரனும் கையில் இருந்த மாங்காய் குலைகளை கீழே போட்டுவிட்டு இரு கைகளாலும் முதுகை தடவினார்கள்.
“குமரனின் குறுக்குவழிக்கு இணங்கியது எவ்வளவு தவறாகப் போய்விட்டது. வகுப்பில் ஆசிரியரும் என்மேல் நல்ல பெயர் வைத்திருக்கிறார். இதைக் கேள்விப்பட்டால் நல்ல பெயரும் மழுங்கிப்போகும். அப்பா முதுகுத்தோலை உரிப்பார்’ என பலவாறு எண்ணினான் ரவீந்திரன்.
“டேய் சொல்லுங்கடா? யார்ர மகன்’ என்று கந்தையா போடியார் சிங்கம்போல் கர்ஜித்தார்.
“வேலுச்சாமியின் மகன் குமரன்” என்றான் குமரன்.
*கதிரேசனின் மகன் ரவீந்திரன்’ என்றான் ரவீந்திரன்.
“வேலுச்சாமி என்றால் பொண்டாட்டியைச் சவூதிக்கு அனுப்பிற்று அவனும் எவளோடயோ சுத்தித் திரியிறான். பொண்டாட்டி சீரழிஞ்சா என்ன? புள்ள சீரழிஞ்சா என்ன? மாச மாசம் வாற பணத்தில சுதி பண்ணுறான். கதிரேசன் மிச்சம் நல்லவன். கதிரேசனின் புள்ள ரவீந்திரன் மிக நல்லவனென்டு மூர்த்தி மாஸ்டரும் எனக்கிட்ட சொல்லி இருக்கிறார். ரவீந்திரன் இப்படியானவனோடு திரியாதே. உன்னையும் கெடுத்துப் போடுவான்’ என்று நிறுத்தினார் கந்தையா போடியார்.
‘ஐயா. நான் இவனோட சுத்தல்ல. இவனோட நான் சேர்றதேயில்ல. வழியால போகக்க கூப்பிட்டான். கேட்டுப் பாருங்க” என்றான் ரவீந்திரன்.
தலை கவிழ்த்தவாறு நின்றான் குமரன்.
‘தான் கெட்டதுமில்லாம மத்தவங்களையும் கெடவைக் கயா? உன் அப்பண் இதெல்லாம் பாக்கமாட்டான். இன்டைக்கு உன்ன சம்பல்போட்டுத்தான் அனுப்புவன். மகன் ரவீந்திரா. நீ போ. உன் அப்பனுக்கிட்ட சொன்னா உன்ன அடிச்சு நொறுக்கிப்போடுவான்.
அதனாலே நான் சொல்லல்ல. இப்படியான வங்களோட இனி கனவிலும் சேராதே. நீ போ” என்று கூறி ரவீந்திரனை அனுப்பி விட்டார் கந்தையா போடியார்.
“தீயவர்களோடு கொஞ்ச நேரம் சேர்ந்தாலும் தீமைதான். நல்லவர்கள் கிடைக்காவிட்டால் தனித்திரு என்பதும் தனியா இருப்பதைவிட நல்லவர்களின் நட்பு மேல் என்பதும் உண்மைதான்’ என்பதை தூயவனான சிறுவன் ரவீந்திரனும் உணர்ந்து கொண்டான்.
குமரனின் முதுகிலும் கையிலும் செம்மையாகக் கொடுத்து பழுக்கவைத்து வீட்டுக்கு அனுப்பினார் கந்தையா போடியார். இனி அவன் மாங்காய் பறிப்பான் என்பது சந்தேகம்தான்.
முகைதீன்பாய்
கருமுகில் காட்டில் முகைதீன்பாய் என்ற மந்திரவாதி இருப்பதாக பலராலும் பேசப்பட்டுவந்தது. அவர் அரிய பல புதுமைகள் செய்வதாகவும் கதை அடிபட்டன.
அவர் எங்கிருந்து வந்தார் என்பது எவருக்கும் புரியாத புதிராக இருந்தது. தமிழ், ஹிந்து, உருது ஆகிய மொழிகள் சரளமாக பேசுகின்றார்.
ஒருநாள் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான் றளின். புதிதாக குடிசையொன்று முளைத்திருப்பதை கண்டான். உள்ளே சென்று பார்த்தான். அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவர் தியானத்தில் இருந்து மந்திரங்கள் உச்சரித்துக் கொண்டிருந்தார். றஸினைத் திரும்பியும் பார்க்கவில்லை.
‘என்ன மகன்? இவன் யாரென்றா பார்க்கிறாய்? நானும் உன்னைப்போல ஆண்டவனின் பிள்ளைதான் மகன். எனக்கு கருணையும் அல்லாஹற்வின் தயவும்தான் தேவை. இருபத்தி நான்கு மணிநேரமும் அவனை துதித்து வணங்கிக்கொண்டிருப்பதுதான் என் வேலை. தனிமைதான் என்னுயிர்” என்றார் முகைதீன்பாய்.
“பெரியவரே உங்க ஊர் எது?” வேட்டையாட வந்த றஸின் கேட்டான்.
“இந்த ஊரெல்லாம் என்ர சொந்த ஊர்தான். இறுதியாக நாம் வாழப்போகின்ற மறுமைதான் நமக்கு நிரந்தர ஊர். உங்களுரில் இப்போ மழை இல்லாம பயிர் பச்சை காஞ்சிருக்குமே! அங்குள்ள முஸ்லிம்கள் அல்லாஹ்வை வணங்குகிற குறைவு. இதுதான் நாட்டின் வறுமைக்குக் காரணம். தம்பி நீ நேராக மேற்குப் பக்கம் போ. போகும்போது இடது பக்கம் பார்த்துப் போ. இரண்டு மான்கள் நிற்கும். வேட்டையாடிக்கொண்டு போ. ஒன்றை ஏழைகளுக்கு தானம் செய். தவறினா இனி உன்னால் மிருகங்களை வேட்டையாட முடியாம போகும்” என்றார் மந்திரவாதி முகைதீன்பாய்.
அவர் சொன்ன பிரகாரம் மேற்குத்திசை நோக்கி சென்றான் றஸின் இடது பக்கம் பார்வையைச் செலுத்திய வாறு சென்றான். சிறிது தூரம்தான் சென்றிருப்பான். பெருத்த இரு மான்கள் நின்றன. வேட்டையாடி வீடு சென்றான். இரண்டையுமே விற்று பணம் பெற்றான். மந்திரவாதி சொன்னதுபோல் ஒன்றை ஏழைகளுக்குத் தானம் செய்யவில்லை.
முகைதீன்பாயின் அருமை பெருமை உணர்ந்த மக்கள் அவனது (35 (9 60) di 60) u நோக்கி படையெடுத்தார்கள.
பலருக்கு சொல்கின்ற விடயங்கள் அவ்விதமே நடக்கின்றது. ‘என்ன புதுமையான மனிதர்’ என்று முகைதீன்பாயை போற்ற துணிந்தார்கள்.
நாட்கள், வாரங்கள், மாதங்கள் கடந்தன. இரண்டு மாதங்கள் கடந்தும் றஸினால் எந்த மிருகத்தையும் வேட்டையாட முடியவில்லை.
“ஏழைகளுக்கு தானம் செய்ய மறுத்ததுதான் காரணம்” என உணர்ந்து கொண்டான். மந்திரவாதி முகைதீன்பாயிடம் சென்று கேட்கவும் பயம்.
ஒருநாள் இரவு றஸினின் கனவில் முகைதீன்பாய் தோன்றி "மகனே நான் சொன்ன பிரகாரம் வேட்டையாடிய
நீ சொன்னதைச் செய்யவில்லையே! இனி உனக்கு மிருகங்கள் அகப்படாது. மிருகங்களை மீண்டும் வேட்டையாட விரும்பினா ஒரு மானை விற்றுப்பெற்ற நாலாயிரம் ரூபாவையும் ஏழைகளுக்கு தானம் செய்” என்றார்.
விடிந்ததும் இரவுகண்ட கனவை நினைத்துப் பார்த்து அதன்படி நடக்க ஆரம்பித்தார்.
‘* கருமி றஸின் ஏழைகளுக்கு உணவுப் பொருட்கள் தானம் செய்கிறான். பார்த்தியா? உலகம் திருந்திவிட்டதுடா” என்று பலரும் பேசிக் கொண்டார்கள்.
யாரைப்பற்றியும் றஸினுக்கு கவலை இல்லை. மீண்டும் வேட்டையாடச் சென்றான். அவனுக்கு மான், மரை, முயல் கிடைத்துக்கொண்டே இருந்தன. கிடைப்பவற்றில் ஒரு பகுதியை தொடர்ந்து தானம் செய்து கொண்டே இருந்தான்.
முகைதீன்பாயின் அருமை, பெருமை ஊரெங்கும் பரவத்தொடங்கியது. நல்லவர்களுக்கு உதவிக் கொண்டே வந்தார். தீயவர்களுக்கு, திருத்த முடியாத தீயவர்களுக்கு ஒரு உதவியும் புரியமாட்டார். உதவி புரியுமாறு வற்புறுத்தியவர்களுக்கு விபரீத விளைவுகள் ஏற்பட்ட துணி டு. இதை அறிந்து யாரும் வற்புறுத்துவதில்லை. சிலருக்கு உதவுவார். மார்க்கக் கடமைகளை செய்யுமாறு வற்புறுத்துவார். மற்றவர்களுக்கு
விபரீதங்கள் ஏற்படும். அதனால் முகைதீன்பாய் சொல்லுபவற்றை கட்டாயம் செய்வார்கள்.
இப்படித்தான் ஒருவன் தனது மகனை அழைத்துக் கொண்டு முகைதீன்பாயிடம் சென்றார்.
“பெரியவரே, இவன் படிப்பில் முட்டாளாக இருக்கின்றான். படிக்கக்கூடியவனாக மாற்றித்தாருங்கள்” என்று கேட்டார்.
"மகனே. உங்க குடும்பத்து பாவப்பட்டியல் நீளமாக இருக்கு. உனது தந்தை பாவங்களை விதைத்துவிட்டுச் சென்றிருக்கின்றார். கொலை, கற்பழிப்பு, நிறையச் செய்திருக்கிறார். இவர் செய்த பாவங்கள் குடும்பத்து உயர்வைத் தடுக்கின்றது. தொடர்ந்து ஆறு மாதங்கள் அன்னதானங்கள் செய்து வாருங்கள். அல்லாஹற்விடம் மன்றாடி பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் குடும்பத்தவர் எவரும் அல்லாஹவை வணங்காமல் இருக்கின்றார்கள். எல்லோரும் அல்லாஹ்வை ஐவேளை வணங்க வேண்டும்.” என்று கூறினார் முகைதீன்பாய்.
‘அப்படிச் செய்தா என் பிள்ளை படிப்பில் கெட்டிக்காரனாக வருவானா?” என்று கேட்டார் பிள்ளையின் தந்தை.
‘ஆமா மகனே. உங்கள் குடும்பத்தின் தொல்லையும் நீங்கும்” என்றார் முகைதீன்பாய்.
அவர் சொன்னதுபோல் செய்து வந்தார்கள். அல்லாஹற்வை வணங்கினார்கள். பிரார்த்தித்தார்கள். அன்னதானம் செய்தார்கள். குடும்பத்துப் பாவங்கள் மன்னிக்கப்பட்டு பிள்ளைகளும் படிப்பில் கெட்டிக் காரர்களாக வந்தார்கள்.
நன்றி மறக்கலாமோ !
அந்த வீட்டிற்குரிய நாய் மெளனமாகத்தான் நின்றது. பகல் உணவிற்குரிய நேரம் வந்தும் எஜமானியம்மா எதுவும் அதற்கு கொடுக்கவில்லை. எஜமான் இருந்திருந்தால் வேளைக்கு உணவு கொடுப்பான். எஜமானி பொல்லாதவள் என்பதை தெரிந்து வாய் திறக்காமல் நின்றது.
“முன்னுக்கு எஜமானி வந்தாள் என்றால் வாலை ஆட்டியாவது கெளரவிக்கலாம்” என்று நினைத்தது அந்நாய்.
இதற்கிடையில் அடுத்த வீட்டுக்காரியின் கறுத்தப்
பூனை முன்னுக்கு வந்து நின்றது. நாய் பார்த்த பார்வை ‘முடிந்தால் வா பார்க்கலாம்” என்பது போல் இருந்தது.
பூனை அசையாமல் முன்னுக்கு நின்றது. நாய் பின்புறம் சென்றிருந்த வேளைகளில் குசினிக்குள் புகுந்து வயிறு புடைக்க பதம் பார்த்து விட்டு சென்றிருக்கிறது. நாயின் கண்ணில் பட்டிருந்தால் கடித்து குதறி இருக்கும்.
* உன்ட கள்ளத்தனம் எனக்கு தெரியா என்டா நெனைச்சிற்றாய்? உனக்கு ஏலும் என்டா வாடா பார்ப்பம்?” என்றது நாய்.
“ஏய் மரியாதையா பேசு காணும்” என்றது.பூனை.
'கள்ளனுக்கு வேறு கெளரவமா? தின்னுகின்ற வீட்டிலேயே கள்ளப்புத்தியை காட்டுகின்ற உனக்கு மரியாதையா? என்னைப்பாரடா! எங்கள் இனமே வீட்டுக்குள்ளகூட போறதில்ல. எஜமானி தாறத்தோட இருக்கிறம்” என்றது நாய்.
‘உனக்கிட்ட அதுக்கெல்லாம் திறமை இல்லை” என்றது பூனை.
“கீழ்த்தனமான வேலை பார்க்கிறாய். அதுக்குள்ள திறமை வேறா?’ நாய் விடாமல் கேட்டது.
“திறமை இல்லாத நீ இப்படியே நின்டு கொள்ளு” என்றது பூனை.
‘உனக்கு தைரியம் இருந்தா ஒரு அடி முன்னுக்கு வா பார்ப்பம்” என்றது நாய்.
வழியில் நின்ற பூனை ஒரு எட்டு வைத்து முன்னுக்கு வந்தது. நாய் உறுமத் தொடங்கியது.
‘நாய் சத்தம் போடுகின்றதே! என்னவென்று பார்ப்பம்’ என நினைத்து எஜமானி வந்தாள்.
களவாக வந்து உணவுகளை சாப்பிட்டுவிட்டு ஓடுகின்ற கறுத்தப்பூனை நிற்பதை கண்டாள். என்ன நடக்கப்போகின்றது என்பதை மறைந்திருந்து பார்த்தாள் எஜமானி.
ஓரடி பூனை முன்னுக்கு வந்ததும் நாய் எழுந்து நின்றது. பூனை அசையவில்லை.
இது நான் இருக்கும் வீடு. உனக்கு இங்கு என்ன வேலை? இனி உன் மூஞ்சை கண்டேன். இப்படித்தான் நடப்பேன்” என்று கூறியவாறு நாய் விரைந்து துரத்தியது. பூனை ஓடிக்கொண்டே இருந்தது. நாய் விடவில்லை.பூனையின் வால் கூட நாயின் வாய்க்கு எட்டவில்லை. மதிலுக்கு மேலால் ஏறி அடுத்த வீட்டுக்குள் நுழைந்து விட்டது பூனை. நாய் திரும்பி வந்து விட்டது.
இதனை பார்த்துக் கொண்டிருந்த எஜமானிக்கு நாய் மீது பற்று ஏற்பட தொடங்கியது.
அதற்கு பகல் உணவுகூட வழங்கவில்லையே என்று உணர்ந்து குசினிக்குள் சென்றாள். வயிறாற சாப்பிட இறைச்சித்துண்டுகளும் சோறும் போட்டு நாய்க்கு வைத்தாள். வாலை ஆட்டிக்கொண்டே சாப்பிட தொடங்கியது.
எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு ஓடினார்கள். ஐந்தாம் ஆண்டுக்குள் அடுத்த வகுப்பு மாணவர்களும் நிறைந்துவிட்டார்கள். அந்த இரு வகுப்பிற்குள்ளும் ஆசிரியர் எவரும் இருக்கவில்லை.
ஆசிரியர்கள் தேனிர் வேளை’ என்று கூடிக்கதைத்துக் கொண்டிருந்தார்கள்.
எல்லா மாணவர்களும் கூடி ஒரு மாணவனுக்கு அடி அடி என அடித்துக் கொண்டிருந்தார்கள். இனிப்பை ஈ மொய்த்தமாதிரி இருந்தது. அடிவாங்கும் மாணவன் யார் என்பது அந்த வகுப்பு மாணவனான சதாத்துக்கு தெரியாது. காரணம் வகுப்பிற்குள் ஆசிரியர் இல்லை என்பதால் அவன் சும்மா இருக்கவில்லை. புத்தகம் படித்துக் கொண்டிருந்தான்.
சத்தம் கேட்டுத்தான் நிமிர்ந்தான். எல்லா மாணவர்களும் கூடி அடிப்பது யாருக்கென்று தெரியாமல் இருந்தது.
இதற்கிடையில் ஆசிரியர் ஒருவர் வந்து
‘டேய் என்ன செய்றீங்க? என்றதும் மாணவர்கள் அவர்களது இடங்களில் போய் அமர்ந்து கொண்டார்கள்.
அடிபட்டு கீழே விழுந்து கிடந்தான் முக்தார்.
அவனது மூக்கில் இருந்து இரத்தம் வடிந்தது. முக்தாரின் கையை பிடித்து எழுப்பினார் ஆசிரியர்.
ஐயோ. ஆ. உம்மா” என்று சிணுங்கியவாறு எழுந்தான் முக்தார். முக்தார் வகுப்பில் முதலாவது ஆள். எந்தப்பிரச்சினைக்கும் போகாதவன். ஆசிரியருக்கு விடயம் விளங்கிவிட்டது.
அவனது திறமைமீது கோபப்பட்டு அடித்து நொறுக்கியிருக்கிறார்கள் என்பது தெளிவாகிவிட்டது.
‘முக்தார் சொல்லு. உனக்கு முதன்முதல் அடித்தவர்கள் யார்?’ என்று ஆசிரியர் கேட்டார்.
முக்தாருக்கு அழுகைதான் வந்தது. அழத்தான் முடிந்தது.
‘அழாத மகன். நான் பார்த்துக்கிறன். இன்டக்கி நான் கொடுக்கப்போற தண்டனையில அவிய இனி உன் வழியிலையும் வரமாட்டாங்க. சொல்லு முதல் உனக்கு அடிச்சவங்களை’ விடாமல் கேட்டார் ஆசிரியர்.
‘முஸ்தபா, அப்துல்லா, குமார், சமீம்” என்று கூறிவிட்டு மீண்டும் அழத்தொடங்கினான் முக்தார். கையை நீட்டிப்பார்த்தான். மூட்டுக்களில் வலி எடுத்தது. நெஞ்சை நிமிர்த்தினான். முதுகு நோ எடுத்தது. வேதனையில் வீழ்ந்து நின்றான் முக்தார்.
''முஸ்தபா, அப்துல்லா, குமார், சமீம் இங்கே வாங்க. நான் வகுப்புக்க இல்லைன்டா நீங்க மிருகமா மாறப்போறீங்க. கொலகாரனா பேரெடுக்கப்போறீங்க. வாங்கடா” என்றார் ஆசிரியர்.
நான்கு பேரும் தயங்கித் தயங்கி சென்றார்கள். பயத்துடன் தலைகவிழ்ந்தார்கள்.
'' இல்லாத நேரத்தில் சண்டியன்கள். ஏன்டா முக்தாருக்கு அடிச்சீங்க? கிட்ட வாங்கடா” என்றார் ஆசிரியர்.
ஆசியரின் அருகே சென்றார்கள் நால்வரும். “சொல்லுங்கடா ஏன் அடிச்சீங்க?” மீண்டும் கேட்டார் ஆசிரியர்.
நால்வரும் வாய் பேசாமல் நின்றார்கள். ஆசிரியர் மேசை மீது இருந்த பிரம்பை எடுத்தார்.
''கையை நீட்டுங்க'' என்று கூறிவிட்டு ஒவ்வொருவரின் கையிலும் முதுகிலும் ஒவ்வொன்று பலமாக ஓங்கிக் கொடுத்தார்.
“ஆ. ஊ.” என்று கத்தியவாறு முதுகையும் கையையும் தடவினார்கள். பலமாக ஆசிரியர் அடித்தமையால் கை இரத்த பழமாக தெரிந்தது. முதுகு அரை இஞ்சி அளவுக்கு தடித்தது. அழுதவாறு நின்றார்கள்.
“இப்படித்தான்டா முக்தாருக்கும் நொந்திருக்கும். அப்பாவியான அவனுக்கு ஏன்டா அடிச்சீங்க? அவன் கெட்டிக்காரனா வந்தா உங்களுக்கு பொறாமையா? உங்க பொறாம அவன கொல்லுற அளவுக்கு வந்திருக்கி. அவன் செத்துப்போனா என்னடா செய்வீங்க? பிஞ்சுல கொலகாரன் என்ட பேரெடுத்து பெற்றோர்ர எண்ணத்தில மண்ணைப்போடப்போறிங்க. சேர் அடிச்ச எண்டு பெற்றோருக்கிட்ட சொல்லுங்கடா. அவங்க என்னை கேட்டு வரட்டும். கெட்ட பிள்ளைகளை பெற்ற பெற்றோர்” என்று ஆசிரியர் கூறியதுடன் மீண்டும் முதுகில் ஒவ்வொன்று போட்டார்.
மீண்டும் அலற தொடங்கினார்கள்.
‘'இப்படி உங்களுக்கு அடிச் சாத்தான் டா மத்தவனுக்கு தொடமாட்டீங்க” என்றார் ஆசிரியர்.
ஆசிரியர் வரமாட்டார் என்றுதான் அவர்கள் முக்தாருக்கு இவ்வாறு அடித்தார்கள். எதிர்பாராத விதமாக அகப்பட்டுக் கொண்டார்கள். பெற்றோர்களிடமும் போய்ச் சொல்ல முடியாது. தவறை செய்து விட்டு எப்படி போய்ச் சொல்ல முடியும்? ஆனால் ஒன்று நிச்சயம். இனிமேல் யாருக்கும் கை வைக்கமாட்டார்கள்!
ஆணிவேர்கள்
ஸஹிதா ஆண்டு ஐந்தில் கல்வி பயிலும் மாணவி. சிறுமியாக இருந்தாலும் வீண்விளையாட்டுக்களில் கரிசனை காட்டமாட்டாள். பெற்றோர்களுக்கு இவளால் பெருமிதம்தான்!
ஸஹிதாவின் வீட்டில் இருந்து அறுபது யார் தூரத்தில் சியானாவின் பல சரக்குக் கடை உள்ளது. சியானாவுக்கு கணவன் இருந்தாலும் சியானாதான் கடையில் அதிகமாக இருப்பாள். பெற்றோர் ஏதாவது வாங்கச்சொன்னால் சியானாவின் கடைக்குத்தான் செல்வாள் ஸஹிதா.
சிறுமி ஸஹிதா மீது ஒருவித வெறுப்புள்ளவளாக இருந்தாள் சியானா.
“என்ன வேணும்?” கடைக்காரி சியானா கேட்டாள்.
“மம்மி சொன்ன நல்ல இஞ்சி இதுக்குத் தரட்டாம்” என்று சிறுமி ஸஹிதா சொன்னாள்.
'கடையில நல்லதுதான் இருக்கும். உங்கட மம்மிக்கு தெரியாதா? இதெல்லாம் என்னகதை கொண்டா காசை.” என்று சியானா பணத்தை வாங்கிக்கொண்டு இஞ்சு கொடுத்தாள். சிறுமி ஸஹிதா என்ன பொருள்
வாங்கச் சென்றாலும் ஏதாவது இழிவாக பேசிவிட்டுத்தான் சியானா பொருட்கள் கொடுப்பாள்.
ஸஹிதா இதை எல்லாம் போய் பெற்றோரிடம் சொல்வதில்லை. நாட்கள் செல்லச்செல்ல சியானாவின் கடைக்கு வியாபாரம் கூடியது. அவள் வெறுப்பு கொண்டவர்களின் பிள்ளைகள் மீதும் வெறுப்பு காட்ட தொடங்கினாள். சிறுவர் சிறுமிகளும் பயப்பட தொடங்கினார்கள்.
ஸஹிதாவை வெற்றிலை பாக்கு வாங்கி வருமாறு அனுப்பினாள் அவளது ஆச்சி சுலைகா.
‘ஆடுமாதிரி உங்க ஆச்சி வெற்றிலை குதப்புவா அவட வாய்க்கு என்ன வேல. இந்தா பாக்கு. வெற்றில முடிஞ்சி பெய்த்து. பாக்கப்போட்டு குதப்பச்சொல்லு ” என்றாள் சியானா.
சிறுமி ஸஹரீதாவுக்கு ஆத்திரம் வந்தது. சிறுமியல்லவா! எதுவும் பேசவில்லை வீட்டுக்கு வந்து தந்தை முஸம்மில் இடம்
‘‘டடி சியானாட கடைக்கு இனி என்ன போகச்சொல்லக் கூடா.அவ ஒரே ஏசிக்கிட்டுத்தான் சாமான் தாறா. என்ன கேட்டாலும் இழிவா பேசுறா.” என்று கூறினாள் ஸஹிதா.
வாங்கிவர வேண்டியதுதான்” என்றார் தந்தை முஸம்மில்.
மகளின் மனதில் வெறுப்புணர்ச்சி ஏற்படக்கூடாது என்றுதான் அவ்விதம் முஸம்மில் சொன்னார்.
அன்று சலவைத்தூள் வாங்க தாய் சுலைகா அனுப்பினாள். ஸஹிதா நீண்ட நேரமாகியும் வந்து சேர வில்லை.
“எங்கமகள் ஸஹிதா” என்று முஸம்மில் கேட்டார்.
“சியானாட கடைக்குத்தான் போனா. இன்னும் காணல்ல. என்ன செய்றாளோ” என்றாள் தாய் சுலைகா.
'மிச்ச நேரமல்லவா போன” என்று மீண்டும் கேட்டார் முஸம்மில்.
“ஓம் பத்து நிமிசத்துக்கு மேலிருக்கும். என்ன செய்றாளோ? எங்க பாத்துக்கொண்டு நிக்காளோ? என்றாள் தாய் சுலைகா.
"இரு புள்ளய பார்த்து கூட்டிக்கிட்டு வாறன்’ என்று கூறி புறப்பட்டான் முஸம்மில்.
அவன் கடையை அடைந்ததும் சியானா திடுக்கிட்டாள்.
‘சலவைத்துாளை வாங்கிட்டுவாவன் மகள்’ என்றார் முஸம்மில்.
"அவ தரனுமே” என்றாள் சிறுமி ஸஹிதா.
‘எங்கேயோ விளையாடிப்போட்டு இப்போதான் வந்திருக்கா” என்றாள் சியானா
“இந்தா..” என்று கூறி சலவைத்துள் பொதியை கொடுத்தாள் சியானா. சிறுமி ஸஹிதா வாங்கிக் கொண்டாள்.
“காசைக் கொடுமகள் ” என்று தந்தை முஸம்மில் சொன்னார்.
‘நான் நேரத்தோட கொடுத்திட்டேன்’ என்றாள் சிறுமி ஸஹிதா.
கடைக்காரி சியானாவின் முகத்தை கோபமாக நோக்கினான் முஸம்மில். அவனுக்கு ஆத்திரம் வந்தது.
“பணத்தை வாங்கி வைத்துவிட்டு வருகின்ற ஆட்களுக்கு விற்பனை செய்கின்றாள். எங்கள் மீது ஆத்திரம் கொண்டுள்ளதால் என் மகளை தாமதித்து அனுப்புகின்றாள்’ என்பதை உணர்ந்து கொண்டான் முஸம்மில்.
“இப்பான் என் புள்ள வந்திச்சு என்று முழுப்பொய் சென்னேயே. அப்ப பணம் நேத்தா கிடைச்சிச்சி. என்ர புள்ள சொல்லி வந்திச்சு. சின்னப்புள்ள பேச்சை நம்பாமே இருந்தது பிழையாப்போச்சு. காசைக் கொடுத்து வாங்கிற எங்கேயும் வாங்கலாம். இனி உன்ர கடைக்கு வரமாட்டோம்” என்று கூறியவாறு மகளையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றார் முஸம்மில்.
முஸம்மிலின் குடும்பத்தார் மட்டுமல்ல. மேலும் பலர் சியானாவின் கடைக்குப் போவதை நிறுத்திக் கொண்டார்கள். குறிப்பாக சிறுவர்கள் போவதைக் குறைத்துக் கொண்டார்கள். சிறுவர்களால் தான் சியானாவின் கடை மூடுவிழா காணப்போகின்றது.
பிஞ்சு நஞ்சானது
இல்யாஸ் மாஸ்டர் சிகரெட் பிடித்தவாறு ஆறாம் ஆண்டு வகுப்புக்குள் நுழைந்தார். அவ்வாறு இல்யாஸ் மாஸ்டர் நுழைந்ததும் தந்தை சிகரெட் குடிக்கும் நினைவு எழுந்தது மாணவன் சித்தீக்கிற்கு!
தந்தைக்குத் தெரியாமல் அவரின் சட்டைப் பையிலிருந்து சிகரெட் புகைத்த அனுபவம் அவனுக்கு நிறைய உண்டு.
இல்யாஸ் மாஸ்டர் சிகரெட்டின் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டார். மூச்சுவிடாமல் நான்கு ஐந்து இழுவை இழுத்துவிட்டு வீசினார். வீசியதை எடுத்து இரண்டு இழுவை இழுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான் சித்தீக். தந்தை வீசியதை அவருக்குத் தெரியாமல் எடுத்து இழுத்த அனுபவம் அவனுக்குண்டு.
இல்யாஸ் மாஸ்டர் படிப்பிக்கத்தொடங்கினார். சித்தீக் பக்கத்திலிருந்த ராஸிக் என்ற மாணவனிடம் '' சிகரெட் குடிக்க வேண்டும் ராஸிக் . உற்சாகம் தாற புகை அது. எனக்கிற்ற அஞ்சு ரூபா இருக்கு. நீ மூன்று ரூபா தா. இன்ரவேலுக்குப் போய் முன் கடையில் வாங்கி வாத்ரூமுக்குப் போய் அடிப்பம்” என்றான் சீத்திக்.
“எனக்கிட்ட இந்த கெட்ட பழக்கமில்ல. நீ
இப்படியான கதை எனக்கிட்ட கதைக்கப்படா வேற
யாருக்கிட்டையும் வைச்சிக்கே” என்று கூறிவிட்டு படிப்பில் கவனம் செலுத்தினான் ராஸிக்.
சித்தீக் சிகரெட் குடிக்க வழி என்ன என்றுதான் சிந்தித்தான். ஆறாம் ஆண்டு மாணவனான அவன் இந்த கெட்ட வழி செல்ல அவனது தந்தைதான் மூலகாரணம். பிள்ளைகளுக்கு முன்னிலையில் ஆசிரியரோ பெற்றோரோ கூடாத முறையில் நடக்கக்கூடாது என்று சொல்வதில் அர்த்தமுண்டு.
“டேய் சித்தீக் எங்கே பார்த்துக் கொண்டிருக்காய்? எழும்படா ’ என்றார் இல்யாஸ் மாஸ்டர்.
எழுந்து நின்றான் சித்தீக்
“ டேய் நான் கடைசியாக என்ன சொன்னேன்? ’ என்று இல்யாஸ் மாஸ்டர் கேட்டார். எதுவும் கூறமுடியாமல் நின்றான் சித்தீக். -
‘‘ படிக்கிற எண்ணத்தோட வந்தால் தான் படிக்கலாம். இஞ்ச வந்து பெற்றோரை ஏமாத்திறதைவிட அவங்களுக்கு உதவியாக இருக்கலாம். படிப்பிக்கிறத்தை காது கொடுத்துக் கேளு. இரு” என்றார் இல்யாஸ் மாஸ்டர்.
நாற்காலியில் அமர்ந்தாலும் சித்தீக்கின் எண்ணம் இடைவேளையின் போது சிகரெட் பற்றவைக்கவேண்டும் என்பதே!
அவனது கையில் தந்தையிடம் களவாடிய ஐந்து
ரூபாய் இருந்தது. மிகுதி மூன்று ரூபாவுக்கு என்னவழி பண்ணலாம் என்பதிலே அவனது சிந்தனை விரிந்தது.
“எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்ற கவிஞரின் பாடல் எவ்வளவு கருத்தாளமிக்கது. பெற்றோரின் கண்காணிப்புக் குறைந்த பிள்ளைகள் சீரழிவது உறுதி. சித்தீக் என்ன விதிவிலக்கா?
இல் யாஸ் மாஸ் டர் கணக் கை நன்கு விளங்கப்படுத்திவிட்டு அதுபோன்று நான்கு கணக்குகளை கொடுத்தார். உடனடியாகச் செய்து வருமாறு கட்டளையிட்டார்.
தெரிந்தவர்கள் செய்தார்கள். சித்தீக்குடன் மேலும் சிலர் கணக்கைச் செய்ய முடியாது அங்கும் இங்கும் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
படிப்பிக்கிறபோது கவனமில்லாம இரிக்கிறே. கணக்கை கொடுத்தா முழிசிற. சித்தீக் செய் கணக்கை” என்றார் இல்யாஸ் மாஸ்டர்.
பக்கத்திலிருந்த ராஸிக்கின் கொப்பியை எட்டிப் பார்த்தான். திரும்ப ஆசிரியர் கேட்பதற்கு முன் ஒரு கணக்கை பார்த்து அப்படியே எழுதிவிட்டான். கணக்கு செய்தவர்கள் ஆசிரியரிடம் காட்டி வந்தார்கள். ராஸிக்கும் எழுந்து காட்டச் சென்றுவிட்டான்.
ஒரு கணக்குடன் நின்றான் சித்தீக்.
“சித்தீக் கொப்பியை எடுத்துக் கொண்டு வா’ என்றார் ஆசிரியர் இல்யாஸ்
நடுங்கியவாறு சென்றான் சித்தீக். கொப்பியை விரித்துப் பார்த்தார் இல்யாஸ் மாஸ்டர்.
“ஒரு கணக்குத்தான் பார்த்து எழுத முடிஞ்சிச்சு போல. நீட்டுடா கையை” என்று கூறி பிரம்பால் இரண்டு
அடி போட்டார் இல்யாஸ் மாஸ்டர்.
“இனியாவது ஒழுங்கா படிக்கப்பார். ராஸிக்கிடம் கேட்டுச் செய். போ? என்றார் இல்யாஸ் மாஸ்டர்.
அடுத்த பாடத்திற்கான மணி ஒலித்தது. இல்யாஸ் மாஸ்டர் போய்விட்டார். சித்தீக் ராஸிக்கின் கொப்பியை பார்த்து அப்படியே எழுதினான். விளக்கம் எதுவும் கேட்கவில்லை. அவனுக்கு அது தேவையுமில்லை.
அடுத்த பாடம் சித்திரம். அது ஒன்றுதான் சித்தீக்கிற்கு ஏச்சுப் பேச்சு பெற்றுத்தராத பாடம். எதையாவது கிறுக்கித் தள்ளுவான்.
இடைவேளை வந்தது.
‘ராஸிக் எனக்கு மூன்று ரூபா தாவேன்’ என்று கேட்டான் சித்தீக்.
‘நான் பணிஸ் திங்க வைச்சிருக்கிற காசுதான் இருக்கு” என்றான் ராஸிக்.
‘சிகரெட் உனக்கும் இழுக்கத் தாறன்’ என்றான் சித்தீக்.
“அந்த கெட்டபழக்கம் எனக்கில்லே. எங்குவாப்பா கூட சிகரெட் குடிக்கிறல்ல. நீ ஏன் இந்த கெட்ட பழக்கத்தை பழகினாய்? இந்த வயதிலே சிகரெட் குடிச்சா ரெண்டு வருஷத்திலே குடுவும் பாவிப்பாய். இதிலெல்லாம் ஈடுபட்டா படிப்பு வராது. இந்த கெட்ட பழக்கத்தை விட்டுப்போடு” என்றான் ராஸிக்.
‘உன் புத்திமதி எனக்குத் தேவல்ல காசு தரப்போறியா? இல்லையா?” எனக்கேட்டான் சித்தீக்.
“உனக்கு சிகரெட் முக்கியம். எனக்கு பணிஸ் முக்கியம். உனக்கு விளையாட்டு முக்கியம். எனக்கு படிப்பு முக்கியம். உன்னோட இனி தொடர்பு வைக்கவும் விரும்பல்ல. என்னையும் கெடுத்துப்போடுவாய்” என்று கூறிவிட்டு பணிஸ் வாங்கச் சென்றான் ராஸிக்.
“ராஸிக் காசு தந்து நான் சிகரெட் வாங்கியதில்ல. வெள்ளத்தம்பியின் கடையிலதான் அடிக்கடி சிகரெட் வாங்குவேன். அவன் எனக்கு கடனுக்குத் தருவான்.” என்று நினைத்தவாறு சென்று சிகரெட் வாங்கி மலசல கூடத்திற்குப் போய் யாருக்கும் தெரியாமல் புகைத்தான் சித்தீக்.
பிஞ்சு வயதிலே சீரழியப் போகின்றான் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? அவனது தந்தையும் இதை பொருட்படுத்தியதாக தெரியவில்லை.
கூடில்லா குருவிகள் இழப்பு
வைகைபுரி மன்னன் டேவிட்டுக்கு நகைச்சுவை என்றால் உயிர். நகைச்சுவை பேசி சிரிப்புக் காட்டுவோருக்கு பரிசுகளும் வழங்கி வந்தார்.
அன்று நாட்டு மக்களுக்கு அறிவித்தல் கொடுத்தார்.
''இன்றிரவு அரச மண்டபத்தில் நகைச்சுவைப் பேச்சுக்கள் இடம் பெறவிருக்கின்றன. பேச்சு மூலம் அரசனை சிரிப்புக்காட்டும் ஒவ்வொருவருக்கும் பத்தாயிரம் பெறுமதியான தங்கக்காசு வழங்கப்படவிருக்கின்றன. சிரிப்பூட்டக்கூடியவர்கள் உடன் வருக! இது அரசர் டேவிட்டின் அறிக்கை" என ஒலிபெருக்கி மூலம் தெருத் தெருவாக விளம்பரப்படுத்தினார்கள்.
பத்தாயிரம் ரூபா பெறுமதியான தங்கக்காசு என்று தெரிந்தவுடன் பலரும் பலவிடயங்களை கற்பனை பண்ணி வைத்துக் கொண்டு அரச மண்டபத்தை நோக்கி படை எடுக்கத் தொடங்கினார்கள்.
இரவு எட்டுமணிபோல் மன்னர் தனது நாற்காலியில் வந்தமர்ந்தார்.
''மக்களே... உங்கள் ஜோக் குகளை ஒவ்வொருவராக வந்து சொல்லுங்கள். மன்னர் சிரித்தால் பரிசு. இல்லையோ போய்விடலாம்.'' என்றார் மந்திரி.
நெட்டையான ஒருவன் எழுந்து வந்தான். அரசரைப் பார்த்து புன்னகைத்தான். அரசன் சிரித்துக் கொண்டான்.
''அரசரே நான் வாய்திறக்காமலே சிரிக்கின்றீர்களே! வாய் திறந்தால் எப்படிச் சிரிப்பீர்கள்? ஓவென்று சிரிப்பீர்களா? அல்லது ஹா... ஹா... என்று சிரிப்பீர்களா? என்றான் நெட்டையான தோற்றம் கொண்ட ஜோன்சன். மீண்டும் அரசர் சிரித்தார். ஜோன்ஸன் தொடர்ந்து பேசினான்.
''எனக்குத் தெரியாதது ஜோக். ஆனால் அரசர் சிரித்துவிட்டார் பத்தாயிரம் ரூபாப் பெறுமதியான தங்கக்காசு...'' என்றான் ஜோன்சன்.
''நகைச்சுவை பேசாமலே எப்படி பரிசு தருவது?' என்று மந்திரி கேட்டார்.
“எனது பேச்சுக்கு அரசர் சிரித்துவிட்டார். பேச்சுக்கு அரசர் சிரித்தால் பத்தாயிரம் பரிசு. இதுதான் நிபந்தனை. நிபந்தனையை அரசர் மீறமாட்டார் என்று நினைக்கின்றேன்.” என்றான் ஜோன்சன்.
‘மந்திரியே அவருக்கு பத்தாயிரம் கொடுத்து அனுப்பிவிடு” என்றார் அரசர் டேவிட்.
“இப்படியே இங்கு குழுமியிருக்கும் எல்லோரும் சொல்லப்போகின்ற ஜோக்குகளைக் கேட்டு சிரித்து சிரித்து இருக்கின்ற பணம் அனைத்தையும் இழந்துவிடப்போகிறீர்கள் அரசே!” என்றார் மந்திரி.
‘பணம் வந்து கொண்டே இருக்கின்றது. வருமானம் பெருகிக்கொண்டே இருக்கின்றது. இந்த நாட்டிலிருந்து வருகின்ற பணத்தில் ஒரு பகுதியை இந்த மக்களுக்குக் கொடுக்கத்தானே வேண்டும்” என்றார் அரசர் டேவிட்.
மந்திரி ஜோசப் வாய்மூடிக் கொண்டார்.
ஒரு கறுப்பு மனிதர் முன்னுக்கு வந்தார்.
‘அரசே நான் கறுப்பு நிறமானவன் என்று முடிவு கட்டிவிடாதீர்கள். வெள்ளையான உள்ளம் கொண்டவன். இறைவன் என்னைப் படைக்கும்போது கறுப்பு ஆட்டுக்குரிய நிறத்தை மறந்து என்மீது பூசிவிட்டான். சரி விசயத்திற்கு வருவோம். எனக்கு ஆண் குழந்தை மீதுதான் விருப்பம். மனைவி பெண் குழந்தை பெற்றுவிட்டாள். அவளுக்கு பெண் குழந்தை விருப்பமாம். எனக்கு ஆண் குழந்தை பெற்றுத் தரமாட்டீரா? என்று கேட்டேன். அது இறைவனைப் பொறுத்தது என்கிறாள். அவளுக்கு விருப்பமான பெண்குழந்தையைப் பெற்றுவிட்டாள். ஆண் குழந்தை கேட்டால் இறைவனைப் பொறுத்தவிடயம் என்கிறாள்” என்று கூறினார் கறுப்பு மனிதர்.
“இறைவனைப் பொறுத்த விசயம்தான். சிரிப்புக் காட்டச் சொன்னால் ஆலோசனை கேட்க வந்திரிக்கின்றாய். போடா விசர்ப்பயலே’ என்றார் அரசர் டேவிட்
எல்லோரும் சிரிக்கத் தொடங்கினார்கள்.
** அரசரை சிரிப்புக் காட்டச் சொன்னால் பிதற்றுகின்றார். அரசன் மற்றவர்களை அல்லவா சிரிப்புக் காட்டுகின்றார் . நீ அரசருக்கு பணத் தைக் கொடுத்தவிட்டுப்போ” என்று வந்திருந்தவர்களில் ஒருவன் சொன்னான். கறுப்பன் நின்ற இடத்திற்கும் சொல்லாமல் நழுவிவிட்டான்.
நாம் சொல்லுகின்ற நகைச்சுவைக்கு அரசர் சிரிக்காவிட்டால் தங்கக்காசு கிடைக்காது என்று நினைத்த மேலும் பலர் மெல்ல மெல்ல கலையத்தொடங்கினார்கள்.
ஒருசிறுவன் எழுந்து முன்னுக்கு வந்தான்.
‘அரசரே நான் தலையால் நடப்பேன். கால் மேலிருக்கும். அப்படி நடந்தால் என்ன பரிசு தருவீர்கள்?”
எனக்கேட்டான் சிறுவன்.
'பத்துக்கு இருபதாயிரம் ரூபாப் பெறுமதியான தங்கக்காசு தருவேன்’ என்றார் அரசர்.
“மீறமாட்டீர்களா அரசே? கால் மேலிக்கும் நடந்து காட்டவா?’ மீண்டும் சிறுவன் கேட்டான்.
‘மந்திரியே இதோ இருபதினாயிரம் இருக்கி. சிறுவன் கால் மேலிருக்க நடந்தா கொடுங்க” என்று உடனடியாக தங்கக்காசை மந்திரியிடம் கொடுத்தார் அரசர்.
சிறுவன் குத்திக்கரணம் போட்டவாறு நின்றான். கைகளால் நடந்தான். கால் மேலேதான் இருந்தது . கையால் தலைநடந்தது. ஐந்து நிமிடங்கள் அவ்வாறு நடந்துவிட்டு எழுந்தான் சிறுவன்.
“தாருங்கள் தங்கக்காசை” என்று சிறுவன் கேட்டான். ஒன்றும் செய்ய முடியாத அரசர் ‘மந்திரி கொடுங்க அவனுக்கு தங்கக்காசை. எப்படியோ நம்மை ஏமாற்றிவிட்டான்” என்றார்.
சிறுவன் தங்கக்காசைப் பெற்றுக் கொண்டு ஓட்டமும் நடையுமாகச் சென்றான்.
மந்திரி அரசரின் அருகே சென்றார்.
** அரசரே மற்றவர்களை இனிப் போகச் சொல்லுங்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியைச் சொல்லி தங்கக்காசை எடுத்துச்சென்று விடுகின்றார்கள். இப்படிப்பட்ட வேலையை இனி விட்டுவிடுங்கள். அரசரே ஆட்சி புரிவதற்கே மூலதனம் இல்லாமல் போய்விடும்.” என்றார் மந்திரி.
‘ஏற்கனவே அறிவித்தல் கொடுத்துவிட்டு இப்படி செய்வது நல்லதல்ல. பத்துமணிக்கு அரைமணிநேரம் இருக்கின்றது. பத்துமணியோடு சிரிப்புக்காட்டும் நிகழ்வு முடிந்துவிடும் என்று அறிவிப்புச் செய்யுங்கள்” என்றார் அரசர் டேவிட்.
மந்திரி எழுந்து நின்று “அன்பர்களே அபிமானிகளே பத்துமணிக்கு முப்பது நிமிடங்கள் இருக்கின்றன. பத்துமணிக்கு அரசர் நித்திரைக்குச் செல்லவேண்டும். அதனால் பத்துமணிக்கு இந்நிகழ்வு முடிவடையும்” என்றார் மந்திரி.
மக்கள் நான் பேசவேண்டும் இல்லை நான் பேசவேணி டும் என்று அவசரப் பட்டார்கள் . போட்டிபோட்டார்கள். கூக்குரலிட்டார்கள். ஒரே சத்தம். அரசர் பத்துநிமிடங்கள் பொறுமையோடு கேட்டுக்கொண்டிருந்தார். சத்தம் நிற்பதாய் இல்லை.
அரசர் எழுந்தார்.
‘உங்களுக்குள் தீர்மானம் எடுத்து சிலர் பேசுவதற்கு முடியாவிட்டால் என்னால் என்ன செய்யமுடியும்? நான் வருகின்றேன்” என்று கூறி அரசர் போய்விட்டார். வந்தவர்களும் ஏமாற்றத்துடன் கலைந்து போகத் தொடங்கினார்கள்.
சிறுவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் நெருப்பாய் ஒளிரும் அந்த மரத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.
காலை மலர்ந்து கதிரவன் மறையும் வரையும் அந்த மரம் ஒரு சிறுதுளி வெளிச்சத்தையும் பரப்புவதில்லை. இரவானதும் ஒளி வெள்ளத்தை உவந்தளிக்கும்.
இதன் மர்மம் என்னவென்பது எவருக்கும் புரியாதிருந்தது.
ஆழ்ந்து சிந்திக்கும் ஆற்றலைக் கொண்டவன் சிறுவன் குமாரன். ஏழாம் வகுப்பு படித்தாலும் பெரிய பெரிய விடயங்களில் எல்லாம் பெரியவர்களுக்கு அறிவுரை பகர்வதில் வல்லவன் இவன்.
வெளிச்சமரம் உள்ள காட்டுப்புற பகுதிக்கு குமாரன் தன் நண்பர்கள் இருவருடன் புறப்பட்டான்.
மாலை வேளை சூரியனின் ஒளி முற்றாக மறையவில்லை. இன்னும் அரை மணிநேரம் கடந்த பின்னர் தான் இருள் பரவ ஆரம்பிக்கும்.
பாதை அருகே இலை குளைகளை பரப்பிவிட்டு அமர்ந்தான் குமாரன். ஊரவர்களும் வெளிச்ச மரத்தைப் பார்க்க அவ்விடத்தில் அணிதிரள ஆரம்பித்தார்கள். எந்த மரத்திலிருந்து வெளிச்சம் வருகிறது என்பதை அறிய வேண்டுமானால் இரவு வரவேண்டுமே! அதுவரை பொறுமையோடு இருந்தான் குமாரன்.
இருள் இலேசாக பரவத் தொடங்கியது. உயரமாக வளர்ந்திருந்த அம்மரம் வெள்ளித்தகடுபோல பளபளத்தது.
இருள் பரவ பரவ மரமும் வெள்ளிமரமாகக் காட்சி அளித்தது.
''இருளில் பளபளக்கும் தன்மை கொண்டதுதான் இம்மரம். வேறு எந்த மாயமும் இல்லை! மந்திரமும் இல்லை” என்றான் சிறுவன் குமாரன்.
' 'நாம் எப் படிச் சொல்ல முடியும் ? கடவுளுக்குத்தான் வெளிச்சம்” என்றான் குமாரனின் நண்பர்களில் ஒருவன்.
''வாருங்கள். அந்த மரத்தின் ஒரு கிளையை முறித்து வீட்டுக்குக் கொண்டு செல்வோம்” என்று தன் நண்பர்களை அழைத்தான் குமாரன்.
''ஐயோ... நாங்கள் வரமாட்டோம். நீ போய் முறித்துக் கொண்டு வா..." என்று நண்பர்கள் மறுத்தார்கள்.
துணிந்து சென்றான் குமாரன். பளபளக்கும் ஒளி அவனது கண்களைக் கூச வைத்தது. கண்களை மூடிக்கொண்டு கிளை ஒன்றை ஒடித்தெடுத்தான். அதுவும் பளபளத்துக்கொண்டே இருந்தது. அதனை சிறு துண்டுகளாக்கி கைலேஞ்சியினுள் வைத்துச் சுற்றி எடுத்தான்.
குமாரனின் துணிவைக் கணி டவர்கள் பாராட்டினார்கள். பயந்து தூரத்தே நின்ற அனைவரும் அந்த மரத்தின் அருகே சென்று பார்வையிட ஆரம்பித்தனர்.
அடுத்த நாட்காலை, ஒடித்துக்கொண்டு வந்த மரக்கிளையின் துண்டுகளைப் பார்த்தான் குமாரன். சாதாரண மரக்கிளை போன்றுதான் இருந்தது. ஆனால் அதில் ஒரு திரவம் படர்ந்திருந்தது. இரவானதும் இருட்டில் வைத்துப் பார்த்தான். வெள்ளியைப் போல பளபளத்தது.
அதனை ஊர் மக்களுக்கெல்லாம் காட்டி அவர்களின் பயத்தை போக்கியதுடன் துணிவையும் ஏற்படுத்தினான் குமாரன்.
ஒரு சில நாட்களில் அம்மரத்தின் கிளைகள் குறைய ஆரம்பித்தன. பயம் தெளிந்த அவ்வூர் மக்கள் மரத்தின் கிளைகளைத் தினமும் பறித்துச் செல்ல ஆரம்பித்தனர்.
காலப் போக்கில் “வெளிச்சமரம்” முற்றாக மறைந்து போனது.
முன்னொரு காலத்திலே தேவபுரி என்ற கிராமத்திலே சேமகாண்டன் என்றொரு அரசன் இருந்தான்.
அவன் மற்றவர்களின் பிள்ளைகள் படித்து முன்னுக்கு வருவதைக் கொஞ்சமும் விரும்பாதவன்.
அரசன் சேமகாணிடனுக்கு இரணிடு
ஆண்பிள்ளைகள் இருந்தார்கள். இருவரையும் படிப்பிக்கப் பட்டிணத்துக்கு அனுப்பியும் பயன் கிடைக்கவில்லை.
படிப்பதற்குப் பதிலாக மது, சூது என்பவற்றைப் பழகிக் கொண்டு வந்தார்கள்.
தன் மக்களான இவர்கள் படிக்காததினால் மற்றவர்களின் பிள்ளைகள் படித்து முன்னுக்கு வருவதை அவன் விரும்பவில்லை.
பணக்காரர்களின் பிள்ளைகள் என்றால் தப்பினார்கள். எத்தனையோ ஏழைப்பிள்ளைகள் கெட்டித்தனமாகப் படித்துக் கொண்டு வரும்போது மாயமாக மறைந்து விடுவார்கள்.
எவ்வளவோ முயற்சித்துத் தேடியும் தங்கள் பிள்ளைகள் எங்கே என்று கண்டுபிடிக்க முடியாது போயிற்று.
அரசன் சேமகாண்டன்தான் கெட்டித்தனமான ஏழைப் பிள்ளைகளைப் பிடித்துத் தனது தோட்ட வேலைக்கு வைத்துக் கொள்கிறான் என்பது எவருக்குத் தெரியப் போகிறது?
மனிதர்களின் கண்ணுக்குப்படாத காட்டுப்புறத் தோட்டங்களில் தான் வேலைக்கு வைத்துக்கொள்வான். கண்டால் ஊர் மக்கள் போர் தொடுக்க வந்து விடுவார்களே..! அரசன் என்ற அந்தஸ்தே பறிபோய் விடுமே என்றுதான் இவ்விதம் செய்வான்.
அன்றொரு ஞாயிற்றுக் கிழமை..
பாடசாலை விடு முறை என்றபடியால் மாணவர்களான சண் முகமும் சந்திரனும் அரசமாளிகையையும் பூந்தோட்டத்தையும் பார்க்க ஆசைப்பட்டார்கள்.
ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்ட கட்டடத்தைக் கண்டு மெய்மறந்தார்கள். இடது புறமாக உள்ள பூந்தோட்டத்தில் பல நிறங்களிலும் பூக்கள் பூத்துக் குலுங்கின.
அப்போது...!
“அடே பொடிப்பயல்களே நில்லுங்கடா” என்றவாறு ஒரு முரடன் ஓடிவந்தான்.
''வா... ஓடிப்போவோம்” என்று சண்முகம் கூற இருவரும் ஓடினார்கள். கல்லொன்று தடுக்கியதால் சந்திரன் கீழே விழுந்தான். அவன் எழுந்து ஓடுவதற்குள் முரடன் பிடித்துக் கொண்டான்.
நின்றால் தன்னையும் பிடித்துக்கொள்வான் என்று நிற்காமல் ஓடிவிட்டான் சண்முகம்.
சந்திரன் “அம்மா...அம்மா” என்று அலறினான். அவனை இழுத்துச் சென்றான் முரடன்.
சந்திரனின் பெற்றோரிடமும் நடந்த கதையைச் சொன்னான்.
“ஊரில் நூறு பிள்ளைகளுக்கு மேல் காணாமல் போய்விட்டார்கள். இதைப்போல் என் பிள்ளையும் காணாமல் போய்விட்டானே! ஐயோ. கடவுளே. இதற்கொரு தீர்ப்பை நீயே வழங்கு” என ஒப்பாரி வைத்தார் சந்திரனின் தாயார். சண்முகத்தின் தந்தையும் வருத்தப்பட்டார்.
‘அப்பா. இதற்கொரு வழி இருக்கு. எல்லாப் பிள்ளைகளும் அரசமாளிகை அருகேதான் காணாமல் போயிருக்கிறார்கள். எனவே அரசனுக்கும் இதற்கும் தொடர்புண்டு” என்றான் சண்முகம்.
“பேசாதே அரசன் சேமகாண்டன் கேள்விப்பட்டால் நம் குடும்பத்தையே அழித்திடுவான்’ என்றார் சண்முகத்தின் தந்தை.
‘'இப்படியே பயந்தால் எல்லோரும் தங்கள் பிள்ளைகளையே இழக்க வேண்டிவரும். நாமெல்லாம் துணிந்தால் இதற்கு முற்றுப்புள்ளி கிடைக்கும்” என மீண்டும் சிறுவன் சண்முகம் சொன்னான்.
“உங்க பிள்ளை சொல்வது சரி. யாருக்கும் தெரியாமல் இரவுவேளை முப்பது நாற்பது பேர்வரை அரசமாளிகையைச் சுற்றிப் பார்ப்போம்” என்றார் சந்திரனின் தந்தை. அன்றிரவே செல்வதென முடிவெடுக்கப் பட்டது.
நள்ளிரவு எல்லோரும் பதுங்கிப் பதுங்கி சென்றார்கள். முன்புறம் உள்ள காவலாளி துப்பாக்கியைச் சுவரில் சாய்த்து வைத்துவிட்டுத்துங்கினான். ஒசைப்படாமல் அதனை எடுத்தார்கள். அவனை ஏன் எழுப்ப வேண்டும்? தூங்கட்டும் என்று விட்டு விட்டு உட்புறம் சென்றார்கள்.
உள்ளே மூன்று காவலாளிகளும் மதுவருந்திக் கொண்டிருந்தார்கள். “நன்றாகக் குடித்துப் போதை ஏறட்டும்’ என்று பொறுத்திருந்தார்கள். ஒரு காவலாளி தடாலென நிலத்தில் சாய்ந்தான்.
மற்ற இரு காவலாளிகளும் வாய்க்கு வந்தபடி அரற்றிக் கொண்டிருந்தார்கள்.
இதுதான் தருணம் என்று எல்லோரும் உட்புகுந்து காவலாளியின் வாய்களைத் துணியால் அடைத்து விட்டு கையையும் காலையும் கட்டிப் போட்டு விட்டார்கள். காவலாளிகள் குடிவெறியில் நிம்மதியாகத் தூங்கி குறட்டை விட்டார்கள்.
அவர்கள் உள்ளே சென்றதும் தகரத்தால் வேயப்பட்ட கட்டிடம் ஒன்று தெரிந்தது. அதற்கு ஜன்னல் கூட இல்லை. கதவு இடுக்கு வழியே பார்த்தார்கள்.
உள்ளே பல சிறுவர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். சிலர் தூங்காமல் அழுது கொண்டிருந்தார்கள்.
சத்தம் வராமல் கதவை உடைத்துத் திறந்தார்கள்.
‘உடனடியாகப் புறப்படுங்கள். தாமதித்தால் ஆபத்து. காவலாளிகள் விழிப்பதற்கு முன் போய்விட வேண்டும். எல்லோரும் எழும்புங்க. உங்க வீடுகளுக்குக் கொண்டு விடுகிறோம்” மெதுவாகச் சொன்னார் சந்திரனின் தந்தை.
சிறுவர்கள் எல்லோரும் தப்பினோம் பிழைத்தோம் என்று ஒரே ஒட்டமாக ஓடிச்சென்றார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக