Paṭṭiṉattup piḷḷaiyār II


சித்தர் பாடல்கள்

Back

பட்டினத்துப் பிள்ளையார் தொகுப்பு - II



சித்தர் பாடல்கள்:
ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II
(1) திருவிடைமருதூர் மும்மணிக்கோவை,
(2) திருக்கழுமல மும்மணிக்கோவை &
(3) திருவேகம்பமுடையார் திருவந்தாதி
(4) திருவொற்றியூர்த்தொகை
(5) திருப்பாடற்றிரட்டு

cittar pATalkaL: paTTiNattAr pATalkaL - II
(1) tiruviTaimarutUr mummaNikkOvai,
(2) tirukkazumala mummaNikkOvai
(3) tiruvEkampamuTaiyAr tiruvantAti
tiruvoRRiyUrttokai &
(5) tiruppATaRRiraTTu of sri paTTiNattup piLLaiyAr
In tamil script, unicode/utf-8 format




Acknowledgements:
We thank Digital Library of India for providing us with scanned image file version of this siddhar work.
This work was prepared through the Distributed Proof-reading approach of Project Madurai.
We also thank following persons for their help in the preparation of the etext:
S. Karthikeyan, Ms. Rathna (keyin) and S. Anbumani, V. Devarajan, S. Govindarajan for proof-reading.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2007.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/


இஃது சமிவனஷேத்திரமென்னுங் கோயிலூர் ஸ்ரீ முத்துராமலிங்கசுவாமிகளின்
ஆதினத்திற்குரிய ஸ்ரீ சிதம்பரசுவாமிகள் மாணாக்கர்களிலொருவராகிய
அ- இராமசுவாமியவர்களால், பரிசோதித்து ஒன்பத்திவேலி பட்டாமணியம்
சபாபதிபிள்ளை, குப்புசாமிபிள்ளை இவர்கள் வேண்டுகோளின்படி
சென்னை, பாப்புலர் அச்சுயந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது.
பதிப்பு வருடம் 1887

சித்தர் பாடல்கள்:
ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் அருளிச் செய்தவை
1. திருவிடைமருதூர் மும்மணிக்கோவை.

    இணைக்குறளாசிரியப்பா.

    தெய்வத் தாமரைச் செவ்விதின் மலர்ந்து
    வாடாப் புதுமலர்த் தோடெனச் சிவந்து
    சிலம்புங் கழலு மலம்பப் புனைந்து
    கூற்றி னாற்றன் மாற்றிப் போற்றாது
    வலம்புரி நெடுமா லேனமாய் நிலம்புக்
    காற்றலி னகழத் தோற்றாது நிமிர்ந்து
    பத்தி யடியவர் பச்சிலை யிடினு
    முத்தி கொடுத்து முன்னின் றருளித்
    திகழ்ந்துள தொருபாற் றிருவடி யகஞ்சேந்து
    மறுவில் கற்பகத் துறுதளிர் வாங்கி
    நெய்யிற் றோய்த்த செவ்வித் தாகி
    நூபுரங் கிடப்பினு நொந்து தேவர்
    மடவரன் மகளிர் வணங்குபு வீழ்த்த
    சின்னப் பன்மலர் தீண்டிடச் சிவந்து
    பஞ்சியு மனிச்சமு மெஞ்ச வெஞ்சாத்
    திருவொடும் பொலியு மொருபாற் றிருவடி
    நீலப் புள்ளி வாளுகிர் வேங்கைத்
    தோலின் கலிங்க மேல்விரித் தசைத்து
    நச்செயிற் றரவக் கச்சையாப் புறுத்துப்
    பொலிந்துள தொருபாற் றிருவிடை யிலங்கொளி
    யரத்த வாடை விரித்து மீதுறீஇ
    யிரங்குமணி மேகலை யொருங்குடன் சாத்திய
    மருங்கிற் றாகு மொருபாற் றிருவிடை
    செங்க ணரவும் பைங்க ணாமையுங்
    கேழற் கோடும் வீழ்திர ளக்கு
    நுடங்கு நூலு மிடங்கொண்டு புனைந்து
    தவளநீ றணிந்ததோர் பவளவெற் பென்ன
    வொளியுடன் றிகழு மொருபா லாகம்
    வாரும் வடமு மேர்பெறப் புனைந்து
    செஞ்சாந் தணிந்து குங்கும மெழுதிப்
    பொற்றா மரையின் முற்றா முகிழென
    வுலகே ழீன்று நிலையிற் றளரா
    முலையுடன் பொலியு மொருபா லாக
    மயில்வா யரவம் வயின்வயி னணிந்து
    மூவிலை வேலும் பூவாய் மழுவுந்
    தமருகப் பறையு [1] மமர் தரத் தாங்கிச்
    சிறந்துள தொருபாற் றிருக்கரஞ் செறிந்த
    சூடகம் விளங்கிய வாடகக் கழங்குட
    னொம்மென் பந்து மம்மென் கிள்ளையுந்
    தரித்தே திகழு மொருபாற் றிருக்கர
    மிரவியு மெரியும் விரவிய வெம்மையி
    னொருபால் விளங்குந் திருநெடு நாட்ட
    நவ்வி மானின் செவ்வித் தாகிப்
    பாலிற் கிடந்த நீலம் போன்று
    குண்டுநீர்க் குவளையிற் குளிர்ந்து நிறம்பயின்
    றெம்மனோர்க் கடுத்த [2]மம்மர்க் கிரங்கி
    யுலகேழ் புரக்கு மொருபா னாட்ட
    நொச்சிப் பூவும் பச்சை மத்தமுங்
    கொன்றைப் போது மென்றுணர்த் தும்பையுங்
    கங்கையாறும் பைங்கட் டலையு
    மரவு மதியமும் விரவித் [3] தொடுத்துச்
    சூட மாலை சூடிப்f பீடுகெழு
    நெருப்பிற் றிரித்தனைய வுருக்கிளர் சடில்மொடு
    நான்முகங் சுரந்த பானிற வன்னங்
    காணா வண்ணங் கருத்தையுங் கடந்து
    சேணிகந் துளதே யொருபாற் றிருமுடி
    பேணிய
    கடவுட் கற்பின் மடவரன் மகளிற்
    கற்பக வனத்துப் பொற்பூ வாங்கிக்
    கைவைத்துப் புனைந்த தெய்வ மாலை
    நீலக் குழன்மிசை வளைஇ மேனிவந்து
    வண்டுந் தேனுங் கிண்டுபு திளைப்பத்
    திருவுடன் பொலியு மொருபாற் றிருமுடி
    யினைய வண்ணத்து நினைவருங் காட்சி
    யிருவயி னுருவு மொருவயிற் றாகி
    வலப்பா னாட்ட மிடப்பா னோக்க
    வாணுதல் பாக நாணுதல் செய்ய
    வலப்பாற் றிருக்கர மிடப்பால் வனமுலை
    தைவந்து வருட மெய்ம்மயிர் பொத்தாங்
    குலக மேழும் பன்முறை யீன்று
    மருதிடங் கொண்ட வொருதனிக் கடவுணின்
    றிருவடி பரவுதும் யாமே நெடுநா
    ளிறந்தும் பிறந்து மிளைத்தன மறந்துஞ்
    சிறைக் கருப் பாசயஞ் சேரா
    மறித்தும் புகாஅ வாழ்வுபெறற் பொருட்டே.
    -----
    [1] இனையனதாங்கி எனவும் பாடம்.
    [2] வெம்மைநோய்க்கிரங்கி எனவும் பாடம்.
    [3] தொடுத்த என்றும் பாடம்.
    1

    நேரிசைவெண்பா

    பொருளுங் குலனும் புகழுந் திறனு
    மருளு மறிவு மனைத்து - மொருவர்
    கருதாவென் பார்க்குங் கறைமிடற்றாய் தொல்லை
    மருதாவென் பார்க்கு வரும்.
    2

    கட்டளைக்கலித்துறை

    வருந்தே னிறந்தும் பிறந்து மயக்கும் புலன்வழிபோய்ப்
    பொருந்தே னாகிற் புகுகின்றிலேன் புகழ் மாமருதிற்
    பெருந்தேன் முகந்துகொண் டுண்டு பிறிதொன்றி லாசையின்றி
    யிருந்தே னினிச்சென் றிரவே னொருவரை யாதொன்றுமே.
    3

    நேரிசையாசிரியப்பா

    ஒன்றினோ டொன்று சென்றுமுகி றடவி
    யாடுகொடி நுடங்கும் பீடுகெழு மாளிகை
    தெய்வக் கம்மியர் கைம்முயன்று வகுத்த
    வோவநூற் செம்மைப் பூவியல் வீதி
    குயிலென மொழியு மயிலியற் சாயன்
    மான்மாற விழிக்கு மானார் செல்வத்
    திடைமரு திடங்கொண் டிருந்த வெந்தை
    சுடர்மழு வலங்கொண் டிருந்த தோன்றா
    லாரணந் தொடராப் பூரண புராண
    நாரண னறியாக் காரணக் கடவுள்
    சோதிச் சுடரொளீ யாதித் தனிப்பொரு
    ளேக நாயக யோக நாயக
    யானொன் றுணர்த்துவ துளதே யான்முன்
    னனந்தலை யுலகத் தனந்த யோனியிற்
    பிறந்துழிப் பிறவாது கறங்கெனச் சுழன்றுழீஇத்
    தோற்றும் பொழுதி னீற்றூத் துன்பத்
    தியாயுறு துயரமு மியானுறு துயரமு
    மிறக்கும் பொழுதி னறப்பெறுந் துன்பமு
    நீயல தறிகுநர் யாரே யதனால்
    யானினிப் பிறத்த லாற்றே னஃதான்
    றுற்பவந் துடைத்த னிற்பிடித் தல்லது
    பிறிதொரு நெறியி னில்லையந் நெறிக்கு
    வேண்டலும் வெறுத்தலு மாண்டொன்றிற் படரா
    வுள்ளமொன் றுடைமை வேண்டு மஃதன்றி
    யைம்புல னேவ லாணைவழி நின்று
    தானல தொன்றைத் தானென நினையு
    மிதுவென துள்ள மாதலி னிதுகொடு
    நின்னை நினைப்ப தெங்ஙன முன்னங்
    கற்புணை யாகக் கடனீர் நீந்தின
    ரெற்பிற ருளரோ விறைவ கற்பங்
    கடத்தல் யான்பெறவும் வேண்டுங் கடத்தற்கு
    நினைத்தல் யான்பெறவும் வேண்டு் நினைத்தற்கு
    நெஞ்சுநெறி நிற்கவும் வேண்டு நஞ்சுபொதி
    யுறை யெயிற் றுரகம் பூண்ட
    கறைகெழு மிடற்றெங் கண்ணுத லோயே.
    4

    நேரிசைவெண்பா.

    கண்ணென்று நந்தமக்கோர் காப்பென்றுங் கற்றிருக்கு
    மெண்ணென்று மூல வெழுத்தென்று - மொண்ணை
    மருதவப்பா வென்றுமுனை வாழ்த்தாரேன் மற்றுங்
    கருதவப்பா லுண்டோ கதி.
    5

    கட்டளைக்கலித்துறை.

    கதியாவது பிறி தியாதொன்று மில்லை களேபரத்தின்
    பொதியாவது சுமந்தால் விழப் போமிது போனபின்னர்
    விதியா மெனச்சிலர் நோவதல்லா லிதை வேண்டுநர்யார்
    மதியாவது மருதன் கழலே சென்று வாழ்த்துவதே.
    6

    இணைக்குறளாசிரியப்பா.

    வாழ்ந்தன மென்று தாழ்ந்தவர்க் குதவாது
    தன்னுயிர்க் கிரங்கி மன்னுயிர்க் கிரங்கா
    துண்டிப் பொருட்டாற் கண்டன வெஃகி
    யவியடு நர்க்குச் சுவைபல பகர்ந்தே
    யாரே வுண்டி யயின்றன ராகித்
    தூராக் குழியைத் தூர்த்துப் பாரா
    விழுப்பமுங் குலனு மொழுக்கமுங் கல்வியுந்
    தன்னிற் சிறந்த நன்மூ தாளாரைக்
    கூஉய்முன் னின்றுதன் னேவல் கேட்குஞ்
    சிறாஅர்த் தொகுதியி னுறாஅப் பேசியும்
    பொய்யோடு புன்மைதன் புல்லர்க்குப் புகன்று
    மெய்யு மானமு மேன்மையு மொரீஇத்
    தன்னைத் தேறி முன்னையோர் கொடுத்த
    நன்மனைக் கிழத்தி யாகிய வந்நிலைச்
    [4] சாவுழிச் சாஅந் தகைய ளாயினு
    மேவுழி மேவல் செல்லாது காவலொடு
    கொண்டோ ளொருத்தி யுண்டி வேட்டிருப்ப
    வெள்ளுக் கெண்ணை போலத் தள்ளாது
    பொருளி னளவைக்குப் [5] போகம்விற் றுண்ணு
    மருளின் மடந்தைய ராகந் தோய்ந்து
    மாற்றல் செல்லாது வேற்றோர் மனைவயிற்
    கற்புடை மடந்தையர் பொற்பு நனிகேட்டுப்
    பிழைவழி பாராது நுழைவழி நோக்கியு
    நச்சி வந்த நல்கூர் மாந்தர்தம்
    விச்சையிற் படைத்த வெவ்வேறு காட்சியி
    னகமலர்ந் தீவார் போல முகமலர்ந்
    தினிது மொழிந்தாங் குதவுத லின்றி
    நாளு நாளு [6] நாள்பல கழித்தவர்
    தாளி னாற்றலுந் தவிர்த்துக் கேளிகழ்ந்
    திகமும் பரமு மில்லை யென்று
    பயமின் றொழுகிப் பட்டிமை பயிற்றி
    மின்னி னனையதன் செல்வத்தை விரும்பித்
    தன்னையு மொருவ ராக வுன்னு
    மேனையோர் வாழ்வும் வாழ்க்கையு நனைமலர்ந்
    தியோசனை கமழு முற்பல வாவியிற்
    பாசடைப் பரப்பிற் பானிற வன்னம்
    பார்ப்புடன் வெருவப் பகுவாய் வாளைகள்
    போர்த்தொழில் புரியும் பொருகா விரியு
    மருதமுஞ் சூழ்ந்த மருத வாண
    சுருதியுந் தொடராச் சுருதி நாயக
    பத்தருக் கெய்ப்பில் வைப்பென வுதவு
    முத்தித் தாள மூவா முதல்வநின்
    றிருவடி பிடித்து வெருவரல் விட்டு
    மக்களு மனைவியு மொக்கலுந் திருவும்
    பொருளென நினையா துன்னருளினை நினைந்
    திந்திரச் செல்வமு மெட்டுச் சித்தியும்
    வந்துழி வந்துழி மறுத்தன ரொதுங்கிச்
    சின்னச் சீரை துன்னற் கோவண
    மறுதற் கீளொடு பெறுவது புனைந்து
    [7] சிதவ லோடொன் றுதவுழி யெடுத்தாங்
    கிடுவோ ருளரெனி னிலையினின் றயின்று
    படுதரைப் பாயலிற் பள்ளி மேவி
    யோவாத் தகவெனு மரிவையைத் தழீஇ
    மகவெனப் பல்லுயி ரனைத்தையு மொக்கப்
    பார்க்குநின்
    செல்வக் கடவுட் டொண்டர் வாழ்வும்
    பற்றிப் பார்க்கி னுற்ற நாயேற்குக்
    குளப்படி நீரு மளப்பருந் தன்மைப்
    பிரளயச் சலதியு [8] மிருவகைப் பொருளு
    மொப்பினு மொவ்வாத் துப்பிற் றாதலி
    னின்சீ ரடியார் தஞ்சீ ரடியார்க்
    கடிமை பூண்டு நெடுநாட் பழகி
    முடலை யாக்கையொடு புடைபட் டொழுகியவர்
    காற்றலை யேவ லென்னாய்த்தலை யேற்றுக்
    கண்டது காணி னல்ல தொன்
    றுண்டோ மற்றெனக் குள்ளது பிறிதே. ----
    [5] போகம்விற் றெழுகு மென்றும் பாடம். [6] நாள்பல குறித்தவர் என்றும் பாடம்.
    [7] சிதவல் - பழுதுபட்ட
    [8] மிருவயிற்பேதமும் எனவும் பாடம்.
    7

    நேரிசைவெண்பா

    பிறிந்தே னரகம் பிறவாத வண்ண
    மறிந்தே னனங்கவே ளம்பிற் - செறிந்த
    பொருதவட்ட விற்பிழைத்துப் போந்தேன் புராணன்
    மருதவட்டந் தன்னுளே வந்து.
    8

    கட்டளைக்கலித்துறை

    வந்திக்கண்டா யடியாரைக் கண்டான் மறவாது நெஞ்சே
    சிந்திக்கண்டா யரன் செம்பொற் [9] கழற்றிரு மாமருதைச்
    சந்திக்கண்டா யில்லையாயி னமன்றமர் தாங் கொடுபோ
    யுந்திக்கண்டாய் நிரையத் துன்னை வீழ்த்தி யுழக்குவரே.
    9

    இணைக்குறளாசிரியப்பா.

    உழப்பின் வாரா வுறுதிக ளுளவோ
    கழப்பின் வாராக் கையற வுளவோ
    அதனால்
    நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை
    வேரற வகழ்ந்து போக்கித் தூர்வைசெய்
    தன்பென் பாத்தி கோலி முன்புற
    மெய்யெனு மெருவை விரிந்தாங் கையமில்
    பத்தித் தனிவித் திட்டு நித்தலு
    மார்வத் தெண்ணீர் பாய்ச்சி நேர்நின்று
    தடுக்குநர்க் கடங்கா திடுக்கண் செய்யும்
    பட்டி யஞ்சினுக் கஞ்சி யுட்சென்று
    சாந்த வேலி கோலி வாய்ந்தபின்
    ஞானப் பெருமுளை நந்தாது முளைத்துக்
    கருணை யிளந்தளிர் காட்ட வருகாக்
    காமக் குரோதக் களையறக் களைந்து
    சேமப் படுத்துழிச் செம்மையி னோங்கி
    மெய்ம்மயிர் புளக முகிழ்த்திட் தம்மெனக்
    கண்ணீ ரரும்பிக் கடிமலர் மலர்ந்து
    புண்ணிய
    வஞ்செழுத் தருங்காய் தோன்றி நஞ்சுபொதி
    காள கண்டமுங் கண்ணொரு மூன்றுந்'
    [10] தோ ளிருநான்குஞ் சுடர்முக மைந்தும்
    பவளநிறம் பெற்றுத் தவளநீறு பூசி
    யறுசுவை யதனினு முறுசுவை யுடைத்தாய்க்
    காணினுங் கேட்பினுங் கருதினுங் களிதருஞ்
    சேணுயர் மருத மாணிக்கத் தீங்கனி
    பையப் பையப் பழுத்துக் கைவர
    வெம் மனோர்க ளினிதினி தருந்திச்
    செம்மாந் திருப்பச் சிலரிதின் வராது
    மனமெனும் புனத்தை வறும் பாழாக்கிக்
    காமக் காடு மூடித் தீமைசெய்
    யைம்புல வேட ராறலைத் தொழுக
    வின்பப் பேய்த்தே ரெட்டா தோடக்
    கல்லா வுணர்வெனும் புல்வா யலமா
    விச்சைவித் துதிர்த்துழி யானெனப் பெயரிய
    நச்சு மாமர நனிமிக முளைத்துப்
    பொய்யென் கவடுகள் போக்கிச் செய்யும்
    பாவப் பஃறழை பரப்பிப் பூவெனக்
    கொடுமை யரும்பிக் கடுமை மலர்ந்து
    துன்பப் பல்காய் தூக்கிப் பின்பு
    மரணம் பழுத்து நாகிடை வீழ்ந்து
    தமக்கும் பிறர்க்கு முதவா
    திமைப்பிற் கழியு மியற்கையோ ருடைத்தே.
    ---
    [9] கழறிரு என்றும் பாடம்.
    [10] தோளொருநான்கு மென்றும் பாடம்.
    10

    நேரிசைவெண்பா.

    உடைமணியி லோசைக் கொதுங்கி யரவம்
    படமொடுங்கப் பையவே சென்றங் - கிடைமருத
    ரையம் புகுவ தணியிழையார்மே லனங்கன்
    கையம்புக வேண்டிக் காண்.
    11

    கட்டளைக்கலித்துறை.

    காணீர் கதியொன்றுங் கல்லீ ரெழுத்தஞ்சும் வல்லவண்ணம்
    பேணீர் திருப்பணி பேசீ ரவன்புக ழாசைப்பட்டுப்
    பூணீ ருருத்திர சாதன நீறெங்கும் பூசுகிலீர்
    வீணீ ரெளிதோ மருதப் பிரான்கழன் மேவுதற்கே.
    12

    இணைக்குறளாசிரியப்பா.

    மேவிய புன்மயிர்த் தொகையோ வம்மயிர்
    பாவிய தோலின் பரப்போ தோலிடைப்
    புகவிட்டுப் பொதிந்த புண்ணோ புண்ணிடை
    யூறு முதிரப் புனலோ கூறுசெய்
    திடையிடை நிற்கு மெலும்போ வெலும்பிடை
    முடைகெழு மூளை விழுதோ வழுவழுத்
    துள்ளிடை யொழுகும் வழும்போ மெள்ளநின்
    றூரும் புழுவு னொழுங்கோ நீரிடை
    வைத்த மலத்தின் குவையோ வைத்துக்
    கட்டிய நரம்பின் கயிறோ வுடம்பிற்குட்
    பிரியா தொறுக்கும் பிணியோ [11] தெரிதரல்
    இன்ன தியானென் றறியே னென்னை
    யேதினுந் தேடினன் யாதினுங் காணேன்
    முன்னம்
    வரைத்தனி வில்லாற் புரத்தை யழலூட்டிக்
    கண்படை யாகக் காமனை யொருநா
    ணுண்பொடி யாக நோக்கி யண்டத்து
    வீயா வமரர் வீயவந் தெழுந்த
    தீவாய் நஞ்சைத் திருவமு தாக்கி
    யிருவர் தேடி வெருவா நிமிர்ந்து
    பாலனுக் காகக் காலனைக் காய்ந்து
    சந்தன [12] சரள சண்பக வகுள
    நந்தன வனத்திடை ஞாயிறு வழங்காது
    நவமணி முகிழ்த்த புதுவெயி லெறிப்ப
    வெண்ணருங் கோடி யிருடி கணங் கட்குப்
    புண்ணியம் புரக்கும் பொன்னி சூழ்ந்த
    திருவிடை மருத பொருவிடைப் பாக
    மங்கை பங்க கங்கைநாயக நின்
    றெய்வத் திருவருள் கைவந்து கிடைத்தலின்
    மாயப் படலங் கீறித் தூய
    ஞான நாட்டம் பெற்றனன் பெற்றபின்
    னின்பெருந் தன்மையுங் கண்டேன் காண்டலு
    மென்னையுங் கண்டேன் பிறரையுங் கண்டே
    னின்னிலை யனைத்தினுங் கண்டே னென்னை
    நின்னைக் காணா மாந்தர்
    தன்னையுங் காணாத் தன்மை யோரே.
    ---
    [11] தெரியாதின்ன என்றும் பாடம்.
    [12] சரளம் என்றது ஒழுங்கு ஓர்மரமென்பாருமுளர்.
    13

    நேரிசைவெண்பா

    ஓராதே யஞ்செழுத்து முன்னாதே பச்சிலையு
    நேராதே நீரு நிரப்பாதே - யாராயோ
    வெண்ணுவா ருள்ளத் திடைமருதர் பொற்பாத
    நண்ணுவா மென்னு மதுநாம்.
    14

    கட்டளைக்கலித்துறை.

    நாமே யிடையுள்ள வாறறிவாமினி நாங்கள் சொல்ல
    லாமே மருதன் மருதவனத் தன்ன மன்னவரைப்
    பூமேலணிந்து பிழைக்கச்செய் தாரொரு பொட்டு மிட்டார்
    தாமே தளர்பவரைப் பாரமேற்றுத றக்க தன்றே.
    15

    நேரிசையாசிரியப்பா.

    அன்றினர் புரங்க ளழலிடை யவியக்
    குன்றுவளைத் தெய்த குன்றாக் கொற்றவ
    நுண்பொடி யணிந்த வெண்டோட் செல்வ
    கயிலைநடந் தனைய வுயர்நிலை நோன்றாட்
    பிறைசெறித் தன்ன விருகோட் டொருதிமிற்
    பானிறச் செங்கண் மாலவிடைப் பாக
    [13] சிமயச் செங்கோட் டிமயச் செல்வன்
    மணியெனப் பெற்ற வணியிய லன்னம்
    வெள்ளைச் சிறுநகைக் கிள்ளைப் பிள்ளை
    குயிலெனப் பேசு மயிலிளம் பேடை
    கதிரொளி நீலங் கமலத்து மலர்ந்தன
    மதரரி நெடுங்கண் மானின் கன்று
    [14] வருமுலை தாங்குந் திருமார்பு வல்லி
    வைய மேழும் பன்முறை யீன்ற
    வைய திருவயிற் றம்மை பிராட்டி
    மறப்பருஞ் செய்கை யறப்பெருஞ் செல்வி
    யெமையா ளுடைய வுமையா ணங்கை
    கடவுட் கற்பின் மடவால் கொழுந
    பவள மால்வரைப் பனைக்கைபோந் தனைய
    தழைசெவி யெண்டோட் டலைவன் றந்தை
    பூவலர் குடுமிச் சேவலம் பதாகை
    மலைதுளை படுத்த கொலைகெழு கூர்வே
    லமரர்த் தாங்குங் குமரன் றாதை
    பொருதிடங் கொண்ட மருத வாண
    நின்னது குற்ற முளதோ நின்னினைந்
    தெண்ணருங் கோடி யிடர்ப்பகை களைந்து
    கண்ணுறு சீற்றத்துக் காலனை வதையா
    விறப்பையும் பிறப்பையு மிகழ்ந்து சிறப்பொடு
    தேவ ராவின் கன்றெனத் திரியாப்
    பாவிக டமதே பாவம் யாதெனின்
    முறியாப் புழுக்கன் முப்பழங் கலந்த
    வறுசுவை யடிசி லட்டினி திருப்பப்
    புசியா தொருவன் பசியால் வருந்துத
    லயினியின் குற்ற மன்று வெயிலின்வைத்
    தாற்றிய தெண்ணீர் நாற்றமிட் டிருப்ப
    மடாஅ வொருவன் விடாஅ வேட்கை
    தெண்ணீர்க் குற்ற மன்று கண்ணகன்று
    தேன்றுளி சிதறிப் பூந்துணர் துறுமி
    வாலுகங் கிடந்த சோலை கிடப்ப
    வெள்ளிடை வெயிலிற் புள்ளிவெயர் பொடிப்ப
    வடி பெயர்த் திடுவா னொருவ
    னெடிது வருந்துத னிழற்றீங் கன்றே.
    ---
    [13] சிமையச்செங்கோட்டிமையச்செல்வன் - என்றும் பாடம்.
    [14] வரிமுலை-என்றும் பாடம்.
    16

    நேரிசைவெண்பா

    அன்றென்று மாமென்று மாறு சமயங்க
    ளொன்றொன்றோ டொவ்வா துரைத்தாலு - மென்று
    மொருதனையே நோக்குவா ருள்ளத் திருக்கு
    மருதனையே நோக்கி வரும்.
    17

    கட்டளைக்கலித்துறை.

    நோக்கிற்றுக் காம னுடல் பொடியாக நுதிவிரலாற்
    றாக்கிற் றரக்கன் றலைகீழ்ப் படத்தன் சுடர்வடிவா
    ளோக்கிற்றுத் தக்கன் றலையுருண் டோடச் சலந்தரனைப்
    போக்கிற் றுயிர் பொன்னிசூழ் மருதாளுடைப் புண்ணியமே.
    18

    நேரிசையாசிரியப்பா.

    புண்ணிய புராதன புதுப்பூங் கொன்றைக்
    கண்ணி வேய்ந்த கைலை நாயக
    காள கண்ட கந்தனைப் பயந்த
    வாளரி நெடுங்கண் மலையாள் கொழுந
    பூத நாத பொருவிடைப் பாக
    வேத கீத விண்ணோர் தலைவ
    முத்தி நாயக மூவா முதல்வ
    பத்தி யாகிப் பணைத்தமெய் யன்பொடு
    நொச்சி யாயினுங் கரந்தை யாயினும்
    பச்சிலை யிட்டுப் பரவுந் தொண்டர்
    கருவிடைப் புகாமற் காத்தருள் புரியுந்
    திருவிடை மருத திரி புராந்தக
    மலர்தலை யுலகத்துப் பலபல மாக்கண்
    மக்களை மனைவியை யொக்கலை யொரீஇ
    மனையும் பிறவுந் துறந்து நினைவருங்
    காடு மலையும் புக்குக் கோடையிற்
    கைம்மே னிமிர்த்துக் காலொன்று முடக்கி
    யைவகை நெருப்பி னழுவத்து நின்று
    மாரி நாளிலும் வார்பனி நாளிலு
    நீரிடை மூழ்கி நெடிது கிடந்துஞ்
    சடையைப் புனைந்துந் தலையைப் பறித்து
    முடையைத் துறந்து முண்ணா துழன்றுங்
    காயுங் கிழங்குங் காற்றுதிர் சருகும்
    வாயுவு நீரும் வந்தன வருந்தியுங்
    களரிலுங் கல்லிலுங் கண்படை கொண்டுந்
    தளர்வுறு மியாக்கையைத் தளர்வித் தாங்கவ
    ரம்மை முத்தி யடைவதற் காகத்
    தம்மைத் தாமே சாலவு மொறுப்ப
    ரீங்கிளை செய்யா தியாங்க ளெல்லாம்
    பழுதின் றுயர்ந்த வெழுநிலை மாடத்துஞ்
    செந்தா துதிர்ந்த நந்தா வனத்துந்
    தென்ற லியங்கு முன்றி லகத்துந்
    தாண்டாச் சித்திர மண்டப மருங்கிலும்
    பூவிரி தாங்க வாவிக் கரையிலு
    மயிற் பெடையாலக் குயிற்றிய குன்றிலும்
    வேண்டுழி வேண்டுழி யாண்டாண் டிட்ட
    மருப்பி னியன்ற வாளரி சுமந்த
    விருப்புறு கட்டின் மீமிசைப் படுத்த
    வைவகை யமளி யணைமேற் பொங்கத்
    தண்மலர் கமழும் வெண்மடி விரித்துப்
    பட்டினுட் பெய்த பதநுண் பஞ்சி
    னெட்டணை யருகாக் கொட்டைகள் பரப்பிப்
    [15] பாயன் மீது பரிபுர மிழற்றச்
    சாயலன் னத்தின் றளர்நடை பயிற்றிப்
    பொற்றோ ரணத்தைச் சுற்றிய துகிலென
    வம்மென் குறங்கி னொம்மென் கலிங்கங்
    கண்ணு மனமுங் கவற்றிப் பண்வர
    [16] விரங்குமணி மேகலை யொருங்குடன் கிடந்த
    வாடர வல்கு லரும்பெற னுசுப்பு
    வாட வீங்கிய வனமுலை கதிப்ப
    வணியியல் கமுகை யலங்கரித் ததுபோன்
    மணியிய லாரங் கதிர்விரித் தொளிர்தர
    மணிவளை தாங்கு மணிகெழு மென்றோள்
    வரித்த சாந்தின் மிசைவிரித் திட்ட
    வுத்தரி யப்பட் டொருபா லொளிதர
    வள்ளை வாட்டிய வொள்ளிரு காதொடு
    பவளத் தருகாத் தரள நிரைத்தாங்
    கொழுகி நீண்ட குமிழொன்று பதித்துக்
    காலன் வேலுங் காம பாணமு
    மால காலமு மனைத்துமிட் டமைத்த
    விரண்டு நாட்டமும் புரண்டுகடை மிளிர்த
    மதியென மாசறு வதனம் விளங்கப்
    புதுவிரை யலங்கல் குழன்மிசைப் பொலிய
    மஞ்சொன் மடந்தைய ராகந் தோய்ந்துஞ்
    சின்னம் பரப்பிய பொன்னின் கலத்து
    மறுசுவை யடிசில் வறிதிருந் தருந்தா
    தாடினர்க் கென்றும் பாடினர்க் கென்றும்
    வாடினர்க் கென்றும் வரையாது கொடுத்தும்
    பூசுவன பூசியும் புனைவன புனைந்துந்
    தூசி னல்லன தொடையிற் சேர்த்தியு
    மைந்து புலன்களு மார வார்ந்து
    மைந்தரு மொக்கலு மனமகிழ்ந் தோங்கி
    யிவ்வகை யிருந்தோ மாயினு மவ்வகை
    மந்திரவெழுத் தைந்தும் வாயிடை மறவாது
    சிந்தை நின்வழி செலுத்தலி னந்த
    முத்தியு மிழந்தில முதல்வ வத்திற
    நின்னது பெருமை யன்றோ வென்னின்
    வல்லா னொருவன் கைம்முயன் றெறியினு
    மாட்டா வொருவன் வாளா வெறியினு
    நிலத்தின் வழாஅக் கல்லே போ
    னலத்தின் வழார் நின் னாமநவின்றோரே
    ---
    [15] பாயன்மீமிசைப் பரிபுரமிழற்ற என்றும் பாடம்.
    [16] விரங்குமணி மேகலை மருங்கிற்கிடப்ப என்றும் பாடம்.
    19

    நேரிசைவெண்பா.

    நாமநவிற்றாய் மனனே நாரியர்க டோடோய்ந்து
    காம நவிற்றிக் கழிந்தொழிய - லாமோ
    பொருதவனத் தானையுரி போர்த்தருளு மெங்கண்
    மருத வனத்தானை வளைந்து.
    20

    கட்டளைக்கலித்துறை.

    வளையார் பசியின் வருந்தார் பிணியின் மதனனம்புக்
    கிளையார் தனங்கண் டிரங்கி நில்லா ரிப்பிறப்பினில்வந்
    தளையார் நரகினுக் கென்கடவார் பொன்னலர்ந்த கொன்றைத்
    தளையா னிடைமருதன் னடியா ரடி சார்ந்தவரே.
    21

    நேரிசையாசிரியப்பா.

    அடிசார்ந் தவர்க்கு முடியா வின்ப
    நிறையக் கொடுப்பினுங் குறையாச் செல்வ
    மூலமு நடுவு முடிவு மின்றிக்
    கால மூன்றுங் கடந்த கடவு
    ளுளக்கணுக் கல்லா தூன் கணுக்கொளித்துத்
    துளக்கற நிமிர்ந்த [17] சோதிச் சுடரொளி
    யெறுப்புத் துளையி னிருசெவிக் கெட்டா
    துறுப்பினின் றெழுதரு முள்ளத் தோசை
    வைத்த நாவின் வழிமறித் தகத்தே
    தித்தித் தூறுந் தெய்வத் தேற
    றுண்டத் துளையிற் பண்டைவழி யன்றி
    யறிவி னாறு நறிய நாற்ற
    மேனைய தன்மையு மெய்தா தெவற்றையுந்
    தானே யாகி நின்ற [18] தற்பர
    தோற்றுவ தெல்லாந் தன்னிடைத் தோற்றித்
    தோற்றம் பிறிதிற் றோற்றாச் சுடர்முளை
    விரிசடை மீமிசை வெண்மதி கிடப்பினு
    மிருள்விரி கண்டத் தேக நாயக
    சுருதியு மிருவருந் தொடர்ந்து நின்றலமர
    மருதிடங் கொண்ட மருத மாணிக்க
    வுமையாள் கொழுந வொருமூன் றாகிய
    விமையா நாட்டத் தென்றனி நாயக
    வடியே னுறுகுறை முனியாது கேண்மதி
    நின்னடி பணியாக் கன்மனக் கயவரொடு
    நெடுநாட் பழகிய கொடுவினை யீர்ப்பக்
    கருப்பா சயமெனு மிருட்சிறை யறையிற்
    குடரென் சங்கிலி பூண்டு தொடர்ப்பட்டுக்
    கூட்டுச் சிறைப்புழுவி னீட்டுமலத் தழுந்தி
    யுடனே வருந்தி நெடுநாட் கிடந்து
    பல்பிணிப் பெயற்பெற் றல்லற் படுத்துந்
    தண்டனாளர் மிண்டி வந் தலைப்ப
    வுதரநெருப்பிற் பதை பதை பதைத்தும்
    வாதமத் திகையின் மோத மொத்துண்டுங்
    கிடத்த னிற்ற னடத்தல் செல்லா
    திடங்குறை வாயிலின் முடங்கி யிருந்துழிப்
    பாவப் பகுதியி லிட்டுக் காவற்
    கொடியோ ரைவரை யேவி நெடிய
    வாசைத் தளையி லென்னையு முடலையும்
    பாசப் படுத்திப் பையென விட்டபின்
    யானும் போந்து தீதினுக் குழன்றும்
    பெரியோர்ப் பிழைத்தும் பிறர்பொருள் வௌவியும்
    [19] பரியா தொழிந்தும் பல்லுயிர் செகுத்தும்
    வேற்றோர் மனைவியர் தோற்றம் புகழ்ந்தும்
    பொய்பல கூறியும் புல்லினம் புல்லியு
    மைவருங் கடுப்ப வவாவது கூட்டி
    யீண்டின கொண்டு மீண்டு வந்துழி
    யிட்டுழி யிடாது பட்டுழிப் படாஅ
    திந்நா ளிடுக்க ணெய்திப் பன்னாள்
    வாடுபு கிடப்பேன் வீடு நெறிகாணே
    னின்னை யடைந்த வடியா ரடியார்க்
    கென்னையு மடிமை யாகக் கொண்டே
    யிட்ட பச்சிலைகொண் டொட்டி யறிவித்
    திச்சிறை பிழைப்பித் தினிச்சிறை புகாமற்
    காத்தருள் செய்ய வேண்டுந்
    தீத்திரண் டன்ன செஞ்சடை யோனே.
    ---
    [17] சோதிதனிச்சுடர் என்றும் பாடம்.
    [18] தத்துவ என்றும் பாடம்.
    [19] பசியாலுழன்றும் என்றும் பாடம்.
    22

    நேரிசைவெண்பா.

    சடைமே லொருத்தி சமைந்திருப்ப மேனிப்
    புடைமே லொருத்தி பொலிய - [20] விடையேபோய்
    சங்கே கலையே மருதற்குத் தான்கொடுப்ப
    தெங்கே யிருக்க விவிவள்.
    ----
    [20] இடைப்புகு என்றும் பாடம்.
    23

    கட்டளைக்கலித்துறை.

    இருக்கு மருதினுக் குள் ளிமையோர்களு நான்மறையு
    நெருக்கு நெருக்கத்து [21] நீளகத்திற் சென்று மீளவொட்டாத்
    திருக்குமறுத் தைவர் தீமையுந் தீர்த்துச் செவ்வேமனத்தை
    யொருக்கு மொருக்கத்தி னுள்ளே முளைக்கின்ற வொண்சுடரே.
    ----
    [21] நீளகத்துச்சென்று என்றும் பாடம்.
    24

    நேரிசையாசிரியப்பா.

    சுடர்விடு [22] சூல மேந்தினை யென்றும்
    விடையுகந் தேறிய விமல வென்று
    முண்ணா நஞ்ச முண்டனை யென்றுங்
    கண்ணாற் காமனைக் காய்ந்தனை யென்றுந்
    திரிபுர மெரித்த சேவக வென்றுங்
    கரியுரி போர்த்த கடவு ளென்று
    முரகம் பூண்ட வுரவோ யென்றுஞ்
    சிரகஞ் செந்தழ லேந்தினை யென்றும்
    வலந்தரு காலனை வதைத்தனை யென்றுஞ்
    சலந்தர னுடலந் தடிந்தனை யென்றும்
    வியந்தவா ளரக்கனை மிதித்தனை யென்றும்
    தக்கன் வேள்வி தகர்த்தனை யென்று
    முக்கிரப் புலியுரி யுடுத்தனை யென்று
    மேனமு மன்னமு மெட்டா தலமர
    வானங் கீழ்ப்பட வளர்ந்தனை யென்றுஞ்
    செழுநீர் ஞாலஞ் செகுத்துயி ருண்ணு
    மழல்விழிக் குறளை யமுக்கினை யென்று
    மினையன லினையன வெண்ணில் கோடி
    நினைவருங் கீர்த்தி நின்வயிற் புகழ்த
    றுளக்குறு சிந்தையேன் சொல்லள வாதலி
    னளப்பரும் பெருமைநின் னளவல தாயினு
    [23]மொன்றி னேயாப் புன்மொழி கொண்டு
    நின்னை நோக்குவ னாதலி னென்னை
    யிடுக்கண் களையா வல்லற் படுத்தா
    தெழுநிலை மாடத்துச் செழுமுகி லுறங்க
    வடித்துத் தட்டி யெழுப்புவ போல
    நுண்டுகிற் பதாகை கொண்டுகொண் டுகைப்பத்
    துயிலி னீங்கிப் பயிலும் வீதித்
    திருமரு தமர்ந்த தெய்வச் செழுஞ்சுட
    ரருள்சுரந் தளிக்கு மற்புதக் கூத்த
    கல்லா னெறிந்த பொல்லாப் புத்த
    னின் னினைந் தெறிந்த வதனா
    லன்னவன் றனக்கு மருள்பிழைத் தின்றே
    ---
    [22] சூலப் படையனே யென்று பாடம்.
    [23] என்றன்வாயிற் புன்மொழி என்றும் பாடம்.
    25

    நேரிசைவெண்பா

    இன்றிருந்து நாளை யிறக்குந் தொழிலுடைய
    புன்றலைய மாக்கள் புகழ்வரோ - வென்றிமழு
    வாளுடையான் றெய்வ மருதுடையா னாயேனை
    யாளுடையான் செம்பொ னடி.
    26

    கட்டளைக்கலித்துறை

    அடியாயிரந் தொழிலாயிர வாயிர மாயிரம் [24]பேர்
    முடியாயிரங் கண்கண் மூவாயிர முற்று நீறணிந்த
    தொடியாயிரங் கொண்ட தோளிரண்டாயிர மென்று நெஞ்சே
    படியா யிராப்பகற் றென்மரு தாளியைப் பற்றிக்கொண்டே.
    --
    [24] பேர் என்றது பெயரென்றும் பாடம்.
    27

    இணைக்குறளாசிரியப்பா.

    கொண்டலி னிருண்ட கண்டத் தெண்டோட்
    செவ்வா னுருவிற் பையர வார்த்துச்
    சிறுபிறை கிடந்த நெறிதரு புன்சடை
    மூவா முதல்வ முக்கட் செல்வ
    தேவ தேவ திருவிடை மருத
    மாசறு சிறப்பின் வானவ ராடும்
    பூசத்தீர்த்தம் புரக்கும் பொன்னி
    யயிரா வணத்துறையாடு மப்ப
    கைலாய வாண கௌரி நாயக
    [25] நின்னை வணங்கிப் பொன்னடி புகழ்ந்து
    பெரும்பதம் பிழையா வரம்பல பெற்றோ
    ரிமையா நெடுங்க ணுமையா ணங்கையு
    மழைக்கட் கடத்துப் புழைக்கைப் பிள்ளையு
    மமரர்த் தாங்குங் குமர வேளுஞ்
    சுரிசங் கேந்திய திருநெடு மாலும்
    வரன்முறை படைத்த நான்முகத் தொருவனுந்
    தாருகற் செற்ற வீரக் கன்னியும்
    நாவின் கிழத்தியு பூவின் மடந்தையும்
    பீடுயர் தோற்றத்துக் கோடி யுருத்திரரு
    மானாப் பெருந்திறல் வானோர் தலைவனுஞ்
    செயிர்தீர் நாற்கோட் டயிரா வதமும்
    வாம்பரி யருக்கர் தாம்பன் னிருவருஞ்
    சந்திர னொருவனுஞ் செந்தீக் கடவுளு
    நிருதியுஞ் சமனுஞ் சுருதிக ணான்கும்
    வருணனும் வாயுவு மிருநிதிக் கிழவனு
    மெட்டு நரகமு மட்ட வசுக்களு
    மூன்று கோடி யான்ற முனிவரும்
    வசிட்டனுங் கபிலனு மகத்தியன் றானுந்
    தும்புரு நாரத ரென்றிரு திறத்தரும்
    வித்தகப் பாடன் முத்திறத் தடியருந்
    திருந்திய வன்பிற் பெருந்துறைப் பிள்ளையு
    மத்தகு செல்வத் தவமதித் தருளிய
    சித்த மார்சிவ வாக்கிய தேவரும்
    வெள்ளை நீறு மெய்யிற் கண்டு
    கள்ளன் கையிற் கட்டவிழ்ப் பித்து
    மோடும் பன்னரி யூளைகேட் டரனைப்
    பாடின வென்று படாம்பல வளித்துங்
    குவளைப் புனலிற் றவளைய ரற்ற
    வீசன் றன்னை யேத்தின வென்று
    காசும் பொன்னுங் கலந்து தூவியும்
    வழிபடு மொருவன் மஞ்சனத் தியற்றிய
    செழுவிதை யெள்ளைத் தின்னக் கண்டு
    பிடித்தலு மவனிப் பிறப்புக் கென்ன
    விடித்துக் கொண்டவ னெச்சிலை நுகர்ந்து
    மருத வட்டத் தொருதனிக் கிடந்த
    தலையைக் கண்டு தலையுற வணங்கி
    யும்மைப் போல வெம்மித் தலையுங்
    கிடக்க வேண்டுமென் றடுத்தடுத் திரந்துங்
    கோயின் முற்றத்து மீமிசைக் கிடப்ப
    வாய்த்த தென்று நாய்க்கட்ட மெடுத்துங்
    காம்பவிழ்த் துதிர்ந்த கனியுருக் கண்டு
    வேம்புகட் கெல்லாம் விதான மமைத்தும்
    விரும்பின கொடுக்கை பரம்பரற் கென்று
    புரிகுழற் றேவியைப் பரிவுடன் கொடுத்த
    பெரிய வன்பின் வரகுண தேவரு
    மினைய தன்மைய [26] ரெண்ணிறந் தோர்க
    ளனைவரு நிற்க யானு மொருவன்
    பத்தி யென்பதோர் பாடு மின்றிச்
    சுத்த னாயினுந் தோன்றாக் கடையே
    னின்னை
    யிறைஞ்சில னாயினு மேத்தில னாயினும்
    வருந்தில னாயினும் வாழ்த்தில னாயினுங்
    கருதி யிருப்பன் கண்டாய் பெரும
    நின்னுல கனைத்து நன்மை தீமை
    யானவை நின்செய லாதலி
    னானே யமையு நலமில் வழிக்கே.
    ---
    [25] நின்னருள் சுரந்து பொன்னடி பணிந்து எனவும் பாடம்.
    [26] எண்ணிறந் தோரே - யனையோர் நிற்க என்றும் பாடம்.
    28

    நேரிசைவெண்பா.

    வழிபிழைத்து நாமெல்லாம் வந்தவா செய்து
    பழிபிழைத்த பாவங்க ளெல்லாம் - பொழில்சூழ்
    மருதிடத்தா னென்றொருகால் வாய்கூப்ப வேண்டா
    கருதிடத்தா நில்லா கரந்து.
    29

    கட்டளைக்கலித் துறை.

    கரத்தினன் மாலவன் கண்கொண்டு நின்கழல் போற்றநல்ல
    வரத்தினை யீயு மருதவப்பா மதியொன்று மில்லேன்
    சிரத்திலுமா யென்றன் சிந்தையுளாகி வெண் காடனென்னு
    தரத்திலு மாயது நின்னடியாந் தெய்வத் தாமரையே.
    30

    திருச்சிற்றம்பலம்.

திருவிடைமருதூர் மும்மணிக்கோவை முற்றுப்பெற்றது.


2. திருக்கழுமல மும்மணிக்கோவை.



கணபதிதுணை
திருச்சிற்றம்பலம்.
    இணைக்குறளாசிரியப்பா.

    திருவளர்பவளப் பெருவரைமணந்த
    மரகதவல்லி போலொருகூற்றின்
    இமயச்செல்வி பிரியாதுவிளங்கப்
    பாய்திரைப்பரவை மீமிசைமுகிழ்த்த
    அலைகதிர்ப்பரிதி யாயிரந்தொகுத்த
    வரன்முரைதிரியாது மலர்மிசையிருந்தெனக்
    கதிர்விடுநின்முகங் காண்டொறுங் காண்டொறும்
    முதிராவிளமுலை முற்றாக்கொழுந்தின்
    திருமுகத்தாமரைச் செவ்வியின்மலரநின்
    றையல்வாணுதற் றெய்வச்சிறுபிறை
    இளநிலாக்காண்டொறு மொளியொடும்புணர்ந்தநின்
    செவ்வாய்க்குமுதஞ் செவ்விசெய்யநின்
    செங்கைக்கமல மங்கைவனமுலை
    யமிர்தகலச மமைவினேந்த
    மலைமகடனாது நயனக்குவளைநின்
    பொலிவினோடுமலர
    மறையோர்கழுமல நெறிநின்றுபொலிய
    நாகர்நாடு மீமிசைமிதந்து
    மீமிசையுலகங் கீழ்முதற்றா அழ்ந்
    தொன்றாவந்த குன்றாவெள்ளத்
    துலகமூன்றுக்குங் களைகணாகி
    முதலில்கால மினிதுவீற்றிருந்துழித்
    தாதையொடுவந்த வேதியச்சிறுவன்
    தளர்நடைப்பருவத்து வளர்பசிவருத்த
    அன்னாயோவென் றழைப்பமுன்னின்று
    ஞான போனகத்தரு ளட்டிக்குழைத்த
    ஆனாத்திரளை யவன்வயினருள
    அந்தணன்முனிந்து தந்தார்யாரென
    அவனைக்காட்டுவ னப்பவானார்
    தோஒடுடைய செவியனென்றும்
    பீஇடுடைய பெம்மானென்றும்
    கையிற் சுட்டிக்காட்ட
    ஐயநீவெளிப்பட் டருளினையாங்கே.
    1

    வெண்பா.

    அருளின் கடலடியே னன்பென்னு மாறு
    பொருளின்றிரள்புகலி நாதன் - இருள்புகுதுங்
    கண்டத்தானென்பாரைக் காதலித்துக்கைதொழுவார்க்
    கண்டத்தார்தாமா ரதற்கு.
    2

    கட்டளைக்கலித்துறை.

    ஆரணநான்கிற்கு மப்பாலவனறி யத்துணிந்த
    நாரணனான்முக னுக்கரியானடு வாய்நிறைந்த
    பூரணனெந்தை புகலிப்பிரான் பொழிலத்தனைக்குங்
    காரணனந்தக் கரணங்கடந்த கருப்பொருளே.
    3

    இணைக்குறளாசிரியப்பா.

    கருமுதற்றொடங்கிப் பெருநாளெல்லாம்
    காமம்வெகுளி கழிபெரும்பொய்யெனும்
    தூய்மையில்குப்பை தொலைவின்றிக்கிடந்ததை
    அரிதினிகழ்ந்து போக்கிப்பொருதிறன்
    மையிருணிறத்து மதமுடையடுசினத்
    தைவகைக்கடாவும் யாப்பவிழ்த்தகற்றி
    யன்புகொடுமெழுகி யருள்விளக்கேற்றித்
    துன்பவிருளைத் துறந்துமுன்புற
    மெய்யெனும்விதானம் விரித்துநொய்ய
    கீழ்மையிற்றொடர்ந்து கிடந்தவென்சிந்தைப்
    பாழறையுனக்குப் பள்ளியறையாக்கிச்
    சிந்தைத்தாமரைச் செழுமலர்ப்பூந்தவி
    செந்தைநீயிருக்க விட்டனனிந்த
    நெடுநிலவளாகமு மடுகதிர்வானமும்
    அடையப்பரந்த வாதிவெள்ளத்து
    நுரையெனச்சிதறி யிருசுடர்மிதப்ப
    வரைபறித்தியங்கு மாருதங் கடுப்ப
    மாலும்பிரமனு முதலியவானவர்
    காலமிதுவெனக் கலங்காநின்றுழி
    மற்றவருய்யப் பற்றியபுணையாய்
    மிகநனிமிதந்த புகலிநாயக
    அருணனிசுரக்கும் பிரளயவிடங்கநின்
    செல்வச்சிலம்பு மெல்லெனமிழற்ற
    அமையாக்காட்சியிமயக்
    கொழுந்தையுமுடனே கொண்டிங்
    கெழுந்தருளத்தகு மெம்பெருமானே.
    4

    வெண்பா.

    மானுமழுவுந் திருமிடற்றில் வாழுமிரு
    [1]டானும்பிறையுமே தாங்கிநிற்கும்-வானவர்க்கு
    வெள்ளத்தேதோன்றிக் கழுமலத்தேவீற்றிருந்தென்
    னுள்ளத்தேநின்ற வொளி.
    [1] டானும்பிறையுந்தரித்திருக்கும் என்றும் பாடம்.
    5

    கட்டளைக்கலித்துறை.

    ஒளிவந்தவாபொய்மனத்திருணீங்கவென்னுள்ளவெள்ளம்
    தெளிவந்தவாவந்துதித்தித்தவாசிந்தியாததொரு
    களிவந்தவாவன்புகைவந்தவாகடைசாரமையத்
    தெளிவந்தவாநங்கழுமலவாணர்தம்மின்னருளே.
    6

    இணைக்குறளாசிரியப்பா.

    அருள்பழுத்தளிந்த கருணைவான்கனி
    ஆராவின்பத் தீராக்காதல்
    அடியவர்க்கமிர்த வாரிநெடுநிலை
    மாடக்கோபுரத் தாடகக்குடுமி
    மழைவயிறுகிழிக்குங் கழுமலவாணநின்
    வழுவாக்காட்சி முதிராவிளமுலைப்
    பாவையுடனிருந்த பரமயோகி
    யானொன்றுணர்த்துவ னெந்தைமேனாள்
    அகிலலோகமு மனந்தயோனியும்
    நிகிலமுந்தோன்ற நீநினைந்தநாடொடங்கி
    எனைப்பலயோனியு நினைப்பரும்பேதத்
    தியாரும்யாவையு மெனக்குத்தனித்தனித்
    தாயாராகியுந் தந்தையராகியும்
    வந்திலாதவ ரில்லையானவர்
    தந்தையராகியுந் தாயாராகியும்
    வந்திராதது மில்லைமுந்து
    பிறவாநிலனு மில்லையவ்வயின்
    இறவாநிலனு மில்லைபிறிதில்
    எனைத்தினாவுயிர்களு மில்லையானவை
    தமைத்தினாதொழிந்தது மில்லையனைத்தே
    காலமுஞ்சென்ற தியானிதன்மேலினி
    இளைக்குமா றிலனேநாயேன்
    அந்தரச்சோதிநின் னஞ்செழுத்துநவிலும்
    தந்திரம்பயின்றது மிலனேதந்திரம்
    பயின்றவர்ப்பயின்றது மிலனேயாயினும்
    இயன்றதோர்பொழுதி னிட்டதுமலராச்
    சொன்னதுமந்திர மாகவென்னையும்
    இடர்ப்பிறப்பிறப்பெனு மிரண்டின்
    கடற்படாவகை காத்தனின்கடனே.
    7

    வெண்பா.

    கடலானகாமத்தே காறாழ்வர்துன்பம்
    அடலாமுபாயமறியாம் - உடலாம்
    முழுமலத்தையோர்கியார் முக்கட்பெருமான்
    கழுமலத்தைக் கைதொழாதார்.
    8

    கட்டளைக்கலித்துறை.

    தொழுவாளிவள்வளைதோற்பா ளிவளிடர்க்கேயலர்கொண்
    டெழுவாளெழுகின்ற தென்செயவோவென்மனத்திருந்துங்
    கழுவாமணியைக்கழுமல வாணனைக்கையினிற்கொண்
    மழுவாளனைக்கண்டுவந்த தென்றாலொர் வசையில்லையே.
    9

    இணைக்குறளாசிரியப்பா.

    வசையில்காட்சி யிசைநனிவிளங்க
    முன்னாணிகழ்ந்த பன்னீருகத்து
    வேறுவேறுபெயரி னூறின்றியன்ற
    மையறுசிறப்பிற் றெய்வத்தன்மைப்
    புகலிநாயக விகல்விடைப்பாக
    அமைநாண்மென்றோ ளுமையாள்கொழுந
    குன்றுகுனிவித்து வன்றோளவுணர்
    மூவையிலெரித்த சேவகத்தேவ
    இளநிலாமுகிழ்க்கும் வளர்சடைக்கடவுணின்
    நெற்றியிற்சிறந்த வொற்றைநாட்டத்துக்
    காமனைவிழித்த மாமுதுதலைவ
    வானவரறியா வாதியானே
    [1] கல்லாவுளத்திற் புல்லறிவுதொடர
    மறந்துநோக்கும் வெறுந்தண்ணாட்டத்துக்
    காண்டொறுங்காண்டொறு மெல்லாமியாண்டை
    யாயினும்பிறவு மென்னதும்பிறரதும்
    ஆவனபலவு மழிவனபலவும்
    போவதும்வருவது நிகழ்வதுமாகித்
    தெண்ணீர்ஞாலத்துத் திரண்டமணலினும்
    எண்ணில்கோடி யெனப்பலவாகி
    இல்லனவுளவா யுள்ளனகாணாப்
    பன்னாளிருள்வயிற் பட்டேனன்னதும்
    அன்னதாதலி னடுக்குமதென்னெனின்
    கட்புலன்றெரியாது கொட்புறுமொருவற்குக்
    குழிவழியாகி வழிகுழியாகி
    ஒழிவின்றொன்றி னொன்றுதடுமாறி
    வந்தாற்போல வந்ததெந்தைநின்
    திருவளர்நாட்டங் கருணையிற்பெறலும்
    யாவையுமெனக்குப் பொய்யெனத்தோன்றி
    மேவருநீயே மெய்யெனத்தோன்றினை
    ஓவியப்புலவன் சாயல்பெறவெழுதிய
    சிற்பவிகற்ப மெல்லாமொன்றில்
    தவிராதுதடவினர் தமக்குச்
    சுவராய்த்தோன்றுந் துணிவுபோன்றனவே.

    [1] சடமாகிய வுடம்பெனக்கொண்டு, கல்லா வுடம்பெனவும் பாடாமோதுவர்.
    10

    வெண்பா.

    எனவேயெழுந்தாளென் செய்கிற்பாளின்னம்
    சினவேறுகாட்டு திரென்னு - மினவேகப்
    பாம்புகலியாநிமிரும் பன்னாச்சடைமுடிநம்
    பூம்புகலியானிதழிப் போது.
    11

    கட்டளைக்கலித்துறை

    போதும்பெறாவிடிற்பச்சிலையுண்டுபுனலுண்டெங்கும்
    ஏதும்பெறாவிடினெஞ்சுண்டின்றேயிணையாகச்செப்பும்
    சூதும்பெறாமுலைப்பங்கர்தென்றோணிபுரேசர்வண்டின்
    தாதும்பெறாதவடித்தாமரைசென்றுசார்வதற்கே.
    12

    திருச்சிற்றம்பலம்.
திருக்கழுமல மும்மணிக்கோவை முற்றிற்று.



3. திருவேகம்பமுடையார் திருவந்தாதி.


கணபதிதுணை.
திருச்சிற்றம்பலம்.
கட்டளைக்கலித்துறை.

மெய்த்தொண்டர்செல்லுநெறியறியேன்மிகநற்பணிசெய்
கைத்தொண்டர்தம்மிலுநற்றொண்டுவந்திலனுண்பதற்கே
பொய்த்தொண்டுபேசிப்புறம்புறமேயுன்னைப்போற்றுகின்ற
வித்தொண்டனென்பணிகொள்ளுதியோகச்சியேகம்பனே.
1
ஏகம்பனேயென்னையாள்பவனேயிமையோர்க்கிரங்கிப்
போகம்பன்னாளுங்கொடுக்கின்றநாயகபொங்குமைவாய்
நாகம்பொன்னாரமெனப்பொலிவுற்றுநன்னீறணியு
மாகம்பொன்மாமலையொப்பவனேயென்பனாதரித்தே.
2
தரித்தேன்மனத்துன்றிகழ்தருநாமந்தடம்பொழில்வாய்
வரித்தேன்முரல்கச்சியேகம்பனேயென்றன்வல்வினையை
யரித்தேனுனைப்பணியாதவரேழைமைகண்டவரைச்
சிரித்தேனுனக்கடியாரடிபூணத்தெளிந்தனனே.
3
தெளிதருகின்றதுசென்றென்மனநின்றிருவடிவ
மளிதருநின்னருட்கையமினியிலையந்திச்செக்கர்
ஒளிதருமேனியெம்மேகம்பனேயென்றுகந்தவர்தாள்
தளிதருதூளியென்றன்றலைமேல்வைத்ததன்மைபெற்றே.
4
பெற்றுகந்தேனென்றுமர்ச்சனைசெய்யப்பெருகுநின்சீர்
கற்றுகந்தேனென்கருத்தினிதாக்கச்சியேகம்பத்தின்
பற்றுகந்தேறுமுகந்தவனேபடநாகக்கச்சின்
சுற்றுகந்தேர்விடைமேல்வருவாய்நின்றுணையடியே.
5
அடிநின்றசூழலகோசரமாலுக்கயற்கலரின்
முடிநின்றசூண்முடிகாண்பரிதாயிற்றுக்கார்முகிலி
னிடிநின்றசூழ்குரலேறுடையேகம்பயாமெங்ஙனே
வடிநின்றசூலப்படையுடையாயைவணங்குவதே.
6
வணக்கந்தலைநின்றிடுவடிக்கேசெய்யுமையல்கொண்டோ
ரிணக்கன்றிமற்றோரிணக்கறிவோமல்லம்வல்லரவின்
குணக்குன்றவில்லிகுளிர்கச்சியேகம்பம்பாடினல்லாற்
கணக்கன்றுமற்றொருதேவரைப்பாடுங்கவிநலமே.
7
நலந்தரநானொன்றுசொல்லுவன்கேண்மினல்லீர்களன்பு
கலந்தரனார்கச்சியேகம்பங்கண்டுகனற்றிகிரி
சலந்தரனாகமொழிக்கவைத்தாய்தக்கன்வேள்வியெல்லா
நிரந்தரமாகச்செய்தாயென்றுபூசித்துநின்மின்களே.
8
மின்களென்றார்சடைகொண்டலென்றார்கண்டமேனிவண்ணம்
பொன்களென்றார்வெளிப்பாடுதம்பொன்னடிபூண்டுகொண்ட
வென்களென்றாலும்பிரிந்தறியார்கச்சியேகம்பத்தான்
றன்களென்றாருலகெல்லாநிலைபெற்றதன்மைகளே.
9
தன்மையிற்குன்றாத்தவத்தோரிமையவர்தாம்வணங்கும்
வன்மையிற்குன்றாமதிற்கச்சியேகம்பர்வண்கயிலைப்
பொன்மயிற்சாயலுஞ்சேயரிக்கண்ணும்புரிகுழலும்
மென்மையிற்சாயுமருங்குலுங்காதல்விளைத்தனவே.
10
தனமிட்டுமைதழுவத்தழும்புற்றவர்தம்மடியார்
மனம்விட்டுகலாமதிற்கச்சியேகம்பர்வான்கயிலைச்
சினம்விட்டகலாக்களிறுவினாவியோர்சேயனையார்
புனம்விட்டகலார்பகலாம்பொழுதுநம்பூங்கொடியே.
11
பூங்கொத்திருத்தழையார்பொழிற்கச்சியேகம்பர்பொற்பார்
கோங்கத்திருந்தகுடுமிக்கயிலையெம்பொன்னொருத்தி
பாங்கொத்திருந்தனையாரணங்கேபடர்கல்லருவி
யாங்கத்திருந்திழையாடிவந்தாற்கண்டடிவருத்தே.
12
வருத்தந்தருமெய்யுங்கையிற்றழையும்வன்மாவினவுங்
கருத்தந்தரிக்குநடக்கவின்றையகழனினையத்
திருத்தந்தருளுந்திகழ்கச்சியேகம்பர்சீர்க்கயிலைத்
[1] துருத்தந்திருப்பதன்றிப்புனங்காக்குந்தொழிலெமக்கே.
1. துரு=ஆராய்ச்சி, ஈறுகுறைந்த முதனிலைத் தொழிற்பெயர்.
13
எம்மையுமெம்மைப்பணிகொள்ளுங்கம்பரெழிற்கயிலை
யும்மையுமானிடமிப்புனத்தேவிட்டுவந்தமைந்தர்
தம்மையுமானையுஞ்சிந்தையுநோக்கங்கவர்வவென்றோ
வம்மையுமம்மலர்க்கண்ணும்பெரியீரருளுமினே.
14
அருளைத்தருகம்பரம்பொற்கயிலையுளெம்மையரம்
பிருளைக்கரிமறிக்கும்மிவரையருறுத்தியெய்ய
வெருளக் கலைகணை தன்னொடும்போயினவில்லிமைக்கு
மருளைத்தருசொல்லியெங்கோவிலையுண்டிவ்வையகத்தே
15
வையார்மழுப்படையேகம்பரீங்கோய்மலைப்புனத்து
ளையார்வருகலையேனங்கரிதொடர்வேட்டையெல்லாம்
பொய்யானவையர்மனத்தவெம்பூங்கொடிகொங்கைபெறாப்
பையாரரவிடையாயிற்றுவந்து பரிமணத்தே.
16
பருமுத்துதிர்த்திடுஞ்சீர்மத்தயானைநுதல்பகுந்திட்
டுருமொத்ததிண்குரற்சீயந்திரிநெறியோங்குவைவாய்ப்
பொருமுத்தலைவேற்படைக்கம்பர்பூங்கயிலைப்புனத்துட்
டருமுத்தனநகைத்தன்னசையால்வெற்பசார்வரிதே.
17
அரிதன்றிருக்கண்ணிடநிரம்பாயிரம்போதணிய
வரிதன்றிருவடிக்கர்ச்சித்தகண்ணுக்கருளுகம்ப
ரரிதன்றிருக்கங்குலியாலழிந்தகயிலையல்லிங்
கரிதென்றிருப்பதெம்பால்வெற்பவெம்மையர்க்கஞ்சுதுமே.
18
அஞ்சரத்தான்பொடியாய்விழத்தீவிழித்தன்புசெய்வோர்
நெஞ்சரத்தாழ்வுகந்தோர்கச்சியேகம்பர்நீள்கயிலைக்
குஞ்சரத்தாழ்வரைவீழநுங்கொம்புய்யக்கும்ப [1] முழ
நெஞ்சரத்தாரனவோவல்லவோவிவ்வியன்முரசே.
[1] மூழ்கும்-என்றும் பாடம்.
19
சேய்தந்தகைம்மையுமைகணவன்றிருவேகம்பத்தான்
றாய்தந்தையாயுயிர்காப்போன்கயிலைத்தயங்கிருள்வாய்
வேய்தந்ததோளிநம்மூசலொடும்விரைவேங்கைதன்னைப்
பாய்தந்துபூசலுண்டாங்கொண்டதோகைப்பகடுவந்தே.
20
வந்தும்மணம்பெறிற்பொன்னனையீர்மன்னுமேகம்பர்த
முந்துமருவிக்கயிலைமலையுயர்தேனிழிற்சித்
தந்துமலர்கொய்துந்தண்டினைமேயுங்கிளிகடிந்துஞ்
சிந்தும்புகர்மலைக்கச்சுமிச்சாரற்றிரிதவனே.
21
திரியப்புரமெய்தவேகம்பனார்திகழுங்கயிலைக்
கிரியக்குறவர்பருவத்திடுதரளம்வினையோம்
விரியச்சுருண்முதலானுமடைந்தோம்விரைவிரைந்து
பிரியக்கதிர்முத்தினீர்பெற்றதென்னங்குப்பேசுமினே.
22
பேசுகயாவருமைக்கணியாரென்றுபித்தரெங்கும்
பூசுகையார்திருநீற்றெழிலேகம்பர்பொற்கயிலைத்
தேசுகையார்சிலைவெற்பன்பிரியும்பரிசலரக்
கூசுகையாதுமில்லாக்குலவேங்கைப்பெயர் [1] நும்மையே.
[1] நுமக்கே-என்றும் பாடம்.
23
பெயராநலத்தெழிலேகம்பனார்பிறைதோய்கயிலைப்
பெயராதிருக்கப்பெறுகிளிகாள்புனமேபிரிவின்
றுயரால்வருத்திமனமுமிங்கோடித்தொழுதுசென்ற
தயாராதுறையும்வெற்பற்கடியற்கும்விடைதமினே.
24
[2] நம்மைப்பிறவிக்கடல்கடப்பிப்பவர்நாம்வணங்கு
மும்மைத்திருக்கண்முகத்தெழிலேகம்பர்மொய்கயிலை
யம்மைக்கருங்கண்ணிதன்னொடின்பந்தருந்தண்புனமே
யெம்மைக்கவலைசெயச்சொல்லியோவல்லியெய்தியதே.
[2] தம்மைப் பிறவிக்கடல் கடப்பிப்பவர்தாம்-என்றும் பாடம்.
25
இயங்குந்திரிபுரமெய்தவேகம்பரெழிற்கயிலைத்
தயங்குமலர்ப்பொழில்காடையலாடருவித்தடங்கா
முயங்குமணியறைகாண்மொழியீரொழியாதுநெஞ்ச
மயங்கும்பரிசுபொன்னாற்சென்றசூழல்வகுத்தெமக்கே.
26
வகுப்பாரிவர்போன்மணத்துக்குநாண்மணந்தன்னொடின்ப
மிகுப்பார்களாருயிரொன்றாமிருவரைவிள்ளக்கள்வாய்
நெகுப்பான்மலர்கொண்டுநின்றார்கிடக்கநிலாவுகம்பர்
தொகுப்பான்மணிசிந்தருவிக்கயிலையிச்சூழ்புனத்தே.
27
புனங்குழையாதென்றுமென்றினைகொய்ததும்போகலுற்ற
கனங்குழையாடற்பிரியநமக்குறுங்கையறவால்
மனங்குழையாவருங்கண்கனிபண்பலபாடுந்தொண்ட
ரிணங்குழையாத்தொழுமேகம்பரிக்கயிலாயத்துள்ளே.
28
உள்ளம்பெரியரல்லாச்சிறுமானிடருற்றசெல்வங்
கள்ளம்பெரியசிறுமனத்தார்க்கன்றிக்கங்கையென்னும்
வெள்ளம்பெரியசடைத்திருவேகம்பர்விண்ணரணந்
தள்ளம்பெரிகொண்டமைத்தாரடியவர்சார்வதன்றே.
29
அன்றும்பகையடர்க்கும்பரிமாவுமதவருவிக்
குன்றும்பதாதியுந்தேருங்குலவிக்குடைநிழற்கீழ்
நின்றும்பொலியினுங்கம்பர்நன்னீறுநுதற்கிலரேல்
என்றுமரசுமுரசும்பொலியாதிருநிலத்தே.
30
நிலத்திமையோரிற்றலையாப்பிறந்துமறையொடங்கம்
வலத்திமைப்போதும்பிரியாரெரிவளர்த்தாலும்வெற்பன்
குலத்துமையோர்பங்கர்கச்சியுளேகம்பங்கூடித்தொழு
நலத்தமையாதவர்வேட்டுவர்தம்மினடுப்படையே.
31
படையாலுயிர்கொன்றுதின்றுபசுக்களைப்போலச்செல்லு
நடையாலறிவின்றிநாண்சிறிதின்றிநகுங்குலத்திற்
கடையாப்பிறக்கினுங்கச்சியுளேகம்பத்தெங்களையா
ளுடையான்கழற்கன்பரேலவர்யாவர்க்குமுத்தமரே.
32
உத்துங்கயானையுரியார்விரலாலரக்கன்சென்னி
பத்துங்கையானவிருபதுஞ்சோர்தரவைத்திலமை
யொத்துங்கையாலவன்பாடக் [1] கயிலையுள்ளோர்நற்கைவா
ளெத்துங்கையானென்றுகந்தளித்தார்கச்சியேகம்பரே.
[1] கயிலைகைவாளொடு நாள் என்றும்பாடம்.
33

அம்பரங்காலனனீர்நிலந்திங்களருக்கனணு
வம்பரங்கொள்வதோர்வேழத்துரியவன்றன்னுருவா
பெம்பரன்கச்சியுளேகம்பத்தானிடையாதடைவா
னம்பரன்றன்னடியாரறிவார்க்குநறுந்துணையே.
34
துணைத்தாமரையடியும்பவளத்திரணன்குறங்கும்
பணைத்தோளகலமுங்கண்டத்துநீலமுமண்டத்துமின்
பணைத்தாலனசடையுந்திருமுக்கணும்பெண்ணொர்பக்கத்
தணைத்தாரெழிற்கம்பரெங்கள்பிரானார்க்கழகியவே.
35
அழகறிவிற்பெரிதாகியவேகம்பரத்தர்கொற்றம்
பழகறிவிற்பெரியோர்தமைப்பற்றலர்பற்றுமன்பின்
குழகறிவேற்பினுளொன்றறியாரறியாமைதெய்வங்
கிழகெறியப்பட்டுலந்தாருலகிற்கிடந்தனரே.
36
கிடக்குமொருபாலிரைக்கின்றபாம்பொருபான்மதியந்
தொடக்குண்டிலங்குமலங்குந்திரைக்கங்கைசூடுங்கொன்றை
வடக்குண்டுகட்டத்தலைமாலைவாளான்மலைந்தவெம்போர்
கடக்கும்விடைத்திருவேகம்பர்கற்றைச்சடைமுடியே.
37
கற்றைப்பவளச்சடைவலம்பூக்கமழ்கொன்றையந்தார்
முற்றுற்றிலர்மதியின்கொழுந்தேகம்பர்மொய்குழலா
மற்றைத்திசையின்மணிப்பொற்கொழுந்தத்தரங்கழுநீர்
தெற்றிப்பொலிகின்றசூட்டழகாகித்திகழ்தருமே.
38
தருமருட்டன்மைவலப்பாற்கமலக்கணெற்றியின்மேற்
றிருமலர்க்கண்பிளவின்றிகழுந்தழல்செல்வக்கம்பர்
கருமலர்க்கண்ணிடப்பாலதுநீலங்கனிமதத்து
வருநுதற்பொட்டணங்குக்குயர்ந்தோங்குமலர்க்குழலே.
39
மலர்ந்தபடத்துச்சியைந்தினுஞ்செஞ்சுடர்மாமணிவிட்
டலர்ந்தமணிக்குண்டலம்வலக்காதினிலாடிவரும்
நலந்திருநீள்வயிரம்வெயிற்பாயுநகுமணிகள்
கலந்தசெம்பொன்மகரக்குழையேகம்பர்காதிடமே.
40
காதலைக்கும்வலத்தோள்பவளக்குன்றமங்குயர்ந்து
போதலைக்கும்பனிப்பொன்மலைநீற்றின்பொலியகலந்
தாதலைக்குங்குழல்சேர்பணைத்தோணறுஞ்சாந்தணிந்து
குதலைக்கும்முலைமார்பிடமேகம்பர்சுந்தரமே.
41
தரம்பொற்பழியுமுலகட்டியெய்த்துத்தரந்தளரா
வுரம்பொற்புடையதிருவயிறாம்வலமும்பர்மும்மைப்
புரம்பொற்பழித்தகம்பர்க்குத்தரத்திடுபூண்முலையு
நிரம்பப்பொறாதுதளரிளவஞ்சியுநேருடைத்தே.
42
உடைப்புலியாடையின்மேலுரக்கச்சுவீக்கிமுஞ்சி
வடத்தொருகோவணந்தோன்றுமரைவலமற்றையல்குற்
றொடக்குறுகாஞ்சித்தொடுத்தவரசிலைதூநுண்டுகி
லடற்பொலியேறுடையேகம்பமேயவடிகளுக்கே.
43
அடிவலப்பாலதுசெந்தாமரையொத்ததிர்கழல்சூழ்ந்
திடிகுரற்கூற்றினெருத்திறவைத்ததிளந்தளிரி
னடியிடப்பாலதுபஞ்சுறவஞ்சுஞ்சிலம்பணிந்த
வடிவுடைத்தார்கச்சியேகம்பமேயவரதருக்கே.
44
தருக்கவற்றான்மிக்கமுப்புரமெய்தயன்றன்றலையை
நெருக்கவற்றோடமழுவாள்விசைத்ததுநெற்களென்றும்
பருக்கவற்றாங்கச்சியேகம்பரத்தர்தம்பாம்புகளின்
றிருக்கயிற்றாலிட்டருளுங்கடகத்திருக்கரமே.
45
கரத்தமருகத்தோசைகடுத்தண்டமீபிளப்ப
வரத்தத்தபாதநெரித்திட்டவனிதலநெரியத்
தரத்தத்திசைகளுக்கப்புரம்போர்ப்பச்ச்சடைவிரித்து
வரத்தைத்தருகம்பராடுவரெல்லியுமாநடமே.
46
நடனம்பிரானுகந்துய்யக்கொண்டானென்றுநன்மறையோ
ருடன்வந்துமூவாயிரவரிறைஞ்சிநிறைந்தவன்பின்
கடனன்றிமற்றறியாத்தில்லையம்பலங்காளத்தியா
மிடமெம்பிறான்கச்சியேகம்பமேயாற்கினியனவே.
47
இனியவரின்னாரவரையொப்பார்பிறரென்னவொன்ணாத்
தனியவர்தையலுடனாமுருவரறம்பணித்த
முனியவரென்றுமுகந்தமுக்கண்ணவர்தண்டியன்புக்
கினியவர்காய்மழுவாட்படையார்கச்சியேகம்பரே.
48
பரவித்தனைநினையக்கச்சியேகம்பர்பண்ணுமையல்
வரவித்தனையுள்ளதெங்கரிந்தேன்முன்னவர்மகனார்
புரவித்தனையடிக்கக்கொடிதாய்விடியாவிரவி
லரவித்தனையுங்கொண்டார்மடவார்முன்றிலாட்டிடவே.
49
இடவஞ்சுருக்கெனப்பாயுமஞ்சென்னிநகுதலைகண்
டிடவஞ்சுவர்மடவாரிரிகின்றனரேகம்பத்தீர்
படமஞ்சுவாயதுநாகமிரைக்குமதனுக்குமுற்
படவஞ்சுவரெங்கனேபலிவந்திடும்பாங்குகனே.
50
பாங்குடைக்கோட்புலியின்னதள்கொண்டிர்நும்பாரிடங்க
டாங்குடைகொள்ளப்பலிகொள்ளவந்தீர்தடங்கமலம்
பூங்குடைகொள்ளப்புனற்கச்சியேகம்பங்கோயில்கொண்டீ
ரீங்கிடைகொள்ளக்கலைகொள்ளவந் தீரிடைக்குமின்றே.
51
இடைக்குமின்றோர்க்குமிணைமுலையாய்முதியார்கடஞ்சொற்
கடைக்கணன்றாங்கச்சியேகம்பரையங்கொளக்கடவும்
விடைக்குமுன்றோத்தநில்லேநின்றினியிந்தமொய்குழலார்
கிடைக்குமுன்றோத்த [1] நஞ்சங்கிதுவோதன்கிறித்துவமே.
[1] நெஞ்சங்கிதுவோ - என்றும் பாடம்.
52
கிறிபலபேசிக்கதிரானடந்துவிடங்குபடக்
குறிபலபாடிக்குளிர்கச்சியேகம்பரையங்கொள்ள
நெறிபலவார்குழலார்மெலிவுற்றநெடுந்தெருவிற்
செறிபலவெள்வளைபோயினதாயர்கடேடுவரே.
53
தேடுற்றிலகள்ளநோக்கந்தெரிந்திலசொற்கண்முடி
கூடுற்றிலகுழல்கொங்கைபொடித்திலகூறுமிவண்
மாடுற்றிலமணியின்மடவல்குலுமற்றிவள்பா
னாடுற்றிலவெழிலேகம்பனார்க்குள்ளநல்கிடத்தே.
54
நல்கும்புகழ்க்கடவூர்நன்மறையவனுய்யநண்ணிக்
கொல்கின்றகூற்றைக்குமைத்தவெங்கூற்றங்குளிர்திரைகண்
மல்குந்திருமறைக்காட்டமிர்தென்றுமலைமகடான்
புல்கும்பொழிற்கச்சியேகம்பமேவியபொன்மலையே.
55
மலையத்தகத்தியனர்ச்சிக்கமன்னிவடகயிலை
நிலையத்தமரர்தொழவிருந்தானெடுமேருவென்னுஞ்
சிலையைத்தன்பைம்பொன்மதிற்றிருவேகம்பத்தான்றிகழ்நீ
ரலையத்தடம்பொன்னிசூழ்திருவையாற்றருமணியே.
56
மணியாரருவித்தடவிமயங்குடக்கொல்லிகல்லின்
றிணியாரருவியினார்த்தசிராமலையைவனங்க
ளணியாரருவிகவர்கிளியொப்புமின்சாரல்லிந்தம்
பணிவாரருவினைதீர்க்குமேகமபர்பருப்பதமே.
57
பருப்பதங்கார்தவழ்மந்தரமிந்திரநீலம்வெள்ளை
மருப்பதங்கார்கருங்குன்றியங்கும்பரங்குன்றம்வில்லார்
நெருப்பதங்காகுதிநாறுமயேந்திரமென்றிவற்றி
லிருப்பதங்காவுகந்தான்கச்சியேகம்பத்தெம்மிறையே.
58
திருவேகம்பமுடையார்

இறைத்தார்புரமெய்தவில்லிமைநல்லிமவான்மகட்கு
மறைத்தார்கருங்குன்றம்வெண்குன்றஞ்செங்குன்றமன்னற்குன்ற
நிறைத்தார்நெடுங்குன்றநீள்கழுக்குன்றமென்றீவினைகள்
குறைத்தார்முதுகுன்றமேகம்பர்குன்றென்றுகூறுமினே.
59
கூறுமின்றொண்டர்குற்றாலநெய்த்தானந்துருத்தியம்பேர்
தேறுமின்வேள்விக்குடிதிருத்தோணிபுரம்பழன
மாறுமின்போற்சடைவைத்தவனாரூரிடைமருதென்
றேறுமினீரெம்பிரான்கச்சியேகம்பமுன்னினைந்தே.
60
நினைவார்க்கருளும்பிரான்றிருச்சோற்றுத்துறைநியமம்
புனைவார்சடையோன்புகலூர்புறம்பியம்பூவணநீர்
பனைவார்பொழிற்றிருவெண்காடுபாச்சிலதிகையென்று
நினைவார்தருநெஞ்சினீர்கச்சியேகம்பநண்ணுமினே.
61
நண்ணிப்பரவுந்திருவாவடுதுறைநல்லநல்லூர்
மண்ணிற்பொலிகடம்பூர்கடம்பந்துறைமன்னுபுன்கூ
ரெண்ணற்கரியபராய்த்துறையோர்கொளெதிற்கொள்பாடிக்
கண்ணிப்பிறைச்சடையோன்கச்சியேகம்பங்காண்மின்சென்றே.
62
சென்றேறிவிண்ணுறுமண்ணாமலைதிகழ்வல்லமென்பூ
வின்றேறல்பாய்திருமாற்பேறுபாசூரெழிலழுந்தூர்
வன்றேரவன்றிருவிற்பெறும்பேறுமதிலொற்றியூர்
நின்றேர்தருகச்சியேகம்பமேயார்நிலாவியவே.
63
நிலாவுபுகழ்திருவோத்தூர்திருவாமாத்தூர்நிறைநீர்
சுலாவுசடையோன்புலிவலம்வில்வலங்கொச்சைகொண்டர்
குலாவுந்திருப்பனங்காடுநன்மாகறல்கூற்றம்வந்தா
லலாயென்றடியார்க்கருள்புரியேகம்பராலயமே.
64
ஆலையங்கார்கருகாவைகச்சூர்திருக்காரிகரை
வேலையங்கேறுதிருவான்மியூர்திருவூறன்மிக்க
சோலையங்கார்திருப்போந்தைமுக்கோணந்தொடர்கடுக்கை
மாலையன்வாழ்திருவாலங்காடேகம்பம்வாழ்த்துமினே.
65
வாழப்பெரிதெமக்கின்னருள்செய்யுமலர்க்கழலோர்
தாழைச்சடைத்திருவேகம்பர்தம்மைத்தொழாதவர்போய்
வாழ்ப்பரற்சுரமாற்றாதளிரடிபூங்குழலெம்
ஏழைக்கிடையிறுக்குங்குயபாரமியக்குறினே.
66
உறுகின்றவெவ்வழலக்கடமிக்கொடிக்குன்பின்வரப்
பெறுகின்றவண்மையினாலையபோருளேகம்பனார்
துறுகின்றமென்மலர்த்தண்பொழிற்கச்சியைச்சூழ்ந்திளையோர்
குறுகின்றபூங்குவளைக்குறுந்தண்பணையென்றுகொளே.
67
கொள்ளுங்கடுங்கதிரிற்கள்ளித்தீத்சிலவேயுலர்ந்து
விள்ளும்வெடிபடும்பாலையென்பாவைவிடலைபின்னே
தெள்ளும்புனற்கச்சியுட்டிருவேகம்பர்சேவடியை
யுள்ளுமதுமறந்தாரெனப்போவதுரைப்பரிதே.
68
பரிப்பருந்திண்மைப்படையதுகானரெனிற்சிறகு
விரிப்பருந்துக்கிரையாக்கும்வெய்யேனஞ்சலஞ்சடைமேற்
றரிப்பருந்திண்கங்கையார்திருவேகம்பமன்னபொன்னே
வரிப்பருந்திண்சிலையேயுமராயின்மறைகுவனே.
69
வனவரித்திண்புலியின்னதளேகம்பமன்னருளே
யெனவருபொன்னணங்கென்னணங்கிற்கெனெழிற்கழங்குத்
தனவரிப்பந்துங்கொடுத்தெனைப்புல்லியுமிற்பிரிந்தே
யின்வரிக்கல்லதர்செல்வதெங்கேயொல்குமேழைநெஞ்சே.
70
நெஞ்சார்தரவின்பஞ்செய்கழலேகம்பர்கச்சியன்னாள்
பஞ்சாரடிவைத்தபாங்கிவையாங்கவட்பெற்றெடுத்த
வெஞ்சார்வொழியத்தன்பின்செலமுன்செல்வெடுவெடென்ற
வஞ்சாவடுதிறற்காளைதன்போக்கிவையந்தத்திலே.
71
இலவவெங்கானுனையல்லாற்றொழுஞ்சரணேகம்பனார்
நிலவுஞ்சுடரொளிவெய்யவனேதண்மலர்மிதித்துச்
செலவும்பருக்கைகுளிரத்தளிரடிசெல்சுரத்துன்
னுலவுங்கதிர்தணிவித்தருள்செய்யுன்னுறுதுணைக்கே.
72
துணையொத்தகோவையும்போலெழிற்பேதையுந்தோன்றலுமுன்
னிணையொத்தகொங்கையொடேயொத்தகாதலொடேகினரே
யணையத்தரேறொத்தகாளையைக்கண்டனமற்றவரெற்
பிணையொத்தனோக்குடைப்பெண்ணிவடன்னொடும்பேசுமினே.
73
மின்னலிக்கும்வணக்கத்திடையாளையுமீளியையு
நென்னலிப்பாக்கைவந்தெய்தினிரேலெம்மனையிற்கண்டீர்
பின்னரிபோக்கருங்குன்றுகடந்தவரின்றுகம்பர்
மன்னரிதேர்ந்துதொழுங்கச்சிநாட்டிடைவைகுவரே.
74
உவரச்சொல்வேடுடைக்காடுகந்தாடியவேகம்பனார்
அவரக்கன்போனவிமானத்தையாயிரமுண்மைசுற்றுந்
துவரச்சிகரச்சிவாலயஞ்சூலந்துலங்குவிண்மேற்
கவரக்கொடிதிளைக்குங்கச்சிகாணினுங்கார்மயிலே.
758
கார்மிக்ககண்டத்தெழிற்றிருவேகம்பர்கச்சியின்வா
யேர்மிக்கசேற்றெழினென்னடுவோரொலிபொன்மலைபோற்
போர்மிக்கசென்னெல்குவிப்போரொலிகருப்பாலையொலி
நீர்மிக்கமாக்கடலின்னொலியேயொக்குநேரிழையே.
76
நேர்த்தமையாமைவிறற்கொடுவேடர்நெடுஞ்சுரத்தைப்
பார்த்தமையாலிமைதீர்ந்தகண்பொன்னேபகட்டுரிவை
போர்த்தமையாலுமைநோக்கருங்கம்பர்கச்சிப்பொழிலுட்
சேர்த்தமையாலிமைப்போதணிசீதஞ்சிறந்தனவே.
77
சிறைவண்டுபாடுங்கமலக்கிடங்கிவைசெம்பழுக்காய்
நிறைகொண்டபாளைக்கமுகின்பொழிலவைதீங்கனியின்
பொறைகொண்டவாழைப்பொதும்புவைபுன்சடையேகம்பனார்
நறைகொண்டபூங்கச்சிநாடெங்குமிவ்வண்ணநன்னுதலே.
78
நன்னுதலார்கருங்கண்ணுஞ்செவ்வாயுமிவ்வாறெனப்போய்
மன்னிதழார்திருநீலமுமாம்பலும்பூப்பவள்ளை
யென்னவெலாமொப்புக்காதென்றுவீறிடுமேகம்பனார்
பொன்னுதலார்விழியார்கச்சிநாட்டுளிப்பொய்கையுமே.
79
உள்வார்குளிரநெருங்கிக்கடுங்கிடங்கிட்டநன்னீர்
வள்வாளைகளொடுசெங்கயன்மேய்கின்றவெங்களையாட்
கொள்வார்பிறவிகொடாதவேகம்பர்குளிர்குவளை
கள்வார்தருகச்சிநாட்டெழிலேரிகளப்பரப்பே.
80
பரப்பார்விசும்பிற்படிந்தகருமுகிலன்னநன்னீர்
தரப்பாசிகண்மிகுபண்பொடுசேம்படர்தண்பணைவாய்ச்
சுரப்பாரெருமைமலர்தின்னத்துன்னுகராவொருத்தல்
பொரப்பார்பொலிநுதலாய்செல்வக்கம்பர்தம்பூங்கச்சியே.
81
கச்சார்முலைமலைமங்கைகண்ணாரவெண்ணான் கறமும்
வைச்சார்மகிழ்திருவேகம்பர்தேவிமகிழவிண்ணோர்
விச்சாதரர்தொழுகின்றவிமானமுந்தன்மமறா
வச்சாலையும்பரப்பாங்கணிமாடங்களோங்கினவே.
82
ஒங்கினவூரகமுள்ளகமும்பருருகிடமாம்
பாங்கினினின்றதரியுறைபாடகந்தெவ்விரிய
வாங்கினவாட்கண்ணிமற்றவர்மைத்துனிவான்கவிக
டாங்கினநாட்டிருந்தாளதுதன்மனையாயிழையே.
83
இழையாரரவணியேகம்பர்நெற்றிவிழியின்வந்த
பிழையாவருணம்பிராட்டியதின்னபிறங்கலுன்னு
நுழையாவருதிரிசூலத்தணோக்கரும்பொன்கடுக்கைத்
தழையார்பொழிலுதுபொன்னேநமக்குத்தளர்வில்லையே.
84
தளராமிகுவெள்ளங்கண்டுமையோடித்தமைத்தழுவக்
கிளையார்வளைக்கைவடுப்படுமீங்கோர்கிறிபடுத்தார்
வளமாப்பொழிற்றிருவேகம்பமற்றிதுவந்திறைஞ்சி
யுளராவதுபடைத்தோமடவாயிவ்வுலகத்துளே.
85
உலவியமின்வடம்வீசியுருமதிர்வுண்முழங்கி
வலவியமாமதம்பாய்முகில்யானைகள்வானில்வந்தாற்
சுலவியவார்குழல்பின்னரென்பாரிரெனநினைந்து
நிலவியவேகம்பர்கோயிற்கொடியன்னநீர்மையனே.
86
நீரென்னிலும்மழுங்கண்முகில்காணெஞ்சமஞ்சலையென்
றாரென்னிலுந்தமராயுரைப்பாரமராபதிக்கு
நேரென்னிலுந்தகுங்கச்சியுளேகம்பர்நீண்மதில்வாய்ச்
சேரென்னிலுந்தங்கும்வாட்கண்ணிதானன்பர்தேர்வரவே.
87
வரங்கொண்டிமையோர்நலங்கொள்ளுமேகம்பர்கச்சியன்னாய்
பரங்கொங்கைதூவன்மினீர்முத்தமன்பர்தந்தேரின்முன்னே
தரங்கொண்டுபூக்கொண்டுகொன்றைபொன்னாகத்தண்காந்தள்கொத்தின்
கரங்கொண்டுபொற்சுண்ணமேந்தவும்போந்தனகார்முகிலே.
88
கார்முகமாரவண்கைக்கொண்டகம்பர்கழற்றொழுது
போர்முகமாப்பகைவெல்லச்சென்றார்நினையார்புணரி
நீர்முகமாகவிருண்டுசுரந்ததுநேரிழைநா
மார்முகமாகவினைக்கட[1]னீந்துதும்வெய்துயிர்ப்பே.
89
உயிராயினவன்பர்தேர்வரக்கேட்டுமுன்வாட்டமுற்ற
பயிரார்புயல்பெற்றதென்னநம்பல்வளைபான்மைகளாந்
தயிரார்பானெய்யொடுமாடியவேகம்பர்தம்மருள்போற்
கயிராவளையழுந்தக்கச்சிறுத்தனகார்மயிலே.
90
கார்விடைவண்ணத்தனன்றேழ்தழுவினுமின்றுதனிப்
போர்விடைப்பெற்றெதிர்மாண்டாரெனவண்டர்போதவிட்டார்
தார்விடையேகம்பர்கச்சிப்புறவிடைத்தம்பொனன்பூண்
மார்விடைவைகல்பெறுவார்தழுவமழவிடையே.
91
விடைபாய்கொடுமையெண்ணாதுமேலாங்கன்னிவேற்கருங்கட்
கடைபாய்மனத்திளங்காளையர்புல்கொலிகம்பர்கச்சி
மடைபாய்வயலிளமுல்லையின்மான்கன்றொடான்கன்றினங்
கடைபாய்தொறும்பதிமன்றிற்கடல்போற்கலந்தெழுமே.
92
எழுமலர்த்தண்பொழிலேகம்பர்கச்சியிருங்கடல்வாய்க்
கொழுமணப்புன்னைத்துணர்மணற்குன்றிற்பரதர்கொம்பே
செழுமலர்ச்சேலல்லவாளல்லவேலல்லநீலமல்ல
முழுமலர்க்கூரம்பினோரிரண்டாலுமுகத்தெனவே.
93
முகம்பாகம்பண்டமும்பாகமென்றோதியமூதுரையை
யுகம்பார்த்திரேலென்னலமுயரேகம்பர்கச்சிமுன்னீ
ரகம்பாகவார்லினளவில்லையென்னின்பவளச்செவ்வாய்
நகம்பாற்பொழிற்பெற்றநாமுற்றவர்கொள்கநன்மயலே.
[1]நீந்துமயர்வுயிர்ப்பே - எனவும் பாடம்.
94
மயக்கத்தநல்லிருட்கொல்லுஞ்சுறவொடெறிமகர
மியக்கத்திடுசுழியோதங்கழிகிளரக்கழித்தார்
துயக்கத்தவர்க்கருளாக்கம்பர்கச்சிக்கடலபொன்னூன்
முயக்கத்தகல்வுபொறாள்கொண்கநீர்வருமூர்க்கஞ்சுமே.
95
மேயிரைவைகக்குருகுணராமதுவுண்டுபுன்னை
மீயிரைவண்டோதமர்புகடியவிரிகடல்வாய்ப்
பாயிரைநாகங்கொண்டோன்றொழுங்கம்பர்கச்சிப்பவ்வநீர்
தூயிரைகானன்மற்றாரறிவார்நந்துறைவர்பொய்யே.
96
பொய்வருநெஞ்சினர்வஞ்சனையாரையும்போகவிடா
மெய்வரும்பேரருளேகம்பர்கச்சிவிரையினவாய்க்
கைவரும்புள்ளொடுசங்கினமார்ப்பநஞ்சேர்ப்பர்திண்டே
ரவ்வருதாமங்களினம்வந்தார்ப்பவணைகின்றதே.
97
இன்றுசெய்வோமிதனிற்றிருவேகம்பர்க்கெத்தனையு
நன்றுசெய்வோம்பணிநாளையென்றுள்ளிநெஞ்சேயுடலிற்
சென்றுசெயாரைவிடுந்துணைநாளும்விடாதடிமை
நின்றுசெய்வாரவர்தங்களினீணெறிகாட்டுவரே.
98
காட்டிவைத்தார்தம்மையரங்கடிப்பூப்பெய்யக்காதல்வெள்ள
மீட்டிவைத்தார்தொழுமேகம்பரேதுமிலாதவெம்மைப்
பூட்டிவைத்தார்தமக்கன்பதுபெற்றுப்பதிற்றுப்பத்துப்
பாட்டிவைத்தார்பரவித்தொழுதாமவர்பாதங்களே.
99
பாதம்பரவியோர்பித்துப்பிதற்றிலும்பல்பணியும்
மேதம்புகுதாவகையருளேகம்பரேத்தெனவே
போதம்பொருளாற்பொலியாதபுன்சொற்பனுவல்களும்
வேதம்பொலியும்பொருளாமெனக்கொள்வர்மெய்த்தொண்டரே.
100

திருச்சிற்றம்பலம்

திருவேகம்பமுடையார் திருவந்தாதி முற்றிற்று.

4 திருவொற்றியூர்த்தொகை .


கணபதிதுணை.
திருச்சிற்றம்பலம்.

ஆசிரியப்பா.

இருநிலமடந்தை யியல்பினினுடுத்த
பொருகடன்மேகலை முகமெனப்பொலிந்த
ஒற்றிமாநக ருடையோயுருவின்
பெற்றியொன்றாப் பெற்றோர்யாரே
[2]மின்னியமின்னின் பிறக்கநின்சடையே
மன்னியவண்டநின் சென்னியின்வடிவே
பாவகன்பரிதி பனிமதிதன்னொடு
மூவகைச்சுடருநின் னுதனேர்நாட்டம்
தன்னொளியாரந் தாராகணமே
விண்ணவர்முதலா வேறோரிடமாக்
கொண்டுறைவிசும்பே கோலநின்னாகம்
எண்டிசைதிண்டோ ளிருங்கடலுடையே
அணியுடையல்குலு மவனிமண்டலமே
மணிமுடிப்பாந்தணின் றாளினைவழக்கே
ஒழியாதோடிய மாருதமுயிர்ப்பே
வழுவாவோசை முழுதுநின்வாய்மொழி
வானவர்முதலா மன்னுயிர்பரந்த
ஊனமின்ஞானத் தொகுதிநின்னுணர்வே.
நெருங்கியவுலகினி னீர்மையுநிற்றலும்
சுருங்கலும் விரிதலுந் தோற்றநின்றொழிலே
அமைத்தலுமழித்தலு மாங்கதன்முயற்சியும்
இமைத்தலுவிழித்தலு மாகுநின்னியல்பே
என்றிவைமுதலா வியல்புடைவடிவினோ
டொன்றியதுப்புரு விருவகையாகி
முத்திறக்குணத்து நால்வகைப்பிறவி
அத்திறத்தைம்பொறி யறுவகைச்சமயமோ
டேழுலகாகி யெண்வகைமூர்த்தியோ
டுழிதோறுழி யெண்ணிறந்தோங்கி
எவ்வகையளவினிற் கூடிநின்
றவ்வகைப்பொருளுநீ யாகியவிடத்தே.
[1] ஒருபா வொருபதெனவுங் கூறுவர்
[2] மின்னினியங்கு நின்சடை எனவும் பாடம்.

1
இடத்துறைமாதரோ டீறுடம்பென்றும்
நடத்தினைநள்ளிரு ணவிற்றினையென்றும்
புலியதளென்பொடு புனைந்தோயென்றும்
பலிதிரிவாழ்க்கை பயின்றோயென்றும்
திருவமர்மாலொடு திசைமுகனென்றும்
அருவமுமுருவமு மானாயென்றும்
உளனேயென்று மிலனேயென்றும்
தளரானென்றுந் தளர்வோனென்றிம்
ஆதியென்று மசோகினனென்றும்
போதியிற்பொலிந்த புராணனென்றும்
இன்னவைமுதலாத் தாமறியளவையின்
மன்னியநூலுடன் பன்மையுண்மயங்கிப்
பிணங்குமாந்தர் பெற்றிமைநோக்கி
அணங்கியவவ்வவர்க்கவ் வவையாகியடை
பற்றிய பளிங்குப்போலும்
ஒற்றிமாநகருடை யோயுருவே.

2
உருவாமுலகுக் கொருவனாகிய
பெரியோய்வடிவின் பிறிதிங்கின்மையின்
எப்பொருளாயினு மீங்குளதாமெனின்
அப்பொருளுனக்கே யவயவமாதலின்
முன்னியமூவெயின் முழங்கெரியூட்டித்
தொன்னீர்வையகந் துயர்கெடச்சூழ்ந்ததும்
வேள்விமூர்த்திதன் றலையினைவிடுத்ததும்
நீள்விசும்பாளிதன் றோளினை நெரித்ததும்
ஓங்கியமறையோர் கொருமுகமொழித்ததும்
பூங்கணைவேளைப் பொடிபடவிழித்ததும்
திறல்கெடவரக்கனைத் திருவிரலுறுத்ததும்
குறைபடக்கூற்றினைக் குறிப்பினிலடர்த்ததும்
என்றிவைமுதலா வாள்வினையெல்லாம்
நின்றுழிச்செறிந்தவை நின்செயலாதலின்
உலவாத்தொல்புக ழொற்றியூர
பகர்வோர்நினக்கு வேறின்மைகண்டவர்
நிகழ்ச்சியினிகழி னல்லது
புகழ்ச்சியிற்படுப்பரோ பொருளுணர்ந்தோரே.

3
பொருளுணர்ந்தோங்கிய பூமகன்முதலா
இருடுணையாக்கையி லியங்குமன்னுயிர்
உருவினுமுணர்வினு முயர்வினும்பணியினும்
திருவினுந்திறலினுஞ் செய்தொழில்வகையினும்
வெவ்வேறாகி வினையொடும்பிரியா
தொவ்வாப்பன்மையுண் மற்றவரொழுக்கம்
மன்னியவேலையுள் வான்றிரைபோல
நின்னிடையெழுந்து நின்னிடையாகியும்
பெருகியுஞ்சுருங்கியும் பெயர்ந்துந்தோன்றியும்
விரவியும்வேறாய் நின்றனைவிளக்கம்
ஒவாத்தொல்புக ழொற்றியுர
மூவாமேனி மூதல்வநின்னருள்
பெற்றவரறியி னல்லது
மற்றவரறிவரோ நின்னிடைமயக்கே.

4
மயக்கமில்சொன்னீ யாயினுமற்றவை
துயக்கநின்றிற மறியாச்சூழலும்
உறையிடமுள்ள மாயினுமற்றது
கறைபடவாங்கே கரந்தகள்ளமும்
செய்வினையுலகினிற் செய்வோயெனினும்
அவ்வினைப்பயனீ யணுகாவணிமையும்
இனத்திடையின்பம் வேண்டினிற்பணிவோர்
மனத்திடைவாரி யாகி வனப்பும்
அன்பினடைந்தவர்க் கணிமையுமல்லவர்ச்
சேய்மையு நாடொறும்
என்பினையுருக்கு மியற்கையவாதலில்
கண்டவர்தமக்கே யுனுடல்கழிதல்
உண்டெனவுணர்ந்தென மொற்றியூர
மன்னியபெரும்புகழ் மாதவ
துன்னியசெஞ்சடைத் தூமதியோயே.

5
தூமதிசடைமிசைச் சூடுதறூநெறி
ஆமதியானென வமைத்தவாறே
அறனுருவாகிய வானேறேறுதல்
இறைவன்யானென வியற்றுமாறே
அதுவவளவனென நின்றமையார்க்கும்
பொதுநிலையானென வுணர்த்தியபொருளே
முக்கணனென்பது முத்தீவேள்வியில்
தொக்கதென்னிடை யென்பதோர்சுருக்கே
வேதமான்மறி யேந்துதன்மற்றதன்
நாதனானென நவிற்றுமாறே
மூவிலையொருதாட் சூலமேந்துதன்
மூவரும்யானென மொழிந்தவாறே
எண்வகைமூர்த்தி யென்பதிவ்வுலகினில்
உண்மையானென வுணர்த்தியவாறே
நிலநீர்தீவளி யகல்வானென்ரும்
உலவாத்தொல்புக ழுடையோயென்றும்
பொருளுநற்பூதப் படையோயென்றும்
தெருளநின்ருலகினிற் றெருட்டுமாறே
ஈங்கிவைமுதலா வண்ணமும்வடிவும்
ஓங்குநின்பெருமை யுணர்த்தவுமுணராத்
தற்கொலிமாந்தர் தம்மிடைப்பிறந்த
சொற்பொருள்வண்மையிற் சுழலுமாந்தர்க்
காதியாகிய வறுதொழிலாளர்
ஓதலோவா வொற்றியூர
சிறுவர்தஞ்செய்கையிற் படுத்து
முறுவலித்திருத்திநீ முகப்படுமளவே.

6
அளவினிலிறந்த பெருமையையாயினும்
எனதுளமகலா வொடுங்கிரிநின்றுளையே
மெய்யினையிறந்த மெய்யினையாயினும்
வையகமுழுதுநின் வடிவெனப்படுமே
கைவலத்திலைநீ யெனினுங்காதல்
செய்வோர்வேண்டுஞ் சிறப்பொழியாயே
சொல்லியவகையாற் றுணையலையாயினும்
நல்லுயிர்கூட்ட நாயகனீயே
எங்குமுள்ளோ யெனினும்வஞ்சனை
தங்கியவரைச் சார்விலைநீயே
அஃதான்று
பிறவாப்பிறவியை பெருகாப்பெருமையை
துறவாத்துறவியை தொடராத்தொடர்ச்சியை
நுகராநுகர்ச்சியை நுணுகாநுணுக்கினை
அகலாவகற்சியை யணுகாவணிமையை
செய்யாச்செய்கையை சிறவாச்சிறப்பினை
வெய்யைதணியை விழுமியைநொய்யை
செய்யைபசியை வெளியைகரியை
ஆக்குதியழித்தி யானபல்பொருள்
நீக்குதிதொகுத்தி நீங்குதியடைதி
ஏனையவாகிய வெண்ணில்பல்குணம்
நினைதொறுமயக்கு நீர்மையவாதலின்
ஒங்குகடலுடுத்த வொற்றியூர
ஈங்கிதுமொழிவார் தம்
சொன்னிலைசுருங்கினல்லது
நின்னியலறிவோர் யாரிருநிலத்தே.

7
நிலத்திடைப்பொறையா யவாவினினீண்டு
சொலத்தகுபெருமைத் தூராவாக்கை
மெய்வளியையொடு பித்தொன்றாக
ஐவகைனெடுங்காற் றாங்குடனடிப்ப
நரையெனுநுரையே நாடொறும்வெளுப்பத்
திரையுடைத்தோலே செழுந்திரையாகக்
கூடியகுருதி நீரினுணிறைந்து
மூடியவிரும லோசையின்முழங்கிச்
சுடுபசிவெகுளிச் சுறலினமெறியக்
குடரெனு[3] மாலாக் கூட்டம்வந்தொலிப்ப
ஊன்றடியெலும்பி னுட்டிடலடைந்து
தோன்றியபல்பிணிப் பின்னகஞ்சுழலக்
கால்கையினரம்பே கண்டமாக
மேதகுநிணமே மெய்ச்சாலாக
முழக்குடைத்துளையே முகங்களாக
வழுக்குடைமூக்கா றோதம்வந்தொலிப்ப
இப்பரிசியற்றிய வுடலிருங்கடலுட்
டுப்புரவென்னுஞ் சுழித்தலைப்பட்டிங்
காவாவென்னுநின் னருளினைப்பெற்றவர்
நாவாயாகிய நாதநின்பாத
முந்திச்சென்று முறைமையின்வணங்கிச்
சிந்தைக்கூம்பினைச் செவ்வியலிருத்தி
உருகிய்வார்வப் பாய்பூரித்துப்
பெருகியநிறையெனுங் கயிற்றிடைப்பிணித்துத்
துன்னியசுற்றச் சுடர்க்கயிறறுத்து
மன்னியவொருமைப்f பொறியினைமுறுக்கிக்
காமப்பாரெனுங் கடுவெளியற்ற
தூம்ச்சோதிச் சுடர்க்குற நிறுத்திச்
சுருங்காவுணர்ச்சித் துடுப்பினைத்துழாவி
நெருங்காவளவி னீள்கரையேற்ற
வாங்கயாத்திரை போக்குதிபோலும்
ஓங்குகடலுடுத்த வொற்றியூரோயே.
[3] ஆலா - ஓர்வகை நீர்ப்பறவை.

8
ஒற்றியூர வுலவாநின்குணம்
பற்றியாரப் பரவுதல்பொருட்டா
என்னிடைப்பிறந்த வின்னாப்புன்மொழி
நின்னிடையணுகா நீர்மையவாதலின்
ஆவலித்தழுதலி லகன்றதம்மனைக்
கேவலஞ்சேய்மையிற் கேளாளாயினும்
பிறித்தற்கரிய பெற்றியதாகிக்
குறைவினிலார்த்துங் குழவியதியல்வினை
யறியாதெண்ணி லூழிப்பிறவியின்
மயங்கிக்கண்ணிலர் கண்பெற்றாங்கே
தாய்தலைப்படநின் றாளிணைவணக்கம்
வாய்தலையறியா மயக்குறும்வினையேன்
மல்கியவின்பத் தோடுடன்கூடிய
வெல்லையிலவாவினி லியற்றியவாகக்
கட்டியநீயே யவிழ்க்கினல்ல
தெட்டனையாயினும் யானிதற்கறியேன்
றுன்னிடையிருளெனுந் தூற்றிடையொதுங்கி
வெள்ளிடைகாண விருப்புறுவினையேன்
றந்தையுந்தாயுஞ் சாதியுமறிவுநஞ்
சிந்தையுந்திருவுஞ் செல்கதித்திறனுந்
துன்பமுந்துறவுந் தூய்மையுமறிவு
மின்பமும்புகழு மிவைபலபிறவுஞ்
சுவையொளியூரோசை நாற்றந்தோற்ற
மென்றிவைமுதலா விளங்குவவெல்லா
மொன்றநின்னடிக்கே யொருங்குடன்வைத்து
நின்றனன்றனியே நின்னடியல்லது
சார்வுமற்றின்மையிற் றளர்ந்தோர்காட்சிச்
சேர்விடமதனைத் திறப்படநாடி
யெய்துதற்கரியோ யானினிச்
செய்வதுமறிவனோ தெரியுங்காலே

9
காலற்சீறிய கழலோய்போற்றி
மூலத்தொகுதி முதல்வ போற்றி
ஒற்றிமாநக ருடையோய்போற்றி
முற்றுமாகிய முதல்வபோற்றி
யணைதொறுஞ்சிறக்கு மமிர்தேபோற்றி
யிணைபிறிதில்லா வீசபோற்றி
யார்வஞ்செய்பவர்க் கணியோய்போற்றி
தீர்விலின்சுவைத் தேனேபோற்றி
வஞ்சனைமாந்தரை மறந்தோய்போற்றி
நஞ்சினையமிர்தா நயந்தோய்போற்றி
விரிகடல்வையக வித்தேபோற்றி
புரிவுடைவனமாப் புணர்ந்தோய்போற்றி
காணமுன்பொருள் கருத்துறைசெம்மைக்
காணியாகிய வரனேபோற்றி
வெம்மைதண்மையென் றிவைகுணமுடைமையிற்
பெண்ணோடாணெனும் பெயரோய்போற்றி
மேவியவவர்தமை வீட்டினிற்படுக்குந்
தீபமாகிய சிவனே போற்றி.
மாலோய்போற்றி மறையோய்போற்றி
மேலாய்போற்றி வேதியபோற்றி
சந்திரபோற்றி தழலோய்போற்றி
யிந்திரபோற்றி யிறைவபோற்றி
யமராபோற்றி யழகாபோற்றி
குமராபோற்றி கூத்தாபோற்றி
பொருளேபோற்றி போற்றியென்றுனை
நாத்தழும்பிருக்க நவிற்றினல்ல
தேற்றுதற்குரியோர் யாரிருநிலத்தே.
10

திருச்சிற்றம்பலம்.
திருவொற்றியூர்த்தொகை முற்றிற்று.


5. திருப்பாடற்றிரட்டு

திருவெண்காட்டுத் திருவிசைப்பா.

பூதமுங்கரணம் பொறிகளைம்புலனும் பொருந்திய குணங்க
ளோர்மூன்றும், நாதமுங்கடந்தவெளியிலேநீயுநானுமாய்நிற்குநாளு
ளதோ, வாதமுஞ்சமயபேதமுங்கடந்த மனோலய வின்பசாகரனே,
ஏதுமொன்றறியேன்யாதுநின்செயலே யிறைவனேயேகநாயகனே.
1
யாவரேயிருந்தும் யாவரேவாழ்ந்தும் யாவரேயெமக்குறவாயும்,
தேவரீரல்லாற் றிசைமுகமெனக்குத் திருவுளமறிய வேறுளதோ,
பாவலானொருவன் செந்தமிழ்க்கிரங்கிப் பரவையாருடலைமாற்ற,
ஏவலாளாகியிரவெலாமுழன்றவிறைவனே யேகநாயகனே.
2
உண்டதேயுண்டு முடுத்ததேயுடுத்து மடுத்தடுத்துரைத்த யுரைத்தும்,
கண்டதேகண்டுங் கேட்டதேகேட்டுங் கழிந்தனக நாளெல்லாம்,
விண்டதா மரைமேலன்னம் வீற்றிருக்கும்விழ வீதிவெண்காடா,
அண்டரேபோற்ற வம்பலத்தாடுமையனேயு மாறருளே.
3
வேறு.
மத்தளையிருண்டானுமலர்மிசைமன்னினானும்
நித்தமுந்தேடிக்காணாநிமலனே யமலமூர்த்தி
செய்த்தளைக்கயல்பாய்நாங்கூர்ச்சேந்தனைவேந்தனிட்ட
கைத்தளைநீக்கியென்முன் காட்டுவெண்காட்டுளானே.

திருச்செங்காடு.

நெருப்பானமேனியர்செங்காட்டிலாத்திநிழலருகே
யிருப்பார்திருவுளமெப்படி யோவின்னமென்னையன்னைக்
கருப்பாசயக்குழிக்கேதள்ளுமோகண்ணன்காணரிய
திருப்பாதமேதருமோதெரியாதுசிவன்செயலே.


திருவொற்றியூர்.

ஐயுந்தொடர்ந்துவிழியுஞ்செருகியறிவழிந்து
மெய்யும்பொய்யாகிவிடுகின்றபோதொன்று வேண்டுவன்யான்
செய்யுந்திருவொற்றியூருடையீர்திருநீறுமிட்டுக்
கையுந்தொழப்பண்ணியைந்தெழுத்தோதவுங்கற்பியுமே.

சுடப்படுவாரறியார்புரமூன்றையுஞ்சுட்டபிரான்
றிடப்படுமாமதிற்றென்னொற்றியூரன்றெருப்பரப்பி
னடப்பவர்பொற்பதநந்தலைமேற்படநன்குருண்டு
கிடப்பதுகாண்மனமேவிதியேட்டைக்கிழிப்பதுவே.

திருவிடைமருதூர்.

காடேதிரிந்தென்னகாற்றேபுசித்தென்னகந்தைசுற்றி
யோடேயெடுத்தென்னவுள்ளன்பிலாதவரோங்குவிண்ணோர்
நாடேயிடைமருதீசர்க்குமெய்யன்பர்நாரியர்பால்
வீடேயிருப்பினுமெய்ஞ்ஞானவீட்டின்பமேவுவரே.
1
தாயும்பகைகொண்டபெண்டீர்பெரும்பகைதன்னுடைய
சேயும்பகையுறவோரும்பகையிச்செகமும்பகை
யாயும்பொழுதிலருஞ்செல்வநீங்கிலிங்காதலினாற்
றோயுநெஞ்சேமருதீசர்பொற்பாதஞ்சுதந்திரமே.
2

திருக்கழுக்குன்றம்.

காடோசெடி யோகடற்புறமோகனமேமிகுந்த
நாடோநகரோநகர்நடுவோநலமேமிகுந்த
வீடோபுறந்திண்ணையோதமியேனுடல்வீழுமிட
நீடோய்கழுக்குன்றிலீசாவுயிர்த்துணைநின்பதமே.

திருக்காளத்தி.

பத்தும்புகுந்துபிறந்துவளர்ந்துபட்டாடைசுற்றி
முத்தும்பவளமும்பூண்டோடியாடிமுடிந்தபின்பு
செத்துக்கிடக்கும்பிணத்தருகேயினிச்சாம்பிணங்கள்
நத்துங்கணக்கென்னகாண்கயிலாபுரிக்காளத்தியே.
1
பொன்னாற்பிரயோசனம் பொன்படைத்தாற்குண்டு பொன்ப
டைத்தோன், றன்னாற்பிரயோசனம் பொன்னுக்கங் கேதுண்டத்
தன்மையைப்போ, லுன்னாற்பிரயோசனம் வேணதெல்லாமுண்டு
னைப்பணியு, மெண்ணாற்பிரயோசனமேதுண்டு காளத்தியீசுரனே.
2
வாளான்மகவரிந்தூட்டவல்லேநல்லன்மாதுசொன்ன
சூளாலிளமைதுறக்கவல்லேனல்லன்றொண்டுசெய்து
நாளாறிற்கண்ணிடந்தப்பவல்லேனல்லனானினிச்சென்
றாளாவதெப்படியோதிருக்காளத்தியப்பருக்கே.
3
முப்போதுமன்னம்புசிக்கவுந்தூங்கவுமோகத்தினாற்
செப்போதிளமுலையாருடன்சேரவுஞ்சீவன்விடு
மப்போதுகண்கலக்கப்படவும்மமைத்தாயையனே
யெப்போதுகாணவல்லேன்றிருக்காளத்தியீசுரனே.
4
இரைக்கேயிரவும்பகலுந்திரிந்திங்கிளைத்துமின்னா
ரரைக்கேயவலக்குழியருகேயசும்பார்ந்தொழுகும்
புரைக்கேயுழலுந்தமியேனையாண்டருள்பொன்முகலிக்
கரைக்கேகல்லாலநிழற்கீழமர்ந்தருள்காளத்தியே.
5
நாறுங்குருதிச்சலதாரைதோற்புரைநாடொறுஞ்சீ
யூறுமலக்குழிகாமத்துவாரமொளித்திடும்புண்
டேறுந்தசைப்பிளப்பந்தரங்கத்துளசிற்றின்பம்விட்
டேறும்பதந்தருவாய்திருக்காளத்தியீசுரனே.
6

கைலாயம்.

கான்சாயும்வெள்ளிமலைக்கரசேநின்கழனம்பினே
னூன்சாயுஞ்சென்மமொழித்திடுவாய்கரவூரனுக்காய்
மான்சாயச்செங்கைமழுவலஞ்சாயவனைந்தகொன்றைத்
தேன்சாயநல்லதிருமேனிசாய்த்தசிவக்கொழுந்தே.
1
இல்லந்துறந்துபசிவந்தபோதங்கிரந்துதின்று
பல்லுங்கறையற்றுவெள்வாயுமாயொன்றிற்பற்றுமின்றிச்
சொல்லும்பொருளுமிழந்துசுகானந்தத்தூக்கத்திலே
யல்லும்பகலுமிருப்பதென்றோகயிலாயத்தனே.
2
சினந்தனையற்றுப்பிரியமுந்தானற்றுச்செய்கையற்று
நினைந்ததுமற்றுநினையாமையுமற்றுநிர்ச்சிந்தனாய்த்
தனந்தனியேயிருந்தானந்தநித்திரைதங்குகின்ற
வனந்தலிலென்றிருப்பேனத்தனேகயிலாயத்தனே.
3
கையாரவேற்றுநின்றங்ஙனத்தின்றுகரித்துணியைத்
தையாதுடுத்துநின்சன்னிதிக்கேவந்துசந்ததமு
மெய்யாரநிற்பணிந்துள்ளேயுரோமம்விதிர்விதிர்ப்ப
வையாவென்றோலமிடுவதென்றோகயிலாயத்தனே.
4
நீறார்த்தமேனியுரோமஞ்சிலிர்த்துளநெக்குநெக்குச்
சேறாய்க்கசிந்துகசிந்தேயுருகிநின்சீரடிக்கே
மாறாத்தியானமுற்றானந்தமேற்கொண்டுமார்பிற்கண்ணீ
ராறாய்ப்பெருகக்கிடப்பதென்றோகயிலாயத்தனே.
5
செல்வரைப்பின்சென்றுசங்கடம்பேசித்தினந்தினமும்
பல்லினைக்காட்டிப்பரிதவியாமற்பரானந்தத்தி
னெல்லையிற்புக்கிடவேகாந்தமாயெனக்காமிடத்தே
யல்லலற்றென்றிருப்பேனத்தனேகயிலாயத்தனே.
6
மந்திக்குருளையொத்தேனில்லைநாயேன்வழக்கறிந்துஞ்
சிந்திக்குஞ்சிந்தையையனென்செய்வேனெனைத்தீதகற்றிப்
புந்திப்பரிவிற்குருளையையேந்தியபூசையைப்போ
லெந்தைக்குரியவன்காணத்தனேகயிலாயத்தனே.
7
வருந்தேன்பிறந்துமிறந்துமயக்கும்புலன்வழிபோய்ப்
பொருந்தேனரகிற்புகுகின்றிலேன்புகழ்வாரிடத்தி
லிருந்தேனினியவர்கூட்டம்விடேனியலஞ்செழுத்தா
மருந்தேனருந்துவனின்னருளாற்கயிலாயத்தனே.
8

மதுரை.

விடப்படுமோ விப்பிரவஞ்சவாழ்க்கையை விட்டுமனந்
திடப்படுமோ நின்னருளின்றியே தினமேயலையக்
கடப்படுமோ வற்பர்வாயிலிற்சென்று கண்ணீர்ததும்பிப்
படப்படுமோ சொக்கநாதாசௌந்தரபாண்டியனே.

பொது.

உடைகோவணமுண்டுறங்கப்புறந்திண்ணையுண்டுணவிங்
கடைகாயிலையுண்டருந்தத்தண்ணீருண்டருந்துணைக்கே
விடையேறுமீசர்திருநாமமுண்டிந்தமேதினியில்
வடகோடுயர்ந்தென்னதென்கோடுசாய்ந்தென்னவான்பிறைக்கே.
1
வீடுநமக்குத்திருவாலங்காடுவிமலர்தந்த
வோடுநமக்குண்டுவற்றாதபாத்திரமோங்குசெல்வ
நாடுநமக்குண்டுகேட்டதெல்லாந்தரநன்னெஞ்சமே
யீடுநமக்குச்சொலவோயொருவருமிங்கில்லையே.
2
நாடிக்கொண்டீசரைநாட்டமுற்றாயிலைநாதரடி
தேடிக்கொண்டாடித்தெளிந்தாயிலைசெகமாயைவந்து
மூடிக்கொண்டோமென்றுங்காமாயுதங்கண்முனிந்தவென்றும்
பீடிப்பையோநெஞ்சமேயுனைப்போலிலைப்பித்தர்களே.
3
கையொன்றுசெய்யவிழியொன்றுநாடக்கருத்தொன்றெண்ணப்
பொய்யொன்றுவஞ்சகநாவொன்றுபேசப்புலால்கமழு
மெய்யொன்றுசாரச்செவியொன்றுகேட்கவிரும்புமியான்
செய்கின்றபூசையெவ்வாறுகொள்வாய்வினைதீர்த்தவனே.
4
கண்ணுண்டுகாணக்கருத்துண்டுநோக்கக்கசிந்துருகிப்
பண்ணுண்டுபாடச்செவியுண்டுகேட்கப்பல்பச்சிலையா
லெண்ணுண்டுசாத்தவெதிர்நிற்கவீசனிருக்கையிலே
மண்ணுண்டுபோகுதையோகெடுவீரிந்தமாநுடமே.
5
சொல்லிலுஞ்சொல்லின்முடிவிலும்வேதச்சுருதியிலு
மல்லிலுமாசற்றவாகாயந்தன்னிலுமாய்ந்துவிட்டோ
ரில்லிலுமன்பரிடத்திலுமீசனிருக்குமிடங்
கல்லிலுஞ்செம்பிலுமோவிருப்பானெங்கள்கண்ணுதலே.
6
வினைப்போகமேயொருதேகங்கண்டாய்வினைதானொழிந்தாற்
றினைப்போதளவுநில்லாதுகண்டாய்சிவன்பாதநினை
நினைப்போரைமேவுநினையாரைநீங்கிந்நெறியினின்றா
லுனைப்போலொருவருண்டோமனமேயெனக்குற்றவரே.
7
பட்டைக்கிழித்துப்பருவூசிதன்னைப்பரிந்தெடுத்து
முட்டச்சுருட்டியென்மொய்குழலாள்கையின்முன்கொடுத்துக்
கட்டியிருந்தகனமாயக்காரிதன்காமமெல்லாம்
விட்டுப்பிரியவென்றோவிங்ஙனேசிவன்மீண்டதுவே.
8
சூதுற்றகொங்கையும்மானார்கலவியுஞ்சூழ்பொருளும்
போதுற்றபூசலுக்கென்செயலாஞ்செய்தபுண்ணியத்தால்
தீதற்றமன்னவன்சிந்தையினின்றுதெளிவதற்கோ
காதற்றவூசியைத்தந்துவிட்டானேன்றன்கைதனிலே.
9
வாதுற்றதிண்புயரண்ணாமலையர்மலர்ப்பதத்தைப்
போதுற்றெப்போதும்புகலுநெஞ்சேயிந்தப்பூதலத்திற்
றீறுற்றசெல்வமென்றேடிப்புதைத்ததிரவியமென்
காதற்றவூசியும்வாராதுகாணுங்கடைவழிக்கே.
10
வேதத்தினுட்பொருண்மண்ணாசைமங்கையைவிட்டுவிடப்
போதித்தவன்மொழிகேட்டிலையோசெய்தபுண்ணியத்தா
லாதித்தன்சந்திரன்போலேவெளிச்சமதாம்பொழுது
காதற்றவூசியும்வாராதுகாணுங்கடைவழிக்கே.
11
மனையாளுமக்களும்வாழ்வுந்தனமுந்தன்வாயின்மட்டே
யினமானசுற்றமயானமட்டேவழிக்கேதுதுணை
தினையாமளவெள்ளளவாகினுமுன்புசெய்ததவந்
தனையாளவென்றும்பாலோகஞ்சித்திக்குஞ்சத்தியமே.
12
அத்தமும்வாழ்வுமகத்துமட்டேவிழியம்பொழுக
மெத்தியமாதரும்வீதிமட்டேவிம்மிவிம்மியிரு
கைத்தலமேல்வைத்தழுமைந்தருஞ்சுடுகாடுமட்டே
பற்றிற்தொடருமிருவினைப்புண்ணியபாவமுமே.
13
சீயுங்குருதிச்செழுநீர்வழும்புஞ்செறிந்தெழுந்து
பாயும்புடைவையொன்றில்லாதபோதுபகலிரவா
யீயுமெறும்பும்புகுகின்றயோனிக்கிரவுபகன்
மாயுமனிதரைமாயாமல்வைக்கமருந்தில்லையே.
14
சீதப்பனிக்குண்டுசிக்கெனக்கந்தைதினம்பசித்தால்
நீதுய்க்கச்சோறுமனைதோறுமுண்டுநினைவெழுந்தால்
வீதிக்குணல்லவிலைமாதருண்டிந்தமேதினியி
லேதுக்குநீசலித்தாய்மனமேயென்றும்புண்படவே.
15
ஆறுண்டுதோப்புண்டணிவீதியம்பலந்தானுமுண்டு
நீருண்டுகந்தைநெடுங்கோவணமுண்டுநித்தநித்த
மாறுண்டுலாவிமயங்குநெஞ்சேமனைதோறுஞ்சென்று
சோறுண்டுதூங்கிப்பின்சும்மாவிருக்கச்சுகமுமுண்டே.
16
உடுக்கக்கவிக்கக்குளிர்காற்றுவெய்யிலெரடுங்கிவந்தாற்
றடுக்கப்பழையவொருவேட்டியுண்டுசகமுழுதும்
படுக்கப்புறந்திண்ணையெங்கெங்குமுண்டுபசித்துவந்தாற்
கொடுக்கச்சிவனுண்டுநெஞ்சேநமக்குக்குறைவில்லையே.
17
மாடுண்டுகன்றுண்டுமக்களுண்டென்றுமகிழ்வதெல்லாம்
கேடுண்டெனும்படிகேட்டுவிட்டோமினிக்கேண்மனமே
யோடுண்டுகந்தையுண்டுள்ளேயெழுத்தைந்துமோதவுண்டு
தோடுண்டகண்டனடியார்நமக்குத்துணையுமுண்டே.
18
மாத்தானவத்தையுமாயாபுரியின்மயக்கத்தையு
நீத்தார்தமக்கொருநிஷ்டையுண்டோநித்தனன்புகொண்டு
வேர்த்தார்குளித்துப்பசித்தாற்புசித்துவிழிதுயின்று
பார்த்தாலுலகத்தவர்போலிருப்பர்பற்றற்றவரே.
19
ஒன்றென்றிருதெய்வமுண்டென்றிருவுயர்செல்வமெல்லா
மன்றென்றிருபசித்தோர்முகம்பார்நல்லறமுநட்பு
நன்றென்றிருநடுநீங்காமலேநமக்கிட்டபடி
யென்றென்றிருமனமேயுனக்கேயுபதேசமிதே.
20
நாட்டமென்றேயிருசற்குருபாதத்தைநம்புபொம்ம
லாட்டமென்றேயிருபொல்லாவுடலையடர்ந்தகந்தைக்
கூட்டமென்றேயிருசுற்றத்தைவாழ்வைக்குடங்கவிழ்நீ
ரோட்டமென்றேயிருநெஞ்சேயுனக்குபதேசமிதே.
21
என்செயலாவதியாதொன்றுமில்லையினித்தெய்வமே
யுன்செயலேயென்றுணரப்பெற்றேனிந்தவூனெடுத்த
பின்செய்ததீவினையாதொன்றுமில்லைப்பிறப்பதற்கு
முன்செய்ததீவினையோவிங்ஙனேவந்துமூண்டதுவே.
22
திருவேடமாகித்தெருவிற்பயின்றெனைத்தேடிவந்து
பரிவாகப்பிச்சைபகருமென்றானைப்பதம்பணிந்தேன்
கருவாகுமேதக்கடற்கரைமேவக்கருதுமென்னை
யுருவாக்கிக்கொள்ளவல்லோவிங்ஙனேசிவனுற்றதுவே.
23
விட்டேனுலகம்விரும்பேனிருவினைவீணருடன்
கிட்டேனவருரைகேடுமிரேன்மெய்கெடாதநிலை
தொட்டேன்சுகதுக்கமற்றுவிட்டேன்றொல்லைநான்மறைக்கு
மெட்டேனெனும்பரமென்னிடத்தேவந்திங்கெய்தியதே.
24
அட்டாங்கயோகமுமாதாரமாறுமவத்தையைந்தும்
விட்டேறிப்போனவெளிதனிலேவியப்பொன்றுகண்டேன்
வட்டாகிச்செம்மதிப்பாலூறலுண்டுமகிழ்ந்திருக்க
வெட்டாதபேரின்பமென்னைவிழுங்கியிருக்கின்றதே.
25
எரியெனக்கென்னும்புழுவோவெனக்கென்னுமிந்தமண்ணுஞ்
சரியெனக்கென்னும்பருந்தோவெனக்கெனுந்தான்புசிக்க
நரியெனக்கென்னும்புன்னாயெனக்கென்னுமிந்நாறுடலைப்
பிரியமுடன்வளர்த்தேனிதனாலென்னபேறெனக்கே.
26
அண்ணறன்வீதியரசிருப்பாகுமணிபடையோர்
நண்ணொருநாலொன்பதாமவரேவலுநண்ணூமிவ்வூர்
துண்ணென்பசிக்குமடைப்பள்ளியானசுகமுமெல்லா
மெண்ணிலிகாலமவமேவிடுத்தனமெண்ணரிதே.
27
என்பெற்றதாயருமென்னைப்பிணமென்றிகழ்ந்துவிட்டார்
பொன்பெற்றமாதரும்போவென்றுசொல்லிப்புலம்பிவிட்டார்
கொன்பெற்றமைந்தரும்பின்வலம்வந்துகுடமுடைத்தா
றான்பற்றொழியவொருபற்றுமில்லையுடையவனே.
28
கறையற்றபல்லுங்கரித்துணியாடையுங்கள்ளமின்றிப்
பொறையுற்றநெஞ்சமும்பொல்லாதவூணும்புறந்திண்ணையுந்
தறையிற்கிடப்புமிரந்துண்ணுமோடுஞ்சகமறியக்
குறைவற்றசெல்வமென்றேகோலமாமறைகூப்பிடுமே.
29
எட்டுத்திசையும்பதினாறுகோணமுமெங்குமொன்றாய்
முட்டித்ததும்பிமுளைத்தோங்குசோதியைமூடரெல்லாங்
கட்டிச்சுருட்டித்தங்கக்கக்கத்தில்வைப்பர்கருத்தில்வையார்
பட்டப்பகலையிரவென்றுகூறிடும்பாதகரே.
30
வாய்நாறுமூழன்மயிர்ச்சிக்குநாறிடுமையிடுங்கண்
பீநாறுமங்கம்பிணவெடிநாறும்பெருங்குழிவாய்ச்
சீநாறும்யோனியழனாறுமிந்தியச்சேறுசிந்திப்
பாய்நாறுமங்கையர்க்கோவிங்ஙனேமனம்பற்றியதே.
31
உரைக்கைக்குநல்லதிருவெழுத்தைந்துண்டுரைப்படியே
செருக்கித்தரிக்கத்திருநீறுமுண்டுதெருக்குப்பையிற்
றரிக்கக்கரித்துணியாடையுமுண்டெந்தச்சாதியிலு
மிரக்கத்துணிந்துகொண்டேன்குறைவேதுமெனக்கில்லையே.
32
ஏதப்பட்டாயினிமேற்படும்பாட்டையிதென்றறிந்து
போதப்பட்டாயில்லைநல்லோரிடஞ்சென்றுபுல்லறிவால்
வாதைப்பட்டாய்மடமானார்கல்விமயக்கத்திலே
பேதைப்பட்டாய்நெஞ்சமேயுனைப்போலில்லைபித்தருமே.
33
சுரப்பற்றுவல்வினைசுற்றமுமற்றுத்தொழில்களற்றுக்
கரப்பற்றுமங்கையர்கையிணக்கற்றுக்கவலையற்று
வரப்பற்றுநாதனைவாயாரவாழ்த்திமனமடங்கப்
பரப்பற்றிருப்பதன்றோபரமாபரமானந்தமே.
34
பேய்போற்றிரிந்துபிணம்போற்கிடந்திட்டபிச்சையெல்லா
நாய்போலருந்திநரிபோலுழன்றுநன்மங்கையரைத்
தாய்போற்கருதித்தமர்போலனைவர்க்குந்தாழ்மைசொல்லிச்
சேய்போலிருப்பர்கண்டீருண்மைஞானந்தெளிந்தவரே.
35
விடக்கேபருந்தின்விருந்தேகமண்டலவீணனிட்ட
முடக்கேபுழுவந்துறையிடமேநலமுற்றுமிலாச்
சடக்கேகருவிதளர்ந்துவிட்டாற்பெற்றதாயுந்தொடாத்
தொடக்கேயுனைச்சுமந்தேனின்னினேதுசுகமெனக்கே.
36
அழுதாற்பயனென்னநொந்தாற்பயனென்னவாவதில்லை
தொழுதாற்பயனென்னநின்னையொருவர்சுடவுரைத்த
பழுதாற்பயனென்னநன்மையுந்தீமையும்பங்கயத்தோ
னெழுதாப்படிவருமோசலியாதிரென்னேழைநெஞ்சே.
37
செல்வரைப்பின்சென்றுபசாரம்பேசித்தினந்தினமும்
பல்லினைக்காட்டிப்பரிதவியாமற்பரானந்தத்தி
னெல்லையிற்புக்குநல்லேகாந்தமாயெனக்காமிடத்தே
யல்லலற்றென்றிருபேனாலநீழலரும்பொருளே.
38
ஊரீருமக்கோருபதேசங்கேளுமுடம்படங்கப்
போரீர்சமணைக்கழுவேற்றுநீற்றைப்புறந்திண்ணையிற்
சாரீரனந்தலைச்சுற்றத்தைநீங்கிச்சகநகைக்க
வேரீருமக்கவர்தாமேதருவரிணையடியே.
39
நீற்றைப்புனைந்தென்னநீராடப்போயென்னநீமனமே
மாற்றிப்பிறக்கவகையறிந்தாயில்லைமாமறைநூ
லேற்றிக்கிடக்குமெழுகோடிமந்திரமென்னகண்டா
யாற்றிற்கிடந்துந்துறையறியாமலலைகின்றையே.
40
ஓங்காரமாய்நின்றவந்துவிலேயொருவித்துவந்து
பாங்காய்முளைத்தபயனறிந்தாற்பதினாலுலகு
நீங்காமனீங்கிநிறையாநிறைத்துநிறையுருவா
யாங்காரமானவர்க்கெட்டர்க்கனிவந்தமர்ந்திடுமே.
41
விதியார்படைப்புமரியாரளிப்பும்வியன்கயிலைப்
பதியார்தொடைப்புநம்பாலணுகாதுபரானந்தமே
கதியாகக்கொண்டுமற்றெல்லாந்துயிலிற்கனவெனநீ
மதியாதிருமனமேவிதுகாணன்மருந்துனக்கே.
42
நாய்க்குண்டுதெண்டுநமக்குண்டுபிச்சைநமனைவெல்ல
வாய்க்குண்டுமந்திரபஞ்சாட்சரமதியாமல்வரும்
பேய்க்குண்டுநீறுதிகைப்புண்டுநின்றபிறவிப்பிணி
நோய்க்குண்டுதேசிகன்றன்னருணோக்கங்கணோக்குதற்கே.
43
நேமங்கணிட்டைகள்வேதங்களாகமநீதிநெறி
யோமங்கடர்ப்பணஞ்சந்திசெபமந்த்ரயோகநிலை
நாமங்கள்சந்தனம்வெண்ணீருபூசிநலமுடனே
சாமங்கடோறுமிவர்செய்யும்பூசைகள்சர்ப்பனையே.
44
நானெத்தனைபுத்திசொன்னாலுங்கேட்டிலைநன்னெஞ்சமே
யேனிப்படிக்கெட்டுழலுகின்றாயினியேதுமிலா
வானத்தின்மீனுக்குவன்றூண்டிவிட்டவகயைதுபோற்
போனத்தைமீளநினைக்கின்றனையென்னபுத்தியிதே.
45
அஞ்சக்கரமெனுங்கோடாலிகொண்டிந்தவைம்புலனாம்
வஞ்சப்புலக்கட்டைவேரறவெட்டிவளங்கள்செய்து
விஞ்சத்திருத்திச்சதாசிவமென்கின்றவித்தையிட்டுப்
புஞ்சக்களைபறித்தேன்வளர்த்தேன்சிவபோகத்தையே.
46
தாயாருஞ்சுற்றமும்பெண்டிருங்கைவிட்டுத்தாழ்ந்திடுநா
ணீயாருநானாரெனப்பகர்வாரந்தநேரத்திலே
நோயாரும்வந்துகுடிகொள்வரேகொண்டநோயுமொரு
பாயாருநீயுமல்லாற்பின்னையேதுநட்பாமுடலே.
47
ஆயும்பொழுதுமயிர்க்கால்கடோறுமருங்கிருமி
தோயுமலக்குட்டையாகியகாயத்தைச்சுட்டுவிட்டாற்
பேயுநடனமிடுங்கடமாமென்றுபேசுவதை
நீயுமறிந்திலையோபொருடேடநினைந்தனையே.
48
பூணும்படிக்கல்லபொன்னுக்குத்தானல்லபூமிதனைக்
காணும்படிக்கல்லமங்கையர்க்கல்லநற்காட்சிக்கல்ல
சேணுங்கடந்தசிவனடிக்கல்லவென்சிந்தைகெட்டுச்
சாணும்வளர்க்கவடியேன்படுந்துயர்சற்றல்லவே.
49
வெட்டாதசக்கரம்பேசாதமந்திரம்வேறொருவர்க்
கெட்டாதபுட்பமிறையாததீர்த்தமினிமுடிந்து
கட்டாதலிங்கங்கருதாதநெஞ்சங்கருத்தினுள்ளே
முட்டாதபூசையன்றோகுருநாதன்மொழிந்ததுவே.
50
எருமுட்டைபிட்கினுதிர்ந்திடுஞ்செல்லுக்கெவரழுவார்
கருமுட்டைபுக்குக்கழலகன்றாய்கனதுக்கமதாய்ப்
பெருமுட்டுப்பட்டவர்போலழும்பேதையிர்பேத்துகிறீ
ரொருமுட்டும்வீட்டுமரனாமமென்றைக்குமோதுமினே.
51
மையாடுகண்ணியுமைந்தரும்வாழ்வுமனையுஞ்செந்தீ
யையாநின்மாயையுருவெளித்தோற்றமகிலத்துள்ளே
மெய்யாயிருந்ததுநாட்செலநாட்செலவெட்டவெறும்
பொய்யாய்ப்பழங்கதையாய்க்கனவாய்மெல்லபோனதுவே.
52
ஆயாய்பலகலையாய்ந்திடுந்தூயவருந்தவர்பாற்
போயாகிலுமுண்மையைத்தெரிந்தாயில்லைபூதலத்தில்
வேயார்ந்ததோளியர்காமவிகாரத்தில்வீழ்ந்தழுந்திப்
பேயாய்விழிக்கின்றனைமனமேயென்னபித்துனக்கே.
53
அடியாருறவுமரன்பூசைநேசமுமன்புமன்றிப்
படிமீதில்வேறுபயனுளதோபங்கயன்வகுத்த
குடியானசுற்றமுந்தாரமும்வாழ்வுங்குயக்கலங்கள்
தடியாலடியுண்டவாறொக்குமென்றினஞ்சார்ந்திலரே.
54
ஆங்காரபொக்கசங்கோபக்களஞ்சியமாணவந்தா
னீங்காவரண்மனைபொய்வைத்தகூடம்விண்ணீடிவளர்
தேங்காற்பெருமதிற்காமவிலாசமித்தேகங்கந்தல்
பாங்காயுனைப்பணிந்தெப்படிஞானம்பலிப்பதுவே.
55
ஒழியாப்பிறவியெடுத்தேங்கியேங்கியுழன்றநெஞ்சே
யழியாப்பதவிக்கவுடதங்கேட்டியனாதியனை
மழுமான்கரத்தனைமால்விடையானைமனத்திலுன்னி
விழியாற்புனல்சிந்திவிம்மியழுநன்மைவேண்டுமென்றே.
56
நாய்க்கொருசூலுமதற்கோர்மருத்துவநாட்டிலுண்டோ
பேய்க்கொருஞானம்பிடிபடுமோபெருங்காஞ்சிரங்கா
யாக்குவராரதருந்துவராரதுபோலுடம்பு
தீக்கிரையாவதல்லாலேதுக்காமிதைச்செப்புமினே.
57
கச்சிற்கிடக்குங்கனதனத்திற்கடைக்கண்கள்பட்டே
யிச்சித்திருக்கின்றவேழைநெஞ்சேயிமவான்பயந்த
பச்சைப்பசுங்கொடியுண்ணாமுலைபங்கர்பாதத்திலே
தைச்சுக்கிடமனமேயொருகாலுந்தவறில்லையே.
58
மானார்விழியைக்கடந்தேறிவந்தனன்வாழ்குருவுங்
கோனாகியென்னைக்குடியேற்றிக்கொண்டனன்குற்றமில்லை
போனாலும்பேறிருந்தாலுநற்பேறிதுபொய்யன்றுகா
னானாலுமிந்தவுடம்போடிருப்பதருவருப்பே.
59
சற்றாகினுந்தன்னைத்தானறியாய்தனையாய்ந்தவரை
யுற்றாகிலுமுரைக்கப்பொருந்தாயுனக்கானநிலை
பற்றாய்குருவைப்பணியாய்பரத்தையர்பாலிற்சென்றேன்
பெற்றாய்மடநெஞ்சமேயுனைப்போலில்லைபித்தனுமே.
60
உளியிட்டகல்லையுமொப்பிட்டசாந்தையுமூத்தையறப்
புளியிட்டசெம்பையும்போற்றுகிலேனுயர்பொன்னெனவே
யொளியிட்டதாளிரண்டுள்ளேயிருத்துவதுண்மையென்று
வெளியிட்டடைத்துவைத்தேனினிமேலொன்றும்வேண்டிலனே.
61

திருச்சிற்றம்பலம்.

தாயாருக்குத்தகனகிரியை செய்கையிற்பாடிய வெண்பா.

ஐயிரண்டுதிங்களாவங்கமெலாநொந்துபெற்றுப்
பையலென்றபோதேபரிந்தெடுத்துச் -செய்யவிரு
கைப்புறத்திலேந்திக்கனகமுலைதந்தாளை
யெப்பிறப்பிற்காண்பேனினி.
1
முந்தித்தவங்கிடந்துமுந்நூறுநாட்சுமந்தே
யந்திபகலாச்சிவனையாதரித்துத் -தொந்தி
சரியச்சுமந்துபெற்றதாயார்தமக்கோ
வெரியத்தழன்மூட்டுவேன்.
2
வட்டிலிலுந்தொட்டிலிலுமார்மேலுந்தோண்மேலுங்
கட்டிலிலும்வைத்தென்னைக்காதலித்து - முட்டச்
சிறகிலிட்டுக்காப்பாற்றிச்சீராட்டுந்தாய்க்கோ
விறகிலிட்டுத்தீமூட்டுவேன்.
3
நொந்துசுமந்துபெற்றுநோவாமலேந்திமுலை
தந்துவளர்ந்தெடுத்துத்தாழாமே - யந்திபகல்
கையிலேகொண்டென்னைக்காப்பாற்றுந்தாய்தனக்கோ
மெய்யிலேதீமூட்டுவேன்.
4
அரிசியோநானிடுவேனாத்தாடனக்கு
வரிசையிட்டுப்பாத்துமகிழாம - லுருசியுள்ள
தேனேயமிர்தமேசெல்வத்திரவியபு
மானேயனவழைத்தவாய்க்கு.
5
அள்ளியிடுவதரிசியோதாய்தலைமேற்
கொள்ளிதனைவைப்பேனோகூசாமன் - மெள்ள
முகமேன்முகம்வைத்துமுத்தாடியென்றன்
மகனேயெனவழைத்தவாய்க்கு.
6
விருத்தம்.

முன்னையிட்டதீமுப்புரத்திலே
பின்னையிட்டதீதென்னிலங்கையி
லன்னையிட்டதீயடிவயிற்றிலே
யானுமிட்டதீமூள்கமூள்கவே.
7
வெண்பா.

வேகுதேதீயதனில்வெந்துபொடிசாம்ப
லாகுதேபாவியேனையகோ - மாகக் குருவிபறவாமற்கோதாட்டியென்னைக்
கருதிவளர்த்தெடுத்தகை.
8
வெந்தாளோசோணகிரிவித்தகாநின்பதத்தில்
வந்தாளோவென்னைமறந்தாளோ - சந்ததமு
முன்னையேநோக்கியுகந்துவரங்கிடந்தென்
றன்னையயீன்றெடுத்ததாய்.
9
வீற்றிருந்தாளன்னைவீதிதனிலிருந்தாள்
நேற்றிருந்தாளின்றுவெந்துநீறானாள் - பாற்றெளிக்க
வெல்லீரும்வாருங்களேதென்றிரங்காமல்
எல்லாஞ் சிவமயமே யாம்.
10

தனிவெண்பா.

இடைமருது.

மென்றுவிழுங்கிவிடாய்கழிக்கநீர்தேட
லென்றுவிடியுமெனக்கென்கோவே - நன்றி
கருதார்புரமூன்றுங்கட்டழலாற்செற்ற
மருதாவுன்சந்நிதிக்கேவந்து.
1
ஒற்றி.

கண்டங்கரியதாங்கண்மூன்றுடையதா
மண்டத்தைப்போலவழகியதாந் - தொண்ட
ருடலுருகத்தித்திக்குமோங்குபுகழொற்றிக்
கடலருகேநிற்குங்கரும்பு.
2
ஒடுவிழுந்துசீப்பாயுமொன்பதுவாய்ப்புண்ணுக்
கிடுமருந்தையானறிந்துகொண்டேன் - கடுவருந்துந்
தேவாதிதேவன்றிருவொற்றியூர்த்தெருவிற்
பெ*ரு*வாரடியிற்பொடி.
3
வாவியெல்லாந்தீர்த்தமணலெல்லாம்வெண்ணீறு
காவனங்களெல்லாங்கணநாதர் - பூவுலகி
லீதுசிவலோகமென்றென்றேமெய்த்தவத்தோ
ரோதுந்திருவொற்றியூர்.
4
திருவாரூர்.

ஆரூரரிங்கிருக்கவவ்வூர்த்திருநாளென்
றூரூர்கடோறுமுழலுவீர் - நேரே
யுளக்குறிப்பைநாடாதவூமர்காணீவிர்
விளக்கிருக்கத்தீத்தேடுவீர்.
5
எருவாய்க்கிருவிரன்மேலேறுண்டிருக்குங்
கருவாய்க்கோகண்கலக்கப்பட்டாய் - திருவாரூர்த்
தேரோடும்வீதியிலேசெத்துக்கிடக்கின்றாய்
நீரோடுந்தாரைக்காநீ.
6
திருக்காஞ்சி.

எத்தனையூரெத்தனைவீடெத்தனைதாய்பெற்றவர்க
ளெத்தனைபேரிட்டழைக்கவேனென்றே - னித்த
மெனக்குக்களையாற்றாயேகம்பாகம்பா
வுனக்குத்திருவிளையாட்டோ.
7
கச்சிக்காரோணம்.

அத்திமுதலெறும்பீறானவுயிரத்தனைக்குஞ்
சித்தமகிழ்ந்தளிக்குந்தேசிகா - மெத்தப்
பசிக்குதையாபாவியேன்பாழ்வயிற்றைப்பற்றி
யிசிக்குதையாகாரோணரே.
8
திருக்காளத்தி.

பொய்யையொழியாய்புலாலைவிடாய்காளத்தி
யையரையெண்ணாயறஞ்செய்யாய் - வெய்ய
சினமேயொழியாய்திருவெழுத்தைந்தோதாய்
மனமேயுனக்கென்னமாண்பு.
9
திருவிருப்பையூர்.

மாதாவுடல்சலித்தாள்வல்லினையேன்கால்சலித்தேன்
வேதாவுங்கைசலித்துவிட்டானே - நாதா
விருப்பையூர்வாழ்சிவனேயின்னமோரன்னை
கருப்பையூர்வாராமற்கா.
10
திருவையாறு.

மண்ணுந்தணலாறவானும்புகையாற
வெண்ணரியதாயுமிளைப்பாறப் - பண்ணுமயன்
கையாறவுமடியேன்காலாறவுங்கண்பா
ரையாதிருவையாறா.
11
குற்றாலம்.

காலன்வருமுன்னேகண்பஞ்சடைமுன்னே
பாலுண்கடைவாய்படுமுன்னே - மேல்விழுந்தே
யுற்றாரழுமுன்னேயூரார்சுடுமுன்னே
குற்றாலத்தானையேகூறு.
12

பொதுவெண்பா.

சிற்றம்பலமுஞ்சிவனுமருகிருக்க
வெற்றம்பலந்தேடிவிட்டோமே - நித்தம்
பிறந்திடத்தைத்தேடுதேபேதைமடநெஞ்சங்
கறந்திடத்தைநாடுதேகண்.
1
தோடவிழும்பூங்கோதைத்தோகையுனையிப்போது
தேடினவர்போய்விட்டார்தேறியிரு - நாடிநீ
யென்னைநினைத்தாலிடுப்பிலுதைப்பேனா
னுன்னைநினைத்தாலுதை.
2
வாசற்படிகடந்துவாராதபிச்சைக்கிங்
காசைப்படுவதில்லையண்ணலே - யாசைதனைப்
பட்டிறந்தகாலமெலாம்போதும்பரமேட்டி
சுட்டிறந்தஞானத்தைச்சொல்.
3
நச்சரவம்பூண்டானைநன்றாத்தொழுவதுவு
மிச்சையிலேதானங்கிருப்பதுவும் - பிச்சைதனை
வாங்குவதுமுண்பதுவும்வந்துதிருவாயிலிலே
தூங்குவதுந்தானேசுகம்.
4
இருக்குமிடந்தேடியென்பசிக்கேயன்ன
முருக்கமுடன்கொண்டுவந்தாலுண்பேன் - பெருக்க
வழைத்தாலும்போகேனரனேயென்றேக
மிளைத்தாலும்போகேனினி.
5
விட்டுவிடப்போகுதுயர்விட்டவுடனேயுடலைச்
சுட்டுவிடப்போகின்றார்சுற்றத்தார் - பட்டதுபட் டெந்நேரமுஞ்சிவனையேத்துங்கள்போற்றுங்கள்
சொன்னேனதுவேசுகம்.
6
ஆவியொடுகாயமழிந்தாலுமேதினியிற்
பாவியென்றுநாமம்படையாதே - மேவியசீர்
வித்தாரமுங்கடம்பும்வேண்டாமடநெஞ்சே
செத்தாரைப்போலேதிரி.
7
வெட்டவெளியானவெளிக்குந்தெரியாது
கட்டளையுங்கைப்பணமுங்காணாதே - இட்டமுடன்
பற்றென்றார்பற்றாதுபாவியேனெஞ்சிலவன்
இற்றெனவேவைத்தவினிப்பு.
8
பின்முடுகு வெண்பா.
இப்பிறப்பைநம்பியிருப்பரோநெஞ்சகமே
வைப்பிருக்கவாயின்மனையிருக்கச் - சொப்பனம்போல்
விக்கிப்பற்கிட்டக்கண்மெத்தப்பஞ்சிட்டப்பைக்
கச்சிச்செத்துக்கொட்டக்கண்டு.
9
மேலுமிருக்கவிரும்பினையேவெள்விடையோன்
சீலமறிந்திலையேசிந்தையே - கால்கைக்குக்
கொட்டையிட்டுமெத்தையிட்டுக்குத்திமொத்தப்பட்டவுடல்
கட்டையிட்டுச்சுட்டுவிடக்கண்டு.
10
ஒன்பதுவாய்த்தோற்பைக்கொருநாளைப்போலவே
யன்புவைத்துநெஞ்சேயலைந்தாயே - வன்கழுக்க
டத்தித்தத்திச்சட்டைதட்டிக்கட்டிப்புட்டுக்
கத்திக்குத்தித்தின்னக்கண்டு.
11
இன்னம்பிறக்கவிசைவையோநெஞ்சமே
மன்னரிவரென்றிருந்துவாழ்ந்தவரை - முன்ன
மெரிந்தகட்டைமீதிலிணைக்கோவணத்தை
யுரிந்துருட்டிப்போட்டதுகண்டு.
12
முதற்சங்கமூதூட்டுமொய்குழலார்தம்மை
நடுச்சங்கநல்விலங்குபூட்டுங் - கடைச்சங்க
மாம்போதனவூதுமம்மட்டோவிம்மட்டோ
நாம்பூமிவாழ்ந்தநலம்.
13
எத்தனைநாள்கூடியெடுத்தசரீரமிவை
யத்தனையுமண்டின்பதல்லவோ - வித்தகனார்
காலைப்பிடித்துமெள்ளக்கங்குல்பகலற்றிடத்தே
மேலைக்குடியிருப்போமே.
14
எச்சிலென்றுசொல்லியிதமகிதம்பெசாதே
யெச்சிலிருக்குமிடமறியீ - ரெச்சிறனை
யுய்த்திருந்துபார்த்தாலொருமைவெளிப்படும்பின்
சித்தநிராமயமாமே.
15
எத்தனைபேர்நட்டகுழியெத்தனைபேர்தொட்டமுலை
யெத்தனைபேர்பற்றியிழுத்தவிதழ் - நித்தநித்தம்
பொய்யடாபேசும்புவியின்மடமாதரைவிட்
டுய்யடாவுய்யடாவுய்.
16
இருப்பதுபொய்போவதுமெயென்றெண்ணிநெஞ்சே
யொருத்தருக்குந்தீங்கினைநீயுன்னாதே - பருத்தொந்தி
நம்மதென்றுநாமிருப்பநாய்நரிகள்பேய்கழுகு
தம்மதென்றுதாமிருக்குந்தான்.
17
எந்தொழிலைச்செய்தாலுமேதவத்தைபட்டாலு
முத்தர்மனமிருக்குமோனத்தே - வித்தகமாய்க்
காதிவிளையாடியிருகைவீசிவந்தாலுந்
தாதிமனநீர்க்குடத்தேதான்.
18
மாலைப்பொழுதினறுமஞ்சளரைத்தேகுளித்து
வேலைமினக்கிட்டுவிழித்திருந்து - சூலாகிப்
பெற்றாள்வளர்த்தாள்பெயரிட்டாள்பெற்றபிள்ளை
பித்தானலென்செய்வாள்பின்.
19
விருத்தம்.

நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியந்தேடி
      நலனொன்றுமறியாதநாரியரைக்கூடிப்
பூப்பிளக்கப்பொய்யுரைத்துப் புற்றீசல்போலப்
      புலபுலெனக்கலகலெனப் புதல்வர்களைப்பெறுவீர்
காப்பதற்கும்வகையறியீர்கைவிடவுமாட்டீர்
      கவர்பிளந்தமரத்துளையிற்கானுழைத்துக்கொண்டீர்
ஆப்பதனையசைத்துவிட்டகுரங்கதனைப்போல
      அகப்பட்டீர்கிடந்துழலவகப்பட்டீரே.
20
இதுவுமதுவேறு.

வடிவந்தானும்வாலிபம்மகளுந்தாயுமாமியும்
படிகொண்டாருமூரிலேபழிகொண்டாடனீதியோ
குடிவந்தானுமேழையேகுயவன்றானுங்கூழையோ
நடுநின்றானும்வீணானோநகரஞ்சூறையானதே.
21
மண்ணுமுருகுமரமுருகுமாயையுருகுமாலுருகும்
பெண்ணுமுருகுமாணுருகும்பேதாபேதவகையுருகும்
அண்ணலுருகுமிடத்தமர்ந்தவாத்தாளுருகுமரவணையான்
எண்ணியுருகுங்குருநாதனென்பாலுரைத்தவோர்மொழியே.
22
திருச்சிற்றம்பலம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்