Kāñcip purāṇam I


சைவ சமய நூல்கள்

Back

காஞ்சிப் புராணம் I
கச்சியப்ப சிவாச்சாரியார்



திருவாவடுதுறை யாதீனம்
சிவஞான சுவாமிகள் அருளிய
காஞ்சிப் புராணம்

பாகம் 1a / (1 - 444)


0. பாயிரம் 1 - 27

1. திருநாட்டுப்படலம் 28 - 172

2. திருநகரப்படலம் 173 - 298

3. பதிகம் 298 - 329

4. வரலாற்றுப் படலம் 330 - 357

5. சனற்குமாரப் படலம் 358 -413

6. தலவிசேடப்படலம் 414-444


திருச்சிற்றம்பலம்

0. பாயிரம்

காப்பு



1 - கலிநிலைத் துறை
இருக வுள்துளை வாக்குகார்க் கடங்கள்இங் குலிகக்
குருநி றத்திழி தோற்றம்முன் குலாய்த்தவழ்ந் தேறிப்
பரிதி மார்பினில் சமனொடு காளிந்தி பயிலுந்
திருநி கர்த்தசீர் ஐங்கரக் களிற்றினைச் சேர்வாம் - 1



2 - தல விநாயகர்
அறுசீரடி யாசிரிய விருத்தம்
விகட சக்கர வாரணந் தொடர்வரும் வித்தக முகில்வீற
விகட சக்கர விந்தமன் னவன்றனக் கருளுமெய்த் தலைவாகு
விகட சக்கர வாகமென் முலையுமை கான்முளை என்னாச்சே
விகட சக்கர ரெந்திர மெனச்சுழல் வெம்பவக் கடல்நெஞ்சே 2


கடவுள் வாழ்த்து
சபாநாயகர்



3 - வேறு
சங்கேந்து மலர்க்குடங்கைப் புத்தேளும்
      மறைக்கோவும் தழல்கால் சூலம்
அங்கேந்தும் அம்மானும் தத்தமது
      தொழில்தலைநின் றாற்றச் செய்தோர்
பங்கேந்தும் பெருமாட்டி விழிகளிப்ப
      இருமுனிவர் பணிந்து போற்றக்
கொங்கேந்து மணிமன்றுள் குனித்தருளும்
      பெருவாழ்வைக் குறித்து வாழ்வாம். - 1



4 - திருவேகம்பநாதர் .

தணந்தபெருந் துயர்க்கடல்மீக் கூர்தலினான்
      மலைபயந்த தரளமூரற்
கணங்குழையாள் புரிபூசை முடிவளவுந்
      தரியாமல் இடையே கம்பை
அணங்கினைத்தூ தெனவிடுத்து வலிந்திறுகத்
      தழீஇக்கொள்ள அமையாக் காதல்
மணந்தருளிக் குறிபூண்ட ஒருமாவிற்
      பெருமானை வணக்கஞ் செய்வாம். - 2



5 - காமாட்சியம்மையார் .

ஊன்பிலிற்று மழுவாளி கலவிதனில்
      ஒண்ணாதென் றோர்ந்து நஞ்சந்
தான்பிலிற்றும் பாப்பணியை நீப்பவுங்கார்
      வண்டினங்கள் ததைந்து மூசத்
தேன்பிலிற்று நறுங்கடுக்கைத் தெரியலைப்பாம்
      பெனமருண்டத் தெரியல் நாறுங்
கான்பிலிற்றத் தெருண்டணையும் காமக்கோட்
      டத்துமையைக் கருத்துள் வைப்பாம் - 3



6 - கருக்காமக் கோட்டிமிர வினையனைத்தும்
      ஒருங்கெய்திக் கலகஞ் செய்யுந்
தருக்காமக் கோட்டியெலாம் அறஎறிந்தாம்
      இனியென்றும் தகைசால் அன்பு
சுருக்காமக் கோட்டினைச்சே யரைகரங்
      கொண்டார்க்கு முலைச்சுவடு நல்குந்
திருக்காமக் கோட்டியம்மை சேவடிப்போ
      தெப்போதுஞ் சிந்திப் பாமால். - 4



7 - விகடசக்கர விநாயகக் கடவுள்

விழிமலர்ப்பூ சனையுஞற்றித் திருநெடுமால்
      பெறுமாழி மீள வாங்கி
வழியொழுகாச் சலந்தரன்மெய்க் குருதிபடி
      முடைநாற்றம் மாறு மாற்றால்
பொழிமதநீர் விரையேற்றி விகடநடப்
      பூசைகொண்டு புதிதா நல்கிப்
பழிதபுதன் தாதையினும் புகழ்படைத்த
      மதமாவைப் பணிதல் செய்வாம். - 5



8 - குமாரக் கடவுள்.
முருகோட்டந் தரப்பாயும் மும்மதமும்
      ஊற்றெடுப்ப முரிவிற்கோட்டும்
ஒருகோட்டு மழகளிற்றை இருகோட்டு
      முதுகளிறா உலவக் காட்டிப்
பருகோட்ட நறைவேட்டுப் பைங்கோட்டுத்
      தினைப்புனத்துப் பரண்மேற்கொண்டு
குருகோட்டும் பெடைமனந்த குமரகோட்
      டத்தடிகள் குலத்தாள் போற்றி. - 6



9 - வயிரவக் கடவுள்
வேறு
எளியவரை வலியர் வாட்டின்
      வலியரை இருநீர் வைப்பின்
அளியறத் தெய்வம் வாட்டும்ஔ
      எனுமுரைக் கமைய வன்றே
தெளியுமா வலியைச் செற்றோற்
      செகுத்துரிக் கவயம் போர்த்த
வளியுளர் கச்சி காவல் வயிரவர்க்
      கன்பு செய்வாம் - 7



10 - திருநந்திதேவர்
அங்கணன் கயிலை காக்கும் அகம்படித் தொழின்மை பூண்டு
நங்குரு மரபுக் கெல்லாம் முதற்குரு நாத னாகிப்
பங்கயந் துளவம் நாறும் வேத்திரப் படைபொ றுத்த
செங்கையெம் பெருமான் நந்தி சீரடிக் கமலம் போற்றி - 8



11 - அகத்திய முனிவர்
காசியி னின்றும் போந்து கம்பர்தாம் அருளப் பெற்று
மாசிலாக் கச்சி மூதூர் மன்னிவீற் றிருந்து பூமேல்
அசிலாத் தமிழ்ப ரப்பி அருந்தமிழ்க் குரவு பூண்ட
தேசினான் மலய வெற்பிற் குறுமுனி திருத்தாள் போற்றி

அகத்தியர் தென்னாடு போந்த வரலாறு , இப்புராணத்தில் தழுவக் குழைந்த படலத்தில் 185 முதல் 247 வரையிலுள்ள செய்யுட்களால் கூறப்படுகின்றது - 9



12 - திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்
வேறு
பரசமய கோளரியைப் பாலறா
      வாயனைப்பூம் பழனஞ் சூழ்ந்த
சிரபுரத்துத் திருஞான சம்பந்தப்
      பெருமானைத் தேய மெல்லாம்
குரவையிடத் தமிழ்வேதம் விரித்தருளுங்
      கவுணியர்தங் குலதீ பத்தை
இரவியெமை யாளுடைய வென்றிமழ
      விளங்களிற்றை விரும்பி வாழ்வாம். - 10



13 - திருநாவுக்கரசு நாயனார்
இடையறாப் பேரன்பும் மழைவாரும்
      இணைவிழியும் உழவா ரத்திண்
படையறாத் திருக்கரமும் சிவ்பெருமான்
      திருவடிக்கே பதித்த நெஞ்சும்
நடையறாப் பெருந்துறவும் வாகீசப்
      பெருந்தகைதன் ஞானப் பாடல்
தொடையறாச் செவ்வாயும் சிவவேடப்
      பொலிவழகும் துதித்து வாழ்வாம் - 11



14 - சுந்தரமூர்த்தி நாயனார்
ஒருமணத்தைச் சிதைவுச்செய்து
      வல்வழக்கிட் டாட்கொண்ட உவனைக் கொண்டே
இருமணத்தைக் கொண்டருளிப்
      பணிகொண்ட வல்லாளன் எல்லாம் உய்யப்
பெருமணச்சீர்த் திருத்தொண்டத்
      தொகை விரித்த பேரருளின் பெருமாள் என்றுந்
திருமணக்கோ லப்பெருமாள் மறைப்பெருமாள்
      எமதுகுல தெய்வமாமால் - 12



15 - மாணிக்கவாசக சுவாமிகள்
பெருந்துறையிற் சிவபெருமான் அருளுதலும்
      பெருங்கருணைப் பெற்றி நோக்கிக்
கரைந்துகரைந் திருகண்ணீர் மழைவாரத்
      ற்றியநிலை கடந்து போந்து
திருந்துபெருஞ் சிவபோகக் கொழுந்தேறல்
      வாய்மடுத்துத் தேக்கிச் செம்மாந்
திருந்தருளும் பெருங்கீர்த்தி வாதவூர
      டிகளடி யிணைகள் போற்றி - 13



16 - அறுபத்துமூவர்
கலி விருத்தம்
தத்து மூவெயில் மூன்றுந் தழலெழ
முத்து மூரல் முகிழ்த்த நிராமய
சித்து மூர்த்திதன் தாளிணை சேரறு
பத்து மூவர் பதமலர் போற்றுவாம் - 14



17 - சேக்கிழார் நாயனார்
தூக்கு சீர்த்திருத் தொண்டத் தொகைவிரி
வாக்கி னாற்சொல்ல வல்ல பிரான் எங்கள்
பாக்கி யப்பய னாப்பதி குன்றைவாழ்
சேக்கி ழானடி சென்னி யிருத்துவாம் - 15



18 - திருக்கூட்டத்தார்
அறுசீரடி யாசிரிய விருத்தம்
பேயன்ன புறச்சமயப் பிணக்குநூல்
      வழியனைத்தும் பிழையே யன்றி
வாயன்மை தெளிந்துசைவ சித்தாந்த
      வழிதேறி அதீத வாழ்வில்
போயண்மி அஞ்செழுத்தும் திருநீறும்
      கண்டிகையும் பொருளாக் கொண்ட
நாயன்மார் திருக்கூட்டம் பணிந்திறைஞ்சும்
      பெரும்பேறு நான்பெற் றேனால் - 16



19 - பஞ்சாக்கர தேசிகர்
கயிலாய பரம்பரையிற் சிவஞான
      போதநெறி காட்டும் வெண்ணெய்
பயில்வாய்மை மெய்கண்டான்
      சந்ததிக்கோர் மெய்ஞ்ஞான பானு வாகிக்
குயிலாரும் பொழில்திருவா வடுதுறைவாழ்
      குருநமச்சி வாய தேவன்
சயிலாதி மரபுடையோன் திருமரபு
      நீடூழி தழைக மாதோ - 17



20 - பின்வேலப்பதேசிகர்
எவ்வெவர்கோட் படுபொருளும் அன்செழுத்தின்
      அடக்கியவற் றியல்பு காட்டி
மெய்வகையஞ் சவத்தையினும் நிற்குமுறை
      ஓதுமுறை விளங்கத் தேற்றி
அவ்வெழுத்தின் உள்ளீடும் அறிவித்துச்சிவபோகத்
      தழுத்தி நாயேன்
செய்வினையும் கைக்கொண்ட வேலப்ப
      தெசிகந்தாள் சென்னி சேர்ப்பாம் - 18



21 - மற்றைய சிவநேசர்கள்
மறைநான்கும் பயின்றொழுகி இட்டிகளும்
      பலவியற்றி மல்லல் ஞாலத்
திறவாத புகழ்படைத்தும் ஈசனிடத்
      தன்பிலரை எண்ணாதுளம்
புறமோதிக் கொலைபயின்று மதுமாந்துங்
      கொடும்பாவப் புலையரேனும்
அறவாணன் திருவடிக்கீழ் அன்பினரேல்
      அவரெம்மை அடிமை கொள்வார் - 19




22 - நூல் செய்தற்குக் காரணம்
கலிநிலைத்துறை
பொருவில் கச்சியம் புரானம் வண் டமிழினிற் புகலென்
றிருநி லம்புகழ் மணிமதிற் கச்சியே கம்பர்
திருவ ருட்குரி யான்றவர் கூறிய சிறப்பால்
உரிமை மற்றெழு மாசையான் உரைத்திட லுற்றேன் - 1




23 - அவையடக்கம்
மாயை காரிய உருக்களும் எம்பிரான் வடிவ
மாய வேலவை அருள்மய மாகுமற் றதுபோல்
பேயனேன்பிதற் றுரையுமே கம்பர்தம் பெருமை
தூய காதையுள் ளுறுதலால் துகளறத் தோன்றும் - 1



24 - இழித்த சொற்புணர்த் தெளியனேன் இயம்பிய கவியுங்
கழித்த ஐவகை இலக்கண வழுவுக்குக் காட்டாப்
பழித்தி டாதெடுத்தாளுவர் பல்வகைச் சுவையுங்
கொழித்த நாவின ராகிய வழுத்தபு குணத்தோர் - 2



25 - எழுத்துப் போலியும் எழுத்தென வாளுவர் அதுபோல்
புழுத்த நாயினேன் பிதற்றிய செய்யுட்போ லியையும்
பழுத்த கேள்வியோர் கைக்கொள்வர் என்பது பற்றி
விழுத்த நாணினேன் சிவகதை விளம்புதற் கிசைந்தேன் - 3



26 - நெறிவ ழாஉமை பூசனை போல்நெறி பிறழ்ந்தோன்
எறித ருங்கலுங் கைக்கொளுங் கச்சியெம் பெருமாற்
கறிவின் மேலவர் காப்பியப் பனுவல்போல் அறிவின்
குறியி லேன்கவிப் புன்சொலுங் கொள்வது வழக்கால். - 4



27 - சிறப்புப் பாயிரம்
எழுசீரடியாசிரியவிருத்தம்
அருட்பணிக் குரிய மகேச்சுரர் முதலா
      நால்வருந் தருகவென் றறைய
மருட்பகை துமிக்குங் காஞ்சிமான் மியத்தை
      வழங்குதென் மொழியினா லுரைத்தான்
கருப்பகை யிரிக்கும் ஞானமும் ஏனைக்
      கலைகளும் கரிசறப் பெப்யின்ற
மருப்பொழி லுடுத்த வாவடு துறையில்
      வாழ்சிவ ஞானமா தவனே - 5
------------

1. திருநாட்டுப்படலம் (28-172)




28 - கலிநிலைத்துறை
பணங்கொள் பாம்பணி கம்பனார் பனிவரை பயந்த
அணங்கி னோடென்றும் அமர்ந்தினி தரசுவீற் றிருக்கும்
உணங்க ரும்புகழ்க் காஞ்சியை அகந்தழீஇ உம்பர்
வணங்க மேவரும் பாலிநாட் டணிநலம் வகுப்பாம் - 1



29 - மழைச்சிறப்பு
கடல்க டைந்திடச் செல்லுறூஉம்
      வெள்ளைமால் கடுப்பப்
படலை வெண்முகில் பரவைநீ
      ருழக்கிவாய் மடுத்து
விடமெ ழுந்தென மீண்டவம்
      மாயனை விழைய
உடல்க றுத்துவிண் நெறிப்படர்ந்
      தொய்யென மீண்டு - 2



30 - அற்றை ஞான்றுமால் கயிலையைச் சரணடைந் தாங்குப்
பொற்ற நந்தியஞ் சாரல்சூழ் பொருப்பினைக் குறுகிக்
கற்றை வார்சடைச் சுந்தரன் கடவவான் மதுரை
முற்று நான்முகி லெனவரை முழுவதும் பொதிந்து - 3



31 - முரிந்த வெண்டிரைக் கருங்கடல் முகட்டினைக் குழித்து
விரிந்த வெள்ளநீர் மடுப்புழிக் கரந்துடன் மேவிக்
கரிந்தி டத்தனைச் செய்ததீ வடவையின் களவைத்
தெரிந்து வில்லுமிழ் தடித்தெனத் திசைதொறும் சிதறி - 4



32 - கான்ற அக்கனல் மீட்டடை யாவகை கருதி
வான்ற னிற்குனி சிலையெனத் தடையினை வயக்கி
ஏன்ற நீயினி எதிர்த்தனை யாயிடின் இன்னே
ஊன்ற னோடுயிர் குடிப்பலென் றுருமொலி எழுப்பி - 5



33 - அடுத்த டுத்தலை மோதுதெண் டிரைப்புனல் அளக்கர்
உடுத்த பாரிலுன் கிளையெலாம் முதலற ஒருங்கே
படுத்து நின்வலி பாற்றுவன் யானெனப் பகைமை
தொடுத்த வன்சினங் கொண்டழல் மேலமர் தொடங்கி. - 6



34 - விச்சை மந்திர வலியினால் வீங்குநீர் மழையை
வச்சி ரக்கணை யாக்கிமெய் வளமெனக் கருளும்
பொச்ச மில்மறை வேள்வியும் புனிதனேந் தழலும்
எச்ச மாகமற் றெவையுமீண் டிறுகென இயம்பி - 7



35 - காட்ட கங்களுங் கழைநரல் கதிர்மணிச் சிமயக்
கோட்ட கங்களுங் குளிர்புனற் கழனிசூழ் குலவு
நாட்ட கங்களும் பரல்முரம் படுத்தெரி நடஞ்செய்
மோட்ட கங்களும் முழுவதுங் குளிர்கொளச் சொரிந்து - 8



36 - இற்றொ ழிந்தன ஒழியமற் றெஞ்சிய எரிபோய்க்
கற்ற வேதியர் வேள்வியஞ் சாலையுட் கரப்ப
உற்ற வாகண்டு தன்சினக் கனலையும் ஒருவி
வெற்றி மாமுர செனமறைப் பேரொலி விளக்கி - 9



37 - தனது கீர்த்தியுந் திறற்பிர தாபமுந் தரைமேல்
அனல்செய் கோபமும் முல்லையு மெனஎங்கும் அமைத்துப்
புனித மாம்அவை தன்னையும் பொதிந்துகொண் டென்னப்
பனிவி சும்பினிற் சிவந்துவெண் ணிறம்படைத் தன்றே - 10



38 - அறுசீரடியாசிரிய விருத்தம்
உடுவணி குடுமிக் கோடு பிளவுபட் டுடையப் பெய்யும்
கொடுமழைக் காற்றா தங்கட் குளிர்பெயல் மாற எண்ணி
நெடுமலை எடுத்துக் காட்டு நெட்டிதழ்க் காந்தட் கொள்ளி
விடுசுடர்க் கனலி அந்தப் புனலொடும் வீந்த தன்றே. - 11



39 - போதம்மே லாகப் பண்டே புல்லிய மலநோய் தீர்ந்தும்
வாதனை தாக்கு மாபோல் மழைப்பெயல் மாறித் தீர்ந்துங்
காதல்செய் துறையும் புள்ளும் மாக்களுங் கவன்று நெஞ்சம்
நோதக மரங்க ளெல்லாம் நுண்துளி துவற்றும் மாதோ. - 12



40 - கனைபெயல் எழிலிக் கூட்டங் கலிவிசும் பகடு போழ்ந்த
நனைமுடி நந்திக் குன்றம் நளிபடப் பொழியுந் தெண்ணீர்
புனைமறை வசிட்ட மேலோன் செருத்தலான் பொழிந்த தீம்பால்
வனைபுகழ் வெள்ள மென்னத் திசைதொறும் வழிந்த தன்றே. - 13



41 - பாலியாற்று வளம்
கண்ணகன் குடுமிக் குன்றிற் கல்லெனக் கறங்கி ஆர்த்து
விண்ணிவர் ஏணி யென்ன வியன்முடி தொடுத்து வீழுந்
தண்ணறா அருவி யெல்லாந் தலைத்தலை விரிந்து சென்று
புண்ணியப் பாலி யாற்றிற் சேர்ந்துடன் போய மாதோ. - 14



42 - பாரிடங் குழித்து வீழும் பல்வயின் அருவி யெல்லாம்
ஓரிரும் பாலி யாற்றின் ஒருங்குசென் றணையுந் தோற்றம்
சீரிய புவனந் தோறுஞ் சிதறிய வினைக ளெல்லாம்
ஓரிடத் தொருவன் றன்பால் உடங்குசென் றுறுதல் போலும். - 15



43 - விலகிவீழ் அருவித் தாரை வேறுவே றாகஓடிக்
குலநதிப் பாலி வைப்பின் ஏகமாய்க் கூடுந் தோற்றம்
அலகில்பல் வழியும் மூதூர் அணிமையின் ஒன்றா மாறும்
பலபல மதமும் ஈற்றின் ஒருவழிப் படலும் போலும் - 16



44 - மலைநகைத் தனைய காட்சி வயின்வயின் அருவித் தாரை
சிலையினின் றிழிந்து மண்மேல் திரண்டுசென் றணையுந் தோற்றம்
உலவையோ டிகலிச் சேடன் உயர்வரைக் குடுமி யெல்லாம்
பலதலை விரித்துப் பொத்திக் கிடந்தவப் பான்மை போலும். - 17



45 - குரைபுனல் தொண்டை நாட்டைக் குறும்பெறிந் தடிப்ப டுத்துப்
புரைதப நடாத்து கென்னாப் புதுமுகி லரசன் நந்தி
வரைமிசை யிருந்து வேந்தா மணிமுடி சூட்டி உய்ப்பத்
திரைபடு பாலி வல்லே சிலையினின் றிழிந்து போந்து - 18



46 - அரசுகள் சூழ்ந்து செல்ல அருங்கணி மலர்வாய் விள்ளச்
சரிகுழற் குறமின் னார்கள் பற்பல தானை வெள்ளம்
விரவிடப் பரிய காலாண் மேதகு மாக்கள் அத்தி
இருபுடை தழுவிப் போத இகல்கொடு வையம் ஊர்ந்து - 19



47 - அணிவகுத் தெழுந்து குன்றர் அரும்பெறற் குறிச்சி புக்கு
மணிவகை ஆரம் பூண்டு மதுக்குட விருந்து மாந்தித்
தணிவற வெளிக்கொனண் டேகித் தலைதலை வேட்டம் போகித்
துணிபட மாக்க ளெல்லாந் தொலைதுடன் ஈர்த்துச் சென்று - 20



48 - கலிவிருத்தம்
மண்டமர் மேல்கொடு வந்தனம் இன்னே
தண்டக நாட்டுறை தாபதர் நோயோர்
பெண்டிரும் நும்மரண் ஏகுதிர் பெட்டென்
றெண்டிசை யார்ப்ப இசைப்பறை சாற்றி - 21



49 - இறாற்றிகி ரிப்படை தாங்கி இபக்கோ
டறாத்திறல் வெஞ்சிலை காந்தள் அரும்பு
நறாப்பயில் கோலென ஏந்திநல் வீர
மறாப்பகை மாய்த்துறை வெட்சி மலைந்து - 22



50 - முல்லையின் வேந்து முடித்த கரந்தை
ஒல்லை அலைதுயர் ஆநிரை பற்றி
மெல்லிதழ் தின்று சிவந்தெழு வேய்த்தோள்
நல்லவர் கற்பை யழித்து நடந்து - 23



51 - வஞ்சி மலைந்தழல் பாலையை வாட்டி
அஞ்சி யிடாதுதன் ஆணை யிருத்தி
எஞ்ச லுறாமரு தத்திறை யோடும்
வெஞ்சம ரேற்றுழி ஞைத்துணர் வேய்ந்து - 24



52 - தடுத்தெதிர் நின்ற தடங்கரை யெல்லாம்
படுத்து மதன்பயில் பாசறை வீட்டி
மடுக்குளம் ஏரியின் வாட்ட மனைத்தும்
கெடுத்தனம் என்று தழீஇக்கிளர் வுற்று - 25



53 - வீறி யடாவகை வெஞ்சிறை கோலித்
தூறிடு மள்ளர் தொலைந்தழி வெய்தச்
சீறி யடர்ந்து தெழித்துமுள் வேலி
கீறி வளைந்து கிடங்கினை நீங்கி - 26



54 - நொச்சியை முற்றியந் நொச்சியி னுள்ளார்
பச்சிள நொச்சி பறித்தணி யாமே
நச்சிய தும்பை நறுந்துணர் சூடி
அச்செழு மாமதில் முற்றும் அகழ்ந்து அழித்து
விட்டமையால் நொச்சியணியாமே என்றார். - 27



55 - வேறு
இடித்துவெளி செய்துந ரெங்கணும் நுழைந்தாங்
கடுத்தமட வார்வயி றலைத்தனர் இரங்கக்
கொடுத்திடு வளங்கள்பல கொள்ளைகொடு மண்ணின்
எடுத்துவரு வெள்வரகு கொள்ளுடன் இறைத்து - 28



56 - வெற்றிபுனை மாலிகை மிலைச்சியிரு பாலுஞ்
சுற்றிவரு புட்குல நிரைத்தொழுதி தன்னால்
கொற்றமிகும் ஆர்கலியை நோக்கியறை கூவி
எற்றுசுழி நெய்தல்வழி எய்துறுத லோடும் - 29



57 - பௌளவம துணர்ந்துபவ ளந்தரள மாதி
வௌளவுதிரை ஏந்தியெதிர் கொண்டடி வணங்கச்
செவ்விதின் உவந்துபயம் ஈந்துசின மாறிக்
கௌள்வியமெய் யன்பொடு கலந்துளதை யன்றே - 30



58 - அறுசீரடியாசிரிய விருத்தம்
தன்னடிப் படுத்து மேலைத் தண்டக நாடு முற்றும்
முன்னுறக் கவர்ந்து கொண்ட வளத்தினும் மூவி ரட்டி
பின்னுற அளித்து வானிற் புலவரும் பெட்கு மாற்றால்
அந்நிலை உயிர்கள் ஓம்பி அரசுசெய் துறையும் பாலி. - 31



59 - “காரணப் பொருளின் தன்மை காரியத் துளதாம்” என்ன
ஆரணப் பனுவல் கூறும் அரும்பொருள் தெளியத் தேற்றும்
பேரிசைப் புவிமேல் யார்க்கும் பெட்டன பெட்ட வாறே
சீரிதிற் கொடுக்குந் தேனுந் தரவருஞ் செழுநீர்ப் பாலி. - 32



60 - வறுமையுற் றுழியும் தொண்டை வளமலி நாட்டோர் தங்கள்
இறுமுடல் வருத்தி யேனும் ஈவதற் கொல்கார் அற்றே
தெறுகதிர் கனற்றும் வேனிற் பருவத்தும் சீர்மை குன்றா
துறுமணல் அகடு கீண்டும் ஒண்புனல் உதவும் பாலி - 33



61 - சொற்றவித் தீர்த்த மேன்மை சுவைபடும் பாலோ டொக்கும்
மற்றைய தீர்த்த மெல்லாம் வார்தரு புனலோ டொக்கும்
பெற்றிமை உணர்ந்து தொல்லோர் பெயரிடப் பட்ட சீர்த்தி
பற்றிய தெனலாம் பாலிப் பெருமையார் பகரு நீரார். - 34



62 - நாட்டு வளம்
கலிநிலைத்துறை
விளம்பும் இத்தகை மணிகொழி விரிதிரைத் தரங்க
வளம்பு னற்றடம் பாலியான் வண்மைபெற் றோங்கி
உளம்ப யின்றுநாற் பொருள்களும் உஞற்றுநர்க் கிடமாய்த்
துளூம்பு மேன்மையிற் பொலிந்தது தொண்டைநன் னாடு - 35



63 - செக்கர் வார்சடைச் சிவபிரான் திருவருள் செய்யத்
தக்க வாய்மையின் உயிர்க்கெலாந் தன்னிடத் திருந்து
மைக்கண் எம்பெரு மாட்டியெண் ணான்கறம் வளர்க்குந்
தொக்க மாப்புகழ் படைத்தடு தொண்டைநன் னாடு - 36



64 - பவம்வி ளைத்திடாப் பெரும்பதி யெனத்திசை போய
சிவம்வி ளைத்திடு நகரங்கள் ஏழுளுஞ் சிறந்தது
தவம்வி ளைத்திடு காஞ்சியைத் தன்னிடத் திருத்தி
நவம்வி ளைத்திடும் பெருமைபூண் டதுதொண்டை நாடு - 37



65 - நானிலத்து ஐந்திணை வளம்
தரைவி ளங்கிய தண்டக நாட்டினில் தகைசால்
வரையுங் கானமும் புறம்பணைப் பழனமும் மணிநீர்த்
திரையும் வேலையு மென்னுநா னிலத்தினுள் சிறந்த
புரையில் ஐந்திணை வளஞ்சிறி தறிந்தவா புகல்வாம் - 38



66 - முருக வேட்கிடு தூமமோம் புறமுளி அகில்சந்
துருவ வாரழற் பெய்துபுன் பயிர்விளைத் துவப்பார்
பெருவ ளந்துறந் தூர்தொறும் இடுபலி பேணும்
பொருவில் வாழக்கையர் தஞ்செயல் போன்மெனப் பொருப்பர். - 39



67 - ஏறு தன்னுடல் வருத்திய பகைமையெண் ணாது
தூறு பன்மணி மாமுதல் பொறையெலாந் தொலைத்த
வேறு நன்றியே கடைப்பிடித் திதைவியன் பொருப்பர்
கூறு நல்வளம் விளைத்திடும் உயர்ந்தவர் செயல்போல் - 40



68 - வேட்டை மேற்புகு வார்க்குநல் வினையுந்த மடவார்
கூட்டம் வாய்க்குமச் சாரலில் தினைக்குரற் கெய்துஞ்
சேட்டி ளங்கிளிக் குலங்களத் தெரிவைமார் ஓம்பும்
பாட்டி சைத்திறம் ஒளியிருந் தனுதினம் பயிலும் - 41



69 - நங்கு லத்துரு வாழ்க்கையைக் கெடுத்துநம் இருக்கை
தங்க ளுக்கெனக் கொண்டஇவ் வேனல்கள் தம்மை
இங்கண் வாட்டுதும் என்பதோர் சூழ்ச்சிஎண் ணியபோல்
அங்கண் எஞ்சிய வேங்கைகள் போதுசெய் தலரும் - 42



70 - என்னை ஊர்ந்தருள் சுடர்வடி யிலையவேற் பெருமான்
தன்னை நன்மரு கெனப்படைத் தவன்றன தூர்தி
அன்ன தாமெனுங் கேண்மையா னளிமுகிற் குலத்தைக்
கன்னி மாமயில் காண்தொறுங் களிசிறந் தகவும் - 43



71 - நெருங்கு பைந்தழை வருக்கைமேல் நெடுவளி யலைப்ப
அருங்கண் மாமயில் வீற்றிருந் தசைதருங் காட்சி
கருங்க ணாயிரச் செம்மல்தன் மருகனைக் காண
மருங்கு வந்துதன் ஊர்தியை நிறுவுதல் மானும். - 44



72 - சந்தும் ஆரமும் தாங்கிவம் பலர்ந்ததண் குவட்டான்
மைந்தர் கண்ணையும் மனத்தையுங் கவர்ந்திடும் வனப்பின்
முந்தும் ஓங்கலும் கொடிச்சியர் குழுக்களும் முகில்தோய்
கந்த மார்குழை முகத்தலர் இலவங்கங் காட்டும். - 45



73 - கொங்கை யேந்திய ஆண்களும் அவணகொம் புடைய
துங்க வேங்கையின் குலமெலாம் அவனபால் சுரந்து
பொங்கு நீடுசே வினங்களும் அவணவான் புனலை
அங்கண் வேட்டுணும் ஒற்றைத்தாள் எகினமும் அவண - 46



74 - ஆணெ லாமொரு கன்னியை மணப்பவா னணையும்
கோணை வேங்கைகள் யாட்டினோ டுறவுகொண் டோங்கும்
பேணு சேவினஞ் சிங்கமேல் ஏறிடும் பிழையா
தேணி னாற்பொலி எகினங்கள் இடபத்தை விழுங்கும் - 47



75 - வில்ல லர்ந்த உடுக்களும் விண்நெறிப் படருஞ்
செல்லும் வெண்கதிர்க் கடவுளும் பானுவுந் திறல்சால்
மல்லல் வானவக் குழுவுமெய்ப் பாறவந் திருக்கும்
இல்லம் எங்கணும் வான்தொட இழைத்திடுங் குன்றம் - 48



76 - போது மூன்றினும் போதுசெய் காவிசூழ் பொருப்பும்
மேத குந்தமிழ்க் கெல்லையாம் வேங்கட வரையுங்
காதல் பூப்பவத் தாணிகொண் டறுமுகக் கடவுள்
கோது நீத்தர சாட்சிசெய் குறிஞ்சிஅக் குறிஞ்சி - 49



77 - அன்பெ லாமொரு பிழம்பெனத் திரண்டகண் ணப்பன்
எம்பி ராற்கொரு விழியிடந் தப்புகா ளத்திப்
பொன்பி றங்கிய முகலிசூழ் கயிலையம் பொருப்பும்
தன்பு லத்திடை யுடையது தடவரைக் குறிஞ்சி - 50



78 - நாவல் மன்னவர்க் கிரந்துசோ றளித்திடு நம்மான்
தேவி யோடமர் திருக்கச்சூர் திருவிடைச் சுரமும்
பாவ காரியர் எய்தொணாக் கழுகுசூழ் பறம்பும்
மேவ ரத்திகழ் குறிஞ்சியின் பெருமையார் விரிப்பார் - 51



79 - 2. பாலை
குராவ ளித்திடு பாவையைக் கோங்குபொன் கொடுத்துப்
பராரைப் பாடலம் பூந்தழற் பாங்கரின் மணப்ப
மராம ரத்துளர் வண்டுபண் பாடவன் முருங்கை
விராவி வெண்பொரி இறைத்திடும் வியப்பின தொருபால் - 52



80 - எயிற்றி மார்எழில் நலத்தினுக் கிரியல்போ யுடைந்தாங்
கயற்பொ தும்பர்புக் கலர்குராப் பாவைகண் டவர்தந்
துயிற்ர்று சேயெனக் கவன்றுபோய்த் தூதுணம் புறாக்கள்
வெயிற்ற லைக்கண்ணின் றுயங்குவ நிலைமைவிண் டவர்போல் - 53



81 - தூது ணம்புற வினமெலாம் துணையுடன் கெழுமிப்
போத ஊடியும் உணர்த்தியுந் தலைத்தலைப் புணர்ந்து
காதல் அந்நலார் மொழியையுங் கடந்துசே ணிடைச்செல்
ஏதில் ஆடவர் தமைச்செல வழங்குவித் திடுமால் - 54



82 - வெங்க திர்ப்பிரான் நண்பகற் போதினில் வேனில்
மங்கை கொங்கைதோய்ந் தளித்திடும் பாலையாம் மைந்தன்
அங்கண் நானில அரசர்பால் இரந்துவன் முரம்பு
தங்கு சூழலில் சிற்றர சாள்வதும் உளதால் - 55



83 - 3. முல்லை
நவிலும் இந்நிலப் புறம்பயில் புறவநன் மடந்தை
குவிவ ருந்தழல் வெம்மைகூர் கொடும்பசி தணியச்
செவிலி யாய்முகில் தீம்பயம் ஊட்டிட வளர்ந்தாங்
கவிழு நீள்வர காதியாம் மகப்பயந் தளிக்கும் - 56



84 - கொல்லை யெங்கணும் கொழுமலர் ததைபுன முருக்கின்
முல்லை மென்கொடி படர்ந்தலர் நிரைநிரை முகிழ்ப்ப
அல்லை வென்றகந் தரப்பிரான் அரக்கெறி மார்பில்
தொல்லை வெண்டலை மாலிகை துயல்வரல் மானும் - 57



85 - நீலம் பூத்தலர் பூவையைக் கோட்டுநீள் கரத்தால்
கோலம் பூத்தபொற் கொன்றைகள் தழீஇக்கிடந் தசைவ
ஆலம் பூத்தருள் மிடற்றினோன் அன்றுமோ கினியாஞ்
சீலம் பூத்தமால் இளமுலை திளைப்பது தெளிக்கும் - 58



86 - பெண்ண லங்கனி இடைக்குலப் பிடிநடை மடவார்
விண்ண லங்கனி மாதரை எழிலினால் வென்று
பண்ண லங்கனி மிடற்றவர் பணைத்தமூக் கரிந்து
மண்ணில் எங்கணும் தூக்கிவைத் தெனக்குமிழ் மலரும் - 59



87 - மௌளவ லங்குழ லார்விழிக் குடைந்துவான் குதிக்கும்
நவ்வி மீண்டக லாவகை மகளிரா னனத்துக்
கொவ்வு றாதவர் ஆணியில் திரியும்ஒண் மதிகண்
டவ்வு ழித்தன திருக்கையிற் சிறைப்படுத் தலைக்கும் - 60



88 - கற்றை வார்குழல் ஆய்ச்சியர் கயல்விழி முகத்தின்
பெற்றி யொப்புறப் பெருங்குருந் துச்சிமேல் தாவி
ஒற்றை மானுடைக் கலைமதி அதன்நிழல் உறங்கும்
மற்றை மானையும் பற்றுவான் கதிர்க்கையால் வருடும் - 61



89 - நலம்ப யின்றிள வேனிலின் நவிலுமாங் குயில்கள்
அலம்பு கார்வரும் போதுவா யடைப்பது முன்னாள்
புலம்பு கொண்டவர் காரொடுந் தலைவர்தேர் புகுத
வலம்பு னைந்துரை வளமொழிக் கிடைதலா னன்றே - 62



90 - தொண்டை மான்கடக் களிற்றினை முல்லையால் தொடக்கி
அண்டர் தம்பிரான் வெளிப்படக் காட்சிதந் தருள்சீர்
கொண்ட வான்பதி முதல்பல தன்னிடைக் குலவக்
கண்ட முல்லையின் பெருமையார் கட்டுரைத் திடுவார் - 63



91 - 4. மருதம்
பொலஞ்சி றைச்சுரும் புளர்தரு புறவ
நிலந்த னைப்புடை யுடுத்தது நெட்டிள வாளை
இலஞ்சி நின்றுமீப் பாய்ந்தவெண் மதிகிழித் தேகித்
தலங்கொள் வானியாற் றுலவுபூந் தடம்பணை மருதம் - 64



92 - ஆற்றுக்கால் சிறப்பு
ஒருவ னாகிய சிவபிரா னுலகுயி ரளிப்பக்
கருணை கூர்ந்துமுன் நவந்தரு பேதமுங் காட்டுந்
திருநி கர்ப்பவோர் பாலியே வயல்வளஞ் செழிப்பப்
பெருகு தண்புனல் பற்பல கால்களாய்ப் பிரியும் - 65



93 - பராரை மூலமேற் பணைகிளை வளாரெனைப் பலவும்
விராவி ஒன்றினொன் றனந்தமாய்க் கவடுவிட் டென்னத்
தராத லம்புகும் பாலியிற் பிரிந்துதண் கரைக்கண்
அராவு கால்களும் அவைதரு கால்களும் அனந்தம் - 66



94 - நான்மு கப்பிரான் வேள்வியைத் தபவரு நதியை
மால்ம றுத்திடைக் குலையெனக் கிடந்தமை மான
மீன்மு கப்பெருங் காற்புனல் தட்பவீழ்ந் துழல்லும்
பான்மு லைகரு மேதியாற் பருமடை யுடையும் - 67



95 - குலை - செய்கரை
பழங்கண் வேனிலைப் புயல்கொடு பாற்றுதன் இறைக்குத்
தழங்கும் ஓதையின் மருதம்வாழ்த் தெடுப்பது தகைய
வழங்கு தண்ணுமை ஓதையும் மள்ளர்ஆர்ப் பொலியும்
முழங்கு தீம்புனற் சும்மையும் முடுகிவிண் புகுமால் - 68



96 - பொறிகள் ஐந்தையும் புறஞ்செலா தடக்கியோர் நெறிக்கே
குறிகொ ளும்படி செலுத்துபே ராளர்தங் கோள்போல்
பிறிவு றும்பல மடைகளிற் பிழைத்திடா தொதுக்கிச்
செறித ரும்புனல் முழுவதும் அகன்பணை செறிப்பார் - 69



97 - உழுதற் சிறப்பு
பழியில் நீங்கிநன் கீட்டிய பசும்பொருள் சிறிதுங்
கழிப டாதுநல் வழிப்பயன் படுவது கடுப்பக்
கொழிதி ரைச்சுவைப் பாலியின் குளிர்புனல் முழுதும்
வழுவு றாதுகால் வழிச்சென்று வளவயல் நிறைக்கும் - 70



98 - கண்ண கன்புவி முழுதுமாங் கடுங்கொலை அவுணன்
அண்ணல் மார்பகம் பிளப்பவர் போலவிர் மணியின்
வண்ண வன்கடா நிரைநிரை யாத்துவன் படையாற்
பண்ணை தோறுநின் றுழுநர்கம் பலைகளே எங்கும் - 71



99 - மருவு சால்தொறும் வெருவிமுன் குதித்தெழு வாளை
இரும ருப்பிடை உதைந்துழும் எருமையைத் தடுக்கும்
பருவ ராற்குலம் ஒய்யெனப் பாய்ந்தெழுந் தலைக்கும்
உருவ வாற்புறத் துதைந்துவல் விரைந்தெழ உந்தும் - 72



100 - பூண்ட வன்கொடுந் தானவன் ஆக்கைபோழ்ந் திடலுங்
காண்ட கும்புவி தன்னிறங் காட்டிய தென்னக்
கீண்ட சால்தொறுங் கேழ்கிளர் தமனியங் கிடந்து
மாண்ட பேரொளி வயங்கிநீள் கனையிருள் மேயும் - 73



101 - நாற்று விடுதற் சிறப்பு
வேறு செய்துபின் பொருத்துறும் வினைவல அமைச்சிற்
கூறு செய்ததண் சேறெலாங் குழப்பி ஒன்றாக்கிச்
சாறு செய்துவா சவற்றொழு துறும்மிடர் தவிர்த்து
நாறு செய்கென வெண்முளை வித்துவர் நாளால் - 74



102 - முளைநீர் வடித்தற் சிறப்பு
அருள்வி ளங்கலும் உடல்பொரு ளாதிய பந்தந்
தரும வன்புடை யெய்துறக் கொடுத்திடுந் தகைபோல்
பெருக யாத்தநீர்க் கலங்கல்போய்த் தெளிந்தபின் முழுதும்
மருவு கால்வழி வடிந்துறக் கவிழ்ப்பர்கள் மள்ளர் - 75



103 - முளைநீர் பாய்ச்சுதற் சிறப்பு
கலிவிருத்தம்
இளமகப் பசிதனக் கேந்து கொங்கைபால்
அளவறிந் தூட்டுதாய் மான ஆறறி
களமர்கள் முளைப்புனல் செவ்வி கண்டுநீள்
வளவயல் பாய்த்தித்தம் மகவின் ஓம்புவார் - 76



104 - நாற்று நடுதற் சிறப்பு
ஓரிடத் துயிர்த்ததன் பறழை ஓம்புவான்
பாரிடைப் பல்வயின் உய்க்கும் பூஞைபோல்
காருடற் களமர்கைந் நாறு வாரிப்போய்ச்
சீருடைப் பணைதொறும் நடுதல் செய்வரால் - 77



105 - பயிர் பசத்தற் சிறப்பு
மரகதந் தளிர்த்தென வளர்பைங் கூழ்செறி
தரநிறை கழனியுள் சங்கம் ஊர்வன
பரவைநீர் மேய்ந்தெழும் படலைக் கொண்டலுள்
சரமதி நுழைந்துசெல் காட்சி சாலுமால் - 78



106 - களை பறித்தற் சிறப்பு
களமர்கள் களைகளை பருவங் காட்டலும்
இளமயில் வயல்வளங் காண எய்தியாங்
குளமகிழ் கூர்தர உழத்தி மாரெலாம்
வளமலி பணைதொறும் வந்து முற்றுவார் - 79



107 - அம்புயம் உற்பலம் ஆம்ப லாதியாம்
பைம்புதற் களையறப் பறித்த தம்முருக்
கொன்புனல் தோன்றலுங் கொய்த புன்களை
பின்பினும் முளைப்பதென் பெயர்த்தென் பார்சிலர் - 80



108 - பங்கயம் ஆம்பல்உற் பலத்தில் தேனுண்டு
தங்கிய வண்டினந் தமது வாள்முகஞ்
செங்கனி வாய்விழி சேர்ந்து மூசுற
அங்கவை கட்டெறிந் தகற்று வார்சிலர் - 81



109 - பாயிதழ்த் தாமரை பறித்தங் கொப்புமை
ஆயுந ரெனமுகஞ் சேர்த்தி ஐதுதேன்
வாய்மடுத் திணையில தென்று மாற்றல்போல்
மீயுயர் கரைப்புறம் வீசு வார்சிலர் - 82



110 - இணைவிழிக் கிணையிலை யென்ப தண்மையின்
அணுகிநீ காணென அழைத்துக் காட்டல்போல்
பிணையுநா சியினெதிர் பிடித்து மோந்துதேன்
தணிவிலுற் பலம்முடி சார்த்து வார்சிலர் - 83



111 - சைவலங் களைகுவான் குனியத் தாழ்குழல்
எய்தியெம் இனத்தினை ஒறேல்மின் என்பபோல்
கைமிசை விழுந்துசிக் குண்ணக் கால்நிமிர்த்
தையபூங் குழல்முடித் தணைகின் றார்சிலர் - 84



112 - நறுமலர்ப் பங்கயங் களைய நாரியர்
கறுவொடு முள்ளரைக் காம்பு பற்றலும்
தெறுகரங் கிழியப்புண் செய்யு மேதமக்
கிறுதிசெய் வார்க்கெவர் இடரி ழைத்திடார் - 85



113 - அலமரு விழியின மாமெ னாமுக
மலர்மிசைப் பாய்தரு கயலும் மாண்டதன்
குலமெனப் புறவடி கூடுங் கூர்மமும்
இலவிதழ்க் கடைசியர் எளிதில் கைக்கொள்வார் - 86



114 - பறிதரக் களைந்தெறி பாவை மாரையம்
மறிபுனற் குவளைகால் வளைத்துப் பாம்பென
பொறிவெரு வுறச்செயும் புடைப்பின் மொய்ம்பிலாச்
சிறியருந் தம்மினாந் தீங்கி ழைப்பாரே - 87



115 - களிபடு சுரும்புளர் கமலக் கஞ்சமும்
நளிபடு குவளையும் நனைகொள் ஆம்பலும்
தளிரியற் கடைசியர் முழுதுஞ் சாடுவார்
அளிமரு வலர்க்கெவர் அன்பு செய்குவார் - 88



116 - புரைதபு பசும்பயிர்ப் பொலிவுங் கங்கெலாம்
நிரைநிரை கிடந்தபல் நிறத்த பூக்களும்
வரைதவழ் முகில்களும் வான விற்களும்
தரையிடைப் பயன்பெறச் சார்ந்த தொக்குமால் - 89



117 - இருள்முகி லுறழ்பயி ரிடையெ லாந்தடித்
துருகெழ வயங்கியாங் குலவும் அந்நலார்
திருமலர்ப் பதமெல்லப் பெயர்த்துத் தேங்குழற்
கருஞிமி றார்த்தெழக் கரையில் ஏறுவார் - 90



118 - தெறுங்களை கட்டநீர்ச் செறுவிற் பண்டுபோல்
நறுங்களம் போருகச் சேக்கை நாடிவந்
துறுங்களி ஓதிமம் உயங்கி வாடுவ
வறுங்களம் நாடியுள் மறுகு மாந்தர்போல் - 91



119 - கொள்ளைபோய் நனிவறங் கூர்ந்த காலையும்
வள்ளியோர் விருந்தினர் வாடக் காண்பரோ
கள்ளறா மலர்வள மிழந்துங் கார்வயல்
வெள்ளனம் மகிழமீன் விருந்து நல்குமால் - 92



120 - பயிர் வளர்தற் சிறப்பு
மண்ணக மகளிர்கை வண்மை கண்டயாம்
விண்ணக மகளிர்கை மேன்மை காண்டுமென்
றெண்ணீமேற் சேறலுற் றென்ன வான்பயிர்
கண்ணிறை கவின்செழித் தோங்குங் காட்சித்தே - 93



121 - கதிர்விடுதற் சிறப்பு
தரவு கொச்சகக் கலிப்பா
ஈன்றெடுத்தோர் குணம்மகவுக் கியையுமுறைப் படிவித்தின்
தோன்றுமுளை முன்விளர்த்துப் பின்பசந்த தொடர்பினால்
ஆன்றசெழுங் கதிர்களும்முன் தூவெள்ளை யாயெழுந்து
மான்றுமர கதமேனி வாய்த்துமடல் கிழித்தெழுமால் 94 - 94



122 - கதிர் முற்றுதற் சிறப்பு
அரமகளிர் அங்கைவளம் அறிபாக்கு மேற்போந்து
திரையெறிநீர்க் கடல்வரைப்பின் தெரிவையர்கைக் கிணையொவ்வா
மரபுணர்ந்து மீண்டென்ன வான்நோக்கிக் கதிர்த்தெழுந்த
பரவுபுனல் தடஞ்சாலி பார்நோக்கி இறைஞ்சுமால் - 95



123 - பேதைமையில் ஆடவர்முன் வளைவின்றிப் பெதும்பைமையின்
மேதகச்சற் றெனவணங்கி மங்கைமையின் மிகநாணும்
மாதரைப்போற் பைங்கூழின் மன்னனெதிர் கதிர்த்தெழுந்த
ஏதமிலாக் கதிர்முதிர்ந்து வரவரக்கீழ் இறைஞ்சுமால் - 96



124 - உருத்திட்ப முறாக்காலைத் தலைநிறீஇ உற்றதற்பின்
தருக்கற்று நனிவணங்கிப் பழுத்தகதிர்த் தடஞ்சாலி
“பெருக்கத்து வேண்டுமால் பெரும்பணிவு மிகச்சிறிய
சுருக்கத்து வேண்டும்உயர்” வெனுமொழியின் சுவைதேற்றும் - 97



125 - விளைச்சற் சிறப்பு
தூமதிவாக் கியகிரணந் துளிர்த்தென்னக் கதிர்ச்சாலி
காமர்மணித் தரளங்கள் கான்றுசெறுத் திடராக்கிப்
பூமலரக் கால்யாத்த புனல்முழுதும் புறங்கவிழ்த்து
மாமைநீர் புலர்த்தவரும் மள்ளருளம் மகிழ்விக்கும் - 98



126 - வணங்குகுலைக் கதிர்ச்சாலி சிலையாக வளர்பதடி
உணங்குகதிர் கணையாக ஒளிர்முளரிக் கரம்பற்றி
இணங்குபசுங் குரல்கவர வரும்புட்கள் இரிந்தோட
அணங்குபுரிந் தெதிர்கண்டோர் அதிசயிப்பச் செயும்பணைகள் - 98



127 - பாலொளிநீத் தெழும்விடத்தான் முகில்வண்ணம் படைத்திருந்த
மாலவனார் கலிக்கச்சி வந்தெய்தித் தவமுஞற்றி
மேலைஉருச் சிவந்தென்ன வெள்ளொளிபோய்ப் பசந்தெழுந்த
சாலியெலாஞ் செங்கனக நிறம்வாய்ந்து தழைக்குமால் - 100



128 - நெல்லரிதல் சிறப்பு
அறுசீரடியாசிரிய விருத்தம்
நாவலோர் புனைந்துரைக்கும் நலமுழுதும்
      அமைந்துவட நாகஞ்சூழ்பொன்
நாவலோ எனவியப்ப
      அரிபருவம் நாடித் தெண்ணீர்
நாவலோன் உளங்களிப்பப் படியெடுக்குங்
      குண்டைநகர் உழவர் போல்வார்
நாவலோ எனவிளிப்பத்
      வினையின் மூள்வார் - 101



129 - கலிவிருத்தம்
ஒருவ ருக்கொரு செல்லலுற் றால·
தருகு ளார்க்கும் அடுப்பது திண்ணமே
கருவி மள்ளர் கதிர்க்குலை தன்னொடும்
பருமென் பூக்களும் பற்றி அரிகுவார் - 102



130 - அரிவர் சேர்ப்பர் அடுக்குவர் சிக்கென
வரிவர் சென்னியில் வைப்பர் களஞ்செலப்
புரிவர் பொன்னங் கிரியெனப் போர்செய்வர்
பிரிவர் மீள்வரிப் பெற்ரியர் எங்கணும் - 103



131 - நெல்கதிர்ப்போர்ச் சிறப்பு
சிறைசெய்தீம்புனல் நாட்டிறை செற்றுமுன்
சிறைய ரிந்த வரைகளைச் சீற்றத்தால்
சிறைசெ யக்கரு தித்தன் நிலத்தொரு
சிறைவைத் தாலெனப் போர்கள் சிறக்குமால் - 104



132 - கடாவிடுதல் சிறப்பு
வெற்பெ லாமண்ணின் வீழ்த்து வலாரிதன்
ஒப்பில் ஊர்தியை ஏவிஒ றுத்தல்போல்
பற்பல் போர்கள் சரித்துப் பகட்டினம்
முற்பி ணைத்து நடத்துவர் மொய்ம்பினோர் - 105



133 - நெற்ப லாலத்தின் நீங்கிய தோவெனப்
பற்பல் கால்முகங் கோட்டின் பார்ப்பபோல்
பொற்பவாயினிற் பூங்கதிர் கவ்வுபு
சொற்ப கட்டினஞ் சுற்றி உழக்குமால் - 106



134 - உடலி னாவி பிரிந்தென ஊழ்வினைத்
தொடர்பு நீங்குவ தொப்பத் தொகுத்தநெற்
படலை வையினில் நீங்கப் பகட்டினம்
அடைய வுந்தொடர் நீங்கி அகலுமால் - 107



135 - தூற்றுதற் சிறப்பு
வைய கற்றி வளியெதிர் தூற்றலும்
பொய்ய கன்றவர் ஐம்பொறி போதல்போல்
கைய கன்று கழிவைப் பொடியொடும்
ஒய்யெ னப்பதர் அப்புறத் தோடுமால் - 108



136 - பயன்கொள்ளுதற் சிறப்பு
அறத்து நூல்வழி ஆற்றுவ ஆற்றியத்
திறத்தின் எஞ்சிய செந்நெற் குவையெலாம்
குறித்தெ டுத்துநெற் கூடுய்த் தறச்செயல்
மறப்பி லாத வளக்குடி எங்கணும் - 109



137 - குறைய வித்தின கொண்டு குடியெலாம்
நிறையச் சாலி நிரப்புவ பூம்பணை
இறைய ளித்த இருநாழி நெற்கொண்டே
அறமெ லாம்நிறை விக்கும் அமலைபோல் - 110



138 - கொடுப்ப கொண்டு பெருக்கிக் கொடுத்தலால்
அடுத்த வாணிகர் போலும் அகன்பணை
உடுத்த சோலைகள் உம்பர் கடவுள்நீர்
மடுப்ப தென்ன வளர்ந்தெழுந் தோங்குமால் - 111



139 - கலிநிலைத்துறை
கொண்டல் உகுக்கும் ஆலி நிகர்ப்பக் குளிர்பாளை
விண்டு முகைக்கும் பைங்கமு கெங்கும் விளையாட்டு
வண்டலர் கொங்கைக் கிடையிள நீர்மற் றவர்காணா
தண்ட மிசைக்கொண் டெய்தி அளிக்கும் வளர்தெங்கு - 112



140 - செற்றெயில் வென்றார் தேர்மிசை மேற்போக் கெனமென்பூத்
துற்ற பொதும்பர்த் துறையின் இனத்தாற் செருவேற்றுப்
பற்றிய வாவி நீங்குபு பைந்தே னடைகீறி
உற்றெழு வாளை பொருதுயிர் விண்டார் கதிகாட்டும் - 113



141 - போதுகள் மேய நெடுங்கய மேவு புனிற்றுக்கார்
மேதியை ஆயிடை வாளை வெகுண்டு விசும்பேறிப்
பாதி வெரிந்புறம் உட்குழி யக்குதி பாய்ந்தாடி
மீதுயர் திண்கரை யேற உகைக்கும் வியப்பிற்றால் - 114



142 - சுவையொளி ஊறொலி நாற்றமென் ஐந்தின் தொடர்பற்றிக்
கவர்படு நெஞ்சில் திரைதிரை தோறுங் கடைநீர்நாய்
துவள எழும்பா முறைமுறை கீழ்நீர்ச் சுழல்காட்சி
எவரும் இரும்பூ துறவுள வேரித் தடமெங்கும் - 115



143 - கரைத்துறு தண்பூங் காஞ்சிகள் சாகைக் கரமோச்சி
விரைத்த கரும்பைத் தைவரு தோற்றம் விரிதார்வண்
டிரைத்தெழு திண்தோள் கேள்வரொ டூடும் இளையார்மேல்
நிரைத்தமர் செய்வான் வேள்சிலை பற்றும் நிகழ்விற்றால் - 116



144 - மேதகு செவ்வணி தாங்கினர் செல்லுமின் னன்னாருந்
தீதற வெள்ளணி பூண்டுசெல் சேடிய ரானோரும்
போதலும் மீள்தலு மாய்ப்பொலி வீதிகள் எங்கெங்குங்
காதல்செய் சேரிமடந்தையர் உள்ளங் கவல்விக்கும் - 117



145 - தசும்புறழ் கொங்கையொ டெம்பெரு மான்மகிழ் தண்பாசூர்
விசும்பை உரிஞ்சு மதிற்றிரு வல்லம் விரைச்செந்தேன்
அசும்பு தடம்பொழில் ஏனைய வைப்பும் அனந்தஞ்சூழ்
பசும்பணை மாமரு தத்தொழில் யார்பகர் கிற்பாரே - 118



146 - 5. நெய்தல்
கலிவிருத்தம்
அம்மருத வைப்பினை அடுத்தகழி நெய்தல்
மம்மர்விட வாலமர னுக்குதவு மாற்றால்
நம்மின மெனப்பொய்ம்மொழி நாடியுரை கைதை
சும்மைய அளக்கரொடு சூழ்ந்துறவு கொள்ளும் - 119



147 - கண்டல்மட லேறவலர் தூற்றுகமழ் புன்னை
உண்டுநறை காலும் ஒத்துடன் இசைக்கும்
வண்டுளர் அரும்புவிரி நெய்தல்மண மிசையுங்
குண்டுகழி மேய்பறவை நோக்கிமகிழ் கூரும். - 120



148 - கண்டுமொழி யாரவய வத்தெழில் கவர்ந்து
தெண்டிரை அளக்கரின் ஒளித்தது தெளிந்து
கொண்டதுறை யோர்கடல் குளிப்பர் துகிர்சங்கம்
வண்டரளம் வாரிமட வாரெதிர் குவிப்பார் - 121



149 - எம்மிடை உறுப்பெழிலை வவ்வினிர்க ளென்னாக்
கொம்மைமுலை வம்பணி பரத்தியர் வெகுண்டு
விம்முவலை சேல்பவளம் வெண்டரளம் மற்றும்
அம்மபிறர் கொள்ளவிலை யாற்றிமகிழ் கூர்வார் - 122



150 - கண்ணெழில் கவர்ந்தகடல் மீன்களை உணக்கும்
உண்ணமிழ்த மன்னமட வார்பறவை ஓப்பும்
பண்ணிசை மடுப்பவிழை பவ்வமும் அருக்கன்
விண்ணெழு பகற்பொழுதின் மெல்லென ஒலிக்கும் - 123



151 - தணந்தவர்கள் ஆருயிர் வருத்தவிறல் சாற்றி
மணந்தழுவு தும்பைமலர் சூடியடல் மாரன்
அணங்கமர்செய் காலமென ஓர்ந்துமுர சாழி
இணங்குற இராப்பொழுதின் மிக்கொலி எழுப்பும் - 124



152 - வீழ்ந்தவர் தணத்தலின் விழிப்புனல் உகுத்துத்
தாழ்ந்தழு திரங்குமட மாதர்தமை நோக்கி
ஆழ்ந்தகழி மாதுமுடன் நின்றழுவ தென்னச்
சூழ்ந்துபுள் அரற்றமலர் தேத்துளி துளிக்கும் - 125



153 - நலம்பயில் பொருட்குமலி வங்கமிசை நண்ணும்
புலம்பர்வரு கின்றவழி நோக்கினர் புலம்பி
இலம்படு மடந்தையர்க ளின்னுயிர் தளிர்ப்ப
அலம்புகுளிர் பூந்திவலை வீசுமலை வாரி - 126



154 - புன்புற மதத்தரும் வியந்துபுகழ் செய்ய
என்பையொரு பெண்ணென இயற்றுநகர் ஒற்றி
நன்பதி முதற்பல உடுத்தநளி நெய்தல்
தன்பெருமை யாவரள விட்டறி தரத்தோர் - 127



155 - திணைமயக்கம்
அறுசீரடி யாசிரிய விருத்தம்
திருத்தொண்டை நன்னாட்டு நானிலத்
      தந்திணை வளமுந் தெரித்துக் காட்ட
மருத்தொண்டை வாய்ச்சியர்சூழ் குன்றை
      நகர்க்குலக் கவியே வல்லா னல்லாற்
கருத்தொண்ட ரெம்போல்வா ரெவ்வாறு
      தெரிந்துரைப்பார் கலந்தார்க் கின்பம்
அருந்தொண்ட ரணியிலவை
      றியைந்தனவு மாங்காங் குண்டால் - 128



156 - வரைப்பிண்டி மலர்தூவி
      செதிர்சொரிந்த மலருண் மூழ்கி
நிரைக்கும்பூங் கணைதூவி மதனெம்மான்
      விழிநெருப்பு ணிற்றல் காட்டும்
வரைத்துன்று கறிக்கொடிபோய்க் கடுக்கைமிசை
      மரகதத்தோ ரணம்போல் தாவி
நிரைக்கிள்ளை வாரணமும் எதிர்நடப்பப்
      பொருநர்நெடுங் கயிறு காட்டும் - 129



157 - சுற்றெல்லா மலர்முல்லை ததைந்துபெருந்
      தூறுசெய அதன்கீழ் எண்கு
பற்றிநுழைந் துறங்கநடு வளர்கொன்றை
      மிசைக்கறிதாய்ப் படரும் தோற்றம்
உற்றரக்கன் வெள்ளிமலை எடுத்தநாள்
      வெரீஇத்தழுவும் உமையா ளோடும்
கற்றைவார் சடைப்பெருமான் நின்றநிலை
      காட்டுவதும் உண்டால் அங்கண் - 130



158 - தாம்பயிலும் வரைக்கிளைத்த செயலைமலர்
      கவர்மாரன் தன்மேல் சீறி
ஆம்பலினங் கழனியிற்போய் அவன்சேமச்
      சிலைக்கரும்பை அழித்துண் டார்க்கும்
பூம்படுகர்ப் பகட்டினங்கள் வெகுண்டெழுந்து
      மலைச்சாரற் புனிற்று வாழை
தேம்பயில்செந் தினையனைத்தும் அழித்துழக்கி
      மேய்ந்துவக்கும் செவ்வித் தோர்பால் - 131



159 - வரைக்குறக்கன் னியர்புனத்துக் குருகோட்டும்
      கவண்மணிக்கல் மருதத் தெண்ணீர்த்
திரைக்கயத்துத் திடர்செய்ய அந்நிலத்துச்
      சிறுமகார் சினமீக் கொண்டு
விரைத்தகுழற் பேதையர்கள்
      டயர்துறையின் மேவிப் பந்தும்
நிரைக்கழங்கும் அவரலறப் பறித்தெறிந்து
      நீர்ச்சுனையைத் தூர்ப்பார் அங்கண் - 132



160 - தாமுமொரு பயப்படார் பயப்படுவார்
      தம்மையுந்தம் போற்செய் வார்போல்
காமரளி நுகராமற் கழிப்பூமே
      லடுக்கலுறுங் கணிதே னூற்றும்
ஆமிதனை அறிந்துவெகுண் டெழுந்தென்ன
      அணிவேங்கைக் குடுமி தன்னை
நாமநீள் கடல்பவளக் கரநீட்டிப்
      பற்றியிடு நலமும் ஓர்பால் - 133



161 - அலைக்காகம் மலைசாரற் பலாச்சுளையைக்
      கவ்வியெழுந் தரக்கர் கோமான்
சிலைத்தாச ரதிமனையைக் கொண்டகன்றா
      லெனலெனவங்கஞ் சேரும் அந்நாள்
நிலைப்பான மதிலிலங்கை மிசைத்தாவும்
      அனுமனைப்போல் நீள்வால் மந்தி
மலைப்பால்நின் றலைத்தோணி
      பாய்ந்துழக்கி மீண்டெய்தும் வாழ்வும் அங்கண் - 134



162 - இடைச்சியர்பால் நடைகற்பச்
      செல்வதென வயல்மேவும் எகின மெல்லாம்
படைத்தவளம் பாடியிற்போய்
      ஆன்பாலை வாய்மடுத்துப் பையுள் நீங்கும்
மடைத்தலைசூழ் வயல்மகளிர்
      மொழிபயிலப் போவதென வனத்துள் வாழும்
பெடைக்குயில்போய்ப் பணைக்கமுகின்
      கனிதொண்டைக் கனியென்னப் பேணும் ஓர்பால் - 135



163 - கொடும்பரவர் கழியுழக்கக் குதித்தெழுமீன்
      ஆய்ச்சியர்பாற் குடத்துள் வீழ்ந்தங்
கடும்பயத்தோ டலமருமற் றவர்கடையுந்
      தயிரோதைக் கலமந் தோடி
ஒடுங்குமுயல் கைதையினுள் அடங்கியங்கட்
      கடலொலிகேட் டுள்ளம் மாழ்குங்
கடுங்கருமத் தொடரந்தோ யாங்குறினும்
      விடாதென்னக் காட்டும் ஒர்பால் - 136



164 - இடுமிடைக் கடைசியர்கள் களைந்தெறிந்த
      நறுங்கமலம் இரைக்கும் முந்நீர்ப்
படுதிரைமேல் வயங்குதலுங் கடல்முளரி
      பூத்ததெவன் பாரீர் என்பார்
உடைதிரைநீர்க் கடல்கிளைத்த
      துகிர்க்கொடிபோய்ப் பழனமிசை ஒளிரக் கண்டோர்
கடிவயலுந் துகிரீன்ற தென்னென்பார்
      இப்பரிசு கவினும் ஓர்பால் - 137



165 - வரைப்புறத்துப் பசுங்கிளியுங் கான்குயிலும்
      உடனான்பால் மடுத்துப் புட்கள்
இரைத்தெழுபூம் பணைமருதச் சேக்கைமிசை
      எதிரெதிருற் றிசைபாடும்
நிரைக்குடுமி வரைப்பகடும் வயற்பகடும்
      கரும்பொடித்து நெரித்து மாந்தித்
திரைத்தடநீர்க் கான்யாற்றுத் திளைத்தாடி
      உடனுறங்குஞ் செவ்வித் தோர்பால் - 138



166 - புறவகத்த குமிழ்ம்போதும் கழிக்கானற்
      கைதைதருங் பொலங்கேழ்ப் பூவும்
தறைபொறுத்த வரைதோன்றித்
      தண்மலர்மே லிருபுடையுந் தாங்கி நின்றே
யிறைவனுக்காம் மலர்மோந்தாள்
      மூக்கரிந்து சுரிகையுட னேந்தி யந்நாள்
முறைநிறுத்த செருத்துனையார் நின்றநிலை
      காட்டிவள முகிழ்க்கும் ஓர்பால் - 139



167 - விண்முட்டுங் குடிமிவரைத் திகிரிபடும்
      வெண்முத்தும் வேலைச் சூழல்
மண்முட்ட நறும்புன்னை உகுமரும்புந்
      தலைமயங்கி அவற்றுட் சேர்ந்த
தண்முட்டை இதுவென்னப் பகுத்தறிய
      வல்லாது தளர்வு கொண்டு
கண்முட்ட வளம்படைத்த வயலன்னந்
      துயர்கூருங் காட்சித் தோர்பால் - 140



168 - குறுஞ்சுனையிற் களிவண்டு சுழன்றாடுங்
      கான்குயில்கள் குரைநீர்ப் புன்னை
தொறும்பொதுளுங் கருங்கொடிதன்
      குடம்பையிற்போய்க்
      கருவுயிர்த்துச் சுலவி மீண்டு
நறும்பிரச மலர்க்காஞ்சிச் சினையேறி
      ஒளியிருந்து நாடிக் காலம்
உறுந்துணையும் இனிதுறையும் உலவாத
      வளங்காட்டி ஓங்கும் ஓர்பால் - 141



169 - கறிக்கொடியும் துகிர்க்கொடியும் நெடுவயலைப்
      பசுங்கொடியுங் கமழ்தேன் மௌளவல்
வெறிக்கொடியும் நாற்றிசையுந் தாய்ப்படர
      நடுவளர்ந்த விரைக்கு ராமேல்
கிறிக்கொடிய பெருங்காற்றாற் பல்காலும்
      அசைபாவைக் கிளர்ச்சி வாள்கண்
மறிக்கொடியுங் கூத்தியர்செய் கயிறுவிசி
      கழைக்கூத்தின் வயங்கும் ஓர்பால் - 142



170 - இனியநா னிலமடுத்த வளாகமெலாம்
      பெருங்குடிகள் இயல்பின் ஓங்கித்
தினையளவும் முறைபிறழாத் தொண்டைநாட்
      டணிமுழுதுந் தெரித்துக் கூறக்
கனைதிரைநீர்க் கடலாடை நிலவரைப்பின்
      யாருளரோ கற்ப நாட்டுந்
தனைநிகர்பா தலதலத்தும் அன்னதே
      யெனிற்பிறிது சாற்று மாறென் - 143



171 - எந்நாட்டுப் பெருவளமும் எவ்வெவர்கோட்
      பாடுகளும் இயம்பவல்ல
பொன்னாட்டுப் பொன்செருக்கும் பன்னாக்குப்
      பணிச்செருக்கும் போக்கு மிந்த
நன்னாட்டைப் புலவரெலாந் தொண்டைநா
      டெனவுரைப்பர் ஞால மங்கை
தன்னாட்போ தனையமுகக் கனிவாயாங்
      காரணத்தின் சார்பாற் போலும் - 144



172 - சலதியுடைச் சேயிழைக்குத் தமிழ்நாடே
      மதிமுகமாத் தமிழ்நாட் டுள்ளு
மலர்புகழ்த்தண் டகநாடே கனிவாயா
      வதனுள்ளுஞ் சாதி பேதங்
குலவுமா ருயிர்க்கெல்லாந் தத்தமது
      மரபொழுக்கங் குடங்கை சேரா
மலகமெனத் தேற்றுதலின் நாவெனலாங்
      காஞ்சிநகர் வண்மை சொல்வாம் - 145

திருநாட்டுப்படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் 172
-----

2. திருநகரப்படலம் (173-298)




173 - அறுசீரடி ஆசிரிய விருத்தம்
கச்சிமா நகரோர் தட்டுங் கடவுளர்
      நகரோர் தட்டும்
வைச்சுமுன் அயனார் தூக்க
      மற்றது மீது செல்ல
நிச்சயம் முறுகித் தாழ்ந்து நிலமிசை
      விழுமிவ் வூரை
இச்சகத் தூர்களோடும் எண்ணுதல்
      மடமைப் பாற்றே. - 1



174 - கவினெலாந் திரட்டிக் காஞ்சிக்
      கடிநகராக்கிக் கஞ்சத்
தவிசினோன் அதன்பால் நுட்பத்
      தொழில்செயச் சார்ந்த காலைப்
புவியிடைக் கழிந்த சேடம்
      பொற்பவே றெடுத்து விண்ணா
டவிர்தரச் செய்தான் போலும்
      அன்றிவே றுரைப்ப தென்னோ - 2



175 - ஆதிநாள் முக்கண் எம்மான்
      அயன்றனைப் படைத்து வேதம்
ஓதுவித் தருளின் நோக்கி
      உலகெலாம் படையென் றேவும்
போதிது பார்த்திவ் வாறு படையெனப்
      புகன்று வைத்தான்
ஈதென லாகுங் காஞ்சி
      யென்னுரை யளவைத் தாமே. - 3



176 - இந்நகர் நோக்குந் தோறும்
      இமையவர் தமது நாடு
நன்னரென் றிருந்த தம்மைத்
      தாங்களே நாணி வைவர்
முன்னொரு சமயந் தன்னைப்
      பொருளென முற்றி நிற்றோர்
பின்னர்வான் சைவம் எய்தப்
      பெறினவர் பேசு மாபோல் - 4



177 - நீடுமிந் நகரம் மன்னர் நெடுந்தவம்
      முயல்வோர் வான
நாடர்தம் பதமுங் கஞ்சன்
      நாரணன் வலாரி வைப்பும்
பாடிரி கான்ற சோறாக் காண்பதிப்
      பதியின் வண்மை
கோடியில் ஒருகூ றொவ்வா அவையெனக்
      குறித்தே யன்றோ - 5



178 - எழுசீரடி யாசிரிய விருத்தம்
சுரும்புகா லுழக்க முகையுடைந்
      துளித்ததீஞ் சுவைமதுப் பிளிற்றும்
அரும்பெறற் சோலை மீமிசைக் கருவி
      முகிற்குழாம் அடர்வபாட் டளிக்கு
விரும்புதேன் அளியாக் கற்பக
      வெல்லுவான் வருவதோர்ந் தஞ்சித்
தரும்புகழ் வலாரி ஊர்தியைச் செலுத்தித்
      தடுத்திடை மடக்குதல் மானும். - 6



179 - நறவ மூற்றெடுப்பச் சிறகர்வண் டிமிரும்
      நளிபொழில் இடும்பைகூர்ந் தழகு
குறைபடப் பொதிந்த குயின்களை
      குதித்தெழுந் துதைத்துதைத் தகற்றி
நிறைபுனல் தடத்துப் பிறழ்தருங் கிழமை
      நெட்டிள வாளைமீன் றனக்குத்
துறைதொறுங் கைம்மா றெனக்கனி
      செழுந்தேன் சொரிவன நெடுமரப் பொதும்பர் - 7



180 - வண்டலாட் டயரும் வாள்மருள் நெடுங்கண்
      மங்கையர் நெரிசுரி கூந்தற்
கொண்டலைக் காணுந் தொறுந்தொறும் அவர்தங்
      கோமளச் சாயலுக் குடைந்து
தொண்டுபூண் டெதிர்நின் றாடுவ தேய்ப்பத்
      தோகைமா மயில்நடங் குயிற்றுந்
தண்டளிர் துவன்றிப் படுநறாத்
      ததைமலர்ச் சாகையம் பொதும்பர் - 8



181 - வாம்பெருந் திரைய தடம்புடை யுடுத்த
      வளம்பொழிற் சாகைகள் தோறும்
தீம்புனல் குடையும் மாதரார் முன்னாள்
      செறித்தபட் டாடைபொன் அணிகள்
பூம்புன லகத்தில் தோன்றலும் இளையோர்
      புனலர மகளிரென் றஞ்சிக்
கூம்பிய கரத்தர் அந்நலார் நகைப்பக்
      குலைமிசை நோக்கிவெள் குவரால் - 9



182 - கொங்கவிழ் பொதும்பர்க் கொழுமுகை யுடைந்து
      குளிர்மதுச் சொரிதலின் ஆழ்ந்த
பங்கயச் சேக்கை மீமிசை எகினம்
      பைப்பய மேனிவந் தெழுவ
பொங்குவெம் பாவக் கருமுருட்
      புணரியுள் சிலையுடன் அமிழ்ந்தும்
எங்கள்வா கீசர் அஞ்செழுத் தருளால்
      எழுந்துமேல் வயங்குதல் மானும் - 10



183 - யானைக்கூடம்
கலிவிருத்தம்
முறைமுறை பனைக்கை நீர்முகந்து வாய்மடூஉ
நிறைதடங் குறைதட மாக்கு நீண்டவெண்
பிறைமருப் பொருத்தல் மாமதப் பெருக்கினால்
குறைதட நிறைதட மாக்குங்கொள் கைத்தே - 11



184 - தாமுறை யிடந்தரி யலர்கட் கீந்தவர்
தாமுறை இடங்களில் தங்கி ளைக்குலந்
தாமுறப் பரிவருத் தனைசெய் வேழங்கள்
தாமுறை முறைதிரி தண்டம் எண்ணில - 12



185 - மழைப்புனல் தங்கள்மே லூற்று மாமுகில்
உழைச்செல வெகுண்டெதிர் இறைப்ப தொப்பநீள்
புழைக்கையில் நிறையநீர் முகந்து போர்மதத்
தழைச்செவிக் கரிகள்விண் தலத்து வீசுவ - 13



186 - கறையடிச் சுவடெனுங் கனக வட்டில்கள்
நிறையவாக் கியமத நீரைச் செல்வர்போல்
சிறையளிக் குலமெலாந் தெவிட்ட உண்டுவாழ்ந்
தறைபெரு வளத்தன ஆம்பல் வீதியே - 14



187 - கொடையினிற் கீழ்ப்படுங் கொண்டல் யாவையுந்
தடைபடச் சிறையிலிட் டாங்குச் சார்கடு
நடையிரு முறச்செவி நான்ற வாய்க்களி
றடையவும் பிணித்தன் அளவில் கூடமே - 15



188 - குதிரைப்பந்தி
கரியுமிழ் விலாழியுங் காய்சி னக்கடும்
பரியுமிழ் விலாழியும் பாய்ந்து சேறுசெய்
தெருவெலாம் அந்நலார் சீற டிச்சுவ
டுருகெழு தாமரைத் தோற்றம் ஒக்குமே - 16



189 - சுலவுகொய் யுளைச் சுவடு தோறும்மேல்
கலனையின் உக்கசெம் மணிக திர்ப்பன
பலசுடர்த் தகழிகள் பரப்பி வைத்தெனக்
குலவுநல் வளத்தன குந்த வீதியே - 17



190 - மல்லரை மயில்களை வான ரங்களைப்
புல்லிய முயல்களைப் பொருச ரங்களை
வல்லவா புறக்கொடை கண்ட வான்கதிப்
பல்லியல் புரவியின் பந்தி யாயிரம் - 18



191 - தேர் நிலை
மதக்கரி தனைமுயல் வயங்கொள் காதையைப்
புதுக்கவீங் கிருளொளிப் பொலிவைப் பற்றியீர்த்
ததிர்ப்பதென் றுளங்கொளக் கரிய வாங்குர
கதத்தொகை பற்றுபொன் தேர்கணக்கில - 19



192 - எரிமணிச் சோதியுள் மூழ்கி யீர்த்துச்செல்
பரிகளைக் காண்கிலர் பார்த்துச் சூரனூர்
திருவுடை இந்திர ஞாலத் தேர்கொலென்
றுருகெழச் செல்லுதேர் உலப்பில் வீதியே - 20



193 - வீரர் இருக்கை
நால்வகை நிலையினால் பயிலும் நாமவில்
வேல்வளை பலகைவாள் கற்கும் விஞ்சையர்
கோலவான் விஞ்சையர் குழாங்கள் நோக்குபு
சால்பினை வியத்தகு தலைமைப் பாலரே - 21



194 - தொழில்செய்வோர் இருக்கை
கிம்புரி புரசைகள் கிடுகு கூவிரம்
அம்பொனிற் கலனைகுப் பாய மாதிய
வெம்படை ஏனவும் வேறு வேறுசெய்
பம்பிய வினைஞர்வா ழிடம்பல் லாயிரம் - 22



195 - நடைநகம் முதலிய உலவும் நாமநீர்ப்
புடைநகர் வளமிது புகன்றுந் திங்களேர்
உடைநக மழைநிகர் ஓதி யார்பயில்
இடைநகர் வளமினி இயம்ப லுற்றதே - 23



196 - இடைநகர்
அறுசீரடி யாசிரிய விருத்தம்
குடமுலைக்கெதிரென் றோதுங் குரும்பையை
      வெகுண்டு மின்னார்
பொடியிடி உலக்கை மீப்போய்ப்
      புடைத்தன மீளா முன்னம்
முடிமிசை அதிரத் தாக்கிச் சிந்துமுப்
      புடைக்காய்த் தெங்கிங்
கிடரிடர்க் கெதிர்செய் வோரின்
      வியத்தக எங்கும் ஓங்கும் - 24



197 - கோல்வளை கறங்கக் கொங்கை
      யசைதரக் குலையக் கூந்தல்
மேலணி கலக லென்ன வியர்வெழ
      உயிர்ப்பு நீள
வால்வரிப் புனைபந் தாடு மாதரார்
      செயல்காண் தோறுங்
கால்வரி கழலி னார்க்குக்
      காமம்மீக் கூரும் மாதோ - 25



198 - தமதுரு நிறத்தைவவ்வுந் தருக்கறிந்
      தொறுப்பார் போலத்
தமனியந் தகர்த்த சுண்ணம்
      ஒருவர்மேல் ஒருவர் வீசத்
தமனியச் சுண்ண மெங்கும்
      பரந்தன தவழ்த லாலே
தமனிய உலகந் தன்னை
      அசிப்பன தடந்தேர் வீதி - 26



199 - அசிப்பன - நகைப்பன
எரிமணி சோதி கால இருள்வர
      வறியா மாடத்
தரிவையர் கூந்தல் ஊட்டும்
      அகிற்புகை நாகத் தெய்திப்
பெரிதிருள் விளைப்ப நோக்கும்
      பெற்றியோர் தட்டுமாறா
மரீஇயின உலகம் என்னே யெனமனம்
      மருள்வர் அம்மா - 27



200 - தட்டு மாறா – நிலைமாறி, நிலவுலகம்
      மேலும் வானுலகம் கீழுமாக மாறி
அகழி
மாற்றவள் பூசை யாற்றி
      வரம்பெறு முறைமை கேளா
ஏற்றமார் கங்கையாளுங்
      கம்பர்பால் வரத்திற் கெய்திச்
சாற்றருங் கச்சிமூதூர்
      வலங்கொளுந் தகைமைத் தாய
ஆற்றல்சால் அகழி ஆழம்
      அகலமார் அளக்க வல்லார் - 28



201 - நெடுபடு பொதும்பர் சூழ நிரைதிரைக்
      கரத்தாற் செம்பொன்
தடமதில் பொதியப் புல்லுந் தண்கிடங்
      கிறைவர் ஏவக்
கடல்களே வளைய நோக்கிக்
      கம்பரை இறுகப் புல்லுஞ்
சுடர்மணிக் கங்கை மானுந் துளித்தநீர்
      தழும்பு மானும். - 29



202 - திரையெறி தரளம் பாங்கர்த்
      திரண்டுவால் ஒளிகள் வீசிக்
குரைபுனல் குளிக்கும் வேழக்
      குழாத்தைவெண் கயமாச் செய்யக்
கரைமிசைக் காண்போர் என்னே
      இம்மை கடவுள் தன்மை
புரைதபத் தருமித் தீர்த்தம்
      எனவிறும்பூது கொள்வார் - 30



203 - கடம்படு களிநல் யானை குண்டகழ்
      கலக்கிக் கொட்பத்
தடங்கரை யேறற் கார்த்துத் தாள்தொடர்
      பிணித்துப் பாகர்
இடம்பட இருபால் ஈர்ப்ப இருங்கடல்
      அமுதம் உண்ணத்
தொடங்குநாள் சிலம்பு நட்டுச்
      சுராசுரர் கடைதல் மான. - 31



204 - நவமணி கொழித்துப் பொங்கு நளிதிரை
      அகழி நாப்பண்
கவளமாக் கடத்த யானைக் கணஞ்சுலாய்
      உழக்குங் காட்சி
உவர்படாப் பெளவம் ஈதென் றுவந்துவந்
      தெழிலி தெண்ணீர்
சுவறவாய் மடுப்பக் கொட்குந் தோற்றமே
      யனைய தம்மா. - 32



205 - இத்தகை யகழியென்னு மிதுவு
      மோர்கடலே யாக
அத்தினா லிரட்டி யென்னா தேழென
      அறைவர் மேலோர்
தத்தலைக் கடைக்கால் வட்டச்
      சலதியும் இ·தும் மன்றச்
சுத்தநீர்க் கடலென் றெண்ணி ஒருமையின்
      தொகுத்தார் போலும் - 33



206 - புடைபயில் பொதும்பர்த் தேனும்
      புனல்மலர்த் தேனும் பாய்ந்து
விடையவர்க் குமையாள் ஆட்ட
      வரும்மது வேலை யொக்கும்
குடநிகர் செருத்தல் மேதி கொட்புறச்
      சொரிந்த பாலால்
உடைதிரை யகழி தீம்பால்
      அளக்கரும் உற்றா லொக்கும். - 34



207 - பழமுதல் பொருள்கள்விற்கும்
      பாவையர் நாளும் அந்திப்
பொழுதின்அக் கலன்க ழீஇய
      வண்டலால் புனற்கி டங்கு
வழிபடும் உமையாள் எந்தைக்
      காட்டுமா லியங்கள் ஒன்றுங்
கழிவுறா சூழத் தேங்கிக் கிடந்ததே
      கடுக்கும் மன்னோ - 35



208 - பாசடைக் கவயம் போர்த்துப் பகைஞரோ
      டிகலித் தானும்
பூசலை விளைப்ப அன்னோர்
      கணைபொரு புழைகள் தோறும்
தேசுற எழுந்த சோரி யாமெனச்
      செய்ய கஞ்சம்
மூசுவண் டீயி னார்ப்ப மொய்த்துள
      தகழித் தெண்ணீர் - 36



209 - அணிமலர் அழகே நோக்கி அகழியுள்
      இழிகின் றோருந்
திணியுமுட் கொடுமை நோக்கிச்
      சேயிடை விலகு வோருங்
கணிகையர் கோலம் நோக்கிக்
      காதலித் தகப்பட் டோரும்
பிணியுமுட் கருத்து நோக்கி
      வெரீஇப்பெயர்ந் தகழ்கின் றோரும் - 37



210 - மதில்
எழுசீரடி யாசிரிய விருத்தம்
கம்பை யைத்த டுத்த பின்பு கம்ப
      னார ழைத்தலும்
பம்பி யார்த்தொ ருங்கு பெளவ மேழு
      முற்று மாறுணர்ந்
தம்பை யண்ட பித்தி காறு மாக்கு
      மாத்த டைபொர
வம்ப லர்க்கி டங்கு சூழ்ந்த மல்ல
      னொச்சி யோங்குமே - 38



211 - திருக்கி ளர்ச்சி யிற்செ ருக்கு
      தேவ நாடு பாதலத்
தருக்கு நோக்கி வெஞ்சி னந்த
      லைக்கொள் காஞ்சி யவ்வலி
முருக்க வெண்ணி முன்பு போய்வ
      ளைப்ப வேவி மூண்டென
மருக்கி டங்கு மிஞ்சி யும்வி
      யத்த கும்வ ளத்தவே - 39



212 - கிடங்கி னெல்லை காண்ப தன்று கீழும் மேலு மாகநீள்
விடங்கர் தாள ணிந்த விண்டு நோக்க மேவி யன்மதில்
தடங்கொள் எல்லை காண்ப துந்த லைவர் தஞ்ச டைத்தலை
இடங்கொள் வெண்ட லைய லாமல் ஏவர் காண வல்லரே. - 40



213 - கச்சி வாணர் சென்னி தாள்கள் காண முன்ப றந்தகழ்ந்
தச்ச ழிந்த மால்வி ரிஞ்ச ரன்று சென்ற வெல்லைகள்
நிச்ச யிப்ப வவ்வளவு மேக வைத்த நீள்குறி
நொச்சியுங் கிடங்கு மென்ன நோக்கு வார்க்கி லங்குமே - 41



214 - இடித்த கழ்ந்து தம்மி ருக்கை யெற்றி நீர்க்கி டங்கினில்
வெடித்தெ ழுந்து தாவு வாளை மீனை மீண்டு றாவகை
யடுத்து விக்க வுண்டு தேக்கி யம்ப ரத்து மீனையும்
தடுத்து வென்றி கொள்ள வுள்ள சார்ம திற்பொ றிக்குலம் - 42



215 - உடல்ப டைத்தி யக்க ஓர்நி மித்தன் உண்டெ னக்கொளத்
திடம்வ லித்த சான்றதா யவனர் தாட்செ யப்படுந்
தொடர்பு டைப்பொ றிக்கு லஞ்சு ழென்றெ ழும்வி ழும்பகை
மிடல்கெடத் தெழிக்கு மோடு மீளு மின்ன நீரவே - 430



216 - இம்மதிற் பொறிக் குலமெ திர்ந்து ளோர்த மைச்செகுத்
திம்மெ னும்முன் வென்றி கொள்ளு மீது ணர்ந்து தெவ்விர்கா
ளம்ம வீண்டு றேன்மி னென்று கையெ டுத்த சைப்பபோல்
அம்ம தில்த லைத்து கிற்கொ டிநு டங்கு மாலரோ - 44



217 - கலிவிருத்தம்
வளமகன் திருநகர்க் கிழத்தி மாமைசால்
இளமுலை திளைப்பக்கார் எழினி சேர்த்துபு
தளர்வற நாட்டிய தம்ப மேயெனக்
கிளர்மதி லிடந்தொறுஞ் செறியுங் கேதனம் - 45



218 - நேமிமால் வரைமிசைக் கிளைத்து நீண்டவே
யாமெனக் கொடிமிடை அம்பொன் மாமதில்
மீமிசைக் கோபுர மேலுஞ் சேறலால்
யாமினிப் புகல்வதற் குவமை இல்லையே - 46



219 - அறுசீரடி யாசிரிய விருத்தம்
மகதநா டென்னக் காஞ்சி வைப்பினுங் கடைஞர் எய்தி
இகலற வளர்க்கும் எண்ணான் கறத்தினுக் கிடர்செய் யாமைத்
தகையணங் குமையாள் வைத்த தடைநிகர் மதில்சீர் முற்றும்
புகரற இயம்பப் புக்கால் புலவர்க்கும் உலப்பு றாதே. - 47



220 - மிடைபுறத் தூர்க ளெல்லாம் விண்ணவர் நகரா வங்கண்
புடைநகர் அயனூ ராகப் பூமகள் கொழுநன் றன்னூர்
இடைநக ராக மற்றை ஈசனார் உலக மேயா
நடைபிற ழாத கீர்த்தி படைத்தவுள் நகரஞ் சொல்வாம். - 48



221 - அகநகர் . பரத்தையர் வீதி
அளிமதன் நூலி னாற்றால் ஆடவர் தம்மோ டாடிக்
களிமனைக் குள்ளால் தாங்கள் விளைத்திடுங் கலவி யெல்லாந்
தெளிதர மாடந் தோறுஞ் சித்திரந் தன்னிற் காட்டி
இளையரை மயக்கிக் காமம் ஏற்றுவோர் சேரி மல்கும் - 49



222 - வரியளி முரலா வாடா மாலைய இமையா நோக்க
தரைமிசைத் தோயாத் தால சித்திரந் தயங்கு காட்சி
வரையிலா மகளிர் இன்னோர் மாண்நலம் வேட்டு வானில்
கார்களும் எய்திச் செவ்வி பார்த்துறை தோற்றம் ஒக்கும் - 50



223 - பூத்தபின் இராறு நாளுங் கிழத்தியர்ப் புணர்ந்து தம்மை
நீத்தன ரெனுஞ்சீற் றத்தா னின்ற வீரொன்பா னாளும்
ஏத்துமா டவரைத் தங்களிள முலைத்து ருக்க மேற்றிப்
பாத்திரு நிதிய மெல்லாம் பறித்தனர் கொள்ளை கொள்வார் - 51



224 - கோலத்தின் இசையின் யாணர்க் கூத்தினின் அவிநய யத்திற்
சீலத்தின் கலவிச் செய்கைத் திறத்தினின் பிறவாற் றானும்
ஞாலத்து மைந்தர் தம்மை மருட்டிநற் பொருள்கள் வவ்வி
காலுற்ற சாற்றுவேழக் கோதுபோல் கழிய நீப்பார் - 52



225 - அலகில்நல் லறஞ்சூழ் காஞ்சி அமர்பெருஞ் செல்வராயுங்
குலமுறைச் சார்பால் வெந்நோய்க் கோட்பட்டார் இழிஞ ரேனுஞ்
சிலகொடுப் பனவுங் கொண்டு சேர்ந்துபொய் வஞ்ச மெல்லாம்
நிலைபெற அடைத்து வைத்த நெஞ்சின ராகி வாழ்வார். - 53



226 - அலைவிழிக் கணிகை நல்லார் ஆடவர் தமக்கு நல்கும்
இலைநிக ரெனுமின் பத்திற் கின்பமும் சமமாக் கொண்டு
விலையென நிதியுங் கோடல் வியப்பிற்றே ஏற்ற மாக
மலைநிகர் தனங்கள் ஈந்தோர் மலைநிகர் தனமுங் கொள்வார் - 54



227 - தவமறைக் கிழவன் மாயன் தாணுவென் றிவரும் இவ்வூர்க்
கவர்மனப் பரத்தை மாதர் கண்வலைப் பட்டே இன்றும்
இவறிய அலரோன் மாலோன் பித்தனென் றிப்பேர் பெற்றார்
சிவசிவ யாவ ரேயோ அவர்திறத் தகப்ப டாதார் - 55



228 - விற்றிடும் அல்குல் தன்னை மீளவுந் தமதே யாக்கி
மற்றைய நாளும் விற்கும் வரைவிலார் வீதி இச்சீர்
கற்றிலா வணிக மாக்கள் ஆவணக் கவினை நோக்கிப்
பற்றுவெண் டரளக் கோவைப் பத்தியால் சிரிக்கும் மன்னோ - 56



229 - இருமைவா ணிபத்தில் கூர்த்த மதியரும் இறும்பூ தெய்த
அருவமாம் இன்பந் தன்னை இம்மியின் அளவும் ஏறா
துருவமாம் பொருளுக் கேற்ப நிறுத்துவிற் றொழுக வல்ல
இருமனப் பெண்டிர் தம்முள் தருக்கிவாழ் இருக்கை ஈதால் - 57



230 - கடைவீதி
இன்னவீங் குளவோ என்னக் கடாதலும் இயம்பி யோர்கட்
கன்னவிங் குள்ள இல்லென் றிறுத்தலும் அறியா தியாரும்
என்னவுந் தருதி ரென்ன விலைகொடுத் தேற்ப ஈய
மன்னியெப் பொருளும் என்றும் நிறையுமா வணம னந்தம் - 58



231 - செய்வினை யனைத்தும் தன்பால் சேர்த்துவைத் துயிர்க்குப் பின்னர்
அவ்விறை யானை யாற்றால் அளித்திடு மாயை யேபோல்
கொய்வளம் வருவ முற்றுங் கொண்டுபின் நாய்கர் மாறப்
பெளவநீர் உலகுக் கெல்லாம் உதவுவ பைம்பொன் மாடம் - 59



232 - அணங்கனார் பரப்பி விற்கும் அணிகிளர் கோங்கந் தாரிற்
கணங்கினைக் கணியென் றஞ்சிச் சுரும்பினம் உறாமை நோக்கிப்
பணங்கிளர் பாந்தள் அல்குற் பாவைமீர் என்னே பொற்பூ
மணங்கமழ் கின்ற தென்பார் ஆடவர் மருட்சி எய்தி - 60



233 - வீழ்பொருள் எடுக்க லாற்றா உறுசனம் மிடைந்த வீதித்
தாழ்குழல் மடவார் மைந்தர் தங்களுள் முட்டுங் காலைக்
காழ்மணி முலையுந் தோளும் கலந்துற உவகை பொங்கி
வாழ்நருஞ் சிலரே பல்லோர் வாடிநைந் தழுங்கு வார்கள் - 61



234 - கலித்துறை
நெருங்கு பல்சனம் முழக்கறாக் கூலம்நீல விடத்தைக்
கரந்த கம்பர்மேல் தெழித்துறுங் கடல்பெருந் தெருவால்
சுரந்து வந்துநாற் புறத்தினுஞ் சனமிகத் தொகுவ
பரந்த வீரையுள் புகுந்திடும் பற்பல நதியே - 62



235 - மற்றையவீதி
அறத்தின் நீள்நகர் புவனசக் கரமென ஆன்ற
திறத்த பொன்மதில் ஏழுடைச் சின்மயக் கோயில்
புறத்த வான்மிசைப் புலவர்கண் ணூறுபட் டிடாமை
மறைத்தெ னக்குயின் உரிஞ்சுபூம் பந்தர்சால் மறுகு - 63



236 - மகரப் பொற்குழைப் பிரான்தளி சூழ்மதில் குறடும்
நகரச் சீரெயில் சுற்றும்மா ளிகைநிரை யாருந்
திகழச் சூழ்தெரு ஆரிடை வெளியுமாய்ச் சிவந்தேர்ச்
சகடத் தேருடைச் சகடமற் றொன்றெனத் தயங்கும் - 64



237 - சரிக்குங் குஞ்சர மதப்பெருங் கலுழியுந் தளவைச்
சிரிக்கும் மூரலார் கலைந்ததார் நறவமுஞ் சேறாய்
விரிக்கும் வீதியில் அடிவழுக் காவகை வெயிலைப்
புரிக்குஞ் செம்மணி பதித்துமேல் நடப்பராற் புரியோர் - 65



238 - ஞெள்ளற் பாங்கரின் நறியநீர் வண்டலாட் டயரும்
அள்ளற் சேறுகள் புலர்த்துவான் இடையிடை யகழ்ந்து
பள்ளத் தாய்சிறு கால்பல வகுத்தெனப் பிறங்கும்
வள்ளற் காவலர் செலுத்துதேர்ச் சகடுபோம் வழியே - 66



239 - செய்ய திண்புயத் தெழிலினைக் கவர்ந்தமை தெரிந்து
வெய்ய மாந்தர்கள் வெதும்புறப் பன்முறை தாக்க
ஐய வோவென அலறுவ போலணி முழவம்
மைய வேலையுஞ் சமழ்ப்புற வயின்தொறுங் கறங்கும் - 67



240 - விலாழி நீருமொண் சந்தன விரைச்செழுஞ் சேறுங்
குலாய வீதிகால் வழுக்குமென் றஞ்சுபு கோணல்
நிலாமு டித்தவர் திருவிழாத் தொழவந்து நெருங்கும்
வலாரி யாதியோர் அடிபடி உறாவகை நடப்பார் - 68



241 - புரசைத் திண்களி றுலாத்தரும் பொலஞ்சுடர் மறுகிற்
பரசப் போதரும் மன்னவர் பணிமுடி நெருக்கின்
அரசப் பன்மணி தெறித்துவீழ்ந் திமைப்பன அவியா
முரசப் பேரொலி அதிர்ப்பினில் உக்கமூ துடுப்போல் - 69



242 - அங்கண் வீதியின் அணிநலங் காணுமா தரத்தின்
எங்கள் நாதனுந் திருவிழா என்பதோர் பெயரான்
மங்கை யாளொடும் மகாரொடும் வானவர் பழிச்சத்
திங்கள் தோறெழுந் தருளுமேல் அதன்வளஞ் சிறிதோ - 70



243 - பாலி யேமுதல் பலநதித் திவலையாய்ந் தழகின்
பால வாயமா ளிகையடித் தலத்தினைப் பாராப்
பால வெண்சுதை மாடமேற் சிகரமும் பனிவிண்
பாலி யாற்றுநீர்த் திவலைகள் போர்ப்பவான் படரும் - 71



244 - பன்னி றப்பரி கருங்கரி தொழிலமை ப·றேர்
இன்ன கீழ்நிலை வாயிலின் இயங்குதல் நோக்கி
மன்னு மேனிலை வாயில்வெண் கரிபசு மான்தேர்
அன்ன வேனவுந் தன்னிடத் தியங்கவான் அணவும் - 72



245 - அலங்கு கீழ்நிலை மாடமங் கடுப்பினின் மாட்டும்
இலங்க கிற்புகை யான்விரை யேற்றுவர் மடவார்
புலங்கொள் மேனிலை மாடமும் புரிகுழற் கூட்டுந்
துலங்க கிற்புகை யான்மணங் கஞலுறத் தொகுப்பார் - 73



246 - இருசு டர்ப்பெருஞ் சிலைகளின் இயன்றமா ளிகைகள்
உருகு வெங்கதிர் தடவரச் சுடுகனல் உமிழும்
அருகு தண்கதிர் தடவரக் குளிர்புனல் அளிக்கும்
மருவி னோர்குணம் பிடிபடல் வையகத் தியல்பே - 74



247 - நெறித்த கூந்தலார் மேனிலைச் சாளரக் கதவு
திறத்த லுந்தடை படுமகிற் புகையெலாந் திரண்டு
புறத்தின் ஏகுவ வழுதிதன் சிறைப்படும் புயல்கள்
மறித்து விட்டநாள் விரைந்துவிண் சேறலை மானும் - 75



248 - தெரித்த பன்மணி மாடமேல் திகழ்ந்தபொற் குடத்து
விரித்த தண்கதிர்க் கடவுள்நின் றசைதல்வேட் கோவர்
திரித்து விட்டசக் கரமென லாகுமத் திகிரி
பரித்த பச்சைமண் ணென்னலாம் அதற்பயில் களங்கம் - 76



249 - நிரவு நித்திலத் தோரணச் செழுங்கதிர் நிரைகள்
விரவி விண்ணெலாம் வெள்ளொளி விரித்தலான் அன்றே
பரவை மேலெழும் போதும்வீழ் பருவத்தும் அல்லால்
இரவி மண்டிலச் சேயொளி விளங்கிடா இயல்பே. - 77



250 - திங்கள் செங்கதி ராளனென் றுரைப்பதே தேற்றம்
அங்கண் நித்திலத் தோரணத் தொளியீல் அரிபோல்
தங்கி வெண்கதி ராயினன் அதற்குறுஞ் சான்று
துவங்க மாலையுங் காலையுஞ் சிவந்துதோன் றுவதே. - 78



251 - அணங்க னார்நகைத் திடுந்தொறும் ஆங்கவர் வளர்த்த
கணங்கொள் முல்லைகள் முகைப்பன அவர்நகைக் கவினை
இணங்கி நாம்கவர்ந் தொளித்தமை அறிந்தனர் என்றே
வணங்கி நாணினால் உடன்சிரித் திடுவது மானும். - 79



252 - ஆட கத்தியல் மேனிலை மிசையணங் கனையார்
மாட கத்தனி யாழிசைக் குவந்துறும் வான
நாட கத்துவெண் களிற்றினை நளினமென் மலர்ப்பூம்
பாட கத்தடி நடையினாற் பருவர லுறுப்பார் - 80



253 - பளிக்கு மேனிலத் தந்நலார் பணைமுலை ஞெமுங்கக்
களிக்கும் ஆடவர் தமைத்தழீஇக் காமப்போர்க் கலவி
விளைக்கும் ஆற்றலைக் குரவனில் விழைந்தவன் ஒருசார்
ஒளித்தி ருந்துகாண் போனெனச் சுருங்கையுள் நுழையும். - 81



254 - மேனி லத்தர மியத்திடைத் துயிலுமெல் லியலார்
ஆன னத்தெழில் கவர்ந்துசெல் மதியினை யவர்தங்
கான லர்க்குழற் காரளி பின்தொடர்ந் துதைப்ப
ஈன முற்றவத் தழும்புவான் கறையென யிலங்கும் - 82



255 - உங்கண் மாதரார் முகத்தெழில் நோக்கியோர் வடிவம்
கங்கள் நான்குளான் படைத்ததில் அவயவங் காண்பான்
அங்கண் முன்னுற வகுப்புழி அஞ்சனங் குலையப்
பங்க முற்றதென் றொழித்ததை மதியெனப் பகர்வார். - 83



256 - இவ்வ ரைப்பினில் இரவியும் மதியமும் வழியே
செவ்வன் ஏகுறா தொதுங்குவ இவர்முகச் சீர்க்கும்
பவ்வ நேரகல் அல்குற்கும் வடிவொடு பணைத்தேர்
ஒவ்வு றாமைகண் டுட்கொளும் உட்கினா லன்றே - 84



257 - தங்கள் வாண்முகம் மதியெனச் சார்தரும் பணிக்குத்
துங்க மாடமேல் மின்னனார் வேற்றுமை தோற்றத்
திங்கள் மாட்டறி குறியொன்று செய்துவைத் தனரால்
அங்கண் மாநிலங் களமென் றிடப்படும் அதுவே. - 85



258 - மறைந்தி டாமறுப் பயில்மதி முகத்தெழில் பெறாது
குறைந்து பார்க்குமங் கரிவைமார் கோணுதல் கடுப்ப
நிறைந்து பார்க்கும்மீண் டவர்முக நிகர்ப்பமற் றிவ்வா
றறைந்த திங்கள்தோ றலமரும் அக்கரைப் பசுப்போல். - 86



259 - கதிர்செய் மாடமேல் புலவிதீர் கலவியின் முடிவின்
வெதிர்செய் தோளியர் கொண்கர்தம் மருமமேல் வதனம்
பதிய வைத்தனர் துயிலுவர் அற்றம்பார்த் திருந்து
புதுமு கத்தெழில் உடுபதி வெளவுறாப் பொருட்டே - 87



260 - தேங்கும் ஊடலின் மாதரார் பறித்தெறி செங்கேழ்
ஓங்கு பன்மணி அவரடி வருந்திநைந் துளைய
ஆங்கு நாடோறும் பைதுறுத் தவிர்வன கொடிதாத்
தாங்கள் செய்வினை தங்களுக் கேபகை யாமே. - 88



261 - விருந்து நாடோறும் இடையறா தெதிருமே தகவால்
அருந்தி றற்சிறு புதல்வர்சூழ்ந் தணுகிடுந் திறத்தான்
முருந்து மூரலார்க் காயிடைக் கொழுநர்பால் மூண்ட
மருந்தில் ஊடலுஞ் சிறுவரை யன்றிமே வாதால். - 89



262 - மேனி லத்துவந் துலாவிடுங் கடவுண்மெல் லியலார்
தாழ்நி லத்துறுங் கூவல்கள் நோக்கிநந் தமைப்போல்
கீழ்நி லத்தவர் தாமுமிங் கெய்தினர் கெழீஇப்போம்
ஊழ்நி லைத்தபல் பிலங்கொலாம் உவையென வியப்பார் - 90



263 - கலிவிருத்தம்
கால மன்றிக் கனிவுற மாதளைக்
கேல வான்புகை யேற்றுதல் போன்மினார்
சால வெம்முலைச் சாந்தம் புலர்த்திடு
நீல தூமம் நிமிர்ந்தெழு மெங்கணும் - 91



264 - கொன்னும் வார்குழற் கூட்டுங் குரூஉப்புகை
அந்ந லாரைப் பொதிவ தவர்தமைத்
தன்னின் னீங்கின மின்னெனத் தண்முகில்
உன்னி வந்து வளைந்திடல் ஒக்குமே - 92



265 - வார்கொள் கொங்கை மலர்க்கணை ஏறிடும்
ஏர்கொள் தொய்யிற் கருப்புவில் ஏந்துவார்
தார்ம லர்க்குழல் நாரியர் தாங்கள்தாம்
வீர வேள்படை என்றறி விப்பபோல் - 93



266 - நாறு தோட்டு நளினம் இரண்டினில்
மாறி மாறிவீழ் வண்டின மாமெனக்
கூறு மாதர் குழீஇயிருந் தாடுசீர்
ஏறும் அம்மனைப் பாட்டிசை எங்கணும் - 94



267 - தங்கள் பண்மொழிக் கொக்குந் தகைமையை
அங்கண் ஆய்பவர் ஏய்ப்ப அணிமலர்ச்
செங்கை மெல்விரல் சேர்த்தித் திவவியாழ்
எங்கும் மங்கையர் பாடுவர் எண்ணிலார் - 95



268 - வேறு
கொங்கையின் எதிருறக் கூசி னாலெனப்
பொங்கொளித் தரளம்பின் னொலிப்பப் பூவைமார்
மங்கலச் சதிநெறி வழாமல் ஆடரங்
கெங்கணும் நூபுரத் திரையி ஈட்டமே - 96



269 - மைந்தர்பந் தெறிதலும் மாடப் பித்திகை
சிந்துவ பன்மணி செழியன் செண்டெடுத்
துந்தியன் றோச்சலும் உலப்பி லாநிதி
தந்திடும் வடதிசைச் சாரற் குன்றுபோல் - 97



270 - மணிப்பொலம் பூண்சிறார் விடுக்கும் வான்படந்
தணித்தொறும் விடுந்தொறுந் தணிந்து நீள்வன
கணிப்பரு நந்திநெட் டுயிர்ப்பின் காற்றிடைப்
பணிப்பகை முன்னுழல் பரிசு காட்டுமே - 98



271 - மாடமேல் சிறுமகார் விடுக்கும் வண்படம்
பாடல்சால் இருசுடர் தம்மைப் பற்றுவான்
நாடின திரிதரு நாக மென்னவும்
ஆடுவ விசும்பிடை அமரர் நோக்கவே - 99



272 - அட்டிலில் குய்ப்புகை அணங்க னார்குழற்
கிட்டிடும் அகிற்புகை மகத்தெ ழும்புகை
முட்டிமேல் பரந்தெங்கும் மொய்த்த தோர்கிலார்
வட்டவான் செழும்புகை வண்ண மென்பரே - 100



273 - வேள்விச்சாலை
இந்திர னூர்தியிங் கெய்தித் தன்முடிச்
சுந்தரஞ் சிதைதரத் துதையச் சீறித்தன்
மந்திரப் புகையினால் வலாரி ஊரெழில்
சிந்திடச் செய்வசீர் வேள்விச் சாலையே - 101



274 - எழுசீரடை யாசிரிய விருத்தம்
ஆகுதித் தழலின் அறுதொழி லாளர்
      அருமறை மனுவெடுத்தோதி
ஓகையிற் சொரிநெய் தெறித்தெழும்
      பிதிர்வும் ஒலிபடு புலிங்கமுங் கொண்டு
மேகமாய்ப் படர்ந்த தூமமே யிடித்து
      மின்னிநீர் பொழிவன போலும்
ஈகைசால் வேள்வி மறுத்துழி மாரியின்மையே
      யிதற்குறு சான்றால் - 102



275 - அந்தணர் இருக்கை
பூசுரப் பெயரின் இருமொழிப் பொருட்கும்
      உரிமைபூண் டுறுநிலைக் கேற்பக்
காசினி வரைப்பின் நாடோறும் வழாது
      கமழ்சுவை யடிசிலான் அதிதி
பூசையும் வேள்வி யவியினாற் கடவுள்
      பூசையும் ஒருங்குசெய் கடப்பா
டாசற வாற்றும் பார்ப்பன வாகை
      யறிஞர்வா ழிடம்பல அவண. - 103



276 - அரசரிருக்கை
தகைபெறு வலியால் தெம்முனை
      முருக்கிக் காவற்சா காடுதைத் தெங்குந்
திகிரியொன் றுருட்டி முறையுளி செங்கோல்
      செலுத்துநர் கள்வர்மற் றுயிர்கள்
பகைவர்தாம் தமரென் றிவ்வயின் எய்தும்
      பயந்தடுத் துலகெலாம் புரக்கும்
மிகுபுகழ் படைத்த வரசியல் வாழ்க்கை
      வீரர்வா ழிடம்பல அவண - 104



277 - வணிகரிருக்கை
மேதகு விரிஞ்சன் அரும்பெறல் குறுங்கை
      விழைதகை யாயெனப் படைத்தோர்
ஏதிலர் பொருளும் தம்மபோல் பேணி
      வாணிப மீட்டுநர் வடாது
மாதிரத் தலைவன் புறங்கொடுத் திரியும்
      வளத்தினார் மறைநெறி யொழுக்கம்
ஆதரித் துயர்ந்த விழுக்குடி வணிகர்
      அமர்ந்துவாழ் இடம்பல அவண - 105



278 - வேளாளரிருக்கை
முருகுயிர்த் தலர்ந்த மலரவன் றனாது
      முகமுத லுறுப்பெலாந் தாங்கிச்
சரணமென் றுரைக்கும் உறுப்பினில் தோன்றிச்
      சாற்றுமம் முகமுத லுறுப்பின்
வருமொரு மூவர் தங்களை உழவின்
      வண்மையான் நிலைபெறத் தாங்கும்
உரியவே ளாண்மை பூண்டபேர்
      தமக்கே யுடையவ ரிடம்பல அவண - 106



279 - மற்றையோர் இருக்கை
நால்வகை வருணத் துயர்குடிப் பிறந்த
      நல்லவ ரிருக்கையைச் சூழ்வ
சால்புறும் அவரி லுயர்ந்தவ ரிழிந்தோர்
      தங்களுள் குழீஇ மணந்தளித்த
பால்படு மேனைச் சாதிபே தத்தோர்
      பலர்களுந் தத்தம நெறியின்
சீலராய்த் துவன்றி மரபுளி யொழுகுந்
      திருமலி பல்வகைக் குடியே - 107



280 - கழகம்
வளரிலைத் தருப்பை நுனியெனக் கூர்ந்த
      மதியினர் தொன்று தொட்டுடைய
பளகறு கேள்விப் பயிற்சியர் மேற்கோள்
      முதற்பகர் மூன்றினும் தெருட்டி
இளையருக் குணர்த்து மிலக்கண நெறியோர்
      ஈரிரு புலமையர் தம்முள்
களவிக லிகந்து குழாங்குழா மாகிக்
      கலைதெரி கழகமும் பலவால் - 108



281 - சைவமடம்
காமனை முனிந்து நெடுஞ்சடை தரித்துக்
      கவின்றகல் லாடைமேற் புனைந்தி
யாமெலாம் வழுத்தும் துறவியென் றிருந்து
      மொருத்திதன் இளமுலைச் சுவடு
தோமுறக் கொண்டா ரெனச்சிறை யிடல்போல்
      சுடர்மனக் குகையு ளேகம்பத்
தோமொழிப் பொருளை யடக்கியா னந்தம்
      உறுநர்வா ழிடம்பல உளவால் - 109



282 - திருக்கோயில்
இருள்மலந் துமிக்குஞ் சிவாகம
      முறையி னீரிரு பாதமு மனுட்டித்
தருள்பெறு மாதி சைவர்க ளாதி
      அவாந்தர சைவ ரீறானோர்
மருவிவாழ் மாட மாளிகைப் பத்தி
      மருங்குடுத் துயர்வனப் பினதால்
தெருள்தரும் அனாதி சைவர்வீற் றிருக்கும்
      திவளொளிப் புரிசை யேகம்பம் - 110



283 - திருமதில்
விண்ணழி வுறநிமிர் வீற டக்குவான்
அண்ணலா ணையினிமி லூர்தி யாண்டுறீஇ
எண்ணில வுருவுகொண் டிருத்து நீரதே
பண்ணமை மதின்மிசை யிடபப் பந்தியே - 111



284 - திருக்கோபுரம்
ஒன்பது கோள்களும் உலாவி வைகுவான்
ஒன்பது மாடமங் கூழிற் செய்தென
ஒன்பது மணிகளி னியன்று ஒண்மைசால்
ஒன்பது நிலைதழீஇ யோங்கும் கோபுரம் - 112



285 - கார்முகில் உடுக்கையாக் கதிரின் வானவன்
மார்பணி மணியதா வட்ட மாமதி
சீர்நுதற் பூதியாச் செல்வக் கோபுரம்
பார்புகழ் புருடனி லோங்கும் பான்மைத்தே - 113



286 - நச்சியே கம்பரைத் தொழுது நாள்தொறுங்
கச்சியில் வாழ்பவர் இறுதிக் காலையில்
அச்சிவ லோகத்தை அணுக வைத்ததோர்
பொச்சமில் லேணியும் போலுங் கோபுரம். - 114



287 - பரிதியின் நிழல்செயக் கதிர்க்கும் பன்மணித்
திருவியல் கோபுரச் செல்வ வாய்தலின்
முரசுகா லந்தோறும் முழங்குஞ் செவ்வியென்
றறுகுற அமரரை அழைத்தல் மானவே. - 115



288 - கொடி
மடுத்தவைம் பாசமா வரண மைந்தனால்
தடுத்தருள் கோயிலில் தம்பி ரானெதிர்
எடுத்தபூங் கொடிமிசை யிடபம் வான்மிசை
அடுத்ததோர் இடபத்தோ டளவ ளாவுமே - 116



289 - தூபி
தங்குலத் திறைவி செய்பூசைச் சால்பினை
அங்கணன் மகிழ்வொடுங் காணு மாசையின்
எங்குள வரைகளும் ஈண்டி னாலெனப்
பொங்கெழில் சிகரங்கள் பொலிந்து தோன்றுமால் - 117



290 - மண்டபம்
கன்மநோய் குடைபவர் கடப்பச் செய்திடும்
பன்மலர் துவன்றிய தீர்த்தப் பாங்கரில்
பொன்மலர் மண்டபம் பொலிந்து தோன்றுவ
தென்மணிப் பேழையைத் திறந்த மூடிபோல். - 118



291 - வேள்விச்சாலை
அறுசீரடி யாசிரிய விருத்தம்
சேந்த பொற்குண்டத் தோங்குஞ் சிகைத்தழல் மிசையே கம்ப
வேந்தையா வாகித் தேத்தும் புகைபொதி வேள்விச் சாலை
ஏய்ந்தசீர்த் தகரவித்தை முறைப்படி இதயக் கஞ்சப்
பூந்தழற் சிகைமே லீசற் போற்றுமா யவனை யொக்கும். - 119



292 - மாமுலத்தொருவர்
கோழரை காம்பாச் சாகை வட்டமேற் குடையாப் பொற்பின்
வாழிய வொருமா மீது வளநிழல் கவிப்ப வாங்கண்
ஊழ்முறை யுயிர்கட் கெல்லாம் ஐந்தொழி லோம்பி யெம்மான்
ஆழ்புன லுலக மேத்த வரசு வீற்றி ருக்கு மன்னோ - 120



293 - பற்பல தேய மெல்லாம் பாங்குடைத் தொண்டை நாடு
பற்பல சங்க நாப்பட் படர்வலம் புரியா மங்கட்
பற்பல நகர மெல்லாம் வட்டமாப் படைத்த காஞ்சி
பற்பல வலம்புரிக் சலஞ்சலப்பணில மாமால் - 121



294 - அத்திருக் காஞ்சி வைப்பி னலகிலாத் தலங்க டம்முட்
பத்திசேர் மாடக் கம்பம் பாஞ்சசன் னியமா மந்த
வுத்தமச் சுரிமு கத்துள்விலைவரம் புணராச் சாதி
முத்தமே ஒருமா மூலத் திருந்தருள் முக்கண் மூர்த்தி - 122



295 - பன்மணி வெயில்கள் கான்று படரிருள் சீப்ப வட்டப்
பொன்மதில் சூழ்ந்து நாப்பண் சதாசிவப் புத்தேள் வைகும்
தன்மையால் கச்சி மூதூர் தரைமிசை உயிர்கள் செய்த
கன்மமோர்ந் தளிப்பான் வந்த கதிர்செய்மண் டிலமே யாமால் - 123



296 - விலக்கிலா வறநூல் சொன்ன முனிவரும் விதிவி லக்காம்
இலக்கிய மிதன்பால் கண்டே யிலக்கணம் விதித்தார் போலும்
அலக்கண்நீத் தமெண் ணான்கும் அம்மையே வளர்க்கு நீரால்
கலக்கமில் அறங்கட் கெல்லாம் ஆகரங் காஞ்சி யன்றோ - 124



297 - உவரிசூழ் உலக்வைப்பின் உரையமை கேல்வி சான்ற
கவிகளென் றுரைப்போர் தம்முள் காஞ்சியைப் புகழா ரில்லை
அவரெலாம் புகழ்ந்தும் இன்னு முலப்புறா அதன்சீர் முற்றும்
சிவநிறை கல்விசாலாச் சிறியனோ கிளக்க வல்லேன் - 125



298 - இத்திருக் காஞ்சி வைப்பில் பலதளி யிடத்தும் மேவி
அத்தகு கம்ப வாணர் அவரவர்க் கருளிச் செய்த
உத்தமக் காதை யெல்லாஞ் சூதனன் றுரைத்த வாறே
முத்தமிழ் அறிஞர் தேற மொழிபெயர்த் துரைப்பேன் உய்ந்தேன் - 126

ஆகத் திருவிருத்தம் 298
------

3. பதிகம் (298-329)




299 - எழுசீரடியாசிரிய விருத்தம்
சிவபரஞ் சுடரைக் கண்டகு மேதுச்
      செய்தவர் வினாவிய வாறும்
தவலருஞ் சிறப்பின் நந்தியெம் பெருமான்
      சனற்குமா ரனுக்குவெஞ் சாப
நவையறுத் தருளிச் செவியறி வுறுத்த
      நலமெலாஞ் சூதமா முனிவன்
அவர்தமக் கியம்பிப் பிஞ்ஞகன் உமையாட்
      கருளிய உண்மைசெப் பியதும் - 1



300 - கன்னியாழ்க் கிழவன் வரம்பெறு
      காரைக் காட்டினிற் பூசனை யுஞற்றி
மின்னவிர் மணிப்பூண் சிவியெனும்
      மகவான் வீடுபே றெய்திய வாறும்
பொன்னுடைப் புத்தேள் புண்ணிய
      கோடிப் புனிதனை யருச்சனை யாற்றி
அன்னவே றுகைக்கும் அண்ணலோ
      டுலகை யுண்டுமீட் டுதவிய வாறும் - 2



301 - அத்தகு மாயோன் வலம்புரிக் களிற்றை
      யடியினை வணங்குபு தனாது
கைத்தலத் திழந்த தெம்மருள்
      சிலைப்பிற் கதிர்வளை தனைப்பெறு மாறும்
மெய்த்தபே ரன்பின் மலர்மிசைக்
      கடவுள் வேள்விசெய் துயர்சிவாத் தானத்
துத்தம னருளான் மாயனோ டுலகை
      யுண்டுமீட் டுதவிய வாறும் - 3



302 - கருகிருள் விடத்தை யிறையவன்
      பருகக் காட்டிய அறக்கடை தணப்ப
இருமறை விதியாற் கடவுளர் மணிகண்
      டேசனை யேத்திய வாறும்
மருளுரு செருக்கிற் பொய்யுரை கிளந்த
      வல்வினை கழிதர வியாதன்
பொருவருஞ் சார்ந்தா சயப்பெரு வரைப்பிற்
      பூசனை இயற்றிய வாறும் - 4



303 - வீட்டினை விழைந்தேழ் முனிவரும் பூசை
      வேறுவே றியற்றிய வாறும்
கோட்டமில் கொள்கைப் பராசர முனிவன்
      தொழுதுதன் தாதையர்க் கொன்று
மாட்டிய வரக்கன் குலத்தொடு மடியச்
      சென்றதும் விளக்கொளி மாயோன்
நாட்டமூன் றுடைய நாதனைப் பரவி
      நதிதடுத் தோம்பிய வாறும் - 5



304 - ஈண்டிய புகழ்முத் தீச்சரம் பரசி
      ஈன்றவள் சிறையினை விடுவித்
தாண்டகைக் கலுழன் நஞ்சுபில்
      கெயிற்ரறுப் பணிகளை அலைத்தெழு மாறும்
நீண்டவன் உணராத் திருவடி போற்றி
      நெளியுடற் பணிகளும் எம்மான்
பூண்டுகொண் டருளப் பெற்றமே தகவாற்
      புள்ளினை வினாவிய வாறும் - 6



305 - இறுதிநா ளிருவர் காயமேல் தாங்கி
      வியாழமும் இயமனும் வழுத்த
மறுவறு காயா ரோகண வரைப்பின்
      எம்பிரான் மன்னிய வாறும்
அறுகணி வேணி மஞ்சள்நீர்க்
      கூத்தர் அடியிணை அருச்சனை செய்து
தெறுபுலன் அவித்த சித்தரெண் ணரிய
      சித்திபெற் றுய்ந்திடு மாறும் - 7



306 - மாதவன் பரசிப் பிருகுவன் சாப
      வன்பயந் தபப்பெறு மாறும்
மேதகும் ஒருசார் முனிவரர்
      மதங்கன் வெண்கரி போற்றிய வாறும்
ஏதமில் வெள்ளி மொழிப்படித் ததீசி
      இட்டசித் தீசனைத் தொழுது
கோதறு வயிர யாக்கைபெற் றோங்கிக்
      குபன்றனைப் புறங்கண்ட வாறும் - 8



307 - அந்தணன் கச்ச பாலயத் திறைஞ்சிப்
      படைத்திடும் ஆற்றல்பெற் றதுவும்
பைந்துழாய்க் கூர்மம் ஆயிடைப் பரசிப்
      பாதகந் தவிர்ந்துய்ந்த வாறும்
மைந்துறு மாண்டு கன்னிமா முனிவன்
      வழுத்திவான் அரம்பைய ரைவர்
சந்தனந் திளைக்கும் இளமுலைப்
      போதகந் தரைமிசை நுகர்ந்துவாழ்ந் ததுவும் - 9



308 - அங்கியங் கடவுள் ஏத்திவிண் புலத்தார்
      அவிப்பொறை மதுகைபெற் றதுவும்
பங்கமின் றிறைஞ்சிச் சவுனக முனிவன்
      வீட்டினைத் தலைப்படும் பரிசும்
மங்கரு வெப்பு விழியவற் செகுத்த
      சுரகரம் வானவர் வழுத்திப்
புங்கவர் பெருமான் சுக்கிலம் பருகு
      வெப்புநோய் போக்கிய வாறும் - 10



309 - புலிப்பத முனிவன் கான்முளை போற்றிப்
      பொங்குதீம் பாற்கடல் பெற்று
வலித்திறல் பார்த்தன் வலவனை முடிமேல்
      மலரடி சூட்டி ஆண்டதுவும்
கலித்தெழும் இமையோர் மலைமகள்
      மொழியாற் கரிசறத் தெளிந்தருட் குறியில்
சலிப்பறும் இயக்க வடிவுகொண் டணைந்த
      தலைவனைத் தொழுதுய்ந்த வாறும் - 11



310 - ஏதமில் பதிற்றுப் பதின்மரோ டீரொன்
      பதின்மரும் ஏத்திய வாறும்
மாதர்மேற் றளியிற் கவுணியன் பாட்டான்
      மால்சிவன் உருவு பெற்றதுவும்
ஆதரம் பூப்ப ஐங்கரப் புத்தேள்
      அனேகதங் காவதம் பரசிக்
கோதற உலகம் எண்ணியாங் குதவக்
      கொடுத்திடும் இறைமைபெற் றதுவும் - 12



311 - மகதியாழ் முனியும் புத்தருக் கிறையும்
      வலம்பொழில் திருக்கயி லாயப்
பகவனைத் தொழுது முப்புரத் தவரை
      மருட்டிய பாவமாற் றியதும்
இகலுநர்ச் செகுப்ப இராகவன் வழுத்தி
      எறுழ்வலி எய்திய வாறும்
புகழுறுங் கற்கி போற்றுபு கடைநாள்
      கயவரைப் புரட்டிய வாறும் - 13



312 - நறைமலர்ப் பனந்தார் முடியவன் வழுத்தி
      நலம்பயில் வரம்பெறு மாறும்
அறைகழல் பகவான் தொழுதுசெல்
      லுருவாய் அச்சுதன் சென்னியைத் துணித்து
நிறைபெருங் கீர்த்தி கவர்ந்து மீட்டுய்யப்
      பூசனை நிகழ்த்திய வாறும்
மறையவன் தலையைக் கொய்துவெம்
      பலிதேர் வயிரவன் பூசித்த வாறும் - 14



313 - விண்டுநேர் விடுவச் சேனனார் பரவி
      வீரபத் திரன்நிறத் தணிந்த
வெண்டலை விழுங்கும் ஆழியை
      விகடக் கூத்தினால் எய்திய வாறும்
மிண்டினால் வேள்வி ஆற்றிய தக்கன்
      வினைகெட அருச்சித்த வாறும்
விண்டவர் புரத்தின் உய்ந்திடும் மூவர்
      தொழுதுமெய் வரம்பெறு மாறும் - 15



314 - பொன்பெயர் படைத்தோன் கிளைஞரோ
      டெய்திப் பூசைசெய் தரசுபெற் றதுவும்
கொன்பயில் விடையோன் அருள்வழி
      மாயோன் மடங்கலாய் அவனுயிர் குடித்துப்
பின்புகும் தருக்கைச் சரபம்மாய்த்
      ததற்பின் பிழைகெடப் பூசித்த வாறும்
வன்புடை இரணி யாக்கனை
      இறுத்த பன்றியின் வழிபடும் இயல்பும். - 16



315 - அந்தகன் பரசிப் புவிமுழு தாண்டு
      கடைமுறை அருள்பெறு மாறும்
வெந்திறல் வாணன் இறுதியிற்
      பரவி விறற்கணத் தலைமை பெற்றதுவும்
கந்தமென் மலர்கொண் டடிதொழு
      தோண காந்தனுங் கதிபெறு மாறும்
மைந்துற வழுத்திச் சலந்தரன்
      கடைக்கால் வீடின்பம் மருவிய வாறும் - 17



316 - கேசவன் திருமாற் பேற்றினிற் போற்றிக்
      கிளரொளி ஆழிபெற் றதுவும்
வேசறு பரசி ராமன்ஏத் தெடுத்து
      வெம்மழுப் படிபெறு மாறும்
தேசுரப் பரவி யிரேணுகை யென்பாள்
      தெய்வத மாகிய வாறும்
மாசறும் யோகா சாரியர் தொழுது
      வயங்குதம் பதம்பெறு முறையும் - 18



317 - சித்தசன் போற்றி உலகெலாங் காமம்
      செறித்திடும் இறைமைபூண் டதுவும்
அத்தனார் ஏவ லாற்றினால்
      அணைந்த அகிலதீர்த் தங்களும் வணங்கிப்
பைத்தபாப் பல்குல் பாகனார் தம்பாற்
      பற்பல வரங்கள்பெற் றதுவும்
தத்துநீர்க் கிறைவன் அருச்சனை
      யாற்றித் தங்குமப் பதம்பெறு மாறும் - 19



318 - காசிவாழ் விசுவ நாதனுங் காஞ்சிப்
      பெட்பினால் அணைந்து வைகியதும்
பூசனை உஞற்றிக் காற்றினான்
      கந்த வாகனாப் பொலிவுறு மாறும்
மாசறு கோள்கள் ஒன்பதும் வழுத்தி
      எண்ணிய வரம்பெறு மாறும்
தேசுறு வாமதேவநன் முனிவன்
      தொழுதுவெம் பிறவிதீர்ந் ததுவும் - 20



319 - அகனுறப் பரசி மார்க்கண்டி முதலோர்
      இறப்பினைக் கடந்ததும் அயன்மால்
இகலுறு செருக்கின் வருவினை
      தணப்ப இலிங்கம்அங் கருச்சித்த வாறும்
சகமெலாம் இறுத்து முக்கணெம்
      பெருமான் தங்குவீ ராட்டகா சத்தின்
முகில்நிறப் புத்தேள் பூசனை உஞற்றித்
      துகிர்நிறம் பெற்றிடும் முறையும் - 21



320 - மாண்டகு காமக் கண்ணியை வணங்கி
      மலர்மகள் சாபம் மாற்றியதும்
பாண்டவர் முதலோர் தொழுது நல்வரங்கள்
      பரித்ததும் வணங்கி யீசான
ஆண்டகை ஆசைக் கிறைமையெய்
      தியதும் அச்சுதன் மச்சமாய்ப் போற்றி
வேண்டலர்ச் செகுத்து வேத நூல் கொணர்ந்து
      வேதியர் தமக்களித் ததுவும் - 22



321 - மீயுயர் குறளோன் அவுணனைச் சிறையிற்
      புகுத்துமீண் டிறைஞ்சிய வாறும்
மாயவன் பரவிக் கடல்விடந்
      தாக்கும் வெப்புநோய் மாறநின் றதுவும்
நாயகி உருவிற் கவுசிகை
      தோன்றி நாதனைப் பூசித்த வாறும்
தூயமா காளப் பாப்பர சிறைஞ்சித்
      தொல்லைவீ டுறப்பெறு மாறும் - 23



322 - அண்ணலார் ஆணை மறுத்தவெந்
      தீமை அறுத்திடக் குமர கோட்டத்தில்
நண்ணிவீற் றிருந்து சேயிலை
      நெடுவேல் நாயகன் பூசித்த வாறும்
மண்ணெலாம் பரவும் மார்க்கண்ட முனிபால்
      வஞ்சகங் கருதிய மாயோன்
கண்ணுதற் பிரானை அத்தலத்
      திறைஞ்சி அவ்வினை கழுவிய வாறும் - 24



323 - சாத்தனார் போற்றி உரிமைபெற் றதுவும்
      மங்களைத் தையல்போற் றியதும்
தீத்தொழில் அரக்கர்ச் செகுத்துவந்
      திராமன் பணிந்ததும் தேவர்கோன் வலவன்
ஏத்திய வாறும் நாரணன் பரவிப் பாப்புரு
      இரித்ததும் மயானக்
கூத்தனார் முழுதுந் தழலிடை யொடுக்கிப்
      பண்டனைக் கொலைசெய்த வாறும் - 25



324 - ஓவிய உலகைத் தோற்றுவான் எங்கோன்
      ஒற்றைமா மூலத்தின் முளைத்துத்
தாவறு சிறப்பின் இலளிதைப்பிராட்டி
      தனைப்பயந் தாங்கவள் விழியின்
மூவரைப் படைத்துச் செய்தொழில் வகுத்துச்
      செவியறி வுறுத்துமொய் கூந்தல்
தேவியுங் கடவுள் மூவரும் பரவச்
      சிறப்பொடு வீற்றிருந் ததுவும் - 26



325 - திருவிளை யாட்டான் மந்தரத் துமையாள்
      சிவபிரான் விழியிணை புதைப்பக்
கருகிருட் பிழம்பின் உலகெலாம்
      மூழ்கிக் கடப்பருங் கவலையுற் றதுவும்
வருவினை தணப்பப் பூசனை புரிவான்
      மழவிடைச் செய்கையும் புகன்று
பெருநகர்க் காஞ்சிக் கிறையவன்
      விடுப்பப் பிராட்டியங் கெய்திய வாறும் - 27



326 - மெய்த்தநல் லறங்கள் வளர்த்திடு
      மாறும் விண்டுவீச் சரமகத் தீசம்
மத்தள மாத வேச்சரம் வணங்கிப்
      போந்துமாந் தருவடி முளைத்த
சத்தறி வின்பத் தனிமுதற் பொருளைத்
      தவத்தினாற் கண்டுகொண் டிறைஞ்சிப்
புத்தமிழ் தனையாள் விதியுளி
      வழாமைப் பூசனை உஞற்றிய வாறும் - 28



327 - கருணைமீப் பொங்குந் திருவிளை
      யாட்டால் அழைத்துறுங் கம்பைநீர்ப் பெருக்கைக்
குருமணிக் குழையாள் கண்டுளம்
      பதைத்துக் குழகனைத் தழுவிய வாறும்
திருமுலைச் சுவடும் வால்வளைத்
      தழும்புஞ் சிவபிரான் பொலிவுறப் பூண்டு
மருமலர்க் குழலாள் காணமுன் நின்று
      வரம்பல அருளிய வாறும் - 29



329 - இமவரைப் பிராட்டி கவுரமா நிறம்பெற்
      றெம்பிரான் வதுவைவேட் டதுவும்
உமையவள் காள வுரியினி லுயிர்த்த
      ஒளியிழை அவுணரை மாட்டி
விமலநா யகன்றன் அருள்பெறு மாறும்
      மேதகு விம்மிதத் திறமும்
அமைவர ஒழுகும் ஒழுக்கமும் எங்கோன்
      அருட்சிவ புண்ணியப் பேறும் - 30



329 - மற்றுமோ ராற்றால் கிளந்திடும் திறத்தின்
      மால்வரைக் கயிலையின் உமையாள்
கற்றையஞ் சடையார் விழியிணை
      புதைத்துக் காஞ்சியிற் பூசனை யாற்றும்
பெற்றியும் அந்தர் வேதியுங் கரிகால்
      வளவர்கோன் பெருமையும் வினைநோய்
செற்றிடுந் தீர்த்தம் முதலிய மூன்றின்
      சிறப்புமீண் டியம்பிடப் படுமால். - 31

ஆகத் திருவிருத்தம் 329
-------------

4. வரலாற்றுப் படலம் (330-357)

நைமிசாரணியச் சிறப்பு



330 - எழுசீரடியாசிரிய விருத்தம்

மிடல்கெழு தவத்தோர் வேள்விசெய் வினைக்கு
      வேண்டிய வேண்டியாங் குதவக்
கடவுளான் பயிலுங் காட்சியால் அவிஊண்
      கைக்கொளத் துதைந்தவா னவரால்
தொடர்வுறும் ஓமப் புகை தழீஇச் சுரும்பர்
      உளர்தரப் பன்மலர்ப் பொலால்
அடர்தருங் காமர் கற்பக வனமே யாயது
      நைமிசா ரணியம். - 1



331 - தாதவிழ் கடுக்கை நறுந்தொடை மிலைச்சுந்
      தம்பிரான் அடியல துணரா
மாதவர் இயற்று மகவினை சிதைப்ப
      வருகரும் தயித்தியர் அவர்தங்
காதுவெஞ் சாப வலிக்குடைந் தோடுங்
      காட்சியே கடுக்கும் அம்மகத்தீ
மீதயர்ந் தண்டச் சுவர்த்தலம் உரிஞ்ச
      விசும்பெழு நறுபுகைப் படலம். - 2



332 - கருந்திரை அளக்கர் அகடுடைந் தெழுந்து
      கனையிருள் பருகு வெங்கதிரோன்
இருந்தவர் வேள்விக் கலத்தவிப் பாகம்
      ஏற்பவந் தணுகுவோன்மான
மருந்தெனக் கிளைத்து வானுற நிவந்த
      வளம்பொல் கிளைகளைக் கரத்தால்
திருந்துற ஒதுக்கிக் குனிந்துபுக் குலாவிச்
      சேணிடைப் போய்நிமிர்ந் துறுமால் - 3



333 - சிறகர் வண்டிமிரும் வட்டவாய்க் கமலச்
      செழும்பொகுட் டரசுவீற் றிருக்கும்
மறைமுதற் கிழவன் முனிவரர் வேண்ட
      வலைத்தனன் விடுத்தபுல் நேமி
இறவுறா தின்று மாயிடை உறைவ
      தெனக்கவின் காட்டிடுந் தேத்தீ
அறைதரச் செறிந்து நறவம்ஊற் றெடுக்கும்
      அரும்பெறல் மதுவிறால் வலயம். - 4



334 - விரும்பிய விடபந் தாங்குதோற் றத்தால்
      விளங்கெரி உருவினிற் பூத்த
வரும்பணி கொண்ட காட்சியாற் பெரிய
      வரையவண் இருந்தவராக
இரும்புவி உய்யக் கோடலால் யாரும்
      ஏத்திடும் பெற்றியால் உலவப்
பெரும்பெயர்க் கயிலைக் கடவுளே போலும்
      பிறங்கொளி நைமிசக் கானம். - 5



335 - திசைமுகன் உந்தி யுறவலை நேமி
      செர்ந்திடுங் கொள்கையால் என்றும்
அசைவில்வா னவர்க்குப் புரைஅவி
      அமிழ்தம் அளித்தலாற் பூமணம் பெறலால்
வசைதபு காட்சிக் கருநிறக் கருவி
      மழைமுகில் மேனிவந் தழகாய்
இசைதலாற் சார்ங்கம் ஏWதியோன்
      நிகர்க்கும் இணையிலா நமிசக் காடு. - 6



336 - குலவுநால் வாய்கள் மருவலால் அகலங்
      கொண்ட முந்நூல் வயங்குதலால்
சலமற வேத மொதலால் வனத்துத்
      தாமரை இருக்கைமே வுதலால்
பலபொறிச் சுடிகை பையராச் சுமந்த
      பரவை சூழ்புடவியே முதலா
மலர்தலை உலகம் முழுதுமீன் றளித்த
      வள்ளலாம் நைமிசப் புறவம். - 7



337 - முனிவர் கூட்டம்
புகலுமிவ் வனத்தில் வசிட்டன் வேதா
      ரணியன் புலத்தியன் துருவாசன்
சுகன்வசுச் சிரவன் அணிமாண்
      டவியன் சுனப்புச்சன் சமுவர்த்தன் மணிமே
சகன்சுனச் சேபன் இரைக்குவன்
      சம்பு தற்பர னாத்தி ரேயன் சௌ
நகமுனி புலக னாசுவ லாயனன்
      சமதக்கினி சங்கன் - 8



338 - இரைவதன் குசுரு விந்தன்மா தேசன்
      இலிகிதன் பராசரன் கற்கன்
கிருது அக்கினியன் பருப்பதன் நாசி
      கேதன் நாரதன் அசிகர்த்தன்
உருகு விசுவாமித்திரன் குணி பரத்து
      வாசன் உத்தா லகன்வாசச்
சிரவன் சாண்டிலியன் காசிபன்
      வாமதேவன் தாற்பிரியன் இஅசனியே - 9



339 - கண்ணுவன் முதலாம் எண்ணரு
      முனிவர் கழிபெருஞ் சீர்த்தியர் மாசு
மண்ணிய மனத்தார் பசுபதி அடியார்
      வடிவெல்லாம் நீறுசண் ணித்த
புண்ணியர் மும்மைப் புண்ட நிரையார்
      அக்கமா லிகையர்போர் விடையூர்
அண்ணல்வாழ் தலத்திற் பற்றினோர்
      அன்னான் அருச்சனை இயற்றுமார் வத்தார் - 10



340 - அங்கமும் மறையும் தெளிந்தவர் வேதம்
      அந்தித்த அறிவினர் விமலர்
தங்குமஞ் செழுத்தே கிளப்பவர் பொறியைத்
      தடுத்துயர்ந் தவர்மக மனைவி
செங்கன லோடும் உறைபவர் தமைப்போற்
      சிற்றுயிர் அனைத்தையுங் காணும்
பொங்குபே ரருளின் எல்லையர் இனையோர்
      பொலிவுற ஒழுங்குடன் குழுமி - 11



341 - கறைமிடற் றிறையைக் கண்ணுறக்
      காணுங் காடிசியாங் கணிச்சியின் அல்லால்
மறவினைக் கனிகள் மல்கிய உலக
      வாழ்வெனும் நச்சுமா மரத்தை
இறுமுறை காண்ப தரிதெனத் துணிந்தார்
      இதுபெறும் உபாயம்மற் றெவனென்
றறிவினில் நெடும்போ தாய்வுழி அவருள்
      அருந்ததி கொழுநன்ஈ அறையும் - 12



342 - தவம்
அறுசீரடியாசிரிய விருத்தம்
தவமே மேலாம் நெறியாகும் தவமே சிவனார் தமைக்காட்டும்
தவமே துறக்கம் அடைவிக்கும் தவமே நரனைத் தேவாக்கும்
தவமே வலாரி திசைக்கிறைவர் சார்ங்கன் அயனு மாக்குவிக்கும்
தவமே கிடைப்பிற் கிடையாத துண்டோ என்று சாற்றினானால் - 13



343 - அறம்
அறமே மறங்கள் முழுதழிக்கும் அறமே கடௌள் உலகேற்றும்
அறமே சிவனுக் கொருவடிவ மாகும் சிவனை வழிபடுவோர்க்
கறமே எல்லாப் பெரும்பயனும் அலிக்கும் யார்க்கும் எவ்விடத்தும்
அறமே அச்சந் தவிர்ப்பதென அறைந்தான் சாதா தபமுனிவன் - 14



344 - கொடை
கொடையே எவர்க்கும் எப்பேறுங் கொடுக்கும் நெறியிற் பிறழாத
கொடையே யாருந் தன்வழியின் ஒழுகச் செய்யும் குறதீர்ந்த
கொடையே பகையே உறவாக்கும் குலவும் பூதம் அனைத்தினையுங்
கொடையே புரக்கும் என்றுள்ளங் கொள்ளப் புகன்றான் கவுதமனே - 15



345 - வாய்மை
மெய்யே சிறந்த பெருநலமாம் மெய்யே எவையும் நிலைபெறுத்தும்
மெய்யால் அழல்கால் கதிர்பிறவும் தத்தந் தொழிலின் விலகாவாம்
மெய்யே எவைக்கும் இருப்பிடமாம் மெய்யே மெய்யே சுவமாகும்
மெய்யே பிரம பதமுமெனப் புகன்றான் வினைதீர் காசிபனே - 16



346 - வேள்வி
வேள்வி எச்சம் ஒன்றே இருமையினும் மேலாம் இமையோர்க் குவப்பாவ
தெச்சம் ஒன்றே மகத்திறையாம் எம்மான் விழையப் படுவதுவும்
எச்சம் ஒன்றே நனிசாலச் சிறந்த பொருளும் இருங்கரும
எச்ச நிகர்வே றில்லையெனப் பரத்து வாசன் இயம்பினனால் - 17



347 - மகவு
மகவே மேலாங் கதியாக்கும் மகவான் உலகந் தனைவெல்லுங்
மகவின்மகவான் முடிவின்மை எய்தும் மகவின் மகவளித்த
மகவான் மேலைப் பதமுறுந்தென் புலத்தார் கடனை மாற்றுவதும்
மகவானன்றி யில்லையென வகுத்தான் தெரித்துக் கண்ணுவனே - 18



348 - துறவு
துறவே அறங்கள் எவற்றினுக்கும் பெரிதாம் விடையூர் தோன்றலுக்கும்
துறவே உவகை வரச்செய்யும் துறவே அயன்மால் உலகளிக்கும்
துறவே ஈச னிடத்திருத்தும் எவரும் மேலாச் சொல்லுவதும்
துறவே யாமென் றெழுந்துநின்று சொற்றான் சைவத் துருவாசன் - 19



349 - சூதமுனிவர் வரவு
வேறு

இன்ன வாறுபன் முனிவரும் இயம்பினர் பிணங்குழி இவர்ஈட்டு
நன்னர் வானவங் கொணர்ந்தென வாயிடைநணுகினான் விடைஊரும்
என்னை யாளுடை இறையடி தைவரும் இடையறாத் தியானத்தான்
பன்னு மெய்த்தவப் பராசரன் பயந்தருள் பண்ணவன் மாணாக்கன் - 20



350 - விளங்கு நீற்றொளி கதிர்செய வீங்கிருள் அக்கமா லிகைவீசும்
வளங்க னிந்தபொன் மேனியான் புண்ணியம் வடிவெடுத் தெனவந்தான்
துளங்கு றாதுயர் புராணமுற் றளந்தறி தொல்லையோன் அமரர்க்காக்
களங்க றுத்தவன் உண்மைதேர்ந் துயிர்க்கெலாங் கருனைகூர்ந் தருள்சூதன் - 21



351 - முனிவர் வினாவுதல்
புக்க சூதனை முனிவரர் யாவரும் பொங்கிய பெருங்காதல்
மிக்க ஓகையின் எதிர்கொடு பூசனை விதியுளி வழாதாற்றித்
தக்க வாதனத் திருத்தினர் வினவுவார் தறுகண்ஐம் புலவாழ்க்கை
ஒக்க நீப்பயாம் முன்னரே அருந்தவம் உஞற்றினம் அதனாலே - 22



352 - வென்றி வெள்விடைப் பிரானடி காண்பதே வீடுபேற் றினுக்கேது
என்று தேறினம் காண்பதற் குபாயம்மற் றிதுவெனத் தெளிகிலேம்
ஒன்ற லாதன வேறுவே றுரைத்தனம் உயங்கினம் பிணங்குற்றேம்
மன்ற கண்டிலேம் துணிவுமெய் யுணர்வினான் மலக்குறும் பறச்செற்றோய் - 23



353 - எங்கள் பாக்கியப் பயனென நீஇவண் எய்திடப் பெற்றேம்யாம்
கொங்கு யுஇர்த்தார்த் துளவனே வியாதன்அக் குலமுனி அருளாலே
அங்கண் மூவறு புரானமும் உணர்ந்தனை அறமுதல் பொருள் நான்கிற்
பொங்கு சீர்த்தியோய் நீஅறி யாதது புவனம்மூன் றினுமில்லை - 24



354 - அத லாற்பல நெறிய்னுந் துணிந்தவா றரன்திரு வடிகாண்டற்
கேது எங்களுக் கருளுதி வறிதுநீ ஏகலை உயர்வானிற்
பாத வம்பொரப் பெரியவர் காட்சியும் பயன்படா தொழியாதால்
சூத மாதவ என்றலும் அகங்களி துளும்பிஓ துவன்சூதன் - 25



355 - சூதமுனிவர் விடை கூறுதல்
மொழியும் இப்பொருள் மூவறு புரானத்துட் காந்தமூ விருகூற்றொஇற்
கழிவில் சீர்ச்சனற் குமாரசங் கிதையினிற் காளிகா கண்டத்தில்
தழுவு தீர்த்தமான் மியத்தது நந்திபாற் சனற்குமா ரன்கேட்டங்
கழிவி லாஅருள் வியாதனுக் குரைத்திட அவனெனக் கருள்செய்தான் - 26



356 - நீயிர் பேரறி வாளராய் விரதநன் னெறியினிற் பிறழாமே
தூய மெய்த்தா வலியினாற் பாமலத் துகளறுத் துமையோர்பால்
நாயனாரருள் பெற்றுளீ ராதலின் நன்றும்இப் பொருள் உங்கட்
கேய ஓதுவன் ஒருங்கிய மனத்தொடுங் கேண்மின்க ளெனலோடும் - 27



357 - அண்டர் நாயகன் நடம்புரி நாயகன் அடியவர் உளக்கோய்ல்
கொண்ட நாயகன் திருவடித் தர்சனங்க் கூடுதற் குபாயஞ்சீர்
மண்டு தீர்த்தமான் மியத்துநீ பெற்றத்வ் வாறெனக் கடாவுற்ற
பண்டை மெய்த்தவர்க் கிருமையும் புலப்படப் பகரலுற் றனன்சூதன் - 26

ஆகத் திருவிருத்தம் 357
-------------

5. சனற்குமாரப் படலம் (358 - 413)

மகாமேருச் சிறப்பு



358 - எழுசீரடியாசிரிய விருத்தம்

தொடுகடல் வரைப்பின் மன்பதைத் தொகைகள்
      சோழன் மீனவனென ஈண்டிப்
படர்பொலங் குவைகள் கவர்ந்துறா வண்ணம்
      பரிந்துகாப் பவரென அசுரர்
கடவுளர் இயக்கர் சித்தர்கந் தருவர்
      கின்னரர் சாரணர் பிறரும்
உடனுற நெருங்கிப் போற்றமூ
      உலகும் உருவிமேல் நிவந்தது மேரு - 1



359 - சேர்ந்தன முழுதுந் தன்நிற மாக்குஞ் செய்கையால் தனக்கின மாகிச்
சார்ந்தமா ணிக்க வண்ணர்ஏ கம்பர் தமக்கலால் வணங்கிடாதாகி
வார்ந்தபல் கோளும் நாள்களும் வலம்வர இராப்பகல் விளக்கி
நேர்ந்தபே ராசை எட்டையும் பகுத்து நின்றதத் தமனியக் குன்றம் - 2



360 - எண்சீராசிரிய விருத்தம்

நயக்கும் மற்றிதன் ஒளிபரந் திமையோர் நாடு
      பொன்னிறம் படைத்ததென் றெவரும்,
வியத்த குங்கிரி மணிபல வரன்றி மீது
      நின்றிழி முழங்குவெள் ளருவி
வயக்க மாண்டமுப் புரிசை யன்றிறுத்த
      வள்ளல் பூட்டுவிட் டிருத்திய சிலையின்
இயக்கம் மேவுபல் பொறியபன் னகநாண் இரைந்து
      கொண்டொளிர் தொடக்கமே ஒக்கும் - 3



361 - மலைஎ வற்றையுஞ் சிறகரி வலாரி வயங்கெ
      டப்பொரு தழித்தவன் வணக்குஞ்,
சிலையி னைப்பறித் தூங்குவைத் தென்னத்
      திவலை இந்திர திருவிலைக் காட்டும்,
அலைதி ரைப்புனல் அருவிசூழ் மேரு
      அம்பொன் மாற்றினில் அதிகமா யதுதான்,
நிலைபெ றத்தவர் எண்ணீலர் குழீஇச்செய்
      நிறத வக்கனல் கதுவலிற் போலும் - 4



362 - சதசிருங்க மலைவளம்
தடாத பேரொளித் தமனியம் பழுத்த
      தண்ண றாச்சுனைக் குடுமியங் குவட்டு
வடாது மாமலைக் காந்தியின் பிறக்கம்
      மடங்கிடாஉபல் சுடர்விரித் தெழுந்த
கெடாத தோற்றமே உறழமற் றதன்மேற்
      கிளர்சு ரும்பினம் பெடையொடு தழுவி
விடாது பண்படு பொழிற்சத சிருங்க வெற்பெ
      னத்திசை போயதொன் றுளதால் - 5



363 - குரவு மாதவி உழிஞைமந் தாரம் குருந்து
      பாடலம் பாலைமுந் திரிகை
மருது போதி பிடாஞெமை ஓமை வஞ்சி
      காஞ்சிகுன் குமம்நமை ஒடுவாண்
அரைத ளாஉதி செருந்தி சேஎகினம் அகில்ப
      லாசுசந் தில்ல மா வில்லம்
வரைத மாலம் மாதழிளை கணி அதிங்கம்
      வகுளம் இன்னன நெருங்கின ஓங்கும் - 6



364 - அன்றி னார்புறம் அழலெழ நகைத்த
      அண்ணல் சேவடிக் கன்பறா இயல்பின்
துன்று மெய்த்தவ யோகி யர்க்கெலாந்
      தூய நற்றவச் சாலையு மாகித்
தென்றல் ஊர்தரப் பூமணங் கஞலத் தெளிபு
      னற்சுனை அளவில் கவின்று
பொன்றி டாக்கட வுளர்முத லோர்க்குப்
      போக பூமியு மாயதப் பொருப்பு - 7



365 - அங்கண் வாழ்தரும் அயன்மனைக் கிழத்தி
      அங்கி நாப்பண்நின் றருந்தவஞ் செயல்போற்
ஒங்கு லாந்துவர்ப் பங்கயத் திரைதேர்
      குறிப்பின் ஓதிமம் அசைவற இருக்கும்
பொங்கு வெண்டிரைத் தீர்த்தத்தின் மாடே
      புரங்க டந்தவர் வரமவட் குதவித்
தங்கு காட்சியின் நறுமலர் பொதுளித்ததைக
      டுக்கைபொன் சொரிவன உடைத்தால் - 8



366 - மீது சந்திர சூரியர் கிரணம் விரவ
      லாமையின் ஒருபொழு தலர்ந்தோர்
போது கூம்புமச் செய்கையாங் கின்றிப்
      புரிமுறுக் குடைந்தென் றுமோரியல்பின்
கோதில் பன்மணிக் கதிரொளி வருடக்
      குளிர்ந்த லர்ந்திரண் டவத்தையுங் கடந்து
மாதர் வெண்பிறைக் கண்ணியர் அடிசேர்
      மாந்தர் ஒத்துள வலஞ்சுனை மலர்கள் - 9



367 - வென்ற ஐம்புல வாழ்க்கையர் வடிவின்
      விலங்கு பூதியும் விரைகமழ் கடாத்த
குன்று போலுயர் களிற்றுநீள் கோட்டுக்
      குலவு முத்தமும் வேயுகு மணியும்
துன்றி வானிலாக் கற்றைகால் வெண்மை
      தூய பொன்மையை விழுங்கிய தேயோ
அன்றி அவ்வரைப் பொன்மையே வென்மை
      தனைவி ழுங்கிய தோஅது அறியோம் - 10



368 - இனைய சீர்பெறு சதசிருங் கத்தின் எண்ணி
      லா·ப்பெரு வளத்தன வாகி
நனைம லர்ப்பொழில் சண்பகம் சரளம் நரந்தம்
      தெங்குகோங் கரம்பைகள் உடுத்து
வனச நீள்சுனை மல்கிய பிரம வனமொன்
      றுள்ளது மற்றதன் நாப்பண்
தனைநி கர்ப்பது நான்மறைக் கிழவன்
      தான மாயது பிரமமா நகரம் - 11



369 - சனற்குமார முனிவர் யோகுசெய்திருத்தல்
எழுசீரடியாசிரிய விருத்தம்

பொற்பமர் இனைய நகர்க்கொரு பாங்கர்ப்
      பொங்கொளி மடங்கலே றொன்று
பற்பல மடங்கல் சூழவீற் றிருக்கும்
      பரிசெனத் தவளநீற் றொளியின்
அற்புதக் கோலத் தறிஞர் சூழ்ந்தேத்த
      அருட்சனற் குமாரமா முனிவன்
எற்பணிப் பெருமான் சரணுளத் திருத்தி
      யோகுசெய் திருக்குநாள் ஒருநாள் - 12



370 - வைகறை எழுந்து கங்கைநீ ராடி வானவர்
      முனிவர்தென் புலத்தார்
செய்கடன் உவப்பத் தெண்புனல் இறைத்து
      நியாசமுந் தியானமு மாற்றிப்
பொய்களை விரசை அங்கியின்
      விதியாற் பூத்தநீ றங்கையின் எடுத்து
நைகரந் தீர்ந்த அன்பொடு நியாச
      நடைபெறு தியானமுன் னாக - 13



371 - அடைவுறு பஞ்சப் பிரமமந் திரத்தால்
      அங்கியென் றற்றொடக் கத்தான்
முடிவில் சாபால மனுக்கள் ஏழாற்றான்
      மூவிரண் டதர்வமந் திரத்தால்
வடிவுறும் இடக்கை வைத்துமுன் முக்கால்
      மந்திரித் தறவினால் குழைத்துக்
கடிகெழு சென்னி முதலடி காறும்
      பிரமமோர் ஐந்தையுங் கழறி - 14



372 - நிறையஉத் தூளஞ் செய்துபின் திரியம்
      பகங்களால் நிகழ்த்துமஞ் செழுத்தால்
அறலினா சமித்துப் பின்னருந் திரியா
      யுடந்திரி யம்பக மனுவான்
முறையினஜ் செழுத்தால் புண்டர
      மூன்றும் முச்சுடர் முக்குணம் மும்மை
மறைகள்மூ வுலகு முந்நிறம் முத்தீ
      வடிவெனச் சிந்தையிற் கண்டு - 15



373 - ஐந்துமூ விடத்தும் அழகுற வணிந்தங்
      கருக்கற்கு சந்திந்நிர் உதவி
இந்திர திசையை நோக்குபு மோனம்
      எய்திநல் லாதனத் தும்பர்ப்
பந்தமில் சுகஞ்சேர் இருக்கைய னாகிய
      அஞ்சபூ தத்தை ஒன்றொன்றின்
உந்துற ஒடுக்கி யாவியைப் பிரம
      ரந்திரத் தொடுக்கிய பின்னர் - 16



374 - பாதகக் குழிசிப் புலையுடல் தொடக்கைப்
      பவனபீ சத்தினால் உணக்கிப்
போதர வன்னி பீசத்தால் வேவப்
      பொடித்தது வாரிபீசத்தால்
சீதமா நனைத்துத் தரணிபீ சத்தால்
      திரட்டிவே றுறுப்பெலாம் பகுத்து
மேதகச் சத்தி பீசத்தால் நிறைத்து
      மேயபின் விதியுளி உயிரை - 17



375 - அசுதீர் உடம்பின் முன்புபோல் இருத்தி
      அங்கணா தாரபங் கயத்துத்
தேசுறும் வன்ன ரூபியாய் நிறைந்த தேவியை
      முறைவழா தமைத்துப்
பேசிரு பத்தோ ராயிரத் தறுநூ றுயிர்ப்பினைப்
      பிரித்தச பையினான்
மாசறு மானை முகப்பிரான் முதலோர்
      மகிழ்வுறும் படியவர்க் குதவி - 18



376 - அவியாம் இலிங்கத் தந்தரியாக
      அருச்சனை விதியுளி யாற்றி
மேவிய பின்னர்ப் புறத்தினும் சென்னி
      முகமுதல் விளம்புறுப் பெல்லாந்
தேவியை ஐம்பான் எழுத்துரு வான
      செல்வியை நலம்வர அமைத்துப்
பாவுறும் பிராணா யமங்கள் முறையிற்
      செய்துபின் பரிதிகா ணளவும் - 19



377 - அருமறைக் காயத் திரிப்பெரு மனுவை
      யாயிரத் தெட்டுருக் கணித்துக்
கருதிய யோக சித்தியின் பொருட்டுக்
      கணேசனை முன்புபூ சித்துப்
பரிதிமண் டிலத்தும் தண்டிலந் தனினும்
      பகர்தரு லிங்க மூர்த்தியினும்
மருவுமங் குட்ட ரூபியாஞ் சிவனை
      வரன்முறை அருச்சனை புரிந்து - 20



378 - யோகினைக் கூடித் தன்னுடை இதயத்
      தீசமென் றுரைக்கும் எட்டிதழும்
சேகறும் வயிராக் கியமெனும் பொகுட்டும்
      செப்புவா மாதிகே சரமு
மாகிய கமல மாவியா யாமத் தலர்தரக்
      கண்டு மற்றதன்மேல்
ஏகன்மும் மூர்த்தி யாகிமுக் குணங்கட்
      கிறைவன்மும் மண்டில ஈசன் - 21



379 - முக்கணன் புட்டி வருத்தனன் நீலப்
      பொன்மயன் முதிர்கறை மிடற்றன்
தக்கஈ சானன் வன்னிரே தாநற்
      சத்தியன் அருவினன் உருவன்
புக்கசீர்ப் புருடன் விச்சுவ ரூபன்
      புருட்டுதன் சிவன்புரு கூதன்
வைக்குமெய்ச் சத்துப் பராபரம்
      பரமான் மாமகத் துயர்பரப் பிரமம் - 22



380 - என்றெடுத் துரைக்கும் பெயர்களின் பொருளாய்
      இயம்பரும் பரவெளி நாப்பண்
நின்றபே ரொளியின் பிழம்பினை இனைய
      சத்தியி னோடுநேர் நோக்கி
ஒன்றுதன் உயிரை அப்பெரும் பொருளோ
      டொன்றுவித் திருபகுப் பிறந்து
மன்றயோ கத்தின் அசைவற இருந்தான்
      மறையவன் ஈன்றருள் மதலை - 23



381 - சிவபெருமான் திருவுலா

அங்கவன் அவ்வா றரியயோ கத்தி னாநந்த
      பரவச னாகி
ஓங்குபே ரறிவின் சிழித்தனன் உறங்கும்
      எல்லையின் உம்பர்தம் பெருமான்
மங்க்குயிர் கிளவி மலைமகளோடு மலர்தலை
      உலகாத் தளிப்பான்
வீங்கிய கருணை ஊற்றேழத் தரும
      வெள்விடை ஊர்திமேல் கொண்டு - 24



382 - உரகர் தருவர் இராக்கதர் சித்தர் யோகிக ளாசைகாப்பாலர்
நிரைமணி மோலி பாதுகை வருட நிகழுமா காஉடன் ஊகூ
விரிபுகழ் ஏனை வீணைவல் லவரும் விருதெடுத் தோதியாழ் தடவ
இருவிசும் பகத்தின் இனிதெழுந் தருளி
      உலவினன் என்னையா ளுடையான் - 25



383 - அதுசனற் குமாரன் யோகினில் வைத்த
      கருத்தினால் அறிந்தில னாகிக்
கதுமென இருக்கை எழாமைகண் டெம்மான்
      கருணை கூர்ந் துமையவளோடு
விதுவணி சடிலத் தெம்மையே உளத்தின்
      விழைதர இருத்திமற் றெம்பாற்
பொதுவற ஒருக்கு மனத்தினன் என்னாப்
      புரிவொடும் கோயில்புக் கனனால் - 26



384 - சனற்குமாரமுனிவர் சாபமேற்றல்

நந்தியெம் பெருமான் நோக்கினன் வெகுண்டு
      நலமிலா ஒட்டக மேபோல்
அந்திலெம் பிரானை இகழ்ந்திருந் ததனால்
      அவ்வுரு வாகெனச் சபிப்பச்
சிந்தைகூர் முனியும் ஒட்டக மாகிச்
      செழுநிலத் துழிதரு காலை
முந்தைஞான் றியற்று நல்வினைப்
      பயனான் முன்னினன் கச்சிமா நகரம் - 27



385 - பிரமன் கச்சபேசரைப் போற்றல்
அயிடைக் கச்ச பேசனாம் இறைவன் அமர்ந்தருள்
      கோயிலின்மாடே
காயுமைம் பொறியின் உலகெலாம் படைக்கும்
      கருத்தினான் மலரனைப் புத்தேள்
தூயமா தவத்தின் இனிதுவீற் றிருக்குஞ்
      சூழலின் நணுகுத லோடும்
தீயபா வத்தின் ஒட்டக வடிவாஞ்
      சிறுவனைக் கண்டனன் தாதை - 28



386 - பாவடி நெடுங்கால் திரையெழு தோல்வாய்ப்
      பழியுடல் நெளிந்துநீள் கழுத்தின்
யாவரும் இழிக்கும் ஒட்டக யாக்கை
      இளவலை நோக்கிநின் றந்தோ
செவுயர் கொடியான் அடித்தொழும் பாற்றுந்
      திருவருட் குரியனாம் இவனுக்
காவவென் செய்கோ என்மகற்கிதுவந்
      தடுத்ததெவ் வாறென எண்ணி - 29



387 - யோகினைக் கூடி முன்நிகழ் வனைத்தும்
      உணர்ந்தனன் அவ்வினை தவிர்ப்பா
னாகமமுறையாற் கச்சபே சன்பால் அடைந்து
      பூசனை செய்தேத் தெடுப்பான்
மாகர்போற் றிசைக்கும் இளம்பிறை
      மோலி வள்ளலே உலகளித் தக்கும்
ஏகனே யாமை உர்வொழித் தரியை
      யாண்டநின் இணையடி போற்றி - 30



388 - காசிகே தாரம் புட்கரங் குருகேத்
      திரங்கடி நைமிசங் களினும்
ஓசைகொள் காஞ்சி அதிகமென் றுரைப்ப
      துரைப்பிர மானமொன் றன்றால்
ஈசனே நீயும் உமையுமே அல்லால்
      இந்நகர் படைத்தவர் இல்லை
தேசுற யானே கண்ணுறக் கண்டு
      தெளிந்ததாம் எந்தஊ ழியினும் - 31



389 - புரியுநின் அருளால் உயர்ந்தவர் அனேகர்
      புரவுபூண் டெட்டுரு வெடுத்தோய்
விரிவிழி உமையால் மணந்தபே ரின்ப வடிவமே
      இடும்பைநோய் அறுக்கும்
கருனைவாரிதியே இரங்கிடாய் எமக்குக்
      களைகண்நீ யன்றிவே றிலையென்
றிருகணீர் சொரிய நெக்குநெக் குருகி
      யேத்தினான் நாத்தழும் பேற - 32



390 - கச்சபேசர் காட்சி கொடுத்தல்
அறுசீராசிரிய விருத்தம்

திசைமாமுகன் வாழ்த்தொலி அஞ்செவியிற்
      சென்றேறலு மாரருள் உந்துதலான்
மிசைவானவர் பூதக ணப்புடையின்
      மிடையப்பெரு மானெதிர் நின்றருளி
வசைதீர்தர ஏட்ட வரம்தருகேம் மைந்தாவுரை
      செய்கென வாய்மலர்
இசைபாடினன் ஓகை துளும்பிடநின்
      றிதுகூறுத லுற்றனன் வேதியனே - 33



391 - நின்றொண்டு வழாதவன் என்புதல்வன்
      நீடுந்தவ முற்றுசனற் குமரன்
முன்றிண்சத கோட்டிடை நினிருதாள் முன்னிச்
      சிவயோகு முயன்றுதவத்
தொன்றும்பொழு தாயிடை நீவருதல் உணர்ந்தா
      நலன்நிட்டை கருத்துறலால்
அன்றங்கருள் நந்தி சபித்தனனால்
      அம்ரொட்டக வாக்கைய னாயினனே - 34



392 - பிரமன் நந்திதேவரை வேண்டல்

இன்றேயிது தீர்த்தரு ளென்னஇரந்
      தேத்தித்தொழ எந்தையும் எம்மடியார்
நன்றேகொடு செய்தன யாவையவை
      நம்மால் விலகா வதனான் மறையோய்
பொன்றாதிது நந்தி தவிர்ப்பனெனப்
      புரிவுற்றருள் செய்துமறைந் தனனால்
அன்றேமல ராளி தவத்திறனால்
      அங்குற்றருள் நந்தியை வேண்டுதலும் - 35



393 - நந்திதேவர் கருணை கூர்தல்
நந்திப்பெரு மானும் மகிழ்ந்தலரோய்
      நங்கச்சப ஈசன் எதிர்ப்படலால்
அந்தப்பொழு துன்புதல் வன்பெறுசா
      பந்தீர்ந்தது வாஇஉம் அன்பர்கள்பால்
பந்தித்த பெருங்கரு ணாகரனென்
      பதுநாட்டினன் எம்மிறை நின்புதல்வன்
கந்தப்பொழில் சூழ்வட மேருவினங்
      கெண்ணெய்துக இவ்வுரு நீங்குமரோ - 36



394 - நவைதீர்ந்தபின் எம்மரு ளாலிவன்நம்
      மாணாக்கனு மாகி நயந்துதவும்
சிவதீக்கையை யுற்று விரிந்தகலைத்
      திரள்யாவும் உறீஇச்சிவ ஞானமுணர்ந்
தவமாற்றுவன் என்றருள் செய்தகல
      அலரோன்அவண் மைந்தனை அன்புறுதன்
இவர்வுற்ற கணத்த ரோடும் புகுவித்
      திப்பாலரு மாதவம் முற்றியபின் - 37



395 - உயர்கச்சியில் ஓங்கு பலாசடியின்
      உறைச்சப ஈசன் அருட்கருனை
பயில்வுற்று முறைப்படி எவ்வுலகும்
      பண்டேயென நன்கு படைத்தனன்மற்
றியல்பின்அட மேருவின் நந்திப்பிரான்
      இருக்கு நிலையத்தின் மலர்த்தலைவாழ்
அயன்மைந்த னொடுஞ்செல் கனத்தவர்
      அப்பெருமானடி ஏத்தி இயம்புவரால் - 38



396 - நந்திதேவருக்குச் சனற்குமார முனிவர் மாணாக்கராதல்

வேதாவெமை யேயினன் நீயிர்கள்போய்
      மேருப்புடை நந்திமுதல் குரவன்
பாதாம்புய மேத்தியிம் மைந்தனவன்
      மாணாக்கனு மாம்படிசேர்த் தியிவண்
போதீரென என்றருள் பெற்றவர்தாம்
      போகத்தன் அருட்கணின் ஒட்டகமாம்
கோதாருரு நீத்தொளி பெற்றவனை
      மாணாக்க னெனும்படி கொண்டனனே - 39



397 - வேறு
அன்னோன் அவன்பால் தீகையுறீஇ வழிபா டாற்றி முழுதுணர்ந்தான்
முன்னர்ப் புரானம் நியாய நூல்கரும முதல்நூல் தருமநூல்
மன்னு சீக்கை ஏழ்சந்தை வழங்கும் ஒன்பான் வியாகரனம்
பன்னும் எண்ணூல் முக்கந்தம் பலவும் முறையின் ஓதினனால் - 40



398 - ஏயுங் கற்ப சூத்திரங்கள் இருக்கு முதலா நான்மறைகள்
அயுள் வேதம் வில்வேதம் அமல்காந் தருவம் அருத்தநூல்
பாய பலவும் விதிமுறையாற் பயின்று நந்திப் பிரானருள்சேர்
தூய முனிவன் பின்னரும்ஒன் றிரந்தது வேண்டித் தொழுதுரைப்பான் - 41



399 - சனற்குமார முனிவர் வேண்டுகோள்
வேறு
உண்புடைக் கல்வி யெல்லாம் உணர்ந்தனன் அவைகள் எங்கும்
இன்புடைச் சிவப்பே றொன்றே முத்தியென் றியம்பும் எந்தாய்
புன்புலை உடம்பு நீங்கிப் பரவெளிப் பொருளைக் கூடும்
அன்புடைப் பசுவே அன்றோ சிவனியல் பதனைச்சேரும் - 42



400 - மானிடன் விசும்பத் தோல்போற் சுருட்டுதல் வல்லோனாயின்
ஈனமில் சிவனைக் காணா திடும்பைதீர் வீடும் எய்தும்
மானமார் சுருதி கூறும் வழக்கிவை யாதலாலே
யானமர் இறையைக் காணும் உபாயமே அறிதல் வேண்டும் - 43



401 - அங்கது பலவாற் றானும் அருளினை அவற்றி னுள்ளும்
தீங்கற எளிதிற் கூடும் உபாயமுஞ் செப்பு கென்னா
ஓங்குசீர்ச் சனற்கு மாரன் உரைதலுஞ் செவிம டுத்து
வீங்குபே ருவகை பூப்ப விளம்புவான் நந்தி எங்கோன் - 44



402 - நந்தி தேவர் அனுக்கிரகம்

அருள்பெறு சனற்கு மாரன் அறுமுகன் கூறென் றுன்னைச்
சுருதியிற் கிளந்த வாற்றால் அறிவினில் தூயை முற்றும்
இருளற உணர்ந்தாய் இருந்தவத் தலைவன் கேட்டி
மருள்தீர்ந் துலக முய்ய வினாயது வகுத்துச் சொல்வாம் - 45



403 - அந்தணர் அரசர் நாயகர் இருபிறப் பாளர் வேத
மந்திரக் குரியோர் நான்கு வகைநிலை இவர்கட்கென்ப
நிந்தையில் பிரம சாரி நிலைஉயர் மனையின் வாழ்க்கை
சுந்தர வனத்தின் வாழ்க்கை துறவறம் அந்நான் காமால் - 46



404 - கருநிலைக் கெட்டா மாயுள் பதினொன்று கருதீ ராறாம்
வருடத்தின் மறையோ ராதி மூவர்க்கும் மறையி னாசான்
தெருளுப நயனஞ் செய்வன் முனிவர்தங் கடந்தீர்த் தற்குப்
பொருவிலா மறைகள் அங்கம் ஒதுதற் பொருட்டு மன்னோ - 47



405 - அங்கதன் பின்னர்க் காமம் அறம்பொருட் பேற்றி னோடும்
ஓங்சீர்ப் பிதிரர் வானோர் கடன்களின் ஒழிவும் வேண்டி
மாங்குயிற் கிளவி மென்றோள் மனைவியை மணப்பர் பின்னர்த்
தாங்கரும் வனத்துச் செல்வர் தவமிகக் கிடைத்தல் வேண்டி - 48



406 - கடனெலாம் விண்ட பின்பு கருதருந் துறவிற் செல்வர்
நடலைகூர் உலக வாழ்வை வெறுத்துநல் லறிவு தூய்தாய்
இடனுடைத் துறவிற் சென்றே இருவகை நியாயத் தோடு
மடனற நன்னூல் பற்றி மறைமுடி வுணர்தல் வேண்டும் - 49



407 - இருவகை நியாயம் பூர்வம் உத்தரம் எனப்பே ரெய்தும்
ஒருவகை சிவபூ சைக்காம் ஒருவகை சிவப்பேற் றிற்காம்
சுருதியே இலிங்கஞ் சொற்சேர் வெடுத்துக்கோள் இடமே சொல்லின்
வருபெயர் இவற்றான் மென்மை வன்மையென் றிவற்றை யாய்தல் - 50



408 - கடப்படு பூசை பூர்வ கருமநூல் நியாயத் தாகும்
தொடக்கமீ றப்பி யாசம் அபூர்வதை பலமே சொல்லின்
எடுத்துரை அருத்த வாதம் இவைசிவ பேறு கூறற்
கடுத்தௌத் தரநூல் உண்மை துணிவதற் கிலிங்க மாமால் - 51



409 - இரவெரி யாடுந் தேவை இம்முறை துணிந்த ஞானி
பிரனவ மனுவாற் போற்றிப் பேதுறா துட்ல்சாங் காறும்
பரவிடின் அவற்கு முக்கட் பரன்வெளிப் படுவன் பட்டால்
மருவுபே ரின்பந் துய்த்து விமலனின் வாழ் லாமே - 52



410 - பின்னவன் மாய வாழ்விற் பிறந்திறான் சிவமே சேர்வன்
முன்னருஞ் சிவப்பேற் றிற்கு முரைவரும் உபாயம் ஈதாம்
இந்நெறி சிறியோர் யார்க்கும் எளியதன் றெளிதாய் நேராம்
அந்நெறி முக்கண் எம்மான் பதிகளின் அமர்தலாகும். - 53



411 - அயிடைச் சாக்க டெய்தின் விலங்குநாய் அடுவான் புள்ளு
மேயபுன் மரங்க ளேனும் வீடுபே றடைவ துண்மை
நீயிதற் கையங் கொள்ளேல் என்றலும் நெடிது வாழ்ந்து
தூயசீர் நந்தி பாதம் தொழுதெதிர் குமாரன் கூறும் - 54



412 - சீர்த்தல வாழ்க்கை ஒன்றே செவ்வழி என்றாய் ஐய
பார்த்தலத் திறைவன் மேவும் பதிகள்எண் ணிலவாம் மிக்க
கீர்த்திசால் அவற்றுள் மேலாய்க் கிளர்சிவப் பேற்றான் முத்தி
யார்த்தியி றுதவுந் தானம் யாதுநீ யருளு கென்றான் - 55



413 - என்றலும் நந்திப் புத்தேள் கனப்பொழு தெண்ணி முன்னாள்
வன்றிறல் விடையோன் தேவிக் குரைத்தது மனத்துட் கொண்டான்
அன்றவர்ப் பணிந்து மைந்தா அரனுமைக் கியம்பு மாற்றம்
நன்றுநீ கேட்டி யென்ன வரன்முறை நவில லுற்றான். - 56

ஆகத் திருவிருத்தம் 413
-------------

6. தலவிசேடப்படலம் (414-444)

சிவபெருமான் திருவோலக்கச் சிறப்பு



414 - எழுசீராசிரிய விருத்தம்
இழைத்தபன் மணிகள் காந்திவிட் டெறிக்கும்
      எரிசுடர்ப் பேரொளிப் பரப்பு
மழைக்களத் திறையைத் தொழப்புகுந் திறல்சால்
      வானவர் நோக்கலாற் றாது
விழித்துணை இமைப்பச் செய்தொறும் அவரவ்
      விளைவறி யாதெமக் கென்னே
பழுத்ததோ முடிவு காலமென் றழுங்கும்
      படியதோர் கனகமண் டபத்தில். - 1



415 - எறுழ்வலித் திரள்தோள் இரணியன்
      மருமத்தி ரத்தநீர் வாய்மடுத் தெழுந்த
வெறிமயக் கறுத்த பெருவலி நோக்கி
      விலக்குறா மும்மல மயக்குந்
தெறுகென நரமா மடங்கல்தான் முழுதும்
      அடங்கலாய்த் திருவடி தாங்கி
யுறுவதுகடுக்கும் மடங்கலேற் றெருத்தத்
      தொளியெறி மணிப்பொலந் தவிசின் - 2



416 - எரியவிர்ந் தனைய துவர்மணிச் சடிலத்
      தெறிதிரைக் கங்கையூ டலைந்து
மருவருங் கேண்மைச் சிறுபிறைக் கிரங்கிப்
      பற்றித்தன் இருக்கையிற் கொடுபோய்த்
தெருமரா தளிப்பான் முழுமதி யணுகிச்
      செவ்விபாத் துறைவது மானும்
விரிகதிர்த் தரளத் தொங்கல் சூழ்வட்ட
      வெண்குடை மீமிசை நிழற்ற - 3



417 - தொல்லை நாட்புகழ்க ளெங்கணும் நெருங்கத்
      துன்றி வெற்றிடங்க ளின்மையினால்
அல்லுறழ் மிடற்றுப் பிரானிடத் துயிர்த்த
      வற்றைநாட் கீர்த்திக ளிருபாற்
செல்லிடந் துருவிக் கொட்பபோ லரிமான்
      செழுந்தவி சொடுமணிக் குடைக்கீழ்
எல்லையும் மேலும் வெள்ளொளிப்
      பரப்பும் இடையினிற் சாமரை இரட்ட - 4



418 - வேட்ட வேட்டாங்கு வரங்கள் பெற்றேகும்
      விண்ணவ ரதுகொடு செருக்கிக்
கோட்டமுற் றழியா தறிவுறுப் பவர்போற்
      கோட்டமுற் றழிகய முகத்தன்
வால்திறற் சூரன் முதலியோர்ச் செகுத்த
      மருப்பொடு சுடர்வடி நெடுவேல்
காட்டிய கரத்தி னறுமுகத் தேவுங்
      கணேசனு மிருபுடை வயங்க - 5



419 - உருவினிற் பெருமை பெருமை யன்றுருவிற்
      சிறுமை யெய்தினும் உமைபாகன்
அருளினிற் பெருமை பெருமை யென்றுலக
      வகிலமுந் தெளிதரக் காட்டி
மருமலர்க் கிழவன் முதலியோர் புறத்து
      மன்னிட நகுநடைக் குறுத்தாட்
பெருவயிற் றழல்கால் குழிவிழிப்
      பூதப் பெருங்கண மருகுநின் றேத்த. - 6



420 - கண்ணிணைக் கடங்காத் திருவுருவழகைக்
      காண்டொறும் பண்டுதான் கொண்ட
பெண்ணுரு எடுப்பக் கருதிநீண் முகுந்தன்
      பிரிவிலா தொருபுடை யமர்ந்து
பண்ணிசை மொழியாள் வனப்புமெம் பெருமான்
      பார்வையும் நோக்கிமற் றெமக்கிங்
கெண்ணிய எண்ணமுற் றுறாதினி
      யென்றெழுந் தவக்கருத்தினை மீட்ப - 7



421 - அடலைத் தொடங்குந் தொறுந்திரு மேனி
      யழகினைக் கண்களான் மடுத்து
வாடரு மயல்பூண் டவசராய்ச் சதியின்
      வழிப்பதம் பெயர்தரா நிலையை
நாடகத் தலைவர்க் கெதிரடியேங்
      கள்நடிப்பதற் கஞ்சுதும் என்னாச்
சேடமை வனப்பின் உருப்பசி முதலோர்
      ஐநயச் செய்கையான் மறைப்ப - 8



422 - மல்லலங் கமலத் திருவடிநோவ
      மறுவலும் மறுவலும் ஓடிக்
கல்லொளி பரப்பும் மணிமுடி யழுத்துங்
      கடவுளர் தொகையினை விலக்கு
நல்லமெய்ப் பணியைநான் பெறநல்கி
      யவரவர்க் கருள்செய்து போக்கி
எல்லைதீர் கருணை மலையி னோலக்கத்
      திருந்தனன் என்னையா ளுடையான் - 9



423 - அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்

இருந்தருள் காலை வெண்கேழ் இமம்பொதி யடுக்க லீன்ற
முருந்திள முறுவற் செவ்வாய் முகிழ்முலைக் கடவுட் கற்பிற்
திருந்திழை யுலகம் ஈன்ற செல்விமுத் தேவுங் காணாப்
பெருந்தகை யடிகள் போற்றி யிதுவொன்று பேச லுற்றான் - 10



424 - உமா தேவியார் வினா
கடப்படும் வீடு பேறுன் திருவடிக் காட்சி தன்னால்
கிடைப்பதாம் மறையீ றாய்ந்து கிளர்தவம் தியானம் நிட்டை
நடைப்படி முதிர்ந்து வாய்ந்த நல்லவர்க் கன்றி உன்றன்
அடித்துணை காண்டல் ஏனோர்க் கரிதரி தாகும் அம்மா - 11



425 - ஏனையோர் விலங்கு புட்கள் இங்குனைக் கண்டு முத்தி
மேனிலத் துறுவ தெவ்வா றென்றனள் வினாத லோடும்
ஊனுடை உயிர்கள் யாவும் உய்யுமா கருணை கூர்ந்து
மானமர் கரத்துப் புத்தேள் வாய்மலர்ந் தருளும் மன்னோ - 12



426 - சிவபெருமான் விடை
அரிபரந் அகன்ற உண்கண் அலர்முலை அணங்கு கேள்யாம்
பரவெளிப் பரப்பின் வைகும் பண்பினேம் உலகம் எங்கும்
விரவியே நிறைந்து நிற்பேம் விளங்குமெம் நாலாம் பாதம்
தரைமுதல் உலகாம் மூன்று பாதம்வான் தலத்து மேவும் - 13



427 - அவகை வயங்கு நம்மை யாவரும் அறிய மாட்டார்
ஓவரும் பெருமை சான்ற உத்தம தலங்கள் தம்மின்
ஏவருங் காண வாழ்வேம் என்றலும் உவகை பொங்கி
யாவையத் தலங்கள் என்றாட் கெம்பிரான் அருளிச் செய்யும். - 14



428 - வேறு
இருச்சே தாலவாய் சிராப்பள்ளி
      திருவழுவூர் திதுவை யாறு
தருச்சூழும் இடைமரு தூர்யாம் என்றும்
      நடம்புரியச் சலியாத் தில்லை
கருச்சாடு முதுகுன்றம் அருணகிரி
      திருவிரிஞ்சை கவினார் ஓத்தூர்
மருச்சுங் குழலுமையே நின்னொடுயாம்
      மகிழ்ந்துறையும் வளஞ்சூழ் காஞ்சி - 15



429 - அலவனம் காளத்தி திருச்சயிலம் சித்தவடம்
      அடியார் சைவக்
கோலநிறை விருப்பாக்கந் திரியம்ப கந்திருக்கோ
      கன்னம் இன்பம்
சாலஉத வுச்சயினி மாகாளம் காசிகே
      தாரமே என்றும்
காலனுறாப் பிரபாசம் இமயமலை
      மந்தரம்சீர்க் கயிலை யாதி - 16



430 - எண்ணிலவாம் யாம்மருவும் இடங்களென
      உரைத்தருள இறைவி கேளா
அண்ணலே இவற்றுள்ளும் சிறந்ததலம்
      யாதென்ன அருளிச் செய்வான்
புண்ணியமெய்த் திருக்காஞ்சி எவற்றினும்
      மேம்படுபுரியாம் அவ்வூர் தன்னை
எண்ணினுங்கேட் பினுஞ்சொலினும் வணங்கினும்பே
      ரின்பவீ டெவர்க்கும் நல்கும். - 17



431 - அப்பதியின் எஞ்ஞான்றும் மகிழ்கூர்ந்து
      நின்னொடுநாம் அமர்வேம் அவ்வூர்
பற்பலர்சூழ் அவிமுத்தத் தலத்தினும்மேம்
      பட்டதுவாம் அவிமுத் தத்தின்
இப்புவனங் காப்பயாம் விச்சுவநா
      தப்பெயரான் இலிங்கந் தாபித்
தொப்பருஞ்சீர் பெறவைத்தேம் காஞ்சிநக
      ரிடத்தொரு மாமூலந் தன்னில் - 18



432 - தோற்றம்நிலை இறுதிமறைப் பருளென்னும்
      ஐந்தொழிலும் நடாத்த யாமே
ஏற்றமுடை ஏகம்ப நாதனெனும் திருப்பெயர்
      பூண்டு லிங்க மானோம்
தேற்றுமித னாற்காஞ்சி எவற்றினுக்கும்
      அதிகமெனத் தெளிவாய் அங்கண்
போற்றி யொரு நாளேனும் அமர்ந்துறையின்
      முத்திநிலை புகுத லாமால். - 19



433 - வழிச்செலவிற் புகுந்தேனும் மறந்தேனும்
      பொருளாசை மருவி யேனும்
கழிப்பருஞ்சீர் காஞ்சியினிற் கணப்பொழுது
      வதிந்தோரும் கலப்பர் முத்தி
பழிப்பிலாக் காஞ்சியெனத் தன்னியல்பான்
      ஒருபொழுது பகரிற் கண்ணில்
ஒழிப்பரும்பா தகமனைத்தும் ஒழிந்துபெருந்
      துறக்கவீ டுறுதல் உண்மை. - 20



434 - அக்காஞ்சி கலிநாசப் பொருட்டுநாம்
      படைத்துவைத்த தாதலாலே
எக்காலும் அந்நகரின் அகத்துயரும்
      வினைத்துயரும் எய்தா வாகும்
மைக்காளஞ் சுவையமிழ்தின் மணந்தவிழி
      மணிநீவி அல்குல் எட்டுத்
திக்காளர் தமைப்பொதியும் பெருங்கீர்த்தி
      நகரவளஞ் சிறிது கேட்டி - 22



435 - கலிமுதல்தீங் கணுகரிய வேலியெனச்
      சூழ்பொழிலுங் காவல் மாறா
நிலையுடையுட் சேனையெனக் குவளைவி
      நந்தனநீள் வனமுந்தேவ
குலநிறைப· றீபமென நிரைகமலக்
      குளிர்தடமுங் கயிலை தன்னில்
இலகுறுபல் குவடென்னப் பலதளியும்
      உடைத்தாகும் எறிநீர்க் காஞ்சி. - 22



436 - பம்பைகம்பை புண்ணியநீர் மஞ்சள்நதி
      வேகவதி பாலி சேயா
றென்பனவே ழுலகுமிடு மேழ்மாலை
      யெனவொழுகும் எய்து வோரைச்
செம்பதுமக் கரமெடுத்து விரையநகர்
      விளிப்பதுபோல் தெங்கு நீளும்
வம்பவிழ்பூஞ் சோலைகளுள் மழைமறைந்த
      கதிர்போல வயங்கும் மூதூர். - 23



437 - ஐயிருநூற் றுயர்சாகைகளாப் படைத்திங்கண்
      அமர்ந்து வாழும்
ஐயனேயென் முதலென் றெழுகோடி
      மனுக்களுப மனுவால் யார்க்கும்
ஐயமறத் தெரிவிக்கும் மறைமாவின்
      சாரூபம் அடைந்த போலும்
ஐயநறு மாம்பொழில்கள் எஞ்ஞான்றுங்
      கனிகளறா தமலு மாங்கண். - 24



438 - விப்பிரர்கள் முதல்நால்வர் சங்கரர்நெய்
      தொலர்மயிர் வினைஞர் செக்கார்
செப்பிடையர் தச்சர்கொல்லர் பொன்வினைஞர்
      தேவகணி கையர்கள் கூத்தர்
விற்புருவப் பரத்தைமுத லோர்தெருக்கள்
      கலப்பின்றி வெவ்வே றாகிப்
பொற்பநீண் டகன்றொழுங்காய் மதிக்கணிசெய்
      கதிர்களெனப் பொலியு மாங்கண் - 25



439 - தந்தைதாய் இரண்டொழியப் பிறவெலாங்
      கொளத்தகுமா வணங்கள் மல்கும்
எந்தவூர் வேதவே தாந்தங்கள் மூவுலகும்
      எடுத்துக் கூறும்
அந்தவூ ரெனக்கோடி மடமயிலே
      கவ்வென்ப தயன்பே ரென்ன
முந்துமிருக் கோதுமஞ் சென்பகுதி
      யடைவொடு பூசைமொழியு மாதோ
இருக்கு - இருக்கு வேதம்- என்பது பிர்மனின் பெயர்.
அஞ்சென்பகுதி -`அஞ்ச்` என்னும் தாது. க+அஞ்ச்+ காஞ்சி என்றாவது
- 26



440 - வடநூல் இலக்கணவிதி

திசைமுகனால் அஞ்சிக்கப் படுதலினால்
      காஞ்சியெனத் திசைபோய் மல்கும்
இசையுடைய திதுபிரம லோகமென்றும்
      இதனாற்பேர் எய்துமாற்றான்
அசைவிலா தங்குறைவோர் எல்லோர்க்கும்
      வீடுதவும் அவ்வூர் நாப்பண்
வசையின்றித் திப்பியமாய்ப் புண்டரிகம்
      போலெமக்கு வயங்கும் கோயில்
அஞ்சிக்கப் படுதலினால் - அஞ்சப்படுதலினால்.
- 27



441 - அங்கதனிற் சோதிலிங்க வடிவாகி
      யாமென்றும் அமர்வேம் இவ்வா
றிங்கிரண்டாம் மறைவிளம்பும் சந்தோகா
      மறையெம்மை ஒளிவான் என்னும்
துங்கநகர் தனைப்பிரம புரமென்னும்
      இறுதிமறை சுவர்க்க மென்னும்
பங்கமறு தயித்திரியம் சோதிசூழ்
      சுவர்க்கமெனப் பகரா நிற்கும் - 28



442 - அப்பிரம புரங்காஞ்சி நகரல்லால்
      வேறில்லை யாகும் என்றே
செப்புமுப நிடதமெலாஞ் சிவாகமங்க
      ளொடுமுழங்கும் செல்வீ இந்த
வைப்பினைச்சே யிடையாயி னும்இருந்து
      வணங்கிற் கண்ணில்
எப்பெரும்பா வமும்நீங்கி வீடெய்தும்
      உனக்குண்மை இயம்பி னோமால் - 29



443 - என்றிறைவன் உலகுய்ய வினாவுமலைப்
      பெருமாட்டிக்கியம்பும் வாய்மை
அன்றுவினா வியசனற்கு மாரனுக்குத்
      திருநந்தி உரைத்தான் அன்னோன்
வென்றபொறி வாதரா யணர்க்குரைப்ப
      அவனெனக்கு விளம்பல் செய்தான்
குன்றனைய பெருந்தவத்தீர் சிவனைக்காண்
      பதற்கேது இதுவே கொண்மின் - 30



444 - நூற்பயன்
பரவரும்மந் தணமாகும் இக்காதை
      மெய்யன்பிற் படிப்போர் கேட்போர்
கரிசுறுநோய் நீங்கிநெடு நாட்புவியின்
      மக்களொடுங் களித்து வாழ்ந்து
வரகுணராய் மறுமையினும் பெரும்போகம்
      இனிதுண்டு மாறா முத்தி
விரவுவரென் றுளங்கொள்ளச் சூதமுனி
      முனிவரர்க்கு விளம்பி னானால் - 31

ஆகத் திருவிருத்தம் 444

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்