Kanta purāṇam IX a


சைவ சமய நூல்கள்

Back

கந்த புராணம் IX A
கச்சியப்ப சிவாச்சாரியார்



கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்
பாகம் 9a /4. யுத்த காண்டம் / படலம் 8- 11 (1304 - 1922)


8. அக்கினிமுகாசுரன் வதைப் படலம் 1304 -1545

9. மூவாயிரர் வதைப் படலம் 1546 - 1633

10. தருமகோபன் வதைப் படலம் 1634 - 1713

11. பானுகோபன் வதைப் படம் 1714 - 1922

செந்திலாண்டவன் துணை
திருச்சிற்றம்பலம்

4 யுத்த காண்டம்

8. அக்கினிமுகாசுரன் வதைப் படலம்* (1304 -1545)

( * நாலாநாட் பகல் அக்கினிமுகாசுரன் வதை நிகழ்ந்ததாகும்.)



1304 - எட்டாசையு ளோர்களை எண்கரியைக்
கட்டாவுறு சில்கதி ரைப்பரியை
முட்டாவரு தேரினை முன்கொணரா
வட்டாடிய தோர்வலி பெற்றுடையான். - 1



1305 - கருவாயுறு கின்றதொர் காலைமுதல்
திருமாதுடன் முற்றழல் சிந்திடலும்
பெருமாயவள் வந்துபி றந்திடுவோன்
எரிமாமுகன் என்ற இயற்பெயரான். - 2



1306 - பன்னாக மிசைத்துயில் பண்ணவனூர்
பொன்னார்சிறை கொண்டதொர் புள்ளினுடன்
அந்நான்முக னூர்தியும் ஆடுறுவான்
முன்னாட்கொடு வந்ததொர் மொய்ம்புடையான். - 3



1307 - முன்னுற்றவன் வானெழு மொய்கதிரோன்
தன்னைச்சிறை யிட்டது தான்வினவா
மன்னுற்றிடு சோமதனை வைகல்பல
இன்னற்பட வசே¤றை இட்டுடையான். - 4



1308 - தெய்வப்படை தாங்கிய செங்கையினான்
ஐவர்க்குள தாகிய ஆற்றலுளான்
மைவைத்திடும் வஞ்சனை மாயம்வலான்
எவ்வெப்படை தன்னையும் ஈறுசெய்வான். - 5



1309 - அந்தார்முடி கொண்டிடும் ஐயன்முனம்
வந்தானடி தன்னை வணங்கியிவண்
எந்தாய்மெலி வுற்றனை என்னெனலுஞ்
சிந்தாகுல மோடிது செப்பிடுவான். - 6



1310 - உண்ணாடிய மாயைகொ டொற்றுமையால்
விண்ணாடர் பொருட்டிவண் மேவியுளான்
கண்ணாரெயில் வேலி கடந்துநமை
எண்ணாது புரத்திடை ஏகினால். - 7



1311 - ஏகுந்தொழில் வெய்யவன் இந்நகரம்
வேகும்படி செந்தழல் வீசிடலும்
மாகொண்டல்கள் ஏவினன் மற்றவைமா
றாகும்புனல் சிந்தி அவித்தனவே. - 8



1312 - மடல்கொண்டிடு தாரினன் மற்றதுகண்
டுடல்கொண்ட சினத்தொ டொருங்குலகங
கடைகொண்டிடு கின்ற கனற்படைதொட்
டடல்கொண்ட முகிற்றிறல் அட்டனனே. - 9



1313 - அட்டானது கேட்டனம் ஆடகனை
விட்டாம்அனி கத்தொடு வெஞ்சமர்செய்
தொட்டார்வலி நோக்கி உடைந்தவனும்
நெட்டாழி புகுந்து நிமிர்ந்தனனால். - 10



1314 - நங்கொற்ற மிகுத்திடு நாற்படையும்
தஅங்குற்றிடு கின்றன மாநகரை
உங்குற்றிடு தூதன் ஒறுத்தனால்
இங்குற்ற நிகழ்சியி தென்றனனே. - 11



1315 - செங்கோன்முறை கோடிய தீயவுணன்
அங்கோதிய கேட்டலும் ஆரழல்கால்
வெங்கோரமு கத்து வியன்புதல்வன்
தங்கோமுக மாவிது சாற்றிடுவான். - 12



1316 - மன்னர்க்கிறை யாகிய மன்னவநீ
உன்னுற்றள மீதில் உருத்திடவே
முன்னுற்றிடு தூதுவன் மொய்ம்பினனோ
என்னுக்கவன் ஆற்றலை எண்ணுதிநீ. - 13



1317 - மிடல்கொண்டிடு தூதனை மிக்கவரைப்
புடைகொண்டமர் செய்திடு பூதர்தமை
அடல்கொண்டிவண் நின்னை அடைந்திடுவன்
விடைதந்தரு ளென்று விளம்பினனே. - 14



1318 - நன்றேயிது செப்பினை நண்ணலனை
வென்றேவரு கென்று விடுத்திடலும்
நின்றேதொழு தவ்விடை நீங்கினனால்
குன்றேநிகர் தோள்வலி கொண்டுடையோன். - 15



1319 - கார்க்கோலமும் வெய்ய கருங்கடலின்
நீர்க்கோலமும் அன்னவன் நீடியதன்
சீர்க்கோநக ரத்திடை சென்றனனால்
போர்க்கோலம் அமைந்து புறம்படர்வான். - 16



1320 - மைக்கொண்டல் படர்ந்திடு மால்வரைபோல்
மொய்க்கொண்டணி புட்டில் விரற்பரியாக்
கைக்கொண்டனன் விண்ணவர் கைப்படையே. - 17



1321 - தன்றறதையி ¨திதரு தாயுதவும்
பொன்றாழ்சிலை கைக்கொடு பொள்ளெனவே
ஒன்றாகிய தேரிடை யொல்லைபுகாச்
சென்றான்விழி யிற்கனல் சிந்திடுவான். - 18



1322 - அறமற்றிடு தீயன் அகன்றுநகர்ப்
புறமுற்றனன் அங்கது போழ்துதனில்
திறமற்றது தூதுவர் செப்புதல்முன்
மறமுற்றிடு தானைகள் வந்தனவே. - 19



1323 - ஓராயிர வௌ¢ளம் ஒருத்தலினம்
தேரானவும் அத்தொகை திண்டிறல்மா
ஈராயிர வௌ¢ள மியாவர்களும்
ஆராய்வரி தலாவு ணக்கடலே. - 20



1324 - வேறு
ஆன காலையில் அங்கி முகாசுரன்
மான மேற்கொண்டு மாற்றலா¢ யாரையும்
யானொர் கன்னல்முன் ஈறுசெய் வேனெனாச்
சேனை தன்னொடுஞ் சென்றிடல் மேயினான். - 21



1325 - நல்கு மாறின்றி நாள்பல நீங்கியே
மல்கு காதலர் வந்து கலந்துழப்
பில்கு காமத்துப் பெய்வளைப் பேதையர்
அல்கு லென்ன அசைந்தகல் வுற்றதேர். - 22



1326 - அருத்தி மெல்லியர் ஆரதங் கொண்டுழல்
விருத்தர் கூட்டம் வெறுத்திடு மாறுபோல்
எருத்த மீதில் இடிப்பவர் தம்முரைக்
கருத்தின் நிற்கில காய்சின வேழமே. - 23



1327 - மண்ணிற் பாய்வன மாதிரஞ் சூழ்வன
விண்ணிற் றாவுவ வீதியிற் செல்வன
எண்ணிற் பல்பொருள் இச்சைகொள் வேசியர்
கண்ணிற் கொப்பன கந்துக ராயியே. - 24



1328 - வஞ்சம் நீடி அருளற்று மாயமே
எஞ்ச லின்றி இருள்கெழு வண்ணமாய்
விஞ்சு தம்மல்குல் விற்றுணும் மங்கையர்
நெஞ்ச மொத்தனர் நீள்படை வீரரே. - 25



1329 - தார்த்த டம்புயத் தானவர் பல்லியம்
ஆர்த்த ஓதை அகிலமும் புக்கதால்
தூர்த்த மங்கையர் சோர்வினிற் செய்பழி
வார்த்தை எங்கணும் வல்லையிற் சேறல்போல். - 26



1330 - சோதி மெய்யெழில் தூயன மாற்றியே
மீது செல்லரும் வெவ்வியருள் உய்த்தலால்
ஏதின் மாதரை எய்திடும் புன்மையோர்
காதல் போன்ற கடிதெழும் பூழியே. - 27



1331 - பீட்டின் மிக்க பெரும்பணை தாங்கிய
மோட்டின் ஒட்டக முந்திய கந்தரம்
நீட்டி வாங்குவ நேர்ந்தவர் முன்தலை
காட்டி வாங்குங் கணிகையர் போலவே. - 28



1332 - சீறு மால்கரி தேர்மிசைப் பூண்டுவிண்
ஆற ளாவிநின் றாடுவ கேதனம்
ஊறு காதல் ஒருவன்கண் வைகினாள்
வேறு ளாரையும் வெ·கிவி ளித்தல்போல். - 29



1333 - வீழு மும்மத வேழங்கள் மத்தகம்
சூழி காலின் அசைதொறும் தோன்றுவ
மாழை நோக்கியர் மைந்தர்க்கு மாலுறக்
காழ கத்தனம் காட்டி மறைத்தல்போல். - 30



1334 - தோம ரஞ்சிலை சூலம் மழுப்படை நாம வெங்கதை நாஞ்சில் முசலம்வேல் நேமி தானவர் நீழ்கரம் வெலவன காமர் மங்கையர் கட்டொழில் தாங்கியே. - 31



1335 - வேறு
எற்றின பறையின் வீழ்ந்த எழிலிகள் எழுந்த பூழி
சுற்றின வான மீப்போய்த் தூர்த்தன கங்கை நீத்தம்
வற்றின படையும் பூணும் வயங்கின மயங்கி எங்கும்
செற்றின பதாகை ஈட்டம் இருண்டன திசைக ளெல்லாம். - 321



1336 - சோமகண் டகனே சோமன் சூரியன் பகைஞன் மேகன்
காமர்பிங் கலனே ஆதிக் கடிதெழு தானை வீரர்
மாமருங் கதனிற் செல்ல மன்னவர் மன்னன் மைந்தன்
ஏமரு பூத சேனைக் கெதிருற எய்யித னானால். - 33



1337 - எதிர்ந்தனர் பூதர் தாமும் அவுணரும் இடிப்பிற் பேரி
அதி£¢ந்தன துடியுஞ் சங்கும் ஆர்த்தன அண்ட மீன்கள்
உதிர்ந்தன அனையர் கூடி உடன்றுபோர் புரிய வையம்
பிதிர்ந்தன பொதிந்த அண்டப் பித்திகை பிளந்த தன்றே. - 33



1338 - தொட்டனர் வேலும் வாளுந் தூண்டினர் பகழி மாரி
விட்டனர் பிண்டி பாலம் வியன்மழுத் தண்ட மோச்சிக்
கிட்டினர் சூலம் வீசிக் கிளர்ந்தனர் அவுணர் பூதர்
பட்டனர் அளப்பி லோர்கள் பரந்தன குருதி நீத்தம். - 35



1339 - முத்தலைக் கழுவைத் தண்டை முசலத்தை நேமி தன்னைக்
கைத்தலத் திருந்த கூர்வாய்க் கணிச்சியைப் பிறங்கல் தன்னை
எத்திறத் தவரும் பூதர் எறிந்தனர் எறிந்த காலை
அத்தலை அவுணர் வீரர் அளப்பிலர் பட்டா ரம்மா. - 36



1340 - தறிந்தன புரவித் தாளுந் தலைகளுந் தடந்தேர் அச்சும்
முறிந்தன துவசம் அற்ற மும்மதக் கோட்டு மாக்கண்
மறிந்தன உடலம் வேறா மடிந்தனர் வயவர் எங்கும்
செறிந்தன கழுகு காகம் திரண்டன கூளி திண்பேய். - 37



1341 - இருபெபம் படையும் இவ்வா றேற்றிகல் புரியும் வேலை
வெருவரு வேற்கண் மாதர் வியர்ப்பின்வந் துதித்த வீரர்
பொருவருஞ் சிலைகள் வாங்கிப் புங்கவம் பொழிந்து சூழ
ஒருவரும் அவுணர் நில்லா தோடினர் உடைந்து போனார். - 38



1342 - உடைதலும் அவுணன் மைந்தன் ஒய்யென விடுப்ப மேகன்
கடுமுரட் சோமன் சோம கண்டகன் முதலா வுள்ள
படையுறு தலைவர் பல்லோர் பகழியின் மாரி தூவி
அடுசிலை வீரர் மேற்சென் றமரினை யிழைத்தா ரன்றே. - 39



1343 - இழைத்திட அதனை நோக்கி இலங்கெழில் தாளில் வீரக்
கழற்புனை கின்ற வீர புரந்தரன் கடிய சீற்றத்
தழற்பெருங் கடவுள் போல்வான் அசனியே ரஞ்ச ஆர்க்கும்
முழக்கினன் ஒருதன் சேனை முன்னுறக் கடிது வந்தான். - 40



1344 - வந்தனன் அங்கைச் சாபம் வாங்கினன் வாளி மாரி
சிந்தினன் தலைவர் தேரைச் சிதைத்தனன் சென்னி தள்ளி
இந்துகண் டகனை வானில் ஏற்றினன் ஏனை வீரர் உந்திய சேமத் தேர்மேல் உற்றிகல் புரிந்து சூழ்ந்தார். - 41



1345 - சுற்றினர் வீரன் மேனி சோரிநீ ரொழுகும் ஆற்றல்
முற்றுறு பகழ தூவ முழங்கழ லென்னச் சீறி
மற்றவர் சிலையுந் தேரும் மண்மிசை வீட்டி வல்லே
நெற்றியின் உரத்தின் தோளின் நெடுங்கணை பலவும் உய்த்தான். - 42



1346 - உய்த்தலும் அவுணர் வேந்தற் குற்றுழி யுதவ நின்ற
மெய்த்திற லாற்ற லாளன் மேகனென் பவனோர் தண்டங்
கைத்தல மிசையி லேந்திக் கணப்படை வீரன் தேர்மேல்
மத்திகை முட்கோல் கொண்ட வலவனை மோதி ஆர்த்தான். - 43



1347 - மோதலுந் தனது பாகன் முடிந்திடு தன்மை காணூஉ
மேதகு தலைவன் வீர புரந்தரன் வேலொன் றேந்தி
ஈதினின் முடிதி என்றே ஏவினன் ஏவ லோடும்
பூதல மிசையே வீழப் பொன்றினன் புயலின் பேரோன். - 44



1348 - புயலுறு நாமத் தண்ணல் பொன்றலும் அதனை நாடி
அயலுறு தானை வீரர் அஞ்சினர் அகன்று போக
இயலது தன்னை நோக்கி எரிமுகன் எரியிற் சீறிப்
பயிலுறு சிலையொன் றேந்திப் படையொடுங் கடிது வந்தான். - 45



1349 - வேறு
வளைத்தான்தனிப் பெருவில்லினை மருவார்மனம் வளைய
விளைத்தான்அவட் சிறுநாணொலி மிகவார்த்தனன் விண்மேல்
முளைத்தார்தரு பிறைபோல்வதொர் முனைவாளிகள் தெரியாக்
கிளைத்தார்தரு பூதப்படை கேடுற்றிடப் பொழிந்தான். - 46



1350 - தலையற்றனர் கரமற்றனர் தாளற்றனர் தோளா
மலையற்றனர் மார்பற்றனர் வாயற்றனர் செய்யுங்
கொலையற்றனர் செவியற்றனர் கூறுற்றிடு நாவின்
நிலையற்றனர் படையற்றனர் நெடும்பூதர்கள் எவரும். - 47



1351 - ஆரிற்றன சகடிற்றன அச்சிற்றன சிடுகின்
ஏரிற்றன கொடியிற்றன முடியிற்றன ஈர்க்கும்
மூரிப்பரி மாவிற்றன முருகன்படை வீரர்
தேரிற்றன படையிற்றன செருவிற்றன அன்றே. - 48



1352 - ஓடுற்றன குருதிப்புனல் உலகச்சுற வொலியா
ஆடுற்றன கவந்தக்குறை அலகைக்குல மிகவே
பாடுற்றன ஞமலித்தொகை பரவுற்றன கொடிமேற்
கூடுற்றன பாறுற்றனகுறுகுற்றன கழுகே. - 49



1353 - அக்காலையின் அதுகண்டனன் அழல்கான்றிட நகையா
மைக்காலனும் வெருவுற்றிடு வலிசேர்திறல் மகவான்
கைக்கார்முகந் தனைவாங்குபு கணைமாரிகள் சொரியாப்
புக்கான்அவு ணனுமாங்கெதிர் பொழிந்தாச்ர மழையே. - 45




1354 - கரவன்விடு நெடுவாளிகள் கந்தன்படை ஞன்மேல்
வருகின்ற உறுகின்றன மன்னன்மகன் முன்னம்
பொருகின்றநம் வீரன்விடு புகர்வெங்கணை பலவும்
இரிகின்றன படுகின்றன விருவோர்பக ழியுமே. - 51



1355 - போரிவ்வகை புரிகின்றுழிப் புரைதீர்விறல் மகவான்
தேரும்பொரு சிலையுங்கணை செறியாவமுஞ் சிதையா
ஈரைம்பது சரமார்புற எய்தேயிகல் அவுணர்
ஆரும்படி புகழும்படி ஆர்த்தான்அறம் பேர்த்தான். - 52



1356 - மாறாகிய அவுணர்க்கிறை வலியுந்திறல் மகவான்
வீறானவை இழந்திட்டதும் விழிதீயுற நோக்கிச்
சீறாச்சிலை வளையாக்கணை சிதறாவசை பலவுங்
கூறாவெதிர் புகுந்தாரவன் துணையாமெழு குமரர். - 53



1357 - இடிகாலுறு முகிலாமென எழுவீரரும் ஏகிக்
கடிதேமுனி வொடுசிந்திய கணையாவையும் விலக்கா
விடமாகிய எரிமாமுகன் விறலோர்புய வரைமேல்
வடிவார்கணை பலசிந்துபு மழையாமென மறைத்தான். - 54



1358 - சகத்தானவர் புகழப்படு தலைவன்மகன் சரங்கள்
மிகத்தான்விட மெலிவுற்றிடும் எழுவீரரும் வெய்யோன்
முகத்தாயிரங் கரத்தாயிரம் உரத்தாயிரம் மொய்ம்பின்
அகத்தாயிரங் கணைபாய்ச்சினர் அவன்றேரையும் அறுத்தா£¢. - 55



1359 - வேறு
அறுத்திடும் எல்லையின் அழலின் மாமுகன்
மறித்துமொர் தேரிடை வாவி வல்லைபோய்
எறித்தரு கதிருடை யெழுவர் தம்மையுஞ்
செறுத்தெரி விழித்திவை செப்பல் மேயினான். - 56



1360 - ஒன்றொரு படையினால் உங்கள் ஆவியைத்
தென்றிசை மறலியார் தெவிட்ட நல்கியே
வென்றிகொள் மொய்ம்புடை விடலை தன்னையுங்
கொன்றிடு கின்றனன் என்று கூறினான். - 57



1361 - கூறுபோ தத்தினிற் குமரன் தானையோர்
வேறுவே றடுகணை வீசி வெய்யவன்
ஏறுதேர் தன்னையும் இவுளி தன்னையும்
நூறினார் அவனுடல் நூழை யாக்கினார். - 58



1362 - ஆயது காலையில் அவுணன் வேறொரு
பாயிருந் தேரிடைப் பாய்ந்து கண்ணுதல்
தூயவன் படையினை எடுத்துத் துண்ணென
நேயமொ டருச்சனை நிரப்பித் தூண்டினான். - 59



1363 - அடலெரி முகத்தினான் ஆதி நாயகன்
படைதொட அன்னது படியும் வானமும்
வடவையின் உருவமாய் வரலும் அச்செயல்
விடலைகள் எழுவரும் வெகுண்டு நோக்கினார். - 60



1364 - அனற்படை அன்னதால் அதற்கு மாறதாப்
புனற்படை விடுக்குவ மென்று புந்திகொண்
டினப்படு துணைவர்கள் யாரும் வாருண
முனைப்டை தூண்டினர் முடியுஞ் செய்கையார். - 61



1365 - தூண்டிய வாருணத் தொல்லை மாப்படை
சேண்டொடர்ந் திடுதலும் தேவன் தீப்படை
ஆண்டெதி ராகியே அவற்றை நுங்கிற்றால்
ஈண்டொரு முனிகடல் ஏழும் உண்டென. - 62



1366 - சலபதி படைகளைத் தடிந்து வாய்மடுத்
துலகுளோர் வெருவர ஊழி யான்படை
வலியுட னேகிஏழ் வயவர் தம்மையும்
மெலிவுசெய் துயிர்கொடு மீண்டு போயதே. - 63



1367 - மீண்டது போதலும் வீரர் அவ்விடை
மாண்டனர் கயிலையின் மருங்கு போயினார்
மூண்டிடு பொருங்கனல் முகத்தன் அங்கது
காண்டலும் ஆர்த்தனன் களிப்பில் உம்பரான். - 64



1368 - ஒருங்குற வீரர்கள் உலந்து வீடலும்
மருங்குற நோக்கிய வயவெம் பூதர்கள்
கரங்களை மறித்தனர் கலங்கி வாய்புடைத்
திரங்கினர் வெருவினர் இந்து போயினார். - 65



1369 - நெற்றியில் வீரர்தம் விளிவு நீங்கலா
துற்றிடு பூதர்கள் உலைந்து சாய்வந்
தெற்றென நோக்கினன் செயிர்த்து விம்மினான்
வெற்றியின் கிழவனாம் வீர வாகுவே. - 66



1370 - வீரமொய்ம் புடையவன் வெருவ ரெனப்
பாரிடக் கணங்களைப் பாணி யாலமைத்
தோரிறை முன்னரே ஒருதன் தேரொடும்
ஆரழல் முகத்தன்முன் அணுகப் போயினான் . - 67



1371 - போய்க்குறு குற்றுழிப் பொருநர்த் தேய்த்தலின்
வீக்கிய கனைகழல் வீர வாகுவைத்
தாக்கெரி முகமுடைத் தறுகண் வெய்யவன்
நோக்கினன் வெகுண்டிவை நுவறல் செய்குவான். - 68



1372 - வேறு
எதிரா கியபூ தரைஏ னையரை
மதியேன் நினையே அடவந் தனன்நீ
அதுகா லையின்இங் ஙன்அடைந் த¨னீயல்
விதியே உனைஎன் முன்விடுத் ததுவே. - 69



1373 - கொன்றாய் பல¨ரி கொடுவெஞ் சமரின்
வென்றாய் பலரை மிகைசெய் தனையாய்
நின்றாய் வருவாய் நினதா யிருருக்
கின்ற குவதோ இறுதிப் பகலே. - 70



1374 - முன்னர்ப் பொருதே முரிவுற் றவர்போல்
என்னைக் கருதேல் இனிஓ ரிறையில்
உன்னைக் தலைகொய் தொருவன் னியையும்
மன்னர்க் கிறைசே வடிவ¨தி திடுவேன். - 71



1375 - பூண்பால் முலைமா தா¢புணர்ச் சியெனும்
ஆண்போர் தனிலே வலியற் றழியும்
ஆண்பால் ஒருவன் அவனே அலனோ
ஏண்பால் உனையா¢இவண்வென் றிலனேல். - 72



1376 - என்னா எதிரா இவையொப் பனசொற்
சொன்னான் அதுகேட் டிடுதொல் விறலோன்
பொன்னார் தருசெங் கைபுடைத் துநகைத்
தொன்னான் முகநோக் கியுரைத் திடுவான். - 73



1377 - முளையார் தரும்பொன் னவன்முந் துசமர்
விளையா வடிவந் தனைவிட் டகலா
வளையார் புனல்புக் கனன்அன் னவனுக்
கிளையாய் ஒருநீ எவணுய் குதியோ. - 74



1378 - மூண்டார் அமர்செய் திடுமொய்ம் பரெலாம்
மாண்டார் கதிரோன் பகைமற் ரொருவன்
மீண்டான் அவனும் விளிவுற் றிடுநீ
ஈண்டா ருயிர்தோற் றிடவே கினையோ. - 75



1379 - வீடிச் செருவில் விளிவா குதியோ
பேடித் தொழில்கற் றிடுபிள் ளையென
ஓடிக் கடல்புக் குயிருய் குதியோ
நாடிக் கடிதொன் றைநவிற் றுதியே. - 76



1380 - பார்காத் திடினும் பலதா னவரும்
நேர்காத் திடினும் நிலைபெற் றழியாச்
சூர்காத் திடினுந் தொலைவில் விறலோர்
ஆர்காத் திடினும் அடுவேன் உனையே. - 77



1381 - என்றிங் கிவைவீ ரன்இசைத் திடலுங்
குன்றன் னசினத் தழல்கொம் மெனவே
சென்றுள் ளமலைத் துழிதீ முகவன்
வன்றிண் சிலையொன் றைவளைத் தனனே. - 78



1382 - வேறு
நடுத்தான்அகன் றிடுசூர்மகன் நாணோதையைச் சிலைநின்
றெடுத்தான்எடுத் தலும்வெய்யவன் இரவோனுடன் இரிந்தான்
உடுத்தான்உதிர்ந் தனசேடனும் உலைந்தான்உல கனைத்துங்
கெடுத்தான்இவ னெனவானவார் கிளையோடின அன்றே. - 79



1383 - அக்காலையின் முகமாறுடை அமலன்றனக் கன்பன்
கைக்கார்முகம் இருகால்வளைத் தொருகாலொலி காட்டத்
திக்கானன முடையான்முதல் தேவாசுரர் துளங்கி
இக்காலம தோபார்முழு திறுங்காலம தென்றார் - 80



1384 - என்னாவிசைத் திடுமெல்லையில் எரிமாமுகன் ஈஅருழ்
கொன்னார்கணை விடுத்தார்த்தனன் குறுகுற்றது வருமுன்
மின்னாமெனப் பதினாற்கணை விடுத்தேயவை விலக்கிப்
பொன்னார்தரு திறல்மொய்ம்பினன் புயலேறெனத் தெழித்தான். - 81



1385 - செஞ்ஞாயிறு கதிர்கான்றெனத் தீமாமுகத் தவுணன்
ஐஞ்ஞான்கெனுந் தொகைபெற்றிடும் அயில்வெங்கணை தொடுப்ப
எஞ்ஞான்றுமுற் றிடுசீர்த்தியன் இருபான்கணை துரந்து
மைஞ்ஞான்றிடு முகில்மேற்செலு மருத்தாமெனத் தடுத்தான். - 82



1386 - கண்டங்கது கனல்மாமுகன் கணையாயிரந் துரந்து
புண்டங்கிய தனிவேலுடைப் புனிதன்றன் திளவல்
முண்டம்புக உய்த்தேதிறல் முதுவால்வளை அதனை
அண்டங்கிழ படஊதினன் அவுணப்படை புகழ. - 83



1387 - ஆராரும் வியக்குந்திறல் அடல்மொய்ம்பினன் அங்கண்
ஓராயிரம் வடிவாளிகள் ஒருங்கேதொடுத் துய்த்துச்
சூராகிய அவுணன்தரு தொல்லைத்தனி மைந்தன்
தேரானதும் பரியானதும் சிலையானதுஞ் சிதைத்தான். - 84



1388 - சிதையும்பொழு தயல்வேறொரு தேரின்மிசைப் பாயாக்
கதையொன்றினை விடுத்தான்எரி கனல்மாமுகன் அதன்மேல்
குதையொன்றினைத் துரந்தேயருட் குமரேசனுக் கிளையோன்
சுதையொன்றியக் களத்தேவிழத் துண்டம்பல கண்டான். - 85



1389 - மாற்றோர்சிலை யினைவாங்கி வளைத்தேகனல் முகத்தோன்
காற்றோன்படை துரக்கின்றுழ இவனும்மது கடவக்
கூற்றோன்படை தொடுத்தானவன் குமரன்றனக் கிளையோன்
வேற்றோர்படை துரந்திட்டிலன் அதுவேசெல விட்டான். - 86



1390 - மாகத்தறு கதிர்வெம்படை மன்னன்தரு மதலை
வேகத்தினில் விடவாங்கது விடுத்தேயது விலக்கி
நாகத்தமர் கறைநீவிய நவிகூரிய கணைநூ
றாகத்திடை படவேதுரந் தடல்மொய்ம்பினன் ஆர்த்தான். - 87



1391 - தருமத்தியல் நிறுவுற்றிடு தக்கோன்விடு சரங்கள்
மருமத்தினிற் படுகின்றுழி வானோரமு தருந்தும்
கருமத்தினில் விரவிக்கடல் கடையக்கவிழ்ந் திட்ட
பெருமத்தென நிலைசோர்ந்துதன் பெருந்தேர்மிசை வீழ்ந்தான். - 88



1392 - விழுகின்றதொ ரெரிமாமுகன் வியன்மார்பெனும் வரைநின்
றிழிகின்றன நதியாமென எருவைப்புனல் உயிரும்
ஒழிகின்றது வருகின்றது லாவுற்றது தேற்றம்
அழிகின்றது வருமந்தகன் அச்சுற்றனன் அணுக. - 89



1393 - விளிந்தானென மயங்குற்றவன் வெஞ்சூ£¢உரும் ஏற்றால்
நௌ¤ந்தாடர வசைந்தாலென நெடுந்தேர்மிசைப் பெயராத்
தௌ¤ந்தாயிடை யிரங்கிப்பொரு திறல்வன்மைய திலனாய்
எளிந்தான்எளிந் திடுகின்றவன் இத்தன்மைசிந் தித்தான். - 90



1394 - மொழிபட்டிடு திறல்மாற்றலர் முனைவெஞ்செருத் தனில்யான்
அழிபட்டிடின் வருவாயென அந்நாட்சிறு காலைப்
பழிபட்டிடும் வெறியாட்டினைப் பயின்றேபலி யூட்டி
வழிபட்டதன் நகர்க்காளியை மனத்தின்மிசை நினைத்தான். - 91



1395 - வேறு
விஞ்சுந் தொல்விறல் மேவு சூர்தரு
மைஞ்சன் தன்னை மனத்தில் உன்னலும்
நஞ்சுந துண்ணென நண்ணு காளிதன்
நெஞ்சந் தன்னில் நினைத்தல் மேயினாள். - 92



1396 - சூலங் கொண்ட லமர்ந்து தோன்றுவாள்
சூலங் கொண்ட லமர்ந்த தோளினாள்
கோலம் பெற்ற குலிங்க வேணியாள்
கோலம் பெற்ற குறுங்கொ லைக்கணாள். - 93



1397 - போதங் கொன்று பொறாமை மிக்குளாள்
போதங் கொன்று பொலஞ்செய் தாளினாள்
ஏதந் தீர்ந்திடும் எண்ண லார்சிரம்
ஏதந் தீர்ந்திடும் ஏம வாளினாள். - 94



1398 - சங்கா ரத்தணி தாங்கு கொங்கையாள்
சங்கா ரத்தணி தந்த செங்கையாள்
உங்கா ரத்தின் உரத்த ஆடையாள்
உங்கா ரத்தின் உரப்பும் ஓதையாள். - 95



1399 - ஞாலத் தேவரும் நாகர் வேந்தரும்
ஞாலத் தேவரும் ஏத்த நண்ணுவாள்
காலத் தீயர்க ளிற்றின் மேலையோர்
காலத் தீயர் கலங்கு காட்சியாள். - 96



1400 - அஞ்சத் தானடி யான வானவர்
அஞ்சத் தானடி பேர்த்து லாவுவாள்
நஞ்சத் தானவர் நைய வெம்மைசெய்
நஞ்சத் தானவர் சுற்றம் நல்குவாள். - 97



1401 - அங்கத் தன்மை யளாய மர்ந்திடும்
அங்கத் தன்மை யளாய் காளிமால்
சிங்கத் தேறிய செல்வன் மைந்தன்முன்
சிங்கத் தேறினள் செல்லல் மேயினாள். - 98



1402 - வில்லுச் சூலம் வியன்ம ழுக்கதை
எல்லைப் பல்படை யாவை யுங்கொளா
மல்லற் காளிகள் மாப்பெ ரும்படை
செல்லக் கூறி செறிந்து சூழ்தர. - 99



1403 - மூதக் கார்ப்பொடு விண்ணை முட்டுற
வேதக் கூளிகள் ஏறு கேதனம்
ஊதச் சங்கம் ஒழிந்த பல்லியம்
மேதக் கோசை மிகுத்து மேவவே. - 100



1404 - வேறு

விரைவொடு பறந்தலை மேவி வீழ்ந்தயர்
எரிமுக மதலையை எய்தி நோக்கியான்
உரமிகும் ஒன்னலர் உயிரை உண்பன்நீ
பரிவுறல் என்றனள் அமைத்த பாணியாள். - 101



1405 - இவ்வகை அருளியே இளவல் பாற்படும்
தெய்வதப் பூதர்தஞ் சேனை மேற்செலாக்
கவ்வைகொள் செருத்தொழில் கருதி ஆர்த்தனள்
ஐவகைப் பூதமும் அச்சங் கொள்ளவே. - 102



1406 - ஆர்த்திடும் எல்லையில் அளக்கர் சூழ்ந்தென
ஆர்த்திடும் எல்லையில் அடல்வெம் பூதரும்
வேர்த்தனர் அழுங்கினர் மேற்சென் றேற்றனர்
வேர்த்தனர் அழுங்கினர் விண்ணு ளோரெலாம். - 103



1407 - காளிகள் சூலம்வேல் கணிச்சி கார்முகம்
வாளிகள் சிந்தினர் வரைநெ டுந்தரு
நீளிகள் எழுக்கதை நேமி இன்னன
கூளிகள் வீசினர் குறுகிப் போர்செய்தார். - 104



1408 - அத்திறன் நோக்கியே ஆடற் பூதர்கள்
எத்திறத் தவரையும் ஈறு செய்கெனாக்
கைத்தலத் திருந்ததோர் கழுமுள் வீசினாள்
பத்திரை தன்னருள் படைத்த காளியே. - 105



1409 - வீசிய முத்தலை வெய்ய வேற்படை
காய்சின எரிபுகை கான்று காளிகள்
மாசகல் உருப்பல வகுத்துப் பாரிடர்
பாசன மருளுறப் படர்தல் உற்றதே. - 106



1410 - சண்டிகை விடுபடை தனது வன்மையைக்
கண்டனன் இளையவன் கணங்கள் ஆருயிர்
உண்டிடும் இ·தென உன்னி யேழிரு
புண்டரு சிலீமுகம் பொள்ளென் றேவினான். - 107



1411 - தீக்கலுழ் வேலினான் செலுத்தும் ஆசுகம்
மேக்குறு முத்தலை வேலை நுண்டுகள்
ஆக்கிய தாக்கலும் அனைய தன்மையை
நோக்கினள் காளியென் றைக்கும் நோன்மையாள். - 108



1412 - துண்ணென யான்விடு சூலந் தன்னையும்
அண்ணலம் பகழியால் அறுத்தென் னாற்றலை
எண்ணலன் நிற்பனால் இன்னும் அங்கவன்
உண்ணிகழ் உயிரினை உண்குவேன் என்றாள். - 109



1413 - என்றிடு காளியோ ரிமைப்பின் முந்துற
நின்றிடு சேனையங் கடலை நீக்கியே
வென்றிடு வயப்புலி மிசைககொண் டார்த்திடாச்
சென்றனள் வீரன்முன் செப்பல் மேயினாள். - 110



1414 - முன்னுற யான்விடு மூவி லைப்படை
தன்னைவெங் கணைகளால் தடுத்து நின்றனை
இன்னுமொர் சூலமுண் டெறிவன் வீகுதி
அன்னது காத்திடல் அரிது காணென்றாள். - 111



1415 - என்றலும் முறுவல்செய் திலங்கு சூலமாங்
கொன்றல ஆயிரம் ஒருங்கு வீசினும்
நின்றவை முழுவதும் நீறு செய்வனென்
வன்றிறல் தெரிந்திலை மாதுநீ யென்றான். - 112



1416 - கொற்றமொய்ம் பினன்இவை கூறக் கேட்டுளஞ்
செற்றம தாகியே தெழித்துச் சண்டிகை
மற்றுமொர் சூலவேல் வல்லை வீசினாள்
சுற்றிய பாரிடத் தொகுதி யுட்கவே. - 113



1417 - அருந்திறல் அமரர்கள் அதுகொல் ஆலமென்
றரிந்தனர் பணியெனா இன்னும் இந்துவும்
வருந்தினர் சூலமுன் வந்த தன்மையைத்
தெரிந்தனன் வீரமொய்ம் புடைய செம்மலே. - 114



1418 - எட்டுடன் இரண்டுநூ றெனுந்தொ கைப்படு
நெட்டிரும் பகழிகள் நிகரத் தூண்டியே
அட்டனன் துணிபட அரியின் மேலவள்
தொட்டிட வருவதோர் சூலந் தன்னையே. - 115



1419 - எறித்தரு சூலம திற்று வீழ்தலுஞ்
செறுத்தனள் இங்கிவன் சிரத்தை வாளினால்
அறுத்துதி ரப்புனல் சுவைத்திட் டாவியைப்
பறித்திடு வேனெனப் பகர்ந்திட் டாளரோ. - 116



1420 - நாலிரு தோளுடை நங்கை தோன்றல்முன்
வாலுளை மடங்கனன் இருத்தல் மாண்பொரீஇப்
பாலுறு திரைக்கடற் பரப்பை விட்டகல்
ஆலம தாமென ஆர்த்திட் டேகினாள். - 117



1421 - ஆர்த்திடு சண்டிகை அங்கை தன்னிலோர்
கூர்த்திடும் வாட்படை கொண்டு கொம்மெனத்
தீர்த்தனுக் கினியதோர் செம்மல் நிற்புறுந்
தார்த்தடந் தேர்மிசைத் தனிவந் தெய்தினாள். - 118



1422 - நோக்கினன் மொய்ம்பினான் நோன்மை பூண்டுளான்
தாக்கணங் காம்இவள் தன்ன தாவியை
நீக்குதல் செய்வது நீர்மைத் தன்றெனாத்
தூக்கினன் அவள்வலி தொலைக்க உன்னுவான். - 119



1423 - இடித்தென உரப்பினன் எண்கை தன்னையும்
ஒடித்தன னாமென ஒருகை யாலுறப்
பிடித்தனன் மற்றொரு பெருங்கை யாலுரத்
தடித்தனன் காளிவீழ்ந் தவச மாயினாள். - 120



1424 - கரங்கொடு சேவகன் கல்லென் றெற்றலும்
உரங்கிழி வுற்றனள் உமிழ்ந்த சோரிநீர்
தரங்கம தெறிகடல் தன்னைப் போன்றுலாய்
இரங்கிய தவள்துயா¢ யாவர் கூறுவார். - 121



1425 - எண்கையும் ஒருகையால் ஏந்தல் பற்றியோர்
ஒண்கையின் நீலிதன் உரத்தில் எற்றலும்
மண்கிழி வுற்றன வரைகள் கீண்டன
விண்கிளர் அண்டபித் திகையும் விண்டதே. - 122



1426 - திரைபெறு கடலெனக் கான்ற செம்புனல்
வரைபெறு தனதுமெய் மறைத்த லால்துயர்க்
கரைபெறல் இல்லவள் காளி என்றுமுன்
உரைபெறு பெயரையும் ஒழிவுற் றாளரோ. - 123



1427 - இவ்வகை அவசமாய் இம்பர் வீழ்ந்தபின
ஐவகை உணர்ச்சியும் அனாதி யானவுஞ்
செவ்விது தொன்மைபோற் சேரச் சூர்மகள்
வெவ்வலி இழந்துகண் விழித்து விம்மினாள். - 124



1428 - ஆண்மையின் மேலவன் அகலத் தெற்றிட
ஏண்மையும் வீரமும் இழந்து வீழ்ந்தது
நீண்மய லானது நினைந்து நெஞ்சிடை
நாண்மலி வுற்றனள் நடுங்கும் ஆவியாள். - 125



1429 - அந்தமில் அறுமுகத் தமலன் ஏவலால்
வந்தவ னொடுபொரின் வாகை எய்துமோ
புந்தியி லாதிவட் புக்க னன்எனாச்
சிந்தைசெய் தெழுந்தனள் வன்மை தீர்ந்துளாள். - 126



1430 - இகழ்ந்தவர் உரத்தினை இகழ்ந்து கூர்நகத்
தகழ்ந்துயி ருண்டிடும் அணங்கு தேர்மிசைத்
திகழ்ந்தனன் நின்றிடு திறலி னான்றனைப்
புகழ்ந்தனள் இனையன புகல்வ தாயினாள். - 127



1431 - கன்றிய கற்புடைக் கனலி மாமுகன்
இன்றெனை அருச்சனை இயற்றி ஏத்தியே
ஒன்றல வுயிர்ப்பலி யுதவி வேண்டினான்
நன்றிய தயர்த்திலன் நானிங் கெய்தினேன். - 128



1432 - உன்னுடை வன்மையும் உனது வீரமுஞ்
சின்னமும் உணர்ந்திலன் செருவின் முந்துறீஇ
நின்னுடன் இகலியிந் நிலைமை யாயின
இன்னினி ஏகுவன் இருந்த தொல்லிடை. - 129



1433 - கறுத்தினி வல்லையில் கனன்மு கத்தனை
ஒறுத்துயிர் உண்குதி ஒழிந்து ளாரையும்
அறுத்தனை நிற்குதி அலரி தன்னைமுன்
செறுத்தவன் தன்னையும் அடுதி செம்மல்நீ. - 130



1434 - அடையலர் தம்மைவென் றாறு மாமுகம்
உடையவன் கருணைபெற் றுவகை மேவுதி
நெடிதுபல் லூழியும் நீடி வாழ்தியால்
கடைமுறை இவையெலாங் காண்டி நீயென்றாள். - 131



1435 - இத்திறம் யோகினி இசைத்து வெஞ்சமர்
வித்தகன் விடைகொடு மீண்டு கோளரிச்
சித்திர வெருத்தமேற் சேர்ந்து தொல்படை
மொய்த்திடப் போயினள் முந்து வந்துழி. - 132



1436 - வேறு
சண்டிகை போந்த காலைத் தழல்முகன் அனைய வெல்லாங்
கண்டனன் வெகுண்டு நன்றிக் கள்வன தாற்றல் என்னாத்
திண்டிறல் ஆற்றல் சான்று சேண்கிடந் துருமுக் கான்று
கொண்டல தெழுந்தா லென்னக் கொம்மென எழுந்து சொல்வான். - 133



1437 - கொன்றுயிர் பலவும் நுங்கிக் குருதியும் வடியும் மாந்தி
ஒன்றுதன் னகடுதூரா துலப்புறாப் பசிநோய் மிக்குச்
சென்றிடு காளி யாலோ தெவ்வர்தஞ் செருவை யான்முன்
வென்றனன் சூரன் சேய்க்குத் துணைகளும் வேண்டு மோதான். - 134



1438 - சூலமுந் தண்டும் வாளுஞ் சுடர்மழுப் படையுஞ் சீற்றக்
கோலமுங் கொண்டு பாங்கிற் கூறிகள் சூழ வைகும்
நீலிதன் வன்மை காண்பான் நினைந்திவண் விளித்த தன்றி
வேலவன் படையை அன்னாள் வெல்லுமென் றுளங்கொண்டேனோ. - 135



1439 - வாவியுங் குளனும் பொய்தீர் நதிகளும் மற்று மெல்லாந்
தூவுநுண் பனியா லன்றே துளும்புவ அ·தே போலத்
தேவரை ஏவல் கொண்ட சிறப்புடைத் தமியேன் இங்ஙன்
மேவிய காளி யாலோ எய்துவன் வீரத் தன்மை. - 136



1440 - இன்னினிக் கணம தொன்றின் இளவலா ருயிரை வௌவி
முன்னுற அகன்ற ஒற்றன் முரண்வலி அதனைச் சிந்தி
அன்னவன் ஆவி கூற்றுக் கடிசிலா அளிப்பன் அல்லான்
மன்னன்முன் போவ தில்லை வஞ்சினம் இ·தே என்றான். - 137



1441 - கனல்முகன் இனைய மாற்றங் கழறியே அவுணத் தொல்பேர்
அனிகம்வந் தயலின் ஈண்ட ஆழியந் தேரிற் சென்று
வனைதரு சிலையொன் றேந்தி வன்மையால் வாங்கி நூறு
முனையிரும் பகழி வீர மொய்ம்பன்மேல் தூண்டி ஆர்த்தான். - 138



1442 - கொடுந்தொழி லாளன் செய்கை குரைகழல் வீரன் காணா
முடிந்திட வந்தாய் போலும் முயற்சியீ தழகி தென்னா
நெடுந்தனிச் சிலைகா லூன்றி ஞெரேலென வளைத்துத் தானும்
அடுந்திறற் கணைநூ றோச்சி அறுத்தனன் அவுணன் வாளி. - 139



1443 - வேறு
அறுத்தபொழு தத்தில்அவு ணர்க்கரசன் அமைந்தன்
மறத்தினொடு நூறுசரம் வாலியன் பூட்டிச்
சிறப்புடைய செம்மலுறு தேரினை யழித்துக்
குறித்தவிறல் கொண்டுசமர் வால்வளை குறித்தான். - 140



1444 - தேரழித லும்வெகுளி செய்திளவல் ஈரேழ்
கூரிய நெடும்பகழி கொம்மென விடுத்தே
ஆரழல் முகத்தவுணன் அங்கையிடை கொண்ட
மூரிவரி வெஞ்சிலை முரித்தமா¢ விளைத்தான். - 141



1445 - வில்லது முரிந்திடலும் வேறோ£சிலை வாங்கிக
கல்லென வெயிற்றணி கறித்திவனை இன்னே
கொல்வனெனும் வெய்யமொழி கூறிமண நாறும்
அல்லிமல ரோன்படையை அண்ணல்மிசை உய்த்தான். - 142



1446 - அத்தகைமை நோக்கினன் அயன்படையை யானும்
உய்த்திடின் எனக்குவரும் ஊதியம்என் என்னாச்
சித்தமுறு பூசனை செலுத்திவிறல் வீர
பத்திர நெடும்படையொர் பாணிகொடு விட்டான். - 143



1447 - வாரிதி வளாகம்அரை மாத்திரையின் உண்ணும்
வீரனெடு வெம்படை விரைந்துபடர் காலை
நாரணன் மகன்படை நடுங்கிநனி தாழா
யாருநகை செய்திட இரிந்துளதை யன்றே. - 1442



1448 - அன்னமிசை யோன்படை அழிந்திடலும் வீரன்
தன்னது நெடும்படை தடுப்பில்வகை யேகி
வன்னிமுகன் ஆவிகொடு மாமுடிகள் தள்ளி
மின்னுவென வீரனிடை மீண்டுபடா¢ந் தன்றே. - 145



1449 - வேறு
வெய்யஅக் கனல்முகன் விளிந்து வீழ்ந்தனன்
ஒய்யென அச்செயல் உம்பர் நோக்குறா
ஐயனை வாழ்த்திநின் றலரின் மாரிதூய்
மெய்யணி துகிலெலாம் வீசி யாடினார். - 146



1450 - புறந்தரு கலிங்கமும் பூணும் நாணமும்
துறந்தனா¢ உவகையால் சொல்லும் ஆடலர்
சிறந்துடன் ஆர்த்தனர் தேவர் அற்றைநாட்
பிறந்திடு மைந்தர்தம் பெற்றி எய்தினார். - 147



1451 - எரிமுகன் அவ்விடை இறப்ப ஆங்கவன்
பெரும்படை வீரர்கள் புலம்பி யாமெலாம்
ஒருசிறு தூதனுக் குடைது மோவெனாச்
செருவினைக் குறித்தனர் உலப்பில் தீமையோர். - 148



1452 - முற்படுந் தலைவர்கள் மூவெண் ணாயிரர்
பொற்புடை இளையவன் புடையிற் சுற்றிடாக்
கப்பணந் திகிரிகோல் கணிச்சி வேல்கதை
சொற்படு படையெலாஞ் சொரிந்து போர்செய்தார். - 149



1453 - செய்தது நோக்கியே செயிர்த்துச் சேவகன்
கைதனில் இருந்ததோ£¢ கார்மு கம்வளைஇ
நொய்தினில் ஆயிர நூறு கோடிகோல்
எய்தனன் தெழித்தனன் அவுணர் ஏங்கவே. - 150



1454 - இத்திறங் கணமதொன் றிடைய றாமலே
கைத்தனு உமிழ்ந்திடுங் கணையின் மாமழை
உய்த்தனன் திரிந்தனன் உலகம் பேர்த்திடும்
மெய்த்திறல் மருத்தினும் விரைவின் மேவியே. - 151



1455 - எறிந்திடு படைகளும் எய்த கோல்களும்
முறிந்தன துணிந்தன மொய்ம்பு மார்பமுஞ்
செறிந்திடு கரங்களும் சிரமும் தாள்களும்
தறிந்தன அவுணர்தந் தலைவர் வீடினார். - 152



1456 - வேழமும் புரவியும் துணிந்து வீழ்ந்தன
வாழியம் தேர்நிரை அனைத்தும் இற்றன
சூழுறும் அவுணரும் தோலைந்து போயினார்
பாழியம் தோளினான் பகழித் தன்மையால். - 153



1457 - பாறொழுக் குற்றன ககனம் பார்மிசை
வீறொழுக் குற்றதொல் படைகள் வீந்திடச்
சேறொழுக் குற்றன தசைகள் செம்புனல்
ஆறொழுக் குற்றதால் அமர்செய் ஆறெலால். - 154



1458 - பலவுடை நெடுந்தலைப் பதகர் துஞ்சலும்
நிலவுடை எயிற்றிடை நிவந்த தீக்கனல்
புலவுடை விழுநிணம் புழுக்கல் செய்ததால்
கலிகெழு கொடியொடு கணமுந் துய்க்கவே. - 155



1459 - மாமையில் செறிந்தன வடிவின் மால்கரி
தாமயிர்ப் புறவடி தடக்கை வன்றலை
ஏமயிர்த் தோகையோ டிற்று நீங்குற
ஆமையிற் போவன குருதி ஆற்றினே. - 156



1460 - கார்கெழும் அவுணருட் கலந்த சோரியின்
தாரைகள் நீத்தமாய் எழுந்து தக்கவர்
பேருட லுட்கொடு பெயர்ந்த பின்னுற
வாரிதி வடவையுண் டுலவு மாண்பென. - 157



1461 - கரியினும் பரியினுங் கால்கொண் டோங்கிய
குருதியம் புனல்மழை குலாவும் வைகலின்
வரைதொறும் வரைதொறும் மாறு மாறெழா
அருவிகள் சென்றென அழுங்கிச் செல்லுமால். - 158



1462 - மீளிகள் குருதிநீர் வௌ¢ள மாயதில்
வாளுறு வேல்களும் வாளும் மற்றவுங்
கோளுறு மயிலையிற் கலவக் கண்டுதங்
கேளிரென றெதிர்வன கெழும வேலைமீன். - 159



1463 - அழல்பொரு செக்கர்வா னகத்தின் மாமதிக்
குழுவினர் சேர்ந்துறக் குலவுங் கொள்கைபோல்
நிழல்பொதி கவிதைதந் நெடிய தாளற
ஒழுகிய குருதியின் ஒருங்கு செல்வவே. - 160



1464 - அலைகெழு குருதியா றழுங்குற் றேகலால்
தலைகளும் உடல்களும் தசையும் வாரிடக்
கொலைபுரி மறவர்தங் குடா¤ற் பின்னியே
வலையெறிந் தீர்த்தனர் வயவெம் பூதரே. - 161



1465 - ஞாளிகள் திரிவதோர் மருங்கு நாமவெங்
கூளிகள் திரிவதோர் மருங்கு கூளியாம்
மீளிகள் திரிவதோர் மருங்கு வென்றிடும்
காளிகள் திரிவதோர் மருங்கு கண்ணெலாம். - 162



1466 - தேரிடை உலந்தவன் சிரத்துந் துஞ்சிய
சாரதி தலையினும் புரவி தம்மினுஞ்
சோரிகள் இழிவன தொலைந்த வையமும்
ஆருயிர் எய்தியாங் கதுபெற் றென்னவே. - 163



1467 - சினவலி அவுணர்தந் திகிரி பூண்டிடு
துனைவரு கேசரி துஞ்சச் சோரிநீர்
கனைகட லிடைசெலக் கண்டு தேரைதம்
இனமென எதி£¢தழீஇ யிரங்கு கின்றவே. - 164



1468 - விரிந்தஇத் திறமியல் வெங்க ளத்திடை
இரிந்திடு தானவர் இறந்து நீங்கினார்
கருந்தலை அடுக்கலிற் கழல்கள் தாக்குறத்
திரிந்தனர் அயர்ந்தனர் சிலவர் துஞ்சினார். - 165



1469 - மழுக்களும் அயில்களும் வாளும் முத்தலைக்
கழுக்களுங் கால்படக் கவலுற் றார்சிலர்
விழுக்கொடு வள்ளுரம் விராய பூழியில்
இழுக்கினர் அழுந்தினர் இறந்துற் றார்சிலர். - 166



1470 - பாய்ந்திடு குருதியம் பரவை ஆற்றிடை
நீந்தினர் ஒருசிலர் நீத்திக் காலெழா
தோய்ந்தனர் ஒருசிலர் ஓடி னார்
மாய்ந்தனர் ஒருசிலர் மாய வீரரே. - 167



1471 - காண்டொறுங் காண்டொறும் அவுணர் கண்ணிடை
ஈண்டிய வௌ¢ளிடை இளவல் மேனியாய்
நீண்டதொர் பையுளாய் நிகழ ஏங்கியே
மாண்டனர் சிலர்சிலர் வாய்வெ ரீஇயினார். - 168



1472 - துப்புறு பூதர்பின் தொடரத் தாடொழா
மெய்ப்படை முழுவதும் வீசி ஆயிடைத்
தப்பினர் இறுதியில் சாய்ந்து மாய்ந்தவர்
கைப்படை வாங்கியே கடிதுற் றார்சிலர். - 169



1473 - எண்ணமில் படைக்கலம் யாவும் வீசியே
தண்ணுமை வரிதுடி தக்கை பேரியாம்
பண்ணமை இயம்பல பற்றி ஆர்த்திடா
நண்ணினர் நடுவனை நடுக்குந் தானவர். - 170



1474 - பரிக்குவை அரிக்குவை படைத்த மாமுகத்
திரக்கமில் அவுணர்கள் இரத்தத் தில்தம
நெருக்குறு சிரத்தொகை நீட்டி மெய்யெலாங்
கரக்குநர் ஒருசிலர் உயிரின் காதலார். - 171



1475 - சூளுறு போரிடைத் தொலைந்து போகியே
நீளிகல் உறுகிலா நிருதர் சம்புவாய்
ஆளுடை வயவர்ஊன் அருந்த ஆயிடை
ஞாளிகள் கவர்தலும் நடுக்குற் றார்சிலர். - 172



1476 - தீயினை முருக்குறுந் திறல்வெம் பூதர்கள்
தாயினர் தொடர்தலுஞ் சாய்ந்து ளோர்சிலர்
நாயின துருக்கொடு நடக்க ஞாளிகள்
ஆயின அடர்த்தலும் அஞ்சி னார்சிலர். - 173



1477 - விசையொடு சாரதர் விரவ வேற்றுரு
இசைகிலர் இறந்தவர் இனத்துள் மேயினார்
தசைகவர் ஞமலிகள் தலைச்சென் றீர்க்கவும்
அசைவில ராகியே அழுங்கி னார்சிலர். - 174



1478 - புண்டரு குருதிநீர் புறத்துச் சிந்திட
மண்டமர் தன்னிடை மாண்ட கேள்வரைக்
கண்டிலர் சிரந்தெரீஇக் கவன்ற ரற்றிய
ஒண்டொடி மாதரின் உலவி னார்சிலர். - 175



1479 - சூர்த்திடு நோக்கொடுந் துண்ணென் றெய்தியே
ஆர்த்திடு பூதர்வந் தணுக வாய்வெரீஇ
வேர்த்துடல் பனிப்பவீழ்ந் துதைத்தும் வெய்யதாள்
பேர்த்திடல் இன்றியும் பேதுற் றார்சிலர். - 176



1480 - அழிதரு வோர்தமை அவரின் முன்னரே
கழிதரும் உயிரினர் கணங்க ளாகிவிண்
வழிதரு செலவினில் வந்து பற்றியெம்
பழிதரு வீரெனப் பணிக்கின் றார்சிலர். - 177



1481 - வல்விரை புறவையை நோக்கி மற்றவட்
செல்லுதிர் பூதா¢கள் தெரியக் கண்டிரேல்
இல்லையிந் நெறிதனில் இறந்து ளோரெனச்
சொல்லுதிர் நீரெனத் தொழுகின் றார்சிலர். - 178



1482 - காசினி அதனிடைக் கவிழ்ந்த கேள்வரை
ஆசையி னொடுதழீஇ அலமந் தேங்கிய
பாசிழை மாதரிற் பரவப் பூதர்கள்
நாசியீர்ந் திடுதலும் நாணுற் றார்சிலர். - 179



1483 - அடல்கெழு தூதனால் அவுணர் யாவருங்
கெடுவது திண்ணம்யாங் கெடுகி லோமெனாக்
குடர்கெழு சோரியங் குடிஞைக் கண்ணுறீஇக்
கடலுறு வரையினுட் கலந்து ளார்சிலர். - 180



1484 - சாரதர் குழுவினைத் தப்பித் தத்தம
தாருயிர் உய்ந்தபின் அங்கண் மாண்டவர்
சோரிய துரமிசை துதையப் பூசியே
வீரர்கள் இவரென மேவு வார்சிலர். - 181



1485 - இவ்வகை துஞ்சினர் அன்றி எண்ணிலா
வெவ்வலி அவுணர்கள் வெருவி ஓடலும்
மைவரு நெறிமுயல் மகேந்தி ரப்புரங்
கௌவையின் அரற்றின கடலு டைந்தபோல். - 182



1486 - அங்கது பொழுதினில் ஆடல் முற்றியே
செங்களம் நடுவுறு செம்மல் தன்புடை
எங்கணும் நீங்கிய இலக்க வேந்தருஞ்
சங்கையில் பூதருந் தலைச்சென் றீண்டினார். - 183



1487 - எரிந்திடு கனல்முகன் எய்த வெஞ்சரம்
உரந்தனை யகழ்ந்திட ஒருதன் வன்மைபோய்
அரந்தையின் மூழ்கியே அழிந்த வீரமா
புரந்தரன் எழுந்தொரு புடையில் எய்தினான். - 184



1488 - புண்டர நீறணி புனிதன் பாங்கரின்
மிண்டினர் இவரலாம் மேவி நிற்றலும்
எண்டகும் இளையவா¢ எழுவர் தம்மையுங்
கண்டிலன் கவன்றனன் கழறல் மேயினான். - 185



1489 - ஆண்டகை வீரர்கள் அடைய லார்க்கெதிர்
மூண்டமர் இயற்றிய மூவர் நால்வரும்
மாண்டன ரேகொலோ மயங்கி னார்கொலோ
ஆண்டவர் கிடந்தனர் இயம்பு வீரென்றான். - 186



1490 - என்றலும் உக்கிரன் என்னுஞ் சாரதன்
உன்றுணை யார்களை ஒன்ன லன்மகன்
கொன்றனன் அவருயிர் கூற்றும் வௌவினான்
பொன்றிய வைப்பினைப் புகலக் கேட்டியால். - 187



1491 - இம்பரின் முன்னுற இயம்பும் யோசனை
ஐம்பதிற் றிரண்டின்மேல் ஆலம் ஒன்றுள
தும்பருஞ் சிறிதென ஓங்கும் ஆயிடைத்
தம்பியர் மாய்ந்தனர் சரத மேயென்றான். - 188



1492 - உக்கிரன் இனையன உரைப்ப யாரினும்
மிக்கவன் வினவியே விழும நோயுறீஇப்
பக்கம தாயினர் படர ஏகினான்
தொக்குறும் இளைஞர்கள் துஞ்சும் எல்லைகளாய். - 189



1493 - வேறு

ஓசனை நூறு நீங்கி ஒலிகழல் வீரன் எய்தப்
பாசிலை வடத்தின் பாங்கே பரிவுடைத் தம்பி மார்கள்
காய்சின அங்கி செங்கண் கான்றிடக் ளேவ ரத்து
வாசமென் பள்ளி மீது மாய்ந்தனர் கிடப்பக் கண்டான். - 190



1494 - கண்டனன் விழிகள் செந்நீர் கான்றிட வீழ்ந்து புல்லிக்
கொண்டனன் இளைஞர் தம்மைக் கூவினன் அரற்றிச் செவ்வான்
விண்டனன் உயிர்த்து மேனி வியர்த்தனன் வீரன் ஆவி
உண்டில தென்னச் சோர்ந்தான் உணர்ந்துபின் இரங்க லுற்றான். - 191



1495 - தம்பிமீர் தம்பி மீர்என் றுரைத்திடும் தழுவிக் கொள்வீர்
எம்பிமீ ரென்னும் ஐயோ எங்ஙனஞ் சென்றி ரென்னும்
வெம்பினேன் என்னும் என்னை விட்டகன் றீரோ என்னும்
நம்பினேன் உம்மை என்னும் நானுமக் கயலோ என்னும். - 192



1496 - அங்கிமா முகனே நும்மை அடல்செய வல்லான் என்னும்
இங்குநீர் வடிந்தீர் என்றால் என்செய்வன் தமியேன் என்னும்
துங்கவெம் படைகள் ஏந்திச் சூழந்துடன் துணையாய் வந்த
உங்களைத் தோற்றி யானே உய்ந்தனன் போலும் என்னும். - 193



1497 - அம்மவேவ விதியே என்னும் ஆதகா துனக்கீ தென்னும்
இம்மெனச் செல்லா தின்னும் இருத்தியோ உயிரே என்னும்
செம்மைகொள் குணத்தா ரோடு பிறப்பரே சிலரிங் கென்னும்
எம்மையா ளுடைய வள்ளற் கென்னினி உரைக்கேன் என்னும். - 194



1498 - சீரிள மைந்தர் துஞ்சச் சிலையொடு திரிவேன் என்னின்
ஆரெனக் கொப்புண் டம்மா அழகிதென் னாற்றல் என்னும்
சூரர்தங் கிளையை எல்லாந் துண்ணெனச் சென்று சுற்றி
வேரொடு முடித்தால் அன்றி அகலுமோ வெகுளி யென்னும். - 195



1499 - துப்புடை வில்லின் கல்வித் துணைவர்கள் ஈண்டு துஞ்ச
வெப்படை தூண்டி னானோ எரிமுகத் தவுணன் என்னும்
அப்படை நல்கு தேவர் ஆர்கொலோ அறியேன் என்னும்
மெய்ப்படை வேலி னாருக் கடியரோ வினையேம் என்னும். - 196



1500 - அடுவனோ அவுணர் சூழ்வை என்றிடும் அனலி உண்ண
விடுவனோ இவ்வூர் என்னும் எந்தைதன் படையைச் சூர்மேல்
விடுவனோ என்னும் அந்தோ அஞ்சினன் வேலுக் கென்னும்
படுவனோ துயரத் தென்னுஞ் செய்வதென் பாவி என்னும். - 197



1501 - ஒன்றிய துணைவர் தம்மை ஒருங்குடன் படுத்த நீரால்
இன்றமர் செய்து பட்ட எரிமுகன் தன்பால் அன்றோ
வென்றிய தென்னும் என்றன் வீரமா சுணட தென்னும்
பொன்றிலன் அளியன் போலப் புலம்பினன் வறிதே என்னும். - 198



1502 - வில்லினைப் பார்க்கும் செங்கேழ் வேலினைப் பார்க்கும் ஏனை
மல்லலம் படையைப் பார்க்கும் வாளியைப் பார்க்கும் வீரச்
சொல்லினைப் பார்க்கும் வந்து சூழ்தரு பழியைப் பார்க்கும்
எல்லென எயிற்றின் பந்தி கறித்திடும் கவலு மன்றே. - 199



1503 - அருந்துயர் எய்தி இவ்வா றழுங்கினோன் எளிய னாகி
இருந்தனன் அல்லன் ஏங்கி யாதுமோர் செயலும் இன்றி
வருந்தினன் அல்லன் கானின் மருந்தினுக் குழன்றான் அல்லன்
விரைந்துதன் இளையர் தம்மை எழுப்பவோர் வினையங் கொண்டான். - 200



1504 - நாற்றலை யுடைய அண்ணல் நாரணன் முதலோ£¢ நல்க
ஏற்றிடு படையில் ஒன்றை இளையர்கள் எழுவர் மீது
மாற்றலன் விடுத்தான் என்னின் மற்றவர் ஆவி உண்டோன்
கூற்றுவன் அன்றோ என்னாக் குறித்திவை கூற லுற்றான். - 201



1505 - வேறு
ஊனோ டாவிக் கின்பம் விரும்பி உழல்கின்ற
வானோ ரேபோல் தானவ ரேபோல் வழசெல்லா
ஏனோ ரேபோல் எண்ணின னேகொல் எமர்ஆவி
தானே உண்பான் கூற்றுவன் என்னும் மியோனே. - 202



1506 - விரியுமு ணர்ச்சியை மாற்றுவ தல்லால் விண்ணோர்கள்
ஒருபடை தானும் நங்கள் இனத்தை உயிருண்ணா
தெரிமுக னென்பான் அட்டனன் அன்றே இளையோரைத்
தரியல னாகிக் கொன்றவ னம்மா தானன்றோ. - 203



1507 - போதத் துக்கோர் வைப்பிட மாயோர் பொறியாகி
மூதக் கோர்எண் டாரக மூல மொழிக்கேட்டு
வேதத் தோனை வெஞ்சிறை பூட்டி விதியாற்றும்
ஆதித் தேவன் தம்பியர் என்ப தறியானோ. - 204



1508 - ஆறுபட் பட்ட ஐயிரு காலத் தரன்நாமங்
கூறிட் டேவாச் சேய்உயிர் வவ்வக் குறுகுங்கால்
சீறித் தாளால் தாக்கிய சின்னஞ் சிறிதுந்தான்
மாறிற் றில்லைக் கூற்றது தானும் மறந்தானோ. - 205



1509 - சீலந் தன்னால் ஓர்விழு போதைச் சிவனுக்கென்
றோலங் கொண்டே விண்ணிடை புக்கோன் உயிர்வௌவிச்
சூலந் தன்னிற் கண்ணுதல் ஏற்றச் சுழலுற்றுக்
காலன் பன்னாள் தூங்கிய வண்ணங் காணானோ. - 206



1510 - நஞ்சிற் றீயன் வேட்டுவன் அன்றோர் நாள்முற்றும்
துஞ்சற் றுணற் றரன்மிசை வில்வந் தூர்த்தோனை
வெஞ்சொற் கூறிப் பற்றலும் யாங்கண் மிகஎற்ற
அஞ்சித் தன்தூ தாயினர் போன தறியானோ. - 207



1511 - அக்கா லத்தின் எல்லையின் மைந்தற் கரவென்றே
முக்கா லோதித் தீமை குறித்தே முடிவோனை **
மெய்க்கா லன்தூ தாயினர் பற்ற விடுவித்தேம்
இக்கால் கொண்டே அவரை உரைத்ததேன் யானன்றோ.
( ** ஒரு வேடன் தன் மகனுக்கு இறுதிக்காலத்தில், ஆகர [பிடுங்கு], பிரகர [அடி],
சங்கர [கொல்] என்னும் சொற்களைக்கூறி, அதன்படி நட என்று கட்டளையிட்டு மாண்டான்
அச்சொற்கள் தீமை குறித்தனவாயினும் சிவநாமம் அடங்கப் பெற்றமையால் அவன்
சிவகதி அடைந்தான் என்பது இங்குக் குறித்த வரலாறாகும்.) - 208



1512 - மெச்சியல் கொள்ளாத் துன்மதி யாலும் மிகவெய்ய
துச்சக னாலும் ஏனைய ராலுந் தொன்னாளின்
இச்சக மாற்றுந் தன்னிறை நீங்கி இடரெய்தி
அச்ச முழந்தே பட்டது சண்டன் அயர்த்தானே. - 209



1513 - நீறு முகத்தார் கண்டிகை பூண்டார் நிமலன்பேர்
கூறு முகத்தார் தம்புடை செல்லக் குலைகூற்றன்
ஆறு முகத்தான் அடியவர் ஆவி யலைத்தானே
சேறு முகத்தாழ் கரியை யடாதோ சிறுபுள்ளும். - 210



1514 - வேறு
என்னு மாற்றங்கள் இயம்பியே இளையவன் எழுந்து
பின்னர் யாத்திடு தூணியில் ஒருசரம் பிடுங்கித்
தன்ன கங்கொடே யன்னதன் தலைதனில் தரும
மன்னர் மன்னவன் கண்டிட இத்திறம் வரைவான். - 211



1515 - வேலு டைத்தனி நாயகற் கிளையவன் விடுத்தேன்
கால நாடுறு கூற்றுவ னென்பவன் காண்க
கோல வெஞ்சிலைத் துணைவர்தம் ஆருயிர் கொண்டாய்
வாலி தோவிது விடுக்குதி கடிதென வரைந்தான். - 212



1516 - செந்ந லங்கிளர் தன்னகத் தின்னவா தீட்டிப்
பொன்னெ டுஞ்சிலை வாங்கியப் பகழியைப் பூட்டிப்
பன்னி ரண்டுதோள் விமலனை மனங்கொடு பரவி
மின்னெ னச்சென்றி யமபுரம் புகும்வகை விடுத்தான். - 213



1517 - கரந்தை சூடுவான் திருமகற் கிளையவன் கணைமுன்
விரைந்து தெண்கடல் ஏழையுங் கடந்துவிண் ணோங்கி
இருந்த மானேசோத் தரகிரித் தென்புறத் தியம
புரந்த னிற்சென்று மறலிதன் முன்புபோந் ததுவே. - 214



1518 - தொடுத்த அக்கணை அந்தகன் முன்புதுண் ணெனப்போய்
அடுத்து வீழ்தலும் விம்மிதம் எய்தியே அவன்சென்
றெடுத்து நோக்கினன் வீரவா குப்பெயர் இளவல்
விடுத்த தாகலு முற்றுற உணர்ந்தனன் விரைவில். - 215



1519 - அயில்நெ டுங்கணைப் பாசுரத் தகலம துணர்ந்து
துயரு ழந்தஞ்சி ஈண்டிலர் இளையவன் துணைவர்
பயில எங்ஙனஞ் சென்றன ரோவெனப் பார்த்தான்
கயிலை யேகியே இருப்பதா உணர்ச்சியிற் கண்டான். - 216



1520 - கண்டு தேறினன் கடாமிசை ஏறினன் கடுங்கால்
கொண்ட தானைகள் சூறையங் காலெனக் குழுமப்
பண்டு தானுறை பதியினை நீங்கினன் படரா
அண்டர் நாயகன் கயிலையஞ் சாரலை யடைந்தான். - 217



1521 - ஆன காலையில் ஆயிடைப் பொதும்பரொன் றதனின்
மான வேற்படை அவுணர்தம் படைகளின் மாண்ட
சேனை வீரர்கள் சூழ்தர எழுவருஞ் சிறந்து
கான விஞ்சையர் பாடல்கேட் டிரப்பது கண்டான். - 218



1522 - தொழு மற்றவர் முன்னுற மறலிபோய்த் துன்னி
முழுது ணர்ந்துளீர் நுங்களை நாடுவான் முன்னோன்
ஆழகி தென்றிவண் இருப்பதென் என்னையும் அயிர்ப்பான்
எழுவி ருங்கடி தெழுவிர்இப் பூதரோ டென்றான். - 219



1523 - என்ற காலையில் எழுவரும் எழுந்திரு மருங்கு
நின்ற பூதர்கள் யாவரும் போந்திட நீங்கி
ஒன்றொர் மாத்திரை ஒடுங்குமுன் அவுணர்கோன் உறையும்
மன்றல் மாநகர் அடுகளம் புக்கனர் மன்னோ. - 220



1524 - புக்க காலையின் எழுவரும் தம்முடன் புகுந்தார்
மிக்க பாரிடத் தலைவர்கள் யாவரும் விரைவில்
தொக்கு வீழ்தரு மியாக்கைகள் உற்றனர் சுரர்கள்
அக்க ணந்தனிற் பூமழை தூவிநின் றா£¢த்தார். - 221



1525 - இன்ன வேலையின் எழுவரும் பதைபதைத் தெழுந்து
முன்ன வன்றன தடிக்கம லங்களை முறையால்
சென்னி தாழ்வுற வணங்கினர் செங்கையால் எடுத்துப்
பொன்னின் மார்புறப் புல்லினன் எல்லைதீர் புகழோன். - 222



1526 - புல்லி னான்இள வீரரைப் புயங்கமுண் டுமிழ்ந்த
எல்லி னானென விளங்கினான் அவுணரை இனிநான்
வில்லி னால்அடல் செய்வதோ அரிதென விறலும்
சொல்லி னான்மகிழ் வாயினான் புன்கணும் தொலைந்தான். - 223



1527 - எண்ட குந்திறல் எழுவரும் பிறரும்உய்ந் தெழுதல்
கண்டு வீரமா புரந்தர னுங்கணத் தவரும்
திண்டி றற்புனை இலக்கரும் உவகையிற் சிறந்து
கொண்டல் கண்டிடு சாதகம் போல்உளங் குளிர்ந்தார். - 224



1528 - அன்ன தாகிய எல்லையில் கூற்றனும் அனகம்
துன்ன தாகிய வந்தனன் இளவலைத் தொழுது
மின்னு லாவிய வேலினாய் தமியனை வெகுண்டாய்
முன்னி கழ்ந்திடு வரன்முறை கேளென மொழிவான். - 225



1529 - எழுதி றத்தரும் இங்ஙனம் தம்முடல் விட்டுக்
குழுவி னோடுபோய்க் கயிலையஞ் சாரலில் குறுகி
வழிப டுஞ்சில பூதரும் சுற்றிட வதிந்தார்
அழிபெ ருந்துயர் உழத்தலில் தெரிந்திலை அதனை. - 226



1530 - அங்க மீதினில் நீறுகண் டிகையினை அணிந்தார்
தங்கள் பாலினுஞ் செல்லுதற் கஞ்சுறுந் தமியேன்
இங்கு நின்இளை யா£¢உயிர் கொள்வனோ எவரும்
வெங்க கனற்பொறி யுண்பரோ பசிப்பிணி மிகினும். - 227



1531 - வினைய முன்னிநீ விடுகணை நோக்கியான் வௌ¢ளித்
தனிவ ரைப்பெருஞ் சாரலில் போந்துசா ரதரோ
டுனது தம்பியர் தங்களை விளித்திவண் உய்த்தேன்
முனிவு கொள்ளலை ஐயஎன் னிடையென மொழிந்தான். - 228



1532 - அந்த கன்மொழி வினவலும் ஐயனுக் கிளவல்
நந்து யர்க்கடல் சுவற்றினை கயிலையின் நமர்கள்
வந்த தன்மையைத் தேற்றில மயங்கியீண் டுற்றாம்
புந்தி கொள்ளலை யாவது நீயெனப் புகன்றான். - 229



1533 - புகல லுற்றபின் விடைகொண்டு கூற்றெனும் புத்தேள்
உவகை தன்னொடு தன்புரத் தேகினன் ஒன்னார்
இகலை வெ·கியே பூதரும் துணைவரும் ஏத்த
நிகரி லாதவன் அன்னதோர் களத்திடை நின்றான். - 230



1534 - நின்று மற்றிவை நாடிய ஒற்றா¢நீள் நகரில்
சென்று சூரனைத் தொழுதுநின் மதலைபோர் செய்து
வென்றி மொய்ம்பினன் விடுத்திடு வீரன்மாப் படையால்
பொன்றி னான்பொடி யாகிவீழ்ந் தனனெனப் புகன்றார். - 231



1535 - வேறு
அக்கா லைதனில் அவுணர்க் குளெலாம்
மிக்கான் புவியின் மிசைவீழ்ந் தயரா
எக்கா லுமுறா தவிடர்க் கடலுட்
புக்கான் மெலிவோ டுபுலம் புறுவான். - 232



1536 - உண்ணே யமதாம் உயிரே உறவே
கண்ணே மணியே கனல்மா முகனே
விண்ணே கினையோ இவண்மீள் கிலையால்
எண்ணேன் உயிர்வாழ்க் கையையிங் கினியே. - 233



1537 - எந்தைக் கிளையான் தனையிந் நகரின்
வந்துற் றதொர்தூ தன்மலைந் திடலான்
நொந்துற் றனைமெய் யுநுடங் கினையால்
அந்தத் துயர்இங் ஙனமா றியதோ. - 234



1538 - தேறா இகல்செய் திடுதே வரெலாம்
மாறா மகிழ்வுற் றிடவைத் துமனத்
தாறா இடர்என் வயின்ஆக் கினையால்
கூறாய் இதுவுங் குமரற் கியல்போ. - 235



1539 - காரோ திமருங் குளகா ரணனோ
சீரோ திமனோ திருமா லவனோ
நேரோ தியவொற் றடநீ முடிகென்
றாரோ தினரோ அதறிந் திலனே. - 236



1540 - பொய்விட் டிடுதூ துவர்போ ரிடைநீ
மெய்விட் டனையென் றுவிளம் பினரால்
நெய்விட் டவயிற் படைநே ரலன்முன்
கைவிட் டெனையே குவதுன் கடனோ. - 237



1541 - தூதா னவன்வா ளிதுணித் திடவிண்
மீதே கினையென் றுவிளம் பினர்அப்
போதே அதுணர்ந் துபொறுத் தனனால்
ஏதே துபொறா தினமென் னுயிரே. - 238



1542 - ஆவா தமியேன் அயர்வுற் றிடவே
மூவா இளமைந் தமுடிந் தனையே
ஓவா துமகப் பெறவோங் குதவத்
தேய்வார் களுமுண் டுகொல்இன் னமுமே. - 239



1543 - எல்லே உனைநம் புவதென் அகல்வாய்
சொல்லே துமுரைத் திலைதுன் புறுவேன்
கல்லே புரைநின் கவின்மார் பதனை
வல்லே தழுவிக் கொளவந் தருளே. - 240



1544 - செய்யாய் கரியாய் திருவே சிறுவா
மெய்யா ருயிரே விடலாய் அடல்வேற்
கையாய் அரசே களிறே தமியேற்
கையா வெனைநீ யும்அயர்த் தனையோ. - 241



1545 - என்றின் னனபன் னியிரங் குதலும்
நன்றன் னையதோர்ந் துநடுக் கமுறாத்
துன்றுந் துயரக் கடல்துன் னினளால்
அன்றந் நகர்மிக் கதழுங் குரலே. - 242

ஆகத் திருவிருத்தம் - 1545
------

9. மூவாயிரர் வதைப் படலம்* (1546 - 1633)

( * நாலாநாட் பகலே மூவாயிரவர் வதை நிகழந்ததாகும்.)



1546 - ஆயதோர் காலைமூ வாயிர ரத்தொகை
மேயின மைந்தர்கள் வினவி ஈதெலாம்
மாயிரு விசும்பினை அளாவு மன்னவன்
கோயிலை யடைந்தனர் குழுவொ டேகினார். - 1



1547 - துன்னுறு பழியெனும் சூறை எற்றிட
இன்னலந் தெண்டிரை எறிய வைகிய
மன்னியல் நோக்கியே வணக்கம் செய்தெழீஇ
முன்னர்நின் றினையன மொழிதல் மேயினார். - 2



1548 - உரமிகும் இலக்கரும் ஒழிந்த எண்மரும்
பெருவிறல் மொய்ம்பனும் பிறரும் உற்றுழி
எரிமுக னொருவனை ஏவி னாய்அவன்
செருவினை அவரொடு செய்ய வல்லனோ. - 3



1549 - வலியவர் தம்மையும் வரம்பின் மிக்குறின்
மெலியவ ராயினும் வென்று போவரால்
உலகினில் வழக்கமீ துணர்ந்தி லாய்கொலோ
கலைபயில் கற்புடைக் காவல் மன்னனே. - 4



1550 - ஒட்டலர் குழுவினுள் ஒரும கன்றனை
விட்டனை மேல்வரும் வினையம் ஓர்ந்திலை
அட்டுறு தா£¤னாய் அமரில் அங்கவன்
பட்டனன் என்றிடிற் பரிதற் பாலையோ. - 5



1551 - தீமுகன் ஒருவனுக் கிரங்கித் தேம்பலை
யாமுளம் இரணியன் இன்னும் உற்றுளன்
தாமரை மகிழ்நனைத் தளைப டுத்திய
கோமகன் உளன்ஒரு குறையுண் டாகுமோ. - 6



1552 - நண்ணல ராயினோர் நலிந்து செற்றிடக்
கண்ணகல் தேர்பரி களிறு தானவர்
எண்ணில மாய்ந்தவென் றிறையும் ஆகுலம்
பண்ணலை ஐயஅப் பரிசு கேட்டிநீ. - 7



1553 - ஏழெனுங் கடல்வறந் திடினும் நின்னடி
சூழ்தரு படைக்கொரு தொலைவும் இல்லையால்
ஊழியும் அழிகுறா ஒருவ நீயிவண்
பீழையின் உறுவதும் பெருமைப் பாலதோ. - 8



1554 - நின்றுவா னளவெலாம் நிவந்த மேருவாங்
குன்றினோர் தினைத்துணை குறைந்த தன்னதால்
துன்றுநந் தானையுள் துன்ன லார்பொர
இன்றுகா றாகவே இறந்த சேனையே. - 9



1555 - சிறந்திடு தலைமையுந் திறலும் ஆக்கமும்
மறந்தனை யாகியே வலிய னாகுநீ
இறந்தவர் தமைநினைந் திரங்கற் பாலையோ
புறந்தரு கின்றதோ ரமரர் போலவே. - 10



1556 - அண்டர்தம் முதல்வனை அயனை மாயனைச்
சண்டனைப் பவனனைத் தழலை யாரையும்
விண்டொடர் செலவினில் விரைந்து பற்றியே
கொண்டணை கின்றனம் குறிப்ப தாகுமேல். - 11



1557 - விண்ணினை அலைக்கவும் மேரு வெற்பொடு
மண்ணினை மறிக்கவும் வடவை மாற்றவும்
எண்ணினை என்னினும் யாங்கள் எந்தைநின்
உண்ணினை வின்படி முடித்தும் ஒல்லையில். - 12



1558 - பன்னுவ தென்பல பணித்தி யாங்கள்போய்
முன்னுறு பூதரை முரண்கொள் வீரரைப்
பின்னுறு கந்தனைப் பிறரை ஈண்டொரு
கன்னலின் வென்றுநின் கழல்கள் காண்டுமால். - 13



1559 - என்றிவை புகறலும் இடுக்கண் நீங்கியே
நன்றிது மைந்தர்காள் நடமின் போர்க்கென
வன்றிறல் முதல்வனை வணங்கிக் கைதொழா
நின்றவர் ஏவரும் நீங்கி னாரரோ. - 14



1560 - வேறு
வன்னச் சிலைகொண் டனர்வான் கவசந்
துன்னுற் றிடுவித் தனர்தூ ணியினை
வென்னிற் செறிவித் தனர்வெவ் விரலிற்
பொன்றுற் றிடுபுட் டில்புனைந் தனரால். - 15



1561 - சீர்புக் குறுகை படைசெங் கைகொளாத்
தார்புக் கமர்தும் பைதனைத் தரியா
மார்புக் கலமாக் கலன்வர்க் கமிடாத்
தேர்புக் கனர்வந் தனசே னைகளே. - 16



1562 - சங்கங் கள்முழங் கினதண் ணுமைகோ
டெங்கெங் குமியம் பினவேண் படகந்
துங்கங் கெழுபே ரிதுவைத் தனவால்
அங்கங் குருமுற் றனவா மெனவே. - 17



1563 - அவுணப் படையெண் ணிலஆற் றல்மிகுங்
கவளக் கரிஎண் ணிலகா மருசீர்
இவுளித் தொகைஎண் ணிலவீட் டமுறா
உவணுற் றிடுதே ரும்உலப் பிலவே. - 18



1564 - முழங்குற் றனபல் லியமும் மதமாத்
தழங்குற் றனதேர் ஒலிதந் தனவால்
அழுங்குற் றனவாம் பரியாங் கவைகள்
விழுங்குற் றனபா ரொடுவிண் ணினையே. - 19



1565 - நீடுற் றிடுதேர் களின்நீள் துவசம்
ஆடுற் றனதா ரில்அளித் தொகுதி
பாடுற் றனவெங் கொடிபா றுமிசை
கூடுற் றனகூ ளிகுனித் தனவே. - 20



1566 - தொகையா னைகடம் மொடுசூழ் கரியின்
தகையா யினதா னவர்தம் முருவஞ்
சிகையா ரழலா யினசென் னியெழும்
புகையா னதுவான் எழுபூ ழியதே. - 21



1567 - இப்பான் மையதா கியெழுந் துபடை
அப்பால் விரவுற் றுழிஅன் னதுகண்
டொப்பா ருமில்சூ ரன்உகந் தருள்கூர்
மெய்ப்பா லகர்சென் றனர்வெய் தெனவே. - 22



1568 - மூவா யிரர்தா னைகள்முந் துசெல
ஏவா மெனவெம் மைகொடே குதலுந்
தேவா னவர்கண் டனர்சிந் தைவெரீஇ
யாவா வெனஅஞ் சியழுங் கினரே. - 23



1569 - அக்கா லையின்மூ வகையா யிரரும்
மெய்க்கார் புவிசென் றுவிரைந் தனபோல்
தொக்கா டல்புரிந் திடுதொல் நிலமேற்
புக்கார் அதுகண் டனர்பூ தர்களே. - 24



1570 - எதிர்கின் றனர்பூ தர்களேற் றனரால்
முதிர்கின் றசினங் கெழுமொய் யவுணர்
அதிர்கின் றனபே £¤கள்அண் டமெலாம்
பிதிர்கின் றனநே மிபிளந் ததுவே. - 25



1571 - வாள்கொண் டெறிகின் றனர்வல் லெழுவுத்
தோள்கொண் டிடுவெங் கதைதூண் டினரால்
தாள்கொண் டசிலைக் கணைதாஞ் சொரிவார்
நீள்கொண் டலையன் னநிசா சரரே. - 26



1572 - சூலப் படைவிட் டனர்தொல் பரிதிக்
கோலப் படைவிட் டனர்குந் தமுடன்
ஆலப் படைவிட் டனர்ஆ டுகுறட்
சாலப் படைநின் றுதளர்ந் திடவே. - 27



1573 - அடுகுற் றிடுசூ லமடற் கதைகள்
தொடுகுற் றனர்நே மிகள்தூண் டிடுவார்
விடுகுற் றனர்வெற் பினைவெவ் வசுரர்
படுகுற் றனர்ஆர்த் தனர்பா ரிடரே. - 28



1574 - வீழ்கின் றனபட் டிடும்வீ ரருடல்
தாழ்கின் றனசெம் புனல்சாய்ந் தனவால்
ஆழ்கின் றனவே லையில்அங் கதன்வாய்
மூழகின் றனபேய் கொடிமொய்த் தனவே. - 29



1575 - மறக்குஞ் சரமா யினவாம் பரிதேர்
சிறக்கின் றனபட் டனதீ அவுணர்
துறக்கின் றனர்ஆ விதொலைந் திடுவார்
இறக்கின் றகணங்களுமெண் ணிலவே. - 30



1576 - வேறு
காணாவது மூவாயிரர் கனல்வெஞ்சினந் திருகிக்
கோணாகம தெனவேயடுங் கொடும்பூதரைக் குறுகி
நீணாகம தெனவிண்டொட நிமிர்வெஞ்சிலை குனியா
வேணார்குணத் தொலிகொண்டர் இதுகொல்லுரு மெனவே. - 31



1577 - வாங்குற்றிடு சிலைதன்னிடை வல்லேசர மாரி
தூங்குற்றிடு புயலாமெனச் சொரிந்தார்சொரிந் திடலும்
ஏங்குற்றன பூதப்படை இரிகின்றன அதுகண்
டாங்குற்றிடு கணவீரர்கள் அவுணர்க்கெதிர் புகுந்தார். - 32



1578 - தண்டத்தவர் தடந்தேரினைத் தகர்ப்பார்சிலர் தருவின்
துண்டத்தவர் பரிமான்தொகை தொலைப்பார்சிலர் பாகன்
கண்டத்தலை உருளும்படி யுதைப்பார்சிலர் கரத்தால்
அண்டத்தினில் அவர்தேரெடுத் தெறிவார்சிலர் அம்மா. - 33



1579 - எழுக்கொண்டவர் தடமார்பினில் எறிவார்சிலர் எரிவாய்
மழுக்கொண்டவர் சிலையிற்றிட எறிவார்சிலர் வரையின்
குழுக்கொண்டவர் அனிகந்தனைக் கொல்வார்சிலர் வார்வில்
பழுக்கொண்டிடு கவடாமெனப் பறிப்பார்சிலர் முறிப்பார். - 34



1580 - தாவாதுயர் கணவீரர்கள் சமர்இவ்வகை புரிய
மூவாயிர ரெனுமைந்தர்கள் முனியாச்சிலை குனியா
ஓவாதுக முடிவெல்லையில் உருமுச்செறி வனபோல்
தீவாயுமிழ் கனல்வாளிகள் சொரிகின்றனர் தெரிந்தே. - 35



1581 - நேர்புற்றமர் புரிகின்றவர் நெடுந்தீவடிக் கணைகள்
மார்புற்றிடத் தடந்தோளெனும் வரையுற்றிட முகத்தின்
சார்புற்றிடக் கரமுற்றிடத் தாளுற்றிடச் செந்நீர்
சோர்புற்றிடத் தளர்ந்தேமனந் துயருற்றிட நின்றார். - 36



1582 - கலக்கித்தட மலர்சிந்திடு களிறாமென அடல்செய்
விலக்கற்கரு மூவாயிரர் வில்லாண்மையும் வல்லார்
அலக்கட்படு கணவீரர்கள் அழிகின்றது நோக்கி
இலக்கத்தரி லோராயிரர் எரியாமெனச் செயிர்த்தார். - 37



1583 - குன்றேயென மிசைபோகிய கொறறப்புயத் தவன்முன்
சென்றேதொழு திப்போரினைச் சிறயேங்களுக் கருண்மோ
என்றேயுரைத் தனாவேண்டலும் இளையோன்அதற் கிசையா
நன்றேயமா¢ செயநீவிர்கள் நடமின்னென அகன்றா£¢. - 38



1584 - விசயன்சயன் இடபன்கர வீரன்அதி கோரன்
அசலன்அதி குணன்வாமனன் அனந்தன்அக ளங்கன்
வசையில்புகழ் அனகன்சத வலிமாருதன் வருணன்
சசிகண்டகன் முதலாயிரர் சமரின்றலை புகுந்தார். - 39



1585 - முந்துற்றிடும் அவர்யாவரும் மூவாயிரர் எதிர்போய்க்
கந்தக்கட வுளைஅன்பொடு கருத்திற்றொழு தேத்தி
மைந்துற்றிடு தங்கார்முகம் வளையாவடி வாளி
அந்தத்தினி முகிலாமென அவர்மேற்சொரிந் தார்த்தார். - 40



1586 -
ஆர்க்கின்றதொர் பொழுதத்தினில் அவர்வில்வலி தன்னை
மூர்க்கன்தரு மறமைந்தர்கள் மூவாயிரர் காணாக்
கூர்க்கின்றதொர் நெடுவாளிகள் குணிப்பில்லன பூட்டிச்
சூர்க்கொண்டல்கள் தம்மோடமர் புரிந்தாலெனச் சொரிந்தார். - 41



1587 - மூவாயிரர் விடும்வாளிகள் முடுகிக்கடி தேகித்
தாவாவிற லோர்ஆயிரர் தம்வாளியை அடுமால்
மேவார்புகழ விறல்மைந்தர்கள் வெவ்வாளிகள் அவுணர்
ஏவானவை துணியும்படி எதிர்சிந்திடும் விரைவில். - 42



1588 - இவ்வாறமர் புரிகின்றுழ இலக்கத்தவர் தேரைத்
தெவ்வாகிய மூவாயிரர் சிதைவித்தனர் சரத்தால்
அவ்வாறுதெ ரிந்தேயெமர் அவுணன்தரு மைந்தர்
கைவார்சிலை யொடுதேரினை அழித்தார்கணை தூண்டி. - 43



1589 - இலக்கத்தவர் எதிர்கின்றவர் ஏமப்படு தேரைச்
சிலைக்கட்படு நெடுவெங்கணை சிந்திச்சிதை வித்தே
நிலக்கட்பட மூவாயிரர் தொகைதன்னையும் நிறுவி
மலைக்கட்படும் அரிபோற்புடை வருதேரிடைப் புகுந்தார். - 44



1590 - சிலைபோய்க்கட விச்சென்றிடு தேர்போயடல் செய்யும்
கொலைபோயனி கம்போயுளங் கொள்ளும்பெரு மிதத்தின்
நிலைபோய்வெகு ளுற்றேபுவி நின்றோர்தமைப் பிணித்த
வலைபோகிய மானேயென வளைத்தார்வய மைந்தர். - 45



1591 - வேறு
பொலம்படு தேரொடு பொன்ற வன்மைபோய்த்
தலம்படும் அவுணர்கள் தளர்தல் மேயினார்
இலம்படை வந்துழ ஈதல் சான்றவர்
குலம்படு துயரொடு குறையும் தன்மைபோல். - 46



1592 - பறித்தனர் வரைகளைப் பழும ரம்பல
முறித்தனர் வியர்பபுறு மொய்ம்பர் தம்மிசைச்
செறித்தனர் அண்டமும் திசையும் ஞாலமும்
மறைத்தனர் அமரரும் மருட்கை எய்தினார். - 47



1593 - தெவ்வரை யாகிய சிறார்கள் தொன்மரங்
கைவரை வீசலுங் கணைகள் தூண்டியே
இவ்வரை யெனுங்கணத் திறுத்து வீட்டினார்
ஐவரை வென்றிகொள் அனிக வீரரே. - 48



1594 - அட்டடல் கொண்டிடும் அவுணர் இவ்வகை
விட்டன கிரியெலாங் கணையின் வீட்டியே
நெட்டழற் பகழிகள் நிறத்தின் மூழ்குறத்
தொட்டனர் உறுப்பெலாந் துளைத்தல் மேயினார். - 49



1595 - துளைத்திடு கின்றுழிச் சோரி சாய்ந்திட
விளைத்தனர் ஒருசிலர் இரிந்திட் டார்சிலர்
களைத்தனர் ஒருசிலர் கனன்று நின்றுபோர்
விளைத்தனர் ஒருசிலர் பிறங்கல் வீசுவார். - 50



1596 - தேவரை வென்றுளார் சிலவர் மால்வரைக்
காவலர் தேரினைக் கரங்க ளாலெடா
மேவரும் புணரியுள் வீசி யார்த்தனர்
ஓவென அமரர்கள் புலம்பி யோடவே. - 51



1597 - நீசர்கள் ஒருசிலர் நேமி சென்றிட
வீசிய தேரினும் விரைவின் நீங்குறாக்
காசினிப் பாலராய்க் கார்மு கம்வளைஇ
ஆசுக மழைசொரிந் தார்த்துப் பொங்கினார். - 52



1598 - மீண்டிடு பொருநர்கள் விசிக மாமழை
தூண்டிட அவுணர்கள் தொகையிற் பற்பலர்
காண்டலும் வடவையின் கணத்திற் சீறியே
ஆண்டெதிர் புகுந்தனர் அசனி ஆர்ப்பினா£¢. - 53



1599 - மறத்தொடு மருத்தின மரங்கொள் கொம்பரை
இறுத்திடு தன்மைபோல் எந்தை பின்வரு
திறத்தவர் சிலைகளைச் செங்கை வன்மையாற்
பறித்தனர் முறித்தனர் படியில் வீசினார். - 54



1600 - பற்றலர் கொடுமரம் பறித்துச் சிந்துழிச்
செற்றமொ டெம்பிரான் சேனை வீரர்கள்
மற்றவ ரும்பதை பதைப்ப மாண்கையால்
எற்றினர் அனையரும் இடியிற் றாக்கினார். - 55



1601 - பரவிய உவரியும் பாலின் வேலையுந்
திரைகளை எதிரெதிர் சிதறி யார்த்தெழீஇப்
பொருதிற மேயெனப் பொருவில் மற்றொழில்
இருதிற வயவரும் மிகலி ஆற்றினார். - 56



1602 - கொடுந்தொழி லாரொடு கொற்ற வீரர்கள்
அடைந்தனர் இவ்வகை யாண்மைப் போரினைத்
தொடர்ந்துநின் றியற்றியே தொல்லை வன்மைபோய்
உடைந்தனர் விசயன்அங் கொருவன் அன்றியே. - 57



1603 - இசையுறு தமரெலாம் இரிந்து போதலும்
விசயனே யெனப்படும் வீரன் சீறியே
வசையுறும் அவுணர்கோன் மகாரைக் கூற்றுவன்
திசையுறு நகரிடைச் செலுத்து வேனென்றான். - 58



1604 - வேணியின் மதியுடை விமலன் நல்கியே
வேணுறு வரிசிலை ஈறி லாதது
தூணியி னிடையுறத் துன்னிற் றன்னதைப்
பாணியில் எடுத்தனன் சமரியில் பாணியான். - 59



1605 - கரதலத் தெடுத்திடு கார்மு கந்தனை
விரைவொடு கோட்டியே விசயன் என்பவன்
ஒருதனி மாருதத் தோடிச் சூழ்வுறாச்
சரமழை பொழிந்தனன் அவுணர் தங்கள்மேல். - 60



1606 - கரங்களை அறுத்தனன் கழல்கள் ஈர்ந்தனன்
உரங்களை அறுத்தனன் உயர்திண் டோளொடு
சிரங்களை அறுத்தனன் சிலரைக் கானிடை
மரங்களை அறுத்திடும் வண்ண மென்னவே. - 61



1607 - அற்றன உறுப்பெலாம் அணுகித் தம்மில்வந்
துற்றன கூடிய வுணர்வும் ஆவியும்
மற்றவர் எழுந்தனர் வாகை வீரன்மேல்
பொற்றைக ளாயின பொழிந்து போர்செய்தார். - 62



1608 - தலையொடு கரங்களும் தாளுந் தோள்களும்
மெலிவொடு துணிந்தவர் மீட்டுங் கூடினர்
அலர்தரு பங்கயத் தண்ணல் தன்னிடை
வலிதவர் பெற்றிடு வரத்தின் தன்மையால். - 63



1609 - கண்டமும் மொய்ம்பருங் கழலும் வாளியால்
துண்டம தாயினர் தொக்கு மேயினார்
சண்டவெங் கால்பொரத் தணந்து சிந்திய
தெண்டிரை நெடும்புனல் மீட்டும் சேர்தல்போல். - 64



1610 - பன்னரும் திறலினான் பகழி பாய்தொறும்
மன்னவன் மைந்தர்கள் மாண்டு தோன்றுவார்
மின்னது வந்துழி விளிந்து வெவ்விருள்
தொன்னிலை எய்தியே தொடர்ந்து தோன்றல்போல். - 65



1611 - கையொடு சென்னியும் கழலும் மார்பமும்
கொய்யுமுன் தொன்மைபோல் கூட மைந்தர்கள்
ஒய்யென எழுந்தனர் உலகில் தேர்வுறில்
செய்யுறு தவத்தினும் சிறப்புண் டாங்கொலோ. - 66



1612 - கண்டனன் விசயனாங் காளை ஆவிபோய்த்
துண்டம தாகியே துஞ்சி னா£¢எழீஇ
மண்டமர் புரிவது மனத்தின் விம்மிதம்
கொண்டனன் பொருதிறல் குறைந்து நின்றனன். - 67



1613 - அகத்திடை விம்மிதம் அடைந்து நின்றுளான்
திகைத்தனன் வரங்கொல்இச் செய்கை என்றனன்
புகைத்தென உயிர்த்தனன் பொங்கு கின்றனன்
நகைத்தனன் இவர்செயல் நன்று நன்றெனா. - 68



1614 - தொட்டிடு பகழியால் துணிந்து போரிடைப்
பட்டவர் எழுந்தனர் பகழி பின்னரும்
விட்டிடின் ஆவதென் மேவ லார்தமை
அட்டிடல் இன்றெனக் கரிது போலுமால். - 69



1615 - அன்னவர் தமையடல் அரிய தாமெனில்
ஒன்னலர் படையொடும் ஒன்றிச் சுற்றியே
பன்னெடு நாளமர் பயின்று நிற்பினும்
என்னுயிர் கொள்வது மௌ¤தன் றாலரோ. - 70



1616 - வென்றிலன் இவர்தமை வென்றி லேன்எனில்
சென்றெதிர் மாற்றலர் செருவில் வன்மைபோய்ப்
பொன்றுதல் பெற்றிலன் பொதுவ னோர்மகன்
கொன்றிடும் உலவையின் கொள்கை யாயினேன். - 71



1617 - பற்றலர் தங்களைப் படுப்பன் யானெனா
வெற்றிகொள் வானென விளம்பி வந்தயான்
செற்றில னாகியே சிலையுங் கையுமாய்க்
கொற்றவ னோடுபோய்க் கூட லாகுமோ. - 72



1618 - மாற்றலர் வரத்தினர் மாயப் பான்மையர்
ஆற்றவும் வலியரென் றறைந்து மீள்வனேல்
தோற்றனன் என்றெமர் துறப்பர் அன்றியும்
போற்றலர் விடுவர்கொல் புறந்தந் தேகவும். - 73



1619 - பித்தரின் மயங்கிலன் உணர்வும் பெற்றுளேன்
எய்த்திலன் வலியொடும் இன்னும் நின்றனன்
வைத்திலன் புகழினை வசையொன் றெய்துவேன்
செத்திலன் இருந்தனன் செயலற் றேனென்றான். - 74



1620 - விண்டினை மாறுகொள் விசயன் இவ்வகை
அண்டரும் துன்புகொண் டகத்தி லுன்னுழி
உண்டொரு செய்கையான் உய்யு மாறெனக்
கண்டனன் துயர்க்கடல் கடக்கும் பெற்றியான். - 75



1621 - ஆறுமா முகப்பிரான் அன்றி இவ்விடை
வேறொரு துணையிலை மெய்மை ஈதெனத்
தேறினன் அவனடி சிந்தை செய்தனன்
மாறிழி அருவிநீர் வழியும் கண்ணினான். - 76



1622 - அண்ணலங் குமரனை அகத்துட் கொண்டுழி
எண்ணிய எண்ணியாங் கெவர்க்கும் நல்குவோன்
விண்ணிடை ஒல்லையின் விசய னென்பவன்
கண்ணிடைத் தோன்றியே கழறல் மேயினான். - 77



1623 - வேறு
கேளிது விசய ஒன்னார் கிளையினை முடிப்பான் உன்னித்
தாளொடு முடியுங் கையும் தடிந்தனை தடிந்த தெல்லாம்
மீளவும் தோன்றிற் றன்றே மேவலர் பெற்ற தோராய்
நீளமர் வயமின் றாகி நின்றனை தளரேல் நெஞ்சம். - 78



1624 - ஏற்றபல் படைகள் தம்மால் இவர்தமைப் பன்னாள் நின்று
வீற்றுவீற் றடுவை யேனும் விளிகிலர் ஒருங்கு வல்லே
ஆற்றல்சேர் படையொன் றுய்க்கின் அனைவரும் முடிவர் ஈது
நாற்றலை யுடையோன் தொன்னாள் நல்கிய வரம தென்றான். - 79



1625 - என்றிவை உரைத்து வள்ளல் இம்பரை அளித்தோன் சென்னி
ஒன்றினை வாங்கி ஏனோர் உளமயல் அகற்றும் எந்தை
வென்றிகொள் படையை நல்கி விசயனுக் களித்து மேவா£¢
பொன்றிட இதனை இன்னே விடுகெனப் புகன்று போனான். - 80



1626 - தேர்ந்தனன் முருகன் வாய்மை சிறந்தனன் மகிழ்ச்சி உள்ளங்
கூர்ந்தனன் ஞமலி யூர்தி கொற்றவெம் படையை வாங்கி
ஆர்ந்தநல் லன்பில் பூசை ஆற்றினன் அதனை யெல்லாம்
ஓர்ந்தனன் அவுணர் தம்முள் ஒருவன் உன்மத்தன் என்போன். - 81



1627 - ஈண்டிவன் நமர்கள் எல்லாம் இசைவரப் படைய தொன்றால்
மாண்டிட அடுவான் போலும் மற்றதன் முன்னர் மாயம்
பூண்டிடு படையால் இன்னோற் சிறுதியைப் புரிவ னென்னா
ஆண்டுதன் னுளத்தில் உன்னி அவுணனப் படையை விட்டான். - 82



1628 - மாயவள் படையை முன்னம் விடுதலும் வள்ளல் நோக்கித்
தீயுமிழ் கின்ற காரி திண்படை செலுத்தச் சென்று
பாயிருள் பரந்து நேரும் படையினைத் தடிந்து முப்பால்
ஆயிரர் தமையுஞ் சுற்றிஅடல் செய்து மீண்ட தன்றே. - 83



1629 - ஒருகணப் பொழுதின் முன்னர் ஒராயிர முப்பா லோருஞ்
செருநிலத் தவிந்தா ரன்ன செய்கையை விசயன் காணா
முருகனைப் பரவி நின்றான் முழுமதி தன்னைக் கண்ட
பொருதிரைப் புணரி யென்ன ஆர்த்தனர் பூத ரெல்லாம். - 84



1630 - ஏமுறும் அவுணர் தானை இறந்திடா தெஞ்சிற் றெல்லாம்
காமரு திசைகள் முற்றும் கதுமென விரிந்து போன
மாமலர் பொழிந்தார் விண்ணோர் மற்றிவை அனைத்தும் நாடிக்
கோமகன் முன்பு சென்றார் குரைகழல் அவுணர் தூதர். - 85



1631 - வெய்யவன் பகைவன் தாதை வியன்கழல் பணிந்து தூதர்
ஐயநின் மைந்தர் முப்பா லாயிரர் தம்மை யெல்லாம்
ஒய்யென இலக்கர் தம்முள் ஒருவனே முடித்தான் ஈது
பொய்யல சரத மென்னப் பொருக்கெனப் புலம்பி வீழ்ந்தான். - 86



1632 - வீழ்ந்தனன் பதைத்துச் சோர்ந்து வெய்துயிர்த் தசைந்து விம்மிப்
போழ்ந்திட நிலத்தைக் கையாற் புடைத்தனன் புரண்டு வெற்பில்
தாழ்ந்திடு மருவி யென்ன இழிபுனல் தாரை பொங்கச்
சூழ்ந்தார் அரற்ற மன்னன் துன்பமேல் துன்பம் வைத்தான். - 87



1633 - அன்னதோ ரெல்லை மைந்தர் அனைவரும் முடிந்த தோரா
மன்னவன் இசைமை நீங்கி மாயிருந் தவிசில் தப்பி
இன்னலின் மறிந்த தென்ன இரவியங் கடவுள் மேல்பால்
பொன்னெடுங் கிரியின் எய்தி ஔ¤யிலன் புணரி வீழ்ந்தான். - 88

ஆகத் திருவிருத்தம் - 1633
------

10. தருமகோபன் வதைப் படலம்* (1634 - 1713)

( * நாலாநாள் இரவு தருமகோபன் வதை நிகழந்ததாகும்.)



1634 - முடிவுறு புதல்வரை முன்னி முன்னியே
இடரினை உழந்திடும் இறைவன் தன்முனம்
படியறு நல்லறப் பகைஞன் போந்திடா
அடிமுறை பணிந்துநின் றறைதல் மேயினான். - 1



1635 - மன்னவர் மன்னநீ மனத்தில் இவ்வகை
இன்னல்செய் தாற்றவும் இரங்கு வாயெனில்
துன்னலர் மகிழுவா¢ சுரர்கள் யாவரும்
நன்னகை செய்குவர் நமரும் வௌ¢குவா£¢. - 2



1636 - முந்துறு மாற்றலர் முனைவெம் போரிடைத்
தந்தையர் விளியினுந் தமர்கண் மாயினும்
மைந்தர்கள் விளியினும் மான வீரர்கள்
சிந்தைகொள் வன்மையிற் சிறிதுந் தீர்வரோ. - 3



1637 - ஏற்றிகல் புரிந்திடும் எமரை வௌவிய
கூற்றுளன் தொன்மைபோற் படைத்துக் கூட்டுவான்
நாற்றிசை முகனுளன் நாமு ளோம்நம
தாற்றலும் இருந்துள அயர்வும் வேண்டுமோ. - 4



1638 - அந்தமில் வெறுக்கையும் அழிவில் ஆயுளும்
நந்தலில் வன்மையும் நடாத்தும் ஆணையும்
இந்திர ஞாலமும் இருக்க எந்தைநீ
புந்தியில் அமரர்போற் புலம்ப லாகுமோ. - 5



1639 - விண்ணவர் சிறையினை விடாது வைத்திடக்
கண்ணிய விரதமுங் கழிந்த மானமும்
நண்ணலர் தங்களை நலியுந் தன்மையும்
எண்ணலை இடையறா திடுக்கண் போற்றுமோ. - 6



1640 - மாற்றல ராகிய அமரர் மானவர்
கோற்றொடி மடந்தையர் குழவிப் பாலகர்
ஆற்றிடு துயருனக் காவ தன்றெனாத்
தேற்றினன் அமைச்சருள் தீமை மிக்குளான். - 7



1641 - வேறு
ஆற்றிடு தருமம் நீத்த அமைச்சன்வந் தினைய வாற்றால்
தேற்றிடு கின்ற காலைச் சிறிதுதன் அவலம் நீத்துக்
கூற்றென யானே சென்று கூடலர் தொகையை விண்மேல்
ஏற்றுவ னென்று சீறி அவுணர்கோன் எழுந்து சென்றான். - 8



1642 - சென்றிடு மன்னர் மன்னன் சேவடி முறையிற் றாழ
இன்றிவண் இருத்தி யானும் அனிகமும் இன்னே யேகி
வன்றிறற் பகைஞர் தம்மை வளைத்துவல் விரைந்து சாடி
வென்றியுற் றிடுவ னென்ன வேண்டினன் அமைச்சர் மேலோன். - 9



1643 - அறந்தவிர் அமைச்சன் வேண்ட அவுணர்கள் முதல்வன் மீண்டு
சிறந்திடு மடங்க லாற்றுஞ் செம்பொன்செய் பீட மேவி
உறைந்தனன் அனைய காலை ஒல்லையில் விடைகொண் டேகிப்
புறந்தனில் வந்து வல்லே போர்ப்பெருங் கோலங் கொண்டான். - 10



1644 - போதகத் தரசு தம்முட் புண்டரீ கப்பேர் பெற்ற
மாதிரக் களிற்றை அன்னோன் வல்லையிற் கொணர்த்தி ரென்னாத்
தூதுவர்க் குரைத்த லோடுந் துண்ணென அனைய ரோடி
மேதகு நிகளம் நீக்கி விடுத்துமுன் னுய்த்து நின்றார். - 11



1645 - புந்தியிற் குறிப்பிற் செல்லும் புண்டரீ கப்பேர் பெற்ற
தந்தியந் தலைவன் மீது தருமத்தை வெகுளும் வெய்யோன்
அந்தமில் படைக ளேந்தி அமைச்சர்கள் பலருஞ் சூழ
இந்திரன் இவன்கொ லென்ன ஏறினன் எழிலி போல்வான். - 12



1646 - அறைந்தன படகம் பேரி ஆர்த்தன விரலை தீபஞ்
செறிந்தன கரிதேர் வாசி தெழித்தன அவுணர் தானை
நிறைந்தன பதாகை ஈட்டம் நெருங்கிய கவிகை வானம்
மறைந்தன எழுந்த பூழி மாதிரம் இருண்ட அன்றே. - 13



1647 - எண்ணிலா வௌ¢ள மாவும் இபங்களும் இவுளித் தேரும்
வெண்ணிலா எயிற்றுச் செங்கண் வீரரும் புடையிற் சுற்றப்
புண்ணுலா முகத்துப் பேழ்வாய்ப் புண்டரீ கத்தை யூர்ந்தே
அண்ணல்மா நகரம் நீங்கிப் போயினன் அறத்தை நீத்தோன். - 14



1648 - அண்டா¢மற் றிதனை நோக்கி அம்மவோ அறத்தை நீத்த
கண்டகன் சிலையொன் றேந்தி மாதிரக் களிறு தன்னுள்
புண்டரீ கத்தை ஊர்ந்து பொருமெனில் இவனை யாற்றல்
கொண்டிடல் அரிதாம் என்ன இரங்கினர் குலைந்த மெய்யார். - 15



1649 - ஆவணம் அனந்தம் நீங்கி அனிகமும் தானு மேகி
மூவிரு முகத்து வள்ளல் முழுதருள் பெற்ற சேனை
காவலன் வெகுண்டு நின்ற களத்திடை அணுக லோடும்
மேவலர் எதிர்ந்தார் என்னா வியன்கழற் பூதர் ஆர்த்தார். - 16



1650 - பொற்றைக ளேந்தி ஆர்க்கும் பூதரை இலக்கர் தம்மைச்
சுற்றுறு துணையி னோரைத் தொல்லைநாள் நகரஞ் செற்ற
கொற்றவன் தன்னை அன்னோர் வலியினைக் கொடியோன் நோக்கி
இற்றது கொல்லோ நந்தம் வாழ்க்கையென் றிரங்கிச் சொல்வான். - 17



1651 - வேறு
பஞைகர்க ளாயினோர் பரவித் தன்மிசை
இகல்செய வருவரேல் இரங்கி ஏங்குதல்
மிகுபழி இங்கிது வினவின் மானவா¢
நகைசெய்வர் பொருவதே நன்று போலுமால். - 18



1651 - எச்சமில் சேனையும் படையும் ஈண்டிய
கைச்சிலை இருந்தது கரியும் ஒன்றுள
தச்சுறு கின்றதென் ஆவ தாகுமால்
பொச்சையர் கடன்நனி பொருமல் கொள்வதே. - 19



1653 - வெல்லினும் செறுநர்முன் வெரிக தீயினும்
அல்லது விளியினு மாக யானினி
மல்லலம் படையொடு மாற்ற லார்மிசைச்
செல்லுவ தன்றியே இரங்கல் சீரிதோ. - 20



1654 - வேறு
கண்ணுறு படையை நோக்கிக் கருத்திடைக் கவலை எய்தி
எண்ணிநின் றயர்தல் வீரர் இயற்கைய தாமோ பின்னர்
நண்ணிய வாறு நண்ண நானினித் தளரேன் என்னாத்
துண்ணெனத் தேறிச் சென்றான் சூரனுக் கமைச்சன் ஆனோன். - 21



1655 - இங்கிது பொழுது தன்னில் எங்கணும் இருட்டு ழாஞ்சூழ்
கங்குலும் பகலும் மாலைக் காலமும் கலந்த தென்ன
அங்கவன் தானை வௌ¢ளத் தவுணரும் பூதர் தாமும்
பொங்கொலிக் கடல்போல் ஆர்த்துப் பொள்ளென அமரின் ஏற்றார். - 22



1656 - வேறு
தலைப்பட எழுக்களில் தண்டில் தாக்கினார்
இலக்குற நேமிகள் கணிச்சி ஏவினார்
மலைக்குவை எறிந்தனர் மரங்கள் வீசினார்
சிலைத்தனர் வயிர்துடி செறிவெம் பூதரே. - 23



1657 - வில்லுமிழ் சரத்தினில் வேலில் வாளினில்
கல்லினில் நாஞ்சிலில் கழுமுள் ஆயதில்
வல்லையந் தனில்உடை வாளில் வச்சிரச்
செல்லினின் நுதிகெழு திகிரி நேமியில். - 24



1658 - தண்டினில் தோமரம் தன்னில் சங்கினில்
பிண்டிபா லத்தினில் ஆற்றப் பீடுமேல்
கொண்டதோர் எழுவினில் பிறவில் கொட்புறா
அண்டரும் அவுணரும் அணிந்து போர்செய்தார். - 25



1659 - அயர்ப்புறு தானவர் அமைச்சர் யாவரும்
வியர்ப்பினில் வந்திடு வெங்கண் வீரரும்
வயப்பெரும் சிலையினை வணக்கி வாளிதூய்ப்
புயற்படு பெயலெனப் பொழிந்து போர்செய்தார். - 26



1660 - பெய்வதொத் தெங்கணும் பெரிதும் வீழ்தலால்
உய்வதெத் தன்மையென் றுலகம் அச்சுற
இவ்வகைத் திறத்தினர் இரண்டு சாரினும்
தெய்வதப் படைகளும் மரபில் சிந்தினார். - 27



1661 - மாய்ந்தனர் பூதரும் வரம்பில் தானவர்
சாய்ந்தனர் கரங்களும் தலையும் சிந்தினர்
வீந்தன கரிபா¤ விளிந்த தேர்நிரை
பாய்ந்தன செம்புனல் பரந்த கூளியே. - 28



1662 - நொந்தனர் இலக்கரும் நோன்மை நீங்கினார்
முந்துறும் அமைச்சர்போ£¢ முயன்று நின்றனர்
அந்திலவ் வேலையில் அதனை நோக்கியே
வெந்திறல் வெய்யவன் வெகுண்டு சென்றனன். - 29



1663 - இடித்தென உரப்பினன் இமைப்பில் எய்திமுன்
வடித்திடு சிலையினை வாங்கித் தானவர்
முடித்தலை பனித்திட முழுதும் யாக்கைகள்
பொடித்தென வழுத்தினன் புங்க வாளியே. - 30



1664 - நீண்டதோர் சிலீமுகம் நெடிது மேலவன்
தூண்டிய காலையில் துணிந்த கையினர்
வீண்டிடு தலையினர் விளிந்த மெய்யினர்
மாண்டனர் அமைச்சர்கள் வறந்த தானையே. - 31



1665 - துறக்கம தலைத்திடு தொலைவில் தானவர்
மறுக்கமுற் றசைந்தனர் வந்து போர்செய
விறற்படு சாரதர் வெகுண்டு மேற்செலா
இறப்புறு வரைபல எடுத்து வீசினார். - 32



1666 - வீசிய வேலையில் வெதும்பி விம்மியே
மாசுறு தானவர் வாகை சிந்தியே
ஆசறு போனகத் தட்டில் சூடுறு
பூசைய தாமென உடைந்து போயினார். - 33



1667 - இடைந்தனர் ஆகியே அவுணர் யாவரும்
உடைந்தனர் போதலும் உலப்பில் பூதர்கள்
படர்ந்தனர் தெழித்தனர் பையுள் மாலையில்
தொர்ந்தனர் பற்றினர் தொலைத்தல் மேயினார். - 34



1668 - கண்டனன் ஆங்கவை அறத்தைக் காய்பவன்
புண்டிகழ்ந் தனையகட் பூதர் மேற்செலா
விண்டொடர் பெருந்தனு வாங்கி வெவ்வுயிர்
உண்டிடு சரந்தெரீஇ உலப்பின் றேவினான். - 35



1669 - ஏவிய நோன்கணை யாவும் ஏற்றெழு
தீவிழிப் பூதர்பால் சேறல் இந்திரன்
வாவிய வூர்திகள் வாரி நேமியில்
தூவிய துள்ளியின் தோற்றம் போன்றதே. - 36



1670 - கைச்சிலை உகைத்திடு கணைகள் யாவையும்
நச்சென விடுத்தலும் நடுங்கிப் பூதர்க்ள்
அச்சுற மெலிந்தனர் அமரர் கோமகன்
வச்சிரம் எய்திய வரைகள் மானவே. - 37



1671 - வேறு
வானவர்கள் கோமகன் வயக்களிறி தென்னத்
தானவர்கள் போற்றுதரு மப்பகைஞன் ஊர்ந்த
ஆனையது பூதர்தமை அங்கைகொடு வாரி
ஊனொடுயிர் சிந்திட உடற்றியதை அன்றே. - 38



1672 - கோடதொரு நான்குகொடு குத்தியது தாளின்
ஊடுறமி தித்தவண் உழக்கியது வாலால்
பாடுற எறிந்தது பனைக்கைய துகொண்டே
வீடுறமுன் எற்றியது வீரர்படை தன்னை. - 39



1673 - மாறகலும் வெங்கரியிவ் வாறடல்செய் காலை
வீறுகெழு சாரதர்கள் வெற்புமிசை வீசி
ஊறுசெய அங்கதின் உலப்பில்கணை ஓச்சி
நாறுநடு வார்தொகையின் நண்ணினர்கள் வீரா¢. - 40



1674 - காயமுழு தொன்றிய கணக்கில்படை யாவும்
மூயதவ ளக்களிறு முற்றுமெழு சோரி
பாயவணை கிற்பது பணிக்குழுவு கவ்வச்
சேயபணி சுற்றமறை திங்கள்படர்ந் தென்ன. - 41



1675 - வெந்திறல்கொள் புண்டரிக வேழமிது தன்மை
நொந்ததெனி னுந்தனது நோன்மையழி யாதாய்
முந்தியிடு சேனையை முருக்கவது நோக்கித்
தந்திநிரை சாரதர் தமைத்தடித லுற்ற. - 42



1676 - கண்டைகெழு தாரினொலி கல்லென விரைப்ப
அண்டமுடைந் தென்னநனி ஆர்த்தவுணன் ஊரும்
புண்டரிக வெங்களிறு போர்த்தொழல் இயற்ற
உண்டைகெழு பூதநிரை ஒய்யென உடைந்த. - 43



1677 - தண்டமுடை கின்றசெயல் தன்னைவிறல் வெய்யோன்
கண்டனன் அழன்றுதன கார்முகம தொன்று
கொண்டனன் எடுத்தது குனித்தழலின் வாளி
அண்டர்பகை யூர்தியின் அடைச்சிநனி ஆர்த்தான். - 44



1678 - ஆர்த்தடரும் வேலையில் அடற்களிறும் அங்கோர்
மூர்த்தமயர் வுற்றது முனிந்தவுணர் கோமான்
பார்த்திறையின் நூறுகணை பாலமிசை ஓச்சத்
தேர்த்துலவு சோரியொடு தேர்மிசை இருந்தான். - 45



1679 - இருந்ததிற லோன்மிசையொ ரெ·கமது வாங்கி
விரைந்துதரு மப்பகை விடுத்திடலும் நோக்கி
மருந்தெனமுன் வந்துதிறல் வாசவன்அவ் வைவேல்
முரிந்துதுணி யாகவொர் முரட்கணை தொடுத்தான். - 46



1680 - மத்தகய மன்னதிறல் வாசவன் விரைந்தே
பொத்திரம தொன்றுகொடு போரயில் முருக்கிக்
குத்திரம தொன்றவுணர் கூவிவெருக் கொள்ள
அத்திரமென் மாரிகொட வன்றனை மறைத்தான். - 47



1681 - மறைத்தலும் மறப்பகைஞன் வாளிமழை தூவிக்
குறைத்தனன் அளப்பில்கணை ஏனவை குழீஇப்போய்ச்
செறுத்தவன தாகமிசை சென்றுசெருக் கின்றி
விறற்கவச நக்குபு விளிந்துபுடை வீழ்ந்த. - 48



1682 - வேறு
மீண்ட வேலையின் வெய்ய சூழச்சியோன்
மாண்டு ளானென வாகை வீரன்மேல்
பூண்ட யங்குறு பொன்னந் தண்டமொன்
றீண்ட வீசினான் யாரும் அஞ்சவே. - 49



1683 - எழுவின் நீள்கதை இமைப்பில் சென்றவன்
பழுவின் மார்பகம் பட்ட வேலையின்
விழும நோயுயு£ விம்மி னானரோ
வழுவை மேலையோன் வயத்தின் மேவவே. - 50



1684 - கருத்தில் நல்லறங் காய்ந்த வன்செயல்
தெரித்து நின்றிடும் திறல்கொள் வாகினான்
உருத்து நோக்கியே உரையும் தன்னுளக்
கருத்தும் பிற்படக் கடிது செல்லுவான். - 51



1685 - நின்னில் ஐயநின் நேர லன்புயந்
தன்னை யாத்துநிற் றருவம் யாமெனப்
பன்னு மானவர் பௌவம் நீத்தொராய்
முன்னு தானவர் முதல்வன் நேர்புக. - 52



1686 - எதி£¤ லாமையால் யாரும் அஞ்சவே
அதிரு நோன்கழல் ஆடல் மொய்ம்பனை
மதியில் தானவன் மழைகள் மின்குழுச்
சிதறி யென்னத்தீச் சிந்த நோக்கினான். - 53



1687 - நோக்கி நீகொலோ நோன்மை யோடெனைத்
தாக்கு மாறுவந் தனையை யானுனை
யாக்கை சிந்திய அமைந்து நின்றனன்
காக்க வல்லையேல் காத்திநீ யென்றான். - 54



1688 - மொழியும் ஆடல்சேர் மொய்ம்பன் கேட்டிது
விழுமி தாரினும் வெற்றி பெற்றனன்
அழிவ னேநினக் காடல் கொளவன்யான்
கழியை நீந்துதல் கடலில் பாடதோ. - 55



1689 - மற்றுன் வன்மையும் மதர்ப்பும் நின்பெருங்
கொற்ற மானதும் வரத்தின் கொள்கையும்
இற்றை வைகலே ஈறு செய்வன்நீ
கற்ற போரினைக் கடிது செய்கென. - 56



1690 - வேறு
கானக்களி வரிபம்பிய கமழ்தார்புனை அகலம்
வானக்கிறை தனதூர்திகள் மரபோடுசென் றிசைக்கும்
தீனக்குர லெனநாணொலி திசையெங்கணும் செல்லக்
கூனற்சிலை தனையொல்லையில் தருமப்பகை குளித்தான். - 57



1691 - மற்கொண்டிடும் மிடல்மொய்ம்புள மதியில்லவன் ஒருபால்
எற்கொண்டேழு களிற்றின்மிசைச் சிலைவாங்கினன் இருத்தல்
கற்கொண்டதொர் வௌ¢ளிக்கிரி மிசைகாணிய கணைதூய்
விற்கொண்டொரு பசுங்கார்முகில் மேவுற்றென லாமால். - 58



1692 - அதுவன்றியும் அவனுந்திய அடுவெங்களி றலர்தண்
கதிரின்குழு முழுதொன்றுபு ககனந்தனில் எழுசெம்
மதியந்தன தொருபங்கையொர் வயவெம்பணி நுகரப்
புதிதொண்பிறை யதுவொன்றிடை புகநின்றது பொருவும். - 59



1693 - முந்தேயவன் எடுக்கின்றதொர் முரண்வெஞ்சிலை குனியாக்
கந்தேயென நிமிர்தோளுடைக் கடுஞ்சூழ்ச்சியன் ஒழுகும்
செந்தேனுறழ் குணத்திற்சரம் செலுத்தாத்திறன் மொய்ம்பற்
கந்தேயுமெய் வௌ¤யின்றென அவனைக்கரந் தார்த்தான். - 60



1694 - கரக்கின்றவன் விடுவாளிகள் கந்தன்படை ஞன்மெய்
அரக்குன்றுபட் டயின்மாய்ந்தவை அயல்வீழந்தன கண்டான்
இரக்கின்றவர்க் குதவான்கரந் தேற்காத்திரு வினர்பால்
பரக்கும்பொரு ளுகுத்தன்னதிற் பயன்பெற்றிலன் எனவே. - 61



1695 - அயில்சிந்திட முரண்வெங்கணை அயல்வீழ்தலும் அடுபோர்
முயலுந்திறல் கெழுமொய்ம்பினன் முனிந்தெ·கமொன் றெடுத்துப்
புயலன்னதொர் வடிவத்தவன் பூணாருநெஞ் செறியச்
செயலன்னது கண்டாங்கெதிர் தீவாளிகள் உய்த்தான். - 62



1696 - உய்க்குஞ்சுடர் வடிவாளிகள் ஒருங்கேதவ முருக்கி
மைக்கொண்டலை நிகர்மேனியன் மனந்துண்ணென அணுகி
மெய்க்கொண்டதொர் நெடுஞ்சாலிகை விளியும்படி வீட்டிப்
புக்குள்ளுற மூழ்கித்தனி புறம்போந்தது விரைவில். - 63



1697 - புறம்போதலும் இகல்மந்திரி பொருமிப்புகை உயிர்த்து
நிறம்போகிய செந்நீரொடு நினைகின்றி லன்இருப்ப
மறம்போகிய தனிவெங்கரி மகிணன்செய லோரா
அறம்போகிய மனத்தான்றனை அடவுற்றதை யன்றே. - 64



1698 - முந்துற்றிடு கரிதிண்டிறல் மொய்ம்பன்னி ரதத்தைத்
தந்தத்தொகை கொடுதாக்குபு சமரத்திடை இட்ட
கந்தொத்ததொ ரெழுவொன்றது கைக்கொண்டவன் வலவன்
சிந்தப்புடைத் ததுகாண்டலுஞ் செந்தீயெனக் கனன்றான். - 65



1699 - வையந்தன தீறாதலும் வறிதேயயல் பாயா
மெய்யங்கைய தொன்றாலவன்மேல்வந்திடும் வேழக்
கையங்குறப் பற்றாக்கடங் கலுழுங்கவுண் மோதி
ஒய்யென்றெடுத் தப்பாலையின் உலகம்புக உய்த்தான். - 66



1700 - எறிந்தானெடுத் ததுகாலையில் இபம்விண்ணிடை யேகிப்
பிறிந்தாகவம் இயற்றெல்லையில் பெயர்காலையின அமைச்சன்
அறிந்தான்கயம் இழந்தேன்கொலென் றயராவத னோடு
மறிந்தான்புனை கலந்தன்னொடு மணிமாமுடி சிந்த. - 67



1701 - வீழ்கின்றதொர் களிறாற்றவும் வெருவிப்பதை பதைத்து
மாழ்கின்றது புடைபோகிய மதியில்லவன் எழுந்தே
காழ்கொண்டதொர் கதையொன்றுதன் கைக்கொண்டுரத் தெறியத்
தாழ்கொண்டதொர் கரத்திற்கடுத் தலைகொண்டது தறித்தான். - 68



1702 - வலிகொண்டதொர் தனித்தண்டது மடிவாதலும் மற்றோர்
குலிசந்தனை விடவாங்கெதிர் குறுகக்கரம் பற்றிப்
புலிகண்டதொர் கலைமானெதிர் புக்காலென அவுணர்
தலைவன்றனை அடல்மொய்ம்பினன் தடமார்பிடைப் புடைத்தான். - 69



1703 - மூளாவுருத் தறைகின்றுழி முதலற்றிடு தருப்போல்
வாளாபுவி மிசைவீழதலும் வயமிக்கவன் ஒருகால்
தாளாலுதைத் தனன்அத்துணை தருமப்பகை வீழ்ந்தான்
கேளாகிய அவுணப்படை கெட்டோடிய தன்றே. - 70



1704 - வேறு
விழுந்தயர் புண்டரீக வெங்கரி உயிர்த்து மெல்ல
எழுந்தது தரும கோபன் இறந்தபா டதனை நோக்கி
அழுந்திடும் இன்னல் வேலைக் ககன்கரை கிடைத்தா லென்னத்
தொழுந்திறல் வீரவாகுத் தலைவனை நேர்ந்து சொல்லும். - 71



1705 - செய்யலை வெகுளி எந்தாய் சிறியனை அருளிக் கேண்மோ
பொய்யென நினையல் வாழி புண்டரீ கப்பேர் உள்ளேன்
வையகம் போற்றுஞ் சீரேன் மாதிரங் காவல் கொண்டேன்
கையனித் தரும கோபன் கடுஞ்சிறைப் பட்டேன் பன்னாள். - 72



1706 - வன்றளை மூழ்கும் தீயென் மதியிலா அமைச்சற் போற்றி
இன்றுகா றூர்தியானேன் ஏவின பலவும் செய்தேன்
ஒன்றுநான் மறுத்த துண்டேல் உயிர்குடித் தூனும்வல்லே
தின்றிடு மென்றே அஞ்சித் திரிநதனன் செயல்வே றில்லேன். - 73



1707 - எட்டுள திசையில் வைகும் அரக்கர்தன் இகழ்ந்தா ரென்று
மட்டறு வெகுளி வீங்கி மற்றெனை உர்ந்து தொன்னாள்
கிட்டினன் அவரை யெல்லாங் கிளையொடு முடித்தோன் தன்னை
அட்டனை நீயே யல்லால் அவனையார் அடுதற் பாலா£¢. - 74



1708 - புந்தியில் அறத்தைக் காயும் புரைநெறி அமைச்சன் தன்னை
வந்துநீ அடுத லாலே வானவர் கவலை தீர்ந்தார்
உய்ந்தனன் சிறந்தேன் எற்கும் ஊதியம் இதன்மேல் உண்டோ
முந்துறு தளையின் நீங்கி முத்திபெற் றாரை ஒத்தேன். - 75



1709 - தீதுகொள் பவத்தின் நீரால் அவுணர்தஞ் சிறையிற் புக்கேன்
மாதவஞ் செய்தேன் கொல்லோ மற்றுனை எதிரப் பெற்றேன்
ஆதலின் உய்ந்தேன் என்றன் ஆசையை அளிக்கு மாற்றாற்
போதுவன் தமியன் என்று தொழுதது புண்ட ரீகம். - 76



1710 - புண்டரீ கத்தின் வாய்மை பொருக்கென வினவு வீரன்
அண்டரும் உவகை பொங்க அகலுதி இருக்கைக் கென்ன
விண்டொடர் நெறியிற் சென்றாங் கவுணர்க்கு வெருவ லின்றிப்
பண்டமர் திசையின் நண்ணிப் பரிவற வைகிற் றன்றே. - 77



1711 - மாதிரங் காவல் பூண்ட மதக்கறிற் றரசு செல்ல
ஆதியில் அறத்தைக் காயும் அழிதகன் இறுதி நோக்கிப்
பூதர்கள் ஆர்த்து வீரன் புயவலி புகழ்த லுற்றார்
தூதுவர் அதுகண் டோடிச் சூரனைத் தொழுது சொல்வார். - 78



1712 - தண்டக முதல்வ கேண்மோ தானையும் தானு மேகி
மண்டமா¢ புரிந்து வீர வாகுவால் அமைச்சன் மாய்ந்தான்
உண்டையும் அழித லுற்ற உங்குவன் ஊர்ந்து சென்ற
புண்டரீ கப்பேர் பெற்ற தந்தியும் போய தென்றார். - 79



1713 - வேறு
பழுது டைத்திறன் மந்திரி பட்டசொல் வினவி
முழுது சுற்றிய இன்னலம் புணரியின் மூழ்கி
அழுது யிர்த்துமெய் யுயிர்பதை பதைத்திட அங்கண்
எழுது சித்திரம் பாவைபோல்போல் உணா¢வுபோய் இருந்தான். - 80

ஆகத் திருவிருத்தம் - 1713
------

11. பானுகோபன் வதைப் படம்* (1714 - 1922)

(* ஐந்தாநாள் பானுகோபன் வதை நிகழ்ந்ததாகும்.)



1714 - எள்ளல் செய்தெனைப் பற்றியே சிறையகத் திட்ட
கள்வன் இப்பகல் முடிந்திடும் அன்னது காண்பான்
பொள்ளெ னப்படர் வேன்எனப் புந்திகொண் டவன்போல்
ஔ¢ள ழற்கதிர் வீசியே இரவிவந் துதித்தான். - 1



1715 - சுருதி நீங்கிய அவுணர்கோன் இந்திறந் துயரம்
பெரிதும் எய்தியே இருந்துழக் கண்டனர் பெயர்ந்து
குருதி நோக்குடை ஒற்றரில் ஒருசிலர் குறுகிப்
பரிதி தன்பகை அடிபணிந் தினையன பகர்வார். - 2



1716 - முன்ன மாயமாப் படைக்கலந் தூண்டியே மொய்ம்பு
பன்னி ரண்டுளான் தூதனைப் படையொடும் படுத்துத்
தொன்னெ டுங்கடல் இட்டனை இட்டதைச் சுரர்கள்
அன்ன காலையே விளம்பினர் அறுமுகத் தவற்கே. - 3



1717 - வெங்கண் மால்கரிக் கிளையவன் ஆங்கது வினவிச்
செங்கை வேலினை ஆயிடை இருந்தனன் செலுத்த
அங்க தொல்லையின் மூவிரு புணரிகள் அகன்று
பொங்கு தூயநீர் அளக்கரின் நடுவுபுக் கதுவே. - 4



1718 - புக்க வேலையின் மாயமாப பெரும்படை புறந்தந்
தக்க ணந்தொலை வெய்திய தயர்வுயிர்த் தறிந்து
தொக்க பாரிடர் யாவரும் வீரர்தந் தொகையும்
மிக்க திண்டிறல் வாகுவும் எழுந்திவண் மீண்டார். - 6



1719 - ஆணடவ் வெல்லைவந் திறுத்திடும் வேற்படை அருளி
மீண்டு கந்தவேள் இருந்துழிப் போந்தது விரைவால்
ஈண்டிம் மாநகர் கூற்றியே செறுநர்கள் இகலின்
மூண்டு போர்செய்வான் பு£¤சையுட் புகுந்தனர் முரணால். - 6



1720 - அரண முற்றுளார் இந்நகர் அலைத்தலும் அவற்றைத்
தரணி காவலன் வினவியே தன்னயல் நின்ற
இரணி யன்றனைக் கனல்முகத் தண்ணலை ஏனை
முரணில் மக்களை அமைச்சனை விடுத்தனன் முறையால். - 7



1721 - ஆன காலையில் வந்துவந் தடுசமர் ஆற்றி
மான வேற்பற்படைப் பண்ணவன் தூதனால் மற்றை
ஏனை யோர்களால் முத்திற வீரர்கள் இறந்தார்
மீன மாய்க்கடல் புகுந்தனன் இரணியன் வெருவி. - 8



1722 - மன்னர் ன்னவன் இவையெலாம் வினவியே மனத்தில்
உன்ன ருந்துயர் வேலைபுக் காற்றலா துழந்தான்
இந்ந கர்ப்படை யாவையும் வறந்தன இன்னும்
துன்ன லார்இவண் நின்றனர் என்றிவை சொற்றார். - 9



1723 - சொற்ற வாசகம் வினவலுஞ் சூரியன் பகைஞன்
இற்ற வேகொலாம் நம்பெரும் வாழ்க்கையென் றிரங்கிச்
செற்ற மோடுதன் பெதிரெதிர் மலைந்திடச் செங்கேழ்ப்
பொற்றை யன்னதன் இருக்கையை ஒருவினன் போந்தான். - 10



1724 - போந்து கோநகர் அணுகியே துன்பொடு புணர்ந்த
வேந்தன் மாமலர் அடிகளை உச்சியின் மிலைச்சி
ஆந்த ரங்கமாம் அளியொடு முந்துநின் றவுணா¢
ஏந்தல் இம்மொழி கேண்மியா நன்கென இசைப்பான். - 11



1725 - மாயை தந்ததொல் படையினால் செறுநரை மயக்கித்
தூய நீர்க்கடல் இட்டனன் சுரரது புகல
ஆய காலையில் வேல்விடுத் தவர்தமை மீட்ட
சேயை வெல்வது கனவினும் இல்லையால் தெரியின். - 12



1726 - தெரிந்த மற்றுனக் குரைப்பதென் முற்பகற் செவ்வேல்
பொருந்து கைத்தலத் தாறுமா முகனொடு பொருது
வருந்தி வன்படை ஆற்றலும் இழந்தனை வறிதாய்
இரிந்து மற்றிவண் வருதலால் உய்ந்தனை எந்தாய். - 13



1727 - ஏற்ற தோர்சிலை இழந்தனை மானமும் இன்றித்
தோற்று வந்தனை தொல்வரத் தியற்கையும் தொலைந்தாய்
சீற்ற முற்றிலன் முருகவேள் அவன்சினஞ் செய்யின்
ஆற்று மோவெலா அண்டமும் புவனங்கள் அனைத்தும். - 14



1728 - ஆர ணன்தனை உலகொடும் உண்டுமுன் னளித்த
கார ணன்தனி ஆழியைக் களத்திடை அணிந்த
தார கன்தனை நெடியமால் வரையொடு தடிந்த
வீர வீரனை யாவரே வன்மையால் வெல்வார். - 15



1729 - புல்லி தாகிய விலங்கினைப் படுப்பவர் புதலுள்
வல்லி யந்தனக் குண்டியாய் மாய்ந்திடுங் கதைபோல்
எல்லை யில்பகல் அமரரை அலைத்திடும் யாமும்
தொல்லை நாள்வலி சிந்தியே குமரனால் தொந்தோம். - 16



1730 - கோட லுஞ்சுனைக் குவளையுங் குளவியுங் குரவும்
ஏட லர்ந்திடு நீபமும் புனைந்திடும் இளையோன்
பாட லந்திறல் உரைப்பதென் ஆங்கவன் பணித்த
ஆட லம்புயத் தண்ணலை வெல்வதும் அரிதால். - 17



1731 - நெடிது பற்பகல் செல்லினும் நிரம்புவ தொன்றை
இடைவி டாமலே முயன்றுபெற் றிடுகின்ற தியற்கை
உடல்வ ருத்தியும் தங்களால் முடிவுறா தொன்றை
முடிவு மீதெனக் கொள்வது கயவர்தம் முறையே. - 18



1732 - ஆற்றல் ந்தரை இழந்தனை நால்வகை அனிகத்
தேற்றம் அற்றனை என்னுடன் ஒருவன்நீ இருந்தாய்
மேற்றி கழந்தநின் குலத்தினை வேரொடு வீட்டக்
கூற்றம் வந்ததும் உணர்கிலை இகலைமேற் கொண்டாய். - 19



1733 - வெஞ்ச மஞ்செய வல்லவர் கிடைத்திடின் மிகவும்
நெஞ்ச கந்தளிர்ப் பெய்துவன் நோலர் சமருக்
கஞ்சி னேன்என்று கருதலை அரசநீ இன்னும்
உஞ்சு வைகுதி யோவெனும் ஆசையால் உரைத்தேன். - 20



1734 - உறுதி ஒன்றினி மொழிகுவன் தொன்னகர் உள்ளார்
சிறைவி டுக்குதி நம்மிடைச் செற்றம தகற்றி
அறுமு கத்தவன் வந்துழி மீண்டிடும் அதற்பின்
இறுதி யில்பகல் நிலைக்குநின் பெருவளம் என்றான். - 21



1735 - வெம்பு தொல்கதிர் வெகுண்டவன் உரைத்தசொல் வினவித்
தும்பை யந்தொடை மிலைச்சிய மணிமுடி துளக்கி
மொய்ம்பும் ஆகமுங் குலுங்கிட முறுவலித் துயிர்த்து
நம்பி மந்திரச் சூழ்ச்சிநன் றாலென நவில்வான். - 22



1736 - வேறு
என்னிவை உரைத்தாய் மைந்த இன்றியான் எளிய னாகிப்
பொன்னுல குள்ள தேவர் புலம்புகொள் சிறையை நீக்கின்
மன்னவர் மன்னன் என்றே யாரெனை மதிக்கற் பாலார்
அன்னதும் அன்றி நீங்கா வசையுமொன் றடையு மாதோ. - 23



1737 - கூனொடு வெதிரே பங்கு குருடுபே ரூமை யானோர்
ஊமை தடைந்த புன்மை யாக்கையோ டொழியும் அம்மா
மானம தழிந்து தொல்லை வலியிழந் துலகில் வைகுல்
ஏனையர் வசையில் மாற்றம் எழுமையும் அகல்வ துண்டோ. - 24



1738 - தேவரும் மலர்மே லோனுஞ் செங்கண்மால் முதலா வுள்ள
ஏவரும் ஆணை போற்ற இருந்தர சியற்றல் உற்றேன்
மூவரின் முதலா முக்கண் மூர்த்திதன் வரங்கொண் டுள்ளேன்
மேவலர் சிறையை இன்று விடுவனோ விறலி லார்போல். - 25



1739 - பேரெழில் இளமை ஆற்றல் பெறலரும் வெறுக்கை வீரம்
நேரறு சுற்றம் யாக்கை யாவையும் நிலைய வன்றே
சீரெனப் பட்ட தன்றோ நிற்பது செறுநர் போரில்
ஆருயிர் விடினும் வானோர் அருஞ்சிறை விடுவ துண்டோ. - 26



1740 - இறந்திட வரினும் அல்லால் இடுக்கணொன் றுறினுந் தம்பால்
பிறந்திடு மானந் தன்னை விடுவரோ பெரிய ரானோர்
சிறந்திடும் இரண்டு நாளைச் செல்வத்தை விரும்பி யானும்
துறந்திடேன் பிடித்த கொள்கை சூரனென் றொருபேர் பெற்றேன். - 27



1741 - இன்னுமோர் ஊழி காலம் இருக்கினும் இறப்ப தல்லால்
பின்னுமிங் கமர்வ துண்டோ பிறந்தவர் இறக்கை திண்ணம்
மின்னெனும் வாழ்க்கை வேண்டி விண்ணவர்க் கஞ்சி இந்த
மன்னுயிர் சுமக்கி லேன்யான் மாயவன் றனையும் வென்றேன். - 28



1742 - அஞ்சினை போலும் மைந்த அளியநின் இருக்கை போகித்
துஞ்சுதி துஞ்ச லில்லா வரத்தினேன் தொலைவ தில்லை
நெஞ்சிடை இரங்கி யாதும் நினையலை நேர லார்மேல்
வெஞ்சமர் புரியப் போவேன் என்றனன் வெகுளி மேலான். - 29



1743 - இவ்வகை தாதை கூற இரவிதன் பகைஞன் கேளா
உய்வகை இல்லை போலும் உணர்ந்திலன் உரைத்த தொன்று
மெய்வகை விதியை யாரே வென்றவர் வினையிற் கேற்ற
செய்வகை செய்வேன் என்னாச் சிந்தைசெய் தினைய சொல்வான். - 30



1744 - அறிவொரு சிறிதும் இல்லேன் அடியனேன் மொழிந்த தீமை
இறையதும் உள்ளங் கொள்ளா தெந்தைநீ பொறுத்தி கண்டாய்
சிறியதோர் பகுவப் பாலர் தீமொழி புகன்றா ரேனும்
முறுவல்செய் திடுவ தன்றி முனிவரோ மூலப்பின் மேலோர். - 31



1745 - அத்தநீ வெகுளல் நம்மூர் அலைத்திடுங் கணங்கள் தம்மை
வித்தக வன்மை சான்ற விறற்புய னோடும் அட்டுன்
சித்தமும் மகிழு மாறு செய்குவன் விடுத்தி யென்னாக்
கைத்தலம் முகிழ்த்துத் தீயோன் கழலிணி பணிதல் செய்தான். - 32



1746 - பணிந்திடு கின்ற காலைப் பதுமைதன் கேள்வன் செற்றந்
தணிந்தனன் உவகை பெற்றான் தனயநின் உள்ளம் போர்மேல்
துணிந்தது போலும் நன்றால் துன்னலார் தம்மை வெல்வான்
அணிந்திடு தானை யோடும் அகலுதி ஐய என்றான். - 33



1747 - தொடையசை காமர் பொற்றோட் சூரிது புகல மைந்தன்
விடையது பெற்று மீண்டு மேதகு துயரி னோடு
கடிதுதன் கோயில் புக்குக் கடவுளர் பலருந் தந்த
அடல்நெடும் படைக ளெல்£ம் ஆய்ந்தனன் எடுத்தான் அன்றே. - 34



1748 - மையுறு தடங்கண் மாதர் வனமுனை திளைக்கு மார்பின்
மெய்யுறை யொன்று வீக்கி விரல்மிசைப் புட்டில் சேர்த்திக்
கையுற ஒருவில் லேந்திக் கைப்புடை கட்டி வாளி
செய்யுறும் ஆவ நாழி பின்னுற வீக்கி யாத்தான். - 35



1749 - சேமமா யுள்ள எண்ணில் படைகளுந் தேருஞ் சுற்றத்
தாமநீள் கவிகை வேந்தன் தனிமகன் கடையிற் சென்று
காமர்சூழ் கனக வையம் ஒன்றின்மேற் கடிது புக்கான்
ஏமமால் வரையின் உம்பர் எழிலியே றணைந்த தேபோல். - 36



1750 - மற்றது காலை தன்னில் வாம்பரி நிரையுந் தேருங்
கொற்றவெங் களிறும் வீரர் குழாங்களுங் குணிப்பில் வௌ¢ளஞ்
சுற்றின இயங்கள் முற்றுந் துவைத்தன துவச கோடி
செற்றின இரவி செல்லுந் தேயம தடைத்த அன்றே. - 37



1751 - தேரிடைப் புகுந்து நின்றோன் இப்பெருஞ் சேனை வௌ¢ளம்
பாரிடைக் கொண்டு நின்ற புணரியிற் பாங்கர் சூழச்
சூரிடைக் கொண்ட அன்புந் துயரமும் உளத்தை யுண்ணப்
போருடைத் திசையை நோக்கிப் பொள்ளெனப் போதல் உற்றான். - 38



1752 - வேறு
மாவாழ் தெருவு பலகோடிகள் வல்லை நீங்கி
மேவார் பொருத களத்தெல்லை விரைந்து நண்ணி
மூவா யிரரும் பிறரும்முடி வான நோக்கி
யாவா வெனவே இரங்கிக்கலுழ்ந் தல்லல் செய்வான். - 39



1753 - தாளாண்மை மிக்க அசுரன்மகன் தாங்கல் செல்லா
நீளா குலத்தின் அழிகின்றதன் நெஞ்சு தேற்றிக்
கேளா£ தொகைமேற் பெருஞ்சீற்றங் கிளர்ந்து செல்லச்
சூளால் இனைய தொருவாசகஞ் சொல்லல் உற்றான். - 40



1754 - மாசாத்தர் அன்ன வயப்பூதரை மாய வாட்டித்
தேசார்க்கும் வேலோற் கிளையோனைச் செகுத்தி டேனேல்
காசாற் பொலியும் அகல்அல்குலின் காமம் வெ·கி
வேசாக்கள் பின்செல் வறியானில் விளங்க யானே. - 41



1755 - என்னா ஒருசூள் இசையா அவனேக லோடும்
அன்னான வரவு தனைநோக்கி அவுணர் தங்கள்
மன்னாகும் நின்ற மகனாகும் மலைவ தற்குப்
பின்னார் வருவார் எனப்பூதர்கள் பேச லுற்றார். - 42



1756 - பேசுற்ற காலை அவுணப்படை பேர்ந்து சென்றாங்
காசற்ற பூதப் படைதம்மெதிர் ஆர்த்து நேரப்
பூசற் பறைகள் இயம்புற்றன பூமி பொங்கி
மாசற்ற வானைத் திசையோடு மறைந்த தன்றே. - 43



1757 - ஆர்த்ததர் கிடைத்தார் அடற்பூதர் அடுக்கல் மாரி
தூர்த்தார் படைகள் சொரிந்தார் மரந்தூவ லுற்றார்
பார்த்தார் அவுணர் எழுநாஞ்சில் பரசு தண்டஞ்
சீர்த்தா கியவில் லுமிழ்வாளி செலுத்தி விட்டார். - 44



1758 - வேறு
பொங்கு வன்மைகொள் பூதரும், வெங்கொ டுந்தொழல் வினையரும்
இங்கிவ் வாறெதிர் ஏற்றிடா, அங்கண் வெஞ்சமர் ஆற்றினார். - 45



1759 - அரிய ஒண்பகல் அல்லொடே, பொருது பா£¢மிசை புக்கபோல்
இருதி றத்தரும் இகலியே, விரவு பூசல் விளைத்தனர். - 46



1760 - உரங்கொள் பாரிடர் உய்த்திடு, மரங்கள் குன்றுகள் மாண்டிட
நெருங்கி நேர்ந்த நிசாசரர், சரங்கள் கொண்டு தடிந்தனர். - 47



1761 - விற்கொள் அம்பினை வேலினை, எற்கொள் நாஞ்சில் எழுக்கதை
வர்க்க மானதை வன்கணர், கற்க ளாற்றுகள் கண்டனர். - 48



1762 - சிவந்த பங்கிகொள் சென்னிகள், நிவந்த மொய்ம்பு நிலத்துகக்
கவிழ்ந்து ருண்டு களத்திடை, அவிந்த பூதம் அனந்தமே. - 49



1763 - நெஞ்சம் மொய்ம்பும் நெடும்பதஞ், செஞ்செ வித்தலை சிந்தியே
எஞ்சு தானவர் எண்ணிலா£¢, துஞ்சி னார்பழி துஞ்சவே. - 50



1764 - பாய்ந்த வாசிகள் பாரிடங், காய்ந்த யானைகள் காசினி
ஏய்ந்த தேர்களி யாவையும், மாய்ந்து பாரின் மறிந்தவே. - 51



1765 - சோரி தூங்கிய தொல்பிணம், மேரு விண்ணை விழுங்கின
காரி யூர்தி கருங்கொடி, ஓரி கங்கம் உலாயவே. - 52



1766 - இந்த வாறிரு பாலரும், வந்து நேர்ந்து மலைந்திடப்
புந்தி நோவறு பூதர்தம், முந்து தூசி முரிந்ததே. - 53



1767 - தாழும் ஒன்னலர் தாக்கலால், நீள்கொ டிப்படை நெக்கிடக்
கூழை நின்றிடு கூளிகள், ஆழி யென்ன அடுத்தவே. - 54



1768 - புடைநி ரம்பிய பூதர்வந், திரைவி டாதெதிர் ஏற்றிடா
அடலின் மேதகும் அவுணமாக், கடலை நின்று கலக்கினார். - 55



1769 - ஒடிந்த தேர்கள் உலந்துபார், கிடந்த யானை கிளர்ந்தமா
மடிந்த தானவர் மாப்படை, தடிந்து லாயினா¢ சாரதர். - 56



1770 - வேறு
அதிரும் கழல்சேர் அவுணப் படைகள்
முதிரும் குறளெற் றமுடிந் திடலும்
எதிருஞ சமரத் திடையெய் தியதோர்
கதிரின் பகையங் கதுகண் டனனே. - 57



1771 - சிந்தாய் வருமிச் சிலசா ரதரே
நந்தா னையெலாம் நலிகின் றனரோ
அந்தா இனிதென் றடுதேர் கடவா
வந்தான் விரைவால் இமையோர் மறுக. - 58



1772 - கடிதாய் வருகா லொடுகா ரெழிலி
படிமே லுறவே படர்கின் றதுபோல்
கொடிதா கியவிற் குனியா முனியா
வடிவா ளிகள்தூய் அவுணன் வரலும். - 59



1773 - வண்டார் தெரியல் வலியோன் வரவைத்
தண்டா தமர்செய் திடுசா ரதர்கள்
கண்டார் எதிரே கடிதே நடவா
அண்டார் தொகைஅச் சுறஆர்த் தனரே. - 60



1774 - தருவுங் கதையுந் தருசூ லமுமால்
வரையுங் கொழுவும் மழுவும் எழுவுஞ்
சொரிகின் றனர்பல் வளனுந் தொலையா
எரியின் மிசையே இடுமந் தணர்போல். - 61



1775 - தொடுகின் றகழல் தொருசா ரதர்கள்
விடுவின் றவெலாம மிசைவந் திடலும்
அடுகின் றசினத் தவுணன் தழலில்
படுகின் றசரம் பலதூண் டினனே. - 61



1776 - பணிபட டகனற் படைதூண் டுதலும்
திணிபட் டகணத் திறலோர் வரைகள்
அணிபட் டதருக் குலமா தியெலாம்
துணிபட் டனவே துகள்பட் டனவே. - 63



1777 - கல்லும் தருவும் கதையும் பிறவும்
சொல்லும் திறலும் துகன்பட் டிடலும்
வெல்லும் தகுவன் மிகுசா ரதர்மேல்
செல்லும் படிவெங் கணைசிந் தினனே. - 64



1778 - சிந்துற் றிடுசெங் கனல்வெங் கணைகள்
பொந்துற் றிடுகின் றபுயங் கமென
வந்துற் றுடன்முற் றும்வருத் துதலால்
நொந்துற் றனர்அற் றனர்நோன் மையெலாம் - 65



1779 - விடுகின் றகனற் கணைவெந் திறலோர்
உடலம் புழைசெய் திடவுற் றனரால்
படரும் குறியோன் கதைப· றுளையா
அடுதொல் கிரவுஞ் சமதா மெனவே. - 66



1780 - தெரிகுற் றகனற் கணைசென் றுபுகப்
பொருகொற் றமகற் றியபூ தர்மிசைப்
பெருகுற் றதுசோ ரிபெருங் கருவிண்
டுருகுற் றிடுசெம் பொழுகும் படிபோல். - 67



1781 - கதிரும் கனல்வெங் கணைசா ரதர்மெய்
புதைகின் றுழிசெம் புனல்வந் தெழுவ
உதிரம் பிறவுற் றிடுதீ யுறவால்
எதிர்வந் தவைதன் னிடனுய்ப் பதுபோல். - 68



1782 - விடமெய்க் கணைமா ரிகள்தம் மிசையே
படவெய்த் தனர்சிந் தைபதைத் திடுவார்
கடவுட் கதிரைக் கனலும் கொடியோற்
குடைவுற் றனரால் உறுபூ தரெலாம். - 69



1783 - வேறு
நிலைய ழிந்து நெடுங்கடல் பாரிடம்
தொலைய முன்னம் தொலைந்திடு தானவர்
வலிதெ ரிந்து வயம்புனை தானவர்
தலைவன் முன்வந்து சார்ந்தனர் என்பவே. - 70



1784 - ஆய காலை அழிந்துவெம் பூதர்கள்
போய வாறும் புரையறு சூர்தரு
சேய வன்திறல் செய்கையும் நோக்கினான்
காயும் வெவ்வெரி கான்றிடு கண்ணினான். - 71



1785 - மலைக்கு லக்கொடி வாமத்தன் மைந்தராம்
இலக்க வீரருள் ஏனைய மைந்தருள்
தலைக்கண் நின்ற சயங்கெழு மொய்ம்பினான்
விலக்கில் தேரொடும் வெய்தென ஏகினான். - 72



1786 - ஆதி தந்த அறுமுகத் தெம்பிரான்
பாத முன்னிப் பரவிக் கடிதுபோய்
மேத குங்கதிர் வெம்பகை தானையாம்
ஓத முட்கக் குனித்தனன் ஓர்சிலை. - 73



1787 - காமர் மொய்ம்பினன் கைத்தனுக் கோட்டலும்
தாமு னிந்து தகுவர்தந் தானைகள்
தோம ரங்கதை சூலம்வை வாளிவேல்
நேமி யாதி நெருக்குற வீசினார். - 74



1788 - வீசு கின்ற வியன்படை மாய்ந்துகத்
தேசு லாவு திறலுடை மொய்ம்பினான்
ஓசை கொண்டதன் சாபம் உமிழ்ந்தென
ஆசு கங்கள் அளப்பில தூண்டினான். - 75



1789 - தூண்டும் வாளி துணிபடச் செய்தலும்
மாண்டு போயின மற்றவர் வெம்படை
ஈண்டு தானவர் யாரும் மறைந்திட
மீண்டும் வார்கணை வீசினன் வீரனே. - 76



1790 - கற்றை வார்சடைக் கண்ணுத லோன்சுதன்
கொற்ற வில்லுமிழ் கூர்ங்கணை விட்டன
பற்ற லார்மெய் படுதலும் அன்னவர்க்
கிற்ற தாள்முடி தோள்புயம் யாவுமே. - 77



1791 - ஆர ழிந்தன ஆழி அழிந்தன
தேர ழிந்தன திண்பரி கைமுகக்
கார ழிந்த கடுந்தொழில் தானவர்
போர ழிந்த புகுந்த சோரியே. - 78



1792 - மற்ற வெல்லை வலியநந் தானைகள்
இற்ற வேகொல் இவன்சிலை யாலெனாச்
செற்ற நீரொடு செங்கதிர் மாற்றலன்
ஒற்று தேர்வல வற்கிவை ஓதுவான். - 79



1793 - அடுத்து நம்படை அட்டவன் முன்னுற
விடுத்தி தேரை வலவனை வெய்தென
வடித்த விஞ்சையன் வன்மையின் அன்னதேர்
நடத்தி யார்த்தனன் நாகர் நடுங்கவே. - 80



1794 - மாண்ட கொள்கை அவுணன் வலவன்முன்
தூண்டு தேர்மிசைத் துண்ணென நண்ணியே
பூண்ட தன்சிலை கோட்டிப் பொருஞசினம்
மூண்டு மேலவன் முன்னிது கூறுவான். - 81



1795 - எஞ்ச லின்றிய என்பெருந் தானைகள்
துஞ்சும் வண்ணந் தொலைத்தனை நீயினி
உஞ்சு போகரி துன்றனை அட்டிட
வஞ்சி னங்கொடு வந்தனன் யானென்றான். - 82



1796 - என்ற லோடும் இருந்திறன் மொய்ம்பினான்
பொன்று வோரையும் போர்த்தொழில் செய்துபின்
வென்று ளோரையும் விண்ணவர் காண்குவர்
நின்று தாழ்க்கலை நேருதி போர்க்கென்றான். - 83



1797 - விளைத்த சீற்றத்து வெந்திறற் சூர்மகன்
வளைத்த வில்லிடை வார்கணை ஆயிரந்
தளைத்த பூந்தொடை வாகையன் தன்னுரந்
துளைத்தி டும்படி பூட்டுபு தூண்டினான். - 84



1798 - ஆக மூழ்கி அடற்கணை போழ்ந்துபின்
ஏக வென்றும் இளையவன் பின்னவன்
சோக மோடுதன் தொல்சிலை வாங்கியே
நாகர் போற்றிட நாணொலிக் கொண்டனன். - 85



1799 - நாணொ லிக்கொடு நஞ்சழல் கான்றெனத்
தூணி யுற்ற சுடுசரம் ஆயிரம்
வேணு யுய்த்து விரைவினில் தூண்டினான்
ஏணு டைக்கொடி யோன்புயத் தெய்தவே. - 86



1800 - ஆயி ரங்கணை அம்புயம் மூழ்கலும்
நோயு ழந்துள நொந்து நொடிப்பினில்
தீய வன்மகன் செஞ்சரம் நூற்றினால்
தூய வன்வில் துணிபடுத் தானரோ. - 87



1801 - திண்டி றற்புயன் செஞ்சிலை இற்றிட
அண்டர் அஞ்சினர் அன்னவன் ஓரயில்
கொண்டு ருத்துக் கொடுந்தொழிற் சூர்மகன்
முண்ட நெற்றியின் மொய்ம்புடன் வீசினான். - 88



1802 - வீசு வெம்படை வெய்யவற் சீறிய
நீசன் மாண்டகு நெற்றியுட் சேறலும்
மாசில் வான்மிசை வந்தெழு செக்கர்போல்
ஆசில் செம்புனல் ஆறெனச் சென்றதே. - 89



1803 - சென்ற காலையில் தீயவன் ஓரிறை
நின்று தேரின் நினைவில னாகியே
பின்றை முன்னுணர் வெய்தப் பெருந்தகை
ஒன்றொர் வெஞ்சிலை ஒல்லையில் வாங்கினான். - 90



1804 - வாங்கி வாயுவின் மாப்படை தூண்டலும்
ஆங்கவ் வெய்யனும் அப்படை யேவியே
தாங்கி வன்மை தணித்தலுந் தாவிலோன்
தீங்க னற்படை உய்த்தனன் சீறியே. - 91



1805 - மாரி யன்னகை மன்னவர் கோமகன்
ஆர ழற்படை அவ்வழி தூண்டலும்
வீர வாகு விடுத்திடு தீப்படை
போரி யற்றிப் பொருக்கென மீண்டதே. - 92



1806 - சுடுக னற்பஆஆ போந்திடச் சூர்மகன்
கடிது பின்னுங் கதிர்ப்படை தானெடா
அடுதி அன்னவன் ஆவியை நீயெனா
விடுத லோடும் விரைந்தது சென்றதே. - 93



1807 - விரைந்து சென்றதை வீரமொய்ம் புள்ளவன்
தெரிந்து சேணிடைச் செங்கதி ரோன்படை
துரந்து நீக்கலுஞ் சூர்மகன் பங்கயத்
திருந்த வன்படை ஏவினன் என்பவே. - 94



1808 - தேன்மு கத்துத் திருமல ரோன்படை
வான்மு கத்து வருதலும் ஆங்கவன்
ஊன்மு கப்படை ஒய்யெனத் தூண்டினான்
நான்மு கத்தன் அடற்கண நாயகன். - 95



1809 - தூண்டு வேதன் படைக்கலஞ் சூர்மகன்
ஆண்டு தொட்ட படையை அகற்றியே
மீண்டு வந்திட வெய்யவன் வீரன்மேல்
நீண்ட மாயன் நெடும்படை வீசினான். - 96



1810 - வீசும் அப்படை தன்னை விலக்கினான்
கேச வன்படை யால்கிளர் மொய்ம்புடை
மாசில் கேள்வியன் மற்றது நோக்கியே
நீசன் மாகன் உள்ளம் நினைகுவான். - 97



1811 - தொட்ட தொட்ட படைகள் தொலைவுற
விட்ட னன்படை மேலினி யாவையும்
அட்டு நல்கும் அரன்படை தூண்டுதறின்
ஒட்ட லன்கரத் துண்டது கண்டதே. - 98



1812 - ஆத லாரியான் அப்படை தூண்டிடல்
ஊதி யத்தை யுடைத்தன்று மாயையால்
ஏதி லானை இனியடல் செய்வதே
நீதி யென்று நினைந்தனன் நேரலன். - 99



1813 - விஞ்சை மமய வியன்முது மந்திரம்
நெஞ்ச மீது நெறிப்பட எண்ணியே
செஞ்சு டர்க்கதி ரைச்சிறை செய்திடு
வஞ்ச மைந்தன் மறைந்தனன் தேரொடும். - 100



1814 - பாங்கு முன்னரும் பின்னரும் பாய்கதிர்
தூங்கு தேரொடு துன்னலன் ஏகுறா
வீங்கும் ஆற்றல் விறலுஆ மொய்ம்பன்மேல்
வாங்கு விற்கணை மாரி வழங்கினான். - 101



1815 - சூறை யென்னத் திரிபவன் தூண்டிய
மாறில் வாளிப டப்பட வள்ளல்மெய்
ஊற தாகி உலப்பறு செம்புனல்
ஆற தென்ன வழிக்கொண்ட தாலரோ. - 102



1816 - அண்டர் நோக்கி அழிந்தனர் பாரிடா¢
தண்ட மோடு தளர்ந்தனர் சார்பினோர்
விண்டு விண்டு வெருவினர் அச்செயல்
கண்டு வீரன் கனலெனச் சீறினான். - 103



1817 - வேறு
ஒன்றொரு மாயை தன்னால் உய்ந்துமுன் வென்று போனான்
இன்றும துன்னி னானோ இனியது முடிக்க அற்றோ
நன்றிது நன்றி தம்மா நானிவன் தன்னை இன்னே
கொன்றிடு கிறபேன் என்னாக் குறித்தனன் குமரன் பின்னோன். - 104



1818 - ஈதுதன் புந்தி தேற்றி ஈங்கிவன் சூழ்ச்சி மாய்ந்து
போதரு கின்ற வாறு புரிகுவன் விரைவின் என்னாச்
சேதனங் கொண்ட துப்பின் தெய்வதப் படையைப் போற்றி
மேதகு வழிபா டாற்றி யவுணனைக் குறித்து விட்டான். - 105



1819 - பொருவருந் திறலோன் விட்ட போதகப் படையே பானாள்
இருளினை இரியல் செய்யும் இரவிபோற் சேற லோடும்
விரைவொடு விஞ்சை மாயம் விளிந்தது வேந்தன் மைந்தன்
ஒருபெருந் தேருந் தானு மாகியே உம்பர் நின்றான். - 106



1820 - தோன்றியே விண்ணின் நின்ற சூ£¢மகன் தொலைவில் ஆற்றல்
சான்றதன் மாயம் போன தன்மையுந் தடந்தோள் வீரன்
ஆன்றநல் வலியும் நோக்கி அயர்ந்தனன் அயர்ந்து முன்னம்
மான்றிடும் அமரர் யாரும் மனமகிழ் சிறந்து நின்றார். - 107



1821 - அவ்வழி வீர மொய்ம்பன் அந்தர வழிக்கண் நின்ற
மைவழி சிந்தை மைந்தன் மாண்பினை நோக்கி வஞ்ச
வெவ்வழி இனிநீ போதி யானிவண் அடுவன் என்னாக்
கைவழி வரிவில் வாங்கித் தேரொடுங் ககனஞ் சென்றான். - 108



1822 - விண்ணிடைப் புகுந்த வீரன் வெலற்கருஞ் சூரன் மைந்தன்
கண்ணுற முன்பு நேர்ந்து கணைபல கோடி தூர்த்தான்
நண்ணலன் அவனுஞ் சீறி நவின்றதோர் சாபம் வாங்கித்
துண்ணென விசிக மா£¤ சொரிந்தனன் சுரர்கள் அஞ்ச. - 109



1823 - நீரொடு கனலும் மாறாய் நெடுஞ்சினந் திருகி நின்று
போரினை இழைப்ப தென்ன இருவரும் பொருது நின்றார்
ஓரிரை அளவை தன்னில் ஒராயிர நூறு கோடி
சாரிகை திரிந்த அம்மா அனையவர் தடம்பொற் றேர்கள். - 110



1824 - ஏற்றிகல் புரியும் வீரா¢ எதிரெதிர் துரக்கும் வாளி
நாற்றிசை கொண்ட அண்டப் பித்திகை காறும் நண்ணி
மேற்றிகழ் பரிதிப் புத்தேள் வியன்கதிர் வரவு தன்னை
மாற்றியெவ் வுலகு ளோர்க்கு மலிதுயர் விளைத்த அன்றே. - 111



1825 - செற்றமொ டிவர்கள் வீசுந் திருநெடுங் கணைகள் யாண்டும்
முற்றிடு கின்ற காலத் துகுவன கவன மான்தேர்
அற்றன புரவி மாலை அவிந்தன களிற்றின் ஈட்டம்
இற்றன அவுணர் சென்னி இறுவன பூதர் யாக்கை. - 112



1826 - கிட்டுவ சேணிற் செல்வ கிளருவ கிடைத்துப் பின்னும்
முட்டுவ ஒன்றை யொன்றை இடம்வலம் முறையிற் சூழ்ந்து
வட்டணை புரிவ வானோர் மதிக்கவும் அரிய வல்லே
எட்டுள திசையும் விண்ணுந் திரிவன இருவர் தேரும். - 113



1827 - இகழுவர் முனிவர் வெஞ்சூள் இயம்புவர் வன்மை நோக்கிப்
புகழுவர் உரப்பி வீரம் புகன்றெடுத் தழைப்பர் பூசல்
மகிழுவர் நகைப்பர் வெற்றி வால்வளை முழக்கஞ் செய்து
திகழுவர் கணையின் மாரி சிந்துவர் தெழித்துச் செல்வர். - 114



1828 - புரந்தனை அட்ட செல்வன் புதல்வனும் அவுணன் சேயும்
விரைந்தெதிர் மலைந்த முறைமுறை வெகுண்டு விட்ட
வரந்தெறு பகழி மாரி அகிலமும் விரவிச் செல்லக்
கரந்தனன் இரவி திங்கள் கலைகளுங் குறைந்த தன்றே. - 115



1829 - வேறு
காலொப்பன கூற்றொப்பன கனலொப்பன கடுவின்
பாலொப்பன உருமொப்பன பணியார்புரம் பொடித்த
கோலொப்பன கதிரொப்பன குன்றந்தனைக் கொன்ற
வேலொப்பன இருவீரரும் விடலுற்றிடு விசிகம். - 116



1830 - வரைபுக்கக புயல்புக்கன வான்புக்கன மறிதெண்
டிரைபுக்கன கடல்பக்கன திசைபுக்கன திசைசூழ்
தரைபுக்கன அண்டத்துழை தனிற்புக்கன பிலத்தின்
நிரைபுக்கன இளையோனுடன் அவுணன்விடு நெடுங்கோல். - 117



1831 - திரிகின்றன இருவோர்விடு தீவாளியும் அவைபட்
டெரிகின்றன புயலின்குலம் இருநாற்றிசைக் கரியுங்
கரிகின்றன புவிவிண்டன கடல்வற்றிறின உடுமீன்
பொரிகின்றன உலகெங்கணும் புகைவிம்மிய தன்றே. - 118



1832 - பொடியோங்கியே திறன்மொய்ம்புடைப் புலவன்விடு சரத்தை
வடியோங்கிய கணைமாரியின் அருக்கன்பகை மாற்றம்
கொடியோன்மகன் விடுவாளியைக் குதைவெங்கணை மழையால்
நெடியோன்தனித் துணையானவன் அறுத்தேயுடன் நீக்கும். - 119



1833 - போரிவ்வகை இருவீரரும் பொரலுற்றிடு பொழுதில்
பாரின்றலை நின்றோர்களும் இமையோர்களும் பார்த்தார்
ஆரிங்குளர் இவரேயென அமர்செய்தவர் அடுபோர்
வீரந்தனில் எவரேயிவர்க் கிணையென்று வியந்தார். - 120



1834 - அவ்வேலையின் நூறாயிரம் அடுவெங்கணை அதனால்
மைவேலையில் வருபானுவைத் தளைபூட்டிய மைந்தன்
செவ்வேலவன் திருத்தூதுவன் தேரைப்பொடி படுத்தி
எவ்வேலையும் வெருக்கொண்டிட இடியேறென ஆர்த்தான். - 121



1835 - ஆ£¢க்கின்றுழ விறல்மொய்ம்புடை அறிவன்சினந் திருகிச்
சீர்க்கின்றவிண் மிசைமின்றுதன் சிலைகாலுற வாங்கிக்
கூர்க்குங்கணை ஓராயிரங் கொளுவித்துரந் திட்டுக்
கார்க்கின்றமெய் அவுணர்க்கிறை கடுந்தேர்துகள் கண்டான். - 122



1836 - வையந்துக ளாய்இற்றிட வானத்திடை நின்ற
வெய்யன்பெருஞ் சினஞ்செய்துவில் வீரன்தன துரத்தின்
ஐயஞ்சுநஞ் சயில்வாளிபுக் கழுந்தும்படி தூண்டிச
சையந்தனைக் கடந்தேவளர் தடந்தோள்புடைத் தா£¢த்தான். - 123



1837 - உரத்திற்புகு நெடுவாளியின் உளநொந்திடும் உரவோன்
கரத்திற்சிலை தனிலேழிரு கணைபூட்டினன் செலுத்தி
வரத்திற்றனக் கிணையில்லதொர் மன்னன்மகன் தனது
சிரத்திற்பொலி மகுடந்தனைச் சிந்தித்துகள் செய்தான். - 124



1838 - மாண்கொண்டிடு முடிசிந்திட வறியானெனத் திகழும்
ஏண்கொண்டிடு சூரன்மகன் ஏழேழ்கணை தூண்டித்
தூண்கொண்டிடு திறல்மொய்ம்புடைத தொல்லோன்உரம் பிணித்த
நாண்கொண்டிடு கவசந்தனை நடுவேதுணித் திட்டான். - 125



1839 - ஆகம்படு நெடுஞ்சாலிகை அழிவெய்தலும் அழல்கால்
நாகம்படு சடையோன்சுதன் நன்றீதென நகையாப்
பாகம்படு பிறைபோலெழு பகுவாய்க்கணை செலுத்தி
மேகம்படு மணிமேனியன் வில்லைத்துணி படுத்தான். - 126



1840 - வில்லொன்றிரு துணியாதலும் வெங்கூற்றினும் வெகுளா
அல்லொன்றிய மனத்தீயவன் அயன்முன்கொடுத் துள்ள
எல்லொன்றிய தனிவேலினை எடுத்தீங்கிவன் தன்னைக்
கொல்லென்றுரைத் துரவோன்மிசை குறித்துச்செல விடுத்தான். - 127



1841 - வேறு
விடுத்த காலையின் இத்திறந் தெரிந்திடும் விறலோன்
அடற்பெ ருங்கணை ஆயிர கோடிகள் அதனைத்
தடுத்தி டும்படி செலுத்தினன் அவையெலாந் தடிந்து
வடித்த வேற்படை வான்வழிக் கொண்டுவந் ததுவே. - 128



1842 - வந்த காலையில் அதன்வலி நோக்கியே வள்ளல்
இந்து சேகரன் உதவிய நாந்தகம் எடுத்துக்
கந்த வேளடி வழுத்தியே கருதலன் விடுத்த
குந்த வெம்படை இருதுணி பட்டிடக் குறைத்தான். - 129



1843 - குறைத்த காலையில் அமரர்கள் ஆடினர் கொடியோன்
திறத்த ராகிய அவுணர்கள் ஏங்கியே திகைத்தார்
அறத்தை யாற்றிடும் இளையவன் அங்கது நோக்கி
எறித்த ருஞ்சுடர் வாளினை உறையகத் திட்டான். - 130



1844 - அள்ளி லைத்தனி வேற்படை இறுதலும் அதனைக்
கள்ள விஞ்சைகள் பயின்னறிடு சூர்மகன் காணாத்
தௌ¢ளி தம்மவோ என்படை வலியெனச் செப்பிப்
பொள்ளெ னக்கர வாளமொன் றெடுத்தனன் பொருவான். - 131



1845 - கருமு கிற்புரை மேனியன் கரத்தில்வாள் பற்றி
விரவு மின்னுவின் கொடியென விதிர்த்துமுன் வீசி
உருமி டிக்குலத் தாவலங் கொட்டியார்த் துருத்துச்
செருமு யற்சியாற் சீரிளங் கோவின்முன் சென்றான். - 132



1846 - சென்ற காலையில் இளையவன் தன்பெருஞ் சிலைகால்
ஒன்ற வாங்கியே பகழிபல் லாயிரம் உய்த்து
வென்றி வாட்படை யானுரங் கிழித்திட விடர்செய்
குன்றில் வீழ்தரும் அருவிபோல் வீழ்ந்த குருதி. - 133



1847 - பரிதி மமற்றலன் மிசைவரு பகழியும் பாரான்
குருதி வீழ்வதும் உரம்பகிர் வுற்றதுங் குறியான்
ஒருதன் மானமுந் தானுமா யோடினன் குறுகிச்
சுருதி யன்னவன் சிலையினை வாளினால் துணித்தான். - 134



1848 - வில்லி றுத்திடு விறலினோன் மிசைபடக் கிளர்ந்து
செல்லெ னத்தெழித் தொருதன்வாள் வீசினன் திரிய
அல்ல லுற்றிடும் இமையவர் அங்கது நோக்கி
இல்லை மற்றிவன் இறந்தபின் அமரென்ப தென்றார். - 135



1849 - அங்க வெல்லையில் வீரவா குப்பெயர் அறிஞன்
திங்கள் சூடிய உலகடுந் தாதையிற் சீறித்
துங்க மிக்கதன் வாளுரீஇக் கறங்கெனச் சுற்றி
எங்கண் ஏகுதி என்றுபோய் அவுணனை எதிர்த்தான். - 136



1850 - ஏற்றெ திர்ந்திடும் எல்லையின் இரவியம் பகைஞன்
காற்றெ னச்சென்று நேர்ந்தனன் இருவருங் கலந்து
சீற்ற நீர்மையால் வாளமர் உழந்தனர் செங்கட்
கூற்றும் அங்கியுஞ் சமர்புரி கின்றகோட் பென்ன. - 137



1851 - மாறு மாறுசென் றடிமுதல் உறுப்பினை வாளால்
வேறு செய்திட எறிகுவர் அன்னது விலக்கி
ஊறு செய்திற நாடுவர் இடைதெரிந் துறாமல்
சூறை யாமெனச் சுற்றுவர் வட்டணை சூழ்வார். - 138



1852 - இன்ன தன்மையில இருவரும் வாளமர் இயற்றி
மன்னு காலையில் சூர்மகன் விஞ்சையின் வலியால்
தன்னை நேரிலா இளையவன் தடக்கைவாள் அகற்றி
அன்ன வன்திருத் தோள்மிசை எறிந்தனன் அன்றே. - 139



1853 - மாற்ற லன்கர வாளினால் எறிதலும் வள்ளல்
ஆற்றல் மொய்ம்பிடைக் குருதியா றிழிதர அதுகண்
டேற்றம் எய்தினன் சூ£¢மகன் இவன்றனக் கிளையோன்
தோற்றி டுங்கொலென் றிரங்கினர் வானவர் துளங்கி. - 140



1854 - அன்ன காலையில் இளையவன் அறுமுகத் தமலன்
பொன்னின் சேவடி புந்தியில் உன்னியே புகழ்ந்து
மின்னு வானதன் வாட்படை வீசியே விரைந்து
துன்ன லன்வலத் தோளினை வலியொடு துணித்தான். - 141



1855 - துணித்த காலையில் வலதுகை தன்னொடு தொடர்ந்த
பணித்த னிச்சுடர் வாளினை இடக்கையால் பறித்து
மணித்த சும்புகொள் மொய்ம்புடை அவுணர்கோன் மற்றும்
தணிப்ப ருஞ்சினந் தன்னொடு முயன்றனன் சமரே. - 142



1856 - தீய வன்றனி முயற்சியை நோக்கியே திறலோன்
தூய வள்கொடே அன்னவன் இடக்கையைத் துணிப்ப
மாயை தொல்படை விடுத்தி வேனென மதித்தான்
ஆய காலையில் அறிஞனும் அவன்தலை அறுத்தான். - 143



1857 - வாளில் அங்கவன் அடுதலுஞ் சென்னியும் வரைநேர்
தோளும் யாக்கையும் வீழ்ந்தன சூரியன் பகைஞன்
நாளு லந்தனன் அவனுயிர் வௌவியே நடுவன்
ஆளி மொய்ம்பனை வழுத்தியே தென்புலத் தடைந்தான். - 144



1858 - சூரன் மாமகன் முடிந்தது முனிவருஞ சுரரும்
ஆரும் நோக்கியே ஆடினா¢ பாடினர் ஆர்த்தார்
வீர வீரன்நீ யாமென இளவலை வியந்து
மாரி யாமென அவன்மிசை பொழிந்தனர் மலர்கள். - 145



1859 - நுவல ருந்திறல் சூர்மகன் பட்டது நோக்கி
அவலம் எய்தியே அழிந்திடு பூதர்கள் ஆத்துத்
தவல ருந்திறல் வீரனை வழுத்தினர் தனது
கவலை நீங்கியே களித்தனன் செங்கதிர்க் கடவுள். - 146



1860 - அன்ன காலையில் வீரவா குப்பெயா¢ அறிஞன்
தன்னு ளஞ்சிறந் தகலிரு விசும்பினைத் தணவா
இந்நி லத்திடை வந்துதன் துணைவர்தம் மினத்தைத்
துன்னி யாங்கவர் புகழ்ந்திட இனையன சொல்வான். - 147



1861 - ஆன தொல்பெரு மாயையால் நம்மைமுன் அலைத்த
பானு கோபனை அட்டனம் பகர்ந்தசூ ளுறவு
தானு முற்றிய தால்இனி எம்பிரான் தன்முன்
சேனை தன்னொடு மேவுதுஞ் செல்லுதி ரென்றான். - 148



1862 - மிக்க வீரனித் தன்மையை உரைத்தலும் வினவி
முக்கண் நாயகன் குமரவேள் இணையடி முன்னம்
புக்கு நென்னலுந் தொழுதில நன்றுநீ புகன்றாய்
தக்க தேயிது என்றனர் துணைவராந் தலைவர். - 149



1863 - ஆங்கவ் வெல்லையின் நம்பிதன் இளைஞரும் அடுபோர்
தாங்கு பூதருந் தானையந் தலைவரும் தழுவிப்
பாங்கர் வந்திடப் பொருகளம் ஒருவியே படாந்து
பூங்கி டங்குசூழ் பாசறை இருக்கையுட் புகுந்தான். - 150



1864 - சோதி நீடிய பாசறை புகுந்திடு தூயோன்
பூதர் தம்மொடுந் துணைவர்கள் தம்மொடும் போந்து
காத லாகியே அறுமுகத் தையனைக் கண்டு
பாத பங்கயந் தன்னிடைப் பனமுறை பணிந்தான். - 151



1865 - பரிந்து பன்முறை வணங்கியே எழுதலும் பகவன்
தெரிந்து நோக்கிநீ சூர்மக னோடுபோர் செய்து
வருந்தி ஆங்கவற் செற்றனை ஆதலின் மகிழ்ந்தாம்
விரைந்து கேண்மதி நல்குதும் வேண்டுவ தென்றான். - 152



1866 - என்று மூவிரு முகமுடைப் பண்ணவன் இயம்ப
நின்று போற்றிடும் இளையவன் எம்பிரான் நின்னை
அன்றி யான்செய்த செயலிலை ஆயினும் அடியேற்
கொன்று மற்றிவண் அருளிய வேண்டுமென் றுரைப்பான். - 153



1867 - கோல நீடிய நிதிபதி வாழ்க்கையுங் குறியேன்
மேலை இந்திரன் அரசினைக் கனவினும் வெ·கேன்
மால யன்பெறு பதத்தையும் பொருளென மதியேன்
சால நின்பதத் தன்பையே வேண்டுவன் தமியேன். - 154



1868 - அந்த நல்வரம் முத்தியின் அரியதொன் றதனைச்
சிந்தை செய்திடு தவத்தரும் பெறுகிலர் சிறியேன்
உய்ந்தி டும்வகை அருள்செய வேண்டுமென் றுரைப்ப
எந்தை கந்தவேள் உனக்கது புரிந்தனம் என்றான். - 155



1869 - உடைய தொல்விறல் வாகுவுக் கிவ்வரம் உதவிப்
புடையி னில்தொழு துணைவர்க்கு நல்லருள் புரியா
அடைய மற்றவர் இருக்கைகள் வைகுவான் அருளி
விடைபு ரிந்தனன் யாவர்க்கு மேலதாம் விமலன். - 156



1870 - செங்க திர்ப்பகை அட்டவன் முதலிய திறலோர்
புங்க வன்றனைத் தொழுதுதம் இருக்கையிற் போனார்
இங்கு மற்றிது நின்றிட அவுணர்தம் இறைவற்
கங்கண் உற்றிடு செய்கையை மேலினி அறைவாம். - 157



1871 - வேறு
ஈதிவர் புரிந்ததேல் இறைவன் தன்னையுங்
காதுவர் என்பது கருத்துட் கொண்டெழா
வாதுவர் கவனமா வழிக்கொண் டாலெனத்
தூதுவர் ஓடினர் துளங்கு நெஞ்சினார். - 158



1872 - மதிதொடு கடிமதில் மகேந்தி ரப்புரத்
ததிர்தரு முரசொலி யவிந்து துன்பினான்
முதிர்வுறும் அழுகுரல் முழங்கும் வீதிபோய்க்
கதுமென அரசவைக் களத்துள் ஏகினார். - 159



1873 - துன்னிய பெரும்புனல் தூண்டு கண்ணினர்
உன்னருந் துயரினர் உயிர்க்கு நாசியர்
மன்னவன் இணையடி வணங்கி உன்மகன்
முன்னுறு தூதனால் முடிவுற் றானென்றார். - 160



1874 - தாழ்ந்தவர் மொழிந்திடு தன்மை கேட்டலுஞ்
சூழ்ந்திடு திருவுடைச் சூரன் என்பவன்
ஆழ்ந்திடு துயர்க்கடல் அழுந்தி ஓவெனா
வீழ்ந்தனன் புரண்டனன் உயிர்ப்பு வீங்கினான். - 161



1875 - நக்குறு சுடரென நடுககம் உள்ளுற
மிக்கெழு குருதிநீர் விழிகள் கான்றிடத்
தொக்குடல் வியர்ப்பொடு துளக்கங் கொண்டிட
அக்கணம் மயங்கினன் அறிவு சோர்ந்துளான். - 162



1876 - தளர்ந்துடல் வெதும்புறத் தன்கண் சோர்வுற
உளந்திரி வுறஉயிர் ஊசல் ஆடிட
விளிந்தவ ராமென வீழ்ந்து மான்றவன்
தௌ¤ந்தனன் இரங்கினன் இனைய செப்பினான். - 163



1877 - வேறு
மைந்தவோ என்றன் மதகளிறோ வல்வினையேன்
சிந்தையோ சிந்தை தெவிட்டாத தௌ¢ளமுதோ
தந்தையோ தந்தைக்குத் தந்தையிலான் கொன்றனனோ
எந்தையோ சின்னை இதற்கோ வளர்த்தனனே. - 164



1878 - வன்னச் சிறுவர்பலர் மாய்ந்தார் அவர்மாய்ந்து
முன்னைத் துணையென் றுளங்கொண் டிருந்தனனால்
என்னைத் தனியேவைத் தெந்தையுமே குற்றனையேல்
பின்னைத் தமியேன் பிழைக்கும் படிஉண்டோ. - 165



1879 - ஒன்னார் சிறையைவிடின் உய்வுண்டாம் என்றுமுனஞ்
சொன்னாய் அதுவும் இகழந் துன்னைத் தோற்றனனால்
என்னாம் இனியதனை எண்ணுவதி யாவருக்குந்
தன்னால் வராத வினையுளதோ தக்கோனே. - 166



1880 - நன்றீ தலசமர்க்கு நண்ணுவது நண்ணலர்மேல்
என்றீர மாகஇசைத் தாயான் ஏகாமல்
சென்றீ எனவே செலுத்தியுனைப் போக்கினனால்
ஒன்றீங் குளதோ பிழையுன் மிசைஐயா. - 167



1881 - கைப்பேபப கொண்டு கடவுளர்க ளெல்லோரும்
முப்போதும் வந்து முறையால் வழிபடுவார்
ஒப்போதல் இல்லா உனதுமே லுள்ளபகை
இப்போ துடன்நீங்கி யேமுற் றிருந்தாரோ. - 168



1882 - உன்னா ணைக்கஞ்சி உறங்கா துழன்றிடுமால்
இந்நாள் தனிலநீ இறந்தா யெனமகிழ்ந்து
பன்னாகப் பாயல் படுத்திருவர் கால்வருடத்
தொன்னாள் எனவே கவலையின்றித் துஞ்சானோ. - 169



1883 - நந்தா னவர்குலத்து நாயகமே நண்ணினர்க்கோர்
சிந்தா மணியே திருவேயென் தௌ¢ளமுதே
எந்தாய் தனியேபோய் எங்கிருந்தாய் அங்கேயான்
வந்தாலும் உன்றன் மதுரமொழ கேட்பேனோ. - 170



1884 - சோராத சூழச்சித் துணைவர்சிறார் எல்லாருஞ்
சேரார் பொருதலைப்பச் சென்றொழிந்து போயினரால்
ஆராய்ந் தெனதுதுயர் ஆற்றுவதற் காருமிலை
வாராய் புதல்வா கடிதோடி வாராயே. - 171



1885 - நீடித் திகழ்கதிரால் தீண்டி நினதுசிறை
வீடிச் சதுர்முகத்தோன் வேண்டிடநீ விட்டபின்னர்
வாடித் தளர்ந்து வசைபடைத்த வெய்யவனார்
ஓடிக் ககனத் துளமகிழ்ந்து செல்லாரோ. - 172



1886 - பற்றார் அடித்தொண்டு பேணிப் பரந்துழலும்
ஒற்றா னவனோ உனைத்தான் அடவல்லான்
அற்றார் தமதுடலுக் காவியாயச் சென்றிடவே
கற்றா யேல்என்னை மறந்திடவுங் கற்றாயோ. - 173



1887 - மாகொற்ற மைந்தன் மடிந்தான் எனக்கேட்டும்
ஏகிற் றிலையால் இருக்கின்ற தின்னும்உயிர்
வேகுற்ற துள்ளம் மிகுதுயரம் வந்தவழிச்
சாகுற்ற தோர்வரமுஞ் சங்கரன்பாற் பெற்றிலனே. - 174



1888 - வெற்றி யுளமதலை வீந்தால் விளியாமல்
மற்றும் எனதுயிரும் வைகும் வலிதாகச்
செற்றி டலும்ஆகா தென்செய்கேன் அழியாமல்
பெற்ற வரமும் பிழையாய் முடிந்ததுவே. - 175



1889 - ஆவியே கண்ணே அரசே உனைச்சமருக்
கேவியே இவ்வா றிரங்குதற்கோ இங்கிருந்தேன்
கூவியே கொண்டுசெலுங் கூற்றுவன்ஒற் றோஅறியேன்
பாவியேன் இந்தப் பதிபுகுந்த தூதுவனே. - 176



1890 - கூற்றோன் நகரில் குறுகினையோ அன்னதன்றேல்
வேற்றோர் இடந்தன்னில் மேவினையோ யானொன்றுந்
தேற்றேன் தனியே தியங்குகின்றேன் இத்துயரம்
ஆற்றேன் அரசேயென் னாருயிரரே வாராயோ. - 177



1891 - என்னா இரங்கி இறைவன் வருந்துதலும்
அன்னான் உழையில் அவுணர் சிலரோடித்
துன்னார் களத்தில் துணிவுற்ற சீர்மதலை
பொன்னார் உடலங் கொடுபுலம்பிப் போந்தனரால். - 178



1892 - வேறு
சேந்த குஞ்சிச் சிலதர்செஞ் ஞாயிறு
பாய்ந்த அண்ணல் படிவ மிசைக்கொளா
வேந்தன் முன்னுற உய்த்து விரைந்தவன்
பூந்தண் சேவடி பூண்டு புலம்பினார். - 179



1893 - அண்டர் தம்மை அருஞ்சிறை வீட்டியே
தண்ட கஞ்செய் தனிக்குடை மன்னவன்
துண்ட மாகிய தோன்றல்தன் யாக்கையைக்
கண்ட ரற்றிக் கலுழ்ந்து கலங்கினான். - 180



1894 - அற்ற மைந்தன் சிரத்தினை யாங்கையால்
பற்று நெல்லெழில் பார்த்திடுங் கண்களில்
ஒற்றும் முத்தம் உதவும் உரனிலாப்
புற்ற ராவில் உயிர்க்கும் புரளுமால். - 181



1895 - துஞ்ச லாகித் துணிவுற்றுந் தெவ்வர்மேல்
நெஞ்சு கொண்ட நெடுஞ்சினந் தீர்கிலை
விஞ்சு மானமும் வீரமும் வன்மையும்
எஞ்சு மேகொல் இனிஉன்னொ டென்னுமால். - 182



1896 - கையி ªª£ன்றைக் கதுமெனப் பற்றிடாச்
செய்ய கட்படு செம்புனல் ஆட்டியே
வெய்ய வற்கொடு விண்ணினுந் தந்தகை
ஐய ஈதுகொ லோவென் றரற்றுமே. - 183



1897 - வாள ரம்படு வாளிகள் மூழ்கலில்
சார ரங்க ளெனப்பழை தங்கிய
தோளை மார்பினை நோக்கும் தொலைவிலா
ஆளை நீயல தாருள ரேயெனும். - 184



1898 - பாறு லாய பறந்தலை தன்னிடை
வேறு வேறது வாகநின் மெய்யினைக்
கூறு செய்தவன் ஆவி குடித்தலால்
ஆறு மோவென் னகததுயர் என்றிடும். - 185



1899 - மூண்ட போ£¢த்தொழில் முற்றிய என்மகன்
ஈண்டு வந்ததொர் தூதுவன் எற்றிட
மாண்டு ளானென் துரைத்திடின் மற்றியான்
ஆண்ட பேரர சாற்றல்நன் றேயெனும். - 186



1900 - சிரத்தை மார்பினைச் செங்கையைத் தொன்மைபோல்
பொருத்தி நோக்கிப் புரளுமென் புந்தியை
வருத்தும் ஆகுலம் மற்றது கண்டுநீ
இருத்தி யோவுயி ரேயின்னும் என்றிடும். - 187



1901 - மருளும் அங்கை மறிக்கும் மதலையை
அருளின் நோக்கி அழும்விழுஞ் சோர்வுறும்
புரளும் வாயிற் புடைக்கும் புவியிடை
உருளும் நீட வுயிர்க்கும் வியர்க்குமே. - 188



1902 - மன்னர் மன்னவன் மற்றிது பான்மையால்
இன்னல் எய்தி இரங்கலும் அச்செயல்
கன்னி மாநகர்க் காப்பினுள் வைகிய
அனனை கேட்டனள் ஆகுலம் எய்தினாள். - 189



1903 - நிலத்தில் வீழ்ந்து சா¤ந்து நெடுமயிர்
குலைத்த கையள் குருதிபெய் கண்ணினள்
அலைத்த வுந்தியள் ஆற்றருந் துன்பினள்
வலைத்த லைப்படு மஞ்ஞையின் ஏங்கினாள். - 190



1904 - அல்லல் கூர்ந்த அவுணன்றன் காதலி
தொல்லை வைகிய சூழலை நீங்கியே
இல்லை யாகிய என்மகற் காண்பனென்
றொல்லை ஆவலித் தோடினள் ஏகினாள். - 191



1905 - மாவ லிக்கு மடங்கெலொப் பான்தனிக்
காவ லிக்குத் துயர்வந்த கன்னிமீர்
நாவ லிக்ண நண்ணுதிர் என்றுகூய்
ஆவ லித்தனர் ஆயிழை மாரெலாம். - 192



1906 - வாங்கு பூநுதல் மன்னவன் தேவிதன்
பாங்கர் மங்கையர் பற்பல ருங்குழீஇக்
கோங்க மன்ன முலைமுகங் கொட்டியே
ஏங்கி யேதுயர் எய்தி இரங்கினார். - 193



1907 - இந்தி ரைக்கு நிகர்வரும் ஏந்திழை
அந்த மில்லதொ ராயிழை மாரொடு
முந்தி யேகி முடிந்து துணிந்திடு
மைந்தன் மீமிசை வீழ்ந்து மயங்கினாள். - 194



1908 - மயங்கி னாள்பின் மனந்தௌ¤ வெய்தினாள்
உயங்கி னாள்மிக ஓவென் றரற்றினாள்
தியங்கி னாள்உரும் ஏறு திளைத்திடு
புயங்க மென்னப் புரண்டு புலம்பினாள். - 195



1909 - வேறு
வெய்யோன் என்றூழ் தீண்டுத லோடும் விண்ணிற்போய்க்
கையோ டன்னாற் பற்றினை வந்தென் கண்முன்னம்
மொய்யோ டன்று வெஞ்சிறை செய்த முருகாவோ
ஐயோ கூற்றுக் கின்றிரை யாவ தறியேனே. - 196



1910 - பண்டே வானஞ் செந்தழல் மூட்டிப் பகைமுற்றுங்
கொண்டே சென்றாய் அப்பகல் உன்றல் கோலத்தைக்
கண்டேன்இன்றே இக்கிடை தானுங் காண்பேனோ
விண்டேன் அல்லேன் இவ்வுயிர் தன்னை வினையேனே. - 197



1911 - செந்தேன் மல்கும் பூமகள் செங்கைக் கிளியொன்று
முந்தே நின்னை வேண்டிட மொய்ம்பால் அதுவாங்கித்
தந்தாய் நொந்தேற் கின்றொரு மாற்றந் தருகில்லாய்
அந்தோ அந்தோ செய்வகை ஒன்றும் அறியேனே. - 198



1912 - பாபத் தாலோ விண்ணவ ரானோர் பலர்கூறுஞ்
சாபத் தாலோ யாரினும் மேலாந் தனிமூவர்
கோபத் தாலோ எவ்வகை யாலோ குறியேன்யான்
சோபத் தீயால் வாடினன் நின்னைத் தோற்றேனே. - 199



1913 - பொன்போல மேனிக் கந்தனை இவ்வூர் புகுவித்துக்
கொன்போ£¢ மூட்டி மைந்தரை எல்லாங் கொல்வித்துத்
துன்போ டிந்நாள் நீயும் இறப்பச் சூழ்ந்தாரே
என்போ லாக வானவர் மாதர் எல்லோரும். - 200



1914 - வான்றா வுற்ற வச்சிர மொய்ம்பன் வடவைத்தீக்
கான்றா லிக்கும் வன்னி முகத்துக் கழல்வீரன்
மூன்றா நூற்றுப் பத்தினர் யார்க்கும் முதல்வந்த
தோன்றா லென்றே நின்னை இறைஞ்சிச் சூழ்ந்தாரோ. - 201



1915 - துன்றேர் பெற்ற மெய்யொடு புந்தி துணிவாகச்
சென்றே வானிற் புக்கனை நின்பாற் செலும்வண்ணம்
ஒன்றே உள்ளந் தான்துணி யாதால் உலைவெய்து
நன்றே நன்றே சிந்தையும் யானும் நண்பம்மா. - 202



1916 - கருந்தேன் மொய்த்த வண்டென மின்னார் கட்கெல்லாம்
விருந்தே யாகும் நின்னடை காணும் விதியற்றேன்
மருந்தே அன்னாய் நின்னை இழந்தேன் மற்றிங்ஙன்
இருந்தேன் அல்லேன் துஞ்சினன் அன்றோ இனியானே. - 203



1917 - நையா நிற்குந் தேவர் தமக்கு நனிதுன்பஞ்
செய்யா நிற்றல் நன்றல என்றேன் அதுதேரா
தையா நின்னைத் தோற்றனன் மன்னன் அவனுந்தான்
உய்வான் கொல்லோ தன்னுயிர் தானும் ஒழியாதே. - 204



1918 - வேறு
என்றிவை பன்னித் தேவி இரங்கினள் இரங்க லொடு
நின்றிடு துணைவி மாரும் நீடுதொல் கிளைஞர் யாரும்
கண்றொழி புனிற்கு என்னக் கதறினர் காமர் மூதூர்
வென்றியை நீங்கி அந்நாள் விழுமநோய் மிக்க தன்றே. - 205



1919 - அன்னது காலை தன்னில் அவுணர்கோன் இரக்கம் நீங்கிப்
பன்னருஞ் சிறப்பின் மிக்க பதுமையே முதலோர் தம்மைத்
தொன்னிலை இருக்கை உய்த்துத் துண்ணெனச் சீற்றங் கொண்டு
தன்னுழைத் தொழுது நின்ற தானவர்க் கிதனைச் சொல்வான். - 206



1920 - மாற்றலர் தொகையை யெல்லாம் வல்லையில் இன்றே செற்றுச்
சீற்றமாய்க் குருதி வீட்டித் தீமகம் ஒன்றை ஆற்றி
ஈற்றுறு மைந்தன் தன்னை எழுப்புவன் இந்த மெய்யை
வீற்றொரு சாரியின் இட்டு விடாதுபோற் றிடுதி ரென்றான். - 207



1921 - அன்னது பலருங் கேளா அழகிதென் றெடுத்து மைந்தன்
பொன்னுடல் ஒருசார் உய்த்துப் பொற்றினர் போற்ற லோடும்
மன்னவன் வெகுண்டு நந்தம் மாற்றலர் தொகையை யெல்லாம்
என்னிளை யோனுக் கூணா அளிப்பனென் றெண்ணங்கொண்டான். - 208



1922 - தும்பையஞ் சுழியல் வேய்ந்த சூர்முதல் இவ்வா றுன்னிச்
செம்புன லொழுகு பைங்கண் தூதரில் சிலரை நோக்கி
அம்புதி வடாது பாங்கர் ஆசுரத் தரசு செய்யும்
எம்பியை வல்லை ஓடிக் கொணருதிர் ண்டை என்றான். - 209


ஆகத் திருவிருத்தம் - 1922
---------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை III