Kanta purāṇam XI d


சைவ சமய நூல்கள்

Back

கந்த புராணம் XI D
கச்சியப்ப சிவாச்சாரியார்



கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய
கந்த புராணம் - பாகம் 11

6. தக்ஷ காண்டம்/ படலம் 21 - 24 (1563 -2067)



21. அடிமுடி தேடு படலம் 1563- 1661

22. தக்கன் சிவபூசைசெய் படலம் 1662 -1673

23. கந்த விரதப் படலம் 1674 - 1800

24. வள்ளியம்மை திருமணப் படலம் 1801 -2067


செந்திலாண்டவன் துணை
திருச்சிற்றம்பலம்

5. தக்ஷ காண்டம்
21. அடிமுடி தேடு படலம் (1563- 1661)




    1563 - இங்கிது நிற்கமுன் இறைவன் வந்துழி
    அங்குற நின்றதோர் அமரர் தங்களுட்
    செங்கம லத்துறை தேவன் தக்கனாந்
    துங்கமில் மைந்தனை நோக்கிச் சொல்லுவான். - 1



    1564 - யாதுமுன் னுணர்ந்தனை யாது செய்தனை
    யாதவண் கருதினை யாரிற் பெற்றனை
    யாதுபின் செய்தனை யாது பட்டனை
    யாதிவண் பெற்றனை யாதுன் எண்ணமே. - 2



    1565 - பொன்றுதல் இல்லதோர் புலவர் யாவர்க்கும்
    வன்றிறல் முனிவரர் தமக்கும் வையமேல்
    துன்றிய அந்தணர் தொகைக்குந் துண்ணெனக்
    கொன்றுயிர் உண்பதோர் கூற்ற மாயினாய். - 3



    1566 - சீரையுந் தொலைத்தனை சிறந்த தக்கனாம்
    பேரையுந் தொலைத்தனை பேதை யாகிநின்
    ஏரையுந் தொலைத்தனை ஏவல் போற்றுநர்
    ஆரையுந் தொலைத்தனை அலக்கண் எய்தினாய். - 4



    1567 - நின்னுணர் வல்லது நிகரின் மேலவர்
    சொன்னதும் உணர்ந்திலை தொல்லை ஊழினால்
    இந்நிலை யாயினை இறையை எள்ளினாய்
    முன்னவன் உயர்நிலை முழுதுந் தேர்ந்தநீ. - 5



    1568 - இயற்படு வளம்பெறீஇ ஈசன் மேன்மைகள்
    அயர்த்தனை நின்னள வன்று மையறான்
    அயிர்த்தொகை தமக்கெலாம் உள்ள தாதலான்
    மயக்கினை அடைந்தனை மற்றென் செய்திநீ. - 6



    1569 - முற்றுணர் வெய்தியே முழுத ளித்திடப்
    பெற்றவெங் கண்ணினும் பெரிது மாமயக்
    குற்றன முற்பகல் உதுகண் டின்றுபோல்
    நெற்றியங் கண்ணினான் அருளின் நீக்கினான். - 7



    1570 - ஆதலின்அருளுடை அமல நாயகன்
    பாதம தருச்சனை பரிவிற் செய்குதி
    பேதுறும் இப்பவப் பெற்றி நீக்கியே
    போதமொ டின்னருள் புரிவன் என்றலும். - 8



    1571 - மைதிகழ் முகத்தினன் மற்ற தற்கிசைந்
    துய்திற முணர்த்தினை உங்கள் கண்ணுமுன்
    எய்திய மையலும் எம்பி ரானருள்
    செய்ததும் இயம்புதி தௌ¤தற் கென்னவே. - 9



    1572 - பொன்னிருஞ் சததளப் போதின் மீமிசை
    மன்னிய திசைமுகன் மதலை மாமுகம்
    முன்னுற நோக்கியே முந்துங் கூறினம்
    இன்னமும் அக்கதை இயம்பு வோமெனா. - 10


    (1. துங்கம் இல் - உயர்வு இழந்த.
    3. பொன்றுதல் இல்லதோர் புலவர் - தேவர்கள்.
    கூற்றம் - எமன். 4. சீர் - சகல சிறப்பு. ஏர் - அழகு.
    6. மையல் - மயக்கம். 8. அமல நாயகன் - சிவபெருமான்.
    பரிவு - அன்பு. பவம் - பாவம். போதம் - ஞானம்.
    9. மைதிகழ் மகத்தினன் - தக்கன்; (மை - ஆடு).
    10. சததளப்போது - நூறிதழ்த் தாமரைப்பூ.)

    1573 - நாலுள திசைமுக நாதன் தொல்லைநாள்
    மாலொடு பற்பகல் மலைவு செய்துநாம்
    மேலதோர் பொருளென விமலன் வந்தருள்
    கோலம துன்னியே தொழுது கூறுவான். - 11



    1574 - வேறு
    பத்தினொடு நூறெதிர் படுத்தயுக நான்மை
    ஒத்தமுடி வெல்லையென தோர்பகல தாகும்
    அத்தகு பகற்பொழுதும் அந்தியொடு செல்ல
    நத்தமுறு நான்துயிலின் நண்ணுவன் அவ்வேலை. - 12



    1575 - வாளுமொடுங் கும்பரிதி மாமதி யொடுங்கும்
    நாளுமொடுங் குந்தமது நாளுமொடுங் குற்றே
    கோளுமொடுங் குங்குலிச பாணிமுதல் வானோர்
    கேளுமொடுங் கும்புவனி கேடுபடும் அன்றே. - 13



    1576 - மண்ணுலகில் ஆருயிர் வறந்திறுதி யாகும்
    விண்ணுறு பதங்களில் வியன்முனிவர் யாருந்
    துண்ணென வெருக்கொடு துளங்கினர்கள் சூழா
    எண்ணுசன லோகமிசை எய்துவர்கள் அந்நாள். - 14



    1577 - வாரிதிகள் நாற்றிறமும் எல்லையில் எழுந்தே
    ஆரியை தவஞ்செய்பதி ஆதியன அல்லாப்
    பாரினைய ருந்தியொரு பாகமதன் மேலும்
    ஓரெழு பிலத்துலகம் உண்டுலவும் அன்றே. - 15



    1578 - ஒண்டிகிரி மால்வரை உடுத்தநில முற்றுங்
    குண்டுறு பிலத்தினொடு கூடும்வகை வீட்டி
    அண்டருல குண்டுநிமிர்ந் தப்புறனு மாகி
    மண்டுபுன லேயுலகை மாற்றியிடும் அன்றே. - 16



    1579 - ஆனதொரு வேலையிலொ ராலிலையின் மீதே
    மேனிலவு தண்மதி மிலைந்தவன் மலர்த்தாள்
    தானகமு றுத்தியொர் தனிக்குழவி யேபோல்
    கானுறு துழாய்மவுலி கண்டுயிலு மாதோ. - 17



    1580 - கண்டுயிலு கின்றபடி கண்டுசன லோகத்
    தண்டுமுனி வோர்புகழ வாங்ஙனம் விழித்தே
    பண்டைநிலன் நேடவது பாதலம தாகக்
    கொண்டல்மணி மேனியனொர் கோலவுரு வானான். - 18


    (11. மலைவு - போர்.
    12. பத்தினொடு நூறு எதிர்படுத்த யுக நான்மை - ஆயிரஞ் சதுர் யுகங்கள்.
    நத்தம் - இரவு. 13. வாள் - ஔ¤; இங்கு அக்கினி. நாள் - வாணான்.
    கோள் - கிரகம். 14. சனலோகம் - இது ஒரு உலகம்.
    15. ஆரியை தவஞ்செய் பதி - உமாதேவி தவஞ்செய்த காஞ்சிபுரம்.
    உண்ணுதல் - மூடிக்கொள்ளுதல்.
    16. ஒண்திகிரி மால்வரை - சக்கரவாளகிரி. குண்டு - ஆழம்.
    18. நேட - தேட. கோலவுரு - பன்றி வடிவு.)

    1581 - கோலமெனு மோருருவு கொண்டுபில மேகி
    ஞாலமெவ ணுற்றதென நாடியது தன்னை
    வாலிய வெயிற்றினிடை வல்லைகொடு மீண்டு
    மூலமென வேநிறுவி மொய்ம்பினொடு போனான். - 19



    1582 - அற்பொழுது நாலுகமொ ராயிரமும் ஏக
    எற்பொழுது தோன்றிய தியான்துயில் உணர்ந்தே
    கற்பனை இயற்றிய கருத்தினினை போழ்தின்
    நிற்புழி அடைந்தன நெடும்புணரி எல்லாம். - 20



    1583 - அருத்திகெழு பாற்கடல் அராவணையின் மீதே
    திருத்திகழும் மார்புடைய செம்மல்புவி தன்னை
    இருத்தினம் எயிற்றினில் எடுத்தென நினைத்தே
    கருத்தினில் அகந்தைகொடு கண்டுயிலல் உற்றான். - 21



    1584 - ஆனபொழு தத்தினில் அளப்பிலிமை யோரைத்
    தானவரை மானுடவர் தம்மொடு விலங்கை
    ஏனைய வுயிர்த்தொகையை யாவையும் அளித்தே
    வானகமும் வையகமும் மல்கும்வகை வைத்தே. - 22



    1585 - மன்னியலும் இந்திரனை வானரசில் உய்த்தே
    அன்னவன் ஒழிந்ததிசை யாளர்களை எல்லாம்
    தந்நிலை நிறுத்தியது தன்னைநெடி துன்னி
    என்னையல தோர்கடவுள் இன்றென எழுந்தேன். - 23



    1586 - துஞ்சலுறு காலைதனில் துஞ்சுமெழும் வேலை
    எஞ்சலி லுயிர்த்தொகுதி யாவுமெழும் யானே
    தஞ்சமெனை யன்றியொரு தாதையிலை யார்க்கும்
    விஞ்சுபொருள் யானென வியந்தெனை நடந்தே. - 24



    1587 - மல்லலுறு மேலுலகு மாதிரமும் ஏனைத்
    தொல்லுலகு மேருவொடு சுற்றுகடல் ஏழும்
    ஒல்லென விரைத்தெழும் உயிர்த்தொகையும் அல்லா
    எல்லையில் பொருட்டிறனும் யான்நெடிது நோக்கி. - 25



    1588 - இப்பொருள் அனைத்துமுனம் யான்பயந்த என்றால்
    ஒப்பிலை யெனக்கென உளத்திடை மதித்தேன்
    அப்பொழுதில் ஆரமுத ஆழியிடை யாழிக்
    கைப்புயல் அகந்தையொடு கண்டுயிலல் கண்டேன். - 26


    (19. எவண் - எவ்விடம். வாலிய - வெண்மையான.
    எயிறு - கொம்பு. மூலமெனவே - முன்போலவே.
    20. அல்பொழுது - இராப்பொழுது. எல்பொழுது - பகற்பொழுது.
    21. அருத்தி - விருப்பம். கருத்தினில் - உள்ளத்தினில்.
    24. துஞ்சல் - தூங்குதல். விஞ்சுபொருள் - உயர்ந்த பொருள்.
    25. மாதிரம் - திக்கு.
    26. அமுத ஆழி - பாற்கடல். புயல் - திருமால்;
    ஆகுபெயர். துயிலல் - நித்திரை செய்தலை.)



    1589 - அன்றவனை மாலென அறிந்தனன் அறிந்துஞ்
    சென்றனன் அகந்தையொடு செய்யதிரு வைகும்
    மன்றன்மணி மார்பமிசை வண்கைகொடு தாக்கி
    இன்றுயில் உணர்ந்திடுதி என்றலும் எழுந்தான். - 27



    1590 - ஏற்றெழு முராரிதனை யாரையுரை என்றே
    சாற்றுதலும் யாமுனது தாதையறி யாய்கொல்
    நாற்றலைகொள் மைந்தவென நன்றென நகைத்துத்
    தேற்றிடினும் நீதுயில் தௌ¤ந்திலைகொ லென்றேன். - 28



    1591 - தந்தையென வந்தவர்கள் தாமுதவு கின்ற
    மைந்தர்கள் தமக்குரைசெய் வாசகம தென்ன
    முந்துற வெமக்கிது மொழிந்ததியல் பன்றால்
    எந்தையென வேநினைதி யாம்பிரம மேகாண். - 29



    1592 - உந்தியிலி ருந்துவரும் உண்மையுண ராமே
    மைந்தனென நீயெமை மனத்தினினை குற்றாய்
    இந்தன முதித்திடும் எரிக்கடவு ளுக்குத்
    தந்தையது வோவிது சழக்குரைய தன்றோ. - 30



    1593 - நின்னுடைய தாதையென நீயுனை வியந்தாய்
    அன்னதை விடுக்குதி அருந்தவ வலத்தான்
    முன்னமொரு தூணிடை முளைத்தனை யவற்றால்
    உன்னிலது வேமிக உயர்ந்தபொரு ளாமோ. - 31



    1594 - துய்யமக னாம்பிரு சொற்றசப தத்தால்
    ஐயிரு பிறப்பினை அடிக்கடி யெடுத்தாய்
    மெய்யவை யனைத்தையும் விதித்தனம் விதித்தெங்
    கையது சிவந்துளது கண்டிடுதி என்றேன். - 32



    1595 - வேறு
    அன்றவற் கெதிர்புகுந் தனையசொற் புகறலுங்
    குன்றெடுத் திடுகரக் கொண்டல்போல் மேனியான்
    நன்றெனச் சிரமசைஇ நகைசெயா வெகுளியால்
    பொன்றளிர்க் கரதலம் புடைபுடைத் துரைசெய்வான். - 33



    1596 - நச்சராப் பூண்டிடு நம்பனுன் சென்னியில்
    உச்சியந் தலையினை உகிரினாற் களைதலும்
    அச்சமாய் வீழ்ந்தனை யதுபடைத் தின்னமும்
    வைச்சிலாய் நன்றுநீ மற்றெமை தருவதே. - 34



    1597 - நேயமாய் முன்னரே நின்னையீன் றுதவிய
    தாயும்யா மன்றியுந் தந்தையும யாமுனக்
    காயதோர் கடவுள்யாம் அடிகள்யாம் மைந்தநம்
    மாயையால் இன்றிவண் மதிமயக் குறுதிகாண். - 35


    (29. பிரமம் - மேலான கடவுள்.
    30. இந்தனம் - விறகு. சழக்கு - அறியாமை.
    31. முன்னமொரு தூணிடை முளைத்தனை -
    இது நரசிங்க அவதாரத்தைக் குறிப்பது.
    32. பிருகு - ஒரு முனவர். ஐயிருபிறப்பு - பத்துப்பிறப்பு.
    33. குன்று - கோவர்த்தனகிரி. அசைஇ - அசைத்து.
    34. உகிர் - நகம். களைதல் - நீக்குதல். அது - அத்தலையை.
    வைச்சிலாய் - வைத்துக்கொண்டாய் இல்லை.
    35. அடிகள் - குரு. மைந்த - மகனே!)



    1598 - பொன்னலா தாங்கொலோ பூணெலாம் இறைபுரி
    மன்னலா தாங்கொலோ மாநில மாநிலந்
    தன்னலா தாங்கொலோ தகுவதோர் வளமதில்
    என்னலா தாங்கொலோ எச்சரா சரமுமே. - 36



    1599 - எண்ணுவிப் போனுநான் எண்ணுகின் றோனுநான்
    கண்ணுதற் பொருளுநான் காண்டகும் புலனுநான்
    நண்ணுதற் கரியன்நான் நாரணக் கடவுள்நான்
    விண்ணகத் தலைவன்நான் வேதமும் பொருளுநான். - 37



    1600 - ஆதிநான் உருவுநான் அருவுநான் இருளுநான்
    சோதிநான் அத்தன்நான் தூயன்நான் மாயன்நான்
    யாதுநான் பூதநான் யாருநான் சங்கரன்
    பாதநான் அவனுநான் பரமெனும் பொருளுநான். - 38



    1601 - என்றுபற் பலவுரைத் திடுதலும் யானெதிர்
    சென்றுருத் திருவருஞ செருவினைப் புரிதுமேல்
    வென்றியுற் றவரரோ மேலையோர் எழுகென
    வன்றிறற் போர்செய்வான் வந்தனன் மாலுமே. - 39



    1602 - ஏற்றெழுந் தோர்சிலை ஏந்தியே வாங்கிமால்
    கூற்றிரும் படைமுதற் கொடியவெம் படையெலாம்
    மாற்றருந் தன்மையால் வல்லையுய்த் திடுதல்கண்
    டாற்றினன் குசைகளால் அனையவெம் படைதொடா. - 40



    1603 - வேறு
    ஆங்கவை யழிவுற அரியுந் தன்படை
    வாங்கினன் விடுத்தலும் வருதல் கண்டியான்
    பாங்கரின் நின்றவென் படையை அங்கையில்
    தாங்கிநின் றுய்த்தனன் தடுத்து மீண்டதே. - 41



    1604 - அப்படை மீண்டபின் ஆதி யாகிய
    ஒப்பருஞ் சிவனளித் துளது புங்கவர்
    எப்பெரும் படைக்குமோ ரிறைவ னாயது
    மைப்புயல் மேனிமால் வழுத்தி வாங்கினான். - 42



    1605 - மஞ்சன முதலிய மறுவில் பூசனை
    நெஞ்சுறு புலன்களின் நிரப்பி ஓச்சலும்
    எஞ்சலில் அமரர்கள் இரிய மேற்செலும்
    நஞ்சினுங் கொடிதென நடந்த வேலையே. - 43


    (39. செருவினை - போரினை. புரிதுமேல் - செய்தால்.
    40. கூற்று இரும்படை எமனுடைய பெரிய அஸ்திரம்.
    குசைகளால் - தருப்பைகளால்.
    42. புங்கவர் எப்பெரும் படைக்கும் ஓர் இறைவனாயது -
    இது பாசுபதாஸ்திரம்.
    43. மஞ்சனம் - திருமஞ்சனம். நிரப்பி - செய்துமுடித்து.)



    1606 - முன்னமே எனக்கும்அம் முக்கண் நாயகன்
    அன்னதோர் படையளித் தருளி னானதை
    உன்னியே வழிபடீஇ ஒல்லை யுய்த்தனன்
    வன்னிமேல் வன்னிசெல் வண்ண மென்னவே. - 44



    1607 - ஒருதிறத் திருவரும் உஞற்றி யேவிய
    அரனருள் பெரும்படை தம்மில் ஆடல்செய்
    தெரிகனற் கற்றைகள் யாண்டுஞ் சிந்தியே
    திரிதலுற் றுலகெலாஞ் செற்று லாயவே. - 45



    1608 - அப்படை திரிதலும் அவைகள் வீசிய
    துப்புறழ் கொழுங்கனல் தொல்லை வானினும்
    இப்புவி மருங்கினும் ஈண்ட வானவர்
    வெப்புற விரிந்தனர் விதிர்ப்புற் றேங்குவார். - 46



    1609 - வீண்டனர் ஒருசிலர் வெதும்பி விம்மியே
    மாண்டனர் ஒருசிலர் வந்த நஞ்சமுண்
    டாண்டவர் கழலிணை அடைதும் யாமெனாக்
    காண்டகு கயிலையின் கண்ணுற் றார்சிலர். - 47



    1610 - காரெலாங் கரிந்தன ககனந் தன்னொடு
    பாரெலாம் எரிந்தன பௌவப் பாற்படு
    நீரெலாம் வறந்தன நிரந்த பல்லுயிர்ப்
    பேரெலாந் தொலைந்தன பின்னும் போர்செய்தேம். - 48



    1611 - இந்தவா றமர்புரிந் திட்ட காலையில்
    தந்தையார் அருளினால் தமியன் மாமுகம்
    வந்துநா ரதனெனும் மறுவில் மாமுனி
    சிந்தைசெய் தெமக்கிவை செப்பல் மேயினான். - 49



    1612 - நீர்முதல் நாமென நினைந்து கூறியே
    போர்முத லேசில புரிகின் றீர்கொலாம்
    ஓர்முதல் அன்றியே இல்லை உங்களில்
    ஆர்முதல் இருவரும் அன்ன பண்பினீர். - 50



    1613 - பொருசமர் கருதியே புகுந்த போழ்தினும்
    உரியதோர் படையல துலகந் தீப்பதோர்
    வெருவரும் பெரும்படை விடுத்திர் அப்படை
    அருளிய கடவுளை அயர்த்திர் போலுமால். - 51



    1614 - கடவுளை மறந்திரேல் கருதி நீர்பெறும்
    அடுபடை நாமமும் அயர்த்தி ரோவது
    நெடிதுநும் மனத்தினில் நினைந்து தேற்றுமின்
    விடுமினி அமரென விளம்பி மேலுமே. - 52


    (46. துப்பு உறழ் - பவளத்துண்டுகள் போல.
    47. வீண்டனர் - விலகியோடினார்கள்.
    49. தந்தையார் - இங்குச் சிவபெருமான்.
    50. ஓர் முதல் அன்றியே இல்லை - ஒரு பிரமத்தினை அன்றி வேறு இல்லை.
    52. அயர்த்திரோ - மறந்தீர்களோ.)



    1615 - வாதியா இன்னுநீர் மலைதி ரேயெனின்
    ஆதியாய் அருவுரு வான தோர்பொருள்
    சோதியாய் நடுவுறத் தோன்றுங் காண்டிரென்
    றோதியால் எமக்கிவை உணர்த்திப் போயினான். - 53



    1616 - போயினன் உரைத்தசொற் புந்தி கொண்டிலம்
    தீயென உருத்திகல் செருக்கு நீங்கலம்
    ஆயிர மாண்டுகா றமரி யற்றினம்
    மாயிரும் புவனமும் உயிரும் மாயவே. - 54



    1617 - இங்கிவை யாவையும் இறுதி யூழியின்
    அங்கியின் நடம்புரி அண்ணல் நோக்கியே
    தங்களில் இருவருஞ் சமர்செய் சின்றனர்
    புங்கவர் தாமெனும் புகழை வெ·கினார். - 55



    1618 - அறிவறை போயினர் அகந்தை உற்றனர்
    உறுவதொன் றுணர்கிலர் உண்மை யோர்கிலர்
    சிறுவரில் இருவருஞ் சீற்றப் போர்செயா
    இறுதிசெய் கின்றனர் உலகம் யாவையும். - 56



    1619 - ஈங்கிவர் செயலினை இன்னுங் காண்டுமேல்
    தீங்குறும் உலகுயிர் சிதைந்து வீடுமால்
    ஓங்கிய நந்நிலை உணர்த்தின் ஆயிடைத்
    தாங்கரும் வெஞ்சமர் தணிந்து நிற்பரால். - 57



    1620 - தம்மையே பொருளெனச் சாற்று கின்றதும்
    வெம்மைசேர் வெகுளியும் வெறுத்து வீட்டியே
    செம்மைசேர் மனத்தராய்த் திகழ்வர் தாமெனா
    எம்மையா ளுடையவன் எண்ணி னானரோ. - 58



    1621 - வேறு
    ஆன்றதோ ரளவை தன்னில் அடைந்தது மாகந் தன்னில்
    வான்றிகழ் பானாட் கங்குல் மதிபகல் தழுவு நென்னல்
    ஞான்றது தனில்யாங் கண்டு நடுக்குற நடுவ ணாகத்
    தோன்றினன் கனற்குன் றேபோல் சொல்லரும் பரத்தின் சோதி. - 59



    1622 - தோற்றிய செய்ய சோதி தொல்லமர் உழந்தி யாங்கண்
    மாற்றரும் படைக ளாக வழங்கிய இரண்டும் வௌவி
    ஆற்றருந் தன்மைத் தாக அணுகுறா தகன்று போகிச்
    சீற்றமுஞ் சமரும் நீங்கிச் சேணுற நோக்கி நின்றேம். - 60


    (53. மலைதிரேல் - போர் புரிவீராயின். ஓதியால் - ஞான உணர்ச்சியால்.
    54. புந்தி - மனம். மா இரும் - மிகப்பெரிய.
    56. அறிவு அறை போயினர் - அறிவு அற்றுப் போயினர்.
    58. எம்மையாளுடையவன் - சிவபெருமான்.
    59. மாகந்தன்னில் - மாசி மாதத்தில். பானாட்கங்குல் மதிபகல்
    தழுவு நென்னல் ஞான்றதுதனில் - அமாவாசையின் முதனாளான
    சதுர்த்தசியின் நடு இராத்திரியில்; மகாசிவராத்திரியில்.
    60. சோதி - சோதி லிங்கம். சேணுற - வானத்தில் (அச்சோதிலிங்கத்தையே).)



    1623 - நிற்றலும் யாங்கள் கேட்ப நெடுவிசும் பிடையோர் வார்த்தை
    தெற்றென எழுந்த தம்மா சிறுவிர்காள் நுமது வன்மை
    பற்றலர் புரமூன் றட்ட பரமமே காண்பான் சோதி
    மற்றிதன் அடியும் ஈறும் வரன்முறை தேரு மென்றே. - 61



    1624 - கேட்டனம் அதனை நெஞ்சில் கிளர்ந்தெழு சீற்றம் யாவும்
    வீட்டினம் எனினும் பின்னும் விட்டிலம் அகந்தை தன்னைக்
    காட்டிய எமது முன்னோன் காண்பனும் வலியை யென்ன
    வீட்டுடன் விசும்பிற் சொற்றார் யார்கொலென் றெண்ணிப் பின்னும். - 62



    1625 - ஏணுற எதிர்ந்தி யாஞ்செய் இகலினுக் கிடையூ றாக
    நீணில மதனைக் கீண்டு நிமிர்ந்துவான் புகுந்து நீடு
    மாணுறு சோதி தானும் மறைமுனி உரைத்த வாறு
    காணிய வந்த தெம்மில் கடந்தவான் பொருள்கொல் என்றேம். - 63



    1626 - தீதறு காலின் வந்த செந்தழல் அன்றால் ஈது
    யாதுமொன் றறிதல் தேற்றாம் இருவரும் இதனை இன்னே
    ஆதியும் முடியும் நாடி யன்னது காண்டும் என்னா
    மாதவன் தானும் யானும் வஞ்சினம் இசைத்து மன்னோ. - 64



    1627 - நீடுவான் உருவிச் சென்று நிலனுற விடந்து புக்கும்
    ஓடிநாம் ஒல்லை தன்னில் உற்றிதற் கடியும் ஈறும்
    நாடினால் அவற்றில் ஒன்றும் நலம்பெற முன்னங் கண்டோர்
    பீடுயர் தலைவர் ஈதே துணிவெனப் பேசி நின்றேம். - 65



    1628 - முடியினைக் காண்பன் என்றே மொழிந்தனன் தமியன் ஏனை
    அடியினைக் காண்பன் என்றே அரியும்அங் கிசையா நின்றான்
    நடைபயில் மழலை ஓவா நாகிளஞ் சிறுவர் வானில்
    சுடர்மலி கதிரைக் கையால் தீண்டுவான் துணியு மாபோல். - 66



    1629 - எரியுறழ் தறுகட் செங்கண் இமிலுடை எருத்தம் யாரும்
    உருகெழு துழனிக் கூர்வாய் ஔ¢ளெயி றிலங்கு தந்தங்
    கருவரை யனைய மேனிக் கடுநடைக் குறுந்தாள் வௌ¢ளைக்
    குரமொடு கண்ணன் அன்றோர் கோலமாங் கோலங் கொண்டான். - 67



    1630 - ஒருபது நூற தாகும் யோசனை உகப்பி னோடு
    பருமையு மாகும் அந்தப் பகட்டுரு வாகி முன்னந்
    தரணியை இடந்து கீழ்போய்த் தடவியே துருவிச் சென்று
    நிறைபடு புவனம் யாவும் நீந்தியே போயி னானால். - 68


    (61. கேட்ப - கேட்கும்படி. சிறுவிர்காள் - சிறுவர்களே.
    காண்பான் - காணுமாறு. தேரும் - உணருங்கள்.
    63. ஏண் - வலிமை. 64. காலின் வந்த - வாயுவில் உண்டாகும்.
    ஈது - இச்சோதி. யானும் - இங்குப் பிரமன். வஞ்சினம் - சபதம்.
    67. தறுகண் - அஞ்சாமை. கருவரை - கரியமலை.
    குறுந்தாள் - குறுகிய காலும். குரம் - குளம்பு. கண்ணன் - திருமால்.
    கோலமாம் - பன்றியின். கோலம் - வடிவு. 68. உகப்பு - உயரம்.
    பருமை - பருமன். பகடு - பன்றி. இடந்து - பிளந்து. நீந்தி - கடந்து.) - 68



    1631 - பாதலம் நாடி அன்னான் படர்தலும் யானும் ஆங்கோர்
    ஓதிம வடிவ மாகி ஒல்லையில் எழுந்து மீப்போய்
    மேதகு விசும்பின் மேலாம் வியன்புவ னங்கள் நாடிப்
    போதலுஞ் சோதி முன்னம் போலமேல் போயிற் றம்மா. - 69



    1632 - முன்னமோ ரேன மாகி முரணொடு புவனி கீண்டு
    வன்னியாய் எழுந்த சோதி வந்ததோர் மூலங் காண்பான்
    உன்னியே போன மாலோன் ஊக்கியே செல்லச் செல்லப்
    பன்னெடுங் காலஞ் சென்ற பாதமுங் காணான் மாதோ. - 70



    1633 - நொந்தன எயிறு மேனி நுடங்கின நோன்மை யாவுஞ்
    சிந்தின புனலுண் வேட்கை சேர்ந்தன உயிர்ப்பி னோடும்
    வந்தன துயரம் போன வஞ்சினம் அகந்தை வீந்த
    முந்தையில் உணர்வு மால்பால் முழுதொருங் குற்ற தன்றே. - 71



    1634 - தொல்லையில் உணர்ச்சி தோன்றத் துண்ணெனத் தௌ¤ந்த கண்ணன்
    அல்லுறழ் புயலின் தோற்றத் தண்ணலங் களிற்றின் யாக்கை
    மெல்லவே தரிக்க லாற்றான் வீட்டவுங் கில்லான் மீண்டு
    செல்லவும் ஊற்ற மில்லான் சிவனடி சிந்தை செய்தான். - 72



    1635 - வேறு
    என்றும் உணர்வரிய எம்பெருமான் உன்றிருத்தாள்
    அன்றி அரணில்லை அவற்றைஅருச் சித்திடவும்
    பொன்றிய தென்வன்மை பொறுத்தி குறையடியேன்
    ஒன்று முணரேன்என் றுளம்நொந்து போற்றினனே. - 73



    1636 - ஆன பொழுதில் அமலன் திருவருளால்
    தேனு லவுதண்டார்த் திருமால் மிடலுடைத்தாய்
    ஏன வடிவோ டெழுந்துபுவிப் பால்எய்தி
    வானுறுசோ திக்கணித்தா வந்து வணங்கிநின்றான். - 74



    1637 - வேறு
    நின்றான் ஒருபால் நெடுமாலது நிற்க யான்முன்
    பின்றா வகையாற் பெருஞ்சூளிவை பேசி வானில்
    சென்றா யிரமாண்டு திரிந்து திரிந்து நாடிக்
    குன்றாத சோதிக் கொழுந்தின்தலை கூட லேன்யான். - 75



    1638 - மீளும் படியும் நினையேன் வினையேனும் மீளில்
    சூளும் பழுதா மதுவன்றித் துணிந்து முன்னம்
    மூளுஞ் சுடரின் முதல்கண்டரி மூர்த்தி யாவான்
    ஆளென்பர் என்னை அழிவெய்தும்இவ் வாற்றல் மன்னோ. - 76



    1639 - எந்நாள் வரைசெல் லினுஞ்செல்லுக இன்னும் விண்போய்ப்
    பொன்னார் முடிகண் டபின்அல்லது போக லேனென்
    றுன்னா வதுகா ணியபோதலும் உள்ளம் வெம்பி
    மன்னா வுயிரு முலைந்தாற்றலும் மாண்ட தன்றே. - 77


    (69. ஓதிமம் - அன்னப்பறவை. 70. ஏனம் - பன்றி. புவனி - பூமியை.
    ஊக்கி - முயற்சித்து. 72. அல்உறழ் - இருளை ஒத்த.
    களிற்றின்யாக்கை - பன்றிவுருவினை. ஊற்றம் - வல்லமை.
    73. என்றும் - எந்நாளும். 74. மிடல் - வலிமை. புவிப்பால் - பூவுலகத்தை.
    75. பெருஞ்சூள் - பெரிய சபதம். 77. எந்நாள் வரை செல்லினும் செல்லுக -
    எவ்வளவு காலம் சென்றாலும் செல்லட்டும்; எந்நாள் - எவ்வளவு காலம்;
    வரை - இச்சோதிமலை செல்லினும் - மேற்போனாலும்;
    செல்லுக - இன்னும் மேற்போகட்டும்.)



    1640 - கண்ணுஞ் சுழன்ற சிறைநொந்தன காலும் ஓய்ந்த
    எண்ணுந் திரிந்தத துபோதில் எழுந்த சோதி
    உண்ணின்ற சித்த ரெனவேபலர் ஒல்லை மேவி
    விண்ணின் தலைபோய் இதுவொன்று விளம்ப லுற்றார். - 78



    1641 - வானார் பரஞ்சோ தியின்ஈற்றினை வாரி தன்னுள்
    மீனார் தரவே திரிகின்றதொர் வௌ¢ளை அன்னந்
    தானா முணருஞ் சிறைபோகித் தளர்ந்து வன்மை
    போனலும் நாட வருகின்றது போலும் அம்மா. - 79



    1642 - அன்னந் தனக்கீ தறிவின்மைய தாகும் அல்லால்
    பின்னொன் றுளதோ துணிவுற்றதொர் பெற்றி நோக்கின்
    இன்னுஞ் சிறிது பொழுதேகின் இறக்கும் இந்த
    மன்னுஞ் சுடரைச் சிவனென்று மனங்கொ ளாதோ. - 80



    1643 - மாலென் பவனும் நிலங்கீண்டனன் வல்லை யேகி
    மூலந் தெரிவான் உணராமல் முரணும் நீங்கிச்
    சீலங் குறுகச் சிவனேசர ணென்று பைய
    ஞாலந் தனில்வந் தனல்வெற்பினை நண்ணி நின்றான். - 81



    1644 - முந்துற் றிதனை அருள்செய்திடு மூர்த்தி தானே
    சிந்தைக்குள் மாசு தனைத்தீர்த்தருள் செய்யின் உய்யும்
    இந்தப் பறவை யெனயானும் இதனை நாடிப்
    புந்திக்குள் மைய லொழிந்தேயவர்ப் போற்றி செய்தேன். - 82



    1645 - ஈசன் அருளால் இவைகூறினர் ஏக லோடும்
    ஆசின் வழியாம் அகந்தைத்திற னாதி யாய
    பாசங் களைவீட் டியரன்புகழ பன்னி ஏத்தி
    நேசங் கொடுபூ சனைசெய்ய நினைந்து மீண்டேன் - 83



    1646 - வேறு
    வந்துகண்ணன் தனையணுகி வான்பொருள்யா மென்றிகலி
    முந்துறுவெஞ் சமர்இயற்றி முனிமொழியும் உணர்ந்திலமால்
    தந்தைவர வறியாமல் தாள்முடியுந் தேடலுற்றேம்
    அந்தமுறும் வேலைதனில் அவன்அருளால் அவற்புகழந்தேம். - 84



    1647 - கீண்டுநில னிருவிசும்பிற் கிளர்ந்தும்அடி முடியுணரேம்
    மீண்டும்அவன் தன்அருளால் மிடல்பெற்று வந்தனமால்
    ஈண்டுசிவன் தனைவழிபட் டிருவரும்அன் னவன்தோற்றங்
    காண்டுமென யானுரைப்பக் கண்ணனும்அங் கதற்சிசைந்தான். - 85


    (79. ஈற்றினை - முடிவினை. வாரி - நீர். ஆர்தா - அடைய.
    80. மூலம் - அடி. பைய - மெதுவாக.
    83. ஆசின் வழியாம் - அஞ்ஞானத்தின் வழியாய் உண்டாகும்.)



    1648 - இருவரும்அச் சிவனுருவை இயல்முறையால் தாபித்து
    விரைமலர்மஞ் சனஞ்சாந்தம் விளக்கழலா தியவமைத்துப்
    பொருவருபூ சனைபுரிந்து போற்றிசெய்து வணங்குதலும்
    எரிகெழுசோ திக்கணித்தா எந்தைஅவண் வந்தனனே. - 86



    1649 - மைக்களமும் மான்மழுவும் வரதமுடன் அபயமுறும்
    மெய்க்கரமும் நாற்புயமும் விளங்குபணிக் கொடும்பூணுஞ்
    செக்கருறு மதிச்சடையுஞ் சேயிழையோர் பாகமுமாய்
    முக்கணிறை யாங்காண முன்னின்றே யருள்புரிந்தான். - 87



    1650 - அவ்விடையா மிருவர்களும் அமலன்றன் அடிவணங்கிச்
    செவ்விதின்நின் றவன்அருளில் திளைத்திதனைச் செப்பினமால்
    மெய்வகையாம் அன்பின்றி விளங்காநின் னியம்மறையும்
    இவ்வகையென் றுணராதே யாங்காணற் கௌ¤வருமோ. - 88



    1651 - வேறு
    புந்தி மயங்கிப் பொருங்காலை யெம்முன்னில்
    செந்தழலின் மேனிகொடு சென்றருளித் தொல்லறிவு
    தந்து நினையுணர்த்தித் தாக்கமரும் நீக்கினையால்
    எந்திரம்யாம் உள்நின் றியற்றுகின்றாய் நீயன்றோ. - 89



    1652 - உன்னை உணரும் உணர்வுபுரிந் தாலுன்னைப்
    பின்னை யுணர்வேம் பெருமசிறி யேஞ்செய்த
    புன்னெறியை யெல்லாம் பொறுத்தியால் தஞ்சிறுவர்
    என்ன செயினும் இனிதன்றோ ஈன்றவர்க்கே. - 90



    1653 - இன்னாத் தகைசேர் இரும்பினைவல் லோன்இலங்கும்
    பொன்னாக் கியபரிசு போல எமையருளி
    மன்னாக் கினையயர்த்தோம் மற்றுனையும் யாங்களுயிர்
    தொன்னாட் பிணித்த தொடர கற்றவல் லோமோ. - 91



    1654 - வேறு
    என்றி யம்பியாம் ஏத்தலும் எதிருற நோக்கிக்
    குன்ற வில்லுடை யொருவன்நீர் செய்தன குறியா
    ஒன்றும் எண்ணலீர் நும்பெரும் பூசனை உவந்தாம்
    அன்று மக்கருள் பதந்தனை இன்னும்யாம் அளித்தேம். - 92



    1655 - வேண்டு நல்வரங் கேண்மின்நீர் என்றலும் விசும்பில்
    தாண்ட வம்புரி பகவநின் சரணமே அரணாப்
    பூண்டி டுந்தலை யன்பருள் என்றலும் புரிந்து
    காண்ட குந்தழற் சோதியுள் இமைப்பினிற் கலந்தான். - 93


    (86. இயல் முறை - இலக்கண முறைப்படி. விளக்கு - தீபம்.
    அழல் - தூபம். எந்தை - எம்பெருமான்.
    87. பணிக் கொடும் பூண் - அரவகுண்டலம்.
    சேயிழை - உமாதேவியர். யாம் - நாங்கள்.
    89. நினை உணர்த்தி - உன்னையும் அறிவித்து.
    90. பெரும - பெருமானே! ஈன்றவர்க்கு - பெற்றவர்க்கு.
    91. இன்னாத் தகைசேர் - கொடுந்தன்மை வாய்ந்த.
    மன்ஆக்கினை - படைத்தல் காத்தல் தொழில்களில் தலைமை ஆக்கினை.
    தொடர் - பாசம். 93. விசும்பில் - சிதாகாயவௌ¤யில்.
    தாண்டவம் - ஆனந்தத் தாண்டவம். பகவ - பகவனே!
    கலத்தல் - சோதியோடு சோதியாதல்.)



    1656 - கலந்த காலையில் யாங்கள்முன் தொழுதெழுங் காலைச்
    சலங்கொள் பான்மையின் முன்னுறத் தேடுவான் தழலாய்
    மலர்ந்த பேரொளி மீமிசை சுருங்கியே வந்தோர்
    விலங்க லாகிய துலகெலாம் பரவியே வியப்ப. - 94



    1657 - அன்ன தாஞ்சிவ லிங்கரூப ந்தனை அணுகி
    முன்ன மாகியே மும்முறை வலஞ்செய்து முறையால்
    சென்னி யால்தொழு தேத்தியெம் பதங்களிற் சென்றேம்
    பின்னர் எந்தையை மறந்திலம் போற்றுதும் பெரிதும். - 95



    1658 - அரியும் யானும்முன் தேடும்அவ் வனற்கிரி யனல
    கிரியெ னும்படி நின்றதால் அவ்வொளி கிளர்ந்த
    இரவ தேசிவ ராத்திரி யாயின திறைவற்
    பரவி யுய்ந்தனர் அன்னதோர் வைகலிற் பலரும். - 96



    1659 - ஆத லால்அவ னருள்பெறின் அவனியல் அறியும்
    ஓதி யாகுவர் அல்லரேல் பலகலை உணர்ந்தென்
    வேத நாடியென் இறையும்அன் னவன்நிலை விளங்கார்
    பேதை நீரரும் ஆங்கவர் அல்லது பிறரார். - 97



    1660 - மோக வல்வினை யாற்றியே பவத்திடை மூழ்கும்
    பாகர் அல்லவர்க் கெய்திடா தவனருள் பவமும்
    போக மாற்றிடு தருமமும் நிகர்வரு புனிதர்க்
    காகும் மற்றவன் அருள்நிலை பாகராம் அவரே. - 98



    1661 - நீயுந் தொல்வினை நீங்கலின் எம்பிரான் நிலைமை
    ஆயுந் தொல்லுணர் வின்றுவந் தெய்திய தவனே
    தாயுந் தந்தையுங் குரவனுங் கடவுளுந் தவமும்
    ஏயுஞ் செல்வமும் அனையவற் சார்தியா லென்றான். - 99


    (94. சலம் - தீராக் கோபம். விலங்கல் ஆகியது - மலைவடிவாயது.
    96. அனற்கிரி - அக்கினிமலை. அனலகிரி - அருணாசலம்;
    திருவண்ணாமலை.
    98. பவமும் போகமாற்றிடு தருமமும் நிகர்வரு புனிதர் -
    இருவினையொப்பு வாய்ந்த புனிதர். அவன் அருள்நிலை பாகர் -
    சத்திநிபாதத்து உத்தமர். 99. தொல்வினை - பழைய இருவினை.
    அவனே - அச்சிவபெருமானே.)

    ஆகத் திருவிருத்தம் - 1661
    ----------

    22. தக்கன் சிவபூசைசெய் படலம் (1662-1673)




    1662 - மருமலர் அயனிவை வகுப்ப நாடியே
    புரிகுவன் அ·தெனப் புகன்று தாதைதாள்
    பரிவொடு சிறுவிதி பணிந்து காசியாந்
    திருநகர் அதனிடைச் சேறல் மேயினான். - 1



    1663 - சென்றனன் காசியில் சிறந்த தொல்மணி
    கன்றிகை ஒருபுடை கங்கை வேலையில்
    பொன்றிகழ் செஞ்சடைப் புனிதற் காலயம்
    ஒன்றுமுன் விதித்தனன் உணர்வு சேர்ந்துளான். - 2



    1664 - அருளுரு வாகியே அகில மாவிகள்
    தருவதுங் கொள்வது மாகித் தாணுவாய்
    உருவரு வாகிய ஒப்பில் பேரொளித்
    திருவுரு வொன்றினைச் சிவனுக் காக்கினான். - 3



    1665 - நாயகன் மொழிதரு நவையில் ஆகமம்
    மேயின முறைதெரி விரத னாகியே
    பாய்புனல் புனைசடைப் பரமன் தாள்மலர்
    ஆயிரம் யாண்டுகா றருச்சித் தேத்தினான். - 4



    1666 - அருச்சனை புரிதலும் அயன்தன் காதலன்
    கருத்துறும் அன்பினைக் கண்டு கண்ணுதல்
    பொருக்கென வௌ¤ப்படப் புகழ்ந்து பொன்னுலாந்
    திருக்கழல் வணங்கினன் தௌ¤வு பெற்றுளான். - 5



    1667 - அகந்தைய தாகியே ஐய நின்தனை
    இகழ்ந்தனன் என்கணே எல்லை யில்பவம்
    புகுந்தன அவையெலாம் போக்கி நின்னிடைத்
    தகும்பரி சன்பினைத் தருதி யால்என்றான். - 6



    1668 - ஆயவை தொலைத்தளித் தவன்தன் பூசையின்
    நேயம தாகியே நிமலன் தன்கண
    நாயக இயற்கையை நல்கி வல்லையில்
    போயினன் தக்கனும் புனிதன் ஆயினான். - 7



    1669 - வேறு
    கங்கைச் சடையான் தனைத்தக்கனக் காசி தன்னில்
    அங்கர்ச் சனைசெய் திடப்போந்துழி அம்பு யன்மால்
    துங்கத் திமையோர் இறையாவருஞ் சூர மாதர்
    சங்கத் தவரு மகவெல்லை தணந்து போனார். - 8



    1670 - போகுற் றவர்கள் அனைவோரும் பொருவில் சீர்த்தி
    வாகுற்ற வீரன் சயந்தன்னை வழுத்தித் தங்கட்
    காகுற்ற தொல்லைத் தலந்தோறும் அடைந்து மாதோர்
    பாகத் தமலன் தனைப்பூசனை பண்ண லுற்றார். - 9



    1671 - ஆரா தனைகள் புரிந்தேஅனை வோரும் எங்கும்
    பேரா துநிற்கும் பெருமானருள் பெற்று மெய்யில்
    தீராத சின்னங் களுந்தீர்ந்து சிறந்து தத்த
    மூரா கியதோர் பதமேவி உறைத லுற்றார். - 10



    1672 - மேதக்க தக்கன் மகந்தன்னில் விரைந்து புக்காங்
    கேதத் தடிசில் மிசைந்தேபொருள் யாவும் ஏற்றுப்
    பூதத் தரின்மாய்ந் தெழுந்தேதம் புரிகள் தோறும்
    பேதைத் தொழில்அந் தணர்யாரும் பெயர்ந்து போனார். - 11



    1673 - என்றிங் கிவைகள் குரவோன்இசைத் திட்டல் கேளா
    நன்றென்று சென்னி துளக்குற்று நனிம மகிழ்ந்து
    குன்றின் சிறைகொய் தவன்தந்த குரிசில் உள்ளத்
    தொன்றுங் கவலை இலனாகிஅவ் வும்ப ருற்றான். - 12


    (1. மலர் - இங்குத் தாமரை. சிறுவிதி - தக்கன்.
    காசியாம் திருநகர் - அழகிய காசிநகர். 2. மணிகன்றிகை - மணிகர்ணிகை.
    3. அகிலம் ஆவிகள் - உலகினையும் உயிர்களையும் கொள்வதும் -
    அழிப்பதும். திருவுரு ஒன்று - சிவலிங்கம். 4. நாயகன் - சிவன்.
    தெரி - தெரிந்த. விரதன் - சிவதீட்சா விதரத்தினையுடையவன்.
    6. பவம் - பாவம். 7. கணநாயக இயற்கையை - கணநாதத் தன்மையினை.
    8. துங்கத்து - மிகவுயர்ச்சி வாய்ந்த. சூரமாதர் - தேவமாதர்.
    9. வாகு வலிமை. வீரன் - வீரபத்திரன்.
    10. தீராத சின்னங்கள் - நீங்காத வடுக்கள்.
    12. குரவோன் - வியாழ பகவான். குன்றின் சிறை கொயதவன்
    தந்தகுரிசில் - இந்திர குமாரனாகிய சயந்தன்.)
    ஆகத் திருவிருத்தம் - 1673
    -----------

    23. கந்த விரதப் படலம் (1674- 1800)




    1674 - உரைசெறி மகவான் செம்மல் உம்பரில் இருப்ப இம்பர்
    முரசெறி £னை வேந்தன் முசுகுந்தன் என்னும் வள்ளல்
    விரைசெறி நீபத் தண்டார் வேலவன் விரதம் போற்றித்
    திரைசெறி கடற்பா ராண்ட செயல்முறை விளம்ப லுற்றாம். - 1



    1675 - முந்தொரு ஞான்று தன்னில் முசுகுந்தன் வசிட்டன் என்னும்
    அந்தணன் இருக்கை எய்தி அடிமுறை பணிந்து போற்றிக்
    கந்தவேள் விரத மெல்லாங் கட்டுரை பெரியோய் என்ன
    மைந்தநீ கேட்டி யென்னா மற்றவை வழாது சொல்வான். - 2



    1676 - எள்ளருஞ் சிறப்பின் மிக்க எழுவகை வாரந் தன்னுள்
    வௌ¢ளிநாள் விரதந் தானே விண்ணவர் உலகங் காத்த
    வள்ளல்தன் விரத மாகும் மற்றது புரிந்த மேலோர்
    உள்ளமேல் நினைந்த வெல்லாம் ஒல்லையின் முடியும் அன்றே. - 3



    1677 - பகிரதன் என்னும் வேந்தன் படைத்தபா ருலகை யெல்லாம்
    நிகரறு கோரன் என்னும் நிருதனங் கொருவான் வௌவ
    மகவொடு மனையுந் தானும் வனத்திடை வல்லை ஏகிப்
    புகரவன் தனது முன்போய்த் தன்குஆஆ புகன்று நின்றான். - 4


    (1. மகவான் செம்மல் - சயந்தன். இம்பர் - இவ்வுலகம்.
    நீபம் - கடம்பு. வேலவன் விரதம் - முருகக் கடவுளுக்குரிய
    சஷ்டிவிரதம். 3. எழுவகை வாரந் தன்னுள் - ஞாயிறு முதலிய
    ஏழு நாட்களில். வௌ¢ளி நாள் விரதம் - சுக்கிர வார விரதம்.
    4. கோரன் என்னும் திருதன் - கோரன் என்னும் அசுரன்.
    புகர் - சுக்கிரன்.) -



    1678 - பார்க்கவன் என்னும் ஆசான் பகீரதன் உரைத்தல் கேளா
    வேற்கரன் மகிழு மாற்றால் வௌ¢ளிநாள் விரதந் தன்னை
    நோற்குதி மூன்றி யாண்டு நுங்களுக் கல்லல் செய்த
    மூர்க்கனும் முடிவன் நீயே முழுதுல காள்வை என்றான். - 5



    1679 - நன்றென வினவி மன்னன் ஞாயிறு முதலாம் நாளில்
    ஒன்றெனும் வௌ¢ளி முற்றும் உணவினைத் துறந்து முன்பின்
    சென்றிடும் இரண்டு நாளும் திவாவினில் அடிசில் மாந்தி
    இன்றுயில் அதனை நீத்தி யாண்டுமூன் றளவு நோற்றான். - 6



    1680 - நோற்றிடும் அளவில் ஐயன் நுதியுடைச் செவவேல் வந்து
    மாற்றலன் உயிரை யுண்டு வல்லையின் மீண்டு செல்லப்
    போற்றியே பகீர தப்பேர்ப் புரவலன் தன்னூ ரெய்தி
    ஏற்றதொல் லரக பெற்றான் இன்னுமோர் விரதஞ் சொல்வாம். - 7



    1681 - வாரிச மலர்மேல் வந்த நான்முகன் மதலை யான
    நாரத முனிவன் என்போன் உலத்தகு விரத் மாற்றி
    ஓரெழு முனிவர் தம்மில் உயர்ந்திடு பதமும் மேலாஞ்
    சீரொடு சிறப்பும் எய்தச் சிந்தனை செய்தான் அன்றே. - 8



    1682 - நூற்படு கேள்வி சான்ற நுண்ணிய உணர்வின் மிக்கோன்
    பார்ப்பதி உதவு முன்னோன் பதமுறை பணிந்து போற்றி
    ஏற்புறு முனிவ ரான எழுவகை யோரில் யானே
    மேற்பட விரத மொன்றை விளம்புதி மேலோய் என்றான். - 9



    1683 - முன்னவன் அதததக் கேளா முழுதருள் புரிந்து நோக்கி
    அன்னது பெறுதி திண்ணம் ஆறுமா முகத்து நம்பி
    பொன்னடி வழிபா டாற்றிப்பொருவில்கார்த் திகைநாள் நோன்பைப்
    பன்னிரு வருடங் காறும் பரிவுடன் புரிதி என்றான். - 10



    1684 - நாரதன் வினவி ஈது நான்புரிந் திடுவன் என்னாப்
    பாருல கதனில் வந்து பரணிநாள் அபரா ணத்தில்
    ஓர்பொழு துணவு கொண்டே ஒப்பில்கார்த் திகைநாள் தன்னில்
    வீரவேல் தடக்கை அண்ணல் விரதத்தை இயற்ற லுற்றான். - 11



    1685 - தூசொடு கயத்தின் மூழ்கித் துய்யவெண் கலைகள் சுற்றி
    ஆசறு நியம முற்றி ஆன்றமை புலத்த னாகித்
    தேசிகன் தனது பாதஞ் சென்னிமேற் கொண்டு செவ்வேள்
    பூசனை புரிந்திட் டன்னான் புராணமும் வினவி னானால். - 12


    (5. ஆசான் - அசுரகுரு. வௌ¢ளிநாள் விரதந்தன்னை மூன்று
    யாண்டுநோற்குதி - மூன்று வருடம் சுக்கிரவார விரதந்தனை
    அனுட்டிக்கக் கடவாய். 6. வௌ¢ளி முற்றும் - வௌ¢ளிக்கிழமை
    முழுவதும். முன்பின் சென்றிடும் இரண்டு நாளும் - வியாழனும்
    சனியும் ஆகிய இரு தினங்களிலும். திவாவினில் - பகலில் மாத்திரம்.
    7. ஐயன் - முருகன். மாற்றலன் - இங்குக் கோரன் என்னும் அசுரன்.
    8. வாரிச மலர் - தாமரை மலர். ஓர் எழு முனிவர் - சத்தவிருடிகள்.
    9. பார்ப்பதி - பார்வதி. முன்னோன் - விநாயகன்.
    மேற்பட - உயர்ந்தோனாக.
    10. ஆறு மாமுகத்து நம்பி - சண்முகக்கடவுள்.
    கார்த்திகை நாள் நோன்பு - கார்த்திகை விரதம்.
    11. பரணி நாள் - பரணி நட்சத்திரம். அபராணத்தில் - பிற்பகலில்.
    12. தூசொடு - கட்டிய ஆடையுடன். கயம் - குளம். வெண்கலை - வௌ¢ளை வஸ்திரம்.) -



    1686 - கடிப்புனல் அள்ளித் தன்னோர் கைகவித் துண்டு முக்காற்
    படுத்திடு தருப்பை என்னும் பாயலிற் சயனஞ் செய்து
    மடக்கொடி மாதர் தம்மை மறலியா மதித்து வள்ளல்
    அடித்துணை யுன்னிக் கங்குல் அவதியு முறங்கா துற்றான். - 13



    1687 - அந்தநாள் செல்லப் பின்னர் உரோகிணி யடைந்த காலைச்
    சந்தியா நியமம் எல்லாஞ் சடக்னெ முடித்துக் கொண்டு
    கந்தவேள் செம்பொற் றண்டைக் கான்முறை வழிபட் டேத்தி
    வந்தமா தவர்க ளோடும் பாரணம் மகிழ்ந்து செய்தான். - 14



    1688 - பாரணம் விதியிற் செய்தோன் பகற்பொழு துறங்கு மாயின்
    ஆரண மறையோர் தம்மில் ஐம்பதிற் றிருவர் தம்மைக்
    காரண மின்றிக் கொன்ற கடும்பழி யெய்தும் என்னா
    நாரதன் மாயம் வல்லோன் இமைத்திலன் நயனஞ் சற்றும். - 15



    1689 - விழியொடும் இமைகூ டாமே வெய்யவன் குடபால் வீழும்
    பொழுதள விருந்து மற்றைப் புறத்துள செயலும் போற்றி
    அழிவறு விரதம் இவ்வாறு ஆறிரு வருட மாற்றி
    எழுவகை முனிவோ ருக்கும் ஏற்றமாம் பதத்தைப் பெற்றான். - 16



    1690 - இந்தநல் விரதந் தன்னை ஈண்டொரு மறையோன் நோற்று
    முந்திய மனுவே யாகி முழுதுல கதனை ஆண்டான்
    அந்தணன் ஒருவன் பின்னும் அவ்விர தத்தைப் போற்றிச்
    சிந்தையின் நினைந்தாங் கெய்தித் திரிசங்கு வாகி யுற்றான். - 17



    1691 - ஈங்கொரு மன்னன் வேடன் இருவரும் நோற்று வண்மை
    தாங்கிய அந்தி மானே சந்திமான் என்று பேராய்
    வீங்குநீர் உடுத்த பாரை மேலைநாட் புரந்தார் என்ப
    ஆங்கவர் பின்னாள் முத்தி அடைவது திண்ணம் அம்மா. - 18



    1692 - இப்படி ஆரல் நாளில் விரதத்தை இயல்பின் நோற்று
    முப்புவ னத்தின் வேண்டும் முறைமையை யடைந்த நீரார்
    மெய்ப்படு தொகையை யாரே விளம்புவர் ஈதே யன்றி
    ஒப்பரும் விரதம் வேறும் ஒன்றுள துரைப்பக் கேண்மோ. - 19



    1693 - வெற்பொடும் அவுணன் தன்னை வீட்டிய தனிவேற் செங்கை
    அற்புதன் தன்னைப் போற்றி அமரரும் முனிவர் யாருஞ்
    சொற்படு துலையின் திங்கட் சுக்கில பக்கந் தன்னில்
    முற்பக லாதி யாக மூவிரு வைகல் நோற்றார். - 20


    (13. மறலியா மதித்து - யமனாகக் கருதி. உன்னி - நினைத்து.
    14. பாரணம் - விரத முடிவில் உண்ணுதல்.
    15. ஐம்பதிற்று இருவர் - நூறுபேர். கடும் பழி - கொடிய பழி.
    16. குடபால் - மேற்கு. ஆறு இரு வருடம் - பன்னிரண்டு வருடம்.
    17. இந்த நல் விரதம் - நல்ல இக் கார்த்திகை விரதம்.
    19. ஆரல் நாள் - கார்த்திகை நாள்.
    20. வெற்பு - கிரவுஞ்ச மலை. அவுணன் - தாரகன்.
    துலையின் திங்கள் - ஐப்பசிமாதம். முற்பகல் ஆதியாக
    மூவிரு வைகல் - பிரதமை முதலாக ஆறுதினம்.) -



    1694 - முந்திய வைக லாதி மூவிரு நாளுங் காலை
    அந்தமில் புனலின் மூழ்கி ஆடையோ ரிரண்டு தாங்கிச்
    சந்தியிற் கடன்கள் செய்து தம்பவிம் பங்கும் பத்திற்
    கந்தனை முறையே பூசை புரிந்தனர் கங்குற் போதில். - 21



    1695 - நிறைதரு கட்டி கூட்டி நெய்யினாற் சமைக்கப் பட்ட
    குறைதவிர் மோத கத்தைக் குமரநா யகற்க ருத்திப்
    பிறவுள விதியுஞ் செய்து பிரான்திருப் புகழ்வி னாவி
    உறுபுனல் சிறிது மாந்தி உபவசித் திருந்தார் மாதோ. - 22



    1696 - ஆரண முனிவர் வானோர் அங்கதன் மற்றை வைகல்
    சீரணி முருக வேட்குச் சிறப்பொடு பூசை யாற்றிப்
    பாரணம் விதியிற் செய்தார் பயிற்றுமிவ் விரதந் தன்னால்
    தாரணி அவுணர் கொண்ட தம்பதத் தலைமை பெற்றார். - 23



    1697 - என்றிவை குரவன் செப்ப இறையவன் வினவி எந்தாய்
    நன்றிவை புரிவன் என்னா நனிபெரு வேட்கை யெய்தி
    அன்றுதொட் டெண்ணில் காலம் அவ்விர தங்கள் ஆற்றிக்
    குன்றெறி நுதிவேல் ஐயன் குரைகழல் உன்னி நோற்றான். - 24



    1698 - வேறு
    ஆன காலையில் ஆறுமா முகமுடை அமலன்
    கோன வன்தனக் கருளுவான் மஞ்ஞைமேல் கொண்டு
    தானை வீரனும் எண்மரும் இலக்கருஞ் சார
    வானு ளோர்களுங்கணங்களுஞ் சூழ்வுற வந்தான். - 25



    1699 - வந்து தோன்றலும் மன்னவர் மன்னவன் மகிழ்ந்து
    கந்த வேளடி பணிந்தனன் கைதொழூஉப் பரவ
    அந்த மில்பகல் விரதங்கள் ஆற்றினை அதனால்
    எந்த நல்வரம் வேண்டினை அதுபுகல் என்றான். - 26



    1700 - என்ற காலையில் முசுமுக முடையவன் எந்தாய்
    நன்று பாரெலா மெனதுசெங் கோலிடை நடப்பான்
    வென்றி மொய்ம்பினன் ஆதியாம் வீரரை யெல்லாம்
    ஒன்று கேண்மையின் துணைவராத் தருதியென் றுரைத்தான். - 27



    1701 - மன்னன் இவ்வஆஆ வேண்டுகோள் வினவுறா வள்ளல்
    அன்ன வாறுனக் குதவுவ மென்றருள் புரிந்து
    மின்னல் வாட்படை வீரமொய்ம் பன்முதல் விளம்புந்
    துன்னு தானையந் தலைவரை நோக்கியே சொல்வான். - 28



    1702 - நோற்றல் கூடிய முசுகுந்தன் நும்மினும் எம்பால்
    ஏற்ற மேதகும் அன்பினான் எழுகடற் புவியும்
    போற்ற வைகுவான் நீவிர்கள் ஆங்கவன் புடைபோய்
    ஆற்றல் சான்றிடு துணைவராய் இருத்திர்என் றறைந்தான். - 29


    (21. தம்பம் - அக்கினி. பிம்பம் - உருவம். கும்பம் - கலசம்.
    22. கட்டி - வெல்லக்கட்டி. திருப்புகழ் - அழகிய புகழ்.
    வினாவி - கேட்டு. 23. ஆரணம் - வேதம்.
    அதன் மற்றை வைகல் - அந்தச் சஷ்டியின் மறுதினம்.
    24. குரவன் - இங்கு வசிட்டன். இறையவன் - முசுகுந்தன்.
    25. மஞ்ஞை - மயில். தானை வீரன் - வீரவாகு.
    26. அந்தமில் பகல் - அளவற்றகாலம்.
    27. முசுமுகமுடையவன் - குரங்கின் முகத்தினையுடைய முசுகுந்த மன்னன்.
    29. நோற்றல் கூடிய - சஷ்டி விரதத்தை நோற்று முற்றுப்பெற்ற.) - 30



    1703 - வேறு
    முழுதருட் புரிதருங் கடவுள்சொல் வினவியே முடிவ தில்லாச்
    செழுமதித் தண்குடைச் சூர்குலந் தனையடுந் திறலி னேங்கள்
    பழிபடப் பானுவின் வழிவருஞ் சிறுமகன் பாங்க ராகி
    இழிதொழில் புரிகிலோ மெனமறுத் துரைசெய்தார் யாரும்வீரர். -



    1704 - ஞானநா யகனவர் மொழிதனைத் தேர்ந்துநம் முரைம றுத்தீர்
    ஆனதோர் பான்மையால் நீவிர்மா னுடவராய் அவனி மன்னன்
    சேனையா கிப்புறம் போற்றியே பற்பகற் சேர்திர் பின்னர்
    வானுளோர் புகழவே நோற்றுநம் பக்கலில் வருதி ரென்றான். - 31



    1705 - ஐயன்வான் மொழியினால் வீரமொய்ம் புடையவ னாதி யானோர்
    மையல்மா னுடவராய்த் தொல்லைநா ளுடையதோர் வன்மை நீங்கி
    மெய்யெலாம் வியர்வுறப் பதைபதைத் தேங்கியே விழும மிக்குப்
    பொய்யரேம் பிழைபொறுத் தருடியா லென்றுபொன் னடிப ணிந்தார். - 32



    1706 - கமலமார் செய்யசே வடியின்மேற் றாழ்ந்துகை தொழுது போற்றிக்
    குமரவேள் விடைதனைப் பெற்றுமா னவரெலாங் கொற்ற மன்னன்
    தமர்களாய் ஒழுகினார் நேமியம் படையுடைத் தரும மூர்த்தி
    அமரர்கோன் இளவலாய் ஆங்கவன் பின்செலும் அமைதி யேபோல். - 33



    1707 - ஆயதோர் காலையின் முசுமுகத் திறையவன் ஆடல் வேற்கை
    நாயகன் பொற்பதம் வந்தியா நிற்பநல் லருள்பு ரிந்தே
    பாயபொன் சுடர்மணித் தோகையம் புரவியும் படைக ளாகும்
    மாயிரும் பூதருந் தானும்அந் நிலைதனில் மறைத லுற்றான். - 34



    1707 - வேறு
    மறைந்தனன் குமரன் ஏக மன்னவன் மகிழ்ச்சி கொண்டு
    சிறந்திடு கருவூர் என்னுந் திருநகர் அரசின் மேவி
    அறந்தரு மாட வீதி அளப்பில புரிவித் தாங்கே
    நிறைந்திடு வீரர் தம்மை நிலைபெற இருத்தி னானே. - 35



    1709 - ஆயவர் தங்கட் கெல்லாம் அரும்பெறல் ஆக்க முள்ள
    தேயமுங் கரிதேர் வாசித் திரள்களும் வரிசை முற்றுந்
    தூயபல் சனங்க ளாகுந் தொகுதியும் உதவித் தண்ட
    நாயக முதல்வ ராக நல்கினன் ஞால மன்னன். - 36



    1710 - அன்னதோர் காலந் தன்னில் அரம்பையர் அவனி யாளும்
    மன்னவர் தம்பால் தோன்றி வளர்தலும் வாகை மொய்ம்பின்
    முன்னவன் முதலோர்க் கெல்லாம் முசுகுந்த வேந்தன் அந்தக்
    கன்னியர் தம்மைக் கூவிக் கடிமணம் இயற்று வித்தான். - 37


    (30. சூர்குலம் - சூரபன்மனுடைய குலம்.
    பானுவின் வழிவரு சிறு மகன் - சூரியகுலத்தில் தோன்றிய முசுகுந்தன்.
    31. ஞான நாயகன் - முருகக் கடவுள். 33. மானவர் - வீரர்.
    தமர் - நண்பர். அமரர்கோன் இளவல் - உபேந்திரன்.
    35. வீரர்தம்மை - நவவீரர் ஆதியரை.
    37. வாகை மொய்ம்பின் முன்னவன் - வீரவாகுதேவன்.) -



    1711 - அந்தமில் வன்மை சான்ற ஆடலம் புயத்தோன் புட்ப
    கந்தியென் றுரைபெற் றுள்ள கன்னிகை தன்னை வேட்டுச்
    சிந்தையின் மகிழ்வால் சேர்ந்து சித்திர வல்லி யென்னும்
    பைந்தொடி தன்னை அன்பால் பயந்தனன் பதும மின்போல். - 38



    1712 - அத்தகு பொழுதில் பன்னை அனகனே சனகன் என்னும்
    புத்திரர் தம்மை நல்கிப் புவனியாள் முசுகுந் தற்குச்
    சித்திர வல்லி யென்னுஞ் சீர்கெழு புதல்வி தன்னை
    மெய்த்தகு வதுவை நீரால் விதிமுறை வழாமல் ஈந்தான். - 39



    1713 - ஏனைய வீரர் தாமும் இயல்புளி வழாமல் வேட்ட
    தேனிவர் குழலா ரோடுஞ் சிறந்தஇல் வாழ்க்கை போற்றிப்
    பானலங் குதலைச் செவ்வாய்ப் பாலரை நீல வேற்கண்
    மானனை யாரை நல்கி மனுகுலத் தொன்றி உற்றார். - 40



    1714 - சித்திர வல்லி யென்னுஞ் சீருடைச் செல்வி ஆங்கோர்
    தத்தையை வளர்த்த லோடுந் தண்டகத் தருமன் தேவி
    அத்தனிக் கிளியை வெ·க ஆங்கவன் தூதர் போந்து
    கைத்தலத் ததனைப் பற்றிக் கடிதினில் கொடுபோய் ஈந்தார். - 41



    1715 - அவ்வழி கிள்ளை காணாள் ஆயிழை அயர்த லோடும்
    எவ்வழி போயிற் றோவென் றிறையவன் உலகின் நாடி
    மைவழி கின்ற மேனி மறலிதன் துணைவி யானாள்
    கைவழி அமருந் தன்மை கதுமென உணர்ந்தான் அன்றே. - 42



    1716 - பூதலம் புரந்த செங்கோல் புரவலன் வீர மொய்ம்பன்
    ஆதியர் தம்மைக் கூவி அங்ஙனந் தூண்ட அன்னோர்
    ஏதமில் கரிதேர் வாசி எல்லையின் மறவர் சுற்ற
    மேதியங் கடவுள் மூதூர் விரைந்துபோய் வளைந்து கொண்டார். - 43



    1717 - தன்னகர் வளைத லோடுந் தருமன்வந் தேற்ற காலை
    அன்னவ னொடுபோர் செய்தே அடுமுரண் தொலைச்சி யம்பொன்
    வன்னமென் கிள்ளை தன்னை வாங்கினர் மீண்டு தங்கண்
    மின்னுள மகிழ நல்கி வேந்தற்கு விசயஞ் செய்தார். - 44



    1718 - சித்திர வல்லி பின்னர்ச் சீர்கெழு சூல்கொண் டுற்று
    மெய்த்தகு பலங்காய் வேண்டிய வேண்டினள் வினவ லோடு
    முத்தணி அலங்கல் திண்டோள் முசுகுந்த னதுகொண் டேக
    அத்திரு மலைநன்னாட்டுக் களப்பிலோர் தம்மை உய்த்தான். - 45



    1719 - மஞ்சுசூழ் மலைநா டுள்ளார் மன்னவர் மன்னன் ஆணைக்
    கஞ்சலர் இகழ்த லோடும் ஆடலம் புயனு மேனைச்
    செஞ்சிலை வீரர் தாமுஞ் சென்றனர் அந்நாட் டுள்ள
    வெஞ்சுர மீரொன் பானும் வென்றொரு பகலின் மீண்டார். - 46


    (38. பதுமமின்போல் - திருமகளைப் போல.
    41. தந்தை - கிளி. தருமன் தேவி - எமனுடைய மனைவி.
    42. மை - கருமை. மறலி - எமன். 43. மேதி - எருமை.
    மேதியங்கடவுள் மூதூர் - எமலோகம். 45. சூல் - கருப்பம்.
    பலங்காய் - பழங்களையும் காய்களையும்.
    46. சுரம் ஈர் ஒன்பான் - பதினெண் சுரங்கள். சுரம் - ஊர்.) -



    1720 -
    பூண்டிடு கழற்கால் வீரர் பொற்புறு புதல்வி யானாள்
    வேண்டிய தீய பைங்காய் வியத்தக நல்கிப் பின்னர்
    ஈண்டுள தரணி யெல்லாம் ஏகியே திறைகொண் டெங்கும்
    ஆண்டைய மன்னன் கோலும் ஆணையும் நடக்கச் செய்தார். - 47



    1721 - கருமுதிர் கின்ற காமர் கற்பக வல்லி யன்னாள்
    எரிகிளர் அங்கி வன்மன் என்பதோர் குமரன் தன்னை
    அரியதோர் தவத்தின் சீரால் அளித்தனள் அதனைக் கண்டு
    பெரிதுள மகிழ்ந்து மன்னன் பேரர சாட்சி செய்தான். - 48



    1722 - வேறு
    அன்ன காலையில் வலாசுரன் என்பதோ ரவுணன்
    பன்னெ டும்பெருஞ் சேனையுந் தானுமாய்ப் படர்ந்து
    பொன்னி னாட்டினைச் சுற்றியே அடர்த்தலும் புலவோர்
    மன்னர் மன்னவன் அவனுடன் சிலபகல் மலைந்தான். - 49



    1723 - நிருதர் போற்றிய வலாசுரன் தன்னொடு சேர்ந்து
    பொருது வென்றிலன் ஆதலால் பூதலம் புரக்குங்
    குருதி வேற்படை முசுகுந்த மன்னனைக் கூவி
    வருதி யென்றொரு தூதனை விடுத்தனன் மகவான். - 50



    1724 - ஏய தூதுவன் இருநிலம் புக்கனன் இமையோர்
    நாய கன்பணி உரைத்தலும் நன்றென வினவி
    மாயி ருந்திறல் வீரர்தம் படையொடும் வான்மேற்
    போயி னான்முசு குந்தனென் றுரைபெறும் புகழோன். - 51



    1725 - போன மன்னவன் புரந்தரன் பொன்னடி வணங்கித்
    தானை விண்ணவர்க் கதிபனாந் தலைமையைத் தாங்கி
    மானி னங்கள்மேல் மடங்கல்சென் றென்னவல் அவுணர்
    சேனை யங்கடல் யாவையும் இமைப்பினில் செறுத்தான். - 52



    1726 - சுற்று நிற்புறும் அவுணராஞ் சூழ்பெரும் பௌவம்
    வற்று கின்றுழி வலாசுரன் தன்னொடு மகவான்
    செற்ற நீரொடு சிலபகல் நின்றுபோர் செய்து
    கொற்ற மார்குலி சத்தினால் அவனுயிர் குடித்தான். - 53



    1727 - மன்னு தொல்புகழ் வலனுயிர் கோறலால் வலாரி
    என்ன வோர்பெயர் பெற்றனன் வாகையும் எய்திக்
    கொன்னு னைப்படை முசுகுந்த வேந்தனைக் கொண்டு
    பொன்ன கர்த்திருக் கோயிலில் புரந்தரன் புகுந்தான். - 54



    1728 - காய்ந்த மாற்றலர் தம்வலி கடந்தெனைக் ககன
    வேந்த னாக்கினை வீரமும் மேதகு புகழும்
    ஈந்தெ னக்குநற் றுணைவனு மாயினை இதனால்
    ஆந்த ரங்கமாஞ் சுற்றம்நீ அல்லையோ வென்றான். - 55


    (47. தீய பைங்காய் - இனிய பலாப்பழம்.
    49. பொன்னின் நாடு - சுவர்க்கம். 53. குலிசம் - வச்சிராயுதம்.
    55. ஆந்தரங்கம் - அந்தரங்கம்; நெருங்கிய நண்பு.) - 1



    1729 - என்று மன்னனை நோக்கியே முகமன்கள் இயம்பிக்
    குன்று போலுயர் தன்பெருங் கோயிலுட் கொடுபோய்
    மன்றல் மாண்புன லாடியே மணிக்கலை புனைந்து
    சென்று மால்தொழுந் தேவனைப் பூசனை செய்தான். - 56



    1730 - எயிலை யங்கெரி யூட்டிய கண்ணுதல் இமைய
    மயிலும் மைந்தலும் ஒருபுடை மகிழ்வுடன் மேவக்
    கயிலை யின்கணே அமர்தல்போல் இருத்தலுங் கண்டான்
    பயிலும் அன்புடை மன்னவன் பரவச மானான். - 57



    1731 - ஆடி னான்தொழு தேத்தினான் அடிகளை முடிமேற்
    சூடி னான்உள முருகினான் துள்ளினான் சுருதி
    பாடி னான்கரங் கொட்டினான் பகரொணா உவகை
    கூடி னான்மொழி குழறினான் பொடிப்புமெய் கொண்டான். - 58



    1732 - சிறந்த வௌ¢ளியங் கிரியின்மேற் கண்ணுதற் செல்வன்
    உறைந்த இப்பெருங் கோலத்தைக் கண்டுகண் டுளத்தே
    நிறைந்த மாமகிழ் வெய்தியே இருந்தனன் நெடுநாள்
    மறந்த னன்கொலோ பிறப்பினான் மயங்கியே என்றான். - 59



    1733 - ஓவி லாமலே ஒருபொருள் போற்றுவான் உன்னி
    மேவு கின்றவன் அவசமாய் விழிதுயின் றதுபோல்
    மாவின் மாமுகம் வாங்கியும் மயங்கிய மன்னன்
    தேவ தேவனை நோக்கியே தொழுதிவை செப்பும். - 60



    1734 - வேறு
    ஏகனே போற்றி யார்க்கும் ஈசனே போற்றி அம்மை
    பாகனே போற்றி மேலாம் பரஞ்சுடர் உருவே போற்றி
    மேகமார் களனே போற்றி விடைமிசை வருவாய் போற்றி
    மோகமார் தக்கன் வேள்வி முடித்திடு முதல்வா போற்றி. - 61



    1735 - அம்புயா சனன்மால் இன்னும் அளப்பருந் திறத்தாய் போற்றி
    நம்பனே போற்றி எங்கள் நாதனே போற்றி கோதில்
    செம்பொனே மணியே போற்றி சிவபெரு மானே போற்றி
    எம்பிரான் போற்றி முக்கண் இறைவனே போற்றி போற்றி. - 62



    1736 - பொங்கரா வணிக ளாகப் புனைதரு புனிதா போற்றி
    அங்கரா கத்திற் பூதி அணிந்திடும் ஆதி போற்றி
    வெங்கரா சலத்தின் வன்றோல் வியப்யும் போர்த்தாய் போற்றி
    சங்கரா பரமா போற்றி தாணுவே போற்றி போற்றி. - 63


    (56. முகமன் - உபசார வார்த்தைகள்.
    57. கண்ணுதல் இமைய மயிலும் மைந்தனும் -
    இது சோமாஸ்கந்தமூர்த்தியினைக் குறிப்பது.
    60. மாவின் மாமுகம் - குரங்கின் முகம்.
    61. மேகமார்களனே - நீலகண்டனே.
    63. பொங்கு - சீறு. அங்கராகத்தில் - பூசும் பரிமணத்திரவியத்தைப் போல.
    பூதி - விபூதி. கராசலம் - யானை.) - 64



    1737 - முன்னெனும் பொருளுக் கெல்லாம் முன்னவா போற்றி முப்பால்
    மன்னுயிர்க் குயிரே போற்றி மறைகளின் முடிவே போற்றி
    என்னைமுன் வலிந்தாட் கொண்டே இருநிலம் விடுத்தாய் போற்றி
    நின்னுருக் காட்டி யென்னை நினைப்பித்த நித்தா போற்றி. -



    1738 - எவ்வெவர் தம்மை யேனும் யாவரே எனினும் போற்றின்
    அவ்வவ ரிடமாகக் கொண்டே அவர்க்கருள் தருவாய் போற்றி
    மெய்வரு தௌ¤வில் உன்னை வௌ¤ப்பட உணர்ந்து ளோர்க்குத்
    தெய்வத போக முத்தி சிறப்பொடு தருவாய் போற்றி. - 65



    1739 - அம்புய மலர்மேல் அண்ணல் அச்சுத னாதி வானோர்
    தம்பதம் எமக்கு நல்குந் தற்பரா என்றே யாரும்
    நம்புறு பொருட்டால் வேதம் நவின்றிட அடைந்தோர்க் கெல்லா
    உம்பதம் பதமும் ஈயும் உலகுடை முதல்வா போற்றி. - 66



    1740 - உறைதரும் அமரர் யாரும் உழையராய்ச் சூழ நாப்பண்
    மறைபயில் பெரியோ ருற்று வழிபட இருந்தாய் போற்றி
    அறுவகை ஐந்தும் ஆறு மாகிய வரைப்பின் மேலாம்
    இறைவனே போற்றி என்பிழை பொறுத்தி என்றான். - 67



    1741 - இவைமுசு குந்தன் கூற எம்பிரான் கருணை செய்தே
    இவன்முகந் தன்னை நோக்கி ஆழியான் அளப்பில் காலம்
    உவகையால் வழிபா டாற்றி உம்பர்கோன் இடத்தில் வைத்தான்
    புவிதனிற் கொடுபோய் நம்மைப் பூசனை புரிதி என்றான். - 68



    1742 - என்றிவை முக்கண் மூர்த்தி இந்திரன் கேளா வண்ணம்
    நன்றருள் புரி லோடும் நனிபெரு மகிழ்ச்சி யெய்தி
    உன்றிரு வுளமீ தாயின் உய்த்தனன் அடியேன் என்னா
    வென்றிகொள் மன்னர் மன்னன் விம்மித னாகி யுற்றான். - 69



    1743 - இந்திரன் அமலன் பசை இவ்வழி முடித்த பின்னர்ச்
    செந்தழல் ஓம்பி ஏனைச் செய்கடன் புரிந்து வேறோர்
    மந்திரம் புகுந்து தேனு வருகென வல்லை கூவி
    வெந்திறல் மன்னற் கந்நாள் விருந்துசெய் வித்தான் அன்றே. - 70



    1744 - விருந்துசெய் வித்த பின்னர் விசித்திரக் கலையும் பூணுந்
    தெரிந்திடு மணியும் முத்தும் தெய்வதப் படையும் மற்றும்
    பரிந்துடன் உதவி இன்னும் வேண்டுவ பகர்தி என்னப்
    புரந்தரன் அருள லோடும் புரவலன் இதனைச் சொல்வான். - 71



    1745 - ஏவருந் தெரிதல் தேற்றா திருந்திடும் இமையா முக்கட்
    பாவையோர் பாகன் தன்னைப் பரிவொடு கொடுத்தி ஐய
    பூவுல கதனின் யான்போய்ப் பூசனை புரிதற் கென்னத்
    தேவர்கள் முதல்வன் கேளா இனையன செப்ப லுற்றான். - 72


    (64. முப்பால் மன்னுயிர் - விஞ்ஞானகலர்,
    பிரளயாகலர், சகலர் என்னும் மூவகை ஆன்மாக்கள்.
    67. அறுவகை ஐந்தும் ஆறும் - முப்பத்தாறு தத்துவங்கள்.
    68. ஆழியான் - திருமால்.
    70. செந்தழல் ஓம்பி - அக்கினி காரியம் செய்து.
    ஏனைச் செய்கடன் - சண்டேசுவரர் பூசை முதலியன.
    மந்திரம் - மாளிகை. தேனு - காமதேனு.
    72. இமையாமுக்கண் பாவையோர் பாகன் தன்னை - இங்குச் சோமாஸ்கந்தமூர்த்தி.) - 73



    1746 - உந்தியால் உலகைத் தந்த ஒருதனி முதல்வன் முன்னம்
    மைந்தர்தாம் இன்மை யாலே மன்னுயிர்த் தொகுதிக் கெல்லாந்
    தந்தையாய் இருந்த தங்கோன் சரணமே அரண மென்னாச்
    சிந்தைசெய் தூழி காலஞ் செய்தவம் இயற்றி யிட்டான். -



    1747 - தவமுழந் திருந்த காலைச் சாரதப் புணரி சுற்றக்
    கவுரியுந் தானும் ஐயன் கரணையால் வந்து தோன்றப்
    புவிதனை அளந்த மாயோன் பொள்ளென எழுந்து போற்றிச்
    சிவனடி வணக்கஞ் செய்து செங்கையால் தொழுது நின்றான். - 74



    1748 - வேறு
    மாதொரு பாகன் மகிழ்ந்தருள் செய்து
    நீதவ மாற்றி நெடும்பகல் நின்றாய்
    ஏதிவண் வேண்டும் இயம்புதி யென்னச்
    சீதரன் இன்னன செப்புத லுற்றான். - 75



    1749 - அந்தமில் ஆயுவும் ஆருயிர் காப்புஞ்
    செந்திரு வோடுறை செல்வமும் ஈந்தாய்
    மைந்தனி லாமல் வருந்தினன் எந்தாய்
    தந்தரு ளாய்தமி யேற்கினி என்றான். - 76



    1750 - குன்றிஆஆ ஆற்றிடு கோன்இவை செப்ப
    நன்றென வேநகை யாநவை இல்லா
    ஒன்றொரு செம்மல் உனக்குத வுற்றாம்
    என்றருள் செய்தனன் யாரினும் மேலோன். - 77



    1751 - கழையிசை போற்று கருங்கடல் வண்ணன்
    முழுதுல கீன்றிடு முற்றிழை பாதந்
    தொழுதிலன் நின்று துதித்திலன் அன்பால்
    வழிபடு நீரின் வணங்கிலன் மாதோ. - 78



    1752 - வேறு
    முறையி னால்தனக் கிளையவள் என்றே
    முன்னி னன்கொலோ மூலமும் நடுவும்
    இறுதி யும்மிலாப் பரமனுக் கெம்போல்
    இவளு மோர்சத்தி யெனநினைந் தனனோ
    மறுவி லாமலை மகளென உளத்தே
    மதித்த னன்கொலோ மாயவன் கருத்தை
    அறிகி லேம்உமை யம்மையாற் சிறிதும்
    அன்பு செய்திலன் முன்புசெய் வினையால். - 79


    (73. உந்தியால் உலகைத்தந்த ஒருதனி முதல்வன் - திருமால்.
    75. நெடும்பகல் - அளவற்ற காலம். சீதரன் - திருமால்.
    77. குன்றினை ஆற்றிடு - கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்திய.
    செம்மல் - ஆண்மகன்.
    78. கழை - வேய்ங்குழல். உலகீன்றிடு முற்றிழை - உமாதேவியார்.
    79. நினைந்தனனோ, ஓ: ஐயவினா.) - 80



    1753 - ஆன்ற ஐம்புலன் ஒருவழிப் படுத்தி
    ஆர்வம் வேரறுத் தையமொன் றின்றி
    ஊன்தி ரிந்திடி னுந்நிலை திரியா
    உண்மை யேபிடித் துலங்கண் முழுதும்
    ஈன்ற வெம்பெரு மாட்டியை நீக்கி
    எம்பி ரானையே வழிபடும் இயற்கை
    மூன்று தாளுடை ஒருவனுக் கல்லால்
    ஏனை யோர்களால் முடியுமோ முடியா. -



    1754 - அன்ன காலையில் எம்பெரு மாட்டி
    ஆழி யம்படை அண்ணலை நோக்கி
    என்னை நீயிவண் அவமதித் தனையால்
    எம்பி ராற்குநீ அன்புளன் அன்றால்
    முன்ன நீபெறு மதலையும் ஐயன்
    முனிவின் ஒல்லையின் முடிந்திட என்னாப்
    பன்ன ருங்கொடு மொழிதனை இயம்பிப்
    பராப ரன்தனை நோக்கியே பகர்வான். - 81



    1755 - ஆன தோர்பரப் பிரமமும் யானே
    அல்ல தில்லையென் றறிவிலாப் பேதை
    மானு டப்பெரும் பசுக்களை யெல்லாம்
    மருட்டி யேதிரி வஞ்சகன் முன்னம்
    ஞான நீரினார் அறிவினால் அன்றி
    நணுகு றாதநீ அணுகிநிற் பதுவோ
    ஊனு லாவிய உயிரினுக் குயிராம்
    ஒருவ செல்லுதும் வருகென உரைத்தாள். - 82



    1756 - இன்ன வாறுரைத் தெம்பெரு மாட்டி
    எம்பி ரான்தனைக் கொண்டுபோ மளவில்
    அன்ன தன்மைகண் டச்சுதக் கடவுள்
    அலக்கண் எய்தியே அச்சமுற் றயர்ந்து
    தன்னு ளந்தடு மாறிமெய் பனித்துத்
    தளர்ந்து நேமயந் தண்கரைக் கணித்தாய்
    மன்னு பல்பொருட் கலந்தனைக் கவிழ்த்த
    வணிக னாமென வருந்தினன் மாதோ. - 83



    1757 - அம்மை தன்பொருட் டால்இடை யூறிங்
    கடைந்த தென்றுமால் அகந்தனில் உன்னி
    எம்மை யாளுடை இறையவன் தனையும்
    இறைவி தன்னையும் இளங்கும ரனையும்
    மெய்மை சேர்வடி வாகஆங் கமைத்து
    வேத வாகம விதிமுறை வழாமற்
    பொய்மை தீர்ந்திடும் அன்பினாற் பூசை
    புரிந்து பின்னரும் வருந்தியே நோற்றான். - 84


    (80. மூன்றுதாளுடை ஒருவன் - பிருங்கிமுனிவன்.
    81. ஐயன் - இறைவன். முனிவின் - கோபத்தால்.
    84. இறையவன் தனையும் இறைவி தன்னையும் இளங்குமரனையும்
    மெய்மை சேர்வடிவு - இது சோமாஸ்கந்தமூர்த்தி உருவம்.) -



    1758 -
    வேறு
    அனைய தன்மையால் ஆண்டுபல் லாயிர கோடி
    புனித னாகியே நோற்றனன் அதுகண்டு புழுங்கி
    முனிவ ராயுளோர் இன்னமும் வருகிலன் முதல்வன்
    இனிய ருந்தவஞ் செய்பவர் இல்லையால் என்றார். - 85



    1759 - அந்த வெல்லையில் சத்தியுஞ் சிவமுமாய் அனைத்தும்
    வந்தி டும்பரி சளித்தவர் இருவரும் வரலுஞ்
    சிந்தை யின்மகிழ் வெய்தியே அம்மைசே வடியின்
    முந்தி யோடியே வணங்கினன் முழுதொருங் குணர்ந்தோன். - 86



    1760 - இறைவி தாள்மலர் பணிந்தபின் எம்பிரான் பதமும்
    முறையி னாற்பணிந் திருவர்தஞ் சீர்த்திகள் முழுதும்
    மறையின் வாய்மையால் பன்முறை யால்வழுத் துதலும்
    நிறையும் நல்லருள் புரிந்தனன் தனக்குநே ரிலாதான். - 87



    1761 - மாது நீயிவற் கருள்புரி யென்னஅம் மாது
    சீத ரன்தனை நோக்கியே நம்பெருந் தேவன்
    ஓதும் வாய்மையும் யான்முனிந் துரைத்திடும் உரையும்
    பேதி யாவினி யாவரே அன்னவை பெயர்ப்பார். - 88



    1762 - எங்கள் நாயகன் விழிபொழி அங்கியால் இறந்து
    துங்க மேன்மைபோய்ப் பின்முறை முன்புபோல் தோன்றி
    உங்குன் மாமகன் இருக்கவென் றுரைத்தனள் உமையாள்
    அங்க தாகவென் றருளியே மறைந்தனன் ஐயன். - 89



    1763 - அம்மை தன்னுடன் எம்பிரான் மறைதலும் அண்ணல்
    விம்மி தத்தொடு தன்பதி புகுந்துவீற் றிருப்ப
    மைம்ம லிந்திடு மெய்யுடைக் காமவேள் வாரா
    இம்மெ னக்கடி துதித்தனன் அவன்மனத் திடையே. - 90



    1764 - வேறு
    வந்திடுங் காமவேள் வடிவுடைக் காளையாய்க்
    கந்தமார் பூங்கணை கன்னல்விற் கைகொடே
    மைந்தரா னோர்களும் மாதருங் காமமேற்
    புந்திவைத் திடும்வகை போர்புரிந் துலவினான். - 91



    1765 - தண்ணிழற் குடையெனச் சசிபடைத் துடையவன்
    எண்ணமற் றொருபகல் யார்க்குமே லாகிய
    கண்ணுதற் பகவன்மேற் கணைமலர் சிதறியே
    துண்ணெனத் துகளதாய்த் தொலைதலுற் றானரோ. - 92



    1766 - பூழியாய் மாண்டுளான் பொருவிலா நல்லருள்
    ஆழியான் ஆணையால் அருவொடே உருவமாய்
    வாழிசேர் தொல்லைநாள் வளனொடு மன்னினான்
    சூழிமால் கிரிதருந் தோகைசொல் தவறுமோ. - 93


    (90. அவன் மனத்திடை - திருமால் மனத்தினின்றும்.
    91. பூங்கணை - மலர்க்கணை. கன்னல் வில் - கரும்புவில்.
    92. சசி - சந்திரன். 93. நல்லருள் ஆழியான் - சிவபெருமான் -
    சிவபெருமான். சூழிமால்கிரி - சிகரங்களையுடைய பெரிய இமயமலை.) -



    1767 - நிற்பமற் றித்திறம் நேமியான் முன்னைநாள்
    அற்புடன் வழிபடும் அமலையைக் குமரனைத்
    தற்பரக் கடவுளைத் தனதுமார் பிற்கொடே
    பற்பகல் பணியின்மேல் பாற்கடல் துஞ்சினான். - 94



    1768 - நீடவே துயிலுமால் நெட்டுயிர்ப் பசைவினால்
    பீடுசேர் நாகணைப் பேருயிர்ப் பசைவினால்
    பாடுசூழ் தெண்டிரைப் பாற்கடல் அசைவினால்
    ஆடியே வைகினார் அலகிலா ஆடலார். - 95



    1769 - அன்னதோர் அமைதியில் அசுரசே னைக்கெலாம்
    மன்னனாய் உற்றுளான் வாற்கலி என்பவன்
    என்னைவா னவரொடும் ஈடழித் தமர்தனில்
    முன்னைநாள் வென்றனன் முடிவிலா மொய்ம்பினால். - 96



    1770 - அத்திறங் கண்டுநான் அமரரோ டேகியே
    பத்தநூற் றுத்தலைப் பாந்தள்மேல் துயில்கொளுஞ்
    சுத்தனைப் போற்றியே தொழுதுவாற் கலியினால்
    எய்த்தனம் காத்தியால் எம்மைநீ என்றனன். - 97



    1771 - நஞ்சுபில் கெயிறுடை நாகமாம் பள்ளிமேல்
    துஞ்சும்வா லறிவினான் துயிலைவிட் டேயெழீஇ
    அஞ்சலீர் உங்களுக் கல்லலே ஆற்றிய
    வஞ்சனா ருயிர்தனை வல்லையுண் டிடுதுமால். - 98



    1772 - என்றுதன் கையமைத் தேழொடே ழுலகமுண்
    டன்றொரா லிலையின்மேல் அறிதுயில் மேவிய
    மன்றலந் தண்டுழாய் மாலைசூழ் மவுலியான்
    ஒன்றுபே ரன்பினால் ஒன்றெனக் குரைசெய்தான். - 99



    1773 - பார்த்தியா லெனதெனும் பைம்பொன்மார் பத்திடை
    மூர்த்தியாய் வைகிய முதல்வியைக் குமரனைத்
    தீர்த்தனைப் பூசனை செய்துநின் தீவினை
    ஆர்த்திநீங் குதியெனா ஆதரத் தருளினான். - 100



    1774 - அன்னவா றருள்செய்தே அனையர்மூ வோரையும்
    பொன்னுலா மார்பினும் பொள்ளென வாங்கியே
    என்னதா கியகரத் தீந்தனன் ஈதலுஞ்
    சென்னிமேல் தாங்கினன் மாதவத் திண்மையால். - 101


    (95. பாடு - பக்கங்களில்.
    98. வாலறிவினான் - தூயவறிவினையுடைய திருமால்.
    100. தீர்த்தன - பரிசுத்தன். தீவினையார்த்தி - தீவினையாலாகும் துன்பத்தை.
    101. அனையர் மூவோரையும் - சோமாஸ்கந்தமூர்த்தியை.) -



    1775 - வேறு
    அங்கதற்பின் முறையாக அச்சுதன்பாற் கடல்அகன்று
    நங்குழுவெ லாஞ்சூழ நாவலந்தீ வகத்தணுகி
    எங்கள்பிரான் அருள்நடஞ்செய் எல்லையிலாத் தில்லைதனில்
    துங்கமணி மன்றுதனைத் தொழுதுபர வசமானான். - 102



    1776 - செல்லரிய பரவசமாய்த் திருமுன்னே வீழ்ந்திறைஞ்சித்
    தொல்லைதனில் அறிவிழந்து துணைவிழிகள் புனல்பெருகப்
    பல்லுயிர்க்கும் உயிராகும் பரமசிவ பூரணத்தின்
    எல்லைதனில் புக்கழுந்தி எழுந்திலன்ஈ ரிருதிங்கள். - 103



    1777 - இத்திறத்தால் அவசமதாய் ஈறுமுதல் நடுவுமிலா
    அத்தனது திருவடிக்கீழ் அடங்கியே ஆணையினால்
    மெய்த்துரியங் கடந்தவுயிர் மீண்டுசாக் கிரத்தடையத்
    தத்துவமெய் யுணர்ச்சியெலாந் தலைத்தலைவந் தீண்டினவால். - 104



    1778 - கண்டுயில்வான் எழுந்ததெனக் கதுமெனமா யோன்எழுந்து
    புண்டரிகப் பதந்தொழுது போற்றிசெய்து புறத்தேகித்
    தெண்டிரைசூழ் புவிக்கரசு செலுதியவாற் கலியுடனே
    மண்டுபெருஞ் சமர்செய்து வல்லைதனில் உயிர்உண்டான். - 105



    1779 - வாற்கலிதன் உயிருண்டு வாகைபுனைந் தேதிருமால்
    சீர்க்கருணை நெறியதனால் தேருக்கும் என்றனக்கும்
    ஏற்கும்வகை விடையுதவி இம்மெனவே மறைந்தேகிப்
    பாற்கடலில் பணியணைமேற் பண்டுபோல் கண்வளர்ந்தான். - 106



    1780 - தேவர்குழாத் தொடுமீண்டு சிறந்திடும்இத் துறக்கத்தில்
    ஆவலுடன் வந்தேயான் அன்றுமுதல் இன்றளவும்
    பூவைநிறங் கொண்டபுத்தேள் பொன்மார்பில் வீற்றிருந்த
    மூவரையும் அருச்சித்தேன் முதுமறைநூல் விதிமுறையால். - 107



    1781 - மன்னர்க்கு மன்னவநீ வழிபடுதல் காரணமாத்
    தன்னொப்பி லாதாரைத் தருகென்றாய் தந்திடுவ
    தென்னிச்சை யன்றேமால் இசைவுனக்குண் டாமாகில்
    பின்னைத்தந் திடுவனெனப் பெருந்தகையோன் பேசினனால். - 108



    1782 - பேசுதலும் முசுகுந்தன் பெயர்ந்துபாற் கடலிடைபோய்க்
    கேசவனை அடிவணங்கிக் கிட்டிநின்று வேண்டுதலும்
    வாசவன்தன் இடந்தன்னில் வைத்திடும்நம் முயிர்க்குயிரைப்
    பூசனைசெய் கொடுபோந்து பூதலத்தி னிடையென்றான். - 109



    1783 - நன்றெனவே இசைவுகொண்டு நாரணனை விடைகொண்டு
    சென்றுபுரந் தரற்குரைப்பச் சிந்தைதளர்ந் தேயிரங்கி
    அன்றுதனை ஈன்றதனிப் புனிற்றாவை அகலுவதோர்
    கன்றெனவே நனிபுலம்பி ஒருசூழ்ச்சி கருதினனால். - 110



    1784 - தேவர்பிரான் அவ்வளவில் தெய்வதக்கம் மியன்செயலான்
    மூவடியும் மூவிரண்டு முறைவேறு வேறாக
    ஏவர்களும் வியப்பெய்த இமைப்பின்முனம் அமைப்பித்துக்
    காவலன்கை தனிற்கொடுப்பக் கைதவமென் றறிந்தனனே. - 111


    (102. தில்லை - சிதம்பரம். துங்கமணிமன்று - சிற்சபை.
    103. ஈரிரு திங்கள் - நான்கு மாதம். 106. வாகை - வெற்றிமாலை.
    107. பூவை - காயாம்பூ. மூவர் - சோமாஸ்கந்தமூர்த்தியை.
    111. மூவிரண்டுமுறை - ஆறு முறை. அமைப்பித்து - உண்டாக்கி.
    கைதவம் - வஞ்சனை.) - 1



    1785 - ஆதியில்விண் ணவர்தச்சன் அமைத்திடுமூ விருவடிவும்
    பூதலமன் னவன்வாங்கிப் புதல்வனொடுங் கவுரியொடும்
    வீதிவிடங் கப்பெரமான் மேவியதாம் எனஇருந்தும்
    ஏதுமுரை யாநெறியால் இவரவரன் றெனமொழிந்தான். - 112



    1786 - துங்கமுறு முசுகுந்தன் சொல்வினவிச் சுடராழிப்
    புங்கவன்தன் மார்பமெனும் பொன்னூசல் ஆட்டுகந்து
    மங்கையொடுங் குமரனொடும் மகிழச்சியொடும் வீற்றிருந்த
    எங்கள்பிரான் தனைக்கொடுவந் திவராமோ என்றனனே. - 113



    1787 - இந்திரன்இவ் வாறுரைப்ப இமையாமுக் கட்பகவன்
    முந்துதிறல் முசுகுந்தன் முகநோக்கி நின்பாலில்
    வந்தனமால் எம்மையினி மாநிலத்திற் கொடுபோந்து
    புந்திமகிழ் வாய்பூசை புரிவாயென் றருள்செய்தான். - 114



    1788 - ஊழிநா யகன்மகவான் உணராமே இ·துரைப்பக்
    கேழிலாப் பெருவகை கிடைத்தினிது பணிந்தேத்தி
    ஆழியான் பூசனைகொண் டமர்ந்தவரா மாமிவரை
    வாழியாய் தருகவென வாங்கினன்மன் னவர்மன்னன். - 115



    1789 - வாங்கியபின் இமையவர்கோன் மன்னவனை முகநோக்கி
    ஈங்கிவரை அறுவரொடும் இருநிலத்தி னிடைகொடுபோய்ப்
    பூங்கமலா லயமுதலாப் புகல்கின்ற தலந்தன்னில்
    தீங்கறவே வழிபாடு செய்தியென விடைகொடுத்தான். - 116



    1790 - நன்றெனவே விடைகொண்டு நானிலத்தி னிடையிழிந்து
    தென்றிசையா ரூர்தன்னில் சிவனுறைபூங் கோயில்புக்கு
    மன்றல்கமழ் தண்டுளவோன் வழிபடவீற் றிருந்தோரை
    வென்றியரி யணைமீதில் விதிமுறையால் தாபித்தான். - 117



    1791 - கடனாகை நள்ளாறு காறாயல் கோளரியூர்
    மடனாக முத்தீனும் வாய்மியூர் மறைக்கானம்
    உடனாகுந் தலம்ஆறில் ஓராறு வடிவுகொண்ட
    படநாக மதிவேணிப் பரஞ்சுடரை அமர்வித்தான். - 118



    1792 - இப்படியே ஒருபகலில் எழுவரையுந் தாபித்து
    மெய்ப்பரிவில் வழிபாடு விதிமுறையால் புரிவித்துச்
    செப்பரிய புகழாரூர்த் தேவனுக்கு விழாச்செய்வான்
    முப்புவனங் களும்போற்றும் முசுகுந்தன் முன்னினனால். - 119


    (112. இவர் அவர் அன்றுத - இவர் நீர் பூசித்த மூர்த்தி அல்ல.
    113. இவராமோ - இவரோ அவர். 14. திறன் - வெற்றியினையுடைய.
    115. ஊழிநாயகன் - சிவபெருமான். கேழிலா - ஒப்பற்ற.
    வாழியாய் - வாழ்வினையுடையாய்.
    116. இவரை அறுவரொடும் - இப்பெருமானை இந்த ஆறுமூர்த்திகளுடன.
    கமலாலயம் - திருவாரூர்.
    117. பூங்கோயில் - இது திருவாரூரிலுள்ள சிவாலயத்தின் பெயர்.
    118. நாகை - நாகப்பட்டினம். நள்ளாறு - திருநள்ளாறு.
    காறாயில் - திருக்காறாயில். கோளரியூர் - திருக்கோளிலி.
    வாய்மியூர் - திருவாய்மூர். மறைக்கானம் - திருமறைக்காடு.
    119. ஒரு பகலில் - ஒரே நாளில்.) - 1



    1793 - அந்நாளில் இமையவர்கோன் அருச்சனைசெய் பரம்பொருளைக்
    கொன்னார்வேல் மன்னவன்கைக் கொடுத்ததொரு கொடும்பவத்தால்
    பொன்னாட்டின் திருவிழந்து புலையுருவந் தனைத்தாங்கிக்
    கைந்நாக மிசையூர்ந்து கமலையெனும் பதியடைந்தான். - 120



    1794 - ஆரூரின் மேவியபின் அமலன்விழாப் போற்றுதற்குப்
    பாரூருந் திரையூரும் பலவூரும் வருகவென்றே
    வாரூரும் முரசெறிந்து மதக்களிற்றின் மிசையேறித்
    தேரூருஞ் செம்பொன்மணித் திருவீதிப் புடைசூழ்ந்தான். - 121



    1795 - பூங்கமலா புரிவாழும் புங்கவனார்க் கன்னதற்பின்
    ஓங்குதிரு விழாநடத்தி ஒழிந்தபதிப் பண்ணவர்க்கும்
    ஆங்கதுபோல் நிகழவித்தே அந்தமில்சீர் முசுகுந்தன்
    பாங்கில்வரும் வீரருடன் பாருலகம் புரந்திருந்தான். - 122



    1796 - ஆண்டுபல அப்பதியில் அமலன்விழாச் சேவித்துக்
    காண்டகைய தவம்புரிந்து கடைஞர்வடி வினைநீங்கித்
    தூண்டகைய தோள்மகவான் தொல்லுருவந் தனைப்பெற்று
    மீண்டுசுரர் பதிபுகுந்து விபவமுடன் வீற்றிருந்தான். - 123



    1797 - விண்ணவர்கோன் ஏகியபின் விரவுபுகழ்க் கருவூரில்
    எண்ணரிய பலகாலம் இறையரசு செலுத்தியபின்
    மண்ணுலகம் புரக்கஅங்கி வன்மனுக்கு முடிசூட்டித்
    துண்ணெனவே நோற்றிருந்து தொல்கயிலை தனையடைந்தான். - 124



    1798 - துங்கமிகு முசுகுந்தன் தொல்கயிலை யடைந்தபின்னர்
    எங்கள்விறல் மொய்ம்பினனும் இலக்கருடன் எண்மர்களும்
    தங்கள்சிறார் தமைவிளித்துத் தத்தமது சிறப்புநல்கி
    அங்கிவன்மன் பாலிருத்தி அரியதவம் ஆற்றினரே. - 125



    1799 - மாதவம்எண் ணிலஇயற்றி மானுடத்தன் மையைநீங்கி
    ஆதிதனில் அடலெய்தி அருள்முறையால் அனைவர்களும்
    மேதகுசீர்க் கந்தகிரி விரைந்தேகி வேற்கடவுள்
    பாதமலர் பணிந்தேத்திப் பத்திமைசெய் துற்றனரால். - 126



    1800 - ஆகையால் அயன்அறியா அருமறைமூ லந்தெரிந்த
    ஏகநா யகன்விரதம் எவரேனும் போற்றியிடின்
    ஓகையால் நினைநதவெலாம் ஒல்லைதனில் பெற்றிடுவர்
    மாகமேல் இமையவரும் வந்தவரை வணங்குவரே. - 127


    (எழுவரையும் - ஏழு மூர்த்திகளையும் (ஏழு தலங்களில்); [திருவாரூரில் வீதிவிடங்கர் என்றும், திருநாகையில் அழகவிடங்கர் என்றும், திருநள்ளாற்றில் நகரவிடங்கர்
    என்றும், திருக்காறாயிலில் ஆதிவிடங்கர் என்றும், திருக்கோளிலியில்
    அவனிவிடங்கர் என்றும், திருவாய்மூரில் நீலவிடங்கர் என்றும்,
    திருமறைக்காட்டில் புவனிவிடங்கர் என்றும் இறைவன் பெயர் பெறுவார்.]
    120. கொன் - அச்சம். கைந்நாகம் - ஐராவதம். கமலை - திருவாரூர்.
    121. பாரூரும் திரையூரும் பலவூரும் - பெரிய நகரங்களில் உள்ளவர்களும்,
    கடற்கரை நகரங்களில் உள்ளவர்களும், பற்பல கிராமங்களில் உள்ளவர்களும்.
    பார் - பூமியை. ஊரும் - ஊர்ந்து மோதுகின்ற. திரை - கடல்.
    ஊரும் - சூழ்ந்த. பலவூரும் - பல ஊரிலுள்ளாரும் என்று கூறினும் அமையும்.
    123. கடைஞர் வடிவினை - புலையன் உருவத்தை. விபவம் - செல்வம்.
    124. அங்கிவன்மன் - இவன் முசுகுந்தன்மகன். இங்குக் கூறப்பட்ட
    முசுகுந்தன் பாகவத புராணம்முதலியவற்றில் கூறப்படும் முசுகுந்தன் அல்ல என்க.
    125. விறல் மொய்ம்பினன் - வீரவாகுதேவன்.
    127. வேதநாயகன் விரதம் - முருகக்கடவுளுக்குரிய சுக்கிரவார விரதம்,
    கார்த்திகை விரதம், சஷ்டி விரதம் ஆகிய விரதங்கள்.) -
    ஆகத் திருவிருத்தம் - 1800
    -------

    24. வள்ளியம்மை திருமணப் படலம் (1801 -2067)




    1801 - வௌ¢ளியங் கிரியி னோர்சார் விளங்கிய கந்த வெற்பின்
    நள்ளுறு நகரந் தன்னில் நங்கையோ டினிது மேவும்
    அள்ளிலை மேற்கை நம்பி அம்புவி எயினர் போற்றும்
    வள்ளியை வதுவை செய்த மரபினை வழாது சொல்வாம். - 1



    1802 - வேறு
    அயன்ப டைத்திடும் அண்டத்துக் காவியாய்ப்
    பயன்ப டைத்த பழம்பதி என்பரால்
    நயன்ப டைத்திடு நற்றொண்டை நாட்டினுள்
    வியன்ப டைத்து விளங்குமேற் பாடியே. - 2



    1803 - ஆய தொல்லை அணிநகர் ஞாங்கரின்
    மீயு யர்ந்ததொர் வெற்புநிற் கின்றதால்
    பாய தெண்கடல் பாரள விட்டிடு
    மாய வன்தன் வடிவென நீண்டதே. - 3



    1804 - அரவுந் திங்களும் ஆறுமெல் லாரமுங்
    குரவுங் கொன்றையுங் கூவிள மும்மிசை
    விரவுந் தன்மையின் வெற்புவிண் ணோரெலாம்
    பரவுங் கண்ணுதற் பண்ணவன் போன்றதால். - 4



    1805 - வாலி தாகிய வான்அரு வித்திரள்
    நீல மேக நிரையொடு தாழ்தலில்
    தோலு நூலுந் துயல்வரு மார்புடை
    நாலு மாமுகன் போலுமந் நாகமே. - 5



    1806 - குமர வேள்குற மங்கையொ டிவ்விடை
    அமரு மாலது காண்பனென் றாசையால்
    தமர வானதி தானணு குற்றிட
    நிமிரு கின்றது நீள்கிரி அன்னதே. - 6


    (1. நங்கை - தெய்வயானையம்மை. எயினர் - வேடர்.
    வள்ளி - வள்ளியம்மை. வதுவை - திருமணம்.
    2. மேற்பாடி - இ·து ஓர் ஊர். 4. ஆரம் - ஆத்தி.
    குரவு - ஒரு மரப்பூ. கூவிளம் - வில்வம்.
    5. அருவிக்கு நூலும், மேகத்திற்கு தோலும் உவமையாகும்.
    தோல் - மான்தோல். நாகம் - மலை. 6. வானதி - ஆகாயகங்கை.
    நீள்கிரி - இது மாயவனுக்கும் உவமையாம். திருமாலுக்கும் கங்கைக்கும்
    முறையே முருகன் மருமகனும் மகனும் ஆதலால், முருகன் வள்ளியுடன்
    இருத்தலை இருவரும் காண விழைவர் ஆதலின் இங்குத் திருமாலும்
    கங்கையும் பொருந்துமாறு பொருள்படுதல் காண்க.) -



    1807 - வேறு
    கள்ளிறைத் திடுபூந் தண்டார்க் கடம்பணி காளை பன்னாட்
    பிள்ளைமைத தொழின்மேற் கொண்டு பெட்புடன் ஒழுகும் வண்ணம்
    வள்ளியைத தன்பால் வைத்து வள்ளிவெற் பென்னு நாமம்
    உள்ளவக் கிரியின் மேன்மை உரைத்திடும் அளவிற் றாமோ. - 7



    1808 - செய்யவெண் குன்றி வித்துஞ் சீர்திகழ் கழைவீழ் முத்தும்
    பையர வினங்கள் ஈன்ற பருமணித் தொகையும் ஈண்டிச்
    சையம தெங்குஞ் சேர்தல் தாரகா கணங்க ளெல்லாம்
    வெய்யவன் அழற்காற் றாது வீழந்தென விளங்கு கின்ற. - 8



    1809 - கானுறு தளவம் பூத்த காட்சியால் கழைக ளெல்லாந்
    தூநகை முத்த மீன்ற தோற்றத்தால் பொதும்பர் தன்னில்
    தேனமர் தொடையல் தூங்குஞ் செய்கையாற் சிலம்பின் சாரன்
    மீனமும் மதியும் பூத்த விண்ணென விளங்கிற் றம்மா. - 9



    1810 - கூட்டளி முரலும் நீலக் குண்டுநீர்ச் சுனைகள் யாண்டுங
    காட்டிய பிறங்கல் யாருங் காணொணா வள்ளல் ஈண்டே
    வேட்டுவர் சிறுமிக் காக மேவுதல் காண்ப னென்னா
    நாட்டமெய்ம் முழுதும் பெற்று நண்ணிய தன்மை போலாம். - 10



    1811 - விண்ணுயர் பிறங்கல் மீது விரிகின்ற சுனைகள் மிக்குத்
    துண்ணென விளங்கும் பெற்றி சூரியன் முதலோர் காண
    மண்ணெனும் மடந்தை ஆங்கோர் மதலையில் வரம்பி லாத
    கண்ணடி விரைந்து வைத்த காட்சிபோன் றிருந்த மாதோ. - 11



    1812 - ஔ¢ளிணர்க் கணியின் கொம்பர் உலவியே அசோகில் வாவி
    வௌ¢ளிலிற் பாய்ந்து மந்திவியன்கடு வுறைப்ப மீள்வ
    வள்ளியர் இடத்துச் சென்றோர் மானவப் பண்பி லோர்பாற்
    பொள்ளென இரப்பான் புக்குப் புலம்பொடு மீண்டவா போல். - 12


    (7. பிள்ளைமைத்தொழில் - குழந்தைகள் விளையாடும் விளையாட்டு.
    இது களவொழுக்கமாகப் பலவேடங்கள் பூண்டு முருகன் விளையாடிய
    விளையாட்டு ஆகும். 8. குன்றிவித்து - குன்றிமணி. கழை - மூங்கில்.
    சையம் - மலை. தாரகாகணங்கள் - நட்சத்திரங்கள்.
    9. தவளம் - முல்லை. பொதும்பர் - சோலை. 10. அளி - வண்டு.
    குண்டு - ஆழம். பிறங்கல் - மலை. 11. சூரியன் முதலோர் - சூரியன்
    சந்திரன் முதலியோர். மதலை - தூண். கண்ணடி - கண்ணாடி.
    12. இணர் - பூங்கொத்து. கணி - வேங்கை. வாவி - உலவி.
    வௌ¢ளில் - விளாமரம். வள்ளியர் - கொடையாளி.
    இங்கு, விளாமரம் மானுடத்தன்மை அற்றார்க்கு இணையாதல் காண்க.) -



    1813 - தொகையுறு குலைச்செங் காந்தள் துடுப்பெடுத் தமருஞ் சூழ்விற்
    சிகையுறு தோகை மஞ்ஞை செறிந்துலா வுற்ற தன்மை
    அகையுறு கழைகொன் றுண்ட வாரழல் சிதற ஆங்கே
    புகையுறு கின்ற தன்மை போலவே பொலிந்த தம்மா. - 13



    1814 - கண்டுதங் கேளிர் தம்மைக் கைகொடு புல்லி இல்லங்
    கொண்டசெல் பான்மை உன்னி விலக்குறு கொள்கைத் தென்ன
    விண்டொடர் செலவிற் றாகும் வெஞ்சுடர்க் கதிரை வெற்பில்
    தண்டலை கணியின் கொம்பால் தழீஇக்கொடு தடுக்க லுற்ற. - 14



    1815 - நிறையழி கடமால் யானை நெடுவரைச் சிகரம் பாய்ந்து
    விறலொடு முழங்க ஆங்கோர் விடரளை மடங்கல் கேளாக்
    கறுவுகொள் சினத்தி னார்க்குங் கம்பலை கனகன் எற்றுந்
    தறியிடை இருந்த சீயத் தழங்குர லென்ன லாமால். - 15



    1816 - பறையடிப் பதனாற் சேணிற் பயன்விரிப் பார்போல் மாறாய்
    அறையடிப் பாந்த ளார்ப்ப அகலிரு விசும்பே றார்ப்பக்
    கறையடித் தொகுதி யார்ப்பக் கடுந்திறல் அரிமா னார்ப்பச்
    சிறையடிக் கொண்டு சிம்பு ளார்த்திடத் திங்கள் செல்லும். - 16



    1817 - இன்னபல் வளமை சான்ற கிரிதனில் எயினர் ஈண்டி
    மன்னிய தாங்கோர் சீறூர் வதனமா றுடைய வள்ளல்
    பின்னரே தன்பால் மேவப் பெருந்தவந் தன்னை யாற்றிப்
    பொன்னகர் இருந்த வாபோல் புன்மையற் றிருந்த தம்மா. - 17



    1818 - ஆயதோர் குறிச்சி தன்னில் அமர்தருங் கிராதர்க் கெல்லாம்
    நாயகன் நுகம்பூண் டுள்ளோன் நாமவேல் நம்பி யென்போன்
    மாயிருந் தவமுன் செய்தோன் மைந்தர்கள் சிலரைத் தந்து
    சேயிழை மகட்பே றுன்னித் தெய்வதம் பராவி யுற்றான். - 18



    1819 - அவ்வரை மருங்கு தன்னில் ஐம்புலன் ஒருங்கு செல்லச்
    செவ்விதின் நடாத்துந் தொன்மைச் சிவமுனி என்னும் மேலோன்
    எவ்வெவர் தமக்கும் எய்தா ஈசனை யுளத்துட் கொண்டு
    சைவநல் விரதம் பூண்டு தவம்புரிந் திருத்த லுற்றான். - 19



    1820 - சிறப்புறு பெரிய பைங்கட் சிறுதலைச் சிலைக்கும் புல்வாய்
    நெறிப்பொடு நிமிர்வுற் றான்ற நெடுஞ்செவிக் குறிய தோகைப்
    பொறிப்படு புனித யாக்கைப் புன்மயிர்க் குளப்பு மென்கால்
    மறிப்பிணை யொன்று கண்டோர் மருளவந் துலாவிற் றங்கண். - 20



    1821 - போர்த்தொழில் கடந்த வைவேற் புங்கவன் அருளால் வந்த
    சீர்த்திடு நவ்வி தன்னைச் சிவமுனி என்னுந் தூயோன்
    பார்த்தலும் இளைமைச் செவ்வி படைத்திடும் பிறனிற் கண்ட
    தூர்த்தனின் மையல் எய்திக் காமத்தால் சுழல லுற்றான். - 21


    (15. நிறை - மன அடக்கம். விடர் - பிளவு. அளை - குகை.
    18. குறிச்சி - சிற்றூர். கிராதர் - வேடர். நம்பி - நம்பிராசன்.
    தெய்வதம் - இஷ்டதேவதை. 20. புல்வாய் - சிறியவாய்.
    குளப்பு - குளம்பு. மறிப்பிணை - பெண்மான்.
    21. நவ்வி - மான். பிறன்இல் - அயலான்மனைவி.
    தூர்த்தனின் - காமுகனைப்போல.) -



    1822 - ஏமத்தின் வடிவஞ் சான்ற இலங்கெழில் பிணையின் மாட்டே
    காமத்தின்வேட்கை வைத்துக் கவலையாய் அவல மெய்தி
    மாமத்தம் அளைபுக் கென்ன மனக்கருத் துடைந்து வேறாய்
    ஊமத்தம் பயன்துய்த் தார்போல் உன்மத்த னாகி உற்றான். - 22



    1823 - படவர வனைய அல்குற் பைந்தொடி நல்லார் தம்பாற்
    கடவுளர் புணர்ச்சி யென்னக் காட்சியின் இன்பந் துய்த்து
    விடலரும் ஆர்வ நீங்கி மெய்யுணர் வெய்தப் பெற்றுத்
    திடமொடு முந்து போலச் சிவமுனி இருந்து நோற்றான். - 23



    1824 - நற்றவன் காட்சி தன்னால் நவ்விபால் கருப்பஞ் சேரத்
    தெற்றென அறிதல் தேற்றிச் செங்கண்மால் உதவும் பாவை
    மற்றதன் இடத்தில் புக்காள் வரைபக வெறிந்த வைவேற்
    கொற்றவன் முன்னஞ் சொற்ற குறிவழிப் படரும் நீராள். - 24



    1825 - வேறு
    மானி டத்தின் வருமைந்தன் முந்துநீ
    மானி டத்தின் வருகென்ற வாய்மையான்
    மானி டத்தின் வயினடைந் தாள்மரு
    மானி டத்தின் மானாகுமம் மான்மகள். - 25



    1826 - அனைய காலையில் ஆயுடை நீங்கியே
    புனித நவ்வி புனமெங் கணுமுதலாய்ச்
    சுனையின் நீருண்டொர் சூழலின் வைகியே
    இனிய மால்வரை ஏறி நடந்ததே. - 26



    1827 - நடந்த நவ்வி நலத்தகு வெற்பினில்
    இடந்தொ றுஞ்செறி ஏனற் புனமெலாங்
    கடந்து போயது காவல்கொள் வேட்டுவர்
    மடந்தை மார்கள் வரிவிழி யென்னவே. - 27



    1828 - பிள்ளை ஈற்றுப் பிணாஎயின் சேரியின்
    உள்ள மாதர் உளித்தலைக் கோல்கொடு
    வள்ளி கீழ்புகு மாமுதல் வௌவியே
    பொள்ளல் செய்திடு புன்புலம் புக்கதே. - 28


    (22. ஏமத்தின் வடிவு - பொன்போலும் வடிவு;
    இன்பத்தைத் தரும் உறுப்புமாம். ஊமத்தம் - ஊமத்தங்காய்.
    உன்மத்தன் - ஒன்றுந் தோன்றாது மயங்கி இருப்போன்.
    23. கடவுளர் புணர்ச்சி உள்ளப் புணர்ச்சியே அன்றி மெய்யுறு
    புணர்ச்சி அன்று என்பதை விளக்க 'கடவுளர் புணர்ச்சி யென்ன'
    என்றார். இருவரிடத்தும் காதல் நேர்ந்துழியெல்லாம் காந்தர்வம்
    என்பது வேதநூல் முடிபாம். ஆதலால் காட்சியால் இன்பந்துய்த்தல்
    உண்டு. உள்ளப்புணர்ச்சி என்பது காட்சியால் இன்பந்துய்த்தலைக்
    காட்டிற்று என்க.
    25. மானிடத்தில் வருமைந்தன் - சிவபெருமானிடத்தில் அவதரித்த
    முருகன். முந்து - முன்னாளில். மருமானிடத்தில் - மகனாகிய
    பிரமனிடத்தில். மானாகும் - வௌ¢ளைப் பன்றியாகிய.
    மான்மகள் - திருமாலின் புதல்வியான சுந்தரி என்பவள்.
    27. ஏனல் - தினை. 28. பிணா - பெண்மான். எயின் - வேடர்.
    புலம் - கொல்லை.) -



    1829 - தோன்ற லுக்குத் துணைவியைத் தொல்விணை
    தான்த ரித்துத் தளர்ந்து தளர்ந்துபோய்
    மான்ற ரற்றி உயிர்த்து வயிறுநொந்
    தீன்று வள்ளி இருங்குழி இட்டதால். - 29



    1830 - குழைகு றுந்தொடி கோல்வளை யேமுதற்
    பழைய பூண்கள் பலவுடன் தாங்குறாத்
    தழைபு னைந்து தனதுணர் வின்றியே
    உழைவ யின்வந்து தித்தனள் ஒப்பிலாள். - 30



    1831 - கோற்றொ டிக்கைக் குழவியை நோக்கியே
    ஈற்று மான்பிணை எம்மினத் தன்றிது
    வேற்று ருக்கொடு மேவிய தீண்டெனா
    ஆற்ற வேமருண் டஞ்சிய கன்றதே. - 31



    1832 - வேறு
    அன்னை யெனஈன்ற அரிணமருண் டோடியபின்
    தன்னிணை யிலாத தலைவி தனித்தனளாய்க்
    கின்னரநல் யாழொலியோ கேடில்சீர்ப் பாரதிதன்
    இன்னிசையோ என்றயிர்க்க ஏங்கிஅழு திட்டனளே. - 32



    1833 - அந்த வளவைதனில் ஆறிரண்டு மொய்ம்புடைய
    எந்தை யருளுய்ப்ப எயினர்குலக் கொற்றவனும்
    பைந்தொடி நல்லாளும் பரிசனங்கள் பாங்கெய்தச்
    செந்தினையின் பைங்கூழ் செறிபுனத்துப் புக்கனரே. - 33



    1834 - கொல்லை புகுந்த கொடிச்சியொடு கானவர்கோன்
    அல்லை நிகர்குழலாள் அம்மென் குரல்கேளா
    எல்லை யதனில் எழுமொலியங் கேதென்னா
    வல்லை தனில்அவ் வறும்புனத்தில் வந்தனனே. - 34



    1835 - வந்தான் முதலெடுத்த வள்ளிக்குழி யில்வைகும்
    நந்தா விளக்கனைய நங்கைதனை நோக்கி
    இந்தா இ·தோர் இளங்குழவி என்றெடுத்துச்
    சிந்தா குலந்தீரத் தேவிகையில் ஈந்தனனே. - 35



    1836 - ஈந்தான் சிஆநை¤லத்தில் இட்டான் எழுந்தோங்கிப்
    பாய்ந்தான் தெழித்தான் உவகைப் படுகடலில்
    தோய்ந்தான் முறுவலித்தான் தோள்புடைத்தான் தொல்பிறப்பின்
    நாந்தாம் இயற்றுதவம் நன்றாங்கொல் என்றுரைத்தான். - 36



    1837 - கொற்றக் கொடிச்சி குழவியைத்தன் கைவாங்கி
    மற்றப் பொழுதில் வயாவும் வருத்தமுமாய்ப்
    பெற்றுக்கொள் வாள்போலப் பேணிப் பெரிதுமகிழ்
    வுற்றுக் கனதனத்தில் ஊறும்அமிர் தூட்டினவளால். - 37


    (30. குறுந்தொடி - சிறுவளையல். கோல்வளை - ஒருவகை வளையல்.
    33. பைங்கூழ் - பசியபயிர். 34. கொடிச்சி - வேடப்பெண்.
    35. நந்தா - கெடாத. இந்தா - இங்கு; இவ்விடத்து.
    சிந்தாகுலந் தீர - மனவருத்தம் நீங்க.
    36. தோள்புடைத்தான் - தோளைத்தட்டினான்;
    புயன்பூரித்தான் எனினுமாம். வயா - கருப்பம்.) - 1



    1838 - வென்றிச் சிலையெடுத்து மேலைப் புனமகன்று
    குன்றக் குறவன் குதலைவாய்க் கொம்பினுடன்
    மன்றற் றுணைவிதனை வல்லைகொடு சீறூரில்
    சென்றக் கணத்தில் சிறுகுடிலில் புக்கனனே. - 38



    1839 - அண்டர் அமுதம் அனையமகட் பெற்றிடலான்
    மண்டுபெரு மகிழ்வாய் மாத்தாட் கொழுவிடையைக்
    கெண்டி யொருதன் கிளையோ டினிதருந்தித்
    தொண்டகம தார்ப்பக் குரவைமுறை தூங்குவித்தான். - 39



    1840 - காலை யதற்பின் கடவுட் பலிசெலுத்தி
    வாலரிசி மஞ்சள் மலர்சிந்தி மறியறுத்துக்
    கோல நெடுவேற் குமரன்விழாக் கொண்டாடி
    வேலனை முற்கொண்டு வெறியாட்டு நேர்வித்தான். - 40



    1841 - இன்ன பலவும் இயற்றி இருங்குறவர்
    மன்னன் மனைவி வடமீன் தனைஅனையாள்
    கன்னி மடமகட்குக் காப்பிட்டுக் கானமயிற்
    பொன்னஞ் சிறைபடுத்த பூந்தொட்டில் ஏற்றினளே. - 41



    1841 - நாத்தளர்ந்து சோர்ந்து நடுக்கமுற்றுப் பற்கழன்று
    மூத்து நரைமுதிர்ந்த மூதாளர் வந்தீண்டிப்
    பாத்தி படுவள்ளிப் படுகுழியில் வந்திடலால்
    வாய்த்த இவள்நாமம் வள்ளியெனக் கூறினரே. - 42



    1842 - தம்மரபி லுள்ள தமரா கியமுதுவர்
    இம்முறையால் ஆராய்ந் தியற்பேர் புனைந்துரைப்பக்
    கொம்மை முலையாள் கொடிச்சியொடு குன்றவர்கோன்
    அம்மனையை நம்மகள்என் றன்பால் வளர்த்தனனே. - 43



    1843 - முல்லைப் புறவ முதல்வன் திருமடந்தை
    கொல்லைக் குறிஞ்சிக் குறவன் மகளாகிச்
    சில்லைப் புன்கூரைச் சிறுகுடிலில் சேர்ந்தனளால்
    தொல்லைத் தனித்தந்தை தோன்றியமர் வுற்றதுபோல். - 44


    (39. விடை - கடா. கெண்டி - வெட்டி.
    தொண்டகம் - குறிஞ்சி நிலப்பறை. குரவை - கைகோத்தாடும் ஒரு கூத்து.
    40. கடவுட்பலி - கடவுளான முருகவேள் பூசை. மறி - ஆடு.
    வேலனை - தேவராளனை. 42. வள்ளிப் படுகுழி - வள்ளிக்கிழங்குகளையுடைய குழி.
    43. தமர் - தம்மைச் சேர்ந்தவர். முதுவர் - கிழவர்கள்.
    கொம்மை - திரட்சி. 44. சில்லை - இழிந்தபுல். தொல்லை
    தனித்தந்தை தோன்றி அமர்வுற்றதுபோல் - முன்னாளில் தனது தந்தையாகிய
    கண்ணன் அரசர் குடியில் தோன்றி ஆயர் குடியில் புகுந்ததைப்போல) -



    1844 - மூவா முகுந்தன் முதனாட் பெறுமமுதைத்
    தேவாதி தேவன் திருமைந்தன் தேவிதனை
    மாவாழ் சுரத்தில்தம் மாமகளாப் போற்றுகையால்
    ஆவா குறவர்தவ மார்அளக்க வல்லாரே. - 45



    1845 - பொற்றொட்டில் விட்டுப் புவியின் மிசைதவழக்
    கற்றுத் தளர்நடை காட்டிக் கணிநீழல்
    முற்றத் திடையுலவி முறத்தின் மணிகொழித்துச்
    சிற்றில் புனைந்து சிறுசோறட் டாடினளே. - 46



    1846 - முந்தை யுணர்வு முழுதுமின்றி இம்முறையால்
    புந்திமகிழ் வண்டல் புரிந்துவளர் செவ்விக்கண்
    எந்தைபுயம் புல்லுவதற் கிப்பருவம் ஏற்குமெனப்
    பைந்தொடியி னுக்கியாண்டு பன்னிரண்டு சென்றனவே. - 47



    1847 - ஆன பருவங்கண் டம்மனையும் அம்மனையில்
    கோனும் ஒருதங் குலத்தின் முறையோக்கி
    மானின் வயிற்றுதித்த வள்ளிதனைப் பைம்புனத்தில்
    ஏனல் விளையுள் இனிதளிக்க வைத்தனரே. - 48



    1848 - காட்டில் எளிதுற்ற கடவுள்மணி யைக்கொணர்ந்து
    கூட்டி லிருளோட்டக் குருகுய்த்த வாறன்றோ
    தீட்டுசுடர் வேற்குமரன் தேவியாந் தௌ¢ளமுதைப்
    பூட்டுசிலைக் கையார் புனங்காப்ப வைத்ததுவே. - 49



    1849 - சுத்த மெழுகிட்டுச் சுடர்கொளுவிப் பன்மணியின்
    பத்தி குயின்றிட்ட பழுப்பேணி யிற்பாதம்
    வைத்து மகிழ்¢ந்தேறி மகடூஉத் தினைப்புனத்தில்
    எத்திசையுங் காணும் இதணத் திருந்தனளே.


    1850 - கிள்ளையொடு கேகயமே அன்றிப் பிறநிலத்தில்
    உள்ள பறவை ஒருசார் விலங்கினொடும்
    வள்ளி மலைப்புனத்தில் வந்துற் றனமாவுற்
    புள்ளு மயங்கல் பொருள்நூற் றுணிபன்றோ. - 51



    1851 - கட்டு வரிவில் கருங்குறவர் கைத்தொழிலால்
    இட்ட இதணத் திருந்தெம் பெருமாட்டி
    தட்டை குளிர்தழலைத் தாங்கித் தினைப்புனத்தைக்
    கிட்டலுறா வண்ணங் கிளிமுதற்புள் ளோட்டினளே. - 52



    1852 - எய்யா னவையும் இரலைமரை மான்பிறவுங்
    கொய்யாத ஏனற் குரல்கவர்ந்து கொள்ளாமல்
    மையார் விழியாள் மணிக்கற் கவணிட்டுக்
    கையால் எடத்துக் கடிதோச்சி வீசினளே. - 53


    (45. அமுதை - அமுதம்போன்றவளாகிய வள்ளியை.
    46. அட்டு - சமைத்து. 48. அம்மனை - தாய்.
    வேடர்தம் பெண்மக்கள் மங்கைப்பருவம் அடைந்தவுடன்
    தினைப்புனங்காத்தல் வேண்டும் என்பது முறையாதலின்
    'தங்குலத்தின்முறை' என்றார். 49. கடவுள் மணி - சிந்தாமணி.
    குருகு - குருவிகள். பூட்டுசிலைக்கையார் - வேடர்கள்.
    50. குயின்றிட்ட - பதத்துள்ள. மகடூஉ - வள்ளிநாயகி.
    இதண் - பரண். 51. கேகயம் - மயில். பொருள்நூல் -
    பொருள் இலக்கணம்; அ·து அகப்பொருள் ஆகும்.
    52. தட்டை - கிளிகடி கருவி. குளிர் - கவண். தழல் - தீ.
    53. எய் - முட்பன்றி. இரலை - கருமான். மரைமான் -
    இவை மானின் வகைகள். குரல் - கதிர்.) -



    1853 - பூவைகாள் செங்கட் புறவங்காள் ஆலோலம்
    தூவிமா மஞ்ஞைகாள் சொற்கிளிகாள் ஆலோலம்
    கூவல் சேர்வுற்ற குயிலினங்காள் ஆலோலம்
    சேவல்காள் ஆலோலம் என்றாள் திருந்திழையாள். - 54



    1854 - இந்த முறையில் இவள்ஏனற் புனங்காப்ப
    அந்த வளவில் அவளுக் கருள்புரியக்
    கந்த வரைநீங்கிக் கதிர்வே லவன்தனியே
    வந்து தணிகை மலையிடத்து வைகினனே. - 55



    1855 - வேறு
    சூரல் பம்பிய தணிகைமால் வரைதனில் சுடர்வேல்
    வீரன் வீற்றிருந் திடுதலும் வேலையங் கதனில்
    வாரி யும்வடித் துந்தியும் வரிசையால் உறழ்ந்துஞ்
    சீரி யாழ்வல்ல நாரதன் புவிதனிற் சேர்ந்தான். - 56



    1856 - வளவி தாகிய வள்ளிமால் வரைதனில் வந்து
    விளைவு ளாகிய தினைப்புனம் போற்றிவீற் றிருந்த
    புளினர் பாவையைக் கண்டுகை தொழுதுபுந் தியினில்
    அளவி லாததோர் அற்புதத் துடனிவை அறைவான். - 57



    1857 - அன்னை யாகியிங் கிருப்பவர் பேரழ கனைத்தும்
    உன்னி யான்புனைந் துரைக்கினும் உலவுமோ உலவா
    என்னை யாளுடை அறுமுகன் துணைவியாய் இருப்ப
    முன்னர் மாதவம் புரிந்தவர் இவரென மொழிந்தான். - 58



    1858 - வேறு
    கார்த்தி னைப்புனங் காவற் கன்னியைப்
    பார்த்து மற்றிவை பகர்ந்து போற்றிப்போய்
    மூர்த்த மொன்றினில் மூன்று பூமலர்
    தீர்த்தி கைச்சுனைச் சிகரம் நண்ணினான். - 59



    1859 - தணிகை யங்கிரி தன்னில் வைகிய
    இணையில் கந்தனை எய்தி அன்னவன்
    துணைமென் சீறடி தொழுது பன்முறை
    பணிதல் செய்திவை பகர்தல் மேயினான். - 60


    (54. பூவை - நாகணவாய்ப் பறவை. புறவம் - புறா.
    ஆலோலம் - இது பறவை முதலியவைகளை நயமாக ஓட்டும்
    ஒருவகை இன்னோசை. 55. தணிகைமலை - திருத்தணிகைமலை.
    56. சூரல் - பிரம்பு. வாரியும் வடித்து உந்தியும் வரிசையால்
    உறழ்ந்தும் - வார்தல் வடித்தல் உந்தல் முறையாக உறழ்தல்
    என்னும் திறத்துடன்; (சிலப் - புகார் - கானல்வரியின் உரையைக் காண்க.)
    57. வள்ளி மால்வரை - வள்ளிமலை. புளினர் - வேடர்.
    புளினர்பாவை - வள்ளி நாயகி. 59. மூர்த்தம் ஒன்றினில் -
    நாள் ஒன்றுக்கு. மூன்று பூ - மூன்று செங்காவி மலர்.
    மலர் - அலர்கின்ற. தீர்த்திகைச் சுனை - தீத்தமாகிய சுனை.
    சிகரம் - தணிகை; மலையுச்சி.) - 1



    1860 - மோன நற்றவ முனிவன் தன்மகள்
    மானின் உற்றுளாள் வள்ளி வெற்பினில்
    கான வக்குலக் கன்னி யாகியே
    ஏன லைப்புரந் திதணில் மேயினாள். - 61



    1861 - ஐய னேயவள் ஆகம் நல்லெழில்
    செய்ய பங்கயத் திருவிற் கும்மிலை
    பொய்ய தன்றிது போந்து காண்டிநீ
    கைய னேன்இவண் கண்டு வந்தனன். - 62



    1862 - தாய தாகுமத் தையல் முன்னஅஅ
    மாய வன்மகள் மற்றுன் மொய்ம்பினைத்
    தோய நோற்றனள் சொற்ற எல்லையில்
    போய வட்கருள் புரிதி யால்என்றான். - 63



    1863 - என்ற வேலையில் எ·க வேலினான்
    நன்று நன்றிது நவையில் காட்சியோய்
    சென்றி நீயெனச் செப்பித் தூண்டியே
    கன்று காமநோய்க் கவலை யுள்வைத்தான். - 64



    1864 - எய்யும் வார்சிலை எயினர் மாதராள்
    உய்யு மாறுதன் உருவம் நீத்தெழீஇச்
    செய்ய பேரருள் செய்து சேவகன்
    மையல் மானுட வடிவந் தாங்கினான். - 65



    1865 - காலிற் கட்டிய கழலன் கச்சினன்
    மாலைத் தோளினன் வரிவில் வாளியன்
    நீலக் குஞ்சியன் நெடியன் வேட்டுவக்
    கோலத் தைக்கொடு குமரன் தோன்றினான். - 66



    1866 - கிள்ளை யன்னதோர் கிளவி மங்கைமாட்
    டுள்ள மோகந்தன் னுள்ள கந்தனைத்
    தள்ள எம்பிரான் தணிகை வெற்பொரீஇ
    வள்ளி யங்கிரி வயின்வந் தெய்தினான். - 67



    1867 - வேறு
    மண்டலம் புகழுந் தொல்சீர் வள்ளியஞ் சிலம்பின் மேல்போய்ப்
    பிண்டியந் தினையின் பைங்கூழ்ப் பெரும்புனத் திறைவி தன்னைக்
    கண்டனன் குமரன் அம்மா கருதிய எல்லை தன்னில்
    பண்டொரு புடையில் வைத்த பழம்பொருள் கிடைத்த வாபோல். - 68


    (61. மோன நற்றவ முனிவன் - சிவமுனி. இதணில் - பரணின்மேல்.
    62. கையனேன் - சிறியேன். 64. சென்றி - செல்வாய்.
    கன்றுதல் - வருந்துதல். 65. சேவகன் - வீராதி வீரனாகிய குமரவேள்.
    66. குஞ்சி - குடுமி. வேட்டுவக் கோலத்தைக்கொடு - வேட்டுவ வடிவத்தை
    எடுத்து; வேட்டையாடும் அரசர் கோலத்தைக்கொண்டு எனினுமாம்.
    67. கிளவி - மொழியினையுடைய. 68. பிண்டி - மாவு. வைத்த - புதைத்து வைத்த.) -



    1868 - பூமஞ்சார் மின்சொல் என்னப் பொருப்பினில் ஏனல் காக்குங்
    காமஞ்சால் இளைமை யாளைக் கடம்பமர் காளை நோக்கித்
    தூமஞ்சால் விரகச் செந்தீச் சுட்டிடச் சோர்ந்து வெம்பி
    ஏமஞ்சால் கின்ற நெஞ்சன் இதணினுக் கணியன் சென்றான். - 69



    1869 - நாந்தக மனைய உண்கண் நங்கைகேள் ஞாலந் தன்னில்
    ஏந்திழை யார்கட் கெல்லாம் இறைவியாய் இருக்கும் நின்னைப்
    பூந்தினை காக்க வைத்துப் போயினார் புளின ரானோர்க்
    காய்ந்திடு முணர்ச்சியொன்றும் அயன்படைத்திலன்கொல் என்றான். -70



    1870 - வாரிருங் கூந்தல் நல்லாய் மதிதளர் வேனுக் குன்றன்
    பேரினை உரைத்தி மற்றுன் பேரினை உரையாய் என்னின்
    ஊரினை உரைத்தி ஊரும் உரைத்திட முடியா தென்னில்
    சீரிய நின்சீ றூர்க்குச் செல்வழி உரைத்தி யென்றான். - 71



    1872 - மொழியொன்று புகலா யாயின் முறுவலும் புரியா யாயின்
    விழியொன்று நோக்கா யாயின் விரகமிக் குழல்வேன் உய்யும்
    வழியொன்று காட்டா யாயின் மனமுஞ்சற் றுருகா யாயின்
    பழியொன்று நின்பாற் சூழும் பராமுகந் தவிர்தி என்றான். - 72



    1873 - உலைப்படு மெழுக தென்ன உருகியே ஒருத்தி காதல்
    வலைப்படு கின்றான் போல வருந்தியே இரங்கா நின்றான்
    கலைப்படு மதியப் புத்தேள் கலங்கலம் புனலிற் றோன்றி
    அலைப்படு தம்மைத் தன்றோ அறுமுகன் ஆடல் எல்லாம். - 73



    1874 - செய்யவன் குமரி முன்னந் திருநெடுங் குமரன் நின்று
    மையலின் மிகுதி காட்டி மற்றிவை பகரும் எல்லை
    எய்யுடன் உளியம் வேழம் இரிதர விரலை யூத
    ஒய்யென எயினர் சூழ ஒருதனித் தாதை வந்தான். - 74



    1875 - ஆங்கது காலை தன்னின் அடிமுதல் மறைக ளாக
    ஓங்கிய நடுவண் எல்லாம் உயர்சிவ நூல தாகப்
    பாங்கமர் கவடு முற்றும் பல்கலை யாகத் தானோர்
    வேங்கையின் உருவ மாகி வேற்படை வீரன் நின்றான். - 75



    1876 - கானவர் தல்வன் ஆங்கே கதுமென வந்து தங்கள்
    மானினி தன்னைக் கண்டு வள்ளியங் கிழங்கு மாவுந்
    தேனொடு கடமான் பாலுந் திற்றிகள் பிறவு நல்கி
    ஏனலம் புனத்தில் நின்ற யாணர்வேங் கையினைக் கண்டான். - 76



    1877 - ஆங்கவன் அயலாய் நின்ற அடுதொழில் மறவ ரானோர்
    வேங்கையின் நிலைமை நோக்கி விம்மித நீர ராகி
    ஈங்கிது முன்னுற் றன்றால் இத்துணை புகுந்த வாற்றால்
    தீங்குவந் திடுதல் திண்ணம் என்றனர் வெகுளித் தீயார். - 77


    (69. மஞ்சு - மேகம். கடம்பு - ஓர்மலர். 70. நாந்தகம் - வாள்.
    புளினர் - வேடர். 72. விரகம் - காமநோய். 74. செய்யவள் - திருமகள்.
    எய் - முட்பன்றி. உளியம் - கரடி. இரலை - ஊதுகொம்பு.
    75. அடிமுதல் - அடிப்பாகம். சிவநூல் - சிவாகமம். கவடு - கிளை.
    வேங்கை - வேங்கைமரம். 76. கடமான் - ஒருவகை மான்.
    திற்றிகள் - தின்பதற்குரியன. யாணர் - புதுமையான.) -



    1878 - எறித்தரு கதிரை மாற்றும் இருநிழற் கணியை இன்னே
    முறித்திடு வீர்க ளென்பார் முதலொடு வீழச் சூழப்
    பறித்திடு வீர்க ளென்பார் பராரையைக் கணிச்சி தன்னால்
    தறித்திடு வீர்க ளென்பார் தாழ்க்கலீர் சற்று மென்பார். - 78



    1879 - இங்கிவை உரைக்குந் தீயோர் யாரையும் விலக்கி மன்னன்
    நங்கைதன் வதனம் பாரா நறுமலர் வேங்கை யொன்று
    செங்குரல் ஏனற் பைங்கூழ் செறிதரு புனத்தின் மாடே
    தங்கிய தென்னை கொல்லோ சாற்றுதி சரத மென்றான். - 79



    1880 - தந்தையாங் குரைத்தல் கேளாத் தையலும் வெருவி ஈது
    வாந்தவா றுணர்கி லேன்யான் மாயம்போல் தோன்றிற் றையா
    முந்தைநாள் இல்லா தொன்று புதுவதாய் முளைத்த தென்னாச்
    சிந்தைமேல் நடுக்க மெய்தி இருந்தனன் செயலி தென்றாள். - 80



    1881 - வேறு
    என்றிவை சொற்றபின் ஏந்திழை அஞ்சேல்
    நன்றிவண் வைகுதி நாண்மலர் வேங்கை
    இன்றுணை யாயிவண் எய்திய தென்னாக்
    குன்றுவன் வேடர் குழாய்த்தொடு போனான். - 81



    1882 - போனது கண்டு புனத்திடை வேங்கை
    ஆனதொர் தன்மையை ஐயன் அகன்று
    கானவர் தம்மகள் காண்வகை தொல்லை
    மானுட நல்வடி வங்கொடு நின்றான். - 82



    1883 - வேறு
    தொல்லையின் உருக்கொடு தோன்றி நின்றவேள்
    எல்லையில் மையலுற் றிரங்கு வானென
    அல்லிவர் கூந்தலாள் அருகு நிற்புறீஇ
    நல்லரு ளால்இவை நவிறல் மேயினான். - 83



    1884 - கோங்கென வளர்முலைக் குறவர் பாவையே
    ஈங்குஆ அடைந்தனன் எனக்கு நின்னிரு
    பூங்கழல் அல்லது புகலொன் றில்லையால்
    நீங்கலன் நீங்கலன் நின்னை என்றுமே. - 84



    1885 - மாவியல் கருங்கணாய் மற்று நின்றனைப்
    பாவியன் நீங்கியே படர வல்லனோ
    ஆவியை யகன்றுமெய் யறிவு கொண்டேழீஇப்
    போவது கொல்லிது புகல வேண்டுமே. - 85


    (78. கதிர் - சூரிய கிரணத்தை. கணி - வேங்கைமரம்.
    பராரை - பெரிய அடிப்பாகத்தை. கணிச்சிதன்னால் - கோடரியால்.
    80. தையல் - வள்ளிநாயகி. 81. குன்றுவன் - நம்பிராசன்.
    84. கோங்கு - கோங்கரும்பு. 85. மா - மான்; மாவடுவுமாம்.
    பாவியன் - பாவியேன்.) - 1



    1886 - மைதிகழ் கருங்கணின் வலைப்பட் டேற்கருள்
    செய்திடல் அன்றியே சிறைக்க ணித்தனை
    உய்திறம் வேறெனக் குளகொல் ஈண்டுநின்
    கைதனில் இவ்வுயிர் காத்துக் கோடியால். - 86



    1887 - கோடிவர் நெடுவரைக் குறவர் மாதுநீ
    ஆடிய சுனையதாய் அணியுஞ் சாந்தமாய்ச்
    சூடிய மலர்களாய்த் தோயப் பெற்றிலேன்
    வாடினன் இனிச்செயும் வண்ணம் யாவதே. - 871



    1888 - புல்லிது புல்லிது புனத்தைக் காத்திடல்
    மெல்லியல் வருதியால் விண்ணின் பால்வரும்
    வல்லியர் யாவரும் வணங்கி வாழ்த்திடல்
    தொல்லியல் வழாவளந் துய்ப்ப நல்குவேன். - 88



    1889 - என்றிவை பலபல இசைத்து நிற்றலுங்
    குன்றுவர் மடக்கொடி குமரன் சிந்தையில்
    ஒன்றிய கருத்தினை யுற்று நோக்கியே
    நன்றிவர் திறமென நாணிக் கூறுவாள். - 89



    1890 - இழிகுல மாகிய எயினர் பாவைநான்
    முழுதுல கருள்புரி முதல்வர் நீரெனைத்
    தழுவுதல் உன்னியே தாழ்ச்சி செப்புதல்
    பழியது வேயலால் பான்மைத் தாகுமோ. - 90



    1891 - இலைமுதிர் ஏனல்காத் திருக்கும் பேதையான்
    உலகருள் இறைவர்நீர் உளம யங்கியென்
    கலவியை விரும்புதல் கடன தன்றரோ
    புவியது பசியுறில் புல்லுந் துய்க்குமோ. - 91



    1892 - வேறு
    என்றிவை பலப்பலவும் ஏந்திழை இயம்பா
    நின்றபொழு தத்தில்அவள் நெஞ்சம்வெருக் கொள்ள
    வென்றிகெழு தொண்டகம் வியன்துடி யியம்பக்
    குன்றிறைவன் வேட்டுவர் குழாத்தினொடும் வந்தான். - 92



    1893 - வந்தபடி கண்டுமட மான்நடு நடுங்கிச்
    சிந்தைவெரு விக்கடவுள் செய்யமுக நோக்கி
    வெந்திறல்கொள் வேடுவர்கள் வெய்யர்இவண் நில்லா
    துய்ந்திட நினைந்துகடி தோடும்இனி யென்றாள். - 93


    (87. கோடு - சிகரங்கள். நெடுவரை - வள்ளிமலை.
    88. புல்லிது - இழிந்தது. 90. தாழ்ச்சி - தாழ்மை.
    91. 'புலிபசித்தால் புல்லைத் தின்னுமோ' என்னும் பழமொழி
    இங்கு விளங்குதல் காண்க. 92. தொண்டகம் - குறிஞ்சி நிலப்பறை.) -



    1894 - ஓடுமினி யென்றவள் உரைத்தமொழி கேளா
    நீடுமகிழ் வெய்தியவண் நின்றகும ரேசன்
    நாடுபுகழ் சைவநெறி நற்றவ விருத்த
    வேடமது கொண்டுவரும் வேடரெதிர் சென்றான். 94 - 94



    1895 - சென்றுகிழ வோன்குறவர் செம்மலெதிர் நண்ணி
    நின்றுபரி வோடுதிரு நீறுதனை நல்கி
    வன்றிறல் மிகுத்திடுக வாகைபெரி தாக
    இன்றியமை யாதவளன் எய்திடுக என்றான். - 95



    1896 - பூதியினை யன்பொடு புரிந்த குரவன்தன்
    பாதமலர் கைகொடு பணிந்துகுற மன்னன்
    மேதகுமிவ் வெற்தபினில் விருத்தரென வந்தீர்
    ஓதிடுதிர் வேண்டியதை ஒல்லைதனில் என்றான். - 96



    1897 - ஆண்டுதொழிலின் மேதகைய அண்ணலிது கேண்மோ
    நீண்டதனி மூப்பகல நெஞ்சமருள் நீங்க
    ஈண்டுநும் வரைக்குமரி எய்தியினி தாட
    வேண்டிவரு கின்றனன் மெலிந்துகடி தென்றான். - 97



    1898 - வேறு
    நற்றவன் மொழியைக் கேளா நன்றுநீர் நவின்ற தீர்த்தம்
    நிற்றலு மாடி எங்கள் நேரிழை தமிய ளாகி
    உற்றனள் அவளுக் கெந்தை ஒருதனித் துணைய தாகி
    மற்றிவண் இருத்திர் என்ன அழகிதாம் மன்ன வென்றான். - 98



    1899 - இனையதோர் பொழுதில் தந்தை ஏந்திழை தன்பா லேகித்
    தினையொடு கிழங்கு மாவுந் தீங்கனி பிறவும் நல்கி
    அனையவள் துனைய தாக அருந்தவன் தன்னை வைத்த
    வனைகழல் எயின ரோடும் வல்லையின் மீண்டு போனான். - 99



    1900 - போனது முதியோன் கண்டு புனையிழை தன்னை நோக்கி
    நானினிச் செய்வ தென்கொல் நலிவது பசிநோ யென்னத்
    தேனொடு கனியும் மாவுஞ் செங்கையிற் கொடுப்பக் கொண்டு
    வேனிலும் முடுகிற் றுண்ணீர் விடாய்பெரி துடையேன் என்றான். - 100



    1901 - செப்புறும் அனைய மாற்றஞ் சேயிழைக் கிழத்தி கேளா
    இப்புற வரைக்கும் அப்பால் எழுவரை கடந்த தற்பின்
    உப்புற மிருந்த தெந்தாய் ஒருசுனை யாங் ணேகி
    வெப்புற லின்றித் தெண்ணீர் மிசைந்துபின் வருதி ரென்றான். - 101


    (94. சைவ நெறி நற்றவ விருத்த வேடம் - சைவ சந்நியாச
    வேடங்கொண்ட வயோதிக வடிவம். 96. பூதி - விபூதி.
    97. ஆண்டொழில் - ஆண்மைத்தன்மை. அண்ணல் - இங்கு
    வேட அரசன். ஈண்டு நும் வரைக்குமரி எய்தி இனிது ஆட
    வேண்டி - இவ்வித்துள்ள உம் மலையிலுள்ள குமரித் தீர்த்தத்தை
    அடைந்து ஆட விரும்பி; இவ்விடத்திலிருக்கின்ற உன்னுடைய
    மலையில் பிறந்த குமரியாகிய வள்ளியை அடைந்து செவ்வனே
    புணர்தற்கு விரும்பி எனப் பொருள்கொள்ளுதலுமாம்.
    இது சிலேடைப் பொருளாகும். 99. அருந்தவன் - தவசி.
    100. நலிவது - வருந்துகின்றது. வேனில் - வெய்யில்.
    உண்ணீர்விடார் . தண்ணீர்த்தாகம்.) -



    1902 - பூட்டுவார் சிலைக்கை வேடர் பூவையே புலர்ந்து தெண்ணீர்
    வேட்டனன் விருத்தன் வெற்பில் வியனெறி சிறிதுந் தேரேன்
    தாட்டுணை வருந்து மென்று தாழ்த்திடா தொல்லை யேகிக்
    காட்டுதி சுனைநீர் என்றான் அறுமுகங் கரந்த கள்வன். - 102



    1903 - முருகன துரையை அந்த மொய்குழல் வினவி எந்தாய்
    வருகென அழைத்து முன்போய் வரையெலாங் கடந்து சென்று
    விரைகமழ் சுனைநீர் காட்ட வேனிலால் வெதும்பி னான்போல்
    பருகினன் பருகிப் பின்னர் இ·தொன்று பகர்த லுற்றான். - 103



    1904 - ஆகத்தை வருத்து கின்ற அரும்பசி அவித்தாய் தெண்ணீர்த்
    தாகத்தை அவித்தாய் இன்னுந் தவிர்ந்தில தளர்ச்சி மன்னோ
    மேகத்தை யனைய கூந்தல் மெல்லியல் வினையேன் கொண்ட
    மோகத்தைத் தணித்தி யாயின் முடிந்ததென் குறைய தென்றான். - 104



    1905 - வேறு
    ஈறில் முதியோன் இரங்கி இரந்துகுறை
    கூறி மதிமயங்கிக் கும்பிட்டு நின்றளவில்
    நாறு மலர்க்கூந்தல் நங்கை நகைத்துயிர்த்துச்
    சீறி நடுநடுங்கி இவ்வாறு செப்புகின்றாள். - 105



    1906 - மேலா கியதவத்தோர் வேடந் தனைப்பூண்டிங்
    கேலா தனவே இயற்றினீர் யார்விழிக்கும்
    பாலாகித் தோன்றிப் பருகினார் ஆவிகொள்ளும்
    ஆலால நீர்மைத்தோ ஐயர் இயற்கையதே. - 106



    1907 - கொய்தினைகள் காப்பேனைக் கோதிலா மாதவத்தீர்
    மெய்தழுவ உன்னி விளம்பா தனவிளம்பிக்
    கைதொழுது நிற்றல் கடனன்று கானவரிச்
    செய்கை தனைஅறியின் தீதாய் முடிந்திடுமே. - 107



    1908 - நத்துப் புரைமுடியீர் நல்லுணர்வு சற்றுமிலீர்
    எத்துக்கு மூத்தீர் இரிகுலத்தேன் தன்னைவெ·கிப்
    பித்துக்கொண் டார்போல் பிதற்றுவீர் இவ்வேடர்
    கொத்துக் கெலாமோர் கொடும்பழியைச் செய்தீரே. - 108



    1909 - சேவலாய் வைகுந் தினைப்புனத்திற் புள்ளினுடன்
    மாவெலாங் கூடி வளர்பைங் குரல்கவரும்
    நாவலோய் நீரும் நடந்தருளும் நான்முந்திப்
    போவனால் என்று புனையிழையாள் போந்தனளே. - 109


    (102. பூவையே : விளி : ஆகுபெயராய் வள்ளி நாயகியை உணர்த்திற்று.
    புலர்ந்து - நாவுலர்ந்து. 105. ஈறுஇல் - அழிவற்ற.
    106. தவத்தோர் வேடம் - தவவேடம். ஆலாலம் விஷம்.
    ஐயர் - தவ வேடங்கொண்ட வயோதிகர். இங்குப் பால்
    தவவேடத்திற்கும் விஷம் துர்ச்செயலுக்கும் உவமை ஆகும்.
    107. இச்செய்கைதனை - உமது தகாத செய்கைய.
    108. நத்துப்புரைமுடியீர் - சங்கினை ஒத்த வெண்மையான
    தலைமயிரினை யுடையீர். எத்துக்கு - எதற்கு.
    கொத்துக்கெலாம் - வமிசத்தினர்க்கெல்லாம்.
    109. சேவலாய் - காவலாக. நாவலோய் - அறிவுடையோனே.) - 1



    1910 - பொன்னே அனையாள் முன்போகுந் திறல்நோக்கி
    என்னே இனிச்செய்வ தென்றிரங்கி எம்பெருமான்
    தன்னே ரிலாதமரும் தந்திமுகத் தெந்தைதனை
    முன்னே வருவாய் முதல்வா வெனநினைந்தான். - 110



    1911 - அந்தப் பொழுதில் அறுமா முகற்கிரங்கி
    முந்திப் படர்கின்ற மொய்குழலாள் முன்னாகத்
    தந்திக் கடவுள் தனிவார ணப்பொருப்பு
    வந்துற்ற தம்மா மறிகடலே போல்முழங்கி. - 111



    1912 - அவ்வேலை யில்வள்ளி அச்சமொடு மீண்டுதவப்
    பொய்வேடங் கொண்டுநின்ற புங்கவன்தன் பாலணுகி
    இவ்வேழங் காத்தருள்க எந்தைநீர் சொற்றபடி
    செய்வேன் எனவொருபால் சேர்ந்துதழீஇக் கொண்டனளே. - 112



    1913 - அன்ன தொருகாலை அறுமா முகக்கடவுள்
    முன்னொரு சார்வந்து முதுகளிற்றின் கோடொற்றப்
    பின்னொரு சார்வந்து பிடியின் மருப்பூன்ற
    இந்நடு வேநின்றான் எறுழ்வயிரத் தூணேபோல். - 113



    1914 - கந்த முருகன் கடவுட் களிறுதனை
    வந்தனைகள் செய்து வழுத்திநீ வந்திடலால்
    புந்தி மயல்தீர்ந்தேன் புனையிழையுஞ் சேர்ந்தனளால்
    எந்தை பெருமான் எழுந்தருள்க மீண்டென்றான். - 114



    1915 - என்னும் அளவில் இனிதென்றி யானைமுக
    முன்னிளவல் ஏக முகமா றுடையபிரான்
    கன்னி தனையோர் கடிகாவி னிற்கலந்து
    துன்னு கருணைசெய்து தொல்லுருவங் காட்டினனே. - 115



    1916 - முந்நான்கு தோளும் முகங்களோர் மூவிரண்டுங்
    கொன்னார்வை வேலுங் குலிசமுமே னைப்படையும்
    பொன்னார் மணிமயிலு மாகப் புனக்குறவர்
    மின்னாள் கண்காண வௌ¤நின் றனன்விறலோன். - 116



    1917 - கூரார் நெடுவேற் குமரன் திருவுருவைப்
    பாரா வணங்காப் பரவலுறா விம்மிதமுஞ்
    சேரா நடுநடுங்காச் செங்கைகுவி யாவியரா
    ஆராத காதலுறா அம்மையிது ஓதுகின்றாள். - 117


    (110. தந்தி முகத்து எந்தை - விநாயகக் கடவுள்.
    111. வாரணப் பொருப்பு - மலையனைய யானையாக.
    112. நீர் சொற்றபடி செய்வேன் - நீங்கள் கூறியபடி நான் நடப்பேன்.
    ஒரு பால் சேர்ந்து - தவசியின் ஒருபுறத்தை அடைந்து சேர்ந்து.
    113. பிடி - வள்ளிநாயகி. மருப்பு - இங்கு முலைகள்.
    எறுழ் - வலிமை. 114. கடவுட்களிறு - விநாயகர்.
    புனைஇழை - வள்ளி. 115. கன்னிதனை - வள்ளிநாயகியை.
    காவினில் - சோலையில். கலந்து - கூடிமகிழ்ந்து.
    116. கொன் - பெருமை. வை - கூர்மை.
    விறலோன் - வெற்றியினையுடைய முருகக் கடவுள்.
    117. பாரா - தரிசித்து. வியரா - வியர்த்து. ஆராதகாதல் - நிறையாக்காதல்.) -



    1918 - மின்னே அனையசுடர் வேலவரே இவ்வுருவம்
    முன்னேநீர் காட்டி முயங்காமல் இத்துணையுங்
    கொன்னே கழித்தீர் கொடியேன்செய் குற்றமெலாம்
    இன்னே தணித்தே எனையாண்டு கொள்ளுமென்றாள். - 118



    1919 - உம்மை யதனில் உலகமுண்டோன் தன்மகள்நீ
    நம்மை அணையும்வகை நற்றவஞ்செய் தாய்அதனால்
    இம்மை தனிலுன்னை எய்தினோ மென்றெங்கள்
    அம்மை தனைத்தழுவி ஐயன் அருள்புரிந்தான். - 119



    1920 - எங்கண் முதல்வன் இறைவி தனைநோக்கி
    உங்கள் புனந்தன்னில் உறைந்திடமுன் னேகுதியால்
    மங்கைநல் லாயாமும் வருவோம் எனவுரைப்ப
    அங்கண் விடைகொண் டடிபணிந்து போயினளே. - 120



    1921 - வேறு
    வாங்கிய நிலைநுதல் வள்ளி என்பவள்
    பூங்குரல் ஏனலம் புனத்து ளேகியே
    ஆங்கனம் இருத்தலும் அயற்பு னத்தமர்
    பாங்கிவந் தடிமுறை பணிந்து நண்ணினாள். - 121



    1922 - நாற்றமுந் தோற்றமும் நவிலொ ழுக்கமும்
    மாற்றமுஞ் செய்கையும் மனமும் மற்றதும்
    வேற்றுமை யாதலும் விளைவு நோக்கியே
    தேற்றமொ டிகுளையங் கினைய செப்புவாள். - 122



    1923 - இப்புனம் அழிதர எங்ஙன் ஏகினை
    செப்புதி நீயெனத் தெரிவை நாணுறா
    அப்புற மென்சுனை யாடப் போந்தனன்
    வெப்புறும் வேனிலால் மெலிந்தி யானென்றாள். - 123



    1924 - மைவிழி சிவப்பவும் வாய்வெ ளுப்பவும்
    மெய்வியர் வடையவும் நகிலம் விம்மவுங்
    கைவளை நெகிழவுங் காட்டுந் தண்சுனை
    எவ்விடை இருந்துள தியம்பு வாயென்றாள். - 124



    1925 - சொற்றிடும் இகுளையைச் சுளித்து நோக்கியே
    உற்றிடு துணையதா உனையுட் கொண்டியான்
    மற்றிவண் இருந்தனன் வந்தெ னக்குமோர்
    குற்றம துரைத்தனை கொடியை நீயென்றாள். - 125


    (118. முயங்காமல் - அணையாமல். கொன்னே - வீணாக.
    119. உம்மை - முன்சனனம். இம்மை - இப்பிறவி.
    எங்கள் அம்மை - வள்ளிநாயகி. 122. நாற்றம் - வாசனை.
    தோற்றம் - உருவம். ஒழுக்கம் - நடத்தை. மாற்றம் - சொல்.
    செய்கை - செயல். மனம் - உள்ளம். இவைகள் பெண்களிடம்
    வேற்றுமையாதல் காமம் நுகர்ந்தமைக்கு அடையாளங்கள் ஆகும்.
    தேற்றம் - துணிவு. இகுளை - தோழி. 125. சுளித்து - கோபித்து.
    ஓர் குற்றமது - ஒரு பழியை.) -



    1926 - பாங்கியுந் தலைவியும் பகர்ந்து மற்றிவை
    யாங்கனம் இருத்தலும் அதனை நோக்கியே
    ஈங்கிது செவ்வியென் றெய்தச் சென்றனன்
    வேங்கைய தாகிமுன் நின்ற வேலையோன். - 126



    1927 - கோட்டிய நிலையினன் குறிக்கொள் வாளியன்
    தீட்டிய குறியவாள் செறித்த கச்சினன்
    வேட்டம தழுங்கிய வினைவ லோனெனத்
    தாட்டுணை சிவந்திடத் தமியன் ஏகினான். - 127



    1928 - வேறு
    காந்தள் போலிய கரத்தினீர் யானெய்த கணையால்
    பாய்ந்த சோரியும் பெருமுழக் குறுபகு வாயும்
    ஓய்ந்த புண்டுபடு மேனியு மாகியோர் ஒருத்தல்
    போந்த தோவிவண் புகலுதிர் புகலுதிர் என்றான். - 128



    1929 - வேழ மேமுதல் உள்ளன கெடுதிகள் வினவி
    ஊழி நாயகன் நிற்றலும் உமக்குநே ரொத்து
    வாழு நீரருக் குரைப்பதே யன்றிநும் வன்மை
    ஏழை யேங்களுக் கிசைப்பதென் என்றனள் இகுளை. - 129



    1930 - ஐயர் வேட்டைவந் திடுவதுந் தினைப்புனத் தமர்ந்து
    தையல் காத்திடு கின்றதுஞ் சரதமோ பறவை
    எய்யும் வேட்டுவர் கோலமே போன்றன இருவர்
    மையல் தன்னையும் உரைத்திடும் விழியென மதித்தாள். - 130



    1931 - மனத்தில் இங்கிவை உன்னியே துணைவியும் மற்றைப்
    புனத்தி லேகிவீற் றிருந்தனள் அன்னதோர் பொழுதில்
    சினத்தி டுங்கரி எய்தன மென்றசே வகன்போய்க்
    கனத்தை நேர்தரு கூந்தலாய் கேளெனக் கழறும். - 131



    1932 - உற்ற கேளிரும் நீங்களே தமியனுக் குமக்குப்
    பற்ற தாயுள பொருளெலாந் தருவன் நும்பணிகள்
    முற்று நாடியே புரிகுவன் முடிவுகொள் ளாது
    சற்று நீரருள் செய்திடு மென்றனன் தலைவன். - 132


    (127. வேட்டமது அழுங்கிய - வேட்டையால் இளைத்த.
    128. பகுவாய் - பிளந்தாய். ஒருத்தல் - ஆண் யானை.
    இவண் - இவ்விடம். 129. உமக்குநேர் ஒத்துவாழும் நீரருக்கு -
    உமது வன்மைக்கு ஒப்பாக வாழும் தன்மையினரிடம்.
    ஏழையேங்களுக்கு - பெண்களாகிய எங்களுக்கு.
    130. வேடர்கோலம் - வேடர் பறவை முதலியவற்றை
    வேட்டையாடும்போது நேரே பாராமல் குறிப்பாகப்பார்க்கும் தன்மை;
    இது வஞ்சப்பார்வை ஆகும். இருவர் மையல் - வள்ளிநாயகி,
    வேடவடிவுகொண்ட முருகன் இவர்களின் காதல்.
    132. பற்று - விருப்பம். நும் பணிகள் - உங்கள் கட்டளைகளை.) -



    1933 - அண்ணல் கூறிய திகுளைதேர்ந் திடுதலும் ஐயர்
    எண்ண மீதுகொல் எம்பெருங் கிளைக்கிதோர் இழுக்கை
    மண்ணின் நாட்டவோ வந்தது மறவர்தம் பேதைப்
    பெண்ணை ஆதரித் திடுவரோ பெரியவர் என்றாள். - 133



    1934 - சீத ரன்தரும் அமிர்தினை எயினர்கள் செய்த
    மாத வந்தனைப் பெண்ணினுக் கரசைமற் றெனக்குக்
    காதல் நல்கியே நல்லருள் புரிந்தகா ரிகையைப்
    பேதை யென்பதே பேதைமை என்றனன் பெரியோன். - 134



    1935 - என்றெங் கோனுரை செய்தலும் மடமகள் இங்ஙன்
    குன்றங் காவலர் வருகுவர் அவர்மிகக் கொடியோர்
    ஒன்றுந் தேர்கிலர் காண்பரேல் எம்முயிர் ஒறுப்பார்
    நின்றிங் காவதென் போமென நெறிப்படுத் துரைத்தாள். - 135



    1936 - தோட்டின் மீதுசெல் விழியினாய் தோகையோ டென்னைக்
    கூட்டி டாயெனில் கிழிதனில் ஆங்கவள் கோலந்
    தீட்டிட மாமட லேறிநும் மூர்த்தெரு வதனில்
    ஓட்டு வேன்இது நாளையான் செய்வதென் றுரைத்தான். - 136



    1937 - ஆதி தன்மொழி துணைவிகேட் டஞ்சியை யர்க்கு
    நீதி யன்றுதண் பனைமட லேறுதல் நீர்இம்
    மாத வித்தருச் சூழலில் மறைந்திரும் மற்றென்
    காதல் மங்கையைத் தருவனென் றேகினள் கடிதின். - 137



    1938 - வேறு
    அங்க வெல்லையில் அகம கிழ்ச்சியாய்
    எங்கள் தம்பிரான் இனிதின் ஏகியே
    மங்குல் வந்துகண் வளரும் மாதவிப்
    பொங்கர் தன்னிடைப் புக்கு வைகினான். - 138



    1939 - பொள்ளெ னத்தினைப் புனத்திற் பாங்கிபோய்
    வள்ளி தன்பதம் வணங்கி மானவேற்
    பிள்ளை காதலும் பிறவுஞ் செப்பியே
    உள்ளந் தேற்றியே ஒருப்ப டுத்தினாள். - 139



    1940 - இளைய மங்கை இகுளை ஏனலின்
    விளைத ரும்புனம் மெல்ல நீங்கியே
    அளவில் மஞ்ஞைகள் அகவும் மாதவிக்
    குளிர்பொ தும்பரிற் கொண்டு போயினாள். - 140


    (133. மண்ணில் நாட்டவோ - உலகத்தில் நிறுத்தவோ.
    மறவர் - வேடர். பெரியவர் - உயர்குலத்தார்.
    134. சீதரன் தரும் அமிர்தினை - திருமால் பெற்ற மகளான
    அமிர்தம் போல்பவளை. 135. ஒன்றும் தேர்கிலர் - ஒன்றையும்
    உணரார். நெறிப்படுத்து - முறையாக.
    136. தோகையோடு - உனது துணைவியாகிய மயில்போன்ற
    வள்ளிநாயகியுடன். கிழிதனில் - துணியில். கோலம் - வடிவு.
    தீட்டி - எழுதி. மாமடல்ஏறி - பனைமடலால் ஆகிய குதிரைமீது .
    137. ஐயர்க்கு நீதி அன்று - அரசராகிய உமக்கு முறை அன்று.
    இம்மாதவித்தருச் சூழலில் - இக்குருக்கத்தி மரச்செறிவினிடத்து.
    138. மங்குல் - மேகம். கண்வளருதல் - படிதல். பொங்கர் - சோலை.
    139. பிள்ளை காதலும் - இளையோன் காதலும். பிறவும் என்றது
    மடலேறுவேன் என்று தலைவன் கூறியதை.
    140. அகவும் - கூவும்; ஆடும் எனினுமாம்.) -



    1941 - பற்றின் மிக்கதோர் பாவை இவ்வரை
    சுற்றி யேகிநீ சூடுங் கோடல்கள்
    குற்று வந்துநின் குழற்கு நல்குவன்
    நிற்றி ஈண்டென நிறுவிப் போயினான். - 141



    1942 - வேறு
    கோற்றொடி இகுகுளளன் குறிப்பி னால்வகை
    சாற்றினள் அகன்றிடத் தையல் நிற்றலும்
    ஆற்றவும் மகிழ்சிறந் தாறு மாமுகன்
    தோற்றினன் எதிர்ந்தனன் தொன்மை போலவே. - 142



    1943 - வடுத்துணை நிகர்விழி வள்ளி எம்பிரான்
    அடித்துணை வணங்கலும் அவளை அங்கையால்
    எடுத்தனன் புல்லினன் இன்ப மெய்தினான்
    சுடர்த்தொடி கேட்டியென் றிதனைச் சொல்லினான். - 143



    1944 - உந்தையும் பிறரும்வந் துன்னை நாடுவர்
    செந்தினை விளைபுனஞ் சேவல் போற்றிடப்
    பைந்தொடி அணங்கொடு படர்தி நாளையாம்
    வந்திடு வோமென மறைந்து போயினான். - 144



    1945 - போந்தபின் இரங்கியப் பொதும்பர் நீங்கியே
    ஏந்திழை வருதலும் இகுளை நேர்கொடு
    காந்தளின் மலர்சில காட்டி அன்னவள்
    கூந்தலிற் சூடியே கொடுசென் றேகினாள். - 145



    1946 - இவ்வகை வழிபடும் இகுளை தன்னொடு
    நைவள மேயென நவிலுந் தீஞ்சொலாள்
    கொய்வரு தினைப்புனங் குறுகிப் போற்றியே
    அவ்விடை இருந்தனள் அகம்பு லர்ந்துளாள். - 146



    1947 - வளந்தரு புனந்தனில் வள்ளி நாயகி
    தளர்ந்தனள் இருத்தலுந் தலைய ளித்திடும்
    இளந்தினை யின்குரல் ஈன்று முற்றியே
    விளைந்தன குறவர்கள் விரைந்து கூடினார். - 147



    1948 - வேறு
    குன்ற வாணர்கள் யாவருங் கொடிச்சியை நோக்கித்
    துன்றும் ஏனல்கள் விளைந்தன கணிகளுஞ் சொற்ற
    இன்று காறிது போற்றியே வருந்தினை இனிநீ
    சென்றி டம்மஉன் சிறுகுடிக் கெனவுரை செய்தார். - 148


    (141. கோடல்கள் - காந்தள் மலர்கள். குற்று - பறித்து.
    142. வகை - (பிரிதற்குரிய) வகையினை. தையல் வள்ளிநாயகி.
    143. வடு - மாவடு. 144. உந்தை - உனது தந்தை.
    பிறரும் என்றது தோழி முதலியவர்களை. படர்தி - செல்லுவாய்.
    146. நைவளம் - ஒரு பண்.
    148. கணிகளும் சொற்ற - வேங்கைகளும் மலர்ந்து கூறியன.) -



    1949 - குறவர் இவ்வகை சொற்றன செவிப்புலங் கொண்டாங்
    கெறியும் வேல்படு புண்ணிடை எரிநுழைந் தென்ன
    மறுகு முள்ளத்த ளாகியே மற்றவண் நீங்கிச்
    சிறுகு டிக்குநல் லிகுளையுந் தானுமாய்ச் சென்றாள். - 149



    1950 - மானி னங்களை மயில்களைக் கிளியைமாண் புறவை
    ஏனை யுள்ளவை தங்களை நோக்கியே யாங்கள்
    போன செய்கையைப் புகலுதிர் புங்கவர்க் கென்னாத்
    தானி ரங்கியே போயினள் ஒருதனித் தலைவி. - 150



    1951 - பூவை யன்னதோர் மொழியினாள் சிறுகுடிப் புகுந்து
    கோவில் வைப்பினுட் குறுகியே கொள்கைவே றாகிப்
    பாவை ஒண்கழங் காடலள் பண்டுபோல் மடவார்
    ஏவர் தம்மொடும் பேசலள புலம்பிவீற் றிருந்தாள். - 151



    1952 - மற்ற எல்லையில் செவிலியும் அன்னையும் மகளை
    உற்று நோக்கியே மேனிவே றாகிய துனக்குக்
    குற்றம் வந்தவா றென்னென வற்புறக் கூறிச்
    செற்ற மெய்தியே அன்னவள் தன்னையிற் செறித்தார். - 152



    1953 - வேறு
    ஓவிய மனைய நீராள் உடம்பிடித் தடக்கை யோனை
    மேவினள் பிரித லாலே மெய்பரிந் துள்ளம் வெம்பி
    ஆவிய தில்லா ளென்ன அவசமாய் அங்கண் வீழப்
    பாவையர் எடுத்துப் புல்லிப் பருவர லுற்றுச் சூழ்ந்தார். - 153



    1954 - ஏர்கொள்மெய் நுடங்கு மாறும் இறைவளை கழலு மாறுங்
    கூர்கொள்கண் பனிக்கு மாறுங் குணங்கள்வே றாய வாறும்
    பீர்கொளு மாறும் நோக்கிப் பெண்ணினைப் பிறங்கற் சாரற்
    சூர்கொலாந் தீண்டிற் றென்றார் சூர்ப்பகை தொட்ட தோரார். - 154



    1955 - தந்தையுங் குறவர் தாமுந் தமர்களும் பிறரும் ஈண்டிச்
    சிந்தையுள் அயர்வு கொண்டு தெரிவைதன் செயலை நோக்கி
    முந்தையின் முதியா ளோடு முருகனை முறையிற் கூவி
    வெந்திறல் வேலினாற்கு வெறியயர் வித்தார் அன்றே. - 155



    1956 - வெறியயர் கின்ற காலை வேலன்மேல் வந்து தோன்றிப்
    பிறிதொரு திறமும் அன்றால் பெய்வளை தமிய ளாகி
    உறைதரு புனத்தில் தொட்டாம் உளமகிழ் சிறப்பு நேரிற்
    குறையிது நீங்கு மென்றே குமரவேள் குறிப்பிற் சொற்றான். - 156


    (150. புங்கவர்க்கு - முருகப்பெருமானுக்கு.
    151. கோவில் வைப்பு - நம்பி வேடனுடைய குடில்.
    152. இற்செறித்தல் - இனிவௌ¤யே போகக்கூடாது என்று
    ஆணையிட்டு வீட்டில் இருக்கச்செய்தல்.
    154. நுடங்குதல் - துவளுதல். இறைவளை - கை வளையல்.
    பீர் - பசனை; அச்சமுமாம். சூர் - தெய்வம். சூர்ப்பகை தொட்டது
    ஓரார் - சூரருக்குப் பகையான முருகக் கடவுள் தொட்டதனை அறியாதார்.
    155. முந்தையின் - முன்னாளிற்போல. முதியாள் - தேவராட்டி;
    இவளைச் சாமியாடி என்பர். வெறிஅயர்வித்தார் - வெறியாட்டு
    என்னும் விழவினைச் செய்தார். வெறியாடல் - தெய்வத்தை
    அழைத்துக் குறிகேட்டல்.) - 1



    1957 - குறிப்பொடு நெடுவேல் அண்ணல் கூறிய கன்ன மூல
    நெறிப்பட வருத லோடும் நேரிழை அவசம் நீங்கி
    முறைப்பட எழுந்து வைக முருகனை முன்னி யாங்கி
    சிறப்பினை நேர்தும் என்று செவிலித்தாய் பராவல் செய்தாள். - 157



    1958 - மனையிடை அம்மை வைக வனசரர் முதிர்ந்த செவ்வித்
    தினையினை அரிந்து கொண்டு சிறுகுடி அதனிற் சென்றார்
    தினையது நோக்கிச் செவ்வேள் இருவியம் புனத்திற் புக்குப்
    புனையிழை தன்னைக் காணான் புலம்பியே திரித லுற்றான். - 158



    1959 - கனந்தனை வினவும் மஞ்ஞைக் கணந்தனை வினவும் ஏனற்
    புனந்தனை வினவும் அம்மென் பூவையை வினவுங் கிள்ளை
    இனந்தனை வினவும் யானை இரலையை வினவுந் தண்கா
    வனந்தனை வினவும் மற்றை வரைகளை வினவு மாதோ. - 159



    1960 - வாடினான் தளர்ந்தான் நெஞ்சம் வருந்தினான் மையற் கெல்லை
    கூடினான் வெய்து யிர்த்தான் குற்றடிச் சுவடு தன்னை
    நாடினான் திகைத்தான் நின்று நடுங்கினான் நங்கை தன்னை
    தேடினான் குமரற் கீது திருவிளை யாடல் போலாம். - 160



    1961 - வல்லியை நாடு வான்போல் மாண்பகல் கழித்து வாடிக்
    கொல்லையம் புனத்திற் சுற்றிக் குமரவேள் நடுநாள் யாமஞ்
    செல்லுறு மெல்லை வேடர் சிறுகுடி தன்னிற் புக்குப்
    புல்லிய குறவர் செம்மல் குரம்பையின் புறம்போய் நின்றான். - 161



    1962 - பாங்கிசெவ் வேளைக் கண்டு பணிந்துநீர் கங்குற் போதில்
    ஈங்குவந் திடுவ தொல்லா திறைவியும் பிரியின் உய்யாள்
    நீங்களிவ் விடத்திற் கூட நேர்ந்ததோ ரிடமு மில்லை
    ஆங்கவள் தன்னைக் கொண்டே அகலுதிர் அடிகள் என்றாள். - 162



    1963 - என்றிவை கூறிப் பாங்கி இறைவனை நிறுவி யேகித்
    தன்றுணை யாகி வைகுந் தையலை யடைந்து கேள்வர்
    உன்றனை வவ்விச் செல்வான் உள்ளத்தில் துணியா இங்ஙன்
    சென்றனர் வருதி என்னச் சீரிதென் றொருப்பா டுற்றாள். - 163



    1964 - தாய்துயில் அறிந்து தங்கள் தமர்துயில் அறிந்து துஞ்சா
    நாய்துயில் அறிந்து மற்றந் நகர்துயில் அறிந்து வெய்ய
    பேய்துயில் கொள்ளும் யாமப் பெரும்பொழு ததனிற் பாங்கி
    வாய்தலிற் கதவை நீக்கி வள்ளியைக் கொடுசென் றுய்த்தாள். - 164


    (157. கன்னமூலம் - காதினிடத்து. அவசம் - மயக்கம்.
    செவிலித்தாய் - வளர்ப்புத் தாய். 158. வனசரர் - வேடர்கள்.
    இருவி - தினைத்தாள். 159. கனம் - மேகம்.
    160. குற்றடி - சிறியஅடி. சுவடு - அடையாளம்.
    161. நடுநாள் யாமம் - நடுஇரவு. புல்லிய - இழிந்த.
    குரவர் செம்மல் - வேட நம்பி. குரம்பை - குடில்.
    162. கங்குற்போதில் இங்கு வந்திடுவது ஒல்லாது - ஏற்று இழிவு
    உடைத்தாகிய இம்மலையில் பாம்பு, புலி, கரடி, யானை முதலியவற்றால்
    ஏதமுண்டாகும்; ஆதலால் இராக்காலத்தில் வருதல் தகுதி அன்று.
    163. வவ்வி - கவர்ந்து. சீரிது - நல்லது.) -



    1965 - அறுமுக வொருவன் தன்னை யாயிழை எதிர்ந்து தாழ்ந்து
    சிறுதொழில் எயினர் ஊரில் தீயேனேன் பொருட்டால் இந்த
    நறுமலர்ப் பாதங் கன்ற நள்ளிருள் யாமந் தன்னில்
    இறைவநீர் நடப்ப தேயென் றிரங்கியே தொழுது நின்றாள். - 165



    1966 - மாத்தவ மடந்தை நிற்ப வள்ளலை இகுளை நோக்கித்
    தீத்தொழில் எயினர் காணில் தீமையாய் விளையும் இன்னே
    ஏத்தருஞ் சிறப்பி னும்மூர்க் கிங்கவள் தனைக்கொண் டேகிக்
    காத்தருள் புரியு மென்றே கையடை யாக நேர்ந்தாள். - 166



    1967 - முத்துறு முறுவ லாளை மூவிரு முகத்தி னான்தன்
    கைத்தலந் தன்னில் ஈந்து கைதொழு திகுளை நிற்ப
    மெய்த்தகு கருணை செய்து விளங்கிழய் நீயெம் பாலின்
    வைத்திடு கருணை தன்னை மறக்கலங் கண்டாய் என்றான். - 167



    1968 - மையுறு தடங்கண் நல்லாள் வள்ளியை வணக்கஞ் செய்து
    மெய்யுறப் புல்லி அன்னாய் விரைந்தனை சேறி யென்னா
    ஐயனோ டினிது கூட்டி ஆங்கவர் விடுப்ப மீண்டு
    கொய்யுறு கவரி மேய்ந்த குரம்பையின் கூரை புக்காள். - 168



    1969 - விடைபெற்றே இகுளை ஏக வேலுடைக் கடவுள் அன்ன
    நடைபெற்ற மடந்தை யோடு நள்ளிரு ளிடையே சென்று
    கடைபெற்ற சீறூர் நீங்கிக் காப்பெலாங் கடந்து காமன்
    படைபெற்றுக் குலவும் ஆங்கோர் பசுமரக் காவுட் சேர்ந்தான். - 169



    1970 - செஞ்சுடர் நெடுவேல் அண்ணல் செழுமலர்க் காவிற் புக்கு
    வஞ்சியொ டிருந்த காலை வைகறை விடியல் செல்ல
    எஞ்சலில் சீறூர் தன்னில் இறையவன் தனது தேவி
    துஞ்சலை யகன்று வல்லே துணுக்கமுற் றெழுந்தாள் அன்றே. - 170



    1971 - சங்கலை கின்ற செங்கைத் தனிமகட் காணா ளாகி
    எங்கணும் நாடிப் பின்னர் இகுளையை வந்து கேட்பக்
    கங்குலின் அவளும் நானுங் கண்படை கொண்ட துண்டால்
    அங்கவள் அதற்பின் செய்த தறிகிலன் அன்னாய் என்றாள். - 171



    1972 - தம்மகட் காணா வண்ணந் தாய்வந்து புகலக் கேட்டுத்
    தெம்முனைக் குறவர் செம்மல் தெருமந்து செயிர்த்துப் பொங்கி
    நம்மனைக் காவல் நீங்கி நன்னுதற் பேதை தன்னை
    இம்மெனக் கொண்டு போந்தான் யாவனோ ஒருவன் என்றான். - 172



    1973 - மற்றிவை புகன்று தாதை வாட்படை மருங்கிற் கட்டிக்
    கொற்றவில் வாளி ஏந்திக் குமரியைக் கவர்ந்த கள்வன்
    உற்றிடு நெறியை நாட ஒல்லையிற் போவன் என்னாச்
    செற்றமொ டெழுந்து செல்லச் சிறுகுடி எயினர் தேர்ந்தார். - 173


    (165. இறைவ - இறைவனே! 166. மாத்தவ மடந்தை - வள்ளிநாயகி.
    கையடை - அடைக்கலம். 168. சேறி - செல்வாய்.
    170. வைகறை விடியல் - விடியற்காலம்; அற்றை நாட்பொழுது எனினுமாம்.
    171. சங்கு - சங்குவளையல். கண்படை கொண்டது - உறங்கியது.) -



    1974 - எள்ளுதற் கரிய சீறூர் இடைதனில் யாமத் தேகி
    வள்ளியைக் கவர்ந்து கொண்டு மாயையால் மீண்டு போன
    கள்வனைத் தொடர்தும் என்றே கானவர் பலருங் கூடிப்
    பொள்ளெனச் சிலைகோல் பற்றிப் போர்த்தொழிற் கமைந்துபோனர். 174 - 174



    1975 - வேடுவர் யாரும் ஈண்டி விரைந்துபோய் வேந்த னோடு
    கூடினர் இரலை தன்னைக் குறித்தனர் நெறிகள் தோறும்
    ஓடினர் பொதும்ப ரெல்லாம் உலாவினர் புலங்கள் புக்கு
    நாடினர் சுவடு நோக்கி நடந்தனர் இடங்க ளெங்கும். - 175



    1976 - ஈங்கனம் மறவ ரோடும் இறையவன் தேடிச் செல்லப்
    பாங்கரில் ஒருதண் காவிற் பட்டிமை நெறியால் உற்றாள்
    ஆங்கனந் தெரியா அஞ்சி ஆறுமா முகத்து வள்ளல்
    பூங்கழல் அடியில் வீழ்ந்து பொருமியே புகல லுற்றாள். - 176



    1977 - கோலொடு சிலையும் வாளுங் குந்தமும் மழுவும் பிண்டி
    பாலமும் பற்றி வேடர் பலருமாய்த் துருவிச் சென்று
    சோலையின் மருங்கு வந்தார் துணுக்கமுற் றுளதென் சிந்தை
    மேலினிச் செய்வ தென்கொல் அறிகிலேன் விளம்பா யென்றாள். - 177



    1978 - வருந்தலை வாழி நல்லாய் மால்வரை யோடு சூரன்
    உரந்தனை முன்பு கீண்ட உடம்பிடி யிருந்த நும்மோர்
    விரைந்தமர் புரியச் சூழின் வீட்டுதும் அதனை நோக்கி
    இருந்தருள் நம்பின் என்னா இறைமகட் கெந்தை சொற்றான். - 178



    1979 - குறத்திரு மடந்தை இன்ன கூற்றினை வினவிச் செவ்வேள்
    புறத்தினில் வருத லோடும் பொள்ளெனக் குறுகி அந்தத்
    திறத்தினை யுற்று நோக்கிச் சீறிவெய் துயிர்த்துப் பொங்கி
    மறத்தொழில் எயினர் காவை மருங்குற வளைந்து கொண்டார். - 179



    1980 - தாதையங் கதனைக் கண்டு தண்டலை குறுகி நந்தம்
    பேதையைக் கவர்ந்த கள்வன் பெயர்கிலன் எமது வன்மை
    ஏதையு மதியான் அம்மா இவன்விறல் எரிபாய்ந்த துண்ணும்
    ஊதையங் கான மென்ன முடிக்குதும் ஒல்லை யென்றான். - 180



    1981 - குறவர்கள் முதல்வன் தானுங் கொடுந்தொழில் எயினர் யாரும்
    மறிகட லென்ன வார்த்து வார்சிலை முழுதும் வாங்கி
    எறிசுடர்ப் பரிதித் தேவை எழிலிகள் மறைத்தா லென்ன
    முறைமுறை அம்பு வீசி முருகனை வளைந்து கொண்டார். - 181



    1982 - ஒட்டல ராகிச் சூழ்ந்தாங் குடன்றுபோர் புரிந்து வெய்யோர்
    விட்டவெம் பகழி யெல்லாம் மென்மலர் நீர வாகிக்
    கட்டழ குடைய செவ்வேற் கருணையங் கடலின் மீது
    பட்டன பட்ட லோடும் பைந்தொடி பதைத்துச் சொல்வாள். - 182


    (174. தொடர்தும் - பின்பற்றுவோம். 175. ஈண்டி - ஒருங்குகூடி.
    இரலை - ஊது கொம்பு. குறித்தனர் - ஊதினர்.
    176. பட்டிமை நெறி - களவொழுக்கம்.
    178. உடம்பிடி - வேல். வீட்டுதும் - அழிப்போம்.
    நம்பின் - நமது பின்புறத்தில். 180. ஊதை - வெட்டிச் சுடுகின்ற.
    181. பரிதித்தேவை - சூரியன். எழிலி - மேகம்.
    182. ஒட்டலர் - பகைவர்.) -



    1983 - நெட்டிலை வாளி தன்னை ஞெரேலென நும்மேற் செல்லத்
    தொட்டிடு கையர் தம்மைச் சுடருடை நெடுவேல் ஏவி
    அட்டிடல் வேண்டும் சீயம் அடுதொழில் குறியா தென்னில்
    கிட்டுமே மரையும் மானுங் கேழலும் வேழந் தானும். - 183



    1984 - என்றிவை குமரி செப்ப எம்பிரான் அருளால் பாங்கர்
    நின்றதோர் கொடிமாண் சேவல் நிமிர்ந்தெழுந் தார்ப்புக் கொள்ளக்
    குன்றவர் முதல்வன் தானுங் குமரருந் தமரும் யாரும்
    பொன்றின ராகி மாண்டு பொள்ளெனப் புவியில் வீழ்ந்தார். - 184



    1985 - தந்தையும் முன்னை யோரும் தமரும்வீழ்ந் திறந்த தன்மை
    பைந்தொடி வள்ளி நோக்கிப் பதைபதைத் திரங்கிச் சோரக்
    கந்தனத் துணைவி அன்பு காணுவான் கடிகா நீங்கிச்
    சிந்தையில் அருளோ டேக அனையளுந் தொடர்ந்து சென்றாள். - 185



    1986 - செல்லநா ரதப்பேர் பெற்ற சீர்கெழு முனிநேர் வந்து
    வல்லியோ டிறைவன் தன்னை வணங்கிநின் செய்கை எல்லாஞ்
    சொல்லுதி என்ன அன்னான் தோகையைக் காண்டல் தொட்டு
    மல்லல்வேட் டுவரை யட்டு வந்திடும் அளவுஞ் சொற்றான். - 186



    1987 - பெற்றிடு தந்தை தன்னைப் பிறவுள சுற்றத் தோரைச்
    செற்றமொ டட்டு நீக்கிச் சிறந்தநல் லருள்செ யாமல்
    பொற்றொடி தன்னைக் கொண்டு போந்திடத் தகுமோ வென்னா
    மற்றிவை முனிவன் கூற வள்ளலும் அ·தாம் என்றான். - 187



    1988 - விழுப்பம துளதண் காவில் விசாகன்மீண் டருளித் தன்பால்
    முழுப்பரி வுடைய நங்கை முகத்தினை நோக்கி நம்மேற்
    பழிப்படு வெம்போர் ஆற்றிப் பட்டநுங் கிளையை எல்லாம்
    எழுப்புதி என்ன லோடும் இனிதென இறைஞ்சிச் சொல்வாள். - 188



    1989 - விழுமிய உயிர்கள் சிந்தி வீழ்ந்தநங் கேளிர் யாரும்
    எழுதிரென் றருள லோடும் இருநிலத் துறங்கு கின்றோர்
    பழையநல் லுணர்வு தோன்றப் பதைபதைத் தெழுதற் கொப்பக்
    குழுவுறு தமர்க ளோடுங் குறவர்கோன் எழுந்தான் அன்றே. - 189



    1990 - எழுந்திடு கின்ற காலை எம்பிரான் கருணை வௌ¢ளம்
    பொழிந்திடு வதன மாறும் புயங்கள்பன் னிரண்டும் வேலும்
    ஒழிந்திடு படையு மாகி உருவினை அவர்க்குக் காட்ட
    விழுந்தனர் பணிந்து போற்றி விம்மித ராகிச் சொல்வார். - 190



    1991 - அடுந்திறல் எயினர் சேரி அளித்திடு நீயே எங்கள்
    மடந்தையைக் கரவில் வௌவி வரம்பினை அழித்துத் தீரா
    நெடுந்தனிப் பழிய தொன்று நிறுவினை புதல்வர் கொள்ள
    விடந்தனை அன்னை யூட்டின் விலக்கிடு கின்றா ருண்டோ. - 191


    (183. சீயம் - சிங்கம். மரை, மான் - மான் வகைகள்.
    185. முன்னையோர் - தமையன். அத்துணைவி - அந்த வள்ளி நாயகி.
    186. காண்டல் தொட்டு - கண்டதுமுதல். அட்டு - கொன்று.
    188. விழுப்பம் - சிறப்பு. விசாகன் - முருகக் கடவுள்.) -



    1992 - ஆங்கது நிற்க எங்கள் அரிவையை நசையால் வௌவி
    நாங்களும் உணரா வண்ணம் நம்பெருங் காவல் நீங்கி
    ஈங்கிவட் கொணர்ந்தாய் எந்தாய் இன்னினிச் சீறூர்க் கேகித்
    தீங்கனல் சான்றா வேட்டுச் செல்லுதி நின்னூர்க் கென்றார். - 192



    1993 - மாதுலன் முதலோர் சொற்ற மணமொழிக் கிசைவு கொண்டு
    மேதகு கருணை செய்து மெல்லியல் தனையுங் கொண்டு
    கோதிலா முனிவ னோடுங் குளிர்மலர்க் காவு நீங்கிப்
    பாதபங் கயங்கள் நோவப் பருப்பதச் சீறூர் புக்கான். - 193



    1994 - தந்தையுஞ் சுற்றத் தோருஞ் சண்முகன் பாங்க ரேகிச்
    சிந்தையின் மகிழ்ச்சி யோடு சிறுகுடி யோரை நோக்கிக்
    கந்தனே நமது மாதைக் கவர்ந்தனன் நமது சொல்லால்
    வந்தனன் மணமுஞ் செய்ய மற்றியது நிகழ்ச்சி யென்றார். - 194



    1995 - சங்கரன் மததத தானே தையலைக் கவர்ந்தான் என்றும்
    மங்கல வதுவை செய்ய வந்தனன் இங்ஙன் என்றும்
    தங்கள்சுற் றத்தோர் கூறச் சிறுகுடி தன்னில் உற்றோர்
    பொங்குவெஞ் சினமும் நாணும் மகிழ்ச்சியும் பொடிப்ப நின்றார். - 195



    1996 - குன்றவர் தமது செம்மல் குறிச்சியில் தலைமைத் தான
    தன்றிரு மனையி னூடே சரவண முதல்வன் தன்னை
    மன்றலங் குழலி யோடு மரபுளி யுய்த்து வேங்கைப்
    பொன்றிகழ் அதளின் மீது பொலிவுற இருத்தி னானே. - 196



    1997 - அன்னதோர் வேலை தன்னில் அறுமுக முடைய வள்ளல்
    தன்னுழை இருந்த நங்கை தனையரு ளோடு நோக்கக்
    கொன்னவில் குறவர் மாதர் குயிற்றிய கோலம் நீங்கி
    முன்னுறு தெய்வக் கோல முழுதொருங் குற்ற தன்றே. - 197



    1998 - கவலைதீர் தந்தை தானுங் கணிப்பிலாச் சுற்றத் தாருஞ்
    செவிலியும் அன்னைதானும் இகுளையும் தெரிவை மாரும்
    தவலருங் கற்பின் மிக்க தம்மகள் கோலம் நோக்கி
    இவள்எம திடத்தில் வந்த தெம்பெருந் தவமே என்றார். - 198



    1999 - அந்தநல் வேலை தன்னில் அன்புடைக் குறவர் கோமான்
    கந்தவேள் பாணி தன்னில் கன்னிகை கரத்தை நல்கி
    நந்தவ மாகி வந்த நங்கையை நயப்பால் இன்று
    தந்தனன் கொள்க வென்று தண்புனல் தாரை உய்த்தான். - 199



    2000 - நற்றவம் இயற்றுந் தொல்சீர் நாரதன் அனைய காலைக்
    கொற்றம துடைய வேலோன் குறிப்பினால் அங்கி யோடு
    மற்றுள கலனுந் தந்து வதுவையின் சடங்கு நாடி
    அற்றம தடையா வண்ணம் அருமறை விதியாற் செய்தான். - 200


    (192. நசையால் - ஆசையால். தீங்கனல் சான்றா - நல்ல ஓமாக்கினி
    சாட்சியாக. வேட்டு - திருமணம் புரிந்து. 193. மாதுலன் - மாமன்;
    வேடநம்பி. கோதிலா முனிவன் - இங்கு நாரத முனிவன்.
    196. குறிச்சி - மலைநாட்டுச் சிற்றூர். வேங்கை அதள் - புலித்தோல்.
    197. தவிலல் - செய்தல். முன்னுறு தெய்வக் கோலம் - முன்னே
    சுந்தரியாயிருந்த காலத்துள்ள அழகு. 199. பாணிதன்னில் - கையில்.
    தண்புனல்தாரை உய்த்தான் - நீரினால் தாரைவார்த்தான்.) -



    2001 - ஆவதோர் காலை தன்னில் அரியும்நான் முகனும் வானோர்
    கோவொடு பிறருஞ் சூழக் குலவரை மடந்தை யோடுந்
    தேவர்கள் தேவன்வந்து சேண்மிசை நின்று செவ்வேள்
    பாவையை வதுவை செய்யும் பரிசினை முழுதுங் கண்டான். - 201



    2002 - கண்ணுதல் ஒருவன் தானுங் கவுரியுங் கண்ணாற் கண்டு
    தண்ணளி புரிந்து நிற்பத் தண்டுழாய் முடியோ னாதிப்
    பண்ணவர் உவகை நீடிப் பனிமலர் மாரி வீதி
    அண்ணலை வழிபட் டேத்தி அஞ்சலி புரிந்திட் டார்த்தார். - 202



    2003 - அறுமுக முடைய வள்ளல் அன்னது நோக்கிச் சீறூர்
    இறையதும் உணரா வண்ணம் இமையமேல் அணங்கி னோடுங்
    கறையமர் கண்டன் தன்னைக் கைதொழு தேனை யோர்க்கு
    முறைமுறை யுவகை யோடு முழுதருள் புரிந்தான் அன்றே. - 203



    2004 - வேறு
    அங்க வேலையின் அலரின் மேலவன்
    செங்கண் மாயவன் தேவர் கோமகன்
    செங்கை தீர்தருந் தவத்தர் தம்மொடு
    மங்கை பாதியன் மறைந்து போயினான். - 204



    2005 - போன எல்லையில் பொருவில் நாரதன்
    தானி யற்றிய சடங்கு முற்றலுங்
    கான வேடுவர் கன்னி தன்னொடு
    மான வேலனை வணங்கிப் போற்றினான். - 205



    2006 - வேறு
    மற்றது காஆஆ தன்னில் மாதுலன் வள்ளி தன்னைக்
    கொற்றவே லுடைய நம்பி வதுவைசெய் கோலம் நோக்கி
    உற்றவிவ் விழிகள் தம்மால் உறுபயன் ஒருங்கே இன்று
    பெற்றனன் என்றான் அன்னான் உவகையார் பேசற் பாலார். - 206



    2007 - மெல்லிடை கொம்பென் றுன்ன விரைமலர் தழைமேற் கொண்ட
    புல்லிய குறவர் மாதர் பொருவில்சீர் மருகன் தானும்
    வல்லியும் இன்னே போல வைகலும் வாழ்க என்று
    சொல்லியல் ஆசி கூறித் தூமலர் அறுகு தூர்த்தார். - 207



    2008 - செந்தினை இடியும் தேனும் தீம்பல கனியும் காயும்
    கந்தமும் பிறவு மாக இலைபொலி கலத்தி லிட்டுப்
    பைந்தொடி யணங்கு நீயும் பரிவுடன் நுகர்திர் என்ன
    வெந்திறல் எயினர் கூற வியனருள் புரிந்தான் மேலோன். - 208


    (202. கவுரி - உமாதேவியார். பண்ணவர் - தேவர்கள்.
    204. தேவர்கோமான் - இந்திரன்; தேவர்களும் அவர்களுடைய
    அரசனான இந்திரன் எனினுமாம்.
    207. விரைமலர் - நறுமணம் உள்ள மலர்.
    அறுகு தூர்த்தார் - அறுகம்புல்லைத் தூவினார்.
    இங்கு அறுகு அரிசி கலந்த அறுகு. இதனைச் சேஷையிடுதல் என்பர். 208. இடி - மாவு. கந்தம் - கிழங்கு.) -



    2009 - வேறு
    கிராதர் மங்கையும் பராபரன் மதலையும் கெழுமி
    விராவு சில்லுணா மிசைந்தனர் மிசிந்திடு தன்மை
    முராரி யாதியாந் தேவர்பால் முனிவர்பால் மற்றைச்
    சராச ரங்கள்பால் எங்கணுஞ் சார்ந்துள தன்றே. - 209



    2010 - அனைய காலையில் அறுமுகன் எழுந்துநின் றாங்கே
    குனியும் வில்லுடைக் குறவர்தங் குரிசிலை நோக்கி
    வனிதை தன்னுடன் சென்றியாஞ் செருத்தணி வரையில்
    இனிது வைகுதும் என்றலும் நன்றென இசைத்தான். - 210



    2011 - தாயும் பாங்கியுஞ் செவிலியுந் தையலை நோக்கி
    நாய கன்பின்னர் நடத்தியோ நன்றெனப் புல்லி
    நேய மோடுபல் லாசிகள் புகன்றிட நெடுவேல்
    சேயு டன்கடி தேகவே சிந்தையுட் கொண்டாள். - 211



    2012 - பாவை தன்னுடன் பன்னிரு புயமுடைப் பகவன்
    கோவில் நீங்கியே குறவர்தங் குரிசிலை விளித்துத்
    தேவ ருந்தொழச் சிறுகுடி அரசியல் செலுத்தி
    மேவு கென்றவண் நிறுவியே போயினன் விரைவில். - 212



    2013 - இன்ன தன்மைசேர் வள்ளியஞ் சிலம்பினை இகந்து
    பன்னி ரண்டுமொய்ம் புடையவன் பாவையும் தானும்
    மின்னும் வெஞ்சுடர்ப் பரிதியும் போலவிண் படர்ந்து
    தன்னை யேநிகர் தணிகைமால் வரையினைச் சார்ந்தான். - 213



    2014 - செச்சை மௌலியான் செருத்தணி வரைமிசைத் தெய்வத்
    தச்சன் முன்னரே இயற்றிய தனிநகர் புகுந்து
    பச்சிளங் கொங்கை வனசரர் பாவையோ டொன்றி
    இச்ச கத்துயிர் யாவையும் உய்யவீற் றிருந்தான். - 214



    2015 - கந்த வேலையில் வள்ளிநா யகிஅயில் வேற்கைக்
    கந்த வேள்பதம் வணங்கியே கைதொழு தைய
    [1] இந்த மால்வரை இயற்கையை இயம்புதி என்னச்
    சிந்தை நீடுபேர் அருளினால் இன்னன செப்பும்.
    ([1] பா-ம் - விந்தை) - 215



    2016 - செங்கண் வெய்யசூர்ச் செருத்தொழி லினுஞ்சிலை வேடர்
    தங்க ளிற்செயுஞ் செருத்தொழி லினுந்தணிந் திட்டே
    இங்கு வந்தியாம் இருத்தலால் செருத்தணி என்றோர்
    மங்க லந்தரு பெயரினைப் பெற்றதிவ் வரையே. - 216



    2017 - முல்லை வாள்நகை உமையவள் முலைவளை அதனான்
    மல்லல் மாநிழல் இறைவரை வடுப்படுத் தமரும்
    எல்லை நீர்வயற் காஞ்சியின் அணுகநின் றிடலால்
    சொல்ல லாந்தகைத் தன்றிந்த மால்வரைத் தூய்மை. - 217


    (209. கிராதர் - வேடர். பராபரன் - சிவன்.
    210. குனியும் - வளையும். செருத்தணிவரை - திருத்தணிகைமலை.
    214. செச்சை - வெட்சிமாலை. 215. இந்தமால்வரை - இத்திருத்தணிகைமலை.
    216. இச்செய்யுள் செருத்தணி என்ற பெயர்க் காரணம் கூறுகிறது.
    217. மாநிழல் இறைவர் - மாமர நிழலில் எழுந்தருளிய ஏகாம்பரநாதர்.
    வடு - தழும்பு. அணுக - சமீபமாக.) -



    2018 - விரையி டங்கொளும் போதினுள் மிக்கபங் கயம்போல்
    திரையி டங்கொளும் நதிகளிற் சிறந்தகங் கையைப்போல்
    தரையி டங்கொளும் பதிகளிற் காஞ்சியந் தலம்போல்
    வரையி டங்களிற் சிறந்ததித் தணிகைமால் வரையே. - 218



    2019 - கோடி யம்பியும் வேய்ங்குழல் ஊதியும் குரலால்
    நீடு தந்திரி இயக்கியும் ஏழிசை நிறுத்துப்
    பாடி யுஞ்சிறு பல்லியத் தின்னிசை படுத்தும்
    ஆடு தும்விளை யாடுதும் இவ்வரை அதன்கண். - 219



    2020 - மந்த ரத்தினும் மேருமால் வரையினும் மணிதோய்
    கந்த ரத்தவன் கயிலையே காதலித் ததுபோல்
    சுந்த ரக்கிரி தொல்புவி தனிற்பல வெனினும்
    இந்த வெற்பினில் ஆற்றவும் மகிழச்சியுண் டெமக்கே. - 220



    2021 - வான்றி கழந்திடும் இருநில வரைபல அவற்றுள்
    ஆன்ற காதலால் இங்ஙனம் மேவுதும் அதற்குச்
    சான்று வாசவன் வைகலுஞ் சாத்துதற் பொருட்டால்
    மூன்று காவியிச் சுனைதனில் எமக்குமுன் வைத்தான். - 221



    2022 - காலைப் போதினில் ஒருமலர் கதிர்முதிர் உச்சி
    வேலைப் போதினில் ஒருமலர் விண்ணெலாம் இருள்சூழ்
    மாலைப் போதினில் ஒருமல ராகஇவ் வரைமேல்
    நீலப் போதுமூன் றொழிவின்றி நிற்றலும் மலரும். - 222



    2023 - ஆழி நீரர சுலகெலாம் உண்ணினும் அளிப்போர்
    ஊழி பேரினும் ஒருபகற் குற்பலம் மூன்றாய்த்
    தாழி ருஞ்சுனை தன்னிடை மலர்ந்திடும் தவிரா
    மாழை ஒண்கணாய் இவ்வரைப் பெருமையார் வகுப்பார். - 223



    2024 - இந்த வெற்பினைத் தொழுதுளார் பவமெலாம் ஏகும்
    சிந்தை அன்புடன் இவ்வரை யின்ணே சென்று
    முந்த நின்றவிச் சுனைதனில் விதிமுறை மூழ்கி
    வந்து நந்தமைத் தொழுதுளார் நம்பதம் வாழ்வார். - 224



    2025 - அஞ்சு வைகல்இவ் வகன்கிரி நண்ணியெம் மடிகள்
    தஞ்ச மென்றுளத் துன்னியே வழிபடுந் தவத்தோர்
    நெஞ்ச கந்தனில் வெ·கிய போகங்கள் நிரப்பி
    எஞ்ச லில்லதோர் வீடுபே றடைந்தினி திருப்பார். - 225


    (218. விரை - மணம். வரை இடங்களில் - மலை இடங்களில்.
    219. கோடு - ஊதுகொம்பு. குரலால் - உரோமத்தால்; இன்னிசையால்
    எனினுமாம். தந்திரி - வீணை. 220. இந்த வெற்பினில் - இத்தணிகைமலையில்.
    221. சான்று - சாட்சி. காவி - செங்காவி மலர்க்கொடிகள்.
    223. ஆழிநீர் அரசு - வட்ட வடிவான கடல். தவிரா - தவறாமல்.
    மாழை - மாவடு. 224. பவம் - பாவம். நம்பதம் - சாயுச்சியம்.
    225. வெ·கிய - விரும்பிய.) -



    2026 - தேவ ராயினும் முனிவர ராயினும் சிறந்தோர்
    ஏவ ராயினும் பிறந்தபின் இவ்வரை தொழாதார்
    தாவ ராதிகள் தம்மினுங் கடையரே தமது
    பாவ ராசிகள் அகலமோ பார்வலஞ் செயிலும். - 226



    2027 - பாத கம்பல செய்தவ ராயினும் பவங்கள்
    ஏதும் வைகலும் புரிபவ ராயினும் எம்பால்
    ஆத ரங்கொடு தணிகைவெற் படைவரேல் அவரே
    வேதன் மாலினும் விழுமியர் எவற்றினும் மிக்கார். - 227



    2028 - வேறு
    உற்பல வரையின் வாழ்வோர் ஓரொரு தருமஞ் செய்யில்
    பற்பல வாகி யோங்கும் பவங்களில் பலசெய் தாலுஞ்
    சிற்பம தாகி யொன்றாய்த் தேய்ந்திடும் இதுவே யன்றி
    அற்புத மாக இங்ஙன் அநந்தகோ டிகளுண் டன்றே. - 228



    2029 - என்றிவை குமரன் கூற எயினர்தம் பாவை கேளா
    நன்றென வுவகை யெய்தி நானில வரைப்பி னுள்ள
    குன்றிடைச் சிறந்த இந்தத் தணிகைமால் வரையின் கொள்கை
    உன்றிரு வருளால் தேர்ந்தே உய்த்தனன் தமியன் என்றாள். - 229



    2030 - இவ்வரை ஒருசார் தன்னில் இராறுதோ ளுடைய எந்தை
    மைவிழி யணங்குந் தானும் மாலயன் உணரா வள்ளல்
    ஐவகை யுருவில் ஒன்றை ஆகம விதியால் உய்த்து
    மெய்வழ பாடு செய்து வேண்டியாங் கருளும் பெற்றான். - 230



    2031 - கருத்திடை மகிழ்வும் அன்புங் காதலுங் கடவ முக்கண்
    ஒருத்தனை வழிபட் டேத்தி ஒப்பிலா நெடுவேல் அண்ணல்
    மருத்தொடை செறிந்த கூந்தல் வள்ளிநா யகியுந் தானுஞ்
    செருத்தணி வரையில் வைகிச் சிலபகல் அமர்ந்தான் அன்றே. - 231



    2032 - தள்ளரும் விழைவின் மிக்க தணிகையின் நின்றும் ஓர்நாள்
    வள்ளியுந் தானு மாக மானமொன் றதனிற் புக்கு
    வௌ¢ளியங் கிரியின் பாங்கர் மேவிய கந்த வெற்பில்
    ஔ¢ளிணர்க் கடப்பந் தாரோன் உலகெலாம் வணங்கப் போனான். - 232



    2033 - கந்தவெற் பதனிற் சென்று படிகெழு மானம் நீங்கி
    அந்தமில் பூதர் போற்றும் அம்பொனா லயத்தின் ஏகி
    இந்திரன் மகடூஉ வாகும் ஏந்திழை இனிது வாழும்
    மந்திர மதனிற் புக்கான் வள்ளியுந் தானும் வள்ளல். - 233


    (228. உற்பலவரை - தணிகைமலை. இத்தணிகைமலையில்
    வாழ்வார் தீங்கினை ஒருபோதும் செய்யார் என்பார் செய்தாலும்
    என்ற எதிர்மறை உம்மைகொடுத்துக் கூறினார்.
    230. ஐவகை உருவு - சிவசாதாக்கியம், அமூர்த்தி சாதாக்கியம்,
    மூர்த்தி சாதாக்கியம், கர்த்திரு சாதாக்கியம், கன்ம சாதாக்கியம்
    என ஐந்து வடிவு. ஒன்று என்றது கன்ம சாதாக்கியமாகிய
    பீடலிங்க வடிவை. 232. மானம் - தேவவிமானம்.
    233. இந்திரன் மகடூஉ ஆகும் ஏந்திழை - தெய்வயானையம்மை.) -



    2034 - ஆரணந் தெரிதல் தேற்றா அறுமுகன் வரவு நோக்கி
    வாரண மடந்தை வந்து வந்தனை புரிய அன்னாள்
    பூரண முலையும் மார்பும் பொருந்துமா றெடுத்துப் புல்லித்
    தாரணி தன்னில் தீர்ந்த தனிமையின் துயரந் தீர்த்தான். - 234



    2035 - ஆங்கது காலை வள்ளி அமரர்கோன் அளித்த பாவை
    பூங்கழல் வணக்கஞ் செய்யப் பொருக்கென எடுத்துப் புல்லி
    ஈங்கொரு தமிய ளாகி இருந்திடு வேனுக் கின்றோர்
    பாங்கிவந் துற்ற வாறு நன்றெனப் பரிவு கூர்ந்தாள். - 235



    2036 - சூர்க்கடல் பருகும் வேலோன் துணைவியர் இருவ ரோடும்
    போக்கடல் கொண்ட சீயப் பொலன்மணி அணைமேற் சேர்ந்தான்
    பாற்கடல் அமளி தன்னில் பாவையர் புறத்து வைகக்
    கார்க்கடற் பவள வண்ணன் கருணையோ டமரு மாபோல். - 236



    2037 - செங்கனல் வடவை போலத் திரைக்கடல் பருகும் வேலோன்
    மங்கையர் இருவ ரோடு மடங்கலம் பீட மீதில்
    அங்கினி திருந்த காலை அரமகள் அவனை நோக்கி
    இங்கிவள் வரவு தன்னை இயம்புதி எந்தை யென்றாள். - 237



    2038 - வேறு
    கிள்ளை அன்னசொற் கிஞ்சுகச் செய்யவாய்
    வள்ளி தன்மையை வாரணத் தின்பிணாப்
    பிள்ளை கேட்பப் பெருந்தகை மேலையோன்
    உள்ள மாமகிழ் வால்இவை ஓதுவான். 238 - 238



    2039 - நீண்ட கோலத்து நேமியஞ் செல்வர்பால்
    ஈண்டை நீவிர் இருவருந் தோன்றினீர்
    ஆண்டு பன்னிரண் டாமள வெம்புயம்
    வேண்டி நின்று விழுத்தவம் ஆற்றினீர். - 239



    2040 - நோற்று நின்றிடு நுங்களை எய்தியாம்
    ஆற்ற வும்மகிழ்ந் தன்பொடு சேருதும்
    வீற்று வீற்று விசும்பினும் பாரினும்
    தோற்று வீரென்று சொற்றனந் தொல்லையில். - 240



    2041 - சொன்ன தோர்முறை தூக்கி இருவருள்
    முன்ன மேவிய நீமுகில் ஊர்தரு
    மன்னன் மாமக ளாகி வளர்ந்தனை
    அன்ன போதுனை அன்பொடு வேட்டனம். - 241


    (234. வாரண மடந்தை - தெய்வயானை.
    236. துணைவியர் - தெய்வயானையம்மை வள்ளியம்மை.
    பாவையர் - திருமகள், நிலமகள். திருமால் கருநிறத்தை ஒழித்துப்
    பவளவண்ணன் ஆனதைக் காஞ்சிப்புராணத்துட் காணலாம்.
    237. அரமகள் - தெய்வயானையம்மை. 238. கிஞ்சுகம் - முருக்கமலர்.
    239. நேமியஞ்செல்வன் - திருமால். வேண்டி - (தழுவ)விரும்பி.
    240. தொல்லையில் - முன்னாளில்.) -



    2042 - பிளவு கொண்ட பிறைநுதற் பேதைநின்
    இளைய ளாய்வரும் இங்கிவள் யாம்பகர்
    விளைவு நாடி வியன்தழன் மூழ்கியே
    வளவி தாந்தொல் வடிவினை நீக்கினாள். - 242



    2043 - பொள்ளெ னத்தன் புறவுடல் பொன்றலும்
    உள்ளி னுற்ற வுருவத் துடன்எழீஇ
    வள்ளி வெற்பின் மரம்பயில் சூழல்போய்த்
    தௌ¢ளி தில்தவஞ் செய்திருந் தாளரோ. - 243



    2044 - அன்ன சாரல் அதனில் சிவமுனி
    என்னு மாதவன் எல்லையில் காலமாய்
    மன்னி நோற்புழி மாயத்தின் நீரதாய்ப்
    பொன்னின் மானொன்று போந்துல வுற்றதே. - 244



    2045 - வந்து லாவும் மறிதனை மாதவன்
    புந்தி மாலொடு பொள்ளென நோக்கலும்
    அந்த வேலை யதுகருப் பங்கொள
    இந்த மாதக் கருவினுள் எய்தினாள். - 245



    2046 - வேறு
    மானிவள் தன்னை வயிற்றிடை தாங்கி
    ஆனதொர் வள்ளி அகழ்ந்த பயம்பில்
    தானருள் செய்து தணந்திட அங்கட்
    கானவன் மாதொடு கண்டனன் அன்றே. - 246



    2047 - அவ்விரு வோர்களும் ஆங்கிவள் தன்னைக்
    கைவகை யிற்கொடு காதலொ டேகி
    எவ்வமில் வள்ளி யெனப்பெயர் நல்கிச்
    செவ்விது போற்றினர் சீர்மக ளாக. - 247



    2048 - திருந்திய கானவர் சீர்மக ளாகி
    இருந்திடும் எல்லையில் யாமிவள் பாற்போய்ப்
    பொருந்தியும் வேட்கை புகன்றும் அகன்றும்
    வருந்தியும் வாழ்த்தியும் மாயைகள் செய்தேம். - 248



    2049 - அந்தமில் மாயைகள் ஆற்றிய தற்பின்
    முந்தை யுணர்ச்சியை முற்றுற நல்கித்
    தந்தை யுடன்தமர் தந்திட நென்னல்
    இந்த மடந்தையை யாமணஞ் செய்தேம். - 249



    2050 - அவ்விடை மாமண மாற்றி அகன்ற
    இவ்விவள் தன்னுடன் இம்மென ஏகித்
    தெய்வ வரைக்கணொர் சில்பகல் வைகி
    மைவிழி யாய்இவண் வந்தனம் என்றான். - 250



    2051 - என்றிவை வள்ளி இயற்கை அனைத்தும்
    வென்றிடு வேற்படை வீரன் இயம்ப
    வன்றிறல் வாரண மங்கை வினாவி
    நன்றென ஒன்று நவின்றிடு கின்றுழள். - 251


    (242. பிளவுகொண்ட பிறை - எண்ணாட்டிங்கள்.
    243. புறவுடல் - தூலவுடல். உள்ளின்உற்ற உருவம் - சூக்குமவுடல்.
    246. பயம்பில் - பள்ளத்தில். 249. தந்திடல் - தாரைவார்த் தளித்தல்.
    250. தெய்வவரை - திருத்தணிகைமலை.) -



    2052 - வேறு
    தொல்லையின் முராரி தன்பால் தோன்றிய இவளும் யானும்
    எல்லையில் காலம் நீங்கியிருந்தனம் இருந்திட் டேமை
    ஒல்லையில் இங்ஙன் கூட்டி யுடனுறு வித்த உன்றன்
    வல்லபந் தனக்கி யாஞ்செய் மாறுமற் றில்லை என்றாள். - 252



    2053 - மேதகும் எயினர் பாவை விண்ணுல குடைய நங்கை
    ஓதுசொல் வினவி மேனாள் உனக்கியான் தங்கை யாகும்
    ஈதொரு தன்மை யன்றி இம்மையும் இளைய ளானேன்
    ஆதலின் உய்ந்தேன் நின்னை அடைந்தனன் அளித்தி என்றாள். - 253



    2054 - வன்றிறல் குறவர் பாவை மற்றிது புகன்று தௌவை
    தன்றிருப் பதங்கள் தம்மைத் தாழ்தலும் எடுத்துப் புல்லி
    இன்றுனைத் துணையாப் பெற்றேன் எம்பிரான் அருளும் பெற்றேன்
    ஒன்றெனக் கரிய துண்டோ உளந்தனிற் சிறந்த தென்றாள். - 254



    2055 - இந்திரன் அருளும் மாதும் எயினர்தம் மாதும் இவ்வா
    றந்தரஞ் சிறிது மின்றி அன்புடன் அளவ ளாவிச்
    சிந்தையும் உயிருஞ் செய்யுஞ் செயற்கையுஞ் சிறப்பு மொன்றாக்
    கந்தமு மலரும் போலக் கலந்துவே றின்றி யுற்றார். - 255



    2056 - இங்கிவர் இருவர்தாமு மியாக்கையும் உயிரும் போலத்
    தங்களில் வேறின் றாகிச் சரவண தடத்தில் வந்த
    புங்கவன் தன்னைச் சேர்ந்து போற்றியே ஒழுக லுற்றார்
    கங்கையும் யமுனை தானுங் கனைகட லுடன்சேர்ந் தென்ன. - 256



    2057 - கற்றையங் கதிர்வெண் டிங்கள் இருந்துழிக் கனலிப் புத்தேள்
    உற்றிடு தன்மைத் தென்ன உம்பர்கோன் உதவு மானும்
    மற்றைவில் வேடர் மானும் வழிபடல் புரிந்து போற்ற
    வெற்றியந் தனிவேல் அண்ணல் வீற்றிருந் தருளி னானே. - 257



    2058 - கல்லகங் குடைந்த செவ்வேற் கந்தனோர் தருவ தாகி
    வல்லியர் கிரியை ஞான வல்லியின் கிளையாய்ச் சூழப்
    பல்லுயிர்க் கருளைப் பூத்துப் பவநெறி காய்த்திட் டன்பர்
    எல்லவர் தமக்கு முத்தி இருங்கனி உதவும் என்றும். -


    (252. செய்மாறு - செய்யும் பதில் உபகாரம்.
    254. தௌவை - தமக்கை. இங்குத் தெய்வயானையம்மை.
    255. அந்தரம் - பேதம். கலந்து - அளவளாவி.
    256. தெய்வயானையம்மைக்குக் கங்கையும், வள்ளியம்மைக்கு
    யமுனையும், முருகக் கடவுளுக்குக் கடலும் உவமையாகும்.
    257. கனலிப்புத்தேள் - அக்கினிதேவன்.
    258. கல்லகம் - கிரவுஞ்சமலை. கிரியை - கிரியாசத்தி.
    ஞானம் - ஞானசத்தி. பவநெறி - சனன மார்க்கம்.
    இங்கு ஞானசத்தி தெய்வயானையம்மை.
    கிரியா சத்தி வள்ளியம்மை என்க. பவநெறி - பிறவி வழி.) - 258



    2059 - பெண்ணொரு பாகங் கொண்ட பிஞ்ஞகன் வதனம் ஒன்றில்
    கண்ணொரு மூன்று வைகுங் காட்சிபோல் எயினர் மாதும்
    விண்ணுல குடைய மாதும் வியன்புடை தன்னின் மேவ
    அண்ணலங் குமரன் அன்னார்க் கருள்புரிந் திருந்தான் அங்கண். - 259



    2060 - சேவலுங் கொடிமான் தேருஞ் சிறைமணி மயிலுந் தொன்னாள்
    மேவருந் தகரும் வேலும் வேறுள படைகள் யாவும்
    மூவிரு முகத்து வள்ளல் மொழிந்திடு பணிகள் ஆற்றிக்
    கோவிலின் மருங்கு முன்னுங் குறுகிவீற் றிருந்த மன்னோ. - 260



    2061 - ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்
    கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்
    ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க
    மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீர் அடியார் எல்லாம். - 261



    2062 - புன்னெறி அதனிற் செல்லும் போக்கினை விலக்கி மேலாம்
    நன்னெறி ஒழுகச் செய்து நவையறு காட்சி நல்கி
    என்னையும் அடியன் ஆக்கி இருவினை நீக்கி யாண்ட
    பன்னிரு தடந்தோள் வள்ளல் பாதபங் கயங்கள் போற்றி. - 262



    2063 - வேறு
    வேல்சேர்ந்த செங்கைக் குமரன்வியன் காதை தன்னை
    மால்சேர்ந் துரைத்தேன் தமிழ்ப்பாவழு வுற்ற தேனும்
    நூல்சேர்ந்த சான்றீர் குணமேன்மை நுவன்று கொள்மின்
    பால்சேர்ந் ததனாற் புனலும்பய னாவ தன்றே. - 263



    2064 - பொய்யற்ற கீரன் முதலாம்புல வோர்பு கழ்ந்த
    ஐயற் கெனது சிறுசொல்லும் ஒப்பாகும் இப்பார்
    செய்யுற் றவன்மால் உமைபூசைகொள் தேவ தேவன்
    வையத்த வர்செய் வழிபாடு மகிழும் அன்றே. - 264



    2065 - என்னா யகன்விண் ணவர்நாயகன் யானை நாமம்
    மின்னா யகனான் மறைநாயகன் வேடர் நங்கை
    தன்னா யகன்வேல் தனிநாயகன் தன்பு ராணம்
    நன்னா யகமா மெனக்கொள்கஇஞ் ஞால மெல்லாம். - 265



    2066 - வற்றா அருள்சேர் குமரேசன்வண் காதை தன்னைச்
    சொற்றாரும் ஆராய்ந் திடுவாருந் துகளு றாமே
    கற்றாருங் கற்பான் முயல்வாருங் கசிந்து கேட்கல்
    உற்றாரும் வீடு நெறிப்பாலின் உறுவர் அன்றே. - 266



    2067 - பாராகி ஏனைப் பொருளாய் உயிர்ப்பன் மையாகிப்
    பேரா வுயிர்கட் குயிராய்ப் பிறவற் றுமாகி
    நேராகித் தோன்றல் இலாதாகி நின்றான் கழற்கே
    ஆராத காத லொடுபோற்றி அடைதும் அன்றே. - 267


    (259. பிஞ்சகன் - தலைக்கோலம் உடையவன்; சிவன்.
    260. தேர் - இந்திர ஞாலத்தேர். தகர் - ஆட்டுக்கடா.
    261. குக்குடம் - சேவல். அடியார் எல்லாம் - வீரவாகு தேவர்
    முதலிய அடியவர்கள் யாவரும்.
    262. புன்நெறி அதனில் - இழிந்த காமவெகுளி மயக்கமாதிகளைத்தரும்
    பிறமதச் சார்பினில். நன்னெறி - சைவ மார்க்கம்.
    காட்சி - சகள நிட்கள வடிவின் காட்சி.
    நல்கி - உள்ளும் புறமும் அளித்து.
    263. பாவழு - ஆனந்தம் முதலிய குற்றங்கள்.
    264. கீரன்முதலாம் பொய்யற்றபுலவோர் - நக்கீரர் முதலாகிய
    பொய்யடிமை இல்லாதசங்கப் புலவர்கள்.
    266. குமரேசன் வண்காதை - குமாரக் கடவுளின் சரிதம்.
    காதை - நடந்தவைகளையே கூறுவது.
    267. நின்றான் கழற்கே - நிட்கள வடிவாக நின்ற இறைவன்
    திருவடிகளுக்கே. நிட்கள சிவமே அடியவர்களை ஆட்கொள்ளச்
    சகள சிவமாக எழுந்தருளுவர் என்பது சித்தாந்தம்.) - 268


    ஆகத் திருவிருத்தம் - 2067

    தக்ஷகாண்டம் முற்றுப் பெற்றது
    ஆகக் காண்டம் ஆறுக்குந் திருவிருத்தம் - 10345

    கந்தபுராணம் முற்றுப் பெற்றது
    திருச்சிற்றம்பலம்
    --------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை III