Kanta purāṇam I


சைவ சமய நூல்கள்

Back

கந்த புராணம்
கச்சியப்ப சிவாச்சாரியார்



கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்


பாயிரம்
1. விநாயகர் காப்பு 1-5
2. கடவுள் வாழ்த்து 6- 30
3. அவையடக்கம் 31-59
4. ஆற்றுப்படலம் 51-89
5. திருநாட்டுப்படலம் 90 - 146
6. திருநகரப் படலம் 147- 270
7. பாயிரப்படலம் 271 -352


உற்பத்திக் காண்டம்
1. திருக்கைலாசப் படலம் 353 - 374
2. பார்ப்பதிப் படலம் 375 - 410
3. மேருப்படலம் 411 - 491
4. காமதகனப் படலம் 492 - 601
5. மோன நீங்கு படலம் 602 - 636
6. தவங்காண் படலம் 637 - 669
7. மணம் பேசு படலம் 670 - 689
8. வரைபுனை படலம் 690 - 725

1.பாயிரம்


செந்திலாண்டவன் துணை / திருச்சிற்றம்பலம்

1. விநாயகர் காப்பு (1-5)




1 - திகட சக்கரச் செம்முக மைந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர வின்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம். - 1


2 - உச்சியின் மகுட மின்ன வொளிர்தர நூதலி னோடை
வச்சிர மருப்பி னொற்றை மணிகொள் கிம்புரி வயங்க
மெய்ச்செவிக் கவரி தூங்க வேழமா முகங்கொண் டுற்ற
கச்சியின் விகட சக்ர கணபதிக் கன்பு செய்வாம். - 2

சுப்பிரமணியர் காப்பு




3 - மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணை போற்றி
ஏவருந் துதிக்க நின்ற விராறுதோள் போற்றி காஞ்சி
மாவடி வைகுஞ் செவ்வேள் மலரடி போற்றி யன்னான்
சேவலு மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி. - 3

நூற் பயன்




4 இந்திர ராகிப் பார்மே லின்பமுற் றினிது மேவிச்
சிந்தையி னினைந்த முற்றிச் சிவகதி யதனிற் சேர்வர்
அந்தமி லவுணர் தங்க ளடல்கெட முனிந்த செவ்வேற்
கந்தவேள் புராணந் தன்னைக் காதலித் தோது வோரே. - 4

வாழ்த்து




5 வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம். - 5

ஆகத் திருவிருத்தம் - 5

2. கடவுள் வாழ்த்து (6- 30)

சிவபெருமான்




6 திருவந்த தொல்லைப் புவனத்தொடு தேவர் போற்றிப்
பெருவந் தனைசெய் தறிதற்கரும் பெற்றி யெய்தி
அருவந் தனையு முருவத்தையு மன்றி நின்றான்
ஒருவன் றனது பதந்தன்னை யுளத்துள் வைப்பாம். - 1


7 - ஊனாகி யூனு ளுயிராயுயிர் தோறு மாகி
வானகி யான பொருளாய்மதி யாகி வெய்யோன்
தானாகி யாண்பெண் ணுருவாகிச் சராச ரங்கள்
ஆனான் சிவன்மற் றவனீள்கழற் கன்பு செய்வாம். - 2

வேறு




8 - பிறப்பது மிறப்பதும் பெயருஞ் செய்கையும்
மறப்பது நினைப்பதும் வடிவம் யாவையுந்
துறப்பது மிமையும் பிறவுஞ் சூழ்கலாச்
சிறப்புடை யரனடி சென்னி சேர்த்துவம். - 3


9 - பூமலர் மிசைவரு புனித னாதியோர்
தாமுணர் வரியதோர் தலைமை யெய்தியே
மாமறை முதற்கொரு வடிவ மாகியோன்
காமரு செய்யபூங் கழல்கள் போற்றுவாம். - 4


10 - பங்கயன் முகுந்தனாம் பரமென் றுன்னியே
தங்களி லிருவருஞ் சமர்செய் துற்றுழி
அங்கவர் வெருவர வங்கி யாயெழு
புங்கவன் மலரடி போற்றி செய்குவாம். - 5


11 - காண்பவன் முதலிய திறமுங் காட்டுவான்
மாண்புடை யோனுமாய் வலிகொள் வான்றொடர்
பூண்பதின் றாய்நயம் புணர்க்கும் புங்கவன்
சேண்பொலி திருநடச் செயலை யேத்துவாம். - 6

சிவசத்தி




12 - செறிதரு முயிர்தொறுந் திகழ்ந்து மன்னிய
மறுவறு மரனிட மரபின் மேவியே
அறுவகை நெறிகளும் பிறவு மாக்கிய
இறைவிதன் மலரடி யிறைஞ்சி யேத்துவாம். - 7

விநாயகக் கடவுள்




13 - மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலா மௌ¤தின் முற்றுறக்
கண்ணுத லுடையதோர் களிற்று மாமுகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம். - 8

வைரவக் கடவுள்




14 - பரமனை மதித்திடாப் பங்க யாசனன்
ஒருதலை கிள்ளியே யொழிந்த வானவர்
குருதியு மகந்தையுங் கொண்டு தண்டமுன்
புரிதரு வடுகனைப் போற்றி செய்குவாம். - 9


15 - வெஞ்சினப் பரியழன் மீது போர்த்திடும்
அஞ்சனப் புகையென வால மாமெனச்
செஞ்சுடர்ப் படிவமேற் செறித்த மாமணிக்
கஞ்சுகக் கடவுள்பொற் கழல்க ளேத்துவாம். - 10

வீரபத்திரக்கடவுள்




16 - அடைந்தவி யுண்டிடு மமரர் யாவரும்
முடிந்திட வெருவியே முனிவர் வேதியர்
உடைந்திட மாமக மொடியத் தக்கனைத்
தடிந்திடு சேவகன் சரணம் போற்றுவாம். - 11

சுப்பிரமணியக் கடவுள்




17 - இருப்பரங் குறைத்திடு மெ·க வேலுடைப்
பொருப்பரங் குணர்வுறப் புதல்வி தன்மிசை
விருப்பரங் கமரிடை விளங்கக் காட்டிய
திருப்பரங் குன்றமர் சேயைப் போற்றுவாம். - 12


18 - சூரலை வாயிடைத் தொலைத்து மார்புகீன்
டீரலை வாயிடு மெ·க மேந்தியே
வேரலை வாய்தரு வௌ¢ளி வெற்பொரீஇச்
சீரலை வாய்வரு சேயைப் போற்றுவாம். - 13


19 - காவினன் குடிலுறு காமர் பொன்னகர்
மேவினன் கடிவர விளியச் சூர்முதல்
பூவினன் குடிலையம் பொருட்கு மாலுற
ஆவினன் குடிவரு மமலற் போற்றுவாம். - 14


20 - நீரகத் தேதனை நினையு மன்பினோர்
பேரகத் தலமரும் பிறவி நீத்திடுந்
தாரகத் துருவமாந் தலைமை யெய்திய
ஏரகத் தறுமுக னடிக ளேத்துவாம். - 15


21 - ஒன்றுதொ றாடலை யொருவி யாவிமெய்
துன்றுதொ றாடலைத் தொடங்கி ஐவகை
மன்றுதொ றாடிய வள்ளல் காமுறக்
குன்றுதொ றாடிய குமரற் போற்றுவாம். - 16


22 - எழமுதி ரைப்புனத் திறைவி முன்புதன்
கிழமுதி ரிளநலங் கிடைப் முன்னவன்
மழமுதிர் களிறென வருதல் வேண்டிய
பழமுதிர் சோலையம் பகவற் போற்றுவாம். - 17


23 - ஈறுசேர் பொழுதினு மிறுதி யின்றியே
மாறிலா திருந்திடும் வளங்கொள் காஞ்சியிற்
கூறுசீர் புனைதரு குமர கோட்டம்வாழ்
ஆறுமா முகப்பிரா னடிகள் போற்றுவாம். - 18

திருநந்திதேவர்




24 - ஐயிரு புராணநூ லமலற் கோதியுஞ்
செய்யபன் மறைகளுந் தெரிந்து மாயையான்
மெய்யறு சூள்புகல் வியாத னீட்டிய
கையடு நந்திதன் கழல்கள் போற்றுவாம். - 19

திருஞானசம்பந்தமூர்த்திசுவாமிகள்




25 - பண்டைவல் வினையினாற் பாயு டுத்துழல்
குண்டரை வென்றுமுன் கூடல் வைகியே
வெண்டிரு நீற்றொளி விளங்கச் செய்திடு
தண்டமிழ் விரகன்மெய்த் தாள்கள் போற்றுவாம். - 20

திருநாவுக்கரசு சுவாமிகள்




26 - பொய்யுரை நூல்சில புகலுந் தீயமண்
கையர்கள் பிணித்துமுன் கடல கத்திடு
வெய்யகற் றோணியாய் மிதப்ப மேற்படு
துய்யசொல் லரசர்தா டொழது போற்றுவாம். - 21

சுந்தரமூர்த்தி சுவாமிகள்




27 - வறந்திடு ª£ய்கைமுன் னிரம்ப மற்றவண்
உறைந்திடு முதலைவந் துதிப்ப வன்னதால்
இறந்திடு மகன்வளர்ந் தெய்தப் பாடலொன்
றறைந்திடு சுந்தர னடிகள் போற்றுவாம். - 22

மாணிக்கவாசக சுவாமிகள்




28 - கந்தமொ டுயிர்படுங் கணபங் கம்மெனச்
சிந்தைகொள் சாக்கியர் தியங்க மூகராய்
முந்தொரு மூகையை மொழிவித் தெந்தைபால்
வந்திடு மடிகளை வணக்கஞ் செய்குவாம். - 23

திருத்தொண்டர்கள்




29 - அண்டரு நான்முகத் தயனும் யாவருங்
கண்டிட வரியதோர் காட்சிக் கண்ணவாய்
எண்டகு சிவனடி யெய்தி வாழ்திருத்
தொண்டர்தம் பதமலர் தொழது போற்றுவாம். - 24

சரசுவதி




30 - தாவறு முலகெலாந் தந்த நான்முகத்
தேவுதன் றுணைவியாய்ச் செறிந்த பல்லுயிர்
நாவுதொ றிருந்திடு நலங்கொள் வாணிதன்
பூவடி முடிமிசைப் புனைந்து போற்றுவாம். - 25

ஆகத் திருவிருத்தம் - 30

3. அவையடக்கம் (31-59)




31 - இறைநில மெழுதுமு னிளைய பாலகன்
முறைவரை வேனென முயல்வ தொக்குமால்
அறுமுக முடையவோ ரமலன் மாக்கதை
சிறியதோ ரறிவினேன் செப்ப நின்றதே. - 1

வேறு




32 - ஆன சொற்றமிழ் வல்ல வறிஞர்முன்
யானு மிக்கதை கூறுதற் கெண்ணுதல்
வான கத்தெழும் வான்கதி ரோன்புடை
மீனி மைப்ப விரும்பிய போலுமால். - 2


33 - முன்சொல் கின்ற முனிவட நூறெரீஇத்
தென்சொ லாற்சிறி யேனுரை செய்தலான்
மென்சொ லேனும் வௌ¤ற்றுரை யேனும்வீண்
புன்சொ லேனு மிகழார் புலமையோர். - 3


34 - சிந்து மென்பு சிரம்பிறை தாங்கினோன்
மைந்த னாதலின் மற்றவன் றானுமென்
சந்த மிலுரை யுந்தரிப் பானெனாக்
கந்த னுக்குரைத் தெனிக் கதையினை. - 4


35 - வெற்றெ னத்தொடுத் தீர்த்து வௌ¤ற்றுரை
முற்று மாக மொழிந்தவென் பாடலிற்
குற்ற நாடினர் கூறுப தொல்லைநூல்
கற்று ணர்ந்த கலைஞரல் லோர்களே. - 5


36 - குற்ற மேதெரி வார்குறு மாமுனி
சொற்ற பாவினு மோர்குறை சொல்வரால்
கற்றி லாவென் கவிவழு வாயினும்
முன்று நாடிவல் லோருய்த் துரைக்கவே. - 6

வேறு




37 - குறைபல மாமதி கொளினு மன்னதால்
உறுபய னோக்கியே யுலகம் போற்றல்போற்
சிறியவென் வௌ¤ற்றுரை சிறப்பின் றாயினும்
அறுமுகன் கதையிதென் றறிஞர் கொள்வரே. - 7


38 - நாதனா ரருள்பெறு நந்தி தந்திடக்
கேரதிலா துணர்சனற் குமரன் கூறிட
வாதரா யணமுனி வகுப்ப வோர்ந்துணர்
சூதனோ தியதுமூ வாறு தொல்கதை. - 8


39 - சொல்லிய புராணமாந் தொகையு ளீசனை
அல்லவர் காதைக ளனையர் செய்கையுள்
நல்லன விரித்திடு நவைகண் மாற்றிடும்
இல்லது முகமனா லெடுத்துக் கூறுமே. - 9


40 - பிறையணி சடைமுடிப் பிரான்றன் காதைகள்
இறையுமோர் மறுவில யாவு மேன்மையே
மறைபல சான்றுள வாய்மை யேயவை
அறிஞர்க ணாடியே யவறறைக் காண்கவே. - 10


41 - புவியின ரேனையர் புராணந் தேரினுஞ்
சிவகதை யுணர்கில ரென்னிற் றீருமோ
அவர்மய லரசனை யடைந்தி டாரெனில்
எவரெவ ராக்கமு மினிது போலுமால். - 11


42 - மங்கையோர் பங்குடை வான நாயகற்
கிங்குள பலபுரா ணத்துள் எ·கவேற்
புங்கவன் சீர்புகழ் புராண மொன்றுள
தங்கதி லொருசில வடைவிற் கூறுகேன். - 12


43 - புதுமயி லூர்பரன் புராணத் துற்றிடாக்
கதையிலை யன்னது கணித மின்றரோ
அதுமுழு தறையவெற் கமைதற் பாலதோ
துதியுறு புலமைசேர் சூதற் கல்லதே. - 13


44 - காந்தமா கியபெருங் கடலும் கந்தவேள்
போந்திடு நிமித்தமும் புனிதன் கண்ணிடை
ஏந்தல்வந் தவுணர்கள் யாரு மல்வழி
மாய்ந்திட வடர்த்தது மற்றுங் கூறுகேன். - 14

வேறு




45 - ஏதி லாக்கற்ப மெண்ணில சென்றன
ஆத லாலிக் கதையு மனந்தமாம்
பேத மாகுமப் பேதத்தி னுள்விரித்
தோது காந்தத்தி னுண்மையைக் கூறுகேன். - 15


46 - முன்பு சூதன் மொழிவட நூற்கதை
பின்பி யான்றமிழ்ப் பெற்றியிற் செப்புகேன்
என்ப யன்னெனி லின்றமிழ்த் தேசிகர்
நன்பு லத்தவை காட்டு நயப்பினால்*.(பாடபேதம்*-நயப்பரோ) - 16


47 - தோற்ற மீறின்றித் தோற்யி சூர்ப்பகைக்
கேற்ற காதைக் கெவன்பெய ரென்றிடின்
ஆற்று மைம்புலத் தாறுசென் மேலையோர்
போற்று கந்த புராணம் தென்பதே. - 17


48 - பகுதி கொண்டிடு பாக்களி னத்திலுண்
மிகுதி கொண்ட விருத்தத் தொகைகளால்
தொகுதி கொண்டிடு சூர்கிளை சாய்த்தவன்
தகுதி கொண்ட தனிக்கதை சாற்றுகேன். - 19


49 - செந்த மிழ்க்கு வரம்பெனச் செப்பிய
முந்து காஞ்சியின் முற்றுணர் மேலவர்
கந்த னெந்தை கதையினை நூன்முறை
தந்தி டென்னத் தமிய னியம்புகேன். - 19


50 - வெம்பு சூர்முதல் வீட்டிய வேற்படை
நம்பி காதையை நற்றமிழ்ப் பாடலால்
உம்பர் போற்ற வுமையுடன் மேவிய
கம்பர் காஞ்சியிற் கட்டுரைத் தேனியான். - 20


ஆகத் திருவிருத்தம் - 50
- - -

4. ஆற்றுப்படலம் (51-89 )




51 - செக்கரஞ் சடைமுடிச் சிவனுக் கன்பராய்த்
தக்கவ ரறிஞர்க டவத்தர் செல்வராய்த்
தொக்கவர் யாரும்வாழ் தொண்டை நாட்டினின்
மிக்கதோ ரணியிய லதுவி ளம்புகேன். - 1


52 - சந்தர மாயவன் றுயிலு மாழிபோல்
இந்திர னூர்முகி லியாவு மேகியே
அந்தமில் கடற்புன லருந்தி யார்த்தெழீஇ
வந்தன வுவரியின் வண்ண மென்னவே. - 2


53 - பார்த்தென துலகடும் பரிதி யென்னொடும்
போர்த்தொழில் புரிகெனப் பொங்கு சீற்றத்தால்
வேர்த்தெனப் பனித்துவௌ¢ ளெயிறு விள்ளநக்
கார்த்தென வெதடித் தசனி கான்றவே. - 3


54 - சுந்தர வயிரவத் தோன்றன் மீமிசைக்
கந்தடு களிற்றுரி கவைஇய காட்சிபோல்
முந்துறு சூன்முகில் முழுது முற்றுற
நந்தியம் பெருவரை மீது நண்ணிய. - 4

வேறு




55 - வாரை கான்றநித் திலமென வாலிகண் மயங்கச்
சீரை கான்றிடு தந்திரி நரம்பெனச் செறிந்த
தாரை கான்றவோ ரிருதுவி னெல்லையுந் தண்பால்
வீரை கான்றிடு தன்மைய தாமென மேகம். - 5


56 - பூட்டு கார்முகந் தன்னொடுந் தோன்றிய புயல்வாய்
ஊட்டு தண்புன னந்தியங் கிரிமிசை யுகுத்தல்
வேட்டு வக்குலத் திண்ணனார் மஞ்சனம் விமலற்
காட்டு கின்றதோர் தனிச்செயல் போன்றுள தன்றே. - 6


57 - கல்லென் பேரிசைப் புனன்மழை பொழிதலாற் கானத்
தொல்லும் பேரழல் யாவையு மிமைப்பினி லொளித்த
வெல்லுந் தீஞ்சல மருவுமிக் காருக்கு வியன்பார்
செல்லுங் காலையி லங்கண்வீற் றிருப்பரோ தீயோர். - 7


58 - தேக்கு தெண்டிரைப் புணரிநீர் வெம்மையைச் சிந்தி
ஆக்கி வாலொளி யுலகில்விட் டெகலால் அடைந்தோர்
நீ¦க்க ரும்வினை மாற்றிநன் னெறியிடைச் செலுத்திப்
போக்கின் மேயின் தேசிகர்ப் பொருவின புயல்கள். - 8


59 - கழிந்த பற்றுடை வசிட்டன திருக்கையாக் கவிஞர்
மொழிந்த நந்தியம் பெருவரை மொய்த்தசூல் முகில்கள்
பொழிந்த சீதநீர் பொற்புறு சாடியிற் பொங்கி
வழிந்த பாலெனத் திசைதொறு மிழிந்தன மன்னோ. - 9


60 - சீல மேதகு பகரதன் வேண்டலுஞ் சிவன்றன்
கோல வார்சடைக் கங்கையம் புனலினைக் குன்றின்
மேலை நாள்விட வந்தென நந்திவீழ் விரிநீர்
பாலி யாறெனும் பெயர்கொடு நடந்தது படிமேல். - 10


61 - வாலி தாகிய குணத்தினன் வசிட்டனென் றுரைக்குஞ்
சீல மாமுனி படைத்ததோர் தேனுவின் றீம்பால்
சால நீடியே தோல்லைநாட் படர்ந்திடு தன்மைப்
பாலி மாநதிப் பெருமையான் பகர்வதற் கௌ¤தோ. - 11


62 - எய்யும் வெஞ்சிலைப் புளிஞரை எயிற்றியர் தொகையைக்
கைய ரிக்கொடு வாரியே சிறுகுடி கலக்கித்
துய்ய சந்தகில் பறித்துடன் போந்தது தொன்னாள்
வெய்ய சூப்படை வான்சிறை கவர்ந்துமீண் டதுபோல். - 12


63 - காக பந்தரிற் கருமுகிற் காளிமங் கஞலும்
மாக நீள்கரி யாவையுங் குழுவொடும் வாரிப்
போகன் மேயின மேற்றிசைப் புணரியுண் டமையா
மேக ராசிகள் குணகடல் மீதுசெல் வனபோல். - 13


64 - குவட்டு மால்கரிக் குருகுதே ரரிபுலிக் குவையுண்
டுவட்டி யுந்திடு திரைப்புனல் மதூகநல் லுழிஞ்சில்
கவட்டி னோமைசாய்த் தாறலை கள்வரூர் கலக்கித்
தெவிட்டி வந்தது பாலையுட் கொண்டிடு செருக்கால். - 14


65 - காலை வெம்பகல் கதிரவன் குடதிசைக் கரக்கும்
மாலை யாமம்வை கறையெலாஞ் செந்தழல் வடிவாய்
வேலை யும்பரு கியவெழும் வெம்மைபோய் விளிந்து
பாலை காண்கிலா வாரியின் பெருமையார் பகர்வார். - 15


66 - குல்லை மாலதி கொன்றைகா யாமலர்க் குருந்து
முல்லை சாடியே யானிரை முழுவது மலைத்து
மெல்ல மற்றவை நீந்தலுங் கரைக்கண்விட் டுளதால்
தொல்லை மாநதி யான்வழித் தோன்றிய தொடர்பால். - 16


67 - சுளையு டைப்பல வாசினி பூகமாந் துடவை
உளைம லர்ச்சினை மருதமோ டொழிந்தன பிறவுங்
களைத லுற்றுமாட் டெறிந்தது கண்ணகன் குடிஞை
அளவின் மிக்குறு பாணிபெற் றதற்கவை யரிதோ. - 17


68 - இலைவி ரித்துவெண் சோறுகால் கைதையு மெழுதுங்
கலைவி ரித்திடு பெண்ணையுங் களைந்திடுங் களைபோய்
அலைவி ரித்திடு கடல்புக வொழுகுமா றனந்தன்
தலைவி ரித்துழி யுடனௌ¤த் தன்னதோர் தகைத்தால். - 18


69 - கொங்கு லாமலர்க் கொன்றைகூ விளைகுர வுழிஞை
பொங்கு மாசுணந் தாதகி பாடலம் புன்னை
துங்க மார்திருத் தலைமசைக் கொண்டுறுந் தொடர்பால்
எங்க ணாயகன் றன்னையு மொத்ததவ் விருநீர். - 19


70 - கொலைகொள் வேன்மற வீரர்த மிருக்கையிற் குறுகாச்
சிலையும் வாளடு தண்டமுந் திகிரிவான் படையும்
நிலவு சங்கமுங் கொண்டுசென் றடல்புரி நீரால்
உலக மேழையு முற்பக லயின்றமா லொக்கும். - 20


71 - தேன்கு லாவிய மலர்மிசைப் பொலிதரு செயலால்
நான்க வாமுகந் தொறுமறை யிசையோடு நணுகிக்
கான்கு லாவிய கலைமரை மான்றிகழ் கவினால்
வான்கு லாமுல களிப்பவ னிகர்க்குமால் வாரி. - 21


72 - மீது போந்திரி சங்கைவிண் ணிடையின்மீ னோடும்
போத லாயுற வீசலாற் சலமிகும் புலனால்
தீதின் மாக்களைச் செறுத்தலா லளித்திடுஞ் செயலாற்
காதி காதல னிகர்க்குமாற் கன்னிமா நீத்தம். - 22


73 - தெழித்த மால்கரி யினங்கட மெயிற்றினாற் சிதையக்
கிழித்த பேரிறால் சொரிந்ததேன் கிரியுள வெல்லாங்
கொழித்து வந்துற வணைதரும் பாலியின் கொள்கை
கழித்த நீர்க்கங்கை யமுனையைக் கலந்தெனத் தோன்றும். - 23


74 - சங்க மார்த்திடத் திரையெழ நதியுறுத் தகைமை
அங்கம் வெம்பினை பனிக்கதி ரல்லைநீ யழலோய்
இங்கு வாதிளைத் தேகுதி யெனக்கர மெடுத்தே
பொங்கும் வாய்விடா விரவியை விளிப்பது போலும். - 24


75 - வேத மேமுதல் யாவையு முணர்கினு மேலாம்
ஆதி வானவன் கறைமிடற் றிறையென வறியாப்
பேதை மாக்கட முணர்வென வலைந்து பேர்கின்ற
சீத நீரெலாந் தௌ¤தலின் றாயது சிறிதும். - 25


76 - செம்பொன் மால்வரை யல்லன கிரிகளுந் திசையும்
உம்பர் வானமுந் தரணியுந் துளங்கவந் துறலால்
எம்பி ரான்முனம் வருகென நதிகளோ டெழுந்த
கம்பை மாநதி யொத்தது கரைபொரு பாலி. - 26


77 - உதிரு கின்றசிற் றுண்டிகொண் டொலிபுனற் சடைமேல்
மதுரை நாயகன் மண்சுமந் திட்டமா நதியின்
முதிரு முத்தமிழ் விரகன தேடென மொய்ம்மீன்
எதிர்பு குந்திடப் போவது பாலியா மியாறு. - 27

வேறு




78 - மாசறத் துளங்கு துப்பு மரகதத திடைவந் தென்னப்
பாசடை நடுவட் பூத்த பங்கயத் தடாகம் யாவுந்
தேசுடைத் தரங்க நீத்தச் செலவினாற் சிதைந்த மன்னோ
பேசிடிற் சிறுமை யெல்லாம் பெருமையா லடங்கு மன்றோ. - 28


79 - வளவயன் மருத வைப்பின் வாவியங் கமலம் யாவுங்
கிளையொடும் பறித்து வா£க் கேழுறப் பொலிந்த தோற்றம்
விளைதரு பகையிற் றோலா வெவ்வழற் சிறுமை நோக்கிக்
களைதலைப் புரிந்து பற்றிப் பெயர்ந்தெனக் காட்டிற் தன்றே. - 29


80 - திரைகட னீத்தரங் கொண்மூ வினத்தொடு சேண்போய் நோக்கித்
தரையிடை யிழிந்து சென்று தன்பொருள் கொடுபோந் தென்னப்
பரதவ ரளவர் வாரிப் படுத்தமீ னுப்பின் குப்பை
இருபுடை யலைத்து வௌவி யேகிய தெறிநீர்ப் பாலி. - 30


81 - பாரிடை யினைய பண்பிற் படர்ந்திடு பாலி யந்தத்
தாருயி ரனைத்துந் தத்த மருவினைக் கமைத்த நீராற்
சேருறு கதிக ளென்ன* மரபினிற் றிறமே யென்னத்
தாருவின் கிளைக ளென்னத் தனித்தனி பிரிந்த தன்றே. - 31

( * சர்வ சங்கார காலத்தில் எல்லா வுயிர்களும் ஒடுங்குங்கால்,
தத்தம் வினைக்கு அமைந்த கதிகளை அடையும் என்பது நூற்றுணிபு )



82 - கால்கிளர் கின்ற நீத்தங் கவிரிதழ்க் கலசக் கொங்கைச்
சேல்கிளர் கரிய வுண்கட் டிருநுதல் மிழற்றுந் தீஞ்சொல்
மேல்கிளர் பரவை யல்குன் மெல்லிய லறன்மென் கூந்தல்
மால்கிளர் கணிகை மாதர் மனமெனப் போயிற் றாமால். - 32


83 - பாம்பளை புகுவ தேபோற் பாய்தரு பரவைத் தெண்ணீர்
தூம்பிடை யணுகு மாற்றாற் சொன்முறை தடைசெய் வோரில்
தாம்புடை பெயரா வண்ணந் தலைத்தலை தள்ளு மள்ளர்
ஏம்பலோ டார்க்கு மோதை யுலகெலா மிறுக்கு மாதோ. - 33


84 - பணையொலி யிரலை யோதை பம்பையின் முழக்க மங்கட்
கிணையொலி மள்ள ரார்ப்புக் கேழ்கிளர் தரங்க நன்னீர்
அணையொலி யவற்றை வானத் தார்ப்பொலிக் கவனி தானும்
இணையொலி காட்டிற் றோவென் றெண்ணுவார் விண்ணுளோரும். - 34


85 - இயல்புகுங் களிநல் யானை யினந்தெரிந் தெய்து மாபோல்
கயல்புகுந் துலவுஞ் சின்னீர்த் தடமபுகுங் காமர் காவின்
அயல்புகுங் கோட்ட கத்தி னகம்புகு மார்வத் தொடி
வயல்புகுங் களிப்பு நீங்கா மாக்களின் மயங்கு மாதோ. - 35


86 - எங்கணு நிறைந்து வேறோ ரிடம்பிறி தின்மை யாகச்
சங்கமா யீண்டு மள்ளர் தாங்குபல் லியமு மார்ப்பப்
பொங்கிய நகரந் தோறும் புறமெலாம் வளைந்த நீத்தம்
அங்கண்மா ஞாலஞ் சூழு மளககரை நிகர்த்த தாமே. - 36


87 - மாறடு மள்ள ருய்ப்ப மருதத்தி னிறைந்து விஞ்சி
ஏறிய நார மீட்டு மிருங்கட னோக்கிச் சென்ற
வேறுகொள் புலனை வென்றோர்* மேலைநன் னெறியுய்த் தாலுந்
தேறிய வுணர்வி லாதோர் செல்வுழிச் செல்வ ரன்றே. - 37

( * புலனை வெல்லுதல் - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும்
ஐம்புலன்களின் வழியே மனத்தைச் செலுத்தாமல்அடக்கித் தன்
வசப்படுத்தல்.)



81 - வாளெனச் சிலைய தென்ன வால்வளை யென்னத் தெய்வக்
கோளெனப் பணிக ளென்னக் குலமணி குயிற்றிச் செய்த
மீளிவெஞ் சரங்க ளென்ன வேலென மிடைந்து சுற்று
நாளெனப் பிறழு மீன்க ணடவின நார மெங்கும். - 38


89 - மாண்டகு பொய்கை தோறும் வயறொறு மற்று மெல்லாம்
வேண்டிய வளவைத் தன்றி மிகுபுனல் விலக்கு கின்ற
ஆண்டகை மள்ளர் தம்பா லமைந்திடுங் காலை யெஞ்சி
ஈண்டிய வெறுக்கை வீசும் இடைப்படு வள்ள லொத்தார். - 39

ஆகத் திருவிருத்தம் - 89
- - -

5. திருநாட்டுப்படலம் (90 - 146)




90 - அவ்வியல் பெற்றிடு மாற்றன் மள்ளர்கண்
மைவரு கடலுடை மங்கை தன்னிடை
மெய்வளங் கொள்வதை வேண்டி யந்நிலச்
செய்விக ணாடியே யினைய செய்குவார். - 1


91 - சேட்டிளந் திமிலுடைச் செங்க ணேற்றொடுங்
கோட்டுடைப் பகட்டினம் விரவிக் கோன்முறை
காட்டினர் நிரைபட வுழுப காசினி
பூட்டுறு பொலன்மணி யாரம் போலவே. - 2


92 - காற்றினு மனத்தினுங் கடுமை சான்றன
கோற்றொழில் வினைஞர்தங் குறிப்பிற் செல்லுவ
ஏற்றினஞ் சேறலு மிரிந்த சேலினம்
பாற்றின மருளவிண் படர்ந்து பாயுமால். - 3


93 - சால்வளை தரவுழும் வயலிற் றங்கிய
வால்வளை யினம்வெரீஇ யலவன் மாப்பெடைச்
சூல்வளை புகுவதங் கறிஞர் சூழ்விலைக்
கோல்வளை மகளிர்பாற் கூட்ட மொத்ததே. - 4


94 - உலத்தொடு முறழ்புயத் துழவர் பொன்விளை
புலத்தினும் வியத்தகு வயலிற் போக்கிய
வலத்திடைப் பிறழ்மணி வேள்வி யாற்றிடும்
நிலத்திடைப் பிறந்தமின் னிகர்க்கும் நீர்மைய. - 5


95 - நாறுசெய் குநர்சிலர் நார நீர்வயல்
ஊறுசெய் குநர்சில ரொத்த பான்மையிற்
சேறுசெய் குநர்சிலர் வித்திச் செல்லுநீர்க்
காறுசெய் குநர்சில ரளப்பின் மள்ளரே. - 6


96 - குச்செனப் பரிமிசைக் குலாய கொய்யுளை
வைச்செனத் தளிர்த்தெழு நாற்றின் மாமுடி
அச்செனப் பதித்தனர் கடைஞ ராவியா
நச்சின மகளிரை நினைந்து நைந்துளார். - 7


97 - வாக்குறு தேறலை வள்ள மீமிசைத்
தேக்கின ருழவர்தந் தெரிவை மாதரார்
நோக்குறு மாடியி னுனித்து நோக்கினர்
மேக்குறு காதலின் மிசைதன் மேயினார். - 8


98 - வாடுகின் றார்சிலர் மயங்கி நெஞ்சொடு
மூடுகின் றார்சில ருயிர்க்கின் றார்சிலர்
பாடுகின் றார்சிலர் பணிகின் றார்சிலர்
ஆடுகின் றார்சிலர் நறவ மார்ந்துளார். - 9


99 - அந்தரப் புள்ளடு மளிக டம்மொடும்
வந்தடுத் தவரொடு மயக்கு தேறலை
இந்திரத் தெய்வத மிறைஞ்சி வாமமாந்
தந்திரக் கிளைஞர்போற் றாமு மேயினார். - 10


100 - விள்ளுறு நாணினர் விரகத் தீயினர்
உள்ளுறு முயிர்ப்பின ருலையு நெஞ்சினர்
தள்ளுறு தம்முணர் வின்றிச் சாம்பினார்
கள்ளினு முளதுகொல் கருத்த ழிப்பதே. - 11


101 - பளிக்கறை யன்னதோர் படுகர்ப் பாங்கினுந்
தளிர்ப்புறு செறுவினுந் தவறுற் றேகுவார்
தௌ¤ப்பவ ரின்மையி னெறியிற் சென்றிலர்
களிப்பவர் தமக்குமோர் கதியுண் டாகுமோ. - 12


102 - இன்னன பற்பல வியற்றி யீண்டினர்
உன்னருந் தொல்லையி லுணர்வு வந்துழிக்
கன்னெடுந் திரள்புயக் கணவ ரேவலில்
துன்னின ரவரோடுந் துவன்றிச் சூழ்ந்துளார். - 13


103 - மள்ளர்தம் வினைபுரி மழலைத் தீஞ்சொலார்
கள்ளுறு புதுமணங் கமழும் வாலிதழ்
உள்ளுறு நறுவிரை யுயிர்த்து வீசிய
வௌ¢ளிய குமுதமென் மலரின் மேவுமே. - 14


104 - நட்டதோர் குழுவினை நடாத தோர்குழு
ஒட்டலர் போலநின் றொறுத்த லுன்னியே
அட்டன ராமென வடாத வான்களை
கட்டனர் வேற்றுமை யுணருங் காட்சியார். - 15


105 - ஏயின செயலெலா மியற்றி வேறுவே
றாயிடை வேண்டுவ தமைய வாற்றியே
மாயிரும் புவிமிசை மகவைப் போற்றிடுந்
தாயென வளர்த்தனர் சாலி யீட்டமே. - 16


106 - மன்சுடர் கெழுமிய வயிர வான்கணை
மின்சுடர் தூணியின் மேல கீழுறத்
தன்சுடர் பொலிதரச் செறித்த தன்மைபோற்
பொன்சுட ரிளங்கதிர் புறத்துக் கான்றவே. - 17


107 - பச்சிளங் காம்புடைப் பணையின் மீமிசை
வச்சிரத் தியற்றுமோ ரிலைகொள் வான்படை
உச்சிமே லுறநிறீஇ யொருங்கு செய்தெனக்
குச்சுறு சாலிமென் கதிர்கு லாவுமால். - 18


108 - சுற்றுறு ப·றலைச் சுடிகை மாசுணம்
பெற்றுறு குழவிகள் பெயர்த லின்றியே
முற்றுறு நிவப்பொடு முறையி னிற்றல்போ
நெற்றுறு பசுங்கதிர் நிமிர்தல் மிக்கவே. - 19


109 - மையுறு கணிகையர் மகிழ்நர் வந்துழிப்
பொய்யுறு மளியெனப் பயனில் புன்கதிர்
கையுறு முவகையாற் பணியுங் கற்பினோர்
மெய்யுறு பரிவென விளைந்து சாய்ந்தவே. - 20


110 - மாலுறு பொன்னகர் மருவு மன்னற்குப்
பாலுறு தீம்பதம் பலவு மார்த்தியே
மேலுறு சாலியின் விளைவு நோக்கியே
கோலிநின் றரிந்தனர் குழாங்கொண் மள்ளரே. - 21


111 - அரிந்திடு சுமைகளா லவனிப் பேருடல்
நெரிந்திடச் சேடனு நௌ¤ந்து நீங்கிடத்
தெரிந்திடும் போர்கள்சே ணளவுஞ் சேறலால்
விரிந்திடு கதிர்சுலா மேரு வாயவே. - 22


112 - ஏற்றொடு பகட்டின மிசைத்துப் போருரு
மாற்றினர் வலமுறை திரித்து வாழ்த்தொலி
சான்றினர் பரனொடு தமது தெய்வதம்
போற்றினர் மீமிசை பொலிகென் றோதுவார். - 23


113 - தொங்கலம் பூமுடித் தொழுவர் போரினை
அங்குறப் படுத்துவை யகற்றி யாக்கிய
பொங்கழிப் பதடிகள் புறத்து வீசியே
எங்கணு நெற்குவை யியற்று வாரரோ. - 24


114 - களப்படு கைவலோர் கால்க ளான்முகந்
தளப்புறு நெற்குழா மவற்றுண் மன்னவற்.
குளப்படு கடன்முறை யுதவி மள்ளருக்
களித்தனர் வேண்டிய தனைய நாட்டுளோர். - 25


115 - சொற்குவை வழிபடப் புகழிற் றோன்றுதம்
மிற்குவை வேண்டுவ தேவி யெஞ்சிய
நெற்குவை குரம்பையி னிரப்பு வித்தனர்
பொற்குவை யரிந்தனர் பொதிவித் தென்னவே. - 26


116 - தலத்திடை வேறிடத் தொதுங்குந் தண்ணிய
குலத்திடைப் பிறந்தவர் கூட்ட மாமென
நலத்திடை வந்திடு முதிரை நல்வளம்
நிலத்திடை யொருசிறை விளையு நீரவே. - 27


117 - பிறப்பதும் வளர்வதும் பின்னர் மூப்புவந்
திறப்பதும் வைகலு முலகி லேய்ந்தெனச்
சிறப்புட னடுவதும் பருவஞ் செய்வதும்
மறுப்பதுந் தொகுப்பது முலப்பின் றாயவே. - 28


118 - முழவொல விண்ணவர் முதல்வற் காக்குறும்
விழவொலி கிணையொலி விரும்பு மென்சிறார்
மழவொலி கடைசியர் வள்ளைப் பாட்டொலி
உழவொலி யல்கலு முலப்பு றாதவே. - 29


119 - காலுற நிமிர்ந்திடு காமர் சோலையும்
நீலமுங் கமலமு நிறைந்த பொய்கையும்
ஆலையங் கழனியும் கநங்கற் காயுத
சாலைக ளிவையெனச் சாற்ற நின்றவே. - 30


120 - நெறியிடை யொழுகலா விழுதை நீரரை
மறலிதன் னகரிடை வருத்தல் போலுமால்
குறைபடத் துணித்தவண் குவைசெய் கன்னலை
அறைபடு மாலைக ளிடையிட் டாட்டலே. - 31


121 - ஏறுகாட் டியதிற லிளைஞ ரெந்திரங்
கூறுகாட் டியகழை யழுங்கக் கோறலுஞ்
சாறுகாட் டியதரோ யாதுந் தம்மிடை
ஊறுகாட் டினர்க்கலால் உலோப ரீவரோ. - 32


122 - மட்டுறு கழையினும் வலிதிற் கொண்டபின்
இட்டகொள் கலங்களி னிருந்த தீம்புனல்
தொட்டிடு கடலெனத் தொன்று மன்னவை
அட்டதோர் புகைமுகி லளாவிற் றொக்குமே. - 33


123 - கூடின தேனிசை யிளமென் கோகிலம்
பாடின மயில்சிறை பறைய டித்தன
வாடின வஞ்சிதந் தலைய சைத்திடா
நாடின பாதவம் புகழ்வ நாரையே. - 34


124 - காசொடு நித்திலப் பொதியுங் காட்டியே
பாசடை மாதுளை சினையிற் பைங்குயில்
பேசிட நிற்பன பெறீஇயர் வம்மென
வீசுதல் கருதியே விளித்தல் போன்றவே. - 35


125 - சித்திரக் கதலிமா வருக்கைத் தீங்கனி
துய்த்திட வரும்பய னுதவுந் தோற்றத்தால்
உத்தம முதலிய குணத்தி னோங்கிய
முத்திறத் தவர்கொடை மொழிய நின்றவே. - 36


126 - வீசுகால் பொரவசை விசும்பிற் றாழைகள்
தேசுலாம் பரிதிமெய் தீண்டுஞ் செய்கைய
காசினி தன்கையாற் கலைவெண் டிங்கள்போல்
மாசுறா வகைதுடைத் திடுதல் மானுமே. - 37


127 - வாசநீள் பொதும்பரின் மைந்தர் மாதர்கள்
காசுநூன் மேகலை பரியக் கைவளை
பூசலிட் டலமரப் புணருஞ் செய்கைகண்
டாசைமிக் கழுங்குவ பிரிந்த அன்றிலே. - 38


128 - கானுலா நந்தன வனமுங் காரென
வானுலாந் தண்டலை மருங்கும் வைகலும்
வேனிலா னன்னவர் மகளிர் மேயினார்
ஊனுலாங் குரம்பையு ளுயிருற் றென்னவே. - 39


129 - அசும்புறு மகன்புன லறாத சூழலின்
விசும்புற வோச்சிய விரைமென் றாதினாற்
பசும்பொனிற் குயிற்றிய பதியிற் றூபிகைத்
தசும்பெலாம் வௌ¢ளிய தாக்குந் தாழையே. - 40


130 - உற்றிட வரிதவ ணுழவர் நீத்ததார்
சுற்றிடுந் தாண்மிசை யிடறுஞ் சூல்வளை
தெற்றிடும் பூங்கொடி புடைக்குஞ் சேலினம்
எற்றிடுந் தேம்பழ மிழுக்குந் தேன்களே. - 41


131 - கானிமிர் கந்திகள் கான்ற பாளைமேன்
மீனினம் பாய்தலுஞ் சிதறி வீழ்வுறா
வானதோர் மருதவைப் படையுந் தன்மைய
வானுறு தாரகை வழுக்கிற் றொக்குமால். - 42


132 - மாகுல வல்லியின் மஞ்ஞை யாடல்போல்
கோகில மார்தருக் குழத்தி னூசன்மேற்
பாகுல வின்சொலார் பணிக்கு மெல்லிடைக்
காகுலம் பிறர்கொள மகிழ்வி னாடுவார். - 43

வேறு




133 - ஊசலுற்றவர் குழைக்குடைந் திடுதலா லுவரை
வீச லொப்பன வாடுதல் கிளிமொழி வெருவிப்
பேச லொப்பன வீழ்ந்திலர் பிழைத்ததீ தென்னா
ஏச லொப்பன கோகிலப் பறவைக ளிசைத்தல். - 44


134 - கூர்ப்புக் கொண்டகட் கொடிச்சியர் குளிர்புனங் காப்போர்
ஆர்ப்புக் கொண்டுகை விசைத்தெறி மணிக்கல்வந் தணையச்
சார்ப்புக் கொண்டதஞ் சிறகரால் விலக்கியத் தடத்துப்
பார்ப்புக் கொண்டுகொண் டெழுவன தோலடிப் பறவை. - 45

வேறு




135 - கடற்பரு கியமுகில் பெய்யுங் காட்சிபோல்
அடற்பெரு மேதிக ளனைத்தும் புக்குராய்த்
தடப்பனல் வறிதெனப் பருகித் தம்முலைக்
குடத்திழி பாலினாற் குறையைத் தீர்க்குமே. - 46


136 - பாட்டிய லளிமுரல் பதுமக் கோயிலில்
நாட்டிய நிமலன்மு னந்தி நீரிடை
மாட்டிய பல்பெருஞ் சுடரை மானுமாற்
கோட்டுயர் தடந்தொறுங் குவளை பூத்தவே. - 47


137 - கலனிடைத் தருவதுங் கானத் துள்ளதும்
பொலனுடைப் பொருப்பிடைப் பொருளு மல்லது
நலனுடை நாட்டவர் நயதத லின்றிய்ந்
நிலனிடைப் பொருள்பகர் வழக்க நீத்ததே. - 48


138 - யாழ்க்கையர் பொருநருக் கிறைவ ரேழிசை
வாழ்க்கைய ரளவையின் வகுத்த பாடலைக்
கேட்குநர் நன்றென மருப்புக் கிம்புரிப்
பூட்கைக ளுதவுவார் பொதுவி றோறுமே. - 49


139 - கஞ்சிதேய்ப் புண்டகில் கமழும் பூந்துகில்
வஞ்சிதேய்ப் புண்டன மருங்கு லாரடி
பஞ்சிதேய்ப் புண்டன பணியத் தாக்கலாற்
குஞ்சிதேய்ப் புண்டன குமரர் கூட்டமே. - 50


140 - அன்றிலம் பெடைகளை யணுகி யன்னைகேள்
நன்றென வினையின்மே னடந்த நாயகர்
இன்றுவந் திடுவரிங் கெமபொ ருட்டினால்
ஒன்றுநீ யிரங்க்லென் றுரைக்கின் றார்சிலர். - 51


141 - ஆடியல் கருங்கணுஞ் சிவப்புற் றங்கமும்
வாடுவ தாகியே மதன வேர்வுறாக்
கூடிய மகளிருங் குமரர் தங்களை
ஊடிய மகளிரு முலப்பின் றாயினார். - 52


142 - அகனமர் கணிகைய ரடிகள் சூடியே
முகனுறு முவகையான் முயங்கி யன்னவர்
நகனுறு குறிகொளீஇ நாளுங் காமநூல்
தகைமைசெய் காளையர் தொகுதி சான்றதே. - 53


143 - வாளைக ளிகல்புரி வயலும் வாலியும்
பாளையொ டுற்பலம் பதும நாறுமால்
வேளயர் தடங்கணார் விரைமென் றாளினை
காளையர் குஞ்சியுங் காரமு நாறுமால். - 54


144 - சேவக மணைவன கரிகள் சேனைகள்
காவக மணைவன கலைகள் புள்ளினம்
பூவக மணைவன பொறிவண் டாயிடைப்
பாவக மணைவன பாட லாடலே. - 55


145 - ஆடக மாமதி லம்பொற் கோபுரம்
நீடிய மண்டப நெறிகொ ளரீவணம்
பாடலொ டாடிடம் பிறவும் பாலிநன்
னாடுள பதிதொறு நண்ணி யோங்குமே. - 56


146 - தெண்டிரை யுலகினிற் சீர்பெற் றோங்கிய
மண்டல மெங்கணு மதிக்க நின்றதோர்
தொண்டைநன் னாட்டணி சொல்லி னாமினித்
தண்டமிழ் வளநகர்த் தன்மை கூறுவாம். - 57


ஆகத் திருவிருத்தம் - 146
- - -

6. திருநகரப் படலம் (147- 270 )




147 - மாவுல கெங்கு மலர்த்தட மாகத்
தாவறு சீர்புனை தண்டக நாடே
மேவிய கஞ்சம தாவதின் மேவும்
தேவினை யொத்தது சீர்பெறு காஞ்சி. - 1


148 - பூக்கம லத்துறை புங்கவன் மாயோன்
பாங்குறை தேவர்பல் லாணடிசை பரவ
ஓங்கிய புள்ளின மூர்ந்தவ ணுறலால்
ஆங்கவர் மவு மரும்பத மாமே. - 2


149 - இன்னிய றேர்தரு மிந்திரன் முதீலா
மன்னிய வானவர் மற்றுளர் யாருந்
துன்னின ராயிடை சூழந்துறை செயலாற்
பொன்னக ரென்று புகன்றிட லாமால். - 3


150 - கின்னரர் சித்தர் தெரீஇயத னாலத்
தந்நிக ரில்லவர் தம்பதி போலும்
பன்னக வேந்தர் பராயின ருறலால்
அன்னவர் தம்பதி யாகிய தன்றே. - 4


151 - எண்டிசை காவலர் யாவரு மீண்டப்
பண்டவர் பெற்ற பதங்களை மானும்
மண்டல மார்சுடர் மற்றைய வுறலால்
அண்டமு மாகிய தப்பதி யென்பார். - 5


152 - இப்படியாவரு மெதிய திறனால்
ஒப்பன போல வுரைத்திட லொப்போ
அப்பதி யேயத னுக்கிணை யன்றிச்
செப்பரி தாற்பிற சீர்கெழு காஞ்சி. - 6


153 - மறைமுத லோர்தனி மாவி னிழற்கீர்
உறைதரு காஞ்சி தனக்குல கெல்லாம்
பெறுமய னாதியர் பெற்றிட வன்னான்
நிறுவிய தொன்னக ரோநிக ராமே. - 7


154 - மேயதொல் லூழியில் வேலைக ளேழுந்
தூயத னெல்லை சுலாவுற நிற்றல்
ஆய பரஞ்சுட ராங்குள தாயும்
மாயைகள் சுற்றிய மன்னுயி ரொக்கும். - 8

வேறு




155 - பாழி மால்வரை யெறிதிரை வையகம் பலவும்
வாழு மண்டங்கள் சிற்றுரு வமைந்துவந் தென்னச்
சூழு நேமியம் புள்ளின முதலிய சுரங்கும்
ஆழி நீத்தம் தொத்தது மதிற்புறத் தகழி. - 9


156 - மண்ட லப்பொறை யாற்றுவான் பற்பல வகுத்து
முண்ட காசன மீமிசை யிருந்திடு முதல்வன்
அண்ட கோளகை தாங்கவோர் சுவர்த்தல மதுவும்
பண்டு செய்தெனவோங்கிய நெடுமதிற் பரப்பு. - 10


157 - சென்று மூவெயி லழலெழ நகைத்தவன் செழும்பொற்
குன்று தோளுற வாங்கலு முலகெலாங் குலைந்த
அன்று நான்முக னனைத்தையுந் தாங்குகென் றருள
நின்ற தென்னவும் பாதலம் புகுந்துமேல் நீண்ட. - 11


158 - மேக நாட்டிற்கும் விஞ்சையர் நாட்டிற்கும் விண்ணோர்
மாக நாட்டிற்கும் மலரய னாட்டிற்கும் மற்றை
நாக நாட்டிற்கும் பாதல நாட்டிற்கும் நணுகிப்
போக நாட்டிய பொன்மதில் ஆனதப் புரிசை. - 12


159 - முதிரை வண்ணமா நவமணிக் குவையும்வான் முளைக்குங்
கதிரி னெல்லெனும் பொருளுட னேனவுங் காட்டிப்
பொதிவ தாகியே முழுவதும் நிரம்புதல் பொருந்தா
நிதிய மேயகூ டொத்தது நெடியமா மதிலே. - 13


160 - நிறையும் வார்கடல் சுற்றிய நேமியும் நேமிக்
குறையு ளாகிய கணிப்பிலா வண்டமு மொப்ப
சிறையில் வான்கிரி நிரையெனச் செவ்விதிற் கிளர்ந்து
மறுகெ லாந்திகழ் மாளிகைப் பத்திசூழ் மதிலே. - 14


161 - தடுக்கு மாற்றலர் நால்வகைப் படையொடுஞ் சாய
முடுக்கும் வாள்கொடு விதிர்த்திடு மெழுவினான் முருக்கும்
எடுக்கு மெற்றிடு மெறிந்திடும் விழுங்கிடு மீர்க்கும்
படுக்குங் கன்மழை சொரிந்திடும் விற்படை பயிலும். - 15


162 - உருக்குஞ் செம்பினை வங்கத்தை யிழுதொடு மோச்சும்
வெருக்கொ ணேமிக ளெறிந்திடும் வச்சிரம் வீசி
இருக்கும் நின்றிடுங் குப்புறுஞ் செறுநரை யிகலி
நெருக்குந் தாழ்ந்திடும் உலகளந் தோனென நிமிரும். - 16


163 - பீடு தங்கிய பணைமுர சியம்பிடும் பிடிக்குங்
கோடு மார்த்திடுந் துடிகளு மொலித்திடுங் கொட்புற்
றாடும் மீயுயர் புள்ளையு மெறிந்திடு மரண்மேல்
ஓடும் மீளுமக் கதிரையுந் தடுப்பபோல் உந்தும். - 17


164 - சூலம் வீசிடுந் தொமரம் வீசிடுஞ் சுடர்வேல்
ஆலம் வீசிடுஞ் சுடுமணல் வீசிடு மளப்பில்
சாலம் வீசிநின் றீர்த்திடு மகழியிற் றிள்ளுஞ்
சீலம் வீசிய பாரிட மாமெனத் திரியும். - 18


165 - திகழும் வெங்கன லுமிழ்ந்திடு மொன்னலர் செலுத்தும்
பகழி மாரியை விழுங்கிடும் பறவையிற் படரும்
இகழு நாவையும் மனத்தையு மெறிந்திடு மென்னாற்
புகழும் நீரவன் றம்மதின் மேலுறும் பொறிகள். - 19


166 - பூணி னேர்தரும் பொன்னவாம் புரிசைமேற் புனைந்த
வாணி லாநெடுந் துகலிகை பெயர்வன மலரோன்
சேணு லாயதீஞ் சுடரேனுங் கோபுர சிகரங்
காண வேபல வெகினமாய்த் தேடல்போற் கவினும். - 20


167 - ஈர்த்த மாமதி சசியென்ப துலகுளோ ரிட்ட
வார்த்தை யல்லது சரதமோ கடிமதின் மருங்கில்
தூர்த்த கேதன மவன்மணி மேனியிற் றுடக்கப்
போர்த்த வெண்ணிலாக் கஞ்சுகம் பீறியபோலாம். - 21


168 - காட்சி மேயவக் கடிமதிற் கதலிகை காணூஉச்
சூட்சி நாடிய பரிதியுங் கீழுறத் தொடர்ந்தான்
மாட்சி தேய்ந்திலன் வரன்முறை மனப்படு மதியோர்
தாட்சி செய்யினு மனையாபா லணுகுமோ தவறு. - 22


169 - புடைப ரப்பிய புரிசையி னாற்றிசைப் புறத்துந்
தடநி லைப்பெருங கோபுர முளதழ னிறத்துக்
கடவு ளுச்சியின் வதனமொன் றின்றியே காண்பான்
அடைத லுற்றிடு திசைமுகம் பொருவின அவையே. - 23


170 - என்று மாமதிக் கடவுளும் பிறருமீ ரியல்பாங்
குன்ற மேயெனக் கீழ்த்திசை யதனொடுங் குடபால்
நின்ற கோபுரங் கடக்கலர் வாய்தலி னெறியே
சென்று சென்றுபோ யப்புறத் தேகினர் திரிவார். - 24


171 - தீபு ரத்திடை மடுத்தவ னாணையாற் சிறந்த
மாபு ரத்திடை வான்றொடுங் கடிமதில் வரைப்பில்
ஆபு ரத்தவாய்க் கிளர்ந்தவே யமைத்தவன் றென்னக்
கோபு ரத்திடைக் கொழுந்துபோ லோங்கிய கொடிகள். - 25


172 - மாட மாளிகை மண்டபங் கோபுர மறுகிற்
கோடி கோடியின் மேலுமுண் டன்னதார் குணிப்பார்
ஆடு கேதனத் தளவையு மன்னதே அகல்வா
னுடு போகலா தலமரும் பறவைக ளப்ப. - 26


173 - சிகர மால்வரை யன்னமா ளிகைதொறுஞ் சிவணும்
மகர தோரண மாடிகள் பலவுற வயங்கல்
இகலும் வெய்யகோ ளிரண்டுமா யொருவடி வெய்தி
அகல்வி சும்பிடைக் கதிர்களின் புறமறைத் தனைய. - 27


174 - செம்பொ னிற்புரி நிலையுடைத் திகிரியந் தேர்கள்
அம்ப ரத்திடை வசியுற வீற்றுவீற் றாகுந்
தம்ப முற்றல மருவன செய்யகோற் றலையிற்
பம்ப ரத்துருத் திரிப்புறக் கறங்கிய படிய. - 28


175 - பளிங்கி னாற்செய்த தெற்றியின் றலைமிசைப் பனிதோய்
வளங்கொ ணித்திலஞ் செம்மணி குயிற்றிய வைப்பில்
துளங்க நாற்றிய பொன்மணிப் பாலிகை தொகுவ
குளங்கொ டாமரை மலர்ப்பொகுட் டாயின குறிக்கின். - 29


176 - ஓவி யத்தியன் மரகதத தலத்தின தும்பர்த்
தாவி லாடகத் தலமிசை நித்திலத் தலமேற்
கோவை பட்டசெம் மணித்தலம் பொலிதலாற் கொண்மூ
மூவ கைக்கதிர் வியலிடந் தெரிப்பதம் மூதூர். - 30


177 - கன்னல் வேளெனும் மைந்தரும் மாதருங் கலந்து
மன்னு நித்தில மாளிகைப் பத்தியின் மாடே
பொன்ன வாஞ்சிறை மணிமயிற் குழாத்தொடும் போகும்
அன்னம் மாமதி முகிலிடை நுழைந்துபோ யனைய. - 31


178 - தண்ட மாகியே புவியுறு பணியெலாந் தழுவி
அண்ட மீமிசை யிரவியும் மதியமு மடைதல்
கண்டு மாளிகைச் சூளிகை மருங்குபோய்க் கவர்வான்
கொண்ட சீற்றத்தின் நாவெறிந் தன்னபூங் கொடிகள். - 32


179 - தேனை வென்றசொல் லாரொடு மைந்தருந் திளைக்கும்
மீன வாவிபோல் வியன்படி கத்தினால் விளங்குந்
தான மீமிசைத் தயங்கிய முழுமணித் தலந்தான்
வான நின்றிடு தெய்வத மானனே மானும். - 33


180 - தேவர் தானவர் முனிவரர் சித்தரோ டியக்கர்
வாவு கின்னர ருவணர்கந் தருவர்மற் றுள்ளோர்
ஏவ ருந்தம தகன்பதி யிகந்தவ ணெய்தா
மேவு சின்றன தனித்தனி யிரக்கைகண் மிகுமால். - 34


181 - தூங்கு குண்டிகை யருகுறக் காலெதிர் தூண்டி
ஓங்கு நாசிமேல் விதிமுறை நயனங்க ளுறுத்தி
ஆங்கொ ராசனத் திருந்தர னடியகத தடக்கிப்
பாங்கர் மாதவம் புரிகுநர் சாலைகள் பலவால். - 35


182 - பாடு நான்மறை யந்தணர் வேள்விகள் பயில
மூடு தண்புகை யண்டமுங் கடந்தன முன்னந்
தேடு கின்றதோர் பரஞ்சுடர் மீட்டுமத் திறத்தால்
நீடு கின்றதோ வென்றுநான் முகத்தனும் நினைய. - 36


183 - நான்ம றைக்குலத் தந்தணர் நவையறு காட்சி
ஊன்ம றைத்திடு முயிரென வோம்பிய வொழுக்கார்
மேன்மு றைக்கணோ ரைம்புலப் படிற்றினை வென்றோர்
வான்ம றைத்திடு மாளிகை வீதியும் மலிந்த. - 37


184 - ஏவு பல்படை வலியினர் வெஞ்சம மிகந்தோர்
நாவி னான்மறை பயில்பவர் நணுகுறு நலத்தாற்
கோவு நீணகர் மறுகெலாங் குருமணிச் சிகரத்
தேவு நீணகர் நிலைமையே போல்வது தெரியின். - 38


185 - அணியி னோங்கலும் பன்மணிக் குவால்களு மார்வந்
தணிவி லாடகக் குவைகளும் பிறவுமுன் றழைப்பக்
கணிக ணாணுறு கற்பக மனையன காட்சி
வணிக ராவணத் தெற்றிகள் வயின்றொறும் வயங்கும். - 39


186 - கங்கை மாமகள் தொல்பெருங் குலத்தர்கா சினியின்
மங்கை யாளருள் புரிதரு மகாரெனும் வழக்கோர்
செங்கண் மானிகர் வெறுக்கையர் அயன்பதஞ் செர்ந்தோர்
துங்க வீதியு மேனையர் மறுகொடுந் தொகுமே. - 40


187 - கண்டு கேட்டவை யுண்டுயிர்த் துற்றறி கருவி
கொண்ட வைம்புல னொருங்குற நடாத்திய கொள்கைத்
தொண்டர் கூட்டமும் விழிவழிப் புனலுகத் தொழுங்கை
அண்டர் கூட்டமும் ஆலயந் தொறுந்தொறு மறாவால். - 41


188 - ஆதி நான்முகன் எகினத்தி னடிகளு மமலன்
பாதி யாளன்றன் உவணத்தி னடிகளும் பனிக்கார்
நாத னூர்தரு தந்தியி னடிகளும் நாளும்
வீதி வீதிக டொறுந்தொறுங் காண்வர விளங்கும். - 42


189 - மாவி னோதையுங் களிற்றின தோதையும் மருங்கின்
மேவு தேர்களி னோதையுங் கவிகையாய் விரிந்த
காவு சூழ்தரு மன்னர்சீ ரோதையுங் கறங்குந்
தேவ துந்துபி யோதையு மிறுத்தில தெருவு. - 43


190 - நாட்டி யச்செயல் யாவையுஞ் சிவனது நடனம்
பாட்டி சைத்திறம் யாவையு மன்னதே பதியோர்
கேட்டி ருப்பன யாவையு மவனிசைக் கேள்வி
கூட்டம் யாவையு மன்னவன் றொண்டுசெய் கூட்டம். - 44


191 - பாலு றுந்ததி யிழுதுதே னிருக்கைகள் பலவுங்
கோல மாகுமந் நகரிடை யாவையுறை கூவல்
போலு மாயிடை மாதவத் தவளறம் புரியுஞ்
சாலை யாயின வரம்பிலா அடிசிலஞ் சாலை. - 45


192 - அளவில் பற்பகல் தம்மினும் நீங்கியோ ரடுத்த
கிளைஞர் வந்துழி யெதிர்தழீஇ நன்னயங் கிளத்த
உளம கிழ்ந்தவர்க் கூட்டுமின் னடிசில்போ லுறுவோர்
எளிதி னுங்கிட வழங்குமால் ஓதன விருக்கை. - 46

வேறு




193 - மாட மாளகை வாயி றொறுந்தொறும்
நீடு கண்ணுள ராமென நின்றுநின்
றாடு சித்திரப் பத்தி யமரரும்
நாடி நோக்கி நயந்திடப் பட்டதே. - 47


194 - எல்லை தீர்ந்த விரவிக டூண்டிய
சில்லி யாழித் திகிரிகண் மானுமால்
மல்லன் மாநகர் மைந்தர்க ளுர்தரும்
பல்வ யகைச்சுடர்ப் பண்ணுறு தேர்களே. - 48


195 - வௌ¢ளை யாதி வியன்கவி யாவையும்
தௌ¢ளி தின்மொழி தென்கலை யேமுதல்
உள்ள பல்கலை யோதுகின் றார்களும்
வள்ளி யோர்களும் மன்றுதொ றீண்டுவார். - 49


196 - இகலும் வேழத் தெயிற்றினை யேய்ந்திடும்
நகிலி னார்க ணறுங்குழன் மேலிடும்
அகலி னாவியு மாய்மணி மாடமேல்
முகிலும் வேற்றுமை யின்றி முயங்குமே. - 50


197 - பண்ணி னோசையும் பானலை வென்றிடுங்
கண்ணி னார்கள் களிநட வோசையுந்
தண்ண ரம்பிய றந்திரி யோசையும்
விண்ணு ளோர்க்கும் விருந்தென லாயவே. - 51


198 - அணிகு லாவு மரம்பையர் காளையர்
நணிய தோளை நயப்புற நாகருங்
கணிகை மாதரைக் காமுற மேவலான்
மணிகொள் காஞ்சி மதனர சாயதே. - 52


199 - கூற்றிற் செல்லுங் கொலைக்கரித் தானமும்
ஏற்றிற் செல்லு மிடையர்தஞ் சேரியின்
ஊற்றிற் செல்லு மொண்பாலு முடனுறா
ஆற்றிற் செலலுமவ் வாவணந் தோறுமே. - 53


200 - வேறு பண்ணுளர் நரம்பியல் பாணிக் கேற்றிட
எண்ணுள கணிகைய ரினத்தொ டாடலுங்
கண்ணுள ராடலுங் காம னாடலும்
விண்ணுள ராடலும் வெறுப்ப மேவுமே. - 54


201 - அரிவையர் மைந்தர்க ளணிந்து நீத்ததே
திருமகள் காமுறுஞ் செல்வ மாகுமேற்
கருதரு நான்முகக் கடவுட் காயினும்
பொருவரு நகர்வளம் புகலற் பாலதோ. - 55


202 - வேறு மாறாய்ச் சிறார்க ளெறிந்தாடிய மான்ம தத்தாற்
சேறாய்ப் பொற்சுண்ணத் துலர்வாய்ப்பனி நீர்கள் சிந்த
ஆறாய்ப் பளிதத் தினில்வாலுகத் தாறு மாகி
வேறாய்ப் புவியோ ருணர்வாமென மேய வீதி. - 56


203 - தண்டாமரை யேந்திய வானவன் றன்னை யொத்தான்
எண்டாவிய மாமத னேந்திழை யாரி லஞ்சி
வண்டாமரை பூத்தன வொத்தனர் வந்து செந்தேன்
உண்டாடிய தேன்களை யொத்தனர் ஓங்கல் மைந்தர். - 57


204 - ஏமங் குலவ முரசங்க ளிரட்ட வாசத்
தாமங் கமழ்பந் தரினூடு தமககி யன்ற
ஓமங் களின்மா மணஞ்செய் தனரூர் குலாவும்
மாமங் கலமே யுலப்பின்றி மலிந்த தன்றே. - 58


205 - மாகந் திகழு மகிலாவிகொள் மாட மீதிற்
பாகின் மொழியா ரிளமைந்தர்தம் பாலி னோச்சப்
போகுஞ் சிவிறிப் பனிநீர்புறஞ் சிந்த வென்று
மேகஞ் சிதறும் பெயலென்ன விளங்கும் வீதி. - 59


206 - வன்மா முலையேந் தியமங்கையர் மைந்த ரானோர்
தொன்மாட மீதி லெறிந்தாடுபொற் சுண்ண மொடு
நன்மா மலர்த்தாது விசும்புற நண்ண மேகம்
பொன்மா முகிலாய்ப் பனிநீரிற் பொழியு மன்றே. - 60


207 - தாராற் பொலிபொற் புயவீரர் தவாது செல்லுந்
தேரார்ப்பு நால்வாய்க் கரியார்ப்பும்வெஞ் சேனை யார்ப்பும்
ஏரார்ப்பு மிக்க பதிமானவ ரீண்டு மார்ப்புங்
காரார்ப்பும் வேலைக் கடலார்ப்புங் கடுத்த வன்றே. - 61


208 - வானோக்கி நிற்கு முலகென்னவு மன்ன வன்செங்
கோனோக்கி நிற்குங் குடியென்னவுங் கோதி லும்பர்
ஆனோர்க்கு நாக ருலகோர்க்கு மவனி யோர்க்கும்
ஏனோர்க்கும் நாடும் நகராகி யிருந்த தவ்வூர். - 62


209 - கோடு நெறியு மிகலும்மனக் கோட்ட மாய
கேடும் பிணியு முதலாகிய கேதம் யாவும்
நீடும் பரிவோ டுறைவா ரிடைநீங்க லாலே
வீடந் நகரே யெனிலேன்னின் விளம்ப வற்றோ. - 63


210 - வேறு ஏமமே தருவாச் சினைகளு மனைத்தா விலைதளிர் செய்யபூந் துகிராக்,
காமர்பூ மணியா வுதித்தொரு காஞ்சி கண்ணரோ ரைவர்மு கண்டு,
தாமினி தருளும் பொய்கையின் மருங்கே தன்னிழல் பிரிகிலா துறலாற்,
பூமியெண் காஞ்சி மாபுர மெனும்பேர் புனைந்ததப் பொருவிலா நகரம். - 64


211 - சுருதியானுறங்கு மிராத்தொறு முடிவிற் றுஞ்சிய வூழிக டோறும்,
விரையவந் துலக மழித்திடுங் கடலவ் வியன்பதி யெல்லையுட் சிறிதும்,
வருவதை யஞ்சிப் புறந்தனிற் சூழ வந்தொரு சத்திகாத் திடலாற்,
பிரளய சித்தென் றொருதிரு நாமம் பெற்றதக் காஞ்சியம் பேரூர். - 65


212 - கயிலையி லரனை யம்மைபூங் காவிற் கண்களை மூடலு முலகிற்,
பயிலுறு கொடிய வினையிரு ளகலும் பான்மையால் வந்துமா நிழற்கீழ்,
இயலொடும் பரமன் பூசனை யியற்றி யிரைத்தெழு கம்பைகண் டஞ்சிச்,
செயன்முறை தழுவக் குழைந்தருள் செய்யச் சிவபுர மானதச் சீரூர். - 66


213 - விண்ணுறை மகவான் கரிபுரி தவத்தால் வெற்பதாய்த் தன்னை முன்றாங்கு,
புண்ணிய கோடி யிபகிரி மிசையே பொருவிலா வேதியுத் தரத்தில்,
அண்ணலங் கமலத் திசைமுகன் வேள்வி யாற்றலு மவற் கருள் செய்வான்,
கண்ணன்வந் திடலால் விண்டுமா புரமாங் கட்டுரை பெற்றதக் காஞ்சி. - 67


214 - கார்த்திரு மேனித் தண்டுழாய் மௌலிக் கண்ணனுங் கமலமே லயனும்,
ஆர்த்திடுந் தரங்கப் பகீரதி மிலைந்த வவிர்சடை யமலனு மாகும்,
மூர்த்திக டத்த முலகமே போல முன்னியப் பதியமர் செயலாற்,
சீர்த்திரி மூர்த்தி வாசமா கியபேர் சிறந்ததக் கச்சிமா நகரம். - 68


215 - தரணிகண் முழுதும் புரிதரும் விரிஞ்சன் றன்மனம் புனிதமாம் பொருட்டால்,
திருமகள் கணவன் கமடமாய்ப் பூசை செய்திடு கச்சபா லயத்தில்,
அரனடி பரவி யருச்சனை யியற்றி யங்கண்வீற் றிருந்திடு நெறியால்,
வரமிகு பிரம புரமென வொருபேர் மன்னிய தன்னதோர் நகரம். - 69


216 - வீடுறு முத்தி போகமென் றவற்றில் வெ·கிய வெ·கியாங் கென்றுங்,
கூடுறு தவத்தால் வழிபடு வோர்க்குக் கொடுத்திடுந் தன்மையாற் காம,
பீடமென் றொருபேர் பெற்றது மலர்மேற் பிரமமே முதலினோர் தவத்தை,
நாடினர் செயலால் தபோமய மெனும்பேர் நணியது கச்சிமா நகரம். - 70


217 - சகங்களோர் மூன்றி லறம்பெரி துளதித் தரணியித் தரணிமா நகர்க்குள்,
மிகுந்தரு மத்தின் பலத்தினைத் தரலால் வியன்சகற் சாரமென் றொருபேர்,
புகும்பரி சுடைய தட்டசித் திகளும் பொருவின்மா தவர்க்கரு டிறத்தாற்,
பகர்ந்திடுஞ் சகல சித்தியென் றொருபேர் படைத்தது கச்சியம் பதியே. - 71


218 - உன்னருங் கயிலை நாயக னுமையை யொருபக னீலியென் றுரைப்ப,
அன்னவ டனது காளிமங் கழிப்ப வங்கதி லையைவந் தெழலும்,
முன்னவ னவளை யிந்நக ரிருந்து முறைபுரிந் தருளென விடுப்பக்,
கன்னிகாத் திடலாற் கன்னிகாப் பென்னுங் கவின்பெய ருடையது கச்சி. - 72


219 - அரியதோர் கயிலைக் கணங்களி லொருவ னானதுண் டீரன்மா லதிபால்,
பெருமயல் கொள்ளச் சிவனிவ ளடுநீ பிறந்திருந் தின்பமுற் றெம்பால்,
வருகென நிலமேன் மன்னர்பாற் றோன்றி மற்றவ ளோடுசேர்ந் தரசு,
புரிதரு செயலாற் காஞ்சிதுண் டீர புரமெனப் புகலநின் றதுவே. - 73


220 - தன்னையே யருச்சித் திடமலர்க் கேகித் தடந்தனிற் கராவின்வாய்ப் பட்டுத்,
தன்னையே நினைந்து தன்னையே யழைத்த தந்தியைக் காத்தவொண் புயமால்,
தன்னையே வேண்டித் தழன்மகஞ் செய்யத் தண்டகற் கெண்டிசை யரசு,
தன்னையீக் திடலால் தண்டக புரமாந் தனிப்பெயர் பெற்றதத் தனியூர். - 74


221 - அழகிய வயோத்தி மதுரையே மாயை யவந்திகை காசிநற் காஞ்சி,
விழுமிய துவரை யெனப்புவி தன்னின் மேலவாய் வீடருள் கின்ற,
எழுநக ரத்துட் சிறந்தது காஞ்சி யென்றுமுன் னெம்பிரா னுமைக்கு,
மொழிதரு நகரந் நகரெனி லதற்கு மூவுல கத்துநே ருளதோ. - 75


222 - பங்கமில் வசிட்டன் பசுப்பொழி பாலி படர்ந்திடு முத்தரஞ் செயைச்,
செங்கம லத்தோன் முதலினோ ராட்டுந் திருநதி தென்றிசைச் செல்லும்,
அங்கவற் றிடையே கம்பமே முதலா மாலயத் தந்தரு வேதி,
கங்கைகா ளிந்தி யிடைப்படுந் தலத்தின் முற்படுங் காஞ்சிமா நகரம். - 76


223 - தொல்லையோர் பிரமன் றுஞ்சிய காலைத் தோன்றிய நீத்தமே லரிபோல்,
செல்லுமார்க் கண்டன் கரத்தினிற் கம்பை சேர்ந்ததோர் தனிப்பெருஞ் சூதம்,
எல்லைநீ ரிகந்து வளர்தலு மருப்பொன் றெய்தவக் கொம்பர்தொட் டிழிந்து,
நல்லுமை குறிக்கொண் முதல்வனை வங்கி நயந்தவ னிருந்ததந் நகரம். - 77


224 - சமையமா றினையுந் தாயென வளர்த்துச் சராசர வணுக்களுய்ந் திடுவான்,
அமைதரு மெண்ணான் கறத்தினைப் போற்றி யாதிபீ டத்தில்வீற் றிருக்கும்,
உமையமர் காமக் கோட்டியைக் கதிரோ னுடுபதி கணங்கள்சூழ் தரலால்,
இமையவர் தமக்குந் திசைமயக் கறாத வியல்புடைத் தந்நக ரென்றும். - 78


225 - பாவமோர் கோடி புரியினு மொன்றாம் பரிவினிற் றருமமொன் றியற்றின்,
ஏவரும் வியப்பக் கோடியாய் மல்கு மின்னதோர் பெற்றியை நாடித்,
தேவர்கண் முனிவர் தம்பதம் வெறுத்துச் சிவனருச் சனைபுரிந் தங்கண்,
மேவினர் தவஞ்செய் திருத்தலாற் காஞ்சி வியனகர்ப் பெருமையார் விரிப்பார். - 79


226 - கங்கைதன் சிறுவ னருள்பெறு வேதாக் கண்படை கொண்டகா லையினும்,
அங்கவன் றுஞ்சும் பொழுதினுங் காஞ்சி யழிவுறா திருந்தபான் மையினால்,
துங்கவெண் பிறையு மிதழியு மரவுஞ் சுராதிபர் முடிகளு மணிந்த,
மங்கையோர் பங்கன் படைத்ததே யன்றி மலரயன் படைத்ததன் றதுவே. - 80


227 - அரியபல் லிசையும் மறைபுனல் கங்கை யருஞ்சிலை யிலிங்கமங் குறைவோர்,
சுரர்தரு வனைத்துங் கற்பக மின்பந் துய்ப்பது வேள்வியூன் பூசை,
உரைசெப நடத்தல் வலம்வருந் தன்மை யுன்னலே தியானம்வீழ்ந் திடுதல்,
பரனடி வணக்க மாவது காஞ்சிப் பதிக்கலால் எந்நகர்க் குளதே. - 81


228 - கணமுகில் செக்கர் போர்த்தெனுங் கரிய கஞ்சுகச் செந்நிறக் கடவுள்,
மணிசுடர் வயிரக் கிம்புரி மருப்பு மால்கரி முகத்தவன் வருசூர்
துணிபட வெறிந்த வேலவ னயன்போற் றோன்றிய சாத்தன்மால் விசயை,
இணையில்சீர்க் காளி முதலினோ ரென்று மினிதுகாத் திடுவதந் நகரம். - 82


229 - அறுசம யத்திற் கடந்தசை வத்தின் அன்றிவீ டிலதெனத் தெளிந்து
பிறரறி யாது தொன்மைபோ லிருந்து பிஞ்சகன் மீதுகன் மலரால்,
எறிதரு தேரர் அன்பர்தங் கலிங்க மெழிலிகள் நனைத்தலுஞ் சிரத்தை,
முறைபுரி சிலைமேல் மோதினோர் முதலோர் முத்திபெற் றுடையதம் மூதூர். - 83


230 - ஈசன தருளாற் கயிலையை நீங்கி யிமையமா மயிலறம் புரிவான்,
காசியி லிருந்து முடிவுறா தேகிக் கனகமா நீழலிற் பரனைப்,
பூசனை புரிந்து கம்பைகண் டஞ்சிப் பூண்முலை வளைக்குறிப் படுத்தி,
ஆசிலா வருள்பெற் றின்னுநோற் றிடலா லனையகாஞ் சிக்குநே ரதுவே. - 84


231 - ஆருயிர் முழுதும் வீடுபெற் றுய்வான் அறம்புரி சாலைய தணித்தாப்,
பேரர விறைவன் றவத்தின்மு னிருந்த பிலத்திடைக் கோயில் கொண் டென்றும்,
பூரனி நோற்றுவழிபட வனையாள் பூசனை கொண்டியா வர்க்குங்,
காரண மான பரசிவ னனந்த கலையொடு நிலையதக் காஞ்சி. - 85


232 - இன்னமு முமையாள் நோற்றிடு மாங்கே யிறப்பினும் பிறப்பினும் நிலையாய்,
மன்னியே யுறினு மொருகண மேனும் வைகினும் மறைகளாந் தனிமா,
நன்னிழ லிருந்த பரஞ்சுடர் புரியும் நடந்தரி சிக்கினு மதனை,
உன்னினும் முத்தி வழங்குகாஞ் சியைப்போ லுலகில்வே றொருநக ருளதோ. - 86


233 - கண்ணுதற் பரனுந் தண்டுழாய் மவுலிக் கடவுளுங் கமலமே லயனும்,
விண்ணவர்க் கிறையுங் கொற்றமா லினியும் மேலைநாட் பிறந்ததொன் மனுவுந்,
தண்ணளி புரிதுண் டீரனும் நள்ளார் சமர்த் தொழில் கடந்ததண் டகனும்,
அண்ணலங் கரிகால் வளவனும் பிறரு மரசுசெய் தளித்ததந் நகரம். - 87


234 - வேலைசூ ழுலகி னெங்கணு மிருபால் வீட்டினை வெ·கினோர்க் குதவும்,
ஆலய நூற்றெட் டுள்ளமற் றவற்றுள் ஐம்முகப் பரஞ்சுட ரமருங்,
கோலமார் நிலய மிருபது மாயோன் கோநக ரெட்டுமாக் குழுமி,
நாலெழு தான முள்ளவந் நகர்போல் நாம்புகழ் நகரமற் றெவனோ. - 88


235 - கச்சபா லயமே கம்பமே மயானங் கவின்கொள்கா ரோணமா காளம்,
பச்சிமா லயநல் லநேகபங் கடம்பை பணாதர மச்சரம் வராகம்,
மெய்ச்சுர கரமுன் னிராமம்வீ ரட்டம் வேதநூ புரமுருத் திரர்கா,
வச்சிர னகரம் பிரமமாற் பேறு மறைசையாஞ் சிவாலய மிருபான். - 89


236 - கரிகிரி யட்ட புயந்திரு வெ·காக் கருதுமூ ரகஞ்சகா ளாங்கஞ்,
சுரர்புகழ் நிராகா ரந்நிலாத் திங்கட் டுண்டநற் பாடக மினைய,
அரிதிரு முற்ற மெட்டவை யன்றி அறுபதி னாயிர நிலயம்
பரசிவன் சத்தி குமரர்மால் புறத்தோர் பலரும்வீற் றிருப்பதப் பதியோ. - 90


237 - ஒன்றுதீ விளக்க மீரிட மொருமூன் றுற்றிடு தெற்றிநான் கரணம்,
நின்றிடு தருவைந் தாறுபுள் ளேழு நெடுநதி யெண்பொது வொன்பான்,
மன்றலம் பொய்கை வியன்சிலை யொருபான் மன்றவை பத்தின்மே லோன்று,
நின்றமர்ந் தொழுகு நெறியில்அற் புதமாய் நிகரிலா துறையுமந் நகரம். - 91


238 - சிறந்திடு மதியு மிரவியு மாழ்கச் செகமேலாந் தனதொளி பரப்பி,
அறம்புரி காமக் கோட்டிமந் திரத்து ளம்மைவாழ் பிலத்தினு ளழியா
துறைந்திடு தூண்டா விளக்கமொன் றுதித்த வுயிர்த்தொகை யிறந்திடா விடமொன்,
றிறந்திடு முயிர்கள் பிறந்திடா விடமொன் றெம்பிரா னிருந்தவீ ரிடமே. - 92


239 - தோற்றுயிர்க் குணவு நல்குமோர் தெற்றி சொற்றவை யுதவுமோர் தெற்றி,
தேற்றுசொன் மூகர்க் களிக்குமோர் தெற்றி தெற்றிமூன் றிவைநக ரெல்லை,
ஈற்றினிற் கீழபா லளக்கருந் தென்பா லியற்பெரும் பெண்ணைநன் னதியும்,
மேற்றிசைப் பவள சயிலமும் வடபால் வேங்கட வெற்புநான் கரணே. - 93


240 - மறைகளி னுருவாய்ப் பொன்மலர் தனிமா மலரொடு காயிலா தென்றுஞ்,
செறிதரு பலங்க ளுதவிநுங் கினர்க்குச் சித்திகள் வழங்குறு மெகினம்,
வெறிமலர் பலவும் மலர்ந்திடு மதூகம் விண்ணினை நோக்குமோ ரத்தி,
நறுநிழல் பிரிய திருந்ததோர் காஞ்சி நன்னகர் தன்னில்ஐந் தருவே. - 94


241 - உம்பரூண் பகிருஞ் சாதக மணிக ளுதவிடு மன்ன நூலுரைத்துக்,
மொம்புறு கிளைளை யலகுசொல் லாந்தை குறைபெறிற் கூவுறாக் கோழி,
இம்பரிற் பாவந் துடைத்திடு நேமி இவையறு புள்ளெழு நதிதான்,
கம்பைநற் பம்பை மஞ்சனீர் பிச்சி கலிச்சிபொன் மண்ணிவெ·காவே. - 95


242 - குரைபுனல் வேட்டோர்க் குதவியே திரியுங் கூவலம் பொதுக்குறு முயல்போய்க்,
கரிதொடர் பொதுவே ழிசையுறு பொதுமால் கண்டுயின் றிடுபொது வேறோர்,
உருவுசெய் பொதுவோர் புற்றின்மா முழவ மொலித்திடும் பொதுத்திசை மயக்கம்,
புரிதரு பொதுவென் னம்மைநோற் றருளும் பொற்பொது விவைகள் எண்பொதுவே. - 96


243 - முன்னுறு பிணிகள் மாற்றிடும் பொய்கை முதல்வர்கள் முடிவுறுங் காலைச்,
செந்நிற மாகும் பொய்கைமுக் காலந் தெரித்திடும் பொய்கைகண் ணுதலோன்,
தன்னடி காட்டும் பொய்கைவேண்டியது தந்திடும் பொய்கைமெய்ஞ் ஞானம்,
பொன்னிறஞ் செல்வம் வசீகரந் தருநாற் பொய்கையோ டொன்பதாம் பொய்கை. - 97


244 - விடந்தனை யகற்று மொருகலா ருயிர்கள் மெய்ப்பிணி மாற்றிடு பொருகல்,
அடைந்தவ ரெல்லா மிமையவ ராக வளித்திடு மொருகல்வெம் படையால்,
தடிந்திட வேறாய்த் துணிபடு முடலஞ் சந்துசெய் வித்திடு மொருகல்,
நெடும்படை வரினு மவையிரிந் தோட நிலைபெறீஇ நிற்குமாங் கொருகல். - 98


245 - துஞ்சினர் தம்மை யெழுப்புமாங் கொருகல் தொல்வழக் கறுத்திடு மொருகல்,
எஞ்சலி னிதியங் கெடுத்துளோர் வினவி லீனெக் காட்டிடு மொருகல்,
விஞ்சிய வினைக டீர்த்திடு மொருகல் வேந்தருக் கரசிய லுதவித்,
தஞ்சம தாக நின்றிடு மொருகல் தக்ககல் லையிரண் டவையே. - 99


246 - அயன்மனைச் சென்றோர் கணவரைப் பிழைத்தோர் அடிகளை யிகழ்ந்துளோர் அணுகில்,
துயருறு மூகை யாக்குமோர் மன்றஞ் சோரர்முன் சுழலுமோர் மன்றம்,
வியனிறம் பலவாத் தோன்றுமோர் மன்றம் விஞ்சைகள் வழங்குமோர் மன்றம்,
மயல்பரி கின்ற பொழுதொடு திசையின் மயக்கறத் தெளிக்குமோர் மன்றம். - 100


247 - நாகரூ ருய்க்கும் பிலத்ததோர் மன்றம் நவமணி யுதவுமோர் மன்றம்,
மாகர்பே ரமிர்த மிருக்குமோர் மன்றம் வடிவினை மறைப்பதோர் மன்றம்,
மேகநின் றறாது பொழியுமோர் மன்றம் வியன்பகல் கங்குலாக் கங்குல்,
ஆகிய பகலா விருப்பதோர் மன்றம் ஐயிரண் டொன்றுமன் றவையே. - 101


248 - ஈங்கிவை யன்றிச் சிலைகளுந் தருவு மிடங்களுங் கூவலும் நதியும்,
பாங்குறு குளனுந் தீர்த்தமும் பிலமும் பழனமுஞ் சோலையும் பிறவும்,
ஆங்கவை யனந்த கோடியுண் டோரொன் றளவில்அற் புதத்தன அவற்றைப்,
பூங்கம லத்தோன் சுருக்கற விரித்துப் புகலினு முலப்புற வற்றோ. - 102


249 - தோட்டலர் வனசத் திசைமுகன் முன்னஞ் சொற்றன னவனடி வங்கிக்,
கேட்டருள் சனகன் வியாதனுக் குரைப்பக் கேடில்சீர் வியாதனங் குணர்ந்து,
மாட்டுறு சூதன் றனக்கியம் புதலும் மற்றவன் முனிவரர்க் கிசைத்த,
பாட்டினில் அங்காக் காஞ்சியின் பெருமை பகர்ந்திடத் தமயனுக் கெளிதோ. - 103


250 - வேறு சொற்படு மினைய காஞ்சித் தொன்னக ரதற்கு நாப்பண்
கற்புறு மிமைய வல்லி கருணையால் வைகி நோற்கும்
பொற்புறு காமக் கோட்டம் போலவே அதற்கோர் சாரில்
எற்படு குமரகோட்டம் என்றொரா லயமுண் டன்றே. - 104


251 - ஆவதோர் குமர கோட்ட மதனிடை யரன்கண் வந்து
தூவுடை யெ·க மொன்றாற் சூர்முத றொலையச் செற்றுத்
தேவர்வெஞ் சிறையை மாற்றிச் சேண்மக பதிக்கு நல்கி
மேவிய குமர மூர்த்தி வியத்தக வுறையும் மாதோ. - 105


252 - மேவருங் கூடல் மேலை வெற்பினில் அலைவாய் தன்னில்
ஆவினன் குடியி னல்லே ரகந்தனிற் றணிகை யாதிப்
பூவுல குள்ள வெற்பிற் பொற்புறும் ஏனை வைப்பிற்
கோவில்கொண் டருளி வைகுங் குமரகோட் டத்து மேயோன். - 106


253 - வச்சிர மெடுத்த செம்மல் வைகிய துரக்கந் தன்னில்
அச்சுதன் பதத்துக் கப்பா லானதன் பதத்தில் விண்ணோர்
மெச்சுறு கந்த வெற்பில் வீற்றிருந் தருளு மாபோல்
கச்சியிற் குமர கோட்டங் காதலித் தமருங் கந்தன். - 107


254 - ஈண்டுள தரணி முற்று மெல்லைதீர் வான வைப்பும்
ஆண்டகை மகவான் சீரு மம்புயன் முதலோர் வாழ்வும்
மாண்டிடல் பிறந்த லின்றி மன்னிய வீடும் போற்றி
வேண்டினர் வேண்டி யாங்கு வேலவன் புரிந்து மேவும். - 108


255 - கொண்டலை யளக்கு நொச்சிக் குமரகோட் டத்துச் செவ்வேள்
கண்டிகை வடமுந் தூநீர்க் கரகமுங் கரத்தி லேந்திப்
பண்டையி லயனை மாற்றிப் படைத்தருள் வேடந் தாங்கி
அண்டர்க ளெவரும் போற்ற வருள்புரிந் தமர்ந்தா னன்றே. - 109


256 - ஆயதோர் காஞ்சி மூதூ ரதனிடை யம்பு யத்தின்
மேயவன் றனது புந்தி விமலமாம் பொருட்டான் மேனாள்
மாயவன் கமட மாகி வழிபடு தலத்தின்* முக்கண்
நாயகன் றனையர்ச் சித்து நாமக ளுடனாங் குற்றான்.
( * மாயவன் கமடமாகி வழிபடுதலம் - கச்சபாலயம். ) - 110


257 - உற்றிடு கின்ற நாளி லுலகிலில் லறத்தை யாற்றி
நற்றவம் பலவும் போற்றி நண்ணிய முனிவ ரேல்லாம்
மற்றவ ணேகிக் கஞ்ச மலர்மிசை யிருந்த வையன்
பொற்றிரு வடியைத் தாழ்ந்து போற்றினர் புல லுற்றார். - 111


258 - அத்தகே ளிந்நாள் காறும் அடியமில் லறத்தை யாற்றி**
அத்தல நகர மெங்கு மிருந்தன மினிமேல் நாங்கள்
சித்தம தொருங்க நோற்றுச் செய்கட னியற்றி வைக
மெய்த்தவ வனம தொன்றை விளம்பியே விடுத்தி யென்றார்.
( ** இல்லறத்தை ஆற்றல் - தென்புலத்தார் தெய்வம், விருந்து, சுற்றம்
முதலியோரை உபசரித்தல். ) - 112


259 - என்றலுந் தருப்பை யொன்றை யேழுல களித்தோன் வாங்கி
ஒன்றொரு திகிரி யாக்கி யொய்யென வுருட்டிப் பாரில்
இன்றிதன் பின்ன ராகி யெல்லிரு மேகி யீது
நின்றிடும் வனத்தி னூடே நிலைப்பட விருத்தி ரென்றான். - 113


260 - திருப்பது மத்து வள்ளல் சேவடிக் கமலந் தாழா
விருப்பொடு விடைகொண் டேக விரைவினி லன்னான் விட்ட
தருப்பையின் நேமி சென்றோர் தனிவனத் திறுத்த லோடும்
இருப்பிட மெமக்கீ தென்னா இருந்தவ ரிருந்தா ரங்ஙன். - 114


261 - தாமரை யண்ண லுய்த்த தருப்பையின் நேமி தன்னால்
நாமம தொன்று பெற்ற நைமிசா ரணியம் வைகுந்
தூமுனி வரர்க ளெல்லாஞ் சொல்லருந் தவத்தை யாற்றி
மாமறை நெறியி னின்று மகமொன்று புரித லுற்றார். - 115


262 - அகனமர் புலனோர் நான்கு மான்றமை பொருட்டா லாங்கோர்
மகவினை செய்து முற்றி வாலிதா முணர்ச்சி யெய்தி
இகலறு முளத்த ராகி யிருந்தன ரிதனை நாடிச்
சுகனென வுணர்வு சான்ற சூதமா முனிவன் போந்தான். - 116


263 - முழுதுணர் சூதன் றன்னை முனிவரர் கண்டு நேர்போய்த்
தொழுதனர் பெரியோய் எம்பாற் றுன்னலா லின்ன வைகல்
விழுமிது சிறந்த தென்னா வியத்தகு முகமன் கூறித்
தழையொடு தருப்பை வேய்ந்த தம்பெருஞ் சாலை யுய்த்தார். - 117


264 - திருக்கிளர் பீட மொன்று திகழ்தர நடுவ ணிட்டுச்
சுருக்கமில் கேள்வி சான்ற சூதனை யிருத்தி யாங்கே
அருக்கிய முதல நல்கி யவனது பாங்க ராகப்
பொருக்கென யாரும் வைகி யி·தொன்று புகல லுற்றார். - 118


265 - முந்தொரு ஞான்று தன்னில் முளரியந் தேவன் சொல்லால்
வந்திவ ணிருந்தே மாக மற்றியாம் புரிந்த நோன்பு
தந்தது நின்னை யற்றாற் றவப்பயன் யாங்கள் பெற்றேஞ்
சிந்தையி னுவகை பூத்தேஞ் சிறந்ததிப் பிறவி யென்றார். - 119


266 - அன்னது சூதன் கேளா ஆதியம் பரனை யேத்தி
மன்னிய வேள்வி யாற்றி வாலறி வதனை யெய்தித்
துன்னிய முனிவிர் காணுந் தொல்குழு வடைத லன்றோ
என்னிக ராயி னோருக் கிம்மையிற் பெறும்மே றென்றான். - 120


267 - அவ்வழி முனிவர் சொல்வார் அருமறை கண்ட வண்ணல்
செவ்விய மாணாக் கர்க்குட் சிறந்துளோய் திரற்சூ ராவி
வவ்விய நெடுவே லண்ணல் மாண்கதை தேர்வான் பன்னாள்
இவ்வொரு நசைகொண் டுள்ளே மியம்புதி யெமக்க தென்றார். - 121


268 - அம்மொழி சூதன் கேளா அழல்படு மெழுகே யென்னக்
கொம்மென வுருக வுள்ளங் குதூகலித் தவச மாகி
மெய்ம்மயிர் பொடிப்பத் தூநீர் விழித்துணை யரும்ப வாசான்
பொய்ம்மையில்படிவ முன்னித் தொழுதிவை புகலலுற்றான். - 122


269 - மன்னவன் மதலை யாசான் மாமகன் றனது மைந்தன்
பன்னுசொற் கொள்வோன் ஈவோன் வழிபடு பண்பின் மிக்கோன்
என்னுமிங் கிவருக் கீவ தேனைநூல் உங்கள் போலச்
செந்நெறி யொழுகு வார்க்கே செப்புவன் புராணம் முற்றும். - 123


270 - தனைநிகர் பிறரின் றாய சண்முகற் கன்பு சான்ற
முனிவிர்காள் உரைப்போர் கேட்போர் முத்திசேர் காந்தத் துண்மை
வினவினீ ரதனை யின்னே விளம்புவன் புலன்வே றின்றி
இனிதுகேண் மிக ளென்னா எடுத்திவை இயம்ப லுற்றான். - 124

ஆகத் திருவிருத்தம் - 270
- - -

7. பாயிரப்படலம் (271 -352)




271 - முந்தொரு காலத்தின் மூவுல கந்தன்னில்
வந்திடு முயிர்செய்த வல்வினை யதனாலே
அந்தமின் மறையெல்லா மடிதலை தடுமாறிச்
சிந்திட முனிவோருந் தேவரு மருளுற்றார். - 1


272 - நெற்றியில் விழிகொண்ட நமலன தருளாலே
அற்றமில் மறையெல்லா மாதியின் வரலாலே
மற்றத னியல்பெல்லாம் மயலற வேநாடித்
தெறறென வெவராலுஞ் செப்புவ தரிதாமால். - 2


273 - ஆனதொர் பொழுதின்க ணமரரும் முனிவோரும்
மாநில மிசைவைகும் மாக்களு மிறையுள்ள
ஞானம திலராகி நவின்மறை நெறிமாற்றித்
தீநெறி பலவாற்றிப் பனுவல்கள் சிலசெய்தார். - 3


274 - அவனியி லறமெல்லா மருவினை யெனநீக்பிப்
பவநெறி யறமென்றே பற்பல ருஞ்செய்யப்
புவனம துண்டோனும் போதனு மதுகாணாச்
சிவனரு ளாலன்றித் தீர்கில திதுவென்றார். - 4


275 - வேறு
இன்ன பான்மையை யெண்ணி யிருவரும்
பொன்னி னாடு புரந்திடும் மன்னனுந்
துன்னு தேவருஞ் சுற்றினர் வந்திடக்
கன்னி பாகன் லேகினார். - 5


276 - அந்தில் செம்பொ னணிமணிக் கொயிலின்
முந்து கோபுர முற்கடை யிற்புகா
நந்தி தேவரை நண்பொடு கண்டுநீர்
எந்தை யார்க்கெம் வரவிசைப் பீரென்றார். - 6


277 - தேவ தேவன் திருமுனன ரேகியே
காவல் நந்திக் கடவுள்பணிந் தெழீஇப்
பூவை வண்ணனும் போதனும் புங்கவர்
ஏவ ருஞ்செறிந் தெய்தின ரீண்டென்றான் - 7


278 - என்ற காலையின் யாரையு மிவ்விடைக்
கொன்றை சூடி கொணர்கெனச் செப்பலும்
நன்ற தேயென நந்தி வணங்கியே
சென்று மான்முதற் றேவரை யெய்தினான். - 8


279 - செம்மை போகிய சிந்தைய ரைக்கெழீஇ
எம்மை யாளுடை யானரு ளெய்தினான்
உம்மை யங்கு வரநுவன் றானினி
வம்மி னீரென வல்லையிற் கூவினான். - 9


280 - விளித்த காலை விழிவழி போதநீர்
துளிக்க நின்று தொழுது கவலொரீஇக்
களிக்கு நெஞ்சினர் கண்ணுத லெந்தைமுன்
அளித்தி யாலென் றவனுட னேகினார். - 10


281 - புடைக டந்திடு பூதர்கள் போற்றுமத்
தடைக டந்து தடுப்பரும் வேனிலான்
படைக டந்தவர் பாற்படு மெணணிலாக
கடைக டந்துபின் அண்ணலைக் கண்டனர். - 11


282 - முன்ன ரெய்தித் தொழுது முறைமுறை
சென்னி தாழ விறைஞ்சினர் சேணிடைத்
துன்னு மாதரந் தூண்டவந் தண்மினார்
உன்னு மன்பின் உததியி னாழந்துளார். - 12


283 - ஈர்க்கும் பாசத் திருவினை யின்றொடே
தீர்க்கின் றாமிவ ணென்னுஞ் செருக்கினால்
தூர்க்கின் றார்மலர் சோதிபொற் றாண்மிசை
போர்க்கின் றார்மெய்ப் பொடிப்பெனும் போர்வையே. - 13


284 - நேய முந்த நெடும்பகல் நீங்கிய
தாயெ திர்ந்திடு கன்றின் தகைமையாய்த்
தூய வந்தனையோடு தொழுமவர்
வாயின் வந்தன வந்தன போற்றினார். - 14


285 - அண்ண லீசன் வடிவை யகந்தனில்
எண்ணி னெல்லையி லின்பம் பயக்குமால்
கண்ணி னேர்வரு காட்சிய ராயிடின்
ஒண்ணு மோவவர் தஞ்செய லோதவே. - 15


286 - மேலை வானவர் வேந்தொடு மெம்பிரான்
சீல மேய திருமுன்பு மேவினார்
மாலு நான்முகத் தண்ணலும் வந்திரு
பாலு மாகிப் பரவின ரென்பவே. - 16


287 - வேறு
அம்புயா சனமுடை யண்ண லாழியான்
உம்பரோ டித்திற முற்றுப் போற்றுழிச்
செம்பொனேர் முடிமிசைத் திங்கள் சேர்த்திய
எம்பிரா னருள்புரிந் தினைய கூறுவான். - 17


288 - ஒன்றொரு குறைகளு முறாத பான்மையால்
நன்றுநும் மரசியல் நடந்த வோவெனாக்
குன்றவில்லுடையவோர் குழகன் செப்பலும்
நின்றமால் தொழுதிவை நெறியிற் கூறுவான். - 18


289 - ஆதியி லயன்படைப் பல்ல தென்னருண்
மேதியன் அடுதொழி லேனை விண்ணவர்
ஏதமில் செயன்முறை யாவுங் கண்ணுதல்
நாதநின் னருளினால்நடந்த நன்றரோ. - 19


290 - கருமணி மிடறுடைக் கடவு ளின்னுநீ
அருளுவ தொன்றுள ததனைக் கூறுவன்
இருநில மேலவர் யாரும் நின்றனைப்
பரமென வுணர்சிலர் மாயைப் பான்மையால். - 20


291 - நின்றன துரிமையை நிகழ்த்தி மேன்மையா
என்றனை யயன்றனை யெண்ணு வார்சிலர்
அன்றியும் நின்னுடன் அநேகர் தம்மையும்
ஒன்றென வேநினைந் துரைக்கின் றார்சிலர். - 21


292 - காலமுங் கருமமுங் கடந்த தோர்பொருள்
மூலமுண் டோவென மொழிகின் றார்சிலர்
மேலுமுண் டோசில விளம்ப விஞ்சையின்
பாலுறு முணர்ச்சியே பரமெண் பார்சிலர். - 22


293 - ஆற்றுறு புனல்படிந் தழுக்கு நீக்கலார்
சேற்றிடை வீழந்தென மறைகள் செப்பிய
நீற்றொடு கண்டிகை நீக்கி வன்மையால்
வீற்றொரு குறிகொடு மேவு வார்சிலர். - 23


294 - காமமோ டுவகையுங் களிப்பு நல்கலால்
வாமமே பொருளென மதிக்கின் றார்சிலர்
தோமிலா மூவகைத் தொழிலும் வேள்வியும்
ஏமமார் பொருளென இயம்பு வார்சிலர். - 24


295 - உரையிசை யாதியா மொலிகள் யாவையும்
பிரமம தெயெனப் பேசு வார்சிலர்
அரிதுசெய் நோன்பினா லடைந்த சித்திகள்
பொருள்பிறி திலையெனப் புகல்கின் றார்சிலர். - 25


296 - பெருமைகொள் குலந்தொறும் பிறந்து செய்திடும்
விரதமுஞ் சீலமும் வினைகண் மாற்றிட
வருகலும் பிறவுமா யங்கம் விட்டுயிர்
பரவுதல் வீடெனப் பகரு வார்சிலர். - 26


297 - அறிந்தறிந் துயிர்தொறு மதுவ தாகியே
பிறந்திறந் துணர்வெலாம் பெற்று நோன்பொடு
துறந்துகொன் றிட்டன துய்த்துக் கந்தமற்
றிறந்திடல் முத்தியா மென்கின் றார்சிலர். - 27


298 - நன்னல மாதரை நண்ணு மின்பமே
உன்னரு முத்தியென் றுட்கொள் வார்சிலர்
இன்னன துறைதொறு மெய்தி யாவருந்
துன்னரும் பிறவியுட் டுன்ப நீங்கலார். - 28


299 - இறந்தன வரம்புல கெவரும் வேதநூல்
பறந்தனர் பவநெறி மல்கி நாடொ றுஞ்
சிறந்தன வவையுயிர் செய்த தொல்வினை
அறிந்தரு ளையநீ யமைத்த வாயினும். - 29


300 - அங்கவர் போதமுற் றாசொ ரீஇமனச்
சங்கையு மகன்றுநின் சரண மேயுறப்
புங்கவ சிறிதருள் புரிய வேண்டுமால்
எங்கடம் பொருட்டென இறைவன் கூறுவான். - 30


301 - இனிதொரு திறமதற் கிசைத்து மாருயிர்
அனையவும் புரப்பவ னாத லாலவர்
வினையறு நெறிமையால் வேண்டு கிற்றிநின்
மனனுறு மெண்ணினை மறுத்தி மாசிலாய். - 31


302 - காதலி னருளுமுன் கலையின் பன்மையிற்
கோதறு மோர்கலை கொண்டு நேமிசூழ்
மேதினி யதனிடை வியாதன் என்றிடு
போதக முனியெனப் போந்து வைகுதி. - 32


303 - போந்தவ ணிருந்தபின் புகரி லாமறை
ஆய்ந்திடின் வந்திடு மவற்றை நால்வகை
வாய்ந்திட நல்கியே மரபி னோர்க்கெலாம்
ஈந்தனை யவரகத் திருளை நீத்தியால். - 33


304 - அன்னதோர் மறையினை யறிந்து மையமா
உன்னிய நிலையினர் உள்ளந் தேறவும்
மன்னவ ரல்லவர் மரபிற் றேரவும்
இன்னமோர் மறையுள திதுவுங் கேண்மதி. - 34


305 - ஏற்றம தாகிய மறைக்கும் யாமுனஞ்
சாற்றிய வாகமந் தனக்கு மாங்கது
வீற்றுற வருவது மன்று மேன்மையால்
ஆற்றவும் நமதிய லறையும் நீரதே. - 35


306 - என்பெய ரதற்கெனி லினிது தேர்ந்துளோர்
துன்பம தகற்றிடுந் தொல்பு ராணமாம்
ஒன்பதிற் றிருவகை உண்ட வற்றினை
அன்புடை நந்திமுன் னறியக் கூறினேம். - 36


307 - ஆதியில் நந்திபா லளித்த தொன்மைசேர்
காதைகள் யாவையுங் கருணை யாலவன்
கோதற வுணர்சனற் குமாரற் கீந்தனன்
நீதியொ டவனிடை நிலத்திற் கேட்டியால். - 37


308 - என்னலும் நன்றென இசைந்து தாழ்ந்தெழீஇ
முன்னவன் விடைகொடு முளரி யான்முதல்
துன்னிய வானவர் தொகையொ டெகியே
தன்னுல கத்தின்மால் சார்தல் மேயினான். - 38


309 - சார்தலு மயன்றனைச் சதம கத்தனை
ஆர்தரு மமரரை யருளி னவ்வவா
சேர்தரு புரந்தொறுஞ் செல்லற் கேவியே
கார்தரு மெய்யுடைக் கடவுள் வைகினான். - 39


310 - திருவொடு மருவியோன் செறிவுற் றெங்கணும்
பரவுறு மியல்பெறு பகவ னாதலால்
தரணயி லருளினாற் றனது சத்தியில்
ஒருகலை தன்னுட னுதிக்க வுன்னியே. - 40


311 - பங்கயத் தயன்வழிப் பராச ரப்பெயர்த்
துங்கநன் முனிபனித் தூவ லெல்லையிற்
கங்கையி லியோசன கந்தி யோடுற
அங்கவர் தம்மிட அவத ரித்தனன். - 41


312 - மற்றவன் வதரிகா வனத்தில் வைகியே
அற்றமில் வாதரா யணன்எ னும்பெயர்
பெற்றன னாகியெம் பிரான்ற னாணையாற்
கற்றிடா துணர்ந்தனன் கரையில் வேதமே. - 42


313 - மோனக முற்றிய முனிவர் மேலவன்
தானுணர் மறையெனுந் தரங்க வேலையில்
ஆனதோர் பொருளினை யறிஞர் பெற்றிடத்
தூநெறி கொண்டநாற் றுறைசெய் தானரோ. - 43


314 - கரையறு வேதமாங் கடலை நான்கவாய்ப்
பிரிநிலை யாக்கியே நிறுவு பெற்றியாற்
புரைதவிர் முனிவரன் புகழ்வி யாதன் என்
றொருபெயர் பெற்றனன் உலகம் போற்றவே. - 44


315 - விரவிய மறைதெரி வியாத னாமவன்
குரவனே யாஞ்சனற் குமாரன் றன்னிடை
இருவகை யொன்பதா யியல்பு ராணமும்
மரபொடு கேட்டவை மனத்துட் கொண்டவின். - 45


316 - ஏத்திடு சுருதிக ளிசைக்கு மாண்பொருள்
மாத்திரைப் படாவெனா மாசில் காட்சியர்
பார்த்துணர் பான்மையாற் பலவ கைப்படச்
சூத்திர மானவுஞ் சொற்று வைகினான். - 46


317 - மயலறு பயிலரே வைசம் பாயனர்
சயிமினி சுமந்துவாந் தவத்தர் நால்வர்க்கும்
வியலிருக் காதியாம் வேத நான்கையும்
உயர்வுறு தவத்தினான் முறையி னோதினான். - 47


318 - தோல்வரு மறைகளின் சூத்தி ரத்தையும்
மேல்வரு சயிமினி முதல மேதையர்
நால்வரு முணரிய நவின்று நல்கினான்
ஆல்வரு கடவுளை பனைய தன்மையான். - 48


319 - மெய்ம்முனி யனையரை விளித்து நீரினி
இம்மறை யியல்பினோ ரெவர்க்கு மீமென
அம்முறை நால்வரு மனைய வேதநூல்
செம்மையொ டளித்தனர் சிறந்து ளோர்க்கெலாம். - 49


320 - அன்னதோர் முனிவர னதற்குப் பின்னரே
பன்னருந் தொகையினாற் பதினெண் பான்மையாய்
முன்னுறு புராண நூல் முழுது முற்றிய
இன்னருள் நிலைமையா லெனக்கு நல்கினான். - 50


321 - வேதம துணர்தரு வியாத மாமுனி
காதல னாமெனைக் கருணை செய்திவை
ஓதுதி யாவரு முணர வென்றனன்
ஆதலி னுலகினி லவற்றைக் கூறினேன். - 51


322 - காமரு தண்டுழாய்க் கண்ண னாகிய
மாமுனி யருளினால் மறைகள் யாவையுந்
தோமறு புராண நூற் றொகுதி யாவையும்
நேமிகொ ளுலகெலா நிலவி யுற்றவே. - 52


323 - நம்பனார்க் கொருபது நார ணற்குநான்
கம்புயத் தவற்கிரண் டலரி யங்கியாம்
உம்பர்வான் சுடர்களுக் கோரொன் றென்பரால்
இம்பரி லிசைக்கும்அப் புராணத் தெல்லையே. - 53


324 - வேறு
எதிரில் சைவமே பவிடியம் மார்க்கண்ட மிலிங்கம்
மதிகொள் காந்தநல் வராகமே வாமனம் மற்சம்
புதிய கூர்மமே பிரமாண்டம் இவைசிவ புராணம்
பதும மேலவன் புராணமாம் பிரமமே பதுமம். - 54


325 - கருது காருடம் நாரதம் விண்டுபா கவதம்
அரிக தைப்பெயர் ஆக்கினே யம்மழற் கதையாம்
இரவி தன்கதை பிரமகை வர்த்தமாம் இவைதாம்
தெரியும் ஒன்பதிற் றிருவகைப் புராணமாந் திறனே. - 55


326 - இத்தி றத்தவாம் புராணங்கள் ஒன்பதிற் றிரண்டின்
அத்த னுக்குள புராணமீ ரைந்தினில் அடல்வேற்
கைத்த லத்தவன் காந்தத்துள் அன்னவன் கதையை
மெய்த்தொ கைப்பட வுரைப்பனென் றேமுனி விளம்பும். - 56


327 - வேறு
பூமிசை யிருந்த புத்தேள் புரிந்திடு புதல்வர் தம்முள்
கூமுறு தக்க னீன்ற இருந்தனிக் குமரி யான
தீமையை யகற்ற அம்மை சிந்தைசெய் திமைய மன்னன்
மாமக ளாகி நோற்று வைகினாள் வைகு நாளில். - 57


328 - அவுணர்க ளோடு சூர னவனிமேற் றோன்றி நோற்றுச்
சிவன்வர மளிக்கப் பெற்றுத் தேவர்யா வரையும் வென்று
புவிதனி லுவரி தன்னிற் புங்கவர் புனைவன் செய்த
தவலரு மகேந்தி ரத்தில் வைகினான் தானை சூழ. - 58


329 - அனையதோர் காலை வௌ¢ளை யடுக்கலிற் சனக னாதி
முனிவரர் தமக்குத் தொல்லை மூவகைப் பதமுங் கூறி
இனியதோர் ஞான போதம் இத்திற மென்று மோனத்
தனிநிலை யதனைக் காட்டித் தற்பர னிருந்தா னன்றே. - 59


330 - வீற்றிருந் தருளு மெல்லை வெய்யசூர் முதலா வுள்ளோர்
ஆற்றவுந் தீங்கு செய்தே யமரர்கள் சிலரைப் பற்றிப்
போற்றிடுஞ் சிறையி லுய்ப்பப் புரந்தரன் முதலா வுள்ளோர்
மாற்றருந் துயரின் மூழ்கி மறைந்தன ராகி வைகி. - 60


331 - சங்கரன் மோனத் தன்மை சதுர்முகற் குரைப்ப வன்னான்
வெங்கணை வேளை யுய்ப்ப விழித்தவன் புரநீ றாக்கிப்
பங்கயன் முதலா வுள்ளோர் பலரும்வந் திரங்கிப் போற்ற
அங்குறை மோனம் நீங்கி யவர்க்கருள் செய்தா னையன். - 61


332 - ஓரேழு முனிவர் தம்மை யோங்கலுக் கிறைவன் றன்பாற்
பேரருண் முறையாற் றூண்டிப் பெருமணம் பேசுவித்துப்
பாரறு நோன்பின் மிக்க பராபரை யன்பு தேர்ந்து
காரணி கண்டத் தெந்தை கணங்களோ டிமையம் புக்கான். - 62


333 - புடையக லிமையந் தன்னிற் புலனங்கள் முழுது மீண்ட
வடபுவி தாழ்ந்து தென்பா லுயர்தலும் மலயந் தன்னிற்
கடமுனி தன்னை யேவிக் கவுரியை மணந்து பின்னர்
அடன்மத வேளை நல்கி அநங்கனே யாகச் செய்தான். - 63


334 - மன்புனை கயிலை தன்னில மலைமக ளோடு மீண்டு
முன்பென வமர்ந்து நாதன் முழுதுல குயிர்கட் கெல்லாம்
இன்பமும் புணர்ப்பும் நல்கி யிமையவர் யாரும் வேண்டத்
தன்பெரு நுதற்கட் டீயாற் சரவன பவனைத் தந்தான். - 64


335 - அந்தமில் விளையாட் டுள்ள அறுமுகக் கடவு டன்னைத்
தந்திடு மெல்லை னனோன் தானையந் தலைவ ராக
முந்திய விறல்சேர் மொய்ம்பன் முதலிய விலக்கத் தொன்பான்
நந்திதன் கணத்தி னோரை நங்கைபா லுதிப்பச் செய்தான். - 65


336 - அண்ணலங் குமரப் புத்தேள் அலகிலா வாடல் செய்து
மண்ணுறு கடலும் வெற்பும் வானமுந் திரிபு செய்து
துண்ணெனக் குழவி யேபோற் றோன்றிட வதனை நோக்கி
வின்னவர் யாருஞ் சூழ்ந்து வெஞ்சமர் புரிந்து நின்றார். - 66


337 - ஆரமர் செய்து ளாரை யட்டுட னுயிரும் நல்கிப்
பேருரு நிலைமை காட்டிப் பெறலருங் காட்சி நல்கி
நாரதன் மகத்திற் றோன்றி நடந்ததோர் செச்சை தன்னை
ஊர்திய தாகக் கொண்டே ஊர்ந்தன னொப்பி லாதான். - 67


338 - மறைமுதற் குடிலை* தன்னின் மாண்பொருள் முறைக டாவி
வெறிகமழ் கமலப் புத்தேள் விடைகொடான் மயங்கக் கண்டு
சிறையிடை யவனை வைத்துச் செகமெலா மளித்துத் தாதை
குறையிரந் திடவே விட்டுக் குறுமுனிக் கதனை யீந்தான்.
( * மறைமுதற் குடிலை - வேதத்தின் முதற் பொருளாயுள்ள பிரணவம் ) - 68


339 - ஆவதோர் காலை யீச னறுமுகப் பரனை நோக்கி
ஏவரு முடிக்க வொண்ணா திருந்தசூர் முதலோர் தம்பால்
மேவினை பொருது வென்று விரிஞ்சனே முதலா வுள்ள
தேவர்த மின்னல் நீக்கிச் செல்லுதி குமர வென்றான். - 69


340 - விராவிய விலக்கத் தொன்பான் வீரரை வெய்ய பூதர்
இராயிர வெள்ளத் தோரை யிகற்படை மான்றே ரோடு
பராபர னுதவித் தூண்டப் பன்னிரு புயத்த னேகித்
தராதலம் புக்கு வெற்பைத் தாரக னோடு சென்றான். - 70


341 - பூவினன் முதலா வுள்ள புங்கவர் வழிபட் டேத்தத்
தேவர்தங் கிரியின் வைகித் தென்றிசை நடந்து தாதை
மேவரு மிடங்கள் போற்றி மேதகு சேய்ஞல்** நண்ணி
மூவிரு முகத்தன் முக்கண் முன்னவன் படையைப் பெற்றான்.
( ** சேய்ஞல் - சேய்ஞலூர் ) - 71


342 - பரனருள் படையைப் பெற்றுப் பராசரன் சிறார்***வந் தேத்தத்
திருவருள் புரிந்து சென்று செந்திலின் மேவிச் சூரன்
வரமொடு திருவுஞ் சீரும் வாசவன் குறையும் வானோர்
குரவனை வினவி யன்னான் கூறவே குமரன் தேர்ந்தான்.
( *** பராசரன் சிறார் - தத்தன், அனந்தன், நந்தி, சதுர்முகன், பருதிப்பாணி,
தவமாலி என்ற ஆறு புதல்வர்கள். ) - 72


343 - அறத்தினை யுன்னி யைய னாடல்சேர் மொய்ம்பன்**** றன்னை
உறத்தகு மரபிற் றூண்டி யொன்னலன் கருத்தை யோர்ந்து
மறத்தொடு கடலுள் வீர மகேந்திரம் அணுகி யேதன்
புறத்துள தானை யோராற் சூர்கிளை பொன்றச் செற்று. 73
( **** ஆடல் சேர் மொய்ம்பன் - வீரவாகு தேவர். ஆடல் - வீரம் ) - 73


344 - சீயமா முகத்த னென்னுஞ் செருவலான் றனையு மட்டு
மாயையுந் திருவுஞ் சீரும் வரங்களும் பிவு மாற்றி
ஆயிர விருநா லண்டத் தரசனாஞ் சூரன் றன்னை
ஏயெனு மளவில் வேலா லிருதுணி படுத்து நின்றான். - 74


345 - துணிபடு சூர னோர்பால் சூட்டுவா ரணமா யோர்பால்
பிணிமுக மாகி நிற்பப் பெருந்தகை அவற்றை யூர்தி
அணிபடு துவச மாக்கி அப்பகல் செந்தில் வந்து
மணிசொரி யருவி தூங்கும் வான்பரங் குன்றஞ் சேர்ந்தான். - 75


346 - தெய்வத யானை யென்னுஞ் சீர்கெழு மடந்தை தன்னை
அவ்விடை வதுவை யாற்றி அஙஙனஞ் சிலநாள் வைகி
மெய்விய னுலகிற் சென்று விண்ணவர்க் கரச னாக்கி
எவ்வமில் மகுடஞ் சூட்டி இந்திரன் றன்னை வைத்தான். - 76


347 - சில்பக லங்கண் மேவிச் சேனையோ டணங்குந் தானும்
மல்லலங் கயிலை யேகி மங்கைபங் குடைய வண்ணல்
மேல்லடி வணங்கிக் கந்த வெற்புறை நகரி* னேகி
எல்லையி லருளால் வைகித் தணிகையில் எந்தை வந்தான்.
( * கந்த வெற்புறை நகர் - கந்தகிரியிலிருக்கும் குமார லோகமுமாம். ) - 77


348 - சாரலி னோங்கு தெய்வத் தணிகைமால் வரையின்மீது
வீரம துடைய வேலோன் வீற்றிருந் திடலு மங்கண்
நாரதன் வந்த தாழ்ந்து நவைதவி ரெயின மாதின்
சீரெழில் நலத்தைக் கூற அவள்வயிற் சிந்தை வைத்தான். - 78


349 - வள்ளிமால் வரையிற் போந்து மானி**டைப் பிறந்த தெய்வக்
கிள்ளையை யடைந்து போற்றிக் கேடில்பல் லுருவங் காட்டிக்
கள்ளமோ டொழுகிப் பன்னாட் கவர்ந்தனன் கொணர்ந்து பின்னர்த்
தெள்ளுசீர் வேடர் நல்கத் திருமணஞ் செய்து சேர்ந்தான்.
( ** மான் - சிவமுனிவராகிய மான். ) - 79


350 - செருத்தணி வரை***யில் வந்து சிலபகல் வள்ளி தன்னோ
டருத்தியின் மேவிப் பின்னர் அவளடுங் கந்த வெற்பின்
வரைத்தனிக் கோயில் புக்கு வானமின் பிரிவு நீக்கிக்
கருத்துற இருவ ரோடுங் கலந்துவீற் றிருந்தான் கந்தன்.
( *** செருத்தணி வரை - திருத்தணிமலை. ) - 80


351 - என்றிவை யனைத்துஞ் சூதன் இயம்பலும் முனிவர் கேளாத்
துன்றிய மகிழ்வாற் சென்னி துளக்கியிங் கிதனைப் போல
ஒன்றொரு கதையுங் கேளேம் உரைத்தனை சுருக்கி யாங்கள்
நன்றிதன் அகலங் கேட்க நனிபெருங் காதல் கொண்டேம். - 81


352 - என்னவே முனிவ ரானோர் யாவரு மெடுத்துக் கூற
மன்னிய வருள்சேர் சூதன் மற்றவ ரார்வம் நோக்கி
அன்னவை சுருக்க மின்றி அறைந்தனன் அவ்வா றோர்ந்து
தொன்னெறி வழாதி யானும் வல்லவா தொகுத்துச் சொல்வேன். - 82

ஆகத் திருவிருத்தம் - 352

பாயிரம் முற்றிற்று.


முதலாவது காண்டம் (உற்பத்திக் காண்டம்)


செந்திலாண்டவன் துணை / திருச்சிற்றம்பலம்

1. திருக்கைலாசப் படலம் (353-374)




353 - பாசம் நீக்கித்தன் பாற்படு நல்லருள்
ஈசன் நல்கு மியல்பென வெய்தினோ£
தேசு மாற்றிச் சிறந்ததன் மெய்யொளி
வீசு கின்றது வௌ¢ளியங் குன்றமே. - 1


354 - ஆறு சூடிய வாதியம் பண்ணவன்
ஏறு மூரிவௌ¢ ளேறுமக் கண்ணுதல்
நீறு சேர்தரு கோலமும் நித்தனைத்
தேறும் அன்ர்தஞ் சிந்தையும் போன்றதே. - 2


355 - மோன நன்னிலை முற்றிய பெற்றியர்
ஞான மார்பிழம் பன்ன நலத்ததாய்
ஊனு லாய வுயிர்த்தொகை மாசொரீஇத்
தானெ லாஞ்செறிந் தென்னவுஞ் சான்றதே. - 3


356 - கான மார்ந்த கடுக்கைநற் கூவிளைத்
தேன வாம்பொழிற் றிண்சிக ரத்திடை
வான யாறு வருதலின் மாசிலா
ஞான நாயகன் போல நணியதே. - 4


357 - தண்ண றுந்துள வாற்புனை தார்முடிப்
பண்ண வன்கண் படுத்திடு பாற்கடல்
கண்ணு தற்குமொர் காமரு பீடமாய்
நண்ணு கின்றது போலும் நலத்ததே. - 5


358 - பொதியு மின்னமு தோடு பொருந்துவ
கதிரின் மிக்க கறையறு காட்சிய
மதிய மாயிர கோடி மணந்துதாம்
உதய மானது போன்றதன் வொண்கிரி. - 6


359 - நெற்றி மேனிமிர் கண்ணும் நிலாவொளிர்
பொற்ற டம்புய நான்கும் பொருந்துறப்
பெற்றெம் மானரு ளாற்பிரம் பொன்றுகைப்
பற்று நந்தி பரிவொடு காப்பது. - 7


360 - புரந்த ரன்முத லாகிய புங்கவர்
வரம்பின் மாதவர் மாசறு காட்சியர்
நிரந்த பூத கணவர் நிரந்தரம்
பரிந்து போற்றிப் பயில்வதம் மால்வரை. - 8


361 - மின்ன ரம்பைய ராடலும் விஞ்சையர்
கின்ன ரம்பயில் பாடலுங் கீழ்த்திசை
மன்ன னாதியர் வாழ்த்துமவ் வானவர்
இன்னி யங்களும் எங்கணு மார்ப்பது. - 9


362 - வேறு
கீணி லாவுறு முகெலாம் நீங்கியே கீழ்போய்ச்
சேணி லாவுறு பதமெலா முருவிமீச் சென்று
மாணி லாவுறும் அண்டத்தின் அடிமுடி மருவத்
தாணு வாயுல கிறுதியின் நிற்பதச் சயிலம். - 10


363 - மாடு சூழ்தரு மேருவே யாதியாம் வரைகள்
பாடு சேரினு மலகெலா மழியினும் பரந்து
கூடு மண்டங்கள் குலையினுங் கொன்றைவே ணியன்போல்
கேடி லாமலே அமர்வது கயிலையங் கிரியே. - 11


364 - நலம்வ ருங்கலை மதியமு மிரவியும் நாகர்
குலம்வ ருந்தனுக் குறையலா மற்றைய கோளும்
அலம ருஞ்சுடர் உடுக்களு மமரரும் பிறரும்
வலம்வ ரும்படி யிருப்பது கயிலைமால் வரையே. - 12


365 - ஏற்றம் மேருவே யாதியாம வரைகள்ஏழ் வகையால்
சாற்றும் நேமிகள் ஆழியங் கிரிபெருஞ் சலதி*
நாற்றி சைக்கணும் நொச்சிபோற் சூழ்தர நடுவண்
வீற்றி ருப்பது கயிலையா கியதனி வெற்பு.
( * ஏழ்வையால் சாற்றும் நேமிகள் - உவர் நீர்க்டல் முதலிய
ஏழுகடல்கள்.
ஆழியங்கிரி - சக்கரவாளகிரி. பெருஞ்சலதி - பெரும்புறக்கடல். ) - 13


366 - படியெ லாமுண்டும் ஏனமாய்த் தாங்கியும் பண்டோர்
அடியி னாலகப் படுத்தியு மிடந்துமுற் றருளும்
நெடிய மாயனு முலகிறு மெல்லையில் நிமலன்
வடிவ மேயெனக் காணுதற் கரியதவ் வரையே. - 14


367 - வேறு

அன்னதோர் கயிலை நாப்பண் அம்பொனின் சுடர்மேல் கொண்ட
நன்னெடுஞ் சிமயத் தொங்கல் நவையொரீஇ நண்ணிற் றென்னக்
கன்னியங் காப்பு மேவிக் கதிர்மணிக் கற்றை சுற்றப்
பொன்னெடுங் கோயி லொன்று பொலிவொடும் பொருந்திற் றன்றே. - 15


368 - திணிகதிர் ஆரந் தன்னிற் சிறந்தவச் சிரத்திற் செக்கர்
மணிதனில் முழுநீ லத்தின் மற்றைய வெறுக்கை தன்னில்
பணிபட வருளாற் றானே பலித்திடு சிகர மாதி
அணியினுக் கணியாய் மல்கும் ஆலயச் சூழ லெங்கும். - 16


369 - என்றுமீ றென்ப தின்றி யிருந்திடுங் கயிலை வெற்பிற்
பொன்றிகழ் நகரந் தன்னுட் பொருவிலாக் கோளும் நாளுந்
துன்றிய தன்மைத் தென்னத் தூமணிக் கதிர்கள் சூழ
மன்றம ருறையு ளொன்று வனப்பொடு வைகிற் றன்றே. - 17


370 - வேறு
சோதி சேருமத் தூமணி மண்டபத்
தாதி யான அரியணை யும்பரிற்
காத லாகுங் கவுரி*யொர் பாங்குற
வேத நாயகன் வீற்றிருந் தானரோ.
( *அருளே சிவசத்தி என்பது தோன்ற, ‘காதலாகுங் கவுரி’ என்றார்.) - 18


371 - பீடு கொண்ட பெருந்தவப் பெற்றியோர்
தேடு கின்ற சிறப்புடைத தாம்புகழ்
நாடு தும்புரு நாரதர் விஞ்சையர்
பாடு கின்றனர் பாணியின் பாற்பட. - 19


372 - அதிகன்** வேணியி லார்தரு கங்கையை
விதிவு ரந்தரன் விண்டுல கத்துள
நதிக டாழ்ந்தென நன்னயத் தேவல்செய்
கதியி னோர்கள் கவரிகள் வீசினார்.
( **அதிகன் - தன்னிகர் உயர்ச்சி இல்லாத் தலைவன் சிவபெருமான். ) - 20


373 - சீல வட்ட முடிப்பிறை தேடுவான்
ஞால வட்டத் தெழுதரு நாகர்போல்
ஏல வட்ட முகத்தரு கெங்கணும்
ஆல வட்ட மசைத்தனர் அன்பினோர். - 21


374 - ஆதி தன்னரு ளெய்தி அவன் றிருப்
பாத தாமரை சூடியப் பண்ணவன்
கோதி லாத திருவுருக் கொண்டுளோர்
பூத ராதியர் போற்றிமுன் ஈண்டினார். - 22

ஆகத் திருவிருத்தம் - 374.

2. பார்ப்பதிப் படலம் (375 - 410)




375 அன்னுழி உமையவ ளகத்து ளோர்செயல்
உன்னினள் துணுக்கமுற் றொல்லைதா னெழீஇத்
தன்னிக ரில்லவன் தாளி றைஞ்சியே
முன்னுற நின்றிவை மொழிதல் மேயினாள். - 1


376 - கற்பனை முதலிய கடந்த கண்ணுதல்
தற்பர நினையிகழ் தக்கன் தன்னிடைப்
பற்பகல் வளர்ந்தவன் பயந்த மாதெனச்
சொற்படு நாமமுஞ் சுமந்து ளேனியான். - 2


377 - ஆங்கதோர் பெயரையு மவன்க ணெய்தியே
ஓங்கிநான் வளர்ந்தவிவ் வுடலந் தன்னையுந்
தாங்கினன் மேலவை தரித்தற் கஞ்சினேன்
நீங்குவ னவ்வகை பதித்தி நீயென்றாள். - 3


378 - மன்னுயி ராகிய மரபு முற்றவும்
முன்னுற அருளிய முதல்வி யன்பினால்
இன்னண மியம்பலு மிதனைத் தேர்ந்திடாத்
தன்னிக ரில்லதோர் தலைவன் கூறுவான். - 4


379 - பத்திமை யெம்வயிற் பழுத்த பண்பினாற்
சத்தியே நின்னிகர் சகத்தி னில்லைநீ
இத்திறம் முயலுத லெல்லை தீர்ந்தநின்
புத்திரர் வீடுறு பொருட்டுப் போலுமால். - 5


380 - நற்றிற மேலுது நங்கை சிந்தனை
முற்றிய வேண்டுமேல் மொழிதும் மேருவின்
சுற்றம தாகிய இமையத் தொல்வரைக்
கொற்றவன் புரிவனாற் கொடிய மாதவம். - 6


381 - ஏதவன் பெறத்தவ மியற்று மென்றியேன்
மாதுனை மகண்மையா மரபிற் போற்றியே
காதலொ டெமக்கருள் கருத்த தாகுமால்
ஆதலிற் குழவியாய் அவன்க ணெய்துநீ. - 7


382 - தளர்ந்துடல் மெலிவுறத் தவஞ்செய் வெற்பினான்
இளஞ்சிறு குழவியா யெய்தி மற்றவன்
உளங்களி கூரவாண் டோரைந் தின்றுணை
வளர்ந்தனை புரிதிமேல் மாசில் மாதவம். - 8


383 - அணங்குநீ நோற்றுழி யகிலத் துள்ளதோர்
கணங்களுந் தலைவருங் கணிப்பில் தேவரும்
இணங்கினர் சூழ்தர வெய்தி நின்னையாம்
மணம்புரிந் தேகொடு வருது மீண்டெனா. - 9


384 - கடல்விட முண்டிடு கடவு ளித்திறம்
நடைமுறை யருளலும் நன்றே னாமகிழ்ந்
தடியிணை வணங்கிநின் றன்பிற் போற்றியே
விடையது பெற்றனள் விமலை யேகினாள். - 10


385 - அல்லலு முவகையு மன்பு மெம்பிரான்
எல்லையி லருளுமா யீண்டி முன்செல
மெல்லியல் உமையவள் வௌ¢ளி வெற்பொரீஇ
வல்லையின் இமையமால் வரையிற் போயினாள். - 11


386 - வள்ளியன் கடகரி வடிவின் வீழ்தரு
துள்ளியம் பனிமழைச் சோனை சூழ்தலால்
எள்ளருந் தன்மைசேர் இமைய மால்வரை
வௌ¢ளியங் கிரியென விளங்கு கின்றதே. - 12


387 - எண்டகு மிமையமு மிமைய மேலுறு
கொண்டலு மொன்றியே குலவு காட்சிய
தெண்டிரை மிசையெழு நஞ்சுந் தீயநஞ்
சுண்டிடு மணிமிடற் றிறையு மொக்குமால். - 13


388 - நீலுறு மழைமுகில் நிலவு மின்னொடு
மேலுற விளங்கிய இமைய வெற்பது
மாலவன் றிருவொடு மருவிக் கண்டுயில்
பாலுறு பன்னகப் பாயல் போன்றதே. - 14


389 - கரும்புய லார்த்துறு காட்சித் தாகியே
இரும்பனி யிடையறா விமையப் பொன்வரை
சுரும்பின மிசையொடு துவன்றிச் சுற்றிட
அரும்பவி ழாதவெண் கமல மன்னதே. - 15


390 - நீடிய மண்மகள் நிதியின் குப்பையைப்
பாடுறு தண்ணிலாப் படாம தொன்றினான்
மூடினள் வைத்திடு முறைய தேயெனக்
கோடுயர் பனிகொள்பொற் குன்றம் நின்றதே. - 16


391 - பொன்னெடுங் கிரியென வீண்டும் புங்கவர்
துன்னினர் சூழ்வரென் றுன்னித் தொன்மனு
அன்னதை மறைத்தனன் இரதத் தாவியால்
என்னவும் நின்றதால் இமையப் பொன்வரை. - 17


392 - குடகடல் குணகடல் கூடு றாவகை
இடையொரு வாலிதாம் ஏன மெய்தியே
தடபுரி சிறப்பென இமையத் தாழ்வரை
நெடுநில வளவையும் நிமிர்ந்து போயதே. - 18


393 - விண்ணவர் ததிக்கடல் கடைந்த வெண்ணெயுள்
அண்ணலம் பாற்கட லமுதம் வைத்தெனக்
கண்ணகன் பரும்பனி கவைஇய வெற்பின்மேல்
உண்ணிறை புனற்றட மொன்று வைகிற்றே. - 19


394 - அன்னதோர் தடத்திடை அசல மன்னவன்
மன்னிய கௌரிதன் மகண்மை யாகவுந்
தன்னிக ரிலாவரன் றனக்கு நல்கவும்
முன்னுற வருந்தவம் முயன்று வைகினான். - 20


395 - மெய்த்தவ மியற்றிய வெற்பன் காணிய
அத்தட மலருமோ ரரவிந் தத்தின்மேற்
பைத்ததோர் குழவியின் படிவத் துற்றனள்
எத்திறத் துயிரையு மீன்ற தொன்மையாள். - 21


396 - வேறு
ஆங்கவட் கண்டு வெற்பன் அடியனேன் பொருட்டா லம்மை
நீங்கினள் போலும் முக்க ணிருமலன் றன்னை யென்னா
ஏங்கினன் றனது நோன்புக் கிரங்கின னிவைக ளீசன்
ஓங்குபே ரருளே யென்னா வுகையங் கடலுட் பட்டான். - 22


397 - கண்ணுறு கோத வாரி கான்றிட வுரோம ராசி
உண்ணிக ழன்பு மிக்குப் புறந்தனி லொழுகிற் றென்ன
வண்ணன்மெய் பொடிப்பத் துள்ளி அடியனே னுய்ந்தே னென்னாத்
துண்ணெனப் பாடி யாடி யமலையைத் தொழுது நின்றான். - 23


398 - பங்கயத் தவிசின் வைகும் பராபரை தனைத்த னாது
செங்கயை னெடுத்து வல்லே சென்னிமேற் றாங்கி யேகித்
துங்கநல் லிமையத் தண்ணல் தொன்முறை யிருக்கை புக்கு
மங்கல மேனை யென்னு மனைவிகைக் கொடுத்தான் மாதோ. - 24


399 - கொடுத்தலுந் தொழுது வாங்கிக் கொற்றவ இவணின் பாங்கர்
அடுத்ததங் கெவனோ வென்ன அரசனும் நிகழ்ந்த வெல்லாம்.
எடுத்துரை செய்யக் கேளா வீசன தருளோ வென்னா
வடுத்தவிர் கற்பின் மேனை மனமுற மகிழ்ச்சி கொண்டாள். - 25


400 - சுரந்தன கொங்கை பாலுந் துண்ணென வொழுகிற் றெங்கும்
பரந்தன பொடிப்பின் போர்வை பரைதன தருளே யுள்ளம்
நிரந்தன கவலை யாவும் நீங்கின பவமுன் னுள்ள
கரந்தன விமையத் தண்ணல் காதலி தனக்கு மாதோ. - 26


401 - பரிபுரந் தண்டை யம்பொற் பாடகம் பாத சாலம்
விரவிய தொடியே சங்கு வியன்மணிச் சுட்டி யாரம்
அரிகெழு மதாணி பொற்றோ டங்கதம் பிறவுஞ் சாத்தி
வரையுறழ் தனப்பா லார்த்தி வரம்பெறு காப்பு நேர்ந்தாள். - 27


402 - வனைதரு பவளங் காலா வயிரமே மருங்கிற் கோலாப்
புனையிரும் பலகை நீலாப் பிரிந்தபொற் றொட்டின் மேலா
அனையவ டன்னை யுய்த்து மங்கையிற் கொண்டுந் தன்கோன்
மனமகிழ் திறனாற் போற்றி மதியென வளர்க்க லுற்றான். - 28


403 - மன்னுயிர் புவன மேனை மற்றுள பொருளுக் கெல்லாம்
அன்னையா யுதவி நாளு மவற்றினை வளர்த்து நிற்பாள்
தன்னையும் வளர்ப்பா ருண்டோ வளர்ந்தது சழக்கே யந்தக்
கன்னிதன் னருளின் நீர்மை காட்டினள் போலு மன்றே. - 29


404 - இந்தவா றினையர் பாலா யெம்பெரு மாட்டி வைகி
ஐந்தியாண் டகன்ற பின்றை யயன்முதற் றேவர் யார்க்குந்
தந்தையா ரருளை யுன்னித் தவமினிப் புரிவ னென்னாச்
சிந்தியா விமையத் தோங்கற் செம்மலுக் குரைக்க லுற்றாள். - 30


405 - நாற்பெருந் தடந்தோ ளண்ணல் நலத்தக வரைந்து கொள்வான்
நோற்பனா லினைய வெற்பி னுவலரு மொருசார் வைப்பின்
ஏற்பதோர் கன்னி மாரோ டெனைவிடுத் தருண்மோ வென்னாப்
பார்ப்பதி இயம்ப லோடும் பனிவரை யரசன் சொல்வான். - 31


406 - அன்னைகே ளெம்மின் நீங்கி யருந்தவ மாற்றற் கொத்த
தின்னதோர் பருவ மன்றா லியாண்டுமோ ரைந்தே சென்ற
நின்னுடல் பொறாதா லீண்டிந் நிலைமையைத் தவிர்தி யென்னக்
கன்னிகை நகைத்துக் கேண்மோ இ·தெனக் கழற லுற்றாள். - 32


407 - ஈசனே காப்ப னல்லால் யாரையும் பிறராற் றம்மால்
ஆசறப் போற்ற லாகா ததுதுண வாகு மீண்டுப்
பேசிய திறனு மன்னோன் பேரருள் மறாதி யென்ன
நேசமோ டியைந்திட் டன்னை நினைந்தநோன் பியற்று கென்றான். - 33


408 - மன்னனு மியைந்து பின்னர் மால்வரை யொருசார் தன்னில்
அன்னமென் னடையி னாளுக் கருந்தவச் சாலை யாற்றித்
தன்னுறு கிளைஞர் தம்பாற் றவத்தினால் வந்த பான்மைக்
கன்னியர் பலரைக் கூவிக் கௌரிபா லாகச் செய்தான். - 34


409 - நீலுறு மணிதோய் மேனி நிமலையங் கிமையத் துச்சி
மேலுறு மரசன் றேவி விடையினால் மடவார் பல்லோர்
பாலுறு பணியிற் சூழப் பரமனை யுன்னி யந்தச்
சாலையை யடைந்து மிக்க தவத்தினை யிழைக்க லுற்றாள். - 35


410 - தங்கிய வைக றோறுந் தாதையுந் தாவில் கற்பின்
மங்கையும் போற்றி யேக மாதுநோற் றிருந்தா ளிப்பால்
அங்கவட் பிரிந்த பின்றை அரும்பெருங் கயிலை மேய
வெங்கடம் பெருமான் செய்த பரிசினை இயம்ப லுற்றேன். - 36

ஆகத் திருவிருத்தம் - 410.

3. மேருப்படலம் (411 - 491)




411 பன்னருஞ் சிறப்பின் மிக்க பனிவரை யரசன் றன்பாற்
கன்னியம் புதல்வி யாகிக் கௌரிநோற் றிருந்த காலைத்
துன்னிய வவுணர் சூழச் சூரபன் மாவாம் வெய்யோன்
இந்நில வரைப்பின் அண்டத் திறைவனே யாகி யுற்றான். - 1


412 - மற்றது போழ்திற் றொல்லை மறைப்பொருள் வடத்தின் பாங்கர்ப்
பெற்றிடு சனக னாதி முனிவரர் பின்னும் பன்னாள்
அற்றமில் தவஞ்செய் தெந்தை யருளினாற் கயிலை நண்ணி
முற்றுணர் நந்தி போற்று முதலிலை வாயில் புக்கார். - 2


413 - நோன்மையின் முனிவ ரானோர் நுவலருங் காட்சி நந்தி
கான்முறை வணங்கி நிற்ப அனையவன் கருணை தன்னால்
வான்மலி கடவுட் கோயின் மந்திரங் கொண்டு செல்ல
நான்முகன் முதலோர்க் கெய்தா ஞானநா யகனைக் கண்டார். - 3


414 - மொழியது தவறல் செல்ல முற்றுடல் பொடிப்புக் கொள்ள
விழிபுனல் பெருகத் தீசேர் பெழுகென வுள்ளம் விள்ள
அழகிய மறைக்கு மெட்டா ஆதிநா யகனை நோக்கித்
தொழுதன ருவகை பூத்துத் துள்ளினர் துளக்க முற்றார் - 4


415 - மண்ணவ ரமரர் யாரை வணங்கினு மவைக ளெல்லாம்
நண்ணிய பரமன் றாளி னாற்பெருந் தவத்தி னோருந்
தண்ணளி நெறியிற் பல்காற் றாழ்ந்தன ரெழுந்து நின்று
பண்ணிசை மறைக டம்மால் துதித்திவை பகர்த லுற்றார். - 5


416 - இருட்பெருங் கடலுள்யாமத் தெறிமருத திடைப்பட் டாங்குப்
பொருட்பெருங் கடலாம் வேதம் புடைதொறு மலைப்ப விந்நாள்
அருட்பெருங் கடலே எய்த்தே மமைந்தில துணர்வி யாங்கண்
மருட்பெருங் கடலின் நீங்கும் வண்ணமொன் றருடி யென்றார். - 6


417 - நவையறு தவங்க ளாற்றி நல்லருள் படைத்த தொல்லோர்
இவைபுகன் றிடலு மன்பர்க் கௌ¤வருங் கருணை வள்ளல்
அவர்முகந் தெரிந்து நுங்கள் அறிவமைந் தடங்கு மாறு
தவலருஞ் சிறப்பின் நன்னூல் சற்றுது மிருத்தி ரென்றான். - 7


418 - என்றிவை யருள எந்தை யிணையடி தனாது முன்னர்
நன்றுணர் காட்சி கொள்ளும் நால்வரு மிருந்தார் அங்கட்
சென்றிடு நந்திப் புத்தேள் சிறப்புடை வதன நோக்கிக்
கொன்றையந் தொடையல் வேய்ந்த குழகனொன் றியம்பு கின்றான். - 8


419 - பூங்கனைக் கிழவ னன்றிப் புங்கவர் யார்போந் தாலும்
ஈங்குறத் தருதி யல்லை யீதுனக் கடைத்த தென்ன
ஆங்கது புரிவ னென்னா வமலனை யிறைஞ்சி யங்கண்
நீங்கியக் கணத்தின் நந்தி நெறிமுதல்போற்றல் செய்தான். - 9


420 - நந்திமுற் கடையைப் போற்ற ஞானநா யகனா மண்ணல்
முந்துறை சனக னாதி முனிவரர் தொழுது கேட்ப
அந்தமில் ஆக மத்தின் அரும்பதம் மூன்றுங் கூறப்
புந்திய தொடுங்கும் ஞான போதகம் போதி யென்றார். - 10


421 - என்னலும் நகைத்தி யாது மெதிர்மொழி புரிந்தா னல்லன்
பன்னுவ தன்றால் மற்றிப் பரிசினா லிருத்தல் கண்டீர்
அந்நெறி யாகு மென்றே அனையவர்க் குணர்த்து மாற்றால்
உன்னரும் பரத்தின் மேலோ னொருசெயல் புரித லுற்றான். - 11


422 - இருவரு முணரா அண்ணல் ஏனவௌ¢ ளெயிறி யாமை
சிரநிரை யநந்த கோடி திளைத்திடும் உரத்திற் சீர்கொள்
கரதல மொன்று சேர்த்தி மோனமுத் திரையைக் காட்டி
ஒருகணஞ் செயலொன் றின்றி யோகுசெய் வாரி னுற்றான். - 12


423 - இனையதோர் தன்மை காட்டி யெம்பிரா னுணர்த்தக் கண்டு
சனகனே முதலா வுள்ளோர் தவலரும் ஞான போதம்
பனுவலின் அளவன் றென்னும் பான்மையைத் தெரிந்து முக்கட்
புனிதன தருளாற் றத்தம் புந்தியி னொடுக்கம் பெற்றார். - 13


424 - தத்தமுள் ளொடுங்கல் பெற்ற தாபத கணத்தர் யாரும்
முத்தொழில் புரியும் மூவா முதல்வனாம் முக்கண் மூர்த்தி
மெய்த்தவ வடிவ முன்னி மேவினர் சூழ்ச்சி மேலோன்
சித்திரம் புணர்த்த பாவை செயலற இருக்கு மாபோல். - 14


425 - தற்பரன் இனைய வாற்றாற் றாபத ருணருந் தன்மை
அற்புத ஞான போத மளித்திடுங் கணம தொன்றின்
முற்படு கமலப் புத்தேள் முதலிய அமரர்க் கெல்லாம்
பற்பல யுகங்கள் சென்ற பிறர்க்கினிப் பகர்வ தென்னோ. - 15


426 - இத்திற ஞானபோத மென்றுதொன் முனிவர்க் கெந்தை
கைத்தலங் கொண்டு காட்டுங் கணத்தினில் அமரர்க் கெல்லாம்
மெத்துபல் லுகங்கள் சென்ற விழுமிய காஞ்சி தன்னில்
அத்தன்மெய் குழைத்த நங்கை அவன்விழி புதைத்த நாடபோல். - 16


427 - காரண முதல்வன் மோனக் காட்சியால் அமர ரெல்லாஞ்
சூரர மகளிர் தங்க டுணைமுலைப் போக மின்றி
ஆரிடர் நிலைமை தன்னை யடைந்தனர் அளக்கர் சூழ்ந்த
பாரிடை உயிருங் காமப் பற்றுவிட் டிருந்த வன்றே. - 17


428 - ஆரணன் றனது மைந்தர்க் கரும்பெறல் ஞான போதம்
ஓரிறை காட்டு முன்னர் உலகெலா மொருப்பா டொன்ற
ஈருடன் முயங்கு மார்வ மின்றியே யிருந்த யார்க்குங்
காரணன் சிவனே யென்கை கழறவும் வேண்டற் பாற்றோ. - 18


429 - பிணைவிழைச் சூழ்தந் துய்ப்பப் பெருமறை விதிவ ழாமல்
அணைவிழச் சடங்கிற் கொண்ட அரிவைய ரோடு தேவர்
இணைவிழைச் சியற்கை கூடா திரங்கினர் கவற்சி யெய்திப்
புணைவிழச் சலதி யாழ்ந்து புலம்புகொள் மாக்க ளேபோல். - 19


430 - வன்முலை யணங்கி னோரும் வானவர் யாருங் காமத்
தன்மையும் புணர்ப்பு மின்றித் தளர்ந்தனர் வறிஞர் தம்பால்
இன்மைகொண் டோர்கள் செல்ல ஈவது கூடா வெல்லைப்
புன்மையொ டிருவர் தாமும் புலம்புறு தன்மை யேபோல். - 20


431 - பொற்புருக் குறைவின் றுற்றும் புனமேல் மகளிர் மைந்தர்
அற்பொடு கலந்து காமத் தரும்பயன் கோட றேற்றார்
தற்பர வடுக னாணைத் தன்மையால் அலகை யீட்டம்
நற்புன னீழல் பெற்று நணுகருந் தன்மை யேபோல். - 21


432 - மாடக வெழாலை யன்ன பணிமொழி மகளிர் மைந்தர்
கூடின ரிருந்து மின்பங் கொண்டிலர் சிறார்கு ழாமும்
ஆடவர் குழாமும் வாட்கண் அரிவையர் குழாமு மேனைப்
பேடியர் குழாமும் வெவ்வே றுற்றிடு பெற்றி யேபோல். - 22


433 - இருந்திட விரிஞ்சன் மாயோன் இருவரு மீசன் றன்பாற்
பொருந்திடு முணர்ச்சி கொண்டு முத்தியிற் புக்க சேயுந்
திருந்துசீர் வசிட்டன் சொல்லாற் சிலையெனப் பன்னாள் நின்ற
அருந்ததி மாதும் போன்றார் ஆடவர் மகளி ரெல்லாம். - 23


434 - ஏமரு புவன மூன்று மினிதருள் கமலக் கண்ணர்
பூமட மாதர் தம்பாற் புணர்கிலர் பொருவில் வேளுங்
காமரு மகளிர் கூட்டங் கருதலன் இவர்போற் சிந்தை
ஆமையி னொடுங்கல் பெற்றார் ஆசையுள் ளோர்களெல்லாம். - 24


435 - மண்ணகத் துயிர்கண் முற்று மாதிரத் துயிர்கண் முற்றும்
விண்ணகத் துயிர்கண் முற்றும் வேற்றகத் துயிர்கண் முற்றும்
பெண்ணகத் தாண்மை கூடுஞ் சிறுநலம் பிழைத்த ஞானக்
கண்ணகத் திறைவற் கண்டு கடைநின்ற காட்சி யார்போல். - 25


436 - நாகமார் சடிலத் தண்ணல் நாற்பெருந் தவரு முய்ய
யோகுசேர் நிலைமை காட்டு மொருகணத் துயிரின் பொம்மல்
வாகைவே டானு நிற்க மையலும் புணர்ப்பு மற்ற
ஆகையால் அகில மெல்லா மவனென்கை தெரிந்த தன்றே. - 26


437 - சிலையொடு பகழி வாடத் திருமதிக் குடைசீர் குன்ற
வலிதளர் வெய்தத் தென்றல் மறிகடற் சுறவு தூங்க
அலைபுரி யாணை நீங்கி ஆடன்மா மதனு மாதின்
கலவிய தொழிந்தா னென்னிற் பிறர்செயல் கழறற் பாற்றோ. - 27


438 - சாலிகள் வளரு மெல்லை தடம்புனல் வறுமைத் தாக
வாலிது குரல்வாங் காது வருத்தொடு மாய்வ தேபோல்
மேல னருளாற் போகம் வெறுத்தலற் கருமல் கின்றி
ஞாலமன் னுயிர்கள் முற்றும் நாடொறுங் குறைந்த வன்றே. - 28


439 - முள்ளரை முளரிப் புத்தேள் முதற்புரி துணையே யன்றித்
தள்ளரு முயிர்கள் பின்னுந் தலைத்தலை மல்கா துற்ற
தௌ¢ளிதி னுலக மீன்ற தேவியின் றாகி ஈசன்
வௌ¢ளியங் கயிலை தன்னில் மேவிய மேலை நாட்போல் - 29


440 - இம்முறை நிகழ நாதன் ஈரிரு தவத்தி னோர்க்கும்
மெய்ம்மைகொ ளுணர்ச்சி காட்டி வீற்றிருந் தருளு மெல்லை
தெம்முயல் சூரன் தீங்கு செய்தலால் மகவான் வானோர்
தம்மொடுந் துறக்கம் விட்டுச் சசியொடுந் தரனி புக்கான். - 30


441 - மேகமூர் கடவுள் வௌ¢ளி வெற்பினி லேகி முக்கண்
ஏகநா யகனைக் காணு மெல்லையின் றாக மீண்டு
சோகமோ டம்பொன் மேருத் துன்னியே சூரன் மைந்தன்
மாகநா டழித்துச் சேயைச் சிறைசெய்த வண்ணந் தேர்ந்தான். - 31


442 - தமனிய மேரு வெற்பிற் றன்னுள பொருப்பா டெய்த
நிமலனை யுன்னிப் பன்னாள் நெடுந்தவ முழத்த லோடும்
இமில்விடை மிசைக் கொண் டங்கண் எம்பிரா னேகக் காணூஉ
அமரர்கோன் வணங்கிப் போற்ற அனையவ னருளிச் செய்வான். - 33


443 - நொந்தனை யளப்பில் கால நோற்றனை யாற்றல் தீர்ந்தாய்
இந்திர நினக்கு வேண்டிற் றென்னைய தியம்பு கென்னா
அந்தமி லறிவின் மேலோன் அறிகிலன் போலக் கேட்ப
வந்தனை புரிந்து போற்றி மகபதி புகல லுற்றான். - 34


444 - பன்னரும் பழிசேர் சூரன் பருவரற் படுத்திப் பின்னர்
என்னொரு புதல்வன் றன்னை இமையவர் பலரை வாட்டித்
தன்னகர்ச் சிறையிட் டெம்மூர் தழல்கொளீஇத் தவறு செய்தான்
அன்னவன் றன்னை யட்டே அளித்தியா லெம்மை யென்ன. - 35


445 - மெய்ம்மைய தகன்ற தக்கன் வேள்வியி னிருந்த பாவம்
நும்மிடை யிருந்த தற்றால் நோதக வுழந்தீர் மேனாள்
நம்மிடை யொருசேய் வந்து நணுகிவெஞ் சூரைக் காதி
இம்மென வும்மைக் காப்ப னெனப்புகன் றிறைவன் போனான். - 36


446 - மறைந்தனன் இறைவ னேக மகபதி யிரக்க மெய்திக்
குறைந்தனன் உணர்வு துன்பங் கூர்ந்தனன் குமர னங்கட்
பிறந்துமைக் காப்ப னென்றே பிரானருள் புரிந்த பெற்றி
சிறந்ததன் மனத்தி லுன்னித் தேறினன் உவகை செய்தான். - 37


447 - மாசறு காட்சி கொண்ட மாதவர்க் கருளி யெங்கோன்
தேசுறு கயிலை யுற்றான் உமையவ ளிமையஞ் சேர்ந்தாள்
ஆசறு குமரன் அன்னார்க் கடைவதெத் தன்மை யென்னா
வாசவ னிருந்து நாடி மனமிசைக் கவலை கூர்ந்தான். - 38


448 - மயர்வொடு துறக்க மன்னன் மனோவதி யென்னு மாண்டை
வியனக ரெய்தி யாங்கண் வீற்றிருந் தருளும் பொன்னின்
இயன்முறை மனைவி தன்பால் இல்லினை யிருத்தல் செய்தாங்
கயனுறு கடிமாண் கோயி லடைந்தனன் அமர ரோடும். - 39


449 - இனையதோர் காலை முக்க ணெம்பிரான் ஞானபோதம்
முனிவரர்க் குணர்த்தி வைகும் முறையினாற் படைப்பின் றாகித்
துனியொடு வேதா வைகுந் தொன்முறை யவையை நண்ணி
அனையவன் கழன்முன் றாழூஉ அளப்பில வழுத்தி நின்றான். - 40


450 - நிற்றலும் மகவான் றன்னை நீடருள் புரிந்து நோக்கிப்
பொற்றனிக் கமல மேய புங்கவர் முதல்வன் வானோர்
கொற்றவ வந்த தென்னை கூறுதி யென்ன லோடுஞ்
சொற்றனன் சூர பன்மன் செய்திடுந் துன்ப மெல்லாம். - 41


451 - வெய்யதோர் சூரன் செய்கை விளம்பியே முனிவர்க் கீசன்
ஐயமி லுணர்வு காட்டி யமர்வது முரைத்துத் தான்பின்
செய்யுறு தவங்கண் டன்னான் அருளிய திறனுஞ் செப்பி
உய்வதோர் பரிச தென்னோ உம்பரும் யானு மென்றான். - 42


452 - என்றலும் மலரோன் கேளா எவர்க்குமே லாகு மீசன்
ஒன்றிய வருளி னோனும் உற்றவர்க் குதவு வோனும்
அன்றியும் முறைசெய் வோனு மாதலின் முனிபோல் வௌ¢ளிக்
குன்றிடை யெம்மை யாளுங் குறிப்பின்வீற் றிருந்தா னன்றே. - 43


453 - செங்கணமா றானும் நானுந் தேடுதற் கரிதாய் நின்ற
எங்கடம் பிராற்கு மேலா எண்ணவோர் தேவு முண்டோ
அங்கவன் ஞான போதம் அறிவருக் குணர்த்தி வைகல்
நங்குறை முழுது மாற்றும் நல்லரு ளாகு மன்றே. - 44


454 - படமர்மதி மிலைச்சுஞ் சென்னிப் பகவனா ருயிர்க் ளெல்லாம்
அடுவதும் வருத்தந் தீர்க்கு மாரரு ளான வாபோல்
கொடியவெஞ் சூரன் றன்னைக் கொண்டேமக் கலக்கண் செய்கை
விடலரும் பவப்பே றார்த்தி வீடருள் கருணை யன்றே. - 45


455 - பெற்றிடுங் குரவ ரானோர் பிள்ளைகள் தம்பால் நோயொன்
றுற்றிடிற் பிறரைக் கொண்டும் உறுதுயர் செய்து தீர்ப்பார்
மற்றவர் தம்பா லன்போ வன்கணோ அதுபோல் நம்பாற்
பற்றிய பவங்கள் தீர்ப்பான் பரமனு மிவைகள் செய்தான். - 46


456 - தெருமரு கின்ற நம்பாற் றீங்கெலாம் நீங்கு மெல்லை
ஒருசிறி தணுகிற் றாகு மாதலால் உணர்வின் மேலோன்
பரிவொடு நின்பால் வந்து பரிசிவை யருளிப் போனான்
இருவினைப் பௌவ வேலை ஏறினம் போலு மன்றே. - 47


457 - ஆதலின் இறைவ னேமே லருள்செயும் அதற்கி யாமுந்
தீதற முயலு மாறு சிறிதுள திவற்றை மாயோற்
கோதினம் வேண்டுஞ் செய்கை யொல்லையிற் செய்து மென்னா
ஏதமில் கமலப் புத்தேள் இருக்கைவிட் டெழுந்தா னன்றே. - 48


458 - வேறு
அன்ன காலை யதுநன்று நன்றெனாத்
துன்னு வானவர் சூழலொ டிந்திரன்
பின்ன ராகப் பெயர்ந்துடன் வந்திடச்
சென்னி நான்கினன் செல்லுதல்மேயினான். - 49


459 - ஞாலம் யாவையும் நல்கிய புங்கவன்
வாலி தாந்தன் மனோவதி நீங்குறா
மேலை வைகுந்த மேன்னும் வியனகர்
ஆல யத்தின் அகன்கடை யேகினான். - 50


460 - அங்க வெல்லை யதுகண்டு நேமியுஞ்
சங்கு மேந்திய தானையங் காவலன்
செங்கண் மாயன்முன் சென்றுவிண் ணோருடன்
பங்க யத்தன் படர்ந்தது செப்பினான். - 51


461 - பணில மேந்திய பண்ணவன் அன்னரைக்
கொணர்தி யாலெனக் கூறி விடுத்துழி
இணையில் காவல னுய்த்திட இந்திரன்
கணமொ டெகினன் காசினி நல்கியோன். - 52


462 - பொருவில் மாமுனி புங்கவர் போற்றுதன்
னுருவு கொண்ட வுலப்பறு கண்ணர்கள்
மரபி னேத்த மணிப்பணிப் பீடமேல்
அரியி ருந்த அவைக்களம் நண்ணினான். - 53


463 - அன்ன மூர்தி அமருல காளுறும்
மன்ன னோடுமவ் வானவர் தம்மொடும்
பன்ன காசனப் பங்கயக் கண்ணவன்
பொன்னின் மாணடி போற்றி வணங்கினான். - 54


464 - தரைய ளந்திடு தாளினன் அவ்வழிக்
கருணை செய்துதன் காதல னாகிய
பிரம னுக்கொரு பீடிகை பெற்றியால்
அருளி யங்கண் அவனை இருத்தினான். - 55


465 - குல்லை மாமுடிக் கொண்டவன் அத்துனை
அல்லி மாம லரண்ணலை நோக்குறீஇ
ஒல்லும் நின்விதி யூறில தாகியே
செல்லு கின்றகொல் என்றலுஞ் செப்புவான். - 56


466 - கனகன் அச்சுறக் கந்திடை வந்தெழும்
அனக இத்திறங் கேட்க அறிவுடைச்
சனகன் முற்படு தாபதர் நால்வரும்
எனக ருத்திடை முற்பக லெய்தினார். - 57


467 - அறிவின் மிக்க அனையரை நோக்கியான்
பெறுவ தாமிப் பெருந்தொழி லாற்றியீண்
டுறுதி ரென்ன உளத்தது கொண்டிலர்
முறுவல் செய்து மொழிந்தனர் இவ்வுரை. - 58


468 - பாச வன்சிறைப் பட்டுப் படைப்பெனப்
பேச லுற்ற பெருந்தளை பூணலம்
ஈசன் மாணடி யெய்துதும் யாமெனா
மாசில் காட்சியர் வல்விரைந் தேகினார். - 59


469 - மாத வத்தினை மைந்தர்க ளாற்றலும்
ஆதி நாயகன் அவ்வுழி வந்துமக்
கேது வேண்டிய தென்றலு மெண்ணிலா
வேத வுண்மை விளம்புதி யாலென்றார். - 60


470 - என்ற லோடும் இறையவன் வௌ¢ளியங்
குன்ற மீதுதென் கோட்டிடை நிற்புறும்
ஒன்றொ ரானிழல் உற்று மறையெலாம்
நன்று ணர்த்திட நால்வருந் தேர்ந்தனர். - 61


471 - முந்தை வேத முழுது முணர்த்தியே
எந்தை யேக இருநிலம் போந்துதஞ்
சிந்தை யொன்றும் திறனரி தாதலின்
நொந்து பின்னரும் நோற்றலை மேயினார். - 62


472 - பின்னும் மைந்தர் பெருந்தவ மாற்றியே
தொன்ன லம்பெறு தூய வுளத்தராய்
என்னை யாளுடை யீச னருளினால்
மன்னும் வௌ¢ளி வரையிடை யேகினார். - 63


473 - ஏகல் பெற்றிடு மக்கட் கினிதுளம்
பாக முற்ற பரிசுணர்ந் தெம்பிரான்
ஆக மத்தின் அரும்பதம் மூன்றையும்
ஓகை பற்றி யுணர்வகை கூறியே. - 64


474 - கூனன் மாமதிக் கோடு மிலைச்சிய
வான நாயகன் மற்றவர் காண்டக
ஞான போதம் நவிலருந் தன்மையால்
மோன மேய முதற்குறி காட்டினான். - 65


475 - அந்த வெல்லை யரனருள் கண்டுதம்
புந்தி யொன்றியப் புங்கவன் தாள்மலர்
சிந்தை செய்து செயலற்று வைகினார்
முந்தி யாப்புறு முத்தளை மூட்டற. - 66


476 - வேத நாயகன் மெய்த்தவர்க் கோர்கணம்
போத யோகின் பொருண்மையைக் காட்டுழி
ஓத லாகும் உகம்பல சென்றன
சீத வானதி சேர்ந்ததொன் னாளினே. - 67


477 - அன்னை தன்னை அகன்றரன் யோகிபோல்
என்ன துஞ்செய லின்றி யிருத்தலான்
முன்னை ஆண்பெண் முயக்கம தின்மையாய்
மன்னு யிர்த்தொகை மல்கலின் றாயதே. - 68


478 - நவிறல் என்னினி ஞாலம் விசும்புளார்
இவறு காமப் புணர்ச்சிய தின்றியே
கவறல் கொண்டு கலங்கஞ ரெய்தினார்
தவறல் கொண்டது நல்குந் தனிச்செயல். - 69


479 - நல்கல் பெற்ற தமியனும் நாமகட்
புல்கல் பெற்ற புணர்ச்சியின் றாகியே
அல்கல் ¦பிறற அருந்தவ யோகரின்
ஒல்கல் பெற்றனன் உண்மையி தாகுமால். - 70


480 - நிற்க இங்கிது நித்தன்வ ரத்தினால்
ஒற்க மில்வள னுண்டிடு வெய்யசூர்
எற்கும் நித்தலு மேவலொன் றிட்டனன்
சொற்க நாட்டில் துயரினை நாட்டினான். - 71


481 - தேசு நீங்குறு தேவரை ஈண்டுள
வாச வன்றனை மாதிரத் தோர்களைப்
பாச னத்தொடு பற்றினன் நித்தலுங்
கூச லின்றிக்குற் றேவல்கொண் டானரோ. - 72


482 - நிறைபு ரிந்த நிலவினை வாளரா
மறைபு ரிந்தென வானகத் தோருடன்
இறைபு ரிந்தவிவ் விந்திரன் மைந்தனைச்
சிறைபு ரிந்தனன் தீத்தொழி லாற்றியே. - 73


483 - நிரந்த பல்லுயிர் தங்கட்கு நித்தலும்
அரந்தை மல்க அறிகிலன் போலவே
இருந்த னன்சிவன் என்னினிச் செய்வது
விரைந்து கூறுதி யென்று விளம்பினான். - 74


484 - அரிய தத்துவம் ஐயைந்தின் பேதமும்
மரபின் நாடினர் வாலுணர் வெய்திய
திருவி னாயகன் செங்கம லந்திகழ்
பிரமன் மாமுகம் நோக்கினன் பேசுவான். - 75


485 - வேறு
ஆவிக ளனைத்து மாகி அருவமா யுருவ மாகி
மூவகை யியற்கைத் தான மூலகா ரணம் தாகுந்
தேவர்க டேவன் யோகின் செயல்முறை கா மென்னில்
ஏவர்கள் காமங் கன்றித் தொன்மைபோ லிருக்கும் நீரார். - 76


486 - ஊழ்வினை நெறியால் முன்ன மொருபெரு வேள்வி யாற்றித்
தாழ்வினை யடைந்த தக்கன் றன்புடை யிருந்தோர் தம்பாற்
சூழ்வினை யெச்ச முற்றும் அருத்தியே தொலைத்துத் தொல்லை
வாழ்வினை யருள நாதன் மனத்திடை நினைந்தா னன்றே. - 77


487 - சூரெனு மவுணற் காற்றல் புரிந்ததுஞ் சுரர்கள் யாருஞ்
சார்வருந் திருத்தால் ஈசன் தவத்தருக் குணர்வு காட்டி
ஆருயிர் எவைக்கு மின்ன லாக்கிய வாறுந் தூக்கிற்
பேரருள் முறையே யன்றிப் பிறிதொரு செயலு மன்றால். - 78


488 - முனிவருக் குணர்வு காட்டும் மோனத்தை முதல்வன் நீங்கிப்
பனிவரை அணங்கை மேவில் படைப்பயன முற்றும் அன்னார்க்
கினியொரு குமரன் தோன்றில் சூர்கிளை யெனைத்தும் பொன்றுந்
துனியுறும் உலக மெல்லாந் தொன்மைபோ லுய்யு மாதோ. - 79


489 - அத்திற முற்று மாறொன் றறைகுவன் அகிலந் தன்னில்
எத்திறத் தருமால் கொள் வெய்திடுங் காமன் றன்னை
உய்த்திடின் முனிவர் தங்கட் குணர்வுசெய் மோனம் நீங்கிச்
சத்தியை மணந்து சேயைத் தந்திடு மெந்தை யென்றான். - 80


490 - பதுமபீ டிகையோ னன் பரிசுதேர்ந் துவகை யெய்தி
இதுசெயல் முறையே எந்தாய் ஏற்றன புகன்றா யென்ன
அதுபொழு தவனை நோக்கி அச்சுதன் அமலன் றன்பால்
மதனனை விளித்து வேண்டி விடுத்திநீ வல்லை யென்றான். - 81


491 - என்னலும் மலரோ னுள்ளத் திசைவுகொண் டெழுந்து மாயன்
பொன்னடி வணக்கஞ் செய்து விடைகொடு புலவ ரோடும்
மன்னொடு மங்கண் நீங்கி மனோவதி அதன்பாற் சென்று
தன்னக ரடைந்து கஞ்சத் தவிசின்வீற் றிருந்தா னன்றே. - 82

ஆகத் திருவிருத்தம் - 491.

4. காமதகனப் படலம் (492 - 601)




492 இந்திரன் வானவர் ஈட்டமொ டேகி
முந்துறு கஞ்ச முகட்டிடை யுற்றோன்
ஐந்திற னாகிய ஆசுக வில்வேள்
வந்திடு மாறு மனத்தில் நினைந்தான். - 1


493 - நினைந்திடு கின்றுழி நீனிற மாயோன்
முனந்தரு கின்ற முரண்டகு வில்வேள்
மனந்தனில் உன்னும் மலர்ப்பக வன்முன்
இனந்தரு சூழலொ டிம்மென வந்தான் - 2


494 - மாமறை யண்ணல்முன் வந்து பராவித்
தாமரை நேர்தரு தாடொழு தென்னை
நீமன மீது நினைந்ததெ னென்னாக்
காமன் வினாவ அயன்கழ றுற்றான். - 3


495 - கங்கை மிலைச்சிய கணணுதல் வெற்பின்
மங்கயை மேவநின் வாளிக மூவி
அங்குறை மோனம் அகற்றினை யின்னே
னுங்கள் பொருட்டினில் ஏகுதி யென்றான். - 4


496 - வேதனில் வாறு விளம்பிய கூற்றாங்
தீதுறு பொங்கழல் செய்யவள் சேயோன்
காதிடை யேநெறி யார்ககடி திற்போய்
ஏதமி லுள்ள மெரித்ததை யன்றே. - 5


497 - கிட்டி யரன்செயல் கேடுசெ யென்னுங்
கட்டுரை யேவரு காமனு ளெங்குஞ்
சுட்ட தெனிற்பிறை சூடிய வன்மெய்
அட்டிடு கின்றதும் அற்புத மாமோ. - 6


498 - இத்திற மாமல ரேந்தல் இயம்பக்
கைத்துணை கொண்டிரு கன்னமும் வல்லே
பொத்தியி னைந்து புராந்தகன் நாமஞ்
சித்தச வேளுரை செய்தன னம்மா. - 7


499 - ஈட்டுறு பல்பவ மெய்துவ தோர்சொற்
கேட்டன னென்று கிலேசம தாகி
வாட்டிய மென்மலர் போல்அணி மாழ்கிப்
பூட்டுவில் அண்ணல் புகன்றிடு கின்றான். - 8


500 - வேறு
வன்கண் ணருமா சறுகாட் சியர்பால்
நன்கண் ணுறினுய் யுநலம் புகல்வார்
உன்கண் ணுறின் இத் தவறோ தினையால்
என்கண் ணடிகட் கிலையோ அருளே. - 9


501 - வன்னப் புலிமங் கையைமா மலர்மேற்
பொன்னைப் பிறரைப் புணர்வுற் றிடுவான்
கன்னற் சிலைபூங் கணைகொண் டமர்செய்
தென்னத் தனைவென் றிசைகொண் டிலனோ. - 10


502 - வௌ¢ளைக் கமலத் தியைமெய் யுறவுந்
தௌ¢ளுற் றணிசெய் ததிலோத் தமைபால்
உள்ளப் புணர்வுற் றிடவும் முனையான்
பிள்ளைச் சமர்செய் திசைபெற் றிலனோ. - 11


503 - சீர்பெற் றிடுசெந் திருவைத் திருமால்
மார்பிற் குடியா யுறவைத் திலனோ
கார்பெற் றவிழிக் கலைமங் கையையுன்
ஏற்பெற் றிடுநா விலிருத் திலனோ. - 12


504 - தண்ணின் றகுழற் சசியென் றுரைசெய்
பெண்ணின் றலையுற் றிடுபெற் றியலால்
விண்ணின் தலைவற் குளமெய்ம் முழுதும
கண்ணென் றிடுபல் குறிகண் டிலனோ. - 13


505 - விசையுற் றிடுசெங் கதிர்மே லவர்கீழ்த்
திசையுற் றவராங் கொருசே யிழைபோல்
இசையற் றிடுபா கனிடைப் புணரா
வசையுற் றிடுபான் மைமயக் கிலனோ. - 14


506 - கதனத் தொடுவந் துகலந் தவர்பால்
இதநட் புறுமா மதியென் கணையால்
மதனத் தொடுதே சிகன்மா தையுறாப்
புதனைத் தருபான் மைபுணர்த் திலனோ. - 15


507 - முற்றே தின்மறைத் தொகைமூ தறிவால்
கற்றே துமுணர்ந் திடுகாட் சிபெறு
நற்றே வர்கள்யா ரையுநா ரியர்தங்
குற்றே வல்செயும் படிகூட் டிலனோ. - 16


508 - மறைதே ரும்வசிட் டன்மரீ சிமிகக்
குறிதா முனியத் திரிகோ தமன்நல்
அறிவால் உயர்கா சிபனா தியராந்
துறவோர் தமதாற் றல்தொலைத் திலனோ. - 17


509 - மன்னான் மரபுற் றிடுமா னவரைப்
பின்னா கியமும் மைகொள்பே தகரை
மின்னார் கண்மயக் கினில்வீட் டிலனோ
என்னா ணைகடந் தவர்யா ருளரே. - 18


510 - அறைபெற் றிடுமித் திறமா னவெலாம்
முறைபெற் றிடுமென் னின்முடிந் திடுமோ
பிறைபெற் றிடுகின் றபெருஞ் சடையெம்
மிறைபெற் றிடுசத் தியியற் றிடுமே. - 19


511 - மாமே முதலா கியவா னவர்தம்
பாலே அடல்வா கைபடைப் பதலால்
மேலே நதிசூ டியமே லவன்மேற்
கோலே வினன்வென் றிடல்கூ டுமதோ. - 20


512 - ஐதா கியசீர் கொடவன் முறைசெய்
நொய்தா னவர்போ லநுவன் றனையால்
வெய்தா மழலா கியமே லவன்மேல்
எய்தா லுமென்வா ளிகளெய் திடுமோ. - 21


513 - கையுந் நகையுங் கதிரார் விழியும்
மெய்யுந் தழலாம் விமலன் றனையான்
எய்யு படிசென் றிடினிவ் வுயிர்கொண்
டுய்யுந் திறமும் உளதோ உரையாய். - 22


514 - பற்றோ டிகலற் றபரம் பொருளை
எற்றோ மயல்செய் குவதீ சனையும்
மற்றோ ரெனநின் னின்மதித் தனையால்
சற்றோ அவனாற் றல்தவிர்த் திடவே. - 23


515 - சூறா வளிவை கியசூ ழலின்வாய்
ஏறா வொருபூ ளையெதிர்ந் துளதேல்
நீறா டியமெய் யுடைநின் மலன்மேல்
வீறாய் வினையேன் பொரமே வுவனே. - 24


516 - ஆறுற் றிடுசெஞ் சடையண் ணலுடன்
மாறுற் றவருண் டெனின்மற் றவர்தாம்
ஊறுற் றனரல் லதுளத் துயர்கொண்
டீறுற் றனரல் லதிருந் துளர்யார். - 25


517 - இந்நா ரணணா தியர்யா வர்களும்
அந்நா ளமலன் பணியாற் றிடலும்
அன்னா வவர்சிந் தனைமொய்ந் நகையால்
ஒன்னார் புரமட் டதுணர்ந் திலையோ. - 26


518 - எந்தாய் அருளென் றொரிளங் குமரன்
வந்தா தியையேத் தலும்வை துசினக்
கொந்தா ரழல்போல் வருகூற் றுவனை
அந்தாள் கொடுதைத் ததறிந் திலையோ. - 27


519 - முன்னைப் பகல்நீ யுமுகுந் தனுமாய்ப்
பன்னகற் கரிதா யபரம் பொருள்யாம்
என்னச் சினெய் தியிகழந் தவுனைச்
சென்னித் தலைகொண் டதுதேர் கிலையோ. - 28


520 - அடன்மே வுசலந் தரனா தியராய்ப
படிமே லுளதோர் ப·றா னவர்தாம்
முடிவார் அரனோ டுமுரண் டிடலுங்
கெடுமா றுபணர்த் ததுகேட் டிலையோ. - 29


521 - வீடெய் துறுநின் மகன்வேள் விநிலத்
தூடெய்தினர்யா வருமொப் பில்அரன்
மாடெய் தியவீ ரனின்மா னமொரீஇப்
பாடெய் தியபுன் செயல்பார்த் திலையோ. - 30


522 - அண்டா தவகந் தையொடா ழியின்வாய்
விண்டா னவரச் சுறமே வுவிடம்
உண்டான் நிகழ்கங் கையையோ ரணுவிற்
கொண்டான் அவன்வன் மைகுறிக் கிலையோ. - 31


523 - தரியா வுளமாற் கொடுதன் னிகழும்
அரியோ டுகைம்மா வையடற் புலியை
உரியா மிசைபோல் வையுடுக் கையெனப்
பரியா அரனுற் றதுபார்த் திலையோ. - 32


524 - ஓரார் தனதுண் மையையுள் ளமிசை
யாரா யினுமாற் றவகந் தைபெறின்
வாரா அவர்தம் வலிமாற் றிடுமால்
தேராய் கொல்பரஞ் சுடர்செய் கையதே. - 33


525 - இறுகின் றகடைப் பகலீ றிலதோர்
கறைதுன் றுமிடற் றிறைகண் ணினும்வீழ
பொறியொன் றதனாற் பொடிபட் டிடுநீ
அறிகின் றிலையோ அகிலங் களுமே. - 34


526 - இப்பெற் றியனா கியவீ சனையென்
கைப்பற் றியவிற் கொடுகந் தமலர்
அப்பிற் பொருகின் றிலன்ஆ ருயிர்மேல்
மெய்ப்பற் றிலரிச் செயல்வேண் டுவரே. - 35


527 - மேனா ளகிலந் தரமெல் லியலா
ஆனா வருடன் னையளித் தொருபால்
தானா கவிருத் தியதற் பரனை
நானா மயல்செய் வதுநன் றிதுவே. - 36


528 - வேறு
என்னா மதவேள் இசையா மறுத்திடலும்
பொன்னார் கமலப் பொகுட்டுத் தலைவந்த
மன்னான வேதா மனக்கவலை கொண்டுசில்போ
துன்னா நெடிதே உயிரா வுரைக்கின்றான். - 37


529 - வெண்மை யறிவால் தமைவியக்கும் விண்ணவர்பால்
அண்மை யிலனாகும் அண்ணலியல் கூறினையால்
உண்மை யிதுவாம் உவனைப் பொருவதுவும்
எண்மை யதுவோ எவர்க்கு மரிதன்றோ. - 38


530 - அன்ன பரிசே யெனினும் அடைந்தோர்தம்
இன்ன லகற்று மிறையருளால் இக்கருமம்
முன்னின் முடியும் ஒழிந்தோரால் முற்றுவதோ
முன்னின் இதற்கு முதற்கா ரணம்நீகாண். - 39


531 - எல்லார் செயலும் இறைவன் இயற்றுவதே
அல்லா திலையோ ரணுவுமசை யாதெவையும்
நில்லா தருளின்றேல் நீயின் றவன்பாலிற்
செல்லாய் உனது செயலுமவன் செய்கையதே. - 40


532 - செம்மாந்து தற்புகழுந் தேவர்குழு வும்மருள
எம்மான் பிறன்போ லிருந்தோர் துரும்புநிறீஇ
அம்மாதன் செய்கை யனைத்துமெனக் காட்டினனே
நம்மாலும் முற்றுஞ் சிலவென்கை நாணன்றோ. - 41


533 - பாடு திகழ்பாவை பல்லுயிரு மல்லனவும்
ஆடல்புரி விப்பான் அருவுருவாய் நின்றபரன்
நாடில் அவனையின்றி நம்மாலொன் றாகவற்றோ
ஏட இதனிலைமை இந்நாளு மோர்ந்திலையோ. - 42


534 - கையம்பு பூட்டிக் கருப்புச் சிலைகோட்டி
எய்யும் படிவழிக் கொண்டேகாய் இறுதியிலா
ஐயன் றனைநீ யதுவும் அவனருள் காண்
மெய்யங் கதற்கேது மேனாளே கண்டனம்யாம். - 43


535 - ஈங்கிதுவு மன்றி யெவரேனுந் தம்மடங்காத்
தீங்கு பெறினுதவி செய்யென் றிரந்திடலும்
ஆங்கொருவன் செய்யா ததுமருத்துத் தன்னுயிரைத்
தாங்கல் உலக நடைதனக்குத் தக்கதுவோ. - 44


536 - என்னானு மோருதவி யாதொருவன் யார்க்கெனினுந்
தன்னால் முடிவதெனில் தானே முடித்தல்தலை
சொன்னால் முடித்த லிடையாகுஞ் சொல்லுகினும்
பன்னாள் மறுத்துப் புரிதல்கடைப் பான்மையதே. - 45


537 - ஏவ ரெனினும் இடருற் றனராகி
ஓவில் குறையொன் றுளரே லதுமுடித்தற்
காவி விடினும் அறனே மறுத்துளரேற்
பாவம் அலது பழியும் ஒழியாதே. - 46


538 - உய்கை பொருளா வொருவர்க்கு மோருதவி
செய்கை யிலனேற் சிறியோன் கழித்தபகல்
வைகல் அதுவோ வறிதே அவன்வாழ்க்கை
பொய்கை மலர்ந்தகொட்டி போலும் பொலிந்துளதே. - 47


539 - அந்நா ரணனோ டமர்முற் றியமுனியைப்
பொன்£ டருளும் புலவோ ரிறையிரப்ப
வென்னாரு மென்பு விருத்திரனுக் காவுதவித்
தன்னா ருயிர்விட்ட தன்மைதனைக் கேட்டிலையோ. - 48


540 - மேலொன் றுளதோ விளம்ப எவரேவர்க்கும்
மூலந் தலைதெரிய முன்னோன் கடலெழுந்த
ஆலந் தனையுண் டமராக் கமுதளித்த
சீலந் தனைநீ சிறிதுந் தௌ¤ந்லையோ. - 49


541 - தேக்குஞ் சலதியிடைத் தீப்போ லெழுந்தவிடந்
தாக்கும் பொழுது தளரே லெனவுரையா
ஊக்கங் கொடுமா லொருகணநின் றேநம்மைக்
காக்கும் படிக்குக் கறுத்தசெயல் கண்டிலையோ. - 50


542 - ஆரா யினுமொருவர் அன்பிற் றலைப்பட்டுப்
பேரா தரத்தாற் பிறர்க்குதவி செய்வாரேல்
தீராத வெந்துயரிற் சேர்தலை மாய்தலிவை
பாரார் புகழே பயனென்று கொள்வாரே. - 51


543 - சூரந் தனில்வலிசேர் சூரபன்மன் ஏவலின்யாம்
ஆருந் துயர்கொண் டழுங்கினோம் அன்ன தினித்
தீரும் படிக்குச் சிவனொருசே யைத்தருவான்
ஓரைம் படைசெலுத்த உன்மையாம் வேண்டினமே. - 52


544 - ஆதலினால் எங்கள் அலக்கணகற் றும்பொருட்டுச்
சாதல் வரினுந் தவறோ புகழ்செய்வார்
ஏது வரினு மெதிர்செல்வார் எம்பணியிற்
போதி யினிமாறு புகலே லெனவுரைத்தான். - 53


545 - வேறு
பங்க யப்பொ குட்டி ருந்த பகவன் ஈது புகறலும்
ஐங்க ணைக்க ரத்தி னோன ரந்தை யெய்தி யாதியாம்
புங்க வற்கு மாறு கொண்டு பொருகி லேன்இ தன்றியே
இங்கெ னக்க டுத்த தொன்றி யம்பு செய்வல் என்றனன். - 54


546 - என்னும் வேலை அமர ரோடி ருந்த வேதன் முனிவுறா
நன்ன யந்த ழீஇயு ரைத்த நமது சொன்ம றுத்தியால்
அன்ன பான்மை புரியின் உய்தி அல்ல தேலு னக்கியாம்
துன்னு சாப மிடுதும் யாது துணிவு செலல்லு கென்றனன். - 55


547 - வெய்ய சாப மிடுது மென்று வெகுளி யால்மொ ழிந்தகேட்
டைய மேனி மதன வேள் அழுங்கி வெய்து யிர்த்தினிச்
செய்ய லாவ தென்னெ னத்தே ரிந்து சிந்தை தேற்றியே
வைய கம்ப டைத்த அண்ணல் வதன நோக்கி யுரைசெய்வான். - 56


548 - கேளி தொன்று ரைப்பல் வேத கேடு சூழும் நினதுவாய்ச்
சூளின் மேலை யியல்ப கன்று துன்பு ழந்து படுதலிற்
காள கண்டன் முன்பு சென்று கடிய வெய்ய கணைகடூஉய்
மாளி னுஞ்சி றந்த தம்ம மற்றும் உய்ய லாகுமே. - 57


549 - செற்ற நீர்மை கொள்ளல் ஐய செஞ்ச டைப்பி ரானிடத்
திற்றை வைகல் அமரி யற்ற ஏகு வேனி யானெனக்
கொற்ற வேளு ரைத்த லுங்கு ளிர்ந்த பூவி ருக்கைமேல்
உற்ற போதன் மகிழ்சி றந்து ளங்க ளித்து மொழிகுவான். - 58


550 - பணிந்த சொல்ல னாகி நாம்ப ணித்த வாபு ரிந்திடத்
துணிந்த வாறு நன்று நன்று சூலி பாலி னுனைவிடாத்
தணந்தி டேந்தொ டர்ந்து பின்பு சார்து மஞ்சல் போகெனா
உணர்ந்து கூறி மார வேளை ஓவி லன்பொ டேவினான். - 59


551 - ஏவு காலை மதனை வேள்வி யிறைதெ ரிந்து மைந்தயான்
தேவ ரோடு துயரு ழந்து சிறுமை பெற்ற தறிதியே
ஓவில் வாழ்வு தகுதி யென்னின் உமைம டந்தை தனையரன்
மேவு மாறு புரிகெ னாவி ரைந்து செல்ல நல்கினான். - 60


552 - நல்க லுங்க ரங்கள் கூப்பி நான்மு கத்தன் உலகொரீஇ
அல்கு தன்பு ரத்து நண்ணி அவ்வி யற்கை கூறியே
ஒல்கு தேவி யைத்தெ ளித்தொ ருப்ப படுத்தி நறியதேன்
பில்கு வாளி யிட்ட தூணி பின்னி யாத்தி றுக்கினான். - 61


553 - கயக்க ணின்ற பூவின் மிக்க காம காண்டங் கன்னல்வில்
இயக்க மான பார வில்லெ டுத்து மொய்மபி லேந்தியே
தயக்க முற்று லாய செய்ய தண்ணென் மாவி ளந்தளிர்
வயக்க டுங்கண் வாள மொன்று மாம ருங்கு வைத்தரோ. - 62


554 - கோகி லங்க ளான வுங்கு ழாங்கொள் வேலை யானவுங்
காக ளங்கண் முரச மாய்க்க றங்க ஓதம் யாவதுஞ்
சீக ரங்க ளாய சைந்து செல்ல மீன கேதன
மாக வும்ப ருலவ வெண்ம திக்கு டைநி ழற்றவே. - 63


555 - பொருவில் கிள்ளை யென்னு மாக்கள் பூண்ட தென்றல் வையமேல்
இரதி யோடு மேறி வேளி ருந்த தொல்லை யுலகினை
அரித கன்று குறிகள் வெய்ய அளவை யின்றி நிகழவே
பரமன் வைகு கயிலை யம்ப ருப்ப தத்தை யணுகினான். - 64


556 - கயிலை கண்டு தொழுது தேரி ழிந்து காம வேள்தனக்
கயலில் வந்த பரிச னத்தை அவண்நி றுத்தி மாதுடன்
பயிலும் வில்லும் வாளி யும்ப £த்து வல்லி யத்தினைத்
துயிலு ணர்த்தும் மான்எ னத்து ணிந்து போதல் மேயினான். - 65


557 - கூறு லாவு மதிமி லைந்த குழகன் வைகு கயிலைமேல்
கூறி யேத னாது கையி ருந்த கார்மு கம்வளைஇ
மாறில் ஏவு பூட்டி யங்கண் வைகு புள்ளும் மாக்களும்
ஊறி லாதி ருந்த காம முன்னு வித்தல் முன்னினான். - 66


558 - பொருலில் காம னின்ன தன்மை புந்தி கொண்டு மற்றவண்
விரவு புள்ளின் மீதி னும்வி லங்கின் மீதி னும்மலர்ச்
சரமெ லாம்வி டுப்ப வாதி தனது மந்தி ரத்துமுன்
அருளி னோடி ருந்த நந்தி யடிகள் அன்ன கண்டரோ. - 67


559 - கொம்மெ னச்சி னம்பு ரிந்து கொடிய பூசல் மதனனால்
தம்மி யற்கை யாமி தம்ம சரத மென்று நினைவுறா
உம்மெ னத்தெ ழித்து ரப்ப வொலிகொள் புள்ளி லங்கின்மேல்
வெம்மை யிற்செ லாது மாரன் விசிகம் விண்ணின் நின்றவே. - 68


560 - நிற்ற லோடு மவ்வி யற்கை நின்று நோக்கி நெடியவேள்
கொற்ற நீடு சூர லொன்று கொண்டு கோபு ரத்தலைத்
தெற்றி மேலி ருந்த நந்தி தேவர் காப்பும் ஆணையும்
முற்று நோக்கி நெடிது யிர்த்து ளந்து ளங்கி விம்மினான். - 69


561 - விம்மி நந்தி தேவர் முன்வி ரைந்து சென்று தாழ்ந்தெழூஉச்
செம்மை செய்க ருத்த னாய்த்தி கழ்ந்து போற்றெ டுத்தலும்
இம்ம லைக்கண் வந்த தென்னை யெனஅ யன்பு ணர்ப்பெலாம்
மெய்ம்மை யாவு ணர்த்த லும்வி னாவி ஈது ளங்கொள்வான். - 70


562 - வேத னாதி யான தேவர் விழும நோய கன்றிடும்
ஏது வால்வி டுத்து ளார்க ளிவனை யீசன் யோகுறும்
போதில் யாவர் வருகி னும்பு காது செய்தி மதனவேள்
சாத லெய்து வான்வ ரின்த டேலெ னாவி யம்பினான். - 71


563 - புன்மை யாம்ப கூத்த டிந்து புரையில் வேள்வி யாற்றியே
தொன்மை போவெ ழுப்பு மாறு கருதி சோற்ற வாறுபோல்
மன்ம தன்ற னைப்ப டுத்து மாதை வேட்டு மற்றதன்
பின்மு றைக்கண் நல்க எம்பி ரானி னைந்த னன்கொலாம். - 72


564 - ஆகை யாலி தருள தேயி வன்வ ரத்தும் ஆணையென்
றோகை யாலு ணர்ந்து வேளை நோக்கி உம்ப ராகுலம்
போகு மாறி யற்றல் செய்த பொருவி லாத கருணைசேர்
ஏக நாய கன்றன் முன்ன ரேகல் வேண்டு மோவென்றான். - 73


565 - நந்தி தேவன் இனைய வாறு நவில வேயு ணர்ந்துவேள்
எந்தை கேட்டி யாலி தொன்றெ னக்கொ ரீறு குறுகினும்
அந்தி வேணி யண்ணல் முன்னம் அணுகு மாற மைந்திவண்
வந்த னன்ன தற்கி யைந்த வகைமை நல்கு வாயென. - 74


566 - இகலு மன்பு மிறையு யின்றி யெவ்வு யிர்க்கு முள்ளதோர்
புகுதி நாடி முறையி னைப்பு ரிந்து சேர்ப வர்க்குமேல்
தகுதி செய்து கருணை கூர்ச யம்பு முன்பு சார்தியேல்
மிகுதி கொண்ட மேலை வாய்தல் மேவி யேகு கென்றனன். - 75


567 - என்ற லுங்க ரங்கு வித்தி றைஞ்சி மார னேர்புறீஇ
நன்றி லங்கு வேத்தி ரக்கை நந்தி தேவர் விடைதரச்
சென்று மேலை வாயில் சார்ந்து தேவ தேவன் நீற்றழற்
குன்ற மென்ன மோன மோடி ருந்த வெல்லை குறுகினான். - 76


568 - வேறு
ஓருதனிச் சிம்புள் வேந்தன் உறைந்தது கண்ட சீயக்
குருளையின் அமலன் றன்னைக் கோலமால் புதல்வன் காணா
வெருவரு முளத்த னாகி வியர்த்துமெய் பனியா வுட்கிப்
பருவர லுழந்து கொண்ட படையொடுங் கடிதில் வீழ்ந்தான். - 77


569 - எழுதரு மதனா மேகம் இறைவனைக் கண்டே யஞ்சி
விழியிருண் மூடக் கோல வில்லிட்டு வியர்ப்பின் வாரி
மழைபட இடியார்ப் பெய்த மார்புமற் றதுவீழ் கின்ற
தொழின்முறை புதரங்க காட்டத் துளங்கிவீழ்ந் திட்ட தன்றே. - 78


570 - அஞ்சிவீழ் குற்ற மாரன் அறிவிலா தவச மாகத்
துஞ்சினன் கொல்லோ வென்னாத் துயருழந் தெடுத்துத் தேவி
கஞ்சநேர் கரத்திற் றாங்கிக் கடிவகை யுய்த்துத் தேற்ற
நெஞ்சமே லுணர்ச்சி கூட இனையவை நினைந்து நைவான். - 79


571 - முறுவலின் எயின்மூன் றட்ட முதல்வனைப் பொருதி யென்றே
நறைமலர் அயனு மேனைத் தேவரும் நாகர் கோனும்
உறுதுய ரகல இங்ஙன் உய்த்தனர் வினையேற் கின்னே
இறுதிவந் தணுகிற் றாகும் இதற்றுமோ ரைய முண்டோ. - 80


572 - எண்டகு குணத்தின் மேலாம் இறையவன் இருந்த வண்ணங்
கண்டலும் வெருவி யாவி காண்கிலன் அவனை யென்கைக்
கொண்டதோர் கணைகள் வாகை கொள்ளுமோ இனைய பான்மை
அண்டரும் அயனும் யாரு மறிகிலர் போலு மன்றே. - 81


573 - தாக்கினாற் வலிபெற் றுள்ள மருத்தின்னமுன் தனித்த தீபம்
போக்கினால் நிற்ப துண்டோ அனையது போலத் தேவர்
வாக்கினால் மனத்தா லெட்டா வள்ளன்மு னுய்த்தா ரன்னான்
நோக்கினால் இனிச்சில் போதின் நுண்பொடி யாவன் போலாம். - 82


574 - ஏமுற வுலக மெல்லா மீறுசெய் முதல்வன் றன்னைப்
பூமலர் கொண்டி யானே பொருகின்றேன் நகையீ தன்றே
ஆமிது விதியின் செய்கை யதனையார் கடக்க வல்லார்
தாமரை முதல்வற் கோனுந் தள்ளருந் தகைய தன்றே. - 83


575 - ஈங்கிவை யமலன் சூழ்ச்சி யாவதோ முடிவ தோரென்
தூங்கியான் கிடந்த லொல்லா துண்ணென வெழுந்து வில்லும்
வாங்கினன் சரமும் பூட்டி வல்லவா றிழைப்பன் ஐயன்
பாங்குற நின்று மேலே பட்டவா படுக வென்றான். - 84


576 - இனையன பலவு முன்னி யெழுந்துமா மதவே ளிட்ட
தனுவினை யெடுத்து வாங்கித் தண்மலர் விசிகம் பூட்டி
மனைவிதன் னகலாள் செல்ல மதிக்குறை தவழ்ந்த சென்னிப்
புனிதன தொருசார் போகிப் பொருவகை முயன்று நின்றான். - 85


577 - மாரவே ளீண்டு நிற்ப மனோவதி நகரின் மேய
ஆரண முதல்வன் றன்னை அமரர்கோன் தொழுது நோக்கிக்
காருறழ் கண்டன் றன்பாற் காமனை விடுத்தி யன்னான்
போரிய லுணர்வான் அங்கட் போதரல் வேண்டு மென்றான். - 86


578 - சதமகன் இனைய கூறத் தண்மலர்க் கடவு ணேராக்
கதுமென வெழுந்து வானோர் கணத்துட னனையன் போற்றப்
பொதிதரு கயிலை யந்தண் பொருப்பின்மே லொருசார் போகி
மதனியல் தெரிந்து முக்கண் வள்ளலை வழுத்தி நின்றார். - 87


579 - எறிதரு கணிச்சிச் செங்கை யீசன்மே லிலக்க நாடுங்
குறியினர் போல நின்ற கொடுந்தொழில் மாரன் றுஞ்சு
நெறியினர்க் கச்ச முண்டோ நினைத்தது முடிப்ப னென்னா
நறுமலர் வாளி ஐந்து நாதன்மேற் செல்ல விட்டான். - 88


580 - விட்டவெம் பகழி யைந்தும் வியத்தகு விமலன் மீது
பட்டலுஞ சிறிதே வேளைப் பார்த்தனன் பார்த்த லோடுங்
கட்டழல் பொதிந்த நெற்றிக் கண்ணது கடிதே காமற்
கட்டது கயிலை முற்றுஞ் சூழ்புகை பரவிற் றன்றே. - 89


581 - ஆலையஞ் சிலைவேள் ஆகம் அழல்படக் கயிலை யின்கண்
ஏலவெம் புகையுந் தீயு மெழுதரு மியற்கை நாடின்
மாலயன் முதலோர் யாரு மதித்துழி விரைந்து பாலின்
வேலையின் நடுவு தீய விடமெழுந் தனைய தம்மா. - 90


582 - செறிந்ததீப் புகையின் மாலை செல்லலுங் குணபால் வாய்தல்
உறைந்ததோர் நந்தி தேவன் ஒல்லையி லதனைப் பாரா
இறந்துபா டாயி னான்கொல் ஏகிய மதன னென்னா
அறிந்தரோ உடைந்தார்க்* கோதி யொருசெய லறைய லுற்றான்.
( பா-ம் - * அ¨நிதார்க் ) - 91


583 - நுண்ணிய வுணர்வின் மிக்கீர் நுமக்கிது புகல்வன் எங்கோன்
கண்ணுத லுமிழ்ந்த செந்தீக் காமனைப் பொடித்த தன்றால்
அண்ணலை யெய்வ னென்னா அனையவன் றுணிவிற் கூறித்
துண்ணென ஈண்டு வந்த செயற்கையே சுட்ட போலும். - 92


584 - இன்னினி மகிழ்நன் றுஞ்சு மியற்கையை யிரதி நாடி
வன்னிபெய் யலங்கல் போலாய் வயிறலைத் திரங்கி யெங்கோன்
தன்னைவந் திரப்ப வேளைத் தருகுவன் காண்டிர் அந்த
முன்னவன் அணுக்கட் காய முறைபுரி யருளா லென்றான். - 93


585 - ஐந்தொகை யாற்றின் மாடே யமலனை நினைந்து நோற்ற
நந்தியந் தேவன் இன்ன நவிறலு மவற்சூழ் கின்ற
அந்தமில் கணத்தோர் கேளா அகிலமுய் பொருட்டா லெங்கோன்
புந்திகொ ளருளின் செய்கை போற்றெடுத் தனரா யுற்றார். - 94


586 - வாவலங் கிள்ளை மான்றேர் மதன்புரி வினையா லன்னான்
வேவரப் புணர்த்து நோக்கி மிகைபடா தவன்சா ரான
தேவியை முடிக்கு மாற்றல் செய்திலன் இகல்பற் றின்றி
மூவரை விடுத்துத் தொன்னான முப்புரம் பொடித்த முன்னோன். - 95


587 - கண்ணழல் சுடுத லோடுங் காமவேள் யாக்கை முற்றுஞ்
சுண்ணம தாகி வீழத் துஞ்சினன் போய பின்னை
அண்ணலம் பகவன் தொல்லை யமைதியின் இருந்தா னெல்லாம்
எண்ணிநின் றியற்றும் எங்கோற் கினையதோ அரிது மாதோ. - 96


588 - பாடுறு கணவன் செய்கை பார்த்தலு மிரதி யுள்ளங்
கூடின துயரம் வீந்த கொண்டதொல் லுணர்ச்சி கண்ணீர்
ஓடின வியர்த்த மெய்மூக் குயிர்த்தன வொடுங்கிற் றாவி
வீடினள் இவளு மென்ன விரைந்துகீழ்த் தலத்தின் வீழ்ந்தாள். - 97


589 - சுரிதரு குடிஞை யாற்றிற் சுழித்தலைப் பட்ட மான்போல்
வருவரல் வாரி நாப்பட் படிந்துபற் றின்றிச் சோரும்
இரதிசில் பொழுகிற் பின்ன ரிறந்ததொல் லுணர்வு தன்பால்
வருதலும் மறித்துச் செங்கை வயிறலைத் திரங்க லுற்றாள். - 98


590 - செம்பதுமை திருக்குமரா தமியேனுக் காருயிரே திருமால் மைந்தா,
சம்பரனுக் கொருபகைவா கன்னல்வரிச் சிலைபிடித்த தடக்கை வீரா,
அம்பவளக் குன்றனைய சிவன்விழயால் வெந்துடல மழிவுற் றாயே,
உம்பர்கடம் விழி யெல்லா முறங்கிற்றோ அயனாரு முவப்புற் றாரோ. - 99


591 - முன்னானிற் புரமூன்று மட்டவன்மேற் பொரப்போதன் முறையோ வென்று,
சொன்னாலுங் கேட்டிலையே அமரர்பணி புரிவதுவே துணிந்திட் டாயே,
உன்னாகம் பொடியாகிப் போயினதே இதுகண்டும் உய்வா குண்டோ,
என்னவி யாகியநீ யிறந்தபின்னும் யான்றனியே யிருப்ப தேயோ. - 100


592 - மாறாகப் பரமன்விழி நின்னாற்ற லிலதாக மற்றுன் மெய்யும்,
நீறாக விண்டேல்லாம் நெருப்பாகக் கவலைவிண்ணோர் நெஞ்சத் தாக,
ஆறாத பெருந்துயர மெனக்காக எங்கொளித்தாய் அருவா யேனுங்,
கூறாயோ வறிந்திருந்தாய் என்கணவா யான்செய்த குறையுண் டோதான். - 101


593 - உம்பர்கடம் பாலேயோ இந்திரனார் பாலேயோ வுன்னை யுய்த்த,
செம்பதுமத் திசைமுகத்தோன் பாலேயோ அரன்செயலைச் சிதைப்ப னென்னா,
இம்பரிடை வல்விரைந்து வந்திடுநின் பாலேயோ ஈசன் கண்ணால்,
வெம்பாடியாய் நீயிறந்த இப்பழிதான் எவர்பாலின் மேவிற் றையோ. - 102


594 - வில்லான்முப் புரமெரித்த பரம்பொருள்யோ கந்தவிர்க்க வேண்டில் விண்ணோர்,
எல்லாரு மறந்தனரோ எண்கணவா நீயோதான் இலக்காய் நின்றாய்,
கொல்லாது போலவுனைக் கொன்றனரே என்னுயிர்க்குங் கொலைசூழ்ந் தாரே,
பொல்லாத பேர்க்குநன்றி செய்வது தம் முயிர்போகும் பொருட்டே யன்றோ. - 103


595 - என்னபவஞ் செய்தேனோ என்போல்வார் தமககென்ன இடர்செய் தேனோ,
முன்னையுள விதிப்பயனை யறிவேனோ இப்படியே முடிந்த தையோ,
கன்னல்வரிச் சிலைபிடித்த காவலவோ தமியேனைக் காத்தி டாயோ,
வன்னிவிழி யாவுடைய பெருமானை நோவதற்கு வழக்கொன் றுண்டோ. - 104


596 - பொன்செய்தார் முடிகாணேன் அழகொழுகுந் திருமுகத்துப் பொலிவு காணேன்,
மின்செய்பூ ணணிகுலவும் புயங்காணேன் அகன் மார்பின் மேன்மை காணேன்,
கொன்செய்பூங் கணைகாணேன் சிலைகாணேன் ஆடல்புரி கோலங் காணேன்,
என்செய்வேன் என் கணவா என்னையொழித் தெவ்விடத்தே யிருக்கின் றாயே. - 105


597 - அந்நாளி லழற்கடவுள் கரியாக வானவரோ டயன்மால் காணப்
பொன்னாரு மங்கலநாண் பூட்டியெனை மணஞ்செய்து புணர்ந்த காலை,
எந்நாளு மினியுன்னைப் பிரியலமென் றேவாய்மை யிசைத்தாய் வேனில்,
மன்னாவோ எனைத்தனியே விடடேகல் வழக்கோ சொல்லாய். - 106


598 - போவென்று வரவிட்ட தேரெலாம் பொடியாகிப் போனவுன்னை,
வாவென்று கடிதெழுப்ப மாட்டாரோ நின்றாதை வலியனென்பார்,
ஓவென்று நானிங்கே யாற்றிடவும் வந்திலனால் உறங்கினானோ,
வேவென்று நின்சிரத்தில் விதித்திருந்தால் அவரையெலாம் வெறுக்க லாமோ. - 107


599 - நேயமொடு மறைபயிலுந் திசைமுகனைப் புரந்தரனை நின்னைத் தந்த,
மாயவனை முனிவர்களை யாவரையும் நின்கணையான் மருட்டி வென்றாய்,
ஆயதுபோல் மதிமுடித்த பரமனையும் நினைந்திவ்வா றழிவுற் றாயே,
தீயழலின் விளக்கத்திற் படுகின்ற பதங்கத்தின் செயலி தன்றோ. - 108


600 - தண்பனிநீர்ச் சிவிறிகொண்டு விளையாடி மலர்கொய்து தண்கா நண்ணி,
எண்படும்பூம் பள்ளிமிசைச் சிறுதென்றல் கவரிகளா யினிது செல்ல,
வெண்பளித நறுஞ்சாந்தச் சேறாடி இருவருமாய் விழைந்து கூடிக்,
கண்படைகொண் டமர்வாழ்வும் பொய்யாகிக் கனவுகண்ட கதையா யிற்றே. - 109


601 - மருகென்றே அவமதித்த தக்கனார் வேள்விசெற்ற வள்ள றன்னைப்,
பொருகென்றே தேவரெலாம் விடுத்தாரே அவராலே பொடிபட் டாயே,
எரிகின்றேன் உனைப்போல ஆறாத பெருந்துயரால் யானு மங்கே,
வருகின்றேன் வருகின்றேன் என்னுயிரே யெனப்புலம்பி வருந்து கின்றாள். - 110

ஆகத் திருவிருத்தம் - 601

5. மோன நீங்கு படலம் (602 - 636)




602 இரதி இன்னணம் வருந்திடத் தொன்மைபோல் எங்கோமான்
விரத மோனமோ டிருத்தலும் முன்னரே விறற்காமன்
கருது முன்பொடி பட்டது கண்டனர் கலங்குற்றார்
சுருதி நன்றுணர் திசை முகன் முதலிய சுரரெல்லாம். - 1


603 - சிதலை மெய்த்தொகை வன்மிகத் தெழுந்தெனச் செலக்கண்ணீர்
பதலை யொத்தன அல்லல்கூர்ந் தரற்றிடப் பகுவாய்கள்
விதலை பெற்றுமெய் வியர்ப்புற வுளநனி விதிர்ப்பெய்த
மதலை யிற்றுழி நாய்கர்போல் துயர்க்கடல் மறிகின்றார். - 2


604 - மையு லாவரு கறைமிடற் றிறையவன் மருங்காக
எய்யும் மாரனை விடுத்தனம் அவனையு மிறச்செய்தான்
பொய்யி றன்னிலை தவிர்ந்திலன் தொன்மையே போலுற்றான்
ஐய கோவினிச் செய்வதேன் னோவெனா அயர்கின்றார். - 3


605 - பூத்த ருங்கணை மாரனை விழியினாற் பொடிசெய்த
ஆத்த னாற்றலைப் புணர்ப்பினால் நீக்குவ தரிதன்னான்
காத்து நந்துயர் அகற்றிட வேண்டுமேற் கடிதேயாம்
ஏத்தல் செய்வதே கடனென யாவரு மிசைவுற்றார். - 4


606 - எகின மூர்பவன் முதலிய கடவுள ரெல்லோரும்
அகன மர்ந்திவை யிசைந்துதொல் கயிலையி னகநாப்பட்
புகல தாயபொன் னகரிடைக் கோபுரப் புறனேகித்
தொகுதி யோடெம திறைவனை ஒல்லெனத் துதிக்கின்றார். - 5


607 - நஞ்ச ருந்தியும் நதியினைச் சூடியும் நடுநெற்றித்
துஞ்சும் வெங்கணல் பரித்தும்வெவ் வலியரைத் தொலைத்திட்டும்
அஞ்ச லென்றுமுற் காத்தனை இன்றெமக் கருளாயேல்
தஞ்ச மாருளர் தாதையே யல்லது* தனயர்க்கே.
( பா-ம் * - தாதைய ரல்லது. ) - 6


608 - கோளில் அன்பர்கள் இழுக்கிய புரியினுங் குணனாக்கொண்
டாளு மெம்பிரான் நின்னடி அரணமென் றடைந்தேங்கண்
நாளும் வெந்திறற் சூரபன் மாவினால் நலிவெய்தி
மாளு கின்றதோ சிறிதுமெம் முறுதுயர் மதியாயோ. - 7


609 - தைய லைப்பிரீஇ யோகியல் காட்டிடு தனிச்செய்கை
ஐய நிற்கிதோ ரிறைவரை யாகுமால் அதுகாலை
நையு மெங்களுக் குகம்பல சென்ற நாமெல்லாம்
உய்வ தெப்படி இன்னுநீ புறக்கணித் துறுவாயேல். - 8


610 - நோற்று மாயவன் முதலினோர் யாவரும் நுனதாளைப்
போற்றி யர்ச்சனை புரியவித் திருவெலாம் புரிந்துற்றாய்
தோற்ற மின்றியே ஐந்தொழி லியற்றிய தொல்லோய்நீ
ஆற்று கின்றதோர் தவநிலை எம்பொருட் டளவன்றோ. - 9


611 - எய்த்தி டுஞ்சிறி யேங்களைத் தவறுகூ ரிடர்வாளால்
நித்த லுந்துணித் தீருதி செய்வினை நெறிநேடி
அத்த இங்கினிக் காத்தரு ளல்லதேல் அடுவல்லே
சித்த மென்னுனக் கன்னவா றொன்றினைச் செய்வாயே. - 10


612 - கங்கை வேணியாய் அம்மையை மணந்தெமைக் கடிகொள்ளத்
திங்கள் வெண்குடை மதனனை விடுத்தனந் தௌ¤வில்லேம்
அங்க வன்புரம் பொடித்தனை முன்புபோ லமர்ந்துற்றாய்
இங்கி யாந்தளர் கின்றதே இனிச்சிறி திரங்காயோ. - 11


613 - ஆரழற்சின வயப்புலி முதலிய அடன்மாவின்
பேரு ரித்திறந் தாத்தனை சிறுவிதி பெருவேள்வி
வீர னைக்கொடு தடிந்தனை அ·தென மிகவெய்ய
சூர பன்மனைத் தொலைவுசெய் தெந்துயர் தொலைக்கென்றார். - 12


614 - முரற்கொள் வண்டுசூழ் சததளப் பண்ணவன் முதலோர்கள்
உருக்க ரக்கென மெய்தளர்ந் திவ்வகை யுளநொந்தே
அரற்றி யேத்தலும் அவர்பவ முடிவதற் கணித்தாக
இரக்க மாய்அரு ணந்தியை நினைந்தனன் இறையோனே. - 13


615 - எந்தை நந்தியை உன்னலு மவனறிந் திறைவன்முன்
வந்து வந்தனை செய்துகை தொழுதலும் மறைமேலோன்
கந்த மாமலர்க கடவுளா தியர்தமைக் கடிதெம்முன்
தந்தி டென்றனன் நன்றென முதற்கடை தனில்வந்தான். - 14


616 - கணங்கள் காப்புறு முதற்கடை குறுகலுங் கண்டேத்தித்
தணங்கொள் பங்கயன் வாசவன் விண்ணவர் தாமெல்லாம்
வணங்க எம்பிரான் உமைத்தரு தென்றனன் வறிதேனும்
அணங்கு கொள்ளலீர் வம்மினோ நீவிரென் றருள்செய்தான். - 15


617 - சீர்த்த நந்திவந் திவ்வகை யுரைத்தசொற் செவிதோறும்
வார்த்த பேரமு தாதலும் உவகையின் மதர்ப்பாகிப்
பேர்த்தொர் மாற்றமு முரைத்திலர் பிரமனே முதற்றேவர்
ஆர்த்து நாதனைப் பாடினர் ஆடினர் அலமந்தார். - 16


618 - பெரிது நோயுழந் தருள்பவர் இன்றியே பெருங்காலம்
நிரய முற்றுளோர் தங்களை எடுத்திடும் நிலைத்தன்றோ
அருளின் நீர்மையா லுமையரன் விளித்தனன் அனைவீரும்
வருதி ரென்றசொற் பங்கயன் முதலிய வானோர்க்கே. - 17


619 - செய்ய லாவதொன் றின்றியே மகிழச்சியிற் றிளைத்தொராய்
மைய லாகிய பண்ணவர் தங்களை வல்லேகொண்
டையன் முன்னுற வுய்த்தனன் இருவகை யறத்தொரும்
உய்ய வெஞ்சம னுடைதரப் புவியினி லுதிக்கின்றோன். - 18


620 - வேறு
வண்டுளர் கமலமேல் மதலை வாசவன்
அண்டர்க ளனைவரும் அன்பொ டேகியே
பண்டுயிர் முழுதருள் பரனைக் கண்களாற்
கண்டனர் வழுத்தினர் கரங்கள் கூப்பினார். - 19


621 - விண்மதி படர்சடை வேத கீதனை
அண்மினர் வணங்கினர் அரிமுன் ஆற்றிய
உண்மகிழ் பூசனை யொப்பப் போதநீர்
கண்மல ரதனொடு கழல்கள் சேரவே. - 20


622 - வணங்கிய பண்ணவர் வல்ல வல்லவா
பணங்கிளர் அரவரைப் பரமற் போற்றலும்
உணங்கிய சிந்தையீர் உமது வேண்டலும்
அணங்குறு நிலைமையும் அறைமி னென்னவே. - 21


623 - பேருக மளப்பில பெயர்த லின்றியே
சூரன தாணையில் துயர்ப்பட் டாழ்ந்தனங்
காருறழ் கந்தரக் கடவுள் நீயலா
தாருளர் அடியரேம் அலக்கண் நீக்குவார். - 22


624 - ஆயவெஞ் சூரன தாவி நீக்கவோர்
சேயினை யருளுவான் சிமைய மாகிய
மீயுயர் வரையிடை மேவி நோற்றிடும்
மாயையின் முதல்வியை மணத்தல் வேண்டுநீ. - 23


625 - என்றிவை கூறியே யாரு மெம்பிரான்
மன்றலந் தாள்மலர் வணங்கிப் போற்றலும்
மின்றிகழ பசுங்கதிர் மிலைச்சும் வேணியான்
நன்றென இசைந்தியை நவிறல் மேயினான். - 24


626 - புங்கவர் யாவரும் பொருமல் கொள்ளலீர்
உங்கடம் பொருட்டிலவ் வோங்கல் வைகிய
மங்கையை மணந்துநும் வருத்தம் நீக்குதும்
இங்கினி யாவரு மேகு கென்றனன். - 25


627 - முழுதுணர் பரனிது மொழியப் போதனுஞ்
செழுமையில் பொன்னகர்த் தேவும் யாவருந்
தொழுதனர் விடைகொடு துயரஞ் சிந்தியே
விழுமிய மேருவின் மிசைக்கண் ஏகினார். - 26


628 - வேறு
அன்னார் விடைகொண் டேகியபின் அதுகண் டிரதி யெம்பெருமான்
முன்னா விறைஞ்சிப்* போற்றிசெய்து முறையோ முறையோ இறையோனே
பொன்னார் கமலத் தயன்முதலோர் புணர்ப்பா லெங்கோன் போந்திங்கே
உன்னால் முடிந்தான் அவன்பிழையை உளங்கொ ளாமல் அருளென்றாள். 27
( பா-ம் * - முன்னாலிறைஞ்சிப் ) - 27


629 - வேறு
இனைய கூறினள் இரதிவேண் டிடுதலும் இணைதீர்£ந்த
புனிதன் நல்லரு ளெய்தியே மங்கைநீ புலம்பாய்கேள்
வனைக ருங்குழற் கவுரியை மேவியாம் வரைபோ தில்
உனது கேள்வனை அளிக்குதும் போதியென் றுரைசெய்தான். - 28


630 - தன்னை யேதனக் கொப்பவன் இர தியைத் தளரேலென்
றின்ன வாறருள் செய்தலும் மகிழந்தடி இறைஞ்சிப்போய்ப்
பொன்னின் மாலிமை யக்கிரி புகுந்தொரு புடையுற்றான்
வன்ன மாமுகில் வரவுபார்த் துறைதரு மயிலேபோல். - 29


631 - வேறு
தமியளாய் இரதிபோய்த் தானங் குற்றிட
அமரர்க ளாயுளா ரரந்தை தீர்க்கவும்
இமையமால் வரைமிசை யிருந்து நோற்றிடும்
உமைதலை மணப்பவும் முதல்வன்உன்னினான். - 30


632 - மனந்தனி லித்திறம் மதித்து வானதி
புனைந்தவன் சனகனென் றுரைக்கும் புங்கவன்
சனந்தனன் சனாதனன் சனற்கு மாரனாம்
இனந்தரு முனிவரை இனிது நோக்கினான். - 31


633 - நன்னல மைந்தர்காள் ஞான போதகஞ்
சொன்னடை யன்றது துயர நீங்கியே
இந்நிலை மோனமோ டிருந்து நந்தமை
உன்னுத லேயென உணர வோதினான். - 32


634 - கட்படும் இமைத்துணை காட்சி யோகினை
நுட்பம தாகவே நுதலிக் காட்டினோன்
ஒட்பமோ டிவ்வகை உரைப்ப வாற்றவும்
தெட்பம தடைந்தனர் விதியின் சேயினோர். - 33


635 - அந்தநல் வேலையில் ஆற்றும் நோன்பினோர்
சிந்தைகொ ளன்பொடு சிவன்பொற் றாள்முறை
வந்தனை செய்துநம் மருட்கை நீங்கியே
உய்ந்தனம் யாமென உரைத்துப் போற்றினர். - 34


636 - போற்றது மத்துணைப் புனிதன் இன்னினி
ஏற்றிடு நிட்டையி லிருந்து வீடுறீஇ
மேற்றிகழ் எம்பத மேவு வீரெனாச்
சாற்றினன் விடுத்தனன் தவத்தி னோர்தமை. - 35

ஆகத் திருவிருத்தம் - 636

6. தவங்காண் படலம் (637 - 669)




637 தீதறு முனிமைந்தர் செல்லலும் அதுபோழ்தின்
மாதவ நெறிநிற்கும் மலைமக டனியன்புங்
காதலு மெனைவோர்க்குங் காட்டுத லருளாகிச்
சோதனை புரிவாரின் துண்ணென எழலுற்றான். - 1


638 - செறிதுவ ருடையாளன் சிகையினன் அணிநீற்றின்
குறியினன் ஔ¤ர்நூலன் குண்டிகை யசைகையன்
உறைபனி கதிர்போற்று மோலையன் உயர்கோலன்
மறைபயில் முதியோர்போல் வடிவிது கொடுபோனான். - 2


639 - போயினன் இமையத்திற் புவனமொ டுயிர்நல்குந்
தாய்தளர் வொடுநோற்குஞ் சாலையி னிடைசாரத்
தூயவ ரிவரென்றே தோகையர் கடைகாப்போ
ராயவர் பலர்வந்தே அடிதொழு துரைசெய்வார். - 3


640 - தளர்நடை முதியீர்இத் தடவரை யிடைசேறல்
எளிதல அடிகேள்வந் தெய்திய தெவனென்ன
வளமலை யரசன்றன் மகள்புரி தவநாடற்
குளமுட னிவண்வந்தேன் உவகையி னுடனென்றான். - 4


641 - என்றலு மினிதென்றே இமையவ ளிடைசில்லோர்
சென்றனர் கிழவோன்றன் செயலினை அறைகாலை
ஒன்றிய முதியோரேல் உய்க்குதிர் இவணென்ன
நின்றதொர் பெரியோனை நேரிழை முனமுய்த்தார். - 5


642 - உய்த்தலும் இவரெந்தைக் குறுபரி வினரென்றே
பத்திமை படுபாலாற் பார்ப்பதி தொழலோடும்
மெய்த்துணை யெனநின்ற விசயையொர் தவிசிட்டு
நித்தனை உறைவித்தாள் நிமலையும் அயனின்றாள். - 6


643 - அப்பொழு துமைதன்னை யாதர வொடுபாராச்
செப்புத லரிதாமுன் றிருநலன் அழிவெய்த
மெய்ப்படு தசையொல்க மிகுதவ முயல்கின்றாய்
எப்பொருள் விழைவுற்றாய் எண்ணிய துரையென்றான். - 7


644 - வேறு
முடிவி லானிவை யுரைத்தலும் விசயையை முகநோக்கிக்
கொடியி னொல்கிய நுசுப்புடை உமையவள் குறிப்பாலே
கடிதி னீங்கிவர்க் கெதிர்மொழி யீகெனக் கண்காட்ட
அடிய னேற்கிது பணித்தன ளெனஅறிந் தவள்சொல்வாள். - 8


645 - மன்னு யிர்க்குயி ராகிய கண்ணுதல் மணஞ்செய்து
தன்னி டத்தினி லிருத்தினன் கொள்வதே தானுன்னிக்
கன்னி மெய்த்தவ மியற்றின ளென்றுகா தலிகூற
முன்ன வர்க்குமுன் னானவன் நகைத்திவை மொழிகின்றான். - 9


646 - புவிய ளித்தருள் முதல்வரும் நாடரும் புனிதன்றான்
இவள்த வத்தினுக் கெய்துமோ எய்தினு மினையாளை
அவன்வி ருப்பொடு வரையுமோ உமையவ ளறியாமே
தவமி யற்றினள் எளியனோ சங்கரன் றனக்கம்மா. - 10


647 - அல்லல் பெற்றிட நோற்றிடு பகுதியால் ஆம்பாலொன்
றில்லை யித்துணைப் பெறலரும் பொருளிவட கௌ¤தாமோ
பல்ப கல்தன தெழில்நலம் வறிதுபட் டனவன்றோ
ஒல்லை இத்தவம் விடுவதே கடனினி உமைக்கென்றான். - 11


648 - இந்த வாசகங் கேட்டலு மெம்பிராற் கிவரன்பர்
அந்தண் மாமுது குரவரென் றுன்னினன் அறியேனால்
வந்து வெம்மொழ கூறுத லெனச்சின மனங்கொண்டு
நொந்து யிர்த்துநாண் நீக்கியே பொறாதுமை நுவல்கின்றாள். - 12


649 - முடிவிலாதுறை பகவனென் வேட்கையை முடியாது
விடுவ னென்னினுந் தவத்தினை விடுவனோ மிகவின்னங்
கடிய நோன்பினை யளப்பில செய்துயிர் கழிப்பேன்நான்
நெடிது மூத்தலின் மயங்கினை பித்தனோ நீயென்றாள். - 13


650 - ஈட்டு மாருயிர்த்தொகையெலா மளித்தவள் இவைகூற
மீட்டு மோர்புணர்ப் புன்னியே மாதுநீ வெ·குற்ற
நாட்ட மூன்றுடைப் பிஞ்ஞகன் வளத்தியல் நன்றாய்ந்து
கேட்டி லாய்கொலா முணர்த்துவன் அ·தெனக் கிளக்கின்றான். - 14


651 - ஆடை தோல்விடை யேறுவ தணிகல மரவென்பு
கேடில் வெண்டலை மாலிகை கேழலின் மருப்பின்ன
ஓடு கொள்கல மூண்பலி வெய்யநஞ் சுலப்புற்றோர்
காட தேநடம் புரியிடங் கண்ணுதற் கடவுட்கே. - 15


652 - வேய்ந்து கொள்வது வௌ¢ளெருக் கறுகுநீர் வியன்கொன்றை
பாந்தள் நொச்சியே மத்தமென் றினையன பலவுண்டால்
சாந்தம் வெண்பொடி சூலமான் மழுத்துடி தழலங்கை
ஏந்து கின்றது பாரிடஞ் சூழ்படை இறையோற்கே. - 16


653 - அன்னை தாதைகேள் வடிவொடு குணங்களி லனையானுக்
கின்ன வாகிய பலவள னுண்டவை எவையுந்தாம்
நின்ன வாகவோ தவம்புரிந் தெய்த்தனை நெடுந்தொல்சீர்
மன்னன் மாமகட் கியைவதே இத்துணை வழக்கென்றான். - 17


654 - வேறு
புரங்கண்மூன் றினையு மட்ட புங்கவன் இனைய கூற
வரங்கண்மே தகைய வெற்பின் மடமயில் கேட்ட லோடுங்
கரங்களாற் செவிகள் பொத்திக் கண்ணுதல் நாமம் போற்றி
இரங்கிவெஞ் சினத்த ளாகி இடருழந் தினைய சொல்வாள். - 18


655 - கேட்டியால் அந்தணாள கேடிலா வெம்பி ரான்றன்
மாட்டொரு சிறிது மன்பு மனத்திடை நிகழந்த தில்லை
காட்டுறு புள்ளின் சூழல் கவருவான் புதன்மேற் கொண்ட
வேட்டுவன் இயல்போல் மேலோன் வேடநீ கொண்ட தன்மை. - 19


656 - நேசமி லாது தக்கன் நிமலனை யிழித்து நின்போற்
பேசிய திறனும் அன்னான் பெற்றதுங் கேட்டி லாயோ
ஈசனை யிங்ஙன் என்முன் இகழ்ந்தனை இந்நாள் காறும்
ஆசறு மறைக ளேது மாய்ந்திலை போலு மன்றே. - 20


657 - முறைபடு சுருதி யெல்லா மொழியினும் அதுவே சார்வா
உறுகில ராகிப் பொல்லா வொழுக்கமே கொண்டு முக்கண்
இறைவனை யிகழ்ந்து முத்தி யெய்திடா துழல முன்னாள்
மறையவர் பெற்ற சாபம் நின்னையும் மயக்கு றாதோ. - 21


658 - தாதையாய்த் தம்மை நல்கித் தந்தொழிற் குரிய னாகி
ஆதியாய்த் தங்கட் கின்றி யமைவுறாச் சிவனை நீங்கி
ஏதிலார் பக்க மாகி இல்லொழுக் கிறந்தார் போலும்
வேதியர் முறையே செய்தாய் வெறுப்பதென் நின்னை யானே. - 22


659 - ஆயினும் மறையோர் தம்மி னருமறை முறையே வேடம்
தூயன தாங்கி யெங்கோன் தொண்டுசெய் வோரு முண்டால்
நீயவர் தன்மைத் தாயும் நித்தனை யிகழந்தா யென்னில்
தீயவ ருனைப்போ லில்லை அவுணர்தந் திறத்து மாதோ. - 23


660 - வேண்டுதல் வேண்டி டாமை யில்லதோர் விமலன் றன்னை
ஈண்டுநீ யிகழ்ந்த வெல்லாம் யாரையு மளிக்கு மன்பு
பூண்டிடு குறிகாண் அற்றாற் புகழ்ச்சியா மன்றி முக்கண்
ஆண்டகை யியற்கை யெல்லா மார்கொலோ அறிய கிற்பார். - 24


661 - போதனே முதலா வுள்ள புங்கவர் வழிபட் டேத்த
வேதமி லிறைமை யாற்ற லியாவையும் புரிந்த நாதன்
காதலும் வெறுப்பு மின்றிக் கருணைசெய் நிலைமை யேகாண்
பேதைநீ யிகழ்ச்சி யேபோற் பேசிய தன்மை யெல்லாம். - 25


662 - இம்முறை மறைக ளாதி இசைத்தன இனைய வெல்லாஞ்
செம்மைகொ ளுணர்வின் ஆன்றோர் தௌ¤குவ ரிறையை யௌ¢ளும்
வெம்மைகொள் குணத்தாய் நிற்கு விளம்பொணா விளம்பிற் பாவம்
பொய்ம்மறை வேடத் தோடும் போதிநீ புறத்தி லென்றாள். - 26


663 - அறத்தினைப் புரிவாள் இவ்வா றறைதலும் அணங்கே ஈங்குன்
திறத்தினி லார்வஞ் செய்து சென்றவென் செயல்கே ளாது
புறத்திடைப் போதி யென்றி புரைவதோ புகுந்த பான்மை
மறைச்சடங் கியற்றி நின்னை வரைந்திடற் காகு மென்றான். - 27


664 - வஞ்சக முதல்வன் சொற்ற வாசகம் இறைவி கேளா
அஞ்செவி பொத்தி யாற்றா தழுங்கிமெய் பதைப்ப விம்மி
எஞ்சலின் முதியோன் போகான் ஏகுவன் யானே யென்னாப்
பஞ்சடி சேப்ப ஆண்டோர் பாங்கரிற் படர்த லுற்றாள். - 28


665 - படர்ந்தனள் போத லோடும் பனிபடு மிமையம் வைகும்
மடந்தைதன் னியற்கை நோக்கி வரம்பிலா அருண்மீ தூர
அடைந்ததொல் பனவக்கோல மகன்றுமால் விடைமேல்கொண்டு
தொடர்ந்துபல் கணங்கள் போற்றத் தோன்றினன் றொலைவி லாதோன். - 29


666 - தொலைவறு பகவன் வான்மீத் தோன்றலுந் துளங்கி நாணி
மலைமகள் கண்டு பல்கால் வணங்கியஞ் சலியாற் போற்றி
அலகிலா வுணர்வால் எட்டா வாதிநின் மாயை தேறேன்
புலனிலாச் சிறியேன் நின்னை யிகழ்ந்தவா பொறுத்தி யென்றாள். - 30


667 - நற்றவ மடந்தை கேண்மோ நம்மிடத் தன்பால் நீமுன்
சொற்றன யாவு மீண்டே துதித்தன போலக் கொண்டாம்
குற்றமுண் டாயி னன்றே பொறுப்பது கொடிய நோன்பால்
மற்றினி வருந்தல் நாளை மணஞ்செய வருது மெனறான். - 31


668 - சிறந்தநின் வதுவை முற்றச் செல்லுது மென்று தொல்லோன்
மறைந்தனன் போத லோடும் மலைமக ளுள்ளந் தன்னில்
நிறைந்திடு மகிழ்ச்சி கொண்டு நித்தனை நினைந்து போற்றி
உறைந்தனள் இதனை வேந்தற் குரைத்திடச் சிலவர் போனார். - 32


669 - அண்ணல்வந் தருளிச் செய்கை அரசனுக் குரைத்த லோடும்
உண்ணிக ழயர்ச்சி நீங்கி யொல்லைதன் னில்லி னோடு
நண்ணினன் உமையைக் கொண்டுநலங்கொள்தன் நகரத் துய்த்தான்
கண்ணுத லிறைவன் அங்கட் செய்தன கழற லுற்றேன். - 33

ஆகத் திருவிருத்தம் - 669

7. மணம் பேசு படலம்
(670 - 689)




670 பொருடரு மலைக்கொடி புரியும் நோன்புகண்
டருடனை நல்கிய வாதி நாயகன்
தெருடரு கயிலையிற் சேர்வுற் றேழ்வகை
இருடிகள் தங்களை இதயத் துன்னினான், - 1


671 - நினைதலுங் கண்ணுதல் நிமல னேழ்பெரு
முனிவரு மன்னதை முன்னி யுள்வெரீஇப்
பனிவரு மெய்யொடு படர்ந்து வல்லையில்
அனையனை இறைஞ்சிநின் றறைதல் மேயினார். - 2


673 - பங்கயன் மான்முதற் பகரும் பண்ணவர்
உங்குன தேவலுக் குரிய ராயுற
எங்களை யுன்னினை யாங்கள் செய்தவம்
அங்கவர் தவத்தினு மதகம் போலுமால். - 3


673 - எந்தையெம் பெருமநீ யெம்மை வம்மென
முந்துறு கருணையின் முன்னிற் றாதலின்
உய்ந்தனம் அடியரே முடிய தீப்பவஞ்
சிந்தினம் இனியொரு தீதுண் டாகுமோ. - 4


674 - ஒருதலை யைந்தொழி லுலப்பு றாவகை
புரிதரு பகவநம் புன்மை நீக்குவான்
கருணையொ டுன்னினை கடிதிற் செய்பணி
அருளுதி யென்றனர் ஆற்றும் நோன்பினோர். - 5


675 - வேறு
அமலனம் முனிவர் மாற்றங் கேட்டலு மவரை நோக்கி
அமையமே லிறைவன் றன்பா லேகியே எமக்கிவ் வைகல்
உமைதனை வதுவை நீரா லுதவுவான் வினவி வல்லே
நமதுமுன் வம்மி னென்னா நன்றருள் புரிந்தா னன்றே. - 6


676 - நாயக னருளக் கேளா நன்றென இறைஞ்சி யேகி
ஏயதொன் முனிவர் யாரும் இமையமே லிறைமுன் நண்ண
ஆயவன் மனைவி யோடு மடைந்தெதிர் கொண்டு தாழ்ந்து
நேயமொ டருச்சித் தேத்தி நின்றிது புகலு கின்றறான். - 7


677 - படியறு நுத்£ள் ஈண்டுப் படுதலால் இமைய மேருத்
தடவரை யதனில் தூய்தாய்த் தலைமையும் பெற்ற தன்றே
நெடியவென் பவமு மினனே நீங்கின நீவி ரெல்லாம்
அடியனேன் றன்பால் வந்த நிமித்தமென் னறையு மென்றான். - 8


678 - அங்கது வினவு மெல்லை அருந்தவ ரகில மீன்ற
மங்கையை வதுவை செய்வான் மன்னுயிர்க் குயிராய் நின்ற
சங்கரன் நினைந்துன் னோடு சாற்றுதற் கெமமை யுய்த்தான்
இங்கிதெம் வரலா றென்ன இசைவுகொண் டிறைவன் சொல்வான். - 9


679 - துன்னிய வுயிர்கள் யாவுந் தொல்லுல கனைத்து மீன்ற
கன்னிகை யுமையா டன்னைக் கடிமண முறையின் நல்கி
என்னையு மடிமை யாக ஈகுவன் இறைவற் கென்ன
மன்னவன் அயலே நின்ற மனைவியீ துரைக்க லுற்றாள். - 10


680 - மலரயன் புதல்வன் றன்னோர் மடந்தையை மணத்தின் நல்க
அலைபுனற் சடிலத் தண்ணல் அவன்றலை கொண்டான் என்பர்
நிலைமையங் கதனை யுன்னி நெஞ்சக மஞ்சு மெங்கள்
குலமகள் தனைய வற்குக் கொடுத்திட லெவனோ வென்றாள். - 11


681 - என்றலு மவளை நோக்கி எழுமுனி வோருஞ் சொல்வார்
ஒன்றுநீ யிரங்கல் வாழி யொப்பிலா முதல்வன் செய்கை
நன்றுதேர்ந் திலையால் தக்கன் நலத்தகும் அவியை மாற்றி
அன்றுதன் இகழ்த லாலே அவன்றலை முடிவு செய்தான். - 12


682 - அடைந்துளோர்க் கருளுமாறும் அல்லவர் தமக்குத் தண்டம்
படுந்துணை தெரிந்து கூட்டும் பான்மையும் பரமன் செய்கை
மடந்தையித் தன்மை யாரும் மனப்படுத் துணர்வ ரீதே
திடம்பட வுணர்தி வேறு சிந்தனை செய்யே லென்றார். - 13


683 - வேறு
இயலுறு முனிவோர்கள் இவைமொழி தலுமோரா
மயலறு வரையண்ணல் வாய்மையி தெனலோடும்
அயலுறு மனைமேனை யஞ்சினள் அமலன்றன்
செயலிது வுணராதே செப்பினன் இவையென்றே. - 14


684 - உண்ணலி வொடுமேனை உவர்மல ரடிதாழூஉப்
பெண்ணறி வெவையேனும் பேதைமை வழியன்றோ
அண்ணறன் அருணீர்மை யணுவது மறிகில்லேன்
புண்ணிய முனிவீரென் புன்மொழி பொறுமென்றாள். - 15


685 - பணிவுட னிவைமேனை பகர்தலும் அவடன்பாற்
கணிதமி லருள்செய்யக் காவல னதுகாணா
இணைதவிர் முனிவீர்காள் இவளுரை கருதன்மின்
இணமியல் இறையோனை வரமொழி குதிரென்றான். - 16


686 - பனிபடு வரையண்ணல் பகர்மொழி யதுகேளா
மனமிக மகிழ்வாகி மற்றவர் தமையங்கண்
இனிமையொ டுறநல்கி யெழுவரும் அவணீங்கித்
தனைநிகர் பிறிதில்லாத் தண்கயி லையில்வந்தார். - 17


687 - வந்தெழு முனிவோரும் மாநக ரிடைசாரா
நந்திகண் முறையுய்ப்ப நாதனை நணுகுற்றே
அந்தமில் அளியோடு மவனடி தொழுதேத்தி
எந்தையை இதுகேளென் றியாவது முரைசெய்தார். - 18


688 - வரைமிசை யரசாள்வோன் மணவினை யிசைவெல்லாம்
உரைசெய வருள்செய்தே யும்பரின் முனிகாள்நீர்
புரிதரு செயலாற்றப் போகுதி ரெனலோடும்
அரனடி தொழுதேத்தி அவர்பதம் அணுகுற்றார். - 19


689 - வேறு
எங்குறை தீர்ந்ததென் றெழுத வத்தருந்
தங்கடம் பதத்திடைத் தணப்பின் றெய்தினார்
இங்கிது நின்றிட இமைய மேலிறை
அங்கினிச் செய்தவா றறியக் கூறுவாம். - 20

ஆகத் திருவிருத்தம் - 689

8. வரைபுனை படலம் (690 - 725)




690 8. வரைபுனை படலம்
கண்ணுதல் உமைதவங் கண்டு நின்னையாம்
மண்ணவர் புகழ்வகை மணத்து மென்றதும்
விண்ணெழு முனிவரின் வினவி விட்டதும்
எண்ணினன் மகிழ்ந்தனன் இமையத் தண்ணலே. - 1


691 - கணிதமி லுயிரெலாங் கலந்து மற்றவை
உணர்வுதொ றிருந்தவற் கொருதன் கன்னியை
மணமுறை புரிதிறம் மதித்துத் தேவர்தம்
பணிபுரி தச்சனைப் பரிவொ டுன்னினான். - 2


692 - உன்னிய போதினி லும்பர் கம்மியன்
மன்னவன் எதிருற வந்து கைதொழு
தென்னைகொல் கருதினை யாது செய்பணி
அன்னதை மொழிகென அறைதல் மேயினான். - 3


693 - என்னையாள் கண்ணுத லறைவற் கியான்பெறும்
அன்னையாம் உமைதனை யளிப்பன் இவ்வரைக்
கன்னிமா நகரெலாங் கவின்சி றந்திடப்
பொன்னினா டாமெனப் புனைதி யாலென்றான். - 4


694 - அப்பொழு தத்தினில் அடுக்கன் மேலையோன்
செப்பிய வாசகஞ் செவிக்கொண் டுள்ளமேன்
மெய்ப்பெரு மகிழ்ச்சியை மேவி யந்நகர்
ஒப்பனை செய்திட வுன்னி னானரோ. - 5


695 - நீடுறு தருநிரை நிமிருங் கால்களாய்ப்
பாடுறு கழிகளாய்ப் பரம்பும் பல்பணை
மூடுற அதன்மிசை முகில்க ளெங்கணும்
பீடுறு பந்தர்போற் பிறங்கும் வெற்பின்மேல். - 6


696 - மலையுறழ் கோபுர மன்றஞ் சூளிகை
நிலைகெழு செய்யதேர் நிழற்று மண்டபம்
பலவுடன் நறுமலர்ப் பந்தர் அன்னவை
தொலைவறும் ஆவணந் தோறும் நல்கினான். - 7


697 - நீக்கமில் கதலிகை நெடிய கேதனம்
மேக்குயர் காவண மிசைத்தந் துள்ளிடை
ஆக்குறு கம்பல மணிசெய் தாயிடைத்
தூக்கினன் கவரியுஞ் சுடர்கொள் மாலையும். - 8


698 - குரகத முகம்புரை குலைகள் தூங்கிய
மரகத வொளிபடு வாழை பூகநல்
நிரைகெழு தன்மையின் நிறுவிப் பூந்துணர்
விரைகெழு தோரணம் விசும்பின் நாற்றினான். - 9


699 - ஒண்ணிதி இயக்கர்கோ னுறையு ளானதும்
விண்ணவர் தொழுதிட வீற்றி ருந்திடும்
அண்ணறன் கோயிலு மாக வீதிகள்
எண்ணருந் திருவுற எழில்ப டுத்தினான். - 10


700 - ஒருபுறத் தினைஇனி யுமைக்கு நல்குவோன்
இருபுறத் தினும்வெரு மெண்ணில் தேவருந்
தருபுறப் பொருளெலாஞ் சாரச் சாலைகள்
திரிபுறத் திரிபுறச் செய்த மைத்தனன். - 11


701 - ஆயிரப் பத்தென அறையும் யோசனை
போயதோ ரளவையிற் புரிசை யொன்றினைக்
கோயிலி னொருபுடை குயிற்றிக் கோபுரம்
வாயில்கள் நான்கினு மரபின் நல்கினான். - 12


702 - அங்கதன் நடுபுற அகன்ப ரப்பினின்
மங்கல மணஞ்செய வதுவைச் சாலையைச்
செங்கன கத்தினால் திகழச் செய்தனன்
கங்கையஞ் சடையினான் கயிலைக் கோயில்போல். - 13


703 - சாலையின் நிலத்திடைச் சந்த மான்மதம்
மேலுறு நாவிநீர் விரவிப் பூசியே
கோலமென் மலர்கடூஉய்க் குறுகும் வானவர்க்
கேலுறு பலதவி சிருப்பச் செய்தனன். - 14


704 - வானவில் மணிமுகில் வனச மாமலர்
நீனிறம் விரிதரு நெய்தல் சண்பகம்
ஏனைய நிறங்களால் எண்ணில் வேதிகை
ஆனவை புரிந்தனன் அயனும் நாணவே. - 15


705 - கண்ணடி பூந்தொடை கவரி ப·றுகின்
மண்ணிய செழுமணி மாலை தூங்குறப்
பண்ணுறு வித்தனன் பரமன் பால்வரும்
விண்ணவர் விழியெலாம் விருந்து கொள்ளவே. - 16


706 - தேவரு முனிவருந் திருவ னார்களும்
பாவையின் உயிருறு பண்பி னாக்கியே
மேவரு கவரிதார் வீணை யேந்தியே
ஏவலர் தொழின்முறை இயற்ற நல்கினான். - 17


707 - பெண்ணிய லாரெனப் பிறங்கும் பாவைகள்
தண்ணுமை முதலிய தாக்கித் தண்டியல்
பண்ணொடு களிநடம் பயிலு வித்தனன்
விண்ணவர் அரம்பையர் யாரும் வெ·கவே. - 18


708 - நெருங்கிய கிளிமயில் நேமி தண்புறாப்
பொருங்கரி அரிபரி பொருநர் வானுளோர்
ஒருங்குடன் மணிகளா லோவி யப்பட
அருங்கடி யிருக்கையுள் அமர நல்கினான். - 19


709 - குறைதவிர் நிலைமையாற் குயிற்றுஞ் சாலையுள்
நிறைதரு மிந்திர நீலத் தாலொரு
திறலரி யணையினைச் சிறப்பிற் செய்தனன்
இறைவனு மிறைவியும் இனிது மேவவே. - 20


710 - குண்டமும் வேதிகை வகையுங் கோதில்சீர்
மண்டல மானதும் வகுத்து வேள்விசெய்
பண்டம தானதும் படுத்திப் பண்ணவர்
எண்டொகை மங்கலம் இருத்தி னானரோ. - 21


711 - கண்டெறு கதிர்மதிக் காந்தங் காஞ்சனம்
ஒண்டுகிர் நித்தில மொளிறு வச்சிரம்
முண்டக வெயின்மணி முதல்வெ றுக்கையால்
மண்டப மெண்ணில மருங்கின் நல்கினான். - 22


712 - காவிகண் மலர்தரு கயங்க ளோர்பல
ஓவறு முற்பல வோடை யோர்பல
பூவியல் வாரிசப் பொய்கை யோர்பல
வாவிக ளோர்பல மருங்கில் ஆக்கினான். - 23


713 - பாசடை மரகதம் பளிங்கு வச்சிரங்
பாசறு நன்மணி கனக மன்னதால்
தேசுறு நளிமலர் செறிந்த பூந்தடம்
வாசவன் கண்டுள மருளத் தந்தனன். - 24


714 - கற்பகஞ் சந்தகில் கதலி பூகமே
பொற்புறு வருக்கைமாப் புன்னை யாதிய
பற்பல மணிகளாற் படுத்தி அன்னவை
நற்பயன் வழங்கவும் நல்கி னானரோ. - 25


715 - இன்னவா றளப்பில இமைய வர்க்கெலாம்
முன்னுறு கம்மியன் முன்னிச் செய்தலும்
பொன்னியல் இமகிரிப் புரத்து மேவிய
மன்னவன் கண்டவை மகிழ்ச்சி எய்தினான். - 26


716 - சீதரன் அயன்முதற் றேவர் மாத்தொகை
மாதவ முனிவரர் மடந்தை மாரொடு
காதலின் உமைமணங் காண வந்திடத்
தூதரை யெங்கணுந் தூண்டி னானரோ. - 27


717 - ஒற்றர்தம் முரைதெரிந் தும்பர் யாவருங்
குற்றமில் முனிவருங் குன்ற வில்லினால்
பற்றலர் புரமடு பரமற் போற்றியே
மற்றவன் றன்னொடு வருது மென்றனர். - 28


718 - வெற்றிகொள் வயப்புலி மிசையு யர்த்திடுங்
கொற்றவை யாமளை குழீஇய காளிகள்
சுற்றுறும் எழுநதி இமையத் தொல்கிரி
உற்றனர் தொழுதனர் உமைமுன் நண்ணினார். - 29


719 - செந்திரு நாமகள் சீர்பெ றுஞ்சசி
பந்தமில் தாபத பன்னி யாயுளார்
அந்தமில் அணங்கினர் யாரு மவ்வரை
வந்தனர் அவரவர் மகிழ்நர் ஏவலால். - 30


720 - பங்கய மிசைவரு பாவை யேமுதல்
நங்கையர் யாவரும் நற்ற வத்தினால்
அங்கநொந் துறைதரும் அம்மை தாடொழா
அங்கல வதுவையின் வனப்புச் செய்தனர். - 31


721 - நெறிதரு தவத்துரு நீக்கிக் காமருக்
குறையுள தாகிய உமைதன் மெய்யினைக்
குறைதவிர் நிலைமையிற் கோலஞ் செய்தனர்
இறைவனை வழிபடும் இயல்பி னாரென. - 32


722 - மேதகு பொலஞ்சுடர் மேரு மந்தரம்
ஆதிய வாகிய அலகில் சுற்றமும்
ஓதருங் கடல்களும் அரக வேந்தரும்
மாதிர யானையும் பிறவும் வந்தவே. - 33


723 - வேறு
ஈங்கிது காலை தன்னில் இமகிரி புரக்கு மன்னன்
பாங்குறு தமர்க ளோடும் பரிவொடுஞ் சென்று வௌ¢ளி
ஓங்கலில் நந்தி யுய்ப்ப உயிர்க்குயி ரான அண்ணல்
பூங்கழல் வணங்கி நின்றாங் கினையன புகல லுற்றான். - 34


724 - ஆதியி னுலக மெல்லா மளித்திடு மன்னை தன்னைக்
காதலின் வதுவை செய்யக் கருதினை கணித நூலோர்
ஓதுபங் குனியின் திங்கள் உத்தரம் இன்றே யாரும்
ஈதுநன் முகூர்த்தம் எந்தாய் இமையமேல் வருதி யென்றான். - 35


725 - அல்லுறுழ் கண்டத் தெந்தை யரசனை நோக்கி யின்னே
எல்லையில் கணங்கள் சூழ இமையமேல் வருதும் முன்னஞ்
செல்லுதி யென்ற லோடுந் திருவடி வணங்கிப் போற்றி
வல்லையின் மீண்டு போய்த்தன் வளநகர் இருக்கை புக்கான். - 36

ஆகத் திருவிருத்தம் - 725

அடுத்தது : உற்பத்திக் காண்டம் - பகுதி 2...




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்