Nāṉkām tirumuṟai


சைவ சமய நூல்கள்

Back

நான்காம் திருமுறை
இராமலிங்க அடிகள்



திருவருட்பா
இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது
நான்காம் திருமுறை

tiruvarutpA of rAmalinga aTikaL
tirumuRai -IV (verses 2571 - 3028)
(in tamil script, TSCII format)

1. குஞ்சிதபாதப் பதிகம் (2571- 2580)


- காப்பு
- - பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

2571 - திருவண்ண நதியும்வளை ஒருவண்ண மதியும்வளர் செவ்வண்ணம் நண்ணுசடையும்
தெருள்வண்ண நுதல்விழியும் அருள்வண்ண வதனமும் திகழ்வண்ண வெண்ணகையும்ஓர்
மருவண்ண மணிகுவளை மலர்வண்ண மிடறும்மலை மகள்வண்ண மருவும்இடமும்
மன்வண்ண மிகுதுணைப் பொன்வண்ண அடிமலரும் மாணிக்க வண்ணவடிவும்
இருவண்ண மாம்என்மன தொருவண்ணம் ஆகியே இடையறா தெண்ணும்வண்ணம்
எவ்வண்ணம் அவ்வண்ணம் இவ்வண்ணம் என்றிவண் இயம்பல்உன் கருணைவண்ணம்
கருவண்ணம் அறஉளம் பெருவண்ணம் உறநின்று கடல்வண்ணன் எண்ணும்அமுதே
கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ...1

2572 - எண்ணுறுவி ருப்பாதி வல்விலங் கினமெலாம் இடைவிடா துழலஒளிஓர்
எள்அளவும் இன்றிஅஞ் ஞானஇருள் மூடிட இருண்டுயிர் மருண்டுமாழ்க
நண்ணுமன மாயையாம் காட்டைக் கடந்துநின் ஞானஅருள் நாட்டைஅடையும்
நாள்எந்த நாள்அந்த நாள்இந்த நாள்என்று நாயினேற் கருள்செய்கண்டாய்
விண்ணுறுசு டர்க்கெலாம் சுடர்அளித் தொருபெரு வெளிக்குள்வளர் கின்றசுடரே
வித்தொன்றும் இன்றியே விளைவெலாம் தருகின்ற விஞ்ஞான மழைசெய்முகிலே
கண்ணுறுநு தற்பெருங் கடவுளே மன்றினில் கருணைநடம் இடுதெய்வமே
கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ...2

2573 - பூதநெறி யாதிவரு நாதநெறி வரையுமாப் புகலுமூ வுலகுநீத்துப்
புரையுற்ற மூடம்எனும் இருள்நிலம்அ கன்றுமேல் போய்அருள்ஒ ளித்துணையினால்
வேதநெறி புகல்சகல கேவலம்இ லாதபர வெளிகண்டு கொண்டுகண்ட
விளைவின்றி நான்இன்றி வெளிஇன்றி வெளியாய் விளங்குநாள் என்றருளுவாய்
வாதநெறி நடவாத போதநெறி யாளர்நிறை மதிநெறிஉ லாவும்மதியே
மணிமிடற் றரசேஎம் வாழ்வின்முத லேஅரு மருந்தேபெ ருந்தெய்வமே
காதநெறி மணம்வீசு கனிதருபொ ழிற்குலவு கடிமதிற் றில்லைநகர்வாழ்
கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ...3

2574 - கூர்கொண்ட வாள்கொண்டு கொலைகொண்ட வேட்டுவக் குடிகொண்ட சேரிநடுவில்
குவைகொண்ட ஒருசெல்வன் அருமைகொண் டீன்றிடு குலங்கொண்ட சிறுவன்ஒருவன்
நேர்கொண்டு சென்றவர்கள் கைகொண் டுறக்கண்கள் நீர்கொண்டு வாடல்எனவே
நிலைகொண்ட நீஅருட் கலைகொண் டளித்தயான் நெறிகொண்ட குறிதவறியே
போர்கொண்ட பொறிமுதல் புலைகொண்ட தத்துவப் புரைகொண்ட மறவர்குடியாம்
பொய்கொண்ட மெய்என்னும் மைகொண்ட சேரியில் போந்துநின் றவர்அலைக்கக்
கார்கொண்ட இடிஒலிக் கண்கொண்ட பார்ப்பில் கலங்கினேன் அருள்புரிகுவாய்
கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ...4

2575 - படமெடுத் தாடுமொரு பாம்பாக என்மனம் பாம்பாட்டி யாகமாயைப்
பார்த்துக் களித்துதவு பரிசுடையர் விடயம் படர்ந்தபிர பஞ்சமாகத்
திடமடுத் துறுபாம்பின் ஆட்டமது கண்டஞ்சு சிறுவன்யா னாகநின்றேன்
தீரத்து ரந்தந்த அச்சந்த விர்த்திடு திறத்தன்நீ ஆகல்வேண்டும்
விடமடுத் தணிகொண்ட மணிகண்ட னேவிமல விஞ்ஞான மாம்அகண்ட
வீடளித் தருள்கருணை வெற்பனே அற்புத விராட்டுருவ வேதார்த்தனே
கடமடுத் திடுகளிற் றுரிகொண்ட ணிந்தமெய்க் டவுளே சடைகொள்அரசே
கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ...5

2576 - எழுவகைப் பிறவிகளுள் எப்பிறவி எய்துகினும் எய்துகபி றப்பில்இனிநான்
எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும் இன்பம்எய் தினும்எய்துக
வழுவகைத் துன்பமே வந்திடினும் வருகமிகு வாழ்வுவந் திடினும்வருக
வறுமைவரு கினும்வருக மதிவரினும் வருகஅவ மதிவரினும் வருகஉயர்வோ
டிழிவகைத் துலகின்மற் றெதுவரினும் வருகஅல தெதுபோ கினும்போகநின்
இணையடிகள் மறவாத மனம்ஒன்று மாத்திரம் எனக்கடைதல் வேண்டும்அரசே
கழிவகைப் பவரோக நீக்கும்நல் லருள்எனும் கதிமருந் துதவுநிதியே
கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ...6

2577 - பற்றுவது பந்தம்அப் பற்றறுதல் வீடிஃது பரமவே தார்த்தம்எனவே
பண்புளோர் நண்பினொடு பகருவது கேட்டும்என் பாவிமனம் விடயநடையே
எற்றுவது செய்யாமல் எழுவதொடு விழுவதும் இறங்குவதும் ஏறுவதும்வீண்
எண்ணுவதும் நண்ணுவதும் இப்புவன போகங்கள் யாவினும் சென்றுசென்றே
சுற்றுவதும் ஆகிஓர் சற்றுமறி வில்லாது சுழல்கின்ற தென்செய்குவேன்
தூயநின் திருவருளின் அன்றிஇவ் வேழைஅச் சுழல்மனம்அ டக்கவருமோ
கற்றுவழு வற்றவர் கருத்தமர் கருத்தனே கண்ணுதற் கடவுள்மணியே
கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ...7

2578 - எளியனேன் சிறியன்யான் செய்பிழைகள் சிறியவோ எழுகடலி னும்பெரியவே
என்செய்கேன் என்செய்கேன் இனிஆயி னும்செயா தெந்தைநினை ஏத்தஎன்றால்
வளியின்வான் சுழல்கின்ற பஞ்சாக நெஞ்சால் மயங்குகின் றேன்அடியனேன்
மனம்எனது வசமாக நினதுவசம் நானாக வந்தறிவு தந்தருளுவாய்
ஒளியின்ஒளி யேநாத வெளியின் வெளியேவிடய உருவின்உரு வேஉருவினாம்
உயிரின்உயி ரேஉயர்கொள் உணர்வின்உணர் வேஉணர்வின் உறவினுற வேஎம்இறையே
களியின்நிறை வேஅளிகொள் கருணைநிதி யேமணிகொள் கண்டஎண் தோள்கடவுளே
கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ...8

2579 - சந்ததம்எ னக்குமகிழ் தந்தைநீ உண்டுநின் தன்னிடத் தேமவல்லி
தாயுண்டு நின்அடியர் என்னும்நல் தமர்உண்டு சாந்தம்எனும் நேயர்உண்டு
புந்திகொள்நி ராசையாம் மனைவிஉண் டறிவெனும் புதல்வன்உண் டிரவுபகலும்
போனவிட முண்டருட் பொருளுமுண் டானந்த போகபோக் கியமும்உண்டு
வந்தனைசெய் நீறெனும் கவசம்உண் டக்கமா மணியும்உண் டஞ்செழுத்தாம்
மந்திரப் படைஉண்டு சிவகதிஎ னும்பெரிய வாழ்வுண்டு தாழ்வும்உண்டோ
கந்தமிகு கொன்றையொடு கங்கைவளர் செஞ்சடைக் கடவுளே கருணைமலையே
கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ...9

2580 - நான்முகனும் மாலும்அடி முடியும்அறி வரியபர நாதமிசை ஓங்குமலையே
ஞானமய மானஒரு வானநடு ஆனந்த நடனமிடு கின்றஒளியே
மான்முகம்வி டாதுழலும் எனையும்உயர் நெறிமருவ வைத்தவண்வ ளர்த்தபதியே
மறைமுடிவில் நிறைபரப் பிரமமே ஆகம மதிக்கும்முடி வுற்றசிவமே
ஊண்முகச் செயல்விடுத் துண்முகப் பார்வையின் உறுந்தவர்பெ றுஞ்செல்வமே
ஒழியாத உவகையே அழியாத இன்பமே ஒன்றிரண் டற்றநிலையே
கான்முகக் கடகளிற் றுரிகொண்ட கடவுளே கண்கொண்ட நுதல்அண்ணலே
கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே. ...10
திருச்சிற்றம்பலம்
------------------------------------

2. போற்றித் திருப்பதிகம் (2581 - 2590)


- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

2581 - அருள்தரல் வேண்டும் போற்றிஎன் அரசே
அடியனேன் மனத்தகத் தெழுந்த
இருள்கெடல் வேண்டும் போற்றிஎந் தாயே
ஏழையேன் நின்றனைப் பாடும்
தெருள்உறல் வேண்டும் போற்றிஎன் அறிவே
சிந்தைநைந் துலகிடை மயங்கும்
மருள்அறல் வேண்டும் போற்றிஎன் குருவே
மதிநதி வளர்சடை மணியே. . ..1

2582 - மணிமிடற் றமுதே போற்றிஎன் தன்னை
வாழ்விக்க வேண்டுவல் போற்றி
அணிமதி முடியோய் போற்றிஇவ் வேழைக்
கருளமு தருளுக போற்றி
பணிஅணி புயத்தோய் போற்றிநின் சீரே
பாடுதல் வேண்டும்நான் போற்றி
தணிவில்பே ரொளியே போற்றிஎன் தன்னைத்
தாங்குக போற்றிநின் பதமே. ...2

2583 - நின்பதம் பாடல் வேண்டும்நான் போற்றி
நீறுபூத் தொளிர்குளிர் நெருப்பே
நின்புகழ் கேட்டல் வேண்டும்நான் போற்றி
நெற்றியங் கண்கொளும் நிறைவே
நின்வச மாதல் வேண்டும்நான் போற்றி
நெடியமால் புகழ்தனி நிலையே
நின்பணி புரிதல் வேண்டும்நான் போற்றி
நெடுஞ்சடை முடித்தயா நிதியே. ...3

2584 - நிதிதரு நிறைவே போற்றிஎன் உயிர்க்கோர்
நெறிதரு நிமலமே போற்றி
மதிமுடிக் கனியே போற்றிஎன் தன்னை
வாழ்வித்த வள்ளலே போற்றி
விதிமுதற் கிறையே போற்றிமெய்ஞ் ஞான
வியன்நெறி விளக்கமே போற்றி
பதிபசு பதியே போற்றி நின்பாதம்
பாடஎற் கருளுக போற்றி. ...4

2585 - போற்றிஎன் உயிர்க்கோர் இன்பமே அன்பர்
புரிதவக் காட்சியே போற்றி
போற்றிஎன் அன்பாம் தெய்வமே சைவம்
புகல்சிவ போகமே போற்றி
போற்றிஎன் பெரிதாஞ் செல்வமே கருணைப்
பூரண வெள்ளமே போற்றி
போற்றிஎன் வாழ்வுக் கொருபெரு முதலே
போற்றிநின் சேவடிப் போதே. ...5

2586 - போதஆ னந்த போகமே என்னைப்
புறம்பிட நினைத்திடேல் போற்றி
சீதவான் பிறைசேர் செஞ்சடை யாய்என்
சிறுமைதீர்த் தருளுக போற்றி
பேதம்ஒன் றில்லா அருட்கட லேஎன்
பிழைஎலாம் பொறுத்தருள் போற்றி
வேதமெய்ப் பொருளே போற்றிநின் அல்லால்
வேறெனக் கிலைஅருள் போற்றி. ...6

2587 - போற்றுவார் உள்ளம் புகுந்தொளிர் ஒளியே
போற்றிநின் பூம்பதம் போற்றி
ஆற்றுவார் சடைஎன் அப்பனே போற்றி
அமலநின் அடிமலர் போற்றி
ஏற்றுவார் கொடிகொள் எந்தையே போற்றி
இறைவநின் இருங்கழல் போற்றி
சாற்றுமா றரிய பெருமையே போற்றி
தலைவநின் தாட்டுணை போற்றி. ...7

2588 - துணைமுலை மடந்தை எம்பெரு மாட்டி
துணைவநின் துணையடி போற்றி
புணைஎன இடரின் கடலினின் றேற்றும்
புனிதநின் பொன்னடி போற்றி
இணையில்பே ரின்ப அமுதருள் கருணை
இறைவநின் இணையடி போற்றி
கணைஎனக் கண்ணன் தனைக்கொளும் ஒருமுக்
கண்ணநின் கழலடி போற்றி. ...8

2589 - அடியனேன் பிழைகள் பொறுத்தருள் போற்றி
அயல்எனை விட்டிடேல் போற்றி
கொடியனேற் கின்பந் தந்தருள் போற்றி
குணப்பெருங் குன்றமே போற்றி
நெடியஎன் துன்பந் துடைத்தருள் போற்றி
நினைஅலால் பிறிதிலேன் போற்றி
படிமிசைப் பிறர்பால் செலுத்திடேல் எங்கள்
பரமநின் அடைக்கலம் நானே. ...9

2590 - நான்செயும் பிழைகள் பலவும்நீ பொறுத்து
நலந்தரல் வேண்டுவன் போற்றி
ஏன்செய்தாய் என்பார் இல்லைமற் றெனக்குன்
இன்னருள் நோக்கஞ்செய் போற்றி
ஊன்செய்நா வால்உன் ஐந்தெழுத் தெளியேன்
ஓதநீ உவந்தருள் போற்றி
மான்செயும் நெடுங்கண் மலைமகள் இடங்கொள்
வள்ளலே போற்றிநின் அருளே. ...10
திருச்சிற்றம்பலம்

----------------------------------------

3. அம்மை திருப்பதிகம் (2591 - 2600)


- காப்பு
- - பதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

2591 - உலகின்உயிர் வகைஉவகை யுறஇனிய அருளமுதம் உதவும்ஆ னந்த சிவையே
உவமைசொல அரியஒரு பெரியசிவ நெறிதனை உணர்த்துபே ரின்ப நிதியே
இலகுபர அபரநிலை இசையும்அவ ரவர்பருவம் இயலுற உளங்கொள் பரையே
இருமைநெறி ஒருமையுற அருமைபெறு பெருமைதனை ந்தெனை அளித்த அறிவே
கலகமுறு சகசமல இருளகல வெளியான< ஸ஡௰஺஢஧ூ ஸ௕ந஽ ி஢நை஧௅
கடகரட விமலகய முகஅமுதும் அறுமுகக் கநஅமுதும் உதவு கடலே
அலகில்வளம் நிறையும்ஒரு தில்லையம் பதிமேவும் அண்ணலார் மகிழும் மணியே
அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ...1

2592 - கற்பவைஎ லாங்கற்றுள் உணர்பவைஎ லாமனக் கரிசற உணர்ந்து கேட்டுக்
காண்பவைஎ லாங்கண்டு செய்பவைஎ லாஞ்செய்து கருநெறி அகன்ற பெரியோர்
பொற்பவைஎ லாஞ்சென்று புகல்பவைஎ லாங்கொண்டு புரிபவை எலாம்பு ரிந்துன்
புகழவைஎ லாம்புகழ்ந் துறுமவைஎ லாம்உறும் போதவை எலாம்அ ருளுவாய்
நிற்பவைஎ லாம்நிற்ப அசைபவைஎ லாம்அசைய நிறைபவை எலாஞ்செய் நிலையே
நினைபவைஎ லாம்நெகிழ நெறிஅவைஎ லாம்ஓங்கும் நித்தியா னந்த வடிவே
அற்புடைய அடியர்புகழ் தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே
அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ...2

2593 - இக்கணம்இ ருந்தஇம் மெய்யென்ற பொய்க்கூரை இனிவரு கணப்போ திலே
இடியாதி ருக்குமோ இடியுமோ என்செய்கோம் என்செய்கோம் இடியும் எனில்யாம்
தெக்கணம் நடக்கவரும் அக்கணம் பொல்லாத தீக்கணம் இருப்ப தென்றே
சிந்தைநைந் தயராத வண்ணம்நல் அருள்தந்த திகழ் பரம சிவசத்தியே
எக்கணமும் ஏத்தும்ஒரு முக்கணி பரம்பரை< ௾ு஡஺௄ ௌு஡௃஢ ௅஢ுந௄
இறைவிபை ரவிஅமலை எனமறைகள் ஏத்திட இருந்த ருள்தருந் தேவியே
அக்கணுதல் எம்பிரான் தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே
அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ...3

2594 - பொய்யாத மொழியும்மயல் செய்யாத செயலும்வீண் போகாத நாளும் விடயம்
புரியாத மனமும்உட் பிரியாத சாந்தமும் புந்திதள ராத நிலையும்
எய்யாத வாழ்வும்வே றெண்ணாத நிறைவும்நினை என்றும்மற வாத நெறியும்
இறவாத தகவும்மேற் பிறவாத கதியும்இவ் ஏழையேற் கருள்செய் கண்டாய்
கொய்யாது குவியாது குமையாது மணம்வீசு கோமளத் தெய்வ மலரே
கோவாத முத்தமே குறையாத மதியமே கோடாத மணிவி ளக்கே
ஐயான னம்கொண்ட தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே
அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ...4

2595 - பவமான எழுகடல் கடந்துமேற் கதியான பதிநிலை அணைந்து வாழப்
பகலான சகலமுடன் இரவான கேவலப் பகையுந் தடாத படிஓர்
தவமான கலனில்அருள் மீகாம னால்அலது தமியேன் நடத்த வருமோ
தானா நடக்குமோ என்செய்கேன் நின்திருச் சரணமே சரணம் அருள்வாய்
உவமான மற்றபர சிவமான சுத்தவெளி உறவான முத்தர் உறவே
உருவான அருவான ஒருவான ஞானமே உயிரான ஒளியின் உணர்வே
அவமான நீக்கிஅருள் தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே
அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ...5

2596 - சூரிட்ட நடையில்என் போரிட்ட மனதைநான் சொல்லிட்ட முடன்அ ணைத்துத்
துன்றிட்ட மோனம்எனும் நன்றிட்ட அமுதுண்டு சும்மா இருத்தி என்றால்
காரிட்டி தற்குமுன் யாரிட்ட சாபமோ கண்டிலேன் அம்மம் மஓர்
கணமேனும் நில்லாது பொல்லாது புவியில் கறங்கெ னச்சுழல் கின்றதே
தாரிட்ட நீஅருள் சீரிட்டி டாய்எனில் தாழ்பிறவி தன்னில் அதுதான்
தன்னைவீழ்த் துவதன்றி என்னையும் வீழ்த்தும்இத் தமிய னேன்என் செய்குவேன்
ஆறிட்ட சடையாளர் தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே
அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ...6

2597 - மாயைஎனும் இரவில்என் மனையகத் தேவிடய வாதனைஎ னுங்கள் வர்தாம்
வந்துமன அடிமையை எழுப்பிஅவ னைத்தமது வசமாக உளவு கண்டு
மேயமதி எனும்ஒரு விளக்கினை அவித்தெனது மெய்ந்நிலைச் சாளி கைஎலாம்
வேறுற உடைத்துள்ள பொருள்எலாம் கொள்ளைகொள மிகநடுக் குற்று நினையே
நேயம்உற ஓவாது கூவுகின் றேன்சற்றும் நின்செவிக் கேற இலையோ
நீதிஇலை யோதரும நெறியும்இலை யோஅருளின் நிறைவும்இலை யோஎன் செய்கேன்
ஆயமறை முடிநின்ற தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே
அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ...7

2598 - வெவ்வினைக் கீடான காயம்இது மாயம்என வேத முதல்ஆ கமம்எலாம்
மிகுபறைஅ றைந்தும்இது வெயில்மஞ்சள் நிறம்எனும் விவேகர் சொற்கேட் டறிந்தும்
கவ்வைபெறு கடலுலகில் வைரமலை ஒத்தவர் கணத்திடை இறத்தல் பலகால்
கண்ணுறக் கண்டும்இப் புலைஉடலின் மானம்ஓர் கடுஅளவும் விடுவ தறியேன்
எவ்வம்உறு சிறியனேன் ஏழைமதி என்னமதி இன்னமதி என்று ணர்கிலேன்
இந்தமதி கொண்டுநான் எந்தவகை அழியாத இன்பநிலை கண்டு மகிழ்வேன்
அவ்வியம்அ கற்றிஅருள் தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே
அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ...8

2599 - ஒளிமருவும் உனதுதிரு வருள்அணுத் துணையேனும் உற்றிடில் சிறுது ரும்பும்
உலகம் படைத்தல்முதல் முத்தொழில் இயற்றும்என உயர்மறைகள் ஓர்அ னந்தம்
தெளிவுறமு ழக்கஅது கேட்டுநின் திருவடித் தியானம் இல்லா மல்அவமே
சிறுதெய்வ நெறிசெல்லும் மானிடப் பேய்கள்பால் சேராமை எற்க ருளுவாய்
களிமருவும் இமயவரை அரையன்மகள் எனவரு கருணைதரு கலாப மயிலே
கருதும்அடி யவர்இதய கமலமலர் மிசைஅருட் கலைகி ளரவளர் அன்னமே
அளிநறைகொள் இதழிவனை தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே
அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ...9

2600 - நீறணிந் தொளிர்அக்க மணிதரித் துயர்சைவ நெறிநின்று னக்கு ரியஓர்
நிமலமுறும் ஐந்தெழுத் துள்நிலையு றக்கொண்டு நின்னடிப் பூசை செய்து
வீறணிந் தென்றும்ஒரு தன்மைபெறு சிவஞான வித்தகர்ப தம்பர வும்ஓர்
மெய்ச்செல்வ வாழ்க்கையில் விருப்பமுடை யேன்இது விரைந்தருள வேண்டும் அமுதே
பேறணிந் தயன்மாலும் இந்திரனும் அறிவரிய பெருமையை அணிந்த அமுதே
பிரசமலர் மகள்கலைசொல் மகள்விசய மகள்முதல் பெண்கள்சிரம் மேவும் மணியே
ஆறணிந் திடுசடையர் தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே
அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே. ...10
திருச்சிற்றம்பலம்
-----------------------------

4. ஆனந்த நடனப் பதிகம் (2601 - 2610)


- பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

2601 - பரசிவா னந்தபரி பூரண சதானந்த பாவனா தீதமுக்த
பரமகை வல்யசை தன்யநிஷ் களபூத பெளதிகா தாரயுக்த
சர்வமங் களசச்சி தானந்த செளபாக்ய சாம்பவ விநாசரகித
சாஸ்வத புராதர நிராதர அபேதவா சாமகோ சரநிரூபா
துருவகரு ணாகர நிரந்தர துரந்தர சுகோதய பதித்வநிமல
சுத்தநித் தியபரோ க்ஷாநுபவ அபரோக்ஷ சோமசே கரசொரூபா
அரஹர சிவாயநம என்றுமறை ஓலமிட் டணுவளவும் அறிகிலாத
அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ...1

2602 - ஜோதிமணி யேஅகண் டானந்த சைதன்ய சுத்தமணியே அரியநல்
துரியமணி யேதுரிய முங்கடந் தப்பால் துலங்குமணி யேஉயர்ந்த
ஜாதிமணி யேசைவ சமயமணி யேசச்சி தானந்த மானமணியே
சகஜநிலை காட்டிவினை யோட்டிஅருள் நீட்டிஉயர் சமரச சுபாவமணியே
நீதிமணி யேநிரு விகற்பமணி யேஅன்பர் நினைவிலமர் கடவுண்மணியே
நின்மல சுயம்பிர காசங்குலவும் அத்வைத நித்யஆ னந்தமணியே
ஆதிமணி யேஎழில் அநாதிமணி யேஎனக் கன்புதவும் இன்பமணியே
அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ...2

2603 - தேனமர் பசுங்கொன்றை மாலையா டக்கவின் செய்யுமதி வேணியாட
செய்யுமுப் புரிநூலு மாடநடு வரியுரி சிறந்தாட வேகரத்தில்
மானிமிர்ந் தாடஒளிர் மழுவெழுந் தாடமக வானாதி தேவராட
மாமுனிவர் உரகர்கின் னரர்விஞ்சை யருமாட மால்பிரம னாடஉண்மை
ஞானஅறி வாளர்தின மாடஉல கன்னையாம் நங்கைசிவ காமியாட
நாகமுடன் ஊகமன நாடிஒரு புறமாட நந்திமறை யோர்களாட
ஆனைமுக னாடமயி லேறிவிளை யாடுமுயர் ஆறுமுக னாடமகிழ்வாய்
அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ...3

2604 - பொய்யான வாழ்க்கையினை மெய்யாக நம்பிவீண் போக்கிநன் னாளைமடவார்
போகமே பெரிதெனக் கொண்டறி வழிந்துநின் பொன்னடிக் கானபணியைச்
செய்யாத பாவியேன் என்னைநீ கைவிடில் செய்வதறி யேன்ஏழையேன்
சேய்செய்த பிழையெலாம் தாய்பொறுப் பதுபோல சிந்தைதனில் எண்ணிடாயோ
மெய்யான நிலைபெறக் கையா லணைத்தருள வேண்டுமறை யாகமத்தின்
மேலான சுத்தசன் மார்க்கஅனு பவசாந்த மேதையர்கள் பரவிவாழ்த்தும்
ஐயான னங்கொண்ட தெய்வமே கங்கைஅர வம்புலியு மாடமுடிமேல்
அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ...4

2605 - (போதாரு நான்முகப்) புத்தேளி னாற்பெரிய பூமியிடை வந்துநமனாற்
போகுமுயிர் கள்வினையை ஒழிமின்என் றேகுரவர் போதிக்கும் உண்மைமொழியைக்
காதார வேபல தரங்கேட்டும் நூற்களிற் கற்றும்அறி வற்றிரண்டு
கண்கெட்ட குண்டையென வீணே யலைந்திடும் கடையனேன் உய்வதெந்நாள்
மாதாவு மாய்ஞான வுருவுமாய் அருள்செயும் வள்ளலே உள்ளமுதலே
மாலாதி தேவர்முனி வோர்பரவி யேதொழுது வாழ்த்திமுடி தாழ்த்துமுன்றன்
ஆதார மானஅம் போருகத் தைக்காட்டி யாண்டருள வேண்டும்அணிசீர்
அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ...5

2606 - பண்ணாரு மூவர்சொற் பாவேறு கேள்வியிற் பண்படா ஏழையின்சொற்
பாவையும் இகழ்ந்திடா தேற்றுமறை முடிவான பரமார்த்த ஞானநிலையை
கண்ணார நெல்லியங் கனியெனக் காட்டிநற் கருணைசெய் தாளாவிடில்
கடையனேன் ஈடேறும் வகைஎந்த நாள்அருட் கடவுளே கருணைசெய்வாய்
தண்ணா ரிளம்பிறை தங்குமுடி மேன்மேனி தந்தஒரு சுந்தரியையும்
தக்கவா மத்தினிடை பச்சைமயி லாம்அரிய சத்தியையும் வைத்துமகிழ்என்
அண்ணாஎன் அப்பாஎன் அறிவேஎன் அன்பேஎன் றன்பர் (எப் பொழுதும்) வாழ்த்தும்
அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ...6

2607 - பவமான எழுவகைப் பரப்பான வேலையிற் பசுவான பாவிஇன்னும்
பற்றான குற்றமதை உற்றலை துரும்பெனப் படராது மறையனைத்தும்
உவமான முரைசெய்ய அரிதான சிவநிலையை உற்றதனை யொன்றிவாழும்
உளவான வழியீ தெனக்காட்டி அருள்செய்யில் உய்குவேன் முடிவானநல்
தவமான நெறிபற்றி ரண்டற்ற சுகவாரி< ா௽௉஢௸ி஢ந௉ ி஡ொ஦ூ௸௄஡௵
தானான சுத்தசன் மார்க்கஅனு பவசாந்த தற்பரர்க ளகநிறைந்தே
அவமான கருணைப்பிர காசநின் னருள்தனை அடியனுக் கருள்செய்குவாய்
அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ...7

2608 - சந்ததமும் அழியாமல் ஒருபடித் தாயிலகு சாமிசிவ காமியிடமார்
சம்புவா மென்னுமறை ஆகமத் துணிவான சத்யமொழி தன்னைநம்பி
எந்தையே என்றறிஞர் யாவரும் நின்புகழை ஏத்திவினை தனைமாற்றியே
இன்பமய மாயினிது வாழ்ந்திடப் புவியினிடை ஏழையேன் ஒருவன்அந்தோ
சிந்தையா னதுகலக் கங்கொண்டு வாடலென் செப்புவாய் வேதனாதி
தேவர்முனி வர்கருடர் காந்தருவர் விஞ்சையர் சித்தர்களும் ஏவல்புரிய
அந்தணர்கள் பலகோடி முகமனா டப்பிறங் கருண்முக விலாசத்துடன்
அற்புத சிதாகாச ஞானிஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ...8

2609 - நீறணிந் தொளிர்அக்க மணிபூண்டு சன்மார்க்க நெறிநிற்கும் அன்பர்மனமாம்
நிலமீது வளர்தேவ தாருவே நிலையான நிறைவே (மெய் யருட்சத்தியாம்)(169)
வீறணிந் தழியாத நிதியமே ஒழியாத விண்ணே அகண்டசுத்த
வெளியே விளங்குபர ஒளியே வரைந்திடா வேதமே வேதமுடிவே
தூறணிந் தலைகின்ற பாவியேன் நின்திருத் துணைமலர்த் தாட்குரியனாய்த்
துயர்தீர்ந் திளைப்பாறும் இன்பஅம் போதியில் தோயஅருள் புரிதிகண்டாய்
ஆறணிந் திடுவேணி அண்ணலே அணிகுலவும் அம்மைசிவ காமியுடனே
அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ...9

2610 - மணிகொண்ட நெடியஉல காய்அதில் தங்கும்ஆன் மாக்களாய் ஆன்மாக்களின்
மலமொழித் தழியாத பெருவாழ் வினைத்தரும் வள்ளலாய் மாறாமிகத்
திணிகொண்ட முப்புரா திகளெரிய நகைகொண்ட தேவாய் அகண்டஞானச்
செல்வமாய் வேலேந்து சேயாய் கஜானனச் செம்மலாய் அணையாகவெம்
பணிகொண்ட கடவுளாய்க் கடவுள ரெலாம்தொழும் பரமபதி யாய்எங்கள்தம்
பரமேட்டி யாய்ப்பரம போதமாய் நாதமாய் பரமமோ க்ஷாதிக்கமாய்
அணிகொண்ட சுத்தஅனு பூதியாய்ச் சோதியாய் ஆர்ந்துமங் களவடிவமாய்
அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே. ...10
திருச்சிற்றம்பலம்
-------------------
169. அடிக்குறிப்பு 163 காண்க.
---------------------------

5. எதிர்கொள் பத்து (2611 - 2620)


- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் (170)


2611 - ஆனந்தக் கூத்தனை அம்பலத் தானை
அற்புதத் தேனைஎம் ஆதிப்பி ரானைத்
தேனந்தக் கொன்றைஅம் செஞ்சடை யானைச்
செங்கண்வி டையனை எங்கண்ம ணியை
மோனந்தத் தார்பெறும் தானந்தத் தானை
முத்தனை முத்தியின் வித்தனை முத்தை
ஈனந்தக் காதெனை ஏன்றுகொண் டானை
இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ...1

2612 - அடுத்தவர்க் கெல்லாம்அ ருள்புரி வானை
அம்பலக் கூத்தனை எம்பெரு மானைத்
தடுத்தெமை ஆண்டுகொண் டன்பளித் தானைச்
சங்கரன் தன்னைஎன் தந்தையைத் தாயைக்
கடுத்ததும் பும்மணி கண்டத்தி னானைக்
கண்ணுத லானைஎம் கண்ணக லானை
எடுத்தெனைத் துன்பம்விட் டேறவைத் தானை
இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ...2

2613 - மாலயன் தேடியும் காணாம லையை
வந்தனை செய்பவர் கண்டம ருந்தை
ஆலம்அ முதின்அ ருந்தல்செய் தானை
ஆதியை ஆதியோ டந்தமி லானைக்
காலன்வ ருந்திவி ழவுதைத் தானைக்
கருணைக்க டலைஎன் கண்ணனை யானை
ஏலம ணிகுழ லாள்இடத் தானை
இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ...3

2614 - சுந்தரர்க் காகமுன் தூதுசென் றானைத்
தூயனை யாவரும் சொல்லரி யானைப்
பந்தம்அ றுக்கும்ப ராபரன் தன்னைப்
பத்தர்உ ளங்கொள்ப ரஞ்சுட ரானை
மந்தர வெற்பின்ம கிழ்ந்தமர்ந் தானை
வானவர் எல்லாம்வ ணங்கநின் றானை
எந்தமை ஆண்டுநல் இன்பளித் தானை
இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ...4

2615 - அன்பர்கள் வேண்டும்அ வைஅளிப் பானை
அம்பலத் தேநடம் ஆடுகின் றானை
வன்பர்கள் நெஞ்சில்ம ருவல்இல் லானை
வானவர் கோனைஎம் வாழ்முத லானைத்
துன்பம் தவிர்த்துச்சு கங்கொடுப் பானைச்
சோதியைச் சோதியுள் சோதியை நாளும்
என்பணி கொண்டெனை ஏன்றுகொண் டானை
இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ...5

2616 - கண்ணுத லானைஎன் கண்ணமர்ந் தானைக்
கருணாநி தியைக்க றைமிடற் றானை
ஒண்ணுத லாள்உமை வாழ்இடத் தானை
ஒருவனை ஒப்பிலா உத்தமன் தன்னை
நண்ணுதல் யார்க்கும்அ ருமையி னானை
நாதனை எல்லார்க்கும் நல்லவன் தன்னை
எண்ணுதல் செய்தெனக் கின்பளித் தானை
இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ...6

2617 - வெள்விடை மேல்வரும் வீறுடை யானை
வேதமு டிவினில் வீற்றிருந் தானைக்
கள்விரை யார்மலர்க் கொன்றையி னானைக்
கற்பகந் தன்னைமுக் கண்கொள்க ரும்பை
உள்வினை நீக்கிஎன் உள்ளமர்ந் தானை
உலகுடை யானைஎன் உற்றது ணையை
எள்வினை ஒன்றும்இ லாதவன் தன்னை
இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ...7

2618 - பெண்ணமர் பாகனைப் பேரரு ளோனைப்
பெரியவர்க் கெல்லாம்பெ ரியவன் தன்னைக்
கண்ணமர் நெற்றிக் கடவுள்பி ரானைக்
கண்ணனை ஆண்டமுக் கண்ணனை எங்கள்
பண்ணமர் பாடல்ப ரிசளித் தானைப்
பார்முதல் அண்டம்ப டைத்தளிப் பானை
எண்அம ராதஎ ழிலுடை யானை
இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ...8

2619 - வளங்கொளும் தில்லைப்பொன் மன்றுடை யானை
வானவர் சென்னியின் மாணிக்கம் தன்னைக்
களங்கம்இ லாதக ருத்துடை யானைக்
கற்பனை முற்றும்க டந்துநின் றானை
உளங்கொளும் என்தன்உ யிர்த்துணை யானை
உண்மையை எல்லாம்உ டையவன் தன்னை
இளம்பிறை சூடிய செஞ்சடை யானை
இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ...9

2620 - குற்றமெல் லாம்குண மாகக்கொள் வானைக்
கூத்துடை யானைப்பெண் கூறுடை யானை
மற்றவர் யார்க்கும்அ ரியவன் தன்னை
வந்திப்ப வர்க்குமி கஎளி யானைப்
பெற்றம தேறும்பெ ரியபி ரானைப்
பிறைமுடி யோனைப்பெம் மானைஎம் மானை
எற்றிஎன் துன்பம்எ லாம்ஒழித் தானை
இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே. ...10
திருச்சிற்றம்பலம்
____________________________________________________________________________

170. எண்சீர்க் கழிநெடிலடிச் சந்த விருத்தம். தொ. வே. 1. ச. மு. க. ஆ. பா.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். தொ. வே. 2.
--------------------------------

6. புறமொழிக் கிரங்கல் (2621 - 2630)


- கட்டளைக் கலித்துறை


2621 - கேளனந் தான்ஒரு போதுண் டனைமனக் கேதம்அற
நீளனம் தேடு முடியான் எதுநினக் கீந்ததென்றே
வேளனம் போல்நடை மின்னாரும் மைந்தரும் வேடிக்கையாய்
ஏளனம் செய்குவர் நீஅரு ளாவிடில் என்அப்பனே. ...1

2622 - அப்பாநின் பொன்னருள் என்மேல் தயைசெய் தளித்திலையேல்
துப்பா னவும்ஒரு போதுதுவ் வாது சுழன்றனையே
இப்பாரில் ஈசன் திருவருள் நீபெற்ற தெங்ஙனமோ
செப்பாய் எனவரிப் பார்சிரிப் பார்இச் செகத்தவரே. ...2

2623 - தீதுசெய் தேற்கருள் செய்வான்நின் சித்தம் திரும்பிலையேல்
தாதுசெய் தேகத்து ணாஒரு போது தவிர்ந்தநினக்
கேதுசெய் தான்சிவன் என்றே உலகர் இழிவுரைத்தால்
யாதுசெய் வேன்தெய்வ மேஎளி யேன்உயிர்க் கின்னமுதே. ,,,3

2624 - தெரியாமை யால்சிறி யேன்செய்குற் றத்தைநின் சித்தமதில்
பிரியாமை வைத்தருள் செய்திலை யேல்எனைப் பெற்றவளும்
பெரியாசை கொண்டபிள் ளாய்அரன் என்தரப் பெற்றதென்றே
பரியாசை செய்குவ ளால்அய லார்என் பகருவதே. ...4


2625 - எண்ணாமல் நாயடி யேன்செய்த குற்றங்கள் யாவும்எண்ணி
அண்ணாநின் சித்தம் இரங்காய் எனில்இங் கயலவர்தாம்
பெண்ஆர் இடத்தவன் பேரருள் சற்றும் பெறாதநினக்
கொண்ணாதிவ் வண்மை விரதம்என் றால்என் உரைப்பதுவே. ...5

2626 - பொய்யான வஞ்சக னேன்பிழை யாவும் பொறுத்துனருள்
செய்யாய் எனில்எது செய்குவன் யான்இச் செகதலத்தோர்
எய்யா விரதத்தில் யாதுபெற் றாய்என் றிகழ்வர்கண்டாய்
அய்யாஎன் இன்னமு தேஅர சேஎன தாண்டவனே. ...6

2627 - உன்உள்ளம் கொண்டேற் கருளாய் எனில்இவ் உலகர்பொய்யாம்
என்உள்ளம் கொண்ட களவறி யாதுநின் றேடவிங்கே
நின்உள்ளம் கொள்விர தப்பயன் யாது நிகழ்த்தெனவே
முன்உள்ளம் கொண்டு மொழிவர்கண் டாய்எம் முதலவனே. ...7

2628 - முந்தோகை கொண்டுநின் தண்ணருள் வாரியின் மூழ்குதற்கிங்
கந்தோஎன் துன்பம் துடைத்தரு ளாய்எனில் ஆங்குலகர்
வந்தோ சிவவிர தாஎது பெற்றனை வாய்திறஎன்
றிந்தோர் தருசடை யாய்விடை யாய்என்னை ஏசுவரே. ...8

2629 - ஆசும் படியில் அகங்கா ரமும்உடை யான்என்றெண்ணிப்
பேசும் படியில் எனக்கரு ளாய்எனில் பேருலகோர்
ஏசும் படிவரும் பொய்வேடன் என்றதை எண்ணிஎண்ணிக்
கூசும் படிவரு மேஎன்செய் கேன்என் குலதெய்வமே. ...9

2630 - ஐதட் டிடும்நெஞ் சகத்தேன் பிழைகளை ஆய்ந்துவெறும்
பொய்தட் டிகல்உடை யேற்குன் கருணை புரிந்திலையேல்
வெய்தட்டி உண்ட விரதாநின் நோன்பு விருத்தம்என்றே
கைதட்டி வெண்ணகை செய்வர்கண் டாய்அருட் கற்பகமே. . ..10
திருச்சிற்றம்பலம்
---------------------------------

7. திருப்புகற் பதிகம் (2631 - 2640)


- கொச்சகக் கலிப்பா(171)


2631 - வேகமுறு நெஞ்ச மெலிவும் எளியேன்றன்
தேக மெலிவும் தெரிந்தும் இரங்காயேல்
மாக நதியும் மதியும் வளர்சடைஎம்
ஏக இனிமற் றெனக்கார் இரங்குவரே. ...1

2632 - கள்ள மனத்துக் கடையோர்பால் நாணுறும்என்
உள்ள மெலிவும் உடல்மெலிவும் கண்டிருந்தும்
எள்ளின் அளவும் இரங்கி அருளாயேல்
எள்ளும் உலகில் எனக்கார் இரங்குவரே. ...2

2633 - பொன்னை வளர்ப்பாரைப் போற்றாமல் எம்பெருமான்
உன்னைமதித் துன்னுறும்என் உள்ளம் அறிந்திருந்தும்
அன்னையினும் சால அருள்வோய் அருளாயேல்
என்னை முகம்பார்த் தெனக்கார் இரங்குவரே. ...3

2634 - துன்னுடைய வியாக்கிரமத் தோலுடையான் தானிருக்கப்
பொன்னுடையார் பக்கம் புகுவானேன் என்றிருப்பேன்
தன்னுடைய துன்பம் தவிர்த்திங் கருளாயேல்
என்னுடையாய் மற்றிங் கெனக்கார் இரங்குவரே. ...4

2635 - வன்கண்ணர் தம்மை மதியாதுன் பொன்னடியின்
தன்கண் அடியேன்தன் சஞ்சலவன் நெஞ்சகத்தின்
புன்கண் உழல்வைப் புகல்கின்றேன் காத்திலையேல்
என்கண் அனையாய் எனக்கார் இரங்குவரே. ...5

2636 - தோன்றுவதும் மாய்வதும்ஆம் சூழ்ச்சியிடைப் பட்டலைந்து
மான்றுகொளும் தேவர் மரபை மதியாமே
சான்றுகொளும் நின்னைச் சரணடைந்தேன் நாயேனை
ஏன்றுகொளாய் என்னில் எனக்கார் இரங்குவரே. ...6

2637 - தீதுமுற்றும் நாளும் செயினும் பொறுத்தருளும்
சாதுமுற்றும் சூழ்ந்த தயாநிதிநீ என்றடைந்தேன்
கோதுமுற்றும் தீரக் குறியாயேல் நன்மைஎன்ப
தேதும்அற்ற பாவிக் கெவர்தான் இரங்குவரே. ...7

2638 - துன்றியமா பாதகத்தோன் சூழ்வினையை ஓர்கணத்தில்
அன்றுதவிர்த் தாண்ட அருட்கடல்நீ என்றடுத்தேன்
கன்றுறும்என் கண்கலக்கம் கண்டும் இரங்காயேல்
என்றும்உளாய் மற்றிங் கெவர்தான் இரங்குவரே. ...8

2639 - கோடாமே பன்றிதரும் குட்டிகட்குத் தாயாகி
வாடா முலைகொடுத்த வள்ளல்என நான்அடுத்தேன்
வாடாஎன் றுன்அருளில் வாழ்வான் அருளிலையேல்
ஈடாரும் இல்லாய் எனக்கார் இரங்குவரே. ...9

2640 - கல்லா நடையேன் கருணையிலேன் ஆனாலும்
நல்லார் புகழும் நமச்சிவா யப்பெயரே
அல்லாது பற்றொன் றறியேன் அருளாயேல்
எல்லாம் உடையாய் எனக்கார் இரங்குவரே. ...10
திருச்சிற்றம்பலம்
___________________________________________________________________________

171. கலிவிருத்தம் ஦ தொ. வே. 1. 2. ச. மு. க.
கொச்சகக் கலிப்பா. ஆ. பா.
-----------------------------------

8. சிந்தைத் திருப்பதிகம் (2641 - 2650)


- கொச்சகக் கலிப்பா


2641 - விடைஆர்க்கும் கொடிஉடைய வித்தகஎன் றுன்அடியின்
இடைஆர்த்து நின்றழும்இவ் ஏழைமுகம் பாராமே
நடைஆர்க்கும் வாழ்க்கையிலே நல்குரவோர்க் கீயாத
உடையார்க்கோ என்னை உடையாய் உதவுவதே. ...1

2642 - கற்றே அறியாக் கடைப்புலையேன் ஆனாலும்
உற்றேநின் தன்னைநினைந் தோதுகின்றேன் அல்லாமே

மற்றேதும் தேறேன்என் வன்துயர்தீர்ந் துள்குளிரச்
சற்றே இரங்கித் தயவுசெய்தால் ஆகாதோ. ...2

2643 - கல்லா ரொடும்திரிந்தென் கண்ணேநின் தாள்வழுத்தும்
நல்லார் தமைக்காண நாணுகின்றேன் ஆனாலும்
வல்லாய்நின் தன்னைஅன்றி மற்றொன் றறியேன்நான்
எல்லாம் அறிவாய்க் கிதனைஇயம் பல்என்னே. ...3

2644 - கள்ளநெறி கொள்ளும் கடைநாயேன் என்னினும்நின்
வள்ளல் மலர்த்தாளே வழுத்துகின்றேன் என்னுடைய
உள்ள மெலிவோ டுடல்மெலிவும் கண்டும்அந்தோ
எள்ளளவும் எந்தாய் இரங்கா திருந்தனையே. ...4

2645 - சீர்துணையார் தேடும் சிவனேநின் தன்னைஅன்றி
ஓர்துணையும் இல்லேன்நின் ஒண்பொற் பதம்அறிய
கார்துணையா நாடும் கலாபிஎன நாடுகின்றேன்
ஆர்துணைஎன் றையா அகல இருந்தனையே. ...5

2646 - பேய்அனையா ரோடும் பிழைபுரிந்தேன் ஆனாலும்
நாய்அனையேன் நின்னுடைய நாமம் நவிற்றுகின்றேன்
தீஅனைய துன்பில் திகைக்கின்றேன் கண்டிருந்தும்
தாய்அனையாய் சற்றும் தயவு புரிந்திலையே. ...6

2647 - வெள்ள மருவும் விரிசடையாய் என்னுடைய
உள்ள விரிவும் உடல்மெலிவும் கண்டிருந்தும்
தள்ளரிய நின்னருள்ஓர் சற்றும் புரியாமே
கள்ளவினைக் கென்உளத்தைக் கைகாட்டி நின்றனையே. ...7

2648 - என்னுரிமைத் தாய்க்கும் இனியாய்நின் ஐந்தெழுத்தை
உன்னுநிலைக் கென்னை உரித்தாக்க வேண்டுதியேல்
மன்னுலகில் பொன்னுடையார் வாயில்தனைக் காத்தயர்ந்தேன்
தன்னுடைய எண்ணந் தனைமுடிக்க வேண்டுவதே. ...8

2649 - குற்றம்எலாம் நல்ல குணமாகக் கொண்டருளும்
உற்றதுணை நீயேமற் றோர்துணையும் இல்லைஎன்றே
நற்றலைமை யாம்உனது நாமம் நவில்கின்றேன்
கற்றவனே என்றனைநீ கைவிடில்என் செய்வேனே. ...9

2650 - அறியாப் பருவத் தறிவுறுத்தி ஆட்கொண்ட
நெறியானே நின்ஆணை நின்ஆணை நின்ஆணை
பொறியார்நின் நாமம் புகலுவதே அன்றிமற்றை
வெறியார்வன் நாமமொன்றும் வேண்டேன்நான் வேண்டேனே. ...10
திருச்சிற்றம்பலம்

-----------------------------------

9. உய்கைத் திருப்பதிகம் (2651 - 2662)


- கலிவிருத்தம்


2651 - திருவும் சீரும்சி றப்பும்தி றலும்சற்
குருவும் கல்வியும் குற்றமில் கேள்வியும்
பொருவில் அன்னையும் போக்கறு தந்தையும்
தரும வெள்விடைச் சாமிநின் நாமமே. ...1

2652 - பொய்ய னேன்பிழை யாவும்பொ றுத்தருள்
செய்ய வேண்டும்நின் செம்பொற்ப தமலால்
அய்ய னேமுக்க ணாஇவ்அ டியனேற்
குய்ய வேறுபு கல்இலை உண்மையே. ...2

2653 - கள்ள நெஞ்சக னேனும்க டையனேன்
வள்ளல் நின்மலர் வார்கழற் பாதமே
உள்ளு வேன்மற்றை ஓர்தெய்வ நேயமும்
கொள்ள லேன்என்கு றிப்பறிந் தாள்கவே. ...3

2654 - வஞ்ச மாதர்ம யக்கம்க னவினும்
எஞ்சு றாதிதற் கென்செய்கு வேன்என்றன்
நெஞ்சம் அம்மயல் நீங்கிட வந்தெனைத்
தஞ்சம் என்றுன் சரண்தந்து காக்கவே. ...4

2655 - பற்று நெஞ்சகப் பாதக னேன்செயும்
குற்றம் யாவும்கு ணம்எனக் கொண்டருள்
உற்ற எள்துணை யேனும்உ தவுவாய்
கற்ற நற்றவர் ஏத்தும்முக் கண்ணனே. ...5

2656 - மதியும் கல்வியும் வாய்மையும் வண்மையும்
பதியும் ஈந்தெம்ப சுபதி மெய்ந்நெறிக்
கதியின் வைப்பது நின்கடன் வன்கடல்
வதியும் நஞ்சம்அ ணிமணி கண்டனே. ...6

2657 - நீடு வாழ்க்கை நெறிவரு துன்பினால்
வாடும் என்னைவ ருந்தல்என் றுன்பதம்
பாடும் வண்ணம்நற் பாங்கருள் வாய்மன்றுள்
ஆடும் முக்கண்அ ருட்பெரு வெள்ளமே. ...7

2658 - சிந்தை நொந்திச்சி றியஅ டியனேன்
எந்தை என்றுனை எண்ணிநிற் கின்றனன்
இந்து சேகர னேஉன்றன் இன்னருள்
தந்து காப்பதுன் தன்கடன் ஆகுமே. ...8

2659 - உன்னை நாடும்என் உள்ளம் பிறரிடைப்
பொன்னை நாடும்பு துமைஇ தென்கொலோ
மின்னை நாடும்நல் வேணிப்பி ரான்இங்கே
என்னை நாடிஎ னக்கருள் செய்கவே. ...9

2660 - இழைபொ றுத்தமு லையவர்க் கேற்றஎன்
பிழைபொ றுப்பதுன் பேரருட் கேதகும்
மழைபொ றுக்கும்வ டிவுடை யோன்புகழ்
தழைபொ றுக்கும்ச டைமுடித் தந்தையே. ...10

2661 - மூட னேன்பிழை முற்றும் பொறுத்துனைப்
பாட வேஅருட் பாங்கெனக் கீதியேல்
நாட வேறும னையிடை நண்ணிநான்
வாட வேண்டுவ தென்னைஎம் வள்ளலே. ...11

2662 - மின்னொப் பாகி விளங்கும்வி ரிசடை
என்னப் பாஎனக் கின்னருள் ஈந்துநின்
பொன்னொப் பாந்துணைப் பூம்பதம் போற்றியே
உன்னப் பாங்கின்உ யர்நெறி உய்க்கவே. ...12
திருச்சிற்றம்பலம்

------------------------------

10. அபராத விண்ணப்பம் (2663 - 2684)


- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


2663 - உலகம் பரவும் பொருளேஎன் உறவே என்றன் உயிர்க்குயிரே
இலகம் பரத்தே பரம்பரமாய் இன்ப நடஞ்செய் எம்இறையே
கலகம் பரவும் மனத்தேனைக் கைவிட் டிடநீ கருதுதியோ
திலகம் பரவும் நுதற்பாகன் என்ப தருளின் திறத்தன்றே. ...1

2664 - அன்றோர் பொருளாய் அடியேனை ஆட்கொண் டருளி அறிவளித்தாய்
இன்றோ சிறியேன் பிழைகருதி இரங்கா தகற்ற எண்ணுதியோ
குன்றோர் அனைய குறைசெயினும் கொண்டு குலம்பே சுதல்எந்தாய்
நன்றோ கருணைப் பெருங்கடலே ஆளாய் இந்த நாயினையே. ...2

2665 - நாய்க்குங் கடையேன் பிழைஅனைத்தும் நாடில் தவத்தால் நல்கியநல்
தாய்க்கும் கோபம் உறும்என்னில் யாரே யென்பால் சலியாதார்
வாய்க்கும் கருணைக் கடல்உடையாய் உன்பால் அடுத்தேன் வலிந்தெளிய
பேய்க்கும் தயவு புரிகின்றோய் ஆள வேண்டும் பேதையையே. ...3

2666 - பேதைப் பருவத் தெனைவலியப் பிடித்தாட் கொண்ட பெருமானே
போதைக் கழிப்பான் வீண்புரியும் புலையேன் பிழையைப் பொறுக்கிலையேல்
வாதைப் படும்என் உயிரைஉன்றன் மலர்த்தாள் முன்னர் மடிவித்தே
ஓதைக் கடல்சூழ் உலகத்தே பழிசூழ் விப்பேன் உரைத்தேனே. ...4

2667 - உரைத்தார் சிலர்சின் னாள்கழிய உறுவேம் என்ன உரைத்தவரே
நரைத்தார் இறந்தார் அவர்தம்மை நான்கண் டிருந்தும் நாணாமே
விரைத்தாள் மலரைப் பெறலாம்என் றெண்ணி வீணே இளைக்கின்றேன்
திரைத்தாழ் கடலிற் பெரும்பிழையே செய்தேன் என்ன செய்வேனே. ...5

2668 - செய்வேன் தீமை நலம்ஒன்றும் தெரியேன் தெரிந்து தெளிந்தோரை
வைவேன் அன்றி வாழ்த்தேன்என் வண்ணம் இந்த வண்ணம்எனில்
உய்வேன் என்ப தெவ்வாறென் உடையாய் உய்வேன் உய்வித்தால்
நைவேன் அலதிங் கென்செய்வேன் அந்தோ எண்ணி நலிவேனே. ...6

2669 - எண்ணி நலிவேன் நின்பாதம் எந்நாள் அடைவோம் எனஎன்பால்
நண்ணி நலிவைத் தவிராயேல் என்செய் திடுவேன் நாயகனே
கண்ணி நலியப் படும்பறவைக் கால்போல் மனக்கால் கட்டுண்ணப்
பண்ணி நலஞ்சேர் திருக்கூட்டம் புகுத எனினும் பரிந்தருளே. ...7

2670 - பரியும் மனத்தால் கருணைநடம் பரவுந் தொண்டர் பதப்பணியே
புரியும் இனத்தா ரொடுங்கூடிப் புனித னாக வேண்டும்எனத்
திரியும் அடிமைச் சிறியேனுக் கிரங்கா திருந்தால் சின்னாட்பின்
எரியுங் கொடுவாய் நரகத்துக் கென்செய் வேன்என் செய்வேனே. ...8

2671 - என்செய் திடுவேன் புலைநாயேன் இயற்றும் பிழைகள் எல்லாம்நின்
பொன்செய் மலர்த்தாள் துணைஅந்தோ பொறுத்துக் கருணை புரியாதேல்
புன்செய் விளவிப் பயனிலியாய்ப் புறத்திற் கிடத்தி எனஅடியார்
வன்செய் உரையில் சிரிப்பார்மற் றதுகண் டெங்ஙன் வாழ்வேனே. ...9

2672 - வாழா மனத்தின் வழிசென்று வாளா நாளைக் கழிக்கின்ற
பாழாம் உலகச் சிறுநடையில் பாவி யேனைப் பதிவித்தாய்
ஊழாம் எனில்எம் பெருமானே இன்னும் வினையால் ஒதிஅனையேன்
ஏழாம் நரகுக் காளாவேன் அல்லால் புகல்என் எளியேற்கே. ...10

2673 - எளியேன் கருணைத் திருநடஞ்செய் இணைத்தாள் மலர்கண் டிதயமெலாம்
களியேன் கருங்கற் பாறைஎனக் கிடக்கின் றேன்இக் கடையேனை
அளியே பெருக ஆளுதியோ ஆள்கி லாயோ யாதொன்றும்
தெளியேன் அந்தோ அந்தோஎன் செய்வேன் விலங்கிற் சிறியேனே. ...11

2674 - சிறியேன் பிழையைத் திருவுளத்தே தேர்ந்திங் கென்னைச் சீறுதியோ
எறியேம் எனக்கொண் டிரங்குதியோ இவ்வா றவ்வா றெனஒன்றும்
அறியேன் அவலக் கடல்அழுந்தி அந்தோ அழுங்கி அயர்கின்றேன்
பிறியேன் என்னைப் பிரிக்கினும்பின் துணையும் காணேன் பெருமானே. ...12

2675 - காணேன் நினது திருவருளைக் கண்டார் தமது கழல்தலைமேல்
பூணேன் உலகச் சிறுநடையில் போந்து பொய்யே புகன்றந்தோ
வீணே சுழன்று மெலிகின்றேன் என்னே இன்னல் மிகச்சுமக்கும்
தூணே எனஇங் கெனைவிதித்தாய் எந்தாய் யாது சூழ்வேனே. ...13

2676 - சூழ்வேன் நினது கருணைநடம் சூழும் பெரியார் தமைச்சூழ்ந்து
வாழ்வேன் எளியேன் குறிப்பிந்த வண்ணம் எனது மனக்குரங்கோ
தாழ்வேன் நினையும் தாழ்விப்பேன் அவலக் கடலில் சலியாமே
வீழ்வேன் என்றால் எம்பெருமான் இதற்கென் செய்கேன் வினையேனே. . ..14

2677 - வினையே பெருக்கிக் கடைநாயேன் விடயச் செருக்கால் மிகநீண்ட
பனையே எனநின் றுலர்கின்றேன் பாவி யேனுக் கருளுதியோ
நினையே நினையாப் பிழைகருதி நெகிழ விடவே நினைதியோ
அனையே அனையாய் திருக்குறிப்பை அறியேன் ஈதென் றடியேனே. ...15

2678 - அடியேன் முடுகிச் செயும்பிழைகள் அனந்தம் அவற்றை அந்தோஇக்
கொடியேன் நினக்குந்தொறும்உள்ளம் குமைந்து நடுங்கிக் குலைகின்றேன்
செடியேன் மனமோ வினையோநின் செயலோ செய்கை தெரியேன்வெண்
பொடியே திகழும் வடிவுடையாய் யாது புரிவேன் புலையேனே. ...16

2679 - புலையே புரியும் மனம்போன போக்கே அல்லால் புண்ணியநல்
நிலையே அறியேன் சிறியேனுக் கருளல் அழகோ நிறைந்தகுண
மலையே மணியே மருந்தேஎன் வாழ்வே எல்லாம் வல்லோனே
கலையே கருதும் கழலுடையாய் அருளா மையும்நின் கடன்அன்றே. ...17

2680 - கடந்தாழ் கயம்போல் செருக்கிமயற் கடலில் அழுத்திக் கடுவினையேன்
மடந்தாழ் மனத்தோ டுலைகின்றேன் கரைகண் டேறும் வகைஅறியேன்
தொடர்ந்தார் எடுப்பார் எனையெடுக்கும் துணைநின் மலர்த்தாள் துணைகண்டாய்
அடர்ந்தார் தமக்கும் அருள்கின்றோய் ஆணை ஆணை அடியேனே. ...18

2681 - அடியார் இன்பம் அடைகின்றார் அடியேன் ஒருவன் அயர்கின்றேன்
படியார் பலரும் பலபேசிச் சிரியா நின்றார் பரந்திரவும்
விடியா நின்ற தென்புரிவேன் இன்னுங் கருணை விளைத்திலையே
கொடியார் பிழையும் குணமாகக் கொண்டு மகிழும் குணக்குன்றே. . ..19

2682 - குன்றா நிலைநின் றருள்அடைந்தார் அன்பர் எல்லாம் கொடியேன்நான்
நன்றாம் நெறிசென் றறியாதே மனஞ்செல் வழியே நடக்கின்றேன்
பொன்றா மணியே அவர்க்கருளி என்னை விடுத்தல் புகழன்றே
என்றால் எனக்கே நகைதோன்றும் எந்தாய் உளத்துக் கென்னாமே. ...20

2683 - என்ஆ ருயிருக் குயிர்அனையாய் என்னைப் பொருளாய் எண்ணிமகிழ்ந்
தந்நாள் அடிமை கொண்டளித்தாய் யார்க்கோ வந்த விருந்தெனவே
இந்நாள் இரங்கா திருக்கின்றாய் எங்கே புகுவேன் என்புரிவேன்
நின்னால் அன்றிப் பிறர்தம்மால் வேண்டேன் ஒன்றும் நின்மலனே. ...21

2684 - நின்பால் அடைந்தார் அன்பாலே அடியார் எல்லாம் நெடுவினையேன்
வன்பால் மனப்பேய் தன்பாலே வருந்திச் சுழன்று மயர்கின்றேன்
தென்பால் நோக்கி இன்பநடம் செய்யும் இறைவா சிறுவனுக்கா
முன்பால் அமுதக் கடல்அளித்த முதல்வா என்னை முன்னுதியே. ...22
திருச்சிற்றம்பலம்

---------------------

11. கலி விண்ணப்பம் (2685 - 2694)


- கட்டளைக் கலித்துறை


2685 - செறியாத நெஞ்சக வஞ்சக னேன்இச் சிறுதலத்தே
அறியா தறிந்தவன் போற்சில செய்திடல் ஐயநின்தாள்
குறியா தரித்தல தாணைமற் றில்லைஎங் கொற்றவனே
முறியா தருள்செய்தி யோதெரி யேன்எந்தை முன்னியதே. ...1

2686 - தீதொன்று மேகண் டறிந்ததல் லால்பலன் சேரநலம்
யாதொன்றும் நான்கண் டறியேன் அறிந்தவன் என்னஇங்கே
போதொன்று போக்குகின் றேன்பிழை யாவும் பொறுத்தருள்வாய்
மாதொன்று பாகத் துணைஅன்றி நற்றுணை மற்றிலையே. ...2

2687 - எல்லாம் தெரிந்த இறைவாநின் தண்ணருள் எய்துகிலாப்
பொல்லாத பாவிப் புலையேன் பிழையைப் பொறுத்தருள்வாய்
கல்லா மனக்கடை யாலே கடைவைத்துக் கண்டதுதுன்
பல்லால் அணுத்துணை யும்அறி யேன்இன்பம் ஆவதுவே. ...3

2688 - மண்ணுடை யாரிடை வாளா மனஞ்செல வைத்ததலால்
எண்ணுடை யாரிடை எய்திநின் தாண்மலர் ஏத்துகிலேன்
புண்ணுடை யாரிற் புலம்புகின் றேனைப் பொறுத்தருள்முக்
கண்ணுடை யாய்கழற் காலுடை யாய்மணி கண்டத்தனே. ...4

2689 - தாழாத துன்பச் சமுத்திரத் தேஇத் தனிஅடியேன்
வீழாத வண்ணம் கருணைசெய் வாய்என்னை வேண்டிஅந்நாள்
ஊழாம் வினைதவிர்த் தாண்டனை யேஎன் உடையவனே
வாழா வகைஎனை இந்நாள் விடுத்தல் வழக்கலவே. ...5

2690 - ஊன்செய்த வெம்புலைக் கூட்டின் பொருட்டிங் குனைமறந்து
நான்செய்த தீமையை நானே நினைக்க நடுங்குகின்றேன்
ஏன்செய் தனைஎனக் கேளாது மேலும் இரங்குகின்றாய்
வான்செய்த நாதநின் தண்ணருள் வண்ணம்என் வாழ்த்துவனே. ...6

2691 - ஆயாது நான்செயும் குற்றங் களைக்கண் டறியில்பெற்ற
தாயாயி னும்பொறுப் பாளல ஆங்கவை சற்றலவே
ஓயாது செய்யுந் தொறும்பொறுத் தாளும் உனைஎளியேன்
வாயால் உரைக்கவும் மாட்டேன்அந் தோஎன்ன வன்மைஇதே. ...7

2692 - ஒன்றுந் தெரிந்திட மாட்டாப் பருவத் துணர்வுதந்தாய்
இன்றுந் தருதற் கிறைவா நின்உள்ளம் இயைதிகொலோ
கன்றுங் கருத்தொடு மாழ்குகின் றேன்உன் கழல்அடிக்கே
துன்றுங் கருத்தறி யேன்சிறி யேன்என் துணிவதுவே. ...8

2693 - ஆவா எனஎனை ஆட்கொள வேண்டும் அடிமைகொண்ட
தேவாஎன் குற்றம் திருவுளத் தெண்ணில்என் செய்திடுவேன்
வாவா எனஅழைப் பார்பிறர் இல்லை மறந்தும்என்றன்
நாவால் உரைக்கவும் மாட்டேன் சிறுதெய்வ நாமங்களே. ...9

2694 - பள்ளத்தி லேசெலும் நீர்போல்என் உள்ளம் பரப்பதலால்
எள்ளத்தி லேசிறி தாயினும் நான்செல்வ தில்லைஎந்தாய்
கள்ளத்தி லேசொல்லு கின்றேன் அலநின் கழலிணைஎன்
உள்ளத்தி லேநின்ற ஆங்கவை காண்க உடையவனே. ...10
திருச்சிற்றம்பலம்

------------------------

12. அடிமைப் பதிகம் (2695 - 2704)


- எண்சீர்க்(172) கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


2695 - ஆள்வினையால் பயன்உறுவார் அசதி யாட
அந்தோ இப் புலைநாயேன் அன்பால் நின்பால்
வேள்விசெயும் பெருந்தவர்க்கே வேள்வி செய்ய
வேண்டும்இதற் கெம்பெருமான் கருணை செய்யும்
நாள்விளைவில் சின்னாளே இதுதான் உண்மை
நம்பும்என நவின்றுனையே நம்பி நின்றேன்
கேள்வியிலாத் துரைத்தனமோ அலது நாயேன்
கிளக்குமுறை கிளக்கிலனோ கேட்டி லாயே. ...1

2696 - கேட்டிலாய் அடியேன்செய் முறையை அந்தோ
கேடிலாக் குணத்தவர்பால் கிட்டு கின்றோய்
ஏட்டில்ஆ யிரங்கோடி எனினும் சற்றும்
எழுதமுடி யாக்குறைகொண் டிளைக்கின் றேன்நான்
சேட்டியா விடினும்எனைச் சேட்டித் தீர்க்கும்
சிறுமனத்தால் செய்பிழையைத் தேர்தி யாயில்
நாட்டில்ஆர் காக்கவல்லார் என்னை எந்தாய்
நாள்கழியா வண்ணம்இனி நல்கல்வேண்டும். ...2

2697 - வேண்டாமை வேண்டுகின்றோர் நிற்க மற்றை
வேண்டுவார் வேண்டுவன விரும்பி நல்கும்
தூண்டாத மணிவிளக்கே பொதுவி லாடும்
சுடர்க்கொழுந்தே என்னுயிர்க்குத் துணையே என்னை
ஆண்டாறு மூன்றாண்டில் ஆண்டு கொண்ட
அருட்கடலே என்உள்ளத் தமர்ந்த தேவே
ஈண்டாவ எனச்சிறிய அடியேன் உள்ளத்
தெண்ணம்அறிந் தருளாயேல் என்செய் கேனே. ...3

2698 - என்னைஅறியாப்பருவத் தாண்டுகொண்ட
என்குருவே எனக்குரிய இன்ப மேஎன்
தன்னைஇன்று விடத்துணிந்தாய் போலும் அந்தோ
தகுமோநின் பெருங்கருணைத் தகவுக் கெந்தாய்
உன்னைஅலா தொருவர்தம்பால் செல்லேன் என்னை
உடையானே என்னுள்ளத் துள்ளே நின்று
முன்னைவினைப் பயன்ஊட்ட நினைப்பிக் கின்றாய்
முடிப்பிக்கத் துணிந்திலையேல் மொழிவ தென்னே. ...4

2699 - என்நாணை அறிந்தும்என்னை அந்தோ அந்தோ
இவ்வகைசெய் திடத்துணிந்தாய் என்னே எந்தாய்
நின்ஆணை நின்னையலா தொன்றும் வேண்டேன்
நீஇதனை அறிந்திலையோ நினைப்பிக் கின்ற
மன்னாஎன் ஆருயிர்க்கு வாழ்வே என்கண்
மணியேஎன் குருவேஎன் மருந்தே இன்னும்
உன்னால்இங் குயிர்தரித்து வாழ்கின் றேன்என்
உள்ளம்அறிந் துதவுதியோ உணர்கி லேனே. ...5

2700 - உள்ளமறிந் துதவுவன்நம் உடையான் எல்லாம்
உடையான்மற் றொருகுறைஇங் குண்டோ என்னக்
கள்ளமனத் தேன்அந்தோ களித்தி ருந்தேன்
கைவிடுவார் போல்இருந்தாய் கருணைக் குன்றே
எள்ளலுறப் படுவேன்இங் கேது செய்வேன்
எங்கெழுகேன் யார்க்குரைப்பேன் இன்னும் உன்றன்
வள்ளலருள் திறநோக்கி நிற்கின் றேன்என்
மனத்துயர்போம் வகைஅருள மதித்தி டாயே. ...6

2701 - வகைஅறியேன் சிறியேன்சன் மார்க்க மேவும்
மாண்புடைய பெருந்தவத்தோர் மகிழ வாழும்
தகைஅறியேன் நலம்ஒன்றும் அறியேன் பொய்ம்மை
தான்அறிவேன் நல்லோரைச் சலஞ்செய் கின்ற
மிகைஅறிவேன் தீங்கென்ப எல்லாம் இங்கே
மிகஅறிவேன் எனினும்எனை விடுதி யாயில்
பகைஅறிவேன் நின்மீதில் பழிவைத் திந்தப்
பாவிஉயிர் விடத்துணிவேன் பகர்ந்திட் டேனே. ...7

2702 - இட்டவகை வாழ்கின்றேன் எந்தாய் நானே
எண்ணுகிலேன் எண்ணுவித்தால் என்செய் வேன்நின்
மட்டலர்சே வடிஆணை நினைத்த வண்ணம்
வாழ்விக்க வேண்டும்இந்த வண்ணம் அல்லால்
துட்டன்என விடத்துணிதி யாயில் அந்தோ
சூறையுறு துரும்பெனவும் சுழன்று வானில்
விட்டசிலை எனப்பவத்தில் விழுவேன் அன்றி
வேறெதுசெய் வேன்இந்த விழல னேனே. ...8

2703 - விழற்கிறைத்து மெலிகின்ற வீண னேன்இவ்
வியன்உலகில் விளைத்திட்ட மிகைகள் எல்லாம்
அழற்கிறைத்த பஞ்செனவே ஆக்கி நீயே
ஆட்கொண்டால் தடுப்பவரிங் காரே ஐயா
கழற்கடிமை எனஉலகம் அறிய ஒன்றும்
கருதறியாச் சிறுபருவத்தென்னை ஆண்டு
நிழற்கருணை அளித்தாயே இந்நாள் நீகை
நெகிழவிட்டால் என்செய்வேன் நிலையி லேனே. ...9

2704 - நிலைஅறியேன் நிலைஅறிந்து பெற்ற நல்லோர்
நெறிஅறியேன் எனினும்உன்றன் நேச மன்றி
இலைஅறியேன் மற்றவரைக் கனவி லேனும்
எட்டுணைஓர் துணைஎனவும் எண்ணு றேன்நல்
கலைஅறியேன் கருத்திலிருந் தறிவித் தாய்நான்
கண்டறிந்தேன் எனினும்அவை காட்ட வேண்டும்
அலைஅறியா அருட்கடலே அமுதே தேனே
அம்பலத்தென் குருவேநான் அடிமை ஆளே. ...10
திருச்சிற்றம்பலம்
____________________________________________________________________________

172. எழுசீர். தொ. வே. 1, 2. எண்சீர். ச. மு. க. ஆ. பா.
-------------------------

13. சரணப் பதிகம் (2705 - 2715)


- கலிநிலைத்துறை


2705 - மதிவார் சடைமா மணியே அருள்வள் ளலேநன்
நிதியே திருஅம் பலத்தா டல்செய்நித் தனேநின்
துதியேன் எனினும் உனைஅன் றித்துணையி லேன்என்
பதியே எனதெண் ணம்ப லிக்கும்படிக் கருளே. ...1

2706 - படிமேல் அடியேன் உனைஅன் றிஓர்பற்றி லேன்என்
முடிமேல் அடிவைத் தருள்செய் திடமுன்னு கண்டாய்
கொடிமேல் விடைநாட் டியஎண்கு ணக்குன் றமே
பொடிமேல் விளங்குந் திருமே னிஎம்புண் ணியனே. ...2

2707 - புண்ணாம் மனம்சஞ் சலித்துள் ளம்புலர்ந்து நின்றேன்
அண்ணா எனைஆட் கொளவேண் டும்அகற்று வாயேல்
கண்ணார் களைகண் பிறிதொன் றிலைகள்ள னேனை
எண்ணா வினைஎன் செயுமோ இதற்கென்செய் வேனே. ...3

2708 - செய்வேன் அவம்அன் றித்தவம் ஒன்றும்செய் தறியேன்
நைவேன் பிழையா வும்பொறுத் தருள்நல்கு வாயேல்
உய்வேன் அலதுய் வகைஇன் றுமன்றோங்கு கின்றாய்
வைவேன் துதிப்பேன் உனைஎன் றும்மறந்தி லேனே. ...4

2709 - மறவா துனைவாழ்த் துமெய்அன் பரைமாநி லத்தே
இறவா வகைஆட் கொண்டரு ளியஈச னேமெய்
உறவா கியநின் பதம்அன் றிஒன் றோர்கி லேன்நான்
பிறவா நெறிதந் தருள்என் பதென் பேசி டாயே. ...5

2710 - என்னே இனும்நின் அருள்எய் திலன்ஏழை யேனை
முன்னே வலிந்தாட் கொண்டதின் றுமுனிந்த தேயோ
பொன்னேர் அணிஅம் பலத்தா டியபுண்ணி யாஎன்
அன்னே அரசே அமுதே அருள்ஆண்ட வனே. ...6

2711 - ஆண்டாய் எனைஏழ் பிறப்பும் உனைஅன்றி ஒன்றும்
தீண்டா தெனதுள் ளம்என்றால் என்சிறுமை தீர்க்க
வேண்டா தயலார் எனக்காண் பதென்மெய்ய னேபொன்
ஆண்டான் திருஎய் தநஞ்சைக் களம்நாட்டி னோயே. ...7

2712 - நாட்டார் நகைசெய் வர்என்றோ அருள்நல்கி லாய்நீ
வீட்டார் நினைஎன் னினைப்பார் எனைமேவி லாயேல்
தாட்டா மரைஅன் றித்துணை ஒன்றும்சார்ந் திலேன்என்
மாட்டா மைஅறிந் தருள்வாய் மணிமன்று ளானே. ...8

2713 - மன்றா டியமா மணியே தனிவான வாஓர்
மின்றாழ் சடைவே தியனே நினைவேண்டு கின்றேன்
பொன்றா தமெய்அன் பருக்கன் புளம்பூண்டு நின்று
நன்றாய் இரவும் பகலும் உனைநாடு மாறே. ...9

2714 - மாறா மனமா யையினால் மதிமாழ்கி மாழ்கி
ஏறா மல்இறங் குகின்றேன் இதற்கென் செய்வேன்
தேறா வுளத்தேன் றனைஏ றிடச்செய்தி கண்டாய்
பேறா மணிஅம் பலமே வியபெற்றி யானே. ...10

2715 - ஆனே றிவந்தன் பரைஆட் கொளும்ஐய னேஎம்
மானே மணிமன் றில்நடம் புரிவள்ள லேசெந்
தேனே அமுதே முதலா கியதெய்வ மேநீ
தானே எனைஆண் டருள்வாய் நின்சரண் சரணே. ...11
திருச்சிற்றம்பலம்

----------------------

14. பொதுத் தனித் திருவெண்பா (2716 - 2728)


- நேரிசை வெண்பா


2716 - வந்திக்கும் மெய்யடியார் மாலற்ற ஓர்மனத்தில்
சந்திக்கும் எங்கள் சயம்புவே - பந்திக்கும்
வன்மலக்கட் டெல்லாம் வலிகெட் டறநினது
நின்மலக்கண் தண்ணருள்தான் நேர். ...1

2717 - சங்கரா முக்கட் சயம்புவே தாழ்சடைமேல்
பொங்கராத் திங்கள் பொலிந்தோனே - வெங்கரா
வாய்நின்று பிள்ளை வரப்பாடும் வன்தொண்டர்க்
காய்நின்று சந்துரைத்த தார். ...2

2718 - நீலக் களங்கொண்ட நீடொளியே நீள்கங்கை
கோலச் சடைக்கணிந்த கோமளமே - ஞாலத்தில்
அந்தோ சிறியேன் அருளின்றி வாடுவது
சந்தோட மோநின் றனக்கு. ...3

2719 - நான்சிறியேன் என்னினும்இந் நானிலத்தில் நான்செய்பிழை
தான்சிறிதோ அன்றுலகில் தான்பெரிதே - மான்கரத்தோய்
அங்ஙனமே னும்உன் அருட்பெருமைக் கிப்பெருமை
எங்ஙனம்என் றுள்ளம் எழும். ...4

2720 - ஆவித் துணையேஎன் ஆரமுதே நின்வடிவைப்
பாவித்துள் நையேன்இப் பாவியேன் - சேவித்து
வாழ்த்தேன்நின் பொன்னடியில் வந்தென் தலைகுனித்துத்
தாழ்த்தேன்என் செய்தேன் தவம். ...5

2721 - உன்னைநினைந் திங்கே உலாவுகின்றேன் அன்றிஎந்தாய்
பின்னை நினைப்பொன்றும் பெற்றிலேன் - என்னை
விடாதேநின் பொன்னடியை மேவார்சேர் துன்பம்
கொடாதே எனைஏன்று கொள். ...6

2722 - என்னரசே நின்னடிக்கீழ் என்னிடரை நீக்கெனநான்
சொன்னதலால் தாயுடனும் சொன்னேனோ - இன்னுமிந்தத்
துன்பச் சுமையைச் சுமக்கமுடி யாதென்னால்
அன்பர்க் கருள்வோய் அருள். ...7

2723 - அன்னேஎன் அப்பாஎன் ஆருயிர்க்கோர் ஆதரவே
என்னேநின் உள்ளம் இரங்கிலையே - பொன்னே
உடையா ரிடைஎன் உளநொந்து வாடிக்
கடையேன் படுந்துயரைக் கண்டு. ...8

2724 - பகுதி தகுதி விகுதிஎனும் பாட்டில்
இகலில் இடையை இரட்டித் - தகவின்
அருச்சித்தால் முன்னாம் அதுகடையாம் கண்டீர்
திருச்சிற் சபையானைத் தேர்ந்து. (173) ...9

2725 - தாதாதா தாதாதா தாக்குறைக்கென் செய்குதும்யாம்
தாதாதா என்றுலகில் தான்அலைந்தோம் - போதாதா
நந்தா மணியே நமச்சிவா யப்பொருளே
எந்தாய் எனப்புகழ வே. (174) ...10

2726 - பொய்கண்டாய் காமப் புதுமயக்கிற் போய்உழலக்
கைகண்டாய் என்னபலன் கண்டாயே - மெய்கண்ட
பொன்னே அனையார்பால் போய்வணங்கக் கற்றிலையோ
என்னேநின் தன்மைமன மே. ...11

2727 - இவ்வழியில் செல்லாதே என்னுடையான் தன்னடிசேர்
அவ்வழியில் செல்என் றடிக்கடிக்குச் - செவ்வழியில்
சொன்னாலும் கேட்கிலைநீ துட்டமன மேஉனக்கிங்
கென்னால் உறவே தினி. ...12

2728 - கால்வாங் கியஉட் கதவம் கொளும்அகத்தின்
பால்வாங் கியகால் பரம்பரனே - மால்வாங்
கரிதாரம் ஊணாதி யாம்மயல்கொண் டேழைப்
பெரிதார ஓர்மொழியைப் பேசு. ...13
திருச்சிற்றம்பலம்
____________________________________________________________________________

173. இதன் பொருள்: பகுதி, தகுதி, விகுதி என்னும் மூன்று சொற்களின் இடையெழுத்தை இரட்டித்து அருச்சித்தால் அவற்றின் கடையெழுத்துகள் சேர்ந்த முன்னெழுத்துகள் கிடைக்கும். மூன்று சொற்களிலும் இடையெழுத்து கு. 3கு x 2 = 6கு, அறுகு (அறுகம்புல்). முதலெழுத்துகள் சேரின்: ப, த, வி - பதவி. கடையெழுத்துகள் சேரின்: தி, தி, தி - மூன்று தி, முக்தி. சிற்சபையானை அறுகால் அருச்சித்தால் முத்திப் பதவி பெறலாம்.

174. 'தா தா தா தா தா தா தாக்குறை' என்பதில் தா என்னும் எழுத்து எழுமுறை அடுக்கி வந்தது. அதனை எழுதாக்குறை என்று படிக்க. ஏழு தா எழுதா. எழுதாக்குறைக்கு என் செய்குதும் - எமது தலையில் எழுதாத குறைக்கு என்ன செய்வோம். இரண்டாவது அடியில் 'தா தா தா' என மும்முறை அடுக்கி வந்ததை தாதா, தா எனப் பிரித்துப் பொருள் கொள்க. தாதா - வள்ளலே, தா - கொடு.
568 ஆம் பாடல் காண்க. முதல் அடியில் எழுதாக்குறை. இரண்டாவது அடியில் 'ததிதி' - ஒலிக்குறிப்பு. மூன்றாம் அடியில் 'திதிதி' - முத்தி. இங்கிதமாலையிலும் இவ்வாறு ஒருபாடல் உண்டு. பாடல் 1930.
குகுகுகுகுகு அணிவேணி - அறுகு அணிந்த சடை . குகுகுகுகுகுகுகு: குகு - அமாவாசை, குகு நான்குமுறை அடுக்கி வந்தது. நாலு குகு என்று கொண்டு தொடங்கும் இருண்ட கூந்தல் எனப் பொருள் கொள்ளவேண்டும். விரிக்கிற் பெருகும்.
-------------------

15. தனித் திருவிருத்தம் (2729 - 2785)


- கட்டளைக் கலித்துறை


2729 - நீர்பூத்த வேணியும் ஆனந்தம் பூத்து நிறைமதியின்
சீர்பூத் தமுத இளநகை பூத்த திருமுகமும்
பார்பூத்த பச்சைப் பசுங்கொடி பூத்தசெம் பாகமும்ஓர்
கார்பூத்த கண்டமும் கண்பூத்த காலும்என் கண்விருந்தே. ...1

2730 - வீழாக ஞான்றசெவ் வேணிப் பிரான்என் வினைஇரண்டும்
கீழாக நான்அதன் மேலாக நெஞ்சக் கிலேசமெல்லாம்
பாழாக இன்பம் பயிராக வாய்க்கில்அப் பாற்பிறவி
ஏழாக அன்றிமற் றெட்டாக இங்கென்னை என்செயுமே. ...2

2731 - ஆயிரங் கார்முகில் நீர்விழி நீர்தர ஐயநின்பால்
சேயிரங் கார்எனக் கென்றேநின் பொற்பதம் சிந்திக்கின்றேன்
நீஇரங் காய்எனில் என்செய்கு வேன்இந் நிலத்திற்பெற்ற
தாய்இரங் காள்என்ப துண்டோ தன் பிள்ளை தளர்ச்சிகண்டே. ...3

- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

2732 - செம்பவளத் தனிக்குன்றே அருளா னந்தச்
செழுங்கனியே முக்கணுடைத் தேவே மூவா
அம்புவிநீர் அனல்வளிவான் ஆதி யாய
அரசேஎன் ஆருயிர்க்கோர் அரண மாகும்
சம்புசிவ சயம்புவே சங்க ராவெண்
சைலம்வளர் தெய்வதவான் தருவே மிக்க
வம்பவிழ்மென் குழல்ஒருபால் விளங்க ஓங்கும்
மழவிடைமேல் வருங்காட்சி வழங்கு வாயே. ...4

- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

2733 - நீடுகின்ற மாமறையும் நெடுமாலும் திசைமுகனும் நிமல வாழ்க்கை
நாடுகின்ற முனிவரரும் உருத்திரரும் தேடஅருள் நாட்டங் கொண்டு
பாடுகின்ற மெய்யடியர் உளம்விரும்பி ஆநந்தப் படிவ மாகி
ஆடுகின்ற மாமணியை ஆரமுதை நினைந்துநினைந் தன்பு செய்வாம். ...5

- வேறு

2734 - மறைமுடி விளக்கே போற்றி மாணிக்க மலையே போற்றி
கறைமணி கண்ட போற்றி கண்ணுதற் கரும்பே போற்றி
பிறைமுடிச் சடைகொண் டோ ங்கும் பேரருட் குன்றே போற்றி
சிறைதவிர்த் தெனையாட் கொண்ட சிவசிவ போற்றி போற்றி. ...6

- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

2735 - செய்வகை அறியேன் மன்றுண்மா மணிநின்
திருவுளக் குறிப்பையுந் தெரியேன்
உய்வகை அறியேன் உணர்விலேன் அந்தோ
உறுகண்மேல் உறுங்கொல்என் றுலைந்தேன்
மெய்வகை அடையேன் வேறெவர்க் குரைப்பேன்
வினையனேன் என்செய விரைகேன்
பொய்வகை உடையேன் எங்ஙனம் புகுகேன்
புலையனேன் புகல்அறி யேனே. . ..7

- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

2736 - நிதியைநினைந் துனைமறந்த மதியைநினைந் தழுகேனோ நிமலா னந்தக்
கதியைஇகழ்ந் திருள்விழைந்த விதியைநினைந் தழுகேனோ கண்போல் வாய்ந்த
பதியைஉனைப் பாடாத பாட்டைநினைந் தழுகேனோ படிற்று நெஞ்சச்
சதியைநினைந் தழுகேனோ யாதுகுறித் தழுகேன்இத் தமிய னேனே. ...8

- வேறு

2737 - தாய்தடை என்றேன் பின்னர்த் தாரமே தடைஎன் றேன்நான்
சேய்தடை என்றேன் இந்தச் சிறுதடை எல்லாந் தீர்ந்தும்
தோய்தடைச் சிறியேன் இன்னுந் துறந்திலேன் எனைத் தடுக்க
ஏய்தடை யாதோ எந்தாய் என்செய்கேன் என்செய் கேனே. ...9

- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

2738 - எண்கடந்த உயிர்கள்தொறும் ஒளியாய் மேவி
இருந்தருளும் பெருவாழ்வே இறையே நின்றன்
விண்கடந்த பெரும்பதத்தை விரும்பேன் தூய்மை
விரும்புகிலேன் நின்அருளை விழைந்தி லேன்நான்
பெண்கடந்த மயல்எனும்ஓர் முருட்டுப் பேயாற்
பிடிஉண்டேன் அடிஉண்ட பிஞ்சு போன்றேன்
கண்கடந்த குருட்டூமர் கதைபோல் நின்சீர்
கண்டுரைப்பல் என்கேனோ கடைய னேனே. ...10

- வேறு

2739 - மின்னைப் போல்இடை மெல்இய லார்என்றே
விடத்தைப் போல்வரும் வெம்மனப் பேய்களைப்
பொன்னைப் போல்மிகப் போற்றி இடைநடுப்
புழையி லேவிரல் போதப்பு குத்திஈத்
தன்னைப் போல்முடை நாற்றச்ச லத்தையே
சந்த னச்சலந் தான்எனக் கொள்கின்றேன்
என்னைப் போல்வது நாய்க்குலம் தன்னிலும்
இல்லை அல்ல தெவற்றினும் இல்லையே. ...11

- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

2740 - கள்உருகும் மலர்மணம்போல் கலந்தெங்கும் நிறைந்தோய்நின் கருணைக் கந்தோ
முள்உருகும் வலியபராய் முருடுருகும் உருகாத முறைசேர் கல்லும்
வள்உருகும் மலைஉருகும் மண்உருகும் மரம்உருகும் மதியி லேன்றன்
உள்உருகும் வகையிலைஎன் செய்கேன்நான் ஏன்பிறந்தேன் ஒதிய னேனே. ...12

2741 - மன்உயிர்க்குத் தாய்தந்தை குருதெய்வம் உறவுமுதல் மற்றும் நீயே
பின்உயிர்க்கோர் துணைவேறு பிறிதிலைஎன் றியான்அறிந்த பின்பொய்யான
மின்உடற்குத் தாய்தந்தை யாதியரை மதித்தேனோ விரும்பி னேனோ
என்உயிர்க்குத் துணைவாநின் ஆணைஒன்றும் அறியேன்நான் இரங்கி டாயே. ...13

2742 - மாற்றரிய பசும்பொன்னே மணியேஎன் கண்ணேகண் மணியே யார்க்குந்
தோற்றரிய சுயஞ்சுடரே ஆனந்தச் செழுந்தேனே சோதி யேநீ
போற்றரிய சிறியேனைப் புறம்விடினும் வேற்றவர்பாற் போகேன் வேதம்
தேற்றரிய திருவடிக்கண் பழிவிளைப்பேன் நின்ஆணைச் சிறிய னேனே. ...14

2743 - உள்உணர்வோர் உளத்துநிறைந் தூற்றெழுந்த தெள்ளமுதே உடையாய் வஞ்ச
நள்உணர்வேன் சிறிதேனும் நலமறியேன் வெறித்துழலும் நாயிற் பொல்லேன்
வெள்உணர்வேன் எனினும்என்னை விடுதியோ விடுதியேல் வேறென் செய்கேன்
தள்உணர்வோன் எனினும்மகன் தனைஈன்றோர் புறம்பாகத் தள்ளார் அன்றே. ...15

2744 - கலைபயின்று நெறிஒழுகும் கருத்துடையேன் அலன்நின்னைக் கனவி லேனும்
மலைபயின்ற பெருங்குணத்தெம் வள்ளலே எனத்துதியேன் வஞ்ச மில்லா
நிலைபயின்ற நல்லோர்தம் நேசமிலேன் கைதவமே நினைப்பேன் அந்தோ
உலைபயின்ற அரக்கெனநெஞ் சுருகேன்நான் ஏன்பிறந்தேன் ஒதிய னேனே. ...16

2745 - இரும்புன்னை மலர்ச்சடையாய் இவ்வுலகில் சிலர்தங்கட் கென்று வாய்த்த
அரும்பின்னை மார்பகத்தோன் அயனாதி சிறுதெய்வ மரபென் றோதும்
கரும்பொன்னைச் செம்பொன்னில் கைவிடா திருக்கின்றார் கடைய னேற்கே
தரும்பொன்னை மாற்றழிக்கும் அரும்பொன்நீ கிடைத்தும்உனைத் தழுவி லேனே. ...17

2746 - கஞ்சமலர்த் தவிசிருந்த நான்முகனும் நெடுமாலும் கருதிப் போற்ற
அஞ்சநடை அம்மைகண்டு களிக்கப்பொன் அம்பலத்தில் ஆடு கின்ற
எஞ்சல்இலாப் பரம்பொருளே என்குருவே ஏழையினே னிடத்து நீயும்
வஞ்சம்நினைத் தனையாயில் என்செய்வேன் என்செய்வேன் மதியி லேனே. ...18

- கட்டளைக் கலித்துறை

2747 - வேம்புக்கும் தண்ணிய நீர்விடு கின்றனர் வெவ்விடஞ்சேர்
பாம்புக்கும் பாலுண வீகின் றனர்இப் படிமிசையான்
வீம்புக்கும் தீம்புக்கும் ஆனேன் எனினும் விடேல்எனைநீ
தேம்புக்கும் வார்சடைத் தேவே கருணைச் சிவக்கொழுந்தே. ...19

2748 - அடமுடி யாதுபல் ஆற்றாலும் ஏழைக் கடுத்ததுன்பம்
படமுடி யாதென்னை செய்கேன்என் தன்முகம் பார்த்திரங்காய்
திடமுடி யால்அயன் மால்வணங் குந்துணைச் சேவடியாய்
தடமுடி யாய்செஞ் சடைமுடி யாய்நந் தயாநிதியே. ...20

- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

2749 - பொல்லா வாழ்க்கைத் துயரம்எனும் புணரிப் பெருக்கில் வீழ்ந்தழுந்திப்
பல்லார் நகைக்கப் பாவிபடும் பாட்டை முழுதும் பார்த்திருந்தும்
கல்லால் அமர்ந்தீர் என்னிரண்டு கண்கள் அனையீர் கறைமிடற்றீர்
எல்லாம் உடையீர் மால்விடையீர் என்னே இரங்கி அருளீரே. . ..21

2750 - பொன்னை உடையார் மிகுங்கல்விப் பொருளை உடையார் இவர்முன்னே
இன்னல் எனும்ஓர் கடல்வீழ்ந்திவ் வேழை படும்பா டறிந்திருந்தும்
மின்னை நிகரும் சடைமுடியீர் விடங்கொள் மிடற்றீர் வினைதவிர்ப்பீர்
என்னை உடையீர் வெள்விடையீர் என்னே இரங்கி அருளீரே. ...22

- கலித்துறை

2751 - ஆயும் வஞ்சக நெஞ்சன்இவ் அடியனேன் ஐயா
நீயும் வஞ்சக நெஞ்சன்என் றால்இந்த நிலத்தே
ஏயும் இங்கிதற் கென்செய்வேன் என்செய்வேன் எவைக்கும்
தாயும் தந்தையும் ஆகிஉள் நிற்கின்றோய் சாற்றாய். ...23

2752 - நானும் பொய்யன்நின் அடியனேன் தண்ணருள் நிதிநீ
தானும் பொய்யன்என் றால்இதற் கென்செய்வேன் தலைவா
தேனும் பாலுந்தீங் கட்டியும் ஆகிநிற் றெளிந்தோர்
ஊனும் உள்ளமும் உயிரும்அண் ணிக்கின்ற உரவோய். ...24

- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா


2753 - நேசனும்நீ சுற்றமும்நீ நேர்நின் றளித்துவரும்
ஈசனும்நீ ஈன்றாளும் எந்தையும்நீ என்றேநின்
தேசுறுசீர் ஐந்தெழுத்தும் செப்புகின்ற நாயேனை
ஆசகலும் வண்ணம் அருள்புரிந்தால் ஆகாதோ. ...25

- கட்டளைக் கலித்துறை

2754 - ஆற்றால் விளங்கும் சடையோய்இவ் வேழை அடியனும்பல்
ஆற்றால் வருந்தும் வருத்தம்எல் லாம்முற் றறிந்தும்இன்னம்
ஆற்றா திருத்தல்நின் பேரருள் ஆற்றுக் கழகுகொலோ
ஆற்றாமை மேற்கொண் டழுதால் எவர்எனை ஆற்றுவரே. ...26

- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

2755 - அருளார் அமுதே அரசேநின் அடியேன் கொடியேன் முறையேயோ
இருள்சேர் மனனோ டிடர்உழந்தேன் எந்தாய் இதுதான் முறையேயோ
மருள்சேர் மடவார் மயலாலே மாழ்கின் றேன்நான் முறையேயோ
தெருளோர் சிறிதும் அறியாதே திகையா நின்றேன் முறையேயோ. . ..27

2756 - ஒழியாக் கவலை உறுகின்றேன் உடையாய் முறையோ முறையேயோ
அழியாக் கருணைக் கடலேஎன் அரசே முறையோ முறையேயோ
பொழியாப் புயலே அனையார்பால் புகுவித் தனையே முறையேயோ
இழியாத் திரிதந் துழல்கின்றேன் இறைவா முறையோ முறையேயோ. ...28

- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

2757 - மதிஒளிர் கங்கைச் சடைப்பெருங் கருணை வள்ளலே தெள்ளிய அமுதே
நிதிஒளிர் வாழ்க்கை இந்திரன் முதலோர்நிலைத்தவான் செல்வமும் மண்ணில்
பதிஒளிர் வாழ்க்கை மணிமுடி அரசர் படைத்திடும் செல்வமும் வேண்டேன்
கதிஒளிர் நினது திருவருட் செல்வக் களிப்பையே கருதுகின் றனனே. ...29

- கட்டளைக் கலித்துறை

2758 - வெள்ளங்கொண் டோ ங்கும் விரிசடை யாய்மிகு மேட்டினின்றும்
பள்ளங்கொண் டோ ங்கும் புனல்போல்நின் தண்ணருட் பண்புநல்லோர்
உள்ளங்கொண் டோ ங்கும் அவமே பருத்த ஒதிஅனையேன்
கள்ளங்கொண் டோ ங்கும் மனத்துறு மோஉறிற் காண்குவனே. ...30

2759 - ஐயாமுக் கண்கொண்ட ஆரமு தேஅரு ளார்பவள
மெய்யாமெய்ஞ் ஞான விளக்கே கருணை விளங்கவைத்த
மையார் மிடற்று மணியேஅன் றென்னை மகிழ்ந்ததந்தோ
பொய்யாஎன் செய்வல் அருளா யெனில்எங்குப் போதுவனே. ...31

2760 - நாரா யணன்திசை நான்முகன் ஆதியர் நண்ணிநின்று
பாரா யணஞ்செயப் பட்டநின் சேவடிப் பங்கயமேல்
சீரா யணம்பெறப் பாடுந் திறம்ஓர் சிறிதும்இலேன்
ஆரா யணங்குற நின்றேன்பொன் மன்றத் தமர்ந்தவனே. ...32

2761 - பேய்கொண்ட நெஞ்சகப் பாழால் வரும்என் பெருந்துயரை
வாய்கொண் டனந்தர் அனந்தர்க்கும் சொல்ல வராதெனில்இந்
நாய்கொண் டுரைக்க வருமோஎன் செய்குவன் நச்சுமரக்
காய்கொண்டு வாழைக் கனியைக்கை விட்ட கடையவனே. ...33

- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

2762 - வன்மானங் கரத்தேந்தும் மாமணியே மணிகண்ட மணியே அன்பர்
நன்மானங் காத்தருளும் அருட்கடலே ஆனந்த நடஞ்செய் வாழ்வே
பொன்மானம் பினைப்பொருந்தும் அம்பினைவைத் தாண்டருளும் பொருளேநீ இங்
கென்மானங் காத்தருள வேண்டுதியோ வேண்டாயேல் என்செய்வேனே. ...34

- கலிநிலைத் துறை

2763 - வைவ மென்றெழு கின்றவர் தமக்கும்நல் வாழ்வு
செய்வம் என்றெழு கின்றமெய்த் திருவருட் செயலும்
சைவ மென்பதும் சைவத்திற் சாற்றிடுந் தலைமைத்
தெய்வ மென்பதும் என்னள வில்லைஎன் செய்வேன். ...35

- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

2764 - ஐய ரேஉம தடியன்நான் ஆகில் அடிகள் நீர்என தாண்டவர் ஆகில்
பொய்ய னேன்உளத் தவலமும் பயமும்புன்கணும்தவிர்த் தருளுதல்வேண்டும்
தைய லோர்புறம் நின்றுளங் களிப்பச் சச்சி தானந்தத் தனிநடம் புரியும்
மெய்ய ரேமிகு துய்யரே தரும விடைய ரேஎன்றன் விழிஅமர்ந் தவரே. . ..36

- வேறு

2765 - எழுவினும் வலிய மனத்தினேன் மலஞ்சார் ஈயினும் நாயினும் இழிந்தேன்
புழுவினுஞ் சிறியேன் பொய்விழைந் துழல்வேன் புன்மையேன்புலைத்தொழிற்கடையேன்
வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன் மாண்பிலா வஞ்சக நெஞ்சக்
குழுவினும் பெரியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே. ...37

- கலி விருத்தம்

2766 - பொன்அ ளிக்கும்நற் புத்தியுந் தந்துநின்
தன்ன ருட்டுணைத் தாண்மலர்த் தியானமே
மன்ன வைத்திட வேண்டும்எம் வள்ளலே
என்னை நான்பல கால்இங்கி யம்பலே. ...38

2767 - தாயும் தந்தையும் சற்குரு நாதனும்
ஆயும் தெய்வமும் நீஎன் றறிந்தனன்
பாயும் மால்விடை ஏறும் பரமனே
நீயும் கைவிட என்னை நினைத்தியோ. ...39

- வேறு

2768 - ஒழியா மயல்கொண் டுழல்வேன் அவமே
அழியா வகையே அருள்வாய் அருள்வாய்
பொழியா மறையின் முதலே நுதல்ஏய்
விழியாய் விழியாய் வினைதூள் படவே. ...40

- வெண்துறை

2769 - உலகெ லாம்நிறைந் தோங்கு பேரருள் உருவ மாகிஎவ் உயிரும் உய்ந்திட
இலகு வானொளி யாம்மணி மன்றிடை என்றும்நின்றே
அலகில் ஆனந்த நாடகஞ் செய்யும் அம்பொற் சேவடிக் கபயம் என்னையும்
திலக நீவிழை வாய்நட ராசசி காமணியே. ...41

- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

2770 - என்னிருகண் காள்உமது பெருந்தவம்எப் புவனத்தில் யார்தான் செய்வர்
முன்னிருவர் காணாமல் அலைந்தனரால் இனுங்காண முயலா நின்றார்
நன்னிருபர் தொழுதேத்தும் அம்பலத்தே ஓரிடத்தோர் நாள்ஆ தித்தர்
பன்னிருவர் ஒளிமாற்றும் பரஒளியைப் பார்த்துயர்ந்தீர் பண்பி னீரே. ...42

2771 - சேணாடர் முனிவர்உயர் திசைமுகன்மால் உருத்திரன்அத் திரளோர் சற்றும்
காணாத காட்சியைநான் கண்டேன்சிற் றம்பலத்தின் கண்ணே பன்னாள்
ஆணாகப் பிறந்தடியேன் அருந்தவம்என் புரிந்தேனோ அறிகி லேன்முன்
பேணாத பிறப்பெல்லாம் பிறப்பலஇப் பிறப்பேஎன் பிறப்பாம் அந்தோ. ...43

- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்




2772 - இருளற ஓங்கும் பொதுவிலே நடஞ்செய் எங்குரு நாதன்எம் பெருமான்
அருளெனும் வடிவங் காட்டிஒண் முகத்தே அழகுறும் புன்னகை காட்டித்
தெருளுற அருமைத் திருக்கையால் தடவித் திருமணி வாய்மலர்ந் தருகில்
பொருளுற இருந்தோர் வாக்களித்தென்னுள்புகுந்தனன் புதுமைஈதந்தோ. ...44

- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

2773 - பொன்என்கோ மணிஎன்கோ புனிதஒளித் திரள்என்கோ பொற்பின் ஓங்கும்
மின்என்கோ விளக்கென்கோ விரிசுடர்க்கோர் சுடர்என்கோ வினையனேன்யான்
என்என்கோ என்என்கோ எம்பெருமான் திருமேனி இருந்த வண்ணம்
முன்என்கோ தறுதவத்தால் கண்டுகளித் திடப்பெற்றேன் முக்கண்மூர்த்தி. ...45

2774 - வஞ்சகர்க்கெல் லாம்முதலாய் அறக்கடையாய் மறத்தொழிலே வலிக்கும்பாவி
நெஞ்சகத்துன் மார்க்கனைமா பாதகனைக் கொடியேனை நீச னேனை
அஞ்சல்எனக் கருணைபுரிந் தாண்டுகொண்ட அருட்கடலை அமுதைத்தெய்வக்
கஞ்சமல ரவன்நெடுமாற் கரும்பொருளைப் பொதுவினில்யான் கண்டுய்ந் தேனே. ...46

- கட்டளைக் கலித்துறை

2775 - நாதாபொன் அம்பலத் தேஅறி வானந்த நாடகஞ்செய்
பாதா துரும்பினும் பற்றாத என்னைப் பணிகொண்டெல்லாம்
ஓதா துணர உணர்த்திஉள் ளேநின் றுளவுசொன்ன
நீதா நினைமறந் தென்நினைக் கேன்இந்த நீணிலத்தே. ...47

- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


2776 - கந்த நாண்மலர்க் கழலிணை உளத்துறக் கருதுகின் றவர்க்கெல்லாம்
பந்த நாண்வலை அவிழ்த்தருள் சிதம்பரை பரம்பரை யுடன்ஆடும்
அந்த நாள்மகிழ் வடைபவர் உளர்சிலர் அவர்எவர் எனில்இங்கே
இந்த நாள்முறை திறம்பல ராய்உயிர்க் கிதம்செயும் அவர்அன்றே. ...48

- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

2777 - வெட்டை மாட்டி விடாப்பெருந் துன்பநோய்
விளைவ தெண்ணிலர் வேண்டிச்சென் றேதொழுக்
கட்டை மாட்டிக் கொள்வார்என வேண்டிப்பெண்
கட்டை மாட்டிக் கொள்வார்தங் கழுத்திலே
துட்டை மாட்டின் கழுத்தடிக் கட்டையோ
துணிக்கும் கட்டைய தாம்இந்தக் கட்டைதான்
எட்டை மாட்டி உயிர்விடக் கட்டைமேல்
ஏறும் போதும் இழுக்கின்ற கட்டையே. ...49

2778 - புண்ணைக் கட்டிக்கொண் டேஅதன் மேல்ஒரு
புடவை கட்டிப் புதுமைகள் காட்டிடும்
பெண்ணைக் கட்டிக்கொள் வார்இவர் கொள்ளிவாய்ப்
பேயைக் கட்டிக்கொண் டாலும் பிழைப்பர்காண்
மண்ணைக் கட்டிக்கொண் டேஅழு கின்றஇம்
மடையப் பிள்ளைகள் வாழ்வினை நோக்குங்கால்
கண்ணைக் கட்டிக்கொண் டூர்வழி போம்கிழக்
கழுதை வாழ்வில் கடைஎனல் ஆகுமே. . ..50

- கட்டளைக் கலிப்பா

2779 - உடுக்க வோஒரு கந்தைக்கு மேலிலை
உண்ண வோஉண வுக்கும் வழியிலை
படுக்க வோபழம் பாய்க்கும் கதியிலை
பாரில் நல்லவர் பால்சென்று பிச்சைதான்
எடுக்க வோதிடம் இல்லைஎன் பால்உனக்
கிரக்கம் என்பதும் இல்லை உயிரைத்தான்
விடுக்க வோமனம் இல்லைஎன் செய்குவேன்
வெண்பி றைச்சடை வித்தக வள்ளலே. ...51

2780 - தொடுக்க வோநல்ல சொன்மலர் இல்லைநான்
துதிக்கவோ பத்தி சுத்தமும் இல்லைஉள்
ஒடுக்க வோமனம் என்வசம் இல்லைஊ
டுற்ற ஆணவ மாதிம லங்களைத்
தடுக்க வோதிடம் இல்லைஎன் மட்டிலே
தயவு தான்நினக் கில்லை உயிரையும்
விடுக்க வோமனம் இல்லைஎன் செய்குவேன்
விளங்கு மன்றில் விளங்கிய வள்ளலே. ...52

- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

2781 - இறகெடுத்த அமணர்குலம் வேரறுத்த சொக்கேஈ தென்ன ஞாயம்
அறுகடுத்த சடைமுடிமேல் மண்ணெடுக்க மாட்டாமல் அடிபட் டையோ
பிறகெடுத்தீர் வளையல்விற்றீர் சொற்கேளாப்பிள்ளைகளைப் பெற்றதோஷம்
விறகெடுத்தீர் என்செய்வீர் விதிவசந்தான் யாவரையும் விடாது தானே. ...53

- கலி விருத்தம்

2782 - சச்சிதா நந்தசிற் சபையில் நாடகம்
பச்சிதாந் திருவுருப் பாவை நோக்கிட
மெச்சிதா காரமா விளைப்பர் மெல்லடி
உச்சிதாழ் குவர்நமக் குடையர் நெஞ்சமே. ...54

- கட்டளைக் கலித்துறை

2783 - தத்தா தனத்தத்தைத் தாவென் றரங்கன் றனிநடிப்பா
தத்தா தனத்தத்தைத் தாவென் றரங்கன் றனிநடிப்பா
தத்தா தனத்தத்தைத் தாவென் றரங்கன் றனிநடிப்பா
தத்தா தனத்தத்தைத் தாவென் றரங்கன் றனஞ்சொல்லுமே. ...55

- நேரிசை வெண்பா

2784 - இம்மை யறையனைய வேசூர மாதருமா
இம்மையுமை யிம்மையையோ என்செய்த - தம்மைமதன்
மாமாமா மாமாமா மாமாமா மாமாமா
மாமாமா மாமாமா மா. . ..56

2785 - ஆவியீ ரைந்தை அபரத்தே வைத்தோதில்
ஆவியீ ரைந்தை அகற்றலாம் - ஆவியீர்
ஐந்துறலா மாவியீ ரைந்தறலா மாவியீ
ரைந்திடலா மோரிரண்டோ டாய்ந்து. (176) ...57
திருச்சிற்றம்பலம்
___________________________________________________________________________

176. இதன் பொருள் : ஆவி - ஆன்மவக்கரமென்னும், ஈரைந்து - பத்தாகிய யகரத்தை, ஐ - சிவத்திற்கு, அபரத்தே - பின்னாக, வைத்து - பொருத்தி, ஓதில் - செபிக்கில், ஆவியீ ரைந்தை - ஆ என்னும் ஆபத்துகளையும் வி என்னும் விபத்துகளையும், அகற்றலாம் - நீக்கிக் கொள்ளலாம். ஆவி - ஆன்மவியற்கையை, ஈர் - கெடுக்கும், ஐந்து - பஞ்சமலங்களையும், அறலாம் - களைந்து விடலாம், ஆவி - ஆன்மாவுக் குறுதியாய், ஈரைந்து - பத்தியை, உறலாம் - பொருந்தலாம், ஆய்ந்து - சேர்க்கும் வகை தெரிந்து, ஆவி - பிராணனது கலைகள், ஈரைந்து - பத்துடன், ஓர் - ஒரு, இரண்டோ டு - இரண்டையுங் கழியாமல், இடலாம் - சேர்த்துக் கட்டிக் கொள்ளலாம்.

- ஆறாம் திருமுறை முதற் பதிப்பு 1885

இப்பதிகத்துள் கலித்துறைகளும் விரவி நிற்கவும், விருத்தமெனக் குறியிட்டாளப் பட்டமைக் கீண்டு விதியெழுதப் புகின் மிகப் பெருகுமாதலின் விடுக்கப்பட்டது. சைவம் பன்னிரண்டு திருமுறைகளுள் ஆளுடைய வரசாகிய அப்பர் சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய திருமுறையில் "குலம்பலம்பாவரும்" என்றற் றொடக்கத் திலக்கியங்களாற் கண்டுகொள்க. - தொ. வே.

-------------------------

16. திருக்குறிப்பு நாட்டம் (2786 - 2789)


- ஆசிரியத் துறை(177)


2786 - ஆற்றுக் கேபிறைக் கீற்றுக் கேசடை ஆக்கிச் சேவடி தூக்கி ஆருயிர்ப்
பேற்றுக்கே நடிப்பாய் மணிமன்றில் பெருந்தகையே
சோற்றுக் கேஇதஞ் சொல்லிப் பேதையர் சூழல் வாய்த்துயர் சூழ்ந்து மேற்றிசைக்
காற்றுக்கே கறங்காய்ச் சுழன்றேனைக் கருதுதியோ. ...1

2787 - ஞாலத் தார்தமைப் போலத் தாம்இங்கு நண்ணு வார்நின்னை எண்ணு வார்மிகு
சீலத்தார் சிவமே எவையும்எனத் தேர்ந்தனரால்
சாலத் தான்கொடுஞ் சாலத் தாலத்தைத் தாவி நான்பெரும் பாவி ஆயினன்
ஏலத்தார் குழலா ளிடத்தாய்எனை எண்ணுதியோ. ...2

2788 - அண்ண லேநின்னை எண்ண லேன்என்னை ஆண்டு கொண்டனை மீண்டும் விண்டனன்
நண்ணலே அறியேன் கடையேன்சிறு நாயனையேன்
பெண்ண லேன்இயல் ஆண லேன்அலிப் பேய னேன்கொடும் பேதை யேன்பிழை
கண்ணலே புரியா தினும்மீட்கக் கருதுதியோ. ...3

2789 - வல்லி ஆனந்த வல்லி சேர்மண வாள னேஅரு ளாள னேமலை
வில்லியாய் நகைத்தே புரம்வீழ்த்த விடையவனே
புல்லி யான்புலைப் போகம் வேட்டுநின் பொன்ன டித்துணைப் போகம் போக்கினேன்
இல்லிஆர் கடம்போ லிருந்தேன்எனை எண்ணுதியோ. ...4
திருச்சிற்றம்பலம்
___________________________________________________________________________

175. ஆசிரியத்தாழிசை. தொ. வே. 1, 2. ஆசிரியத்துறை. ச. மு. க. ஆ. பா.

17. தனித் திருப்புலம்பல் (2790 - 2793)


- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


2790 - திங்கள் விளங்கும் சடைத்தருவைத் தீம்பாற் சுவையைச் செந்தேனைச்
செங்கை மருவும் செழுங்கனியைச் சீரார் முக்கட் செங்கரும்பை
மங்கை மலையாள் மணந்தபெரு வாழ்வைப் பவள மலைதன்னை
எங்கள் பெருமான் தனைஅந்தோ என்னே எண்ணா திருந்தேனே. ...1

2791 - அன்பர் இதய மலர்க்கோயில் அமர்ந்த பரமா னந்தத்தைத்
துன்பம் அகலச் சுகமளிக்கும் தூய துணையைச் சுயஞ்சுடரை
வன்ப ரிடத்தின் மருவாத மணியை மணியார் மிடற்றானை
இன்ப நிறைவை இறையோனை என்னே எண்ணா திருந்தேனே. ...2

2792 - ஒருமைப் பயனை ஒருமைநெறி உணர்ந்தார் உணர்வின் உள்ளுணர்வைப்
பெருமைக் கதியைப் பசுபதியைப் பெரியோர் எவர்க்கும் பெரியோனை
அருமைக் களத்தில் கருமைஅணி அம்மான் தன்னை எம்மானை
இருமைப் பயனுந் தருவானை என்னே எண்ணா திருந்தேனே. ...3

2793 - கறையோர் கண்டத் தணிந்தருளும் கருணா நிதியைக் கண்ணுதலை
மறையோன் நெடுமாற் கரியசிவ மலையை அலையில் வாரிதியைப்
பொறையோர் உள்ளம் புகுந்தொளிரும் புனித ஒளியைப் பூரணனாம்
இறையோன் தன்னை அந்தோநான் என்னே எண்ணா திருந்தேனே. ...4
திருச்சிற்றம்பலம்
---------------------------

18. பரம ராசியம் (2794 -2795)


- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


2794 - விதிஎ லாம்விலக் கெனவிலக் கிடுவேன்
விலக்கெ லாங்கொண்டு விதிஎன விதிப்பேன்
நிதிஎ லாம்பெற நினைத்தெழு கின்றேன்
நிலமெ லாங்கொளும் நினைப்புறு கின்றேன்
எதிஎ லாம்வெறுத் திட்டசிற் றூழை
இன்பெ லாங்கொள எண்ணிநின் றயர்வேன்
பதிஎ லாங்கடந் தெவ்வணம் உய்வேன்
பரம ராசியப் பரம்பரப் பொருளே. ...1

2795 - செடிய னேன்கடுந் தீமையே புரிவேன்
தெளிவி லேன்மனச் செறிவென்ப தறியேன்
கொடிய னேன்கொடுங் கொலைபயில் இனத்தேன்
கோள னேன்நெடு நீளவஞ் சகனேன்
அடிய னேன்பிழை அனைத்தையும் பொறுத்துன்
அன்பர் தங்களோ டின்புற அருள்வாய்
படிஅ னேகமுங் கடந்தசிற் சபையில்
பரம ராசியப் பரம்பரப் பொருளே. ...2
திருச்சிற்றம்பலம்

----------------------------

19. திருப்புகழ்ச்சி (2796 - 2798)


- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


2796 - திருவுளந் தெரியேன் திகைப்புறு கின்றேன்
சிறியரிற் சிறியனேன் வஞ்சக்
கருவுளக் கடையேன் பாவியேன் கொடிய
கன்மனக் குரங்கனேன் அந்தோ
வெருவுறு கின்றேன் அஞ்சல்என் றின்னே
விரும்பிஆட் கொள்ளுதல் வேண்டும்
மருவுமா கருணைப் பெருங்கடல் அமுதே
வள்ளலே என்பெரு வாழ்வே. . ..1

- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

2797 - தாயும் தந்தையும் தெய்வமும் குருவும்
தாங்கு கின்றதோர் தலைவனும் பொருளும்
ஆயும் இன்பமும் அன்பும்மெய் அறிவும்
அனைத்தும் நீஎன ஆதரித் திருந்தேன்
ஏயும் என்னள விரக்கம்ஒன் றிலையேல்
என்செய் வேன்இதை யார்க்கெடுத் துரைப்பேன்
சேயும் நின்னருள் நசைஉறுங் கண்டாய்
தில்லை மன்றிடைத் திகழ்ஒளி விளக்கே. ...2

- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

2798 - அருள்பழுத் தோங்கும் கற்பகத் தருவே
அருண்மருந் தொளிர்குணக் குன்றே
அருள்எனும் அமுதந் தரும்ஒரு கடலே
அருட்கிர ணங்கொளும் சுடரே
அருள்ஒளி வீசும் அரும்பெறன் மணியே
அருட்சுவை கனிந்தசெம் பாகே
அருள்மணம் வீசும் ஒருதனி மலரே
அருண்மய மாம்பர சிவமே. ...3
திருச்சிற்றம்பலம்

--------------------------------

20. திருமருந்தருள் நிலை (2799 -2800)


- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


2799 - பனகஅணைத் திருநெடுமால் அயன்போற்றப் புலவரெலாம் பரவ ஓங்கும்
கனகமணி அம்பலத்தே பெரியமருந் தொன்றிருக்கக் கண்டேன் கண்டேன்
அனகநடத் ததுசச்சி தானந்த வடிவதுபே ரருள்வாய்ந் துள்ள
தெனகமமர்ந் திருப்பதெல்லாம் வல்லதுபேர் நடராசன் என்ப தம்மா. ...1

2800 - திருநெடுமால் அயன்தேடத் துரியநடு ஒளித்ததெனத் தெளிந்தோர்சொல்லும்
ஒருகருணை மருந்துதிரு அம்பலத்தே இருந்திடக்கண் டுவந்தேன் அந்தோ
அருவுருவங் கடந்ததுபே ரானந்த வடிவதுநல் லருள்வாய்ந் துள்ள
திருமையும்நன் களிப்பதெல்லாம் வல்லதுபேர் நடராசன் என்ப தம்மா. . ..2
திருச்சிற்றம்பலம்

-----------------------------

21. திருவருள் விலாசம் (2801 - 2802)


- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


2801 - ஆண்டவன்நீ யாகில்உனக் கடியனும்நா னாகில்
அருளுடையாய் இன்றிரவில் அருள் இறையாய் வந்து
நீண்டவனே முதலியரும் தீண்டரிதாம் பொருளின்
நிலைகாட்டி அடிமுடியின் நெறிமுழுதும் காட்டி
வீண்டவனே காலையில்நீ விழித்தவுடன் எழுந்து
விதிமுடித்துப் புரிதிஇது விளங்கும்எனப் புகல்வாய்
தாண்டவனே அருட்பொதுவில் தனிமுதலே கருணைத்
தடங்கடலே நெடுந்தகையே சங்கரனே சிவனே. ...1

2802 - திருநெறிமெய்த் தமிழ்மறையாம் திருக்கடைக்காப் பதனால்
திருவுளங்காட் டியநாளில் தெரிந்திலன் இச் சிறியேன்
பெருநெறிஎன் உளத்திருந்து காட்டியநாள் அறிந்தேன்
பிழைபடாத் தெய்வமறை இதுவெனப்பின் புணர்ந்தேன்
ஒருநெறியில் எனதுகரத் துவந்தளித்த நாளில்
உணராத உளவைஎலாம் ஒருங்குணர்ந்து தெளிந்தேன்
தெருணெறிதந் தருளும்மறைச் சிலம்பணிந்த பதத்தாள்
சிவகாம வல்லிமகிழ் திருநடத்தெள் ளமுதே. . ..2
திருச்சிற்றம்பலம்

----------------------

22. சிவ சிதம்பர சங்கீர்த்தனம் (2803 - 2807)


- எண்சீர்க் கழிநெடிலடிச் சந்த விருத்தம்(178)


2803 - உலக முஞ்சரா சரமும் நின்றுநின் றுலவு கின்றபே ருலகம் என்பதும்
கலகம் இன்றிஎங் கணுநி றைந்தசிற் கனம்வி ளங்குசிற் ககனம் என்பதும்
இலக ஒன்றிரண் டெனல்அ கன்றதோர் இணையில் இன்பமாம் இதயம் என்பதும்
திலகம் என்றநங் குருசி தம்பரம் சிவசி தம்பரம் சிவசி தம்பரம். ...1

2804 - வரமு றுஞ்சுதந் தரசு கந்தரும் மனம டங்குசிற் கனந டந்தரும்
உரமு றும்பதம் பெறவ ழங்குபே ரொளிந டந்தரும் வெளிவி டந்தரும்
பரமு றுங்குணங் குறிக டந்தசிற் பரம மாகியே பரவு மாமறைச்
சிரமு றும்பரம் பரசி தம்பரம் சிவசி தம்பரம் சிவசி தம்பரம். ...2

2805 - நித்தி யம்பரா பரநி ராதரம் நிர்க்கு ணஞ்சதா நிலய நிட்களம்
சத்தி யம்கனா கனமி குந்ததோர் தற்ப ரம்சிவம் சமர சத்துவம்
வித்தி யஞ்சுகோ தயநி கேதனம் விமலம் என்றுநால் வேத முந்தொழும்
சித்தி யங்குசிற் கனசி தம்பரம் சிவசி தம்பரம் சிவசி தம்பரம். ...3

2806 - அருள்அ ளித்துமெய் யன்பர் தம்மைஉள் ளங்கை நெல்லிபோல் ஆக்கு கின்றதும்
பொருள்அ ளித்துநான் மறையின் அந்தமே புகலு கின்றதோர் புகழ்அ ளிப்பதும்
வெருள்அ ளித்திடா விமல ஞானவான் வெளியி லேவெளி விரவி நிற்பதாம்
தெருள்அ ளிப்பதும் இருள்கெ டுப்பதும் சிவசி தம்பரம் சிவசி தம்பரம். ...4

2807 - பெத்த முஞ்சதா முத்தி யும்பெரும் பேத மாயதோர் போத வாதமும்
சுத்த முந்தெறா வித்த முந்தரும் சொரூப இன்பமே துய்க்கும் வாழ்க்கையும்
நித்த முந்தெரிந் துற்ற யோகர்தம் நிமல மாகிமெய்ந் நிறைவு கொண்டசிற்
சித்த முஞ்செலாப் பரம ராசியம் சிவசி தம்பரம் சிவசி தம்பரம். ...5
திருச்சிற்றம்பலம்
___________________________________________________________________________

178. கட்டளைக் கலிப்பா. தொ. வே. 1, 2. ச. மு. க.
எண்சீர்க் கழிநெடிலடிச் சந்த விருத்தம். ஆ. பா.

--------------------------

23. சிவகாமவல்லி துதி (2808 - 2812)


- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


2808 - அரங்காய மனமாயை அளக்கர் ஆழம்
அறியாமல் காலிட்டிங் கழுந்து கின்றேன்
இரங்காயோ சிறிதும்உயிர் இரக்கம் இல்லா
என்மனமோ நின்மனமும் இறைவி உன்றன்
உரங்காணும் அரசியற்கோல் கொடுங்கோல் ஆனால்
ஓடிஎங்கே புகுந்தெவருக் குரைப்ப தம்மா
திரங்காணாப் பிள்ளைஎனத் தாய்வி டாளே
சிவகாம வல்லிஎனும் தெய்வத் தாயே. ...1

- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

2809 - தனத்தால் இயன்ற தனிச்சபையில் நடிக்கும் பெருமான் தனக்கன்றே
இனத்தால் உயர்ந்த மணமாலை இட்டுக் களித்த துரைப்பெண்ணே
மனத்தான் விளங்கும் சிவகாம வல்லிக் கனியே மாலொடும்ஓர்
அனத்தான் புகழும் அம்மேஇவ் வடியேன் உனக்கே அடைக்கலமே. ...2

2810 - திருவே திகழுங் கலைமகளே திருவே மலையான் திருமகளே
உருவே இச்சை மயமேமெய் உணர்வின் வணமே உயர்இன்பக்
குருவே ஆதித் தனித்தாயே குலவும் பரையாம் பெருந்தாயே
மருவே மலரே சிவகாம வல்லி மணியே வந்தருளே. ...3

2811 - அருளே அறிவே அன்பேதெள் ளமுதே மாதர் அரசேமெய்ப்
பொருளே தெருளே மாற்றறியாப் பொன்னே மின்னே பூங்கிளியே
இருளேய் மனத்தில் எய்தாத இன்பப் பெருக்கே இவ்வடியேன்
மருளே தவிர்த்த சிவகாம வல்லி நினக்கே வந்தனமே. ...4

- கட்டளைக் கலித்துறை

2812 - தருவாய் இதுநல் தருணங்கண் டாய்என்னைத் தாங்கிக்கொண்ட
குருவாய் விளங்கு மணிமன்ற வாணனைக் கூடிஇன்ப
உருவாய்என் உள்ளத்தின் உள்ளே அமர்ந்துள்ள உண்மைஎலாம்
திருவாய் மலர்ந்த சிவகாம வல்லிநின் சீர்அருளே. ...5
திருச்சிற்றம்பலம்

----------------------------

24. சிவ பரம்பொருள் (2813 -2816)


- கலிநிலைத் துறை


2813 - உருத்தி ரன்திரு மால்அயன் ஒப்பமுக் குணமாய்
இருத்தல் இன்றிஅக் குணங்களை என்றும்ஆண் டருளுங்
கருத்தன் ஆகையிற் குணேசன்அக் குணவிகா ரத்திற்
பொருத்த மின்மையன் ஆகையால் புகல்குண ரகிதன். ...1

2814 - களங்க அக்குணம் கடந்திருத் தலில்குணா தீதன்
வளங்கொ ளத்தகும் உலகெலாம் மருவிநிற் றலினால்
விளங்கு விச்சுவ வியாபிஇவ் விசுவத்தை யாண்டு
துளங்கு றாநலந் தோற்றலின் விச்சுவ கருத்தன். ...2

2815 - வெய்ய னாய்உல கழித்தலின் விசுவசங் காரி
பைய மேலெனப் படுவன பலவற்றின் மேலாம்
ஐயன் ஆதலிற் பராபர னாம்எனப் பட்ட
செய்ய னாகிய சிவபிரான் ஒருவனுண் டமரீர். ...3

2816 - உய்வ தாம்இது நம்குரு வாணையொன் றுரைப்பேன்
சைவ மாதிசித் தாந்தத்து மறைமுடித் தலத்தும்
நைவ தின்றிஆங் கதுவது வாயது நமது
தெய்வ மாகிய சிவபரம் பொருளெனத் தெளிவீர். . ..4
திருச்சிற்றம்பலம்

-----------------------

25. நடராஜ அலங்காரம் (2817 -2819)


- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


2817 - இரண்டே காற்கை முகந்தந்தீர் இன்ப நடஞ்செய் பெருமானீர்
இரண்டே காற்கை முகங்கொண்டீர் என்னே அடிகள் என்றுரைத்தேன்
இரண்டே காற்கை முகம்புடைக்க இருந்தாய் எனைக்கென் றிங்கேநீ
இரண்டே காற்கை முகங்கொண்டாய் என்றார் மன்றில் நின்றாரே.(179) ...1

2818 - இரண்டே காற்கை முகங்கொண்டீர் என்னை உடையீர் அம்பலத்தீர்
இரண்டே காற்கை முகந்தந்தீர் என்னை இதுதான் என்றுரைத்தேன்
இரண்டே காற்கை முகங்கொண்டிங் கிருந்த நீயும் எனைக்கண்டே
இரண்டே காற்கை முகங்கொண்டாய் என்றார் தோழி இவர்வாழி.(180) ...2

2819 - ஆடுங் கருணைத் திருநடத்தீர் ஆடும் இடந்தான் யாதென்றேன்
பாடுந் திருவுஞ் சவுந்தரமும் பழமுங் காட்டும் இடமென்றார்
நாடும் படிநன் கருளுமென்றேன் நங்காய் முன்பின் ஒன்றேயாய்
ஈடுந் தியபன் னடுவுளதால் என்றார் தோழி இவர்வாழி.(181) ...3
திருச்சிற்றம்பலம்
___________________________________________________________________________

179. பதவுரை : இன்பம் - பேரின்பம் தருவதாகிய, நடஞ்செய் - திருநடனத்தைப் புரியா நின்ற, பெருமானீர் - பெருமானாகிய நீர், இரண்டே - இரண்டேயாகிய, காற்கு - பாதங்களையுடைய எனக்கு, ஐ - அழகிய, முகம் - முகம் ஒன்றினை, தந்தீர் - கொடுத்தீர், இங்ஙனம் இருக்க, இரண்டே காற்கு - இரண்டு பாதாம்புயங்களுக்கு, ஐமுகம் - பஞ்சமுகங்களை, கொண்டீர் - கொண்ட நீராக இருக்கின்றீர், என்னே - யாதுபற்றி, அடிகள் - அடிகளே, என்றுரைத்தேன் - எனப் புகன்றேன். அதற்கு மன்றில் நின்றார் - அம்பலத்தின் கண்ணின்ற இவர் அடியாளைக் கண்ணுற்று, இரண்டே கால் - இரண்டு காலாகப் பெற்ற நீ, கைமுகம் புடைக்க விருந்தாய் - கைத்த முகம் பெருக்கக் காட்டினை, எனைக்கென்று - யாதுபற்றி என வினவி, இங்கே நீ - இப்போது இவ்விடத்து, இரண்டே காற்கு - இரு காலாகிய அரை ( அல்குலுக்கு இன்பம் பெருக்க எண்ணி ) ஐமுகம் கொண்டாய் என்றார் - சுமுகங் கொண்டனை எனப் புகல்கின்றனர். ஏ! தோழி ! இஃது என் ? என வினவியது. - ச.மு.க.

180. பதவுரை : இரண்டேகாற்கு - இருவினை வழி செல்லாதவர்களுக்கு, ஐமுகம் - ஆசாரிய முகத்தினை, கொண்டனை - கொண்ட நீராயிருக்கின்றீர். என்னை - அடியாளை, உடையீர் - உடையவரே, அம்பலத்தீர் - திருவம்பலத்தில் நடிக்கின்றவரே, இரண்டேகாற்கு - சூரியகலை சந்திரகலையாகிய வாசியனுபவத்திற்கு, ஐ - அழகிய, முகந்தந்நீர் - முகத்தினைத் தந்தவரே, என்னை இது தானென்று - இஃது என்ன விஷயத்திற்கு என்று, உரைத்தேன் - செப்பினேன். அதற்கு அன்னார், இரண்டே கால், கை, முகங் கொண்டிருந்த நீயும் - இரண்டு காலும், இருகையும், முகமும் அடையப் பெற்றிரா நின்ற நீயும், எனைக் கண்டே - நம்மைத் தரிசித்த தக்ஷணம் நீ முன் உரைத்த வண்ணமே, இரண்டேகாற்கு - வாசிக்கு, ஐமுகங்கொண்டாய் - அழகிய முகத்தினை அனுபவ இடமாகக் கொண்டு விட்டனை என்கின்றனர் தோழி, இன்னார் நீடுழி வாழ்க எனத் தலைவி வாழ்த்தியதாகக் கொள்க.
இரண்டேகாற்கை - தமிழில் எழுதினால் இரண்டு (உ), கால் (வ), கை : உவகை.
இரண்டேகாற் கைமுகந் தந்தீர் என்றதற்கு, விநாயகருக்கு கை - துதிக்கையுடைய முகத்தினைத் தந்தீர் எனப் பொருள் கூறுவாரும் உளர். தலைவி தலைவருக்குள் நடந்த அலங்கார விவகாரத்துள் விநாயகரைப் பற்றிக் கூறுதல் அவ்வளவு விசேட மன்றெனக் கொள்க.

181. குறிப்பு : ஆடுமிடம் - நடனஞ் செய்யுமிடம், பாடும் - வேதாகமங்களால் புகழப்படும், திருவும் - பொன் என்னுஞ் சொல்லும், சவுந்தரமும் - அழகு, அழகுக்குப் பிரதிபதமாய அம் என்னும் சொல்லும், பழமும் - (பழம் = பலம் வடமொழி ) - பலம் என்னும் சொல்லும் சேர்ந்தால், பொன்னம்பலம் ஆகிறது. முன்பின் ஒன்றேயாய் - முன்னும் பின்னும் ஒரு சொல்லாகிய அம், பல் நடு வுளது - பல் என்னுஞ் சொல் நடுவுளது. அம்+பல்+அம் - அம்பலம், ஦ ச. மு. க.

------------------------

26. பாங்கிமார் கண்ணி (2820 -- 2846)


- சிந்து


2820 - அம்பலத்தில் ஆடுகின்றார் பாங்கிமா ரே - அவர்
ஆட்டங்கண்டு நாட்டங்கொண்டேன் பாங்கிமாரே. ...1

2821 - ஆடுகின்ற சேவடிமேற் பாங்கிமா ரே - மிக
ஆசைகொண்டு வாடுகின்றேன் பாங்கிமாரே. ...2

2822 - இன்பவடி வாய்ச்சபையிற் பாங்கிமா ரே - நட
மிட்டவர்மே லிட்டம்வைத்தேன் பாங்கிமாரே. ...3

2823 - ஈனவுடற் கிச்சைவையேன் பாங்கிமா ரே - நட
னேசர்தமை யெய்தும்வண்ணம் பாங்கிமாரே. . ..4

2824 - உத்தமர்பொன் னம்பலத்தே பாங்கிமா ரே - இன்ப
உருவாகி ஓங்குகின்றார் பாங்கிமாரே. ...5

2825 - ஊனவுல கைக்கருதேன் பாங்கிமா ரே - மன்றில்
உத்தமருக் குறவாவேன் பாங்கிமாரே. ...6

2826 - கற்பனையெல் லாங்கடந்தார் பாங்கிமா ரே - என்றன்
கற்பனைக்குட் படுவாரோ பாங்கிமாரே. ...7

2627 - கண்டிலர்நான் படும்பாடு பாங்கிமா ரே - மூன்று
கண்ணுடையா ரென்பாரையோ பாங்கிமாரே. ...8

2828 - கன்மனமெல் லாங்கரைப்பார் பாங்கிமா ரே - மனங்
கரையாரென் னளவிலே பாங்கிமாரே. ...9

2829 - கள்ளமொன்று மறியேனான் பாங்கிமா ரே - என்னைக்
கைவிடவுந் துணிவாரோ பாங்கிமாரே. ...10

2830 - கற்பழித்துக் கலந்தாரே பாங்கிமா ரே - இன்று
கைநழுவ விடுவாரோ பாங்கிமாரே. ...11

2831 - கண்டவரெல் லாம்பழிக்கப் பாங்கிமா ரே - என்றன்
கன்னியழித் தேயொளித்தார் பாங்கிமாரே. ...12

2832 - காமனைக்கண் ணாலெரித்தார் பாங்கிமா ரே - என்றன்
காதலைக்கண் டறிவாரோ பாங்கிமாரே. ...13

2833 - காவலையெல் லாங்கடந்து பாங்கிமா ரே - என்னைக்
கைகலந்த கள்ளரவர் பாங்கிமாரே. ...14

2834 - காணவிழைந் தேனவரைப் பாங்கிமா ரே - கொண்டு
காட்டுவாரை யறிந்திலேன் பாங்கிமாரே. ...15

2835 - கிட்டவர வேண்டுமென்றார் பாங்கிமா ரே - நான்
கிட்டுமுன்னே யெட்டநின்றார் பாங்கிமாரே. ...16

2836 - கின்னரங்கே ளென்றிசைத்தார் பாங்கிமா ரே - நான்
கேட்பதன்முன் சேட்படுத்தார் பாங்கிமாரே. ...17

2837 - கிள்ளையைத்தூ தாவிடுத்தேன் பாங்கிமா ரே - அது
கேட்டுவரக் காணேனையோ பாங்கிமாரே. ...18

2838 - கீதவகை பாடிநின்றார் பாங்கிமா ரே - அது
கேட்டுமதி மயங்கினேன் பாங்கிமாரே. ...19

2839 - கீழ்மைகுறி யாமலென்னைப் பாங்கிமா ரே - மனக்
கேண்மைகுறித் தாரேயன்று பாங்கிமாரே. ...20

2840 - கீடமனை யேனெனையும் பாங்கிமா ரே - அடிக்
கேயடிமை கொண்டாரன்று பாங்கிமாரே. ...21

2841 - குற்றமெல்லாங் குணமாகப் பாங்கிமா ரே - கொள்ளுங்
கொற்றவரென் கொழுநர்காண் பாங்கிமாரே. ...22

2842 - குற்றமொன்றுஞ் செய்தறியேன் பாங்கிமா ரே - என்னைக்
கொண்டுகுலம் பேசுவாரோ பாங்கிமாரே. ...23

2843 - குஞ்சிதப்பொற் பாதங்கண்டாற் பாங்கிமா ரே - உள்ள
குறையெல்லாந் தீருங்கண்டீர் பாங்கிமாரே. . ..24

2844 - கூற்றுதைத்த பாதங்கண்டீர் பாங்கிமா ரே - நங்கள்
குடிக்கெல்லாங் குலதெய்வம் பாங்கிமாரே. ...25

2845 - கூறரிய பதங்கண்டு பாங்கிமா ரே - களி
கொண்டுநிற்க விழைந்தேனான் பாங்கிமாரே. ...26

2846 - கூடல்விழைந் தேனவரைப் பாங்கிமா ரே - அது
கூடும்வண்ணம் கூட்டிடுவீர் பாங்கிமாரே. ...27
திருச்சிற்றம்பலம்

--------------------------

27. வெண்ணிலாக் கண்ணி (2847 - 2869)


- சிந்து


2847 - தன்னையறிந் தின்பமுற வெண்ணிலா வே - ஒரு
தந்திரநீ சொல்லவேண்டும் வெண்ணிலா வே. ...1

2848 - நாதமுடி மேலிருந்த வெண்ணிலா வே - அங்கே
நானும்வர வேண்டுகின்றேன் வெண்ணிலா வே. ...2

2849 - சச்சிதானந் தக்கடலில் வெண்ணிலா வே - நானுந்
தாழ்ந்துவிழ வேண்டுகின்றேன் வெண்ணிலா வே. ...3

2850 - இராப்பகலில் லாவிடத்தே வெண்ணிலா வே - நானும்
இருக்கவெண்ணி வாடுகின்றேன் வெண்ணிலா வே. ...4

2851 - தேசுநிற மாய்நிறைந்த வெண்ணிலா வே - நானுஞ்
சிவமயம தாய்விழைந்தேன் வெண்ணிலா வே. ...5

2852 - போதநடு வூடிருந்த வெண்ணிலா வே - மலப்
போதமற வேண்டுகின்றேன் வெண்ணிலா வே. ...6

2853 - ஆருமறி யாமலிங்கே வெண்ணிலா வே - அரு
ளாளர்வரு வாரோசொல்லாய் வெண்ணிலா வே. ...7

2854 - அந்தரங்க சேவைசெய்ய வெண்ணிலா வே - யெங்கள்
ஐயர்வரு வாரோசொல்லாய் வெண்ணிலா வே. ...8

2855 - வேதமுடி மேலிருந்த வெண்ணிலா வே - மல
வேதையுள வேதுசொல்லாய் வெண்ணிலா வே. ...9

2856 - குண்டலிப்பால் நின்றிலங்கும் வெண்ணிலா வே - அந்தக்
குண்டலிப்பால் வேண்டுகின்றேன் வெண்ணிலா வே. ...10

2857 - ஆதியந்த மென்றுரைத்தார் வெண்ணிலா வே - அந்த
ஆதியந்த மாவதென்ன வெண்ணிலா வே. ...11

2858 - வித்திலாம லேவிளைந்த வெண்ணிலா வே - நீதான்
விளைந்தவண்ண மேதுசொல்லாய் வெண்ணிலா வே. ...12

2859 - முப்பொருளு மொன்றதென்பார் வெண்ணிலா வே - அந்த
மூன்றுமொன்றாய் முடிந்ததென்ன வெண்ணிலா வே. . ..13

2860 - நானதுவாய் நிற்கும்வண்ணம் வெண்ணிலா வே - ஒரு
ஞானநெறி சொல்லுகண்டாய் வெண்ணிலா வே. ...14

2861 - ஞானமய மாய்விளங்கும் வெண்ணிலா வே - என்னை
நானறியச் சொல்லுகண்டாய் வெண்ணிலா வே. ...15

2862 - வாசிவாசி யென்றுரைத்தார் வெண்ணிலா வே - அந்த
வாசியென்ன பேசுகண்டாய் வெண்ணிலா வே. ...16

2863 - ஐந்தலைப்பாம் பாட்டுகின்றார் வெண்ணிலா வே - அவர்
அம்பலத்தில் நின்றதென்ன வெண்ணிலா வே. ...17

2864 - ஓரெழுத்தி லைந்துண்டென்பார் வெண்ணிலா வே - அது
ஊமையெழுத் தாவதென்ன வெண்ணிலா வே. ...18

2865 - அம்பலத்தில் ஆடுகின்றார் வெண்ணிலா வே - அவர்
ஆடுகின்ற வண்ணமென்ன வெண்ணிலா வே. ...19

2866 - அந்தரத்தில் ஆடுகின்றார் வெண்ணிலா வே - அவர்
ஆடும்வகை எப்படியோ வெண்ணிலா வே. ...20

2867 - அணுவிலணு வாயிருந்தார் வெண்ணிலா வே - எங்கும்
ஆகிநின்ற வண்ணமென்ன வெண்ணிலா வே. ...21

2868 - அண்டபகி ரண்டமெல்லாம் வெண்ணிலா வே - ஐயர்
ஆட்டமென்று சொல்வதென்ன வெண்ணிலா வே. ...22

2869 - அம்பரத்தி லாடுகின்றார் வெண்ணிலா வே - என்னை
ஆட்டுகின்றார் இம்பரத்தே வெண்ணிலா வே. ...23
திருச்சிற்றம்பலம்

-----------------------

28. முறையீட்டுக் கண்ணி (2870 - 2938)


- தாழிசை


2870 - பற்று நினைத்தெழுமிப் பாவிமனத் தீமையெலாம்
உற்று நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா. ...1

2871 - எள்ளேத நின்னிடத்தே எண்ணுகின்ற தோறுமதை
உள்ளே நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா. ...2

2872 - துன்னுகின்ற தீமைநின்பாற் சூழ்ந்துரைக்குந் தோறுமதை
உன்னுகின்ற போதிலெனக் கூடுருவிப் போகுதடா. . ..3

2873 - எள்ளுகின்ற தீமைநின்பா லெண்ணுகின்ற தோறுமதை
உள்ளுகின்ற போதிலெனக் கூடுருவிப் போகுதடா. ...4

2874 - மிக்க நிலைநிற்க விரும்பேன் பிழைகளெலாம்
ஒக்க நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா. ...5

2875 - கோகோ வெனுங்கொடியேன் கூறியகுற் றங்களெலாம்
ஓகோ நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா. ...6

2876 - பித்து மனக்கொடியேன் பேசியவன் சொல்லையெலாம்
ஒத்து நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா. ...7

2877 - தேர்ந்து தெளியாச் சிறியவனேன் தீமையெலாம்
ஓர்ந்து நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா. ...8

2878 - நிறுத்தி யறியே நிகழ்த்தியவன் சொல்லை
உறுத்தி நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா. ...9

2879 - தோன்றி விரியுமனத் துட்டனேன் வன்பிழையை
ஊன்றி நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா. ...10

2880 - எண்ணினைப்ப தின்றிநினை யெள்ளி யுரைத்ததனை
உண்ணினைக்குந் தோறுமெனக் குள்ள முருகுதடா. ...11

2881 - கடையவனேன் வைதகடுஞ் சொன்னினைக்குந் தோறும்
உடையவனே யென்னுடைய வுள்ள முருகுதடா. ...12

2882 - பித்தனெனத் தீமை பிதற்றியதெண் ணுந்தோறும்
உத்தமனே யென்னுடைய வுள்ள முருகுதடா. ...13

2883 - மன்றுடையாய் நின்னருளை வைதகொடுஞ் சொற்பொருளில்
ஒன்றை நினைக்கிலெனக் குள்ள முருகுதடா. ...14

2884 - வெருவாம லையோ விளம்பியசொல் லெல்லாம்
ஒருவா நினைக்கிலெனக் குள்ள முருகுதடா. ...15

2885 - புலைக்கொடியேன் புன்சொற் புகன்றதெண் ணுந்தோறும்
உலைக்கண்மெழு காகவென்ற னுள்ள முருகுதடா. ...16

2886 - ஈடில்பெருந் தாயி லினியாய்நின் றண்ணருட்பால்
ஊடியசொல் லுன்னிலெனக் குள்ள முருகுதடா. ...17

2887 - புரைத்தமன வஞ்சப் புலையேன் றிருவருளை
உரைத்தபிழை யெண்ணிலெனக் குள்ள முருகுதடா. ...18

2888 - நாடி நினையா நவையுடையேன் புன்சொலெலாம்
ஓடி நினைக்கிலெனக் குள்ள முருகுதடா. ...19

2889 - வெப்பில் கருணை விளக்கனையா யென்பிழையை
ஒப்பி நினைக்கிலெனக் குள்ள முருகுதடா. ...20

2890 - அஞ்சலென்றாய் நின்பால் அடாதமொழி பேசியதை
அஞ்சிநினைக் கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...21

2891 - மெய்யோர் சிறிதுமிலேன் வீண்மொழியா லூடியதை
ஐயோ நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. . ..22

2892 - இத்தா ரணிக்குளெங்கு மில்லாத தீமைசெய்தேன்
அத்தா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...23

2893 - பொய்யால் விரிந்த புலைமனத்தேன் செய்பிழையை
ஐயா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...24

2894 - இப்பாவி நெஞ்சா லிழுக்குரைத்தே னாங்கதனை
அப்பாநி னைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...25

2895 - எண்ணாக் கொடுமையெலா மெண்ணியுரைத் தேனதனை
அண்ணா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...26

2896 - வெம்மான் மனத்து வினையேன் புகன்றதெலாம்
அம்மா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...27

2897 - எச்சோடு மில்லா திழிந்தேன் பிழைகளெலாம்
அச்சோநி னைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...28

2898 - வந்தோடி நைமனத்து வஞ்சகனேன் வஞ்சமெலாம்
அந்தோநி னைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...29

2899 - ஓவாக் கொடியே னுரைத்த பிழைகளெலாம்
ஆவா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...30

2900 - கரைசேர வொண்ணாக் கடையேன் பிழையை
அரைசேநி னைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...31

2901 - மருளுடையேன் வஞ்ச மனத்தீமை யெல்லாம்
அருளுடையா யெண்ணிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...32

2902 - ஈண்டவனேன் வன்சொல் இயம்பியதை யென்னுடைய
ஆண்டவனே யெண்ணிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...33

2903 - வற்புதனேன் வஞ்ச மனப்பிழையை மன்றாடும்
அற்புதனே யெண்ணிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...34

2904 - துன்புடையேன் புன்மொழிகள் தூற்றியதை யெவ்வுயிர்க்கும்
அன்புடையா யெண்ணிலெனக் கஞ்சுங் கலங்குதடா. ...35

2905 - கொதிக்கின்ற வன்மொழியாற் கூறியதை யையோ
மதிக்கின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா. ...36

2906 - சினங்கொண்ட போதெல்லாஞ் செப்பிய வன்சொல்லை
மனங்கொள்ளுந் தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா. ...37

2907 - செய்தநன்றி யெண்ணாச் சிறியவனே னின்னருளை
வைத்தெண்ணுந் தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா. ...38

2908 - பொய்த்த மனத்தேன் புகன்றகொடுஞ் சொற்களெலாம்
வைத்துநினைக் குந்தோறும் வாளிட் டறுக்குதடா. ...39

2909 - பொங்குகின்ற தீமை புகன்றதெலா மெண்ணியெண்ணி
மங்குகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா. ...40

2910 - ஊடுகின்ற சொல்லா லுரைத்ததனை யெண்ணியெண்ணி
வாடுகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா. ...41

2911 - உயங்குகின்றேன் வன்சொல் லுரைத்ததனை யெண்ணி
மயங்குகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா. ...42

2912 - சொல்விளைவு நோக்காதே சொன்னதெலா மெண்ணுதொறும்
வல்வினையே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா. ...43

2913 - மேல்விளைவு நோக்காதே வேறுசொன்ன தெண்ணுதொறும்
மால்வினையே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா. ...44

2914 - விஞ்சகத்தா லந்தோ விளம்பியதை யெண்ணுதொறும்
வஞ்சகத்தே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா. ...45

2915 - விலங்குகின்ற நெஞ்ச விளைவையெண் ணுந்தோறும்
மலங்குகின்றே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா. ...46

2916 - தூய்மையிலா வன்மொழியாற் சொன்னவெலா மெண்ணுதொறும்
வாய்மையிலே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா. ...47

2917 - கலிக்கின்ற வஞ்சகக் கருத்தைக் கருதி
வலிக்கின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா. . ..48

2918 - நீட்டுகின்ற வஞ்ச நெடுஞ்சொலெலா நெஞ்சகத்தே
மாட்டுகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா. ...49

2919 - பொருந்துகின்ற வஞ்சப் புதுமையெண்ணி யையோ
வருந்துகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா. ...50

2920 - வெருவிக்கும் வஞ்ச வெறுஞ்சொலெலாம் நெஞ்சில்
வருவிக்குந் தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா. ...51

2921 - ஊடும்போ துன்னை யுரைத்தவெலா நாயடியேன்
நாடும்போ தெல்லாமென் னாடி நடுங்குதடா. ...52v

2922 - வாய்க்கடையா வன்சொல் வழங்கியவென் வன்மனத்தை
நாய்க்கடையே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா. ...53

2923 - கன்றி யுரைத்த கடுஞ்சொற் கடுவையெலாம்
நன்றியிலே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா. ...54

2924 - புன்மையினால் வன்சொற் புகன்றபுலைத் தன்மையெலாம்
நன்மையிலே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா. ...55

2925 - ஊனெண்ணும் வஞ்ச வுளத்தா லுரைத்தவெலாம்
நானெண்ணுந் தோறுமென்ற னாடி நடுங்குதடா. ...56

2926 - வஞ்சனையா லஞ்சாது வன்சொல் புகன்றவெலாம்
நஞ்சனையே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா. ...57

2927 - கோணநெடு நெஞ்சக் குரங்காற் குதித்தவெலாம்
நாணமிலே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா. ...58v

2928 - ஊனமிலா நின்னை யுரைத்தகொடுஞ் சொல்லையெலாம்
ஞானமிலே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா. ...59

2929 - எற்றே மதியிலியே னெண்ணா துரைத்ததனைச்
சற்றே நினைத்திடினுந் தாது கலங்குதடா. ...60

2930 - இனியேது செய்வே னிகழ்ந்துரைத்த சொல்லைத்
தனியே நினைத்திடினுந் தாது கலங்குதடா. ...61

2931 - நாயனையே னெண்ணாம னலங்கியவன் சொல்லையெலாம்
தாயனையா யெண்ணுதொறுந் தாது கலங்குதடா. ...62

2932 - நிற்குருகா வஞ்ச நினைவால் நினைத்தவெலாஞ்
சற்குருவே யெண்ணுதொறுந் தாது கலங்குதடா. ...63

2933 - வெந்நரகில் வீழும் விளைவால் விளம்பியதை
என்னரசே யெண்ணுதொறு மென்னை விழுங்குதடா. ...64

2934 - நன்கறியேன் வாளா நவின்ற நவையனைத்தும்
என்குருவே யெண்ணுதொறு மென்னை விழுங்குதடா. ...65v

2935 - ஆவ தறியா தடியே னிகழ்ந்தகொடும்
பாவ நினைக்கிற் பகீரென் றலைக்குதடா. ...66

2936 - வந்திப் பறியேன் வழங்கியவன் சொல்லையெலாம்
சிந்திக் கிலுள்ளே திடுக்கிட் டழுங்குதடா. ...67

2937 - குற்ற நினைத்த கொடுஞ்சொலெலா மென்னுளத்தே
பற்ற நினைக்கிற் பயமா யிருக்குதடா. ...68

2938 - எள்ளுகின்ற தீமை யெடுத்துரைத்தே னாங்கதனை
விள்ளுகின்ற தோறு முள்ளம்வெந்து வெதும்புதடா. ...69
திருச்சிற்றம்பலம்

-------------------------

29. திருவடிக் கண்ணி (2939 - 2949)


- தாழிசை


2939 - மின்னிடையாள் காண விளங்குமன்றி லாடுகின்றாய்
என்னுடையா யுன்ற னிணையடிதான் நோவாதா. ...1

2940 - வன்னமுதே யின்ப மலியமன்றி லாடுகின்றாய்
என்னமுதே யுன்ற னிணையடிதான் நோவாதா. ...2

2941 - நண்ணியமெய் யன்பர் நயக்கமன்றி லாடுகின்றாய்
புண்ணியனே யுன்றனது பொன்னடிதான் நோவாதா. ...3

2942 - அன்பரின்பங் கொள்ளநட மம்பலத்தே யாடுகின்றாய்
இன்புருவா முன்ற னிணையடிதான் நோவாதா. ...4

2943 - நூலுணர்வா நுண்ணுணர்வி னோக்கநட மாடுகின்றாய்
மாலறியா வுன்றன் மலர்ப்பாதம் நோவாதா. ...5

2944 - எள்ளலற வம்பலத்தே யின்பநட மாடுகின்றாய்
வள்ளலே யுன்றன் மலரடிதான் நோவாதா. ...6

2945 - சைவ நிலைத்துத் தழைத்தோங்க வாடுகின்றாய்
தெய்வ மணியே திருவடிதான் நோவாதா. ...7

2946 - எல்லாரு மின்புற் றிருக்கநட மாடுகின்றாய்
வல்லாரின் வல்லாய் மலர்ப்பாதம் நோவாதா. ...8

2947 - அவமே கழிந்தின்ப மன்பர்கொள வாடுகின்றாய்
சிவமே நினது திருவடிதான் நோவாதா. ...9

2948 - தற்பரமா மன்றிற் றனிநடன மாடுகின்றாய்
சிற்பரமே யுன்றன் திருமேனி நோவாதா. ...10

2949 - வில்வவேர் மாலை மிளிர்ந்தசைய வாடுகின்றாய்
செல்வமே யுன்றன் திருமேனி நோவாதா. . ..11
திருச்சிற்றம்பலம்
------------------------

30. பேரன்புக் கண்ணி (2950 - 2963)


- தாழிசை


2950 - கற்றதென்றுஞ் சாகாத கல்வியென்று கண்டுகொண்டுன்
அற்புதச்சிற் றம்பலத்தி லன்புவைத்தேன் ஐயாவே. ...1

2951 - ஈடணைகள் நீக்கிநமக் கின்பளிக்கு மென்றுமன்றில்
ஆடுந் திருவடிக்கே ஆசைவைத்தேன் ஐயாவே. ...2

2952 - நானந்த மெய்தா நலம்பெறவே யெண்ணிமன்றில்
ஆனந்த நாடகத்துக் கன்புவைத்தேன் ஐயாவே. ...3

2953 - வாடலறச் சாகா வரங்கொடுக்கு மென்றுமன்றில்
ஆடலடிப் பொன்மலர்க்கே அன்புவைத்தேன் ஐயாவே. ...4

2954 - பொற்புறவே பொன்றாப் பொருளளிக்கு மென்றுமன்றில்
அற்புதப்பொற் சேவடிக்கே அன்புவைத்தேன் ஐயாவே. ...5

2955 - ஈனமறுத் தென்றும் இறவாமை நல்குமென்றே
ஞானமணி மன்றிடத்தே நண்புவைத்தேன் ஐயாவே. ...6

2956 - ஓர்துணைநின் பொன்னடியென் றுன்னுகின்றே னுன்னையன்றி
ஆர்துணையும் வேண்டேனென் அன்புடைய ஐயாவே. ...7

2957 - பூசைசெய்து பெற்றவுன்றன் பொன்னடிமே லன்றியயல்
ஆசையொன்று மில்லையெனக் கன்புடைய ஐயாவே. ...8

2958 - இச்சைநின்மே லன்றியெனக் கெள்ளளவும் வேறுமொன்றில்
இச்சையிலை நின்னாணை யென்னருமை ஐயாவே. ...9

2959 - எப்படிநின் னுள்ள மிருக்கின்ற தென்னளவில்
அப்படிநீ செய்கவெனக் கன்புடைய ஐயாவே. . ..10

2960 - எவ்வண்ணம் நின்கருத்திங் கென்னளவி லெண்ணியதோ
அவ்வண்ணஞ் செய்கவெனக் கன்புடைய ஐயாவே. ...11

2961 - தேசுறுநின் றண்ணருளாந் தெள்ளமுதங் கொள்ளவுள்ளே
ஆசைபொங்கு கின்றதெனக் கன்புடைய ஐயாவே. ...12

2962 - மாசறுநின் பொன்னருளா மாமணிபெற் றாடவுள்ளே
ஆசைபொங்கு கின்றதெனக் கன்புடைய ஐயாவே. ...13

2963 - நாசமிலா நின்னருளாம் ஞானமருந் துண்ணவுள்ளே
ஆசைபொங்கு கின்றதெனக் கன்புடைய ஐயாவே. ...14
திருச்சிற்றம்பலம்
---------------------

31. நடேசர் கொம்மி (2964 -2970)


- சிந்து


பல்லவி


2964 - கொம்மிய டிப்பெண்கள் கொம்மி யடி - இரு
கொங்கைகு லுங்கவே கொம்மியடி. ...1
-

பல்லவி எடுப்பு


2965 - நம்மை யாளும்பொன் னம்பல வாணனை
நாடிக் கொம்மிய டியுங்க டி - பதம்
பாடிக் கொம்மிய டியுங்கடி. கொம்மி ...1 -

- கண்ணிகள்


2966 - காம மகற்றிய தூய னடி - சிவ
காம சவுந்தரி நேய னடி
மாமறை யோதுசெவ் வாய னடி - மணி
மன்றெனு ஞானவா காயனடி. கொம்மி ...1 -

2967 - ஆனந்தத் தாண்டவ ராஜ னடி - நமை
ஆட்கொண் டருளிய தேஜ னடி
வானந்த மாமலை மங்கை மகிழ் - வடி
வாளன டிமண வாளனடி. கொம்மி ...2 -

2968 - கல்லைக் கனிவிக்குஞ் சுத்த னடி - முடி
கங்கைக் கருளிய கர்த்த னடி
தில்லைச்சி தம்பர சித்த னடி - தேவ
சிங்கம டியுயர் தங்கமடி. கொம்மி ...3 -

2969 - பெண்ணொரு பால்வைத்த மத்த னடி - சிறு
பிள்ளைக் கறிகொண்ட பித்த னடி
நண்ணி நமக்கரு ளத்த னடி - மிக
நல்லன டியெல்லாம் வல்லனடி. கொம்மி ...4 -

2970 - அம்பலத் தாடல்செய் ஐய னடி - அன்பர்
அன்புக் கெளிதரு மெய்ய னடி
தும்பை முடிக்கணி தூய னடி - சுயஞ்
சோதிய டிபரஞ் சோதியடி. கொம்மி ...5 -
---------------------------

32. தோழியர் உரையாடல் (2971 - 2976)


- தாழிசை


2971 - தண்மதி யொண்முகப் பெண்மணி யே - உன்னைத்
தான்கொண்ட நாயக ராரே டி
அண்மையிற் பொன்னணி யம்பலத் தாடல்செய்
ஐய ரமுத ரழகரடி. ...1

2972 - செங்கயற் கண்மட மங்கைநல் லாய் - உன்றன்
செங்கை பிடித்தவ ராரே டி
அங்கய லாரன்று பொன்னம்ப லத்தெங்கள்
ஆனந்தத் தாண்டவ ராஜனடி. ...2

2973 - கன்னற் சுவைமொழி மின்னிடை யாய் - உன்னைக்
கன்னி யழித்தவ ராரே டி
உன்னற் கரியபொன் னம்பலத் தாடல்செய்
உத்தம ரானந்த சித்தரடி. ...3

2974 - தீமையி லாதபெண் மாமயி லே - உன்னைச்
சேர்ந்து கலந்தவ ராரே டி
தாமமு டிக்கணிந் தம்பலத் தேயின்பத்
தாண்டவஞ் செய்யுஞ் சதுரரடி. ...4

2975 - அன்னந டைப்பெண்க ளாரமு தே - உன்னை
அன்பிற் புணர்ந்தவ ராரே டி
துன்ன லுடையின ரம்பலத் தேநின்ற
தூய திருநட ராயரடி. ...5

2976 - காரள கப்பெண் சிகாமணி யே - உன்றன்
கற்பை யழித்தவ ராரே டி
பேரள வைக்கடந் தம்பலத் தேநின்ற
பித்தர் பரானந்த நித்தரடி. ...6
திருச்சிற்றம்பலம்
----------------------------

33. தெண்டனிட்டேன் (2977 - 2985)


- சிந்து

- பல்லவி


2977 - தெண்டனிட்டே னென்று சொல்ல டி - சு வாமிக்குநான்
தெண்டனிட்டே னென்று சொல்லடி. ...1

- பல்லவி எடுப்பு


2978 - தண்டலை விளங்குந் தில்லைத் தலத்திற்பொன் னம்பலத்தே
கண்டவர் மயங்கவேடங் கட்டியாடு கின்றவர்க்கு தெண்ட ...1

- கண்ணிகள்


2979 - கற்பூர வாசம்வீசும் பொற்பாந்தி ருமுகத்தே
கனிந்தபுன் னகையாடக் கருணைக்க டைக்கணாட
அற்பார்பொன் னம்பலத்தே ஆனந்தத் தாண்டவம்
ஆடிக்கொண் டேயென்னை ஆட்டங்கண் டாருக்கு தெண்ட ...1

2980 - இழிந்தாலு நம்மையிங்கே யேற்றுவா ரென்றடைந்தால்
ஏற்றுவார் போலேபின்னு மிழியவைப் பாருக்குப்
பழந்தான் நழுவிமெல்லப் பாலில் விழுந்ததென்னப்
பசப்பிப் பசப்பியன்பர் பண்டம் பறிப்பவர்க்கு தெண்ட ...2

2981 - சுட்டதிரு நீறுபூசித் தொந்தோமென் றாடுவார்க்குத்
தோன்றுதலை மாலையணி தோள்விளங்க வருவார்க்குப்
பிட்டுக்காசைப் பட்டுமாறன் பிரம்படி பட்டவர்க்குப்
பிள்ளைக்கறிக் காசைகொண்ட கள்ளத்தவ வேடருக்கு தெண்ட ...3

2982 - வாழ்ந்தாரை மேன்மேலும் வாழச்செய் பவருக்கு
மாசுபறித் தவர்கையிற் காசுபறிக் கின்றவர்க்குத்
தாழ்ந்தாரை யடிக்கடி தாழக்காண் பவருக்குத்
தானாகி நானாகித் தனியேநின் றவருக்கு தெண்ட ...4

2983 - ஆதியந்த நடுவில்லா ஆனந்த நாடருக்கு
அண்டருயிர் காத்தமணி கண்டசசி கண்டருக்குச்
சோதிமய மாய்விளங்குந் தூயவடி வாளருக்குத்
தொண்டர்குடி கெடுக்கவே துஜங்கட்டிக் கொண்டவர்க்கு தெண்ட ...5

2984 - பாட்டுக்காசைப் பட்டுமுன்னம் பரவைதன் வாயிலிற்போய்ப்
பண்புரைத்துத் தூதனென்றே பட்டங்கட்டிக் கொண்டவர்க்கு
வீட்டுக்காசைப் படுவாரை வீட்டைவிட்டுத் துரத்தியே
வேட்டாண்டி யாயுலகில் ஓட்டாண்டி யாக்குவார்க்கு தெண்ட ...6

2985 - தாய்வறிற்றிற் பிறவாது தானே முளைத்தவர்க்குச்
சாதிகுல மறியாது தாண்டவஞ்செய் கின்றவர்க்கு
ஏய தொழிலருளு மென்பிராண நாயகர்க்கு
ஏமாந்த வரையெல்லாம் ஏமாத்து மீசருக்கு ...7

- தெண்டனிட்டே னென்று சொல்ல டி - சு வாமிக்குநான்
தெண்டனிட்டே னென்று சொல்ல டி.
திருச்சிற்றம்பலம்
----------------------------

34. இன்னந் தயவு வரவிலையா (2986 - 2992)


- சிந்து

- பல்லவி


2986 - இன்னந் தயவுவர விலையா - உனக்கென்மீதில்
என்ன வர்மஞ் சொலையா. ...1


- கண்ணிகள்


2987 - அன்னம் பாலிக்குந்தில்லைப் பொன்னம் பலத்திலாடும்
அரசே - அரசே - அரசேயென் றலறவும் இன்னந் ...1

2988 - சின்னஞ் சிறுவயதி லென்னை யடிமைகொண்ட
சிவமே - சிவமே - சிவமேயென் றலறவும் இன்னந் ...2

2989 - முன்னம் பிழைபொறுத்தா யின்னம் பொறாதுவிட்டால்
முறையோ - முறையோ - முறையோவென் றலறவும் இன்னந் ...3

2990 - தன்னை யறியாவென்னை யின்ன லுறச்செய்தாயே
தகுமோ - தகுமோ - தகுமோவென் றலறவும் இன்னந் ...4

2991 - பண்டு மகிழ்ந்தெனையாட் கொண்டு கருணைசெய்த
பரமே - பரமே - பரமேயென் றலறவும் இன்னந் ...5

2992 - கொண்டு குலம்பேசுவா ருண்டோ வுலகிலெங்கள்
குருவே - குருவே - குருவேயென் றலறவும் ...6

- இன்னந் தயவுவர விலையா - உனக்கென்மீதில்
என்ன வர்மஞ் சொலையா.
திருச்சிற்றம்பலம்

------------------------------

35. வினா விடை (2993 - 2995)


- கொச்சகக் கலிப்பா


2993 - ஆகமமு மாரணமு மரும்பொருளென் றொருங்குரைத்த
ஏகவுரு வாகிநின்றா ரிவரார்சொல் தோழி
மாகநதி முடிக்கணிந்து மணிமன்று ளனவரத
நாகமணி மிளிரநட நவில்வார்காண் பெண்ணே. ...1

- தாழிசை


2994 - அருளாலே அருளிறை அருள்கின்ற பொழுதங்
கனுபவ மாகின்ற தென்னடி தாயே
தெருளாலே மருளாலே தெரியாது தெரியும்
திருநட இன்பம்என் றறியாயோ மகளே. ...2

2995 - அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுதங்
கனுபவ மாகின்ற தென்னடி தாயே
செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்
திருவருள் உருவம்என் றறியாயோ மகளே. ...3
திருச்சிற்றம்பலம்

----------------------

36. நற்றாய் கவன்றது (2996 - 3004)


- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


2996 - திருவருட் புனிதை மகிழநின் றாடும் தில்லைமன் றழகனே என்பாள்
மருவருட் கடலே மாணிக்க மலையே மதிச்சடை வள்ளலே என்பாள்
இருவருக் கரிய ஒருவனே எனக்கிங் கியார்துணை நின்னலா தென்பாள்
வெருவிஉட் குழைவாள் விழிகணீர் துளிப்பாள் வெய்துயிர்ப் பாள்என்றன் மின்னே. ...1

2997 - ஓடுவாள் தில்லைத் திருச்சிற்றம் பலம்என் றுருகுவாள் உணர்விலள் ஆகித்
தேடுவாள் திகைப்பாள் தியங்குவாள் ஐயோ தெய்வமே தெய்வமே என்பாள்
பாடுவாள் பதைப்பாள் பதறுவாள் நான் பெண்பாவி காண்பாவிகாண் என்பாள்
வாடுவாள் மயங்கி வருந்துவாள் இருந்து வல்வினை யேன்பெற்ற மகளே. ...2

2998 - உலகெலாந் தழைப்பப்பொதுவினில் ஓங்கும் ஒருதனித் தெய்வம்என்கின்றாள்
இலகுபே ரின்ப வாரிஎன் கின்றாள் என்னுயிர்க் கிறைவன்என் கின்றாள்
அலகிலாக் கருணை அமுதன்என் கின்றாள் அன்பர்கட்கன்பன்என் கின்றாள்
திலகவா ணுதலாள் இவ்வணம் புலம்பித் தியக்கமுற் றழுங்குகின் றாளே. ...3

2999 - திருஎலாம்அளிக்கும் தெய்வம்என் கின்றாள் திருச்சிற் றம்பலவன்என்கின்றாள்
உருஎலாம் உடைய ஒருவன்என் கின்றாள் உச்சிமேல் கரங்குவிக் கின்றாள்
கருஎலாங் கடந்தாங் கவன்திரு மேனி காண்பதெந் நாள்கொல்என் கின்றாள்
மருஎலாம்மயங்கும் மலர்க்குழல் முடியாள் வருந்துகின்றாள்என்றன் மகளே. ...4

3000 - மின்இணைச் சடில விடங்கன்என் கின்றாள் விடைக்கொடி விமலன்என் கின்றாள்
பொன்இணை மலர்த்தாள் புனிதன்என் கின்றாள் பொதுவிலே நடிப்பன்என் கின்றாள்
என்இணை விழிகள் அவன்திரு அழகை என்றுகொல் காண்பதென் கின்றாள்
துன்இணை முலைகள் விம்முற இடைபோல் துவள்கின்றாள் பசியபொற் றொடியே. ...5

3001 - கருங்களிற் றுரிபோர்த் தம்பலத் தாடும் கருணைஎங் கடவுள்என் கின்றாள்
பெருங்களி துளும்ப வடவனத் தோங்கும் பித்தரில் பித்தன்என் கின்றாள்
ஒருங்களி மிழற்றும் குழலினார் என்போல் உறுவரோ அவனைஎன்கின்றாள்
தருங்களி உண்டாள் போல்கின்றாள் நாணும் தவிர்க்கின்றாள் என்அருந் தவளே. ...6

3002 - மன்றிடை நடிக்கும் மணாளனை அல்லால் மதிப்பனோ பிறரைஎன்கின்றாள்
வன்துயர் நீக்கும் அவன்திரு வடிவை மறப்பனோ கணமும்என் கின்றாள்
ஒன்றுமில் லவன்என் றுரைக்கினும் எல்லாம் உடையவன்ஆகும்என்கின்றாள்
பொன்றுதல் பிறழ்தல் இனியுறேன் என்றே பொற்றொடி பொங்குகின்றாளே. ...7

3003 - திருத்தகு தில்லைத் திருச்சிற்றம்பலத்தே தெய்வம்ஒன் றுண்டெமக்கென்பாள்
பெருத்தகுங் குமப்பொற் கலசவாண் முலையார் பேசுக பலபல என்பாள்
மருத்தகு குழலாள் மனமொழி உடலம் மற்றவும் அவன்கழற் கென்பாள்
குருத்தகு குவளைக் கண்ணின்நீர் கொழிப்பாள் குதுகுலிப் பாள்பசுங் கொடியே. ...8

3004 - அம்பலத் தாடும் அழகனைக் காணா தருந்தவும் பொருந்துமோ என்பாள்
கம்பமுற் றிடுவாள் கண்கள்நீர் உகுப்பாள் கைகுவிப் பாள்உளங் கனிவாள்
வம்பணி முலைகள் இரண்டும்நோக் கிடுவாள் வள்ளலைப்பரிகிலீர் என்பாள்
உம்பரன் தவஞ்செய் திடுமினீர் என்பாள் உயங்குவாள் மயங்குவாள் உணர்வே. ...9
திருச்சிற்றம்பலம்

----------------------------

37. சல்லாப லகரி (3005 - 3006)


- கலிநிலைத்துறை (182)


3005 - சுந்தர நீறணி சுந்தரர் நடனத் தொழில்வல்லார்
வந்தனர் இங்கே வந்தனம் என்றேன் மாதேநீ
மந்தணம் இதுகேள் அந்தனம் இலநம் வாழ்வெல்லாம்
அந்தரம் என்றார் என்னடி அம்மா அவர்சூதே. ...1

3006 - நம்பல மாம்என நன்மனை புக்கார் நடராஜர்
எம்பல மாவீர் எம்பெரு மானீ ரேஎன்றேன்
வம்பல மடவாய் எம்முடை இன்ப வாழ்வெல்லாம்
அம்பலம் என்றார் என்னடி அம்மா அவர்சூதே. ...2
திருச்சிற்றம்பலம்
___________________________________________________________________________

182. கலிச்சந்த விருத்தம். தொ. வே. 1, 2. ச. மு. க. கலிநிலைத்துறை. ஆ. பா.
---------------------

38. தலைமகளின் முன்ன முடிபு (3007 - 3016)


- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


3007 - வெறுத்துரைத்தேன் பிழைகளெலாம் பொறுத்தருளல் வேண்டும்
விளங்கறிவுக் கறிவாகி மெய்ப்பொதுவில் நடிப்போய்
கறுத்துரைத்தார் தமக்கும்அருள் கனிந்துரைக்கும் பெரிய
கருணைநெடுங் கடலேமுக் கண்ணோங்கு கரும்பே
மறுத்துரைப்ப தெவன்அருள்நீ வழங்குகினும் அன்றி
மறுத்திடினும் உன்னையலால் மற்றொருசார் பறியேன்
செறுத்துரைத்த உரைகளெலாம் திருவருளே என்று
சிந்திப்ப தல்லாமல் செய்வகைஒன் றிலனே. ...1

3008 - மிகுத்துரைத்தேன் பிழைகளெலாம் சகித்தருளல் வேண்டும்
மெய்யறிவின் புருவாகி வியன்பொதுவில் நடிப்போய்
தொகுத்துரைத்த மறைகளும்பின் விரித்துரைத்தும் காணாத்
துரியநடு வேஇருந்த பெரியபரம் பொருளே
பகுத்துரைத்த பயன்உரைக்கோர் பொருளாகி விளங்கும்
பரஞ்சுடரே பரம்பரனே பசுபதியே அடியேன்
வகுத்துரைப்ப தெவன்அருள்நீ வழங்குகினும் அன்றி
மறுத்திடினும் உன்னையலால் மற்றொருசார் பிலனே. ..2

3009 - முன்னவனே சிறியேன்நான் சிறிதும்அறி யாதே
முனிந்துரைத்த பிழைபொறுத்துக் கனிந்தருளல் வேண்டும்
என்னவனே என்துணையே என்உறவே என்னை
ஈன்றவனே என்தாயே என்குருவே எனது
மன்னவனே என்னுடைய வாழ்முதலே என்கண்
மாமணியே மணிமிடற்றோர் மாணிக்க மலையே
அன்னவனே அம்பலத்துள் ஆடுகின்ற அமுதே
ஆறணிந்த சடையாய்யான் வேறுதுணை இலனே. . ..3

3010 - சினந்துரைத்தேன் பிழைகளெலாம் மனம்பொறுத்தல் வேண்டும்
தீனதயா நிதியேமெய்ஞ் ஞானசபா பதியே
புனைந்துரைப்பார் அகத்தொன்றும் புறத்தொன்றும் நினைத்தே
பொய்யுலகர் ஆங்கவர்போல் புனைந்துரைத்தேன் அலன்நான்
இனந்திருந்தி எனையாட்கொண் டென்னுள்அமர்ந் தெனைத்தான்
எவ்வுலகும் தொழநிலைமேல் ஏற்றியசற் குருவே
கனந்தருசிற் சுகஅமுதம் களித்தளித்த நிறைவே
கருணைநடத் தரசேஎன் கண்ணிலங்கு மணியே. ...4

3011 - ஊடுதற்கோர் இடங்காணேன் உவக்கும்இடம் உளதோ
உன்னிடமும் என்னிடமும் ஓர்இடம்ஆ தலினால்
வாடுதற்கு நேர்ந்திடிலோ மாட்டாமை யாலும்
மனம்பிடியா மையினாலும் சினந்துரைத்தேன் சிலவே
கூடுதற்கு வல்லவன்நீ கூட்டிஎனைக் கொண்டே
குலம்பேச வேண்டாம்என் குறிப்பனைத்தும் அறிந்தாய்
நாடுதற்கிங் கென்னாலே முடியாது நீயே
நாடுவித்துக் கொண்டருள்வாய் ஞானசபா பதியே. ...5

3012 - என்னுளம்நீ கலந்துகொண்டாய் உன்னுளம்நான் கலந்தேன்
என்செயல்உன் செயல்உன்றன் இருஞ்செயல்என் செயலே
பின்னுளநான் பிதற்றல்எலாம் வேறுகுறித் தெனைநீ
பிழைஏற்ற நினைத்திடிலோ பெருவழக்கிட் டிடுவேன்
அன்னையினும் தயவுடையாய் அப்பன்எனக் கானாய்
அன்றியும்என் ஆருயிருக் காருயிராய் நிறைந்தாய்
மன்னுமணிப் பொதுநடஞ்செய் மன்னவனே கருணை
மாநிதியே எனக்கருள்வாய் மனக்கலக்கந் தவிர்த்தே. ...6

3013 - எணங்குறியேன் இயல்குறியேன் ஏதுநினை யாதே
என்பாட்டுக் கிருந்தேன்இங் கெனைவலிந்து நீயே
மணங்குறித்துக் கொண்டாய்நீ கொண்டதுதொட் டெனது
மனம்வேறு பட்டதிலை மாட்டாமை யாலே
கணங்குறித்துச் சிலபுகன்றேன் புகன்றமொழி எனது
கருத்தில்இலை உன்னுடைய கருத்தில்உண்டோ உண்டேல்
குணங்குறிப்பான் குற்றம்ஒன்றுங் குறியான்என் றறவோர்
கூறிடும்அவ் வார்த்தைஇன்று மாறிடுமே அரசே. ...7

3014 - மனம்பிடியா மையினாலோ மாட்டாமை யாலோ
மறதியினா லோஎனது வருத்தமத னாலோ
தினம்பிடியா மயக்காலோ திகைப்பாலோ பிறர்மேல்
சினத்தாலோ எதனாலோ சிலபுகன்றேன் இதனைச்
சினம்பிடியாத் தேவர்திரு வுளம்பிடியா தெனவே
சிந்தைகளித் திருக்கின்றேன் திருவுளத்தை அறியேன்
இனம்பிடியா மையும்உண்டோ உண்டெனில்அன் புடையார்
ஏசல்புகழ் பேசல்என இயம்புதல்என் உலகே. ...8

3015 - நாயகரே உமதுவசம் நான்இருக்கின் றதுபோல்
நாடியதத் துவத்தோழி நங்கையர்என் வசத்தே
மேயவர்ஆ காமையினால் அவர்மேல்அங் கெழுந்த
வெகுளியினால் சிலபுகன்றேன் வேறுநினைத் தறியேன்
தூயவரே வெறுப்புவரில் விதிவெறுக்க என்றார்
சூழவிதித் தாரைவெறுத் திடுதல்அவர் துணிவே
தீயவர்ஆ யினும்குற்றம் குறியாது புகன்றால்
தீமொழிஅன் றெனத்தேவர் செப்பியதும் உளதே. ...9

3016 - குற்றம்ஒரு சிறிதெனினும் குறித்தறியேன் வேறோர்
குறைஅதனால் சிலபுகன்றேன் குறித்தறியேன் மீட்டும்
சற்றுமனம் வேறுபட்ட தில்லைகண்டீர் எனது
சாமிஉம்மேல் ஆணைஒரு சதுரும்நினைத் தறியேன்
பெற்றவளும் உற்றவரும் சுற்றமும்நீர் என்றே
பிடித்திருக்கின் றேன்பிறிதோர் வெடிப்பும்உரைத் தறியேன்
இற்றைதொடுத் தென்அளவில் வேறுநினை யாதீர்
என்னுடைய நாயகரே என்ஆசை இதுவே. ...10
திருச்சிற்றம்பலம்

----------------------

39. வேட்கைக் கொத்து (3017 - 3026)


- தலைமகள் பாங்கியொடு கூறல்

- எண்சீர்க் கழிநெடிலடிச் சந்த விருத்தம்


3017 - விண்படைத்த பொழிற்றில்லை(183) அம்பலத்தான் எவர்க்கும்
மேலானான் அன்பருளம் மேவுநட ராஜன்
பண்படைத்த எனைஅறியா இளம்பருவந் தனிலே
பரிந்துவந்து மாலையிட்டான் பார்த்தறியான் மீட்டும்
பெண்படைத்த பெண்களெல்லாம் அவமதித்தே வலது
பேசுகின்றார் கூசுகின்றேன் பிச்சிஎனல் ஆனேன்
கண்படைத்தும் குழியில்விழக் கணக்கும்உண்டோ அவன்றன்
கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ. ...1

3018 - சீத்தமணி அம்பலத்தான் என்பிராண நாதன்
சிவபெருமான் எம்பெருமான் செல்வநட ராஜன்
வாய்த்தஎன்னை அறியாத இளம்பருவந் தனிலே
மகிழ்ந்துவந்து மாலையிட்டான் மறித்தும்முகம் பாரான்
ஆய்த்தகலை கற்றுணர்ந்த அணங்கனையார் தமக்குள்
ஆர்செய்த போதனையோ ஆனாலும் இதுகேள்
காய்த்தமரம் வளையாத கணக்கும்உண்டோ அவன்றன்
கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ. ...2

3019 - என்னுயிரில் கலந்துகலந் தினிக்கின்ற பெருமான்
என்இறைவன் பொதுவில்நடம் இயற்றும்நட ராஜன்
தன்னைஅறி யாப்பருவத் தென்னைமணம் புரிந்தான்
தனைஅறிந்த பருவத்தே எனைஅறிய விரும்பான்
பின்னைஅன்றி முன்னும்ஒரு பிழைபுரிந்தேன் இல்லை
பெண்பரிதா பங்காணல் பெருந்தகைக்கும் அழகோ
கன்னல்என்றால் கைக்கின்ற கணக்கும்உண்டோ அவன்றன்
கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ. ...3

3020 - தெருளமுதத் தனியோகர் சிந்தையிலும் ஞானச்
செல்வர்அறி விடத்தும்நடஞ் செய்யும்நட ராஜன்
அருளமுதம் அளிப்பன்என்றே அன்றுமணம் புணர்ந்தான்
அளித்தறியான் அணுத்துணையும் அனுபவித்தும் அறியேன்
மருளுடையான் அல்லன்ஒரு வஞ்சகனும் அல்லன்
மனம்இரக்கம் மிகஉடையான் வல்வினையேன் அளவில்
இருளுடையார் போலிருக்கும் இயல்பென்னை அவன்றன்
இயல்பறிந்தும் விடுவேனோ இனித்தான்என் தோழீ. ...4

3021 - சின்மயமாம் பொதுவினிலே தன்மயமாய் நின்று
திருநடஞ்செய் பெருங்ருணைச் செல்வநட ராஜன்
என்மயம்நான் அறியாத இளம்பருவந் தனிலே
என்னைமணம் புரிந்தனன்ஈ தெல்லாரும் அறிவார்
இன்மயம்இல் லாதவர்போல் இன்றுமணந் தருளான்
இறைஅளவும் பிழைபுரிந்தேன் இல்லைஅவன் இதயம்
கன்மயமோ அன்றுசுவைக் கனிமயமே என்னும்
கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ. ...5

3022 - என்குணத்தான் எல்லார்க்கும் இறைவன்எல்லாம் வல்லான்
என்அகத்தும் புறத்தும்உளான் இன்பநட ராஜன்
பெண்குணத்தை அறியாத இளம்பருவந் தனிலே
பிச்சேற்றி மணம்புரிந்தான் பெரிதுகளித் திருந்தேன்
வண்குணத்தால் அனுபவம்நான் அறியநின்ற பொழுதில்
வந்தறியான் இன்பம்ஒன்றும் தந்தறியான் அவனும்
வெண்குணத்தான் அல்லன்மிகு நல்லன்எனப் பலகால்
விழித்தறிந்தும் விடுவேனோ விளம்பாய்என் தோழீ. ...6

3023 - பொய்யாத புகழுடையான் பொதுவில்நடம் புரிவான்
புண்ணியர்பால் நண்ணியநற் புனிதநட ராஜன்
கொய்யாத அரும்பனைய இளம்பருவந் தனிலே
குறித்துமணம் புரிந்தனன்நான் மறித்தும்வரக் காணேன்
செய்யாத செய்கைஒன்றும் செய்தறியேன் சிறிதும்
திருவுளமே அறியும்மற்றென் ஒருஉளத்தின் செயல்கள்
நையாத என்றன்உயிர் நாதன்அருட் பெருமை
நானறிந்தும் விடுவேனோ நவிலாய்என் தோழீ. ...7

3024 - கண்ணனையான் என்னுயிரில் கலந்துநின்ற கணவன்
கணக்கறிவான் பிணக்கறியான் கருணைநட ராஜன்
தண்ணனையாம் இளம்பருவந் தன்னில்எனைத் தனித்துத்
தானேவந் தருள்புரிந்து தனிமாலை புனைந்தான்
பெண்ணனையார் கண்டபடி பேசவும்நான் கூசாப்
பெருமையொடும் இருந்தேன்என் அருமைஎலாம் அறிந்தான்
உண்ணனையா வகைவரவு தாழ்த்தனன்இன் றவன்றன்
உளம்அறிந்தும் விடுவேனோ உரையாய்என் தோழீ. ...8

3025 - ஊன்மறந்த உயிரகத்தே ஒளிநிறைந்த ஒருவன்
உலகமெலாம் உடையவன்என் னுடையநட ராஜன்
பான்மறந்த சிறியஇனம் பருவமதின் மாலைப்
பரிந்தணிந்தான் தெரிந்ததனிப் பருவமிதிற் பரியான்
தான்மறந்தான் எனினும்இங்கு நான்மறக்க மாட்டேன்
தவத்தேறி அவத்திழியச் சம்மதமும் வருமோ
கோன்மறந்த குடியேபோல் மிடியேன்நான் அவன்றன்
குணம்அறிந்தும் விடுவேனோ கூறாய்என் தோழீ. ...9

3026 - தனித்தபர நாதமுடித் தலத்தின்மிசைத் தலத்தே
தலைவரெலாம் வணங்கநின்ற தலைவன்நட ராசன்
இனித்தசுகம் அறிந்துகொளா இளம்பருவந் தனிலே
என்புருவ நடுஇருந்தான் பின்புகண்டேன் இல்லை
அனித்தம்இலா இச்சரிதம் யார்க்குரைப்பேன் அந்தோ
அவன்அறிவான் நான்அறிவேன் அயலறிவார் உளரோ
துனித்தநிலை விடுத்தொருகால் சுத்தநிலை அதனில்
சுகங்கண்டும் விடுவேனோ சொல்லாய்என் தோழீ. ...10
திருச்சிற்றம்பலம்
-----------------

183. இறுக்கம் இரத்தின முதலியார்க்கு 26-11-1866 இல் வரைந்த திருமுகத்தில் ' விண்படைத்த பொழிற்றில்லை அம்பலத்தான் எவர்க்கு மேலானா னன்பருள மேவு நடராஜன் எனல் வேண்டும் ' என வள்ளற்பெருமான் திருத்தமொன்றை அருளியுள்ளார். திரு அருட்பா உரைநடைப்பகுதி, ஊரன் அடிகள் பதிப்பு பக்கம், 399 காண்க. எனினும் 1867 தொ. வே. முதற் பதிப்பில் ' விண்படைத்த புகழ்த்தில்லை ' என்றே அச்சாகியுள்ளது. பின்வந்த பதிப்புகளிலும் அவ்வாறே. ஆ. பா. மட்டும் பெருமானின் திருத்தத்தைப் பின்பற்றி ' விண் படைத்த பொழிற்றில்லை ' எனப் பதிப்பித்துள்ளார்.
----------------------------

40. அறநிலை விளக்கம் (3027)


- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


3027 - மருவாணைப் பெண்ணாக்கி ஒருகணத்தில் கண்விழித்து வயங்கும் அப்பெண்
உருவாணை உருவாக்கி இறந்தவரை எழுப்புகின்ற உறுவ னேனும்
கருவாணை யுறஇரங்கா துயிருடம்பைக் கடிந்துண்ணுங் கருத்த னேல்எங்
குருவாணை எமதுசிவக் கொழுந்தாணை ஞானிஎனக் கூறொ ணாதே.(184) ...1
திருச்சிற்றம்பலம்
____________________________________________________________________________

184. இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகமொன்றின் தொடக்கத்தில் பெருமான் இப்பாடலை எழுதியருளியுள்ளார். திரு அருட்பா உரைநடைப்பகுதி, ஊரான் அடிகள் பதிப்பு, பக்கம் 385 காண்க.
-------

41. அருள்நிலை விளக்கம் (3028)


- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


3028 - மெய்விளக்கே விளக்கல்லால் வேறுவிளக் கில்லைஎன்றார் மேலோர் நானும்
பொய்விளக்கே விளக்கெனஉட் பொங்கிவழி கின்றேன்ஓர் புதுமை அன்றே
செய்விளக்கும் புகழுடைய சென்னநகர் நண்பர்களே செப்பக் கேளீர்
நெய்விளக்கே போன்றொருதண் ணீர்விளக்கும் எரிந்ததுசந் நிதியின் முன்னே.(185) ...1
திருச்சிற்றம்பலம்
____________________________________________________________________________

185. கருங்குழியில் பெருமான் திருவறையில் தண்ணீரால் விளக்கெரிந்த அற்புதத்தைக் குறிக்கும் இப்பாடல் பெருமான் சென்னை நண்பர்களுக்கு எழுதிய திருமுகமொன்றன்பாற்பட்டது போலும். பெருமான் கையெழுத்திலுள்ள ஏட்டுச் சுவடியொன்றிலும் காணப்படுவதாக ஆ. பா. குறிக்கிறார். தொ. வே. இதனையும் ' மருவாணைப் பெண்ணாக்கி' என்னும் பாடலையும் இரண்டாந் திருமுறையில் சேர்த்துப் பதிப்பித்துள்ளார்.

அடிக்குறிப்புகளில் காணப்படும் பதிப்பாசிரியர்களின் பெயர்ச் சுருக்க விரிவு

1. தொ.வே --- தொழுவூர் வேலாயுத முதலியார்
2. ஆ.பா --- ஆ.பாலகிருஷ்ண பிள்ளை
3. ச.மு.க --- ச.மு.கந்தசாமி பிள்ளை
4. பி. இரா --- பிருங்கிமாநகரம் இராமசாமி முதலியார்
5. பொ.சு --- பொன்னேரி சுந்தரம் பிள்ளை

நான்காம் திருமுறை முற்றிற்று



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை III