Pērūrp purāṇam II


சைவ சமய நூல்கள்

Back

பேரூர்ப் புராணம் II
கச்சியப்ப சிவாச்சாரியார்



சீலத்திரு கச்சியப்ப முனிவர் அருளிய
"பேரூர்ப் புராணம்" - பாகம் 2


10. தென்கயிலாயப் படலம் 628-702

11. வடகயிலாயப் படலம் 703-745

12 நிருத்தப்படலம்746-883

13. அபயப்படலம் 884-923

14. மருதவரைப்படலம் 924-1070

15. சுமதி கதிபெறு படலம் 1071- 1134

16. முசுகுந்தன் முகம்பெறு படலம் 1135 -1188

17. இந்திரன் சாபந்தீர்ந்த படலம் 1189-1214

18. கரிகாற்சோழன் கொலைப்பழி தீர்ந்த படலம்1215-1276

    10. தென்கயிலாயப் படலம் (628-702)




    628 - கள்ளிவர் நீல மலர்ந்து விரைத்த கழிச்சூழல்
    துள்ளிய வாளை விழுந்து களச்சொரி செந்தேனால்
    பள்ளம டைப்பணை பைம்பொழில் சூழ்ந்து பரிந்தோம்பும்
    வள்ளிய கீழைச் சிதம்பர மென்றொரு வைப்புண்டால். - 1



    629 - ஆரண மின்னு மளந்திது வென்றறி யாதெய்க்கும்
    பூரணன் மேலைச் சிதம்பர வைப்பது போலென்றும்
    வாரண வுந்தன மாதுமை காண மகிழ்ந்தாடு
    நேரண வுந்தவ ரல்லது காண நிகழ்ந்தானால். - 2



    630 - அத்தகு மாநட னந்தரி சிப்ப வருட்டாதை
    உத்தம னேவ வியாக்கிர பாத னுவந்தேகிப்
    பத்தியினால்வழி பாடுகள் செய்து பயின்றியோகின்
    வைத்த கருத்தொடு வைகினன் வைகிய காலத்து - 3



    631 - தாரு வனத்தினர் கொள்கை தெரிந்து தடுத்தாள
    வாரு மதிக்கணி யுஞ்சடை வேய்ந்தழ லூடாடுங்
    காரு மலைத்த களத்தர் பயிக்க வுருக்கொண்டார்
    வாரு மலைத்தெழு பூண்முலை மாதுரு மால்கொண்டான். - 4



    632 - வழிய தாரு வனத்திடை மற்றிரு வோருஞ்சென்
    றாழியி னான்முனி வோர்நிறை சிந்த வருட்செல்வன்
    தாழிரு ளோதியி னார்நிறை கொண்டு தவத்தோர்கள்
    பாழிய னைத்து மறுத்தவ ணாடல் பயின்றானே. - 5



    633 - ஆங்குட னின்றரு ளாடல் வணங்கிய மாலன்று
    வீங்கிய வல்லிரு ணீங்கிய காலை விழிக்கின்றான்
    பூங்கணு கப்புனன் மெய்முழு தும்புள கம்போர்ப்பத்
    தாங்கிய வன்பொடு சங்கர சங்கர வென்றார்த்தான். - 6



    634 - அச்சுத கந்த னினுங்குளிர் சேட னடுத்தேத்தி
    அச்சுத மிட்ட வருச்சியி னான்விழி யான்முன்னாள்
    அச்சுதன் வெந்தவி ஞான்று மயர்த்திலை யிக்காலத்
    தச்சுத வென்கொ லயர்த்தனை யென்று வினாயன்னான். - 7



    635 - மாதவர் சிந்தை மயக்க மறுத்து மகிழ்ந்தாடல்
    நாத னவின்றது மற்று முரைப்ப நடங்காண
    ஆதர வுற்றருள் பெற்றொளிர் மேரு வடுத்தன்பால்
    காதர மோட வருந்தவ முண்டிகை விட்டாற்றி. - 8



    636 -
    கானமர் கொன்றையி னாரெதிர் போந்து கருத்தோர்ந்து
    தேனமர் தில்லை வனம்புகு மாறுசெப் பிப்போத
    வான மரத்திரி வாழன சூயை மருங்கன்று
    தானமர் வுற்ற பதஞ்சலி யாய்த்தன தூர்நண்ணி. - 9



    637 - சில்பக லங்க ணிருந்து திகழ்ந்த பிலத்தூடு
    பல்பக னீங்க விவர்ந்து வியாக்கிர பாதன்சேர்ந்
    தல்பக லுந்தொழு தில்லை யடுத்தனை யானீயிங்
    கொல்பக னற்பக லென்று களிப்ப வுடங்கண்மி. - 10



    638 - பொன்னொடு பூசம் வரக்கதி ரோனடு வான்புல்ல
    மின்னொளிர் மன்றின் விளங்கிழை காண விடைப்பாகன்
    நன்னட மாட நயந்து பணிந்து நலங்கொண்டு
    மன்னி யிருந்தன னாடொறு மாடன் மகிழ்ந்தேத்தி. - 11



    639 - வேறு
    ஆய காலை யாழிப் பாயலான்
    போய சேடன் புரிவ தென்னெனத்
    தூய நெஞ்சிற் சூழு மெல்லையின்
    மேய வீணை முனிவன் விள்ளுவான். - 12



    640 - மேரு மாட்டு மேவி மாதவ
    மாரு மாற்றற் கரிய தாற்றினான்
    ஓரு மீச னுருவு வேறுகொண்
    டீரு னார்வ மென்று பேதித்தான். - 13



    641 - உறுதி நோக்கி யுமையொர் பாகனாய்
    மறுவி லாத வாய்மை கூறுபு
    நிறுவு தில்லை நிருத்தங் காட்டிடச்
    சிறுமை நீங்கிச் சேவை செய்யுமால். - 14



    642 - இனைய வண்ண மியம்ப நாரதன்
    வனைது ழாயின் மௌளலி வானவன்
    அனைய னாயி னான்கொல் சேடனென்
    றனையன் னான தருளை முன்னினான். - 15



    643 - ஈங்கி ருந்திட் டென்னை யெய்தினேன்
    ஆங்க வன்ற னோட டுத்துநான்
    பாங்கி னோற்பிற் பரத மற்றெனை
    நீங்க வீச னிகழ்த்து மேகொலாம். - 16



    644 - ஏற தாக வேறி னானுருக்
    கூறு மாகக் கொள்ள கில்லனோ
    ஆறு சூடி யாடல் காண்பலென்
    றூறு மன்பி னொய்யென் றேகினான். - 17



    645 - வேறு
    பொற்கோட் டிமய வரைப்புறத்துப் பொலிந்த கயிலை வரையடுத்துச்
    சொற்கோட் டமுமெள வியவுளமுந் துறந்த வடியார் தொழுமேரு
    விற்கோட் டியகைப் பெருமானை விரையார் மலர்தூஉய் மணியிமைக்குங்
    கற்கோட் டிமிலேற் றின்னிரைகள் காப்ப வெடுத்தோ னிறைஞ்சினான், - 18



    646 - வேறு
    எழுந்துவலம் வந்தன னிருந்துதி விளைத்தான்
    கொழுந்துமதி வேய்ந்தகுழ காகுறு வார்கட்
    கழுந்துபடு வன்பிறவி யாழிகரை யேற்ற
    முழுந்துருளு முன்னுதவு மும்பர்பெரு மானே. - 19



    647 - வீமதிரி யம்பக விடங்கமல நாச
    வாமமக லாதவுமை மாதுமண வாள
    தாமமணி வேணிசசி கண்டவிட முண்ட
    சேமமணி கண்டசிவ லோகவடி போற்றி. - 20



    648 - புராதன நிராமய புரங்கள்பொடி செய்த
    தராதல நெடுஞ்சகட சங்கர சயம்பு
    கராசல வுரிக்கவய கச்சப வுரத்த
    அராவணி புயத்தவடி கேளடிகள் போற்றி. - 21



    649 - வாதுபுரி காளியை வணக்கிய நடத்த
    தீதுபுரி சண்டனுயிர் செற்றதிறா லாள
    போதுபுரி கொன்றைபுனல் புல்லறுகு வன்னை
    தாதுபுரி மத்தமிலை யுந்தலைவ போற்றி - 22



    650 - வேறு
    ஒருமுறை போற்றி யொன்ப தோடொரு முறைமை போற்றி
    தருசத முறைமை போற்றி சகத்திர முறைமை போற்றி
    வருமுறை யயுத நூறா யிரமுறை மலர்த்தாள் போற்றி
    குருபர கோடி கோடி கோடியி னளவும் போற்றி. . - 23



    651 - ஐயபொற் சடிலம் போற்றி யருள்பொழி கடைக்கண் போற்றி
    செய்யபங் கயங்கள் வென்ற திருமுகப் பொலிவு போற்றி
    பையர விணையாக் கொண்ட படர்செவிக் குழைகள் போற்றி
    கையமர் படைகள் போற்றி காலினூ புரங்கள் போற்றி. - 24



    652 - வரிப்புறத் தும்பி பாடு மதுமலர்க் கொன்றை மாலை
    எரிப்புறங் கண்ட வேணி யிசைத்தவ நின்முன் போற்றி
    வெரிப்புறம் போற்றி பக்க மேலொடு கீழும் போற்றி
    தெரிப்புறக் கொண்ட கோலத் திறமெலாம் போற்றி யென்னா. - 25



    653 -
    துதிபல விளைத்துத் தானைத் தொக்கிரு காலு ளாக்கி
    விதியுளி குடந்தம் பட்ட விண்டுவை யிறைவன் கூவி
    முதிருமன் புடையை யென்னா முதுகிடைக் கொம்மை கொட்டி
    மதியிடை வேட்ட தென்னே வழங்கென வழங்கு மாயன். - 26



    654 - கண்ணடி மிளிரக் கொண்டாய் கங்காளந் தோளிற் கொண்டாய்
    வண்ணவென் பிறப்பிற் கோடு மருப்புரி பலவுங் கொண்டாய்
    பெண்ணென வணைத்துக் கொண்டாய் பேமதிற் கணையாக் கொண்டாய்
    திண்ணிய விமிலே றாகத் திருவுள மகிழ்ந்து கொண்டாய். - 27



    655 - முழுதுல களிக்கு மாற்றன் முன்னெனக் கீந்தாய் பின்னர்
    விழுமிய படைக ளீந்தாய் வியத்தகு புதல்வ ரீந்தாய்
    கழுமணி யனைய மெய்யிற் காமரு வலப்பா லீந்தாய்
    வழுவுறு முனிவர் தாரு வனத்திடை நடன மீந்தாய். - 28



    656 - நின்னருட் கிலக்க மாக நின்மல நீயிவ் வாறென்
    தன்னையு மடிமை கொண்ட தாயத்தாற் புலியும் பாம்பும்
    நன்னல மெய்தத் தில்லை நகர்வயிற் குயிற்றா நின்ற
    மன்னரு ணடமு மின்னே வழங்குவா யென்று போந்தேன். - 29



    657 - அருந்தவம் பெரிது மாற்று மடுபுலித் தாள னோடும்
    வருந்திமெய் யரிதி னோற்ற வாளராத் தலைவ னோடும்
    இருந்துநின் னடனம் போற்ற விருந்தவஞ் செய்தே னல்லேன்
    திருந்திய வுலக வாழ்விற் சிக்கயாப் புண்டே னெந்தாய். - 30



    658 - ஒருவர்தம் பொருட்டு மேலை யுஞற்றுத லுளதே லன்று
    திருநடங் காண்பே னென்னிற் சிந்தையு மமைந்த தில்லை
    மருவிய வுடல முன்னே மாய்தலு முளதா மற்றால்
    பொருவிலி நடனங் காட்டப் புரிதக வென்று தாழ்ந்தான். - 31



    659 - அருள்பொழி முறுவல் சற்றே யரும்பியா லால மாந்தி
    இருள்பொழி மிடற்றுத் தேவன் வெயில்பொழி திகிரி யேவி
    மருள்பொழி சிஞ்சு மாரம் வெளவிய வும்பல் காத்தோன்
    தெருள்பொழி யுள்ளத் தார்வந் திருவுளஞ் செய்து சாற்றும். - 32



    660 - வேறு
    பதஞ்சலி வியாக்கிர பாத ரென்பவர்
    இதஞ்சலி யாதுசெய் திடவ வர்க்குநாம்
    சிதம்பர நகர்வயிற் செய்யுந் தாண்டவம்
    சுதந்திர மாக்கினாம் பிறர்க்குத் துச்சிலாம். - 33



    661 - மனைபடைக் கலமணி வாக னங்களாய்க்
    கனைகதி ரெமதுருக் கலப்பு மாகிய
    நினையவ ணாடக நிகழ்த்திக் காட்டுறின்
    முனைவனா நமக்கது முறைமை யன்றுகாண். - 34



    662 - குணதிசைச் சிதம்பரங் குடவ ளைக்கையாய்
    மணமலி தில்லையங் கான மாதவந்
    திணிதரு குடதிசைச் சிதம்ப ரந்தவர்
    அணிபுரிந் திறைஞ்சிச்சூ ழச்சு வத்தகான். - 35



    663 - தெள்ளொளிக் கனகமன் றிணர்த்த தில்லையுள்
    ஒள்ளிய நமதரு ளுருவின் வண்ணமாம்
    வெள்ளியம் பலம்விரி போதிக்காட்டினுள்
    வள்ளிய வெமதுரு வண்ண மாகுமால். - 36



    664 - அல்லதூஉ மெவற்றினு மதிக நீரது
    நல்லொளி நமதுபா லத்து நண்ணுபு
    வில்லுடைக் காமனை விளிப்ப மேக்குநீண்
    டெல்லுமிழ் விழிவிழித் திடமண் வீழ்ந்ததே. - 37



    665 - வீழ்ந்தது வெள்ளியாய் விளைந்த தாதலின்
    போழ்ந்திருள் பொரித்தொளிர் மணிபொன் னேனவுந்
    தாழ்ந்தன மேன்மையிற் றகவு யர்ந்ததாற்
    சூழ்ந்தவ ருள்ளமுந் துலக்கும் வெள்ளியே. - 38



    666 - மணிவரை பொன்வரை மண்ணி யிருந்துநாந்
    தணிவறு காதலிற் றவள வெள்ளிவெற்
    பணிவளர் கோயில்கொண் டமர்ந்த வண்ணமுந்
    துணிவுறு மதனுடைத் தூய்மைத் தோற்றத்தால். - 39



    667 - அரதன மன்றினு மம்பொன் மன்றினும்
    விரவிய மகிழ்வினு மகிழ்ச்சி மிக்கதாம்
    இரசத மன்றின்மற் றெமக்கெஞ் ஞான்றுமே
    புரவுகொண் டயன்றனைப் பூத்த வுந்தியோய். - 40



    668 - அடிமையர் பலருளு மன்பு மிக்குறும்
    அடிமையை யாதலி னவரெ லாரினும்
    நெடியவ வுரிமையை நினக்கெ னக்குறி
    நெடிதுசெ யதனிடை நிருத்தங் காட்டுதும். - 41



    669 - வாதுசெய் தூர்த்ததாண் டவத்தின் வார்முலை
    மீதுகண் ணுறத்தலை வெள்கிச் சாய்த்தவள்
    கோதுகு மாநந்த நடமுங் கும்பிடத்
    தீதுகு மாதவஞ் செய்தி ருக்குமால். - 42



    670 - மூலவன் மலமற முருக்கி முத்திசேர்
    காலவ முனிவனுங் காமர் நாடக
    மேலவங் கினிதுறக் காணு மிச்சையிற்
    சாலவன் பியற்றுபு தங்கிப் போற்றுமால். - 43



    671 - வேறு
    இலங்குவிராட் புருடனுக்குக் குணதிசையிற் சிதம்பரந்தா னிதய மாகும்
    நலங்கிளருங் குடதிசையிற் சிதம்பரநா ரணனயனாங் கிழமை பூண்ட
    துலங்கிடைப்பிங் கலைசுழுனை மூன்றுமரி யயன்வரைகள் சுடரும் வெள்ளிப்
    புலங்கிளர்நம் வரைமூன்று மாய்விந்துத் தானமெனப் பொலிந்த தாகும். - 44



    672 - அன்னவிராட் புருடனுக்கங் கனவரத தாண்டவநா மாடிக் காட்டுந்
    தன்மையினா லெந்நாளு மிடையறா தொளிர்நாதந் தழங்கா நிற்கும்
    மன்னியமா தவர்கேட்பர் கேட்டவர்க்கு மாறாத வறிவா னந்தம்
    பன்னரிய முதன்மையுநித் தியமுமுறும் விகாரமுதற் பலவும் நீங்கும் - 45



    673 - அவ்வரைப்பி னெமைவழிபட் டசும்புமொளி யிரசதவம் பலத்தி னாடல்
    செவ்விபெறத் தரிசித்தோர் விந்துநா தந்தவிரத் திகழு ஞானத்
    தெவ்வமலி மலமூன்று மிரியவுயர் சிவபோக மினிது துய்ப்பர்
    இவ்வரநம் வரைமேலு மிரசதவம் பலங்காண்போ ரெய்து வாரால் - 46



    674 - மருத்துளரு மத்தகைய தென்கயிலை நமதுருவாய் வயங்கு மாற்றால்
    உருத்திரவெற் பெனும்பெயரு முறும்யோக வரையெனவு முரைப்பர் சான்றோர்
    திருத்தமுற நடம்பயின்று தெரித்துநடம் பயிற்றுவோர் செத்தெல் லோரும்
    கருத்தடங்கும் யோகுழப்ப நாமிருந்து தனியோகங் கைக்கொண் மாண்பால். - 47



    675 - விண்ணவரிற் சாத்தியரின் விஞ்சையரிற் கருடரிற்காந் தருவர் தம்மின்
    மண்ணவரிற் பலரங்கண் யோகுழந்து நற்கதியை மருவி னோர்கள்
    திண்ணமுற விப்பொழுதும் யோகுழப்போர் தமையெண்ணிற் றெரிக்கொணாதால்
    வண்ணமுறு மதன்பெருமை தெரிக்கலுறின் வானவர்க்கும் வாழ்நாள்போதா. - 48



    676 - ஆவயிற்சென் றெமைப்பூசை புரிந்தமரர் சுரபியுரித் தாத லானுங்
    கோவடிவின் வருமைந்துங் கொண்டெமது முடிக்காட்டுங் கொள்கை யானுந்
    தூவடிவி னானுருவாய்த் தோற்றியற மெமைப்பரிக்குந் தொடர்பி னானுந்
    தேவரனை வருமுறுப்பிற் செறிந்தபசு நமக்குவகை செய்வ தாகும். - 49



    677 - நீயுமொரு கோமுனியா யாங்கடுத்து நமைப்பூசை நிகழ்த்து கண்டாய்
    மாயிருவை யகம்வியப்பப் பொன்னுமிர வியுமீன மருவா நின்ற
    வேயுமொளிப் பூரணையுத் திரமாதி வாரமிவை யியைந்த வேலைப்
    பாயுமொளி யிரசதவம் பலத்தாடல் புரிதுமினிப் படர்க வென்றான். - 50



    678 - வேறு
    குறைமதி முடியினர் குறைதப
    அறைதலு மறைகழ லடிமலர்
    நிறைமதி நெடியவ னேருற
    முறைமுறை தொழுதனன் முன்னுவான். - 51



    679 - பூமுனி யாதுறை பொற்புடை
    மாமுனி வருமறு மாற்றினான்
    ஏமுனி முதலவி கந்தனன்
    கோமுனி யெனவுருக் கொண்டனன் - 52



    680 - பொற்கலை பூமி படுத்தனன்
    வற்கலை மான வுடுத்தனன்
    விற்கலின் மோலி விடுத்தனன்
    அற்கலில் வேணி யடுத்தனன் - 53



    681 - விரையொடு சாந்தம் வெறுத்தனன்
    புரைதபு பூதி பொருத்தனன்
    உரைகல னாதி யொறுத்தனன்
    சுரைபடு மக்கந் துறுத்தனன். - 54



    682 - அந்தியி னருண்மனு விண்டனன்
    குந்திய நடையடிக் கொண்டனன்
    கந்தியல் கயிலைமுன் கண்டனன்
    உந்திய வொலிசெவி யுண்டனன். - 55



    683 - பரவிய வரைவளம் பார்த்தனன்
    அரகர கரவென வார்த்தனன்
    விரவிய புளகமெய் போர்த்தனன்
    சிரமிரு கைத்தலஞ் சேர்த்தனன் - 56



    684 - தண்டென வடிவரை தாழ்ந்தனன்
    தொண்டுசெய் முறைபல சூழ்ந்தனன்
    மண்டிய வன்பிடை வாழ்ந்தனன்
    விண்டுவி னெஃகுதல் வீழ்ந்தனன் - 57



    685 - வேறு
    வருடையு மரைகளும் வழுவையு முழுவையும்
    எருமையு முளியமு மெறுழியுங் கவயமும்
    அரிணமும் புருடவன் மிருகமு மரிகளும்
    வெருண்மகண் மிருகமு மிடைசரி யொழுகினன். - 58



    686 - வருக்கையுங் கதலியும் வகுளமு மகருவுந்
    துருக்கமுந் திமிசுந்திந் திருணியுங் குடசமு
    முருக்கரை திலகமுந் திரிகைகுங் கிலியமும்
    நெருக்கிய சிறுநெறி நெடியவ னொழுனன். - 59



    687 - வெள்ளிலுஞ் சுள்ளியும் வில்லமு மில்லமும்
    கள்ளிவ ராண்களுங் கதமறு வேங்கையு
    மள்ளிலை யாரமு மலர்சொரி நாகமும்
    நள்ளிணர்ப் பொழில்பல நடைவயி னொருவினன் - 60



    688 - வஞ்சியர் நெஞ்சிவர் மஞ்சளு மிஞ்சியும்
    வஞ்சியுந் துஞ்சில வஞ்சில ழிஞ்சிலும்
    வஞ்சுள முஞ்செறி மஞ்சிவர் பஞ்சர
    வஞ்சமும் விஞ்சவ ருஞ்சலங் கொஞ்சினன். - 61



    689 - வேறு
    விண்ணோங்கிய பணைநின்றுகு வெண்ணித்தில மணியும்
    பண்ணோங்கிய வரிவண்டுளர் பனிமென்மல ரினமும்
    தண்ணோங்கிய திரையிற்கொடு தள்ளித்தவ வுரறி
    மண்ணோங்கிய தவழ்காஞ்சியை மகிழ்ந்தானதிற் படிந்தான். - 62



    690 - பனிநீர்மலர் விரைமென்கனி பலவுங்கர மருவிக்
    கனிநீர்மையி னுளமென்புகள் கரையப்புணர் விழியின்
    நனிநீர்மணி மருமத்துக நகநீண்முடி யேறித்
    தனிநீர்மையி னகலத்தலை வனதாண்மலர் தாழ்ந்தான். - 63



    691 - கண்ணார்தரு மணியைத்தவர் கருதுஞ்சுட ரொளியைப்
    பண்ணார்தரு பயனைக்கனி பழனார்தரு சுவையைத்
    தண்ணார்புன னிழலொத்தமர் தமியேன்பெரு வாழ்வை
    விண்ணார்தரு மமிழ்தத்தினை விதியால்வழி பட்டான். - 64



    692 - அமையாவுள மலமந்தவ ணரிதிற்பெயர் கிற்ப
    உமையாளையும் வழிபட்டவ ணொழிவுற்றுயர் சாரல்
    எமையாளவு மிமையோர்தொழ விறைவீற்றிருந் தருள்வார்
    தமையாலய முள்ளெய்துபு தாழ்ந்தான்விடை கொண்டான். - 65



    693 - அடர்வெள்ளியின் வேய்ந்தொள்ளொளி யசும்பித்தனி விசும்பின்
    இடமல்கிய பலவைப்பியு மெழில்வெண்ணிற மாக்கு
    நடமல்கிய வருண்மன்றமு நயனத்தெதிர் காணாத்
    தொடர்மல்கிய வன்பாற்றொழு தெழுந்தான்மலை யிழிந்தான். - 66



    694 - வேறு
    மாதிக் கானை தாங்கிய மண்ணுண் டவன்மாசு
    மோதிக் காம முற்றருள் காஞ்சி முதுகூலஞ்
    சோதிக் கான வன்பு துளும்பத் தொடர்வுற்றுப்
    67 - 67



    695 - மாதவ ரானும் வானவ ரானு மண்ணானு
    மீதவன் வண்ண மென்னவோ ணாத விறைமுன்னர்ச்
    சீதர னென்னுங் கோமுனி சென்று திருவார்ந்த
    பாத மிறைஞ்சிப் பன்முறை சூழ்ந்து பரிவுற்றான். - 68



    696 - துஞ்சுத லோடு முண்டி விடுத்துத் தொழுமந்நாள்
    எஞ்சிய காலைச் செய்கடன் முற்று மினிதாற்றி
    இஞ்சிகள் சூழ்ந்த வெம்பெரு மான்கோ யிலின்மாடே
    நெஞ்சுறு மன்பாற் றென்கயி லாய நிருமித்தான். - 69



    697 - தென்கயி லாய மிருத்துமி லிங்கச் சிவனாரை
    நன்கருள் சக்கர தீர்த்த மெனப்புவி நாடத்தான்
    தன்கயி னாங்கொரு தீர்த்தம கழ்ந்தத் தடநீரால்
    என்கட னாட்டுத னின்கடனாடுத லென்றாட்டி. - 70



    698 - தூசவிர் சாந்தந் தூமணி யாரஞ் சுடர்மோலி
    வாசநன் மாலை மற்று மணிந்து மறையோதி
    ஆசக லாறு தீஞ்சுவை யுண்டி யயில்வித்துத்
    தேசவிர் தீப மாதி யளித்துச் சேவித்தான். - 71



    699 - இன்னண நிச்சந் தென்கயி லாய மினிதேத்தி
    முன்னவ னாதி லிங்கமு மேத்தி முதிர்யோகந்
    தன்னினிலை கண்ட காலவ னோடுந் தவமாற்றி
    மன்னிய வெள்ளி மன்றும் வணங்கி வதிவுற்றான். - 72



    700 - கோமுனி பூசை கொண்டவர் தென்கயி லாயத்தைத்
    தாமுறை யேத்துந் தன்மையர் செல்வந் தகவாழ்ந்திங்
    கேமுறு மின்ன லெய்துத லின்றி யிமையாருங்
    காமுறு நன்சிவ லோக மணைந்து களிகூர்வார். - 73



    701 - நன்கயி லாய நன்னகர் முற்று நடுவைகுங்
    கொன்கயி லாய மாதிலிங் கத்தின் குடியென்று
    தென்கயி லாய மென்றுறு மாறுந் திருமார்பன்
    தன்கயி லாயக் கோயிலுக் கிட்டான் றனிநாமம். - 74



    702 - மாதவர் கல்லி னாக்கிய வள்ளன் மகிழ்கூர
    மாதவ ரன்பார் தென்கயி லாய மிதுவாஞ்சை
    மாதவ ரம்பு ளாம்வட பாலிற் கயிலாய
    மாதவர் கேண்மி னென்று வலித்தான் மகிழ்சூதன். - 75
    தென்கயிலாயப்படலம் முற்றிற்று.
    ஆகத் திருவிருத்தம் - 702
    -----------

    11. வடகயிலாயப் படலம் (703-745)




    703 - கொம்பே ரிடையாள் குடிகொண் மார்பன்
    வம்பார் தருபோ திவனம் வைகி
    நம்பா நடனந் தருக வென்னாப்
    பம்பா தரவிற் பணியு நாளில். - 1



    704 - வண்டா மரைமா மலரி ருக்கை
    கொண்டா னிடையே குறுகி மொய்த்த
    மிண்டா கியநித் திரைவி டுத்தான்
    கண்டான் கழுவிச் சுசிமு டித்தான். - 2



    705 - முன்போ லுலகாக் குதன்மு யன்றான்
    என்பார் மருமத் தவனி சைத்த
    வன்பார் மறையின் முறைம றப்பால்
    தன்பா லத்சார் விலது கண்டான் - 3



    706 - அந்தோ விதுவோ செயவ னந்தல்
    வந்தோ வியதென் றுளம தித்து
    நொந்தான் றொழினோன் மைகொள முந்தைத்
    தந்தா னவனே சரண மென்றான் - 4



    707 - எழுந்தா னிடையிற் கயிலை நண்ணிக்
    கொழுந்தோ டியவன் பினுளங் கொண்டு
    விழுந்தான் விமலே சர்சரண் மீது
    தொழுந்தோ றவர்தூ முறுவல் கொண்டார் - 5



    708 - சோகாந் தனையென் னிதுசொல் லென்று
    மாகாந் தன்வினா வமலர் வாணிக்
    கேகாந் தமதா னவெழி னாவன்
    காகாந் தியையென் றுகரை கிற்பான். - 6



    709 - வேறு
    கொடுவினிகொ டனுகரண புவனமொடு போகமிவை கூட்டி டுமுனம்
    அடுமல வயிற்றினுறை கின்றதென நித்திரை யகட்டின்மருவிப்
    படுமுணர் வயர்ந்துமறை வித்தையு மயர்ந்துபணி யான தொழிலும்
    விடுதிபெற வெற்றவுடல் போன்றுநினை யேசரண மேவுதல் செய்தேன். - 7



    710 - நல்வினை யியற்றுதலி னோடுகழி தீவினையு நண்ண வடியேன்
    தொல்வினை யுடற்கணுறு வித்தபரி சானினது சூழ ருளினால்
    ஒல்வினை முதற்றொழி லுஞற்றுநிய திப்பொழுதி னோங்கு துயிலாய்ப்
    புல்வினை யடுத்ததெனின் யானஃது போற்றும்வகை புல்லு றுவதோ. - 8



    711 - நின்னருளி னாலளிய னேன்பிழை பொறுத்துமறை நீதி யருளி
    நன்னருல கந்தமிய னேனினி துயிர்க்கும்வர நல்கு தியென
    முன்னவ னடித்தல முடித்தலைக டீட்டிமொழி மாது கணவன்
    பன்னரிய வன்பினுள நெக்குருக வின்றுதி பரப்புதல் செய்தான். - 9



    712 - இந்திரனு நந்தணி கரத்தவனு மந்தரரு மேனை யவரும்
    வந்தடி பணிந்துநனி நொந்தன மிரங்குகென வல்விடமிடுங்
    கந்தர விதந்தரு சுதந்திர நிரஞ்சன கரந்தை யறுகு
    சந்திர னணிந்தசடி லத்தநினை யன்றுசர ணேது மிலனே. - 10



    713 - பராபர புராதன பராவுதல்செ யாருளம்வி ராவுதல் செயா
    நிராமய வலாணவ நிராகரண நெஞ்சிடை நிலாவு சரண
    விராறனொ டிராறுய ரிராறுசெயி ராகமதி ராத ருள்பவ
    தராதல மராதாரு மத்தநினை யன்றுசர ணேது மிலனே. - 11



    714 - ஆற்றல்புரி காலனுயிர் மாற்றிவழி பாடுநனை யாற்று சிறுவன்
    ஏற்றமிக மேலுலக மேற்றியருள் வாழ்வருளு மேற்றின் முதல்வ
    காற்றிரத மாரன்மது வூற்றுகணை யேவவுயிர் காற்று மிறைவ
    சாற்றுமறை தோற்றிய சதுர்த்தநினை யன்றுசர ணேதுமிலனே. - 12



    715 - சதங்கைசிறு கிண்கிணி தழங்கிட வொதுங்குதளர் மென்ன டையுறும்
    பதங்கழியு முன்னடு கதங்கொடிதி மைந்தர்கள் பதங்கள் கழிய
    விதங்கழிவி லங்கலு நுணுங்கமறல் கந்தனை யிலங்கி யதச
    சதங்கணிப தங்கொள வழங்கிநினை யன்றுசர ணேது மிலனே - 13



    716 - அந்திநிற முங்கருக வங்கிநிற முங்கருக வஞ்சு டர்விடுங்
    செந்துவர்க ளுங்கருக விந்துவொடு செம்பரிதி தேசு கருகச்
    சுந்தரமி குந்ததிரு மேனிவலம் வந்ததொடர் பாற்புற மெனைத்
    தந்திடல டாதருளு தந்தைநினை யன்றுசர ணேது மிலனே. - 14



    717 - வேறு
    என்றி ருந்துதி யியம்பு தாமரை யிருக்கை யானைமுக நோக்குபு
    கொன்றை துன்றுசடை யெம்பி ரானினிது கூறு வானுலகர் தாதைகேள்
    நன்று நின்விழைவு முற்ற வீண்டுவர நல்கி லேநமது வைப்பதாய்
    மன்ற வென்றுநிலை பெற்ற வாதிபுரி யுள்ள தங்கண்மது சூதனன். - 15



    718 - வெள்ளி மன்றினட மாடல் காணவிழை வுற்று நம்மருளி னான்மறை
    தெள்ளு கோமுனிவ னாகி நோற்றருள் செறிந்த காலவ னொடுந்தவக்
    கள்ள வைம்பொறி கடிந்து பூசனை கடைப்பி டித்துவதி கின்றனன்
    நள்ளி யங்கணொரு நீயு மாடனனி காண்டி பின்புவர நல்குதும். - 16



    719 - பட்டி நாதரென வெம்மை நீளுலகு பன்னு கின்றதிமை யார்பசு
    ஒட்டி வந்தனை புரிந்த வேதுவினவ் வும்ப ரார்பசுவும் வந்தனை
    சட்ட வாற்றியது நீயு றங்கிவிடு தன்மை சென்றமையி னாதலான்
    அட்ட திக்கினரு மேத்து பட்டிமுனி யாகி யங்குறுக வென்றனன். - 17



    720 - ஆல மாந்தமல னார்கி ளத்தலு மலர்ந்த தாமரை யலங்கலான்
    சால நோற்றதவ மென்கொ லோபெரிய சாமி கொண்டருளு மோர்பெயர்
    ஏல யான்றழுவ வென்று வந்தடியி றைஞ்சி யன்புட னெழுந்துயர்
    மூல மாமனுந வின்று பட்டிமுனி யாகி யாதிபுர முன்னினான். - 18



    721 - தண்டி னோடுகர கம்பி டித்தகர முந்த யங்குபொடி மேனிமேற்
    புண்ட ரந்திகழும் வண்மை யும்பொருவி லக்க மாலைபுரண் மார்பமுந்
    தொண்டி னாற்குழைவு கொண்ட வுள்ளம்வெளி தோற்று மாக்கையசை வுந்தகக்
    கண்டு கோமுனி களித்துவம் மெனவு கந்த பட்டிமுனி தாழ்ந்தனன். - 19



    722 - இந்த வாறுவர வென்கொ னீயினி தியம்பு கென்னும்வளர் கோமுனிக்
    கந்தின் மோகமுற வாக்கு மாற்றலயர் வுற்றி டைக்கயிலை மேவியான்
    றந்தை மாலொடு மிருத்தி தாண்டவ மளித்து மென்றுவிடை தந்தனன்
    முந்தை மாதவ முதிர்ந்த தென்றுவகை முற்றி யுற்றதிவ ணென்றனன். - 20



    723 - நாயி னுங்கடைய னேனை யும்பெரிய நாய கன்றிரு வுளஞ்செயு
    மாயி னுய்ந்தன னெனக்கசிந் தருளை யுன்னி நெக்குருகு கோமுனி
    தாயி னும்பரியு மாதி லிங்கமுறை தம்பி ரான்றிருமு னுய்த்தலும்
    வாயி னைந்துபத மல்க வந்தனை புரிந்து சூழ்ந்துமறை பாடினான். - 21



    724 - வேறு
    மின்கொண்ட மேரு விலங்கற் சிலைதாங்கிக்
    கொன்கொண்ட நொச்சி குமைத்தா ரிவரென்பர்
    கொன்கொண்ட நொச்சி குமைத்தா ரிவராயின்
    புன்கன்றின் காலிற் பொதிர்ந்தவா றென்னே
    புனிற்று மருப்பிற் புழைபட்டா ரென்னே. - 22



    725 - உழக்குஞ் சமர்க்க ணொருவே லரக்கன்
    அழக்குன் றடியி னடர்த்தா ரிவரென்பர்
    அழக்குன் றடியி னடர்த்தா ரிவராயின்
    குழக்கன்றின் காலிற் குழைந்தவா றென்னே
    குருத்து மருப்பிற் குழிந்தார்மற் றென்னே. - 23



    726 - வள்ளி கணவன் மலிபொடிப்ப வாரிலைவேல்
    கொள்ளப் படைத்துக் கொடுத்தா ரிவரென்பர்
    கொள்ளப் படைத்துக் கொடுத்தா ரிவராயின்
    துள்ளினங் கன்றிற் சுவடுற்றா ரென்னே
    தோற்று மருப்பிற் றுளைபட்டா ரென்னே. - 24



    727 - வேறு
    பீடியல் கன்றி னாமடை யாளப் பெருமானை
    மூடிய வன்பாற் பாடிய பட்டி முனியிப்பால்
    கூடிய கோலக் கோமுனி கூறு நெறியானே
    பாடியல் பூசை யாதிக ளாற்றப் படர்குற்றான். - 25



    728 - பொன்னொடு வெள்ளி வார்கரை யுந்திப் பொருதோடுந்
    தன்னிக ரில்லாத் தண்புனற் காஞ்சி நதிதாழ்ந்து
    நன்னடம் வல்லே நான்பெறு கென்னா நசையோடும்
    பன்னின னாடிச் செய்கடன் முற்றும் படிசெய்தான். - 26



    729 - ஆலவ னத்திற் கொற்றவை கோட்ட மதன்கீழ்சார்
    காலவன் பூசை கண்டரு ளீசர் நகர்மேற்பால்
    கோலம றாத காஞ்சியின் றென்பாற் குளிர்பன்னீர்
    மூலலிங் கத்தி னுத்தர திக்கின் முன்னுற்றான். - 27



    730 - தடவிய வங்கைக் குண்டகை யாங்குத் தரையுள்ளே
    இடவிய தீர்த்த மாக விருத்தி யிமையாரும்
    வடகயி லாய மென்று துதிப்ப வளரங்கி
    அடவியி னாடு மண்ணலை நூலா னமர்வித்தான். - 28



    731 - குண்டிகை வாவித் தண்புன லானுங் குளிரார
    மண்டிய காஞ்சி வார்புன லானும் வளர்வேணி
    அண்டனை யாட்டி வண்டுப டாத வலர்சாத்தி
    உண்டிகள் நல்கி யொளிபிற காட்டி யுவப்பித்தான். - 29



    732 - வடவனம் வாழுங் கொற்றவை பொற்றாண் மகிழ்கூரக்
    கடவிய பூசை காதலி னாற்றிக் கதிர்வெள்ளித்
    தடவரை யேகிச் சம்புவை யங்குந் தாழ்ந்தன்பால்
    சுடர்மணி வெள்ளி யம்பல நோக்கித் தொழுதானால். - 30



    733 - நித்தலு மிவ்வா றாதிபு ரத்து நிமலற்காம்
    பத்திகள் செய்து காலவ னோடும் பசுவான
    உத்தம னோடும் போதிவ னத்தி னுறைநாளின்
    முத்தி யளிக்கும் யாகம் வளர்க்கு முறைபூண்டான். - 31



    734 - வேறு
    விண்ணவர் வருகவிஞ் சையர்வருக
    புண்ணிய முனிவரர் புகுதகவென்
    றெண்ணிய முடங்கலுய்த் தெவ்வெவரும்
    நண்ணுற வவர்மகிழ் நலஞ்செய்தான். - 32



    735 - வளமருள் காஞ்சியின் வடபாங்கர்க்
    களமறு விலதுகண் ணுறநாடி
    அளமறு பிறவிக ளவையேங்க
    உளமுவ கையினுற வுழுவித்தான் - 33



    736 - விண்டொடு சாலையும் விதியாற்றால்
    குண்டமும் வேதியும் குறித்திட்டுத்
    தண்டமும் யூபமுஞ் சமிதைமுதல்
    பண்டமுங் குறைவறப் பயில்வித்தான். - 34



    737 - வரமலி வஞ்சுள மர்மீந்த
    அரணியின் ஞெலிதழ லதுமூட்டி
    இரணிய வுலகலு மெழுதூமம்
    பரவிய விருள்செயப் பாவித்தான். - 35



    738 - துடுப்புநெய் முறைமுறை சொரிந்தங்கண்
    எடுப்பிய வங்கியி னிசைவித்த
    தடுப்பருந் தீஞ்சுவை தகுமுண்டி
    மடுப்பவர் மடுப்புற மடுப்பித்தான். - 36



    739 - நல்வகைப் பயன்பிற நாடாமே
    பல்வகை வேள்வியும் பரனார்தம்
    எல்வகை மலரடி யிணைநாடி
    அல்வகை மலமற வாற்றினனால். - 37



    740 - விண்ணவ ரனைவரும் வியப்புற்றார்
    மண்ணவ ரனைவரு மகிழ்கூர்ந்தார்
    அண்ணலுந் திருவரு ளினரானார்
    பண்ணிய முனிவனும் பரிவகன்றான். - 38



    741 - வேறு
    அளவிடு சூழ்ச்சி யெல்லை யுயிர்கட் கடாத வறிவான சோதி யமலன்
    வளவிய பாத முன்னி மறைநான்கும் வல்ல மறுவென்ற பட்டி முன்வன்
    உளமலி யன்பு பொங்க வுலகேத்த வாற்று முயரோம குண்ட நினைவோர்
    விளர்தபு காம நல்கு திருநீற்று மேடி தெனநின்று மேன்மை தகுமே. - 39



    742 - முண்டக மேலி ருந்த பிரமன் சமைத்த முறையா லவன்பெ யரொடும்
    விண்டிடு தீர்த்த மான குண்டிகைத் தீர்த்தமாடி மிளிநீற்று மேட்டி னிதிபோன்
    மண்டிய பூதி மெய்யின் வதிவித் தெழுந்து வடபா லடுத்த கயிலை
    அண்டனை யன்பி னேத்து மவரே பிறந்த வறிவாள ரல்லர் பிறரே. - 40



    743 - வேறு
    மாதுக்க மாற்ற விழைவார்கண் மண்ணின் மகிழ்போக மெய்த லுறுவார்
    ஏதுக்க ளான பலகொண்டு விண்ணி னிமையார்க ளாதல் விழைவார்
    சாதுக்க ளாதல் விழைவாரு மன்பு தழைவுற்ற பட்டி முனிவன்
    போதுக்கண் மேவி வழிபட்ட செம்மல் புகலன்றி வேறு முளரோ. - 41



    744 - வேறு
    ஒலிதழ னாப்ப ணின்று நிறைநீரு முயர்கா னடைந்து முகிறோய்
    வலிகெழு குன்றி னுச்சி வதிவுற்று முண்டி வழுவித்தும் வைய முழுதுங்
    கலிகெழு சித்தி பெற்று மதியோர்க ளெய்து கதிமுற்று மொன்று பொழுதின்
    மலிதக நல்கு மென்ப வழிபாடு செய்யின் வடபா லிருந்த கயிலை. - 42



    745 - வடகயி லாய மேய மணிகண்டர் மேன்மை வரைசெய்து செப்ப லரிதே
    புடவியி லெய்து மார்வ மருவா தொழிந்த புரைதீர்ந்த நோன்மை யறிவீர்
    நடநட ராச னக்க ணொருமூவ ருக்குநயமல்க நல்கு திறன்மற்
    றுடலுறு நோய்கண் மாய வுரைசெய்து மென்ன வுயர்சூத னோத லுறுவான். - 43
    வடகயிலாயப் படலம் முற்றிற்று.
    ஆகத்திருவிருத்தம் -745
    ----------------------------

    12 நிருத்தப்படலம் (746-883)




    746 - உரைத்தபரு வத்தினொடு முயர்கணவன் வரவுள்ளித்
    தரைத்தலையேக் கறுமடவார் தமைநேர விடைக்கயிலை
    வரைத்தலத்துத் தம்பெருமான் வரைந்தநா ளொடுநடமால்
    கரைத்தவுளத் திடைநாடி யிருந்தனர்கா லவன்முதலோர். - 1



    747 - இவ்வாறு சிவபூசை யினிதாற்றி யிருக்குநாள்
    செவ்வாய்மைக் கோமுனிவன் சிவபெருமா னெம்மன்றும்
    ஒவ்வாத விரசதமன் றுளதென்றா னதுகாணும்
    அவ்வாய்மை பெற்றிலே னெனவயர்ந்து தியானித்தான். - 2



    748 - அண்ணலார் திருவருளா லசரீரி வாக்கெழுந்து
    நண்ணியமுன் னம்பலத்தை நம்பர்மறைத் தருளினார்
    திண்ணமுற வவ்வயினீ செய்தொருமன் றதினுங்கள்
    பண்ணவன்மெய் யுருவமைத்துப் பணிகவெனப் பணித்ததே. - 3



    749 - விண்ணெழுந்த மொழிகேளா விம்மிதனாய்ப் பரவசனாய்
    மண்ணிடந்த கோமுனிவன் மாதவத்துக் காலவனைப்
    பண்ணரிய பெருந்தவத்துப் பட்டிமுனி யொடும்விளித்துப்
    புண்ணியன்மெய்த் திருவருளாற் போந்ததிது வெனமொழிந்தான். - 4



    750 - மன்னுதிரு வருளதுவேல் வாழ்ந்தனம்வாழ்ந் தனமென்று
    பன்னியவர் தொழுதாடப் பண்ணவர்க ளுலகாளும்
    மன்னவனை வரக்கூவி வயங்கியகோ முனிநுங்கள்
    கம்மியனைத் தருகவெனக் காவலனுந் தருவித்தான். - 5



    751 - மன்றுபுரி யிடங்காணார் மயங்கினர்நிற் குங்காலைக்
    கொன்றைசடை மிலைத்தபிரான் கோமளவல் லியினகன்று
    தொன்றுதொடு நடம்புரியுந் தொல்லையிடங் காட்டுதற்கு
    வென்றிமிகுஞ் சித்தனென வேற்றுருக்கொண் டாங்கடுத்தான். - 6



    752 - கோதிலிர சதமன்றங் கோமுனிவன் முயலுற்றான்
    சோதிநடங் காண்டுமெனத் துன்னியவா னவரையர்
    வேதியரே னையர்பலரும் விம்மிதங்கொண் டகங்களிப்பப்
    போதிவனத் திடைச்சித்துப் புரிபாக்குப் புரிவுற்றான். - 7



    753 - வேறு
    பருதி வானவன் காலையின் மேக்கெழப் பணிக்கும்
    அருவி மால்வரை துரும்பென வளியிடை யலைக்குங்
    கருவி மாமழை யின்றியே புனலுறை கஞற்றுந்
    தருணர் பாலரா மூத்தவர் தருணராச் சமைக்கும். - 8



    754 - அரவின் வாயிடை யலகடற் சுவையமிழ் தெடுக்குங்
    கரளம் வான்சுதை யாகுமா கடைக்கணித் தருளும்
    பரவை விண்ணெழுந் தங்கணே பயில்வுறப் பயிற்றுஞ்
    சுரர்கண் மாநுடர் மாநுடர் சுரரெனத் தோற்றும். 9 - 9



    755 - மண்ணு ளேசிவ லோகமும் வருவித்துத் தெரிக்கும்
    விண்ணு ளேநர ருலகமு மேவித்து மறைக்குந்
    திண்ண மாகிய வசரத்தைச் சரமெனத் திரிக்கும்
    வண்ண மாகிய சரத்தினை யசரமா வயக்கும். - 10



    756 - கற்பின் மேதகு மாதருமுளநனி கலங்கப்
    பொற்பின் மேதகு மாடவர் தங்களைப் பூக்கும்
    வற்பின் மேதகு மாதவர் குழாங்களு மயங்க
    அற்பின் மேதகு மரிவையர் பலர்தமை யாக்கும். - 11



    757 - கோடி யிந்திரர் கும்பிடக் கடைக்கணித் தருளுங்
    கோடி நான்முகர் கும்பிட முடிவறி தசைக்குங்
    கோடி நாரணர் கும்பிடக் குறுநகை காட்டுங்
    கோடி ருத்திரர் கும்பிட வருகெனக் கூறும். - 12



    758 - அறையு மாயிர வாயிரந் தருமநூ லமைக்கும்
    பொறைகொ ளாயிர வாயிரம் பொருட்டுறை கிளக்குந்
    துறைகொ ளாயிர வாயிரங் காமநூ றொகுக்கும்
    மறைக ளாயிர வாயிரம் புதியன வகுக்கும். - 13



    759 - எட்டுச் சித்தியும் வல்லவர் முடியினைப் பிரம்பால்
    தொட்டுச் தித்திக டொலைத்தவர்க் கறிவின்மை துரக்கும்
    எட்டுச் சித்தியுஞ் சிறுமகார் களுமெளி தியற்றத்
    தொட்டுச் செங்கையி னீறவர் மெய்யுறத் தூவும். - 14



    760 - சித்திவ் வாறுபல் கோடிகள் விளைத்தலுஞ் சித்துக்
    கொத்தெ லாந்தெரிந் தவர்களு மும்பரார் குழுவும்
    பித்த ராகிய சித்தனா ரடியிணை பிரியாப்
    பித்த ராயினர் பெருகுமா னந்தமுட் டிளைப்ப. - 15



    761 - வேறு
    மட்டு விரியு நறுந்துளப மறைத்த நிறத்துக் கோமுனியும்
    பட்டி முனியுங் காலவனும் பல்லாற் றானு மிவனாரென்
    றொட்டி யுணரு முள்ளகமு முணர்ந்து தெளியா வகைமருட்டச்
    சட்ட வினாவி யறிதுமெனத் தழைத்த சித்தர் மருங்கணைந்தார். - 16



    762 - படைத்தி யயனு மலையுலகம் பரித்தி யரியு மலையாங்கே
    துடைத்தி யரனு மலைமறைப்புச் சூழ்தி தொழுமீ சனுமல்லை
    தடைத்த மலநோய் நலியவரு டருதி யைந்து முகனுமலை
    கொடுத்தி பலநூன் மாதவர்க்குங் குருவுமலைநீ யாரென்றார். - 17



    763 - முனிவர் வினவ முனிவருக்கு முனியாஞ் சித்த ரிறுக்கின்றார்
    துனியில் கேள்வி மாதவத்தீர் தொகுத்து மொழியக் கேண்மினோ
    நனிசித் திடையோ ரெவ்வெவரு நாடுமுதன்மைச் சித்தரேம்
    இனிய பெயருஞ் சித்தேச ரென்பதாகு மறிமினோ. - 18



    764 - காலங் கடந்து வினைகடந்து கருவி யனைத்துங் கடந்துமல
    மூலம் கடந்த தன்மையே முழுது முணர்பே ரறிவினேங்
    கோலங் கடந்த வுருவினேங் கோலமனைத்துங் குறிக்கொண்டேஞ்
    சீலங் கடந்த வறிவினர்க்குச் சேயே மல்லேந் தெளிமினோ. - 19



    765 - என்று கிளந்த சித்தேசர்க் கெதிர்கை தொழுது முனிவரர்கள்
    வென்ற வினையீர் காலத்தின் விகற்பங் கடந்து முழுதுணர்ந்த
    நன்றி யுடையீர் நீராகி னம்பன னடன நவில்கின்ற
    மன்றந் தெரிக்க வல்லீரேல் வகுத்த வுரைமெய் யாமென்றார். - 20



    766 - பொம்ம லோதி யிடமறைத்துப் போந்த சித்தர் முறுவலித்துச்
    செம்ம லுடையீ ராதலினால் தேவ தேவன் திருமன்ற
    நும்மை யறிவித் திடுதுமென நுவன்றா ருய்ந்தோ மெனத்தாழ்ந்தார்
    வம்மி னெனக்கொண் டுடன்போந்தார் மணிப்பா துகைக ணிலந்தோய. - 21



    767 - ஆதி லிங்கந் தனக்குவட கிழக்கி னெல்லை யடர்வினைகள்
    காதி யிருந்த காலவனீச் சரத்துள் மூவ ருருவான
    போதி நிழலிற் புக்கருளிப் பொருந்தமன்ற மெழுகவெனச்
    சோதி மலரத் திருவாயாற் சொன்னார் மன்ற மெழுந்ததே. - 22



    768 - அண்ட முகட்டைப் பொதிர்ப்பனபோ லசும்பு மொளியின் கதிர்நிமிரப்
    பிண்ட மான கீழண்டப் பித்தி தொடுத்த வடியினதாய்க்
    கொண்ட திசைக ளோரெட்டுங் குறுகி யணிய வாய்க்கிடப்ப
    மண்டி யெழுந்த விரசதத்தின் மன்றின் பெருமை வகுப்பாரார். - 23



    769 - பளிக்குச் சிலைத்திண் சுவர்நீடிப் பளிக்குச் சுவர்க்கு ளோவியங்கள்
    வெளிக்க ணமரர் நிற்பதுபோல் விளங்கி வெள்ளி மேல்வேய்ந்து
    களிக்குஞ் செம்பொன் வரைநிறமுங் கழிக்கும் பைம்பொற் றலமுள்ளால்
    துளிக்குங் கிரண வொளிமணிக டுவன்றிச் சுடர்ந்த தெழுமன்றம் - 24



    770 - மந்தா ரத்தின் மலர்கற்ப மலர்சந் தான மலர்தாருக்
    கொந்தார் மலரா தியிற்செய்த கோதை நவமா மணிமாலை
    சிந்தா மணியின் பலகோவை தெய்வ நிதித்தா மரைத்தெரிய
    னந்தா வொளிப்பொன் னரிமாலை யுள்ளும் புறம்பு நான்றனவே. - 25



    771 - பனிநீ ரளவித் தேன்விராய்ப் பசுந்தா தணவி மான்மதந்தோய்ந்
    தினிய புழுகார்ந் துரோசனைசேர்ந் திளகு நறுங்குங் குமச்சாந்தம்
    நனியெவ் விடனு மணிந்தைந்து நறிய புகையுந் தவழ்ந்தமண
    மனித ருலகும் விண்ணுலகும் வளர்மா திரமுங் கமழ்ந்ததே. - 26



    772 -
    கையிற் புனையா விசித்திரப்பொற் கலைப்பட் டனைத்தும் விதானித்து
    மையி னகன்ற வெழினியுமெல் வளர்கம் பலமும் விரித்திட்டு
    நெய்யின் றெரியு மணிவிளக்கு நெய்யுற் றெரியுந் தழல்விளக்கும்
    பொய்யின் றொளிர நிரைநிரையிற் பொருத்தி வனப்புப் பொலிந்ததே. - 27



    773 - வேறு
    மன்றங்க ணெழுந்து விளங்கலு நோக்கி வானோர்
    இன்றுய்ந்தன மென்றிணர் மாமலர் மாரி தூர்த்தார்
    நன்றிங்கிவர் செய்தி யெனத்துதி நாவி னார
    அன்றங்குறு மாதவர் சித்த ரடிக்கண் வீழ்ந்தார். - 28



    774 - அருண்மல்கிய கோமுனி யாதிய ருந்த வத்தோர்
    தெருண்மல்கிய சித்த ரடித்தலந் தாழ்ந்து சொல்வார்
    இருண்மல்கிய யாங்களு முய்யவிங் குற்று நீரே
    பொருண்மல்கிய மன்ற மெடுத்தனிர் போற்றி வாழ்ந்தேம். - 29



    775 - இன்னுந்தமி யேங்கண் மனக்குறை யீங்கொன் றுண்டு
    மின்னுந்தழல் போனிறத் தீரது விள்ளக் கேண்மின்
    மன்னுஞ்சபை நாயகர் மெய்யுரு வாய்ப்பச் செய்து
    கொன்னும்வழி பாடுக ளாற்றல் குறித்து ளேமால். - 30



    776 - சிற்பந்தவி ராதடி கேள்புரி தெய்வ மன்றின்
    பொற்பின் றிறனுக் கியையப் புலவோர் கடச்சன்
    நற்பங்கயன் மான்முத லோருநன் றாக்க வல்லார்
    அற்பங்கவர் சிற்றறி வாளர்களான நீரால். - 31



    777 - முழுதுங்கவர் பேரறி வாட்சியிர் யார்க்கு மூத்தீர்
    பழுதொன்றுமி லாதிர் பரம்பரை நூலும் வல்லீர்
    தொழுதும்மடி போற்றுதும் யாந்துளங் காமை யந்திப்
    பொழுதுதோன்றிய வேணியி னாருரு பொற்பச் செய்யீர். - 32



    778 - என்றாரது கேட்டுயி ருக்குயி ராகி யெங்கும்
    நின்றார்திரை கோலுமி னென்றனர் நேர்வ ணங்கிப்
    பின்றாழ்சடை மாமுனி வோரது பேணிச் செய்ய
    ஒன்றாமுகுர்த் தத்தள வுந்திரை யுள்ளி ருந்தார். - 33



    779 - இரண்டா முகுர்த் தத்தி னிடுந்திரை யோடு சித்தர்
    திரண்டாரறி யாமை மறைந்தனர் செய்த வத்தான்
    முரண்டாவிய மூவரு மொய்த்தவர் யாரு மாதோ
    டரண்டானென வாடும் பிரானுரு வாங்குக் கண்டார். - 34



    780 - மருண்டார்வெருண் டார்வரு சித்தர்நம் வள்ள லென்று
    தெருண்டார்வியந் தார்சிவ காமியுந் தானுங் கண்டம்
    இருண்டானெதிர் நின்றமை நோக்கிய யாரு மேத்திச்
    சுருண்டார்தரு பங்கி முடித்தலை துன்னித் தாழ்ந்தார். - 35



    781 - வேறு
    செம்பொன்மால் வரையும் புதுநிறம் படைப்பத் திகழொளி வெள்ளியங் கிரியும்
    உம்பரார் பணியும் வெள்ளியம் பலமு முலகுறு சராசர மனைத்தும்
    பைம்பொனார் நிறமா யதிசயம் விளைப்பப் படரொளிக் கிரணம்விட் டெறிக்குந்
    தம்பிரா னுருவ முனிவர்மூ வருந்தா பித்தருச் சனைசெய முயன்றார். - 36



    782 - உம்பரார் பலருங் கோமுனி யேவ வுய்ந்தன மெனப்பணி முயன்றார்
    உம்பரார் தச்ச னாலய நகர மாதிக ளுவப்புறப் புரிந்தார்
    உம்பர்கோன் காம தேனுகற் பகமு முறுபொரு டரப்பணித் திட்டான்
    உம்பர்கோ னேவ வுலகமா ளரையர் தத்தமக் குறுபணி செய்தார் - 37



    783 - வடதிசைத் தலைவ னிரம்புபண் டாரம் வாய்திறந் திருநிதி போதந்
    திடனக னகர முழுவது நிறைத்தா னிடிஞ்சில்கள் கரகங்கள் கும்பம்
    படரொளி மணியான் மயனிரு மித்தான் பசுங்குசை சமிதைபற் பலவுங்
    கடனறி முனிவர் விதியுளி நாடிக் கவர்ந்தரு மறைகரைந் திறுத்தார். - 38



    784 - வானவர்குரவ னாள்வரை யறுத்தான் மகதியாழ் முனிவனா கமத்தின்
    ஊனமில் விதியாற் குண்டமொன் பதும்வே திகைகளும் ஒளிபெற
    தேனமர் மலய மாதவன் பதிட்டை செய்யுமா சானென வமைந்து
    வேனவில் கரத்தோன் முன்வரும் பட்டி விநாயகன் பூசனை முடித்தான். - 39



    785 - அங்குர மமைத்தன் முதல்வினை யனைத்து மாகம விதிப்படி யாற்றி
    மங்கல வியங்க ளியம்பவா னவர்கண் மலர்மழை பொழிதர மன்றின்
    அங்கண ருருவோ டம்மைதன் னுருவி னமத்தபொற் கும்பநீ ராட்டிப்
    பொங்கறு சுவையி னிவேதனம் பிறவும் பொற்புற முற்றுவித் தனனால். - 40



    786 - கன்னிகை செம்பொ னிரசதங் கலைகள் கலனிலம் பரிகரி யிரதம்
    அன்னமற் றனைத்து மேற்பவர்க் குதவி யருந்தவக் கோமுனி முதலோர்
    பன்னருஞ் சிறப்பிற் றம்பெரு மானைப் படரொளி வெள்ளியம் பலத்துந்
    துன்னுறு தினங்க டொறுமறு காலந் துகளறு பூசனை புரிந்தார். - 41



    787 - வேறு
    இவ்வகை செல்லு நாளி லெம்பிரா னடனங் காட்டு
    மவ்வரு நாளு மண்மைத் தாயதென் றறிந்து முன்னர்ச்
    செவ்விய பதிட்டைக் குற்றோ ரனைவருஞ் செல்லா தாங்கண்
    எவ்வமில் காலந் தோறு மேத்திவாழ்ந் திருந்தா ராக. - 42



    788 - பங்குனி மதியஞ் சாரப் பட்டிமா முனிவன் சென்று
    தங்குகோ முனிவன் பாதந் தாழ்ந்திது செப்பி னானால்
    நங்களை யாள நம்பர் நடம்புரி நாளு மிந்தத்
    திங்களின் வருவ தற்றாற் செய்வதொன் றுண்டு கேண்மோ. - 43



    789 - திருவிழா எடுத்து நாதர் திருநட நவிற்று மந்த
    ஒருவிழா நாளு மந்தத் துற்றிடு நாள தாக
    மருவியா நிற்றன் மாண்பாம் வரதவென் றியம்ப வன்னான்
    ஒருவியா மகிழ்ச்சி பொங்க வுவன்றனைத்தழுவிக் கொண்டான். - 44



    790 - பட்டிமா முனிவ விந்தப் பணிசெயத் தக்க தாகும்
    இட்டமா முலகுக் கெல்லா மிறைவற்கு மிட்ட மாகும்
    முட்டிலா தியற்று கிற்பா முறையுளி யமரர்க் கெல்லாம்
    ஒட்டவீங் குறுவ யாவு முஞற்றுமா றியம்பு கென்றான். - 45



    791 - விடைமுகத் தவன்சொற் கேட்டோன் விச்சுவ கன்மற் கூவி
    அடையலர் புரங்கள் செற்ற வடிகளார் விழாவுக் கேற்ற
    நடைநக மிரத மாதி நலத்தக வாக்கி வைவேற்
    படையவ னைங்கைப் புத்தேள் படிவமா தியுஞ்செய் யென்றான். - 46



    792 - மயன்வரு கென்று கூவி வளநக ரால யங்கள்
    குயினுழை மாட மற்றுங் கோடணை புரிய வேவி
    வயமலி குலிச வேற்கை மன்னவற் கூவி வேட்ட
    பயன்மலி பரிசில் யார்க்கும் பண்புறக் கொடுக்க வென்றான். - 47



    793 - அவரவ ராற்றற் கேற்ப வமலனார் பணிக ளேவி
    அவரவர் தந்தையான வருந்தவன் விடைமு கத்தோற்
    கவரவர் பணியி னிற்ப வறைந்தன னென்று தாழ்ந்தான்
    அவரவர் பணிகளாக வனைவரு மாற்றி னாரே - 48



    794 - தகட்டுடன் மீனாய் முன்னர்த் தவழ்ந்தகோ முனியு மண்ட
    முகட்டையுந் துளைக்கும் வைவேல் முனைவன்சண் டீச னாக
    மகட்டிடை யசைத்த பிள்ளை யாதியோ ருருவத் தோடும்
    பகட்டெழி லிரத மற்றும் பதிட்டைசெய் தமைத்துக் கொண்டான். - 49



    795 - பங்குனிப் பருவஞ் சேர்முன் பக்கத்தி னிரண்டா நந்தை
    தங்குகார்த் திகைநாட் புல்லந் தடங்கொடி யேற்றி மைந்தர்
    மங்கையு மருங்கு போத மன்றிடை நடிக்கு மையர்
    மங்கல முழங்க வீதி வயினுலாப் போதச் செய்தான். - 50



    796 - வேறு
    கொடிநீள் கதலியு முயர்பூ கமுமதி குயின்மே லிவர்தர மலைவித்துக்
    கடியார் புகையொளி கனிசந் தனமலர் கவினொன் றியபுன னிறைகும்பம்
    படிவே திகையொடு பயில்கா வணநிரை படர்தோ ரணநிரை நிறைவித்த
    முடிவா னவர்புகழ் மணிவீ தியினகர் முறையா லிறையவன் வலம்வந்தான். - 51



    797 - கவிகைக் குளிர்நிழல் விரியக் கதிர்பொழி கவரித் திரளிரு புடைதுள்ளச்
    சவிவின் மணிவட மொளிர்சுற் றுடையன சாந்தாற் றிகள்பல ததைகிற்ப
    அவிர்விண் ணுடுவின தளவுங் குறைபட வடரத் தழனிமிர் தருபந்தங்
    குவிமென் முலையவர் நடனத் தொடுமிறை குலவீ தியினகர் வலம்வந்தான். - 52



    798 - விண்ணா டுடையவ ரெதிதூ வியவெயில் விரியும் பலமணி திடர்செய்ய
    மண்ணா டுடையவர் பரிவாய் மதகரி வளர்கைத் துளையுமிழ் புனல்வாரித்
    தண்ணார் நதியென வொழுகச் சரண்பணி யிமையார் முடியொடு முடிதாக்கித்
    திண்ணார் மணிநிறை பொடிபட் டுகவணி திகழ்வீ தியினகர் வலம்வந்தான். - 53



    799 - மணிமொய்த் தொளிவிடு கனகச் சிவிகைதண் மதிமண் டலமெறுழ் வளர்பூதம்
    பிணிவிட் டலர்மல ரிரதம் விடைகரி பிறைவந் திறைகொளும் இரதத்தோ
    டணிமெத் தியசிறை யன்னம் பரியெழி லமையிந் திரநல்வி மானத்துந்
    திணிகட் செவியணி முடியா னொன்பது தினம்வீ தியினகர் வலம்வந்தான். - 54



    800 - ஒன்றோ வியவொரு பஃதென் றுரைபட வுறுநாள் கழியும்வை கறையிஞ்சி
    வென்றார் பொறிவலி வென்றார் பணிசெய விரைநீர் முதலபி டேகங்கொண்
    டின்றா னடநவில் பொழுதென் றனைவரு மெழுநீர் நதிமுழு கிச்சார்ந்து
    நன்றா மொருபஃ தெனுநாட் சபையெதிர் தகைமா மணிசெய்மண் டபநிற்ப. - 55



    801 - அரிதா கியபணி புரிகோ முனிமுதன் முனிமூ வருமரு கேநிற்ப
    வரிவீ ணையினிசை யுயர்நா ரதமுனி மகிழ்தும் புருவுட னெழுவிப்பத்
    திரியா வகைபல தாளங் குறுமுனி திகழா நந்தியு மினிதொத்த
    உரிதா முழவுமந் துவுநந் தியுமிரு தலையுங் கரமல ருறுவிப்ப. - 56



    802 - வருகந் தருவரு மலியுங் கருடரு மதுரத் துடனிசை பலபாட
    ஒருகந் தழிநிலை யருளா லருளென வுறுதா பதரர கரவென்னப்
    பெருகந் தரர்சிலர் வளர்சிந் தையின்மறை பெருவா ரிதியொலி படவோத
    அருகந் தர்கண்முத லியதுன் மதியரு மருள்கண் டடிதொழ வணைகிற்ப. - 57



    803 - ஆகா வென்பவ ரூகூ வென்பவ ரருகுற் றரியமெல் லிசைபாட
    ஏகா வென்மரும் யோகா வென்மரு மாகிச் சித்தர்க ளெதிரேத்தக்
    காகா வெனவுர கர்கள்பன் மணியொளி கஞலத் திசைதிசை தொழுதாடப்
    பாகா மொழியவள் பாகா விடையொரு பாகா வெனவவு ணர்கள்பம்ப. - 58



    804 - மன்றா டியகுரு மணியே யடியவர் மதியா டியகளி நறவேபொய்
    வென்றார் நுகர்சுவை யமிழ்தே பத்திமை விளைவார் விளைசிவ விளைவேபுன்
    கன்றா னெனவுயிர் களின்வைத் தருளிய கனிவே கருணைசெய் கனியேயென்
    றொன்றா தரவுட னுரையா விழியிணை யுறைசிந் திடவடி யவர்தாழ. - 59



    805 - ஒருபா லுமைதன துருவின் விரவுற வொருகைத் துடியொலி யெழவங்கி
    ஒருவா தொருகையி னொளிரக் கவிதர வொருகை யொருகர மமைவெய்த
    ஒருதாண் முயலகன் வெரிநிற் பதிவுற வொருதாள் குஞ்சித முறவீசி
    ஒருகா ளியின்முகம் விழிநோக் குறமணி யொளிரம் பலநட நவில்கின்றான். - 60



    806 - தழலொத் தவிர்புரி சடையெண் டிசைதட வரவெண் மதியொடு புனறுள்ள
    அழகொன் றியகுழை யசையக் குறுநகை யலரப் புருவமு முரிவெய்தச்
    சுழல்கட் செவியர விழிவெண் டலைதிணி தோளிற் றுயல்வர வதள்பொங்க
    உழல்சில் லரிபயின் மணிநூ புரவொலி யுறழத் திருநட நவில்கின்றான். - 61



    807 - பூதங் களுமுறழ் கரணங் களுமெழு பொறியும் பொறியினுள் ளொளியான
    பேதங் களும்வரு காலங் களுமொளி பில்குங் கலைகளு மொளிவிந்து
    நாதங் களுமவை தருபோ தங்களு நவில்வே தங்களு மறியாமே
    ஏதங் கொளுமுயிர் போதங் கெடவிர சதமன் றிடைநட நவில்கின்றான். - 62



    808 -
    அளவா யளவத னளவா யளவத னளவுந் தணிதரு மளவாகி
    அளியா யளியத னளியா யளியத னளியுந் தணிதரு மளியாகி
    ஒளியா யொளியத னொளியா யொளியத னொளியுந் தணிதரு மொளியாகி
    வெளியாய் வெளியதன் வெளியாய் வெளியதன் வெளியின் வெளிநட நடவில்கின்றான் - 63



    809 - ஓரா ணவமுத லிருவல் வினைமல மூன்றும் முடன்முத லியநான்கும்
    ஆரா வுடலிடை யுறுசாக் கிரமுத லைந்தும் மநுமுதல் வழியாறுஞ்
    சாரா வகையெழு ஞானம் பெறவரு டகவெண் ணுநர்பணி யொன்பானுந்
    தேரா வருள்பணி பத்துந் திகழ்தரு திகழம் பலநட நவில்கின்றான். - 64



    810 - ஒருபான் றிசைகளு மொன்பா னுருவமு மோரெண் வடிவமு முலகேழும்
    மருவா நின்றொளி ராறா தாரமும் வளரைந் தினைகளு மறைநான்குந்
    தருமூ வழல்களு மிருமைப் பயனொடு தானா கியவொரு தனிவீடுந்
    தெருள்வா ரிஃதல திலையென் றுணர்வுறு திகழம் பலநட நவில்கின்றான். - 65



    811 - அஞ்சக் கரமென வெட்டக் கரமென வாறக் கரமென நான்கென்ன
    பிஞ்சக் கரமுத லுருமூன் றெனவளர் பேரக் கரமுதன் மூன்றென்ன
    நெஞ்சத் துறநவி லீரக் கரமென நிலையோ ரக்கர மெனநின்ற
    செஞ்சொற் றிறமிரு நான்கா கியும்பிற வாயுந் திருநட நவில்கின்றான். - 66



    812 - நகரந் திருவடி மகரம் வயிறெழி னகுதிண் புயம்வக ரஞ்சீர்சால்
    சிகரந் திருமுகம் யகரந் திருமுடி சிகரந் துடிகவி தருசெங்கை
    வகரம் யகரம தபயந் தருகரம் வளர்தீ நகரநன் மகரங்கீழ்
    உகளும் முயலக னொளிர்வா சிகைபிர ணவமா யொருநட நவில்கின்றான். - 67



    813 - தோற்றந் துடிதிதி யபயந் தொலைவெரி தோலா மறைவுநின் றிடுதாளி
    னாற்றுங் கழலினல் லருளுந் தகநனி நலிமா யையையுத றிக்கன்ம
    நீற்றிக் கருமல மிருவித் திருவரு ணிலையா லுயிர்களை வாங்கிக்கொண்
    டாற்றுஞ் சுகவடி வாக்கிப் பதிவுறு மருளம் பலநட நவில்கின்றான். - 68



    814 - அருளோ விலையென மேலா கியவுயி ரருளான் முதன்மைய தாயங்கு
    மருளா லருள்புரி தொழில்செய் குவலென மதியுற் றதனையு மொருவிப்போய்ப்
    பொருளா கியவரு ளுருவா யதன்முதல் புகலென் றறிதல்செய் தருணின்றுந்
    தெருளார் சிவமுடன் விரவிச் சுகமுறு திருவம் பலநட நவில்கின்றான். - 69



    815 - வேறு
    சோதி மல்கிய விரசத சபையிற் றுரியத் தேவளர் வல்லியுந் தாமும்
    போதி யம்பொழிற் புண்ணிய முதல்வர் பொருந்தி யத்தநா ரீசராய் நடிக்கும்
    வேத நூபுர வொலியும்பல் லியமும் விரிக்கு மின்னிசை செவித்துளை நிறைப்ப
    ஏத மில்லவ ரனைவருங் கேளா வேங்கி நின்றனர் திருநடங் காணார். - 70



    816 - வெள்ளி யம்பலத் தாட்டயர் முதலே வேத நாடரும் விழுத்துணைப் பொருளே
    வள்ளி கேள்வனை யுயிர்த்தமாமணியே வான வர்க்ககறி யாதவா னவனே
    புள்ளி மான்கரத் தேந்துவித் தகனே புடைநெ ருங்குபூ தப்படை யானே
    தள்ளி யெம்வினை யருணடங் காட்டாய் சங்க ராசய போற்றியென் றிரந்தார். - 71



    817 - விரையத் தாண்டவங் கண்ணுறா மெலிவும் விண்ணெ ழுந்துநீர் சுரந்தமா மேகம்
    புரையத் தாண்டவங் காட்டியல் லாது போது றானெனு மகிழ்வுங்கொண் டுள்ளங்
    கரையத் தாழ்ந்தவர் மறைப்பினை மாற்றிக் கருணை நோக்கெதிர் வழங்கினார் செய்ய
    வரையக் கார்த்தணி யூர்தொறு மிரந்துண் டம்ப லத்துநின் றாட்டயர் முதல்வர். - 72



    818 - ஊன நாடக நவிற்றியெவ் வுயிர்க்கு முறுக ணாணவ வலிகெடுத் தருளி
    ஞான நாடக நவிலுமங் கணனார் ஞான நாட்டநன் றருளலு மலம்போய்
    மோன மாதவ முனிவரர் மூவ ராதி யோரனை வருமுதிர் நடனத்
    தான வானந்தங் கண்களாற் பருகி யறிவு ளேயறி வடங்கியொன் றானார். - 73



    819 - உரையுங் காயமு முணர்வுமெட் டாத ஒருவ ரக்கர மைந்துமே யுறுப்பாய்
    விரைநி லாவிய போதிசூழ் வரைப்பின் வெள்ளி யம்பலத் திணர்த்தபூங் கூந்தல்
    வரைய ணங்கொடு மாட்டயர் நடன மணிபொன் வானிதி மனைவியிற் பெரிதும்
    பரைதன் பாலராய்ப் பேணுவார்க் குளதோ பவஞ்சி வாநந்தம் பருகுவ தல்லால். - 74



    820 - பகீர தன்பெருந் தவத்தினாற் புவியிற் பரந்த வானதி யகிலமும் படர்ந்து
    முகேரெ னக்குடைந் தாடநின் றதுபோன் முதிர்ந்த மாதவ முனிவரே யல்லால்
    தகீர் கணீவிரென் றொழித்தல்செய் யாது சார்ந்த வர்க்கெலாஞ் சகசவா ணவநோய்
    உகீரென் றோம்புதாண் டவந்தெரித் தருளு மொருவர் தம்பெருங் கருணையார் தெரிப்பார். - 75



    821 - அகில லோகமு நடுநடுத் திரங்க வன்று வாதுசெய் தூர்த்துவ நடன
    முகிலி னேர்மிடற் றிறையவர் காட்ட முகத்து நாட்டங்கண் முதிர்நறுங் களப
    நகிலி னாட்டிய காளியுந் தவத்தா னங்கை பார்ப்பதிக் கொப்பநல் லுழுவைத்
    துகிலி னார்முக நோக்கிநின் றருளுந் தூய தாண்டவங் கண்டுகொண் டிருந்தாள். - 76



    822 - வேறு
    விழிநீருக மெய்யி னுரோம மிகப்பொ டிப்ப
    மொழிவாயின் விளங்க வெழாது முழங்க வங்கை
    ஒழியாது முகிழ்ப்ப வுஞற்றிய வாடல் கண்டோர்
    கழிகூர்மகிழ் வானட மாடுதல் கைக்கொண் டாரால் - 77



    823 - அயனாடின னாடின னாரண னாய்ந்த சூலப்
    புயனாடின னாடின னீள்புயல் வேணி யீசன்
    மயனாடின னாடினன் வானவர் தச்ச னைங்கைக்
    கயனாடின னாடின னாறிரு கையி னேந்தல். - 78



    824 - விண்ணோர்முழு தாடினர் விஞ்சைய ராடி னார்கள்
    பண்வீணைய ராடினர் பன்னக ராடி னார்கள்
    எண்மாதிர ராடின ரெண்மரு மாடி னார்கள்
    மண்ணோர்முழு தாடினர் மாதவ ராடி னார்கள் - 79



    825 - இருகோடி மருத்துவ ரீரிரண் டோடு நான்கு
    வருகோடி வசுக்கள் வரைந்திடு பத்தொ டொன்று
    தருகோடி யுருத்திரர் சாரு மிராறு கோடி
    அருகாவொளி யாதவர் நால்வரு மாடி னார்கள். - 80



    826 - அறுநான்கினி ராயிர மாமுனி வோர்கள் சித்தர்
    உறுசாத்தியர் பூத ரியக்க ருலப்பில் பேயர்
    தெறுதானவர் தெவ்வு மரக்கர் வேதாளர் கோள்கள்
    எறுழ்நாள்க ளிராசி யுடுக்களு மாட்ட யர்ந்தார். - 81



    827 - மலையாடின வாரிதி யாடின மன்னு மீரேழ்
    உலகாடின வோங்கிய வண்ட மனைத்து மாட
    விலகாத விராட்புரு டப்பெயர் வேந்து மாடிற்
    றிலகீசுர னாடினா டாதவர் யாவ ரம்மா. - 82



    828 - வேறு
    நிருத்த நாடக நேருறக் காண்டொறுங்
    கருத்தின் மிக்க களியா லனைவருந்
    திருத்த மாகத்தஞ் சேவடி தூக்கிநின்
    றருத்தி கூர்தர வாட்டயர் வேலையில். - 83



    829 - ஐய நாடக மாட்டயர் வேகத்தின்
    ஐயன் மெய்யி லணிந்த வராவினம்
    ஐயு ணர்வு மயர்ந்து வருத்தமுற்
    றைய வங்க ணுமிழ்ந்தன வாலமே. - 84



    830 - அரையி னன்றித் தனாக்கை முழுவதும்
    புரிவி னாற்புலித் தோலிறை போர்த்திட்டாங்
    கெரியை வென்றில குந்திரு மேனியின்
    வரிக ளாக வழிந்ததவ் வாலமே. - 85



    831 - மிண்டு மாலத்தின் வேக முடற்றலுங்
    கண்ட நின்ற கடுவெளிக் கொண்டதோ
    மண்டு பாப்பணி வாய்விட மோவென
    அண்ட ராதி யனைவரு மஞ்சினார். - 86



    832 - இரிந்து ளார்சில ரேங்கின ரோர்சிலர்
    பரிந்து காஎன் றிரந்தனர் பற்பலர்
    திருந்து நாடகச் செவ்வியின் மாய்தலும்
    பொருந்த னன்றென் றிருந்தனர் பற்பலர். - 87



    833 - ஒசிய வுள்ளமங் குள்ளவர் யாவர்க்கும்
    பசியுந் தாகமும் பம்பிய தன்னதைக்
    கசியு நெஞ்சினர் கண்ணக லாதமர்
    நொசியு நுண்ணிடைப் பார்ப்பதி நோக்கினாள். - 88



    834 - வேறு
    தனதொரு கூற்றா லன்னபூ ரணியைத் தந்தன ளன்னபூ ரணியும்
    வனமுலை யன்னை மலரடி வணங்கி மற்றெனக் கருள்பணி யாவ
    தெனவுமை யம்மை யெம்பிரா னடத்துக் கெய்திய வனைவரும் பசியான்
    மனமடி வடைந்தா ரன்னநீ வழங்கி வளரெனத் திருவருள் பணித்தாள். - 89



    835 - ஒருகரத் தேந்தும் பாத்திரத் தன்ன மொருகையிற் சராவத்தா னள்ளி
    இருள்வளர் கூந்த லன்னபூ ரணியங் கிட்டன ளொருமுறை யதுபொற்
    பெருவரை யென்ன வளர்ந்தது கண்டு பெருகிய மகிழ்ச்சியா னெவரும்
    மருவினர் முகந்து வாய்மடுத் துண்டு வன்பசி தணிந்தனர் மலிந்தார். - 90



    836 - வரிமுகம் புழுங்கச் சுடரயில் விடுத்த வள்ளிதன் கேள்வனாரிரங்கி
    விரைகமழ் வேணீர் வியவரிற் கொணர்ந்து விடுத்தருந் தாகநோய் தணித்தார்
    புரையற வுடலின் விரவிய வெப்பம் புழைக்கைநீர் துளிக்குமா றுயிர்த்துத்
    தரையிடை யெவருங் குளிர்ப்பமேற் படுத்துத் தந்திமா முகத்தவன் றணித்தான். - 91



    837 - அஞ்சலை யஞ்ச லென்றிரி குநரை யங்கையா லமைத்தனன் வீரன்
    எஞ்சலு றாமை யிரிந்தவர் வருகென் றிசைவுறக் கூவினன் வடுகன்
    தஞ்சமு றாமை யவரவர்க்கிடங்கள் சமைத்தனன் கேத்திர பாலன்
    மஞ்சிவர் நகரங் காவல்செய் தண்டி வருத்தங்கள் வினாயருள் புரிந்தான். - 92



    838 - வேறு
    அனைவரு மகிழ்ச்சி கூர்ந்தா ரம்பலத் தாடு மையர்
    அனையவர் முகத்தி னோக்கி யருளினா லருளிச் செய்வார்
    வனைபுகழ் மன்ற மீதின் வயக்கிய நடன மென்றுங்
    கனைகட லுலகில் யாங்கு மொருவர்க்குங் காட்டி லேமால். - 93



    839 - ஞானத்தா னம்மை யன்றி வேறொன்று நாடாச் சிந்தை
    மோனத்தா னுயர்ந்த தண்டி மொய்த்தநம் மருளா லென்றும்
    வானத்தார் வணங்கக் காவன் மருவுமிம் முத்தி வைப்பின்
    மீனத்தாம் விழவு நோக்கி வியந்தனி ராத லாலே. - 94



    840 - மும்மல மிரிய விந்த முதிர்சுவை நடனங் காணச்
    செம்மலும் பெற்றீ ரின்னுஞ் சிந்தையின் வேட்ட வெல்லாங்
    கொம்மென விரைந்து கொண்மி னென்றனர் குவளைக் கண்டர்
    தம்மடி வணங்கி யாருந் தனித்தனி வரங்கள் கொள்வார். - 95



    841 - கரமலர் முகிழ்த்துத் தாழ்ந்து காலவ முனிவன் சொல்வன்
    அரவக லல்கு லார்த மாசையு நிலனு பொன்னும்
    புரவியல் போக முற்றும் புரையெனப் போக்கி யென்னை
    வரமலி யடியினீழல் வைத்தனை யேனு மெந்தாய். - 96



    842 - இரவிமுன் விளக்குக் காட்டா தாயினு மிருக்குங் காறும்
    விரையு மதனைக் கண்கள் வித்தக மாகு மன்றே
    பரருறு பயத்த தாகும் படிவமு மெனக்கற் றாமாற்
    கரவுசெய் தருளல் வேண்டுங் கடல்புரை கருணை வாழ்வே. - 97



    843 - திருவருள் புரிந்த ஞான்றுஞ் சிறியனே னிரந்தே னீதன்
    றருடணங் காட்டிப் பின்ன ரறைந்தவா புரிது மென்னக்
    கருணையி னுரைத்தி யின்பக் காமர்நா டகமுங் கண்டேன்
    மருள்வள ருடல மின்னே மாற்றுதல் வழக்கே யென்றான். - 98



    844 - புறக்கணி யாத வண்ணம் பூரணன் கடைக்க ணித்தான்
    சிறக்கணித் திட்ட யாக்கை தீர்ந்தது முனிவன் வல்லே
    மறக்கணித் தடர்ப்ப மேலே வருவினை யின்றி யொன்றாய்
    அறக்கணித் தருளு மின்பத் தவசமா யழுந்தி னானே. - 99



    845 - கவலையும் பிறவி வேலை கடந்திடுந் தொள்ள மான
    தவலரு வெள்ளி மன்றின் றனிநடங் காணும் பேறு
    சவலையி லாத சேடன் றன்னினாந் தகைமை யுண்ணிக்
    குவலய நிறத்து மேனிக் கோமுனி வியந்து பின்னர். - 100



    846 - கடகரி யுரிவைப் போர்வைக் கண்ணுதல் பாதம்போற்றி
    நடனமிவ் வெள்ளி மன்றி னாடொறு மடிய னேற்கும்
    உடலிது கழிநாட் காறு முஞற்றுதல் வேண்டு மென்றான்
    அடலைகொண் டணிந்த பெம்மா னங்ஙன மாக வென்றான். - 101



    847 - நாகத்தார் மருமத் தண்ண னடனமிங் கெய்தும் பேறு
    மோகத்தா னன்றே யென்று மோகத்தாள் பாத முன்னி
    மாகத்தார் வியப்ப மைநூற் றனையவார் கூந்தன் மங்கை
    பாகத்தான் சரணந் தாழ்ந்து பட்டிமா முனிவன் சொல்வான். - 102



    848 - இத்தலத் திருக்கை யோர்க்கு மித்தலந் தரிசித்தோர்க்கும்
    உத்தம நடனங் காணு முறுதவத் தவர்க்கு மீளா
    முத்தியை யளிக்க நிற்றி முக்கணா வேட்டு ளார்கட்
    கத்தமும் பொருளு மின்பு மிவையுநன் றருளல் வேண்டும். - 103



    849 - அள்ளலம் படுக ரான வணங்கினர் போக வாழ்க்கை
    எள்ளிநா னடன மொன்றே கண்டுகொண் டிருத்தல் வேண்டும்
    வள்ளலே யென்றி ரந்தான் வரமெலா மளித்து நீண்ட
    வெள்ளியம் பலத்து ளாடும் விகிர்தன்மற் றிதுவு நல்கும். - 104



    850 - படைப்பினை வேட்டு நம்பாற் படர்ந்தனை யாத லாலே
    இடைப்படும் படைப்போர் கூற்றா னெய்துமுன் னுருவந் தாங்கிக்
    கடைப்படா தங்கி ருந்து கடைப்பட வாக்கு நந்தங்
    கொடிப்பெரு நடன நாளுங் கும்பிடிவ் வுருவி னீங்கே. - 105



    851 - மாயனுந் தொல்லை மேனி வாய்ப்புறக் கொண்டோர் கூற்றாற்
    பாயபல் லுயிரை யெல்லாம் பாற்கடல் துயின்று காத்துத்
    தூயவிவ் வடிவி னீங்குச் சுடரொளி வெள்ளி மன்றின்
    நேயநன் னடன நாளு நியதிகொண் டினிது காண்க. - 106



    852 - சூரனா லச்ச மெய்திச் சுரர்கள்வந் தபய மெய்த
    வாரநா மளித்துக் காத்து வதிவித்துச் சூர னாவி
    ஆரனாண் முலைப்பா லுண்ட வமரனால் விளித்தா மற்றால்
    தீரமாங் காஞ்சி வைப்பிற் சிவணுநர்க் கிடும்பை யில்லை. - 107



    853 -
    பகையினான் மண்ணை தன்னாற் பார்த்திவர் தம்மா னோயால்
    தகைசெயு மனுவால் வானோர் தங்களா லவுணர் தம்மான்
    மிகைசெயு மரக்க ரானும் விலங்குசெந் துக்க ளானும்
    புகையழ லானு மீங்குப் புல்லுநர்க் கச்ச மின்றே. - 108



    854 - எந்தமைக் குறித்து நீசெ யெரியழற் குண்டத் தென்றுங்
    கந்தவெண் பூதித் தோற்றங் கழிவின்றி வளர்வ தாக
    வந்தவெண் பூதி போற்று மவர்களும் வேட்ட தெய்திப்
    பந்தமுற் றிரியச் சொன்ன பொருளினாம் பயமுந் தீர்வார். - 109



    855 - ஆனந்த நடன நோக்கி அனைவரு நம்மைப் போல
    ஆனந்த முளத்தி னீட வாட்டயர்ந் தனர்க ளன்றே
    ஆனந்த மருளு நம்மு னன்னண மாடு வோர்க்கும்
    ஆனந்த முறுக வேட்ட பொருள்களு மடுப்ப தாக. - 110



    856 - என்றிறை வரங்க ணல்க விட்டகா மியம்வேட் டோரும்
    ஒன்றுவேட் டோரு மன்றி னுறுநடம் வேட்டோர் யாரும்
    நன்றிசெய் முனிவர் வாங்கு நல்வர நமக்குஞ் சாலு
    மன்றவென் றிரந்து வேறு வரங்கொளா தமைதி பெற்றார். - 111



    857 - ஒன்பதோ டேழு கையி னொளிர்படை தாங்கி நம்பன்
    மன்பதைக் கிரங்கி யாட மலர்புரை கரங்க ளெட்டின்
    மின்படை தாங்கி வாது விளைத்துமுன் னாணி நின்று
    பின்பரு ணடனங் கண்ட பெய்வளை வணங்கிக் கூறும். - 112



    858 - தெவ்வரை முருக்குஞ் சூலத் தேவனே போதி சூழ்ந்த
    இவ்வரைப் பிடைநின் றோங்கு மிரசத மன்றி னாயேற்
    கொவ்வரு நடனங் காண்டன் முதன்மையை யுறுத்தா யன்றே
    எவ்வெவ நாளு மீங்கிம் முதன்மையா னுறுக வென்றான். - 113



    859 - அன்னண மாக வென்றா ரமலனா ரதனைக் கேட்ட
    மின்னிழை யுமையாள் காளி மிளிர்முக நோக்கி யாடத்
    தன்னுளத் தரும்பு மூடல் புலவியாய் வரந்தா னல்கப்
    பின்னது துனியாய் நீடப் பெரிதுமற் றிதனைச் செய்தாள். - 114



    860 - வேறு
    நாடகங் காண்டலின் முதன்மை நம்மது
    பாடகத் தளிரடிப் பாவை மற்றவள்
    பீடுறக் கொள்ளுமே யென்று பிஞ்ஞக
    னோடுசெம் பொன்னிக ருருவி னீங்கினாள். - 115



    861 - பரிசனம் பரதங்கண் டிறைஞ்சு மாதவர்
    வரிசைசெ யமுதர்கண் மற்று ளோரையுங்
    கரிசிறன் கணங்களாற் காதிக் கொண்டுபோய்ப்
    புரிசடைக் கடவுளைப் புலம்பு செய்தனள். - 116



    862 - வாயிலாற் றுனியினை மாற்றி தாதைநற்
    றாயிலா னயமொழி தந்து புல்லுறீஇ
    நீயிலா திருத்துமே நிகழ்முக் கோணமெய்க்
    கோயிலா யென்றவள் குளிர்ப்பக் கூறுமால். - 117



    863 - பல்வகை மன்றினுட் பத்தர்க் கின்னருள்
    நல்வகை மன்றுநல் லனவ வற்றுளுஞ்
    சொல்வளர் நஞ்சிறார் தொழுது போற்றிய
    எல்வளர் மன்றெமக் கினிய வாகுமால். - 118



    864 - எமதுருத் தோன்றியெஞ் சிறார்க ளாகிய
    கமலனு நேமியுங் கழிப்பி வல்வினை
    விமலதை யடைந்துமெய் நடனம் போற்றுறுந்
    தமரமன் றிதுதக வுயர்ந்த தாயினும். - 119



    865 - ஓங்கிய விராத வோங்கன் மீமிசைத்
    தாங்கிய விரசத சபையை நேர்வதன்
    றாங்கது பிரமர்நா ரணர ளப்பிலார்
    நீங்கிய தொழிலராய்ப் போற்ற நின்றதே. - 120



    866 - ஆக்கலு மழித்தலு மாய வூழ்வினை
    நீக்கமில் லார்தொழ நின்ற விச்சபை
    ஊக்கிய நடமுவள் காண்க வச்சபைத்
    தாக்கரு நடனநீ தகவிற் காண்கவே. - 121



    867 - இச்சபை நாடகத் தின்று போலெறுழ்ப்
    பொச்சமில் காளிதான் போற்று மேல்வையின்
    முச்சகந் தொழுதெழு முதல்வி யென்றுநம்
    அச்சொடும் விரவியொன் றாதி தாழவே. - 122



    868 - என்னநல் வரமுமைக் கினிது நல்கினான்
    அன்னமும் பன்றியு மறிவொ ணாதவன்
    மின்னிய விரசத வெற்பி னூழியு
    மன்னிய விரசத மன்றிற் றோன்றினான். - 123



    869 - எண்ணிலர் பிரமர்க ளெண்ணி னாரணர்
    எண்ணில ரிந்திர ரெவரும் போற்றுற
    எண்ணில்பல் லியநனி யியம்ப வாடினாள்
    எண்ணிலாக் கருணையெம் பிராட்டி காணவே. - 124



    870 - முழங்கின துந்துபி முனிவ ரார்த்தனர்
    தழங்கின சிலம்பொலி தாள மேங்கின
    வழங்கின நரம்பிசை வங்கி யத்திசை
    பழங்கணி லெதிரொலி பறம்பு செய்யவே. 5 - 125



    871 -
    ஆடினர் சிலரெதி ராடி யாரணம்
    பாடினர் சிலர்மறை பாடி யின்னருள்
    கூடினர் சிலரருள் கூடி யானந்த
    நீடினர் சிலரிறை நிருத்தம் போற்றினார். - 126



    872 - வரையெலாந் தாண்டவ நாத மல்கிபின்
    தரையெலாம் பரத்தலிற் றரையு ளார்சிலர்
    உரையெலாங் கடந்தொளி ரொருவன் குன்றினும்
    புரையெலாந் தபப்புகுந் தாடல் போற்றினார். - 127



    873 - அன்றுபோ லென்றுமவ் விரண்டு மன்றினும்
    மன்றலங் கடுக்கைவார் சடிலத் தெம்பிரான்
    நின்றருள் நாடக நிகழ்த்து மாருயிர்க்
    கொன்றிய மலப்பிணி யோட்டந் தெய்க்கவே. - 128



    874 - இருசபை யிடத்தினு மீண்டு நாதங்கள்
    ஒருமுறை செவியுறத் தவமு ஞற்றினோர்க்
    கருள்பெற யோகுழந் தாங்குக் கேட்குமப்
    பொருவினா தமும்புறக் கணிக்கும் பெற்றித்தே. - 129



    875 - மன்றினைச் சேயிடை யிருந்து வாழ்த்தினும்
    ஒன்றிய திசையுற நோக்கித் தாழினும்
    நன்றெதிர் நோக்கினார் நவிற்றக் கேட்பினும்
    அன்றிய காதர மவர்கட் கில்லையே. - 130



    876 - அற்றைநா ளந்திவந் தணைய வண்ணலார்க்
    குற்றபூ சனைநனி யுஞற்றி மாதவர்
    பொற்றவெண் கயிலையம் பொருப்பி லேற்றினார்
    கொற்றவீ தியைவலங் கொள்ளச் செய்தனர். - 131



    877 - மன்றிடைத் திருவுரு வரதன் வைகிய
    தன்றைவார் கொடிப்படப் பெற்றந் தாழ்த்தினார்
    வென்றபூங் கழலடி வேந்த ராதியோர்
    நன்றுதம் மிருக்கையை நண்ணி வாழ்ந்தனர். - 132



    878 - பத்திசெய் கோமுனி பட்டி மாமுனி
    உத்தம ரிருவரு முறுதங் கூற்றினாற்
    கொத்துறு வையகங் குயிற்றிக் காத்தருள்
    வித்தக னடந்தொழு நியம மேவினார். - 133



    879 - உலகமுற் றுயிர்த்தரு ளுமையுந் தானுமாய்
    அலகில்பல் லுயிர்க்குநல் லறிவு நண்ணுமா
    றிலகிய விரசத மன்றி னென்றுநந்
    தலைவனைந் தொழினடந் தரநின் றானரோ. - 134



    880 -
    நாயகன் விழவுநா டகமுங் கண்டுமுன்
    பாயமெய்த் தவத்தினர் பலரு முய்ந்தனர்
    ஆயவக் கதைபுகன் றடிய னேனுமின்
    றேயும்வல் வினைப்பவ மிரித்திட் டுய்ந்துளேன். - 135



    881 - அளவினைக் கடந்தொளி ரமல னாடகத்
    தளவினை யென்னறிந் தறைந்து ளேனென்றான்
    துளவினை யணிந்தவ ணாய தூமுனி
    வளவினை தபுமடி வழுத்துஞ் சூதனே. - 136



    882 - உய்ந்தன மடியரே மெழுமைத் தோற்றத்தும்
    உய்ந்தன மெனப்பணிந் துறுவர் கூறுவார்
    மைந்துடைச் சூரினாம் வானு ளோர்பயஞ்
    சிந்திய தென்றுமுன் றெரிக்கப் பட்டதே. - 137



    883 - அக்கதை விளங்குமா றருள்வ தென்றனர்
    பொக்கமின் முனிவரர் புகறல் கேட்டலுங்
    கொக்கிற கணிந்தொரு கோலங் கொண்டருள்
    நக்கனை யுளத்துறீஇ நவிலுஞ் சூதனே. - 138



    நிருத்தப் படலம் முற்றியது.
    ஆகத் திருவிருத்தம் - 883
    ---------

    13. அபயப் படலம் (884-923)




    884 - முக்க ணக்கனை மும்மத வேழத்தின்
    தொக்க ணிந்த சுருதித்தலைவனை
    ம்க்கு வேற்றுமை செய்துவிண் ணோரொடுந்
    தக்க யாகஞ் சமைத்தனன் தக்கனே. - 1



    885 - மாறு பட்டமை நோக்கிய வள்லலார்
    ஏறு பட்ட வெறுழ்வலி வீரனால்
    ஊறு பட்டொழி வெய்தவிண் ணோர்மகம்
    நீறு பட்டற நிக்கிர கஞ்செய்தார். - 2



    886 - பகைஞ னோடுடன் பட்டதொர் பாதக
    மிகைத ணிந்தது வீரன் சவட்டலால்
    தகைகொண் டெஞ்சிய பாதகத் தின்பயன்
    நுகர்வித் தெநொடிப் பானுளத் தெண்ணினார். - 3



    887 - மாயை பாங்கர்மறுவறு காசிபன்
    நேய மாகி நிறையழி காதலில்
    தோயமூவரைத் தோற்ரினர் சூரனே
    சீய மாமுகன் றரகச் செம்மலே. - 4



    888 - மோஅ மாமல மூன்றுமொத் தன்னவர்
    பாக சாதன னெஞ்சம் பதைப்புற
    யாக மாக்க விசாரத் தியற்ரினார்
    ஏக நாத னிடைவரம் வாங்கினார். - 5



    889 - எண்மர் வன்மை யிளக்கினர் மாலயன்
    திண்மை முற்ருஞ் சிதைத்தன ரிந்திரன்
    கண்ம லர்த்தலை வன்க ணுறுந்தொகை
    உண்மை யண்ட மொரானை செலுத்தினார் - 6



    890 - தான வர்க்குத் தகைமை பெருக்கினார்
    வான வர்க்கு வருத்தந் திருத்தினார்
    கான மல்க கற்பக நாடெலாம்
    உன மல்க வொலிதழ லூட்டினார். - 7



    891 - இன்ன வாறவரின்னல் விளைத்தலிற்
    பன்ன கத்தின் பறைவிழத் தாக்கிய
    மன்ன னாதியர் வைகிட மற்றனர்
    கன்னி பாஅன் கயிலையைச் சார்ந்தனர். - 8



    2 - வெள்ளி யங்கிரி வித்தக வெங்களை
    அள்ளி யுண்ணினல் லாற்கத மாறிலாத்
    தொள்லை யுள்லத்துச் சூரனை யஞ்சினேம்
    பொள்ளெ னப்புரட் டாயெனத் தாழ்ந்தனர். - 9



    893 - கருடன் றாக்கிய கட்செவி போலவுந்
    தருமன் றாக்கு நரகர் தகையவும்
    வெருவு முள்ளத்த ராயவிண் ணோர்க்கெலாங்
    கருனை நாதர் கடைக்கணித் தோதுவார். - 10



    894 - தக்க னோடு மகத்திற் றருக்கிய
    மிக்க பாவம் விளித்திலி ராதலால்
    தொக்க செல்லற் றுலைத்தனி ரிவ்வெலாம்
    பக்கு விட்டறப் பன்னுதுங் கேண்மினோ. - 11



    895 - வேறு
    மாயவனே நின்னாலும் மறையவனே நின்னாலு மலர்க்கண் மெய்யின்
    மேயவனே நின்னாலும் விண்னவரே நும்மாலும் விளியா வாற்றல்
    ஆயவனை யெவராலு மடர்ப்பரிது நமதுவிழி யழலிற் றோன்றுஞ்
    சேயவனை யல்லாது தேவர்கா ளவன்வருநா லளவு நீயிர் - 12



    896 - வீங்குபுக ழாதிபுரி யென்றொருவைப் புளததனில் விரவி வாழ்வார்க்
    கேங்கலுறு மிடரில்லைப் பிணியில்லைப் பயமில்லை யிலம்பா டில்லை
    தேங்கலுறும் புகழுண்டு வலியுண்டு நலமுண்டு தேக முண்டு
    தாங்கலுரும் ப்பேரின்ப முளதாகும் தயங்கியவத் தலத்தைச் சார்மின் - 13



    897 - ஆவயிற்சென் றடுத்தலொடு மரியபா தகநும்மை யகல்வ தாகு
    மாவலியி னவுணர்பிரான் றண்டமுநும் வயினினிமேன் மருவா சூட்டுச்
    சேவல்வல முயர்த்தவச்னுஞ் சிறுவரையி னுமக்கிரங்கித் தெவ்வைச் சாடு
    மேவலரை வலியழிக்கு மருதவரை யவணுளது வேக வென்றார். - 14



    898 - வேறு
    வெள்ள நதியிற் பிள்லை வெண்மதி
    தொள்ள மென்ன நள்ளுந் தூமுடி
    வள்லல் விள்ள மருத மால்வரை
    கொள்ளு மொள்ளல் கூரு கென்றனர். - 15



    899 - சிறகர் வண்டு சென்று வீழ்கலா
    நறவ மாலைநாறுந் தோளினார்க்
    குறவி னுள்ல மோகை கொள்ளமெய்
    அறவன் மேன்மை யறத லுற்றனன். - 16



    900 - முருக னென்னு மொய்கொண் மொய்ம்பினான்
    உருகு மன்பர்க் குதவி செய்யவே
    பெருகு காமர்ப் பிறங்க லாயினான்
    அருகின் வேலு மருத மாயதே. - 17



    901 - மருத வண்டு மலர்ப்பொ த்ம்பரின்
    மருதம் பாட வாய்ந்த வேள்வரை
    மருத நின்ற மறுவில் காடிசியான்
    மருத வோங்அ லென்ன மன்னுமே. 8 - 18



    902 - கால வங்கிக் கடவுள் வேணியிற்
    சால வைகுந் தண்பு னனதி
    ஞாலம் வ்ண்டு நண்ணும் வேர்வழி
    மூலம் வந்து முன்ன் கின்றதே. - 19



    903 - வேறு
    அத்தகு தீர்த்த வரவினைக் கேட்டோ ரணிவளர் நம்முல குறுவர்
    அத்தகு தீர்த்தங் கண்ணுறக் கண்டோ ரழகிய நமதரு கிருப்பர்
    அத்தகு தீர்த்தம் படிந்தவர் நந்த மழிவிலாத் திருவுரு வெடுப்பர்
    அத்தகு தீர்த்தம் பருகினோர் நந்த மடியிணை நீழல்விட் டகலார். - 20



    904 - மண்ணிகோட் பட்டோர் மண்னையி னகல்வர்
          மகவிலார் மகவினைப் பெறுவர்
    கண்ணொளி யிகந்தார் கண்ணொளி படைப்பர்
    மண்ணிகோட் பட்டோர் மண்னையி னகல்வர்
          கவினிலார் கவினுருத் திகழ்வர்
    பெண்ணல மிழந்தார் பெண்ணல முறுவர்
    மண்ணிகோட் பட்டோர் மண்னையி னகல்வர்
          பிணியினர் பிணியில ராவர்
    எண்ணிய வரங்கள் எண்ணியாங் கியைவ
    மண்ணிகோட் பட்டோர் மண்னையி னகல்வர்
          ரெனைவரு மனையதீர்த் தத்தால். - 21



    905 - கசியிலா ததனைத் தொட்டிடின் வறக்குஞ் சுசிசெயிற் பண்டுபோற் சுரக்குங்
    கசிவுறு முள்ளத் தடியவர்க் கெம்பாற் கலப்புறக் கரையழிந் தெழுந்த
    வரிபெறு மன்பி னுருப்ப்வை வேனில் வைகிய பொழுதும்வற் றாத
    நொசிவறு தீர்த்த மதுதனை மருத தீர்த்தமென் றகிலமு நொடிக்கும். - 22



    906 - ஆங்கத னயலே கன்னிகை தீர்த்த மதனய லேகந்த தீர்த்தம்
    ஈங்கிவை மூன்றுந் தென்புறச் சார லிருப்பன வ்டபுறச் சாரல்
    ஓங்கிய வனும தீர்த்தமொன் றுளத லுமைமக னிருக்கையின் மேல்பால்
    தாங்கிய வுச்சி வரையிடை யுளது சரவணப் பொய்கையென் றொன்று. - 23



    907 - அருச்சுன தீர்த்தம் போலவே யுரைத்த தீர்த்தமு மறமுத னான்கும்
    வருத்தமொன் றின்றி யளிப்பன வாகும் வைகலு மவ்வரைச்சாரல்
    உருத்திகழ் காம தேனுவுற் றுலாவி யுறுபசி யிரிதர மேய்ந்து
    மருத்திகழ் தீர்த்தம் பருகிநீள் சோலை மலர்நிழ லயர்வுயிர்ப் பதுவே. - 24



    908 - உம்பர்கா ளந்த வரையினைக் கண்டோ ருவப்புறக் கேட்டவர் பணிந்தோர்
    வம்புலாங் கடப்பந் தாரினா னாங்கு வதிதரு முருவழி படுவோர்
    செம்பொனா திகளாற் றிருப்பணி பிறவுஞ் செய்பவ ரிவரெலாஞ் செயிர்தீர்ந்
    திம்பரி னெதிரில் செவரா யும்ப ரின்பெலாங் கைக்கொல்வ ரெளிதின். - 25



    909 - உத்தம மாகி யொளிருநம் முகங்களோரைந்து முமைமுக மொன்றும்
    வித்தக மின்றி யவன்முக மாறாய் விளங்கின வாதலா னமரீர்
    சத்திய்ஞ் சிவமு மெனநினைந் தயில்வேற் சண்முகன் சரணமே சரணா
    அத்தகு வரையி னருந்தவம் புரிமி னவனருள் வழங்குவ னென்றான். - 26



    910 - வேறு
    அண்ன லாரருள் செய்தலும்
    எண்ண முற்றிய தின்றென
    விண்ணு ளார்கள் வியந்தனர்
    மண்ணி னேக வலித்தனர். - 27



    911 - விமல னார்விடை பெற்றனர்
    கமல வாவி கலந்ததோர்
    அமல னாதி புரத்தினைச்
    சமல நோயறச் சார்ந்தனர். - 28



    912 - கான்சி மாநதி கண்டனர்
    வாஞ்சை யோடும் வணங்கினர்
    பான்ச சன்னிய பாணிய
    னஞ்சு ராதிப னாதியோர். - 29



    913 - பரந்த தோயம் படிந்தனர்
    சுரந்த காத றுளும்பமெய்
    நிரந்த ரித்தனர் நீற்றணி
    அரந்தை தீர்கட னாற்றினார். - 30



    914 - கோயி லைகுறு குற்றனர்
    வாயின் முன்னர் வணங்கினார்
    தாயி னுந்தயை யுய்த்தருள்
    நாய னாரெதிர் நண்ணினார். - 31



    915 - அமிழ்த லிங்கத்தி னாதியை
    அமிழ்த ரானவ ரன்புகொண்
    டமிழ்த மெல்லிசை யாற்றுதித்
    தமிழ்த வின்னரு ளார்ந்தனர். - 32



    916 - சூர னச்சந் தொலைத்தனர்
    வார மன்றும் வனங்கினர்
    சாரல் வெள்ளிச் சயிலமேல்
    நார வேணியை நண்ணினார். 3 - 33



    917 - கண்டு கண்கள் கலுழ்ந்தனர்
    தண்டெ னத்தரை வீழ்ந்தனர்
    கொண்ட வன்பிற் குனித்தனர்
    அண்ட காவென் றரற்றினர். - 34



    918 - நல்ல காஞ்சி நதிக்கரை
    எல்லை முற்று மிருக்கைகொண்
    டொல்லி லிங்க முறத்தழீஇ
    வல்ல பூசை வயக்குவார். - 35



    919 - வேறு.
    நாரன னொருபாற் பூசை நடத்தின னளின மேய
    ஆரண னொருபாற் பூசை யமைத்தன னவிரும் வெள்ளை
    வாரன னொருபாற் பூசை வளர்த்தனன் மல்கு வானோர்
    சாரண னொருபாற் பூசை சமைத்தனர் தழைத்த வன்பால். - 36



    920 - விஞ்சையர் கருடர் வீணை வித்தகர் யோகர் சித்தர்
    அஞ்சையு மடக்கு மாண்மை யருந்தவ முனிவர் யாரு
    நெஞ்சிடை யுறுதி யன்பி னிறையொடு வேறுவேறு
    தஞ்செய லடங்க வீசன் றனிச்செயற் பூசை செய்தார். - 37



    921 - அவன்வரை யுமையா ளோங்க லவிரொளி வெள்ளி வெற்புப்
    புயனிகர் மேனிச் செல்வன் பொருப்புயர் மருதக் குன்றென்
    றியலுமைந் தடுக்கன் மாட்டு மிருகம்புனற் றீர்ஹ்ட்தந் தோறும்
    வயமரு ளிறைவ னார்த மலரடி பூசித் தாரால் - 38



    922 - துவன்றியன் னவர்க ளன்பிற் றொழுஞ்சிவக் குறியு ளொன்றிற்
    பவன்றனை நினைந்து போற்ரும் பண்பினர் பகையுந் தேயுங்
    கவன்றவுட் பயமுந் தீருங் கதியவர்க் கொல்லை யெய்தும்
    புவன்றன தடியி னீழற் பொருவில்வாழ்க் கையுமுண் டாமால். - 39



    923 - விண்னவர்க் கபய நல்கி விமலனா ரச்சந் தீர்த்த
    வண்ணமீ தறிமி னென்று மாதவர்க் கியம்பிச் சூதன்
    பண்னவர்க் கிரங்கிச் சூரைப் பறந்தலைப் படுத்து மாட்டுந்
    திண்ணிய மணிவே லண்ணல் செயலினைத் தொகுக்க லுற்றான். - 40
    அபயப் படலம் முற்றிற்று.
    ஆகத் திருவிருத்தம் – 923
    ----------------------

    14. மருதவரைப்படலம் (924-1070)




    924 - கருது வார்க்குக் களிதர வல்லது
    பொருது வார்க்குப் புயவலி யீவது
    சுருதி நீண்முடி போல்வது தூய்மையின்
    மருத வோங்கல் வளத்திற் பெரியதே. 1 - 1



    925 - காம னுக்குநற் கட்டழ குய்ப்பது
    நாம கட்குங் கலைநவில் விப்பது
    பூம கட்குஞ்செல் வம்புணர் விப்பது
    போர்ம கட்கும்வன் போர்த்திறஞ் சேர்ப்பது. - 2



    926 - எண்ணு வார்த மிடர்க டவிர்ப்பது
    கண்ணிற் கண்டோர் கருத்தி னிருப்பது
    விண்ணங் குத்தி மிளிர்ந்த முடியது
    பண்ணை வண்டு பயில்பொழி லுள்ளது. - 3



    927 - கால காலனுங் காமுற நிற்பது
    கோல மானவன் கும்பிடப் பட்டது
    ஞால மீன்றவ னாணுறத் தக்கது
    வேல னேயுரு வான வியப்பது. - 4



    928 - பத்தர் கோமுனி பட்டி முனிவனு
    நித்த நித்த நிரந்தரித் துள்ளது
    சித்தர் வானவர் திப்பிய மாதவர்
    சுத்த யோகியர் சூழ்ந்த பரப்பது. - 5



    929 - எண்மைத் தாய தொழில்சற் றியற்றினும்
    வண்மைத் தாக வரும்பய னுய்ப்பது
    திண்மைத் தாகிய தீமை பெருக்கினும்
    நுண்மைத் தாக நுவலுமுன் மாய்ப்பது. - 6



    930 - வாழை மென்கனி மந்திய யின்றுபோய்த்
    தாழை தாவச் சடசட வீழ்கனி
    கூழை வன்குரக் குக்குலங் கொண்டுகற்
    பூழை யூடு புகுதுமொர் பாலெலாம். - 7



    931 - கன்னி காரங் கருத்துணர்ப் பாடலம்
    வன்னி கொன்றைமந் தாரங் குராமராப்
    புன்னை பிண்டி பொரியரைக் கூவிளம்
    மன்னு நந்த வனங்களொர் பாலெலாம். - 8



    932 -
    மயிலை மாலதி மல்லிகை பித்திகை
    அயின்மு கைத்தள வங்குள விக்குலம்
    பயிலு மாதவி பம்பிய சூழலின்
    இயலும் வண்டி னிசையொரு பாலெலாம். - 9



    933 - நரந்த மென்கனி நாவலந் தீங்கனி
    கரந்து மண்ணுட் கனிபல வின்கனி
    நிரந்த முந்திரி கைக்கனி நித்தலுஞ்
    சுரந்து வாசஞ் சுலாவுமொர் பாலெலாம். - 10



    934 - ஏல மேயில வங்கங்கச் சோலந்தக்
    கோல மாஞ்சியுங் குங்கும முங்கடி
    கால நின்ற கருப்புர வாழையும்
    ஞாலம் வௌளவநன் றாகுமொர் பாலெலாம். - 11



    935 - நாக நீண்முழை நாகங்கண் டச்சுற
    நாக தாளியி னன்கனி பாம்பெனத்
    தோகை மஞ்ஞை தொடர்ந்துமுன் கொத்திநின்
    றூக மோட வுலைக்குமொர் பாலெலாம். - 12



    936 - சரோரு கங்களு நீலமுந் தங்கிய
    பரோடை நீரொடு மட்டை பருகுதோல்
    உரோம நீண்மரத் தொண்குழை வாய்மடுத்
    தரோக மெய்திய தீர்க்குமொர் பாலெலாம். 3 - 13



    937 - கனையெ ருமைம ரங்கள் கனைத்தலுங்
    கனையெ ருமையெ னக்கதழ் வேங்கையங்
    கனைநல் லார்மனு வாற்கட்டப் பட்டன
    கனைம லர்ப்பொழில் காட்டுமொர் பாலெலாம். - 14



    938 - காய வாழ்க்கையர் காய மிவையல
    மாய மென்கொலிவ் வன்மரம் வைகலுஞ்
    சாயை யில்லெனச் சார்ந்த வரையுறச்
    சாயை யில்லாத் தருக்களொர் பாலெலாம். - 15



    939 - விடபத் தேறிநின் றார்க்கு விழாக்களுங்
    கடக வேழமுங் காமரு தேர்களுந்
    தொடர்பி னேனவுந் தோற்றி விடுத்திடி
    னடலை யாக்குநற் றாருவொர் பாலெலாம். - 16



    940 - சருகு காய்கனை வௌளவத் தனாதுழை
    விரவு வாரை விளாரிற் றணிந்தடித்
    தரவிற் சீறிநல் லாவி மடித்திடு
    முரனி லாவும ரமொரு பலெலாம். - 17



    941 -
    சுவானக் குட்டிக டொக்க வெனப்புக்க
    கவான்வ ரைத்தலைக் கண்ட புலிப்பறழ்
    சுவானக் குட்டியிற் காய்பல தோற்றிய
    சுவானக் குட்டிம ரமொரு பாலெலாம். - 18



    942 - வழுத்தும் வேடம காரின மானுடம்
    பழுத்து நிற்பன பார்த்துக் கிலுத்தத்தைக்
    குழுக்கொண் டாடநும் பிள்ளையுங் கூட்டுகென்
    றொழுக்கத் தோடுமி ரப்பொரு பலெலாம். - 19



    943 - தங்கு லத்துறுந் தையல ராமென
    வெங்கு லக்கொடு வில்லினர் பேதையர்
    மங்குல் சூழ்வரை யின்மகண் மாவைக்கண்
    டிங்கு வம்மின்க ளென்பதொர் பாலெலாம். - 20



    944 - கருட வேகத்திற் காடு சுலாவுநர்
    இருடி யாமென்றி றைஞ்சி விடுத்தெழப்
    புருட வன்மிரு கம்புழை வைகிய
    வருடை யாடும்வ ரையொரு பாலெலாம். - 21



    945 - வேறு
    இவ்வாறு பெருவளங்கொண் டேழோ டேழா
    மவ்வாய்மை யுலகனைத்து மணைந்து போற்றுஞ்
    செவ்வாய்மை மருதவரைத் தேத்துந் தேவர்
    ஒவ்வாத பகைமாய்ப்ப்ப வுன்னிச் சார்ந்தார். - 22



    946 - மாலாதி வானவர்தம் வரவு கேளா
    ஆலால மனையவினை யகற்றி யங்கு
    வேலானை நினைந்திருக்கும் வீணைச் செல்வன்
    காலார நடந்தெதிர்போய்க் கண்டு தாழ்ந்தான். - 23



    947 - வருகவரு கெனநெடுமால் வணங்கி னானை
    இருகரமு முறத்தழுவி யெடுப்பி யன்பான்
    முருகனருட் குரியையென முகமன் கூறி
    ஒருவவிது கேட்டியென வுரைக்க லுற்றான். - 24



    948 - ஆயிரங்கண் ணனைவிண்ணி னகற்றி யன்னான்
    சேயிரங்கச் சிறைப்படுத்த தீயோ னச்ச
    மாயிருந்தண் போதிவனம் வந்து மென்பூத்
    தூயிரந்து பரனருளாற் றொலைத்தா மிப்பால் - 25



    949 - அழியாத வரம்படைத்த வவுணர் கோனை
    வழியோடுங் கெடுத்தெமக்கு வாழ்க்கை நல்க
    ஒழியாத வடிமையொரு முருகற் காற்றக்
    கழிகாத லொடுமிங்குக் கடிது புக்காம். - 26



    950 - மாழாந்த வெமக்கிரங்கி மணிவே னம்பி
    தாழாது வினைமுடிக்கத் தக்க வாய்மை
    சூழாவொன் றுரைத்தியெனச் சொன்னான் சொன்ன
    ஏழாழி யுலகுண்டோற் கிருடி கூறும். - 27



    951 - வேறு
    சிவதருமம் பலவற்றுட் சிறந்ததுபூ சனையதனுள்
    அவமில்பல வுபசாரத் தைந்துசிறந் தனவவற்றைத்
    தவமலியப் பதினாறு மண்டலந்தண் டாதியற்றிற்
    கவலையறப் பயனிம்மைப் பிறப்பிடையே கைகூடும். - 28



    952 - ஆங்கவைதா மபிடேக மரியவிரை விளக்குமனுத்
    தாங்குமருச் சனைநிவே தனமாகு மிவைதம்மை
    ஓங்கும்வகை யியற்றுவது முரைப்பக்கேண் மந்தரத்தின்
    வீங்குதிரைக் கடல்கலக்கி விண்ணவர்க்குச் சுதையளித்தோய். - 29



    953 - பருதிகுணக் கெழுமுன்னர்ப் பன்னிரண்டு புதுச்சாலின்
    மருவுபுதுப் புனறுகிலான் வடித்தெடுத்து மணல்பரப்பி
    இருவிநிறை தொறுமேல முதலான திரவியங்கள்
    பெருகுவிரை மலரொடு பெய்துமனு வாலமைத்து - 30



    954 - அரம்பைநெடுங் கனிதிருத்தி யாயிரத்துக் காறுபடி
    சுரந்தமடிப் பசுவின்பால் சொரிந்துசெழுந் தேனறுநெய்
    பரந்தசுவை யக்கார மிவ்விரண்டு படியட்டி
    வரந்தழைபஞ் சாமிரத மணிக்கலத்தி னினிதமைத்து. - 31



    955 - பாங்கான பால்செந்தேன் பன்னியமூ வகையிளநீர்
    ஆங்கான வைந்தமிழ்த மருவிரைச்சந் தனக்குழம்பும்
    ஓங்காரத் துட்பொருளா மொருமுருக னுருவாட்டி
    நீங்காமை யிடையிடையே நிறைநீர்சங் கினிலாட்டல் 2 - 32



    956 - இளநீரை யொருகலத்து மேலாமைத் தனித்தனியே
    அளவார வெடுத்தாட்டி னதிகபல னுறுமைந்தும்
    உளதான வபிடேகத் துயர்ந்தனவாம் விரையிரண்டாந்
    தளராத விலேபனமுந் தயங்குசுகந் தமுமென்ன. - 33



    957 - காசில்பனி நீர்பச்சைக் கருப்பூரங் குங்குமப்பூ
    மாசிலுரோ சனைபுழுகு மான்மதநா வியுங்கலந்த
    வாசிகந்த மலாக்காச்சந் தனமிலே பனமதனைத்
    தேசவிருந் திருமேனி முழுதுஞ்செறி தரக்கொட்டல். - 34



    958 - முல்லையிரு வாட்சிபிச்சி முகைநெகிழ்மல் லிகைபன்னீர்
    நல்லமருக் கொழுந்துவெட்டி வேரிவைநற் சுகந்தங்கள்
    சொல்லுமிவை யோரேழுந் தொடுத்துருவந் தெரியாமை
    வல்லபடி யலங்கரித்தன் மணங்கமழப் புறமெல்லாம். - 35



    959 - ஒருபடிநெய் கொளத்தகழி யுறவுயர மும்பர்பிரான்
    திருவிழியி னளவுமுறத் திகழுமிர சதத்தியற்றிக்
    குருமலியம் மணிவிளக்கங் கிருபாலுங் கொளவிருவிக்
    கருதுகபி லையதிலதேற் காராவி னெய்நிரப்பி. - 36



    960 - செம்பருத்தி வெண்பஞ்சிற் பசுங்கருப்பூ ரஞ்செறித்துப்
    பம்புவிரற் பருமையுறப் பண்ணுதிரி நுதிக்கொளுத்தும்
    வெம்புமெரிக் கொழுந்தெழுந்து பன்னிரண்டு விரலளவை
    வம்பிலதா யிருபகலும் வயங்குவதாம் விளக்கன்றே. - 37



    961 - செய்யதா மரைநூலிற் றிரிகோடல் சிறப்பினதாம்
    ஐயபசுங் கருப்பூர மகப்படா தொழிவுறினே
    கையமரு மாலத்திக் கருப்பூரந் திரிக்காகும்
    நெய்யுரைத்த திலதாய் னேர்ந்தபசு நெய்யுமாம். - 38



    962 - வெள்ளியினான் மணிவிளக்கு விதிப்பரிதேல் விளக்கமுற
    வொள்ளியவெண் கலத்தானு முஞற்றுதலாம் பலவிளக்குத்
    தெள்ளுமுறை யுறுவிக்குந் திறனிலதே லொன்றேனும்
    வள்லலவன் றிருமுன்னர் வயக்குவது மரபாமால். - 39



    963 - சேயிதழ்ப்பங் கயங்கொண்டு சேவல்வல முயர்த்தபிரான்
    ஆயிரநா மமுதநவின்றங் கருச்சிக்க வருச்சனையீ
    தேயுமல ரிலதாயி னிலகியவெண் டுளசியொடு
    தூயபசுங் கூவிளங்கள் தொகுத்தடியிற் றூவுதலாம். - 40



    964 - பால்புரையு மரிசியொரு படிக்குப்பால் படிமூன்று
    சால்பசுநெய் படிகால்சர்க் கரைகழஞ்செண் பதிற்றிரட்டி
    ஏலமொடு சுக்கிடித்த விடிவீசம் படியிரதங்
    காலுமுய ரிளந்தெங்கின் கனியொன்று முறப்பெய்து. - 41



    965 - பாகமுறச் சமைத்ததற்பின் பசுங்கதலிக் கனிபதினைந்
    தோகையொடுந் தோலொருவி யொருங்குபடுத் தினிதெடுத்த
    மாகர்விழை பரமானம் வயங்கவருச் சித்தவுடன்
    ஏகனுக்கு நிவேதிக்க விதுநிவே தனமாமால். - 42



    966 - வளமார விவையைந்தும் வருடமிரண் டுறவாற்றற்
    குளதாகும் பொருளில்லா ருருப்பவிரும் பின்பனியே
    இளவேனின் முதிர்வேனி லெனும்பருவ மூன்றினிலும்
    அளவாரச் செயினுரைத்த வவதியுமாற் றினராவார். - 43



    967 - முப்பருவத் தினுமவற்றை முற்றுவிக்குந் திறனிலரேற்
    செப்பியவா றுள்ளகத்துச் செய்தொருசா ரினிதுவதிந்
    தொப்பரியான் மனுவயுத மொருநாளைக் குறக்கணிக்கின்
    எப்பொருளு மவர்க்கெய்து மிடர்முழுதும் விரைந்தறுமே. . - 44



    968 -
    எனமகதி யாழ்முனிவ னியம்புதலு முலகுண்டோன்
    மனமகிழ்ந்து கமலன்மக வானிமையோர் புடைசூழ
    அனகனுயர் வரையேறி யருச்சுனமூ லத்தினெழும்
    பனிவிரவு நறுந்தீர்த்தம் படிந்தாடிக் கடன்முடித்தான். - 45



    969 - புரந்தரனை நான்முகனைப் புலவர்குழாத் தினைநோக்கி
    அரந்தைநமக் கறவேண்டி னருந்தவன்சொற் படிநீயிர்
    பரந்தபொருள் கொணர்ந்தேவற் பணிபுரிகென் றானன்னார்
    சுரந்தமகிழ் வினராகித் தொழிறலைநின் றனர்புரிய - 46



    970 - ஆராத பெருங்காத லகந்திளைப்ப மருதவரைச்
    சீராரும் பெருமானைத் தேவர்கள்சிந் தாமணியை
    வாராரு முலையுமையாள் மகிழ்தூங்குங் குலக்கொழுந்தைக்
    காராரு நிறத்தினான் கடப்பாட்டிற் பூசித்தான். - 47



    971 - நாரதன்செப் பியமுறையே நாரணன்பூ சித்திருப்ப
    வாரணமும் பல்லியமு மரகரவோ தையு மயங்கப்
    போரணவும் வீரர்களும் பூதர்களும் புடைநெருங்கக்
    கூரணவும் படைவேற்கைக் குமரவே ளெதிர்நின்றான். - 48



    972 - வேறு .
    ஓராறு மணிமுடியு மோராறு திருமுகமு மொராறு வாயும்
    ஈராறு மலர்விழியு மீராறு குழைச்செவியு மிராறு தோளும்
    போராரும் படிபலவுந் தராரும் வரைமார்பும் புலம்புந் தண்டைச்
    சீராருஞ் சேவடியு மழகெறிப்ப நின்றானைத் திருமால் கண்டான். - 49



    973 - வானவர்தங் குலமுழுது முய்ந்தனவென் குலமுழுதும் வாழ்ந்ததின்றே
    தானவர்தங் குலமுழுதுஞ் சாய்ந்ததெனு மோகைதலை சிறப்ப வல்லே
    தேனறுந்தண் மலர்தூவிச் சேவடியின் மணிமோலி தீட்டி யும்பர்
    ஆனவர்கள் சிவசிவவென் றார்ப்பவலம் வந்துதுதி யாரச் செய்வான். - 50



    974 - வேறு
    முரண்மணி யிமைக்கு மோலி முடிகெழு முருக போற்றி
    மரணமும் பிறப்பு நீத்தோர் மதிவள ரமுத போற்றி
    இரணவல் லவுண ராவி யிறுத்திடு மிறைவ போற்றி
    அரணென வெம்மைக் காக்கு மறைகழ லறவ போற்றி - 51



    975 - இருள்கெட விளங்கி யேற்றோர்க் கின்னருள் வழங்கி முத்தி
    மருவினர் கன்ம மோர்ந்து மறைமுடிப் பொருள்க ளெல்லாந்
    திருகற விளக்கி யொன்னார்ச் செற்றுவண் குறவர் மாதோ
    டருள்வளர் நகைகொண் டாடு மறுமுகத் தலைவ போற்றி. - 52



    976 - வேறு
    ஐயருக் கேந்தி யுக்கஞ்சேர்த் தூரு வமைத்தொளி ரங்குசங் கடாவி
    வையிலை யெஃகும் வட்டமுந் திரித்து மார்பொடு மமைந்துதா ரோடு
    தையுறப் பொலிந்து மீமிசைச் சுழன்று தடமணி யிரட்டிவான் பொழிந்து
    தெய்வமங் கையர்க்கு வதுவைசூட் டயர்ந்து திகழும்பன் னிருகர போற்றி. - 53



    977 - நிழல்சுளித் தெழுந்து குலாலன்சக் கரம்போ னேரலர் நெடுங்களத் தலமந்
    தழல்விழித் துருமிற் பிளிறிமும் மதமு மருவியிற் சலசல பொழிந்து
    சுழல்வளி யெழுப்பி முறச்செவி யசையத் துதிக்கையின் வளிநிலங் குழிப்பக்
    கழலடிப் பொருந ருயிருணுங் களிற்றிற் காட்சிதந் தருள்பிரான் போற்றி. - 54



    978 - முருகுகொப் பளிக்கு மடுக்கிதழ்ப் பொகுட்டு முளரியுங் குமுதமு மறியப்
    பொருகய லுகளுஞ் சரவணப் பொய்கை பொலிவுற யினிதுவீற் றிருந்தங்
    கருகுவந் தடுத்த மீன்முலை யருந்தி யாக்கையி னிளமையோ டியையத்
    திருகுவன் கோட்டுத் தகரிவர்ந் தூருஞ் செல்வநின் றிருவடி போற்றி. - 55



    979 - ஓமெனு மொழியி னுறுபொருள் வினாவி யுள்ளவா றுரைத்திட வல்லா
    நாமகள் கொழுநன் றனைச்சிறைப்படுத்து நறுமலர்க் கொடுங்கணைக் கழைவிற்
    காமனை முனிந்த கண்ணுதற் பரமன் காமுறக் குருமொழி கொடுத்த
    சேமமே மருத வரைவள ரமிழ்தே திருவருள் வழங்குக வென்றான் - 56



    980 - வேறு
    மதுவுயிர் குடித்தவன் வழுத்தி நிற்றலுங்
    கதுமெனத் திருவுளங் கருணை கூர்தர
    விதுவணி சடையவன் விழியிற் றோன்றிய
    முதுமறை முடியினன் மொழிகின் றானரோ. - 57



    981 - நமதுரு வாகிய நவிரத் திவ்வயின்
    நமதுரு வுளத்திடை நாட்டி வானுளீர்
    நமதடிப் பூசனை நன்றி யற்றினீர்
    நமதருள் வழங்குது நாட்டம் யாதென்றான். - 58



    982 - கடம்பணி புயத்தினான் கரையக் கேட்டனர்
    இடம்படு வானவ ரெழுந்து துள்ளினார்
    உடம்பிடித் தடக்கையி னொருவ னின்புறக்
    குடம்படு கூத்தினான் குழைந்து கூறுவான். - 59



    983 - வேறு
    பருதி வானவ னொளிகெட மூவிரு முகனும்பல் கதிர்வீசித்
    திருவெ லாந்தர நிற்பது காண்டலிற் றிசைகணான் கொடுமேல்கீழ்
    மருவு மூவிரு வைப்பினுஞ் சூரனால் வதிதரு கொடுங்கோன்மை
    இருளெ லாமிற்றை வைகலே யிற்றதென் றெண்ணின மிவணெந்தாய். - 60



    984 - செம்மை யம்புயத் தேமலர் வென்றொளி திகழ்தரு முகந்தோறும்
    விம்மு தண்கரு ணைக்கட லூற்றெழ விளங்குமிவ் விருநாட்டம்
    அம்ம கண்ணுறக் காண்டலி னுரைத்தவா றிடத்தும்வா ழடியார்பால்
    இம்மை யும்மையென் றிரண்டுமார்ந் தனவென வெண்ணின மிவணெந்தாய். - 61



    985 - உருத்தி ரப்பெய ரண்ணலார் பதினொரு வருங்கொடி கணைகண்டை
    வருத்து தோமரம் வச்சிர மங்குசம் வனசம்வாண் மழுத்தண்டம்
    பருத்த வார்சிலை யாயருட் சத்தியே சத்தியாய்ப் பகர்நின்கை
    இருத்தல் காண்டலி னிறந்தன பகையென வெண்ணின மிவணெந்தாய். - 62



    986 - கடிநி லாவிய வெட்சிமா லிகைமுடிக் கவினக்காண் டலின்வென்றிக்
    கொடிநி லாவிய தானவர் கோட்டத்துக் குரங்கியல் லாந்தன்னோ
    மிடிநி லாவிய சயந்தனை முதலிய விண்ணவர் குழாமென்னும்
    படிநி லாவிய பசுவுமீண் டனவெனப் படர்ந்தன மிவணெந்தாய் - 63



    987 - என்று நாரண னியம்பலு முருவலித் தெம்பிரா னெதிர்நோக்கி
    ஒன்று மஞ்சலி ரிற்றைநா ளேபடை யொடுநடந் தொன்னாரைக்
    கொன்று நும்பதி யருளுது மெனவிடை கொடுத்துவல் லெறுழ்ப்பூத
    வென்றி யம்படை யெழுகென வியவரின் வியன்முர சறைவித்தான். - 64



    988 - அமரர் தச்சனை யழைத்துவீ ரர்கண்முத லாந்தலை வருக்கெல்லாஞ்
    சமர வன்பெருந் தேர்களுங் கரிகளுந் தாவுமான் களுமாக்கித்
    திமிர மன்னமெய் நிறத்தினர்க் கதிசயஞ் செய்வன கொடுவென்னாக்
    குமர நாயக னருளினன் யவனனுங் குயிற்றின னவர்க்கீந்தான். - 65



    989 - வீர வாகுவை விளித்தனன் வீரர்க ளிலக்கத்தெண் மருமண்ட
    மார மாக்கினோன் முதலிய தலைவர்நூற் றெண்மரு மடுபோரிற்
    கோர மேபுரி யிராயிர வெள்ளமாங் குழிவிழிக் கணந்தாமும்
    யாரு நீவியங் கொளப்படு வாரென வீந்தன னதிகாரம். - 66



    990 - வாழி முப்புரங் குறுநகை யாலெரி மடுத்தவன் சிறுமைந்தன்
    வாழி வேலவ னடியவர் குழாமெலாம் வாழிவை யகம்வாழி
    வாழி விண்ணவர் சூரன்மே னம்படை வகுப்பெலா மெழுகென்னா
    வாழி வண்முர செருக்கினர் வியவரி னுணர்ந்திடு மியவோரே. - 67



    991 - அலக்க ணித்தலும் வானவர்க் காற்றிய வவுனர்தம் படைமுற்றுங்
    கலக்கத் தக்கசா ரதர்களுங் சாரதத் தலைவருங் கவினார்ந்த
    விலக்கத் தொன்பதின் மரும்பரி கரியெழி லிரதம்பா கர்கள்பண்ணி
    நலக்கத் தந்தெதிர் தொழவவற் றிவர்ந்தனர் நாளொடு கோளஞ்ச. - 68



    992 - முருக வேளுடன் வருகவென் றருளலு முகுந்தனு மலர்த்தேவும்
    பெருக யாகநூ றியற்றிய வரையனும் பிறங்கிய சுரர்யாரும்
    உருகு காதலிற் றொழுதெழு முனிவரு முவந்துதத் தமக்கேற்ற
    திருகி லாதநற் சிறப்பொடு தோன்றினர் சயசய சயவென்றார். - 69



    993 -
    மிக்க சாரதப் படையிரா யிரவெள்ளம் வீரர்விண் ணவர்யாருந்
    தொக்கு மேவுறக் கொண்டுபல் லாயிர வண்டமுந் துனைந்தோட
    முக்க ணாயகன் மனத்திடைத் தோற்றிய முழுமணிப் பொலந்தேரைத்
    தக்க மாருத வலவன்முன் றரவிவர்ந் தருளினான் தனிவள்ளல். - 70



    994 - வேறு
    படகந் திண்டிமம் பணவமா னகங்கிணை பம்பை
    துடித டாரிசல் லரிதக்கை துந்துபி யுடுக்கை
    குடமு ழாமுர சாகுளி தொண்டகங் குளிரும்
    இடிப லாயிர முழங்கிய தெனவியம் பினவால். - 71



    995 - மடைவ யிர்க்குலங் காகளம் பீலிவண் டாரை
    குடவ ளைக்குலங் குழலின மழையெனக் குமுற
    மிடையும் பல்வகை யாழ்களு மெல்லிசை யெழுப்ப
    உடைய நாயகன் விருதெழுந் துலம்பின முறையான். - 72



    996 - வடிநெ டும்படை மிளிர்ந்தன மிளிர்ந்தன மணிப்பூண்
    கொடிநி ரைக்குலந் துவன்றின துவன்றின குடையுங்
    கடிகொள் சாமரை மறிந்தன மறிந்தகால் வட்டம்
    பிடியன் னார்நடைச் சிலம்புகள் சிலம்பின பெரிதும். - 73



    997 - நிரந்து நால்வகைப் படைகளும் புடைவர நிமலன்
    பரந்த நானிலம் பொறாதெனப் பனிவிசும் பாறா
    விரைந்து முந்துறக் கிரவுஞ்ச விலங்கலை யடுத்தான்
    சுரந்த சேனையோ டெதிர்த்தனன் றாரகத் தோன்றல் - 74



    998 - படைக டூண்டியு மத்திரம் விடுத்தும்பட் டிமைகள்
    அடைய மாயைக ளாற்றியு மமர்த்ததா ரகனை
    உடைய நாயக னோங்கிய சிலம்பொடு மொறுத்துத்
    தடையெ லாந்தபச் சூரன்வாழ் நகர்ப்புறஞ் சார்ந்தான். - 75



    999 - வரையி னோடுத னிளவலி னுயிர்தப மாட்டித்
    திரையு நீர்க்கடற் றடையெலாஞ் சிறுவரை கடந்து
    புரையி லாநகர்ப் புறத்துவே ளடுத்தமை கேளா
    வரைய னாகிய சூரனு மழலுயிர்த் தெழுந்தான். - 76



    1000 - வேறு
    காசிபன் மாயையைக் கலந்து தோற்றிய
    வாசிறு மிருநூறா யிரவெள் ளத்தரும்
    பேசிய விவர்வழிப் பிறந்த வீரரும்
    ஏசின்முன் னுள்லவ ரெவரு மீண்டினார். - 77



    1001 - இரதமுங் கரிகளு மிவுளிப் பந்தியும்
    விரவிய கொடிகளும் விளங்குந் தொங்கலும்
    வரமலி கவிகையு மாதி ரந்தொறும்
    பரவுறச் சூர்மகன் பரித் தேகினான். - 78



    1002 - வஞ்சகன் வரவினை மதித்து வானவர்
    அஞ்சின ரமர்கோ னாகம் வேர்த்தனன்
    கஞ்சனுங் கலங்கினன் கலங்கு கின்றதோர்
    நெஞ்சினைத் தேற்றின னெடிய மாயனும். - 79



    1003 - வேறு
    அறந்தலை திரிந்த பதகன்போர் புரிய வாடலம் படையொடு விரையப்
    பறந்தலை யடுத்தா னென்றுநா ரதன்போய்ப் பணிந்துநின் றுரைத்தமைகேளா
    நிறந்தழை கடப்பந் தாரினா னிரத நெரேலெனச் செலுத்திநே ரடுத்தான்.
    மறந்தழை திணிதோள் வீரரும் படையு மறலினர் தூசிமே னடந்தார். - 80



    1004 - சூலம்வெங் கணைவே லபயமும் வலப்பாற் றொடிக்கையி னிடக்கையின் வரதஞ்
    சாலும்வண் கதைவில் பாசமுந் தயங்கச் சந்திரன் மணிமுடி யெறிப்பக்
    கோலமுற் றமைந்து மடங்கலூர்ந் திருபாற் குவிமுலை மாரிவ் விருவர்
    ஏலும்வண் பலகை வாளொடு மேவ லியற்றுசூ லினியுமு னடந்தாள். - 81



    1005 - வேறு
    வெம்பு பசிக்கண் மெலிந்தவர் வெய்ய நறுஞ்சுதை கண்டெனப்
    பம்பை மலிந்த பறந்தலைப் பாடமர் முன்பு கிடைத்திடாத்
    தும்பை மலைந்தெழு மள்ளர்கள் சூழ்நெடுங் காலமும் வாழ்கெனத்
    தம்பர மாமிறை யோர்களைச் சாற்றினர் போர்கள் தொடங்கினார். - 82



    1006 - கொடிக ணுடங்கவை யத்தொடு கொம்மென வைய மெதிர்ந்தன
    வெடிகொண் முழக்கொடு வேழமும் வேழமும் வேறு மலைந்தன
    படிசிதர் கொள்ள நடம்பயில் பரியொடு பரிக ளமர்த்தன
    வடிகழல் கட்டிய தானையுந் தானையு மாறுகொண் டேற்றன. 3 - 83



    1007 - செல்பல வேழந் திமிங்கலந் திமிங்கல கலங்க ணிகர்த்தன
    பல்பரி யுந்திரை செத்தன பல்கிய கூர்ம நிகர்த்தன
    வெல்பல கைக்குலம் வாளைகள் வீழ்ந்தன வேலொடு வாள்களுந்
    தொல்படைத் தேர்கல னொத்தன சூழ்கட லொத்தது தானையே. - 84



    1008 - ஒள்ளிய பாய்விரி கூம்புக ளொத்தன வோடிர தக்கொடி
    விள்ளுடல் வார்குரு திப்புனல் வித்துரு மக்கொடி போன்றன
    தெள்ளிய வீரர் விழிப்பன சேர்வட வாமுகம் வென்றன
    மள்ளர் தெழித்தெழு மோதைகள் வாரிதி யோதை மலைந்தன. - 85



    1009 - ஆகமந் தாங்கிய மீனமு மாரண மீட்டருண் மீனமும்
    மாகர் நறுஞ்சுதை யுண்ணிய மந்தரந் தாங்கிய கூர்மமும்
    ஆகி யவுணத் தலைவர்க ளாடம ரிற்கைமி குந்துராய்
    வேக நெடும்படை சாரத வேலை துளும்ப வுழக்கினார். - 86



    1010 - செங்கையின் வார்வலை வீசிய செம்ம லரிகர புத்திரன்
    ஐங்கர னொத்தவு ணப்படைக் கதிபர்த மாற்ற லழித்தெதிர்
    பொங்கிய தானவ மாக்கடல் போகுயர் மந்தர மத்தென
    வெங்கண் விறற்சிலைப் பாரிட வீரர் துளும்ப வுழக்கினார். - 87



    1011 - தானவர் வேலை கலங்கலுந் தானவர் கோள்விறன் மைந்தர்கள்
    வானவர் மேலடர் நஞ்சென வன்மைகொள் பூதரை யோப்பினார்
    ஆனநஞ் சுண்டமர் தேவென வையென வீரவா குப்பெயர்
    மானவன் கைத்திறங் காட்டியம் மைந்தரை மாய்த்தொளி தோற்றினான். - 88



    1012 - கணங்கண் மகிழ்ந்தெழுந் தாடின கவந்த மனந்தநின் றாடின
    துணங்கைகொண் டாடின பேயினந் துன்றின வன்கழு குக்குலம்
    வணங்கல கின்பருந் தின்குலம் வானுயர் பந்த ரியற்றின
    பிணங்கண் மலிந்த பறந்தலைப் பெட்பி னெருங்கின நாய்நரி. - 891



    1013 - எங்கு முடைந்த பொலஞ்சக டெங்கு முலந்த கடாக்கரி
    எங்கு மடிந்த வயப்பரி யெங்கு மடங்கிய மள்ளர்கள்
    எங்குந் துணிந்த திணிந்ததோ ளெங்குந் துமிந்த நிமிர்ந்ததாள்
    எங்குங் குறைந்த முடித்தலை யெங்குங் குரைக்குநெய்த் தோர்நதி - 90



    1014 - வேறு
    இன்ன வாறு சேனையோ டெதிர்த்த மைந்தர் வீழ்கள
    முன்னர் நோக்கி நன்றுநந்த மொய்ம்பி னாற்ற லின்னினி
    ஒன்ன லாரை யாவியுண் டொழிப்ப லென்று காய்ந்தகான்
    வன்னி யென்ன நேர்ந்துளான் மடங்கன் மாமு கத்தனே. - 91



    1015 - சுரிகை யாய்தங் கப்பணஞ் சூல நேமி யீட்டிவாள்
    பரசு பிண்டி பாலம்வேல் பாசங் குந்த முசுண்டிவச்
    சிரமெ ழுக்க ழுக்கடை சிலைகு யங்க லப்பைதண்
    டுரிமை கொண்ட பூதர்கண் டொல்லை மேல டர்த்தனர். - 92



    1016 - வரைதி ரண்ட பலபுய மடங்கன் மாமு கத்தன்மேல்
    திரைதி ரண்ட வேலைவீழ் செல்லெ ழுந்து மேருவின்
    நிரைதி ரண்ட தாரைக ணிரப்பு கின்ற தாமென
    உரைதி ரண்ட பூதர்க ளொண்ப டைவ ழங்கினார். - 93



    1017 - தேக முட்டி நோன்படை சிதர்ந்து வீழ நீண்முழை
    நாக நின்று சிங்கமொன்று நாக மேல டர்த்தெனப்
    பாக மல்கு தேரிழிந்து பல்லி தழ்ப்ப டுத்தவன்
    சாக ரத்தை யொத்தபூதர் தங்கண் மேற்ப டர்ந்தனன். - 94



    1018 - வேறு
    மன்னி ரும்படை சுமந்த கைத்திரளின் மல்கு பூதர்சில ரைத்தழீஇச்
    செந்நெல் வாரி யெனத்த ரைக்கணுயிர் சிந்த மோதியயல் வீசிடு
    நன்னர் நெல்லுநவை வையும் வேறுற நடந்தி றுக்குமெரு மைத்திரள்
    என்ன வன்கழலி னாற்று கைத்துயி ரிறுக்கு மெற்றியு மொறுக்குமே. - 95



    1019 - நோக்கினாற் சிலரை மாய்க்கும் வன்மொழி நொடிப்பி னாற்சிலரை வீக்கும்வார்
    மூக்கி னீடிய வுயிர்ப்பி னாற்சிலரை மொத்து மத்தமிஉகு சிங்கமாய்த்
    தாக்கு மாயனு நடுங்க வீரர்கள் சழங்க நீளிரதம் யாவையும்
    ஓக்கி யொன்றன்மிசை யொன்றை யொய்யென வுடைக்கு மூழியழ லொத்துளான். - 96



    1020 - இலக்க வீரருமொ ரெண்ம ருந்தலைவர் யாரு மேற்றபல பூதரும்
    நிலக்கண் வீழ்ந்தவச மாக நோக்கியய னின்ற வீரபுய னேர்ந்தவன்
    அலக்க ணெய்தசிலை யாயி ரங்களு மறுத்து நீடமர் விளைத்துயிர்
    கலக்க மெய்தின னறிந்து மைந்துமிகு கந்த வேளிரத முந்தினான். - 97



    1021 - வேறு
    கண்டு சிங்கமுக னங்கிவிழி கால மொழிவான்
    அண்ட ராருயி ரளிக்கவரு கின்ற னையிதோ
    மண்டு போர்நுமரை மாய்த்தனை விடுத்து மிளமை
    கொண்டு ளாய்குறுகு நுந்தையிடை யென்ற னனரோ. - 98



    1022 - வெய்ய சிங்கமுக கேண்மொழியின் வெற்றி யுளதோ
    கையி னாலெமது வென்றிநனி காண்டி யினிநீ
    உய்ய வேண்டினிமை யார்சிறை யொழித்தி யிலையேல்
    ஒய்யெ னப்படை வழங்குரைய லென்ன முருகன். - 99



    1023 - மான மேலெழ மடங்கன்முக னாயி ரநெடுங்
    கூனல் வான்சிலை குடங்கைகொடு வாளி சொரிய
    ஞான நாயக னகைத்தொருகை நாட்டு சிலையால்
    ஊன மாகவரு கோல்கணை யுறுத்தி னன்மிக. - 100



    1024 - மீட்டும் வெய்யவன் விடுந்தொறும் விராவு கணைகள்
    வீட்டி யன்னவன் விறற்சிலை விளங்கு துவசஞ்
    சேட்டு மாமணி முடித்திரள் செறித்த கவயம்
    ஓட்டு பாகிரதம் யாவையு மறுத்து ரறினான். - 101



    1025 - மாம டங்கன்முகன் வஞ்சின முரைத்து வெகுளாத்
    தோம ரங்குலிச மாதிக டுறுத்தமர் செய்தான்
    ஆம னைத்தையு மடர்த்தமரர் தொல்ப டைகளு
    மேம மின்றியற வென்றன னிராறு புயனே. - 102



    1026 - இரண்டு பாணிசிர மொன்றுதக வேனை யசிரந்
    திரண்ட கைத்தொகுதி தீர்ந்தவன் விசாக னெதிர்போய்
    முரண்டி கழ்ந்தவிது வல்லையெனின் முன்னு தியெனத்
    திரண்ட தண்டமொரு கைக்கொடு சினந்த ணவினான். - 103



    1027 - வல்லை யேலென வுரைத்தமை மதித்து முருகன்
    நல்ல வேற்படை விடுத்தில னகைத்தொ ருகரம்
    புல்லு வச்சிரம் விடுப்பவவன் போர்க்க தையினை
    ஒல்லை நுண்டுகள் படுத்துயிரு முண்ட ததுவே. - 104



    1028 - ஆயி ரந்தலை யிரட்டியுறு மங்கை யிளவன்
    மாயி ருஞ்சம ருழந்துயிர் மடிந்த தறியாக்
    கூயி ரங்கியொரு சூரனுயிர் கொண்டு வலிகொண்
    டேயி ரங்குவது மாங்கொலென வெண்ணி முனைவான். - 105



    102 - வேறு
    இந்த வண்ட வரைப்பி னேழ்தலை யிட்ட வாயிர வண்டம்வாழ்
    வெந்தி றற்படை வீரர் சார விளம்பு வீரென விண்டனன்
    தந்தை நன்றென வொற்ற ரோடினர் சாற்ற யாரு மிறுத்தனர்
    அந்த ரம்புவி வேலை மாதிர மற்ற வெற்றிட மாதலே. - 106



    1030 - வந்து முந்தி யிறுத்த தானவர் வாய்தன் முட்டி நெருங்கிமேல்
    இந்த வண்ட நெடுஞ்சு வர்ப்புற னெல்லை முற்றுற வீண்டலின்
    அந்த வந்த வகன்ற வண்ட மிருந்து ளாரங் கிருந்துளார்
    முந்து தானவர் வாய்தல் விண்டபின் முன்னு வாமென வுன்னியே. - 107



    1031 - சிங்க மாமுக னொத்த வாண்மையர் சிற்சி லாயிரர் தாரகப்
    பைங்கண் வேழ முகத்த னொத்தவர் பற்ப லாயிரர் மைந்தனாம்
    வெங்க திர்ப்பகை யாற்றல் கொண்டவர் வேறு வேறுபல் லாயிரர்
    அங்கி மாமுக னொத்த வீர ரனேகர் தானவர் தானையுள் - 108



    1032 - முக்கண் வேழ முனிந்த வேழ முகத்த னொத்தவ ரெண்ணிலார்
    நக்கன் வென்ற கயத்தை யொத்திடு நாம வேலின ரெண்ணிலார்
    ஒக்க வண்டம் விழுங்கு கொக்கினை யொத்த நோன்மைய ரெண்ணிலார்
    மிக்கு யர்ந்த சலந்த ரப்பெயர் வீர னொத்தவ ரெண்ணிலார். - 109



    1033 - அந்த காசுரன் முப்பு ரத்தவ ராண்மை விஞ்சுசு ராக்கன்வாள்
    விந்தை மாட்டிய தார காசுரன் வெய்ய பண்டன் மயிடனென்
    றிந்த மானவ ராதி யாமெறு ழாள ரொத்தவ ரல்லது
    மைந்து தாழ்ந்தவ ரில்லை யில்லை மலிந்த தானவர் தானையுள். - 110



    1034 - அங்க ணங்க ணுரைத்த வண்ட மடுத்த வேதர்க ணாரணர்
    தங்கு வச்சிர ரும்பர் மாதவர் தங்க ளாற்ற லழித்தவர்
    நுங்கி டாதவ ரத்தர் மாயை நுனித்த றிந்தவர் விஞ்சையிற்
    சிங்கி டாதவர் மன்ன வர்க்குயிர் செத்து நன்றிசெய் சிந்தையோர். - 111



    1035 - ஆய வாயிர மாயி ரங்கர மாயி ரஞ்சிர மந்தமா
    மேய வாக்கையர் வேங்கை மாமுகர் வேழ மாமுகர் யாளியோர்
    சீய மாமுக ரெண்கு மாமுகர் சிம்புண் மாமுகர் வன்பகை
    மாய வாடமர் செய்யு மேழக வன்மு கத்தரு மெண்ணிலார். - 112



    1036 - வேறு
    மடங்கரிய தானவர்கண் மல்குதலை நோக்கி
    இடங்கழிகொள் வாருளர்கொ லெம்மவரி னென்னா
    உடங்கமரர் புள்ளுருவ மாகியொழி வுற்றார்
    தடங்கிரி முழைத்தொகுதி சார்ந்தயர்வு யிர்த்தார். - 113



    1037 - பூதர்க ணடுங்கினர்கள் பூதர்தலை வோர்கள்
    வேதனை யுளத்திடை மிகுத்தன ரிலக்கர்
    ஆதபுதல் காண்டலரி தென்றுள மயர்த்தார்
    நாதனுள னென்றுநவ வீரர்வலி கொண்டார். - 114



    1038 - இத்தகைமை யாதுமிறை நோக்கிநகை செய்து
    தத்துபரி பூண்டசக டத்தைநொடி முன்னர்
    எத்திசையு மேகவினி தூர்கவென விண்டான்
    அத்தனுரை கொண்டுவளி யங்ஙன முகைத்தான். - 115



    1039 - மண்டில முறுத்தமணி வையமிசை நின்றே
    அண்டர்தொழு மாறுமுக னம்புபல கோடி
    கொண்டொரு தொடைக்கமைதி கொள்ளவமர் செய்தான்
    மிண்டியம ராடல்புரி வெய்யவர்கள் தம்மேல். 116 - 116



    1040 - ஒறுத்தன பொலஞ்சக டொறுத்தகவி கைக்கா
    டறுத்தன முடித்தலை யறுத்தன வெறுழ்தோள்
    இறுத்தன பகட்டுர மிறுத்தன கழற்கால்
    கறுத்தவுண ராவிகளை கந்தன்விடு வாளி. - 117



    1041 - பக்குவிடு நீரன பசும்பொன்மனை மக்கள்
    ஒக்கலிவை யேயல வுடம்புமுட லின்கண்
    தொக்குறு முறுப்புமறி கென்றுதுணி வித்த
    புக்கவுண ராவிகள் புயக்குமிறை வாளி. - 118



    1042 - தீவினைய ரேனுமிறை செங்கையயி லம்பாற்
    சாவவர மாற்றினர்க டானவர்க டம்முட்
    சாவுடலை வாளிகொடு தள்ளவட வைக்கட்
    பூவுலகி னோற்றனர்கள் போரவுணர் சில்லோர். - 119



    1043 - மக்களு மிவர்க்குதவு மார்க்கமில ராவர்
    இக்கொடி யரைக்கதியி னேற்றுது மெனத்தான்
    புக்கதென வேள்பகழி போரவுண ராக்கை
    மிக்குலவு கங்கைநதி யாதியிடை வீழ்க்கும். - 120



    1044 - குய்யக வுலோகர்மகிழ் கொள்ளவவ ணுய்க்கு
    மையநெடு நேமிவரை யப்புற மிருந்து
    நையலகை யாதிநவை யோர்க்குமிரை யாக்கு
    மெய்யன்விடு வாளியுயிர் வீத்தசுரர் காயம். - 121



    1045 - எண்டிசையு மண்டலமு மீண்டினரை யுண்டு
    விண்டல மிடைந்தவர்தம் வெவ்வுயிரை மாந்தி
    அண்டம்வளர் பித்திகையி னப்புற மலிந்த
    கண்டகரை யுங்கடித யின்றகுகன் வாளி. - 122



    1046 - ஒளிதழுவி நின்றவரை யண்ணலென வுன்னா
    திளையரென வெள்ளினவ ரின்னுயிரு நீப்பர்
    தெளிமினென யாவரையுந் தேற்றுவன போன்ற
    வளியிலரை யட்டுலவு மாறுமுகன் வாளி. - 123



    1047 -
    திண்ணிய படைத்தகுவர் தேகமுழு தட்டு
    வெண்ணிண மளைந்துகறை மெய்முழுது மாடித்
    துண்ணென வெழுந்துசுடர் வாளிதுரி சோவ
    வண்ணவரை தோருடலு ராவுவன மாதோ. - 124



    1048 - சிறுபடைய ரேனும்வலி மிக்கவர் சினந்தால்
    உறுபடைக ளாற்றுவது முண்டுகொல் சமர்க்கண்
    அறுமுக னொருத்தனொரு கைச்சிலையி னம்பான்
    முறைமுறை யிறுத்தபடை முற்றுமுயிர் மாய்ந்த. - 125



    1049 - பாதக ருடற்பரிச மானபழி தீரக்
    காதலொடு மாடுவ கடுப்பமுரு கேசன்
    கோதைபயில் வார்கணைகள் கொங்குகமழ் கங்கை
    ஓதமுத லானபல தீர்த்தமு முறந்த. 6 - 126



    1050 - வேறு
    இறுத்த தானைக ளிறந்தபி னெங்குநெய்த் தோரும்
    அறுத்த பல்வகைத் துணிகளு மழனும்வா னளவும்
    வெறுத்தி டங்கெட வித்தக னோக்கின னகைத்தான்
    ஒறுத்த முப்புர மெனத்தழ லுண்டுநீற் றியதே. - 127



    1051 - தடைப்பட் டப்புறத் திருந்தவர் தடைதபு தலுமே
    மிடைத லுற்றனர் வெடிபட முழங்கிமுன் போல
    அடைத லுற்றவர் தம்மையு மறுத்தண்ட வழிவிற்
    படையி னோர்கணை தொடுத்தன னடைந்தனன் பகவன். - 128



    1052 - அனைத்துந் தானைக ளிறந்தமை யவுணர்கோன் பாரா
    நினைத்தல் செய்குவா னின்மலன் வரமிருப் பதனால்
    எனைக்கொல் வாரிலை யிளையவன் றன்னையான் வென்று
    வினைக்கண் வீழ்ந்துளா ரையுமெழுப் புவலென வெகுண்டான். - 129



    1053 - விரைந்து தேரினைச் செலுத்திமே லடர்ந்தனன் பூதர்
    வரைந்த பூதர்தந் தலைவர்க ளிலக்கர்வன் வீரர்
    நிரந்து வேறுவே றாடமர் விளைத்தனர் நீங்கக்
    கரந்தை வேய்ந்தவன் கான்முளை கடுகத்தே ருகைத்தான் - 130



    1054 - இருவ ருஞ்சிலை வாங்கின ரெறுழ்க்கணை தொடுத்தார்
    பொருது மாதிரஞ் சுற்றுவர் கடறொறும் புகுவார்
    கருவி வானென விசும்பிடைத் தோற்றுவர் கரப்பார்
    அருவி மால்வரை தொறுஞ்சம ராற்றியே யடுப்பார். - 131



    1055 - மண்ணிற் கீழுல கனைத்தினு மரீஇச்சம ருழப்பார்
    விண்ணிற் பல்வகை யுலகமும் விராய்ப்படை தொடுவார்
    துண்ணென் றின்னண மமர்த்துழிச் சூரன்மே லண்ட
    வண்ண வாய்தலை வழக்கற வடைத்தமை கண்டான். - 132



    1056 - இளையன் சூழ்ச்சியு மென்னென்ப தெனக்கனன் றங்கை
    வளைவில் வார்கணை பன்முறை தொடுத்தனன் வாய்தல்
    வெளிகண் டப்புறத் திருந்தவர் தங்களை விளித்தான்
    தெளிவி லான்செய லறிந்தனன் றேவரைப் புரப்போன். - 133



    1057 - செங்கை வைகிய படைகளுட் சிலபடை நோக்கித்
    தங்கு மாயிரத் தேழெனு மண்டமுஞ் சாரா
    அங்க ணங்கண்வை கியவரட் டர்களுயிர் மாந்தி
    இங்கண் வம்மினென் றியம்பின னப்படை யெழுந்து. - 134



    1058 - வேறு வேறுபல் லுருக்கொடு விரைந்துபோய் விசாகன்
    கூறு மாயிரத் தேழெனு மண்டமுங் குறுகி
    நீறு செய்துவல் லவுணரை மீண்டுநின் மலன்கை
    ஏறி முன்புபோ லிருந்தன விதுகண்டு சூரன். - 135



    1059 - ஆங்கு நின்றறை கூவிப்போ யப்புறத் தண்டத்
    தோங்கி னானுட னேகியங் குடன்றமர் புரிந்தான்
    காங்கெ யன்கடுஞ் சூரனம் முறையண்டந் தோறும்
    நீங்கி னானுட னேகினா னிமலனும் பொருது. - 136



    1060 - அண்ட மாயிரத் தெட்டினு மவுணர்கோ னுழைய
    விண்டி டாதுடன் புகுந்தமர் விளைப்பதும் வியப்போ
    மண்டு மாருயிர்க் குயிரதாய் வதிந்தண்டந் தோறுங்
    கொண்டு கொண்டுசெ லொருமுத லாகிய குமரன். - 137



    1061 - கந்த வேளுந்த னுடன்வரச் சிலபகல் கழித்திட்
    டிந்த வண்டம்வந் திறுத்தனன் மாயைசூழ்ச் சியினால்
    அந்த மில்லதோ ரமிழ்தமந் தரமெனு மடுக்கல்
    வந்தி டுந்திற மியற்றினன் மாண்டவ ரெழுந்தார். - 138



    1062 - தம்பி மைந்தர்க டானவத் தலைவர்தா னவர்கள்
    உம்ப ரச்சுற வனைவரு மொழிவின்றி யெழலுங்
    கம்ப மற்றிடுஞ் சூரன்மிக் குவகையிற் களித்தான்
    வம்பு முற்றிய கனவிதென் றுள்ளக மதியான். - 139



    1063 - முருக வேளது நோக்கின்ன் முருவலித் தங்கை
    ஒருப டைக்கல முகைத்தன னுரையெழு முன்னர்ப்
    பொருத நின்றதா னவர்களைப் பொருப்பொடும் பொடித்த
    தருளி லாதவ னயர்ந்தன னாற்றினன் மாயை. - 140



    1064 - எண்ணின் மாயையு மெதிர்நிலா தழிதர வீற்றின்
    வண்ண மாமர மாயினன் வஞ்சகன் மணிவேல்
    அண்ண லேவின னதுகிழித் தந்தரப் புனலின்
    மண்ணி நீளுடன் முன்புபோன் மலர்க்கைவாழ்ந் ததுவே. - 141



    1065 -
    இருது ணிபடக் கிடந்தவ னெழுந்துகுக் குடமும்
    பொருவி மஞ்ஞையு மாய்ச்சமர்க் கெதிர்ந்தனன் புனிதன்
    வருக வென்றருள் விழிக்கடை வழங்கினன் மலம்போய்
    அருணி லைக்கிலக் காயின வாங்கிரு புள்ளும். - 142



    1066 - சேவல் வண்கொடி யுயர்த்தினன் சிறைமயி லூர்ந்தான்
    மூவர் தம்முத லாகிய முக்கணான் புதல்வன்
    தேவர் பூமழை சொரிந்தனர் தேவர்தஞ் சிறையை
    நீவி விண்குடி யேற்றின னிலத்திடை மீண்டான். 3 - 143



    1067 - கமலம் பூத்திடத் தீர்த்தமொன் றகழ்ந்துபே ரூரின்
    அமிழ்த லிங்கத்தி னருச்சனை புரிந்துசென் றமரர்
    தமது வைப்பெனப் போற்றுறு மருச்சுனச் சயிலங்
    குமர நாயக னமர்ந்தனன் குவலயம் போற்ற. - 144



    1068 - மருத வெற்பிடை வதிதரு முருகனைப் பணிவோர்
    பொருவி லன்னவன் புகழ்களைக் கேட்பவர் தாமும்
    ஒருவி வன்பகை வெறுக்கைபெற் றும்பரா யீற்றில்
    அருளொ டுங்கலந் தானந்தத் தவசராய்த் திளைப்பார். - 145



    1069 - அங்கண் மாநிலஞ் சுமதியென் றறையுநான் மறையோன்
    பொங்கு தீவினை புரிந்தவன் புரையில்வான் கதியில்
    தங்கி னானெனி னாதிமா புரத்திடைத் தவத்தால்
    நங்க ணாதனை நாடுவார்க் குறாதது முளதோ. - 146



    1070 - என்று கூறலு முனிவரர் சூதனை யிறைஞ்சி
    நன்று கூறினை யுய்ந்தன நவைபயில் சுமதி
    ஒன்றும் வான்கதி யுற்றன னென்றனை விளங்க
    மன்றவோதுதி யெனவெதிர் வழங்குவன் சூதன். - 147

    மருதவரைப்படலம் முற்றிற்று.
    ஆகத்திருவிருத்தம் - 1070
    -------------

    15. சுமதி கதிபெறு படலம் (1071- 1134)




    1071 - பங்கயப் பொய்கை யுகளும் பருவரால் பாய்ந்து முட்டத்
    துங்கக் கமுகின் மடறுமியப் பைங்கனி கள்சொரி யாநிற்குந்
    தெங்கு மிடைந்த மகாராட்டிர மென்னுந் தேயந் தன்னில்
    தங்கு மறையோ னொருவன் றகும்பெயர் மற்றெச்ச தேவன். - 1



    1072 - அன்னா னெடுநா ளருந்தவங்க ளெச்சங்க ளாற்றி முக்கண்
    முன்னோ னருளான் மனைக்குரிமை பூண்ட முகிலன்ன கூந்தல்
    மின்னே ரிடையாண் முலைகறுப்ப்பக் கண்குழிய விளர்ப்ப மாமை
    நன்னா ளிடையே யுயிர்த்தா ளொருமைந் தனகர் கொண்டாட. - 2



    1073 - தமர்களுடன் மகிழ்ந்து தாதைசடங் கனைத்துந் தகவி னாற்றிச்
    சுமதி யெனுநாம மிட்டழைத்தான் றோன்றலுமப் பெயருக் கேற்பத்
    திமில மறைபயின்று தெள்ளிப் பலகலையுஞ் சீல மாதி
    அமைதி பெறவொழுகி யாறடுத்த வொருபதாண் டாயு ளுற்றான். - 3



    1074 - தெய்வ மறையோன் சிவதாமா வென்றொருவன் சீர்சால் கற்பின்
    தையன் மனைவி வயிற்றுதித்த பேரழகின் றனயை தன்னை
    உய்யு நெறிபலவு முள்ளா னிவற்களித்த லூழா மென்று
    கையி னறும்புனலோ டீந்து கடியயருங் காட்சி கண்டான். - 4



    1075 - திமிரப் பிழம்பைத் தெளித்தெடுத்து வார்த்தனைய தேம்பெய் கோதைக் கோலம்
    குமரி நலன்முழுதுங் கூட்டுண்டு வாழுநாட் குமர னான
    சுமதி யெனும்பெயரான் றோடவிழ்ந்த கொன்றையந்தார்த் தொல்லோன்
    அமரர் தொழும்விழவு நோக்கப் பருப்பதத்தை யடைத லுற்றான். - 5



    1076 - வேறு
    மல்லி கார்ச்சுன மால்வரை நாயகன்
    புல்லம் வார்கொடி யேற்றிப் புவிதொழச்
    செல்லு நல்ல திருவிழ வின்வளம்
    எல்லி யும்பக லுந்தொழு தேத்துநாள். - 6



    1077 - அமிழ்தந் துய்க்கு அமையத்துப் பித்துறீஇ
    உமிழ்தல் செய்து விடத்தையுண் டாலெனக்
    குமிழ்த ருங்கொடி நாசியொ ருத்திபால்
    இமிழ்த ரும்படி யெய்திய வூழினால். - 7



    1078 - வீதி யின்வள நோக்கவெ ளிக்கொடு
    போது வான்கவி னாற்பொலி வுற்றொரு
    மாதர் வீதி வளங்கண்டு புக்குழி
    ஆத வன்கதி ராலயர் வெய்தினான். - 8



    1079 - பந்தர் நீண்டு பனிப்புது நீருகுத்
    திந்தி ரன்புர மெய்திய தாமெனச்
    சுந்த ரங்க டொகுத்ததொர் மாளிகை
    முந்து றக்கண்டு முன்கடை நண்ணினான். - 9



    1080 - மணமுஞ் சீதமும் வௌளவிச் சிறுவளி
    அணவி வெப்பம கற்ற வயர்வுயிர்த்
    துணர்வு மீக்கொ ளுவகைய னாய்மனைப்
    புணர்கின் றார்திறங் கேட்கப் புகன்றனன் - 10



    1081 - மழைத வழ்ந்தெழு மாளிகை யின்னதில்
    தழைவ ளத்தொடு தங்குகின் றார்தமை
    விழைகின் றேற்கு விளம்புதி யென்றனன்
    உழைநின் றானொரு வன்கிளப் பானரோ. - 11



    1082 - வேறு
    திருந்திய விந்நகர்த் தேத்துச் சீர்மிகுந்
    திருந்திடு மந்தண ரிருக்கை நாப்பணே
    பொருந்திய வாழ்க்கையோர் புனித வேதியன்
    அருந்தவத் துயிர்த்தவ ளழகி னெல்லையாள் - 12



    1083 - பொன்னொளி திகழ்தரு பொருவின் மாமையான்
    மன்னுமே மாங்கியென் றுரைக்கு மாண்பினாள்
    அன்னவ ளிந்நக ரமர்ந்த வாழ்க்கையோர்
    தொன்னெறி வேதியன் றுணைவி யாயினாள். - 13



    1084 - இடைநில நாடொறு மினைந்து தேய்தரப்
    புடைபரந் தெழுந்தபூண் முலைகள் போர்மதன்
    கொடைபயி லிருநிதிக் குப்பை யாமென
    நடைபயின் மங்கையாம் பருவ நண்ணினாள். - 14



    1085 - நாண்மட மச்சநற் பயிர்ப்புத் தோட்டியும்
    ஆண்மைசெய் பாகனு மணியுந் தூசமும்
    ஏண்மலி நிகளமு மிரியக் காமமாம்
    மாண்மதம் வீறலின் வரம்பி கந்தனள். 5 - 15



    1086 - குருகைப் புழைக்கையால் வளைத்தக் குஞ்சரம்
    வருமுலைக் கோட்டினான் மார்ப ழுத்துபு
    மருமலி யுவளக வனத்தி லாடவர்
    திருவெனுங் கவளம்வாய் தெவிட்டிச் செல்லுமே. - 16



    1087 - மங்கையிற் பெருங்கவின் மருவ லான்வளை
    அங்கையா னாகிய வணங்குக் காற்றல்வீழ்
    துங்கமா தவரெனத் துறந்து ளோருளும்
    இங்கிவள் விழிவலைக்கிடர்ப்ப டாரிலை. - 17



    1088 - தந்தையே யாகநற் றமைய னாகவச்
    சுந்தரி விழிவலைத் துவக்குண் டானெனிற்
    பிந்துற வருவன வருகெ னாப்பிழைத்
    தந்தின்மென் முலைதழா தகறற் பாலனோ. - 18



    1089 - புனையிழை யிவள்செயல் புனலொ டேற்றவன்
    அனைவரும் புகறர வறிந்தும் பன்முறை
    மனைவயிற் கண்டுமென் மரபு குன்றிற்றென்
    றினைபவன் கோறலை யெண்ணி னானரோ. - 19



    1090 - கோறலுக் குடன்படுங் கொண்கன் செய்தியைத்
    தூறலுக் குடம்படுந் துணைவி முன்றெரிந்
    தாறலைத் திருநிலத் தடக்கிப் பொன்னினும்
    வேறலைச் செய்தனள் வீத்த வெம்பழி. - 20



    1091 - நாண்டகு மறையவர் நல்ல சேரியின்
    வேண்டியாங் கொழுகுமவ் வினைமுற் றாமையின்
    மாண்டகு பரத்தையர் வாழிவ் வீதியிற்
    காண்டகு மிம்மனை கவினச் செய்தனன். - 21



    1092 - அரத்தகச் சீறடி யருப்புக் கொங்கையாள்
    பரத்தையர் தொழிலெலாம் பயின்று காளையர்
    வரத்தினை யேற்றிவண் வதிகின் றாளென
    விரித்தன னிதுவினா யிருக்கும் வேலையில். - 22



    1093 - பரியக நூபுரம் பாதத் தேங்கிட
    விரியொளி மேகலை யரையின் மின்செய
    வரியளி குலங்கள்வார் குழலிற் சூழ்தரத்
    தெரியிழை மாதரா ளாங்குச் சென்றனள். - 23



    1094 - சிறுவளி படர்வழித் தேம்பெய் கோதையின்
    உறுமன மெழவுகைத் தொல்கி நின்றனள்
    முறுவலித் தொருமுலை தோற்றி மூடினள்
    நறுமலர் விழிப்படை சிறிது நாட்டினாள். - 24



    1095 - முறுகிய காதலின் மொத்துண் டாலென
    உறுவளி நாசியி னுயிர்த்துச் செம்மலைப்
    பெறுவதற் கருந்தவம் பெரிது மாற்றினேன்
    மறுமையு மிம்மையும் வழுவி லேனென்றாள். - 25



    1096 - துடித்தன வெனக்கிடத் தோளுங் கொங்கையும்
    வடித்தவேல் விழியுநல் வரைப்பிற் பல்லியு
    நொடித்தன விரிச்சியு நுவலப் பட்டன
    கடைத்தலைக் குமரநிற் காண்டற் கென்றனள். - 26



    1097 -
    நென்னலின் வைகறை நீங்கு மெல்லையில்
    தன்னிக ரில்லதோர் தரள மாலிகை
    கன்னியென் கரந்தரக் கனவி னேனிதோ
    நின்னையுய்த் தளித்தன ணிமலை யென்றனள். - 27



    1098 - அயலவர் போற்கடைத் தலைய மர்ந்தனிர்
    வியன்மனை நுமதியா னும் வேறலேன்
    பயின்மனை யுவளகம் படர்கம் வம்மினென்
    றுயிரினு முரிமைசெய் தொண்கை பற்றினாள். - 28



    1099 - வேறு
    ஏமாங்கி விழிக்கணை யோடெழின் மார னெய்த
    வீமாண் கணை பட்டுள மற்றுவி கார மென்னுந்
    தீமாந்த வருந்திய பூசுரன் செங்கை யன்னாள்
    தூமாண்கரத் தாற்றொடச் சோர்ந்தழி யாவி பெற்றான் - 29



    1100 - உருவத்திடை யோங்கி யுருக்கு முலப்பி னோய்க்கும்
    பருவத்தொடு நல்கு மருந்துபல் கோடி யுள்ள
    புருவச்சிலை கோலி விழிக்கணை பூட்டி மாதர்
    வருவித்திடு நோய்க்கவ ரல்லது மற்று முண்டோ. - 30



    1101 - விண்ணோங்கி வளர்ந்த பருப்பத மீது நெற்றிக்
    கண்ணோங்கிய நம்பன் விழாக்கவின் கண்ட பேறே
    பண்ணோங்கிய மென்மொழி யாள்கரம் பற்றிற் றென்னா
    எண்ணோங்கிய நெஞ்சோ டெழுந்துட னேகி னானே. - 31



    1102 - மலர்மெல்லணை மாதொடும் வைகினன் மாதி னேவல்
    அலர்மென்குழ லார்சிலர் சாந்த மலங்கன் மாலை
    பலவுங்கொடு முன்னுற வேந்தினர் பைம்பொ னங்கி
    குலவுஞ்சும திக்கணி யாக்கி டானுங் கொண்டாள். - 32



    1103 - வேறு
    மாடகத் திவ்வு நல்லியாழ் மதுரமெல் லிசைகா தூட்டிப்
    பாடகத் தளிர்மென் பாதப் பைங்கிளி யரிய லூட்ட
    ஆடவர் திலக மன்னா னநங்கவேள் சரங்கள் பாய
    ஓடரித் தடங்க ணங்கை யுருவினைத் தழுவிக் கொண்டான். - 33



    1104 - தாதிய ரெழினி வீழ்த்துத் தணந்தனர் புறத்துப் போத
    மாதினை யிடப்பான் முன்கை வலக்கையிற் சாய்த்துப் புல்லிப்
    போதிவர் கூந்தல் சோரப் புணர்முலை வருடிப் பின்னிச்
    சோதிவெண் டரளச் செவ்வாய்ச் சுவையமிழ் தாரத் துய்த்தான். - 34



    1105 - ஓதியு நுதலு நீவி யோடரிக் கடைக்க ணக்கிச்
    சோதிய கவுள்கை மூல மாதிகள் சுவைத்டுக் கொங்கை
    ஆதிகள் புடைத்துக் கிள்ளி யங்கையாற் பிசைந்து தாள்கள்
    நீதியி னல்குன் மாட்டு நிகழ்த்துவ பலவுஞ் செய்தான். - 35



    1106 - மூடிக மயூர பாத முழுமதி பாதித் திங்கள்
    தோடவி ழுற்ப லாதித் தொகுகுறி நகத்தாற் பல்லாற்
    பாடுறத் தோற்றிப் பூஞை பன்னகங் குக்கு டாதிப்
    பீடுறு கரண பேத நாடொறும் பிறங்கச் சேர்ந்தான். - 36



    1107 - அறிந்தவ ரொருவ ரில்லா வயனக ராத லாலே
    பறிந்திட நாணுஞ் செய்யும் பற்பல வொழுக்கும் விட்டுச்
    செறிந்தொரு காலத்திற் றானுந் தெரிவையு மொருங்கு துய்த்துப்
    பிறிந்திலனாகிக் காமப் பித்தினிற் பெரியவ னானான். - 37



    1108 - இன்பமுஞ் சுமதி தன்பா லின்பமுஞ் சமமாக் கொண்டும்
    பொன்பல வணியு மற்றும் புகழொடு மறிவி னோடுந்
    தன்பர மாக்கிக் கொண்டு தபனிய மில்லா ரென்மாட்
    டன்பின ராயி னென்னா மகல்கென்றாள் வளரே மாங்கி. - 38



    1109 - இளமையே கவினே கீர்த்தி யெறுழ்கலை யிங்கி தத்தின்
    வளமையே யன்பே நல்ல வருணமே யேக போகம்
    விளைவுசெய் திறனே மற்று மிக்குள ரேனும் பொன்னில்
    தளர்வின ராயி ஞ்சே யிருமனத் தைய லார்க்கு. - 39



    1110 - இருமனப் பெண்டுங் கவரு மேமமாந் திருவை நீக்குங்
    கருவியென் றறிஞ ரஞ்சக் கலங்கஞர் சுமதி யெய்திப்
    பொருவிறன் றாதை யானோன் புரோகித வுரிமை பூண்ட
    வெருளறு காசு மீர கண்டத்து வேந்தைச் சார்ந்தான். - 40



    1111 - தெரிவுறு குரவன் மைந்தன் தேம்பிய வறுமை நோக்கி
    எரிமணிக் கலனுந் தூசு மிரணியக் குவையு நல்கி
    உரிமைசெய் தரைய னேவ வொய்யென மீண்டு காளை
    வரிசையி னொடுமே மாங்கி வளமனை யகத்துப் புக்கான். - 41



    1112 - என்னுயிர் வந்த தோவென் றெதிர்கொடு வணங்கி யென்னே
    முன்னர்யா னசதி யாட மொய்பொருட் கேக லாமோ
    வன்னதுங் கவலை யின்றி யாடுதற் கேது வென்றே
    பின்னுறத் தடாமை நின்றேன் பெருமவந் தனையே யென்றால். - 42



    1113 - நகையினா னல்ல வல்ல நவிற்றினும் பெரியோர் மாட்டுந்
    தொகைபடு மின்ன னம்பாற் சூழ்வதொன் றன்றொ வென்று
    தகையெழில் வாடு வேற்குன் றாமரை முகத்தைக் காட்டி
    மிகைவள மளித்தா யுய்ந்தே னென்றனள் விழிநீர் வாக்கி. - 43



    1114 - பருகுவ தன்ன காமர்ப் பைந்தொடி பொய்மெய் யாக
    உருகினன் வருந்த லென்னா வோடரித் தடங்க ணின்றும்
    பெருகிய புனலைத் தானைப் பெட்பொடுங் கரங்கொண் டொற்றி
    முருகிய கூந்தல் பின்னி முன்புபோ லிருந்தாள் சின்னாள். - 44



    1115 - பூவிரைச் சாந்த மாதிப் பொருள்கொளா தொழிது மேனும்
    ஆவியி னன்ன காளா யமுதுணா திருத்த லாமோ
    நீவிரைந் தளித்த யாவு நீங்கின வென்றே மாங்கி
    ஓவியம் வாய்விண் டென்ன வுரைத்தனள் சுமதி கேட்டான். - 45



    1116 - கரவிலர் தம்மைச் சார்ந்து காஞ்சன மிரந்து நல்கி
    விரவினன் சின்னாட் பின்னர் விடலைய ரோடுஞ் சென்று
    பரவுமுற் கலதே யத்திற் பகர்பர்க்க தேவ னில்லின்
    இரவிடைப் புகுந்து செம்பொ னாதிக ளெடுத்தா னன்றே. - 46



    1117 - எடுத்திடு மரவங் காதி னெய்தலும் விழித்துப் பார்ப்பான்
    அடுத்தனர் கள்ளர் கூவென் றகத்திடைத் துயில்கின் றாரைப்
    புடைத்தன னெழுப்ப வல்லே பூசுரன் றலையை வீட்டி
    மடுத்தபல் பொருளி னோடு மீண்டவள் மனையைச் சார்ந்தான். - 47



    1118 - உடங்குபோய் மீண்ட தூர்த்த ருயிர்க்கொலை புரிந்து பாவந்
    தொடங்கிய சுமதிக் கன்று துராசார னெனும்பேர் நாட்டி
    விடங்கனி விழியி னாட்கும் வெங்கொலை கூற வன்னாள்
    குடங்கையிற் செவ்கள் பொத்திக் குழைந்துளத் திதனைக் கொண்டாள். - 48



    1119 - வேறு
    கைதவ மிழைத்தலுங் களவு செய்தலும்
    ஐதுயிர் கோறலு மறத்தைக் கோறலும்
    பொய்தவ வுரைத்தலும் பொருளி ழத்தலும்
    எய்திய காமத்தி னன்றி யில்லையே. - 49



    1120 - நன்றியைக் கோறலும் நலனைக் கோறலும்
    வெம்றியைக் கோறலும் விவேகங் கோறலும்
    துன்றிய வொக்கலைத் துறந்து நிற்றலும்
    கன்றிய காமத்தி னன்றி யில்லையே. - 50



    1121 - பகையினை யாக்கலும் பாவ மாக்கலும்
    நகையினை யாக்கலு நவையை யாக்கலுந்
    திகைமன மாக்கலுஞ் சிறுமை யாக்கலும்
    அகைதரு காமத்தி னன்றி யில்லையே. - 51



    1122 - பிணிபல துறுத்தலும் பேது செய்தலுந்
    துணிதரு பெரியவர் தொடர்பு நீங்கலுந்
    தணிதரு சிறியவர் சார்புண் டாகலும்
    அணிதரு காமத்தி னன்றி யில்லையே. - 52



    1123 - உயிரினு மோம்பிடத் தகுவ யாவையும்
    அயர்வுசெய் தயர்வுசெய் தொழிக்கத் தக்கதாய்ச்
    செயிரின யாவையுஞ் செறிக்க வல்லதாய்ப்
    பயிலிய காமநோ யஞ்சற் பாலதே. - 53



    1124 - வருணமு மொழுக்கமு மல்லற் கற்பொடும்
    ஒருவியன் பனைச்செகுத் துலப்பி றீங்குமுன்
    மருவின மின்னுநம் மாட்டு ளாரினும்
    வெருவுறு கொலைப்பழி மேவற் பாலதோ. - 54



    1125 - என்றுளத் தெண்ணியே மாங்கி யன்புமிக்
    கொன்றிய சுமதியை யொழிப மற்றவன்
    துன்றிய பெருநிதித் தோற்றங் காட்டினிம்
    மன்றலங் குழல்வய மாமென் றெண்ணினான். 5 - 55



    1126 - தேங்குநீர் மாளவ தேயத் தெய்தினான்
    ஆங்குமோ ரந்தண னாவி மாற்றினான்
    வீங்கிய பொருளொடு மீண்டு சென்றுவிண்
    ஓங்குமே மாங்கிவா ழுறையு ளண்ணினான். - 56



    1127 - தேவரும் விழைதகுந் திருவன் னாளிவன்
    நீவவு நீங்கல னீண்ட விந்நகர்
    பாவியின் பொருட்டுநாம் பற்றி யப்புறம்
    போவதே கடனெனப் போயி னாளரோ. - 57



    1128 - பிரிவுறு மன்றிலிற் பேதுற் றன்னவன்
    தெரிவையைக் காணுவான் றேடிச் செல்வுழிக்
    கரிபல திரியுந்தென் கயிலை யெல்லையின்
    விரியிணர்க் கானிடை விழுந்து மாய்ந்தனன். - 58



    1129 - பருப்பதந் தாழ்ந்தவப் பரிசின் வெள்ளியம்
    பொருப்பய லிறந்தவன் புலாலு டம்பினை
    விருப்பொடு நாய்நரி மிசைய வீர்த்துப்போய்த்
    திருப்பொலி காஞ்சியந் தீர்த்தத் திட்டவே. - 59



    1130 - ஆதியம் புரத்திடை யாக்கை வீழ்ந்ததும்
    போதிவர் காஞ்சியம் புனலிற் றோய்ந்ததுங்
    கோதினை முழுவதுங் குமைத்தச் செம்மலைச்
    சோதிதன் சிவபுரச் சூழல் சேர்த்தவே. - 60



    1131 - வேண்டிய போகங்கள் வேண்டி யாங்குறீஇ
    ஆண்டகைச் சுமதியங் கமர்ந்து வாழ்ந்தனன்
    ஈண்டிய தீவினை யிடைவி லங்கினு
    மாண்டநல் வினையினர் வரத்திற் றாழ்வரோ. - 61



    1132 - வசுகுந்தப் பகைஞரை மறுக்கும் வாயுறீஇப்
    பசுகுந்தங் காத்தொசித் திட்ட பண்ணவன்
    சிசுகுந்த விழியினார்க் கென்னுந் தேசுற
    முசுகுந்த னென்பவன் முறையிற் பூசித்தான். - 62



    1133 - அவையகத் துறுபழி யகற்ற வேண்டினு
    நவைபயில் தீவினை நசிக்க வேண்டினும்
    எவையெவை வேண்டினு மீய வல்லதே
    கவைபயில் போதிசூழ் கயிலை மாநகர். - 63



    1134 - என்றுரை கிளத்தலு மிறைஞ்சி மாதவர்
    கொன்றையஞ் சடைமுடிக் குழகற் கன்புசெய்
    நன்றுயர் முசுகுந்த னடையெ லாம்விரித்
    தொன்றுற வுரையென வுரைக்குஞ் சூதனே. - 64
    சுமதி கதிபெறு படலம் முற்றிற்று.
    ஆகத் திருவிருத்தம் – 1134
    ------------------------

    16. முசுகுந்தன் முகம்பெறு படலம் (1135 -1188)




    1135 - வள்ளவாய் நறுங்கமல மதுவுண்ட களிவண்டின்
    தெள்ளுதீஞ் சுவைப்பாட றிசைதிசையு மெழும்பொய்கை
    கள்ளறாப் பொழில்புடைசூழ் கலிங்கதே யத்தொருவன்
    துள்ளுமான் மறிக்கரத்தார் துணையடிப்பூ சனைபுரிவான். - 1



    1136 - மறைமுழுதும் பயின்றுணர்ந்து மறைமுடிவுக் கெட்டாத
    பிறைவளருஞ் சடைமுடியார் பெய்கழற்சே வடிமறவா
    நிறைதருகா தலின்மறையோ னெடுந்தவத்தா லொருபுதல்வி
    அறைதருமற் றவன்மனைவி யகட்டிடைவந் தவதரித்தாள். - 2



    1137 - சடங்கனைத்தும் விதியற்றாற் றகத்தாதை யிதத்தொழிலே
    தொடக்கவரு மகட்கியற்றிச் சுகுமாரி யென்றழைத்தான்
    அடங்கவரு நல்வினையி னங்குரம்போல் வளர்காலை
    மடங்கழுவும் பண்டுபுரி மாதவத்தின் பயனணைய. 3 - 3



    1138 - தகுமாறி தன்றெனவே சகத்தினர்தம் வாழ்க்கையினை
    நகுமாறி ராறிரட்டி நவைவளர்தத் துவமயக்க
    முகுமாறி யானையுரித் தவரடிப்பூசனைபுரியச்
    சுகுமாரி தாதைகழல் தொழுதிரந்தா ளவன்மகிழா. - 4



    1139 - திரும்பியளற் றழுந்தாமந் திரவதிகா ரங்கொடுத்துக்
    கரும்புநுனி தொடுத்தருந்துங் கடப்பாட்டி னினித்தற்பின்
    விரும்புமர்ச் சனையதிகா ரங்கொடுத்தான் விழைந்தேற்றுச்
    சுரும்புளரு நறுங்கோதைச் சுகுமாரி பணிபுரிவாள். - 5



    1140 - வேறு
    கனைகடன் முகட்டிற் கதிரவ னெழுமுன் கடிகையோ ரைந்தென விழித்துத்
    துனையமெய்ச் சுத்தி கூடிய தியற்றித் தூயவெண் ணீறுநன் கணிந்து
    வினைமுழு தகற்றுஞ் சதாசிவ னுருவம் விளங்கவுள் ளத்திடை நினைந்து
    மனையதன் புறம்போ யியக்கமோ ரிரண்டு மரபுளி யொருவிக்கோ றின்று. 6 - 6



    1141 - கந்தமிக் கரும்பு மலர்த்தடம் படிந்து கமழ்ந்தவெண் ணீறுடல் வயக்கிச்
    சுந்தர மிகுந்த நந்தன வனத்துத் தூத்தகு பிடகைகொண் டேகி
    நந்தியா வட்ட மலரிமந் தார ஞாழனா கம்வழை வகுளங்
    கொந்தவிழ் செருந்தி பிண்டிபா திரிகூ தாளஞ்சம் பகங்கன்னி காரம். - 7



    1142 - பொன்னிணர்க் கடுக்கை செம்மலர்க் கொன்றை புன்னைவெட் பாலைசெவ் வகத்தி
    நன்னிற வேங்கை கொக்குமந் தாரை நறியபொன் னாவிரை வெட்சி
    பன்னுபன் மத்த மாதுளை பட்டி பருத்திசெவ் வரத்தைபொற் காஞ்சி
    துன்னிய புரசு கடம்பெருக் கழிஞ்சி றும்பைபன் னீர்திரு வாத்தி. - 8



    1143 -
    மராமலர் கரிய செம்பைவெண் டிலோத்தம் வழுதுணை கண்டங்கத் திரிமா
    குராமலர் தாளி கூத்தனற் குதம்பை கோட்டம்பூ கஞ்சத குப்பை
    அராவணைக் கடவுள் காந்திசே வகன்பூ வாத்திகூ விளம்வன்னி யறுகு
    பராவுசெவ் வந்தி நாவல்பூந் துளசி பச்சைவெண் காக்கணம் பூளை. - 9



    1144 - கருவிளை வெள்ளைக் காசைபைந் தருப்பை காரைசெங் கீரைநீர் முள்ளி
    மருதிரு வேலி வேரிலா மிச்ச வேர்வெட்டி வேர்மஞ்ச ணாத்தி
    பருதியின் காந்தி யெலுமிச்சை நரந்தம் பாரிசா தகம்புலி தொடக்கி
    தருவளர் வல்லி சதகஞ் சங்க வர்த்தனஞ் சந்தனங் கிளுவை. 0 - 10



    1145 - வெள்ளின்மா விலிங்கை யோரிதழ்க் கஞ்சம் வெண்மலர் நாணனா யுருவி
    எள்ளலர் கொட்டைக் கரந்தைநற் கரந்தை யிலந்தைதண் ணீர்மிட்டா னெல்லி
    ஒள்ளிய நொச்சி கேதகை வாகை யுச்சிப்புல் குச்சிப்புல் காந்தள்
    தள்ளருஞ் சாலிப் பயிர்கருங் காலி தான்றிபூங் குருந்துதாம் பூலம். - 11



    1146 - மருமருக் கொழுந்து மாதவி மௌளவன் மல்லிகை மாலதி மயிலை
    முருகவிழ் குளவி குமுதமென் குவளை முண்டக நெய்தலும் பிறவுங்
    குருமணிக் குழையின் பாங்கிய ரோடு கொய்துமீண் டகன்மனை குறுகி
    அருவுரு வகன்ற சிவபரம் பொருளை யருச்சனை புரியுநா ளொருநாள். - 12



    1147 - வேறு
    தாது கமழுந் திருப்பள்ளித் தாமங் கொய்ய முன்புபோற்
    போது விரியு முய்யானம் புகுங்காற் சுகுமா ரியைக்கண்டு
    காது மநங்கன் கணையலைப்பக் காதன் மிகுந்து விதூமனென
    ஓதுபெயரான் காந்தருவ னொருவ னவள்பா லடுத்துரைப்பான். - 13



    1148 - பொன்னா னியன்ற வோவியமே போதா னியன்ற மாலிகையே
    மின்னா னியன்ற பாவையே வேலை யெழுந்த சுவையமிழ்தே
    என்னா ருயிரே நினையடுத்தே னெனக்கு மனைவாழ்க் கையளாகில்
    நின்னால் விழையப் படுபொருள்க ணிரப்பிப் பணிசெய் குவலென்றான். - 14



    1149 - கன்னி யுரைப்பாள் காந்தருவக் காளாய் போகத் திடையார்வம்
    என்னு மிலன்முப் புரமெரித்த விறைவ னடிப்பூ சனைப்பத்தி
    மன்னு முடையே னாதலினின் மனையா ளாதற் கிசைகல்லேன்
    நன்னர் வனத்துட் புகுந்ததுந்தேர் நம்பற் கலர்கொய் வான்பொருட்டே. - 15



    1150 - தூயை யெனினீ யெனையீங்குத் தொடரா துனது பதிச்சென்மோ
    மாயை தொடராப் பரம்பொருட்கு மலர்கள் பறிப்பச் சேருமென
    வேயை நிகர்த்த தடந்தோளாய் விழிவே லேவி யுயிர்வெளவித்
    தீயை நிகர்த்த நெடுங்காமஞ் செறித்தாய் செறித்தாய் செறித்தாயால் - 16



    1151 - வாளா தேகல் வழக்கேயோ மருந்தா யளிக்கு மொருநீநின்
    ஆளா யொழிந்தே னெனக்கிரங்கா யணங்கே யென்றுவி தூமனெதிர்
    மீளான் மீட்டு மிரந்தானை வெய்து விழித்துச் சுகுமாரி
    காளாய் கவிபோற் பிடிவிடாய் கவியே யாதி யெனச்சபித்தாள். - 17



    1152 - தீய பாலை யார்தடுப்பார் தெய்வ மகளிர் மனங்கவரும்
    காய வாழ்க்கைக் காந்தருவன் கலையாய் வரைதோ றுழிதருங்கால்
    தூய தான விமையவரைச் சூழ லணுகி வதிகின்றான்
    ஆய காலை யொருவைக லமலன் வில்லத் தடியமர்ந்தான். - 18



    1153 - வேறு
    மைம்மெழுகி யன்னமுக மாமுசு வெழுந்து
    கைம்மிளிர் கனற்கடவுள் காமுற விருந்த
    வைம்முளணி கூவிளம ரத்துகள வல்லே
    பைம்மிளிரி லைச்சருகு பல்லவ முதிர்ந்த. - 19



    1154 - உதிர்ந்தசரு கண்ணலுரு வத்தினை மறைப்ப
    வதிர்ந்திட மிருந்தவ ளழன்றதனை நோக்கி
    எதிர்ந்தவர்க ளுய்தலரி யாவிறைவன் மெய்யின்
    முதிர்ந்தசரு கார்த்தமுசு வுக்கிது கிளந்தாள். - 20



    1155 - மாதுபுரி சாபமு மறந்துலக நாதன்
    சோதியுரு விற்சருகு துன்னவினை செய்தாய்
    நீதிகொடு சாபமிது நீங்கவரு போது
    மோதுமுசு வின்முக முனக்கமைக வென்றாள். - 21



    1156 - வண்ணவுரை கேட்டுமணி கண்டனருள் செய்வான்
    பெண்ணரசி யாரையிது பேசிமுனி கின்றாய்
    எண்ணரிய தீவினையு மீறுசெயும் வில்ல
    நண்ணவெம தின்னுருவ நல்வினைசெய் தன்றே. - 22



    1157 - அன்னதொரு நல்வினை யடுத்ததிற னோக்கி
    இன்னமுசு வுக்கிறைமை யீந்துலக மெல்லாந்
    தன்னிகரி லாதவொரு சக்கர நடாத்த
    மன்னிய வரம்பல வழங்கவிசை வுற்றாம். - 23



    1158 - வேட்டைபுரி வேடனெழு வேங்கையினை யஞ்சி
    நாட்டமய ராதுநனி வில்லநம துச்சி
    போட்டுயர் கதிக்கணவன் புக்கதறி யாய்கொல்
    ஏட்டையுற நீவெகுள லென்றுகை யமைத்தான். - 24



    1159 - மங்கையுமை கேட்டுமகிழ் கூர்ந்தருள் வழங்க
    அங்கணரும் வம்மென வழைத்துலக மெல்லாந்
    துங்கமுசு குந்தனெனத் தோன்றியர சாள்கென்
    றொங்குவர நல்கியுமை யோடவண் மறைந்தான். - 25



    1160 - வேறு
    பசுவு யர்த்திய பரமனா ரருளிய வரத்தால்
    விசுவம் யாவையும் வெண்குடை நீழலிற் குளிர்ப்ப
    முசுமு கத்துடன் முறைபுரி யரையர்தங் குலத்துள்
    அசுவ மேதநூ றாற்றினோ னஞர்கெட வுதித்தான். - 26



    1161 - வளர்ந்து பல்வகைக் கலைகளு மறைகளு மற்றும்
    அளந்து மல்கிய வைம்பெருஞ் சுற்றமுங் குழுவுந்
    தளர்ந்தி டாதபல் லுறுப்புமே வரத்தழீஇக் கலியைப்
    பிளந்து நீதியின் முசுகுந்தன் பேருல காண்டான். - 27



    1162 - ஆளு நாள்களி னகிதவுட் டிரனெனு மவுணன்
    நீளு மாண்மையி னெடுவிசும் பமரை யுழக்கித்
    தோளி னாற்றலால் வலாரியைப் புறங்கண்டு துரக்க
    மூளு மாசிடை முழுகுறத் தாட்படுத் திருந்தான். - 28



    1163 - அகித வுட்டிர னாலர சிழந்தவச் சிரத்தோன்
    துகிலி கைக்குல மாட்டயர் துறக்கநா டொழிந்து
    விகிர்த னுக்கொரு மாமனாம் விலங்கலி னொருசார்
    நெகிழு ளத்தினன் மறைந்துவாழ் நீர்மைய னொருநாள். - 29



    1164 - முருகு பூம்பொழின் முதிர்ந்தவத் திருவரைச் சாரற்
    பெருகு மாதவ மிழைத்திடும் பிருகுமா முனிவன்
    தருகு மாரியைக் கண்டனன் றகையணங் குறுத்த
    அருகு போந்துகைப் பற்றியீர்த் தனனறந் துளங்க. - 30



    1165 - வேத மெய்ப்பொரு டெள்ளிய விழுத்தவ னறிந்து
    மாதர் தங்களை வன்மையிற் பற்றுத லரக்கர்
    நீதி யன்னது நிகழ்த்தலி னரக்கனா குதியென்
    றோதி விட்டன னும்பர்கோ னரக்கனா யுழன்றான். - 31



    1166 - அரசி ழந்தன னரக்கனா உழன்றனன் வலாரி
    விரசு தீவினை விளைந்தவா றென்னென விம்மிப்
    பரசு பொன்னொடு தேவரும் பாரகத் திழிந்து
    முரசு கண்படா முசுகுந்தன் பேரவை யடுத்தார். - 32



    1167 - ஆசி கூறினர் முகமனு மியம்பின ரவுணர்
    பாசி போன்றுநின் றுடற்றலிற் பாணிவச் சிரத்தோன்
    கூசி நீத்தது மரக்கனா யுழன்றதுங் குழைந்து
    பேசி வானகங் காவெனப் பெரிதிரந் தனரால். - 33



    11680 - தேவர் தம்மிடர் தீர்த்திடே னாயினிச் செனனத்
    தாவ தென்னையென் றமரர்க ளுடன்விசும் பேகித்
    தாவ ரும்படை யகிதவுட் டிரனுயிர் சாடிப்
    பூவர் கற்பகப் பொழில்முசு குந்தன்காத் தனனால். - 34



    1169 - வேறு
    இந்திரன் வலியிழந் தின்னல் கோட்படக்
    கந்தற நின்றுளங் கலங்கு மெங்களை
    வந்தனை புரந்தனை மன்ன விங்கிருந்
    தந்தமி லரசுசெய் தருளென் றார்சுரர். - 35



    1170 - கடவுளர் மொழிகட வாமை மன்னவன்
    அடலரி யாதனத் தாங்கு வைகுபு
    புடவியு மேனைய பொழிலுங் காத்தனன்
    இடர்முழு தொழிந்தன வுலகி ரேழுமே. - 36



    1171 - இன்னண மரசுசெய் திருக்குங் காலத்து
    மன்னவ னொருதின மாகர் சூழ்தரப்
    பொன்னணை மீமிசைப் பொலிய வைகினா
    னென்னரு மவரவர் பணியி யற்றினார். - 37



    1172 - நாடக மகளிர்க ணடிக்கப் புக்கனர்
    பாடகத் தளிரடிப் பாவை மார்களுள்
    ஆடகச் சிலம்பணி யரம்பை நோக்கினாள்
    பீடக மன்னவன் வதனப் பெற்றியே. - 38



    1173 - பாங்குறு மாதரைப் பார்த்துப் பையவே
    ஈங்கிவன் முசுகொலோ வென்ரறு நக்கனள்
    ஆங்கது குறிப்பினா லறிந்து மன்னவன்
    வீங்கிய சமழ்ப்புள மேவி னானரோ - 39



    1174 - வள்ளலாய் வீரனாய் வாய்மை யாளனாய்த்
    தெள்ளிய நூலனாய்ச் செல்வச் செம்மலாய்
    ஒள்ளிய பலகுண முடைய னாயினும்
    எள்ளிய நகையினா லிறைமை நீத்தனன். - 40



    1175 - இழித்தகு முசுமுக மிகந்து மாநுடச்
    செழித்தநன் முகனுறச் சிந்தை செய்தனன்
    சுழித்தெழுங் கொழுந்தழ றுருத்தி டுங்குண்டத்
    துழித்திரள் வச்சிரத் தூணு றுத்தினான். - 41



    1176 - நேரிய மதலையி னிவர்ந்து நின்றுதன்
    சீரிய குலம்வளர் தேவ னாகிய
    சூரியன் றனையுளந் தொழுது நோற்றனன்
    வீரிய முசுகுந்த னென்னும் வேந்தனே. - 42



    1177 - வழிபடு பரிதிமுன் வந்து சொல்லுமால்
    விழிசிவந் துமைமகள் விளைத்த சாபமீ
    தொழிவகை புரிதவ மொன்று மில்லைகாண்
    அழிவறு சிவபிரா னடித்தொண் டல்லதே. - 43



    1178 - கங்கையஞ் சடைமுடிக் கலைவெண் டிங்களார்
    தங்கிய தலந்தொறுஞ் சார்ந்து போற்றுறிற்
    பங்கமி லாநநம் பணிக்கு மென்றலும்
    அங்குறு தவத்தினை யகன்று மன்னவன். - 44



    1179 -
    திரைதவழ் தீர்த்தங்கள் பலவுஞ் சென்றுதோய்ந்
    தரையர வசைத்தெரி யாடு மண்ணலார்
    தரைவளர் தலந்தொருஞ் சார்ந்து போற்றினான்
    வரைவளர் முசுமுக மாறக் கண்டிலான். - 45



    1180 - கவலையுற் றென்னினிக் கைக்கொள் வாமெனச்
    சவலைய மனத்தனாய்த் தளரு மேல்வையின்
    அவலமுற் றழியலென் றடுத்து நாரதன்
    குவலயத் தானுளங் குளிர்ப்ப வோதுவான். - 46



    1181 - வேறு
    நீரூர் கலிகன்ம நாசினி யென்றொரு நீனதிசேர்
    பேரூ ரெனுந்தலத் தேகுகண் டாய்பிழை யாதுவரம்
    பாரூர் பலவுந் தொழும்பட்டி நாதர் பணித்தருள்வார்
    காரூர் கொடைக்கரத் தாயென்று கூறிக் கரந்தனனே. - 47



    1182 - ஊனூற்றும் வேற்கை நரபதி யாங்குவந் தேகிநறுந்
    தேனூற்றும் பூநதிக் காஞ்சியி னாடிச் செழுங்கருங்கார்
    வானூற்றும் போதி வனத்தாதி நாதர் மலரடியிற்
    கானூற்றும் போதுக டூஉய்ப்பணிந் தாடிக் கசிந்தனனே. - 48



    1183 - வழிநாட் கலிகன்ம நாசினி தீரத்து மாமறையோர்
    பழிதீர நாடும் விதியா லிலிங்கப் பதிட்டைசெய்து
    கழிகா தலின்மிகப் பூசனை யாற்றிக் களித்திருந்தான்
    சுழிநீர் நதியிற் பின்னாளும் வழிபடத் தோய்ந்தனனே. - 49



    1184 - இருகால் விளைந்த வெறுழ்வலிச் சாப மிரண்டுவைகல்
    வருநீர் படிய மடிந்துமற் றோர்வைகன் மூழ்குதலால்
    ஒருவா முசுமுக நன்முக மாக வுவந்தரையன்
    அருளார் மறையவர்க் கார்த்தினன் செம்பொனு மாடையுமே. - 50



    1185 - அணிகலந் தூசு முதலாம் பொருளம லற்களித்துப்
    பணிபல வாற்றி விழாப்பங் குனிமதி யத்தெடுத்து
    மணிமருள் கண்டரைத் தென்கயி லாயம் வடகயிலைத்
    தணிவறு வைப்பினும் பூசனை சாலவி யற்றினனே. - 51



    1186 - தீர்த்தம் பலவும் படிந்தாடித் தீர்த்தன் றளிபலவும்
    பார்த்து வணங்கி மருதோங் கியபனி மால்வரைபோய்க்
    கூர்த்த நுதிவடி வேற்கரத் தானைக் குழைந்திறைஞ்சி
    ஆர்த்தி வளம்பொரு டன்பதி புக்குல காண்டனனே. - 52



    1187 - முருகார் கலிகன்ம நாசினி மூழ்கி முசுகுந்தனுக்
    கருளாங் கருள்சிவ லிங்கங்கண் டேத்தின ராக்கையிடை
    வெருளார் பிணிமுத லானவை தீர்ந்துவிண் ணோர்வியப்பப்
    பொருளார்ந் திரும்புக ழீட்டிமண் ணாண்டின்பம் பூணுவரே. - 53



    1188 - வேறு
    என்று கூறிய சூதனை மாதவ ரேத்தினார்
    நன்று கூறினை நாக மிழந்த வலாரிதான்
    அன்ற ரக்க வுருக்கொ டலைந்தன னென்றனை
    பின்றை யுற்றதும் பேசெனப் பேசுவன் சூதனே. - 54
    முசுகுந்தன் முகம்பெறு படலம் முற்றிற்று.
    ஆகத் திருவிருத்தம் – 1188

    17. இந்திரன் சாபந்தீர்ந்த படலம் (1189-1214)



    1189 - தாயி லாத தனிமக வென்னவுந் தண்ணிய
    தோய நீங்கு சுருள்விரி பைம்பயி ரென்னவு
    மேய வாருயிர் நீங்குட லென்னவும் விண்ணெலாந்
    தூய வேந்த னிலாமை வனப்புத் துறந்தவே. - 1



    1190 - விலாழி மும்மத நான்மருப் பேழுயர் வேழமூர்
    வலாரி நீங்கினன் மானவன் மாமுசு குந்தனுஞ்
    சுலாவு நாண்கொடு போயின னென்னினிச் சூழ்வெனக்
    குலால னேமியி னெஞ்சுகொண் டும்பர் குழைந்தனர். - 2



    1191 - ஆய காலையி னரத னங்க ணடுத்தனன்
    நீயி ராகுலம் வீட்டுதிர் நீண்முடி வேந்தனைப்
    போய ணாவிப் புணர்ந்த வரக்க வுருத்தனைச்
    சாய நீவித் தருவலென் றவ்வயி னீங்கினான். - 3



    1192 - மாலை வெள்ளரு வித்திர டூங்க மதுமலர்ச்
    சோலை சூழ்ந்த பனிவரைச் சாரலைத் துன்னினான்
    காலை மாலையும் யாமம்முங் கான்முக மேல்கறங்
    கோலை போலுழி தந்த வரக்கனை யுற்றனன். - 4



    1193 - இடர்ப்ப டுந்தனக் கின்னுரை வெய்திய தாமென
    வடர்ப்ப மேல்வரு மிந்திர னாநநத் தங்கைசேர்
    கடத்து நீரொரு கையிடை வாங்கி யெறிந்தனன்
    மடத்தை நீற்று மனுவெனு மைந்தெழுத் தோதியே. - 5



    1194 - ஐந்தெ ழுத்து நவின்றற லாநநத் தெற்றலு
    முந்து றுத்த முரணடி பிந்துற வாங்கினான்
    மைந்து கொண்ட மயக்கம் வறிது தணந்தனன்
    இந்தி ரன்செயல் கண்டன னீர்ஞ்சடை நாரதன். - 6



    1195 - வருக வென்று நடந்தனன் வேதியன் மன்னனும்
    பருகு பாற்பசு வைத்தொடர் கன்றிற் படர்ந்தனன்
    பொருவின் மேலைச் சிதம்பரத் தெல்லை புகுந்தனன்
    வெருவின் மாதவன் வேந்தனவ் வெல்லை மிதித்திலன். - 7



    1196 - கண்டு நாரதனெந்தினிப் போக்கெனக் கையினால்
    அண்டர் கோன்கரம் பற்றின னீர்த்தரி தேகிநீர்
    மண்டு காஞ்சி நதியி னழுத்தினன் மன்னவன்
    கொண்ட சாப வரக்க வுருக்குலைந் தோடிற்றே. - 8



    1197 - வேறு
    உறங்கிக் கண்விழித் தாலென வும்பர்கோன்
    மறங்கி டந்த வடிவது நீங்கலும்
    பிறங்கு முன்னெழின் மேனியும் பெற்றியும்
    அறங்கி ளர்ந்த வறிவொடு மெய்தினான். - 9



    1198 - இருந்த தெவ்வுழி யெவ்வுழி நின்றனம்
    பொருந்து செய்தியென் னோவெனப் புந்தியின்
    மருண்டு வார்சடை மாதவன் றாண்மலர்
    தெருண்ட சிந்தையி னான்சிரந் தீட்டினான். - 10



    1199 - மகதி வீணை வடித்திசை தேக்குகைப்
    பகவ வீங்குப் படர்ந்ததென் னோதென
    நகைமு கத்தொடு நாரதன் றானவர்
    பகைஞ கேளெனப் பட்டது கூறுவான். - 11



    1200 - அகித வுட்டிர னாலலைப் புண்டுநீ
    புகலி டமின்றிப் பொன்னிமி யம்புகுந்
    திகழின் வைகுழி யெய்து பிருகுவின்
    மகளைக் காமுற்று வண்கரம் பற்றினாய். - 12



    1201 - சுரக்குங் கோபத்துத் தொன்முனி சீறலும்
    அரக்க னாயினை யைய ரதுதெரிந்
    திரக்க மாமுசு குந்தன்விண் ணெய்தினான்
    கரக்கக் காதினன் காழ்த்த வவுணரை. - 13



    1202 - வள்ள லங்கு வதிவுழி மாதராள்
    எள்ள விண்ண மிகந்தித் தடநதித்
    தெள்ளு நீரிற் படிந்த சிறப்பினால்
    நள்ளு மாநுட நன்முகங் கொண்டனன். - 14



    1203 - விசும்பு தவ்வென வேந்தநிற் பற்றியா
    னிசும்பு மால்வரை கானகம் யாவுநீத்
    தசும்பு பைம்பொ னவிருமிக் காஞ்சியின்
    பசும்பு னற்படி வித்தனன் காண்டியால். - 15



    1204 - அரக்க னாகிய சாப மகன்றது
    புரக்கு நின்னுருப் பூண்டனை யென்றலும்
    பரக்கு மோகைப் பரவை படிந்தனன்
    கரக்குன் றூருங் கடவுளர் வேந்தனே. - 16



    1205 - பொறியி லேனைப் பொருட்படுத் தாய்க்கும்விண்
    நெறியின் வைத்த நிருபற்கும் யான்செயுங்
    குறியெ திர்ப்பைக் குறித்திடி னில்லையால்
    அறிவ வென்றடி மீட்டும் வணங்கினான். - 17



    1206 - கம்ப மீருங் கலிகன்ம நாசினி
    வம்பு லாவு புனலின் மறுவலும்
    பம்பு வேத முறையாற் படிந்தனன்
    தம்பி ரானடி சார்ந்து வணங்குவான். - 18



    1207 - வேறு
    மாடகத் திவவு நல்யாழ் மாதவ னோடு சென்று
    பாடகத் தளிர்மென் பாதப் பைங்கொடி காண மன்றுள்
    நாடக நவிற்று முக்க ணம்பனா ரடியிற் செந்தேன்
    றோடகம் பொதிந்த போது தூய்ப்பணிந் தாடி னானே. - 19



    1208 - கள்ளகந் துறுத்த பல்வீ கமழ்நறும் பன்னீர் நீழல்
    உள்ளகந் தூய வன்ப ருறுபணி யியற்ற வைகுந்
    துள்ளிய மறிமா னங்கைத் துணைவனை யுமையா ளோடு
    மள்ளிலைக் குலிச வேற்கை யமரனன் பாரத் தாழ்ந்தான். - 20



    1209 - தமனிய வுலகில் வாழுந் தச்சனைக் கூவிப் பேரூர்
    அமலனுக் குவகை யார வாலயப் பணியு மற்றுங்
    குமரிவல் லிருள்கால் சீக்குங் குருமணித் திரளிற் செய்வித்
    திமவரை மருகன் வைகுந் தளியெலா மிறைஞ்சி னானே. - 21



    1210 - நறையிதழ்க் கமலச் சேக்கை நான்முகன் குண்டத் தியாக
    முறையுளி யாற்றி விண்ணோர் முகந்துண வவிக ணல்கிப்
    பிறைவளர் சடையான் மாட்டுப் பெருவரம் பலவும் பெற்று
    நிறைவளந் தழைய விண்போய் நெடிதர சியற்றி வாழ்ந்தான். - 22



    1211 - இந்திரன் சாபந் தீர்ந்த வீர்ந்துறை கரிகாற் சோழ
    மைந்தினன் றுறைக்கு மேல்பால் வயங்குமற் றாங்குச் செம்பொன்
    சுந்தர வெள்ளி கன்னி துகில்கல னன்ன மற்றுஞ்
    சிந்தையின் மகிழ்ந்து தானஞ் செய்பவர் துறக்க மாள்வார். - 23



    1212 - அத்துறை நறுநீ ராடி யாலயம் புகுந்து தாழ்ந்து
    வித்தகன் றிருமு னானெய் விளக்கிடு வோர்கள் சுற்றக்
    கொத்தொடு மிருளி னீங்கிக் குருமணி விமானத் தேகி
    உத்தம சிவலோ கத்தி னுலப்பறு கற்பம் வாழ்வார். - 24



    1213 - உரைத்தவத் துறைநீ ராடி யுமைமண வாளர்க் கன்பான்
    விரைத்தபூச் சாந்தஞ் செம்பொன் வெள்ளிமற் றுலோக மாடை
    டிரைத்தவெள் ளிலைக்கா யன்னஞ் செய்கரி புரவி கன்னி
    தரைத்தலை யிவற்று ளொன்று சார்த்துவோர் பயன்சொல் வாரார். 5 - 25



    1214 - எனவகுத் துரைத்த சூத னிணையடி முனிவர் தாழ்ந்திட்
    டனகனே கரிகாற் சோழ வரையனற் றுறையொன் றாங்குப்
    புனனதி யிடத்துண் டென்னப் புகன்றனை யனைய சோழன்
    தனதுரு சரிதந் தன்னைச் சாற்றெனச் சாற்றுஞ் சூதன். - 26
    இந்திரன் சாபந்தீர்த்த படலம் முற்றிற்று.
    ஆகத் திருவிருத்தம் – 1214.
    ----------

    18. கரிகாற்சோழன் கொலைப்பழி தீர்ந்த படலம் (1215-1276)




    1215 - பொன்னி மாநதி புரக்கும் பூம்பணை
    நன்னர் நாட்டினை நன்று காத்துவாழ்
    மன்னர் தங்குலம் வந்து தோன்றினான்
    தென்ன ரஞ்சுவிக் கிரம சிங்கனே. 1 - 1



    1216 - அனைய மன்னவ னறத்தின் பேற்றினாற்
    கனைக டற்புவி கலியி னீங்குற
    இனைத லில்கலி கால னென்பவன்
    தனைய னாயவன் சார்பிற் றோன்றினான். - 2



    1217 - மகமி யற்றிய மதலை யெண்ணில
    புகரில் கல்வியிற் பொருது வென்றுவென்
    றிகல்செய் வேலினா னெளிதி னாட்டிய
    புகழ்செய் தம்பமும் புகலொ ணாதவே. - 3



    1218 - வேங்கை வார்கொடி மேரு மால்வரை
    தாங்க வேற்றினான் சகமெ லாந்தொழுந்
    தீங்கில் காஞ்சிமா நகர்செ றிந்தகான்
    நீங்க நற்குடி நிறுவி னானரோ. - 4



    1219 - ஆறி லொன்றுகொள் கடமை யன்றினார்
    வீற வென்றுகொள் வெறுக்கை யுல்கினால்
    ஏறு வண்பொரு ளெய்தி டும்பொருள்
    கூறு நான்கினு மறங்கள் கூர்த்துளான். - 5



    1220 - ஆக்க மில்குடிக் காறி லொன்றையுந்
    தேக்கி வையகஞ் செகிற்ப ரித்தனன்
    காக்கு நாளையிற் கானிற் பல்விலங்
    கூக்க நோக்குபு வேட்டைக் குன்னினான். - 6



    1221 - வேறு
    தெள்ளிய மணிப்புனல் சென்று தோய்ந்தனன்
    ஒள்ளிய செய்கட னூழி னாற்றினான்
    அள்ளொளிப் பொற்கலத் தமுதந் துய்த்தனன்
    கொள்ளரு விலைக்கலன் கொண்ட ணிந்தனன் 7 - 7



    1222 - உடுப்புவன் கவயங்கொண் டுடலம் போர்த்தனன்
    தொடுப்புறு கழல்கழற் றுலங்க யாத்தனன்
    தடுப்பரும் படைஞரும் வலையுந் தன்புடை
    அடுப்பவைங் கதிப்பரி மேல்கொண் டூர்ந்தனன். - 8



    1223 - கானக மடுத்தனன் கதழ்ந்து வேயினர்
    மானம ரிடத்துரீஇ வந்து சொற்றனர்
    ஊனமில் வலைவளா யொடியெ றிந்தனர்
    வேனவி றோளினான் வியங்கொ ளாளரே. - 9



    1224 - செருக்கள மெனப்பறை தெழிக்க வெங்கணும்
    முருக்குவன் ஞமலியை முடுக்கி விட்டனர்
    மருக்கிளர் மலர்ப்புதல் வார்ந்த தண்டினால்
    எருக்கின ரார்த்தன ரெறுழ்ப்பு யத்தினார். - 10



    1225 - வேறு
    முழங்கி வன்கொலை வேங்கை பாய்ந்தன மும்ம தக்கரி பாய்ந்தன
    தழங்கி யேனமொ டெண்கு பாய்ந்தன தாவு மான்கலை பாய்ந்தன
    பழங்க ணுற்றரி யேறு பாய்ந்தன பல்கும் யாளிகள் பாய்ந்தன
    வழங்கு மத்திர மன்ன முள்ளுடன் மல்கு மெய்யினம் பாய்ந்தன. - 11



    1226 - வேல்வ ழங்கின ரீட்டி விட்டனர் வெய்ய கப்பண முந்தினார்
    கோல்வழங்கினர் பிண்டி பாலமுங் குந்த முஞ்சில ரேவினார்
    பால்வ ளைந்தொளிர் நாந்த கம்பரு வச்சிரத்தடி யோச்சினார்
    கால்வ ழக்க மறக்க னன்றுகைப் பாசம் வீசினர் கண்ணிலார். - 12



    1227 - தலைது மிப்பன வால றுப்பன தாளி றுப்பன வாருடல்
    நிலைகு ளிப்பன சோரி வீழ்ப்பன நீள்கு டர்சரி விப்பன
    வலைவி ழித்துணை சூன்று குப்பன வைது மார்பு பிளப்பன
    கொலைமு கத்தவர் மானின் மீது குறித்து றுத்த படைக்கலம். - 13



    1228 - இரிந்து வீழ்வன காது வார்களை யெற்றி வீழ்வன வென்புகண்
    முரிந்து வீழ்வன வொன்றை யொன்றெதிர் முட்டி வீழ்வன வன்றலை
    திரிந்து வீழ்வன கூவி வீழ்வன சீறி வீழ்வன மீளியர்
    சொரிந்த வாய்த மனைத்தும் வெய்து தொடர்ந்து சாடிய மான்களே. - 14



    1229 - மடைவ யிர்க்குல மெங்கு மேங்கின மாடு பம்பை யிசைத்தன
    தடைப டுத்துளர் நாய்கு ரைத்தன சார்ந்து மள்ளர் தெழித்தனர்
    மிடைவ லைத்திரள் சூழ்ந்த சூழல் விறந்து மான்பல வீந்தன
    அடைய லர்க்குரு மேற னான்பல வாளி யாளி யடர்த்தனன். - 15



    1230 - இளமை மான்க ளலைத்தி லார்பிணி யெய்து மான்க டொடர்ந்திலார்
    வளமை மிக்கதொர் சூலு டைப்பெண் வருத்தி லார்வளர் முப்பினால்
    தளர்வி லங்குகள் சாடி லாரிவை தப்ப மற்றைய மானெலாம்
    வெளிறில் கேள்வியர் கைப்ப டைக்கலம் வேறு வேறட மாண்டவே. - 16



    1231 - வேறு
    வேட்டைத்தலை நீங்கினன் மீளியர் பாங்கு போதக்
    காட்டிற்கரி கால்வள வன்கடி தேகு வானோர்
    தோட்டுக்கம லங்கள் விரிந்து சுகந்தம் வீசுஞ்
    சேட்டுக்கதிர் மாமணி யோடைகண் டாங்குச் சென்றான். - 17



    1232 - புடைமாண்ட வளம்பல நோக்குபு பூத்த பல்வீ
    இடைமாண்ட நிழற்கய நோக்கியங் கெய்து முன்னர்
    நடைமாண்டொரு கேழ லடுத்து நன்னீர் குடிப்பத்
    தொடைமாண்ட வில்லிற்கணை யொன்று தொடுத்து விட்டான். 8 - 18



    1233 - பட்டூடுரு விக்கணை பன்றி பதைத்து வீழக்
    கெட்டேனொரு பூத மெழுந்து கிளக்க லுற்ற
    தொட்டார்க்குரு மேறனை யாயொரு பன்றி யாமென்
    றட்டாயெனை யந்தண னான்வர லாறு கேட்டி. - 19



    1234 - தொல்லைத்தவத் தால்வினை நல்லன சூழ்ந்த வென்னைச்
    சொல்லிப்புவி யோர்கள் சுவிர்த்தி யெனத்து திப்பார்
    வல்லைத்தெறு பூண்முலை மாதுடன் வாழு நாளில்
    இல்லறத்தற நீத்து வனத்தற மெய்தி னேனால் - 20



    1235 - மனைமாதொடு சுற்றமு மென்னை வனத்தி னூடும்
    வினைபோற்றொடர் வுற்றனர் வெய்து வெகுண்டு நீவார்
    தனைநாடியொர் பன்றி யுருக்கொடு தம்மை வஞ்சித்
    தெனையாவருங் காண்டலுறாதிங் கிருந்து ளேனால். 1 - 21



    1236 - அரிதாகிய விவ்வுட னீங்குதற் கோவ றியேன்
    பெரிதாகிய தாக முடற்றப் பெயர்ந்து போந்தேன்
    கரிகால் வளவா வெனையட்டனை காவல் பூண்ட
    உரிதாகிய நாடு முனக்கில தாகு மன்றே. - 22



    1237 - இப்பூத வுருக்கொடு நீயெவ ணுற்றி யேனும்
    அப்பாலு நினைத்தொடர் வேனக லேன்மன் யானென்
    றுப்பூத மடுத்தெதிர் தட்கு முளர்ந்து கொட்குந்
    தப்பாதுகை யெற்று மதிர்ந்து தணக்கு மீளும். - 23



    1238 - நன்றாஞ்செய லுன்னு மனத்தை நடுக்கு நல்ல
    குன்றாவினை செய்திடின் வெய்து குலைக்கு நன்மை
    பொன்றாத்துதி செய்திடி னாப்பெய ராமை பூட்டும்
    ஒன்றாத கொலைப்பழி நோக்கி யுலைந்து மன்னன். - 24



    1239 - மறையோர்தமைக் கூவியிவ் வல்வினைத் தீர்வு சொன்மின்
    அறைபோயதெ னுள்ள மெனத்தொழ வந்த ணாளர்
    பிறைநீரொடு வேணி முடித்த பெம்மான் றலங்கள்
    நிறைகாதலிற் சென்று வணங்குதி நீங்கு மென்றார். - 25



    1240 - அரையன்மகிழ் வுற்றர னார்நட மாடு தில்லை
    விரைபொங்கிய சோலை விராவு குடந்தை யாரூர்
    வரையென்றயிர் மாட நிலாவுவண் காஞ்சி காசி
    புரையின்றுயர் சேது முதற்பல போற்றச் சென்றான். - 26



    1241 - வேறு
    அன்ன செவ்வி யறிந்தொரு தானவ னாண்மையான்
    கன்ன சூல னெனக்கரை யப்படு நாமத்தான்
    வன்னி யோம்பி மனுக்கணித் தந்தணர் மல்கிய
    பொன்னி நாடுதன் றாட்படுத் தாணை புதுக்கினான். - 27



    1242 - இனைய செய்கை நிகழ்ந்துழி யீர்ம்பனி மால்வரை
    தனையை யம்மலைச் சாரலிற் றன்னுயிர் நாயகன்
    புனைபு கழ்க்கழற் பூசனை யாற்றுந ளேவல்செய்
    நனைம லர்க்குழ லாரொரு நால்வர் மூவரும் - 28



    1243 - மாத ரன்னவ ரோர்தினம் வைகறை ஆர்மதுப்
    போது கொய்யப் புகுந்தனர் நந்தவ னத்திடை
    ஓத ருங்கவி னுற்றவன் காந்தரு வன்புகக்
    காதல் கொண்டு கலங்கினர் மாத ரெழுவரும் - 29



    1244 - நெடிது போது கலங்கிய நெஞ்ச நிறுத்தினர்
    கடிவி ராவிய பன்மலர் கொய்து கடுகினார்
    வடிகொள் சூலத்தர் பூசைசெய் காலம் வழுக்கலில்
    தொடியி னார்செயல் யாதெனப் பார்ப்பதி சூழ்ந்தனள் - 30



    1245 - நெகிழ்ந்த வுள்ளத்த ராகிமுன் னேர்ந்த வொருத்தனை
    மகிழ்ந்து காமுற்று மாழ்கின ரென்று மதித்தனள்
    முகிழ்ந்த பூண்முலை யீர்முதல் வன்பணி தாழ்த்தினிர்
    தெகிழ்ந்த காமத்துச் சிந்தனை செய்தனி ராதலான். - 31



    1246 - தோற்றி மானுட மாதர்க ளாய்த்தொகு கற்புநூல்
    ஆற்றி னீங்கி யநங்கன் பதாகையன் னீர்நுமக்
    கேற்ற வாறு நடக்குக வென்று சபித்தனள்
    கோற்றொ டிக்கைக் குவிமுலைக் கூர்விழிப் பார்ப்பதி. - 32



    1247 - அஞ்சி லோதியம் மேநின தேவன்மிக் காற்றினேம்
    வஞ்ச மானுட ராகி மயங்குது மோவெனக்
    கஞ்ச நேர்பதங் கையிணை கூப்பி யிறைஞ்சினார்
    நெஞ்சு துட்கென வஞ்சுபு நேரிழை மாதரார். - 33



    1248 - வேறு
    ஆர்ங்க டித்துண ரணிந்தவ ரிடப்பா
          லமர்ந்த நாயகி திருவருள் வழங்கிப்
    பீர்ங்கொ டிப்புது மலர்நிகர் நிறத்தீர்
          பேதுற் றஞ்சலிர் சீரங்க வரைப்பிற்
    சார்ங்க பாணியை வழிபடு மறையோன்
          சார்ங்க நன்முனி யெனும்பெய ருடையாற்
    கீர்ங்க ளோதியள் சந்திர வதியென்
          றியம்பு மாதராளில்லறம் பூண்டாள். - 34



    1249 - நீர்ர் போயவண் மக்களா யுதித்து நிறைந்த போகங்க ணுகர்ந்திடு நாளிற்
    காயி லைக்கதிர் வேலுடைக் கரிகாற் காவ லன்கொலைப் பழிதனைக் கழுவ
    மாயி ரும்புவி முழுவது முய்ய வயங்கு வெள்ளியம் பலத்துணின் றாடுந்
    தீயி னன்னசெம் மேனியர் பேரூர் செல்லு வானும திரும்பதி வருமால். - 35



    1250 - வந்த கோமக னுடனவ ணேகி வார்ந்த பூம்புனற் காஞ்சிமா நதியின்
    அந்த மாதியு மில்லவர் பாத மகத்து ணாடிநன் காடிமா னுடமாம்
    பந்த நீங்கியீண் டுறுகவென் றருளப் பசும்பொற் பூண்முலை மாதரவ் வாறே
    அந்த மார்பொழிற் சீரங்க வரைப்பிற் கலந்து மன்னவன் வரவுபார்த் திருந்தார். - 36



    1251 - வேறு
    அந்தணர் விதியாற்றா னலைதவழ் பலதீர்த்த
    மந்திர நவின்வின்றாடி வளம்பயி றலந்தோறுஞ்
    சுந்தர வெண்ணீறு துலங்கிய திருமேனி
    எந்தையை வழிபட்டா னிலங்கயிற் கரிகாலன். - 37



    1252 - குலவிய தலந்தோறுங் குறுகினன் வழிபட்டு
    மலமரு துயர்செய்யு மரும்பழி கழியாமே
    கலதிசெய் திடவுள்ளங் கவலையங் கடலாழ்ந்து
    நலனொடு புணர்நாளு நணுகுங்கொ லெனநைந்தான். - 38



    1253 - நலிகெழு துயர்தேர்ந்து நாரத முனிசென்றான்
    வலிகெழு திரடிண்டோள் மன்னவன் கரிகாலன்
    ஒலிகெழு துதிசெப்பி யொண்சரண் முடிதாழ்த்தான்
    கலிகெழு மறைநாவன் கரிசற மொழிகிற்பான். - 39



    1254 - மன்னவர் திறைவாங்கு மானவ கரிகால
    நின்னுளம் வெருவற்க நீடிய துயர்நீவி
    நன்னெறி தருசூழ்ச்சி நவிலுது மினிக்கேண்மோ
    என்னுள மகலாத விருந்தல மொன்றுண்டால். - 40



    1255 - பிப்பில வனமென்றும் பேசுமப் பேரூரின்
    ஒப்பறு நதிகாஞ்சி யொழுகுவ தந்நீரின்
    முப்புரி மணிமார்பர் மொழிமறை யுளியாடி
    அப்பணி சடையார்தம் மடிதொழு கெனப்போனான். - 41



    1256 - முனிவர னருள்செய்த மொழியுறு தியிற்பற்றி
    வனிதையர் மயல்கூரும் வனப்புடைக் கரிகாலன்
    புனிதமங் கலமல்கப் பூம்பணைப் பேரூரிற்
    கனிமொழி யுமைபாகன் கழறொழ வழிக்கொண்டான். - 42



    1257 - சந்தனக் குறடுந்தித் தபனியப் பொடிசிந்திக்
    கொந்தலர் மலர்வாரிக் குளிர்நிறை காவேரி
    வந்திரு புடையுந்தண் வார்கழ றொழுநீலக்
    கந்தரத் தினரானைக் காவினைத் தொழப்புக்கான். - 43



    1258 - மன்னவன் கரிகாலன் வரவினை யினிதோரா
    இன்னகைத் துவர்ச்செவ்வா யிடுகிடை யெழுமாதர்
    முன்னினர் தஞ்செய்கை மொழிந்தன ரிதுவோநம்
    அன்னைய தருளென்னா வகமகிழ் வினனானான். - 44



    1259 - மாதவ னமக்குய்த்த வண்மொழிக் கிழுக்கில்லை
    மாதவன் வலமேய வரதர்தம் மிடநீங்கா
    மாதவ ளருள்செய்த வகையிது வெனவெழுவர்
    மாதர்சொற் றலினென்னா மகிழ்வுறு கரிகாலன். - 45



    1260 - சிவிகைக ளெழுவர்க்குஞ் சேர்த்தினன் கொடுபோந்து
    கவியொடு முசுவுகளக் கனியுகு பூஞ்சோலைக்
    கவிழிணர் மலர்வாசங் காவதம் பலகமழும்
    அவிர்மணி நெடுமாடத் தாதியம் புரிசேர்ந்தான். - 46



    1261 - கழுமல்செய் கொலைச்சாயை கழிகெனச் சங்கற்பஞ்
    செழுமறை முறையாற்றாற் செய்துயர் கரிகாலன்
    ஒழுகுதண் புனற்காஞ்சி யுந்தியிற் படிவுற்றான்
    முழுகினர் வருசாப முடிகென வெழுவோரும். - 47



    1262 - ஆர்த்தினர் மணிசெம்பொன் னாடைகள் கதிர்ப்பைம்பூண்
    தூர்த்தனர் குருச்செங்கட் சுரபிகன் னியர்மற்றும்
    பார்த்தலை யிரப்போர்க்கும் பரமர்த மடியார்க்கும்
    ஓர்த்துணர் மறையோர்க்கு முரைத்தவெண் மருமாதோ. - 48



    1263 - கோயிலை யெண்மர்களுங் குறுகினர் பலநல்கிப்
    பாயின கலையல்குற் பசுமர கதவல்லி
    மேயினள் பிரியாத விகிர்தனை யடியார்க்குத்
    தாயினு மினியானைச் சயசய வெனத்தாழ்ந்தார். - 49



    1264 - அகன்றது கொலைச்சாயை யரையனுக் கெழுமாதர்க்
    ககன்றது வருசாப மரமக ளிர்களானார்
    அகன்றழை மகிழ்பொங்க வாடினர் பலபாடி
    அகன்றரை யரசாளு மண்ணலு மடவாரும். - 50



    1265 -
    அத்தின முணவோம்பி யடுதுயி லிரவெள்ளித்
    தத்தலை நெடுவேலைத் தழற்கதி ரெழுகாலைப்
    பைத்தெழு நதியாடிப் பவமது வாராமே
    நித்திய னருள்பெறுமா நினைந்தன ரிதுசெய்தார். - 51



    1266 - மண்டப நிருமித்து மண்டில மெழிற்குண்டங்
    கண்டழல் வளர்வித்துக் காவலன் மடவாருங்
    கொண்டிரு சிவலிங்கங் குரைபுன னதிப்பாங்கர்
    எண்டிசை களுமுய்ய விருத்தினர் பூசித்தார். - 52



    1267 - மருக்கிளர் மலர்சாந்த மஞ்சன மொளிதூபந்
    திருக்கிளர் கலனாடை திருவமு திவைமற்றும்
    ஒருக்கிய மனத்தானுய்த் துறுமுறை பூசிப்ப
    எருக்கணி பெருமானா ரெதிரவர்க் கெளிவந்தார். - 53



    1268 - மான்மழுக் கரம்வைக வார்சடை மிளிர்கிற்பக்
    கான்மரு வியகூந்தற் காரிகை யிடமாக
    வான்முது கிடைத்தோற்று மமலனை யெதிர்நோக்கி
    வேன்மருள் விழிமாதர் வேந்தனோ டடிவீழ்ந்தார். - 54



    1269 - வேண்டிய வரமென்னே விளம்புதி ரெனமுன்வந்
    தாண்டருள் பெருமானா ரருளலு மவர்விள்வார்
    மாண்டவல் வினைத்துன்பம் வருவது பிறவியினா
    மீண்டினிப் பிறவாத நெறியெமக் கருளென்றார். - 55



    1270 - அந்தியின் மதிவேய்ந்த வழகரங் கருள்செய்வார்
    இந்தவைப் பிடையெம்மை யேத்துநர் பிறவார்கள்
    நுந்தரத் தினுமந்த நோன்மைகொள் வரஞ்சாலத்
    தந்தன மிதற்கான சான்றுமிங் குளவன்றே. - 56



    1271 - வித்தது முளையாத மேதகு புளியொன்றொன்
    றத்தகு சித்தேச மரமவை முறையானே
    உத்தர கயிலையினு மோங்குநம் மாலயத்தும்
    உத்தம நெறிநின்றீ ரோங்கின வறிகென்றார். - 57



    1272 - அருளிய வரம்பெற்றங் கருட்பணி பலவாற்றி
    முருகுயிர் மலர்க்கொன்றை முடியவர் விடைபெற்றார்.
    ஒருவிய வுமைதன்பா லுற்றேழு மாதர்களுந்
    திருவிய லவளேவல் செய்தனர் வாழ்கின்றார். 8 - 58



    1273 - பரிசனம் பலசூழப் படைபல புடைசூழ
    உரிய தனாடெய்தி யொன்னலன் முடிவீட்டிக்
    கரிசறு செங்கோலிற் கடலுல களித்திட்டான்
    வரிகழற் கழன்மன்னர் மன்னவன் கரிகாலன். - 59



    1274 - வேறு
    அறமா தரிக்குங் கரிகால வரையன் றனக்கு மாதருக்கும்
    பிறவா நெறிதந் தருளுதலாற் பெருநீர்க் காஞ்சி நதிதனக்கும்
    உறவா யுயிர்கட் கருள்சுரக்கு முமையாள் கொழுநன் பேரூர்க்கு
    மறவா துரைக்கு மூவுலகும் வழங்கும் பிறவா நெறிநாமம். - 60



    1275 - கள்ளு மறுகாற் புள்ளினமுங் கஞலு மலரு நவமணியுந்
    தெள்ளு நிறைநீர் நதிக்காஞ்சித்தீர்த்தத் திடையே கரிகால
    வள்ளல் படிந்த துறைதனக்கு வழங்கு நாம மனத்தகத்துத்
    தொள்ளை யகன்ற வையகத்தோர் சோழன் றுறையென் றுரைப்பாரால். - 61



    1276 - பிறவா நெறியிற் படிந்திருக்கும் பேரன் புடையார்க் கேயன்றிப்
    பிறவா நெறியென் றுரைத்தவர்க்கும் பிறவா நெறிதந் தருளுமெனப்
    பிறவா நெறியின் றிறந்தெரித்துப் பிறங்கு சூதன் முனிவரர்க்குப்
    பிறவா நெறியார் பள்ளனுமாம் பெற்றி தெரிய வகுத்துரைப்பான். - 62
    கரிகாற்சோழன் கொலைப்பழி தீர்த்த படலம் முற்றிற்று
    ஆகத் திருவிருத்தம் – 1276
    -----------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்