Tiruppāṭaṟṟiraṭṭu III


சைவ சமய நூல்கள்

Back

திருப்பாடற்றிரட்டு III
தாயுமான சுவாமிகள்



தாயுமான சுவாமிகள் அருளிய
திருப்பாடற்றிரட்டு -பாகம் 3



source acknowledgement:
தாயுமான சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய
"திருப்பாடற்றிரட்டு"
திருத்தணிகை சரவணப்பெருமாளையர் அவர்கள்
பிரதிக்கிணங்க பரிசோதிக்கப்பட்டு ஊ. புஷ்பரதசெட்டியார் தமது
சென்னை கலாரத்நாகர அச்சுக்கூடத்தில் பதிக்கப்பட்டது
பிரஜோற்பத்தி வருடம்
-----------

    இப்பகுதியில் அடங்கிய பாடல்கள் :


    25. எனக்கெனச்செயல்
    26. மண்டலத்தின் (11)
    27. பாயப்புலி (59)
    28. உடல்பொய்யுறவு (83)
    29. ஏசற்றவந்நிலை (10)
    30. காடுங்கரையும் (3)
    31. எடுத்ததேகம் (2)
    32. முகமெலாம் (1)
    33. திடமுறவே (10)
    34. தன்னை (1)
    35. ஆக்குவை 81)
    36. கற்புறுசிந்தை (7)
    37. மலைவளர்காதலி (8)
    38. அகிலாண்டநாயகி (1)
    39. பெரியநாயகி (1)
    40. தந்தைதாய் (7)
    41. பெற்றவட்கே (11)
    42. கல்லாலின் (30)
    ---------

    25. எனக்கெனச்செயல்.




    எனக்கெனச்செயல்வேறிலையாவுமிங்கொருநின்
    றனக்கெனத்தகுமுடல்பொருளாவியுந்தந்தேன்
    மனத்தகத்துளவழுக்கெலாமாற்றியெம்பிரானீ
    நினைத்ததெப்படியப்படியருளுதனீதம். - (1)


    உளவறிந்தெலாநின்செயலாமெனவுணர்ந்தோர்க்
    களவிலானந்தமளித்தனையறிவிலாப்புன்மைக்
    களவுநாயினேற்கிவ்வணமமைத்தனைகருத்துத்
    தளருந்தன்மையிங்காரொடும்புகலுவேன்றக்கோய். - (2)


    என்னைத்தானின்னவண்ணமென்றறிகிலாவேழை
    தன்னைத்தானறிந்திடவருள்புரிதியேற்றக்கோய்
    பின்னைத்தானின்றனருள்பெற்றமாதவப்பெரியோர்
    நின்னைத்தானிகராரெனவாழ்த்துவர்நெறியால். - (3)


    ஏதமின்றித்தன்னடியிணைக்கன்புதானீட்டுங்
    காதலன்பர்க்குக்கதிநிலையீதெனக்காட்டும்
    போதநித்தியபுண்ணியவெண்ணரும்புவன
    நாததற்பரநானெவ்வாறுய்குவேனவிலாய். - (4)


    வேதமெத்தனையத்தனைசிரத்தினும்விளங்கும்
    பாதநித்தியபரம்பரநிரந்தரபரம
    நாததற்பரசிற்பரவடிவமாய்நடிக்கு
    நீதநிர்க்குணநினையன்றியொன்றுநானினையேன். - (5)


    நெறிகடரம்பலபலவுமாயந்தந்தநெறிக்காஞ்
    செறியுந்தெய்வமும்பலபலவாகவுஞ்செறிந்தா
    லறியுந்தன்மையிங்காருனையறிவினாலறிந்தோர்
    பிறியுந்தன்மையில்லாவகைகலக்கின்றபெரியோய். - (6)


    பெரியவண்டங்களெத்தனையமைத்ததிற்பிறங்கு
    முரியபல்லுயிரெத்தனையமைத்ததிற்குறுதி
    வருவதெத்தனையமைத்தனையமைத்தருள்வளர்க்கு
    மரியதத்துவவெனக்கிந்தவண்ணமேனமைத்தாய். - (7)


    கணமதேனுநின்காரணந்தன்னையேகருத்தி
    லுணருமாதவர்க்கானந்தமுதவினையொன்றுங்
    குணமிலாதபொய்வஞ்சனுக்கெந்தைநிர்க்குணமா
    மணமுலாமலர்ப்பதந்தரின்யாருனைமறுப்பார். - (8)


    சன்னன்முக்கனிகண்டுதேன்சருக்கரைகலந்த
    தென்னமுத்தியிற்கலந்தவர்க்கின்பமாயிருக்கு
    நன்னலத்தநின்னற்பதந்துணையெனநம்பச்
    சொன்னவர்க்கெனாலாங்கைம்மாறில்லையென்சொல்வேன். - (9)


    தந்தைதாய்தமர்மகவெனுமவையெலாஞ்சகத்திற்
    பந்தமாமென்றேயருமறைவாயினாற்பகர்ந்த
    வெந்தைநீயெனையின்னமவ்வல்லலிலிருத்திச்
    சிந்தைதான்றெளிந்தெவ்வணமுய்வண்செப்பாய். - (10)



    துய்யன்றண்ணருள்வடிவினன்பொறுமையாற்றுல
    ங்கு, மெய்யனென்றுனையையனேயடைந்தனன்மெத்
    த, நொய்யனுண்ணியவறிவிலனொன்றைநூறாக்கும்,
    பொய்யனென்றெனைப்புறம்விடி னென்செய்வேன்புகலாய். - (11)



    ஒன்றதாய்ப்பலவாயுயிர்த்திரட்கெலாமுறுதி
    யென்றதாயென்றுமுள்ளதாயெவற்றினுமிசைய
    நின்றதாய்நிலைநின்றிடுமறிஞவென்னெஞ்ச
    மன்றதாயின்பவுருக்கொடுநடித்திடின்வாழ்வேன். - (12)



    தனியிருந்தருட்சகசமேபொருந்திடத்தமியேற்
    கினியிரங்குதல்கடனிதுசமயமென்னிதயக்
    கனிவுமப்படியாயினதாதலாற்கருணைப்
    புனிதநீயறியாததொன்றுள்ளதோபுகலாய். - (13)



    திருந்துசீரடித்தாமரைக்கன்புதான்செய்யப்
    பொருந்துநாணல்லபுண்ணியஞ்செய்யுநாள்பொருந்தா
    திருந்தநாள்வெகுதீவினையிழைத்தநாளென்றா
    லருந்தவாவுனைப்பொருந்துநாளெந்தநாளடிமை. - (14)



    பின்னுமுன்னுமாய்நடுவுமாயாவினும்பெரிய
    தென்னுந்தன்மையாயெவ்வுயிர்த்திரளையுமியக்கி
    மன்னுந்தண்ணருள்வடிவமேயுனக்கன்புவைத்துந்
    துன்னுமின்னலேன்யானெனுமகந்தையேன்சொல்லாய். - (15)



    மின்னையன்னபொய்வாழ்க்கையேநிலையெனமெய்யா
    முன்னைநான்மறந்தெவ்வணமுய்வணமுரையாய்
    முன்னைவல்வினைவேரறமுடித்தென்றுமுடியாத்
    தன்னைத்தன்னடியார்க்கருள்புரிந்திடுந்தக்கோய். - (16)



    எம்பராபரவெம்முயிர்த்துணைவவென்றிறைஞ்சு
    மும்பரிம்பர்க்குமுளக்கணேநடிக்கின்றாயுன்ற
    னம்பொன்மாமலர்ப்பதத்தையேதுணையெனவடிமை
    நம்பினேனினிப்புரப்பதெக்காலமோநவிலாய். - (17)



    பாடியாடிநின்றிரங்கிநின்பதமலர்முடிமேற்
    சூடிவாழ்ந்தனரமலநின்னடியர்யான்றொழும்ப
    னாடியேயிந்தவுலகத்தைமெய்யெனநம்பித்
    தேடினேன்வெறுந்தீமையேயென்னினிச்செய்வேன். - (18)



    களவுவஞ்சனைகாமமென்றிவையெலாங்காட்டு
    மளவுமாயையிங்காரெனக்கமைத்தனரையா
    வுளவிலேயெனக்குள்ளவாறுணர்த்தினுன்னடிமை
    வளருமாமதிபோன்மதிதளர்வின்றிவாழ்வேன். - (19)



    வானநாயகவானவர்நாயகவளங்கூர்
    ஞானநாயகநான்மறைநாயகநலஞ்சேர்
    மோனநாயகநின்னடிக்கன்பின்றிமுற்றுந்
    தீனனாயகம்வாடவோவென்செய்வேன்செப்பாய். - (20)



    ஏதமற்றவர்க்கின்பமேபொழிகின்றவிறையே
    பாதகக்கருங்கன்மனங்கோயிலாப்பரிந்து
    சூதகத்தனாயாதினுமிச்சைமேற்றோன்றும்
    வாதனைக்கிடமாயினேனெவ்வணம்வாழ்வேன். - (21)



    தெளிவொடீகையோவறிகிலானறிவிலான்சிறிது
    மளியிலானிவன்றிருவருட்கயலெனவறிந்தோ
    வெளியனாக்கினையென்செய்வேனென்செய்வேனெல்லா
    வொளியுமாய்நிறைவெளியுமாயாவுமாமுரவோய். - (22)



    கண்ணினுண்மணியென்னவேதொழுமன்பர்கருத்து
    ணண்ணுகின்றநின்னருளெனக்கெந்தநாணணுகு
    மண்ணுவிண்ணுமற்றுள்ளனபூதமுமாறாப்
    பெண்ணுமாணுமாயல்லவாய்நிற்கின்றபெரியோய் - (23)



    சகமெலாந்தனிபுரந்தனைதகவுடைத்தக்கோ
    ரகமெலாநிறைந்தானந்தமாயினையளவின்
    மகமெலாம்புரிந்தோரைவாழ்வித்தனைமாறா
    விகமெலாமெனைப்பிறந்திடச்செய்ததேனெந்தாய் - (24)



    ஏய்ந்தநல்லருள்பெற்றவர்க்கேவலாயெளியேன்
    வாய்ந்தபேரன்புவளர்க்கவுங்கருணைநீவளர்ப்பா
    யாய்ந்தமாமறையெத்தனையத்தனையறிவாற்
    றோய்ந்தபேர்கட்குந்தோன்றிலாத்தோன்றலாந்தூயோய். - (25)



    தக்கநின்னருட்கேள்வியோசிறிதின்றித்தமியேன்
    மிக்கதெய்வமேநின்னின்பவெள்ளத்தில்வீழே
    னொக்கறாய்தந்தைமகவெனும்பாசக்கட்டுடனே
    துக்கவெள்ளத்திலாழ்கின்றேனென்செய்வான்றுணிந்தேன். - (26)



    பவம்புரிந்திடும்பாவியேற்கருணிலைபதியத்
    தவஞ்செயும்படித்தயவுசெய்தருள்வதேகரும
    மவம்புரிந்திடார்க்கானந்தவமிர்தத்தையளிக்க
    நவங்கொடத்துவத்திரையெறிகடலெனுநலத்தோய். - (27)



    உற்றுணர்தெலாநீயலதில்லையென்றுனையே
    பற்றுகின்றனரெந்தைநின்னடியர்யான்பாவி
    முற்றுமாயமாஞ்சகத்தையேமெய்யெனமுதறா
    னற்றிருந்திடத்தொழில்செய்வான்றனைநிகரானேன். - (28)
    ----------

    26. மண்டலத்தின்




    மணடலத்தின் மிசையொருவன்
          செய்தவித்தையகோவெனவும்வாரணாதி,
    யண்டமவையடுக்கடுக்கா
          யந்தரத்தினிறுத்தும வதானம்போல,
    வெண்டருநல்லகிலாண்டகோடியைத்
          தன்னருள் வெளியிலிலகவைத்துக்,
    கொண்டுநின்றவற்புதத்தை
          யெவராலு நிச்சயிக்கக் கூடாவொன்றை. - (1)


    ஒன்றிரண்டாய்விவகரிக்கும்
          விவகாரங்கடந்தேழாம்யோகபூமி,
    நின்றுதெளிந்தவர் பேசாமௌன நியாயத்தை
          நிறைநிறைவைத்தன்னை,
    யன்றியொரு பொருளிலதா
          வெப்பொருட்குந்தான் முதலாயசலமாகி,
    யென்றுமுள்ள வின்பத்தைத்தண்ணென்ற
          சாந்தபத வியற்கைதன்னை. - (2)


    பதமூன்றுங்கடந்தவர்க்கு
          மேலான ஞானபதப்பரிசுகாட்டிச்,
    சதமாகிநிராலம்பசாக்ஷியதா
          யாரம்பத்தன்மையாகி,
    விதமியாவுங்கடந்த வித்தையெனுமிருளைக்
          கீண்டெழுந்துவிமலமாகி,
    மாறுங்காணாதவானந்த
          சாகரத்தைமௌனவாழ்வை. - (3)


    வாழ்வனைத்துந்தந்தவின்பமா கடலை
          நல்லமிர்தைமணியைப்பொன்னைத்,
    தாழ்வறவென்னுளத்திருந்த
          தத்துவத்தையத்துவிதசாரந்தன்னைச்,
    சூழ்பெரும்பேரொளியையொளிபரந்த
          பரவெளியை யின்பச்சுகத்தைமாறா,
    வேழுலகுங் கலந்தின்றாய் நாளையாயென்று
          மாமியற்கைதன்னை. - (4)


    தன்னையறிந்தவர் தம்மைத்
          தானாகச் செய்தருளுஞ்சமத்தைலோக,
    மின்னை நிகர்த்திட வழியாச்
          சொரூபானந்த எச்சுடரைவேதமாதி,
    யென்னையறிவரிதென்னச்சமய
          கோடிகளிடையவிடையறாத,
    பொன்னைவிரித்திடுமுலகத்தும்
          பருமிம்பரும்பரவும் புனிதமெய்யை. - (5)


    பரவரிய பரசிவமாயது வெனலாய்
          நானெனலாய்ப்பாசசாலம்,
    விரவிநின்ற விசித்திரத்தையைக்ய
          பதத்தினிதிருந்தவிவேகந்தன்னை,
    யிரவுபகனினைப்புமறப்பெனுந்
          தொந்தமறியார்களிதயம்வேதச்,
    சிரமெனவாழ்பராபரத்தையானந்த
          நீங்காதசிதாகாசத்தை. - (6)


    அத்துலிதவனுபவத்தை யனந்தமறையின்ன
          மின்னமறியேமென்னு,
    நித்தியத்தை நிராமயத்தை நிர்க்குண்த்தைத்
          தன்னருளாநினைவுக்குள்ளே,
    வைத்துவைத்துப் பார்ப்பவரைத் தானாக
          வெந்நாளும்வளர்த்துக்காக்குஞ்,
    சித்தினை மாதூவெளியைத் தன்மயமா
          மானந்தத் தெய்வந்தன்னை. - (7)


    தன்னிலே தானாகநினைந்து
          கனிந்த விழ்ந்துசுகசமாதியாகப்,
    பொன்னிலே பணிபோலுமாயை
          தருமனமேயுன்புரைகடீர்ந்தா,
    யென்னினோயான் பிழைப்பேனெனக்கினி
          யாருன்போல்வாரில்லையில்லை,
    யுன்னிலோதிருவருளுக் கொப்பாவாயென்னு
          யிர்க்கோருறவுமாவாய். - (8)


    உறவுடலை யெடுத்தவரிற்
          பிரமாதியேனு முனையொழிந்துதள்ளற்,
    கறவுமரிதரிதன்றோவிகபரமு
          முன்னையன்றியாவதுண்டோ,
    வறிதிலுன்னையசத்தென்னல்
          வழக்கன்றுசத்தெனவும்வாழ்த்துவேனென்,
    சிறுமைகெடப்பெருமையினின்
          சென்மமதேயத்தினினீசெல்லல்வேண்டும் - (9)


    வேண்டிய நாளென்னோடும் பழகிய
          நீயெனைப் பிரிந்த விசாரத்தாலே,
    மாண்டுகிடக்கினு மந்தவெல்லையையும்
          பூரணமா வணக்கஞசெய்வே,
    னாண்டகுருமெளனி தன்னாலியானெனதற்ற
          வனருணானாவேன்பூவிற்,
    காண்டகவெண்சித்திழுத்தி யெனக்குண்டா
          முன்னாலென்கவலைதீர்வேன். - (10)


    தீராதவென்சனனவழக்கெல்லாந்
          தீருமிந்தச்சனனத்தோடே,
    யாரேனுமறிவரியசீவன்
          முத்தியுண்டாகுமையவையோ,
    காரேனுங்கற்பகப்பூங்காவேனு
          முனக்குவமைகாட்டப்போமோ,
    பாராதியாகவெழுமண்டலத்தினின்
          மகிமைபகரலாமோ. - (11)
    -------

    27. பாயப்புலி




    பாயப்புலிமுனமான்கன்றைக்காட்டும்படியகில
    மாயைப்பெரும்படைக்கே யிலக்காவெனைவைத்தனையோ,
    நீயெப்படிவகுத்தாலுநன்றேநின்பெருங்கருணை,
    தாயொத்தடியர்க்கருள்சச்சிதானந்ததற்பரமே. - (1)


    தற்பரமாஞ்சிற்பரமாகிமன்றந்தனினடித்து
    நிற்பரம்போருகன்மால்பணிநீதரென்னெஞ்சகமாங்
    கற்பரந்தாங்குகரைந்திடவானொத்தகாட்சிநல்கும்
    பொற்பரமாயென்வினைக்கருந்தாதைப்பொடிசெய்ததே. - (2)


    செய்யுந்தவஞ்சற்றுமில்லாதநானுன்றிருவடிக்கே
    கொய்யும்புதுமலரிட்டுமெய்யன்பர்குழாத்துடனே
    கையுஞ்சிரமிசைக்கூப்பிநின்றாடிக்கசிந்துருகி
    யுய்யும்படிக்கருள்செய்வதென்றோபுலியூரத்தனே. - (3)


    அத்தனைச்சிற்றம்பலனையென்னுயிராகிநின்ற
    சுத்தனைச்சுத்தவெளியானவனைச்சுகவடிவா
    நித்தனைநித்தநிராதாரமாகியநின்மலனை
    எத்தனைநாள்செல்லுமோமனமேகண்டிறைஞ்சுதற்கே. - (4)


    கண்டாருளத்தினிற்காலூன்றிப்பெய்யுங்கருணைமுகி
    லண்டார்புரத்துக்குமன்பர்வினைக்குமசனிதன்னைக்
    கொண்டாடினார்முனங்கூத்தாடுமத்தன்ற்ன்கோலமெல்
    லாம், விண்டாலம்மாவொன்றுங்காணாதுவெட்டவெறுவெளியே. - (5)


    வெளியானநீயென்மனவெளியூடுவிரவினையா, வொ
    ளியாருங்கண்ணுமிரவியும்போனின்றுலாவுவன்கா,ண
    ளியாருங்கொன்றைச் சடையாடவம்புலியாடக்கங்கைத்,
    துளியாடமன்றுணடமாடுமுக்கட்சுடர்க்கொழுந்தே. - (6)


    கொழுந்தாதுறைமலர்க்கோதையர்மோகக்குரைகடலி
    லழுந்தாதவண்ணநின் பாதப்புணைதந்தருள்வதென்றோ
    வெழுந்தாதரவுசெயெம்பெருமானென் றிறைஞ்சிவிண்ணோர்,
    தொழுந்தாதையேவெண்பொடிபூத்தமேனிச்சுகப்பொருளே. - (7)


    சுகமாகுஞானந்திருமேனியாநல்லதொண்டர்தங்க
    ளகமேபொற்கோயிலெனமகிழ்ந்தேமன்றுளாடியகற்
    பகமேயுன்பொன்னடிநீழல்கண்டாலன்றிப்பாவிக்கிந்தச்,
    செகமாயையானவருங்கோடைநீங்குந்திறமிலையே. - (8)


    நீங்காதுயிருக்குயிராகிநின்றநினையறிந்தே,
    தூங்காமற்றூங்கினல்லாதேயெனக்குச்சுகமுமுண்டோ,
    வோங்காரமாமைந் தெழுத்தாற்புவனத்தை யுண்டுபண்ணிப்,
    பாங்காநடத்தும்பொருளேயகண்டபரசிவமே. - (9)


    சிவமாதிநான்முகக்கோவந்தமாமறைசெப்புகின்ற
    நவமாயிலங்கியவொன்றேயிரண்டற்றநன்மைபெறா
    தவமேதருமைப்புலப்பொறிக்கெயென்னறிவுபொல்லாப்
    பவமேவிளக்கவென்றோவெளிமானெனப்பாய்ந்ததுவே. - (10)


    ஆறொத்தில்ங்குசமயங்களாறுக்குமாழ்கடலாய்
    வீறிப்பரந்தபாமானவானந்தவெள்ளமொன்று
    தேறித்தெளிந்துநிலைபெற்றமாதவர்சித்தத்திலே
    யூறிப்பரந்தண்டகோடியெல்லாநின்றுலாவியதே. - (11)


    நடக்கினுமோடினுநிற்கினும்வேறொருநாட்டமின்றிக்
    கிடக்கினுஞ்செவ்விதிருக்கினுநல்லருட்கேள்வியிலே
    தொடக்குமென்னெஞ்சமனமற்றபூரணத் தொட்டிக்குளே
    முடக்குவன்யான்பரமானந்தநித்திரைமூடிடுமே. - (12)


    எண்ணாததெண்ணிய நெஞ்சேதுயரொழியென்னிரண்டு
    கண்ணேயுறங்குறங்கென்னாணைமுக்கட்கருணைப்பிரான்
    றண்ணார்கருணைமௌனத்தினான்முத்திசாதிக்கலா
    நண்ணாததொன்றில்லையெல்லாநலமுநமக்குளவே - (13)


    நானென்றொருமுத லுண்டென்றநான்றலைநாணவென்னுட்
    டானென்றொருமுதல்பூரணமாகத் தலைப்பட்டொப்பி
    லானந்தந்தந்தென்னறிவையெல்லாமுண்டவசநல்கி
    மோனந்தனைவிளைத்தாலினியாதுமொழிகுவதே. - (14)


    தானந்தவஞ்சற்றுமில்லாதநானுண்மைதானறிந்து
    மோனம்பொருளெனக் கண்டிடச்சற்குருமோனனுமாய்த்
    தீனன்றனக்கிங்கிரங்கினையேயினிச்சிந்தைக்கென்று
    மானந்தந்தானல்லவோபரமேசச்சிதானந்தமே. - (15)


    எனக்கோர்சுதந்தரமில்லையப்பாவெனக்கெய்ப்பில்வைப்பாய்
    மனக்கோதகற்றும்பரம் பொருளேயென்னைவாழ்வித்திட
    நினக்கேபரநின்னைநீங்காதபூரணநீள்கருணை
    தனக்கேபரமினிச்சும்மாவிருக்கத் தகுமென்றுமே. - (16)


    இடம்பெறுவீடுமின்னார்சேய்சகமுமிருநிதியு
    முடம்பைவிட்டாருயிர்போம்போதுகூடியுடன்வருமோ
    மடம்பெறுமாயைமனமேயினியிங்குவாமௌனி
    திடம்பெறவைத்தமௌனஞ்சகாயந்தெரிந்துகொள்ளே. - (17)


    நாற்றச்சடலத்தையொன்பதுவாசனடைமனையைச்
    சோற்றுப் பசையினை மும்மலபாண்டத் தொடக்கறையை
    யாற்றுப்பெருக் கன்னகன்மப்பெருக்கையடர்கிருமிச்
    சேற்றைத்துணையென்றநாய்க்குமுணடோகதிசேர்வதுவே. - (18)


    பொய்யாருலகநிலையல்லகானற்புனலெனவே
    மெய்யாவறிந்தென்னவென்னாலிதனைவிடப்படுமோ
    கையான்மௌனந்தெரித்தேகல்லானிழற்கண்ணிருந்த
    வையாவப்பாவென்னரசேமுக்கண்ணுடையாரமுதே. - (19)


    ஆராவமுதெனமோனம்வகித்துக்கல்லானிழற்கீழ்ப்
    பேராதுநால்வருடன்வாழ்முக்கண்ணுடைப்பேரரசே
    நீராயுருகவுள்ளன்புதந்தேசுகநிட்டையைநீ
    தாராவிடினென்பெருமூச்சுத்தானத்தனஞ்செயனே. - (20)


    வாயுண்டுவாழ்த்தமௌனஞ்செய்போதுமௌனவருட்
    டாயுண்டுசேயென்னவென்னைப்புரக்கச்சதானந்தமா
    நீயுண்டுநின்னைச்சரண்புகநானுண்டென் னெஞ்சமையா
    தீயுண்டிருந்தமெழுகலவோகதிசேர்வதற்கே. - (21)


    கல்லாலெறிந்துங்கைவில்லாலடித்துங்கனிமதுரச்
    சொல்லாற்றுதித்துநற்பச்சிலைதூவியுந்தொண்டரின
    மெல்லாம்பிழைத்த னரன்பற்றநானினியேதுசெய்வேன்
    கொல்லாவிரதியர்நேர்நின்றமுக்கட்குருமணியே. - (22)


    முன்னிலைச்சுட்டொழிநெஞ்சேநின்போதமுளைக்கிலையோ
    பின்னிலைச்சன்மம்பிறக்குங்கண்டாயிந்தப்பேய்த்தனமேன்
    றன்னிலையேநில்லுதானேதனிச்சச்சிதானந்தமா
    நன்னிலைவாய்க்குமெண்சித்தியுங் காணுநமதல்லவே. - (23)


    சொல்லான்மௌனமௌனமென்றேசொல்லிச்சொல்லிக்கொண்ட
    தல்லான்மனமறப் பூரணநிட்டையிலாழ்ந்ததுண்டோ
    கல்லாதமூடனினியென்செய்வேன்சகற்காரணமாம்
    வல்லாளனானமௌனசதானந்தமாகடலே. - (24)


    ஆரணமாகமமெல்லாமுரைத்தவருண்மௌன
    காரணமூலங்கல்லாலடிக்கேயுண்டுகாணப்பெற்றாற்
    பாரணங்கோடுசுழனெஞ்சமாகியபாதரச
    மாரணமாய்விடுமெண்சித்திமுத்தியும்வாய்த்திடுமே. - (25)


    சித்தமவுனிவடபான்மவுனிநந்தீபகுண்ட
    சுத்தமவுனியெனுமூவருக்குந்தொழும்புசெய்து
    சத்தமவுனமுதன்மூன்றுமௌனமுந்தான்படைத்தே
    னித்தமவுனமல்லாலறியேன்மற்றைநிட்டைகளே. - (26)


    கண்டேனினதருளவ்வருளாய்நின்றுகாண்பதெல்லா
    முண்டேயதுவுநினதாக்கினேனுவட்டாதவின்ப
    மொண்டேயருந்தியிலைப்பாறினேனல்லமுத்திபெற்றுக்
    கொண்டேன்பராபரமேயெனக்கேதுங்குறைவில்லையே. - (27)


    மேற்கொண்டவாயுவுங்கீழ்ப்படமூலத்துவெந்தழலைச்
    சூற்கொண்டமேகமெனவூமைநின்றுசொரிவதையென்
    னாற்கண்டதன்றுமௌனோபதேசியளிக்கையினிப்
    பாற்கண்டுகொண்டனன்மேலேயமிர்தம்பருகுவனே. - (28)


    சொல்லாற்றொடர்பொருளாற்றொடராப்பரஞ்சோதிநின்னை
    வல்லாளர்கண்டவழிகண்டிலேன்சகமார்க்கத்திலுஞ்
    செல்லாதென்சிந்தைநடுவேகிடந்து திகைத்துவிம்மி
    யல்லானதும்பகலானதும்வாய்விட்டரற்றுவனே. - (29)


    அறியாதவென்னையறிவாயுநீயென்றகம்புறமும்
    பிறியாதறிவித்தபேரறிவாஞ்சுத்தபேரொளியோ
    குறியாதவானந்தக்கோவோவமுதருள்குண்டலியோ
    சிறியேன்படுந்துயர்கண்டுகல்லானிதழ்சேர்ந்ததுவே. - (30)


    எல்லாமுதவுமுனையொன்றிற்பாவனையேனுஞ்செய்து
    புல்லாயினுமொருபச்சிலையாயினும்போட்டிறைஞ்சி
    நில்லேனல்யோகநெறியுஞ்செயேனருணீதியொன்றுங்
    கல்லேனெவ்வாறுபரமேபரகதிகாண்பதுவே. - (31)


    ஒன்றுந்தெரிந்திடவில்லையென்னுள்ளத்தொருவவெ
    னக்,கென்றுந்தெரிந்த விவையவைகேளிரவும்பகலுங்
    குன்றுங்குழியும்வனமுமலையுங்குரைகடலு
    மன்றுமனையுமன்மாதிதத்துவமாயையுமே. - (32)


    பழுதுண்டுபாவையர்மோகவிகாரப்பாவையிடை
    விழுகின்றபாவிக்குந்தன்றாட்புணையைவியந்தளித்தான்
    றொழுகின்றவன்பருளங்களிகூரத்துலங்குமன்று
    ளெழுகின்றவானந்தக்கூத்தனென்கண்மணியென்னப்பனே. - (33)


    அழுக்கார்ந்தநெஞ்சுடையேனுக்கையாநின்னருள்வழங்கி,
    னிழுக்காகுமென்றெண்ணியோவிரங்காதவியல் புகண்டாய்,
    முழுக்காதலாகி விழிநீர்பெருக்கியமுத்தரெனுங்,
    குழுக்காணநின்றுநடமாடுந்தில்லைக்கொழுஞ்சுடரே. - (34)


    ஆலம்படைத்தவிழியார்கண்மால்கொண்டவர்செயிந்தர,
    சாலம்படைத்துத்தளர்ந்தனையேயென்றுந்தண்ணருள்கூர்,
    கோலம்படைத்துக்கல்லாலடிக்கீழ்வைகுங்கோவுக்கன்பாங்,
    காலப்படைக்கத்தவம்படையாதென்கொல்கன்னெஞ்சமே. - (35)


    சும்மாவிருக்கச்சுகஞ்சுகமென்றுசுருதியெல்லா
    மம்மாநிரந்தரஞ்சொல்லவுங்கேட்டுமறிவின்றியே
    பெம்மான்மௌனி மொழியையுந்தப்பி யென்பேதைமையால்,
    வெம்மாயக்காட்டிலலைந்தேனந்தோவென்விதிவசமே. - (36)


    தினமேசெலச்செலவாழ்நாளுநீங்கச்செகத்திருள்சொற்,
    பனமேயெனவெளிகண்டேயிருக்கவும்பாசபந்த,
    வினமேதுணையென்றிருந்தோனமன்வரினென்செய்குவோ,
    மனமேகம்போலவுண்டோசுத்தமூடரிவ்வையகத்தே. - (37)


    கடலெத்தனைமலையெத்தனையத்தனைகன்மமதற்
    குடலெத்தனையத்தனைகடனுண்மணலொக்குமிந்தச்
    சடலத்தைநான்விடுமுன்னேயுனைவந்துசாரவிருட்
    படலத்தைமாற்றப்படாதோநிறைந்தபராபரமே. - (38)


    நினையுநினைவுநினையன்றியில்லைநினைத்திடுங்கால்
    வினையென்றொருமுத னின்னையல்லாது விளைவதுண்டோ,
    தனையுந்தெளிந்துன்னைச் சார்ந்தோர்களுள்ளச் செந்தாமரையா,
    மனையும்பொன்மன்றமுநின்றாடுஞ்சோதிமணிவிளக்கே. - (39)


    உள்ளத்தையுமிங்கெனையுநின்கையினிலொப்புவித்துங்,
    கள்ளத்தைச்செய்யும்வினையால்வருந்தக்கணக்குமுண்டோ,
    பள்ளத்தில்வீழும்புனல்போற்படிந்துன்பரமவின்ப,
    வெள்ளத்தின்மூழ்கினர்க்கேயெளிதாந்தில்லை வித்தகனே. - (40)


    கள்ளம்பொருந்துமட நெஞ்சமேகொடுங்காலர்வந்தா
    லுள்ளன்பவர்கட்குண்டோவில்லையேயுலகீன்றவன்னை,
    வள்ளம்பொருந்துமலரடிகாணமன்றாடுமின்ப
    வெள்ளச்செம்பாதப் புணையேயல்லாற்கதி வேறில்லையே. - (41)


    தன்மயமானசுபாவத்தின்மெள்ளத்தலைப்படுங்கான்
    மின்மயமானசகம்யாதுரைத்தென்வெளியிலுய்த்த
    சின்மயமுத்திரைக் கையேமெய்யாகத் தெளிந்தநெஞ்சே,
    நின்மயமென்மயமெல்லாநிறைந்தநிராமயமே. - (42)


    ஆயுங்கலையுஞ்சுருதியுங்காணடற்கரியவுனைத்
    தோயும்படிக்குக்கருணைசெய்வாய்சுகவான்பொருளே
    தாயும்பிதாவுந்தமருங்குருவுந்தனிமுதலு
    நீயும்பரையுமென்றேயுணர்ந்தேனிதுநிச்சயமே. - (43)


    அல்லும்பகலுமுனக்கேயபயமபயமென்று
    சொல்லுஞ்சொலின்னந்தெரிந்ததன்றோதுதிப்பார்கண்மனக்,
    கல்லுங்கரைக்கு மௌனாவுனது கருணையென்பாற்,
    செல்லும்பொழுதல்லவோசெல்லுவேனந்தசிற்சுகத்தே. - (44)


    எல்லாஞ்சிவன்செயலென்றறிந்தாலவன்னின்னருளே
    யல்லாற்புகலிடம்வேறுமுண்டோவதுவேநிலையா
    நில்லாயுன்னாற்றமியேற்குக்கதியுண்டிந்நீணிலத்திற்
    பொல்லாமயக்கத்திலாழ்ந்தாவதென்னபுகனெஞ்சமே. - (45)


    ஒளியேயொளியி ணுணர்வேயுணர்வினுவகைபொங்குங்
    களியேகளிக்குங் கருத்தேகருத்தைக் கவளங்கொண்ட
    வெளியேவெளியின்விளைசுகமேசுகர்வீறுகண்டுந்
    தெளியேன்றெளிந்த வரைபோற்றிடேனென்னசெய்குவனே. - (46)


    மறக்கின்றதன்மையிறத்தலொப்பாகுமனமதொன்றிற்,
    பிறக்கின்றதன்மைபிறத்தலொப்பாகுமிப்பேய்ப்பிறவி,
    யிறக்கின்றவெல்லைக்களவில்லையேயிந்தச்சன்மவல்ல,
    றுறக்கின்றநாளெந்தநாள்பரமேநின்றொழும்பனுக்கே. - (47)


    காட்டியவந்தக்கரணமுமாயையிக்காயமென்று
    சூட்டியகோலமுநானாவியங்கத்துறையிதனு
    ணாட்டியநான்றனக்கென்றோரறிவற்றநானிவற்றைக்
    கூட்டிநின்றாட்டினையேபரமேநல்லகூத்திதுவே. - (48)


    பொல்லாதமாமர்க்கடமனமேயெனைப்போலடுத்த,
    வெல்லாற்றையும்பற்றிக்கொண்டனையே யென்னைநின்மயமா,
    நில்லாயருள்வெளிநீநானிற்பேனருணிட்டையொரு,
    சொல்லாற்பதிந்துபரிபூரணானந்தந்தோய்குவனே. - (49)


    வாராய்நெஞ்சேயுன்றன் றுன்மார்க்கம்யாவையும் வைத்துக்கட்டிங்,
    காராயடிக்கடிசுற்றுகின்றாயுன்னவலமதிக்,
    கோராயிரம்புத்திசொன்னாலுமோர்கிலையோ கெடுவாய்,
    பாராயுனைக்கொல்லுவேன்வெல்லுவேனருட்பாங்குகொண்டே. - (50)


    மாதத்திலேயொருதிங்களுண்டாகிமடிவதைநின்
    போதத்திலேசற்றும் வைத்திலையேவெறும் புன்னமநெஞ்சே,
    வேதத்திலேதர்க்கவாதத்திலேவிளங்காதுவிந்து
    நாதத்திலேயடங்காதந்தவான்பொருணாடிக்கொள்ளே. - (51)


    எங்கும்வியாபித்துணர்வாயுனக்கென்னிதயத்துளே
    தங்குந்துயரந்தெரியாதவண்ணந்தடைசெய்ததா
    ரங்கங்குழைந்துள்ளுருகுமன்பாளர்க்கணைகடந்து
    பொங்குங்கருணைக்கடலேசம்பூரணபோதத்தனே. - (52)


    வையகமாதர்சுகத்தையும்பொன்னையுமாயைமல
    மெய்யையுமெய்யென்று நின்னடியார்தம்விவேகத்தை
    மையமில்வீட்டையுமெய்ந்நூலையும் பொய்ய தாகவென்ணும்,
    பொய்யர்தந்நட்பைவிடுவதென்றோபரிபூரணமே. - (53)


    அளியுங்கனியொத்தருவினையானொந்தயர்வுறுவேன்
    றெளியும்படிக்கிப்பரிபாககாலமுஞ்சித்திக்குமோ
    வொளியுங்கருணையுமாறாதவின்பமுமோருருவாய்
    வெளிவந்தடியர்களிக்கநின்றாடும்விழுப்பொருளே. - (54)


    அடையார்புரஞ்செற்றதேவேநின்பொன்னடிக்கன்புசற்றும்,
    படையாதவென்னைப்படைத்திந்தப்பாரிற்படர்ந்தவினைத்,
    தடையாற்றளையிட்டுநெஞ்சம்புண்ணாகத் தளரவைத்தா,
    யுடையாயுடையபடியன்றியான்செய்ததொன்றிலையே. - (55)


    ஆடுங்கறங்குந்திரிகையும்போலவலைந்தலைந்து
    காடுங்கரையுந்திரிவதல்லானின்கருணைவந்து
    கூடும்படிக்குத்தவமுயலாதகொடியரெமன்
    றேடும்பொழுதென்னசெய்வார்பரானந்தசிற்சுடரே. - (56)


    கற்றும்பலபலகேள்விகள்கேட்டுங்கறங்கெனவே
    சுற்றுந்தொழில்கற்றுச் சிற்றின்பத்தூடுசுழலினென்னாங்,
    குற்றங்குறைந்துகுணமேலிடுமன்பர்கூட்டத்தையே
    முற்றுந்துணையெனநம்புகண்டாய்சுத்தமூடநெஞ்சே - (57)


    நீயெனநானெனவேறில்லையென்னுநினைவருளத்
    தாயெனமோனகுருவாகிவந்துதடுத்தடிமைச்
    சேயெனக்காத்தனையேபரமேநின்றிருவருளுக்
    கேயென்னசெய்யுங்கைம்மாறுளதோசுத்வேழையனே. - (58)


    ஆத்திரம்வந்தவர்போலலையாமலரோகதிட
    காத்திரந்தந்தென்னையே யன்னைபோலுங்கருணைவைத்திம்
    மாத்திரமுன்னின்றுணர்த்தினையேமெளனாயினிநான்
    சாத்திரஞ்சொன்னபடியியமாதியுஞ்சாதிப்பனே. - (59)
    ------------

    28. உடல்பொய்யுறவு




    உடல்பொய்யுறவாயினுண்மையுறவாகக்
    கடவாரார்தண்ணருளேகண்டாய்-திடமுடனே
    யுற்றுப்பார்மோனனொருசொல்லேயுண்மைநன்றாப்
    பற்றிப்பார்மற்றவெல்லாம்பாழ். - (1)


    பாராதிபூதமெல்லாம்பார்க்குங்காலப்பரத்தின்
    சீராகநிற்குந்திறங்கண்டாய்-நேராக
    நிற்குந்திருவருளினெஞ்சேயாநிற்பதல்லாற்
    கற்குநெறியாதினிமேற்காண். - (2)


    மெய்யான தன்மை விளங்கினால் யார்க்கேனும்
    பொய்யான தன்மை பொருந்துமோ - ஐயாவே
    மன்னும்நி ராசைஇன்னம் வந்ததல்ல உன்னடிமை
    என்னும்நிலை எய்துமா றென். - (3)


    அறியாமை மேலிட் டறிவின்றி நிற்குங்
    குறியேற் கறிவென்ற கோலம் - வறிதேயாம்
    நீயுணர்த்த நான்உணரும் நேசத்தா லோஅறிவென்
    றேயெனக்கோர் நாமமிட்ட தே. - (4)


    ஏதுக்குச் சும்மா இருமனமே என்றுனக்குப்
    போதித்த உண்மைஎங்கே போகவிட்டாய்-வாதுக்கு
    வந்தெதிர்த்த மல்லரைப்போல் வாதாடி னாயேயுன்
    புந்தியென்ன போதமென்ன போ. - (5)


    சகமனைத்தும் பொய்யெனவே தானுணர்ந்தால் துக்க
    சுகமனைத்தும் பொய்யன்றோ சோரா-திகபரத்தும்
    விட்டுப் பிரியாத மேலான அத்துவிதக்
    கட்டுக்குள் ஆவதென்றோ காண். - (6)


    கற்கண்டோ தேனோ கனிரசமோ பாலோஎன்
    சொற்கண்டா தேதெனநான் சொல்லுவேன் - விற்கண்ட
    வானமதி காண மவுனிமவு னத்தளித்த
    தானமதில் ஊறும்அமிர் தம். - (7)


    கேட்டலுடன் சிந்தித்தல் கேடிலா மெய்த்தெளிவால்
    வாட்டமறா வுற்பவநோய் மாறுமோ-நாட்டமுற்று
    மெய்யான நிட்டையினை மேவினர்கட் கன்றோதான்
    பொய்யாம் பிறப்பிறப்புப் போம். - (8)


    மாயாசகத்தைமதியாதார்மண்முதலா
    யேயானதத்துவத்திலெய்துவரோ - நேயானு
    பூதிநிலைநிற்கப்பொருந்துவர்களன்னவர்த
    நீதியையேயோர்மனமேநீ. - (9)


    இகமுழுதும்பொய்யெனவேயேய்ந்துணர்ந்தாலாங்கே
    மிகவளரவந்தவருண்மெய்யே - யகநெகிழப்
    பாரீரொருசொற்படியேயனுபவத்தைச்
    சேரீரதுவேதிறம். - (10)


    ஆரணங்களாகமங்களியாவுமேயானந்த
    பூரணமேயுண்மைப்பொருளென்னுங்-காரணத்தை
    யோராயோவுள்ளுள்ளே யுற்றுணர்ந்தவ்வுண்மையினை
    பாராயோநெஞ்சேபகர். - (11)


    நேராயம்மௌனநிலைநில்லாமல்வாய்பேசி
    யாராயலைந்தீர்நீராகெடுவீர் - தேரீர்
    திரையுந்திரையுநதிசென்னியனைநாவாற்
    கரையுங்கரையுமனக்கல். - (12)


    அற்பமனமேயகிலவாழ்வத்தனையுஞ்
    சொற்பனங்கண்டாயுண்மைசொன்னேனான் - கற்பனையொன்
    றில்லாவிடத்தேயெனைச்சும்மாவைத்திருக்கக்
    கல்லாய்நீதானோர்கவி. - (13)


    ஏதுந்திருவருளினிச்சையாமென்றென்றப்
    போதும்பொருந்தும்புனிதர்பாற் - றீதுநெறி
    செல்லுமோசெல்லாதேசெல்லுமிடமின்பமலாற்
    சொல்லுமோவேதத்தொனி. - (14)


    கல்லேறுஞ்சில்லேறுங்கட்டியேறும்போலச்
    சொல்லேறப்பாழ்த்ததுளைச்செவிகொண்-டல்லேறு
    நெஞ்சனெனநிற்கவைத்தாய்நீதியோதற்பரமே
    வஞ்சனல்லேனீயேமதி. - (15)


    அப்பொருளுமான்மாவுமாரணநூல்சொன்னபடி
    தப்பிலாச்சித்தொன்றாஞ்சாதியினா - லெப்படியுந்
    தேரிற்றுவிதஞ்சிவாகமமேசொல்லுநிட்டை
    யாருமிடத்தத்துவிதமாம். - (16)


    வேதமுதலாய்விளங்குஞ்சிவவடிவாம்
    போதநிலையிற்பொருந்தாம - லேதமிகு
    மோகாதியல்லலிலேமூழ்கினையேநெஞ்சேயித்
    தேகாதிமெய்யோதெளி. - (17)


    நோக்கற்கரிதானநுண்ணியவான்மோனநிலை
    தாக்கற்குபாயஞ்சமைத்தபிரான்-காக்குமுயி
    ரத்தனைக்குநானடிமையாதலினால்யானெனதென்
    றித்தனைக்கும்பேசவிடமில். - (18)


    ஒன்றுமறநில்லென்றுணர்த்தியநம்மோனகுரு
    தன்றுணைத்தாணீடூழிதாம்வாழ்க-வென்றென்றே
    திக்கனைத்துங் கைகுவிக்குஞ் சின்மயராந் தன்மையர்க்கே,
    கைக்குவருமின்பக்கனி. - (19)


    மனத்தாலும்வாக்காலுமன்னவொண்ணாமோன
    வினத்தாரேநல்லவினத்தார்-கனத்தபுகழ்
    கொண்டவருமன்னவரேகூறரியமுத்திநெறி
    கண்டவருமன்னவரேகாண். - (20)


    கண்ணொளியேமோனக்கரும்பேகவலையறப்
    பண்ணொளிக்குமுள்ளொளியாம்பான்மையினை-நண்ணிடவுன்
    சித்தமிரங்கிலதென்சித்தந்தெளியாவே
    றித்தனைக்குமாதரவுமில். - (21)


    அறியாமைசாரினதுவாயறிவா
    நெறியானபோததுவாய்நிற்குங் - குறியாற்
    சதசத்தருளுணர்த்தத்தானுணராநின்ற
    விதமுற்றறிவெனும்பேர்மெய். - (22)


    குருலிங்கசங்கமமாக்கொண்டதிருமேனி
    கருவொன்றுமேனிநம்பாற்காட்டா-தருனென்று
    கண்டவர்க்கேயானந்தங்கண்டுகொளலாமலது
    கொண்டவர்க்கிங்கென்னகிடைக்கும். - (23)


    புலியினதளுடையான்பூதப்படையான்
    பலியிரந்துமெல்லாம்பரிப்பான் - மலிபுனல்சேர்
    பொன்முடியான்முக்கட்புனிதன்சரண்புகுந்தோர்க்
    கென்முடியாதேதுமுளதே. - (24)


    சொல்லுக்கடங்காச்சுகப்பொருளைநாமெனவே
    யல்லும்பகலுமரற்றுவதென்-னல்லசிவ
    ஞானமயம்பெற்றோர்கணாமில்லையென்பரந்தோ
    மோனமயமானமுறை. - (25)


    ஐயாவருணகிரியப்பாவுனைப்போல
    மெய்யாகவோர்சொல்லிளம்பினரியார் - வையகத்தோர்
    சாற்றரிதென்றேசற்றார்தன்னையாய்முக்கணெந்தை
    நாற்றிசைக்குங்கைகாட்டினான். - (26)


    காதற்றுப்போனமுறிகட்டிவைத்தாலாவதுண்டோ
    தீதற்றகாயமுமச்செய்கையே-போதமாய்
    நிற்பரல்லாலிச்சகத்தினேரார்கணேரிடினுந்
    தற்பரமாக்கண்டிருப்பார்தாம். - (27)


    வெள்ளங்குலாவுசடைவெள்ளக்கருணையினான்
    கள்ளங்குலாவுவஞ்சக்கள்ளனே-னுள்ளத்தி
    லில்லனென்றாலன்னவன்றானெங்கும்வியாபகத்தா
    னல்லனென்றுஞ்சொல்லவழக்காம். - (28)


    தத்துவப்பேயோடேதலையடித்துக்கொள்ளாமல்
    வைத்தவருண்மௌனவள்ளலையே - நித்தமன்பு
    பூணக்கருதுநெஞ்சுபோற்றக்கரமெழும்புங்
    காணத்துடிக்குமிருகண். - (29)


    தொல்லைவினைக்கீடாய்ச்சுழல்கின்றநானொருவ
    னெல்லையிலாநின்கருணையெய்துவனோ - வல்லவனா
    மோனகுருவேமுழுதினையுந்தானுணர்ந்த
    ஞானகுருவேநவில். - (30)


    மூன்றுகண்ணாமுத்தொழிலாமும்முதலாமூவுலகுந்
    தோன்றக்கருணைபொழிதோன்றலே - யீன்றவன்னை
    தன்னைப்போலன்புதழைத்தோயொருதெய்வ
    முன்னைப்போலுண்டோவுரை. - (31)


    நேசிக்குஞ்சிந்தைநினைவுக்குளுன்னைவைத்துப்
    பூசிக்குந்தானிறைந்துபூர்ணமா-யோசித்து
    நின்றதல்லான்மோனாநிருவிகற்பநிட்டைநிலை
    யென்றுவருமோவறியேனே. - (32)


    அறிவிலறியாமையற்றறிவாய்நின்று
    பிறிவறவானந்தமயம்பெற்றுக்-குறியவிழ்ந்தா
    லன்றைக்குடல்வேண்டேனையாவிவ்வாக்கையையே
    யென்றைக்கும்வேண்டுவனேயான். - (33)


    உடலைப்பழித்திங்குணவுங்கொடாமல்
    விடவிடவேநாடுவரோமெய்யைப்-படபடென
    வேண்டுவேனிந்தவுடன்மெய்யுணராப்பொய்யனா
    னாண்டநீதானேயறி. - (34)


    அறியாயோவென்னையுநீயாண்டநீசுத்த
    வெறியாய்மயங்கவுமேன்விட்டாய்-நெறிமயங்கிக்
    குன்றுஞ்செடியுங்குறுகுமோவையாவே
    கன்றுகெட்டாற்றாயருகேகாண். - (35)


    ஏதுக்குடற்சுமைகொண்டேனிருந்தேனையனே
    யாதிக்கமோனவருட்டாயே - சோதியா
    மன்னநிருவிகற்பவானந்தநிட்டையிலே
    பின்னமறநில்லாதபின். - (36)


    பின்னுமுடற்சுமையாப்பேசும்வழக்கதனா
    லென்னபலனாமுற்றிருந்தோமே-யன்னதனா
    லானந்தந்தானேதானாகுமெம்மையனே
    யேனிந்தத்துன்பமினி. - (37)


    துன்பக்கடலிற்றுளைந்ததெல்லாந்தீர்ந்ததே
    யின்பக்கடலிலிருமென்ன-வன்பிற்
    கரைந்துகரைந்துருகிக்கண்ணருவிகாட்ட
    விரைந்துவருமானந்தமே. - (38)


    கரைந்துகரைந்துருகிக்கண்ணீராறாக
    விரைந்தேநிருவிகற்பமெய்த - நிரந்தரமு
    நின்னையேசிந்திக்கநீகொடுத்தாய்மோனாநா
    னென்னைமுழுதுங்கொடுத்தேனே. - (39)


    அல்லும்பகலும்பேரன்புடனேதானிருந்தாற்
    கல்லுமுருகாதோகன்னெஞ்சே-பொல்லாத
    தப்புவழியேனினைந்தாய்சந்ததமுநீயிறந்த
    வெப்பிலேயானந்தமே. - (40)


    கொடுத்தேனேயென்னைக்கொடுத்தவுடனின்ப
    மடுத்தேனேநீடுழிவாழ்ந்தே-யடுத்தேனே
    பெற்றேனேபெற்றுப்பிழைத்தேனேசன்மவல்ல
    லிற்றேனேயேழையடியேன். - (41)


    பெற்றோம்பிறவாமைபேசாமையாயிருக்க
    கற்றோமெனவுரைக்கக்காரியமேன்-சற்றேனு
    நீக்கற்றவின்பநிலைபொருந்தியேசற்று
    வாக்கற்றாற்பேசுமோவாய். - (42)


    காலன்றனையுதைத்தான்காமன்றனையெரித்தான்
    பாலன்பசிக்கிரங்கப்பாற்கடலை-ஞாலமெச்சப்
    பின்னேநடக்கவிட்டான்பேரருளைநாடாதார்க்
    கென்னேநடக்கையினி. - (43)


    விண்ணருவிமேன்மேல்விளங்குவபோலேயிரண்டு
    கண்ணருவிவெள்ளமொடுகைகூப்பித்-தண்ணமிர்த
    வெள்ளமேயானந்தவெற்பேயெனத்தொழுவோ
    ருள்ளமேஞானவொளி. - (44)


    பிள்ளைமதிச்செஞ்சடையான்பேசாப்பெருமையினான்
    கள்ளவிழும்பூங்கொன்றைக்கண்ணியா-னுள்ளபடி
    கல்லாலின்கீழிருந்துகற்பித்தானோர்வசன
    மெல்லாருமீடேறவே. - (45)


    புலனைந்துந்தானேபொரமயங்கிச்சிந்தை
    யலமந்துழலுமடிமை - நலமிகுந்த
    சித்தானமோனசிவனேநின்சேவடிக்கே
    பித்தானாலுண்டோபிறப்பு. - (46)


    நிறைகுடந்தானீர்கொளுமோநிச்சயமாமோன
    முறையுணர்ந்தார்யாதைமுயல்வார்-பிறையணிந்த
    மிக்ககைலாயமலைவித்தகனேவேதியனே
    தெக்கரணிமேனியனேசெப்பு. - (47)


    துங்கமழுமானுடையாய்சூலப்படையுடையாய்
    திங்களணிசெஞ்சடையாய்சேவுடையாய்-மங்கையொரு
    பாலுடையாய்செங்கட் பணியாயென்சென்னியின்மேற்,
    காலுடையாய்நீயேகதி. - (48)


    இனியகருணைமுகிலெம்பிரான்முக்கட்
    கனியமிர்தவாரியின்பக்கட்டி-தனிமுதல்வ
    னித்தன்பரமனிமலனிறைவாய்நிறைந்த
    சுத்தனமக்கென்றுந்துணை. - (49)


    நீதியாய்க்கல்லாலினீழலின்கீழேயிருந்து
    போதியாவுண்மையெல்லாம்போதித்தா-னேதில்
    சனகாதியாயதவத்தோர்க்குஞான
    தினகரனாமெளனசிவன். - (50)


    தேகச்செயறானுஞ்சிந்தையுடனேகுழையில்
    யோகநிலைஞானிகளுக்கொப்புவதோ-மோகநிலை
    யல்லலிலேவாழ்வாரோவப்பனேநீயற்ற
    வெல்லையிலேசும்மாவிரு. - (51)


    சும்மாவிருக்கச்சுகமுதயமாகுமே
    யிம்மாயாயோகமினியேனடா-தம்மறிவின்
    சுட்டாலேயாகுமோசொல்லவேண்டாங்கன்ம
    நிட்டாசிறுபிள்ளாய்நீ. - (52)


    நீயற்றவந்நிலையேநிட்டையதினீயிலையோ
    வாயற்றவனேமயங்காதே-போயற்
    றிருந்தாலுநீபோகாயென்றுமுள்ளாய்சும்மா
    வருந்தாதேயின்பமுண்டுவா. - (53)


    வாவாவென்றின்பம்வரவழைக்குங்கண்ணீரோ
    டாவாவென்றேயழுதவப்பனே-நீவாடா
    வெல்லாநமக்கெனவேயீந்தனையேயீந்தபடி
    நில்லாயதுவேநிலை. - (54)


    நில்லாப்பொருளைநினையாதேநின்னையுள்ளோர்
    சொல்லாப்பொருட்டிரளைச்சொல்லாதே-கல்லாத
    சிந்தைகுழைந்துசுகஞ்சேரக்குருவருளால்
    வந்தவழிநல்லவழி. - (55)


    வழியிதென்றுமல்லாவழியிதெனறுஞ்சொல்லிற்
    பழிபழியாநல்லருளாற்பார்த்தோர்-மொழியுனக்கே
    யேற்றிருக்கச் சொன்னவன்றே யெங்கும் பெருவெளியாம்,
    பார்த்தவிடமெல்லாநீபார். - (56)


    பாரனைத்தும்பொய்யெனயே பட்டினத்துப்பிள்ளையைப்போ
    லாருந்துறக்கையரிதரிது -நேரே
    மனத்துறவுமப்படியேமாணாவிவற்றி
    லுனக்கிசைந்தவாறொன்றேயோர். - (57)


    ஓராமலேயொருகாலுன்னாமலுள்ளொளியைப்
    பாராமலுள்ளபடிபார்த்திருந்தால்-வாராதோ
    பத்துத்திசையும்பரந்தெழுந்தானந்தவெள்ளந்
    தத்திக்கரைபுரண்டுதான். - (58)


    தானானதன்மைவந்துதாக்கினாலவ்விடத்தே
    வானாதிமாயைவழங்காதோ-ஞானாகே
    ளுன்னுள்ளேதோன்றாவுறவாகிநின்றதென
    வென்னுள்ளேயென்றுமிரு. - (59)


    என்னையுன்னையின்னதிதுவென்னாமனிற்குநிலை
    தன்னையருளென்றதருணத்தி-லன்னைபெற்ற
    பிள்ளைக்குஞ்சொல்லாதபெற்றிக்கண்டாயையனே
    யுள்ளத்தினுள்ளேயுணர். - (60)


    சொன்னவர்தாநிட்டைதொகுத்திராநிட்டையிலே
    மன்னினவர்போதியார்மாமௌனன்-றன்னுள்
    விருப்பாகக்கைகாட்டிமிக்கவடநீழ
    லிருப்பானிருவிகற்பத்தே. - (61)


    இந்தநிருவிகற்பத்தெந்தையிருக்கநிட்டை
    சிந்தைநீதேறாய்செகமனைத்தும்-வந்ததொடர்ப்
    பாடுகெடவன்றோவோர்பாத்திரத்துக்காடலல்லா
    லாடுவதேனாட்டுமவன். - (62)


    அவனேபரமுமவனேகுருவு
    மவனேயகிலமனைத்து-மவனேதா
    மானவரேசொன்னாலவரேகுருவெனக்கு
    நானவனாய்நிற்பதெந்தநாள். - (63)


    நாளவங்கள்போகாமனாடோறுநந்தமையே
    யாளவந்தார்தாளின்கீழாட்புகுந்தாய்-மீளவுன்னைக்
    காட்டாமனிற்குங்கருத்தறிந்தானெஞ்சேயுன்
    னாட்டானானையமில்லையால். - (64)


    யான்றானெனலறவேயின்பநிட்டையென்றருணைக்
    கோன்றானுரைத்தமொழிகொள்ளாயோ-தோன்றி
    யிழுக்கடித்தாய்நெஞ்சேநீயென்கலைகள்சோர
    வழுக்கடிக்கும்வண்ணார்போலாய். - (65)


    என்குஞ்சிவமேயிரண்டற்றுநிற்கினெஞ்சே
    தங்குஞ்சுகநீசலியாதே-யங்கிங்கென்
    றெண்ணாதேபாழிலிறந்துபிறந்துழலப்
    பண்ணாதேயானுன்பரம். - (66)


    மெய்யைப்பொய்யென்றிடவுமெய்யணையாப்பொய்ந்நெஞ்சே,
    பொய்யைத்தான்மெய்யெனவும்போகுமோ-வையமறத்,
    தன்மயத்தைமெய்யனவே சார்ந்தனையேலானந்த,
    மென்மயமுநின்மயமுமே. - (67)


    பூங்காவனநிழலும்புத்தமுதுஞ்சாந்தபதம்
    வாங்காதவானந்தமாமழையு-நீங்காவாஞ்
    சொல்லிறந்துமாண்டவர்போற்றூமௌனபூமியினா
    னில்லையெனநின்றவிடம். - (68)


    இடம்வானநல்லபொருளின்பமெனக்கேவ
    லடங்காக்கருவியனைத்து-முடனுதவ
    மந்தாரதாருவெனவந்துமவுனகுரு
    தந்தானோர்சொற்கொண்டுதான். - (69)


    தானந்தவஞானஞ்சாற்றரியசித்திமுத்தி
    யானவையெல்லாந்தாமேயாகுமே-மோனகுரு
    சொன்னவொருசொல்லாற்சுகமாயிருமனமே
    யின்னமயக்கமுனக்கேன். - (70)


    உன்னையுடலையுறுபொருளைத்தாவெனவே
    யென்னையடிமைக்கிருத்தினான் - சொன்னவொரு
    சொல்லைமறவாமற்றோய்ந்தானெஞ்சேயுன்னா
    லில்லைபிறப்பதெனக்கே. - (71)


    எனக்குமுனக்குமுறவில்லையெனத்தேர்ந்து
    நினைக்கவரிதானவின்பநிட்டை-தனைக்கொடுத்தே
    யாசான்மவுனியளித்தானெஞ்சேயுனையோர்
    காசாமதியேனான்காண். - (72)


    ஆனந்தமோனகுருவாமெனவேயென்னறிவின்
    மோனந்தனக்கிசையமுற்றியதாற் - றேனுந்து
    சொல்லெல்லாமோனந்தொழிலாதியுமோன
    மெல்லாநன்மோனவடிவே. - (73)


    எல்லாமேமோனநிறைவெய்துதலாலெவ்விடத்து
    நல்லார்கண்மோனநிலைநாடினார் - பொல்லாத
    நானெனவிங்கொன்றைநடுவேமுளைக்கவிட்டிங்
    கேனலைந்தேன்மோனகுருவே. - (74)


    மோனகுருவளித்தமோனமேயானந்த
    ஞானவருளுமதுநானுமது-வானாதி
    நின்றநிலையுமதுநெஞ்சப்பிறப்புமது
    வென்றறிந்தேனானந்தமே. - (75)


    அறிந்தவறிவெல்லாமறிவன்றியில்லை
    மறிந்தமனமற்றமவுனஞ்-செறிந்திடவே
    நாட்டினானானந்தநாட்டிற்குடிவாழ்க்கை
    கூட்டினான்மோனகுரு. - (76)


    குருவாகித்தண்ணருளைக்கூறுமுன்னேமோனா
    வுருநீடுயிர்பொருளுமொக்கத்-தருதியென
    வாங்கினையேவேறுமுண்மைவைத்திடவுங்கேட்டிடவு
    மிங்கொருவருண்டோவினி. - (77)


    இனியகருப்புவட்டையென்னாவிலிட்டா
    னனியிரதமாறாதுநானுந்-தனியிருக்கப்
    பெற்றிலேன்மோனம்பிறந்தவன்றேமோனமல்லாற்
    கற்றிலேனேதுங்கதி. - (78)


    ஏதுக்குஞ்சும்மாவிருநீயெனவுரைத்த
    சூதுக்கோதோன்றாத்துணையாகிப்-போதித்து
    நின்றதற்கோவென்னையாநீக்கிப்பிரியாமற்
    கொன்றதற்கோபேசாக்குறி. - (79)


    குறியுங்குணமுமறக்கூடாதகூட்டத்
    தறிவறிவாய்நின்றுவிடவாங்கே-பிறிவறவுஞ்
    சும்மாவிருத்திசுகங்கொடுத்தமோனநின்பாற்
    கைம்மாறுநானொழிதல்காண். - (80)


    நான்றானெனுமயக்கநண்ணுங்காலென்னாணை
    வான்றானெனநிறையமாட்டாய்நீ-யூன்றாமல்
    வைத்தமவுனத்தாலேமாயைமனமிறந்து
    துய்த்துவிடுஞானசுகம். - (81)


    ஞானநெறிக்கேற்றகுருநண்ணரியசித்திமுத்தி
    தானந்தருமந்தழைத்தகுரு-மானமொடு
    தாயெனவும்வந்தென்னைத்தந்தகுருவென்சிந்தை
    கோயிலெனவாழுங்குரு. - (82)


    சித்துஞ்சடமுஞ்சிவத்தைவிடவில்லையென்ற
    நித்தன்பரமகுருநேசத்தாற்-சுத்தநிலை
    பெற்றோமேநெஞ்சேபெரும்பிறவிசாராமற்
    கற்றோமேமோனக்கரு. - (83)
    -----------

    29. ஏசற்றவந்நிலை.

    கொச்சகக்கலிப்பா.



    ஏசற்றவந்நிலையேயெந்தைபரிபூரணமாய்
    மாசற்றவானந்தவாரிவழங்கிடுமே
    யூசற்சுழல்போலுலகநெறிவாதனையாற்
    பாசத்துட்செல்லாதேபலகாலும்பாழ்நெஞ்சே. - (1)


    பாழாகியண்டப்பரப்பையெல்லாம்வாய்மடுத்து
    மாழாழியின்பத்தழுந்தப்படியாயோ
    தாழாயோ வெந்தையருட் டாட்கீழ்நெஞ்சே யெனைப்போல்
    வாழாதுவாழ்ந்தழியாவண்ணமிருப்பாயே. - (2)


    இருப்பாயிருந்திடப்பேரின்பவெளிக்கேநமக்குக்
    குருப்பார்வையல்லாமற்கூடக்கிடைத்திடுமோ
    வருட்பாய்நமக்காகவாளவந்தார்பொன்னடிக்கீழ்
    மருட்பேயர்போலிருக்கவாகண்டாய்வஞ்சநெஞ்சே. - (3)


    வஞ்சமோபண்டையுளவாதனையானீயலைந்து
    கொஞ்சமுற்றாயுன்னைக்குறைசொல்லவாயுமுண்டோ
    வஞ்சலஞ்சலென்றிரங்குமானந்தமாகடற்கீழ்
    நெஞ்சமேயென்போலநீயழுந்தவாராயோ. - (4)


    வாராவரவாய்வடநிழற்கீழ்வீற்றிருந்த
    பூராயநம்மைப்புலப்படுத்தவேண்டியன்றோ
    வோராயோநெஞ்சேயுருகாயோவுற்றிருந்து
    பாராயோவவ்வுருவைப்பார்க்கநிறைவாய்விடுமே. - (5)


    வாயாதோவின்பவெள்ளம்வந்துன்வழியாகப்
    பாயாதோநானும்பயிராய்ப்பிழையேனோ
    வோயாமலுன்னியுருகுநெஞ்சேயந்நிலைக்கே
    தாயானமோனனருள்சந்திக்கவந்திடுமே. - (6)


    வந்தவரவைமறந்துலகாய்வாழ்ந்துகன்ம
    பந்துமுறவுன்னைப்படிப்பிக்கக்கற்றவர்யா
    ரிந்தமதியேனுனக்கிங்கென்மதிகேளென்னாலே
    சந்ததநெஞ்சேபரத்திற்சாரினின்பமுண்டாமே. - (7)


    இன்பமயமாயுலகமெல்லாம்பிழைப்பதற்குன்
    னன்புநிலையென்பாரதுவுநிலையன்றியுண்டோ
    வுன்புலத்தையோரினருட்கொப்பாவாய்நெஞ்சேநீ
    தென்புலத்தாரோடிருந்துசெய்பூசைகொண்டருளே. - (8)


    அருளேயோராலயமாவானந்தமாயிருந்த
    பொருளோடியானிருக்கப்போயொளித்தநெஞ்சேநீ
    மருடீர்முயற்கோடோவான்மலரோபேய்த்தேரோ
    விருடீரநீயுறைந்ததெவ்விடமோகாணேனே. - (9)


    எவ்விடத்தும்பூரணமாமெந்தைபிரான்றண்ணருளே
    யவ்விடத்தேயுன்னைநெஞ்சேயாராயிற்கண்டிலனே
    யவ்விடத்துமாயையிலேமாண்டனையோவவ்விடமுஞ்
    செவ்விடமேநீயுஞ்செனனமற்றுவாழியவே. - (10)
    ----------

    30. காடுங்கரையும்




    காடுங்கரையுமனக்குரங்குகால்விட்டோடவதன்பிறகே,
    யோடுந்தொழிலாற் பயனுளதோவொன்றாய்ப்பலவாயுயிர்க்குயிரா,
    யாடுங்கருணைப்பரஞ்சோதியருளைப் பெறுதற்கன்புநிலை,
    தேடும்பருவ மிதுகண்டீர்சேரவாருஞ்சகத்தீரே. - (1)


    சைவசமயமேசமயஞ் சமயாதீதப்பழம்பொருளைக்,
    கைவந்திடவேமன்றுள்வெளிகாட்டுமிந்தக் கருத்தைவிட்டுப்,
    பொய்வந்துழலுஞ்சமயநெறிபுகுதவேண்டாமுத்திதருந்,
    தெய்வசபையைக்காண்பதற்குச்சேரவாருஞ்சகத்தீரே. - (2)


    காகமுறவுகலந்துண்ணக்
          கண்டீரகண்டாகாரசிவ
    போகமெனும்பேரின்பவெள்ளம்
          பொங்கித்ததும்பிப்பூரணமா,
    யேகவுருவாய்க்கிடைக்குதையோ
          வின்புற்றிடமுகமெலாம். நாமினியெடுத்த,
    தேகம்விழுமுன்
          புசிப்பதற்குச்சேவாருஞ்சகத்தீரே. - (3)
    ----------

    31. எடுத்ததேகம்

    கட்டளைக்கலிப்பா.



    எடுத்ததேகம்பொருளாவிமூன்றுநீ
          யெனக்கொன்றில்லையெனமோனநன்னெறி,
    கொடுத்தபோதுகொடுத்ததன்றோபினுங்
          குளறிநானென்றுகூத்தாடமாயையை
    விடுத்தவாறுங்கண்ணீரொடுகம்பலை
          விலகுமாறுமென் வேட்கைப்ரவாகத்தைத்,
    தடுத்தவாறும்புகலாய்சிரகிரித்
          தாயுமானதயாபரமூர்த்தியே. - (1)


    நோயுவெங்கலிப்பேயுந்தொடரநின்
          னூலிற்சொன்னமுறையியமாதிநான்,
    றோயும்வண்ணமெனைக்காக்குங்காவலுந்
          தொழும்புகொள்ளுஞ் சுவாமியு நீகண்டா,
    யோயுஞ்சன்மமினியஞ்சலஞ்சலென்றுல
          கங்கண்டுதொழவோருருவிலே,
    தாயுந்தந்தையுமானோய்சிரகிரித்
          தாயுமானதயாபரமூர்த்தியே. - (2)
    ------

    32. முகமெலாம்.




    முகமெலாங்கணீர்முத்தரும்பிடச்செங்கைமுகிழ்ப்ப
    வகமெலாங்குழைந்தானந்தமாகநல்லறிஞ
    ரிகமெலாந்தவமிழைக்கின்றா ரென்செய்கோவேழை
    சகமெலாம்பெறநல்லருளுதரமாச்சமைந்தோய். - (1)
    -------

    33. திடமுறவே

    கொச்சகக்கலிப்பா.



    திடமுறவேநின்னருளைச் சேர்த்தென்னைக்காத்தாளக்,
    கடனுனக்கென்றெண்ணிநின்னைக்கைகுவித்தோனானலனோ,
    வடைவுகெட்டபாழ்மாயையாழியிலேயின்னமல்லற்,
    படமுடியாதென்னாவிப்பற்றேபராபரமே. - (1)


    ஆராமைகண்டிங்கருட்குருவாய்நீயொருகால்
    வாராயோவந்துவருத்தமெல்லாந்தீராயோ
    பூராயமாகவருட்பூரணத்திலண்டமுதற்
    பாராதிவைத்தபதியேபராபரமே. - (2)


    வாழாதுவாழவுனைவந்தடைந்தோரெல்லாரு
    மாழாழியென்னவருளானாரழுக்காற்றோ
    டேழாயெனவுலகமேசுமினிநானொருவன்
    பாழாசாவாறுமுகம்பார்நீபராபரமே. - (3)


    உள்ளத்தினுள்ளேயொளித்தென்னையாட்டுகின்ற
    கள்ளக்சருணையையான்காணுந்தரமாமோ
    வெள்ளத்தைமாற்றிவிடக்குண்பார்நஞ்சூட்டும்
    பள்ளத்தின்மீன்போற்பதைத்தேன்பராபரமே. - (4)


    வாவிக்கமலமலர்வண்டாய்த்துவண்டுதுவண்
    டாவிக்குணின்றவுனக்கன்புவைத்தார்க்கஞ்சலென்பாய்
    பூவிற்கும்வான்கடையிற்புல்லிற்போர்போலவொன்றைப்,
    பாவிக்கமாட்டேன்பதியேபராபரமே. - (5)


    விண்ணாறுவெற்பின்விழுந்தாங்கெனமார்பிற்
    கண்ணாறுபாச்சிடுமென்காதல்வெள்ளங்கண்டிலையோ.
    தண்ணாறுசாந்தபதத்தற்பரமேநால்வேதப்
    பண்ணாறுமின்பப்பதியேபராபரமே. - (6)


    கூடியநி்ன்சீரடியார்கூட்டமென்றோவாய்க்குமென
    வாடியவென்னெஞ்சமூகவாட்டமுநீகண்டிலையோ
    தேடியநின்சீரருளைத்திக்கனைத்துங்கைகுவித்துப்
    பாடியநான்கண்டாய்பதியேபராபரமே. - (7)


    நெஞ்சத்தினூடேநினைவாய்நினைவூடு
    மஞ்சலெனவாழுமெனதாவித்துணைநீயே
    சஞ்சலமாற்றினையினிமேற்றாய்க்குபசாரம்புகன்று
    பஞ்சரிக்கநானார்பதியேபராபரமே. - (8)


    புத்திநெறியாகவுனைப்போற்றிப்பலகாலு
    முத்திநெறிவேண்டாதமூடனேனாகெடுவேன்
    சித்திநெறிக்கென்கடவேன்சீரடியார்க்கேவல்செயும்
    பத்திநெறிக்கேனுமுகம்பார்நீபராபரமே. - (9)


    கண்டறியேன்கேட்டறியேன்காட்டுநினையேயிதயங்
    கொண்டறியேன்முத்திகுறிக்குந்தரமுமுண்டோ
    தொண்டறியாப்பேதைமையேன் சொல்லேனின்றொன்
    மையெல்லாம், பண்டறிவாய்நீயேபகராய்பராபரமே. - (2)
    --------

    34. தன்னை

    கொச்சகக்கலிப்பா.



    தன்னையறியத்தனதருளாற்றானுணர்த்து
    மன்னைப்பொருளெனவேவாழாமற்பாழ்நெஞ்சே
    பொன்னைப்புவியைமடப்பூவையரைமெய்யெனவே
    யென்னைக்கவர்ந்திழுத்திட்டென்னபலன்கண்டாயே. - (1)
    -------

    35. ஆக்குவை




    ஆக்குவைமாயையாவுநொடிதனிலதனைமாள
    நீக்குவைநீக்கமில்லாநினைப்பொடுமறப்புமாற்றிப்
    போக்கொடுவரவுமின்றிப்புனிதநல்லருளானந்தந்
    தாக்கவுஞ்செய்வாயன்றோசச்சிதானந்தவாழ்வே. - (1)
    ---------

    36. கற்புறுசிந்தை




    கற்புறுசிந்தைமாதர்கணவரையன்றிவேறோ
    ரிற்புறத்தவரைநாடார்யாங்களுமின்பவாழ்வுந்
    தற்பொரியாகநல்குந்தலைவநின்னலதோர்தெய்வம்
    பொற்புறக்கருதோங்கண்டாய்பூரணானந்தவாழ்வே. - (1)


    முருந்திளநகையார்பாரமுலைமுகந்தழுவிச்செவ்வாய்
    விருந்தமிர்தெனவருந்திவெறியாட்டுக்காளாய்நாளு
    மிருந்தலோகாயதப்பேரினத்தனாயிருந்தவேழை
    பொருந்தவுங்கதிமேலுண்டோபூரணானந்தவாழ்வே. - (2)


    தீதெலாமொன்றாம்வன்மை செறிந்திருட்படலம்போர்த்த
    பாதகசிந்தைபெற்றபதகனுன்பாதநீழ.
    லாதரவடையவுள்ளன்பருள்கிலையாயின்மற்றியார்
    போதனைசெய்யவல்லார்பூரணானந்தவாழ்வே. - (3)


    நாதனைநாதாதீதநண்பனைநடுவாய்நின்ற
    நீதனைக்கலந்துநிற்கநெஞ்சமேநீவாவென்றால்
    வாதனைபெருக்கியென்னைவசஞ்செய்துமனந்துன்மார்க்க,
    போதனைசெய்தனன்றோபூரணானந்தவாழ்வே. - (4)


    எண்ணியவெண்ணமெல்லாமிறப்புமேற்பிறப்புக்காசை,
    பண்ணியென்னறிவையெல்லாம்பாழாக்கியெனைப்பாழாக்குந்,
    திண்ணியவினையைக்கொன்றுசிறியனையுய்யக்கொண்டாற்,
    புண்ணியநினக்கேயன்றோபூரணானந்தவாழ்வே. - (5)


    பத்திநீபத்திக்கானபலனுநீபலவாச்சொல்லுஞ்
    சித்திநீசித்தர்சித்தித்திறமுநீதிறமார்மோன
    முத்திநீமுத்திக்கானமுதலுநீமுதன்மையான
    புத்திநீயெனக்கொன்றுண்டோபூரணானந்தவாழ்வே. - (6)


    தாயினுமினியநின்னைச்சரணெனவடைந்தநாயேன்
    பேயினுங்கடையனாகிப்பிதற்றுதல்செய்தனன்றோ
    தீயிடைமெழுகாய்நொந்தேன்றெளிவிலேன்வீணேகாலம்,
    போயினதாற்றுகில்லேன்பூரணானந்தவாழ்வே. - (7)
    ------------

    37. மலைவளர்காதலி




    பதியுண்டுநிதியுண்டுபுத்திரர்கண்மித்திரர்கள்
          பக்கமுண்டெக்காலமும்
    பசுவுண்டுதவிசுண்டுதிட்டாந்தமாகயம
          படரெனுந்திமிரமணுகாக்
    கதியுண்டுஞானமாங்கதிருண்டுசதுருண்டு
          காயசித்திகளுமுண்டு
    கறையுண்டகண்டர்பாலம்மைநின்றாளிற்
          கருத்தொன்றுமுண்டாகுமே
    னதியுண்டகடலெனச்சமயத்தையுண்டபர
          ஞானவானந்தவொளியே
    நாதாந்தரூபமேவேதாந்தமோனமே
          நானெனுமகந்தைதீர்த்தென்
    மதியுண்டமதியானமதிவதனவல்லியே
          மதுசூதனன்றங்கையே
    வரைராஜனுக்கிருகண்மணியாயுதித்தமலை
          வளர்காதலிப்பெணுமையே. - (1)


    தெட்டிலேவலியமடமாதர்வாய்வெட்டிலே
          சிற்றிடையிலேநடையிலே
    சேலொத்தவிழியிலேபாலொத்தமொழியிலே
          சிறுபிறைநுதற்கீற்றிலே
    பொட்டிலேயவர்கட்டுபட்டிலேபுனைகந்த
          பொடியிலேயடியிலேமேற்
    பூரித்தமுலையிலேநிற்கின்றநிலையிலே
          புந்திதனைநுழையவிட்டு
    நெட்டிலேயலையாமலறிவிலேபொறையிலே
          நின்னடியர்கூட்டத்திலே
    நிலைபெற்றவன்பிலேமலைவற்றமெஞ்ஞான
          ஞேயத்திலேயுனிருதாண்
    மட்டிலேமனதுசெலநினதருளுமருள்வையோ
          வளமருவுதேவையரசே
    வரைராஜனுக்கிருகண்மணியாயுதித்தமலை
          வளர்காதலிப்பெணுமையே. - (2)


    பூதமுதலாகவேநாதபரியந்தமும்
          பொய்யென்றெனைக்காட்டியென்
    போதத்தினடுவாகியடியீறுமில்லாத
          போதபூரணவெளிக்கு
    ளேதுமறநில்லென்றுபாயமாவைத்துநினை
          வெல்லாஞ்செய்வல்லசித்தா
    மின்பவுருவைத்தந்தவன்னையேநின்னையே
          யெளியேன்மறந்துய்வனோ
    வேதமுதலானநல்லாகமத்தன்மையை
          விளக்குமுட்கண்ணிலார்க்கு
    மிக்கநின்மகிமையைக்கேளாதசெவிடர்க்கும்
          வீறுவாதம்புகலும்வாய்
    வாதநோயாளர்க்குமெட்டாதமுக்கணுடை
          மாமருந்துக்கமிர்தமே
    வரைராஜனுக்கிருகண்மணியாயுதித்தமலை
          வளர்காதலிப்பெணுமையே. - (3)


    மிடியிட்டவாழ்க்கையாலுப்பிட்டகலமெனவு
          மெய்யெலாமுள்ளுடைந்து.
    வீறிட்டசெல்வர்தந்தலைவாயில்வாசமாய்
          வேதனைகளுறவேதனுந்
    துடியிட்டவெவ்வினையையேவினான்பாவிநான்
          றொடரிட்டதொழில்களெல்லாந்
    துண்டிட்டசாண்கும்பியின்பொருட்டாயதுன்
          றொண்டர்பணிசெய்வதென்றோ
    வடியிட்டசெந்தமிழினருமையிட்டாரூரி
          லரிவையோர்பரவைவாயி
    லம்மட்டுமடியிட்டுநடைநடந்தருளடிக
          ளடியீதுமுடியீதென
    வடியிட்டமறைபேசுபச்சிளங்கிள்ளையே
          வளமருவுதேவையரசே
    வரைராஜனுக்கிருகண்மணியாயுதித்தமலை
          வளர்காதலிப்பெணுமையே. - (4)


    பூரணிபுராதனிசுமங்கலைசுந்தரி
          புராந்தகித்ரியம்பகியெழிற்
    புங்கலிவிளங்குசிவசங்கரிசகஸ்ரதள
          புஷ்பமிசைவீற்றிருக்கு
    நாரணிமனாதீதநாயகிகுணாதீத
          நாதாந்தசத்தியென்றுன்
    னாமமேயுச்சரித்திடுமடியர்நாமமே
          நானுச்சரிக்கவசமோ
    வாரணிசடைக்கடவுளாரணியெனப்புகழ
          வகிலாண்டகோடியீன்ற
    வன்னையேபின்னையுங்கன்னியெனமறைபேசு
          மானந்தரூபமயிலே
    வாரணியுமிருகொங்கைமாதர்மகிழ்கங்கைபுகழ்
          வளமருவுதேவையரசே
    வரைராஜனுக்கிருகண்மணியாயுதித்தமலை
          வளர்காதலிப்பெணுமையே. - (5)


    பாகமோபெறவுனைப்பாடவறியேன்மல
          பரிபாகம்வரவுமனகிற்
    பண்புமோசற்றுமிலைநியமமோசெய்திடப்
          பாவியேன்பாபரூப
    தேகமோதிடமில்லைஞானமோகனவிலுஞ்
          சிந்தியேன்பேரின்பமோ
    சேரவென்றாற்கள்ளமனதுமோமெத்தவுஞ்
          சிந்திக்குதென்செய்குவேன்
    மோகமோமதமோகுரோதமோலோபமோ
          முற்றுமாற்சரியமோதான்
    முறியிட்டெனைக்கொள்ளுநிதியமோதேடவெனின்
          மூசுவரிவண்டுபோல
    மாகமோடவும்வல்லனெனையாளவல்லையோ
          வளமருவுதேவையரசே
    வரைராஜனுக்கிருகண்மணியாயுதித்தமலை
          வளர்காதலிப்பெணுமையே. - (6)


    தூளேறுதூசிபோல்வினையேறுமெய்யெனுந்
          தொக்கினுட்சிக்கினாளுஞ்
    சுழலேறுகாற்றினிடையழலேறுபஞ்செனச்
          சூறையிட்டறிவையெல்லா
    நாளேறநாளேறவார்த்திகமெனுங்கூற்றி
          னட்பேறவுள்ளுடைந்து
    நயனங்களற்றதோரூரேறுபோலவே
          நானிலந்தனிலலையவோ
    வேளேறுதந்தியைக்கனதந்தியுடன்வென்று
          விரையேறுமாலைசூடி
    விண்ணேறுமேகங்கள்வெற்பேறிமறைவுற
          வெருட்டியகருங்கூந்தலாய்
    வாளெறுகண்ணியேவிடையேறுமெம்பிரான்
          மனதுக்கிசைந்தமயிலே
    வரைராஜனுக்கிருகண்மணியாயுதித்தமலை
          வளர்காதலிப்பெணுமையே. - (7)


    பூதமொடுபழகிவளரிந்திரியமாம்பேய்கள்
          புந்திமுதலானபேய்கள்
    போராடுகோபாதிராக்ஷசப்பேயகளென்
          போதத்தையூடழித்து
    வேதனைவளர்த்திடச்சதுர்வேதவஞ்சன்
          விதித்தானிவல்லலெல்லாம்
    வீழும்படிக்குனதுமெளனமந்த்ராதிக்ய
          வித்தையைவியந்தருள்வையோ
    நாதவடிவாகியமஹாமந்த்ரரூபியே
          நாதாந்தவெட்டவெளியே
    நற்சமயமானபயிர்தழையவருமேகமே
          ஞானவானந்தமயிலே
    வாதமிடுபரசமயம்யாவுக்குமுணர்வரிய
          மகிமைபெறுபெரியபொருளே
    வரைராஜனுக்கிருகண்மணியாயுதித்தமலை
          வளர்காதலிப்பெணுமையே. - (8)
    --------------

    38. அகிலாண்டநாயகி

    சந்தவிருத்தம்.



    வட்டமிட்டொளிர்பிராணவாயுவெனு
          நிகளமோடுகமனஞ்செயு
    மனமெனும்பெரியமத்தயானையையென்
          வசமடக்கிடின்முமண்டலத்
    திட்டமுற்றவளராஜயோகமிவன்
          யோகமென்றறிஞர்புகழவே
    யேழையேனுலகினீடுவாழ்வனினி
          யிங்கிதற்குமனுமானமோ
    பட்டவர்த்தனர்பராவுசக்ரதர
          பாக்யமானசுகயோகமும்
    பாரகாவியகவித்வநான்மறை
          பராயணஞ்செய்மதியூகமு
    மட்டசித்தியுநலன்பருக்கருள
          விருதுகட்டியபொனன்னமே
    யண்டகோடிபுகழ்காவைவாழுமதி
          லாண்டநாயகியெனம்மையே. - (1)
    ------------

    39. பெரியநாயகி

    விருத்தம்.



    காற்றைப்பிடித்துமட்கரகத்தடைத்தபடி
          கன்மப்புனற்குளூறுங்
    கடைகெட்டநவவாயில்பெற்றபசுமட்கலக்
          காயத்துளெனையிருத்திச்
    சோற்றைச்சுமத்திநீபந்தித்துவைக்கத்
          துருத்திக்குண்மதுவென்னவே
    துள்ளித்துடித்தென்னபேறுபெற்றேனருட்
          டோயநீபாய்ச்சல்செய்து
    நாற்றைப்பதித்ததெனஞானமாம்பயிரதனை
          நாட்டிப்புலப்பட்டியு
    நமனானதீப்பூடுமணுகாமன்முன்னின்று
          நாடுசிவபோகமான
    பேற்றைப்பகுந்தருளியெனையாளவல்லையோ
          பெரியவகிலாண்டகோடி
    பெற்றநாயகிபெரியகபிலைமாநகர்மருவு
          பெரியநாயகீயம்மையே. - (1)
    -----------

    40. தந்தைதாய்




    தந்தைதாய்மகவுமனைவாழ்க்கையாக்கை
    சகமனைத்துமௌனியருடழைத்தபோதே
    யிந்திரசாலங்கனவுகானனீரா
    யிருந்ததுவேயிவ்வியற்கையென்னேயென்னே. - (1)


    என்னைநான்கொடுக்கவொருப்பட்டகால
    மியாதிருந்தென்னவைபோயென்னென்னை நீங்கா
    வன்னைபோலருள்பொழியுங்கருணைவாரி
    யானந்தப்பெருமுகிலேயரசேசொல்லாய். - (2)


    அரசேநின்றிருக்கருணையல்லாதொன்றை
    யறியாதசிறியேனானதனான்முத்திக்
    கரைசேரும்படிக்குனருட்புணையைக்கூட்டுங்
    கைப்பிடியேகடைப்பிடியாக்கருத்துட்கண்டேன். - (3)


    கண்டேனிங்கென்னையுமென்றனையுநீங்காக்
    கருணையுநின்றன்னையுநான்கண்டேன்கண்டேன்
    விண்டேனென்றெனைப்புறம்பாத்தள்ளவேண்டாம்
    விண்டதுநின்னருட்களிப்பின்வியப்பாலன்றோ - (4)


    ஓவென்றசுத்தவெளியொன்றேநின்றிங்
    குயிரையெல்லாம்வம்மினெனவுவட்டாவின்பத்
    தேவென்றநீகலந்துகலந்துமுத்தி
    சேர்த்தனையேற்குறைவாமோசெகவிலாசம். - (5)


    செகத்தையெல்லாமணுவளவுஞ்சிதறாவண்ணஞ்
    சேர்த்தணுவில்வைப்பையணுத்திரளையெல்லா
    மகத்துவமாப்பிரமாண்டமாகச்செய்யும்
    வல்லவாநீநினைந்தவாறேயெல்லாம். - (6)


    சொல்லாலேவாய்துடிப்பதல்லானெஞ்சந்
    துடித்திருகணீரருவிசொரியத்தேம்பிக்
    கல்லாலேயிருந்தநெஞ்சுங்கல்லான்முக்கட்
    கனியேநெக்குருகிடவுங்காண்பேன்கொல்லோ. - (7)
    --------------

    41. பெற்றவட்கே




    பெற்றவட்கேதெரியுமந்தவருத்தம்பிள்ளை
    பெறாப்பேதையறிவாளோபேரானந்த
    முற்றவர்க்கேகண்ணீர்கம்பலையுண்டாகு
    முறாதவரேகன்னெஞ்சமுடையராவார். - (1)


    ஆவாவென்றழுதுதொழுங்கையராகி
    யப்பனேயானந்தவடிகளேநீ
    வாவாவென்றவர்க்கருளுங்கருணையெந்தாய்
    வன்னெஞ்சர்க்கிரங்குவதெவ்வாறுநீயே. - (2)


    நீயேயிங்கெளியேற்குந்தாகமோக
    நினைவூடேநின்றுணர்த்திநிகழ்த்தலாலே
    பேயேற்குந்தனக்கெனவோரன்புமுண்டோ
    பெம்மானேயின்னமன்புபெருகப்பாராய். - (3)


    பாராயோவென்றுயரமெல்லாமையா
    பகருமுன்னேதெரியாதோபாவியேன்முன்
    வாராயோவின்னமொருகாலானாலு
    மலர்க்காலென்சென்னிமிசைவைத்திடாயோ. - (4)


    வைத்திடுங்காலைப்பிடித்துக்கண்ணின்மார்பில்
    வைத்தணைத்துக்கொண்டுகையால்வளைத்துக்கட்டிச்
    சித்தமிசைப்புகவிருத்திப்பிடித்துக்கொண்டு
    தியக்கமறவினபசுகஞ்சேர்வதென்றோ. - (5)


    சேராமற்சிற்றினத்தைப்பிரித்தெந்நாளும்
    திருவடிப்பேரினத்துடனேசேராவண்ண
    மாராகநானலைந்தேனரசேநீதா
    னறிந்திருந்துமாயையிலேனழுந்தவைத்தாய். - (6)


    வைத்தபொருளுடலாவிமூன்றுநின்கை
    வசமெனவேயான்கொடுக்கவாங்கிக்கொண்டு
    சித்தமிசைப்புகுந்ததுதான்மெய்யோபொய்யோ
    சிறியேற்கிங்குளவுரையாய்திகையாவண்ணம். - (7)


    திகையாதோவென்னாளும்பேரானந்தத்
    தெள்ளமுதமுதவாமற்றிவலைகாட்டி
    வகையாகவலக்கழித்தாயுண்டுடுத்து
    வாழ்ந்தேனானிரண்டுகான்மாடுபோலே. - (8)


    மாடுமக்கள்சிற்றிடையார்செம்பொனாடை
    வைத்தகனதனமேடைமாடகூடம்
    வீடுமென்பாற்றொடர்ச்சியோவிடைவிடாமன்
    மிக்ககதிவீடன்றோவிளங்கல்வேண்டும். - (9)


    விளங்கவெனக்குள்ளுள்ளேவிளங்காநின்ற
    வேதகமேபோதகமேவிமலவாழ்வே
    களங்கரகிதப்பொருளேயென்னைநீங்காக்
    கண்ணுதலேநாதாந்தக்காட்சிப்பேறே. - (10)


    நாதமேநாதாந்தவெளியேசுத்த
    ஞாதுறுவேஞானமேஞேயமேநல்
    வேதமேவேதமுடிவானமோன
    வித்தேயிங்சென்னையினிவிட்டிடாதே. - (11)
    ------------

    42. கல்லாலின்




    கல்லாலினீழறனிலொருநால்வர்க்குங்
    கடவுணியுணர்த்துவதுங்கைக்காட்டென்றாற்
    சொல்லாலேசொலப்படுமோசொலுந்தன்மை
    துரும்புபற்றிக்கடல்கடக்குந்துணியேயன்றோ - (1)


    அன்றோவரமோவெனவுஞ்சமயகோடி
    யத்தனையும்வெவ்வேறாயரற்றநேரே
    நின்றாயேநினைப்பெறுமாறேவ்வாறாங்கே
    நின்னருள்கொண்டறிவதல்லா னெறிவேறுண்டோ. - (2)


    நெறிபார்க்கினின்னையன்றியகிலம்வேறோ
    நிலநீர்தீக்கால்வனுநீயலாத
    குறியாதுமில்லையென்றால்யாங்கள்வேறோ
    கோதையொருகூறுடையாய்கூறாய்கூறாய் - (3)


    கூறாயவைம்பூதச்சுமையைத்தாங்கிக்
    குணமிலாமனமெனும்பேய்க்குரங்கின்பின்னே
    மாறாதகவலையுடன்சுழலவென்னை
    வைத்தனையேபரமேநின்மகிமைநன்றே. - (4)


    நன்றெனவுந்தீதெனவுமெனக்கிங்குண்டோ
    நானாகிநீயிருந்தநியாயஞ்சற்றே
    யின்றெனக்குவெளியானாலெல்லாம்வல்ல
    விறைவாநின்னடியருடனிருந்துவாழ்வேன். - (5)


    வாழ்வெனவுந்தாழ்வெனவுமிரண்டாப்பேசும்
    வையகத்தார்கற்பனையாமயக்கமான
    பாழ்வலையைக்கிழித்துதறிச்செயல்போய்வாழப்
    பரமேநின்னானந்தப்பார்வையெங்கே. - (6)


    எங்கேயெங்கேயருளென்றெமையிரந்தா
    னேழையிவனெனவுமெண்ணியிச்சைகூரு
    மங்கேயெங்கேயெளிவந்தென்னையாண்ட
    வாரமுதேயுனைக்காண்பானலந்துபோனேன். - (7)


    போனநாட்கிரங்குவதேதொழிலாலிங்ஙன்
    பொருந்துநாளத்தனையும்போக்கினேனென்
    ஞானநாயகனேநின்மோனஞான
    நாட்டமுற்றுவாழ்ந்திருக்குநாளெந்நாளோ. - (8)


    நாட்பட்டகமலமென்னவிதயமேவு
    நறுந்தேனேதுன்மார்க்கநாரிமார்கண்
    வாட்பட்டகாயமிந்தக்காயமென்றோ
    வன்கூற்றுமுயிர்பிடிக்கவருமந்நீதி. - (9)


    நீதியெங்கேமறையெங்கேமண்விண்ணெங்கே
    நித்தியராமவர்களெங்கேநெறிதப்பாத
    சாதியெங்கேயொழுக்கமெங்கேயாங்களெங்கே
    தற்பரநீபின்னுமொன்றைச்சமைப்பதானால். - (10)


    ஆனாலும்யானெனதிங்கற்றவெல்லை
    யதுபோதுமதுகதிதானல்லவென்று
    போனாலும்யான்போவனல்லான்மோனப்
    புன்ணியனேவேறுமொருபொருளைநாடேன். - (11)


    பொருளேநின்பூரணமேலிட்டகாலம்
    போக்குவரவுண்டோதற்போதமுண்டோ
    விருடானுண்டோவல்லால்வெளிதானுண்டோ
    வின்பமுண்டோதுன்பமுண்டோயாமங்குண்டோ. - (12)


    உண்டோநீபடைத்தவுயிர்த்திரளிலென்போ
    லொருபாவிதேகாதியுலகம்பொய்யாக்
    கண்டேயுமெள்ளளவுத்துறவுமின்றிக்
    காசினிக்குளலைந்தவரார்காட்டாய்தேவே. - (13)


    தேவரெல்லாந்தொழச்சிவந்தசெந்தாண்முக்கட்
    செங்கரும்பேமொழிக்குமொழிதித்திப்பாக
    மூவர்சொலுந்தமிழ்கேட்குந்திருச்செவிக்கே
    மூடனேன்புலம்பியசொன்முற்றுமோதான். - (14)


    முற்றுமோவெனக்கினியானந்தவாழ்வு
    மூதறிவுக்கினியாய்நின்முளரித்தாளிற்
    பற்றுமோசற்றுமில்லையையோவையோ
    பாவிபடுங்கட்கலக்கம்பார்த்திலாயோ. - (15)


    பார்த்தனவெல்லாமழியுமதனாற்சுட்டிப்
    பாராதேபார்த்திருக்கப்பரமேமோன
    மூர்த்திவடிவாயுணர்த்துங்கைக்காட்டுண்மை
    முற்றியெனதல்லல்வினைமுடிவதென்றோ. - (16)


    என்றுளை நீயன்றுளம்யாமென்பதென்னை
    விதுநிற்கவெல்லாந்தாமில்லையென்றே
    பொன்றிடச்செய்வல்லவனீயெம்மைப்படைக்கும்
    பொற்புடையாயென்னினதுபொருந்திடாதே. - (17)


    பொருந்துசகமனைத்தினையும்பொய்பொய்யென்று
    புகன்றபடிமெய்யென்றேபோதரூபத்
    திருந்தபடியென்றிருப்பதன்றேயன்றோ
    வெம்பெருமான்யான்கவலையெய்தாக்காலம். - (18)


    காலமேகாலமொருமூன்றுங்காட்டுங்
    காரணமேகாரணகாரியங்களில்லாக்
    கோலமேயெனைவாவாவென்றுகூவிக்
    குறைவறநின் னருள்கொடுத்தாற் குறைவோசொல்லாய் - (19)


    சொல்லாயதகுதியெல்லாங்கடந்துநின்ற
    சொரூபானந்தச்சுடரேதொண்டனேனைக்
    கல்லாகப்படைத்தாலுமெத்தநன்றே
    கரணமுடனானுறவுகலக்கமாட்டேன். - (20)


    கலங்காதநெஞ்சுடையஞானதீரர்
    கடவுளுனைக்காணவேகாயமாதி
    புலங்காணார்நானொருவன்ஞானம்பேசி
    பொய்கூடுகாத்ததென்னபுதுமைகணடாய். - (21)


    கண்டிலையோயான்படும்பாடெல்லாமூன்று
    கண்ணிருந்துந்தெரியாதோகசிந்துள்ளன்பார்
    தொண்டரடித்தொண்டனன்றோகருணைநீங்காச்
    சுத்தபரிபூரணமாஞ்சோதிநாதா. - (22)


    சோதியாயிருட்பிழம்பைச்சூறையாடுந்
    தூவெளியேயெனைத்தொடர்ந்து தொடர்ந்தெந்நாளும்
    வாதியாநின்றவினைப்பகையைவென்ற
    வாழ்வேயிங்குனைப்பிரிந்துமயங்குகின்றேன். - (23)


    மயக்குறுமென்மனமணுகாப்பாதைகாட்டி
    வல்வினையைப்பறித்தனையேவாழ்வேநானென்
    செயக்கடவேன்செயலெல்லாநினதேயென்று
    செங்கைகுவிப்பேனல்லாற்செயல்வேறில்லை. - (24)


    வேறுபடுஞ்சமயமெல்லாம்புகுந்துபார்க்கின்
    விளங்குபரம்பொருளேநின்வினையாட்டல்லான்
    மாறுபடுங்கருத்தில்லைமுடிவின்மோன
    வாரிதியினதித்திரள்போல்வயங்கிற்றம்மா. - (25)


    அம்மாவீததிசயந்தானன்றோவன்றோ
    வகண்டநிலையாக்கியென்னையறிவாம்வண்ணஞ்
    சும்மாவேயிருக்கவைத்தாயையாவாங்கே
    சுகமயமாயிருப்பதல்லாற்சொல்வானென்னே. - (26)


    என்னேநான்பிறந்துழலவந்தவாறிங்
    கெனக்கெனவோர்செயலிலையேயேழையென்பான்
    முன்னேசெய்வினையெனவும்வரமுறையேனெந்தாய். - (27)


    தாயானதண்ணருளைநிரம்பவைத்துத்
    தமியேனைப்புரவாமற்றள்ளித்தள்ளிப்
    போயானதென்கொலையாவேகதேசம்
    பூரணத்துக்குண்டோதான்புகலல்வேண்டும். - (28)


    புகலரியநின்விளையாட்டென்னேயெந்தாய்
    புன்மையறிவுடையவென்னைப்பொருளாப்பண்ணி
    யிகல்விளைக்குமலமாயைகன்மத்தூடே
    யிடருறவுஞ்செய்தனையேயிரக்கமீதோ. - (29)


    இரக்கமொடுபொறையீதலறிவாசார
    மில்லேனானல்லோர்களீட்டங்கண்டாற்
    கரக்குமியல்புடையேன்பாழ்நெஞ்சமெந்தாய்
    கருந்தாதோவல்லுருக்கோகரியகல்லோ. - (30)
    --------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை III