Tiruppāṭaṟṟiraṭṭu I


சைவ சமய நூல்கள்

Back

திருப்பாடற்றிரட்டு I
தாயுமான சுவாமிகள்



தாயுமான சுவாமிகளின்
திருப்பாடற்றிரட்டு


source of the work:
தாயுமான சுவாமிகள்
திருவாய்மலர்ந்தருளிய "திருப்பாடற்றிரட்டு"
திருத்தணிகை சரவணப்பெருமாளையர்
அவர்கள் பிரதிக்கிணங்க பரிசோதிக்கப்பட்டு
ஊ. புஷ்பரதசெட்டியார் தமது சென்னை
கலாரத்நாகர அச்சுக்கூடத்தில் பதிக்கப்பட்டது
பிரஜோற்பத்தி வருடம்
-----------


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
தாயுமானசுவாமிகள் திருப்பாடற்றிரட்டு
1. சிவவணக்கம்
2. பரிபூரணானந்தம்
3. பொருள்வணக்கம்
4. சின்மாயனந்தகுரு
5. மௌனகுருவணக்கம்.
6. கருணாகரக்கடவுள்
7. சித்தர்கணம்
8. ஆனந்தமானபரம்.
9. சுகவாரி
10. எங்குநிறைகின்றபொருள்
11. சச்சிதானந்தசிவம்
12. தேசோமயானந்தம்
13. சிற்சுகோதயவிலாசம்

திருவருள்விலாசப்பா

    1. சிவவணக்கம்

    ஆசிரியவிருத்தம்
    அங்கிங்கெனாதபடி யெங்கும்ப்ரகாசமா
              யானந்தபூர்த்தியாகி
        யருளொடுநிறைந்ததெது தன்னருள்வெளிக்குளே
              யகிலாண்டகோடியெல்லாந்
    தங்கும்படிக்கிச்சை வைத்துயிர்க்குயிராய்த்
              தழைத்ததெதுமனவாக்கினிற்
       றட்டாமனின்றதெது சமயகோடிகளெலாந்
              தந்தெய்வமெந்தெய்வமென்
    றெங்குந்தொடர்ந்தெதிர் வழக்கிடவுநின்றதெது
              வெங்கணும்பெருவழ்க்கா
       யாதினும்வல்லவொரு சித்தாகியின்பமா
              யென்றைக்குமுள்ளதெதுமேற
    கங்குல்பகலறநின்ற வெல்லையுள்தெதுவது
              கருத்திற்கிசைந்ததுவே
       கண்டனவெலாமோன வுருவெளியதாகவுங்
          கருதியஞ்சலி செய்குவாம்.
    (1)

    ஊரனந்தம்பெற்ற பேரனந்தஞ்சுற்று
              முறவனந்தம்வினையினா
        லுடலனந்தஞ்செயும் வினையனந்தங்கருத்
              தோவனந்தம்பெற்றபேர்
    சீரனந்தஞ்சொர்க்க நரகமுமனந்தாற்
              றெய்வமுமனந்தபேதந்
        திகழ்கின்றசமயமு மனந்தமதனான்ஞான
              சிற்சத்தியாலுணர்ந்து
    காரனந்தங்கோடி வருஷித்ததெனவன்பர்
              கண்ணும்மிண்ணுந்தேக்கவே
        கருதரியவானந்த மழைபொழியுமுகிலைநங்
              கடவுளைத்துரியவடிவைப்
    பேரனந்தம்பேசி மறையனந்தஞ்சொலும்
              பெரியமவுனத்தின்வைப்பைப்
        பேசருமனந்தபத ஞானவானந்தமாம்
              பெரியபொருளைப்பணிகுவாம்.
    (2)
    அத்துவிதவத்துவைச் சொற்ப்ரகாசத்தனியை
              யருமறைகண்முரசறையவே
        யறிவினுக்கறிவாகி யானந்தமயமான
              வாதியையநாதியேக
    தத்துவசொரூபத்தை மதசம்மதம்பெறாச்
              சாலம்பரகிதமான
       சாசுவத்புட்கல நிராலம்பவாலம்ப
              சாந்தபதவ்யோமநிலையை
    நித்தநிர்மலசகித நிஷ்ப்ரபஞ்சப்பொருளை
              நிர்விஷயசுத்தமான
        நிர்விகாரத்தைத் தடத்தமாய்நின்றொளிர்
              நிரஞ்சனநிராமயத்தைச்
    சித்தமறியாதபடி சித்தத்தினின்றிலகு
              திவ்யதேசோமயத்தைச்
       சிற்பரவெளிக்குள்வளர் தற்பரமதானபர
              தேவதையையஞ்சலிசெய்வாம்
    (3)
    ------------

    2. பரிபூரணானந்தம்

    வாசாகயிங்கரிய மன்றியொருசாதன
              மனோவாயுநிற்கும்வண்ணம்
    வாலாயமாகவும் பழகியறியேன்றுறவு
              மார்க்கத்தினிச்சைபோல
    நேசானுசாரியாய் விவகரிப்பேனந்த
              நினைவையுமறந்தபோது
    நித்திரைகொள்வேன்றேக நீங்குமெனவெண்ணிலோ
              நெஞ்சந்துடித்தயருவேன்
    பேசாதவானந்த நிட்டைக்க்குமறிவிலாப்
              பேதைக்கும்வெகுதூரமே
    பேய்க்குணமறிந்திந்த நாய்க்குமொருவழிபெரிய
              பேரின்பநிட்டையருள்வாய்
    பாசாடவிக்குள்ளே செல்லாதவர்க்கருள்
              பழுத்தொழுகுதேவதருவே
    பார்க்குமிடமெங்குமொரு நீக்கமறநிறைகின்ற
              பரிபூரணானந்தமே. (1)
    தெரிவாகவூர்வன நடப்பனபறப்பன
              செயற்கொண்டிருப்பன முதற்
    றேகங்களத்தனையு மோகங்கொள்பௌதிகஞ்
              சென்மித்தவாங்கிறக்கும்
    விரிவாயபூதங்க ளொன்றொடொன்றாயழியு
              மேற்கொண்டசேடமதுவே
    வெறுவெளிநிராலம்ப நிறைசூன்யமுபசாந்த
              வேதவேதாந்தஞானம்
    பிரியாதபேரொளி பிறக்கின்றவருளருட்
              பெற்றோர்கள்பெற்றபெருமை
    பிறவாமையென்றைக்கு மிறவாமையாய்வந்து
              பேசாமையாகுமெனவே
    பரிவாயெனக்குநீ யறிவிக்கவந்ததே
              பரிபாககாலமலவோ
    பார்க்குமிடமெங்குமொரு நீக்கமறநிறைகின்ற
              பரிபூரணானந்தமே. (2)
    ஆராயும்வேளையிற் பிரமாதியானாலு
              மையவொருசெயலுமில்லை.
    யமைதியொடுபேசாத பெருமைபெறுகுணசந்த்ர
              ராமெனவிருந்தபேரு
    நேராகவொருகோப மொருவேளைவரவந்த
              நிறைவொன்றுமில்லாமலே
    நெட்டுயிர்த்துத்தட் டழிந்துளறுவார்வசன
              நிர்வாகரென்றபேரும்
    பூராயமாயொன்று பேசுமிடமொன்றைப்
              புலம்புவார்சிவராத்திரிப்
    போதுதுயிலோமென்ற விரதியருமறிதுயிற்
              போலேயிருந்துதுயில்வார்
    பாராதிதனிலுள்ள செயலெலாமுடிவிலே
              பார்க்கினின்செயலல்லவோ
    பார்க்குமிடமெங்குமொரு நீக்கமறநிறைகின்ற
              பரிபூரணானந்தமே. (3)
    அண்டபகிரண்டமும் மாயாவிகாரமே
              ய்ம்மாயையில்லாமையே
    யாமெனவுமறிவுமுண் டப்பாலுமறிகின்ற
              வறிவினையறிந்துபார்க்கி
    னெண்டிசைவிளக்குமொரு தெய்வவருளல்லாம்
              லில்லையெனுநினைவுமுண்டிங்
    கியானெனதறத்துரிய நிறைவாகிநிற்பதே
              யின்பமெனுமன்புமுண்டு
    கண்டனவெலாமல்ல வென்றுகண்டனைசெய்து
              கருலிகரணங்களோயக்
    கண்மூடியொருகண மிருக்கவென்றாற்பாழ்த்த
              கர்மங்கள்போராடுதே
    பண்டையுளகர்மமே கர்த்தாவெனும்பெயர்ப்
              பக்ஷநானிச்சிப்பனோ
    பார்க்குமிடமெங்குமொரு நீக்கமறநிறைகின்ற
              ப்ரிபூரணானந்தமே. (4)

    சந்ததமுமெனதுசெய னினதுசெயலியானெனுந்
              தன்மைநினையன்றியில்லாத்
    தன்மையால்வேறலேன் வேதாந்தசித்தாந்த
              சமரசசுபாவமிதுவே
    யிந்தநிலைதெளியநா னெக்குருகிவாடிய
              வியற்கைதிருவுளமறியுமே
    யிந்நிலையிலேசற் றிருக்கவென்றான்மடமை
              யிதசத்ருவாகவந்து
    சிந்தைகுடிகொள்ளுதே மலமாயைகன்மந்
              திரும்புமோதொடுவழக்காய்ச்
    சென்மம்வருமோவெனவும் யோசிக்குதேமனது
              சிரத்தையெனும்வாளுமுதவிப்
    பந்தமறமெய்ஞ்ஞான தீரமுந்தந்தெனைப்
              பாதுகாத்தருள்செய்குவாய்
    பார்க்குமிடமெங்குமொரு நீக்கமறநிறைகின்ற
              பரிபூரணானந்தமே. (5)

    பூதலயமாகின்ற மாயைமுதலென்பர்சிலர்
              பொறிபுலனடங்குமிடமே
    பொருளென்பர்சிலர்கரண முடிவென்பர்சிலர்குண்ம்
              போனவிடமென்பர்சிலபேர்
    நாதவடிவென்பர்சிலர் விந்துமயமென்பர்சிலர்
              நட்டநடுவேயிருந்த
    நாமென்பர்சிலருருவ மாமென்பர்சிலர்கருதி
              நாடிலருளென்பர்சிலபேர்
    பேதமறவுயிர்கெட்ட நிலையமென்றிடுவர்சிலர்
              பேசினருவென்பர்சிலபேர்
    பின்னுமுன்னுங்கெட்ட சூனியமதென்பர்சிலர்
              பிறவுமேமொழிவரிவையாற்
    பாதரசமாய்மனது சஞ்சலப்படுமலாற்
              பரமசுகநிஷ்டைபெறுமோ
    பார்க்குமிடமெங்குமொரு நீக்கமறநிறைகின்ற
              பரிபூரணானந்தமே (6)

    அந்தகாரத்தையோ ரகமாக்கிமின்போலென்
              னறிவைச்சுருக்கினவரா
    ரவ்வறிவுதானுமே பற்றினதுபற்றா
              யழுந்தவுந்தலைமீதிலே
    சொந்தமாயெழுதப் படித்தார்மெய்ஞ்ஞான
              சுகநிஷ்டைசேராமலே
    சோற்றுத்துருத்தியைச் சதமெனவுமுண்டுண்டு
              தூங்கவைத்தவரார்கொலோ
    தந்தைதாய்முதலான வகிலப்ரபஞ்சந்
              தனைத்தந்ததெனதாசையோ
    தன்னையேநோவனோ பிறரையேநோவனோ
              தற்காலமதைநோவனோ
    பந்தமான துதந்த வினையையேநோவனோ
              பரமார்த்தமேதுமறியேன்
    பார்க்குமிடமெங்குமொரு நீக்கமறநிறைகின்ற
              பரிபூரணானந்தமே. (7)

    வாராதெலாமொழிய வருவனவெலாமெய்த
              மனதுசாக்ஷியதாகவே
    மருவநிலைதந்ததும் வேதாந்தசித்தாந்த
              மரபுசமரசமாகவே
    பூராயமாயுணர வூகமதுதந்தாதும்
              பொய்யுடலைநிலையன்றெனப்
    போதநெறிதந்ததுஞ் சாசுவதவானந்த
              போகமேவீடென்னவே
    நீராளமாயுருக வுள்ளன்புதந்தது
              நின்னதருளின்னுமின்னு
    நின்னையேதுணையென்ற வென்னையேகாக்கவொரு
              நினைவுசற்றுண்டாகிலோ
    பாராதியறியாதமோனமேயிடைவிடாப்
              பற்றாகநிற்கவருள்வாய்
    பார்க்குமிடமெங்குமொரு நீக்கமறநிறைகின்ற
              பரிபூரணானந்தமே. (8)

    ஆழாழிகரையின்றி நிற்கவிலையோகொடிய
              வாலமமுதாகவிலையோ.
    வக்கடலின்மீதுவட வனனிற்கவில்லையோ
              வந்தரத்தகிலகோடி
    தாழாமனிலைநிற்க வில்லையோமேருவுந்
              தனுவாகவளையவிலையோ
    சப்தமேகங்களும் வச்ரதரனாணையிற்
              சஞ்சரித்திடவில்லையோ
    வாழாதுவாழவே யிராமனடியாற்சிலையு
              மடமங்கையாகவிலையோ
    மணிமந்த்ரமாதியால் வேண்டுசித்திகளுலக
              மார்க்கத்தில்வைக்கவிலையோ
    பாழானவென்மனங் குவியவொருதந்திரம்
              பண்ணுவதுனக்கருமையோ
    பார்க்குமிடமெங்குமொரு நீக்கமறநிறைகின்ற
              பரிபூரணானந்தமே. (9)

    ஆசைக்கொரளவில்லை யகிலமெல்லாங்கட்டி
              யாளினுங்கடன்மீதிலே
    யாணைசெலவேநினைவ ரளகேசனிகராக
              வம்பொன்மிகவைத்தபேரு
    நேசித்துரசவாத வித்தைக்கலைந்திடுவர்
              நெடுநாளிருந்தபேரு
    நிலையாக்வேயினுங் காயகற்பந்தேடி
              நெஞ்சுபுண்ணாவரெல்லாம்
    யோசிக்கும்வேளையிற் பசிதீரவுண்பது
              முறங்குவதுமாகமுடியு
    முன்னதேபோதுநா னானெனக்குளறியே
              யொன்றைவிட்டொன்றுபற்றிப்
    பாசக்கடற்குளே வீழாமன்மனதற்ற
              பரிசுத்தநிலையையருள்வாய்
    பார்க்குமிடமெங்குமொரு நீக்கமறநிறைகின்ற
              பரிபூரணானந்தமே (10)

    ------------

    3. பொருள்வணக்கம்

    நித்தியமாய் நிர்மலமாய் நிட்களமாய்
              நிராமயமாய் நிறைவாய்நீங்காச்
    சுத்தமுமாய்த் தூரமுமாய்ச் சமீபமுமாய்த்
              துரியநிறை சுடராயெல்லாம்
    வைத்திருந்ததாரகமா யானந்தமயமாகி
              மனவாக்கெட்டாச்
    சித்துருவாய்நின்றவொன்றைச் சுகாரம்பப்
              பெருவெளியைச் சிந்தைசெய்வாம். (1)

    யாதுமனநினையுமந்த நினைவுக்கு
              நினைவாகி யாதின்பாலும்
    பேதமறநின்றுயிருக் குயிராகி
              யன்பருக்கே பேரானந்தக்
    கோதிலமுதூற்றரும்பிக்குணங்குறியொன்றறத்
              தன்னைக் கொடுத்துக்காட்டுந்
    தீதில்பராபரமான சித்தாந்தப்
              பேரொளியைச் சிந்தைசெய்வாம். (2)

    பெருவெளியாயைம் பூதம் பிறப்பிடமாய்ப்
              பேசாத பெரியமோனம்
    வருமிடமாய் மனமாதிக்கெட்டாத
              பேரின்ப மயமாய்ஞானக்
    குருவருளாற்காட்டிடவு மன்பரைக்கோத்தற
              விழுங்கிக் கொண்டப்பாலுந்
    தெரிவரிதாய்க்கலந்ததெந்தப் பொருளந்தப்
              பொருளினையாஞ் சிந்தைசெய்வாம். (3)

    இகபரமுமுயிர்க்குயிரை யானெனதற்ற
          வருறவை யெந்தநாளுஞ்
    சுகபரிபூரணமான நிராலம்ப
          கோசரத்தைத் துரியவாழ்வை
    யகமகிழவருந்தேனை முக்கனியைக்
          கற்கண்டையமிர்தைநாடி
    மொகுமொகெனவிருவிழிநீர் முத்திறைப்பக்கர
          மலர்கண் முகிழ்த்துநிற்பாம். (4)

    சாதிகுலம்பிறப்பிறப்புப் பந்த
          முத்தியருவுருவத்தன்மைநாம
    மேதுமின்றியெப்பொருட்கு மெவ்விடத்தும்
          பிரிவறநின் றியக்கஞ்செய்யுஞ்
    சோதியைமாத்தூவெளியை மனதவிழ
          நிறைவான துரியவாழ்வைத்
    தீதில்பரமாம்பொருளைத் திருவருளே
          நினைவாகச் சிந்தைசெய்வாம். (5)

    இந்திரசாலங்கனவு கானலினீரெனவுலக
          மெமக்குத்தோன்றச்
    சந்ததமுஞ் சிற்பரத்தாலழியாத
          தற்பரத்தைச் சார்ந்துவாழ்க
    புந்திமகிழுறநாளுந் தடையறவானந்த
          வெள்ளம் பொலிகவென்றே
    வந்தருளுங்குருமௌனி மலர்த்தாளையனு
          தினமும் வழுத்தல்செய்வாம். (6)

    பொருளாகக்கண்டபொரு ளெவைக்கு
          முதற்பொருளாகிப் போதமாகித்
    தெருளாகிக்கருதுமன்பர் மிடிதீரப்
          பருகவந்த செழுந்தேனாகி
    யருளானோர்க்ககம்புறமென்
          றுன்னாத பூரணவானந்தமாகி
    யிருடீரவிளங்குபொரு ளியாதந்தப்பொருளினை
          யாமிறைஞ்சி நிற்பாம் (7)

    அருமறையின்சிரப்பொருளாய் விண்ணவர்
          மாமுனிவர்சித்த ராதியானோர்
    தெரிவரியபூரணமாய்க் காரணங்கற்பனை
          கடந்த செல்வமாகிக்
    கருதரியமலரின்மண மெள்ளிலெண்ணெயுடலுயிர்
          போற் கலந்தெந்நாளுந்
    துரியநடுவூடிருந்த பெரிய
          பொருளியாததனைத் தொழுதல்செய்வாம் (8)

    விண்ணாதிபூதமெல்லாந் தன்னகத்திலடக்கி
          வெறுவெளியாய்ஞானக்
    கண்ணாரக் கண்டவன்பர் கண்ணூடேயானந்தக்
          கடலாய்வேறொன்
    றெண்ணாதபடிக்கிரங்கித் தானாகச்செய்தருளு
          மிறையேயுன்றன்
    றண்ணாருஞ்சாந்தவரு டனைநினைந்துகரமலர்க
          டலைமேற்கொள்வாம். (9)

    விண்ணிறைந்தவெளியாயென் மனவெளியிற்
          கலந்தறிவாம் வெளீயினூடுந்
    தண்னிறைந்தபேரமுதாய்ச் சதானந்தமான
          பெருந்தகையே நின்பா
    லுண்ணிறைந்தபேரன்பா லுள்ளுருகி
          மொழிகுளறியுவகையாகிக்
    கண்ணிறைந்தபுனலுகுப்பக் கரமுகிழ்ப்ப
          நின்னருளைக் கருத்தில்வைப்பாம் (10)

    (வேறு)
    ஆதியந்தங்காட்டாத முதலாயெம்மை
          யடிமைக்கா வளர்ந்தெடுத்தவன்னைபோல
    நீதிபெருங்குருவாகிமனவாக்கெட்டா
          நிச்சயமாய்ச் சொச்சமதாய் நிமலமாகி
    வாதமிடுஞ் சமயநெறிக்கரியதாகி
          மௌனத்தோர்பால் வெளியாம் வயங்காநின்ற
    சோதியையென்னுயிர்த்துணையை நாடிக்கண்ணீர்
          சொரியவிரு கரங்குவித்துத் தொழுதல்செய்வாம். (11)

    அகரவுயிரெழுத்தனைத்துமாகிவேறா
          யமர்ந்ததென வகிலாண்ட மனைத்துமாகிப்
    பகர்வன வெல்லாமாகியல்லவாகிப்
          பரமாகிச்சொல்லரிய பான்மையாகித்
    துகளுறு சங்கற்ப விகற்பங்களெல்லாந்
          தோயாத வறிவாகிச் சுத்தமாகி
    நிகரில் பசுபதியான பொருளைநாடி
          நெட்டுயிர்த்துப் பேரன்பானினைதல் செய்வாம். (12)

    4. சின்மாயனந்தகுரு

    அங்கைகொடுமல்ர்தூவி யங்கமதுபுளகிப்ப
             வன்பினாலுருகிவிழிநீ
       ராறாகவாராத முத்தியினதாவேச
             வாசைக்கடற்குண்மூழ்கிச்
    சங்கரசுயம்புவே சம்புவேயெனவுமொழி
             தழுதழுத்திடவண்ங்குஞ்
       சன்மார்க்கநெறியிலாத் துன்மார்க்கனேனையுந்
             தண்ணருள்கொடுத்தாள்வையோ
    துங்கமிகுபக்குவச் சனகன்முதன்முனிவோர்க
             டொழுதருகில்வீற்றிருப்பச்
        சொல்லரியநெறியையொரு சொல்லாலுணர்த்தியே
             சொரூபானுபூதிகாட்டிச்
    செங்கமலபீடமேற் கல்லாலடிக்குள்வளர்
             சித்தாந்தமுத்திமுதலே
       சிரகிரிவிளங்கவரு தக்ஷிணாமூர்த்தியே
             சின்மயானந்தகுருவே. (1)

    ஆக்கையையெனுமிடிகரையை மெய்யென்றடா
             வினானத்துவிதவாஞ்சையாத
       லரியகொம்பிற்றேனை முடவனிச்சித்தபடி
             யாகுமறிவவிழலின்பந்
    தாக்கும்வகையேதிநாட் சரியைகிரியாயோக
             சாதனம்விடுத்ததெல்லாஞ்
       சன்மார்க்கமல்லவிவை நிற்கவென்மார்க்கங்கள்
             சாராதபேரறிவதாய்
    வாக்குமனமணுகாத பூரணப்பொருள்வந்து
             வாய்க்கும்படிக்குபாயம்
       வருவித்துவட்டாத பேரின்பமானசுக
             வாரியினைவாய்மடுத்துத்
    தேக்கித்திளைக்கநீ முன்னிற்பதென்ற்றுகாண்
             சித்தாந்தமுத்திமுதலே
       சிரகிரிவிளங்கவரு தக்ஷிணாமூர்த்தியே
             சின்மயானந்தகுருவே. (2)

    ஔவியமிருக்கநா னென்கின்றவாணவ
             மடைந்திட்டிருக்கலோப
       மருளின்மைகூடக் கலந்துள்ளிருக்கமே
             லாசாபிசாசமுதலாம்
    வெவ்வியகுணம்பல விருக்குமென்னறிவூடு
             மெய்யனீவீற்றிருக்க
       விதியில்லையென்னிலோ பூரணனெனும்பெயர்
             விரிக்கிலுரைவேறுமுளதோ
    கவ்வுமலமாகின்ற நாகபாசத்தினாற்
             கட்டுண்டவுயிர்கண்மூர்ச்சை
       கடிதகலவலியவரு ஞானசஞ்சீவியே
             கதியானபூமிநடுவுட்
    செவ்விதின்வளர்ந்தோங்கு திவ்யகுணமேருவே
             சித்தாந்தமுத்திமுதலே
       சிரகிரிவிளங்கவரு தக்ஷிணாமூர்த்தியே
             சின்மயானந்தகுருவே (3)

    ஐவகையெனும்பூத மாதியைவகுத்ததனு
             ளசரசரபேதமான
       யாவையும்வகுத்துநல் லறிவையும்வகுத்துமறை
             யாதிநூலையும்வகுத்துச்
    சைவமுதலாவளவில் சமயமும்வகுத்துமேற்
             சமயங்கடந்தமோன
       சமரசம்வகுத்தநீ யுன்னைநானணுகவுந்
             தண்ணருள்வகுக்கவிலையோ
    பொய்வளருநெஞ்சினர்கள் காணாதகாட்சியே
             பொய்யிலா மெய்யரறிவிற்
        போதபரிபூரண வகண்டிதாகாரமாய்ப்
             போக்குவரவற்றபொருளே
    தெய்வமறைமுடிவான பிரணவசொரூபியே
             சித்தாந்தமுத்திமுதலே
       சிரகிரிவிளங்கவரு தக்ஷிணாமூர்த்தியே
             சின்மயானந்தகுருவே (4)

    ஐந்துவகையாகின்ற பூதபேதத்தினாலாகின்ரவாக்கை
             நீர்மேலமர்கின்றகுமிழியென
       நிற்கின்றதென்னநா
             னறியாதகாலமெல்லாம்
    புந்திமகிழுறவுண் டுடுத்தின்பமாவதே
             போந்தநெறியன்றிருந்தேன்
       பூராயமாகநின தருள்வந்துணர்த்தவிவை
             போனவழிதெரியவில்லை
    யெந்தநிலைபேசினு மிணங்கவிலையல்லா
             லிறப்பொடுபிறப்பையுள்ளே
       யெண்ணினானெஞ்சது பகீரெனுந்துயிலுறா
             திருவிழியுமிரவுபகலாய்ச்
    செந்தழலின்மெழுகான தங்கமிவையென்கொலோ
             சித்தாந்தமுத்திமுதலே
       சிரகிரிவிளங்கவரு தக்ஷிணாமூர்த்தியே
             சின்மயானந்தகுருவே. (5)

    காரிட்டவாணவக் கருவரையிலறிவற்ற
             கண்ணிலாக்குழவியைப்போற்
       கட்டுண்டிருந்தவெமை வெளியில்விட்டல்லலாங்
             காப்பிட்டதற்கிசைந்த
    பேரிட்டுமெய்யென்று பேசுபாழ்ம்பொய்யுடல்
             பெலக்கவிளையமுதமூட்டிப்
       பெரியபுவனத்தினுடை போக்குவரவுறுகின்ற
             பெரியவிளையாட்டமைத்திட்
    டேரிட்டதன்சுருதி மொழிதப்பினமனைவிட்
             டிடருறவுறுக்கியிடர்தீர்த்
       திரவுபகலில்லாத பேரின்பவீட்டினி
             லிசைந்துதுயில்கொண்மினென்று
    சீரிட்டவுலகன்னை வடிவானவெந்தையே
             சித்தாந்தமுத்திமுதலே
       சிரகிரிவிளங்கவரு தக்ஷிணாமூர்த்தியே
             சின்மயானந்தகுருவே. (6)

    கருமருவுகுகையனைய காயத்தினடுவுட்
             களிம்புதோய்செம்பனையயான்
       காண்டகவிருக்கநீ ஞானவனன்மூட்டியே
             கனிவுபெறவுள்ளுருக்கிப்
    பருவமதறிந்துநின் னருளானகுளிகைகொடு
             பரிசித்துவேதிசெய்து
       பத்துமாற்றுத்தங்க மாக்கியேபணிகொண்ட
             பக்ஷத்தையென்சொல்லுகே
    னருமைபெறுபுகழ்பெற்ற வேதாந்தசித்தாந்த
             மாதியாமந்தமீது
       மத்துவிதநிலையரா யென்னையாண்டுன்னடிமை
             யானவர்களறிவினூடுந்
    திருமருவுகல்லா லடிக்கீழும்வளர்கின்ற
             சித்தாந்தமுத்திமுதலே
       சிரகிரிவிளங்கவரு தக்ஷிணாமூர்த்தியே
             சின்மயானந்தகுருவே. (7)

    கூடுதலுடன்பிரிதலற்றுநிர்த்தொந்தமாய்க்
             குவிதலுடன்விரிதலற்றுக்
       குணமற்றுவரவினொடு போக்கற்றுநிலையான
             குறியற்றுமலமுமற்று
    நாடுதலுமற்றுமேல் கீழ்நடுப்பக்கமென
             நண்ணுதலுமற்றுவிந்து
       நாதமற்றைவகைப் பூதபேதமுமற்று
             ஞாதுருவின்ஞானமற்று
    வாடுதலுமற்றுமே லொன்றற்றிரண்டற்று
             வாக்கற்றுமனமுமற்று
       மன்னுபரிபூரணச் சுகவாரிதன்னிலே
             வாய்மடுத்துண்டவசமாய்த்
    தேடுதலுமற்றவிட நிலையென்றமெளனியே
             சித்தாந்தமுத்திமுதலே
       சிரகிரிவிளங்கவரு தக்ஷிணாமூர்த்தியே
             சின்மயானந்தகுருவே. (8)

    தாராதவருளெலாந் தந்தருளமெளனியாய்த்
             தாயனையகருணைகாட்டித்
       தாளிணையென்முடிசூட்டி யறிவிற்சமாதியே
             சாசுவதசம்ப்ரதாய
    மோராமன்மந்திரமு முன்னாமன்முத்திநிலை
             யொன்றோடிரண்டெனாம
       லொளியெனவும்வெளியெனவு முருவெனவுநாதமா
             மொலியெனவுமுணர்வுறாமற்
    பாராதுபார்ப்பதே யேதுசாதனமற்ற
             பரமவனுபூதிவாய்க்கும்
    பண்பென்றுணர்த்தியது பாராமலந்நிலை
             பதிந்தநின்பழவடியர்தஞ்
    சிராயிருக்கநின தருள்வேண்டுமையனே
             சித்தாந்தமுத்திமுதலே
       சிரகிரிவிளங்கவரு தக்ஷிணாமூர்த்தியே
              சின்மயானந்தகுருவே. (9)

    போதமாயாதிநடு வந்தமுமிலாததாய்ப
             புனிதமாயவிகாரமாய்ப்
       போக்குவரவில்லாத வின்பமாய்நின்றநின்
             பூரணம்புகலிடமதா
    வாதரவுவையாம லறிவினைமறைப்பதுநி
             னருள்பின்னுமறிவின்மைதீர்த்
       தறிவித்துநிற்பதுநி னருளாகிலெளியனேற்
             கறிவாவதேதறிவிலா
    வேதம்வருவகையேது வினையேதுவினைதனக்
             கீடானகாயமேதென்
       னிச்சாசுதந்தரஞ் சிறிதுமிலையிகபர
             மிரண்டினுண்மலைவுதீரத்
    தீதிலருள்கொண்டினி யுணர்த்தியெனையாள்வையோ
             சித்தாந்தமுத்திமுதலே
       சிரகிரிவிளங்கவரு தக்ஷிணாமூர்தியே
             சின்மயானந்தகுருவே. (10)

    பக்திநெறிநிலைநின்று நவகண்டபூமிப்
             பரப்பைவலமாகவந்தும்
       பரவையிடைமூழ்கியு நதிகளிடைமூழ்கியும்
             பசிதாகமின்றியெழுநா
    மத்தியிடைநின்றுமுதிர்சருகுபுனல்வாயுவினை
             வன்பசிதனக்கடைத்து
       மௌனத்திருந்துமுயர் மலைநுழைவுபுக்கியு
             மன்னுதசநாடிமுற்றுஞ்
    சுத்திசெய்தும்மூல ப்ராணனோடங்கியைச்
             சோமவட்டத்தடைத்துஞ்
       சொல்லரியவமுதுண்டு மற்பவுடல்கற்பங்க
             டோறுநிலைநிற்கவீறு
    சித்திசெய்துஞ்ஞான மதுகதிகூடுமோ
             சித்தாந்தமுத்திமுதலே
       சிரகிரிவிளங்கவரு தக்ஷிணாமூர்த்தியே
              சின்மயானந்தகுருவே (11)
    -------------

    5. மௌனகுருவணக்கம்.

    ஆசைநிகளத்தினை நிர்த்தூளிபடவுதறி
             யாங்காரமுளையையெற்றி
       யத்துவிதமதமாகி மதமாறுமாறாக
             வங்கையின்லிலாழியாக்கிப்
    பாசவிருடன்னிழ லெனச்சுளித்தார்த்துமேற்
             பார்த்துப்பரந்தமனதைப்
       பாரித்தகவளமாய்ப் பூரிக்கவுண்டுமுக
             படாமன்னமாயைநூறித்
    தேசுபெறநீவைத்த சின்முத்திராங்குசச்
             செங்கைக்குளேயடங்கிச்
       சின்மயானந்தசுக வெள்ளம்படிந்துநின்
             றிருவருட்பூர்த்தியான
    வாசமுறுசற்சார மீதென்னையொருஞான
             மத்தகஜமெனவள்ர்த்தாய்
       ம்ந்த்ரகுருவேயோக தந்த்ரகுருவேமூலன்
             மரபில்வருமெளனகுருவே. (1)

    ஐந்துவகையாகின்ற பூதமுதனாதமு
             மடங்கவெளியாகவெளிசெய்
       தறியாமையறிவாதி பிறிவாகவறிவார்க
             ளறிவாகநின்றநிலையிற்
    சிந்தையறநில்லென்று சும்மாவிருத்திமேற்
             சின்மயானந்தவெள்ளந்
       தேக்கித்திளைத்துநா னதுவாயிருக்கநீ
             செய்சித்ரமிகநன்றுகா
    ணெந்தை வவாற்பரம குருவாழ்கவாழவரு
             ளியநந்திமரபுவாழ்க
       வென்றடியர்மனமகிழ வேதாகமத்துணி
             பிரண்டில்லையொன்றென்னவே
    வந்தகுருவேவீறு சிவஞானசித்திநெறி
             மௌனோபதேசகுருவே
       மந்த்ரகுருவேயோக தந்த்ரகுருவேமூலன்
             மரபில்வருமௌனகுருவே. (2)

    ஆதிக்கநல்கினவ ராரிந்தமாயைக்கெ
             னறிவின்றியிடமில்லையோ
       வந்தரப்புஷ்பமுங் கானலின்னீருமோ
             ரவசரத்துபயோகமோ
    போதித்தநிலையையு மயக்குதேயபயநான்
             புக்கவருடோற்றிடாமற்
       பொய்யானவுலகத்தை மெய்யாநிறுத்தியென்
             புந்திக்குளிந்த்ரஜாலஞ்
    சாதிக்குதேயிதனை வெல்லவுமுபாயநீ
             தந்தருள்வதென்றுபுகல்வாய்
       சண்மதஸ்தாபனமும் வேதாந்தசித்தாந்த
             சமரசநிர்வாகநிலையு
    மாதிக்கொடண்டப் பரப்பெலாமறியவே
             வந்தருளுஞானகுருவே
       மந்தரகுருவேயோக தந்த்ரகுருவேமூலன்
              மரபில்வருமௌனகுருவே (3)

    மின்னனையபொய்யுடலை நிலையென்றுமையிலகு
             விழிகொண்டுமையல்பூட்டு
       மின்னார்களின்பமே மெய்யென்றும்வளர்மாட
             மேல்வீடுசொர்கமென்றும்
    பொன்னையழியாதுவளை பொருளென்றுபோற்றியிப்
             பொய்வேஷமிகுதிகாட்டிப்
       பொறையறிவுதுறவீதி லாதிநற்குணமெலாம்
             போக்கிலேபோகவிட்டுத்
    தன்னிகரிலோபாதி பாழ்ம்பேய்பிடித்திடத்
             தரணிமிசைலோகாயதன்
       சமயநடைசாராமல் வேதாந்தசித்தாந்த
             சமரசசிவானுபூதி
    மன்னவொருசொற்கொண் டெனைத்தடுத் தாண்டன்பி
             ன்வாழ்வித்தஞானகுருவே
       மந்த்ரகுருவேயோக தந்த்ரகுருவேமூலன்
             மரபில்வருமெளனகுருவே. (4)

    போனகமிருக்கின்ற சாலையிடைவேண்டுவ
             புசித்தற்கிருக்குமதுபோற்
       புருஷர்பெறுதர்மாதி வேதமுடனாகமம்
             புகலுமதினாலாம்பயன்
    ஞானநெறிமுக்யநெறி காட்சியனுமானமுத
             னானாவிதங்கடேர்ந்து
       நானானெனக்குளறு படைபுடைபெயர்த்திடவு
             நான்குசாதனமுமோர்ந்திட்
    டானநெறியாஞ்சரியை யாதிசோபானுமுற்
             றணுபக்ஷசம்புபக்ஷ
       மாமிருகற்பமு மாயாதிசேவையு
             மறிந்திரண்டொன்றென்னுமோர்
    மானதவிகற்பமற வென்றுநிற்பதுநமது
             மரபென்றபரமகுருவே
       மந்த்ரகுருவேயோக தந்த்ரகுருவேமூலன்
              மரபில்வருமெளனகுருவே. (5)

    கல்லாதவறிவுமேற் கேளாதகேள்வியுங்
             கருணைசிறிதேதுமில்லாக்
       காட்சியுங்கொலைகளவு கட்காமமாட்சியாய்க்
             காதலித்திடுநெஞ்சமும்
    பொல்லாதபொய்ம்மொழியு மல்லாதுநன்மைகள்
             பொருந்துகுணமேதுமறியேன்
       புருஷர்வடிவானதே யல்லாதுகனவிலும்
             புருஷார்த்தமேதுமில்லே
    னெல்லாமறிந்தநீ யறியாததன்றெனக்
             கெவ்வண்ணமுய்வண்ணமோ
       விருளையிருளென்றவர்க் கொளிதாரகம்பெறு
             மெனக்குநின்னருடாரகம்
    வல்லானெனும்பெய ருனக்குள்ளதேயிந்த
             வஞ்சகனையாளநினையாய்
       மந்த்ரகுருவேயோக த்ந்த்ரகுருவேமூலன்
              மரபில்வருமெளனகுருவே. (6)

    கானகமிலங்குபுலி பசுவொடுகுலாவுநின்
             கண்காணமதயானைநீ
       கைகாட்டவுங்கையா னெகிடிக்கெனப்பெரிய
             கட்டைமிகவேந்திவருமே
    போனகமமைந்ததென வக்காமதேனுநின்
             பொன்னடியினின்றுசொலுமே
       புவிராஜர்கவிராஜர் தவராஜனென்றுனைப்
             போற்றிஜயபோற்றியென்பார்
    ஞானகருணாகர முகங்கண்டபோதிலே
             நவநாதசித்தர்களுமுன
       னட்பினைவிரும்புவர் சுகர்வாமதேவர்முதன்
             ஞானிகளுமுனைமெச்சுவார்
    வாகனமுமண்ணகமும் வந்தெதிர்வணங்கிடுமுன்
             மகிமையதுசொல்லவெளிதோ
       மந்த்ரகுருவேயோக த்ந்த்ரகுருவேமூலன்
              மரபில்வருமெளனகுருவே. (7)

    சருகுசலபக்ஷணிக ளொருகோடியல்லாற்
             சகோரபக்ஷிகள்போலவே
       தவளநிலவொழுகமிர்த தாரையுண்டழியாத
             தன்மையரனந்தகோடி
    யிருவினைகளற்றிரவு பகலென்பதறியாத
             வேகாந்தமோனஞான
       வின்பநிஷ்டையர்கோடி மணிமந்த்ரசித்திநிலை
             யெய்தினர்கள்கோடிசூழக்
    குருமணியிழைத்திட்ட சிங்காதனத்தின்மிசை
             கொலுவீற்றிருக்குநின்னைக்
       கும்பிட்டனந்தமுறை தெண்டநிட்டென்மனக்
             குறையெலாந்தீரும்வண்ண
    மருமலரெடுத்துனிரு தாளையர்ச்சிக்கவெனை
             வாவென்றழைப்பதெந்நாண்
       மந்த்ரகுருவேயோக தந்த்ரகுருவேமூலன்
             மரபில்வருமெளனகுருவே. (8)

    ஆங்காரமானகுல வேடவெம்பேய்பாழ்த்த
             வாணவத்தினும்வதுலிதுகா
       ணறிவினைமயக்கிடு நடுவறியவொட்டாதி
             யாதொன்றுதொடினுமதுவாய்த்
    தாங்காதுமொழிபேசு மரிகரப்பிரமாதி
             தம்மொடுசமானமென்னுந்
       தடையற்றதேரிலஞ் சுருவாணிபோலவே
             தன்னிலசையாதுநிற்கு
    மீங்காரெனக்குநிக ரென்னப்ரதாபித்
             திராவணாகாரமாகி
       யிதயவெளியெங்கணுந் தன்னரசுநாடுசெய்
             திருக்குமிதனொடெநேரமும்
    வாங்காவிலாவடிமை போராடமுடியுமோ
             மெளனோபதேசகுருவே
       மந்த்ரகுருவேயோக தந்த்ரகுருவேமூலன்
              மரபில்வருமெளனகுருவே. (9)

    பற்றுவெகுவிதமாகி யொன்றைவிட்டொன்றனைப்
             பற்றியுழல்கிருமிபோலப்
       பாழ்ஞ்சிந்தைபெற்றநான் வெளியாகநின்னருள்
             பகர்ந்துமறியேன்றுவிதமோ
    சிற்றறிவதன்றியு மெவரேனுமொருமொழி
             திடுக்கென்றுரைத்தபோது
       சிந்தைசெவியாகவே பறையறையவுதரவெந்
             தீநெஞ்சமளவளாவ
    வுற்றுணரவுணர்வற்றுன் மற்றவெறியினர்போல
             வுளறுவேன்முத்தமார்க்க
       முணர்வதெப்படியின்ப துன்பஞ்சமானமா
             யுறுவதெப்படியாயினு
    மற்றெனக்கையநீ சொன்னவொருவார்த்தையினை
             மலையிலக்கெனநம்பினேன்
       மந்த்ரகுருவேயோக தந்த்ரகுருவேமூலன்
              மரபில்வருமெளனகுருவே. (10)
    -----------

    6. கருணாகரக்கடவுள்

    நிர்க்குணநிராமய நிரஞ்சனநிராலம்ப
             நிர்விஷயகைவல்யமா
       நிஷ்களவசங்கசஞ் சலரகிதநிர்வசன
             நிர்த்தோந்தநித்தமுக்த
    தற்பரவிஸ்வாதீத வ்யோமபரிபூரண
             சதானந்தஞானபகவ
       சம்புசிவசங்கர சர்வேசவென்றுநான்
             சர்வகாலமுநினைவனோ
    வற்புதவகோசர நிவர்த்திபெறுமன்பருக்
             கானந்தபூர்த்தியான
       வத்துவிதநிச்சய சொரூபசாக்ஷாத்கார
             வனுபூதியனுசூதமுங்
    கற்பனையறக்காண முக்கணுடன்வடநிழற்
             கண்ணூடிருந்தகுருவே
       கருதரியசிற்சபையி லானந்தநிர்த்தமிடு
             கருணாகரக்கடவுளே. (1)

    மண்ணாதியைந்தொடு புறத்திலுளகருவியும்
             வாக்காதிசுரோத்ராதியும்
       வளர்கின்றசப்தாதி மனமாதிகலையாதி
             மன்னுசுத்தாதியுடனே
    தொண்ணூற்றொடாறுமற் றுள்ளனவுமௌனியாய்ச்
             சொன்னவொருசொற்கொண்டதே
       தூவெளியதாயகண் டானந்தசுகவாரி
             தோற்றுமதையென்சொல்லுவேன்
    பண்ணாருமிசையினொடு பாடிப்படித்தருட்
             பான்மைநெறிநின்றுதவறாப்
       பக்குவவிசேஷராய் நெக்குநெக்குருகிப்
             பணிந்தெழுந்திருகைகூப்பிக்
    கண்ணாறுகரைபுரள நின்றவன்பரையெலாங்
             கைவிடாக்காட்சியுறவே
       கருதரியசிற்சபையி லானந்தநிர்த்தமிடு
              கருணாகரக்கடவுளே. (2)

    எல்லாமுனடிமையே யெல்லாமுனுடைமையே
             யெல்லாமுனுடையசெயலே
       யெங்கணும்வியாபிநீ யென்றுசொலுமியல்பென்
             றிருக்காதிவேதமெல்லாஞ்
    சொல்லான்முழக்கியது மிக்கவுபகாரமாச்
             சொல்லிறந்தவரும்விண்டு
       சொன்னவையுமிவைநல்ல குருவானபேருந்
             தொகுத்தநெறிதானுமிவையே
    யல்லாமலில்லையென நன்றாவறிந்தே
             னறிந்தபடிநின்றுசுகநா
       னாகாதவண்ணமே யிவ்வண்ணமாயினே
             னதுவுநினதருளென்னவே
    கல்லாத்வறிஞனுக் குள்ளேயுணர்த்தினை
             கதிக்குவகையேதுபுகலாய்
       கருதறியசிற்சபையி லானந்தநிர்த்தமிடு
              கருணாகரக்கடவுளே. (3)

    பட்டப்பகற்பொழுதை யிருளென்றமருளர்தம்
             பக்ஷமோவெனதுபக்ஷம
       பார்த்தவிடமெங்கணுங் கோத்தநிலைகுலையாது
             பரமவெளியாகவொருசொற்
    றிட்டமுடன்மெளனியா யருள்செய்திருக்கவுஞ்
             சேராமலாராகநான்
       சிறுவீடுகட்டியதி னடுசோற்றையுண்டுண்டு
             தேக்குசிறியார்கள்போல
    நட்டணையதாக்கற்ற கல்வியும்விவேகமு
             நன்னிலயமாகவுன்னி
       நானென்றுநீயென் றிரண்டில்லையென்னவே
             நடுவேமுளைத்தமனதைக்
    கட்டவறியாமலே வாடினேனெப்போது
             கருணைக்குரித்தாவனோ
       கருதரியசிற்சபையி லானந்தநிர்த்தமிடு
              கருணாகரக்கடவுளே. (4)

    மெய்விடாநாவுள்ள மெய்யருளிருந்துநீ
             மெய்யானமெய்யையெல்லா
       மெய்யெனவுணர்த்தியது மெய்யிதற்கையமிலை
             மெய்யேதுமறியாவெறும்
    பொய்விடாப்பொய்யினே னுள்ளத்திருந்துதான்
             பொய்யானபொய்யையெல்லாம்
       பொய்யெனாவண்ணமே புகலவைத்தானெனிற்
             புன்மையேனென்செய்குவென்
    மைவிடாதெழுநீல கண்டகுருவேவிஷ்ணு
             வடிவானஞானகுருவே
       மலர்மேவிமறையோது நான்முகக்குருவே
             மதங்கடொறுநின்றகுருவே
    கைவிடாதேயென்ற வன்பருக்கன்பாய்க்
             கருத்தூடுணர்த்துகுருவே
       கருதறியசிற்சபையி லானந்தநித்தமிடு
              கருணாகரக்கடவுளே. (5)

    பண்ணேனுனக்கான பூசையொருவடிவிலே
             பாவித்திறைஞ்சவாங்கே
       பார்க்கின்றமலரூடு நீயேயிருத்தியப்
             பனிமலரெடுக்கமனமு
    நண்ணேனலாமலிரு கைதான்குவிக்கவெனி
             னாணுமென்னுளநிற்றிநீ
       நான்கும்பிடும்போ தரைக்கும்பிடாதலா
             னான்பூசைசெய்யன்முறையோ
    விண்ணேவிணாதியாம் பூதமேநாதமே
             வேதமேவேதாந்தமே
       மேதக்ககேள்வியே கேள்வியாம்பூமிக்குள்
             வித்தேயவித்தின்முளையே
    கண்ணேகருத்தேயெ னெண்ணேயெழுத்தே
             சதிக்கானமோனவடிவே
       கருதறியசிற்சபையி லானந்தநிர்த்தமிடு
              கருணாகரக்கடவுளே. (6)

    சந்ததமும்வேதமொழி யாதொன்றுபற்றினது
             தான்வந்துமுற்றுமெனலாற்
       சகமீதிருந்தாலு மரணமுண்டென்பது
             சதாநிஷ்டர்நினைவதில்லை
    சிந்தையறியார்க்கீது போதிப்பதல்லவே
             செப்பினும்வெகுதர்க்கமாந்
       திவ்யகுணமார்க்கண்டர் சுகராதிமுனிவோர்கள்
             சித்தாந்தநித்யரலவோ
    விந்த்ராதிதேவதைகள் பிரமாதிகடவுள
             ரிருக்காதிவேதமுனிவ
       ரெண்ணரியகண்நாதர் நவநாதசித்தர்க
             ளிரவிமதியாதியோர்கள்
    கந்தருவர்கின்னரர்கண் மற்றையர்களியாவருங்
             கைகுவித்திடுதெய்வமே
       கருதரியசிற்சபையி லானந்தநிர்த்தமிடு
             கருணாகரக்கடவுளே (7)

    துள்ளுமறியாமனது பலிகொடுத்தேன்கர்ம
             துஷ்டதேவதைகளில்லை
       துரியநிறைசாந்ததே வதையாமுனக்கே
             தொழும்பனன்பபிஷேகநீ
    ருள்ளுறையிலென்னாவி நைவேத்தியம்ப்ராண
             னோங்குமதிதூபதீப
       மொருகாலமன்றிது சதாகாலபூசையா
              வொப்புவித்தேன்கருணைகூர்
    தெள்ளிமறைவடியிட்ட வமுதப்பிழம்பே
             தெளிந்ததேனேசீனியே
       திவ்யரசமியாவுந் திரண்டொழுகுபாகே
             தெவிட்டாதவானந்தமே
    கள்ளனறிவூடுமே மெள்ளமெளவெளீயாய்க்
             கலக்கவருநல்லவுறவே
       கருதரியசிற்சபையி லானந்தநிர்த்தமிடு
             கருணாகரக்கடவுளே. (8)

    உடல்குழையவென்பெலா நெக்குருகவிழிநீர்க
             ளூற்றெனவெதும்பியூற்ற
       வூசிகாந்தத்தினைக் கண்டணுகல்போலவே
             யோருறவுமுன்னியுன்னிப்
    படபடெனநெஞ்சம் பதைத்துண்ணடுக்குறப்
             பாடியாடிக்குதித்துப்
       பனிமதிமுகத்திலே நிலவனையபுன்னகை
             பரப்பியார்த்தார்த்தெழுந்து
    மடலவிழுமலரனைய கைவிரித்துக்கூப்பி
             வானேயவானிவின்ப
       மழையேமழைத்தாரை வெள்ளமேநீடூழி
             வாழியெனவாழ்த்தியேத்துங்
    கடன்மடைதிறந்தனைய வன்பரன்புக்கெளியை
             கன்னெஞ்சனுக்கெளியையோ
       கருதரியசிற்சபையி லானந்தநிர்த்தமிடு
              கருனாகரக்கடவுளே. (9)

    இங்கற்றபடியங்கு மெனவறியுநல்லறிஞ
             ரெக்காலமும்முதவுவா
       ரின்சொறவறார்பொய்மை யாமிழுக்குரையா
             ரிரங்குவார்கொலைகளிபயிலார்
    சங்கற்பசித்தரவ ருள்ளக்கருத்திலுறை
             சாக்ஷிநீயிகபரத்துஞ்
       சந்தானகற்பகத் தேவாயிருந்தே
             சமஸ்தவின்பமுமுதவுவாய்
    சிங்கத்தையொத்தெனப் பாயவருவினையினைச்
             சேதிக்கவருசிம்புளே
       சிந்தாகுலத்திமிர மகலவருபானுவே
             தீனனேன்கரையேறவே
    கங்கற்றபேராசை வெள்ளத்தின்வளரருட்
             ககனவட்டக்கப்பலே
       கருதரியசிற்சபையி லானந்தநிர்த்தமிடு
              கருணாகரக்கடவுளே. (10)
    --------

    7. சித்தர்கணம்

    திக்கொடுதிகந்தமும் மனவேகமென்னவே
          சென்றோடியாடிவருவீர்
    செம்பொன்மகமேருவொடு குணமேருவென்னவே
          திகழ்துருவனளவளாவி
    யுக்ரமிகுசக்ரதர னென்னநிற்பீர்கையி
          லுழுந்தமிழுமாசமனமா
    வோரேழுகடலையும் பருகவல்லீரிந்த்ர
          னுலகுமயிராவதமுமே
    கைக்கெளியபந்தா வெடுத்துவிளையாடுவீர்
          ககனவட்டத்தையெல்லாங்
    கடுகிடையிருத்தியே யஷ்டகுலவெற்பையுங்
          காட்டுவீர்மேலுமேலு
    மிக்கசித்திகளெலாம் வல்லநீரடிமைமுன்
          விளங்கவருசித்தியிலையோ
    வேதாந்தசித்தாந்த சமரசநன்னிலைபெற்ற
          வித்தகச்சித்தர்கணமே. (!)

    பாட்டளிதுதைந்துவளர் கற்பகநனீழலைப்
          பாரினிடைவரவழைப்பீர்
    பத்மநிதிசங்கநிதி யிருபாரிசத்திலும்
          பணிசெயுந்தொழிலாளர்போற்
    கேட்டதுகொடுத்துவர நிற்கவைப்பீர்பிச்சை
          கேட்டுப்பிழைப்போரையுங்
    கிரீடபதியாக்குவீர் கற்பாந்தவெள்ளமொரு
          கேணியிடைகுறுகவைப்பீ
    ரோட்டினையெடுத்தா யிரத்தெட்டுமாற்றாக
          வொளிவிடும்பொன்னாக்குவீ
    ருரகனுமிளைப்பாற யோகதண்டத்திலே
          யுலகுசுமையாகவருளான்
    மீட்டிடவும்வல்லநீ ரென்மனக்கல்லையனன்
          மெழுகாக்கிவைப்பதரிதோ
    வேதாந்தசித்தாந்த சமரசநன்னிலைபெற்ற
          வித்தகச்சித்தர்கணமே. (2)

    பாரொடுநன்னீராதி யொன்றொடொன்றாகவே
          பற்றிலயமாகுபோது
    பரவெளியின்மருவுவீர் கற்பாந்தவெள்ளம்
          பரந்திடினதற்குமீதே
    நீரிலுறைவண்டாய்த் துவண்டுசிவயோகநிலை
          நிற்பீர்விகற்பமாகி
    நெடியமுகிலேழும் பரந்துவருஷிக்கிலோ
          நிலவுமதிமண்டலமதே
    யூரெனவிளங்குவீர் பிரமாதிமுடிவில்விடை
          யூர்தியருளாலுலவுவீ
    ருலகங்கள்கீழ்மேல தாகப்பெருங்காற்
          றுலாவினற்றாரணையினான்
    மேருவெனவசையாம னிற்கவல்லீருமது
          மேதக்கசித்தியெளிதோ
    வேதாந்தசித்தாந்த சமரசநன்னிலைபெற்ற
          வித்தகச்சித்தர்கணமே. (3)

    எண்ணரியபிறவிதனின் மானிடப்பிறவிதா
          னியாதினும்மரிதரிதுகா
    ணிப்பிறவிதப்பினா லெப்பிறவிவாய்க்குமோ
          வேதுவருமோவறிகிலேன்
    கண்ணகனிலத்துநா னுள்ளபொழுதேயருட்
          ககனவட்டத்தினின்று
    காலூன்றிநின்றுபொழி யானந்தமுகிலொடு
          கலந்துமதியவசமுறவே
    பண்ணுவதுநன்மையிந் நிலைபதியுமட்டுமே
          பதியாயிருந்ததேகப்
    பவரிகுலையாமலே கௌரிகுண்டலியாயி
          பண்ணவிதனருளினாலே
    விண்ணிலவுமதியமுத மொழியாதுபொழியவே
          வேண்டுவேனுமதடிமைநான்
    வேதாந்தசித்தாந்த சமரசநன்னிலைபெற்ற
          வித்தகச்சித்தர்கணமே. (4)

    பொய்திகழுமுலகநடை யென்சொல்கேனென் சொல்
          கேன் பொழுதுபோக்கேதென்னிலோ
    பொய்யுடனிமித்தம் புசிப்புக்கலைந்திடல்
          புசித்தபின்கண்ணுறங்கல்
    கைதவமலாமலிது செய்தவமதல்லவே
          கண்கெட்டபேர்க்கும்வெளியாய்க்
    கண்டதிதுவிண்டிதைக் கண்டித்துநிற்றலெக்
          காலமோவதையறிகிலேன்
    மைதிகழுமுகிலினங் குடைநிழற்றிடவட்ட
          வரையினொடுசெம்பொன்மேரு
    மால்வரையின்முதுகூடும் யோகதண்டக்கோல்
          வரைந்துசயவிருதுகாட்டி
    மெய்திகழுமஷ்டாங்க யோகபூமிக்குள்வளர்
          வேந்தரேகுணசாந்தரே
    வேதாந்தசித்தாந்த சமரசநன்னிலைபெற்ற
          வித்தகச்சித்தர்கணமே. (5)

    கெச துரகமுதலான சதுரங்கமனமாதி
          கேள்வி யினிசைந்துநிற்பக்
    கெடிகொண்டதலமாறு மும்மண்டலத்திலுங்
          கிள்ளாக்குசெல்லமிக்க
    தெசவிதமதாய்நின்ற நாதங்களோலிடச்
          சிங்காசனாதிபர்களாய்த்
    திக்குத்திகந்தமும் பூரணமதிக்குடை
          திகழ்ந்திடவசந்தகால
    மிசையமலர்மீதுறை மணம்போலவானந்த
          மிதயமேற்கொள்ளும்வண்ண
    மென்றைக்குமழியாத சிவராசயோகமா
          யிந்த்ராதிதேவர்களெலாம்
    விஜயஜயஜயவென்ன வாசிசொலவேகொலு
          விருக்குநும்பெருமையெளிதோ
    வேதாந்தசித்தாந்த சமரசநன்னிலைபெற்ற
          வித்தகச்சித்தர்கணமே. (6)

    ஆணிலேபெண்ணிலே யென்போலவொருபேதை
          யகிலத்தின்மிசையுள்ளதோ
    வாடியகறங்குபோ லோடியுழல்சிந்தையை
          யடக்கியொருகணமேனும்யான்
    காணிலேன்திருவருளை யல்லாதுமௌனியாய்க்
          கண்மூடியோடுமூச்சைக்
    கட்டிக்கலாமதியை முட்டவேமூலவெங்
          கனலினையெழுப்பநினைவும்
    பூணிலேனிற்றைநாட் கற்றதுங்கேட்டதும்
          போக்கிலேபோகவிட்டுப்
    பொய்யுலகனாயினே னாயினுங்கடையான
          புன்மையேனின்னமின்னம்
    வீணிலேயலையாமன் மலையிலக்காகநீர்
          வெளிப்படத்தோற்றல்வேண்டும்
    வேதாந்தசித்தாந்த சமரசநன்னிலைபெற்ற
          வித்தக்ச்சித்தர்கணமே. (7)

    கன்னலமுதெனவுமுக் கனியெனவும்வாயூறு
          கண்டெனவுமடியெடுத்துக்
    கடவுளர்கடந்ததல வழுதழுதுபேய்போற்
          கருத்திலெழுகின்றதெல்லா
    மென்னதறியாமையறி வென்னுமிருபகுதியா
          லீட்டுதமிழென்றமிழினுக்
    கின்னல்பகராதுலக மாராமைமேலிட்
          டிருத்தலாலித்தமிழையே
    சொன்னவனியாவனவன் முத்திசித்திகளெலாந்
          தோய்ந்தநெறியேபடித்தீர்
    சொல்லுமெனவவர்நீங்கள் சொன்னவவையிற்சிறிது
          தோய்ந்தகுணசாந்தனெனவே
    மின்னல்பெறவேசொல்ல வச்சொல்கேட்டடிமைமன
          ம்விகசிப்பதெந்தநாளோ
    வேதாந்தசித்தாந்த சமரசநன்னிலைபெற்ற
          வித்தகச்சித்தர்கணமே. (8)

    பொற்பினொடுகைகாலில் வள்ளுகிர்படைத்தலாற்
          போந்திடையொடுக்கமுறலாம்
    பொலிவானவெண்ணீறு பூசியேயருள்கொண்டு
          பூரித்தவெண்ணீர்மையா
    லெற்படவிள்ங்குகக னத்திலிமையாவிழி
          யிசைந்துமேனோக்கமுறலா
    லிரவுபகலிருளான கனதந்திபடநூறி
    யிதயங்களித்திடுதலாற்
          பற்பலவிதங்கொண்ட புலிகலையினுரியது
    படைத்துப்ப்ரதாபமுறலாற்
          பனிவெயில்கள்புகுதாம னெடியவான்றொடர்நெடிய
    பருமரவனங்களாரும்
          வெற்பினிடையுறைதலாற் றவராசசிங்கமென
    மிக்கோருமைப்புகழ்வர்காண்
          வேதாந்தசித்தாந்த சமரசநன்னிலைபெற்ற
    வித்தகச்சித்தர்கணமே. (9)

    கல்லாதபேர்களே நல்லவர்கணல்லவர்கள்
          கற்றுமறிவிலாதவென்
    கர்மத்தையென்சொல்கேன் மதியையென்சொல்லுகேன்
          கைவல்யஞானநீதி
    நல்லோருரைக்கிலோ கர்மமுக்கியமென்று
          நாட்டுவேன்கர்மமொருவ
    னாட்டினாலோபழைய ஞானமுக்கியமென்று
          நவிலுவேன்வடமொழியிலே
    வல்லானொருத்தன்வர வுந்த்ராவிடத்திலே
          வந்ததாவிவகரிப்பேன்
    வல்லதமிழறஞர்வரி னங்ஙனேவடமொழியின்
          வசனங்கள்சிறிதுபுகல்வேன்
    வெல்லாமலெவரையு மருட்டிவிடவகைவந்த
          வித்தையென்முத்திதருமோ
    வெதாந்தசித்தாந்த சமரசநன்னிலைபெற்ற
          வித்தகச்சித்தர்கணமே. (10)
    ---------------

    8. ஆனந்தமானபரம்.

    கொல்லாமையெத்தனை குணக்கேட்டைநீக்குமக்
          குணமொன்றுமொன்றிலேன்பாற்
    கோரமெத்தனைபக்ஷ பாதமெத்தனைவன்
          குணங்களெத்தனை கொடியபாழ்ங்
    கல்லாமையெத்தனை யகந்தையெத்தனைமனக்
          கள்ளமெத்தனையுள்ளசற்
    காரியஞ்சொல்லிடினு மறியாமையெத்தனை
          கதிக்கென்றமைத்தவருளிற்
    செல்லாமையெத்தனை விர்தாகொஷ்டியென்னிலோ
          செல்வதெத்தனைமுயற்சி
    சிந்தையெத்தனைசலன மிந்த்ரஜாலம்போன்ற
          தேகத்தில்வாஞ்சைமுதலா
    யல்லாமையெத்தனை யமைத்தனையுனக்கடிமை
          யானேனிவைக்குமாளோ
    வண்டபகிரண்டமு மடங்கவொருநிறைவாகி
          யானந்தமானபரமே. (1)
    தெருளாகமருளாகி யுழலுமனமாய்மனஞ்
          சேர்ந்துவளர்சித்தாகியச்
    சித்தெலாஞ்சூழ்ந்தசிவ சித்தாய்விசித்ரமாய்த்
          திரமாகிநானாவிதப்
    பொருளாகியப்பொருளை யறிபொறியுமாகியைம்
          புலனுமாயைம்பூதமாய்ப்
    புறமுமாயகமுமாய்த் தூரஞ்சமீபமாய்ப்
          போக்கொடுவரத்துமாகி
    யிருளாகியொளியாகி நன்மைதீமையுமாகி
          யின்றாகிநாளையாகி
    யென்றுமாயொன்றுமாய்ப் பலவுமாயாவுமா
          யிவையல்லவாயநின்னை
    யருளாகிநின்றவர்க ளறிவதல்லாலொருவ
          ரறிவதற்கெளிதாகுமோ
    யண்டபகிரண்டமு மடங்கவொருநிறைவாகி
          யானந்தமானபரமே. (2)

    மாறுபடுதர்க்கந் தொடுக்கவறிவார்சாண்
          வயிற்றின்பொருட்டதாக
    மண்டலமும்விண்டலமு மொன்றாகிமனதுழல
          மாலாகிநிற்கவறிவார்
    வேறுபடுவேடங்கள் கொள்ளவறிவாரொன்றை
          மெணமெணென்றகம்வேறதாம்
    வித்தையறிவாரெமைப் போலவேசந்தைபோன்
          மெய்ந்நூல்விரிக்கவறிவார்
    சீறுபுலிபோற்சீறி மூச்சைப்பிடித்துவிழி
          செக்கச்சிவக்கவறிவார்
    திரமென்றுதந்தம் மதத்தையேதாமதச்
          செய்கைகொடுமுளறவறிவா
    ராறுசமயங்கடொறும் வேறுவேறாகிவிளை
          யாடுமுனையாவரறிவா
    ரண்டபகிரண்டமு மடங்கவொருநிறைவாகி
          யானந்தமானபரமே. (3)

    காயிலையுதிர்ந்தகனி சருகுபுனன்மண்டிய
          கடும்பசிதனக்கடைத்துங்
    கார்வரையின்முழையிற் கருங்கல்போலசையாது
          கண்மூடிநெடிதிருந்துந்
    தீயினிடைவைகியுந் தோயமதின்மூழ்கியுந்
          தேகங்களென்பெலும்பாய்த்
    தெரியநின்றுஞ்சென்னி மயிர்கள்கூடாக்குருவி
          தெற்றவெயிலூடிருந்தும்
    வாயுவையடக்கியு மனதினையடக்கியு
          மௌனத்திலேயிருந்து
    மதிமண்டலத்திலே கனல்செல்லவமுதுண்டு
          வனமூடிருந்துமறிஞ
    ராயுமறைமுடிவான வருணாடினாரடிமை
          யகிலத்தைநாடன்முறையோ
    வண்டபகிரண்டமு மடங்கவொருநிறைவாகி
          யானந்தமானபரமே. (4)

    சுத்தமுமசுத்தமுந் துக்கசுகபேதமுந்
          தொந்தமுடனிர்த்தொந்தமும்
    ஸ்தூலமொடுசூக்ஷ்மமு மாசையுநிராசையுஞ்
          சொல்லுமொருசொல்லின்முடிவும்
    பெத்தமொடுமுத்தியும் பாவமொடபாவமும்
          பேதமொடபேதநிலையும்
    பெருமையொடுசிறுமையு மருமையுடனெளிமையும்
          பெண்ணினுடனாணுமற்று
    நித்தமுமனித்தமு மஞ்சனநிரஞ்சனமு
          நிஷ்களமுநிகழ்சகளமு
    நீதியுமனீதியு மாதியொடனாதியு
          நிர்விஷயவிஷயவடிவு
    மத்தனையுநீயலதெ ளத்தனையுமில்லையெனின்
          யாங்களுனையன்றியுண்டோ
    வண்டபகிரண்டமு மடங்கவொருநிறைவாகி
          யானந்தமானபரமே. (5)

    காராருமாணவக் காட்டைக்களைந்தறக்
          கண்டகங்காரமென்னுங்
    கல்லைப்பிளந்துநெஞ் சகமானபூமிவெளி
          காணத்திருத்திமேன்மேற்
    பாராதியறியாத மோனமாம்வித்தைப்
          பதித்தன்புநீராகவே
    பாய்ச்சியதுபயிராகு மட்டுமாமாயைவன்
          பறவையணுகாதவண்ண
    நேராகநின்றுவிளை போகம்புசித்துண்ட
          நின்னன்பர்கூட்டமெய்த
    நினைவின்படிக்குநீ முன்னின்றுகாப்பதே
          நின்னருட்பாரமென்று
    மாராறுமறியாத சூதானவெளியில்வெளி
          யாகின்றதுரியமயமே
    யண்டபகிரண்டமு மடங்கவொருநிறைவாகி
          யானந்தமானபரமே. (6)

    வானாதிபூதமா யகிலாண்டகோடியாய்
          மலையாகிவளைகடலுமாய்
    மதியாகியிரவியாய் மற்றுளவெலாமாகி
          வான்கருணைவெள்ளமாகி
    நானாகிநின்றவனு நீயாகிநின்றிடவு
          நானென்பதற்றிடாதே
    நானானெனக்குளறி நானாவிகாரியாய்
          நானறிந்தறியாமையாய்ப்
    போனாலதிட்டவலி வெல்லவெளிதோபகற்
          பொழுதுபுகுமுன்கண்மூடிப்
    பொய்த்துயில்கொள்வான்றனை யெழுப்பவசமோவினிப்
          போதிப்பதெந்தநெறியை
    யானாலுமென்கொடுமை யனியாயமனியாய
          மார்பாலெடுத்துமொழிவே
    னண்டபகிரண்டமு மடங்கவொருநிறைவாகி
          யானந்தமானபரமே. (7)

    பொய்யினேன்புலையினேன் கொலையினேனின்னருள்
          புலப்படவறிந்துநிலையாப்
    புன்மையேன்கல்லாத தன்மையேனன்மைபோற்
          பொருளலாப்பொருளைநாடும்
    வெய்யனேன்வெகுளியேன் வெறியனேன்சிறியனேன்
          வினையினேனென்றென்னைநீ
    விட்டுவிடநினைவையேற் றட்டழிவதல்லாது
          வேறுகதியேதுபுகலாய்
    துய்யனேமெய்யனே யுயிரினுக்குயிரான
          துணைவனேயிணையொன்றிலாத்
    துரியனேதுரியமுங் காணாவதீதனே
          சுருதிமுடிமீதிருந்த
    வையனேயப்பனே யெனுமறிஞரறிவைவிட்
          டகலாதகருணைவடிவே
    யண்டபகிரண்டமு மடங்கவொருநிறைவாகி
          யானந்தமானபரமே. (8)

    எத்தனைவிதங்கடான் கற்கினுங்கேட்கினுமென்
          னிதயமுமொடுங்கவில்லை
    யானெனுமகந்தைதா னெள்ளளவுமாறவிலை
          யாதினும்மபிமானமென்
    சித்தமிசைகுடிகொண்ட தீகையோடிரக்கமென்
          சென்மத்துநானறிகிலேன்
    சீலமொடுதவவிரத மொருகனவிலாயினுந்
          தரிசனங்கண்டுமறியேன்
    பொய்த்தமொழியல்லான் மருந்துக்குமெய்ம்மொழி
          புகன்றிடேன்பிறர்கேட்கவே
    போதிப்பதல்லாது சும்மாவிருந்தருள்
          பொருந்திடாப்பேதைநானே
    யத்தனைகுணக்கேடர் கண்டதாக்கேட்டதா
          வவனிமிசையுண்டோசொலா
    யண்டபகிரண்டமு மடங்கவொருநிறைவாகி
          யானந்தமானபரமே. (9)

    எக்காலமுந்தனக் கென்னவொருசெயலிலா
          வேழைநீயென்றிருந்திட்
    டெனதாவியுடல்பொருளு மெளனியாம்வந்துகை
          யேற்றுநமதென்றவன்றே
    பொய்க்காலதேசமும் பொய்ப்பொருளில்வாஞ்சையும்
          பொய்யுடலைமெய்யென்னலும்
    பொய்யுறவுபற்றலும் பொய்யாகுநானென்னல்
          பொய்யினும்பொய்யாகைபான்
    மைக்காலிருட்டனைய விருளில்லையிருவினைகள்
          வந்தேறவழியுமில்லை
    மனமில்லையம்மனத் தினமில்லைவேறுமொரு
          வரவில்லைபோக்குமில்லை
    யக்காலமிக்கால மென்பதிலையெல்லா
          மதீதமயமானதன்றோ
    வண்டபகிரண்டமு மடங்கவொருநிறைவாகி
          யானந்தமானபரமே. (10)
    --------

    9. சுகவாரி

    இன்னமுதுகனிபாகு கற்கண்டுசீனிதே
          னெனருசித்திடவலியவந்
    தின்பங்கொடுத்தநினை யெந்நேரநின்னன்ப
          ரிடையறாதுருகிநாடி
    யுன்னியகருத்தவிழ வுரைகுளறியுடலெங்கு
          மோய்ந்தயர்ந்தவசமாகி
    யுணர்வரியபேரின்ப வனுபூதியுணர்விலே
          யுணர்வார்களுள்ளபடிகாண்
    கன்னிகையொருத்திசிற் றின்பம்வேம்பென்னினுங்
          கைக்கொள்வள்பக்குவத்திற்
    கணவனருள்பெறின்முனே சொன்னவாறென்னெனக்
          கருதிநகையாவளதுபோற்
    சொன்னபடிகேட்குமிப் பேதைக்குநின்கருணை
          தோற்றிற்சுகாரம்பமாஞ்
    சுத்தநிர்க்குணமான பரதெய்வமேபரஞ்
          சோதியேசுகவாரியே. (1)

    அன்பின்வழியறியாத வென்னைத்தொடர்ந்தென்னை
          யறியாதபக்குவத்தே
    யாசைப்பெருக்கைப் பெருக்கிக்கொடுத்துநா
          னற்றேனலந்தேனென
    வென்புலமயங்கவே பித்தேற்றிவிட்டா
          யிரங்கியொருவழியாயினு
    மின்பவெளமாகவந் துள்ளங்களிக்கவே
          யெனைநீகலந்ததுண்டோ
    தன்பருவமலருக்கு மணமுண்டுவண்டுண்டு
          தண்முகைதனக்குமுண்டோ
    தமியனேற்கிவ்வணந் திருவுளமிரங்காத
          தன்மையாற்றனியிருந்து
    துன்பமுறினெங்ஙனே யழியாதநின்னன்பர்
          சுகம்வந்துவாய்க்குமுரையாய்
    சுத்தநிர்க்குணமான பரதெய்வமேபரஞ்
          சோதியேசுகவாரியே. (2)

    கல்லேனுமையவொரு காலத்திலுருகுமென்
          கன்னெஞ்சமுருகவிலையே
    கருணைக்கிணங்காத வன்மையையுநான்முகன்
          கற்பிக்கவொருகடவுளோ
    வல்லான்வகுத்ததே வாய்க்காலெனும்பெரு
          வழக்குக்கிழுக்குமுண்டோ
    வானமாய்நின்றின்ப மழையாயிரங்கியெனை
          வாழ்விப்பதுன்பரங்காண்
    பொல்லாதசேயெனிற் றாய்தள்ளனீதமோ
          புகலிடம்பிறிதுமுண்டோ
    பொய்வார்த்தைசொல்லிலோ திருவருட்கயலுமாய்ப்
          புன்மையேனாவனந்தோ
    சொல்லான்முழக்கிலோ சுகமில்லைமௌனியாய்ச்
          சும்மாவிருக்கவருளாய்
    சுத்தநிர்க்குணமான பரதெய்வமேபரஞ்
          சோதியேசுகவாரியே. (3)

    என்பெலாநெக்குடைய ரோமஞ்சிலிர்ப்பவுட
          லிளகமனதழலின்மெழுகா
    யிடையறாதுருகவரு மழைபோலிரங்கியே
          யிருவிழிகணீரிறைப்ப
    வன்பினான்மூர்ச்சித்த வன்பருக்கங்ஙனே
          யமிர்தசஞ்சீவிபோல்வந்
    தானந்தமழைபொழிவை யுள்ளன்பிலாதவெனை
          யார்க்காகவடிமைகொண்டாய்
    புன்புலான்மயிர்தோ னரம்பென்புமொய்த்திடு
          புலைக்குடிலிலருவருப்புப்
    பொய்யல்லவேயிதனை மெய்யென்றுநம்பியென்
          புந்திசெலுமோபாழிலே
    துன்பமாயலையவோ வுலகநடையையவொரு
          சொற்பனத்திலும்வேண்டிலேன்
    சுத்தநிர்க்குணமான பரதெய்வமேபரஞ்
          சோதியேசுகவாரியே. (4)

    வெந்நீர்பொறாதெனுடல் காலின்முட்டைக்ககவும்
          வெடுக்கென்றசைத்தெடுத்தால்
    விழியிமைத்தங்ஙனே தண்ணருளைநாடுவேன்
          வேறொன்றையொருவர்சொல்லி
    னந்நேரமையோவென் முகம்வாடிநிற்பதுவு
          மையநின்னருளறியுமே
    யானாலுமெத்தப் பயந்தவனியானென்னை
          யாண்டநீகைவிடாதே
    யிந்நேரமென்றிலை யுடற்சுமையதாகவு
          மெடுத்தாலிறக்கவென்றே
    யெங்கெங்குமொருதீர்வை யாயமுண்டாயினு
          மிறைஞ்சுசுகராதியான
    தொன்னீர்மையாளர்க்கு மானிடம்வகுத்தவரு
          டுணையென்றுநம்புகின்றேன்
    சுத்தநிர்க்குணமான பரதெய்வமேபரஞ்
          சோதியேசுகவாரியே. (5)

    பற்றுவனவற்றிடு நிராசையென்றொருபூமி
          பற்றிப்பிடிக்குமியோகப்
    பாங்கிற்பிராணலய மென்னுமொருபூமியிவை
          பற்றின்மனமறுமென்னவே
    கற்றையஞ்சடைமௌனி தானேகனிந்தகனி
          கனிவிக்கவந்தகனிபோற்
    கண்டதிந்நெறியெனத் திருவுளக்கனிவினொடு
          கனிவாய்திறந்துமொன்றைப்
    பெற்றவனுமல்லேன் பெறாதவனுமல்லேன்
          பெருக்கத்தவித்துளறியே
    பெண்ணீர்மையென்னவிரு கண்ணீரிறைத்துநான்
          பேய்போலிருக்கவுலகஞ்
    சுற்றிநகைசெய்யவே யுலையவிட்டாயெனிற்
          சொல்லவினிவாயுமுண்டோ
    சுத்தநிர்க்குணமான பரதெய்வமேபரஞ்
          சோதியேசுகவாரியே. (6)

    அரும்பொனேமணியே யெனன்பேயெனன்பான
          வறிவேயெனறிவிலூறு
    மானந்தவெள்ளமே யென்றென்றுபாடினே
          னாடினேனாடிநாடி
    விரும்பியேகூவினே னுலறினேனலறினேன்
          மெய்சிலிர்த்திருகைகூப்பி
    விண்மாரியெனவெனிரு கண்மாரிபெய்யவே
          வேசற்றயர்ந்தேனியா
    னிரும்புநேர்நெஞ்சகக் கள்வனானாலுமுனை
          யிடைவிட்டுநின்றதுண்டோ
    வென்றுநீயன்றுநா னுன்னடிமையல்லவோ
          யாதேனுமறியாவெறுந்
    துரும்பனேனென்னினுங் கைவிடுதனீதியோ
          தொண்டரொடுகூட்டுகண்டாய்
    சுத்தநிர்க்குணமான பரதெய்வமேபரஞ்
          சோதியேசுகவாரியே. (7)

    பாராதியண்டங்க ளத்தனையும்வைக்கின்ற
          பரவெளியினுண்மைகாட்டிப்
    பற்றுமனவெளிகாட்டி மனவெளியினிற்றோய்ந்த
          பாவியேன்பரிசுகாட்டித்
    தாராளமாய்நிற்க நிச்சிந்தைகாட்டிச்
          சதாகாலநிஷ்டையெனவே
    சகசநிலைகாட்டினை சுகாதீதநிலையந்
          தனைக்காட்டநாள்செல்லுமோ
    காராரவெண்ணரு மனந்தகோடிகணின்று
          காலூன்றிமழைபொழிதல்போற்
    கால்வீசிமின்னிப் படர்ந்துபரவெளியெலாங்
          கம்மியானந்தவெள்ளஞ்
    சோராதுபொழியவே கருணையின்முழங்கியே
          தொண்டரைக்கூவுமுகிலே
    சுத்தநிர்க்குணமான பரதெய்வமேபரஞ்
          சோதியேசுகவாரியே. (8)

    பேதித்தசமயமோ வொன்றுசொனபடியொன்று
          பேசாதுதுறவாகியே
    பேசாதபெரியோர்க ணிருவிகற்பத்தினாற்
          பேசார்கள்பரமகுருவாய்ப்
    போதிக்குமுக்கணிறை நேர்மையாய்க்கைக்கொண்டு
          போதிப்பதாச்சறிவிலே
    போக்குவரவறவின்ப நீக்கமறவசனமாப்
          போதிப்பதெவரையனே
    சாதித்தசாதனமு மியோகியர்கணமதென்று
          சங்கிப்பராதலாலே
    தன்னிலேதானா யயர்ந்துவிடுவோமெனத்
          தனியிருந்திடினங்ஙனே
    சோதிக்கமனமாயை தனையேவினாலடிமை
          சுகமாவதெப்படிசொலாய்
    சுத்தநிர்க்குணமான பரதெய்வமேபரஞ்
          சோதியேசுகவாரியே. (9)

    அண்டமுடிதன்னிலோ பகிரண்டமதனிலோ
          வலரிமண்டலநடுவிலோ
    வனனடுவிலோவமிர்த மதிநடுவிலோவன்ப
          ரகமுருகிமலர்கடூவித்
    தெண்டமிடவருமூர்த்தி நிலையிலோதிக்குத்
          திகந்தத்திலோவெளியிலோ
    திகழ்விந்துநாதநிலை தன்னிலோவேதாந்த
          சித்தாந்தநிலைதன்னிலோ
    கண்டபலபொருளிலோ காணாதநிலையெனக்
          கண்டசூனியமதனிலோ
    காலமொருமூன்றிலோ பிறவிநிலைதன்னிலோ
          கருவிகரணங்களோய்ந்த
    தொண்டர்களிடத்திலோ நீவீற்றிருப்பது
          தொழும்பனேற்குளவுபுகலாய்
    சுத்தநிர்க்குணமான பரதெய்வமேபரஞ்
          சோதியேசுகவாரியே. (10)

    எந்தநாள்கருணைக் குரித்தாகுநாளெனவு
          மென்னிதயமெனைவாட்டுதே
    யேதென்றுசொல்லுவேன் முன்னொடுபின்மலைவறவு
          மிற்றைவரையாது பெற்றேன்
    பந்தமானதிலிட்ட மெழுகாகியுள்ளம்
          பதைத்துப்பதைத்துருகவோ
    பரமசுகமாவது பொறுப்பரியதுயரமாய்ப்
          பலகாலுமூர்ச்சிப்பதோ
    சிந்தையானதுமறிவை யென்னறிவிலறிவான
          தெய்வநீயன்றியுளதோ
    தேகநிலையல்லவே யுடைகப்பல்கப்பலாய்த்
          திரையாழியூடுசெலுமோ
    சொந்தமாயாண்டநீ யறியார்கள்போலவே
          துன்பத்திலாழ்த்தன்முறையோ
    சுத்தநிர்க்குணமான பரதெய்வமேபரஞ்
          சோதியேசுகவாரியே. (11)

    எந்நாளுமுடலிலே யுயிராமுனைப்போ
          லிருக்கவிலையோமனதெனு
    மியானுமென்னட்பாம் பிராணனுமெமைச்சடம
          தென்றுனைச்சித்தென்றுமே
    யந்நாளிலெவனோ பிரித்தானதைக்கேட்ட
          வன்றுமுதலின்றுவரையு
    மநியாயமாயெமை யடைக்கிக்குறுக்கே
          யடர்ந்தரசுபண்ணியெங்கண்
    முன்னாகநீயென்ன கோட்டைகொண்டாயென்று
          மூடமனமிகவுமேச
    மூண்டெரியுமனலிட்ட மெழுகாயுளங்கருகன்
          முறைமையோபதினாயிரஞ்
    சொன்னாலுநின்னரு ளிரங்கவிலையேயினிச்
          சுகம்வருவதெப்படிசொலாய்
    சுத்தநிர்க்குணமான பரதெய்வமேபரஞ்
          சோதியேசுகவாரியே. (12)
    --------

    10. எங்குநிறைகின்றபொருள்

    அவனன்றியோரணுவு மசையாதெனும்பெரிய
          வாப்த்தர்மொழியொன்றுகண்டா
    லறிவாவதேதுசில வறியாமையேதிவை
          யறிந்தார்களறியார்களார்
    மௌனமொடிருந்ததா ரென்போலுடம்பெலாம்
          வாயாய்ப்பிதற்றுமவரார்
    மனதெனவுமொருமாயை யெங்கேயிருந்துவரும்
          வன்மையொடிரக்கமெங்கே
    புவனம்படைப்பதென் கர்த்தவியமெவ்விடம்
          பூதபேதங்களெவிடம்
    பொய்மெயிதமகிதமேல் வருநன்மைதீமையொடு
          பொறைபொறாமையுமெவ்விட
    மெவர்சிறியரெவர்பெரிய ரெவருறவரெவர்பகைஞ
          ரியாதுமுனையன்றியுண்டோ
    விகபரமிரண்டினிலு முயிரினுக்குயிராகி
          யெங்குநிறைகின்றபொருளே. (1)

    அன்னேயனேயெனுஞ் சிலசமயநின்னையே
          யையாவையாவென்னவே
    யலறிடுஞ்சிலசமய மல்லாதுபேய்போல
          வலறியேயொன்றுமிலவாய்ப்
    பின்னேதுமறியாம லொன்றைவிட்டொன்றைப்
          பிதற்றிடுஞ்சிலசமயமேற்
    பேசரியவொளியென்றும் வெளியென்றுநாதாதி
          பிறவுமேநிலயமென்றுந்
    தன்னேரிலாததோ ரணுவென்றுமூவிதத்
          தன்மையாங்காலமென்றுஞ்
    சாற்றிடுஞ்சிலசமய மிவையாகிவேறதாய்ச்
          சதாஞானவானந்தமா
    யென்னேயெனேகருணை விளையாட்டிருந்தவா
          றெம்மனோர்புகலவெளிதோ
    விகபரமிரண்டினிலு முயிரினுக்குயிராகி
          யெங்குநிறைகின்றபொருளே. (2)

    வேதமுடனாகம புராணமிதிகாசமுதல்
          வேறுமுளகலைகளெல்லா
    மிக்காகவத்துவித துவிதமார்க்கத்தையே
          விரிவாவெடுத்துரைக்கு
    மோதரியதுவிதமே யத்துவிதஞானத்தை
          யுண்டுபணுஞானமாகு
    மூகமனுபவவசன மூன்றுக்குமொவ்வுமீ
          துபயவாதிகள்சம்மத
    மாதலினெனக்கினிச் சரியையாதிகள்போது
          மியாதொன்றுபாவிக்கநா
    னதுவாதலாலுன்னை நானென்றுபாவிக்கி
          னத்துவிதமார்க்கமுறலா
    மேதுபாவித்திடினு மதுவாகிவந்தருள்செ
          யெந்தைநீகுறையுமுண்டோ
    விகபரமிரண்டினிலு முயிரினுக்குயிராகி
          யெங்குநிறைகின்றபொருளே. (3)

    சொல்லானதிற்சற்றும் வாராதபிள்ளையைத்
          தொட்டில்வைத்தாட்டியாட்டித்
    துடையினைக்கிள்ளல்போற் சங்கற்பமொன்றிற்
          றொடுக்குந்தொடுத்தழிக்கும்
    பொல்லாதவாதனை யெனுஞ்சப்தபூமியிடை
          போந்துதலைசுற்றியாடும்
    புருஷனிலடங்காத பூவைபோற்றானே
          புறம்போந்துசஞ்சரிக்குங்
    கல்லோடிரும்புக்கு மிகவன்மைகாட்டிடுங்
          காணாதுகேட்டவெல்லாங்
    கண்டதாக்காட்டியே யணுவாச்சுரிக்கிடுங்
          கபடநாடகசாலமோ
    யெல்லாமும்வலதிந்த மனமாயையேழையா
          மென்னாலடக்கவசமோ
    விகபரமிரண்டினிலு முயிரினுக்குயிராகி
          யெங்குநிறைகின்றபொருளே. (4)

    கண்ணாரநீர்மல்கி யுள்ளநெக்குருகாத
          கள்ளனேனானாலுமோ
    கைகுவித்தாடியும் பாடியும்விடாமலே
          கண்பனித்தாரைகாட்டி
    யண்ணாபரஞ்சோதி யப்பாவுனக்கடிமை
          யானெனவுமேலெழுந்த
    வன்பாகிநாடக நடித்ததோகுறைவில்லை
          யகிலமுஞ்சிறிதறியுமேற்
    றண்ணாருநின்னதரு ளறியாததல்லவே
          சற்றேனுமினிதிரங்கிச்
    சாசுவதமுத்திநிலை யீதென்றுணர்த்தியே
          சகசநிலைதந்துவேறொன்
    றெண்ணாமலுள்ளபடி சுகமாயிருக்கவே
          யேழையேற்கருள்செய்கண்டா
    யிகபரமிரண்டினிலு முயிரினுக்குயிராகி
          யெங்குநிறைகின்றபொருளே. (5)

    காகமானதுகோடி கூடுகின்றாலுமொரு
          கல்லின்முன்னெதிர்நிற்குமோ
    கர்மமானதுகோடி முன்னேசெய்தாலுநின்
          கருணைப்ரவாகவருளைத்
    தாகமாய்நாடினரை வாதிக்கவல்லதோ
          தமியனேற்கருட்டாகமோ
    சற்றுமிலையென்பதுவும் வெளியாச்சுவினையெலாஞ்
          சங்கேதமாய்க்கூடியே
    தேகமானதைமிகவும் வாட்டுதேதுன்பங்கள்
          சேராமலியோகமார்க்க
    சித்தியோவரவில்லை சகசநிஷ்டைக்குமென்
          சிந்தைக்கும்வெகுதூரநா
    னேகமாய்நின்னோ டிருக்குநாளெந்தநா
          ளிந்நாளின்முற்றுறாதோ
    விகபரமிரண்டினிலு முயிரினுக்குயிராகி
          யெங்குநிறைகின்றபொருளே. (6)

    ஒருமைமனதாகியே யல்லலறநின்னருளி
          லொருவனான்வந்திருக்கி
    னுலகம்பொறாததோ மாயாவிசித்ரமென
          வோயுமோவிடமில்லையோ
    வருளுடையநின்னன்பர் சங்கைசெய்திடுவரோ
          வலதுகிர்த்தியகர்த்தரா
    யகிலம்படைத்தெம்மை யாள்கின்றபேர்சில
          ரடாதென்பரோவகன்ற
    பெருமைபெறுபூரணங் குறையுமோபூதங்கள்
          பேய்க்கோலமாய்விதண்டை
    பேசுமோவலதுதான் பரிபாககாலம்
          பிறக்கவிலையோதொல்லையா
    மிருமைசெறிசடவினை யெதிர்த்துவாய்பேசுமோ
          வேதுளவுசிறிதுபுகலா
    யிகபரமிரண்டினிலு முயிரினுக்குயிராகி
          யெங்குநிறைகின்றபொருளே. (7)

    நில்லாதுதேகமெனு நினைவுண்டுதேகநிலை
          நின்றிடவுமௌனியாகி
    நேரேயுபாயமொன் றருளினையையோவிதனை
          நின்றனுட்டிக்கவென்றாற்
    கல்லாதமனமோ வொடுங்கியுபரதிபெறக்
          காணவிலையாகையாலே
    கையேற்றுணும்புசிப் பொவ்வாதெநாளுமுன்
          காட்சியிலிருந்துகொண்டு
    வல்லாளராயியம நியமாதிமேற்கொண்ட
          மாதவர்க்கேவல்செய்து
    மனதின்படிக்கெலாஞ் சித்திபெறலாஞானம்
          வாய்க்குமொருமனுவெனக்கிங்
    கில்லாமையொன்றினையு மில்லாமையாகவே
          யிப்போதிரங்குகண்டா
    யிகபரமிரண்டினிலு முயிரினுக்குயிராகி
          யெங்குநிறைகின்றபொருளே. (8)

    மரவுரியுடுத்துமலை வனநெற்கொறித்துமுதிர்
          வனசருகுவாயில்வந்தால்
    வன்பசிதவிர்த்துமனல் வெயிலாதிமழையால்
          வருந்தியும்மூலவனலைச்
    சிரமளவெழுப்பியு நீரினிடைமூழ்கியுந்
          தேகநமதல்லவென்று
    சிற்சுகவபேக்ஷையாய் நின்னன்பர்யோகஞ்
          செலுத்தினாரியாம்பாவியேம்
    விரவுமறுசுவையினொடு வேண்டுவபுசித்தரையில்
          வேண்டுவவெலாமுடுத்தி
    மேடைமாளிகையாதி வீட்டினிடைவைகியே
          வேறொருவருத்தமின்றி
    யிரவுபகலேழையர்கள் சையோகமாயினோ
          மெப்படிபிழைப்பதுரையா
    யிகபரமிரண்டினிலு முயிரினுக்குயிராகி
          யெங்குநிறைகின்றபொருளே. (9)

    முத்தனையமூரலும் பவளவாயின்சொலு
          முகத்திலகுபசுமஞ்சளு
    மூர்ச்சிக்கவிரகசன் னதமேற்றவிருகும்ப
          முலையின்மணிமாலைநால
    வைத்தெமைமயக்கியிரு கண்வலையைவீசியே
          மாயாவிலாசமோக
    வாரிதியிலாழ்த்திடும் பாழானசிற்றிடை
          மடந்தையர்கள்சிற்றின்பமோ
    புத்தமிர்தபோகம் புசித்துவிழியிமையாத
          பொன்னாட்டும்வந்ததென்றாற்
    போராட்டமல்லவோ பேரின்பமுத்தியிப்
          பூமியிலிருந்துகாண
    வெத்தனைவிகாதம்வரு மென்றுசுகர்சென்றநெறி
          யிவ்வுலகமறியாததோ
    விகபரமிரண்டினிலு முயிரினுக்குயிராகி
          யெங்குநிறைகின்றபொருளே. (10)

    உன்னிலையுமென்னிலையு மொருநிலையெனக்கிடந்
          துளறிடுமவத்தையாகி
    யுறவுதான்காட்டாத வாணவமுமொளிகண்
          டொளிக்கின்றவிருளென்னவே
    தன்னிலைமைகாட்டா தொருங்கவிருவினையினாற்
          றாவுசுகதுக்கவேலை
    தட்டழியமுற்றுமில் லாமாயையதனாற்
          றடித்தகிலபேதமான
    முன்னிலையொழிந்திட வகண்டிதாகாரமாய்
          மூதறிவுமேலுதிப்ப
    முன்பினொடுகீழ்மே னடுப்பக்கமென்னாமன்
          முற்றுமானந்தநிறைவே
    யென்னிலைமையாய்நிற்க வியல்புகூரருள்வடிவ
          மெந்நாளும்வாழிவாழி
    யிகபரமிரண்டினிலு முயிரினுக்குயிராகி
          யெங்குநிறைகின்றபொருளே. (10)
    --------

    11. சச்சிதானந்தசிவம்

    பாரரதிககனப் பரப்புமுண்டோவென்று
          படர்வெளியதாகியெழுநாப்
    பரிதிமதிகாணாச் சுயஞ்சோதியாயண்ட
          பகிரண்டவுயிரெவைக்கு
    நேராகவறிவா ய்கண்டமாயேகமாய்
          நித்தமாய்நிர்த்தொந்தமாய்
    நிர்க்குணவிலாசமாய் வாக்குமனமணுகாத
          நிர்மலானந்தமயமாய்ப்
    பேராதுநிற்றிநீ சும்மாவிருந்துதான்
          பேரின்பமெய்திடாமற்
    பேய்மனதையண்டியே தாயிலாப்பிள்ளைபோற்
          பித்தாகவோமனதைநான்
    சாராதபடியறிவி னிருவிகற்பாங்கமாஞ்
          சாசுவதநிஷ்டையருளாய்
    சர்வபரிபூரண வகண்டதத்துவமான
          சச்சிதானந்தசிவமே. (1)

    குடக்கொடுகுணக்காதி திக்கினையுழக்கூடு
          கொள்ளல்போலைந்துபூதங்
    கூடுஞ்சுருங்கிலைச் சாலேகமொன்பது
          குலாவுநடைமனையைநாறும்
    வடக்கயிறுவெண்ணரம் பாவென்புதசையினான்
          மதவேள்விழாநடத்த
    வைக்கின்றகைத்தேரை வெண்ணீர்செநீர்கணிர்
          மலநீர்புணீரிறைக்கும்
    விடக்குத்துருத்தியைக் கருமருந்துக்கூட்டை
          வெட்டவெட்டத்தளிர்க்கும்
    வேட்கைமரமுறுகின்ற சுடுகாட்டைமுடிவிலே
          மெய்போலிருந்துபொய்யாஞ்
    சடக்கைச்சடக்கெனச் சதமென்றுசின்மயந்
          தானாகிநிற்பதென்றோ
    சர்வபரிபூரண வகண்டதத்துவமான
          சச்சிதானந்தசிவமே. (2)

    பாகத்தினாற்கவிதை பாடிப்படிக்கவோ
          பத்திநெறியில்லைவேத
    பாராயணப்பனுவன் மூவர்செய்பனுவலது
          பகரவோவிசையுமில்லை
    யோகத்திலேசிறிது முயலவென்றாற்றேக
          மொவ்வாதிவூண்வெறுத்தா
    லுயிர்வெறுத்திடலொக்கு மல்லாதுகிரியைக
          ளுபாயத்தினாற்செய்யவோ
    மோகத்திலேசிறிது மொழியவிலைமெய்ஞ்ஞான
          மோனத்தினிற்கவென்றான்
    முற்றாதுபரிபாக சத்திகளனேகநின்
          மூதறிவிலேயெழுந்த
    தாகத்திலேவாய்க்கு மமிர்தப்ரவாகமே
          தன்னந்தனிப்பெருமையே
    சர்வபரிபூரண வகண்டதத்துவமான
          சச்சிதானந்தசிவமே. (3)

    இமையளவுபோதையொரு கற்பகாலம்பண்ணு
          மிவ்வுலகமெவ்வுலகமோ
    வென்றெண்ணம்வருவிக்கு மாதர்சிற்றின்பமோ
          வென்னின்மகமேருவாக்கிச்
    சுமையெடுமினென்றுதான் சும்மாடுமாயெமைச்
          சுமையாளுமாக்கிநாளுந்
    துர்ப்புத்திபண்ணியுள நற்புத்தியாவையுஞ்
          சூறையிட்டிந்த்ரஜால
    மமையவொருகூத்துஞ் சமைந்தாடுமனமாயை
          யம்மம்மவெல்லலெளிதோ
    வருள்பெற்றபேர்க்கெலா மொளிபெற்றுநிற்குமீ
          தருளோவலாதுமருளோ
    சமையநெறிகாணாத சாக்ஷிநீசூக்ஷ்மமாத்
          தமியனேற்குளவுபுகலாய்
    சர்வபரிபூரண வகண்டதத்துவமான       சச்சிதானந்தசிவமே. (4)

    இனியேதெமக்குனருள் வருமோவெனக்கருதி
          யேங்குதேநெஞ்சமையோ
    வின்றைக்கிருந்தாரை நாளைக்கிருப்பாரென்
          றெண்ணவோதிடமில்லையே
    யனியாயமாயிந்த வுடலைநானென்றுவரு
          மந்தகற்காளாகவோ
    வாடித்திரிந்துநான் கற்றதுங்கேட்டது
          மவலமாய்ப்போதனன்றோ
    கனியேனும்வறியசெங் காயேனுமுதிர்சருகு
          கந்தமூலங்களேனுங்
    கனல்வாதைவந்தெய்தி னள்ளிப்புசித்துநான்
          கண்மூடிமௌனியாகித்
    தனியேயிருப்பதற் கெண்ணினேனெண்ணமிது
          சாமிநீயறியாததோ
    சர்வபரிபூரண வகண்டதத்துவமான
          சச்சிதானந்தசிவமே. (5)

    மத்தமதகரிமுகிற் குலமென்னநின்றிலகு
          வாயிலுடன்மதியகடுதோய்
    மாடகூடச்சிகர மொய்த்தசந்திரகாந்த
          மணிமேடையுச்சிமீது
    முத்தமிழ்முழக்கமுடன் முத்தநகையார்களொடு
          முத்துமுத்தாய்க்குலாவி
    மோகத்திருந்துமென் யோகத்தினிலைநின்று
          மூச்சைப்பிடித்தடைத்துக்
    கைத்தலநகப்படை விரித்தபுலிசிங்கமொடு
          கரடிநுழைநூழைகொண்ட
    கானமலையுச்சியிற் குகையூடிருந்துமென்
          கரதலாமலகமென்னச்
    சத்தமறமோனநிலை பெற்றவர்களுய்வர்காண்
          சனகாதிதுணிவிதன்றோ
    சர்வபரிபூரண வகண்டதத்துவமான
          சச்சிதானந்தசிவமே. (6)

    கைத்தலம்விளங்குமொரு நெல்லியங்கனியெனக்
          கண்டவேதாகமத்தின்
    காட்சிபுருஷார்த்தமதின் மாட்சிபெறுமுத்தியது
          கருதினனுமானமாதி
    யுத்திபலவாநிரு விகற்பமேலில்லையா
          லொன்றோடிரண்டென்னவோ
    வுரையுமிலைநீயுமிலை நானுமிலையென்பது
          முபாயநீயுண்டுநானுஞ்
    சித்தமுளனானில்லை யெனும்வசனநீயறிவை
          தெரியார்கடெரியவசமோ
    செப்புகேவலநீதி யொப்புவமையல்லவே
          சின்முத்திராங்கமரபிற்
    சத்தமறவெனையாண்ட குருமௌனிகையினாற்
          றமியனேற்குதவுபொருளே
    சர்வபரிபூரண வகண்டதத்துவமான
          சச்சிதானந்தசிவமே. (7)

    காயாதமரமீது கல்லேறுசெல்லுமோ
          கடவுணீயாங்களடியேங்
    கர்மபந்தத்தினாற் சன்மபந்தம்பெறக்
          கற்பித்ததுன்னதருளே
    வாயாரவுண்டபேர் வாழ்த்துவதுநொந்தபேர்
          வைவதுவுமெங்களுலக
    வாய்பாடுநிற்கநின் வைதிகவொழுங்குநினை
          வாழ்த்தினாற்பெறுபேறுதா
    னோயாதுபெறுவரென முறையிட்டதாற்பின்ன
          ருளறுவதுகருமமன்றா
    முபயநெறியீதென்னி னுசிதநெறியெந்தநெறி
          யுலகிலேபிழைபொறுக்குந்
    தாயானகருணையு முனக்குண்டெனக்கினிச்
          சஞ்சலங்கெடவருள்செய்வாய்
    சர்வபரிபூரண வகண்டதத்துவமான
          சச்சிதானந்தசிவமே. (8)

    இன்னம்பிறப்பதற் கிடமென்னினிவ்வுடல
          மிறவாதிருப்பமூலத்
    தெழுமங்கியமிர்தொழுகு மதிமண்டலத்திலுற
          வென்னம்மைகுண்டலினிபாற்
    பின்னம்பிறக்காது சேயெனவளர்த்திடப்
          பேயேனைநல்கவேண்டும்
    பிறவாதநெறியெனக் குண்டென்னீனிம்மையே
          பேசுகர்ப்பூரதீப
    மின்னும்படிக்ககண் டாகாரவன்னைபால்
          வினையேனையொப்புவித்து
    வீட்டுநெறிகூட்டிடுதன் மிகவுநன்றிவையன்றி
          விவகாரமுண்டென்னிலோ
    தன்னந்தனிச்சிறிய னாற்றிலேன்போற்றிவளர்
          சன்மார்க்கமுத்திமுதலே
    சர்வபரிபூரண வகண்டதத்துவமான
          சச்சிதானந்தசிவமே. (9)

    வேதாவையிவ்வணம் விதித்ததேதென்னினுன்
          வினைப்பகுதியென்பனந்த
    வினைபேசவறியாது நிற்கவிவைமனதால்
          விளைந்ததான்மனதைநாடிற்
    போதமேநிற்குமப் போதத்தைநாடிலோ
          போதமுநினால்விளக்கம்
    பொய்யன்றுதெய்வமறை யாவுமேநீயென்று
          போக்குவரவறநிகழ்த்து
    மாதாரவாதேய முழுதுநீயாதலா
          லகிலமீதென்னையாட்டி
    யாடல்கண்டவனுநீ யாடுகின்றவனுநீ
          யருளுநீமௌனஞான
    தாதாவுநீபெற்ற தாய்தந்தைதாமுநீ
          தமருநீயாவுநீகாண்
    சர்வபரிபூரண வகண்டதத்துவமான
          சச்சிதானந்தசிவமே. (10)

    கொந்தவிழ்மலர்ச்சோலை நன்னீழல்வைகினுங்
          குளிர்தீம்புனற்கையள்ளிக்
    கொள்ளுகினுமந்நீ ரிடைத்திளைத்தாடினுங்
          குளிர்சந்தவாடைமடவார்
    வந்துலவுகின்றதென முன்றிலிடையுலவவே
          வசதிபெறுபோதும்வெள்ளை
    வட்டமதிபட்டப் பகற்போலநிலவுதர
          மகிழ்போதும்வேலையமுதம்
    விந்தைபெறவறுசுவையில் வந்ததெனவமுதுண்ணும்
          வேளையிலுமாலைகந்தம்
    வெள்ளிலையடைக்காய் விரும்பிவேண்டியவண்ணம்
          விளையாடிவிழிதுயிலினுஞ்
    சந்ததமுநின்னருளை மறவாவரந்தந்து
          தமியேனைரக்ஷைபுரிவாய்
    சர்வபரிபூரண வகண்டதத்துவமான
          சச்சிதானந்தசிவமே. (11)
    ------------

    12. தேசோமயானந்தம்

    மருமலர்ச்சோலைசெறி நன்னீழன்மலையாதி
          மன்னுமுனிவர்க்கேவலாய்
    மந்த்ரமாலிகைசொல்லு மியமநியமாதியா
          மார்க்கத்தினின்றுகொண்டு
    கருமருவுகாயத்தை நிர்மலமதாகவே
          கமலாசனாதிசேர்த்துக்
    காலைப்பிடித்தனலை யம்மைகுண்டலியடிக்
          கலைமதியினூடுதாக்கி
    யுருகிவருமமிர்தத்தை யுண்டுண்டுறங்காம
          லுணர்வானவிழியைநாடி
    யொன்றோடிரண்டெனாச் சமரசசொரூபசுக
          முற்றிடவென்மனதின்வண்ணந்
    திருவருண்முடிக்கவித் தேகமொடுகாண்பனோ
          தேடரியசத்தாகியென்
    சித்தமிசைகுடிகொண்ட வறிவானதெய்வமே
          தேசோமயானந்தமே. (1)

    இப்பிறவியென்னுமொ ரிருட்கடலின்மூழ்கிநா
          னென்னுமொருமகரவாய்பட்
    டிருவினையெனுந்திரையி னெற்றுண்டுபுற்புத
          மெனக்கொங்கைவரிசைகாட்டுந்
    துப்பிதழ்மடந்தையர் மயற்சண்டமாருதச்
          சுழல்வந்துவந்தடிப்பச்
    சோராதவாசையாங் கானாறுவானதி
          சுரந்ததெனமேலுமார்ப்பக்
    கைப்பரிசுகாரர்போ லறிவானவங்கமுங்
          கைவிட்டுமதிமயங்கிக்
    கள்ளவங்கக்காலர் வருவரென்றஞ்சியே
          கண்ணருவிகாட்டுமெளியேன்
    செப்பரியமுத்தியாங் கரைசேரவுங்கருணை
          செய்வையோசத்தாகியென்
    சித்தமிசைகுடிகொண்ட வறிவானதெய்வமே
          தேசோமயானந்தமே. (2)

    தாய்தந்தைதமர்தார மகவென்னுமிவையெலாஞ்
          சந்தையிற்கூட்டமிதிலோ
    சந்தேகமில்லைமணி மாடமாளிகைமேடை
          சதுரங்கசேனையுடனே
    வந்ததோர்வாழ்வுமோ ரிந்த்ரசாலக்கோலம்
          வஞ்சனைபொறாமைலோபம்
    வைத்தமனமாங்கிருமி சேர்ந்தமலபாண்டமோ
          வாஞ்சனையிலாதகனவே
    யெந்தநாளுஞ்சரி யெனத்தேர்ந்துதேர்ந்துமே
          யிரவுபகலில்லாவிடத்
    தேகமாய்நின்றநின் னருள்வெள்ளமீதிலே
          யானென்பதறவுமூழ்கிச்
    சிந்தைதான்றெளியாது சுழலும்வகையென்கொலோ
          தேடரியசத்தாகியென்
    சித்தமிசைகுடிகொண்ட வறிவானதெய்வமே
          தேசோமயானந்தமே. (3)

    ஆடாமலோய்ந்திட்ட பம்பரம்போல்விசை
          யடங்கிமனம்வீழநேரே
    யறியாமையாகின்ற விருளகலவிருளொளியு
          மல்லாதிருந்தவெளிபோற்
    கோடாதெனைக்கண் டெனக்குணிறைசாந்தவெளி
          கூடியின்பாதீதமுங்
    கூடினேனோசரியை கிரியையின்முயன்றுநெறி
          கூடினேனோவல்லனியா
    னீடாகவேயாறு வீட்டினினிரம்பியே
          யிலகிவளர்பிராணனென்னு
    மிருநிதியினைக்கட்டி யோகபரனாகாம
          லேழைக்குடும்பனாகித்
    தேடாதழிக்கவொரு மதிவந்ததென்கொலோ
          தேடரியசத்தாகியென்
    சித்தமிசைகுடிகொண்ட வறிவானதெய்வமே
          தேசோமயானந்தமே. (4)

    பாடாதுபாடிப் படித்தளவில்சமயமும்
          பஞ்சுபடுசொல்லனிவனைப்
    பார்மினோபார்மினோ வென்றுசபைகூடவும்
          பரமார்த்தமிதுவென்னவே
    யாடாதுமாடிநெஞ் சுருகிநெக்காடவே
          யமலமேயேகமேயெம்
    மாதியேசோதியே யெங்குநிறைகடவுளே
          யரசேயெனக்கூவிநான்
    வாடாதுவாடுமென் முகவாட்டமுங்கண்டு
          வாடாவெனக்கருணைநீ
    வைத்திடாவண்ணமே சங்கேதமாவிந்த
          வன்மையைவளர்ப்பித்ததார்
    தேடாதுதேடுவோர் தேட்டற்றதேட்டமே
          தேடரியசத்தாகியென்
    சித்தமிசைகுடிகொண்ட வறிவானதெய்வமே
          தேசோமயானந்தமே. (5)

    பிறியாததண்ணருட் சிவஞானியாய்வந்து
          பேசரியவாசியாலே
    பேரின்பவுண்மையை யளித்தனையென்மனதறப்
          பேரம்பலக்கடவுளா
    யறிவாயிருந்திடு நாதவொலிகாட்டியே
          யமிர்தப்ரவாகசித்தி
    யருளினையலாதுதிரு வம்பலமுமாகியெனை
          யாண்டனைபினெய்திநெறியாய்க்
    குறிதானளித்தனைநன் மரவுரிகொளந்தணக்
          கோலமாயசபாநலங்
    கூறினபின்மௌனியாய்ச் சும்மாவிருக்கநெறி
          கூட்டினையெலாமிருக்கச்
    சிறியேன்மயங்கிமிக வறிவின்மையாவனோ
          தேடரியசத்தாகியென்
    சித்தமிசைகுடிகொண்ட வறிவானதெய்வமே
          தேசோமயானந்தமே. (6)

    ஆராரெனக்கென்ன போதித்துமென்னவென்
          னறிவினைமயக்கவசமோ
    வண்டகோடியையெலாங் கருப்பவறைபோலவு
          மடுக்கடுக்காவமைத்துப்
    பேராமனின்றபர வெளியிலேமனவெளி
          பிறங்குவதலாதொன்றினும்
    பின்னமுறமருவாது நன்னயத்தாலினிப்
          பேரின்பமுத்திநிலையுந்
    தாராதுதள்ளவும் போகாதுனாலது
          தள்ளினும்போகேனியான்
    றடையேதுமில்லையாண் டவனடிமையென்னுமிரு
          தன்மையிலுமென்வழக்குத்
    தீராதுவிடுவதிலை நடுவானகடவுளே
          தேடரியசத்தாகியென்
    சித்தமிசைகுடிகொண்ட வறிவானதெய்வமே
          தேசோமயானந்தமே. (7)

    கந்துகமதக்கரியை வசமாநடத்தலாங்
          கரடிவெம்புலிவாயையுங்
    கட்டலாமொருசிங்க முதுகின்மேற்கொள்ளலாங்
          கட்செவியெடுத்தாட்டலாம்
    வெந்தழலினிரதம்வைத் தைந்துலோகத்தையும்
          வேதித்துவிற்றுண்ணலாம்
    வேறொருவர்காணாம லுலகத்துலாவலாம்
          விண்ணவரையேவல்கொளலாஞ்
    சந்ததமுமிளமையொ டிருக்கலாமற்றொரு
          சரீரத்தினும்புகுதலாஞ்
    சலமேனடக்கலாங் கனன்மேலிருக்கலாந்
          தன்னிகரில்சித்திபெறலாஞ்
    சிந்தையையடக்கியே சும்மாவிருக்கின்ற
          திறமரிதுசத்தாகியென்
    சித்தமிசைகுடிகொண்ட வறிவானதெய்வமே
          தேசோமயானந்தமே. (8)

    எல்லாமறிந்தவரு மேதுமறியாதவரு
          மில்லையெனுமிவ்வுலகமீ
    தேதுமறியாதவ னெனப்பெயர்தரித்துமிக
          வேழைக்குளேழையாகிக்
    கல்லாதவறிவிற் கடைப்பட்டநானன்று
          கையினாலுண்மைஞானங்
    கற்பித்தநின்னருளி னுக்கென்னகைம்மாறு
          காட்டுவேன்குற்றேவனா
    னல்லார்ந்தமேனியொடு குண்டுகட்பிறையெயிற்
          றாபாசவடிவமான
    வந்தகாநீயொரு பகட்டாற்பகட்டுவ
          தடாதடாகாசுநம்பாற்
    செல்லாதடாவென்று பேசவாயதுதந்த
          செல்வமேசத்தாகியென்
    சித்தமிசைகுடிகொண்ட வறிவானதெய்வமே
          தேசோமயானந்தமே. (9)

    மின்போலு மிடையொடியு மொடியுமென மொழிதல்
          போன் மென்சிலம்பொலிகளார்ப்ப
    வீங்கிப்புடைத்துவிழு சுமையன்னகொங்கைமட
          மின்னார்கள்பின்னேவலா
    லென்போலலைந்தவர்கள் கற்றார்கள்கல்லார்க
          ளிருவர்களிலொருவருண்டோ
    வென்செய்கேனம்மம்ம வென்பாவமென்கொடுமை
          யேதென்றெடுத்துமொழிவே
    னன்பால்வியந்துருகி யடியற்றமரமென்ன
          வடியிலேவீழ்ந்துவீழ்ந்தெம்
    மடிகளேயுமதடிமை யாங்களெனுநால்வருக்
          கறமாதிபொருளுரைப்பத்
    தென்பாலின்முகமாகி வடவாலிருக்கின்ற
          செல்வமேசத்தாகியென்
    சித்தமிசைகுடிகொண்ட வறிவானதெய்வமே
          தேசோமயானந்தமே. (10)

    புத்தமிர்தபோகமுங் கற்பகநனீழலிற்
          பொலிவுறவிருக்குமியல்பும்
    பொன்னுலகிலயிரா வதத்தேறுவரிசையும்
          பூமண்டலாதிக்கமு
    மத்தவெறியினர்வேண்டு மாலென்றுதள்ளவுமெ
          மாலுமொருசுட்டுமறவே
    வைக்கின்றவைப்பாளன் மௌனதேசிகனென்ன
          வந்தநின்னருள்வாழிகாண்
    சுத்தபரிபூரண வகண்டமேயேகமே
          சுருதிமுடிவானபொருளே
    சொல்லரியவுயிரினிடை யங்கங்குநின்றருள்
          சுரந்துபொழிகருணைமுகிலே
    சித்திநிலைமுத்திநிலை விளைகின்றபூமியே
          தேடரியசத்தாகியென்
    சித்தமிசைகுடிகொண்ட வறிவானதெய்வமே
          தேசோமயானந்தமே. (11)
    ------------

    13. சிற்சுகோதயவிலாசம்

    காகமோடுகழு கலகைநாய்நரிகள்
          சுற்றுசோறிடுதுருத்தியைக்
    காலிரண்டுநவ வாசல்பெற்றுவளர்
          காமவேணடனசாலையை
    மோகவாசைமுறி யிட்டபெட்டியைமு
          மலமிகுந்தொழுகுகேணியை
    மொய்த்துவெங்கிருமி தத்துகும்பியை
          முடங்கலார்கிடைசரக்கினை
    மாகவிந்த்ரதனு மின்னையொத்திலக
          வேதமோதியகுலாலனார்
    வனையவெய்யதடி காரனானயமன்
          வந்தடிக்குமொருமட்கலத்
    தேகமானபொயை மெய்யெனக்கருதி
          யையவையமிசைவாடவோ
    தெரிவதற்கரிய பிரமமேயமல
          சிற்சுகோதயவிலாசமே. (1)

    குறிகளோடுகுண மேதுமின்றியன
          லொழுகநின்றிடுமிரும்பனற்
    கூடலின்றியது வாயிருந்தபடி
          கொடியவாணவவறைக்குள்ளே
    யறிவதேதுமற வறிவிலாமைமய
          மாயிருக்குமெனையருளினா
    லளவிலாததனு கரணமாதியை
          யளித்தபோதுனையறிந்துநான்
    பிறிவிலாதவண நின்றிடாதபடி
          பலநிறங்கவருமுமலமாய்ப்
    பெரியமாயையி லழுந்திநின்னது
          ப்ரசாதநல்லருண்மறந்திடுஞ்
    சிறியனேனுமுனை வந்தணைந்துசுக
          மாயிருப்பதினியென்றுகாண்
    டெரிவதற்கரிய பிரமமேயமல
          சிற்சுகோதயவிலாசமே. (2)

    ஐந்துபூதமொரு கானனீரென
          வடங்கவந்தபெருவானமே
    யாதியந்தநடு வேதுமின்றியரு
          ளாய்நிறைந்திலகுசோதியே
    தொந்தரூபமுட னரூபமாதிகுறி
          குணமிறந்துவளர்வஸ்துவே
    துரியமேதுரிய வுயிரினுக்குணர்வு
          தோன்றநின்றருள்சுபாவமே
    யெந்தநாளுநடு வாகிநின்றொளிரு
          மாதியேகருணைநீதியே
    யெந்தையேயென விடைந்திடைந்துருகு
          மெளியனேன்கவலைதீரவுஞ்
    சிந்தையானதை யறிந்துநீயுனருள்
          செய்யநானுமினியுய்வனோ
    தெரிவதற்கரிய பிரமமேயமல
          சிற்சுகோதயவிலாசமே. (3)

    ஐவரென்றபுல வேடர்கொட்டம
          தடங்கமர்க்கடவன்முட்டியா
    யடவிநின்றுமலை யருகினின்றுசரு
          காதிதின்றுபனிவெயிலினான்
    மெய்வருந்துதவ மில்லைநற்சரியை
          கிரியையோகமெனுமூன்றதாய்
    மேவுகின்றசவு பானநன்னெறி
          விரும்பவில்லையுலகத்திலே
    பொய்முடங்குதொழில் யாததற்குநல
          சாரதித்தொழினடத்திடும்
    புத்தியூகமறி வற்றமூகமிவை
          பொருளெனக்கருதுமருளனியான்
    றெய்வநல்லருள் படைத்தவன்பரொடு
          சேரவுங்கருணைகூர்வையோ
    தெரிவதற்கரிய பிரமமேயமல
          சிற்சுகோதயவிலாசமே. (4)

    ஏகமானவுரு வானநீயருளி
          னாலனேகவுருவாகியே
    யெந்தநாளகில கோடிசிர்ஷ்டிசெய
          விசையுநாள்வரையநாண்முத
    லாகநாளது வரைக்குமுன்னடிமை
          கூடவேசனனமானதோ
    வனந்தமுண்டுநல சனனமீதிதனு
          ளறியவேண்டுவனவறியலா
    மோகமாதிதரு பாசமானதை
          யறிந்துவிட்டுனையுமெனையுமே
    முழுதுணர்ந்துபர மானவின்பவௌ
          மூழ்கவேண்டுமிதுவின்றியே
    தேகமேநழுவி நானுமோநழுவின்
          பின்னையுய்யும்வகையுள்ளதோ
    தெரிவதற்கரிய பிரமமேயமல
          சிற்சுகோதயவிலாசமே. (5)

    நியமலக்ஷணமு மியமலக்ஷணமு
          மாசனாதிவிதபேதமு
    நெடிதுணர்ந்திதய பத்மபீடமிசை
          நின்றிலங்குமசபானலத்
    தியலறிந்துவளர் மூலகுண்டலியை
          யினிதிறைஞ்சியவளருளினா
    லெல்லையற்றுவளர் சோதிமூலவன
          லெங்கண்மோனமனுமுறையிலே
    வயமிகுந்துவரு மமிர்தமண்டல
          மதிக்குளேமதியைவைத்துநான்
    வாய்மடுத்தமிர்த வாரியைப்பருகி
          மன்னுமாரமிர்தவடிவமாய்ச்
    செயமிகுந்துவரு சித்தயோகநிலை
          பெற்றுஞானநெறியடைவனோ
    தெரிவதற்கரிய பிரமமேயமல
          சிற்சுகோதயவிலாசமே. (6)

    எறிதிரைக்கட னிகர்த்தசெல்வமிக
          வல்லலென்றொருவர்பின்செலா
    தில்லையென்னுமுரை பேசிடாதுலகி
          லெவருமாமெனமதிக்கவே
    நெறியின்வைகிவளர் செல்வமும்முதவி
          நோய்களற்றசுகவாழ்க்கையாய்
    நியமமாதிநிலை நின்றுஞானநெறி
          நிஷ்டைகூடவுமெந்நாளுமே
    யறிவினின்றுகுரு வாயுணர்த்தியது
          மன்றிமோனகுருவாகியே
    யகிலமீதுவர வந்தசீரருளை
          யையவையவினியென்சொல்கேன்
    சிறியனேழைநம தடிமையென்றுனது
          திருவுளத்தினிலிருந்ததோ
    தெரிவதற்கரிய பிரமமேயமல
          சிற்சுகோதயவிலாசமே. (7)

    எவ்வுயிர்த்திரளு முலகிலென்னுயி
          ரெனக்குழைந்துருகிநன்மையா
    யிதமுரைப்பவென தென்றயாவையு
          மெடுத்தெறிந்துமதயானைபோற்
    கவ்வையற்றநடை பயிலவன்பரடி
          கண்டதேவருளின்வடிவமாக்
    கண்டயாவையு மகண்டமென்னவிரு
          கைகுவித்துமலர்தூவியே
    பவ்வவெண்டிரை கொடுத்ததண்டரளம்
          விழியுதிர்ப்பமொழிகுளறியே
    பாடியாடியு ளுடைந்துடைந்தெழுது
          பாவையொத்தசைதலின்றியே
    திவ்யவன்புருவ மாகியன்பரொடு
          மின்பவீட்டினிலிருப்பனோ
    தெரிவதற்கரிய பிரமமேயமல
          சிற்சுகோதயவிலாசமே. (8)

    மத்தர்பேயரொடு பாலர்தன்மையது
          மருவியேதுரியவடிவமாய்
    மன்னுதேசமொடு காலமாதியை
          மறந்துநின்னடியரடியிலே
    பத்தியாய்நெடிது நம்புமென்னையொரு
          மையறந்தகிலமாயையைப் பாருபாரென நடத்தவந்ததென
          பாரதத்தினுமிதுள்ளதோ
    சுத்தநித்தவியல் பாகுமோவுனது
          விசுவமாயைநடுவாகவே
    சொல்லவேணும்வகை நல்லகாதிகதை
          சொல்லுமாயையினுமில்லையென்
    சித்தமிப்படி மயங்குமோவருளை
          நம்பினோர்கள்பெறுபேறிதோ
    தெரிவதற்கரிய பிரமமேயமல
          சிற்சுகோதயவிலாசமே. (9)

    பன்முகச்சமய நெறிபடைத்தவரு
          மியாங்களேகடவுளென்றிடும்
    பாதகத்தவரும் வாததர்க்கமிடு
          படிறருந்தலைவணங்கிடத்
    தன்முகத்திலுயிர் வரவழைக்குமெம
          தருமனும்பகடுமேய்க்கியாய்த்
    தனியிருப்பவட நீழலூடுவளர்
          சனகனாதிமுனிவோர்கடஞ்
    சொன்மயக்கமது தீரவங்கைகொடு
          மோனஞானமதுணர்த்தியே
    சுத்தநித்தவரு ளியல்பதாகவுள
          சோமசேகரகிர்பானுவாய்த்
    தென்முகத்தின்முக மாயிருந்தகொலு
          வெம்முகத்தினும்வணங்குவேன்
    றெரிவதற்கரிய பிரமமேயமல
          சிற்சுகோதயவிலாசமே. (10)
    ------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை III