Tiruppukaḻ III
சைவ சமய நூல்கள்
Back
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
பாடல்கள் ( 671- 1000 )
பாடல் 671 ( விரிஞ்சிபுரம் )
ராகம் - .....; தாளம் - ..........தனன தனதனத் தனன தனதனத்
தனன தனதனத் தனன தனதனத்
தனன தனதனத் தனன தனதனத் ...... தனதானா
பரவி யுனது பொற் கரமு முகமுமுத்
தணியு முரமுமெய்ப் ப்ரபையு மருமலர்ப்
பதமும் விரவுகுக் குடமு மயிலுமுட் ...... பரிவாலே
படிய மனதில்வைத் துறுதி சிவமிகுத்
தெவரு மகிழ்வுறத் தரும நெறியின்மெய்ப்
பசியில் வருமவர்க் கசன மொருபிடிப் ...... படையாதே
சருவி யினியநட் புறவு சொலிமுதற்
பழகு மவரெனப் பதறி யருகினிற்
சரச விதமளித் துரிய பொருள்பறித் ...... திடுமானார்
தமது மருகமதக் களப புளகிதச்
சயில நிகர்தனத் திணையின் மகிழ்வுறத்
தழுவி யவசமுற் றுருகி மருளெனத் ...... திரிவேனோ
கரிய நிறமுடைக் கொடிய அசுரரைக்
கெருவ மதமொழித் துடல்கள் துணிபடக்
கழுகு பசிகெடக் கடுகி அயில்விடுத் ...... திடுதீரா
கமல அயனுமச் சுதனும் வருணனக்
கினியு நமனுக் கரியு லுறையுமெய்க்
கணனு மமரரத் தனையு நிலைபெறப் ...... புரிவோனே
இரையு முததியிற் கடுவை மிடறமைத்
துழுவை யதளுடுத் தரவு பணிதரித்
திலகு பெறநடிப் பவர்மு னருளுமுத் ...... தமவேளே
இசையு மருமறைப் பொருள்கள் தினமுரைத்
தவனி தனி லெழிற் கரும முனிவருக்
கினிய கரபுரப் பதியி லறுமுகப் ...... பெருமாளே.
பாடல் 672 ( விரிஞ்சிபுரம் )
ராகம் - மோஹனம் .தாளம் - திஸ்ர த்ருவம் - திஸ்ரநடை (10 1/2)
(எடுப்பு - /3/3/3 0)
தனன தந்த தான தனன தந்த தான
தனன தந்த தான ...... தனதான
மருவு மஞ்சு பூத முரிமை வந்தி டாது
மலமி தென்று போட ...... அறியாது
மயல்கொ ளிந்த வாழ்வு அமையு மெந்த நாளும்
வகையில் வந்தி ராத ...... அடியேனும்
உ ருகி யன்பி னோடு உ னைநி னைந்து நாளும்
உ லக மென்று பேச ......அறியாத
உ ருவ மொன்றி லாத பருவம் வந்து சேர
உ பய துங்க பாத ...... மருள்வாயே
அரிவி ரிஞ்சர் தேட அரிய தம்பி ரானும்
அடிப ணிந்து பேசி ...... கடையூடே
அருளு கென்ற போது பொருளி தென்று காண
அருளு மைந்த ஆதி ...... குருநாதா
திரியு மும்பர் நீடு கிரிபி ளந்து சூரர்
செருவ டங்க வேலை ...... விடுவோனே
செயல மைந்த வேத தொனிமு ழங்கு வீதி
திருவி ரிஞ்சை மேவு ...... பெருமாளே.
பாடல் 673 ( திருவாலங்காடு )
ராகம் - ...; தாளம் - தனதானந் தானன தானன
தனதானந் தானன தானன
தனதானந் தானன தானன ...... தனதான
கனவாலங் கூர்விழி மாதர்கள்
மனசாலஞ் சால்பழி காரிகள்
கனபோகம் போருக மாமிணை ...... முலைமீதே
கசிவாருங் கீறுகி ளாலுறு
வசைகாணுங் காளிம வீணிகள்
களிகூரும் பேயமு தூணிடு ...... கசுமாலர்
மனவேலங் கீலக லாவிகள்
மயமாயங் கீதவி நோதிகள்
மருளாருங் காதலர் மேல்விழு ...... மகளீர்வில்
மதிமாடம் வானிகழ் வார்மிசை
மகிழ்கூரும் பாழ்மன மாமுன
மலர்பேணுந் தாளுன வேயரு ...... ளருளாயோ
தனதானந் தானன தானன
எனவேதங் கூறுசொல் மீறளி
ததைசேர்தண் பூமண மாலிகை ...... யணிமார்பா
தகரேறங் காரச மேவிய
குகவீரம் பாகும ராமிகு
தகைசாலன் பாரடி யார்மகிழ் ...... பெருவாழ்வே
தினமாமன் பாபுன மேவிய
தனிமானின் தோளுட னாடிய
தினைமாவின் பாவுயர் தேவர்கள் ...... தலைவாமா
திகழ்வேடங் காளியொ டாடிய
ஜெகதீசங் கேசந டேசுரர்
திருவாலங் காடினில் வீறிய ...... பெருமாளே.
பாடல் 674 ( திருவாலங்காடு )
ராகம் - ---; தாளம் - தந்தானந் தாத்தம் தனதன
தந்தானந் தாத்தம் தனதன
தந்தானந் தாத்தம் தனதன ...... தனதான
பொன்றாமன் றாக்கும் புதல்வரும்
நன்றாமன் றார்க்கின் றுறுதுணை
பொன்றானென் றாட்டம் பெருகிய ...... புவியூடே
பொங்காவெங் கூற்றம் பொதிதரு
சிங்காரஞ் சேர்த்திங் குயரிய
புன்கூடொன் றாய்க்கொண் டுறைதரு ...... முயிர்கோல
நின்றானின் றேத்தும் படிநினை
வுந்தானும் போச்சென் றுயர்வற
நிந்தாகும் பேச்சென் பதுபட ...... நிகழாமுன்
நெஞ்சாலஞ் சாற்பொங் கியவினை
விஞ்சாதென் பாற்சென் றகலிட
நின்தாள்தந் தாட்கொண் டருள்தர ...... நினைவாயே
குன்றால்விண் டாழ்க்குங் குடைகொடு
கன்றாமுன் காத்துங் குவலய
முண்டார்கொண் டாட்டம் பெருகிய ...... மருகோனே
கொந்தார்பைந் தார்த்திண் குயகுற
மின்தாள்சிந் தாச்சிந் தையில்மயல்
கொண்டேசென் றாட்கொண் டருளென ...... மொழிவோனே
அன்றாலங் காட்டண் டருமுய
நின்றாடுங் கூத்தன் திருவருள்
அங்காகும் பாட்டின் பயனினை ...... யருள்வாழ்வே
அன்பால்நின் தாட்கும் பிடுபவர்
தம்பாவந் தீர்த்தம் புவியிடை
அஞ்சாநெஞ் சாக்கந் தரவல ...... பெருமாளே.
பாடல் 675 ( திருவாலங்காடு )
ராகம் - ...; தாளம் - தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த
தனதன தானந் தாத்த ...... தனதான
புவிபுனல் காலுங் காட்டி சிகியொடு வானுஞ் சேர்த்தி
புதுமன மானும் பூட்டி ...... யிடையூடே
பொறிபுல னீரைந் தாக்கி கருவிகள் நாலுங் காட்டி
புகல்வழி நாலைந் தாக்கி ...... வருகாயம்
பவவினை நூறுங் காட்டி சுவமதி தானுஞ் சூட்டி
பசுபதி பாசங் காட்டி ...... புலமாயப்
படிமிசை போவென் றோட்டி அடிமையை நீவந் தேத்தி
பரகதி தானுங் காட்டி ...... யருள்வாயே
சிவமய ஞானங் கேட்க தவமுநி வோரும் பார்க்க
திருநட மாடுங் கூத்தர் ...... மருகோனே
திருவளர் மார்பன் போற்ற திசைமுக னாளும் போற்ற
ஜெகமொடு வானங் காக்க ...... மயிலேறிக்
குவடொடு சூரன் தோற்க எழுகடல் சூதந் தாக்கி
குதர்வடி வேலங் கோட்டு ...... குமரேசா
குவலயம் யாவும் போற்ற பழனையி லாலங் காட்டில்
குறமகள் பாதம் போற்று ...... பெருமாளே.
பாடல் 676 ( திருவாலங்காடு )
ராகம் - : தாளம் - தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த
தனதன தானந் தாத்த ...... தனதான
வடிவது நீலங் காட்டி முடிவுள காலன் கூட்டி
வரவிடு தூதன் கோட்டி ...... விடுபாசம்
மகனொடு மாமன் பாட்டி முதலுற வோருங் கேட்டு
மதிகெட மாயந் தீட்டி ...... யுயிர்போமுன்
படிமிசை தாளுங் காட்டி யுடலுறு நோய்பண் டேற்ற
பழவினை பாவந் தீர்த்து ...... னடியேனைப்
பரிவொடு நாளுங் காத்து விரிதமி ழாலங் கூர்த்த
பரபுகழ் பாடென் றாட்கொ ...... டருள்வாயே
முடிமிசை சோமன் சூட்டி வடிவுள ஆலங் காட்டில்
முதிர்நட மாடுங் கூத்தர் ...... புதல்வோனே
முருகவிழ் தாருஞ் சூட்டி யொருதனி வேழங் கூட்டி
முதல்மற மானின் சேர்க்கை ...... மயல்கூர்வாய்
இடியென வேகங் காட்டி நெடிதரு சூலந் தீட்டி
யெதிர்பொரு சூரன் தாக்க ...... வரஏகி
இலகிய வேல்கொண் டார்த்து உ டலிரு கூறன் றாக்கி
யிமையவ ரேதந் தீர்த்த ...... பெருமாளே.
பாடல் 677 ( திருவாலங்காடு )
ராகம் - மோஹனம் தாளம் - சதுஸ்ர ரூபகம் (6)
தனனாத் தானன தானம் தனனாத் தானன தானம்
தனனாத் தானன தானம் ...... தனதான
தவர்வாட் டோமர சூலந் தரியாக் காதிய சூருந்
தணியாச் சாகர மேழுங் ...... கிரியேழுஞ்
சருகாக் காய்கதிர் வேலும் பொருகாற் சேவலு நீலந்
தரிகூத் தாடிய மாவுந் ...... தினைகாவல்
துவர்வாய்க் கானவர் மானுஞ் சுரநாட் டாளொரு தேனுந்
துணையாத் தாழ்வற வாழும் ...... பெரியோனே
துணையாய்க் காவல்செய் வாயென் றுணராப் பாவிகள் பாலுந்
தொலையாப் பாடலை யானும் ...... புகல்வேனோ
பவமாய்த் தாணது வாகும் பனைகாய்த் தேமண நாறும்
பழமாய்ப் பார்மிசை வீழும் ...... படிவேதம்
படியாப் பாதகர் பாயன் றியுடாப் பேதைகள் கேசம்
பறிகோப் பாளிகள் யாருங் ...... கழுவேறச்
சிவமாய்த் தேனமுதூறுந் திருவாக் காலொளி சேர்வெண்
டிருநீற் றாலம ராடுஞ் ...... சிறியோனே
செழுநீர்ச் சேய்நதி யாரங் கொழியாக் கோமளம் வீசுந்
திருவோத் தூர்தனில் மேவும் ...... பெருமாளே.
பாடல் 678 ( பாக்கம் )
ராகம் - ...; தாளம் - தாத்தத்த தானதன தாத்தத்த தானதன
தாத்தத்த தானதன ...... தனதான
கார்க்கொத்த மேனிகடல் போற்சுற்ற மானவழி
காய்த்தொட்டொ ணாதவுரு ...... ஒருகோடி
காக்கைக்கு நாய்கழுகு பேய்க்கக்க மானவுடல்
காட்டத்தி னீளெரியி ...... லுறவானிற்
கூர்ப்பித்த சூலனத னாற்குத்தி யாவிகொடு
போத்துக்க மானகுறை ...... யுடையேனைக்
கூப்பிட்டு சாவருளி வாக்கிட்டு நாமமொழி
கோக்கைக்கு நூலறிவு ...... தருவாயே
போர்க்கெய்த்தி டாமறலி போற்குத்தி மேவசுரர்
போய்த்திக்கெ லாமடிய ...... வடிவேலாற்
பூச்சித்தர் தேவர்மழை போற்றுர்க்க வேபொருது
போற்றிச்செய் வார்சிறையை ...... விடுவோனே
பார்க்கொற்ற நீறுபுனை வார்க்கொக்க ஞானபர
னாய்ப்பத்தி கூர்மொழிகள் ...... பகர்வாழ்வே
பாக்கொத்தி னாலியலர் நோக்கைக்கு வேல்கொடுயர்
பாக்கத்தில் மேவவல ...... பெருமாளே.
பாடல் 679 ( பாக்கம் )
ராகம் - ...; தாளம் - தாத்தத் தனந்த தந்த தாத்தத் தனந்த தந்த
தாத்தத் தனந்த தந்த ...... தனதான
பாற்றுக் கணங்கள் தின்று தேக்கிட் டிடுங்கு ரம்பை
நோக்கிச் சுமந்து கொண்டு ...... பதிதோறும்
பார்த்துத் திரிந்து ழன்று ஆக்கத் தையுந்தெ ரிந்து
ஏக்கற்று நின்று நின்று ...... தளராதே
வேற்றுப் புலன்க ளைந்து மோட்டிப் புகழ்ந்து கொண்டு
வீட்டிற் புகுந்தி ருந்து ...... மகிழ்வேனோ
மாற்றற்ற பொன்து லங்கு வாட்சக்கி ரந்தெ ரிந்து
வாய்ப்புற்ற மைந்த சங்கு ...... தடிசாப
மாற்பொற்க லந்து லங்க நாட்டச்சு தன்ப ணிந்து
வார்க்கைத்த லங்க ளென்று ...... திரைமோதும்
பாற்சொற்ற டம்பு குந்து வேற்கட்சி னம்பொ ருந்து
பாய்க்குட் டுயின்ற வன்றன் ...... மருகோனே
பாக்குக் கரும்பை கெண்டை தாக்கித் தடம் படிந்த
பாக்கத் தமர்ந்தி ருந்த ...... பெருமாளே.
பாடல் 680 ( திருவேற்காடு )
ராகம் - ....; தாளம் - தானந்தா தனதான தானந்தா தனதான
தானந்தா தனதான ...... தனதான
ஆலம்போ லெழுநீல மேலங்காய் வரிகோல
மாளம்போர் செயுமாய ...... விழியாலே
ஆரம்பால் தொடைசால ஆலுங்கோ புரவார
ஆடம்பார் குவிநேய ...... முலையாலே
சாலந்தாழ் வுறுமால ஏலங்கோர் பிடியாய
வேளங்கார் துடிநீப ...... இடையாலே
சாரஞ்சார் விலனாய நேகங்கா யமன்மீறு
காலந்தா னொழிவேது ...... உ ரையாயோ
பாலம்பால் மணநாறு காலங்கே யிறிலாத
மாதம்பா தருசேய ...... வயலு¡ரா
பாடம்பார் திரிசூல நீடந்தா கரவீர
பாசந்தா திருமாலின் ...... மருகோனே
வேலம்பார் குறமாது மேலும்பார் தருமாதும்
வீறங்கே யிருபாலு ...... முறவீறு
வேதந்தா வபிராம நாதந்தா வருள்பாவு
வேலங்கா டுறைசீல ...... பெருமாளே.
பாடல் 681 ( திருவேற்காடு )
ராகம் - ஸிம்மேந்திர மத்யமம் தாளம் - திஸ்ர த்ருபுடை
தாத்தாதன தானன தானன
தாத்தாதன தானன தானன
தாத்தாதன தானன தானன ...... தனதான
கார்ச்சார்குழ லார்விழி யாரயி
லார்ப்பால்மொழி யாரிடை நூலெழு
வார்ச்சாரிள நீர்முலை மாதர்கள் ...... மயலாலே
காழ்க்காதல தாமன மேமிக
வார்க்காமுக னாயுறு சாதக
மாப்பாதக னாமடி யேனைநி ...... னருளாலே
பார்ப்பாயலை யோவடி யாரொடு
சேர்ப்பாயலை யோவுன தாரருள்
கூர்ப்பாயலை யோவுமை யாள்தரு ...... குமரேசா
பார்ப்பாவல ரோதுசொ லால்முது
நீர்ப்பாரினில் மீறிய கீரரை
யார்ப்பாயுன தாமரு ளாலொர்சொ ...... லருள்வாயே
வார்ப்பேரரு ளேபொழி காரண
நேர்ப்பாவச காரண மாமத
ஏற்பாடிக ளேயழி வேயுற ...... அறைகோப
வாக்காசிவ மாமத மேமிக
வூக்காதிப யோகம தேயுறு
மாத்தாசிவ பாலகு காவடி ...... யர்கள்வாழ்வே
வேர்காடவல் வேடர்கள் மாமக
ளார்க்கார்வநன் மாமகி ணாதிரு
வேற்காடுறை வேதபு ¡£சுரர் ...... தருசேயே
வேட்டார்மக வான்மக ளானவ
ளேட்டார்திரு மாமண வாபொனி
னாட்டார்பெரு வாழ்வென வேவரு ...... பெருமாளே.
பாடல் 682 ( வடதிருமுல்லைவாயில் )
ராகம் - மோஹனம் ; தாளம் - அங்கதாளம் (6 1/2) (எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி)
தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமி-2
தனதய்ய தானன தானன
தனதய்ய தானன தானன
தனதய்ய தானன தானன ...... தனதான
அணிசெவ்வி யார்திரை சூழ்புவி
தனநிவ்வி யேகரை யேறிட
அறிவில்லி யாமடி யேனிட ...... ரதுதீர
அருள்வல்லை யோநெடு நாளின
மிருளில்லி லேயிடு மோவுன
தருளில்லை யோஇன மானவை ...... யறியேனே
குணவில்ல தாமக மேரினை
யணிசெல்வி யாயரு ணாசல
குருவல்ல மாதவ மேபெறு ...... குணசாத
குடிலில்ல மேதரு நாளெது
மொழிநல்ல யோகவ ரேபணி
குணவல் வாசிவ னேசிவ ...... குருநாதா
பணிகொள்ளி மாகண பூதமொ
டமர்கள்ளி கானக நாடக
பரமெல்லி யார்பர மேசுரி ...... தருகோவே
படரல்லி மாமலர் பாணம
துடைவில்லி மாமத னாரனை
பரிசெல்ரவி யார்மரு காசுர ...... முருகேசா
மணமொல்லை யாகி நகாகன
தனவல்லி மோகன மோடமடர்
மகிழ்தில்லை மாநட மாடின ...... ரருள்பாலா
மருமல்லி மாவன நீடிய
பொழில் மெல்லி காவன மாடமை
வடமுல்லை வாயிலின் மேவிய ...... பெருமாளே.
பாடல் 683 ( வடதிருமுல்லைவாயில் )
ராகம் - ...; தாளம் - தான தானன தானன தந்தன
தான தானன தானன தந்தன
தான தானன தானன தந்தன ...... தனதான
சோதி மாமதி போல்முக முங்கிளர்
மேரு லாவிய மாமுலை யுங்கொடு
தூர வேவரு மாடவர் தங்கள்மு ...... னெதிராயே
சோலி பேசிமு னாளிலி ணங்கிய
மாதர் போலிரு தோளில்வி ழுந்தொரு
சூதி னால்வர வேமனை கொண்டவ ...... ருடன்மேவி
மோதி யேகனி வாயத ரந்தரு
நாளி லேபொருள் சூறைகள் கொண்டுபின்
மோன மாயவ மேசில சண்டைக ...... ளுடனேசி
மோச மேதரு தோதக வம்பியர்
மீதி லேமய லாகிம னந்தளர்
மோட னாகிய பாதக னுங்கதி ...... பெறுவேனோ
ஆதி யேயெனும் வானவர் தம்பகை
யான சூரனை மோதிய ரும்பொடி
யாக வேமயி லேறிமு னிந்திடு ...... நெடுவேலா
ஆயர் வாழ்பதி தோறுமு கந்துர
லேறி யேயுறி மீதளை யுங்கள
வாக வேகொடு போதநு கர்ந்தவன் ...... மருகோனே
வாதி னால்வரு காளியை வென்றிடு
மாதி நாயகர் வீறுத யங்குகை
வாரி ராசனு மேபணி யுந்திரு ...... நடபாதர்
வாச மாமல ரோனொடு செந்திரு
மார்பில் வீறிய மாயவ னும்பணி
மாசி லாமணி யிசர்ம கிழ்ந்தருள் ...... பெருமாளே.
பாடல் 684 ( வடதிருமுல்லைவாயில் )
ராகம் - ...; தாளம் - தய்யதன தான தந்தன
தய்யதன தான தந்தன
தய்யதன தான தந்தன ...... தனதான
மின்னிடைக லாப தொங்கலொ
டன்னமயில் நாண விஞ்சிய
மெல்லியர்கு ழாமி சைந்தொரு ...... தெருமீதே
மெள்ளவுமு லாவி யிங்கித
சொல்குயில்கு லாவி நண்பொடு
வில்லியல்பு ரூர கண்கணை ...... தொடுமோக
கன்னியர்கள் போலி தம்பெறு
மின்னணிக லார கொங்கையர்
கண்ணியில்வி ழாம லன்பொடு ...... பதஞான
கண்ணியிலு ளாக சுந்தர
பொன்னியல்ப தார முங்கொடு
கண்ணுறுவ ராம லின்பமொ ...... டெனையாள்வாய்
சென்னியிலு டாடி ளம்பிறை
வன்னியும ராவு கொன்றையர்
செம்மணிகு லாவு மெந்தையர் ...... குருநாதா
செம்முகஇ ராவ ணன்தலை
விண்ணுறவில் வாளி யுந்தொடு
தெய்விகபொ னாழி வண்கையன் ...... மருகோனே
துன்னியெதிர் சூரர் மங்கிட
சண்முகம தாகி வன்கிரி
துள்ளிடவெ லாயு தந்தனை ...... விடுவோனே
சொல்லுமுனி வோர்த வம்புரி
முல்லைவட வாயில் வந்தருள்
துல்யபர ஞான வும்பர்கள் ...... பெருமாளே.
பாடல் 685 ( திருவலிதாயம் )
ராகம் - ஷண்முகப்ரியா தாளம் - அங்கதாளம் (8)
தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தகதிமிதக-3
தனதய்ய தானதன ...... தனதான
மருமல்லி யார்குழலின் ...... மடமாதர்
மருளுள்ளி நாயடிய ...... னலையாமல்
இருநல்ல வாகுமுன ...... தடிபேண
இனவல்ல மானமன ...... தருளாயோ
கருநெல்லி மேனியரி ...... மருகோனே
கனவள்ளி யார்கணவ ...... முருகேசா
திருவல்லி தாயமதி ...... லுறைவோனே
திகழ்வல்ல மாதவர்கள் ...... பெருமாளே.
பாடல் 686 ( திருவொற்றியூர் )
ராகம் - ...; தாளம் - தனதனன தான தனதனன தான
தனதனன தான ...... தனதான
கரியமுகில் போலு மிருளளக பார
கயல்பொருத வேலின் ...... விழிமாதர்
கலவிகளில் மூழ்கி ம்ருகமத படீர
களனமுலை தோய ...... அணையூடே
விரகமது வான மதனகலை யோது
வெறியனென நாளு ...... முலகோர்கள்
விதரணம தான வகைநகைகள் கூறி
விடுவதன்முன் ஞான ...... அருள்தாராய்
அரிபிரமர் தேவர் முனிவர்சிவ யோகர்
அவர்கள்புக ழோத ...... புவிமீதே
அதிகநட ராஜர் பரவுகுரு ராஜ
அமரர்குல நேச ...... குமரேசா
சிரகர கபாலர் அரிவையொரு பாகர்
திகழ் கநக மேனி ...... யுடையாளர்
திருவளரு மாதி புரியதனில் மேவு
ஜெயமுருக தேவர் ...... பெருமாளே.
பாடல் 687 ( திருவொற்றியூர் )
ராகம் - தன்யாஸி தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகதிமிதக-3, தகிட-1 1/2, தக-1
தனதத்தன தானதன தனதத்தன தானதன
தனதத்தன தானதன ...... தனதானா
சொருபப்பிர காசவிசு வருபப்பிர மாகநிச
சுகவிப்பிர தேசரச ...... சுபமாயா
துலியப்பிர காசமத சொலியற்றர சாசவித
தொகைவிக்ரம மாதர்வயி ...... றிடையூறு
கருவிற்பிற வாதபடி யுருவிற்பிர மோதஅடி
களையெத்திடி ராகவகை ...... யதின்மீறிக்
கருணைப்பிர காசவுன தருளுற்றிட ஆசில்சிவ
கதிபெற்றிட ரானவையை ...... யொழிவேனோ
குருகுக்குட வாரகொடி செருவுக்கிர ஆதபயில்
பிடிகைத்தல ஆதியரி ...... மருகோனே
குமரப்பிர தாபகுக சிவசுப்பிர மாமணிய
குணமுட்டர வாவசுரர் ...... குலகாலா
திருவொற்றியு றாமருவு நகரொற்றியுர் வாரிதிரை
யருகுற்றிடு மாதிசிவ ...... னருள்பாலா
திகழுற்றிடு யோகதவ மிகுமுக்கிய மாதவர்க
ளிதயத்திட மேமருவு ...... பெருமாளே.
பாடல் 688 ( திருமயிலை )
ராகம் - ராமப்ரியா ; தாளம் - ஆதி தனன தனதனன தனன தனதனன
தனன தனதனன ...... தனதான
அமரு மமரரினி லதிக னயனுமரி
யவரும் வெருவவரு ...... மதிகாளம்
அதனை யதகரண விதன பரிபுரண
மமைய னவர்கரண ...... அகிலேச
நிமிர வருள்சரண நிபிட மதெனவுன
நிமிர சமிரமய ...... நியமாய
நிமிட மதனிலுண வலசி வசுதவர
நினது பதவிதர ...... வருவாயே
சமர சமரசுர அசுர விதரபர
சரத விரதஅயில் ...... விடுவோனே
தகுர்த தகுர்ததிகு திகுர்த திகுர்ததிகு
தரர ரரரரிரி ...... தகுர்தாத
எமர நடனவித மயிலின் முதுகில்வரு
மிமைய மகள்குமர ...... எமதீச
இயலி னியல்மயிலை நகரி லினிதுறையு
மெமது பரகுரவ ...... பெருமாளே.
பாடல் 689 ( திருமயிலை )
ராகம் -....; தாளம் - தனனத் தனதன ...... தனதான
அயிலொத் தெழுமிரு ...... விழியாலே
அமுதொத் திடுமரு ...... மொழியாலே
சயிலத் தெழுதுணை ...... முலையாலே
தடையுற் றடியனு ...... மடிவேனோ
கயிலைப் பதியரன் ...... முருகோனே
கடலக் கரைதிரை ...... யருகேசூழ்
மயிலைப் பதிதனி ...... லுறைவோனே
மகிமைக் கடியவர் ...... பெருமாளே.
பாடல் 690 ( திருமயிலை )
ராகம் - பூர்வி கல்யாணி தாளம் - அங்கதாளம் (10 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2
தகதிமி-2, தகதிமிதக-3
தனன தானன தானன தந்தத் ...... தனதான
அறமி லாவதி பாதக வஞ்சத் ...... தொழிலாலே
அடிய னேன்மெலி வாகிம னஞ்சற் ...... றிளையாதே
திறகு லாவிய சேவடி வந்தித் ...... தருள்கூடத்
தினமு மேமிக வாழ்வுறு மின்பைத் ...... தருவாயே
விறல் சாசரர் சேனைக ளஞ்சப் ...... பொரும்வேலா
விமல மாதபி ராமித ருஞ்செய்ப் ...... புதல்வோனே
மறவர் வாணுதல் வேடைகொ ளும்பொற் ...... புயவீரா
மயிலை மாநகர் மேவிய கந்தப் ...... பெருமாளே.
பாடல் 691 ( திருமயிலை )
ராகம் - கீரவாணி தாளம் - அங்தாளம் (7 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
இகல வருதிரை பெருகிய சலநிதி
நிலவு முலகினி லிகமுறு பிறவியி
னினிமை பெறவரு மிடருறு மிருவினை ...... யதுதீர
இசையு முனதிரு பதமலர் தனைமன
மிசைய நினைகிலி யிதமுற வுனதரு
ளிவர வுருகிலி அயர்கிலி தொழுகிலி ...... உ மைபாகர்
மகிழு மகவென அறைகிலி நிறைகிலி
மடமை குறைகிலி மதியுணர் வறிகிலி
வசன மறவுறு மவுனமொ டுறைகிலி ...... மடமாதர்
மயம தடரிட இடருறு மடியனு
மினிமை தருமுன தடியவ ருடனுற
மருவ அருள்தரு கிருபையின் மலிகுவ ...... தொருநாளே
சிகர தனகிரி குறமக ளினிதுற
சிலத நலமுறு சிலபல வசனமு
திறைய அறைபயி லறுமுக நிறைதரு ...... மருணீத
சிரண புரணவி தரணவி சிரவண
சரணு சரவண பவகுக சயனொளி
திரவ பரவதி சிரமறை முடிவுறு ...... பொருணீத
அகர உ கரதி மகரதி சிகரதி
யகர அருளதி தெருளதி வலவல
அரண முரணுறு மசுரர்கள் கெடஅயில் ...... விடுவோனே
அழகு மிலகிய புலமையு மகிமையும்
வளமு முறைதிரு மயிலையி லநுதின
மமரு மரகர சிவசுத அடியவர் ...... பெருமாளே.
பாடல் 692 ( திருமயிலை )
ராகம் -....; தாளம் - தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த ...... தனதான
இணையதில தாமி ரண்டு கயல்களென வேபு ரண்டு
இருகுழையின் மீத டர்ந்து ...... அமராடி
இலகுசிலை வேள்து ரந்த கணையதிலு மேசி றந்த
இருநயனர் வாரி ணங்கு ...... மதபாரப்
பணைமுலையின் மீத ணிந்த தரளமணி யார்து லங்கு
பருவரதி போல வந்த ...... விலைமானார்
பயிலுநடை யாலு ழன்று அவர்களிட மோக மென்ற
படுகுழியி லேம யங்கி ...... விழலாமோ
கணகணென வீர தண்டை சரணமதி லேவி ளங்க
கலபமயில் மேலு கந்த ...... குமரேசா
கறுவிவரு சூர னங்க மிருபிளவ தாக விண்டு
கதறிவிழ வேலெ றிந்த ...... முருகோனே
மணிமகுட வேணி கொன்றை அறுகுமதி யாற ணிந்த
மலையவிலி னாய கன்றன் ...... ஓருபாக
மலையரையன் மாது தந்த சிறுவனென வேவ ளர்ந்து
மயிலைநகர் வாழ வந்த ...... பெருமாளே.
பாடல் 693 ( திருமயிலை )
ராகம் - ....; தாளம் - தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன தான தத்த ...... தனதான
களபமணி யார முற்ற வனசமுலை மீது கொற்ற
கலகமத வேள்தொ டுத்த ...... கணையாலுங்
கனிமொழிமி னார்கள் முற்று மிசைவசைகள் பேச வுற்ற
கனலெனவு லாவு வட்ட ...... மதியாலும்
வளமையணி நீடு புஷ்ப சயனஅணை மீது ருக்கி
வனிதை மடல் நாடி நித்த ...... நலியாதே
வரியளியு லாவு துற்ற இருபுயம ளாவி வெற்றி
மலரணையில் நீய ணைக்க ...... வரவேணும்
துளபமணி மார்ப சக்ர தரனரிமு ராரி சர்ப்ப
துயிலதர னாத ரித்த ...... மருகோனே
சுருதிமறை வேள்வி மிக்க மயிலைநகர் மேவு முக்ர
துரகதக லாப பச்சை ...... மயில்வீரா
அளகைவணி கோர்கு லத்தில் வனிதையுயிர் மீள ழைப்ப
அருள்பரவு பாடல் சொற்ற ...... குமரேசா
அருவரையை நீறெ ழுப்பி நிருதர்தமை வேர றுத்து
அமரர்பதி வாழ வைத்த ...... பெருமாளே.
பாடல் 694 ( திருமயிலை )
ராகம் - கல்யாண வஸந்தம் தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
கடிய வேக மாறாத விரத சூத ராபாதர்
கலக மேசெய் பாழ்மூடர் ...... வினைவேடர்
கபட வீன ராகாத இயல்பு நாடி யேநீடு
கனவி கார மேபேசி ...... நெறி பேணாக்
கொடிய னேது மோராது விரக சால §ம்முடு
குடிலின் மேவி யேநாளு ...... மடியாதே
குலவு தோகை மீதாறு முகமும் வேலு மீராறு
குவளை வாகும் நேர்காண ...... வருவாயே
படியி னோடு மாமேரு அதிர வீசி யேசேட
பணமு மாட வேநீடு ...... வரைசாடிப்
பரவை யாழி நீர்மோத நிருதர் மாள வானாடு
பதிய தாக வேலேவு ...... மயில்வீரா
வடிவு லாவி யாகாச மிளிர்ப லாவி னீள்சோலை
வனச வாவி பூவோடை ...... வயலோடே
மணிசெய் மாட மாமேடை சிகர மோடு வாகான
மயிலை மேவி வாழ்தேவர் ...... பெருமாளே.
பாடல் 695 ( திருமயிலை )
ராகம் - சுபபந்துவராளி தாளம் - கண்ட ஏகம் (5)
தனனா தனனாதன தனனா தனனாதன
தனனா தனனாதன ...... தனதான
திரைவார் கடல்சூழ்புவி தனிலே யுலகோரொடு
திரிவே னுனையோதுதல் ...... திகழாமே
தினநா ளுமுனேதுதி மனதா ரபினேசிவ
சுதனே திரிதேவர்கள் ...... தலைவாமால்
வரைமா துமையாள் தரு மணியே குகனேயென
அறையா வடியேனுமு ...... னடியாராய்
வழிபா டுறுவாரொடு அருளா தரமாயிடு
மகநா ளுளதோசொல ...... அருள்வாயே
இறைவா ரணதேவனு மிமையோ ரவரேவரு
மிழிவா கிமுனேயிய ...... லிலராகி
இருளா மனதேயுற அசுரே சர்களேமிக
இடரே செயவேயவ ...... ரிடர்தீர
மறமா வயிலேகொடு வுடலே யிருகூறெழ
மதமா மிகுசூரனை ...... மடிவாக
வதையே செயுமாவலி யுடையா யழகாகிய
மயிலா புரிமேவிய ...... பெருமாளே.
பாடல் 696 ( திருமயிலை )
ராகம் -....; தாளம் - தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன ...... தனதான
நிரைதரு மணியணி யார்ந்த பூரித
ம்ருகமத களபகில் சாந்து சேரிய
இளமுலை யுரமிசை தோய்ந்து மாமல ...... ரணைமீதே
நெகிழ்தர அரைதுகில் வீழ்ந்து மாமதி
முகம்வெயர் வெழவிழி பாய்ந்து வார்குழை
யொடுபொர இருகர மேந்து நீள்வளை ...... யொலிகூர
விரைமலர் செறிகுழல் சாய்ந்து நூபுர
மிசைதர இலவிதழ் மோந்து வாயமு
தியல்பொடு பருகிய வாஞ்சை யேதக ...... வியனாடும்
வினையனை யிருவினை யீண்டு மாழ்கட
லிடர்படு சுழியிடை தாழ்ந்து போமதி
யிருகதி பெறஅருள் சேர்ந்து வாழ்வது ...... மொருநாளே
பரையபி நவைசிவை சாம்ப வீயுமை
யகிலமு மருளரு ளேய்ந்த கோமளி
பயிரவி திரிபுரை யாய்ந்த நூல்மறை ...... சதகோடி
பகவதி யிருசுட ரேந்து காரணி
மலைமகள் கவுரிவி தார்ந்த மோகினி
படர்சடை யவனிட நீங்கு றாதவள் ...... தருகோவே
குரைகடல் மறுகிட மூண்ட சூரர்க
ளணிகெட நெடுவரை சாய்ந்து தூளெழ
முடுகிய மயில்மிசை யூர்ந்து வேல்விடு ...... முருகோனே
குலநறை மலரளி சூழ்ந்து லாவிய
மயிலையி லுறைதரு சேந்த சேவக
குகசர வணபவ வாய்ந்த தேவர்கள் ...... பெருமாளே.
பாடல் 697 ( திருமயிலை )
ராகம் - ....; தாளம் - தனதன தத்தன தானா தானன
தனதன தத்தன தானா தானன
தனதன தத்தன தானா தானன ...... தனதான
வருமயி லொத்தவ ¡£வார் மாமுக
மதியென வைத்தவர் தாவா காமிகள்
வரிசையின் முற்றிய வாகா ராமியல் ...... மடமாதர்
மயலினி லுற்றவர் மோகா வாரிதி
யதனிடை புக்கவ ராளாய் நீணிதி
தருவிய லுத்தர்கள் மாடா மாமதி ...... மிக்முழ்கி
தருபர வுத்தம வேளே சீருறை
அறுமுக நற்றவ லீலா கூருடை
அயிலுறை கைத்தல சீலா பூரண ...... பரயோக
சரவண வெற்றிவி நோதா மாமணி
தருமர வைக்கடி நீதா வாமணி
மயிலுறை வித்தவு னாதா ராமணி ...... பெறுவேனோ
திரிரிரி தித்திதி தீதீ தீதிதி
தொகுதொகு தொத்தொகு தோதோ தோதிகு
திமிதிமி தித்திமி ஜேஜே தீதிமி ...... தொதிதீதோ
தெனவரி மத்தள மீதார் தேமுழ
திடுவென மிக்கியல் வேதா வேதொழு
திருநட மிட்டவர் காதே மூடிய ...... குருபோதம்
உ ரை செயு முத்தம வீரா நாரணி
உ மையவ ளுத்தர பூர்வா காரணி
உ றுஜக ரக்ஷணி நீரா வாரணி ...... தருசேயே
உ யர்வர முற்றிய கோவே யாரண
மறைமுடி வித்தக தேவே காரண
ஒருமயி லைப்பதி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.
பாடல் 698 ( திருவான்மியூர் )
ராகம் - தர்மவதி தாளம் - அங்கதாளம் (5)
தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தனதான தானதன தனதான தானதன
தனதான தானதன ...... தனதான
குசமாகி யாருமலை மரைமாநு ணூலினிடை
குடிலான ஆல்வயிறு ...... குழையூடே
குறிபோகு மீனவிழி மதிமாமு காருமலர்
குழல்கார தானகுண ...... மிலிமாதர்
புசவாசை யால்மனது உ னைநாடி டாதபடி
புலையேனு லாவிமிகு ...... புணர்வாகிப்
புகழான பூமிமிசை மடிவாயி றாதவகை
பொலிவான பாதமல ...... ரருள்வாயே
நிசநார ணாதிதிரு மருகாவு லாசமிகு
நிகழ்பொத மானபர ...... முருகோனே
நிதிஞான போதமர னிருகாதி லேயுதவு
நிபுணாநி சாசரர்கள் ...... குலகாலா
திசைமாமு காழியரி மகவான்மு னோர்கள்பணி
சிவநாத ராலமயில் ...... அமுதேசர்
திகழ்பால மாகமுற மணிமாளி மாடமுயர்
திருவான்மி யூர்மருவு ...... பெருமாளே.
பாடல் 699 ( கோசைநகர் )
ராகம் -....; தாளம் - தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன ...... தனதான
ஆதவித பாரமுலை மாதரிடை நூல்வயிற
தாலிலையெ னாமதன ...... கலைலீலை
யாவும்விளை வானகுழி யானதிரி கோணமதி
லாசைமிக வாயடிய ...... னலையாமல்
நாதசத கோடிமறை யோலமிடு நூபுரமு
னானபத மாமலரை ...... நலமாக
நானநுதி னாதினமு மேநினைய வேகிருபை
நாடியரு ளேயருள ...... வருவாயே
சீதமதி யாடரவு வேரறுகு மாஇறகு
சீதசல மாசடில ...... பரமேசர்
சீர்மைபெற வேயுதவு கூர்மைதரு வேலசிவ
சீறிவரு மாவசுரர் ...... குலகாலா
கோதைகுற மாதுகுண தேவமட மாதுமிரு
பாலுமுற வீறிவரு ...... குமரேசா
கோசைநகர் வாழவரு மீசடியர் நேசசரு
வேசமுரு காவமரர் ...... பெருமாளே.
பாடல் 700 ( பெருங்குடி )
ராகம் - ....; தாளம் - தனந்தன தனந்தன தனந்தன தனந்தன
தனந்தன தனந்தன ...... தனதான
தலங்களில் வருங்கன இலங்கொடு மடந்தையர்
தழைந்தவு தரந்திகழ் ...... தசமாதஞ்
சமைந்தனர் பிறந்தனர் கிடந்தன ரிருந்தனர்
தவழ்ந்தனர் நடந்தனர் ...... சிலகாலந்
துலங்கு நலபெண்களை முயங்கினர் மயங்கினர்
தொடுந்தொழி லுடன்தம ...... க்ருகபாரஞ்
சுமந்தன ரமைந்தனர் குறைந்தன ரிறந்தனர்
சுடும்பினை யெனும்பவ ...... மொழியேனோ
இலங்கையி லிலங்கிய இலங்களு ளிலங்கரு
ளிலெங்கணு மிலங்கென ...... முறையோதி
இடுங்கனல் குரங்கொடு நெடுங்கடல் நடுங்கிட
எழுந்தருள் முகுந்தனன் ...... மருகோனே
பெலங்கொடு விலங்கலு நலங்கஅ யில்கொண்டெறி
ப்ரசண்டக ரதண்டமிழ் ...... வயலு¡ரா
பெரும்பொழில் கரும்புக ளரம்பைகள் நிரம்பிய
பெருங்குடி மருங்குறை ...... பெருமாளே.
பாடல் 701 ( மாடம்பாக்கம் )
ராகம் - ....; தாளம் - தான தந்தன தானா தானன
தான தந்தன தானா தானன
தான தந்தன தானா தானன ...... தனதான
தோடு றுங் குழை யாலே கோல்வளை
சூடு செங்கைக ளாலே யாழ்தரு
கீத மென்குர லாலே தூமணி ...... நகையாலே
தூம மென்குழ லாலே யூறிய
தேனி லங்கித ழாலே யாலவி
லோச னங்களி னாலே சோபித ...... அழகாலே
பாட கம்புனை தாளா லேமிக
வீசு தண்பனி நீரா லேவளர்
பார கொங்கைக ளாலே கோலிய ...... விலைமாதர்
பாவ கங்களி னாலே யான்மயல்
மூழ்கி நின்றய ராதே நூபுர
பாத பங்கய மீதே யாள்வது ...... கருதாயோ
நாட ருஞ்சுடர் தானா வோதுசி
வாக மங்களி னானா பேதவ
நாத தந்த்ரக லாமா போதக ...... வடிவாகி
நால்வி தந்தரு வேதா வேதமு
நாடி நின்றதொர் மாயா தீதம
னோல யந்தரு நாதா ஆறிரு ...... புயவேளே
வாட யங்கியவேலா லேபொரு
சூர்த டிந்தருள் வீரா மாமயி
லேறு கந்தவி நோதா கூறென ...... அரனார்முன்
வாச கம்பிற வாதோர் ஞானசு
கோத யம்புகல் வாசா தேசிக
மாடை யம்பதி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.
பாடல் 702 ( மாடம்பாக்கம் )
ராகம் - ....; தாளம் - தனன தத்தன தனன தத்தன
தனந்தந் தந்த தந்தா
------ 3 முறை ------ ...... தனதனா தனனா
விலைய றுக்கவு முலைம றைக்கவு
மணந்துன் றுஞ்செ ழுந்தார்
புனைமு கிற்குழல் தனைய விழ்க்கவும்
விடங்கஞ் சஞ்ச ரஞ்சேர்
விழிவெ ருட்டவு மொழிபு ரட்டவு
நிணந்துன் றுஞ்ச லம்பா ...... யுதிரநீ ருடனே
வெளியி னிற்கவும் வலிய முட்டரை
யெதிர்ந்தும் பின்தொ டர்ந்தே
யிலைசு ணப்பொடி பிளவெ டுத்திடை
திரும்பும் பண்ப ரன்றே
யெனவு ரைத்தவர் தமைவ ரப்பணி
யுடன்கொண் டன்பு டன்போய் ...... சயனபா யலின்மேல்
கலைநெ கிழ்க்கவு மயல்வி ளைக்கவு
நயங்கொண் டங்கி ருந்தே
குணுகி யிட்டுள பொருள்ப றித்தற
முனிந்தங் கொன்று கண்டே
கலக மிட்டவ ரகல டித்தபின்
வரும்பங் கங்கு ணங்கோர் ...... புதியபே ருடனே
கதைகள் செப்பவும் வலச மர்த்திகள்
குணங்கண் டுந்து ளங்கா
மனித னிற்சிறு பொழுது முற்றுற
நினைந்துங் கண்டு கந்தே
கடிம லர்ப்பத மணுகு தற்கறி
விலன் பொங்கும் பெரும்பா ...... தகனையா ளுவையோ
சிலைத னைக்கொடு மிகஅ டித்திட
மனந்தந் தந்தண ந்தா
மரைம லர்ப்பிர மனைந டுத்தலை
யரிந்துங் கொண்டி ரந்தே
திரிபு ரத்தெரி புகந கைத்தருள்
சிவன்பங் கங்கி ருந்தா ...... ளருளுமா முருகா
செருவி டத்தல கைகள் தெனத்தென
தெனந்தெந் தெந்தெ னந்தா
எனஇ டக்கைகள் மணிக ணப்பறை
டிகுண்டிங் குண்டி குண்டா
டிகுகு டிக்குகு டிகுகு டிக்குகு
டிகுண்டிங் குண்டி குண்டீ ...... யெனஇரா வணனீள்
மலையெ னத்திகழ் முடிகள் பத்தையு
மிரண்டஞ் சொன்ப தொன்றேய்
பணைபு யத்தையு மொருவ கைப்பட
வெகுண்டம் பொன்றெ றிந்தோன்
மதலை மைத்துன அசுர ரைக்குடல்
திறந்தங் கம்பி ளந்தே ...... மயிலின்மேல் வருவாய்
வயல்க ளிற்கய லினமி குத்தெழு
வரம்பின் கண்பு ரண்டே
பெருக யற்கொடு சொரியு நித்தில
நிறைந்தெங் குஞ்சி றந்தே
வரிசை பெற்றுயர் தமனி யப்பதி
யிடங்கொண் டின்பு றுஞ்சீர் ...... இளைய நாயகனே.
பாடல் 703 ( கோடைநகர் )
ராகம் - மாயா மாளவ கெளளை தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த ...... தனதான
ஆதிமுத னாளி லென்றன் தாயுடலி யி ருந்து
ஆகமல மாகி நின்று ...... புவிமீதில்
ஆசையுட னேபி றந்து நேசமுட னேவ ளர்ந்து
ஆளழக னாகி நின்று ...... விளையாடிப்
பூதலமெ லாம லைந்து மாதருட னேக லந்து
பூமிதனில் வேணு மென்று ...... பொருள்தேடிப்
போகமதி லேயு ழன்று பாழவெளநேரகெய் தாம லுன்றன்
பூவடிகள் சேர அன்பு ...... தருவாயே
சீதைகொடு போகு மந்த ராவணனை மாள வென்ற
தீரனரி நார ணன்றன் ...... மருகோனே.
தேவர்முநி வோர்கள் கொண்டல் மாலரிபிர் மாவு நின்று
தேடஅரி தான வன்றன் ...... முருகோனே
கோதைமலை வாழு கின்ற நாதரிட பாக நின்ற
கோமளிய நாதி தந்த ...... குமரேசா
கூடிவரு சூரர் தங்கள் மார்பையிரு கூறு கண்ட
கோடைநகர் வாழ வந்த ...... பெருமாளே.
பாடல் 704 ( கோடைநகர் )
ராகம் - தாளம் -
தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த ...... தனதான
சாலநெடு நாள்ம டந்தை காயமதி லேய லைந்து
சாமளவ தாக வந்து ...... புவிமீதே
சாதகமு மான பின்பு சீறியழு தேகி டந்து
தாரணியி லேத வழ்ந்து ...... விளையாடிப்
பாலனென வேமொ ழிந்து பாகுமொழி மாதர் தங்கள்
பாரதன மீத ணைந்து ...... பொருள்தேடிப்
பார்மிசையி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லொன்று
பாதமலர் சேர அன்பு ...... தருவாயே
ஆலமமு தாக வுண்ட ஆறுசடை நாதர் திங்கள்
ஆடரவு பூணர் தந்த ...... முருகோனே
ஆனைமடு வாயி லன்று மூலமென வோல மென்ற
ஆதிமுதல் நார ணன்றன் ...... மருகோனே
கோலமலர் வாவி யெங்கு மேவுபுனம் வாழ்ம டந்தை
கோவையமு தூற லுண்ட ...... குமரேசா
கூடிவரு சூர டங்க மாளவடி வேலெறிந்த
கோடைநகர் வாழ வந்த ...... பெருமாளே.
பாடல் 705 ( கோடைநகர் )
ராகம் - ...; தாளம் - தானா தானா தானா தானா
தானா தானா ...... தனதானா
ஏறா னாலே நீறாய் மாயா
வேளே வாசக் ...... கணையாலே
ஏயா வேயா மாயா வேயா
லாமே ழோசைத் ...... தொளையாலே
மாறா யூறா யீறாய் மாலாய்
வாடா மானைக் ...... கழியாதே
வாராய் பாராய் சேரா யானால்
வாடா நீபத் ...... தொடைதாராய்
சீறா வீறா ஈரேழ் பார்சூழ்
சீரார் தோகைக் ...... குமரேசா
தேவா சாவா மூவா நாதா
தீரா கோடைப் ...... பதியோனே
வேறாய் மாறா யாறா மாசூர்
வேர்போய் வீழப் ...... பொருதோனே
வேதா போதா வேலா பாலா
வீரா வீரப் ...... பெருமாளே.
பாடல் 706 ( கோடைநகர் )
ராகம் - ஹம்ஸாநந்தி தாளம் - அங்கதாளம் (10)
(மிஸ்ர ஜம்பை /7 யு 0)
தகிட தக திமி-3 1/2, தகிட தக திமி-3 1/2, தகதிமிதக-3
தான தந்த தனத்த தத்த ...... தனதானா
ஞால மெங்கும் வளைத்த ரற்று ...... கடலாலே
நாளும் வஞ்சி யருற்று ரைக்கும் ...... வசையாலே
ஆலமுந்து மதித்த ழற்கும் ...... அழியாதே
ஆறி ரண்டு புயத்த ணைக்க ...... வருவாயே
கோல மொன்று குறத்தி யைத்த ...... ழுவுமார்பா
கோடை யம்பதி யுற்று நிற்கு ...... மயில்வீரா
கால னஞ்ச வரைத்தொ ளைத்த ...... முதல்வானோர்
கால்வி லங்கு களைத்த றித்த ...... பெருமாளே.
பாடல் 707 ( கோடைநகர் )
ராகம் - பிருந்தாவன ஸாரங்கா தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகதிமி தகதிமி-4, தகிட தகதிமி-3 1/2
தானன தந்தன தந்த தந்தன
தானன தந்தன தந்த தந்தன
தானன தந்தன தந்த தந்தன ...... தனதான
தோழமை கொண்டுச லஞ்செய் குண்டர்கள்
ஓதிய நன்றிம றந்த குண்டர்கள்
சூழ்விர தங்கள்க டிந்த குண்டர்கள் ...... பெரியோரைத்
தூஷண நிந்தைப கர்ந்த குண்டர்கள்
ஈவது கண்டுத கைந்த குண்டர்கள்
சூளுற வென்பதொ ழிந்த குண்டர்கள் ...... தொலையாமல்
வாழநி னைந்துவ ருந்து குண்டர்கள்
நீதிய றங்கள்சி தைந்த குண்டர்கள்
மானவ கந்தைமி குந்த குண்டர்கள் ...... வலையாலே
மாயையில் நின்றுவ ருந்து குண்டர்கள்
தேவர்கள் சொங்கள்க வர்ந்த குண்டர்கள்
வாதைந மன்றன்வ ருந்தி டுங்குழி ...... விழுவாரே
ஏழு மரங்களும் வன்கு ரங்கெனும்
வாலியு மம்பர மும்ப ரம்பரை
ராவண னுஞ்சது ரங்க லங்கையு ...... மடைவேமுன்
ஈடழி யும்படி சந்த்ர னுஞ்சிவ
சூரிய னுஞ்சுர ரும்ப தம்பெற
ராம சரந்தொடு புங்க வன்திரு ...... மருகோனே
கோழி சிலம்பந லம்ப யின்றக
லாப நடஞ்செய மஞ்சு தங்கிய
கோபுர மெங்கும்வி ளங்கு மங்கல ...... வயலு¡ரா
கோமள அண்டர்கள் தொண்டர் மண்டலர்
வேல னெனும்பெய ரன்பு டன்புகழ்
கோடை யெனும்பதி வந்த இந்திரர் ...... பெருமாளே.
பாடல் 708 ( கோடைநகர் )
ராகம் - ...; தாளம் - தானத் தானத் தானத் தானத்
தானத் தானத் ...... தனதான
தோடப் பாமற் றோய்தப் பாணிச்
சூழ்துற் றார்துற் ...... றழுவாருந்
தூரப் போகக் கோரப் பாரச்
சூலப் பாசச் ...... சமனாரும்
பாடைக் கூடத் தீயிற் றேறிப்
பாழ்பட் டேபட் ...... டழியாதே
பாசத் தேனைத் தேசுற் றார்பொற்
பாதத் தேவைத் ...... தருள்வாயே
ஆடற் சூர்கெட் டோடத் தோயத்
தாரச் சீறிப் ...... பொரும்வேலா
ஆனைச் சேனைக் கானிற் றேனுக்
காரத் தாரைத் ...... தரும்வீரா
கூடற் பாடிக் கோவைப் பாவைக்
கூடப் பாடித் ...... திரிவோனே
கோலச் சாலிச் சோலைச் சீலக்
கோடைத் தேவப் ...... பெருமாளே.
பாடல் 709 ( கோடைநகர் )
ராகம் - ....; தாளம் - தானத்த தான தந்த தானத்த தான தந்த
தானத்த தான தந்த ...... தனதான
வாசித்த நூல்ம தங்கள் பேசிக்கொ டாத விந்து
வாய்மைப்ர காச மென்று ...... நிலையாக
மாசிக்க பால மன்றில் நாசிக்கு ளோடு கின்ற
வாயுப்பி ராண னொன்று ...... மடைமாறி
யோசித்த யாரு டம்பை நேசித்து றாத லைந்து
ரோமத்து வார மெங்கு ...... முயிர்போக
யோகச்ச மாதி கொண்டு மோகப்ப சாசு மண்டு
லோகத்தில் மாய்வ தென்று ...... மொழியாதோ
வீசப்ப யோதி துஞ்ச வேதக்கு லால னஞ்ச
மேலிட்ட சூர்த டிந்த ...... கதிர்வேலா
வீரப்ர தாப பஞ்ச பாணத்தி னால்ம யங்கி
வேடிச்சி காலி லன்று ...... விழுவோனே
கூசிப்பு காவொ துங்க மாமற்றி காத ரிந்த
கூளப்பு ராரி தந்த ...... சிறியோனே
கோழிப்ப தாகை கொண்ட கோலக்கு மார கண்ட
கோடைக்குள் வாழ வந்த ...... பெருமாளே.
பாடல் 710 ( திருப்பேர்ருர் )
ராகம் - ...; தாளம் - தனத்தா தானன தானா தானன
தனத்தா தானன தானா தானன
தனத்தா தானன தானா தானன ...... தனதான
அனுத்தே னேர்மொழி யாலே மாமய
லுடைத்தார் போலவு மோர்நா ளானதி
லடுத்தே தூதுகள் நூறா றானதும் ...... விடுவார்கள்
அழைத்தே வீடினி லேதா னேகுவர்
நகைத்தே மோடிக ளாவார் காதலொ
டடுத்தே மாமுலை மீதே மார்புற ...... அணைவார்பின்
குனித்தே பாகிலை யீவார் பாதியில்
கடிப்பார் வாயிதழ் வாய்நீ ரானது
குடிப்பார் தேனென நானா லீலைகள் ...... புரிவார்கள்
குறித்தே மாமய லாலே நீள்பொருள்
பறிப்பா ராசுகள் சூழ்மா பாதக
குணத்தார் மாதர்கள் மேலா சாவிட ...... அருள்வாயே
வனத்தே வேடுவர் மாதா மோர்மினை
யெடுத்தே தான்வர வேதான் யாவரும்
வளைத்தே சூழவு மோர்வா ளால்வெலும் ...... விறல்வீரா
மலர்த்தே னோடையி லோர்மா வானதை
பிடித்தே நீள்கர வாதா டாழியை
மனத்தா லேவிய மாமா லானவர் ...... மருகோனே
சினத்தே சூரர்கள் போராய் மாளவு
மெடுத்தோர் வேல்விடு தீரா தாரணி
திருத்தோ ளாஇரு பாதா தாமரை ...... முருகோனே
திருத்தேர் சூழ்மதி ளேரார் தூபிக
ளடுக்கார் மாளிகை யேநீ ளேருள
திருப்போ ரூருறை தேவா தேவர்கள் ...... பெருமாளே.
பாடல் 711 ( திருப்பேர்ருர் )
ராகம் - ....; தாளம் - தனத்தா தான தந்த தனத்தா தான தந்த
தனத்தா தான தந்த ...... தனதான
உ ருக்கார் வாளி கண்கள் பொருப்பார் வார்த னங்கள்
உ கப்பார் வால சந்த்ர ...... னுதனூலாம்
உ ருச்சேர் நீண்ம ருங்குல் பணைத்தோ ளோதி கொண்ட
லுவப்பா மேல்வி ழுந்து ...... திரிவோர்கள்
அருக்கா மாதர் தங்கள் வரைக்கே யோடி யின்ப
வலைக்கே பூணு நெஞ்ச ...... னதிபாவி
அசட்டால் மூடு கின்ற மசக்கால் மாயு மிந்த
அவத்தா லீன மின்றி ...... யருள்வாயே
எருக்கார் தாளி தும்பை மருச்சேர் போது கங்கை
யினைச்சூ டாதி நம்பர் ...... புதல்வோனே
இருக்கா லேநி னைந்து துதிப்பார் நாவி னெஞ்சி
லிருப்பா யானை தங்கு ...... மணிமார்பா
செருக்கா லேமி குந்த கடற்சூர் மாள வென்ற
திறற்சேர் வேல்கை கொண்ட ...... முருகோனே
தினைக்கோர் காவல் கொண்ட குறத்தேன் மாது பங்க
திருப்போ ரூர மர்ந்த ...... பெருமாளே.
பாடல் 712 ( திருப்பேர்ருர் )
ராகம் - ....; தாளம் - தான தானன தானன தான தானன தானன
தான தானன தானன ...... தனதான
சீரு லாவிய வோதிம மான மாநடை மாமயில்
சேய சாயல்க லாமதி ...... முகமானார்
தேனு லாவிய மாமொழி மேரு நேரிள மாமுலை
சேலு லாவிய கூர்விழி ...... குமிழ்நாசி
தாரு லாவிய நீள்குழல் வேய ளாவிய தோளியர்
சார்பி லேதிரி வேனைநி ...... னருளாலே
சாம வேதியர் வானவ ரோதி நாண்மலர் தூவிய
தாளில் வீழ வினாமிக ...... அருள்வாயே
காரு லாவிய நீள்புன வேடர் மால்வரை மீதுறை
காவல் மாதினொ டாவல்செய் ...... தணைவோனே
காண ஆகம வேதபு ராண நூல்பல வோதிய
கார ணாகரு ணாகர ...... முருகோனே
போரு லாவிய சூரனை வாரி சேறெழ வேல்விடு
பூப சேவக மாமயில் ...... மிசையோனே
போதன் மாதவன் மாதுமை பாதி யாதியு மேதொழு
போரி மாநகர் மேவிய ...... பெருமாளே.
பாடல் 713 ( திருப்பேர்ருர் )
ராகம் - பந்து வராளி தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2
தனன தானன தானன தனன தானன தானன
தனன தானன தானன ...... தனதான
திமிர மாமன மாமட மடமை யேனிட ராணவ
திமிர மேயரி சூரிய ...... திரிலோக
தினக ராசிவ காரண பனக பூஷண ஆரண
சிவசு தாவரி நாரணன் ...... மருகோனே
குமரி சாமளை மாதுமை அமலி யாமளை பூரணி
குணக லாநிதி நாரணி ...... தருகோவே
குருகு காகும ரேசுர சரவ ணாசக ளேசுர
குறவர் மாமக ளாசைகொள் ...... மணியேசம்
பமர பாரப்ர பாருண படல தாரக மாசுக
பசுர பாடன பாளித ...... பகளேச
பசித பாரண வாரண துவச ஏடக மாவயில்
பரவு பாணித பாவல ...... பரயோக
சமப ராமத சாதல சமய மாறிரு தேவத
சமய நாயக மாமயில் ...... முதுவீர
சகல லோகமு மாசறு சகல வேதமு மேதொழு
சமர மாபுரி மேவிய ...... பெருமாளே.
பாடல் 714 ( உ த்தர§ம்ருர் )
ராகம் - காபி தாளம் - அங்கதாளம் (5 1/2)
(எடுப்பு - 1/2 தள்ளி)
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தனன தனன தனதான தனன தனன தனதான
தனன தனன தனதான ...... தனதான
சுருதி மறைக ளிருநாலு திசையி லதிபர் முநிவேர்கள்
துகரி லிருடி யெழுபேர்கள் ...... சுடர்மூவர்
சொலவில் முடிவில் முகியாத பகுதி புருடர் நவநாதர்
தொலைவி லுடுவி னுலகோர்கள் ...... மறையோர்கள்
அரிய சமய மொருகோடி அமாரர் சரணர் சதகோடி
அரிய மயனு மொருகொடி ...... யிவர்கூடி
அறிய அறிய அறியாத அடிக ளறிய அடியேனும்
அறிவு ளறியு மறிவூர ...... அருள்வாயே
வரைகள் தவிடு பொடியாக நிருதர் பதியு மழிவாக
மகர சலதி அளறாக ...... முதுசூரும்
மடிய அலகை நடமாட விஜய வனிதை மகிழ்வாக
மவுலி சிதறி இரைதேடி ...... வருநாய்கள்
நரிகள் கொடிகள் பசியாற உ திர நதிக ளலைமோத
நமனும் வெருவி யடிபேண ...... மயிலேறி
நளின வுபய கரவேலை முடுகு முருக வடமேரு
நகரி யுறையு மிமையோர்கள் ...... பெருமாளே.
பாடல் 715 ( உ த்தர§ம்ருர் )
ராகம் - ஸிந்து பைரவி தாளம் - ஆதி - திஸ்ர நடை (12)
தான தந்த தான தந்த தான தந்த தான தந்த
தான தந்த தான தந்த ...... தனதான
தோலெ லும்பு சீந ரம்பு பீளை துன்று கோழை பொங்கு
சொரி பிண்ட மாயு ருண்டு ...... வடிவான
தூல பங்க காயம் வம்பி லேசு மந்து நான்மெ லிந்து
சோரு மிந்த நோய கன்று ...... துயராற
ஆல முண்ட கோன கண்ட லோக முண்ட மால்வி ரிஞ்ச
னார ணங்க ளாக மங்கள் ...... புகழ்தாளும்
ஆன னங்கள் மூவி ரண்டு மாறி ரண்டு தோளு மங்கை
யாடல் வென்றி வேலு மென்று ...... நினைவேனோ
வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ரூபி யம்பை
வாணி பஞ்ச பாணி தந்த ...... முருகோனே
மாயை யைந்து வேக மைந்து பூத மைந்து நாத மைந்து
வாழ்பெ ருஞ்ச ராச ரங்க ...... ளுறைவோனே
வேலையன்பு கூர வந்த ஏக தந்த யானை கண்டு
வேடர் மங்கை யோடி யஞ்ச ...... அணைவோனே
வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவு கின்ற
மேரு மங்கை யாள வந்த ...... பெருமாளே.
பாடல் 716 ( உ த்தர§ம்ருர் )
ராகம் - ...;: தாளம் - தானனத் தனதான தானனத் தனதான
தானனத் தனதான ...... தனதான
நீள்புயற் குழல்மாதர் பேரினிற் க்ருபையாகி
நேசமுற் றடியேனு ...... நெறிகெடாய்
நேமியிற் பொருள்தேடி யோடியெய்த் துளம்வாடி
நீதியிற் சிவவாழ்வை ...... நினையாதே
பாழினுக் கிரையாய நாமம்வைத் தொருகோடி
பாடலுற் றிடவேசெய் ...... திடுமோச
பாவியெப் படிவாழ்வ னேயர்கட் குளதான
பார்வைசற் றருளோடு ...... பணியாயோ
ஆழியிற் றுயில்வோனு மாமலர்ப் பிரமாவு
மாகமப் பொருளோரு ...... மனைவோரும்
ஆனைமத் தகவோனும் ஞானமுற் றியல்வோரு
மாயிரத் திருநூறு ...... மறையோரும்
வாழுமுத் தரமேருர் மேவியற் புதமாக
வாகுசித் திரதோகை ...... மயிலேறி
மாறெனப் பொருசூர னீறெழப் பொரும்வேல
மான்மகட் குளனான ...... பெருமாளே.
பாடல் 717 ( உ த்தர§ம்ருர் )
ராகம் - ....; தாளம் - தான தந்தன தத்தா தத்தன
தான தந்தன தத்தா தத்தன
தான தந்தன தத்தா தத்தன ...... தனதான
மாதர் கொங்கையில் வித்தா ரத்திரு
மார்பி லங்கியல் முத்தா ரத்தினில்
வாச மென்குழ லிற்சே லைப்பொரும் ...... விழிவேலில்
மாமை யொன்றும லர்த்தாள் வைப்பினில்
வாகு வஞ்சியில் மெய்த்தா மத்தினில்
வானி ளம்பிறை யைப்போல் நெற்றியில் ...... மயலாகி
ஆத ரங்கொடு கெட்டே யிப்படி
ஆசை யின்கட லுக்கே மெத்தவும்
ஆகி நின்றுத வித்தே நித்தலும் ...... அலைவேனோ
ஆறி ரண்டுப ணைத்தோ ளற்புத
ஆயி ரங்கலை கத்தா மத்திப
னாயு ழன்றலை கிற்பே னுக்கருள் ...... புரிவாயே
சாத னங்கொடு தத்தா மெத்தென
வேந டந்துபொய் பித்தா வுத்தர
மேதெ னும்படி தற்காய் நிற்பவர் ...... சபையூடே
தாழ்வில் சுந்தர னைத்தா னொற்றிகொள்
நீதி தந்திர நற்சார் புற்றருள்
சால நின்றுச மர்த்தா வெற்றிகொ ...... ளரன்வாழ்வே
வேத முங்கரி யைச்சூழ் நித்தமும்
வேள்வி யும்புவி யிற்றா பித்தருள்
வேர்வி ழும்படி செய்த்தேர் மெய்த்தமிழ் ...... மறையோர்வாழ்
மேரு மங்கையி லத்தா வித்தக
வேலொ டும்படை குத்தா வொற்றிய
வேடர் மங்கைகொள் சித்தா பத்தர்கள் ...... பெருமாளே.
பாடல் 718 ( மதுராந்தகம் )
ராகம் - ....; தாளம் - தனதாந்த தத்த தனன தத்தத்
தந்த தத்த தந்த ...... தனதான
குதிபாய்ந்தி ரத்தம் வடிதொ ளைத்தொக்
கிந்த்ரி யக்கு ரம்பை ...... வினைகூர்தூர்
குணபாண்ட முற்ற கிலமெ னக்கைக்
கொண்டி ளைத்த யர்ந்து ...... சுழலாதே
உ திதாம்ப ரத்தை யுயிர்கெ டப்பொற்
கிண்கி ணிச்ச தங்கை ...... விதகீத
உ பயாம்பு யப்பு ணையையி னிப்பற்
றுங்க ருத்தை யென்று ...... தருவாயே
கதைசார்ங்க கட்கம் வளைய டற்சக்
ரந்த ரித்த கொண்டல் ...... மருகோனே
கருணாஞ்ச னக்க மலவி ழிப்பொற்
பைம்பு னக்க ரும்பின் ...... மணவாளா
மதனாந்த கர்க்கு மகவெ னப்பத்
மந்த னிற்பி றந்த ...... குமரேசா
மதுராந்த கத்து வடதி ருச்சிற்
றம்ப லத்த மர்ந்த ...... பெருமாளே.
பாடல் 719 ( மதுராந்தகம் )
ராகம் - பூர்வி கல்யாணி தாளம் - அங்கதாளம் (15)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தனதாந்த தத்த தனன தத்தத்
தந்த தத்த தந்த ...... தனதான
சயிலாங்க னைக்கு ருகியி டப்பக்
கங்கொ டுத்த கம்பரி¨ன் ...... வெகுசாரி
சதிதாண்ட வத்தர் சடையி டத்துக்
கங்கை வைத்த நம்பர் ...... உ ரைமாளச்
செயல்மாண்டு சித்த மவிழ நித்தத்
த்வம்பெ றப்ப கர்ந்த ...... வுபதேசஞ்
சிறியேன்த னக்கு முரைசெ யிற்சற்
றுங்கு ருத்து வங்கு ...... றையுமோதான்
அயில்வாங்கி யெற்றி யுததி யிற்கொக்
கன்ற னைப்பி ளந்து ...... சுரர்வாழ
அகிலாண்ட முற்று நொடியி னிற்சுற்
றுந்தி றற்ப்ர சண்ட ...... முழுநீல
மயில்தாண்ட விட்டு முதுகு லப்பொற்
குன்றி டித்த சங்க்ர ...... மவிநோதா
மதுராந்த கத்து வடதி ருச்சிற்
றம்ப லத்த மர்ந்த ...... பெருமாளே.
பாடல் 720 ( மதுராந்தகம் )
ராகம் - ....; தாளம் - தனதாந்தன தானன தந்தன
தனதாந்தன தானன தந்தன
தனதாந்தன தானன தந்தன ...... தந்ததான
மனைமாண்சுத ரான சுணங்கரு
மனம்வேந்திணை யான தனங்களு
மடிவேன்றனை யீண அணங்குறு ...... வம்பராதி
மயமாம்பல வான கணங்குல
மெனப்ராந்தியும் யானென தென்றுறு
வணவாம்பிர மாத குணங்குறி ...... யின்பசார
இனவாம்பரி தான்ய தனம்பதி
விடஏன்றெனை மோன தடம்பர
மிகுதாம்பதி காண கணங்கன ...... வும்பரேசா
இடவார்ந்தன சானு நயம்பெறு
கடகாங்கர சோண வியம்பர
இடாமங்கன தாளரு ளும்படி ...... யென்றுதானோ
தனதாந்தன தான தனந்தன
தெனதோங்கிட தோன துனங்கிட
தனவாம்பர மான நடம்பயில் ...... எம்பிரானார்
தமதாஞ்சுத தாபர சங்கம
மெனவோம்புறு தாவன வம்படர்
தகுதாம்பிர சேவித ரஞ்சித ...... வும்பர்வாழ்வே
முனவாம்பத மூடிக வந்தன
முயல்வான்பிடி மாடிமை யைங்கரர்
முகதாம்பின மேவுறு சம்ப்ரம ...... சங்கணாறு
முககாம்பிர மோடமர் சம்பன
மதுராந்தக மாநக ரந்திகழ்
முருகாந்திர மோடம ரும்பர்கள் ...... தம்பிரானே.
பாடல் 721 ( சேயூர் )
ராகம் - ...; தாளம் - தனனாதன தானன தானன
தனனாதன தானன தானன
தனனாதன தானன தானன ...... தனதான
முகிலாமெனும் வார்குழ லார்சிலை
புருவார்கயல் வேல்விழி யார்சசி
முகவார்தர ளாமென வேநகை ...... புரிமாதர்
முலைமாலிணை கோபுர மாமென
வடமாடிட வேகொடி நூலிடை
முதுபாளித சேலைகு லாவிய ...... மயில்போல்வார்
அகிசேரல்கு லார்தொடை வாழையின்
அழகார்கழ லார்தர வேய்தரு
அழகார்கன நூபுர மாடிட ...... நடைமேவி
அனமாமென யாரையு மால்கொள
விழியால்சுழ லாவிடு பாவையர்
அவர்பாயலி லேயடி யேனுட ...... லழிவேனோ
ககனார்பதி யோர்முறை கோவென
இருள்காரசு ரார்படை தூள்பட
கடலேழ்கிரி நாகமு நூறிட ...... விடும்வேலா
கமலாலய நாயகி வானவர்
தொழுமீசுர னாரிட மேவிய
கருணாகர ஞானப ராபரை ...... யருள்பாலா
மகிழ்மாலதி நாவல்ப லாகமு
குடனாடநி லாமயில் கோகில
மகிழ்நாடுறை மால்வளி நாயகி ...... மணவாளா
மதிமாமுக வாவடி யேனிரு
வினைதூள் பட வேயயி லேவிய
வளவாபுரி வாழ்மயில் வாகன ...... பெருமாளே.
பாடல் 722 ( திருவக்கரை )
ராகம் - குந்தலவராளி தாளம் - ஆதி
தனதன தத்தன தனதன தத்தன
தனதன தத்தன ...... தனதானா
கலகலெ னச்சில கலைகள் பிதற்றுவ
தொழிவ துனைச்சிறி ...... துரையாதே
கருவழிதத்திய மடுவ தனிற்புகு
கடுநர குக்கிடை ...... யிடைவீழா
உ லகு தனிற்பல பிறவி தரித்தற
வுழல்வது விட்டினி ...... யடிநாயேன்
உ னதடி மைத்திரள் அதனினு முட்பட
வுபய மலர்ப்பத ...... மருள்வாயே
குலகிரி பொட்டெழ அலைகடல் வற்றிட
நிசிசர னைப்பொரு ...... மயில்வீரா
குணதர வித்தக குமர புனத்திடை
குறமக ளைப்புணர் ...... மணிமார்பா
அலைபுன லிற்றவழ் வளைநில வைத்தரு
மணிதிரு வக்கரை ...... யுறைவோனே
அடியவ ரிச்சையி லெவையெவை யுற்றன
அவைதரு வித்தருள் ...... பெருமாளே.
பாடல் 723 ( திருவக்கரை )
ராகம் - ....; தாளம் - தத்தன தத்தன தத்தன தத்தன
தத்தன தத்தன தத்தன தத்தன
தத்தன தத்தன தத்தன தத்தன ...... தனதான
பச்சிலை யிட்டுமு கத்தைமி னுக்கிகள்
குத்திர வித்தைமி குத்தச மர்த்திகள்
பப்பர மட்டைகள் கைப்பொருள் பற்றிட ...... நினைவோர்கள்
பத்திநி ரைத்தவ ளத்தர ளத்தினை
யொத்தந கைப்பில்வி ழிப்பில்ம யக்கிகள்
பக்ஷமி குத்திட முக்கனி சர்க்கரை ...... யித்ழுறல்
எச்சி லளிப்பவர் கச்சணி மெத்தையில்
இச்சக மெத்தவு ரைத்துந யத்தொடு
மெத்திய ழைத்துஅ ணைத்தும யக்கிடு ...... மடமாதர்
இச்சையி லிப்படி நித்தம னத்துயர்
பெற்றுல கத்தவர் சிச்சியெ னத்திரி
இத்தொழி லிக்குணம் விட்டிட நற்பத ...... மருள்வாயே
நச்சர விற்றுயில் பச்சைமு கிற்கரு
ணைக்கடல் பத்மம லர்த்திரு வைப்புணர்
நத்துதரித்தக ரத்தர்தி ருத்துள ...... வணிமார்பர்
நட்டந டுக்கட லிற்பெரு வெற்பினை
நட்டர வப்பணி சுற்றிம தித்துள
நத்தமு தத்தையெ ழுப்பிய ளித்தவர் ...... மருகோனே
கொச்சைமொ ழிச்சிக றுத்தவி ழிச்சிசி
றுத்தஇ டைச்சிபெ ருத்தத னத்திகு
றத்தித னக்கும னப்ரிய முற்றிடு ...... குமரேசா
கொத்தவிழ் பத்மம லர்ப்பழ னத்தொடு
குற்றம றக்கடி கைப்புனல் சுற்றிய
கொட்புள நற்றிரு வக்கரை யுற்றுறை ...... பெருமாளே.
பாடல் 724 ( சிறுவை )
ராகம் - ஸிந்து பைரவி தாளம் - கண்டசாபு (2 1/2)
(எடுப்பு - 3/4 தள்ளி)
தந்ததன தனதான தந்ததன தனதான
தந்ததன தனதான ...... தனதான
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உ ருமாற
அண்டர்மன மகிழ்மீற ...... வருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனு முமையாளு ...... மகிழ்வாக
மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
மஞ்சினனு மயனாரு ...... மெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி ...... வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாளா
புந்திநிறை யறிவாள ...... வுயர்தோளா
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு ...... வடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செற§ருப
தண்டமிழின் மிகுநேய ...... முருகேசா
சந்தமு மடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு ...... பெருமாளே.
பாடல் 725 ( சிறுவை )
ராகம் - கேதாரம் தாளம் - அங்கதாளம் (8 1/2)
(எடுப்பு - 1/2 தள்ளி)
தகதிமி தகதிமி-4, தகதகிட-2 1/2, தகதிமி-2
தானன தானன தானான தானன
தானன தானன தானான தானன
தானன தானன தானான தானன ...... தனதான
சீதள வாரிஜ பாதாந மோநம
நாரத கீதவி நோதாந மோநம
சேவல மாமயில் ப்¡£தாந மோநம ...... மறைதேடுஞ்
சேகர மானப்ர தாபாந மோநம
ஆகம சாரசொ ரூபாந மோநம
தேவர்கள் சேனைம கீபாந மோநம ...... கதிதோயப்
பாதக நீவுகு டாராந மோநம
மாவசு ரேசக டோராந மோநம
பாரினி லேஜய வீராந மோநம ...... மலைமாது
பார்வதி யாள்தரு பாலாந மோநம
நாவல ஞானம னோலாந மோநம
பாலகு மாரசு வாமீந மோநம ...... அருள்தாராய்
போதக மாமுக னேரான சோதர
நீறணி வேணியர் நேயாப்ர பாகர
பூமக ளார்மரு கேசாம கோததி ...... யிகல்சூரா
போதக மாமறை ஞானாத யாகர
தேனவிழ் நீபந றாவாரு மார்பக
பூரண மாமதி போலாறு மாமுக ...... முருகேசா
மாதவர் தேவர்க ளோடேமு ராரியு
மாமலர் மீதுறை வேதாவு மேபுகழ்
மாநில மேழினு மோலான நாயக ...... வடிவேலா
வானவ ரூரினும் வீறாகி வீறள
காபுரி வாழ்வினு மேலாக வேதிரு
வாழ்சிறு வாபுரி வாழ்வேசு ராதிபர் ...... பெருமாளே.
பாடல் 726 ( சிறுவை )
ராகம் - பீம்பளாஸ் தாளம் - ஆதி - திஸ்ரநடை (12)
தனன தான தனன தந்த தனன தான தனன தந்த
தனன தான தனன தந்த ...... தனதான
பிறவி யான சடமி றங்கி வழியி லாத துறைசெ றிந்து
பிணிக ளான துயரு ழன்று ...... தடுமாறிப்
பெருகு தீய வினையி னொந்து கதிக டோறு மலைபொ ருந்தி
பிடிப டாத ஜனன நம்பி ...... யழியாதே
நறைவி ழாத மலர்மு கந்த வரிய மோன வழிதி றந்த
நளின பாத மெனது சிந்தை ...... யகலாதே
நரர்சு ராதி பரும்வ ணங்கு மினிய சேவை தனைவி ரும்பி
நலன தாக அடிய னென்று ...... பெறுவேனோ
பொறிவ ழாத முநிவர் தங்கள் நெறிவ ழாத பிலனு ழன்று
பொருநி சாச ரனைநி னைந்து ...... வினைநாடிப்
பொருவி லாம லருள்பு ரிந்து மயிலி னேறி நொடியில் வந்து
புளக மேவ தமிழ்பு னைந்த ...... முருகோனே
சிறுவ ராகி யிருவ ரந்த கரிப தாதி கொடுபொ ருஞ்சொல்
சிலையி ராம னுடனெ திர்ந்து ...... சமராடிச்
செயம தான நகர மர்ந்த அளகை போல வளமி குந்த
சிறுவை மேவி வரமி குந்த ...... பெருமாளே.
பாடல் 727 ( சிறுவை )
ராகம் - ...; தாளம் - தான தந்தன தானன தானன
தான தந்தன தானன தானன
தான தந்தன தானன தானன ...... தனதான
வேலி ரண்டெனு நீள்விழி மாதர்கள்
காத லின்பொருள் மேவின பாதகர்
வீணில் விண்டுள நாடிய ரூமைகள் ...... விலைகூறி
வேளை யென்பதி லாவசை பேசியர்
வேசி யென்பவ ராமிசை மோகிகள்
மீது நெஞ்சழி யாசையி லேயுழல் ...... சிறியேனும்
மால யன்பர னாரிமை யோர்முனி
வோர் புரந்தர னாதிய ரேதொழ
மாத வம்பெறு தாளிணை யேதின ...... மறவாதே
வாழ்த ருஞ்சிவ போகந னூனெறி
யேவி ரும்பி வினாவுட னேதொழ
வாழ்வ ரந்தரு வாயடி யேனிடர் ...... களைவாயே
நீல சுந்தரி கோமளி யாமளி
நாட கம்பயில் நாரணி பூரணி
நீடு பஞ்சவி சூலினி மாலினி ...... யுமைகாளி
நேயர் பங்கெழு மாதவி யாள்சிவ
காம சுந்தரி யேதரு பாலக
நீர்பொ ருஞ்சடை யாரருள் தேசிக ...... முருகேச
ஆலில் நின்றுல கோர்நிலை யேபெற
மாநி லங்களெ லாநிலை யேதரு
ஆய னந்திரு வூரக மால்திரு ...... மருகோனே
ஆட கம்பயில் கோபுர மாமதி
லால யம்பல வீதியு மேநிறை
வான தென்சிறு வாபுரி மேவிய ...... பெருமாளே.
பாடல் 728 ( திருவாமாத்தூர் )
ராகம் - ....; தாளம் - தனதன தான தானன, தனதன தான தானன
தனதன தான தானன ...... தனதான
அடல்வடி வேல்கள் வாளிக ளவைவிட வோடல் நேர்படு
மயில்விழி யாலு மாலெனு ...... மதவேழத்
தளவிய கோடு போல்வினை யளவள வான கூர்முலை
யதின்முக மூடு மாடையி ...... னழகாலுந்
துடியிடை யாலும் வாலர்கள் துயர்வுற மாய மாயொரு
துணிவுட னூடு மாதர்கள் ...... துணையாகத்
தொழுதவர் பாத மோதியுன் வழிவழி யானெ னாவுயர்
துலையலை மாறு போலுயிர் ...... சுழல்வேனோ
அடவியி னூடு வேடர்க ளரிவையொ டாசை பேசியு
மடிதொழு தாடு மாண்மையு ...... முடையோனே
அழகிய தோளி ராறுடை அறுமுக வேளெ னாவுனை
அறிவுட னோது மாதவர் ...... பெருவாழ்வே
விடையெறு மீசர் நேசமு மிகநினை வார்கள் தீவினை
யுகநெடி தோட மேலணை ...... பவர்மூதூர்
விரைசெறி தோகை மாதர்கள் விரகுட னாடு மாதையில்
விறல்மயில் மீது மேவிய ...... பெருமாளே.
பாடல் 729 ( திருவாமாத்தூர் )
ராகம் - ....; தாளம் - தந்த தத்தன தானாதன தந்த தத்தன தானாதன
தந்த தத்தன தானாதன ...... தனதான
கண்க யற்பிணை மானொடுற வுண்டெ னக்கழை தோளானது
நன்க மைக்கின மாமமென ...... முகையான
கஞ்ச மொத்தெழு கூர்மாமுலை குஞ்ச ரத்திரு கோடோடுற
விஞ்சு மைப்பொரு கார்கோதைகொ ...... டுயர்காலன்
பெண்ட னக்குள கோலாகல மின்றெ டுத்திளை யோராவிகள்
மன்பி டிப்பது போல்நீள்வடி ...... வுடைமாதர்
பின்பொ ழித்திடு மாமாயையி லன்பு வைத்தழி யாதேயுறு
கிஞ்சி லத்தனை தாள்பேணிட ...... அருள்தாராய்
விண்ட னக்குற வானோனுடல் கண்ப டைத்தவன் வேதாவொடு
விண்டு வித்தகன் வீழ்தாளினர் ...... விடையேறி
வெந்த னத்துமை யாள்மேவிய சந்த னப்புய மாதீசுரர்
வெங்க யத்துரி யார்போர்வையர் ...... மிகுவாழ்வே
தண்பு டைப்பொழில் சூழ்மாதையில் நண்பு வைத்தருள் தாராதல
முங்கி ளைத்திட வானீள்திசை ...... யொடுதாவித்
தண்டரக் கர்கள் கோகோவென விண்டி டத்தட மாமீமிசை
சண்ட விக்ரம வேலேவிய ...... பெருமாளே.
பாடல் 730 ( திருவாமாத்தூர் )
ராகம் - ....; தாளம் - தனதன தானத் தானன, தனதன தானத் தானன
தனதன தானத் தானன ...... தனதான
கருமுகில் போல்மட் டாகிய அளகிகள் தேனிற் பாகொடு
கனியமு தூறித் தேறிய ...... மொழிமாதர்
கலவிகள் நேரொப் பாகிகள் மதனிகள் காமக் க்ரோதிகள்
கனதன பாரக் காரிகள் ...... செயலோடே
பொருகயல் வாளைத் தாவிய விழியினர் சூறைக் காரிகள்
பொருளள வாசைப் பாடிகள் ...... புவிமீதே
பொதுவிகள் போகப் பாவிகள் வசமழி வேனுக் கோரருள்
புரிவது தானெப் போதது ...... புகல்வாயே
தருவடு தீரச் சூரர்கள் அவர்கிளை மாளத் தூளெழ
சமனிலை யேறப் பாறொடு ...... கொடிவீழத்
தனதன தானத் தானன எனஇசை பாடிப் பேய்பல
தசையுண வேல்விட் டேவிய ...... தனிவீரா
அரிதிரு மால்சக் ராயுத னவனிளை யாள் முத் தார்நகை
அழகுடை யாள்மெய்ப் பாலுமை ...... யருள்பாலா
அரவொடு பூளைத் தார்மதி அறுகொடு வேணிச் சூடிய
அழகர்தென் மாதைக் கேயுறை ...... பெருமாளே.
பாடல் 731 ( திருவாமாத்தூர் )
ராகம் - ....; தாளம் - தான தனதன தனதன தனதன
தான தனதன தனதன தனதன
தான தனதன தனதன தனதன ...... தனதான
கால முகிலென நினைவுகொ டுருவிலி
காதி யமர்பொரு கணையென வடுவகிர்
காணு மிதுவென இளைஞர்கள் விதவிடு ...... கயலாலுங்
கான மமர்குழ லரிவையர் சிலுகொடு
காசி னளவொரு தலையணு மனதினர்
காம மிவர்சில கபடிகள் படிறுசொல் ...... கலையாலுஞ்
சால மயல்கொடு புளகித கனதன
பார முறவண முருகவிழ் மலரணை
சாயல் தனின்மிகு கலவியி லழிவுறும் ...... அடியேனைச்
சாதி குலமுறு படியினின் முழுகிய
தாழ்வ தறஇடை தருவன வெளியுயர்
தாள தடைவது தவமிக நினைவது ...... தருவாயே
வேலை தனில்விழி துயில்பவ னரவணை
வேயி னிசையது நிரைதனி லருள்பவன்
வீர துரகத நரபதி வனிதையர் ...... கரமீதே
வேறு வடிவுகொ டுறிவெணெய் தயிரது
வேடை கெடவமு தருளிய பொழுதினில்
வீசு கயிறுட னடிபடு சிறியவ ...... னதிகோப
வாலி யுடனெழு மரமற நிசிசரன்
வாகு முடியொரு பதுகர மிருபது
மாள வொருசரம் விடுமொரு கரியவன் ...... மருகோனே
வாச முறுமலர் விசிறிய பரிமள
மாதை நகர்தனி லுறையுமொ ரறுமுக
வானி லடியவ ரிடர்கெட அருளிய ...... பெருமாளே.
பாடல் 732 ( தச்சூர் )
ராகம் - ...; தாளம் - தத்தா தனத்தான தாத்தத் தனந்த
தத்தா தனத்தான தாத்தத் தனந்த
தத்தா தனத்தான தாத்தத் தனந்த ...... தனதான
அச்சா யிறுக்காணி காட்டிக் கடைந்த
செப்பார் முலைக்கோடு நீட்டிச் சரங்க
ளைப்போல் விழிக்கூர்மை நோக்கிக் குழைந்து ...... உ றவாடி
அத்தா னெனக்காசை கூட்டித் தயங்க
வைத்தா யெனப்பேசி மூக்கைச் சொறிந்து
அக்கா லொருக்கால மேக்கற் றிருந்தி ...... ரிலையாசை
வைச்சா யெடுப்பான பேச்சுக் கிடங்க
ளொப்பா ருனக்கீடு பார்க்கிற் கடம்பன்
மட்டோ எனப்பாரின் மூர்க்கத் தனங்க ...... ளதனாலே
மைப்பா கெனக்கூறி வீட்டிற் கொணர்ந்து
புற்பா யலிற்காலம் வீற்றுக் கலந்து
வைப்பார் தமக்காசை யாற்பித் தளைந்து ...... திரிவேனோ
எச்சாய் மருட்பாடு மேற்பட் டிருந்த
பிச்சா சருக்கோதி கோட்டைக் கிலங்க
மிக்கா நினைப்போர்கள் வீக்கிற் பொருந்தி ...... நிலையாயே
எட்டா மெழுத்தேழை யேற்குப் பகர்ந்த
முத்தா வலுப்பான போர்க்குட் டொடங்கி
யெக்காலு மக்காத சூர்க்கொத் தரிந்த ...... சினவேலா
தச்சா மயிற்சேவ லாக்கிப் பிளந்த
சித்தா குறப்பாவை தாட்குட் படிந்து
சக்காகி யப்பேடை யாட்குப் புகுந்து ...... மணமாகித்
தப்பாம லிப்பூர்வ மேற்குத் தரங்கள்
தெற்காகு மிப்பாரில் கீர்த்திக் கிசைந்த
தச்சூர் வடக்காகு மார்க்கத் தமர்ந்த ...... பெருமாளே.
பாடல் 733 ( திருக்கோவலு¡ர் )
ராகம் - ....; தாளம் - தான தானன தானன, தான தானன தானன
தான தானன தானன ...... தனதான
பாவ நாரிகள் மாமட மாதர் வீணிக ளாணவ
பாவை யாரிள நீரன ...... முலையாலும்
பார்வை யாமிகு கூரயி லாலு மாமணி யார்குழை
பார காரன வார்குழ ...... லதனாலுஞ்
சாவ தார விதாரமு தார்த ராவித ழாலித
சாத மூரலி தாமதி ...... முகமாலுஞ்
சார்வ தாவடி யேனிடர் வீற மாலறி வேமிகு
சார மாயதி லேயுற ...... லொழிவேனோ
ஆவ ஆர்வன நான்மறை யாதி மூல பராவரி
யாதி காணரி தாகிய ...... பரமேச
ஆதி யாரருள் மாமுரு கேச மால்மரு கேசுர
னாதி தேவர்க ளியாவர்கள் ...... பணிபாத
கோவ தாமறை யோர்மறை யோது மோதம் விழாவொலி
கோடி யாகம மாவொலி ...... மிகவீறும்
கோவை மாநகர் மேவிய வீர வேலயி லாயுத
கோதை யானையி னோடமர் ...... பெருமாளே.
பாடல் 734 ( தேவனூர் )
ராகம் - நாட்டகுறிஞ்சி தாளம் - ஆதி - திஸ்ரநடை (12)
தான தான தந்த தந்த, தான தான தந்த தந்த
தான தான தந்த தந்த ...... தனதான
ஆறு மாறு மஞ்சு மஞ்சும் ஆறு மாறு மஞ்சு மஞ்சும்
ஆறு மாறு மஞ்சு மஞ்சும் ...... அறுநாலும்
ஆறு மாய சஞ்ச லங்கள் வேற தாவி ளங்கு கின்ற
ஆரணாக மங்க டந்த ...... கலையான
ஈறு கூற ரும்பெ ருஞ்சு வாமி யாயி ருந்த நன்றி
யேது வேறி யம்ப லின்றி ...... யொருதானாய்
யாவு மாய்ம னங்க டந்த மோன வீட டைந்தொ ருங்கி
யான வாவ டங்க என்று ...... பெறுவேனோ
மாறு கூறி வந்தெ திர்ந்த சூரர் சேனை மங்க வங்க
வாரி மேல்வெ குண்ட சண்ட ...... விததாரை
வாகை வேல கொன்றை தும்பை மாலை கூவி ளங்கொ ழுந்து
வால சோம னஞ்சு பொங்கு ...... பகுவாய
சீறு மாசு ணங்க ரந்தை ஆறு வேணி கொண்ட நம்பர்
தேசி காக டம்ப லங்கல் ...... புனைவோனே
தேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு
தேவ னூர்வி ளங்க வந்த ...... பெருமாளே.
பாடல் 735 ( தேவனூர் )
ராகம் - வலஜி தாளம் - ஆதி - திஸ்ரநடை (12)
தான தான தந்த தந்த, தான தான தந்த தந்த
தான தான தந்த தந்த ...... தனதான
தார காசு ரன்ச ரிந்து வீழ வேரு டன்ப றிந்து
சாதி பூத ரங்கு லுங்க ...... முதுமீனச்
சாக ரோதை யங்கு ழம்பி நீடு தீகொ ளுந்த அன்று
தாரை வேல்தொ டுங்க டம்ப ...... மததாரை
ஆர வார வும்பர் கும்ப வார ணாச லம்பொ ருந்து
மானை யாளு நின்ற குன்ற ...... மறமானும்
ஆசை கூரு நண்ப என்று மாம யூர கந்த என்றும்
ஆவல தீர என்று நின்று ...... புகழ்வேனோ
பார மார்த ழும்பர் செம்பொன் மேனி யாளர் கங்கை வெண்க
பால மாலை கொன்றை தும்பை ...... சிறுதாளி
பார மாசு ணங்கள் சிந்து வார வார மென்ப டம்பு
பானல் கூவி ளங்க ரந்தை ...... அறுகோடே
சேர வேம ணந்த நம்ப ¡£ச னாரி டஞ்சி றந்த
சீத ளார விந்த வஞ்சி ...... பெருவாழ்வே
தேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு
தேவ னூர்வி ளங்க வந்த ...... பெருமாளே.
பாடல் 736 ( தேவனூர் )
ராகம் - மாண்ட் தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தான தானன தனனா தனதன
தான தானன தனனா தனதன
தான தானன தனனா தனதன ...... தந்ததான
காணொ ணாதது உ ருவோ டருவது
பேசொ ணாதது உ ரையே தரவது
காணு நான்மறை முடிவாய் நிறைவது ...... பஞ்சபூதக்
காய பாசம தனிலே யுறைவது
மாய மாயுட லறியா வகையது
காய மானவ ரெதிரே யவரென ...... வந்துபேசிப்
பேணொ ணாதது வெளியே யொளியது
மாய னாரய னறியா வகையது
பேத பேதமொ டுலகாய் வளர்வது ...... விந்துநாதப்
பேரு மாய்கலை யறிவாய் துரியவ
தீத மானது வினையேன் முடிதவ
பேறு மாயருள் நிறைவாய் விளைவது ...... ஒன்றுநீயே
வீணொ ணாதென அமையா தசுரரை
நூறி யேயுயிர் நமனீ கொளுவென
வேல்க டாவிய கரனே யுமைமுலை ...... யுண்டகோவே
வேத நான்முக மறையோ னொடும்விளை
யாடி யேகுடு மியிலே கரமொடு
வீற மோதின மறவா குறவர்கு ...... றிஞ்சியூடே
சேணொ ணாயிடு மிதண்மே லரிவையை
மேவி யேமயல் கொளலீ லைகள்செய்து
சேர நாடிய திருடா வருடரு ...... கந்தவேளே
சேரொ ணாவகை வெளியே திரியுமெய்ஞ்
ஞான யோகிக ளுளமே யுறைதரு
தேவ னூர்வரு குமரா வமரர்கள் ...... தம்பிரானே.
பாடல் 737 ( திருவதிகை )
ராகம் - .... ; தாளம் - தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனனத்
தனதனனத் தனதனனத் ...... தனதான
பரவுவரிக் கயல்குவியக் குயில்கிளியொத் துரைபதறப்
பவளநிறத் ததரம்விளைத் ...... தமுதூறல்
பருகிநிறத் தரளமணிக் களபமுலைக் குவடசையப்
படைமதனக் கலையடவிப் ...... பொதுமாதர்
சொருகுமலர்க் குழல்சரியத் தளர்வுறுசிற் றிடைதுவளத்
துகிலகலக் க்ருபைவிளைவித் ...... துருகாமுன்
சொரிமலர்மட் டலரணைபுக் கிதமதுரக் கலவிதனிற்
சுழலுமனக் கவலையொழித் ...... தருள்வாயே
கருகுநிறத் தசுரன்முடித் தலையொருபத் தறமுடுகிக்
கணைதொடுமச் சுதன்மருகக் ...... குமரேசா
கயிலைமலைக் கிழவனிடக் குமரிவிருப் பொடுகருதக்
கவிநிறையப் பெறும்வரிசைப் ...... புலவோனே
திரள்கமுகிற் றலையிடறிப் பலகதலிக் குலைசிதறிச்
செறியும்வயற் கதிரலையத் ...... திரைமோதித்
திமிதிமெனப் பறையறையப் பெருகுபுனற் கெடிலநதித்
திருவதிகைப் பதிமுருகப் ...... பெருமாளே.
பாடல் 738 ( திருவதிகை )
ராகம் - ....; தாளம் - தனன தானன தனதன தனதன
தனன தானன தனதன தனதன
தனன தானன தனதன தனதன ...... தனதான
விடமும் வேலன மலரன விழிகளு
மிரத மேதரு மமுதெனு மொழிகளும்
விரகி னாலெழு மிருதன வகைகளு ...... மிதமாடி
மிகவு மாண்மையு மெழினல முடையவர்
வினையு மாவியு முடனிரு வலையிடை
வெளியி லேபட விசிறிய விஷமிக ...... ளுடன்மேவா
இடரு றாதுனை நினைபவர் துணைகொள
இனிமை போலெழு பிறவியெ னுவரியி
னிடைகெ டாதினி யிருவினை யிழிவினி ...... லிழியாதே
இசையி னாடொறு மிமையவர் முநிவர்கள்
ககன பூபதி யிடர்கெட அருளிய
இறைநி னாறிரு புயமென வுரைசெய ...... அருள்வாயே
படரு மார்பினி லிருபது புயமதொ
டரிய மாமணி முடியொளி ரொருபது
படியி லேவிழ வொருகணை தொடுபவ ...... ரிடமாராய்
பரவை யூடெரி பகழியை விடுபவர்
பரவு வார்வினை கெடஅரு ளுதவியெ
பரவு பால்கட லரவணை துயில்பவர் ...... மருகோனே
அடர வேவரு மசுரர்கள் குருதியை
அரக ராவென அலகைகள் பலியுண
அலையும் வேலையும் அலறிட எதிர்பொரு ...... மயில்வீரா
அமர ராதிய ரிடர்பட அடர்தரு
கொடிய தானவர் திரிபுர மெரிசெய்த
அதிகை மாநகர் மருவிய சசிமகள் ...... பெருமாளே.
பாடல் 739 ( திருவர்முர் )
ராகம் - ....; தாளம் - தான தனன தனத்தந் ...... தனதான
சீத மதிய மெறிக்குந் ...... தழலாலே
சீறி மதனன் வளைக்குஞ் ...... சிலையாலே
ஓத மருவி யலைக்குங் ...... கடலாலே
ஊழி யிரவு தொலைக்கும் ...... படியொதான்
மாது புகழை வளர்க்குந் ...... திருவர்முர்
வாழு மயிலி லிருக்குங் ...... குமரேசா
காத லடியர் கருத்தின் ...... பெருவாழ்வே
காலன் முதுகை விரிக்கும் ...... பெருமாளே.
பாடல் 740 ( வடுகூர் )
ராகம் - ரேவதி தாளம் - ஆதி
தனதன தனனா தனதன தனனா
தனதன தனனா ...... தனதான
அரியய னறியா தவரெரி புர்மு
ணதுபுக நகையே ...... வியநாதர்
அவிர்சடை மிசையோர் வனிதையர் பதிசீ
றழலையு மழுநேர் ...... பிடிநாதர்
வரைமக ளொருகூ றுடையவர் மதனா
கமும்விழ விழியே ...... வியநாதர்
மனமகிழ் குமரா எனவுன திருதாள்
மலரடி தொழுமா ...... றருள்வாயே
அருவரை யிருகூ றிடவொரு மயில்மேல்
அவனியை வலமாய் ...... வருவோனே
அமரர்க ளிகல்நீ டசுரர்கள் சிரமேல்
அயில்தனை விசையாய் ...... விடுவோனே
வரிசையொ டொருமா தினைதரு வனமே
மருவியொர் குறமா ...... தணைவேடா
மலைகளில் மகிழ்வாய் மருவிநல் வடுகூர்
வருதவ முநிவோர் ...... பெருமாளே.
பாடல் 741 ( திருத்துறையூர் )
ராகம் - ....; தாளம் - தானத்தன தானத்தன தானத்தன தானத்தன
தானத்தன தானத்தன ...... தனதான
ஆரத்தன பாரத்துகில் மூடிப்பலர் காணக்கையில்
யாழ்வைத்திசை கூரக்குழ ...... லுடைசோர
ஆகப்பனி நீரப்புழு கோடக்குழை யாடப்பிரை
யாசப்படு வார்பொட்டணி ...... சசிநேர்வாள்
கூரக்கணை வேல்கட்கயல் போலச்சுழல் வார்சர்க்கரை
கோவைக்கனி வாய்பற்கதி ...... ரொளிசேருங்
கோலக்குயி லார்பட்டுடை நூலொத்திடை யார்சித்திர
கோபச்செய லார்பித்தர்க ...... ளுறவாமோ
பூரித்தன பாரச்சடை வேதக்குழ லாள்பத்தர்கள்
பூசைக்கியல் வாள்பத்தினி ...... சிவகாமி
பூமிக்கடல் மூவர்க்குமு னாள்பத்திர காளிப்புணர்
போகர்க்குப தேசித்தருள் ...... குருநாதா
சூரக்குவ டாழித்தவி டாய்முட்டசு ராருக்கிட
சோர்விற்கதிர் வேல்விட்டருள் ...... விறல்வீரா
தோகைச்செய லாள்பொற்பிர காசக்குற மான்முத்தொடு
சோதித்துறை யூர்நத்திய ...... பெருமாளே.
பாடல் 742 ( திருத்துறையூர் )
ராகம் - ....; தாளம் - தனதான தனத்தன தானன
தனதான தனத்தன தானன
தனதான தனத்தன தானன ...... தனதான
வெகுமாய விதத்துரு வாகிய
திறமேப ழகப்படு சாதக
விதமேழ்க டலிற்பெரி தாமதில் ...... சுழலாகி
வினையான கருக்குழி யாமெனு
மடையாள முளத்தினின் மேவினும்
விதியாரும் விலக்கவொ ணாதெனு ...... முதியோர்சொல்
தகவாம தெனைப்பிடி யாமிடை
கயிறாலு மிறுக்கிம காகட
சலதாரை வெளிக்கிடை யேசெல ...... வுருவாகிச்
சதிகாரர் விடக்கதி லேதிரள்
புழுவாக நெளித்தெரி யேபெறு
மெழுகாக வுருக்குமு பாதிகள் ...... தவிர்வேனோ
உ ககால நெருப்பதி லேபுகை
யெழவேகு முறைப்படு பாவனை
யுறவேகு கையிற்புட மாய்விட ...... வெளியாகி
உ லவாநர குக்கிரை யாமவர்
பலவோர்கள் தலைக்கடை போயெதிர்
உ ளமாழ்கி மிகக்குழை வாகவு ...... முறவாடித்
தொகலாவ தெனக்கினி தானற
வளமாக அருட்பத மாமலர்
துணையேப ணியத்தரு வாய்பரி ...... மயில்வேலா
துதிமாத வர்சித்தர்ம கேசுரர்
அரிமால்பி ரமர்க்கருள் கூர்தரு
துறையூர்நக ரிற்குடி யாய்வரு ...... பெருமாளே.
பாடல் 743 ( திருநாவலு¡ர் )
ராகம் - ....; தாளம் - தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த ...... தனதான
கோல மறை யொத்த மாலைதனி லுற்ற
கோரமதன் விட்ட ...... கணையாலே
கோதிலத ருக்கள் மேவுபொழி லுற்ற
கோகிலமி குத்த ...... குரலாலே
ஆலமென விட்டு வீசுகலை பற்றி
ஆரழலி றைக்கு ...... நிலவாலே
ஆவிதளர் வுற்று வாடுமெனை நித்த
மாசைகொட ணைக்க ...... வரவேணும்
நாலுமறை கற்ற நான்முகனு தித்த
நாரணனு மெச்சு ...... மருகோனே
நாவலர்ம திக்க வேல்தனையெ டுத்து
நாகமற விட்ட ...... மயில்வீரா
சேலெனும் விழிச்சி வேடுவர் சிறுக்கி
சீரணி தனத்தி ...... லணைவோனே
சீதவயல் சுற்று நாவல்தனி லுற்ற
தேவர்சிறை விட்ட ...... பெருமாளே.
பாடல் 744 ( திருவெண்ணெய்நல்லு¡ர் )
ராகம் - ...; தாளம் -
தனதன தத்தன தனதன தத்தன
தனதன தத்தன தனதன தத்தன
தனதன தத்தன தனதன தத்தன ...... தனதான
பலபல தத்துவ மதனை யெரித்திருள்
பரையர ணப்படர் வடவன லுக்கிரை
படநட நச்சுடர் பெருவெளி யிற்கொள ...... விடமேவிப்
பவன மொழித்திரு வழியை யடைத்தொரு
பருதி வழிப்பட விடல்கக னத்தொடு
பவுரி கொளச்சிவ மயமென முற்றிய ...... பர்முடே
கலகலெ னக்கழல் பரிபுர பொற்பத
வொலிமலி யத்திரு நடன மியற்றிய
கனக சபைக்குளி லுருகி நிறைக்கட ...... லதில்மூழ்கிக்
கவுரி மினற்சடை யரனொடு நித்தமொ
டனக சகத்துவம் வருதலு மிப்படி
கழிய நலக்கினி நிறமென விற்றுட ...... லருள்வாயே
புலையர் பொடித்தளும் அமண ருடற்களை
நிரையில் கழுக்களி லுறவிடு சித்திர
புலவனெ னச்சில விருது படைத்திடு ...... மிளையோனே
புனமலை யிற்குற மகளய லுற்றொரு
கிழவ னெனச்சுனை தனில வளைப்புய
புளகித முற்றிபம் வரவணை யப்புணர் ...... மணிமார்பா
மலைசிலை பற்றிய கடவு ளிடத்துறை
கிழவி யறச்சுக குமரி தகப்பனை
மழுகொடு வெட்டிய நிமலிகை பெற்றருள் ...... முருகோனே
மகிழ்பெணை யிற்கரை பொழில்முகில் சுற்றிய
திருவெணெய் நற்பதி புகழ்பெற அற்புத
மயிலின் மிசைக்கொடு திருநட மிட்டுறை ...... பெருமாளே.
பாடல் 745 ( திருப்பாதிரிப்புலியூர் )
ராகம் - பைரவி தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2
தனதன தனன தனந்த தானன
தனதன தனன தனந்த தானன
தனதன தனன தனந்த தானன ...... தனதான
நிணமொடு குருதி நரம்பு மாறிய
தசைகுடல் மிடையு மெலும்பு தோலிவை
நிரைநிரை செறியு முடம்பு நோய்படு ...... முதுகாயம்
நிலைநிலை யுருவ மலங்க ளாவது
நவதொளை யுடைய குரம்பை யாமிதில்
நிகழ்தரு பொழுதில் முயன்று மாதவ ...... முயவோரும்
உ ணர்விலி செபமுத லொன்று தானிலி
நிறையிலி முறையிலி யன்பு தானிலி
உ யர்விலி யெனினுமெ னெஞ்சு தானினை ...... வழியாமுன்
ஒருதிரு மரகத துங்க மாமிசை
யறுமுக மொளிவிட வந்து நான்மறை
யுபநிட மதனை விளங்க நீயருள் ...... புரிவாயே
புணரியில் விரவி யெழுந்த ஞாயிறு
விலகிய புரிசை யிலங்கை வாழ்பதி
பொலமணி மகுட சிரங்கள் தாமொரு ...... பதுமாறிப்
புவியிடை யுருள முனிந்து கூர்கணை
யுறுசிலை வளைய வலிந்து நாடிய
புயலதி விறலரி விண்டு மால்திரு ...... மருகோனே
அணிதரு கயிலை நடுங்க வோரெழு
குலகிரி யடைய இடிந்து தூளெழ
அலையெறி யுததி குழம்ப வேல்விடு ...... முருகோனே
அமலைமு னரிய தவஞ்செய் பாடல
வளநகர் மருவி யமர்ந்த தேசிக
அறுமுக குறமக ளன்ப மாதவர் ...... பெருமாளே.
பாடல் 746 ( திருமாணிகுழி )
ராகம் - ....; தாளம் - தனத்த தானன தானான தானன
தனத்த தானன தானான தானன
தனத்த தானன தானான தானன ...... தந்ததான
மதிக்கு நேரெனும் வாண்மூகம் வான்மக
நதிக்கு மேல்வரு சேலேனு நேர்விழி
மணத்த வார்குழல் மாமாத ராரிரு ...... கொங்¨க்முழ்கி
மதித்த பூதர மாமாம னோலயர்
செருக்கி மேல்விழ நாடோறு மேமிக
வடித்த தேன்மொழி வாயூற லேநுகர் ...... பண்டநாயேன்
பதித்த நூபுர சீர்பாத மாமலர்
படைக்குள் மேவிய சீராவொ டேகலை
பணைத்த தோள்களொ டீராறு தோடுகள் ...... தங்குகாதும்
பணக்க லாபமும் வேலொடு சேவலும்
வடிக்கொள் சூலமும் வாள்வீசு நீள்சிலை
படைத்த வாகையு நாடாது பாழில்ம ...... யங்கலாமோ
கதித்து மேல்வரு மாசூரர் சூழ்படை
நொறுக்கி மாவுயர் தேரோடு மேகரி
கலக்கி யூர்பதி த¨முள வேவிடும் ...... வஞ்சவேலா
களித்த பேய்கண மாகாளி கூளிகள்
திரட்பி ரேதமெ லேமேவி மூளைகள்
கடித்த பூதமொ டேபாடி யாடுதல் ...... கண்டவீரா
குதித்து வானர மேலேறு தாறுகள்
குலைத்து நீள்கமு கூடாடி வாழைகொள்
குலைக்கு மேல்விழ வேரேறு போகமும் ...... வஞ்சிதோயுங்
குளத்தி லு¡றிய தேனூறல் மாதுகள்
குடித்து லாவியெ சேலோடு மாணிகொள்
குழிக்குள் மேவிய வானோர்க ளேதொழு ...... தம்பிரானே.
பாடல் 747 ( திருவேட்களம் )
ராகம் - பெஹாக் தாளம் - திஸ்ர த்ருபுடை (7)
தனனத்தன தாத்தன தானன
தனனத்தன தாத்தன தானன
தனனத்தன தாத்தன தானன ......தனதான
சதுரத்தரை நோக்கிய பூவொடு
கதிரொத்திட ஆக்கிய கோளகை
தழையச்சிவ பாக்கிய நாடக ...... அநுபூதி
சரணக்கழல் காட்டியெ னாணவ
மலமற்றிட வாட்டிய ஆறிரு
சயிலக்குல மீட்டிய தோளொடு ...... முகமாறுங்
கதிர்சுற்றுக நோக்கிய பாதமு
மயிலிற்புற நோக்கிய னாமென
கருணைக்கடல் காட்டிய கோலமும் ...... அடியேனைக்
கனகத்தினு நோக்கினி தாயடி
யவர்முத்தமி ழாற்புக வேபர
கதிபெற்றிட நோக்கிய பார்வையு ...... மறவேனே
சிதறத்தரை நாற்றிசை பூதர
நெரியப்பறை மூர்க்கர்கள் மாமுடி
சிதறக்கட லார்ப்புற வேயயில் ...... விடுவோனே
சிவபத்தினி கூற்றினை மோதிய
பதசத்தினி மூத்தவி நாயகி
செகமிப்படி தோற்றிய பார்வதி ...... யருள்பாலா
விதுரற்கும ராக்கொடி யானையும்
விகடத்துற வாக்கிய மாதவன்
விசையற்குயர் தேர்ப்பரி யூர்பவன் ...... மருகோனே
வெளியெட்டிசை சூர்ப்பொரு தாடிய
கொடிகைக்கொடு கீர்த்தியு லாவிய
விறல்மெய்த்திரு வேட்கள மேவிய ...... பெருமாளே.
பாடல் 748 ( திருவேட்களம் )
ராகம் - மனோலயம் தாளம் - ஆதி
தாத்தன தானன தாத்தன தானன
தாத்தன தானன ...... தனதான)
மாத்திரை யாகிலு நாத்தவ றாளுடன்
வாழ்க்கையை நீடென ...... மதியாமல்
மாக்களை யாரையு மேற்றிடு சீலிகள்
மாப்பரி வேயெய்தி ...... அநுபோக
பாத்திர மீதென மூட்டிடு மாசைகள்
பாற்படு ஆடக ...... மதுதேடப்
பார்க்கள மீதினில் மூர்க்கரை யேகவி
பாற்கட லானென ...... வுழல்வேனோ
சாத்திர மாறையு நீத்தம னோலய
சாத்தியர் மேவிய ...... பதவேளே
தாத்தரி தாகிட சேக்கெனு மாநட
தாட்பர னார்தரு...... குமரேசா
வேத்திர சாலம தேற்றிடு வேடுவர்
மீக்கமு தாமயில் ...... மணவாளா
வேத்தம தாமறை யார்த்திடு சீர்திரு
வேட்கள மேவிய ...... பெருமாளே.
பாடல் 749 ( திருநெல்வாயில் )
ராகம் - நாட்டை தாளம் - அங்கதாளம் (8)
தகிட-1 1/2, தக-1, திமி-1
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனன தானன தானனாத் தனந்த
தனன தானன தானனாத் தனந்த
தனன தானன தானனாத் தனந்த ...... தனதான
அறிவி லாதவ ¡£னர்பேச் சிரண்டு
பகரு நாவினர் லோபர்தீக் குணங்க
ளதிக பாதகர் மாதர்மேற் கலன்கள் ...... புனையாதர்
அசடர் பூமிசை வீணராய்ப் பிறந்து
திரியு மானுடர் பேதைமார்க் கிரங்கி
யழியு மாலினர் நீதிநூற் பயன்கள் ...... தெரியாத
நெறியி லாதவர் சூதினாற் கவர்ந்து
பொருள்செய் பூரியர் மோகமாய்ப் ப்ரபஞ்ச
நிலையில் வீழ்தரு மூடர்பாற் சிறந்த ...... தமிழ்கூறி
நினைவு பாழ்பட வாடிநோக் கிழந்து
வறுமை யாகிய தீயின்மேற் கிடந்து
நெளியு நீள்புழு வாயினேற் கிரங்கி ...... யருள்வாயே
நறிய வார்குழல் வானநாட் டரம்பை
மகளிர் காதலர் தோள்கள்வேட் டிணங்கி
நகைகொ டேழிசை பாடிமேற் பொலிந்து ...... களிகூர
நடுவி லாதகு ரோதமாய்த் தடிந்த
தகுவர் மாதர்ம ணாளர்தோட் பிரிந்து
நசைபொ றாதழு தாகமாய்த் தழுங்கி ...... யிடர்கூர
மறியு மாழ்கட லு¡டுபோய்க் கரந்து
கவடு கோடியின் மேலுமாய்ப் பரந்து
வளரு மாவிரு கூறதாய்த் தடிந்த ...... வடிவேலா
மரவு காளமு கீல்கள்கூட் டெழுந்து
மதியு லாவிய மாடமேற் படிந்த
வயல்கள் மேவுநெல் வாயில்வீற் றிருந்த ...... பெருமாளே.
பாடல் 750 ( விருத்தாசலம் )
ராகம் - ...; தாளம் - தனத்தானன தானன தானன
தனத்தானன தானன தானன
தனத்தானன தானன தானன ...... தனதான
குடத்தாமரை யாமென வேயிரு
தனத்தார்மதி வாணுத லாரிருள்
குழற்காடின மாமுகில் போல்மது ...... கலைமோதக்
குலக்கார்மயி லாமென வேகயல்
விழித்தார்கர மேல்கொடு மாமுலை
குடத்தியாழ்கிளி யாமென வேகுயில் ...... குரலோசை
படித்தார்மயி லாமென வேநடை
நெளித்தார்பல காமுகர் வார்கலை
பழிப்பாரவ ராசையை மேல்கொடு ...... விலைமாதர்
படிக்கார்மின லாமென வேநகை
புரித்தார்பலர் வாயிதழ் சேர்பொருள்
பறிப்பார்பழி காரிகள் நாரிக ...... ளுறவாமோ
அடைத்தார்கட லோர்வலி ராவண
குலத்தோடரி யோர்சர னார்சின
மழித்தார்முகி லேய்நிற ராகவர் ...... மருகோனே
அறுத்தாரய னார்தலை யேபுர
மெரித்தாரதி லேபுல னாருயி
ரளித்தாருடல் பாதியி லேயுமை ...... அருள்பாலா
விடத்தாரசு ரார்பதி வேரற
அடித்தாய்கதிர் வேல்கொடு சேவகம்
விளைத்தாய்குடி வாழம ரோர்சிறை ...... மிடிதீர
விழித்தாமரை போலழ காகுற
மகட்கானவ ணாஎன தாயுறை
விருத்தாசலம் வாழ்மயில் வாகன ...... பெருமாளே.
பாடல் 751 ( விருத்தாசலம் )
ராகம் - ஹரிகாம்போதி தாளம் - ஆதி ( 2 களை)
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன ...... தனதான
திருமொழி யுரைபெற அரனுன துழிபணி
செயமுன மருளிய ...... குளவோனே
திறலுயர் மதுரையி லமணரை யுயிர்கழு
தெறிபட மறுகிட ...... விடுவோனே
ஒருவரு முனதருள் பரிவில ரவர்களி
னுறுபட ருறுமெனை ...... யருள்வாயோ
உ லகினி லனைவர்கள் புகழ்வுற அருணையில்
ஒருநொடி தனில்வரு ...... மயில்வீரா
கருவரி யுறுபொரு கணைவிழி குறமகள்
கணினெதிர் தருவென ...... முனமானாய்
கருமுகில் பொருநிற அரிதிரு மருமக
கருணையில் மொழிதரு ...... முதல்வோனே
முருகலர் தருவுறை யமரர்கள் சிறைவிட
முரணுறு மசுரனை ...... முனிவோனே
முடிபவர் வடிவறு சுசிகர முறைதமிழ்
முதுகிரி வலம்வரு ...... பெருமாளே.
பாடல் 752 ( விருத்தாசலம் )
ராகம் - ...; தாளம் - தனதத்த தனதத்த தனதத்த தனதத்த
தனதத்த தனதத்த ...... தனதான
பசையற்ற வுடல்வற்ற வினைமுற்றி நடைநெட்டி
பறியக்கை சொறியப்பல் ...... வெளியாகிப்
படலைக்கு விழிகெட்ட குருடுற்று மிகநெக்க
பழமுற்று நரைகொக்கி ...... னிறமாகி
விசைபெற்று வருபித்தம் வளியைக்க ணிலைகெட்டு
மெலிவுற்று விரல்பற்று ...... தடியோடே
வெளிநிற்கும் விதமுற்ற இடர்பெற்ற ஜனனத்தை
விடுவித்து னருள்வைப்ப ...... தொருநாளே
அசைவற்ற நிருதர்க்கு மடிவுற்ற பிரியத்தி
னடல்வஜ்ர கரன்மற்று ...... முளவானோர்
அளவற்ற மலர்விட்டு நிலமுற்று மறையச்செய்
அதுலச்ச மரவெற்றி ...... யுடையோனே
வசையற்று முடிவற்று வளர்பற்றி னளவற்ற
வடிவுற்ற முகில்கிட்ணன் ...... மருகோனே
மதுரச்செ மொழிசெப்பி யருள்பெற்ற சிவபத்தர்
வளர் விர்த்த கிரியுற்ற ...... பெருமாளே.
பாடல் 753 ( வேப்பூர் )
ராகம் - பீம்பளாஸ் தாளம் - அங்கதாளம் (15 1/2)
தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2
தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனதன தனதன தனதன தாந்த
தாத்தான தந்த ...... தனதான
குரைகட லுலகினி லுயிர்கொடு போந்து
கூத்தாடு கின்ற ...... குடில்பேணிக்
குகையிட மருவிய கருவிழி மாந்தர்
கோட்டாலை யின்றி ...... யவிரோதம்
வரஇரு வினையற உ ணர்வொடு தூங்கு
வார்க்கே விளங்கு ...... மநுபூதி
வடிவினை யுனதழ கியதிரு வார்ந்த
வாக்கால்மொ ழிந்த ...... ருளவேணும்
திரள்வரை பகமிகு குருகுல வேந்து
தேர்ப்பாகன் மைந்தன் ...... மறையோடு
தெருமர நிசிசரர் மனைவியர் சேர்ந்து
தீப்பாய இந்த்ர ...... புரிவாழ
விரிதிரை யெரியெழ முதலுற வாங்கு
வேற்கார கந்த ...... புவியேழும்
மிடிகெட விளைவன வளவயல் சூழ்ந்த
வேப்பூர மர்ந்த ...... பெருமாளே.
பாடல் 754 ( நிம்பபுரம் )
ராகம் - ஸிம்மேந்திர மத்யமம் தாளம் - ஆதி
தந்ததன தான தந்ததன தான
தந்ததன தான ...... தனதான
அஞ்சுவித பூத முங்கரண நாலு
மந்திபகல் யாது ...... மறியாத
அந்தநடு வாதி யொன்றுமில தான
அந்தவொரு வீடு ...... பெறுமாறு
மஞ்சுதவழ் சார லஞ்சயில வேடர்
மங்கைதனை நாடி ...... வனமீது
வந்தசர ணார விந்தமது பாட
வண்டமிழ்வி நோத ...... மருள்வாயே
குஞ்சரக லாப வஞ்சியபி ராம
குங்குமப டீர ...... வதிரேகக்
கும்பதன மீது சென்றணையு மார்ப
குன்றுதடு மாற ...... இகல்கோப
வெஞ்சமர சூர னெஞ்சுபக வீர
வென்றிவடி வேலை ...... விடுவோனே
விம்பமதில் சூழு நிம்பபுர வாண
விண்டலம கீபர் ...... பெருமாளே.
பாடல் 755 ( வேப்பஞ்சந்தி )
ராகம் - தாளம் -
தாத்தந் தந்தத் தந்தத் தனனத் ...... தனதான
நாட்டந் தங்கிக் கொங்கைக் குவடிற் ...... படியாதே
நாட்டுந் தொண்டர்க் கண்டக் கமலப் ...... பதமீவாய்
வாட்டங் கண்டுற் றண்டத் தமரப் ...... படைமீதே
மாற்றந் தந்துப் பந்திச் சமருக் ...... கெதிரானோர்
கூட்டங் கந்திச் சிந்திச் சிதறப் ...... பொருவோனே
கூற்றன் பந்திச் சிந்தைக் குணமொத் ...... தொளிர்வேலா
வேட்டந் தொந்தித் தந்திப் பரனுக் ...... கிளையோனே
வேப்பஞ் சந்திக் கந்தக் குமரப் ...... பெருமாளே.
பாடல் 756 ( திருக்கூடலையாற்று¡ர் )
ராகம் -....; தாளம் - தாத்ததனத் தாந்ததன தானதன தானதன
தாத்ததனத் தாந்ததன தானதன தானதன
தாத்ததனத் தாந்ததன தானதன தானதன ...... தந்ததான
வாட்டியெனைச் சூழ்ந்தவினை யாசையமு வாசையனல்
மூட்டியுலைக் காய்ந்தமழு வாமெனவி காசமொடு
மாட்டியெனைப் பாய்ந்துகட வோடடமொ டாடிவிடு ...... விஞ்சையாலே
வாய்த்தமலர்ச் சாந்துபுழு கானபனி நீர்களொடு
காற்றுவரத் தாங்குவன மார்பிலணி யாரமொடு
வாய்க்குமெனப் பூண்டழக தாகபவி சோடுமகிழ் ...... வன்புகூரத்
தீட்டுவிழிக் காந்திமட வார்களுட னாடிவலை
பூட்டிவிடப் போந்துபிணி யோடுவலி வாதமென
சேர்த்துவிடப் பேர்ந்துவினை மூடியடி யேனுமுன ...... தன்பிலாமல்
தேட்டமுறத் தேர்ந்துமமிர் தாமெனவெ யேகிநம
னோட்டிவிடக் காய்ந்துவரி வேதனடை யாளமருள்
சீட்டுவரக் காண்டுநலி காலனணு காநினரு ...... ளன்புதாராய்
வேட்டுவரைக் காய்ந்துகுற மாதையுற வாடியிருள்
நாட்டவரைச் சேந்தகதிர் வேல்கொடம ராடிசிறை
மீட்டமரர்க் காண்டவனை வாழ்கநிலை யாகவைகும் ...... விஞ்சையோனே
வேற்றுருவிற் போந்துமது ராபுரியி லாடிவைகை
யாற்றின்மணற் றாங்குமழு வாளியென தாதைபுர
மேட்டையெரித் தாண்டசிவ லோகன்விடை யேறியிட ...... முங்கொளாயி
கோட்டுமுலைத் தாங்குமிழை யானஇடை கோடிமதி
தோற்றமெனப் போந்தஅழ கானசிவ காமிவிறல்
கூற்றுவனைக் காய்ந்தஅபி ராமிமன தாரஅருள் ...... கந்தவேளே
கூட்டுநதித் தேங்கியவெ ளாறுதர ளாறுதிகழ்
நாட்டிலுறைச் சேந்தமயி லாவளிதெய் வானையொடெ
கூற்றுவிழத் தாண்டியென தாகமதில் வாழ்குமர ...... தம்பிரானே.
பாடல் 757 ( கடம்பூர் )
ராகம் - ....; தாளம் - தானனம் தானான தானனம் தானான
தானனம் தானான ...... தனதான
வாருமிங் கேவீடி தோபணம் பாஷாண
மால்கடந் தேபோமே ...... னியலு¡டே
வாடிபெண் காள்பாயை போடுமென் றாசார
வாசகம் போல்கூறி ...... யணைமீதே
சேருமுன் காசாடை வாவியும் போதாமை
தீமைகொண் டேபோமெ ...... னடமாதர்
சேரிடம் போகாம லாசுவந் தேறாமல்
சீதளம் பாதார ...... மருள்வாயே
நாரணன் சீராம கேசவன் கூராழி
நாயகன் பூவாயன் ...... மருகோனே
நாரதும் பூர்கீத மோதநின் றேயாடு
நாடகஞ் சேய்தாள ...... ரருள்பாலா
சூரணங் கோடாழி போய்கிடந் தேவாட
சூரியன் தேரோட ...... அயிலேவீ
தூநறுங் காவேரி சேருமொண் சீறாறு
சூழ்கடம் பூர்தேவர் ...... பெருமாளே.
பாடல் 758 ( திருவரத்துறை )
ராகம் - ....; தாளம் - தனன தத்தனத் தனன தத்தனத்
தனன தத்தனத் ...... தனதான
கறுவி மைக்கணிட் டினித ழைத்தியற்
கவிசொ லிச்சிரித் ...... துறவாடிக்
களவு வித்தையட் டுளமு ருக்கிமுற்
கருதி வைத்தவைப் ...... பவைசேரத்
தறுக ணிற்பறித் திருக ழுத்துறத்
தழுவி நெக்குநெக் ...... குயிர்சோரச்
சயன மெத்தையிற் செயல ழிக்குமித்
தருணி கட்ககப் ...... படலாமோ
பிறவி யைத்தணித் தருளு நிட்களப்
பிரம சிற்சுகக் ...... கடல்மூழ்கும்
பெருமு னித்திரட் பரவு செய்ப்பதிப்
ப்ரபல கொச்சையிற் ...... சதுர்வேதச்
சிறுவ நிற்கருட் கவிகை நித்திலச்
சிவிகை யைக்கொடுத் ...... தருளீசன்
செகத லத்தினிற் புகழ்ப டைத்தமெய்த்
திருவ ரத்துறைப் ...... பெருமாளே.
பாடல் 759 ( யாழ்ப்பாணாயன்பட்டினம் )
ராகம் - ....; தாளம் - தாத்தா தானம் தத்தன தனதன
தாத்தா தானம் தத்தன தனதன
தாத்தா தானம் தத்தன தனதன ...... தனதான
பூத்தார் சூடுங் கொத்தலர் குழலியர்
பார்த்தால் வேலுங் கட்கமு மதன்விடு
போர்க்கார் நீடுங் கட்சர மொடுநமன் ...... விடுதூதும்
போற்றாய் நாளுங் கைப்பொரு ளுடையவர்
மேற்றா ளார்தம் பற்றிடு ப்ரமையது
பூட்டா மாயங் கற்றமை விழியின ...... ரமுதூறல்
வாய்த்தார் பேதஞ் செப்புபொய் விரகியர்
நூற்றேய் நூலின் சிற்றிடை யிடர்பட
வாட்டாய் வீசுங் கர்ப்புர ம்ருகமத ...... மகிலாரம்
மாப்பூ ணாரங் கச்சணி முலையினர்
வேட்பூ ணாகங் கெட்டெனை யுனதுமெய்
வாக்கால் ஞானம் பெற்றினி வழிபட ...... அருளாயோ
ஆத்தாள் மால்தங் கைச்சிக னிகையுமை
கூத்தா டாநந் தச்சிவை திரிபுரை
யாட்பேய் பூதஞ் சுற்றிய பயிரவி ...... புவநேசை
ஆக்கா யாவும் பற்றியெ திரிபுற
நோக்கா ஏதுஞ் செற்றவள் திருவிளை
யாட்டா லீசன் பக்கம் துறைபவள் ...... பெறுசேயே
ஏத்தா நாளுந் தர்ப்பண செபமொடு
நீத்தார் ஞானம் பற்றிய குருபர
யாப்பா ராயுஞ் சொற்றமி ழருள்தரு ...... முருகோனே
ஏற்போர் தாம்வந் திச்சையின் மகிழ்வொடு
வாய்ப்பாய் வீசும் பொற்ப்ரபை நெடுமதிள்
யாழ்ப்பா ணாயன் பட்டின மருவிய ...... பெருமாளே.
பாடல் 760 ( ஸ்ரீ முஷ்டம் )
ராகம் - மத்யமாவதி தாளம் - ஆதி
தனனத்த தான தனனத்த தான
தனனத்த தான ...... தனதான
கழைமுத்து மாலை புயல்முத்து மாலை
கரிமுத்து மாலை ...... மலைமேவுங்
கடிமுத்து மாலை வளைமுத்து மாலை
கடல்முத்து மாலை ...... யரவீனும்
அழல்முத்து மாலை யிவைமுற்று மார்பி
னடைவொத்து லாவ ...... அடியேன்முன்
அடர்பச்சை மாவி லருளிற்பெ ணோடு
மடிமைக்கு ழாமொ ...... டருள்வாயே
மழையொத்த சோதி குயில்தத்தை போலு
மழலைச்சொ லாயி ...... யெமையீனு
மதமத்த நீல களநித்த நாதர்
மகிழ்சத்தி யீனு ...... முருகோனே
செழுமுத்து மார்பி னமுதத்தெய் வானை
திருமுத்தி மாதின் ...... மணவாளா
சிறையிட்ட சூரர் தளைவெட்டி ஞான
திருமுட்ட மேவு ...... பெருமாளே.
பாடல் 761 ( ஸ்ரீ முஷ்டம் )
ராகம் - ...; தாளம் - தனனத் தத்தன தானன தானன
தனனத் தத்தன தானன தானன
தனனத் தத்தன தானன தானன ...... தனதான
சரம்வெற் றிக்கய லாமெனும் வேல்விழி
சிலைவட் டப்புரு வார்குழல் கார்முகில்
தனமுத் துக்கிரி யாமெனு நூலிடை ...... மடவார்கள்
சனுமெத் தப்பரி வாகிய மாமய
லிடுமுத் தித்திகழ் மால்கொடு பாவையர்
தகுதத் தக்கிட தோதகு தீதென ...... விளையாடும்
விரகத் துர்க்குண வேசைய ராசையர்
பணமெத் தப்பறி காரிகள் மாறிகள்
விதமெத் தக்கொடு மேவிகள் பாவிகள் ...... அதிபோக
மெலிவுற் றுக்குறி நாறிகள் பீறிகள்
கலகத் தைச்செயு மோடிகள் பீடிகள்
விருதிட் டுக்குடி கேடிகள் சேடிகள் ...... உ றவாமோ
பொருவெற் றிக்கழை வார்சிலை யானுட
லெரிபட் டுச்சரு காய்விழ வேநகை
புகுவித் தப்பிறை வாழ்சடை யானிட ...... மொருமாது
புகழ்சத் திச்சிலு காவண மீதுறை
சிவபத் திப்பர மேஸ்வரி யாள்திரி
புவனத் தைப்பரி வாய்முத லீனுமை ...... யருள்பாலா
திரையிற் பொற்கிரி யாடவும் வாசுகி
புனைவித் துத்தலை நாளமு தார்சுவை
சிவபத் தர்க்கிது வாமென வேபகி ...... ரரிராமர்
திருவுற் றுப்பணி யாதிவ ராகர்த
மகளைப் பொற்றன வாசையொ டாடிய
திருமுட் டப்பதி வாழ்முரு காசுரர் ...... பெருமாளே.
பாடல் 762 ( திருநல்லு¡ர் )
ராகம் - ....; தாளம் - தான தந்ததன தான தந்ததன
தான தந்ததன தான தந்ததன
தான தந்ததன தான தந்ததன ...... தந்ததான
மூல முண்டகனு பூதி மந்திரப
ராப ரஞ்சுடர்கள் மூணு மண்டலஅ
தார சந்திமுக மாறு மிந்த்ரதரு ...... வுந்தளாமேல்
மூது ரம்பலவர் பீட மந்தமுமி
லாத பந்தவொளி யாயி ரங்கிரண
மூணு மிந்துவொளிர் சோதி விண்படிக ...... விந்துநாதம்
ஓல மென்றுபல தாள சந்தமிடு
சேவை கண்டமுதை வாரி யுண்டுலகி
ரேழு கண்டுவிளை யாடி யிந்துகதி ...... ரங்கிசூலம்
ஓடு மந்தகலி காலொ டுங்கநடு
தூணில் தங்கவரி ஞான வண்கயிறு
மீத ணைந்துசத கோடி சந்த்ரவொளி ...... சந்தியாதோ
சூலி யந்தரிக பாலி சங்கரிபு
ராரி யம்பரிகு மாரி யெண்குணசு
வாமி பங்கிசிவ காம சுந்தரியு ...... கந்தசேயே
சூர சங்கரகு மார இந்திரச
காய அன்பருப கார சுந்தரகு
காஎ னுஞ்சுருதி யோல மொன்றநட ...... னங்கொள்வேலா
சீல வெண்பொடியி டாத வெஞ்சமணர்
மாள வெங்கழுவி லேறு மென்றுபொடி
நீறி டுங்கமல பாணி சந்த்ரமுக ...... கந்தவேளே
தேவ ரம்பையமு தீண மங்கைதரு
மான ணைந்தபுய தீர சங்கரதி
யாகர் வந்துறைந லு¡ர மர்ந்துவளர் ...... தம்பிரானே.
பாடல் 763 ( திருமயேந்திரம் )
ராகம் - ....; தாளம் - தந்தன தந்தன தாந்த தானன
தந்தன தந்தன தாந்த தானன
தந்தன தந்தன தாந்த தானன ...... தனதான
வண்டணி யுங்கமழ் கூந்த லார்விழி
அம்பிய லுஞ்சிலை போந்த வாணுதல்
வண்டர ளந்திக ழாய்ந்த வார்நகை ...... குயில்போல
வண்பயி லுங்குவ டாண்ட மார்முலை
யின்பொறி யங்குமி ழாம்பல் தோள்கர
வஞ்சியெ னுங்கொடி சேர்ந்த நூலிடை ...... மடவார்பொன்
கண்டவு டன்களி கூர்ந்து பேசிகள்
குண்டுணி யுங்குரல் சாங்க மோதிகள்
கண்சுழ லும்படி தாண்டி யாடிகள் ...... சதிகாரர்
கஞ்சுளி யுந்தடி யீந்து போவென
நஞ்சையி டுங்கவ டார்ந்த பாவிகள்
கம்பையி லுஞ்சட மாய்ந்து நாயனு ...... முழல்வேனோ
அண்டரு டன்தவ சேந்து மாதவர்
புண்டரி கன்திரு பாங்கர் கோவென
அஞ்சலெ னும்படி போந்து வீரமொ ...... டசுராரை
அங்கமொ டுங்கிட மாண்டொ டாழிக
ளென்கிரி யும்பொடி சாம்பர் நூறிட
அந்தக னுங்கயி றாங்கை வீசிட ...... விடும்வேலா
செண்டணி யுஞ்சடை பாந்தள் நீர்மதி
யென்பணி யன்கன சாம்பல் பூசிய
செஞ்சட லன்சுத சேந்த வேலவ ...... முருகொனே
திங்கள்மு கந்தன சாந்து மார்பின
ளென்றனு ளம்புகு பாங்கி மானொடு
சிந்தைம கிழ்ந்தும யேந்த்ர மேவிய ...... பெருமாளே.
பாடல் 764 ( சீகாழி )
ராகம் - ....; தாளம் - தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன ...... தந்ததான
அலைகடல் சிலைமதன் அந்தி யூதையும்
அரிவையர் வசையுட னங்கி போல்வர
அசைவன விடைமணி யன்றில் கோகிலம் ...... அஞ்சிநானும்
அழலிடு மெழுகென வெம்பி வேர்வெழ
அகிலொடு ம்ருகமத நஞ்சு போலுற
அணிபணி மணிபல வெந்து நீறெழ ...... அங்கம்வேறாய்
முலைகனல் சொரிவர முன்பு போல்நினை
வழிவச மறஅற நின்று சோர்வுற
முழுதுகொள் விரகனல் மொண்டு வீசிட ...... மங்கிடாதே
முருகவிழ் திரள்புய முந்து வேலணி
முளரியொ டழகிய தொங்கல் தாரினை
முனிவற நினதருள் தந்தென் மாலைமு ...... னிந்திடாதோ
சிலைநுதல் கயல்விழி செஞ்சொல் வானவி
திரிபுரை பயிரவி திங்கள் சூடிய
திகழ்சடை நெடியவள் செம்பொன் மேனியள் ...... சிங்கமேறி
திரள்படை யலகைகள் பொங்கு கோடுகள்
திமிலையொ டறைபறை நின்று மோதிட
சிவனுட னடம்வரு மங்கை மாதுமை ...... தந்தவேளே
மலைதனி லொருமுநி தந்த மாதுதன்
மாலரடி வருடியெ நின்று நாடொறு
மயில்பயில் குயில்கிளி வம்பி லேகடி ...... தொண்டினோனே
மழைமுகில் தவழ்தரு மண்டு கோபுர
மதிள்வயல் புடையுற விஞ்சு காழியில்
வருமொரு கவுணியர் மைந்த தேவர்கள் ...... தம்பிரானே.
பாடல் 765 ( சீகாழி )
ராகம் - ....; தாளம் - தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
இரத மான தேனூற லதர மான மாமாத
ரெதிரி லாத பூணார ...... முலைமீதே
இனது போடு மேகாச உ டையி னாலு மாலால
விழியி னாலு மாலாகி ...... யநுராக
விரக மாகி யேபாய லிடைவி டாமல் நாடோறு
ம்ருகம தாதி சேரோதி ...... நிழல்மூழ்கி
விளையு மோக மாமாயை கழலு மாறு நாயேனும்
விழல னாய்வி டாதேநி ...... னருள்தாராய்
அரக ராஎ னர்முடர் திருவெ ணீறி டர்முடர்
அடிகள் பூசி யர்முடர் ...... கரையேற
அறிவு நூல்க லர்முடர் நெறியி லேநி லர்முடர்
அறம்வி சாரி யர்முடர் ...... நரகேழிற்
புரள வீழ்வ ¡£ராறு கரவி நோத சேய்சோதி
புரண பூர ணாகார ...... முருகோனே
புயலு லாவு சேணாடு பரவி நாளு மீடேறு
புகலி மேவி வாழ்தேவர் ...... பெருமாளே.
பாடல் 766 ( சீகாழி )
ராகம் - ஜோன்புரி தாளம் - அங்கதாளம் (6 1/2)
தகதிமி-2, தகதிமி-2, தக-1, தகிட-1 1/2
தானத்தன தான தனந்த தானத்தன தான தனந்த
தானத்தன தான தனந்த ...... தனதான
ஊனத்தசை தோல்கள் சுமந்த காயப்பொதி மாய மிகுந்த
ஊசற்சுடு நாறு குரம்பை ...... மறைநாலும்
ஓதப்படு நாலு முகன்ற னாலுற்றிடு கோல மெழுந்து
ஓடித்தடு மாறி யுழன்று ...... தளர்வாகிக்
கூனித்தடி யோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த
கூளச்சட மீதை யுகந்து ...... புவிமீதே
கூசப்பிர மாண ப்ரபஞ்ச மாயக்கொடு நோய்க ளகன்று
கோலக்கழ லேபெற இன்று ...... அருள்வாயே
சேனக்குரு கூடலி லன்று ஞானத்தமிழ் நூல்கள் பகர்ந்து
சேனைச்சம ணோர்கழு வின்கண் ...... மிசையேறத்
தீரத்திரு நீறு புரிந்து மீனக்கொடி யோனுடல் துன்று
தீமைப்பிணி தீர வுவந்த ...... குருநாதா
கானச்சிறு மானை நினைந்து ஏனற்புன மீது நடந்து
காதற்கிளி யோடு மொழிந்து ...... சிலைவேடர்
காணக்கணி யாக வளர்ந்து ஞானக்குற மானை மணந்து
காழிப்பதி மேவி யுகந்த ...... பெருமாளே.
பாடல் 767 ( சீகாழி )
ராகம் - ...; தாளம் - தய்யா தத்தன தானன தானன
தய்யா தத்தன தானன தானன
தய்யா தத்தன தானன தானன ...... தனதான
ஒய்யா ரச்சிலை யாமென வாசனை
மெய்யா ரப்பணி பூஷண மாலைக
ளுய்யா நற்கலை யேகொடு மாமத ...... விதமாகி
ஒவ்வா ரிப்படி யோரென வேயிரு
கையா ரக்கணை மோதிர மேய்பல
வுள்ளார் செப்பிட ஏமுற நாளிலு ...... முடல்பேணிச்
செய்வா ரிப்படி யேபல வாணிப
மிய்யா ரிற்பண மேயொரு காசிடை
செய்யார் சற்பனை காரர்பி சாசரு ...... னடிபேணாச்
செய்வா ரிற்படு நானொரு பாதகன்
மெய்யா எப்படி யோர்கரை சேர்வது
செய்யா யற்புத மேபெற வோர்பொரு ...... ளருள்வாயே
மையா ரக்கிரி யேபொடி யாய்விட
பொய்சூ ரப்பதி யேகெட வானவர்
வையாய் பொற்சர ணாஎன வேதொழ ...... விடும்வேலா
வையா ளிப்பரி வாகன மாகொளு
துவ்வா ழிக்கட லேழ்மலை தூளிசெய்
மைபோ லக்கதி ரேய்நிற மாகிய ...... மயில்வாழ்வே
தெய்வா னைக்கர சேகுற மான்மகிழ்
செய்யா முத்தமி ழாகர னேபுகழ்
தெய்வீ கப்பர மாகுரு வேயென ...... விருதூதத்
திய்யா ரக்கழு வேறிட நீறிடு
கையா அற்புத னேபிர மாபுர
செய்கா ழிப்பதி வாழ்முரு காசுரர் ...... பெருமாளே.
பாடல் 768 ( சீகாழி )
ராகம் - ...; தாளம் - தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் ...... தனதான
கட்கா மக்ரோ தத்தே கட்சீ
மிழ்த்தோர் கட்குக் ...... கவிபாடிக்
கச்சா பிச்சா கத்தா வித்தா
ரத்தே யக்கொட் ...... களைநீளக்
கொட்கா லக்கோ லக்ஆகா ணத்தே
யிட்டா சைப்பட் ...... டிடவேவை
கொட்டா னக்கூ னுக்கா எய்த்தே
னித்தீ தத்தைக் ...... களைவாயே
வெட்கா மற்பாய் சுற்று¡ மர்ச்சேர்
விக்கா னத்தைத் ...... தரிமாறன்
வெப்பா றப்பா டிக்கா ழிக்கே
புக்காய் வெற்பிற் ...... குறமானை
முட்கா னிற்கால் வைத்தோ டிப்போய்
முற்சார் செச்சைப் ...... புயவீரா
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் ...... பெருமாளே.
பாடல் 769 ( சீகாழி )
ராகம் - ...; தாளம் - தந்த தானன தனதன தனதன
தந்த தானன தனதன தனதன
தந்த தானன தனதன தனதன ...... தனதான
கொங்கு லாவிய குழலினு நிழலினு
நஞ்ச ளாவிய விழியினு மிரணிய
குன்று போல்வளர் முலையினு நிலையினு ...... மடமாதர்
கொம்பு சேர்வன இடையினு நடையினு
மன்பு கூர்வன மொழியினு மெழில்குடி
கொண்ட சேயித ழமுதினு நகையினு ...... மனதாய
சங்கை யாளியை அணுவிடை பிளவள
வின்சொல் வாசக மொழிவன இவையில
சம்ப்ர தாயனை அவலனை ஒளிதிக ...... ழிசைகூருந்
தண்டை நூபுர மணுகிய இருகழல்
கண்டு நாளவ மிகையற விழியருள்
தந்த பேரருள் கனவிலு நனவிலு ...... மறவேனே
வங்க வாரிதி முறையிட நிசிசரர்
துங்க மாமுடி பொடிபட வடவனல்
மங்கி நீறெழ அலகைகள் நடமிட ...... மயிலேறி
வஞ்ச வேல்கொடு முனிபவ அழகிய
சண்பை மாநக ருறையுமொ ரறுமுக
வந்த வானவர் மனதினி லிடர்கெட ...... நினைவோனே
பங்க வீரியர் பறிதலை விரகினர்
மிஞ்சு பாதக ரறநெறி பயனிலர்
பந்த மேவிய பகடிகள் கபடிகள் ...... நிலைகேடர்
பண்பி லாதவர் கொலைசெயு மனதின
ரிங்கெ ணாயிர ருயரிய கழுமிசை
பஞ்ச பாதகர் முனைகெட அருளிய ...... பெருமாளே.
பாடல் 770 ( சீகாழி )
ராகம் - ...; தாளம் - தந்த தந்தன தனதன தனதன
தந்த தந்தன தனதன தனதன
தந்த தந்தன தனதன தனதன ...... தனதான
சந்த னம்பரி மளபுழு கொடுபுனை
கொங்கை வஞ்சியர் சரியொடு கொடுவளை
தங்கு செங்கையர் அனமென வருநடை ...... மடமாதர்
சந்த தம்பொலி வழகுள வடிவினர்
வஞ்ச கம்பொதி மனதின ரணுகினர்
தங்கள் நெஞ்சக மகிழ்வுற நிதிதர ...... அவர்மீதே
சிந்தை வஞ்சக நயமொடு பொருள்கவர்
தந்த்ர மந்த்ரிகள் தரணியி லணைபவர்
செம்பொ னிங்கினி யிலையெனில் மிகுதியு ...... முனிவாகித்
திங்க ளொன்றினில் நெனல்பொரு ளுதவில
னென்று சண்டைகள் புரிதரு மயலியர்
சிங்கி யுங்கொடு மிடிமையு மகலநி ...... னருள்கூர்வாய்
மந்த ரங்குடை யெனநிரை யுறுதுயர்
சிந்த அன்றடர் மழைதனி லுதவிய
மஞ்செ னும்படி வடிவுறு மரிபுகழ் ...... மருகோனே
மங்கை யம்பிகை மகிழ்சர வணபவ
துங்க வெங்கய முகன்மகிழ் துணைவநல்
வஞ்சி தண்குற மகள்பத மலர்பணி ...... மணவாளா
தந்த னந்தன தனதன தனவென
வண்டு விண்டிசை முரல்தரு மணமலர்
தங்கு சண்பக முகிலள வுயர்தரு ...... பொழில்மீதே
சங்கு நன்குமிழ் தரளமு மெழில்பெறு
துங்க வொண்பணி மணிகளும் வெயில்விடு
சண்பை யம்பதி மருவிய அமரர்கள் ...... பெருமாளே.
பாடல் 771 ( சீகாழி )
ராகம் - ராக மாலிகை தாளம் - ஆதி
தனதன தந்தன தந்தன தந்தன
தனதன தந்தன தந்தன தந்தன
தனதன தந்தன தந்தன தந்தன ...... தனதான
சருவி யிகழ்ந்து மருண்டு வெகுண்டுறு
சமயமு மொன்றிலை யென்ற வரும்பறி
தலையரு நின்று கலங்க விரும்பிய ...... தமிழ்கூறுஞ்
சலிகையு நன்றியும் வென்றியு மங்கள
பெருமைக ளுங்கன முங்குண மும்பயில்
சரவண மும்பொறை யும்புக ழுந்திகழ் ...... தனிவேலும்
விருது துலங்க சிகண்டியி லண்டரு
முருகி வணங்க வரும்பத மும்பல
விதரண முந்திற முந்தர முந்தினை ...... புனமானின்
ம்ருகமத குங்கும கொங்கையில் நொந்தடி
வருடிம ணந்துபு ணர்ந்தது வும்பல
விஜயமு மன்பின்மொ ழிந்துமொ ழிந்தியல் ...... மறவேனே
கருதியி லங்கை யழிந்துவி டும்படி
அவுணர டங்கம டிந்துவி ழும்படி
கதிரவ னிந்து விளங்கி வரும்படி ...... விடுமாயன்
கடகரி யஞ்சி நடுங்கி வருந்திடு
மடுவினில் வந்துத வும்புய லிந்திரை
கணவன ரங்க முகுந்தன் வருஞ்சக ...... டறமோதி
மருது குலுங்கி நலங்க முனிந்திடு
வரதன லங்கல் புனைந்தரு ளுங்குறள்
வடிவனெ டுங்கடல் மங்கவொ ரம்புகை ...... தொடுமீளி
மருகபு ரந்தர னுந்தவ மொன்றிய
பிரமபு ரந்தனி லுங்குக னென்பவர்
மனதினி லும்பரி வொன்றிய மர்ந்தருள் ...... பெருமாளே.
பாடல் 772 ( சீகாழி )
ராகம் - ....; தாளம் - தந்தத்தன தானன தந்தத் ...... தனதான
சிந்துற்றெழு மாமதி அங்கித் ...... திரளாலே
தென்றற்றரு வாசமி குந்துற் ...... றெழலாலே
அந்திப்பொழு தாகிய கங்குற் ...... றிரளாலே
அன்புற்றெழு பேதைம யங்கித் ...... தனியானாள்
நந்துற்றிடு வாரியை மங்கத் ...... திகழாயே
நஞ்சொத்தொளிர் வேலினை யுந்திப் ...... பொருவேளே
சந்தக்கவி நூலினர் தஞ்சொற் ...... கினியோனே
சண்பைப்பதி மேவிய கந்தப் ...... பெருமாளே.
பாடல் 773 ( சீகாழி )
ராகம் - ...; தாளம் - தத்தனா தத்தனத் தத்தனா தத்தனத்
தத்தனா தத்தனத் ...... தனதான
செக்கர்வா னப்பிறைக் கிக்குமா ரற்கலத்
தெற்கிலு¡ தைக்கனற் ...... றணியாத
சித்ரவீ ணைக்கலர்ப் பெற்றதா யர்க்கவச்
சித்தம்வா டிக்கனக் ...... கவிபாடிக்
கைக்கபோ லக்கிரிப் பொற்கொள்ரா சிக்கொடைக்
கற்பதா ருச்செகத் ...... த்ரயபாநு
கற்றபேர் வைப்பெனச் செத்தையோ கத்தினர்க்
கைக்குணான் வெட்கிநிற் ...... பதுபாராய்
சக்ரபா ணிக்குமப் பத்மயோ னிக்குநித்
தப்ரதா பர்க்குமெட் ...... டரிதாய
தத்வவே தத்தனுற் பத்திபோ தித்தஅத்
தத்வ்ரு பக்கிரிப் ...... புரைசாடிக்
கொக்கிலே புக்கொளித் திட்டசூர் பொட்டெழக்
குத்துரா வுத்தபொற் ...... குமரோனே
கொற்றவா வுற்பலச் செச்சைமா லைப்புயக்
கொச்சைவாழ் முத்தமிழ்ப் ...... பெருமாளே.
பாடல் 774 ( சீகாழி )
ராகம் - ஹம்ஸநாதம் தாளம் - அங்கதாளம் (5) (திஸ்ர்ருபகம்)
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனதன தாந்த தான தனதன தாந்த தான
தனதன தாந்த தான ...... தனதான
தினமணி சார்ங்க பாணி யெனமதிள் நீண்டு சால
தினகர னேய்ந்த மாளி ...... கையிலாரஞ்
செழுமணி சேர்ந்த பீடி கையிலிசை வாய்ந்த பாடல்
வயிரியர் சேர்ந்து பாட ...... இருபாலும்
இனவளை பூண்கை யார்க வரியிட வேய்ந்து மாலை
புழுககில் சாந்து பூசி ...... யரசாகி
இனிதிரு மாந்து வாழு மிருவினை நீண்ட காய
மொருபிடி சாம்ப லாகி ...... விடலாமோ
வனசர ரேங்க வான முகடுற வோங்கி ஆசை
மயிலொடு பாங்கி மார்க ...... ளருகாக
மயிலொடு மான்கள் சூழ வளவரி வேங்கை யாகி
மலைமிசை தோன்று மாய ...... வடிவோனே
கனசமண் மூங்கர் கோடி கழுமிசை தூங்க நீறு
கருணைகொள் பாண்டி நாடு ...... பெறவேதக்
கவிதரு காந்த பால கழுமல பூந்த ராய
கவுணியர் வேந்த தேவர் ...... பெருமாளே.
பாடல் 775 ( சீகாழி )
ராகம் - பந்துவராளி தாளம் - திஸ்ர த்ருபுடை (7)
தானாதன தானன தானன
தானாதன தானன தானன
தானாதன தானன தானன ...... தந்ததான
பூமாதுர மேயணி மான்மறை
வாய்நாலுடை யோன்மலி வானவர்
கோமான்முநி வோர்முதல் யாருமி ...... யம்புவேதம்
பூராயம தாய்மொழி நூல்களும்
ஆராய்வதி லாதட லாசுரர்
போரால்மறை வாயுறு பீதியின் ...... வந்துகூடி
நீமாறரு ளாயென ஈசனை
பாமாலைக ளால்தொழு தேதிரு
நீறார்தரு மேனிய தேனியல் ...... கொன்றையோடு
நீரேர்தரு சானவி மாமதி
காகோதர மாதுளை கூவிளை
நேரோடம் விளாமுத லார்சடை ...... யெம்பிரானே
போமாறினி வேறெது வோதென
வேயாரரு ளாலவ ¡£தரு
போர்வேலவ நீலக லாவியி ...... வர்ந்துநீடு
பூலோகமொ டேயறு லோகமு
நேரோர் நொடி யேவரு வோய்சுர
சேனாபதி யாயவ னேயுனை ...... யன்பினோடுங்
காமாவறு சோம ஸமானன
தாமாமண மார்தரு நீபசு
தாமாவென வேதுதி யாதுழல் ...... வஞ்சனேனைக்
காவாயடி நாளசு ரேசரை
யேசாடிய கூர்வடி வேலவ
காரார்தரு காழியின் மேவிய ...... தம்பிரானே.
பாடல் 776 ( சீகாழி )
ராகம் - ...; தாளம் - தனனத்தத் தானத் தானன தனனத்தத் தானத் தானன
தனனத்தத் தானத் தானன ...... தனதான
மதனச்சொற் காரக் காரிகள் பவளக்கொப் பாடச் சீறிகள்
மருளப்பட் டாடைக் காரிக ...... ளழகாக
மவுனச்சுட் டாடிச் சோலிகள் இசலிப்பித் தாசைக் காரிகள்
வகைமுத்துச் சாரச் சூடிகள் ...... விலைமாதர்
குதலைச்சொற் சாரப் பேசிகள் நரகச்சிற் சாடிப் பீடிகள்
குசலைக்கொட் சூலைக் காலிகள் ...... மயல்மேலாய்க்
கொளுவிக்கட் டாசைப் பாசனை பவதுக்கக் காரச் சூதனை
குமுதப்பொற் பாதச் சேவையி ...... லருள்வாயே
கதறக்கற் சூரைக் கார்கட லெரியத்திக் கூறிற் பாழ்பட
ககனக்கட் டாரிக் காயிரை ...... யிடும்வேலா
கதிர்சுற்றிட் டாசைப் பால்கிரி யுறைபச்சைப் பாசக் கோகில
கவுரிப்பொற் சேர்வைச் சேகர ...... முருகோனே
திதலைப்பொற் பாணிக் கார்குயி லழகிற்பொற் றோகைப் பாவையை
தினமுற்றுச் சாரத் தோள்மிசை ...... யணைவோனே
திலதப்பொட் டாசைச் சேர்முக மயிலுற்றிட் டேறிக் காழியில்
சிவன்மெச்சக் காதுக் கோதிய ...... பெருமாளே.
பாடல் 777 ( சீகாழி )
ராகம் - ....; தாளம் - தனதனன தத்ததன தனதனன தத்ததன
தனதனன தத்ததன ...... தனதான
விடமெனமி குத்தவட வனலென வுயர்த்துரவி
விரிகதி ரெனப்பரவு ...... நிலவாலே
விதனமிக வுற்றுவரு ரதிபதி கடுத்துவிடு
விரைதரு விதட்கமல ...... கணையாலே
அடலமரி யற்றுதிசை யினில்மருவி மிக்கவனல்
அழலொடு கொதித்துவரு ...... கடைநாளில்
அணுகிநம னெற்றமயல் கொளுமநிலை சித்தமுற
அவசமொ டணைத்தருள ...... வரவேணும்
அடவிதனில் மிக்கபரு வரையவ ரளித்ததிரு
அனையமயில் முத்தமணி ...... சுரயானை
அழகிய மணிக்கலச முலைகளில் மயக்கமுறு
மதிவிரக சித்ரமணி ...... மயில்வீரா
கடதடக ளிற்றுமுக ரிளையவ கிரிக்குமரி
கருணையொ டளித்ததிற ...... முருகோனே
கமலமல ரொத்தவிழி யரிமருக பத்தர்பணி
கழுமலந கர்க்குமர ...... பெருமாளே.
பாடல் 778 ( கரியவனகர் )
ராகம் - ...; தாளம் - தனதன தனனத் தான தாத்தன
தனதன தனனத் தான தாத்தன
தனதன தனனத் தான தாத்தன ...... தனதான
அளிசுழ லளகக் காடு காட்டவும்
விழிகொடு கலவித் தீயை மூட்டவும்
அமளியில் முடியப் போது போக்கவும் ...... இளைஞோர்கள்
அவர்வச மொழுகிக் காசு கேட்கவும்
அழகிய மயிலிற் சாயல் காட்டவும்
அளவிய தெருவிற் போயு லாத்தவும் ...... அதிபார
இளமுலை மிசையிற் று¡சு நீக்கவும்
முகமொடு முகம்வைத் தாசை யாக்கவும்
இருநிதி யிலரைத் தூர நீக்கவும் ...... இனிதாக
எவரையு மளவிப் போய ணாப்பவும்
நினைபவ ரளவிற் காதல் நீக்கியென்
இடரது தொலையத் தாள்கள் காட்டிநின் ...... அருள்தாராய்
நெளிபடு களமுற் றாறு போற்சுழல்
குருதியில் முழுகிப் பேய்கள் கூப்பிட
நிணமது பருகிப் பாறு காக்கைகள் ...... கழுகாட
நிரைநிரை யணியிட் டோரி யார்த்திட
அதிர்தரு சமரிற் சேனை கூட்டிய
நிசிசரர் மடியச் சாடு வேற்கொடு ...... பொரும்வீரா
களிமயில் தனில்புக் கேறு தாட்டிக
அழகிய கனகத் தாம மார்த்தொளிர்
கனகிரி புயமுத் தார மேற்றருள் ...... திருமார்பா
கரியவ னகரிற் றேவ பார்ப்பதி
யருள்சுத குறநற் பாவை தாட்பணி
கருணைய தமிழிற் பாடல் கேட்டருள் ...... பெருமாளே.
பாடல் 779 ( வைத்தீசுரன் கோயில் )
ராகம் - வாசஸ்பதி தாளம் - சதுஸ்ர ஜம்பை (7)
தனத்தன தானத் ...... தனதான
உ ரத்துறை போதத் ...... தனியான
உ னைச்சிறி தோதத் ...... தெரியாது
மரத்துறை போலுற் ...... றடியேனும்
மலத்திருள் மூடிக் ...... கெடலாமோ
பரத்துறை சீலத் ...... தவர்வாழ்வே
பணித்தடி வாழ்வுற் ...... றருள்வோனே
வரத்துறை நீதர்க் ...... கொருசேயே
வயித்திய நாதப் ...... பெருமாளே.
பாடல் 780 ( வைத்தீசுரன் கோயில் )
ராகம் - திலங் தாளம் - திஸ்ர்ருபகம் (5) 0/3
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தத்தன தான தான தத்தன தான தான
தத்தன தான தான ...... தனதான
எத்தனை கோடி கோடி விட்டுட லோடி யாடி
யெத்தனை கோடி போன ...... தளவேதோ
இப்படி மோக போக மிப்படி யாகி யாகி
யிப்படி யாவ தேது ...... இனிமேலோ
சித்திடில் சீசி சீசி குத்திர மாய மாயை
சிக்கினி லாயு மாயு ...... மடியேனைச்
சித்தினி லாட லோடு முத்தமிழ் வாண ரோது
சித்திர ஞான பாத ...... மருள்வாயே
நித்தமு மோது வார்கள் சித்தமெ வீட தாக
நிர்த்தம தாடு மாறு ...... முகவோனே
நிட்கள ரூபர் பாதி பச்சுரு வான மூணு
நெட்டிலை சூல பாணி ...... யருள்பாலா
பைத்தலை நீடு மாயி ரத்தலை மீது பீறு
பத்திர பாத நீல ...... மயில்வீரா
பச்சிள பூக பாளை செய்க்கயல் தாவு §வ்ளுர்
பற்றிய மூவர் தேவர் ...... பெருமாளே.
பாடல் 781 ( வைத்தீசுரன் கோயில் )
ராகம் - ...; தாளம் - தான தத்தனந் தான தத்ததன
தான தத்தனந் தான தத்ததன
தான தத்தனந் தான தத்ததன ...... தனதான
பாட கச்சிலம் போடு செச்சைமணி
கோவெ னக்கலந் தாடு பொற்சரணர்
பாவை சித்திரம் போல்வர் பட்டுடையி ...... னிடைநூலார்
பார பொற்றனங் கோபு ரச்சிகர
மாமெ னப்படர்ந் தேம லிப்பரித
மாகு நற்கரும் போடு சர்க்கரையின் ...... மொழிமாதர்
ஏட கக்குலஞ் சேரு மைக்குழலொ
டாட ளிக்குலம் பாட நற்றெருவி
லேகி புட்குலம் போல பற்பலசொ ...... லிசைபாடி
ஏறி யிச்சகம் பேசி யெத்தியிதம்
வாரு முற்பணந் தாரு மிட்டமென
ஏணி வைத்துவந் தேற விட்டிடுவர் ...... செயலாமோ
சேட னுக்கசண் டாள ரக்கர்குல
மாள அட்டகுன் றேழ லைக்கடல்கள்
சேர வற்றநின் றாட யிற்கரமி ...... ரறுதோள்மேல்
சேணி லத்தர்பொன் பூவை விட்டிருடி
யோர்கள் கட்டியம் பாட எட்டரசர்
சேசெ யொத்தசெந் தாம ரைக்கிழவி ...... புகழ்வேலா
நாட கப்புனங் காவ லுற்றசுக
மோக னத்திமென் தோளி சித்ரவளி
நாய கிக்கிதம் பாடி நித்தமணி ...... புனைவோனே
ஞான வெற்புகந் தாடு மத்தர்தையல்
நாய கிக்குநன் பாக ரக்கணியும்
நாதர் மெச்சவந் தாடு முத்தமருள் ...... பெருமாளே.
பாடல் 782 ( வைத்தீசுரன் கோயில் )
ராகம் - மனோலயம் (மத்யம ஸ்ருதி) தாளம் - ஆதி - 2 களை (திஸ்ரநடை) (24)
தான தான தத்த தந்த தான தான தத்த தந்த
தான தான தத்த தந்த ...... தனதான
மாலி னாலெ டுத்த கந்தல் சோறி னால்வ ளர்த்த பொந்தி
மாறி யாடெ டுத்தசி ந்தை ...... யநியாய
மாயை யாலெ டுத்து மங்கி னேனை யாஎ னக்கி ரங்கி
வாரை யாயி னிப்பி றந்து ...... இறவாமல்
வேலி னால்வி னைக்க ணங்கள் தூள தாஎ ரித்து உ ன்றன்
வீடு தாப ரித்த அன்பர் ...... கண்முடே
மேவி யானு னைப்பொல் சிந்தை யாக வேக ளித்து கந்த
வேளெ யாமெ னப்ப ரிந்து ...... அருள்வாயே
காலி னாலெ னப்ப ரந்த சூரர் மாள வெற்றி கொண்ட
கால பாநு சத்தி யங்கை ...... முருகோனே
காம பாண மட்ட நந்த கோடி மாத ரைப்பு ணர்ந்த
காளை யேறு கர்த்த னெந்தை ...... யருள்பாலா
சேலை நேர்வி ழிக்கு றம்பெ ணாசை தோளு றப்பு ணர்ந்து
சீரை யோது பத்த ரன்பி ...... லுறைவோனே
தேவர் மாதர் சித்தர் தொண்டர் ஏக வேளு ருக்கு கந்த
சேவல் கேது சுற்று கந்த ...... பெருமாளே.
பாடல் 783 ( வைத்தீசுரன் கோயில் )
ராகம் -....; தாளம் - தானா தானன தாத்த தந்தன
தானா தானன தாத்த தந்தன
தானா தானன தாத்த தந்தன ...... தனதானா
முலா தாரமொ டேற்றி யங்கியை
ஆறா தாரமொ டோட்டி யந்திர
மூலா வாயுவை யேற்று நன்சுழி ...... முனையூடே
மூதா தாரம ரூப்பி லந்தர
நாதா கீதம தார்த்தி டும்பர
மூடே பாலொளி ஆத்து மந்தனை ...... விலகாமல்
மாலா டூனொடு சேர்த்தி தம்பெற
நானா வேதம சாத்தி ரஞ்சொலும்
வாழ்ஞா னாபுரி யேற்றி மந்திர ...... தவிசூடே
மாதா நாதனும் வீற்றி ருந்திடும்
வீடே மூணொளி காட்டி சந்திர
வாகார் தேனமு தூட்டி யென்றனை ...... யுடனாள்வாய்
சூலாள் மாதுமை தூர்த்த சம்பவி
மாதா ராபகல் காத்த மைந்தனை
சூடோ டீர்வினை வாட்டி மைந்தரெ ...... னெமையாளுந்
தூயாள் மூவரை நாட்டு மெந்தையர்
§வ்ளுர் வாழ்வினை தீர்த்த சங்கரர்
தோய்சா ரூபரொ டேற்றி ருந்தவ ...... ளருள்பாலா
வேலா ஏழ்கடல் வீட்டி வஞ்சக
மூடார் சூரரை வாட்டி யந்தகன்
வீடு டேவிய காத்தி ரம்பரி ...... மயில்வாழ்வே
வேதா நால்தலை சீக்கொ ளும்படி
கோலா காலம தாட்டு மந்திர
வேலா மால்மக ளார்க்கி ரங்கிய ...... பெருமாளே.
பாடல் 784 ( வைத்தீசுரன் கோயில் )
ராகம் - ...; தாளம் - தான தானதன தானதன தானதன
தான தானதன தானதன தானதன
தான தானதன தானதன தானதன ...... தனதான
மேக வார்குழல தாடதன பாரமிசை
யார மாடகுழை யாடவிழி யாடபொறி
மேனி வாசனைகள் வீச அல்குல் மோதிபரி ...... மளமேற
மீனு லாடையிடை யாடமயில் போலநடை
யோல மோலமென பாதமணி நூபுரமு
மேல்வில் வீசபணி கீரகுயில் போலகுரல் ...... முழவோசை
ஆக வேயவைகள் கூடிடுவர் வீதிவரு
வோரை வாருமென வேசரச மோடுருகி
ஆசை போலமனை யேகொடணை வார்கள்குவ ...... டதிபார
ஆணி மாமுலையின் மூழ்கிசுக வாரிகொடு
வேர்வை பாயஅணை யூடமளி யாடியிட
ரான சூலைபல நோய்கள்கட லாடியுட ...... லுழல்வேனோ
நாக லோகர்மதி லோகர்பக லோகர்விதி
நாடு ளோர்களம ரோர்கள்கண நாதர்விடை
நாதர் வேதியர்கள் ஆதிசர சோதிதிகழ் ...... முநிவோர்கள்
நாத ரேநரர்ம னாரணர்பு ராணவகை
வேத கீதவொலி பூரையிது பூரையென
நாச மாயசுரர் மேவுகிரி தூளிபட ...... விடும்வேலா
தோகை மாதுகுற மாதமுத மாதுவினல்
தோழி மாதுவளி நாயகிமி னாளைசுக
சோக மோடிறுகி மார்முலைவி டாமலணை ...... புணர்வோனே
தோளி ராறுமுக மாறுமயில் வேலழகு
மீதெய் வானவடி வாதொழுதெ ணாவயனர்
சூழு காவிரியும் §வ்ளுர்முரு காவமரர் ...... பெருமாளே.
பாடல் 785 ( திருக்கடவூர் )
ராகம் - பைரவி தாளம் - ஆதி (2 களை)
(எடுப்பு - 1/4 இடம்)
தாத்த தனத்தன தானன தானன
தாத்த தனத்தன தானன தானன
தாத்த தனத்தன தானன தானன ...... தனதான
ஏட்டின் விதிப்படி யேகொடு மாபுர
வீட்டி லடைத்திசை வேகசை மூணதி
லேற்றி யடித்திட வேகட லோடம ...... தெனவேகி
ஏற்கு மெனப்பொரு ளாசைபெ ணாசைகொ
ளாத்து வெனத்திரி யாபரி யாதவ
மேற்றி யிருப்பிட மேயறி யாமலு ...... முடல்பேணிப்
பூட்டு சரப்பளி யேமத னாமென
ஆட்டி யசைத்திய லேதிரி நாளையில்
பூத்த மலக்குகை யோபொதி சோறென ...... கழுகாகம்
போற்றி நமக்கிரை யாமென வேகொள
நாட்டி லொடுக்கென வேவிழு போதினில்
பூட்டு பணிப்பத மாமயி லாவருள் ...... புரிவாயே
வீட்டி லடைத்தெரி யேயிடு பாதக
னாட்டை விடுத்திட வேபல சூதினில
வீழ்த்த விதிப்படி யேகுரு காவலர் ...... வனமேபோய்
வேற்றுமை யுற்றுரு வோடியல் நாளது
பார்த்து முடித்திட வேயொரு பாரத
மேற்புனை வித்தம காவிர மாயவன் ...... மருகோனே
கோட்டை யழித்தசு ரார்பதி கோவென
மூட்டி யெரித்தப ராபர சேகர
கோத்த மணிக்கதி ரேநிக ராகிய ...... வடிவேலா
கூற்று மரித்திட வேயுதை பார்வதி
யார்க்கு மினித்தபெ ணாகிய மான்மகள்
கோட்டு முலைக்கதி பாகட வூருறை ...... பெருமாளே.
பாடல் 786 ( திருக்கடவூர் )
ராகம் - ...; தாளம் - தானதன தான தத்த தானதன தான தத்த
தானதன தான தத்த ...... தனதான
சூலமென வோடு சர்ப்ப வாயுவைவி டாத டக்கி
தூயவொளி காண முத்தி ...... விதமாகச்
சூழுமிருள் பாவ கத்தை வீழ அழ லு¡டெ ரித்து
சோதிமணி பீட மிட்ட ...... மடமேவி
மேலைவெளி யாயி ரத்து நாலிருப ராப ரத்தின்
மேவியரு ணாச லத்தி ...... னுடன்மூழ்கி
வேலுமயில் வாக னப்ர காசமதி லேத ரித்து
வீடுமது வேசி றக்க ...... அருள்தாராய்
ஓலசுர ராழி யெட்டு வாளகிரி மாய வெற்பு
மூடுருவ வேல்தொ டுத்த ...... மயில்வீரா
ஓதுகுற மான்வ னத்தில் மேவியவள் கால்பி டித்து
ளோமெனுப தேச வித்தொ ...... டணைவோனே
காலனொடு மேதி மட்க வூழிபுவி மேல்கி டத்து
காலனிட மேவு சத்தி ...... யருள்பாலா
காலமுதல் வாழ்பு விக்க தாரநகர் கோபு ரத்துள்
கானமயில் மேல்த ரித்த ...... பெருமாளே.
பாடல் 787 ( திருப்படிக்கரை )
ராகம் - ...; தாளம் - தனத்த தத்தனத் தனத்த தத்தனத்
தனத்த தத்தனத் ...... தனதான
அருக்கி மெத்தெனச் சிரித்து மைக்கணிட்
டழைத்தி தப்தடச் ...... சிலகூறி
அரைப்ப ணத்தைவிற் றுடுத்த பட்டவிழ்த்
தணைத்தி தழ்க்கொடுத் ...... தநுராகத்
துருக்கி மட்டறப் பொருட்ப றிப்பவர்க்
குளக்க ருத்தினற் ...... ப்ரமைகூரா
துரைத்து செய்ப்பதித் தலத்தி னைத்துதித்
துனைத்தி ருப்புகழ்ப் ...... பகர்வேனோ
தருக்கு மற்கடப் படைப்ப லத்தினிற்
றடப்பொ ருப்பெடுத் ...... தணையாகச்
சமுத்திர த்தினைக் குறுக்க டைத்ததிற்
றரித்த ரக்கர்பொட் ...... டெழவேபோர்
செருக்கு விக்ரமச் சரத்தை விட்டுறச்
செயித்த வுத்தமத் ...... திருமாமன்
திருத்த கப்பன்மெச் சொருத்த முத்தமிழ்த்
திருப்ப டிக்கரைப் ...... பெருமாளே.
பாடல் 788 ( மாயூரம் )
ராகம் - ....; தாளம் - தனதன தத்தத் தனந்த தானன
தனதன தத்தத் தனந்த தானன
தனதன தத்தத் தனந்த தானன ...... தனதான
அமுதினை மெத்தச் சொரிந்து மாவின
தினியப ழத்தைப் பிழிந்து பானற
வதனொடு தித்தித் தகண்ட ளாவிய ...... விதழாராய்
அழகிய பொற்றட்டி னொண்டு வேடையின்
வருபசி யர்க்குற் றவன்பி னாலுண
வருள்பவ ரொத்துத் தளர்ந்த காமுகர் ...... மயல்தீரக்
குமுதம் விளர்க்கத் தடங்கு லாவிய
நிலவெழு முத்தைப் புனைந்த பாரிய
குலவிய சித்ரப் ப்ரசண்ட பூரண ...... தனபாரக்
குவடிள கக்கட் டியுந்தி மேல்விழு
மவர்மய லிற்புக் கழிந்த பாவியை
குரைகழல் பற்றிப் புகழ்ந்து வாழ்வுற ...... அருள்வாயே
வமிசமி குத்துப் ப்ரபஞ்சம் யாவையு
மறுகிட வுக்ரக் கொடும்பை யானபுன்
மதிகொ டழித்திட் டிடும்பை ராவணன் ...... மதியாமே
மறுவறு கற்பிற் சிறந்த சீதையை
விதனம் விளைக்கக் குரங்கி னாலவன்
வமிச மறுத்திட் டிலங்கு மாயவன் ...... மருகோனே
எமதும லத்தைக் களைந்து பாடென
அருள அதற்குப் புகழ்ந்து பாடிய
இயல்கவி மெச்சிட் டுயர்ந்த பேறருள் ...... முருகோனே
எழில்வளை மிக்கத் தவழ்ந்து லாவிய
பொனிநதி தெற்கிற் றிகழ்ந்து மேவிய
இணையிலி ரத்னச் சிகண்டி யூருறை ...... பெருமாளே.
பாடல் 789 ( பாகை )
ராகம் - ...; தாளம் - தான தானன தானம், தான தானன தானம்
தான தானன தானம் ...... தனதான
ஆடல் மாமத ராஜன் பூசல் வாளியி லேநொந்
தாகம் வேர்வுற மால்கொண் ...... டயராதே
ஆர வாணகை யார்செஞ் சேலி னேவலி லேசென்
றாயு வேதனை யேயென் ...... றுலையாதே
சேடன் மாமுடி மேவும் பாரு ளோர்களுள் நீடுந்
த்யாக மீபவர் யாரென் ...... றலையாதே
தேடி நான்மறை நாடுங் காடு மோடிய தாளுந்
தேவ நாயக நானின் ...... றடைவேனோ
பாடு நான்மறை யோனுந் தாதை யாகிய மாலும்
பாவை பாகனு நாளும் ...... தவறாதே
பாக நாண்மலர் சூடுஞ் சேக ராமதில் சூழ்தென்
பாகை மாநக ராளுங் ...... குமரேசா
கூட லான்முது கூனன் றோட வாதுயர் வேதங்
கூறு நாவல மேவுந் ...... தமிழ்வீரா
கோடி தானவர் தோளுந் தாளும் வீழவு லாவுங்
கோல மாமயி லேறும் ...... பெருமாளே.
பாடல் 790 ( பாகை )
ராகம் - ஹிந்தோளம் தாளம் - ஆதி - 2 களை
தான தனந்தன தான தனந்தன
தான தனந்தன ...... தனதான
ஈளை சுரங்குளிர் வாத மெனும்பல
நோய்கள் வளைந்தற ...... இளையாதே
ஈடு படுஞ்சிறு கூடு புகுந்திடு
காடு பயின்றுயி ...... ரிழவாதே
மூளை யெலும்புகள் நாடி நரம்புகள்
வேறு படுந்தழல் ...... முழுகாதே
மூல மெனுஞ்சிவ யோக பதந்தனில்
வாழ்வு பெறும்படி ...... மொழிவாயே
வாளை நெருங்கிய வாவியி லுங்கயல்
சேல்கள் மறிந்திட ...... வலைபீறா
வாகை துதைந்தணி கேதகை மங்கிட
மோதி வெகுண்டிள ...... மதிதோயும்
பாளை நறுங்கமழ் பூக வனந்தலை
சாடி நெடுங்கடல் ...... கழிபாயும்
பாகை வளம்பதி மேவி வளஞ்செறி
தோகை விரும்பிய ...... பெருமாளே.
பாடல் 791 ( பாகை )
ராகம் - ...; தாளம் - தனன தனதன தனன தனதன
தான தானன ...... தனதான
குவளை பொருதிரு குழையை முடுகிய
கோல வேல்விழி ...... மடவார்தங்
கொடிய ம்ருகமத புளக தனகிரி
கூடி நாடொறு ...... மயலாகித்
துவள வுருகிய சரச விதமது
சோர வாரிதி ...... யலையூடே
சுழலு மெனதுயிர் மவுன பரமசு
கோம கோததி ...... படியாதோ
கவள கரதல கரட விகடக
போல பூதர ...... முகமான
கடவுள் கணபதி பிறகு வருமொரு
கார ணாகதிர் ...... வடிவேலா
பவள மரகத கநக வயிரக
பாட கோபுர ...... அரிதேரின்
பரியு மிடறிய புரிசை தழுவிய
பாகை மேவிய ...... பெருமாளே.
பாடல் 792 ( திருவிடைக்கழி )
ராகம் - ....; தாளம் -
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் ...... தனதான
அனலப் பரிபுக் ககுணத் ரயம்வைத்
தடர்பொய்க் குருதிக் ...... குடில்பேணா
அவலக் கவலைச் சவலைக் கலைகற்
றதனிற் பொருள்சற் ...... றறியாதே
குணகித் தனகிக் கனலொத் துருகிக்
குலவிக் கலவிக் ...... கொடியார்தங்
கொடுமைக் கடுமைக் குவளைக் கடையிற்
குலைபட் டலையக் ...... கடவேனோ
தினைவித் தினநற் புனமுற் றகுறத்
திருவைப் புணர்பொற் ...... புயவீரா
தெளியத் தெளியப் பவளச் சடிலச்
சிவனுக் கொருசொற் ...... பகர்வோனே
கனகச் சிகரக் குலவெற் புருவக்
கறுவிப் பொருகைக் ...... கதிர்வேலா
கழியைக் கிழியக் கயல்தத் துமிடைக்
கழியிற் குமரப் ...... பெருமாளே.
பாடல் 793 ( திருவிடைக்கழி )
ராகம் -...; தாளம் - தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத்
தனத்தனதத் தனத்தனதத் ...... தனதான
இரக்குமவர்க் கிரக்கமிகுத் தளிப்பனசொப் பனத்திலுமற்
றெனக்கியலுக் கிசைக்கெதிரெப் ...... புலவோரென்
றெடுத்துமுடித் தடக்கைமுடித் திரட்டையுடுத் திலச்சினையிட்
டடைப்பையிடப் ப்ரபுத்துவமுற் ...... றியல்மாதர்
குரக்குமுகத் தினைக்குழலைப் பனிப்பிறையொப் பெனப்புயலொப்
பெனக்குறுகிக் கலைக்குள்மறைத் ...... திடுமானின்
குளப்படியிற் சளப்படுமிப் பவக்கடலைக் கடக்கஇனிக்
குறித்திருபொற் கழற்புணையைத் ...... தருவாயே
அரக்கரடற் கடக்கஅமர்க் களத்தடையப் புடைத்துலகுக்
கலக்கணறக் குலக்கிரிபொட் ...... டெழவாரி
அனைத்தும்வறப் புறச்சுரர்கற் பகப்புரியிற் புகக்கமலத்
தனைச்சிறையிட் டிடைக்கழியிற் ...... பயில்வோனே
கரக்கரடக் களிற்றுமருப் புலக்கையினிற் கொழித்தமணிக்
கழைத்தரளத் தினைத்தினையிற் ...... குறுவாளைக்
கணிக்குறவக் குறிச்சியினிற் சிலைக்குறவர்க் கிலச்சைவரக்
கயத்தொடுகைப் பிடித்தமணப் ...... பெருமாளே.
பாடல் 794 ( திருவிடைக்கழி )
ராகம் - ஸெளராஷ்டிரம் தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2
தனன தத்தனத் தனன தத்தனத்
தனன தத்தனத் ...... தனதான
பகரு முத்தமிழ்ப் பொருளு மெய்த்தவப்
பயனு மெப்படிப் ...... பலவாழ்வும்
பழைய முத்தியிற் பதமு நட்புறப்
பரவு கற்பகத் ...... தருவாழ்வும்
புகரில் புத்தியுற் றரசு பெற்றுறப்
பொலியும் அற்புதப் ......பெருவாழ்வும்
புலன கற்றிடப் பலவி தத்தினைப்
புகழ்ப லத்தினைத் ...... தரவேணும்
தகரி லற்றகைத் தலம்வி டப்பிணைச்
சரவ ணத்தினிற் ...... பயில்வோனே
தனிவ னத்தினிற் புனம றத்தியைத்
தழுவு பொற்புயத் ...... திருமார்பா
சிகர வெற்பினைப் பகிரும் வித்தகத்
திறல யிற்சுடர்க் ...... குமரேசா
செழும லர்ப்பொழிற் குரவ முற்றபொற்
றிருவி டைக்கழிப் ...... பெருமாளே.
பாடல் 795 ( திருவிடைக்கழி )
ராகம் - ரேவதி தாளம் - அங்கதாளம் (5)
தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தனனதன தத்தனத் தனனதன தத்தனத்
தனனதன தத்தனத் ...... தனதான
படிபுனல்நெ ருப்படற் பவனம்வெளி பொய்கருப்
பவமுறைய வத்தைமுக் ...... குணநீடு
பயில்பிணிகள் மச்சைசுக் கிலமுதிர மத்திமெய்ப்
பசிபடுநி ணச்சடக் ...... குடில்பேணும்
உ டலது பொ றுத்தறக் கடைபெறுபி றப்பினுக்
குணர்வுடைய சித்தமற் ...... றடிநாயேன்
உ ழலுமது கற்பலக் கழலிணையெ னக்களித்
துனதுதம ரொக்கவைத் ...... தருள்வாயே
கொடியவொரு குக்குடக் கொடியவடி விற்புனக்
கொடிபடர்பு யக்கிரிக் ...... கதிர்வேலா
குமரசம ரச்சினக் குமரவணி யத்தன்மெய்க்
குமரமகிழ் முத்தமிழ்ப் ...... புலவோனே
தடவிகட மத்தகத் தடவரைய ரத்தரத்
தடலனுச வித்தகத் ...... துறையோனே
தருமருவு மெத்தலத் தருமருவ முத்தியைத்
தருதிருவி டைக்கழிப் ...... பெருமாளே.
பாடல் 796 ( திருவிடைக்கழி )
ராகம் - கல்யாணி தாளம் - கண்டசாபு (2 1/2)
தனதனனத் தனதான தனதனனத் தனதான
தனதனனத் தனதான ...... தனதான
பழியுறுசட் டகமான குடிலையெடுத் திழிவான
பகரும்வினைச் செயல்மாதர் ...... தருமாயப்
படுகுழிபுக் கினிதேறும் வழிதடவித் தெரியாது
பழமைபிதற் றிடுலொக ...... முமுடர்
உ ழலும்விருப் புடனோது பலசவலைக் கலைதேடி
யொருபயனைத் தெளியாது ...... விளியாமுன்
உ னகமலப் பதநாடி யுருகியுளத் தமுதூற
உ னதுதிருப் புழோத ...... அருள்வாயே
தெழியுவரிச் சலராசி மொகுமொகெனப் பெருமேரு
திடுதிடெனப் பலபூதர் ...... விதமாகத்
திமிதிமெனப் பொருசூர னெறுநெறெனப் பலதேவர்
ஜெயஜெயெனக் கொதிவேலை ...... விடுவோனே
அழகுதரித் திடுநீப சரவணவுற் பவவேல
அடல்தருகெற் சிதநீல ...... மயில்வீரா
அருணைதிருத் தணிநாக மலைபழநிப் பதிகோடை
அதிபஇடைக் கழிமேவு ...... பெருமாளே.
பாடல் 797 ( திருவிடைக்கழி )
ராகம் - ...; தாளம் - தனத்த தானன தனதன தனதன
தனத்த தானன தனதன தனதன
தனத்த தானன தனதன தனதன ...... தனதான
பெருக்க மாகிய நிதியினர் வரின்மிக
நகைத்து வாமென அமளிய ருகுவிரல்
பிடித்து போயவர் தொடையொடு தொடைபட ...... வுறவாடிப்
பிதற்றி யேயள விடுபண மதுதம
திடத்தி லேவரு மளவுந லுரைகொடு
பிலுக்கி யேவெகு சரசமொ டணைகுவர் ...... கனமாலாய்
முருக்கி னேரித ழமுதுப ருகுமென
வுரைத்து லீலைக ளதிவித மொடுமலை
முலைக்கு ளேதுயில் கொளமயல் புரிகுவர் ...... பொருள்தீரின்
முறுக்கி யேயுதை கொடுவசை யுரைதரு
மனத்து ரோகிக ளிடுதொழில் வினையற
முடுக்கி யேயுன திருகழல் மலர்தொழ ...... அருள்தாராய்
நெருக்கி யேவரு மவுணர்கள் குலமற
வுறுக்கி யேமயில் முதுகினில் விசைகொடு
நிலத்தி லேசமர் பொருதவ ருயிர்பலி ...... கொளும்வேலா
நெகத்தி லேஅயன் முடிபறி யிறைதிரி
புரத்தி லேநகை புரிபர னடியவர்
நினைப்பி லேயருள் தருசிவ னுதவிய ...... புதல்வோனே
செருக்கு வேடுவர் தருமொரு சிறுமியை
மருக்கு லாவிய மலரணை மிசைபுணர்
திருக்கை வேல்வடி வழகிய குருபர ...... முருகோனே
சிறக்கு மாதவ முனிவரர் மகபதி
யிருக்கு வேதனு மிமையவர் பரவிய
திருக்கு ராவடி நிழல்தனி லுலவிய ...... பெருமாளே.
பாடல் 798 ( திருவிடைக்கழி )
ராகம் - காபி தாளம் - சதுஸ்ர ரூபகம் - திஸ்ர நடை (9)
(எடுப்பு - அதீதம் வீச்சில் 1 தள்ளி )
தனத்த தானன தனதன ...... தனதான
மருக்கு லாவிய மலரணை ...... கொதியாதே
வளர்த்த தாய்தமர் வசையது ...... மொழியாதே
கருக்கு லாவிய அயலவர் ...... பழியாதே
கடப்ப மாலையை யினிவர ...... விடவேணும்
தருக்கு லாவிய கொடியிடை ...... மணவாளா
சமர்த்த னேமணி மரகத ...... மயில்வீரா
திருக்கு ராவடி நிழல்தனி ...... லுறைவோனே
திருக்கை வேல்வடி வழகிய ...... பெருமாளே.
பாடல் 799 ( திருவிடைக்கழி )
ராகம் - ....; தாளம் - தனன தத்தன தனதன தனன தத்தன தனதன
தனன தத்தன தனதன ...... தனதான
முலைகு லுக்கிகள் கபடிகள் வடிபு ழுக்கைக ளசடிகள்
முறைம சக்கிகள் திருடிகள் ...... மதவேணூல்
மொழிப சப்பிகள் விகடிகள் அழும னத்திகள் தகுநகை
முகமி னுக்கிகள் கசடிகள் ...... இடையேசூழ்
கலைநெ கிழ்த்திக ளிளைஞர்கள் பொருள்ப றித்தம
கனியி தழ்ச்சுருள் பிளவிலை ...... யொருபாதி
கலவி யிற்றரும் வசவிகள் விழிம யக்கினில் வசமழி
கவலை யற்றிட நினதருள் ...... புரிவாயே
அலைநெ ருப்பெழ வடவரை பொடிப டச்சம ணர்கள்குலம்
அணிக ழுப்பெற நடவிய ...... மயில்வீரா
அரன ரிப்பிர மர்கள்முதல் வழிப டப்பிரி யமும்வர
அவர வர்க்கொரு பொருள்புகல் ...... பெரியோனே
சிலைமொ ளுக்கென முறிபட மிதிலை யிற்சந கமனருள்
திருவி னைப்புண ரரிதிரு ...... மருகோனே
திரள்வ ருக்கைகள் கமுகுகள் சொரிம துக்கத லிகள்வளர்
திருவி டைக்கழி மருவிய ...... பெருமாளே.
பாடல் 800 ( தான் தோன்றி )
ராகம் - ....; தாளம் - தாந்தாந்த தத்ததன தாந்தாந்த தத்ததன
தாந்தாந்த தத்ததன ...... தனதான
சூழ்ந்தேன்ற துக்கவினை செர்ந்தூன்று மப்பில்வளர்
தூண்போன்ற இக்குடிலு ...... முலகூடே
சோர்ந் தூய்ந்து மக்கினியில் நூண்சாம்பல் பட்டுவிடு
தோம்பாங்கை யுட்பெரிது ...... முணராமே
வீழ்ந்தீண்டி நற்கலைகள் தான்தோண்டி மிக்கபொருள்
வேண்டீங்கை யிட்டுவர ...... குழுவார்போல்
வேம்பாங்கு மற்றுவினை யாம்பாங்கு மற்றுவிளை
வாம்பாங்கில் நற்கழல்கள் ...... தொழஆளாய்
வாழ்ந்தான்ற கற்புடைமை வாய்ந்தாய்ந்த நற்றவர்கள்
வான்தோன்று மற்றவரு ...... மடிபேண
மான்போன்ற பொற்றொடிகள் தாந்தோய்ந்த நற்புயமும்
வான்தீண்ட வுற்றமயில் ...... மிசையேறித்
தாழ்ந்தாழ்ந்த மிக்கடல் வீழ்ந்தீண்டு வெற்பசுரர்
சாய்ந்தேங்க வுற்றமர்செய் ...... வடிவேலா
தானதோன்றி யப்பர்குடி வாழ்ந்தீன்ற நற்புதல்வ
தான்தோன்றி நிற்கவல ...... பெருமாளே.
பாடல் 801 ( கந்தன்குடி )
ராகம் - ஸஹானா தாளம் - திஸ்ர ஏகம் (3)
தந்தந்தன தந்தந்தன தந்தந்தன தந்தந்தன
தந்தந்தன தந்தந்தன ...... தனதான
எந்தன்சட லங்கம்பல பங்கம்படு தொந்தங்களை
யென்றுந்துயர் பொன்றும்படி ...... யொருநாளே
இன்பந்தரு செம்பொன்கழ லுந்துங்கழல் தந்தும்பினை
யென்றும்படி பந்தங்கெட ...... மயிலேறி
வந்தும்பிர சண்டம்பகி ரண்டம்புவி யெங்குந்திசை
மண்டும்படி நின்றுஞ்சுட ...... ரொளிபோலும்
வஞ்சங்குடி கொண்டுந்திரி நெஞ்சன்துக ளென்றுங்கொளும்
வண்டன்தமி யன்றன்பவம் ...... ஒழியாதோ
தந்தந்தன திந்திந்திமி யென்றும்பல சஞ்சங்கொடு
தஞ்சம்புரி கொஞ்சுஞ்சிறு ...... மணியாரம்
சந்தந்தொனி கண்டும்புய லங்கன்சிவ னம்பன்பதி
சம்புந்தொழ நின்றுந்தினம் ...... விளையாடும்
கந்தன்குக னென்றன்குரு வென்றுந்தொழு மன்பன்கவி
கண்டுய்ந்திட அன்றன்பொடு ...... வருவோனே
கண்டின்கனி சிந்துஞ்சுவை பொங்கும்புனல் தங்குஞ்சுனை
கந்தன்குடி யின்தங்கிய ...... பெருமாளே.
பாடல் 801 ( கந்தன்குடி )
ராகம் - ஸஹானா தாளம் - திஸ்ர ஏகம் (3)
தந்தந்தன தந்தந்தன தந்தந்தன தந்தந்தன
தந்தந்தன தந்தந்தன ...... தனதான
எந்தன்சட லங்கம்பல பங்கம்படு தொந்தங்களை
யென்றுந்துயர் பொன்றும்படி ...... யொருநாளே
இன்பந்தரு செம்பொன்கழ லுந்துங்கழல் தந்தும்பினை
யென்றும்படி பந்தங்கெட ...... மயிலேறி
வந்தும்பிர சண்டம்பகி ரண்டம்புவி யெங்குந்திசை
மண்டும்படி நின்றுஞ்சுட ...... ரொளிபோலும்
வஞ்சங்குடி கொண்டுந்திரி நெஞ்சன்துக ளென்றுங்கொளும்
வண்டன்தமி யன்றன்பவம் ...... ஒழியாதோ
தந்தந்தன திந்திந்திமி யென்றும்பல சஞ்சங்கொடு
தஞ்சம்புரி கொஞ்சுஞ்சிறு ...... மணியாரம்
சந்தந்தொனி கண்டும்புய லங்கன்சிவ னம்பன்பதி
சம்புந்தொழ நின்றுந்தினம் ...... விளையாடும்
கந்தன்குக னென்றன்குரு வென்றுந்தொழு மன்பன்கவி
கண்டுய்ந்திட அன்றன்பொடு ...... வருவோனே
கண்டின்கனி சிந்துஞ்சுவை பொங்கும்புனல் தங்குஞ்சுனை
கந்தன்குடி யின்தங்கிய ...... பெருமாளே.
பாடல் 802 ( திலதைப்பதி )
ராகம் - ஜனரஞ்சனி தாளம் - திஸ்ர ஏகம் (3)
தனனத் தனனா ...... தனதான
இறையத் தனையோ ...... அதுதானும்
இலையிட் டுணலேய் ...... தருகாலம்
அறையிற் பெரிதா ...... மலமாயை
அலையப் படுமா ...... றினியாமொ
மறையத் தனைமா ...... சிறைசாலை
வழியுய்த் துயர்வா ...... னுறுதேவர்
சிறையைத் தவிரா ...... விடும்வேலா
திலதைப் பதிவாழ் ...... பெருமாளே.
பாடல் 803 ( திலதைப்பதி )
ராகம் - ....; தாளம் - தனனத் தனன தந்த தனனத் தனன தந்த
தனனத் தனன தந்த ...... தனதான
பனகப் படமி சைந்த முழையிற் றரள நின்று
பாடர்பொற் பணிபு னைந்த ...... முலைமீதிற்
பரிவற் றெரியு நெஞ்சில் முகிலிற் களிய கொண்டை
படுபுட் பவன முன்றி ...... லியலாரும்
அனமொத் திடுசி றந்த நடையிற் கிளியி னின்சொல்
அழகிற் றனித ளர்ந்து ...... மதிமோக
மளவிப் புளக கொங்கை குழையத் தழுவி யின்ப
அலையிற் றிரிவ னென்று ...... மறிவோனே
தனனத் தனன தந்த தனனத் தனன தந்த
தனனத் தனன தந்த ...... தனதானா
தகிடத் தகிட தந்த திமிதத் திமித வென்று
தனிமத் தளமு ழங்க ...... வருவோனே
செநெனற் கழனி பொங்கி திமிலக் கமல மண்டி
செறிநற் கழைதி ரண்டு ...... வளமேவித்
திருநற் சிகரி துங்க வரையைப் பெருவு கின்ற
திலதைப் பதிய மர்ந்த ...... பெருமாளே.
பாடல் 804 ( திலதைப்பதி )
ராகம் - ....; தாளம் - தனனத் தனத்த தந்த தனனத் தனத்த தந்த
தனனத் தனத்த தந்த ...... தனதான
மகரக் குழைக்கு ளுந்து நயனக் கடைக்கி லங்கு
வசியச் சரத்தி யைந்த ...... குறியாலே
வடவெற் பதைத்து ரந்து களபக் குடத்தை வென்று
மதர்விற் பணைத்தெ ழுந்த ...... முலைமீதே
உ கமெய்ப் பதைத்து நெஞ்சும் விரகக் கடற்பொ திந்த
வுலைபட் டலர்ச்ச ரங்கள் ...... நலியாமல்
உ லகப் புகழ்ப்பு லம்பு கலியற் றுணர்ச்சி கொண்டு
னுரிமைப் புகழ்ப்ப கர்ந்து ...... திரிவேனோ
புகர்கைக் கரிப்பொ திந்த முளரிக் குளத்தி ழிந்த
பொழுதிற் கரத்தொ டர்ந்து ...... பிடிநாளிற்
பொருமித் திகைத்து நின்று வரதற் கடைக்க லங்கள்
புகுதக் கணத்து வந்து ...... கையிலாருந்
திகிரிப் படைத்து ரந்த வரதற் குடற்பி றந்த
சிவைதற் பரைக்கி சைந்த ...... புதல்வோனே
சிவபத் தர்முத்த ரும்பர் தவசித் தர்சித்த மொன்று
திலதைப் பதிக்கு கந்த ...... பெருமாளே.
பாடல் 805 ( திருவம்பர் )
ராகம் - ...; தாளம் - தான தந்தனந் தான தந்ததன
தான தந்தனந் தான தந்ததன
தான தந்தனந் தான தந்ததன ...... தந்ததான
சோதி மந்திரம் போத கம்பரவு
ஞான கம்பரந் தேயி ருந்தவெளி
தோட லர்ந்தபொன் பூவி ருந்தஇட ...... முங்கொளாமல்
சூது பந்தயம் பேசி யஞ்சுவகை
சாதி விண்பறிந் தோடு கண்டர்மிகு
தோத கம்பரிந் தாடு சிந்துபரி ...... கந்துபாயும்
வீதி மண்டலம் பூண மர்ந்துகழி
கோல மண்டிநின் றாடி யின்பவகை
வேணு மென்றுகண் சோர ஐம்புலனொ ...... டுங்குபோதில்
வேதி யன்புரிந் தேடு கண்டளவி
லோடி வெஞ்சுடுங் காட ணைந்துசுட
வீழ்கி வெந்துகுந் தீடு மிந்தஇட ...... ரென்றுபோமோ
ஆதி மண்டலஞ் சேர வும்பரம
சோம மண்டலங் கூட வும்பதும
வாளன் மண்டலஞ் சார வுஞ்சுழிப ...... டர்ந்ததோகை
ஆழி மண்டலந் தாவி யண்டமுத
லான மண்டலந் தேடி யொன்றதொழு
கான மண்டலஞ் சேட னங்கணயில் ...... கொண்டுலாவிச்
சூதர் மண்டலந் தூளெ ழுந்துபொடி
யாகி விண்பறந் தோட மண்டியொரு
சூரி யன்திரண் டோட கண்டுநகை ...... கொண்டவேலா
சோடை கொண்டுளங் கான மங்கைமய
லாடி இந்திரன் தேவர் வந்துதொழ
சோழ மண்டலஞ் சாரு மம்பர்வளர் ...... தம்பிரானே.
பாடல் 806 ( திருமாகாளம் )
ராகம் - ....; தாளம் - தானான தானதன தானதன தானதன
தானான தானதன தானதன தானதன
தானான தானதன தானதன தானதன ...... தனதான
காதோடு தோடிகலி யாடவிழி வாள்சுழல
கோலாக லாரமுலை மார்புதைய பூணகல
காரோடு கூடளக பாரமல ரோடலைய ...... அணைமீதே
காலோடு காலிகலி யாடபரி நூபுரமொ
டேகாச மானவுடை வீசியிடை நூல்துவள
காவீர மானஇத ழூறல்தர நேசமென ...... மிடறோதை
நாதான கீதகுயில் போலஅல்குல் மால்புரள
மார்போடு தோள்கரமொ டாடிமிக நாணழிய
நானாவி நோதமுற மாதரொடு கூடிமயல் ...... படுவேனை
நானாரு நீயெவனெ னாமலென தாவிகவர்
சீர்பாத மேகவலை யாயுமுன வேநிதமு
நாதாகு மாரமுரு காஎனவு மோதஅருள் ...... புரிவாயே
பாதாள சேடனுட லாயிரப ணாமகுட
மாமேரொ டேழுகட லோதமலை சூரருடல்
பாழாக தூளிவிணி லேறபுவி வாழவிடு ...... சுடர்வேலா
பாலாழி மீதரவின் மேல்திருவொ டேயமளி
சேர்நீல ரூபன்வலி ராவணகு ழாமிரிய
பாரேவை யேவியமு ராரியைவர் தோழனரி ...... மருகோனே
மாதாபு ராரிசுக வாரிபரை நாரியுமை
ஆகாச ரூபியபி ராமிவல மேவுசிவன்
மாடேறி யாடுமொரு நாதன்மகிழ் போதமருள் ...... குருநாதா
வானோர்க ளீசன்மயி லோடுகுற மாதுமண
வாளாகு காகுமர மாமயிலின் மீதுதிரு
மாகாள மாநகரில் மாலொடடி யார்பரவு ...... பெருமாளே.
பாடல் 807 ( இஞ்சிகுடி )
ராகம் - ....; தாளம் - தந்ததனத் தான தான தனதன
தந்ததனத் தான தான தனதன
தந்ததனத் தான தான தனதன ...... தனதான
குங்குமகற் பூர நாவி யிமசல
சந்தனகத் தூரி லேப பரிமள
கொங்கைதனைக் கோலி நீடு முகபட ...... நகரேகை
கொண்டைதனைக் கோதி வாரி வகைவகை
துங்கமுடித் தால கால மெனவடல்
கொண்டவிடப் பார்வை காதி னெதிர்பொரு ...... மமுதேயாம்
அங்குளநிட் டூர மாய விழிகொடு
வஞ்சமனத் தாசை கூறி யெவரையு
மன்புடைமெய்க் கோல ராக விரகினி ...... லுறவாடி
அன்றளவுக் கான காசு பொருள்கவர்
மங்கையர்பொய்க் காதல் மோக வலைவிழ
லன்றியுனைப் பாடி வீடு புகுவது ...... மொருநாளே
சங்கதசக் ¡£வ னோடு சொலவள
மிண்டுசெயப் போன வாயு சுதனொடு
சம்பவசுக் ¡£வ னாதி யெழுபது ...... வெளமாகச்
சண்டகவிச் சேனை யால்மு னலைகடல்
குன்றிலடைத் தேறி மோச நிசிசரர்
தங்கிளைகெட் டோட ஏவு சரபதி ...... மருகோனே
எங்குநினைப் போர்கள் நேச சரவண
சிந்துரகர்ப் பூர ஆறு முககுக
எந்தனுடைச் சாமி நாத வயலியி ...... லுறைவேலா
இன்புறுபொற் கூட மாட நவமணி
மண்டபவித் தார வீதி புடைவளர்
இஞ்சிகுடிப் பார்வ தீச ரருளிய ...... பெருமாளே.
பாடல் 808 ( திருநள்ளாறு )
ராகம் - யதுகுல காம்போதி தாளம் - அங்கதாளம் (7 1/2)
(எடுப்பு - 3/4 தள்ளி)
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தத்த தந்தன தானன தானன
தத்த தந்தன தானன தானன
தத்த தந்தன தானன தானன ...... தனதான
பச்சை யொண்கிரி போலிரு மாதன
முற்றி தம்பொறி சேர்குழல் வாளயில்
பற்று புண்டரி காமென ஏய்கயல் ...... விழிஞான
பத்தி வெண்டர ளாமெனும் வாணகை
வித்ரு மஞ்சிலை போல்நுத லாரிதழ்
பத்ம செண்பக மாமநு பூதியி ...... னழகாளென்
றிச்சை யந்தரி பார்வதி மோகினி
தத்தை பொன்கவி னாலிலை போல்வயி
றிற்ப சுங்கிளி யானமி னூலிடை ...... யபிராமி
எக்கு லங்குடி லோடுல கியாவையு
மிற்ப திந்திரு நாழிநெ லாலற
மெப்பொ தும்பகிர் வாள்கும ராஎன ...... வுருகேனோ
கச்சை யுந்திரு வாளுமி ராறுடை
பொற்பு யங்களும் வேலுமி ராறுள
கட்சி வங்கம லாமுக மாறுள ...... முருகோனே
கற்ப கந்திரு நாடுயர் வாழ்வுற
சித்தர் விஞ்சையர் மாகர்ச பாசென
கட்ட வெங்கொடு சூர்கிளை வேரற ...... விடும்வேலா
நச்சு வெண்பட மீதணை வார்முகில்
பச்சை வண்புய னார்கரு டாசனர்
நற்க ரந்தநு கோல்வளை நேமியர் ...... மருகோனே
நற்பு னந்தனில் வாழ்வளி நாயகி
யிச்சை கொண்டொரு வாரண மாதொடு
நத்தி வந்துந ளாறுறை தேவர்கள் ...... பெருமாளே.
பாடல் 809 ( வழுவூர் )
ராகம் - ....; தாளம் - தனனாதன தானன தானன
தனனாதன தானன தானன
தனனாதன தானன தானன ...... தனதானா
தருவூரிசை யாரமு தார்நிகர்
குயிலார்மொழி தோதக மாதர்கள்
தணியாமய லாழியி லாழவு ...... மமிழாதே
தழலேபொழி கோரவி லோசன
மெறிபாசம காமுனை சூலமுள்
சமனார்முகில் மேனிக டாவினி ...... லணுகாதே
கருவூறிய நாளுமு நூறெழு
மலதேகமு மாவலு மாசைக
படமாகிய பாதக தீதற ...... மிடிதீரக்
கனிவீறிய போதமெய் ஞானமு
மியலார்சிவ நேசமு மேவர
கழல்சேரணி நூபுர தாளிணை ...... நிழல்தாராய்
புருகூதன்மி னாளொரு பாலுற
சிலைவேடுவர் மானொரு பாலுற
புதுமாமயில் மீதணை யாவரு ...... மழகோனே
புழுகார்பனிர் மூசிய வாசனை
யுரகாலணி கோலமென் மாலைய
புரிநூலுமு லாவுது வாதச ...... புயவீரா
மருவூர்குளிர் வாவிகள் சோலைகள்
செழிசாலிகு லாவிய கார்வயல்
மகதாபத சீலமு மேபுனை ...... வள்முதூர்
மகதேவர்பு ராரிச தாசிவர்
சுதராகிய தேவசி காமணி
வழுவூரில்நி லாவிய வாழ்வருள் ...... பெருமாளே.
பாடல் 810 ( வழுவூர் )
ராகம் - ....; தாளம் - தனனா தத்தன தாத்த தந்தன
தனனா தத்தன தாத்த தந்தன
தனனா தத்தன தாத்த தந்தன ...... தனதான
தலைநா ளிற்பத மேத்தி யன்புற
வுபதே சப்பொரு ளூட்டி மந்திர
தவஞா னக்கட லாட்டி யென்றனை ...... யருளாலுன்
சதுரா கத்தொடு கூட்டி யண்டர்க
ளறியா முத்தமி ழூட்டி முண்டக
தளிர்வே தத்துறை காட்டி மண்டலம் ...... வலமேவும்
கலைசோ திக்கதிர் காட்டி நன்சுட
ரொளிநா தப்பர மேற்றி முன்சுழி
கமழ்வா சற்படி நாட்ட முங்கொள ...... விதிதாவிக்
கமலா லைப்பதி சேர்த்து முன்பதி
வெளியா கப்புக ஏற்றி யன்பொடு
கதிர்தோ கைப்பரி மேற்கொ ளுஞ்செயல் ...... மறவேனே
சிலைவீ ழக்கடல் கூட்ட முங்கெட
அவுணோ ரைத்தலை வாட்டி யம்பர
சிரமா லைப்புக வேற்ற வுந்தொடு ...... கதிர்வேலா
சிவகா மிக்கொரு தூர்த்த ரெந்தையர்
வரிநா கத்தொடை யார்க்கு கந்தொரு
சிவஞா னப்பொரு ளூட்டு முண்டக ...... அழகோனே
மலைமே வித்தினை காக்கு மொண்கிளி
யமுதா கத்தன வாட்டி யிந்துள
மலர்மா லைக்குழ லாட்ட ணங்கிதன் ...... மணவாளா
வரிகோ ழிக்கொடி மீக்கொ ளும்படி
நடமா டிச்சுரர் போற்று தண்பொழில்
வழுவூர் நற்பதி வீற்றி ருந்தருள் ...... பெருமாளே.
பாடல் 811 ( கன்னபுரம் )
ராகம் - ....; தாளம் - தன்னதனத் தன்னதனத் தன்னதனத்
தன்னதனத் தனாதாத்த ...... தந்ததான
அன்னமிசைச் செந்நளிநச் சென்மிகணக் கந்நியமத்
தன்னமயப் புலால்யாக்கை ...... துஞ்சிடாதென்
றந்நினைவுற் றன்னினைவுற் றன்னியரிற் றன்னெறிபுக்
கன்னியசற் றுலர்முச்ச ...... டங்கயோகம்
என்னுமருட் கின்னமுடைப் பன்னவைகற் றின்னவைவிட்
டின்னணமெய்த் தடாமார்க்க ...... மின்புறாதென்
றின்னதெனக் கென்னுமதப் புன்மைகெடுத் தின்னல்விடுத்
தின்னதெனப் படாவாழ்க்கை ...... தந்திடாதோ
கன்னல்மொழிப் பின்னளகத் தன்னநடைப் பன்னவுடைக்
கண்ணவிரச் சுறாவீட்டு ...... கெண்டையாளைக்
கன்னமிடப் பின்னிரவிற் றுன்னுபுரைக் கன்முழையிற்
கன்னிலையிற் புகாவேர்த்து ...... நின்றவாழ்வே
பொன்னசலப் பின்னசலச் சென்னியினற் கன்னபுரப்
பொன்னிநதிக் கராநீர்ப்பு ...... யங்கனாதா
பொன்மலையிற் பொன்னினகர்ப் புண்ணியர்பொற் பொன்மவுலிப்
பொன்னுலகத் திராசாக்கள் ...... தம்பிரானே.
பாடல் 812 ( திருவாஞ்சியம் )
ராகம் - காம்போதி தாளம் - அங்கதாளம் (6)
தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2
தனதாந்த தத்த தனதன
தனதாந்த தத்த தனதன
தனதாந்த தத்த தனதன ...... தனதான
இபமாந்தர் சக்ர பதிசெறி
படையாண்டு சக்ர வரிசைக
ளிடவாழ்ந்து திக்கு விசயம ...... ணரசாகி
இறுமாந்து வட்ட வணைமிசை
விரிசார்ந்து வெற்றி மலர்தொடை
யெழிலார்ந்த பட்டி வகைபரி ...... மளலேபந்
தபனாங்க ரத்ந வணிகல
னிவைசேர்ந்த விச்சு வடிவது
தமர்சூழ்ந்து மிக்க வுயிர்நழு ...... வியபோது
தழல்தாங்கொ ளுத்தி யிடவொரு
பிடிசாம்பல் பட்ட தறிகிலர்
னவாஞ்சை மிக்கு னடிதொழ ...... நினையாரே
உ பசாந்த சித்த குருகுல
பவபாண்ட வர்க்கு வரதன்மை
யுருவோன்ப்ர சித்த நெடியவன் ...... ரிஷிகேசன்
உ லகீன்ற பச்சை யுமையணன்
வடவேங்க டத்தி லுறைபவ
னுயர்சார்ங்க சக்ர கரதலன் ...... மருகோனே
த்ரிபுராந்த கற்கு வரசுத
ரதிகாந்தன் மைத்து னமுருக
திறல்பூண்ட சுப்ர மணியஷண் ......முகவேலா
திசைபாய்ந்த பத்ம தடவய
லியில்வேந்த முத்தி யருள்தரு
திருவாஞ்சி யத்தி லமரர்கள் ...... பெருமாளே.
பாடல் 813 ( திருச்செங்காட்டங்குடி )
ராகம் - ஸிந்துபைரவி தாளம் - சதுஸ்ரத்ருவம் - கண்டநடை (35)
நடை - தகதகிட
எடுப்பு - /4/4/4 0
தந்தான தானதன தானதன தானதன
தந்தான தானதன தானதன தானதன
தந்தான தானதன தானதன தானதன ...... தனதான
வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய
கொந்தார மாலைகுழ லாரமொடு தோள்புரள
வண்காதி லோலைகதிர் போலவொளி வீசஇதழ் ...... மலர்போல
மஞ்சாடு சாபநுதல் வாளனைய வேல்விழிகள்
கொஞ்சார மோககிளி யாகநகை பேசியுற
வந்தாரை வாருமிரு நீருறவெ னாசைமய ...... லிடுமாதர்
சங்காளர் சூதுகொலை காரர்குடி கேடர்சுழல்
சிங்கார தோளர்பண ஆசையுளர் சாதியிலர்
சண்டாளர் சீசியவர் மாயவலை யோடடியெ ...... னுழலாமற்
சங்கோதை நாதமொடு கூடிவெகு மாயையிருள்
வெந்தோட மூலஅழல் வீசவுப தேசமது
தண்காதி லோதியிரு பாதமலர் சேரஅருள் ...... புரிவாயே
சிங்கார ரூபமயில் வாகனந மோநமென
கந்தாகு மாரசிவ தேசிகந மோநமென
சிந்தூர பார்வதிசு தாகரந மோநமென ...... விருதோதை
சிந்தான சோதிகதிர் வேலவந மோநமென
கங்காள வேணிகுரு வானவந மோநமனெ
திண்சூர ராழிமலை தூள்படவை வேலைவிடு ...... முருகோனே
இங்கீத வேதபிர மாவைவிழ மோதியொரு
பெண்காத லோடுவன மேவிவளி நாயகியை
யின்பான தேனிரச மார்முலைவி டாதகர ...... மணிமார்பா
எண்டோளர் காதல்கொடு காதல்கறி யேபருகு
செங்காடு மேவிபிர காசமயில் மேலழகொ
டென்காதல் மாலைமுடி ஆறுமுக வாவமரர் ...... பெருமாளே.
பாடல் 814 ( திருவிற்குடி )
ராகம் - ....; தாளம் - தத்த தத்ததன தத்த தத்ததன
தத்த தத்ததன தத்த தத்ததன
தத்த தத்ததன தத்த தத்ததன ...... தந்ததான
சித்தி ரத்திலுமி குத்த பொற்பவள
மொத்த மெத்தஅழ குற்ற குத்துமுலை
சிற்ப சிற்பமயி ரொத்த சிற்றிடைய ...... வஞ்சிமாதர்
சித்த மத்தனையு முற்ற ளப்பகடல்
மொய்த்த சிற்றுமண லுக்கு மெட்டியது
சிக்கு மைக்குழல்கள் கஸ்து ரிப்பரிம ...... ளங்கள்வீசப்
பத்தி ரத்திலுமி குத்த கட்கயல்கள்
வித்து ருத்துநுவ ளைத்த நெற்றிவனை
பற்க ளைப்பளிரெ னச்சி ரித்துமயல் ...... விஞ்சைபேசிப்
பச்சை ரத்நமயி லைப்பொ லத்தெருவி
லத்தி யொத்தமத மொத்து நிற்பர்வலை
பட்டு ழைத்துகுழி யுற்ற அத்தியென ...... மங்குவேனா
தத்த னத்தனத னத்த னத்தனன
தித்தி மித்திமிதி மித்தி மித்திமித
தக்கு டுக்குடுடு டுக்கு டுக்குடென ...... சங்குபேரி
சத்த முற்றுகடல் திக்கு லக்கிரிகள்
நெக்கு விட்டுமுகி லுக்கு சர்ப்பமுடி
சக்கு முக்கிவிட கட்க துட்டசுர ...... ரங்கமாள
வெற்றி யுற்றகதிர் பத்தி ரத்தையரு
ளிச்சு ரர்க்கதிப திப்ப தத்தையரு
வித்த ளித்தமதி பெற்ற தத்தைமண ...... முண்டவேலா
வெட்கி டப்பிரம னைப்பி டித்துமுடி
யைக்கு லைத்துசிறை வைத்து முத்தர்புகழ்
விற்கு டிப்பதியி லிச்சை யுற்றுமகிழ் ...... தம்பிரானே.
பாடல் 815 ( விஜயபுரம் )
ராகம் - ஹம்ஸாநந்தி தாளம் - சதுஸ்ர ரூபகம் (6)
தனதன தந்தன தானன தனதன தந்தன தானன
தனதன தந்தன தானன ...... தனதான
குடல்நிண மென்புபு லால்கமழ் குருதிந ரம்பிவை தோலிடை
குளுகுளெ னும்படி மூடிய ...... மலமாசு
குதிகொளு மொன்பது வாசலை யுடையகு ரம்பையை நீரெழு
குமிழியி னுங்கடி தாகியெ ...... யழிமாய
அடலையு டம்பைய வாவியெ அநவர தஞ்சில சாரமி
லவுடத மும்பல யோகமு ...... முயலாநின்
றலமரு சிந்தையி னாகுல மலமல மென்றினி யானுநி
னழகிய தண்டைவி டாமல ...... ரடைவேனோ
இடமற மண்டு நிசாசர ரடைய மடிந்தெழு பூதர
மிடிபட இன்பம கோததி ...... வறிதாக
இமையவ ருஞ்சிறை போயவர் பதியு ளிலங்க விடாதர
எழில்பட மொன்று மொராயிர ...... முகமான
விடதர கஞ்சுகி மேருவில் வளைவதன் முன்புர நீறெழ
வெயில்நகை தந்த புராரிம ...... தனகோபர்
விழியினில் வந்து பகீரதி மிசைவள ருஞ்சிறு வாவட
விஜயபு ரந்தனில் மேவிய ...... பெருமாளே.
பாடல் 816 ( திருவர்ருர் )
ராகம் - ....; தாளம் - தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
கூசா தேபா ரேசா தேமால்
கூறா நூல்கற் ...... றுளம்வேறு
கோடா தேவேல் பாடா தேமால்
கூர்கூ தாளத் ...... தொடைதோளில்
வீசா தேபேர் பேசா தேசீர்
வேதா தீதக் ...... கழல்மீதே
வீழா தேபோய் நாயேன் வாணாள்
வீணே போகத் ...... தகுமோதான்
நேசா வானோ ¡£சா வாமா
நீபா கானப் ...... புனமானை
நேர்வா யார்வாய் சூர்வாய் சார்வாய்
நீள்கார் சூழ்கற் ...... பகசாலத்
தேசா தீனா தீனா ¡£சா
சீரா ரூரிற் ...... பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே.
பாடல் 817 ( திருவாருர் )
ராகம் - ...; தாளம் - தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
கூர்வாய் நாராய் வாராய் போனார்
கூடா ரேசற் ...... றலஆவி
கோதா னேன்மா தாமா றானாள்
கோளே கேள்மற் ...... றிளவாடை
ஈர்வாள் போலே மேலே வீசா
ஏறா வேறிட் ...... டதுதீயின்
ஈயா வாழ்வோர் பேரே பாடா
ஈடே றா¡¢ற் ...... கெடலாமோ
சூர்வா ழாதே மாறா தேவாழ்
சூழ்வா னோர்கட் ...... கருள்கூருந்
தோலா வேலா வீறா ரூர்வாழ்
சோதீ பாகத் ...... துமையூடே
சேர்வாய் நீதீ வானோர் வீரா
சேரா ரூரைச் ...... சுடுவார்தஞ்
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே.
பாடல் 818 ( திருவர்ருர் )
ராகம் - நீலாம்பரி தாளம் - ஆதி 2 களை
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
பாலோ தேனோ பாகோ வானோர்
பாரா வாரத் ...... தமுதேயோ
பாரோர் சீரோ வேளேர் வாழ்வோ
பானோ வான்முத் ...... தெனநீளத்
தாலோ தாலே லோபா டாதே
தாயமார் நேசத் ...... துனுசாரந்
தாரா தேபே ¡£யா தேபே
சாதே யேசத் ...... தகுமோதான்
ஆலோல் கேளா மேலோர் நாண்மா
லானா தேனற் ...... புனமேபோய்
ஆயாள் தாள்மேல் வீழா வாழா
ஆளா வேளைப் ...... புகுவோனே
சேலோ டேசே ராரால் சாலார்
சீரா ரூரிற் ...... பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே.
பாடல் 819 ( திருவர்ருர் )
ராகம் - ஸ்ரீ ரஞ்சனி தாளம் - திஸ்ர ஏகம்
தானானத் தனதான தானானத் ...... தனதான
நீதானெத் தனையாலும் ந¨டுழிக் ...... க்ருபையாகி
மாதானத் தனமாக மாஞானக் ...... கழல்தாராய்
வேதாமைத் துனவேளே வீராசற் ...... குணசீலா
ஆதாரத் தொளியானே எருரிற் ...... பெருமாளே.
பாடல் 820 ( திருவர்ருர் )
ராகம் - ....; தாளம் - தனதன தனன தனதன தனன
தானான தந்த ...... தனதான
மகரம துகெட இருகுமி ழடைசி
வாரார்ச ரங்க ...... ளெனநீளும்
மதர்விழி வலைகொ டுலகினில் மனிதர்
வாணாள டங்க ...... வருவார்தம்
பகர்தரு மொழியில் ம்ருகமத களப
பாடீர கும்ப ...... மிசைவாவிப்
படிமன துனது பரிபுர சரண
பாதார விந்த ...... நினையாதோ
நகமுக சமுக நிருதரு மடிய
நானாவி லங்கல் ...... பொடியாக
நதிபதி கதற வொருகணை தெரியு
நாராய ணன்றன் ...... மருகோனே
அகனக கனக சிவதல முழுது
மாராம பந்தி ...... யவைதோறும்
அரியளி விததி முறைமுறை கருது
மர்ருர மர்ந்த ...... பெருமாளே.
பாடல் 821 ( திருவர்ருர் )
ராகம் - ....; தாளம் - தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
கரமு முளரியின் மலர்முக மதிகுழல்
கனம தெணுமொழி கனிகதிர் முலைநகை
கலக மிடுவிழி கடலென விடமென ...... மனதூடே
கருதி யனநடை கொடியிடை யியல்மயில்
கமழு மகிலுட னிளகிய ம்ருகமத
களப புளகித கிரியினு மயல்கொடு ...... திரிவேனும்
இரவு பகலற இகலற மலமற
இயலு மயலற விழியினி ரிழிவர
இதய முருகியெ யொருகுள பதமுற ...... மடலு¡டே
யெழுத அரியவள் குறமக ளிருதன
கிரியில் முழுகின இளையவ னெனு முரை
யினிமை பெறுவது மிருபத மடைவது ...... மொருநாளே
சுரபி மகவினை யெழு¦பொருள் வினவிட
மனுவி னெறிமணி யசைவுற விசைமிகு
துயரில் செவியினி லடிபட வினவுமி ...... னதிதீது
துணிவி லிதுபிழை பெரிதென வருமநு
உ ருகி யரகர சிவசிவ பெறுமதொர்
சுரபி யலமர விழிபுனல் பெருகிட ...... நடுவாகப்
பரவி யதனது துயர்கொடு நடவிய
பழுதின் மதலையை யுடலிரு பிளவொடு
படிய ரதமதை நடவிட மொழிபவ ...... னருளர்ருர்ப்
படியு லறுமுக சிவசுத கணபதி
யிளைய குமரநி ருபபதி சரவண
பரவை முறையிட அயில்கொடு நடவிய ...... பெருமாளே.
பாடல் 822 ( திருவர்ருர் )
ராகம் - குந்தல வராளி தாளம் - ஆதி - 2 களை (16)
தானா தானா தனதன தனதன
தானா தானா தனதன தனதன
தானா தானா தனதன தனதன ...... தனதான
பாலோ தேனோ பலவுறு சுளையது
தானோ வானோர் அமுதுகொல் கழைரச
பாகோ வூனோ டுருகிய மகனுண ...... வருண்ஞானப்
பாலோ வேறோ மொழியென அடுகொடு
வேலோ கோலோ விழியென முகமது
பானோ வானூர் நிலவுகொ லெனமகண் ...... மகிழ்வேனை
நாலாம் ரூபா கமலக்ஷண் முகவொளி
யேதோ மாதோம் எனதகம் வளரொளி
நானோ நீயோ படிகமொ டொளிரிட ...... மதுசோதி
நாடோ வீடோ நடுமொழி யெனநடு
தூணேர் தோளா சுரமுக கனசபை
நாதா தாதா எனவுரு கிடஅருள் ...... புரிவாயே
மாலாய் வானோர் மலர்மழை பொழியவ
தாரா சூரா எனமுநி வர்கள்புகழ்
மாயா ரூபா அரகர சிவசிவ ...... எனவோதா
வாதா டூரோ டவுணரொ டலைகடல்
கோகோ கோகோ எனமலை வெடிபட
வாளால் வேலால் மடிவுசெய் தருளிய ...... முருகோனே
சூலாள் மாலாள் மலர்மகள் கலைமகள்
ஓதார் சீராள் கதிர்மதி குலவிய
தோடாள் கோடா ரிணைமுலை குமரிமுன் ...... அருள்பாலா
தூயா ராயார் இதுசுக சிவபத
வாழ்வா மீனே வதிவமெ னுணர்வொடு
சூழ்சீ ரர்ருர் மருவிய இமையவர் ...... பெருமாளே.
பாடல் 823 ( பெரியமடம் )
ராகம் - ...; தாளம் - தனதனன தானதன தத்தனா தாத்த
தனதனன தானதன தத்தனா தாத்த
தனதனன தானதன தத்தனா தாத்த ...... தனதான
கலகவிழி மாமகளிர் கைக்குளே யாய்ப்பொய்
களவுமத னூல்பலப டித்தவா வேட்கை
கனதனமு மார்புமுற லிச்சையா லார்த்து ...... கழுநீரார்
கமழ்நறைச வாதுபுழு கைத்துழாய் வார்த்து
நிலவரசு நாடறிய கட்டில்போட் டார்ச்செய்
கருமமறி யாதுசிறு புத்தியால் வாழ்க்கை ...... கருதாதே
தலமடைசு சாளரமு கப்பிலே காத்து
நிறைபவுசு வாழ்வரசு சத்யமே வாய்த்த
தெனவுருகி யோடியொரு சற்றுளே வார்த்தை ...... தடுமாறித்
தழுவியது ராகமும்வி ளைத்துமா யாக்கை
தனையுமரு நாளையும வத்திலே போக்கு
தலையறிவி லேனைநெறி நிற்கநீ தீ¨க்ஷ ...... தரவேணும்
அலகில்தமி ழாலுயர்ச மர்த்தனே போற்றி
அருணைநகர் கோபுரவி ருப்பனே போற்றி
அடல்மயில்ந டாவியப்ரி யத்தனே போற்றி ...... அவதான
அறுமுகசு வாமியெனும் அத்தனே போற்றி
அகிலதல மோடிவரு நிர்த்தனே போற்றி
அருணகிரி நாதஎனும் அப்பனே போற்றி ...... அசுரேசர்
பெலமடிய வேல்விடுக ரத்தனே போற்றி
கரதலக பாலிகுரு வித்தனே போற்றி
பெரியகுற மாதணைபு யத்தனே போற்றி ......பெருவாழ்வாம்
பிரமனறி யாவிரத தக்ஷ¢ணா மூர்த்தி
பரசமய கோளிரித வத்தினால் வாய்த்த
பெரியமட மேவியசு கத்தனே யோக்யர் ...... பெருமாளே.
பாடல் 824 ( சோமநாதன்மடம் )
ராகம் - செஞ்சுருட்டி தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2
தனதனன தான தான தனதனன தான தான
தனதனன தான தான ...... தனதான
ஒருவழிப டாது மாயை யிருவினைவி டாது நாளு
முழலுமநு ராக மோக ...... அநுபோகம்
உ டலுமுயிர் தானு மாயு னுணர்விலொரு காலி ராத
வுளமுநெகிழ் வாகு மாறு ...... அடியேனுக்
கிரவுபகல் போன ஞான பரமசிவ யோக தீர
மெனமொழியும் வீசு பாச ...... கனகோப
எமபடரை மோது மோன வுரையிலுப தேச வாளை
யெனதுபகை தீர நீயும் ...... அருள்வாயே
அரிவையொரு பாக மான அருணகிரி நாதர் பூசை
அடைவுதவ றாது பேணும் ...... அறிவாளன்
அமணர்குல கால னாகும் அரியதவ ராஜ ராஜன்
அவனிபுகழ் சோமநாதன் ...... மடமேவும்
முருகபொரு சூரர் சேனை முறியவட மேரு வீழ
முகரசல ராசி வேக ...... முனிவோனே
மொழியுமடி யார்கள் கோடி குறைகருதி னாலும் வேறு
முனியஅறி யாத தேவர் ...... பெருமாளே.
பாடல் 825 ( த்ரியம்பகபுரம் )
ராகம் - ....; தாளம் - தனன தந்தனந் தனதன தனதன
தனன தந்தனந் தனதன தனதன
தனன தந்தனந் தனதன தனதன ...... தனதான
உ ரையொ ழிந்துநின் றவர்பொரு ளெளிதென
வுணர்வு கண்டுபின் திரவிய இகலரு
ளொருவர் நண்படைந் துளதிரள் கவர்கொடு ...... பொருள்தேடி
உ ளம கிழ்ந்துவந் துரிமையில் நினைவுறு
சகல இந்த்ரதந்த் ரமும்வல விலைமக
ளுபய கொங்கையும் புளகித மெழமிக ...... வுறவாயே
விரக வன்புடன் பரிமள மிகவுள
முழுகி நன்றியொன் றிடமல ரமளியில்
வெகுவி தம்புரிந் தமர்பொரு சமயம ...... துறுநாளே
விளைத னங்கவர்ந் திடுபல மனதிய
ரயல்த னங்களுந் தனதென நினைபவர்
வெகுளி யின்கணின் றிழிதொழி லதுவற ...... அருள்வாயே
செருதி னைந்திடுஞ் சினவலி யசுரர்க
ளுகமு டிந்திடும் படியெழு பொழுதிடை
செகம டங்கலும் பயமற மயில்மிசை ...... தனிலேறித்
திகுதி குந்திகுந் திகுதிகு திகுதிகு
தெனதெ னந்தெனந் தெனதென தெனதென
திமிதி மிந்திமிந் திமிதிமி திமியென ...... வருபூதங்
கரையி றந்திடுங் கடலென மருவிய
வுதிர மொண்டுமுண் டிடஅமர் புரிபவ
கலவி யன்புடன் குறமகள் தழுவிய ...... முருகோனே
கனமு றுந்த்ரியம் பகபுர மருவிய
கவுரி தந்தகந் தறுமுக எனஇரு
கழல்ப ணிந்துநின் றமரர்கள் தொழவல ...... பெருமாளே.
பாடல் 826 ( சிக்கல் )
ராகம் - ....; தாளம் - தன்ன தத்த தனத்த தானன
தன்ன தத்த தனத்த தானன
தன்ன தத்த தனத்த தானன ...... தனதான
கன்ன லொத்த மொழிச்சொல் வேசியர்
வன்ம னத்தை யுருக்கு லீலையர்
கண்வெ ருட்டி விழித்த பார்வையர் ...... இதமாகக்
கையி லுற்ற பொருட்கள் யாவையும்
வையெ னக்கை விரிக்கும் வீணியர்
கைகள் பற்றி யிழுத்து மார்முலை ...... தனில்வீழப்
பின்னி விட்ட சடைக்கு ளேமலர்
தன்னை வைத்து முடிப்பை நீயவி
ழென்னு மற்ப குணத்த ராசையி ...... லுழலாமற்
பெய்யு முத்தமி ழிற்ற யாபர
என்ன முத்தர் துதிக்க வேமகிழ்
பிஞ்ஞ கர்க்குரை செப்பு நாயக ...... அருள்தாராய்
வன்னி யொத்த படைக்க லாதிய
துன்னு கைக்கொ ளரக்கர் மாமுடி
மண்ணி லற்று விழச்செய் மாதவன் ...... மருகோனே
மன்னு பைப்பணி யுற்ற நீள்விட
மென்ன விட்டு முடுக்கு சூரனை
மல்லு டற்று முருட்டு மார்பற ...... அடைவாகச்
சென்னி பற்றி யறுத்த கூரிய
மின்னி ழைத்த திறத்த வேலவ
செய்ய பொற்புன வெற்பு மானணை ...... மணிமார்பா
செம்ம னத்தர் மிகுத்த மாதவர்
நன்மை பெற்ற வுளத்தி லேமலர்
செல்வ சிக்கல் நகர்க்குள் மேவிய ...... பெருமாளே.
பாடல் 827 ( சிக்கல் )
ராகம் - பந்துவராளி தாளம் - ஆதி
(எடுப்பு - 1/2 இடம்)
தனதன தத்தத் தந்தான தானன
தனதன தத்தத் தந்தான தானன
தனதன தத்தத் தந்தான தானன ...... தனதானா
புலவரை ரக்ஷ¢க் குந்தாரு வேமது
ரிதகுண வெற்பொக் கும்பூவை மார்முலை
பொருபுய திக்கெட் டும்போயு லாவிய ...... புகழாளா
பொருவரு நட்புப் பண்பான வாய்மையி
லுலகிலு னக்கொப் புண்டோவெ னாநல
பொருள்கள் நிரைத்துச் செம்பாக மாகிய ...... கவிபாடி
விலையில்த மிழ்ச்சொற் குன்போலு தாரிகள்
எவரென மெத்தக் கொண்டாடி வாழ்வெனும்
வெறிகொளு லுத்தர்க் கென்பாடு கூறிடு ...... மிடிதீர
மிகவரு மைப்பட் டுன்பாத தாமரை
சரணமெ னப்பற் றும்பேதை யேன்மிசை
விழியருள் வைத்துக் குன்றாத வாழ்வையு ...... மருள்வாயே
இலகிய வெட்சிச் செந்தாம மார்புய
சிலைநுதல் மைக்கட் சிந்தூர வாணுதல்
இமயம கட்குச் சந்தான மாகிய ...... முருகோனே
இளையகொ டிச்சிக் கும்பாக சாதன
னுதவுமொ ருத்திக் குஞ்சீல நாயக
எழிலியெ ழிற்பற் றுங்காய மாயவன் ...... மருகோனே
அலர்தரு புட்பத் துண்டாகும் வாசனை
திசைதொறு முப்பத் தெண்காதம் வீசிய
அணிபொழி லுக்குச் சஞ்சார மாமளி ...... யிசையாலே
அழகிய சிக்கற் சிங்கார வேலவ
சமரிடை மெத்தப் பொங்கார மாய்வரும்
அசுரரை வெட்டிச் சங்கார மாடிய ...... பெருமாளே.
பாடல் 828 ( நாகப்பட்டினம் )
ராகம் - ஜோன்புரி தாளம் - ஆதி - திஸ்ரநடை (12)
தான தத்த தத்த தந்த தான தத்த தத்த தந்த
தான தத்த தத்த தந்த ...... தனதான
ஓல மிட்டி ரைத்தெ ழுந்த வேலை வட்ட மிட்ட இந்த
ஊர்மு கிற்ற ருக்க ளொன்று ...... மவராரென்
று¡ம ரைப்ர சித்த ரென்று மூட ரைச்ச மர்த்த ரென்றும்
ஊன ரைப்ர புக்க ளென்று ...... மறியாமற்
கோல முத்த மிழ்ப்ர பந்த மால ருக்க ரைத்த நந்த
கோடி யிச்சை செப்பி வம்பி ...... லுழல்நாயேன்
கோப மற்று மற்று மந்த மோக மற்று னைப்ப ணிந்து
கூடு தற்கு முத்தி யென்று ...... தருவாயே
வாலை துர்க்கை சக்தி யம்பி லோக கத்தர் பித்தர் பங்கில்
மாது பெற்றெ டுத்து கந்த ...... சிறியோனே
வாரி பொட்டெ ழக்ர வுஞ்சம் வீழ நெட்ட யிற்று ரந்த
வாகை மற்பு யப்ர சண்ட ...... மயில்வீரா
ஞால வட்ட முற்ற வுண்டு நாக மெத்தை யிற்று யின்ற
நார ணற்க ருட்சு ரந்த ...... மருகோனே
நாலு திக்கும் வெற்றி கொண்ட சூர பத்ம னைக்க ளைந்த
நாக பட்டி னத்த மர்ந்த ...... பெருமாளே.
பாடல் 829 ( நாகப்பட்டினம் )
ராகம் -....; தாளம் - தான தந்ததன தந்ததன தந்ததன
தான தந்ததன தந்ததன தந்ததன
தான தந்ததன தந்ததன தந்ததன ...... தந்ததான
மார்பு ரம்பினளி னங்கிரியெ னுந்தனமொ
டார மும்படித ரம்பொறியு டன்பணிகள்
மாலை யொண்பவள மும்பரிம ளங்கலவை ...... தொங்கலாட
வாள்ச ரங்கணிய லுங்குழைத ளம்பளக
பார தொங்கலணி பெண்கள்வத னங்கள்மதி
வாகை யென்பஇத ழுஞ்சலச மென்பகள ...... சங்குமோக
சார மஞ்சள்புய முங்கிளிமு கங்களுகிர்
பாளி தம்புனைது வண்டிடையொ டின்பரச
தாழி யென்பஅல்கு லுந்துளிர ரம்பைதொடை ...... ரம்பைமாதர்
தாள்ச தங்கைகொலு சுங்குலசி லம்புமணி
யாடல் கொண்டமட மங்கையரு டன்கலவி
தாக முண்டுழல்கி னுங்கழலு றுங்கழல்ம ...... றந்திடேனே
வீர வெண்டையமு ழங்கவரி சங்குமுர
சோடு பொன்பறைத தும்பவிதி யுஞ்சுரரும்
வேத விஞ்சையரு டன்குமுற வெந்துகவ ...... டர்ந்தசூரன்
வீற டங்கமுகி லுங்கமற நஞ்சுடைய
ஆயி ரம்பகடு கொண்டவுர கன்குவடு
மேகொ ளுந்தபல்சி ரந்தனையெ றிந்துநட ...... னங்கொள்வேலா
நார சிங்கவடி வங்கொடுப்ர சண்டிரணி
யோன டுங்கநட னஞ்செய்துஇ லங்கைவலி
ராவ ணன்குலம டங்கசிலை கொண்டகரர் ...... தந்த்முல
ஞான மங்கையமு தஞ்சொருபி யென்றனொரு
தாய ணங்குகுற மங்கையைம ணந்தபுய
நாகை யம்பதிய மர்ந்துவளர் நம்பர்புகழ் ...... தம்பிரானே.
பாடல் 830 ( நாகப்பட்டினம் )
ராகம் - யமுனாகல்யாணி தாளம் - ஆதி
தனனா தனனா தனனா தனனா
தனனா தனனா ...... தனதான
விழுதா தெனவே கருதா துடலை
வினைசேர் வதுவே ...... புரிதாக
விருதா வினிலே யுலகா யதமே
லிடவே மடவார் ...... மயலாலே
அழுதா கெடவே அவமா கிடநா
ளடைவே கழியா ...... துனையோதி
அலர்தா ளடியே னுறவாய் மருவோ
ரழியா வரமே ...... தருவாயே
தொழுதார் வினைவே ரடியோ டறவே
துகள்தீர் பரமே ...... தருதேவா
சுரர்பூபதியே கருணா லயனே
சுகிர்தா வடியார் ...... பெருவாழ்வே
எழுதா மறைமா முடிவே வடிவே
லிறைவா எனையா ...... ளுடையோனே
இறைவா எதுதா வதுதா தனையே
இணைநா கையில்வாழ் ...... பெருமாளே.
பாடல் 831 ( எட்டிகுடி )
ராகம் - ....; தாளம் - தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் ...... தனதான
உ ரமுற் றிருசெப் பெனவட் டமுமொத்
திளகிப் புளகித் ...... திடமாயே
உ டைசுற் றுமிடைச் சுமையொக் கஅடுத்
தமிதக் கெறுவத் ...... துடன்வீறு
தரமொத் துபயக் களபத் தளமிக்
கவனத் தருணத் ...... தனமீதே
சருவிச் சருவித் தழுவித் தழுவித்
தவமற் கவிடுத் ...... துழல்வேனோ
அரிபுத் திரசித் தசஅக் கடவுட்
கருமைத் திருமைத் ...... துனவேளே
அடல்குக் குடநற் கொடிகட் டியனர்த்
தசுரப் படையைப் ...... பொருவோனே
பரிவுற் றவருக் கருள்வைத் தருள்வித்
தகமுத் தமிழைப் ...... பகர்வோனே
பழனத் தொளிர்முத் தணியெட் டிகுடிப்
பதியிற் குமரப் ...... பெருமாளே.
பாடல் 832 ( எட்டிகுடி )
ராகம் - ஆரபி தாளம் - அங்கதாளம் (10 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமிதக-3
தாந்த தந்தன தான தனத்தம் ...... தனதான
ஓங்கு மைம்புல னோட நினைத்தின் ...... பயர்வேனை
ஓம்பை றும்ப்ரண வாதி யுரைத்தெந் ...... தனையாள்வாய்
வாங்கி வெங்கணை சூரர் குலக்கொம் ...... புகடாவி
வாங்கி நின்றன ஏவி லுகைக்குங் ...... குமரேசா
மூங்கி லம்புய வாச மனக்குஞ் ...... சரிமானு
மூண்ட பைங்குற மாது மணக்குந் ...... திருமார்பா
கங்கை யங்கறு பாசில் மனத்தன் ...... பர்கள்வாழ்வே
காஞ்சி ரங்குடி ஆறு முகத்தெம் ...... பெருமாளே.
பாடல் 833 ( எட்டிகுடி )
ராகம் - ....; தாளம் - தனதத்த தனதத்த தனதத்த தனதத்த
தனதத்த தனதத்த ...... தனதானா
கடலொத்த விடமொத்த கணையொத்த பிணையொத்த
கயலொத்த மலரொத்த ...... விழிமானார்
கனசெப்பு நளினத்து முகைவெற்பை நிகர்செப்பு
கதிர்முத்து முலைதைக்க ...... அகலாதே
மிடலுற்ற கலவிக்கு ளுளநச்சி வளமற்று
மிடிபட்டு மடிபட்டு ...... மனமாழ்கி
மெலிவுற்ற தமியற்கு னிருபத்ம சரணத்தை
மிகநட்பொ டருள்தற்கு ...... வருவாயே
தடையற்ற கணைவிட்டு மணிவஜ்ர முடிபெற்ற
தலைபத்து டையதுட்ட ...... னுயிர்போகச்
சலசத்து மயிலுற்ற சிறைவிட்டு வருவெற்றி
தருசக்ர தரனுக்கு ...... மருகோனே
திடமுற்ற கனகப்பொ துவில்நட்பு டனடித்த
சிவனுக்கு விழியொத்த ...... புதல்வோனே
செழுநத்து மிழுமுத்து வயலுக்குள் நிறைபெற்ற
திகழெட்டி குடியுற்ற ...... பெருமாளே.
பாடல் 834 ( எட்டிகுடி )
ராகம் - ....; தாளம் - தத்தன தத்தன தானா தானா
தத்தன தத்தன தானா தானா
தத்தன தத்தன தானா தானா ...... தனதான
மைக்குழ லொத்தவை நீலோ மாலோ
அக்கணி ணைக்கிணை சேலோ வேலோ
மற்றவர் சொற்றெளி பாலோ பாகோ ...... வடிதேனோ
வத்திர மெய்ச்சசி தானோ நாணா
குத்துமு லைக்கிள நீரோ மேரோ
வைப்பதி டைக்கிணை நூலோ மேலோ ...... வெனமாதர்
தக்கவு றுப்பினுள் மாலே மேலாய்
லச்சைய றப்புணர் வாதே காதே
சைச்சையெ னத்திரி நாயே னோயா ...... தலையாதே
தற்பொறி வைத்தருள் பாராய் தாராய்
தற்சமை யத்தக லாவே னாதா
தத்தும யிற்பரி மீதே நீதான் ...... வருவாயே
முக்கணர் மெச்சிய பாலா சீலா
சித்தசன் மைத்துன வேளே தோளார்
மொய்த்தம ணத்தது ழாயோன் மாயோன் ...... மருகோனே
முத்தமிழ் வித்வவி நோதா கீதா
மற்றவ ரொப்பில ரூபா தீபா
முத்திகொ டுத்தடி யார்மேல் மாமால் ...... முருகோனே
இக்குநி ரைத்தவி ராலு¡ர் சேலு¡ர்
செய்ப்பழ நிப்பதி யூரா வர்ருர்
மிக்கவி டைக்கழி §வ்ளுர் தர்ருர் ...... வயலு¡ரா
எச்சுரு திக்குளு நீயே தாயே
சுத்தவி றற்றிறல் வீரா தீரா
எட்டிகு டிப்பதி வேலா மேலோர் ...... பெருமாளே.
பாடல் 835 ( எண்கண் )
ராகம் - ரஞ்சனி தாளம் - ஆதி - திஸ்ர நடை (12)
தந்த தந்த தந்த தந்த, தந்த தந்த தந்த தந்த
தந்த தந்த தந்த தந்த ...... தனதான
சந்த னந்தி மிர்ந்த ணைந்து குங்கு மங்க டம்பி லங்கு
சண்ப கஞ்செ றிந்தி லங்கு ...... திரடோளுந்
தண்டை யஞ்சி லம்ப லம்ப வெண்டை யஞ்ச லன்ச லென்று
சஞ்சி தஞ்ச தங்கை கொஞ்ச ...... மயிலேறித்
திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்த னந்த னந்த னென்று
சென்ற சைந்து கந்து வந்து ...... க்ருபையோடே
சிந்தை யங்கு லம்பு குந்து சந்த தம்பு கழ்ந்து ணர்ந்து
செம்ப தம்ப ணிந்தி ரென்று ...... மொழிவாயே
அந்த மந்தி கொண்டி லங்கை வெந்த ழிந்தி டும்ப கண்டன்
அங்க முங்கு லைந்த ரங்கொள் ...... பொடியாக
அம்ப கும்ப னுங்க லங்க வெஞ்சி னம்பு ரிந்து நின்று
அம்பு கொண்டு வென்ற கொண்டல் ...... மருகோனே
இந்து வுங்க ரந்தை தும்பை கொன்றை யுஞ்ச லம்பு னைந்தி
டும்ப ரன்ற னன்பில் வந்த ...... குமரேசா
இந்தி ரன்ப தம்பெ றண்டர் தம்ப யங்க டிந்த பின்பு
எண்க ணங்க மர்ந்தி ருந்த ...... பெருமாளே.
பாடல் 836 ( திருக்குடவாயில் )
ராகம் - ....; தாளம் - தனனா தத்தன தனனா தத்தன
தனனா தத்தன ...... தனதான
அயிலார் மைக்கடு விழியார் மட்டைகள்
அயலார் நத்திடு ...... விலைமாதர்
அணைமீ திற்றுயில் பொழுதே தெட்டிக
ளவரே வற்செய்து ...... தமியேனும்
மயலா கித்திரி வதுதா னற்றிட
மலமா யைக்குண ...... மதுமாற
மறையால் மிக்கருள் பெறவே யற்புத
மதுமா லைப்பத ...... மருள்வாயே
கயிலா யப்பதி யுடையா ருக்கொரு
பொருளே கட்டளை ...... யிடுவோனே
கடலோ டிப்புகு முதுசூர் பொட்டெழ
கதிர் வேல் விட்டிடு ...... திறலோனே
குயிலா லித்திடு பொழிலே சுற்றிய
குடவா யிற்பதி ...... யுறைவோனே
குறமா தைப்புணர் சதுரா வித்தக
குறையா மெய்த்தவர் ...... பெருமாளே.
பாடல் 837 ( திருக்குடவாயில் )
ராகம் - துர்கா தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன ...... தனதான
சுருதி யாயிய லாயியல் நீடிய
தொகுதி யாய்வெகு வாய்வெகு பாஷைகொள்
தொடர்பு மாயடி யாய்நடு வாய்மிகு ...... துணையாய்மேல்
துறவு மாயற மாய்நெறி யாய்மிகு
விரிவு மாய்விளை வாயருள் ஞானிகள்
சுகமு மாய்முகி லாய்மழை யாயெழு ...... சுடர்வீசும்
பருதி யாய்மதி யாய்நிறை தாரகை
பலவு மாய்வெளி யாயொளி யாயெழு
பகலி ராவிலை யாய்நிலை யாய்மிகு ...... பரமாகும்
பரம மாயையி னேர்மையை யாவரு
மறியொ ணாததை நீகுரு வாயிது
பகரு மாறுசெய் தாய்முதல் நாளுறு ...... பயனோதான்
கருது மாறிரு தோள்மயில் வேலிவை
கருதொ ணாவகை யோரர சாய்வரு
கவுணி யோர்குல வேதிய னாயுமை ...... கனபாரக்
களப புண்முலை யூறிய பாலுணு
மதலை யாய்மிகு பாடலின் மீறிய
கவிஞ னாய்விளை யாடிடம் வாதிகள் ...... கழுவேறக்
குருதி யாறெழ வீதியெ லாமலர்
நிறைவ தாய்விட நீறிட வேசெய்து
கொடிய மாறன்மெய் கூனிமி ராமுனை ...... குலையாவான்
குடிபு கீரென மாமது ராபுரி
யியலை யாரண வூரென நேர்செய்து
குடசை மாநகர் வாழ்வுற மேவிய ...... பெருமாளே.
பாடல் 838 ( வலிவலம் )
ராகம் - ....; தாளம் - தனத்த தானன தனதன தனதன
தனத்த தானன தனதன தனதன
தனத்த தானன தனதன தனதன ...... தனதான
தொடுத்த நாள்முதல் மருவிய இளைஞனும்
இருக்க வேறொரு பெயர்தம திடமது
துவட்சி யேபெறி லவருடன் மருவிடு ...... பொதுமாதர்
துவக்கி லேயடி படநறு மலரயன்
வதித்த தோதக வினையுறு தகவது
துறக்க நீறிட அரகர வேனவுள ...... மமையாதே
அடுத்த பேர்மனை துணைவியர் தமர்பொருள்
பெருத்த வாழ்விது சதமென மகிழ்வுறு
மசட்ட னாதுலன் அவமது தவிரநி ...... னடியாரோ
டமர்த்தி மாமலர் கொடுவழி படஎனை
யிருத்தி யேபர கதிபெற மயில்மிசை
யரத்த மாமணி யணிகழ லிணைதொழ ...... அருள்தாராய்
எடுத்த வேல்பிழை புகலரி தெனஎதிர்
விடுத்து ராவணன் மணிமுடி துணிபட
எதிர்த்து மோர்கணை விடல்தெரி கரதலன் ...... மருகோனே
எருக்கு மாலிகை குவளையி னறுமலர்
கடுக்கை மாலிகை பகிரதி சிறுபிறை
யெலுப்பு மாலிகை புனைசடி லவனருள் ...... புதல்வோனே
வடுத்த மாவென நிலைபெறு நிருதனை
அடக்க ஏழ்கட லெழுவரை துகளெழ
வடித்த வேல்விடு கரதல ம்ருகமத ...... புயவேளே
வனத்தில் வாழ்குற மகள்முலை முழுகிய
கடப்ப மாலிகை யணிபுய அமரர்கள்
மதித்த சேவக வலிவல நகருறை ...... பெருமாளே.
பாடல் 839 ( வேதாரணியம் )
ராகம் - மோஹனம் தாளம் - சதுஸ்ர ஜம்பை (7)
தானன தத்தத் தந்தன தந்தன ...... தனதான
சூழும்வி னைக்கட் டுன்பநெ டும்பிணி ...... கழிகாமஞ்
சோரமி தற்குச் சிந்தைநி னைந்துறு ...... துணையாதே
ஏழையெ னித்துக் கங்களு டன்தின ...... முழல்வேனோ
ஏதம கற்றிச் செம்பத சிந்தனை ...... தருவாயே
ஆழிய டைத்துத் தங்கையி லங்கையை ...... யெழுநாளே
ஆண்மைசெ லுத்திக் கொண்டக ரும்புயல் ...... மருகோனே
வேழமு கற்கு தம்பியெ னுந்திரு ...... முருகோனே
வேதவ னத்தற் சங்கரர் தந்தருள் ...... பெருமாளே.
பாடல் 840 ( வேதாரணியம் )
ராகம் -....; தாளம் - தான தனத்தன தந்த தான தனத்தன தந்த
தான தனத்தன தந்த ...... தனதான
சேலை யுடுத்துந டந்து மாலை யவிழ்த்துமு டிந்து
சீத வரிக்குழல் கிண்டி ...... யள§முசத்
தேனி லினிக்கமொ ழிந்து காமு கரைச்சிறை கொண்டு
தேச மனைத்தையும் வென்ற ...... விழிமானார்
மாலை மயக்கில்வி ழுந்து காம கலைக்குளு ளைந்து
மாலி லகப்பட நொந்து ...... திரிவேனோ
வால ரவிக்கிர ணங்க ளாமென வுற்றப தங்கள்
மாயை தொலைத்திட வுன்ற ...... னருள்தாராய்
பாலை வனத்தில்ந டந்து நீல அரக்கியை வென்று
பார மலைக்குள கன்று ...... கணையாலேழ்
பார மரத்திரள் மங்க வாலி யுரத்தையி டந்து
பால்வ ருணத்தலை வன்சொல் ...... வழியாலே
வேலை யடைத்துவ ரங்கள் சாடி யரக்கரி லங்கை
வீட ணருக்கருள் கொண்டல் ...... மருகோனே
மேவு திருத்தணி செந்தில் நீள்பழ நிக்குளு கந்து
வேத வனத்தில மர்ந்த ...... பெருமாளே.
பாடல் 841 ( வேதாரணியம் )
ராகம் - ....; தாளம் - தானன தத்த தனந்த தானன தத்த தனந்த
தானன தத்த தனந்த ...... தனதான
நூலினை யொத்த மருங்குல் தேரினை யொத்த நிதம்பம்
நூபுர மொய்த்த பதங்கள் ...... இவையாலும்
நூறிசை பெற்ற பதங்கொள் மேருவை யொத்த தனங்கள்
நூல்வல்ம லர்ப்பொரு துண்டம் ...... அவையாலும்
சேலினை யொத்திடு கண்க ளாலும ழைத்திடு பெண்கள்
தேனிதழ் பற்றுமொ ரின்ப ...... வ¨ல்முழ்கிச்
சீலம னைத்து மொழிந்து காமவி தத்தி லழுந்தி
தேறுத வத்தை யிழந்து ...... திரிவேனோ
வாலஇ ளப்பிறை தும்பை யாறுக டுக்கை கரந்தை
வாசுகி யைப்புனை நம்பர் ...... தருசேயே
மாவலி யைச்சிறை மண்ட ஓரடி யொட்டிய ளந்து
வாளி பரப்பியி லங்கை ...... யரசானோன்
மேல்முடி பத்தும ரிந்து தோளிரு பத்தும ரிந்து
வீரமி குத்தமு குந்தன் ...... மருகோனே
மேவுதி ருத்தணி செந்தில் நீள்பழ நிக்குளு கந்து
வேதவ னத்தில மர்ந்த ...... பெருமாளே.
பாடல் 842 ( கோடி - குழகர் கோயில் )
ராகம் - ....; தாளம் - தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன ...... தனதான
நீலமுகி லானகுழ லானமட வார்கள்தன
நேயமதி லேதினமு ...... முழலாமல்
நீடுபுவி யாசைபொரு ளாசைமரு ளாகியலை
நீரிலுழல் மீனதென ...... முயலாமற்
காலனது நாவரவ வாயிலிடு தேரையென
காயமரு வாவிவிழ ...... அணுகாமுன்
காதலுட னோதுமுடி யார்களுட னாடியொரு
கால்முருக வேளெனவு ...... மருள்தாராய்
சோலைபரண் மீதுநிழ லாகதினை காவல்புரி
தோகைகுற மாதினுட ...... னுறவாடிச்
சோரனென நாடிவரு வார்கள்வன வேடர்விழ
சோதிகதிர் வேலுருவு ...... மயில்வீரா
கோல வழல் நீறுபுனை யாதிசரு வேசரொடு
கூடிவிளை யாடுமுமை ...... தருசேயே
கோடுமுக வானைபிற கானதுணை வாகுழகர்
கோடிநகர் மேவிவளர் ...... பெருமாளே.
பாடல் 843 ( திருப்பெருந்துறை )
ராகம் - ....; தாளம் - தனத்த தந்தன தானன தந்தத்
தனத்த தந்தன தானன தந்தத்
தனத்த தந்தன தானன தந்தத் ...... தனதான
இரத்த முஞ்சியு மூளையெ லும்புட்
டசைப்ப சுங்குடல் நாடிபு னைந்திட்
டிருக்கு மண்சல வீடுபு குந்திட் ...... டதில்மேவி
இதத்து டன்புகல் சூதுமி குந்திட்
டகைத்தி டும்பொரு ளாசையெ னும்புட்
டெருட்ட வுந்தெளி யாதுப றந்திட் ...... டிடமாயா
பிரத்தம் வந்தடு வாதசு ரம்பித்
துளைப்பு டன்பல வாயுவு மிஞ்சிப்
பெலத்தை யுஞ்சில நாளுளொ டுங்கித் ...... தடிமேலாய்ப்
பிடித்தி டும்பல நாள்கொடு மந்திக்
குலத்தெ னும்படி கூனிய டங்கிப்
பிசக்கு வந்திடு போதுபி னஞ்சிச் ...... சடமாமோ
தரித்த னந்தன தானன தந்தத்
திமித்தி மிந்திமி தீதக் திந்தத்
தடுட்டு டுண்டுடு டூடுடி மிண்டிட் ...... டியல்தாளம்
தனத்த குந்தகு தானன தந்தக்
கொதித்து வந்திடு சூருடல் சிந்தச்
சலத்து டன்கிரி தூள்படெ றிந்திட் ...... டிடும்வேலா
சிரத்து டன்கர மேடுபொ ழிந்திட்
டிரைத்து வந்தம ரோர்கள் படிந்துச்
சிரத்தி னுங்கமழ் மாலைம ணம்பொற் ...... சரணோனே
செகத்தி னின்குரு வாகிய தந்தைக்
களித்தி டுங்குரு ஞானப்ர சங்கத்
திருப்பெ ருந்துறை மேவிய கந்தப் ...... பெருமாளே.
பாடல் 844 ( திருப்பெருந்துறை )
ராகம் - ....; தாளம் - தனத்தனந் தனதன தனத்தனந் தனதன
தனத்தனந் தனதன ...... தனதான
வரித்தகுங் குமமணி முலைக்குரும் பையர்மன
மகிழ்ச்சிகொண் டிடஅதி ...... விதமான
வளைக்கரங் களினொடு வளைத்திதம் படவுடன்
மயக்கவந் ததிலறி ...... வழியாத
கருத்தழிந் திடஇரு கயற்கணும் புரள்தர
களிப்புடன் களிதரு ...... மடமாதர்
கருப்பெருங் கடலது கடக்கவுன் திருவடி
களைத்தருந் திருவுள ...... மினியாமோ
பொருப்பகம் பொடிபட அரக்கர்தம் பதியொடு
புகைப்பரந் தெரியெழ ...... விடும்வேலா
புகழ்ப்பெருங் கடவுளர் களித்திடும் படிபுவி
பொறுத்தமந் தரகிரி ...... கடலு¡டே
திரித்தகொண் டலுமொரு மறுப்பெறுஞ் சதுமுக
திருட்டியெண் கணன்முத ...... லடிபேணத்
திருக்குருந் தடியமர் குருத்வசங் கரரொடு
திருப்பெருந் துறையுறை ...... பெருமாளே.
பாடல் 845 ( திருப்பெருந்துறை )
ராகம் - ....; தாளம் - தனன தந்தனந் தனதன தனதன
தனன தந்தனந் தனதன தனதன
தனன தந்தனந் தனதன தனதன ...... தனதான
முகர வண்டெழுங் கருமுகி லலையவு
முதிய நஞ்சுமிழ்ந் தயில்விழி குவியவு
முகிள சந்திரன் பொருநுதல் வெயரவு ...... மமுதூறும்
முருகு தங்குசெந் துகிரிதழ் தெரியவு
மருவு சங்கநின் றொலிகொடு பதறவு
முழுது மன்புதந் தமளியி னுதவிய ...... அநுராகச்
சிகர கும்பகுங் குமபுள கிததன
மிருபு யம்புதைந் திடநடு விடைவெளி
தெரிய லின்றியொன் றிடவுயி ருயிருட ...... னுறமேவித்
திமிர கங்குலின் புதவிடு மவசர
நினைவு நெஞ்சினின் றறவவர் முகமது
தெரிச னஞ்செயும் பரிவற இனியருள் ...... புரிவாயே
மகர நின்றதெண் டிரைபொரு கனைகடல்
மறுகி யஞ்சிவந் தடிதொழு திடவொரு
வடிகொள் செஞ்சரந் தொடுபவ னிருபது ...... புயவீரன்
மடிய வங்குசென் றவனொரு பதுமுடி
முடிய முன்புமண் டமர்பொரு தமர்நிழல்
மதிலி லங்கையும் பொடிபட அருளரி ...... மருகோனே
நிகரி லண்டமெண் டிசைகளு மகிழ்வுற
விரகு கொண்டுநின் றழகுறு மயில்மிசை
நினைவி னுந்தியம் புவிதனை வலம்வரு ...... மிளையோனே
நிலவ ரும்புதண் டரளமு மிளிரொளிர்
பவள மும்பொரும் பழனமு மழகுற
நிழல்கு ருந்தமுஞ் செறிதுறை வளர்வுறு ...... பெருமாளே.
பாடல் 846 ( திருத்துருத்தி )
ராகம் - ....; தாளம் - தனத் தனத்தன தானன தானன
தனத் தனத்தன தானன தானன
தனத் தனத்தன தானன தானன ...... தனதான
மலைக் கனத்தென மார்பினி லேயிரு
முலைக் கனத்துற வேயிடை நூலென
வளைத்து குப்பமை யார்குழல் தோளொடும் ...... அலைமோத
மயிற் குலத்தவ ராமென நீள்கலை
நெகிழ்த்து வித்திரு வார்விழி வேல்கொடு
மயக்கி நத்தினர் மேல்மறு பாடும ...... விழியேவி
விலைக் கெனத்தன மாயிர மாயிர
முலைக்க ளப்பினு மாசைபொ தாதென
வெறுப்பர் குத்திர காரியர் வேசையர் ...... மயல்மேலாய்
வெடுக் கெடுத்தும காபிணி மேலிட
முடக்கி வெட்கு மதாமத வீணனை
மினற் பொலிப்பத மோடுற வேயருள் ...... புரிவாயே
அலைக் கடுத்தசு ரார்பதி கோவென
விடப் பணச்சிர மாயிர சேடனும்
அதிர்த்தி டக்கதிர் வேல்விடு சேவக ...... மயில்வீரா
அடைக் கலப்பொரு ளாமென நாயெனை
அழைத்து முத்திய தாமநு பூதியெ
னருட்டி ருப்புக ழோதுக வேல்மயி ...... லருள்வோனே
சிலைக்கை முப்புர நீறெழ வேதிரு
வுளத்தி லற்பமெ னாநினை தேசிகர்
சிறக்க முத்தமி ழாலொரு பாவக ...... மருள்பாலா
திருக் கடப்பலர் சூடிய வார்குழல்
குறத்தி கற்புட னேவிளை யாடியொர்
திருத் துருத்தியில் வாழ்முரு காசுரர் ...... பெருமாளே.
பாடல் 847 ( திருவீழிமிழலை )
ராகம் - அமிர்த வர்ஷணி தாளம் - ஆதி
தனனா தனனா தனனா தனனா
தனனா தனனா ...... தனதான
எருவாய் கருவாய் தனிலே யுருவா
யிதுவே பயிராய் ...... விளைவாகி
இவர்போ யவரா யவர்போ யிவரா
யிதுவே தொடர்பாய் ...... வெறிபோல
ஓருதா யிருதாய் பலகோ டியதா
யுடனே யவமா ...... யழியாதே
ஓருகால் முருகா பராம குமரா
உ யிர்கா வெனவோ ...... தருள்தாராய்
முருகா வெனவோர் தரமோ தடியார்
முடிமே லிணைதா ...... ளருள்வோனே
முநிவோ ரமரோர் முறையோ வெனவே
முதுசூ ருரமேல் ...... விடும்வேலா
திருமால் பிரமா வறியா தவர்சீர்
சிறுவா திருமால் ...... மருகோனே
செழுமா மதில்சே ரழகார் பொழில்சூழ்
திருவீ ழியில்வாழ் ...... பெருமாளே.
பாடல் 848 ( திருவாவடுதுறை )
ராகம் - ....; தாளம் - தத்ததன தான தனத்தனத் தத்ததத்த
தத்ததன தான தனத்தனத் தத்ததத்த
தத்ததன தான தனத்தனத் தத்ததத்த ...... தனதான
சொற்பிழைவ ராம லுனைக்கனக் கத்துதித்து
நிற்பதுவ ராத பவக்கடத் திற்சுழற்றி
சுக்கிலவ தார வழிக்கிணக் கிக்களித்து ...... விலைமாதர்
துப்பிறைய தான இதழ்க்கனிக் குக்கருத்தை
வைத்துமய லாகி மனத்தைவிட் டுக்கடுத்த
துற்சனமகாத கரைப்புவிக் குட்டழைத்த ...... நிதிமேவு
கற்பகஇ ராச னெனப்படைக் குப்பெருத்த
அர்ச்சுனந ராதி யெனக்கவிக் குட்பதித்து
கற்றறிவி னாவை யெடுத்தடுத் துப்படித்து ...... மிகையாகக்
கத்திடுமெ யாக வலிக்கலிப் பைத்தொலைத்து
கைப்பொருளி லாமை யெனைக்கலக் கப்படுத்து
கற்பனைவி டாம லலைத்திருக் கச்சலிக்க ...... விடலாமோ
எற்பணிய ராவை மிதுத்துவெட் டித்துவைத்து
பற்றியக ராவை யிழுத்துரக் கக்கிழித்து
எட்கரிப டாம லிதத்தபுத் திக்கதிக்கு ...... நிலையோதி
எத்தியப சாசின் முலைக்குடத் தைக்குடித்து
முற்றுயிரி லாம லடக்கிவிட் டுச்சிரித்த
யிற்கணையி ராமர் சுகித்திருக் கச்சினத்த ...... திறல்வீரா
வெற்பெனம தாணி நிறுத்துருக் கிச்சமைத்து
வர்க்கமணி யாக வடித்திருத் தித்தகட்டின்
மெய்க்குலம தாக மலைக்கமுத் தைப்பதித்து ...... வெகுகோடி
விட்கதிர தாக நிகர்த்தொளிக் கச்சிவத்த
ரத்தினப டாக மயிற்பரிக் குத்தரித்து
மிக்கதிரு வாவ டுநற்றுறைக் குட்செழித்த ...... பெருமாளே.
பாடல் 849 ( மருத்துவக்குடி )
ராகம் - ....; தாளம் - தனத்த தத்தன தானா தானன
தனத்த தத்தன தானா தானன
தனத்த தத்தன தானா தானன ...... தனதான
கருத்தி தப்படு காமா லீலைகள்
விதத்தை நத்திய வீணா வீணிகள்
கவட்டு விற்பன மாயா வாதிகள் ...... பலகாலுங்
கரைத்து ரைத்திடு மோகா மோகிகள்
அளிக்கு லப்பதி கார்போ லோதிகள்
கடைக்க ணிற்சுழ லாயே பாழ்படு ...... வினையேனை
உ ரைத்த புத்திகள் கேளா நீசனை
யவத்த மெத்திய ஆசா பாசனை
யுளத்தில் மெயப்பொரு ளோரா மூடனை ...... யருளாகி
உ யர்ச்சி பெற்றிடு மேலா மூதுரை
யளிக்கு நற்பொரு ளாயே மாதவ
வுணர்ச்சி பெற்றிட வேநீ தாளிணை ...... யருள்வாயே
செருக்கி வெட்டிய தீயோ ராமெனு
மதத்த துட்டர்கள் மாசூ ராதிய
சினத்தர் பட்டிட வேவே லேவிய ...... முருகோனே
சிவத்தை யுற்றிடு தூயா தூயவர்
கதித்த முத்தமிழ் மாலா யோதிய
செழிப்பை நத்திய சீலா வீறிய ...... மயில்வீரா
வரைத்த வர்க்கரர் சூலா பாணிய
ரதிக்கு ணத்தரர் தீரா தீரர்த
மனத்தி யற்படு ஞானா தேசிக ...... வடிவேலா
வருக்கை யிற்கனி சாறாய் மேலிடு
தழைத்த செய்த்தலை யூடே பாய்தரு
மருத்து வக்குடி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.
பாடல் 850 ( திருப்பந்தணை நல்லு¡ர் )
ராகம் - ....; தாளம் - தனதந்தன தனதந்தன தனதந்தன தான
தனதந்தன தனதந்தன தனதந்தன தான
தனதந்தன தனதந்தன தனதந்தன தானத் ...... தனதான
இதசந்தன புழுகுஞ்சில மணமுந்தக வீசி
யணையுந்தன கிரிகொண்டிணை யழகும்பொறி சோர
இருளுங்குழல் மழையென்பந வரசங்கொளு மோகக் ...... குயில்பொலே
இடையுங்கொடி மதனன்தளை யிடுகுந்தள பார
இலையுஞ்சுழி தொடைரம்பையு மமுதந்தட மான
இயலங்கடி தடமும்பொழி மதவிஞ்சைகள் பேசித் ...... தெருமீதே
பதபங்கய மணையும்பரி புரமங்கொலி வீச
நடைகொண்டிடு மயிலென்பன கலையுஞ்சுழ லாட
பரிசும்பல மொழியுஞ்சில கிளிகொஞ்சுகை போலப் ...... பரிவாகிப்
பணமுண்டென தவலம்படு நினைவுண்டிடை சோர
இதுகண்டவர் மயல்கொண்டிட மனமுஞ்செயல் மாற
பகலுஞ்சில இரவுந்துயில் சிலவஞ்சகர் மாயைத் ...... துயர்தீராய்
திதிதிந்திமி தனதந்தன டுடுடுண்டுடு பேரி
டகுடங்குகு டிகுடிங்குகு படகந்துடி வீணை
செகணஞ்செக வெனவும்பறை திசையெங்கினு மோதக் ...... கொடுசூரர்
சிரமுங்கர வுடலும்பரி யிரதங்கரி யாளி
நிணமுங் குடல் தசையுங்கட லெனசெம்புன லோட
சிலசெம்புள்கள் கழுகுஞ் சிறு நரியுங்கொடி யாடப் ...... பொரும்வேலா
மதவெங்கய முரிகொண்டவர் மழுவுங்கலை பாணி
யிடமன்பொடு வளருஞ்சிவை புகழ்சுந்தரி யாதி
வளருந்தழ லொளிர்சம்பவி பரைவிண்டிள தோகைத் ...... தருசேயே
வதனஞ்சசி யமுதம்பொழி முலைநன்குற மாதொ
டிசையுஞ்சுரர் தருமங்கையொ டிதயங்களி கூர
வருபந்தணை நகர்வந்துறை விமலன்குரு நாதப் ...... பெருமாளே.
பாடல் 851 ( திருப்பந்தணை நல்லு¡ர் )
ராகம் - ஹிந்தோளம் தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)
தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தந்த தனதன தந்த
தனதன தந்த ...... தனதான
இருவினை யஞ்ச வருவினை கெஞ்ச
இருள்பிணி துஞ்ச ...... மலமாய
எனதிடர் மங்க வுனதருள் பொங்க
இசைகொடு துங்க ...... புகழ்கூறித்
திருமுக சந்த்ர முருகக டம்ப
சிவசுத கந்த ...... குகவேல
சிவசிவ என்று தெளிவுறு நெஞ்சு
திகழந டஞ்செய் ...... கழல்தாராய்
மருதொடு கஞ்ச னுயிர்பலி கொண்டு
மகிழரி விண்டு ...... மருகோனே
வதைபுரி கின்ற நிசிசரர் குன்ற
வலம்வரு செம்பொன் ...... மயில்வீரா
அருகுறு மங்கை யொடுவிடை யுந்து
மமலனு கந்த ...... முருகோனே
அருள்செறி பந்த ணையிலிரு மங்கை
அமளிந லங்கொள் ...... பெருமாளே.
பாடல் 852 ( திருப்பந்தணை நல்லு¡ர் )
ராகம் - ....; தாளம் - தனன தந்தன தானன தானன
தனன தந்தன தானன தானன
தனன தந்தன தானன தானன ...... தனதான
எகினி னம்பழி நாடக மாடிகள்
மயிலெ னுஞ்செய லாரகி நேரல்குல்
இசையி டுங்குர லார்கட னாளிகள் ...... வெகுமோகம்
எனவி ழுந்திடு வார்முலை மேல்துகில்
அலைய வுந்திரி வாரெவ ராயினும்
இளகு கண்சுழல் வார்விலை வேசியர் ...... வலைவீசும்
அதிக வஞ்சக பாவனை யால்மயல்
கொடுவி ழுந்திட ராகமு நோய்பிணி
யதிக முங்கொடு நாயடி யேனினி ...... யுழலாமல்
அமுத மந்திர ஞானொப தேசமும்
அருளி யன்புற வேமுரு காவென
அருள்பு குந்திட வேகழ லார்கழல் ...... அருள்வாயே
ககன விஞ்சையர் கோவென வேகுவ
டவுணர் சிந்திட வேகடல் தீவுகள்
கமற வெந்தழல் வேல்விடு சேவக ...... முருகோனே
கரிநெ டும்புலி தோலுடை யாரெனை
யடிமை கொண்டசு வாமிச தாசிவ
கடவு ளெந்தையர் பாகம்வி டாவுமை ...... யருள்பாலா
செகமு மண்டமு மோருரு வாய்நிறை
நெடிய அம்புயல் மேனிய னாரரி
தீருவு றைந்துள மார்பக னார்திரு ...... மருகோனே
தினைவ னந்தனில் வாழ்வளி நாயகி
வளர்த னம்புதை மார்பழ காமிகு
திலக பந்தணை மாநகர் மேவிய ...... பெருமாளே.
பாடல் 853 ( திருப்பந்தணை நல்லு¡ர் )
ராகம் - ....; தாளம் - தந்தன தனத்த தந்தன தனத்த
தந்தன தனத்த ...... தனதான
கும்பமு நிகர்த்த கொங்கையை வளர்த்த
கொஞ்சுகிளி யொத்த ...... மொழிமானார்
குங்கும பணிக்குள் வண்புழுகு விட்ட
கொந்தளகம் வைத்த ...... மடவார்பால்
வம்புகள் விளைத்து நண்புகள் கொடுத்து
மங்கிநர கத்தில் ...... மெலியாமல்
வண்கயிலை சுற்றி வந்திடு பதத்தை
வந்தனைசெய் புத்தி ...... தருவாயே
பம்புநதி யுற்ற பங்கொருச மர்த்தி
பண்டுள தவத்தி ...... லருள்சேயே
பைம்புய லுடுத்த தண்டலை மிகுத்த
பந்தணை நகர்க்கு ...... ளுறைவோனே
சம்புநிழ லுக்குள் வந்தவ தரித்த
சங்கரர்த மக்கு ...... மிறையோனே
சங்கணி கரத்த ரும்பர்பய முற்ற
சஞ்சல மறுத்த ...... பெருமாளே.
பாடல் 854 ( திருப்பந்தணை நல்லு¡ர் )
ராகம் - ....; தாளம் - தந்ததன தந்ததன தனதனத்
தந்ததன தந்ததன தனதனத்
தந்ததன தந்ததன தனதனத் ...... தனதான
கெண்டைகள்பொ ருங்கண்மங் கையர்மலர்க்
கொண்டைகள்கு லுங்கநின் றருகினிற்
கெஞ்சுபலு டன்குழைந் தமளியிற் ...... கொடுபோய்வண்
கெந்தபொடி யும்புனைந் துறவணைத்
தின்பவச னந்தருந் தொழிலடுக்
கின்றமய லின்படுந் துயரறப் ...... ப்ரபைவீசுந்
தண்டைகள் கலின்கலின் கலினெனக்
கிண்கிணி கிணின்கிணின் கிணினெனத்
தண்கொலு சுடன்சிலம் பசையவுட் ...... பரிவாகிச்
சந்ததமும் வந்திரும் பரிமளப்
பங்கய பதங்களென் கொடுவினைச்
சஞ்சல மலங்கெடும் படியருட் ...... புரிவாயே
தொண்டர்கள் சரண்சரண் சரணெனக்
கொம்புகள் குகுங்குகுங் குகுமெனத்
துந்துமி திமிந்திமிந் திமினெனக் ...... குறுமோசை
சுந்தரி மணஞ்செயுஞ் சவுரியக்
கந்தகுற வஞ்சிதங் கருவனத்
துங்கமலை யும்புரந் தமரருக் ...... கிடர்கூரும்
பண்டர்கள்பு யங்களும் பொடிபடக்
கண்டவப்ர சண்டகுஞ் சரியெழிற்
பைந்தருவ னம்புரந் தகழெயிற் ...... புடைசூழும்
பந்திவரு மந்திசெண் பகமகிற்
சந்துசெறி கொன்றைதுன் றியவனப்
பந்தணையில் வந்திடுஞ் சரவணப் ...... பெருமாளே.
பாடல் 855 ( திருப்பந்தணை நல்லு¡ர் )
ராகம் -....; தாளம் - தான தந்ததன தான தந்ததன
தான தந்ததன தான தந்ததன
தான தந்ததன தான தந்ததன ...... தந்ததான
தேனி ருந்தஇத ழார்ப ளிங்குநகை
யார்கு ளிர்ந்தமொழி யார்ச ரங்கள்விழி
சீர்சி றந்தமுக வாரி ளம்பிறைய ...... தென்புரூவர்
தேன மர்ந்தகுழ லார்க ளங்கமுகி
னார்பு யங்கழையி னார்த னங்குவடு
சேர்சி வந்தவடி வார்து வண்டஇடை ...... புண்டா£கம்
சூனி யங்கொள்செய லார ரம்பைதொடை
யார்ச ரண்கமல நேரி ளம்பருவ
தோகை சந்தமணி வாரு டன்கலவி ...... யின்ப்முடே
சோக முண்டுவிளை யாடி னுங்கமல
பாத மும்புயமி ராறு மிந்துளபல்
தோட லங்கலணி மார்ப மும்பரிவு ...... ளங்கொள்வேனே
ஓந மந்தசிவ ரூபி யஞ்சுமுக
நீலி கண்டிகலி யாணி விந்துவொளி
யோசை தங்குமபி ராமி யம்பிகைப ...... யந்தவேளே
ஓல மொன்றவுணர் சேனை மங்கையர்கள்
சேறு டன்குருதி யோட எண்டிசையும்
ஓது கெந்தருவர் பாட நின்றுநட ...... னங்கொள்வேலா
ஏனல் மங்கைசுசி ஞான ரம்பையென
தாயி சந்த்ரமுக பாவை வஞ்சிகுற
மானொ டும்பர்தரு மான ணைந்தழகி ...... லங்குமார்பா
ஏர்க ரந்தையறு கோடு கொன்றைமதி
யாற ணிந்தசடை யார்வி ளங்குமெழில்
ஈறில் பந்தணைந லு¡ர மர்ந்துவளர் ...... தம்பிரானே.
பாடல் 856 ( திருப்பந்தணை நல்லு¡ர் )
ராகம் - ....; தாளம் - தனனந் தத்தன தனந்த தானன
தனனந் தத்தன தனந்த தானன
தனனந் தத்தன தனந்த தானன ...... தனதான
மதியஞ் சத்திரு நிறைந்த மாமுக
மயிலஞ் சக்கிளி யினங்க ளாமென
மதுரஞ் செப்பிய மடந்தை மேனகை ...... ரதிபோல
மருவும் பொற்குட மெழுந்த மாமுலை
வளர்வஞ் சிக்கொடி நடந்த வாறென
வருதுங் கக்கட லணங்கு போல்பவர் ...... தெருவூடே
நிதமிந் தப்படி யிருந்து வாறவர்
பொருள்தங் கப்பணி கலந்து போய்வர
நெறிதந் திட்டவர் வசங்க ளாமென ...... வுழலாதே
நிதிபொங் கப்பல தவங்க ளாலுனை
மொழியும் புத்திகள் தெரிந்து நானுனை
நிகர்சந் தத்தமிழ் சொரிந்து பாடவு ...... மருள்தாராய்
நதிமிஞ் சச்சடை விரிந்த நாயக
னுமையன் பிற்செயு மிகுந்த பூசனை
நலமென் றுட்குளிர் சிவன்ப ராபர ...... னருள்பாலா
நவகங் கைக்கிணை பகர்ந்த மாமணி
நதிபங் கிற்குலவு கந்து காபுரி
நகர்பொங் கித்த¨ழைய வந்து வாழ்வுறு ...... முருகோனே
கெதிதங் கத்தகு கணங்கள் வானவர்
அரிகஞ் சத்தவர் முகுந்தர் நாவலர்
கிளைபொங்கக் க்ருபை புரிந்து வாழ்கென ...... அருள்நாதா
கெருவம் பற்றிகல் விளைந்த சூரொடு
தளமஞ் சப்பொரு தெழுந்து தீயுகள்
கிரவுஞ் சக்கிரி வகிர்ந்த வேலுள ...... பெருமாளே.
பாடல் 857 ( திருப்பனந்தாள் )
ராகம் - ....; தாளம் - தந்தா தத்தன தந்தா தத்தன
தந்தா தத்தன ...... தனதான
கொந்தார் மைக்குழ லிந்தார் சர்க்கரை
யென்றே செப்பிய ...... மொழிமாதர்
கொங்கார் முத்துவ டந்தா னிட்டத
னந்தா னித்தரை ...... மலைபோலே
வந்தே சுற்றிவ ளைந்தா லற்பம
னந்தா னிப்படி ...... யுழலாமல்
மங்கா நற்பொரு ளிந்தா அற்புதம்
என்றே யிப்படி ...... அருள்வாயே
இந்தோ டக்கதிர் கண்டோ டக்கட
மண்டா நற்றவர் ...... குடியோட
எங்கே யக்கிரி யெங்கே யிக்கிரி
யென்றே திக்கென ...... வருசூரைப்
பந்தா டித்தலை விண்டோ டக்களம்
வந்தோ ரைச்சில ...... ரணகாளிப்
பங்கா கத்தரு கந்தா மிக்கப
னந்தா ளுற்றருள் ...... பெருமாளே.
பாடல் 858 ( திருவிடைமருதூர் )
ராகம் -.....; தாளம் - தனதனன தனதனன தனதனன தனதனன
தான தானனா தான தானனா
-------- 3 முறை -------- ...... தனதன தனதான
அறுகுநுனி பனியனைய சிறியதுளி பெரியதொரு
ஆக மாகியோர் பால ரூபமாய்
அருமதலை குதலைமொழி தனிலுருகி யவருடைய
ஆயி தாதையார் மாய மோகமாய்
அருமையினி லருமையிட மொளுமொளென வுடல்வளர
ஆளு மேளமாய் வால ரூபமாய் ...... அவரொரு பெரியோராய்
அழகுபெறு நடையடைய கிறுதுபடு மொழிபழகி
ஆவி யாயவோர் தேவி மாருமாய்
விழுசுவரை யரிவவையர்கள் படுகுழியை நிலைமையென
வீடு வாசலாய் மாட கூடமாய்
அணுவளவு தவிடுமிக பிதிரவிட மனமிறுகி
ஆசை யாளராய் ஊசி வாசியாய் ...... அவியுறு சுடர்போலே
வெறுமிடிய னொருதவசி யமுதுபடை யெனுமளவில்
மேலை வீடுகேள் கீழை வீடுகேள்
திடுதிடென நுழைவதன்முன் எதிர்முடுகி யவர்களொடு
சீறி ஞாளிபோல் ஏறி வீழ்வதாய்
விரகினொடு வருபொருள்கள் சுவறியிட மொழியுமொரு
வீணி யார்சொலே மேல தாயிடா ...... விதிதனை நினையாதே
மினுகுமினு கெனுமுடல மறமுறுகி நெகிழ்வுறவும்
வீணர் சேவையே பூணு பாவியாய்
மறுமையுள தெனும வரை விடும்விழலை யதனின்வரு
வார்கள் போகுவார் காணு மோஎனா
விடுதுறவு பெரியவரை மறையவரை வெடுவெடென
மேள மேசொலா யாளி வாயராய் ...... மிடையுற வருநாளில்
வறுமைகளு முடுகிவர வுறுபொருளு நழுவசில
வாத மூதுகா மாலை சோகைநோய்
பெருவயிறு வயிறுவலி படுவன்வர இருவிழிகள்
பீளை சாறிடா ஈளை மேலிடா
வழவழென உ மிழுமது கொழகொழென ஒழுகிவிழ
வாடி யூனெலாம் நாடி பேதமாய் ...... மனையவள் மனம்வேறாய்
மறுகமனை யுறுமவர்கள் நணுகுநணு கெனுமளவில்
மாதர் சீயெனா வாலர் சீயெனா
கனவுதனி லிரதமொடு குதிரைவர நெடியசுடு
காடு வாவெனா வீடு போவெனா
வலதழிய விரகழிய வுரைகுழறி விழிசொருகி
வாயு மேலிடா ஆவி போகுநாள் ...... மனதர்கள் பலபேச
இறுதியதொ டறுதியென உ றவின்முறை கதறியழ
ஏழை மாதராள் மோதி மேல்விழா
எனதுடைமை யெனதடிமை யெனுமறிவு சிறிதுமற
ஈமொ லேலெனா வாயை ஆவெனா
இடுகுபறை சிறுபறைகள் திமிலையொடு தவிலறைய
ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய் ...... எரிதனி லிடும்வாழ்வே
இணையடிகள் பரவுமுன தடியவர்கள் பெறுவதுவும்
ஏசி டார்களோ பாச நாசனே
இருவினைமு மலமுமற இறவியொடு பிறவியற
ஏக போகமாய் நீயு நானுமாய்
இறுகும்வகை பரமசுக மதனையரு ளிடைமருதில்
ஏக நாயகா லோக நாயகா ...... இமையவர் பெருமாளே.
பாடல் 859 ( திருவிடைமருதூர் )
ராகம் - ....; தாளம் - தனன தனதனன தான தானதன
தனன தனதனன தான தானதன
தனன தனதனன தான தானதன ...... தந்ததான
இலகு குழைகிழிய வூடு போயுலவி
யடர வருமதன னூல ளாவியெதி
ரிளைஞ ருயிர்கவர ஆசை நேர்வலைபொ ...... திந்தநீலம்
இனிமை கரைபுரள வாகு லாவுசரி
நெறிவு கலகலென வாசம் வீசுகுழ
லிருளின் முகநிலவு கூர மாணுடைய ...... கன்றுபோக
மலையு மிதழ்பருகி வேடை தீரவுட
லிறுக இறுகியநு ராக போகமிக
வளரு மிளகுதன பார மீதினில்மு ...... யங்குவேனை
மதுர கவியடைவு பாடி வீடறிவு
முதிர அரியதமி ழோசை யாகவொளி
வசன முடையவழி பாடு சேருமருள் ...... தந்திடாதோ
கலக அசுரர்கிளை மாள மேருகிரி
தவிடு படவுதிர வோல வாரியலை
கதற வரியரவம் வாய்வி டாபசித ...... ணிந்தபோகக்
கலப மயிலின்மிசை யேறி வேதநெறி
பரவு மமரர்குடி யேற நாளும்விளை
கடிய கொடியவினை வீழ வேலைவிட ...... வந்தவாழ்வே
அலகை யுடனடம தாடு தாதைசெவி
நிறைய மவுனவுரை யாடு நீபஎழில்
அடவி தனிலுறையும் வேடர் பேதையைம ...... ணந்தகோவே
அமணர் கழுவில்விளை யாட வாதுபடை
கருது குமரகுரு நாத நீதியுள
தருளு மிடைமருதில் மேவு மாமுனிவர் ...... தம்பிரானே.
பாடல் 860 ( திருவிடைமருதூர் )
ராகம் - ...; தாளம் - தனதனன தனதனன தந்தனந் தந்தனந்
தனதனன தனதனன தந்தனந் தந்தனந்
தனதனன தனதனன தந்தனந் தந்தனந் ...... தந்ததான
படியையள விடுநெடிய கொண்டலுஞ் சண்டனும்
தமரசது மறையமரர் சங்கமுஞ் சம்புவும்
பரவரிய நிருபன்விர கன்சுடுஞ் சம்பனன் ...... செம்பொன்மேனிப்
பரமனெழில் புனையுமர வங்களுங் கங்கையுந்
திருவளரு முளரியொடு திங்களுங் கொன்றையும்
பரியகுமி ழறுகுகன தும்பையுஞ் செம்பையுந் ...... துன்முலச்
சடைமுடியி லணியுநல சங்கரன் கும்பிடுங்
குமரனறு முகவன்மது ரந்தருஞ் செஞ்சொலன்
சரவணையில் வருமுதலி கொந்தகன் கந்தனென் ...... றுய்ந்துபாடி
தணியவொலி புகலும்வித மொன்றிலுஞ் சென்றிலன்
பகிரவொரு தினையளவு பண்புகொண் டண்டிலன்
தவநெறியி லொழுகிவழி பண்படுங் கங்கணஞ் ...... சிந்தியாதோ
கடுகுபொடி தவிடுபட மந்திரந் தந்திரம்
பயிலவரு நிருதருட லம்பிளந் தம்பரங்
கதறிவெகு குருதிநதி பொங்கிடுஞ் சம்ப்ரமங் ...... கண்டுசேரக்
கழுகுநரி கொடிகருட னங்கெழுந் தெங்குநின்
றலகைபல திமிலைகொடு தந்தனந் தந்தனங்
கருதியிசை பொசியுநசை கண்டுகண் டின்புறுந் ...... துங்கவேலா
அடல்புனையு மிடைமருதில் வந்திணங் குங்குணம்
பெரியகுரு பரமகுமர சிந்துரஞ் சென்றடங்
கடவிதனி லுறைகுமரி சந்திலங் குந்தனந் ...... தங்குமார்பா
அருணமணி வெயிலிலகு தண்டையம் பங்கயங்
கருணைபொழி வனகழலி லந்தமுந் தம்பமென்
றழகுபெற நெறிவருடி யண்டருந் தொண்டுறுந் ...... தம்பிரானே.
பாடல் 861 ( திருவிடைமருதூர் )
ராகம் - ...; தாளம் - தனதனதன தான தானன தனதனதன தான தானன
தனதனதன தான தானன ...... தந்ததான
புழுகொடுபனி நீர்ச வாதுட னிருகரமிகு மார்பி லேபன
புளகிதஅபி ராம பூஷித ...... கொங்கையானை
பொதுவினில்விலை கூறு மாதர்கள் மணியணிகுழை மீது தாவடி
பொருவனகணை போல்வி லோசன ...... வந்தியாலே
மெழுகெனவுரு காவ னார்தம திதயகலக மோடு மோகன
வெகுவிதபரி தாப வாதனை ...... கொண்டுநாயேன்
மிடைபடுமல மாயை யால்மிக கலவிய அறி வேக சாமிநின்
விதரணசிவ ஞான போதகம் ...... வந்துதாராய்
எழுகிரிநிலை யோட வாரிதி மொகுமொகுவென வீச மேதினி
யிடர்கெடஅசு ரேசர் சேனைமு ...... றிந்துபோக
இமையவர்சிறை மீள நாய்நரி கழுகுகள்கக ராசன் மேலிட
ரணமுககண பூத சேனைகள் ...... நின்றுலாவச்
செழுமதகரி நீல கோமள அபிநவமயி லேறு சேவக
செயசெயமுரு காகு காவளர் ...... கந்தவேளே
திரைபொருகரை மோது காவிரி வருபுனல்வயல் வாவி சூழ்தரு
திருவிடைமரு தூரில் மேவிய ...... தம்பிரானே.
பாடல் 862 ( திரிபுவனம் )
ராகம் - ....; தாளம் - தனதன தனதன தனதன தனதன
தத்தத் தத்தன தத்தத் தத்தன ...... தந்ததான
தனுநுதல் வெயர்வெழ விழிகுழி தரவளை
சத்திக் கச்சில தித்திக் கப்படும் ...... அன்புபேசித்
தழுவிய மகளிர்த முகிழ்முலை யுரமிசை
தைக்கச் சர்க்கரை கைக்கப் பட்டன ...... தொண்டையூறல்
கனவிலு நுகர்தரு கலவியின் வலையிடை
கட்டுப் பட்டுயிர் தட்டுப் பட்டழி ...... கின்றதோதான்
கதிபெற விதியிலி மதியிலி யுனதிரு
கச்சுற் றச்சிறு செச்சைப் பத்மப ...... தம்பெறேனோ
முனைமலி குலிசைதன் ம்ருகமத புளகித
முத்தச் சித்ரத னத்துக் கிச்சித ...... அம்புராசி
முறையிட முதுநிசி சரர்திரள் முதுகிட
முட்டப் பொட்டெழ வெட்டிக் குத்தும ...... டங்கல்வீரா
அனுபவ மளிதரு நிகழ்தரு மொருபொருள்
அப்பர்க் கப்படி யொப்பித் தர்ச்சனை ...... கொண்டநாதா
அகிலமு மழியினு நிலைபெறு திரிபுவ
னத்துப் பொற்புறு சித்திச் சித்தர்கள் ...... தம்பிரானே.
பாடல் 863 ( கும்பகோணம் )
ராகம் - ....; தாளம் - தந்ததனத் தானதனத் தந்ததனத் தானதனத்
தந்ததனத் தானதனத் ...... தனதான
இந்துகதிர்ச் சேரருணப் பந்திநடுத் தூணொளிபட்
டின்பரசப் பாலமுதச் ...... சுவைமேவு
எண்குணமுற் றோனடனச் சந்த்ரவொளிப் பீடகமுற்
றெந்தைநடித் தாடுமணிச் ...... சபையூடே
கந்தமெழுத் தோடுறுசிற் கெந்தமணப் பூவிதழைக்
கண்டுகளித் தேயமுதக் ...... கடல்மூழ்கிக்
கந்தமதித் தாயிரவெட் டண்டமதைக் கோல்புவனக்
கண்டமதைக் காணஎனக் ...... கருள்வாயே
திந்ததிமித் தீதகுடட் டுண்டுமிடட் டாடுடுடிட்
டிந்தமெனக் காளமணித் ...... தவிலோசை
சிந்தைதிகைத் தேழுகடற் பொங்கவரிச் சூர்மகுடச்
செண்டுகுலைத் தாடுமணிக் ...... கதிர்வேலா
குந்தியரித் தாழ்துளபச் செந்திருவைச் சேர்களபக்
கொண்டல்நிறத் தோன்மகளைத் ...... தரைமீதே
கும்பிடகைத் தாளமெடுத் தம்பொனுருப் பாவைபுகழ்க்
கும்பகொணத் தாறுமுகப் ...... பெருமாளே.
பாடல் 864 ( கும்பகோணம் )
ராகம் - ....; தாளம் - தந்ததனத் தானதனத் தந்ததனத் தானதனத்
தந்ததனத் தானதனத் ...... தனதான
தும்பிமுகத் தானைபணைக் கொம்பதெனத் தாவிமயற்
றொந்தமெனப் பாயுமுலைக் ...... கனமாதர்
தும்பிமலர்ச் சோலைமுகிற் கங்குலிருட் காரினிறத்
தொங்கல்மயிற் சாயலெனக் ...... குழல்மேவிச்
செம்பொனுருக் கானமொழிச் சங்கினொளிக் காமநகைச்
செங்கயலைப் போலும்விழிக் ...... கணையாலே
சிந்தைதகர்த் தாளுமிதச் சந்தரமுகப் பாவையர்தித்
திந்திதமனுற் றாடுமவர்க் ...... குழல்வேனோ
தம்பிவரச் சாதிதிருக் கொம்புவரக் கூடவனச்
சந்தமயிற் சாய்விலகிச் ...... சிறைபோகச்
சண்டர்முடித் தூள்கள்படச் சிந்தியரக் கோர்கள்விழத்
தங்கநிறத் தாள்சிறையைத் ...... தவிர்மாயோன்
கொம்புகுறிக் காளமடுத் திந்தமெனுற் றாடிநிரைக்
கொண்டுவளைத் தேமகிழச் ...... சுதனீண
கொஞ்சுசுகப் பாவையிணைக் கொங்கைதனிற் றாவிமகிழ்க்
கும்பகொணத் தாறுமுகப் ...... பெருமாளே.
பாடல் 865 ( கும்பகோணம் )
ராகம் - ....; தாளம் - தந்தனா தத்ததன தந்தனா தத்ததன
தந்தனா தத்ததன ...... தனதான
கெண்டைநெ ரொத்தவிழி மங்கைமோ கக்கலவை
கெந்தவா சப்புழுகு ...... மணநாறுங்
கிம்பு¡£ சக்களப கொங்கையா னைச்சிறிது
கிஞ்சுகா ணப்பெருகி ...... யடியேனும்
மண்டிமோ சக்கலவி கொண்டுகா மித்துருகி
வண்டனா கப்புவியி ...... லுழலாமல்
வந்துஞா னப்பொருளி லொன்றுபோ தித்துனது
மஞ்சுதா ளைத்தினமு ...... மருள்வாயே
அண்டர்வா ழப்பிரபை சண்டமே ருக்கிரியி
ளைந்துவீ ழப்பொருத ...... கதிர்வேலா
அஞ்சுவா யிற்பரனை நெஞ்சிலு¡ றித்தவசி
னன்புளா ரைச்சிறையி ...... டசுரோரைக்
கொண்டுபோய் வைத்தகழு நெஞ்சிலே றக்கழுகு
கொந்தியா டத்தலையை ...... யரிவோனே
கொண்டல்சூ ழக்கழனி சங்குலா விப்பரவு
கும்பகோ ணத்திலுறை ...... பெருமாளே.
பாடல் 866 ( கும்பகோணம் )
ராகம் - ....; தாளம் - தந்தனா தத்தத் ...... தனதான
பஞ்சுசேர் நிர்த்தப் ...... பதமாதர்
பங்கமார் தொக்கிற் ...... படியாமற்
செஞ்சொல்சேர் சித்ரத் ...... தமிழாலுன்
செம்பொனார் வத்தைப் ...... பெறுவேனோ
பஞ்சபா ணத்தற் ...... பொருதேவர்
பங்கில்வாழ் சத்திக் ...... குமரேசா
குஞ்சா£ வெற்புத் ...... தனநேயா
கும்பகோ ணத்திற் ...... பெருமாளே.
பாடல் 867 ( கும்பகோணம் )
ராகம் - ....; தாளம் - தானதன தந்த தானதன தந்த
தானதன தந்த ...... தனதான
மாலைதனில் வந்து வீதிதனில் நின்று
வாசமலர் சிந்து ...... குழல்கோதி
வாரிருத னங்கள் பூணொடுகு லுங்க
மால்பெருகி நின்ற ...... மடவாரைச்
சாலைவழி வந்து போமவர்க ணின்று
தாழ்குழல்கள் கண்டு ...... தடுமாறித்
தாகமயல் கொண்டு மாலிருள ழுந்தி
சாலமிக நொந்து ...... தவியாமற்
காலையிலெ ழுந்து னாமமெமொ ழுந்தி
காதலுமை மைந்த ...... எனவோதிக்
காலமுமு ணர்ந்து ஞானவெளி கண்கள்
காண அரு ளென்று ...... பெறுவேனோ
கோலமுட னன்று சூர்படையின் முன்பு
கோபமுட னின்ற ...... குமரேசா
கோதையிரு பங்கின் மேவவளர் கும்ப
கோணநகர் வந்த ...... பெருமாளே.
பாடல் 868 ( கும்பகோணம் )
ராகம் - அஸாவேரி தாளம் - ஆதி
(எடுப்பு - 3/4 இடம்)
தனத்த தந்தன தனதன தந்தத்
தனத்த தந்தன தனதன தந்தத்
தனத்த தந்தன தனதன தந்தத் ...... தனதான
கறுத்த குஞ்சியும் வெளிறி யெழுங்கொத்
துருத்த வெண்பலு மடைய விழுந்துட்
கருத்து டன்திகழ் மதியு மருண்டுச் ...... சுருள்நோயாற்
கலக்க முண்டல மலமுற வெண்டிப்
பழுத்தெ ழும்பிய முதுகு முடங்கக்
கழுத்தில் வந்திளை யிரும லொதுங்கக் ...... கொழுமேனி
அறத்தி ரங்கியொர் தடிகை நடுங்கப்
பிடித்தி டும்புறு மனைவியு நிந்தித்
தடுத்த மைந்தரும் வசைகள் விளம்பச் ...... சடமாகி
அழுக்க டைந்திடர் படுமுடல் பங்கப்
பிறப்பெ னுங்கட லழிய லொழிந்திட்
டடுத்தி ருந்திரு வடிதனை யென்றுற் ...... றிடுவேனோ
புறத்த லம்பொடி படமிக வுங்கட்
டறப்பெ ருங்கடல் வயிறு குழம்பப்
புகட்ட ரங்கிய விரக துரங்கத் ...... திறல்வீரா
பொருப்பு ரம்படர் கிழிபட வென்றட்
டரக்கர் வன்றலை நெரிய நெருங்கிப்
புதைக்கு றுந்தசை குருதிகள் பொங்கப் ...... பொரும்வேலா
சிறுத்த தண்டைய மதலையொ ரஞ்சச்
சினத்து மிஞ்சரி திரிதரு குன்றத்
தினைப்பு னந்திகழ் குறமகள் கொங்கைக் ...... கிரிமேவிச்
செருக்கு நெஞ்சுடை முருக சிகண்டிப்
பரிச்சு மந்திடு குமர கடம்பத்
திருக்கு டந்தையி லுறைதரு கந்தப் ...... பெருமாளே.
பாடல் 869 ( கும்பகோணம் )
ராகம் - ....; தாளம் - தனத்த தந்தன தானன தானன
தனத்த தந்தன தானன தானன
தனத்த தந்தன தானன தானன ...... தனதான
செனித்தி டுஞ்சல சாழலு மூழலும்
விளைத்தி டுங்குடல் பீறியு மீறிய
செருக்கொ டுஞ்சதை பீளையு மீளையு ...... முடலு¡டே
தெளித்தி டும்பல சாதியும் வாதியும்
இரைத்தி டுங்குல மேசில கால்படர்
சினத்தி டும்பவ நோயென வேயிதை ...... யனைவோருங்
கனைத்தி டுங்கலி காலமி தோவென
வெடுத்தி டுஞ்சுடு காடுபு காவென
கவிழ்த்தி டுஞ்சட மோபொடி யாய்விடு ...... முடல்பேணிக்
கடுக்க னுஞ்சில பூடண மாடைகள்
இருக்கி டுங்கலை யேபல வாசைகள்
கழித்தி டுஞ்சிவ யோகமு ஞானமு ...... மருள்வாயே
தனத்த னந்தன தானன தானன
திமித்தி திந்திமி தீதக தோதக
தகுத்து துந்துமி தாரைவி ராணமொ ...... டடல்பேரி
சமர்த்த மொன்றிய தானவர் சேனையை
வளைத்து வெஞ்சின வேல்விடு சேவக
சமத்து ணர்ந்திடு மாதவர் பாலருள் ...... புரிவோனே
தினைப்பு னந்தனி லேமய லாலொரு
மயிற்ப தந்தனி லேசர ணானென
திருப்பு யந்தரு மோகன மானினை ...... யணைவோனே
சிவக்கொ ழுஞ்சுட ரேபர னாகிய
தவத்தில் வந்தருள் பாலக்ரு பாகர
திருக்கு டந்தையில் வாழ்முரு காசுரர் ...... பெருமாளே.
பாடல் 870 ( சோமீச்சுரம் )
ராகம் - மாண்ட் தாளம் - சதுஸ்ரத்ருவம் - கண்டநடை (35)
(எடுப்பு - /4/4/4 0)
தனனதன தனனதன தானான தானதன
தனனதன தனனதன தானான தானதன
தனனதன தனனதன தானான தானதன ...... தனதான
கரியகுழல் சரியமுகம் வேர்வாட வாசமுறு
களபமுலை புளகமெழ நேரான வேல்விழிகள்
கயல்பொருது செயலதென நீள்பூச லாடநல ...... கனிவாயின்
கமழ்குமுத அதரவிதழ் தேனூறல் பாயமிகு
கடலமுத முதவியிரு தோள்மாலை தாழவளை
கலகலென மொழிபதற மாமோக காதலது ...... கரைகாணா
தெரியணுகு மெழுகுபத மாய்மேவி மேவியிணை
யிருவருட லொருவரென நாணாது பாயல்மிசை
யிளமகளிர் கலவிதனி §ல்முழ்கி யாழுகினு ...... மிமையாதே
இரவினிடை துயிலுகினும் யாரோடு பேசுகினும்
இளமையுமு னழகுபுனை யீராறு தோள்நிரையும்
இருபதமு மறுமுகமும் யானோத ஞானமதை ...... யருள்வாயே
உ ரியதவ நெறியில்நம நாராய ணாயவென
ஒருமதலை மொழியளவி லோராத கோபமுட
னுனதிறைவ னெதனிலுள னோதாய டாவெனுமு ...... னுறுதூணில்
உ ரமுடைய அரிவடிவ தாய்மோதி வீழவிரல்
உ கிர்புதைய இரணியனை மார்பீறி வாகைபுனை
உ வணபதி நெடியவனும் வேதாவும் நான்மறையு ...... முயர்வாக
வரியளிக ளிசைமுரல வாகான தோகையிள
மயிலிடையில் நடனமிட ஆகாச மூடுருவ
வளர்கமுகின் விரிகுலைகள் பூணார மாகியிட ...... மதில்சூழும்
மருதரசர் படைவிடுதி வீடாக நாடிமிக
மழவிடையின் மிசையிவரு சோமீசர் கோயில்தனில்
மகிழ்வுபெற வுறைமுருக னேபேணு வானவர்கள் ...... பெருமாளே.
பாடல் 871 ( கொட்டையூர் )
ராகம் -....; தாளம் - தத்ததனத் தத்ததனத் தத்ததனத் தத்ததனத்
தத்ததனத் தத்ததனத் ...... தனதான
பட்டுமணிக் கச்சிருகக் கட்டியவிழ்த் துத்தரியப்
பத்தியின்முத் துச்செறிவெற் ...... பிணையாமென்
பற்பமுகைக் குத்துமுலைத் தத்தையர்கைப் புக்குவசப்
பட்டுருகிக் கெட்டவினைத் ...... தொழிலாலே
துட்டனெனக் கட்டனெனப் பித்தனெனப் ப்ரட்டனெனச்
சுற்றுமறச் சித்தனெனத் ...... திரிவேனைத்
துக்கமறுத் துக்கமலப் பொற்பதம்வைத் துப்பதவிச்
சுத்தியணைப் பத்தரில்வைத் ...... தருள்வாயே
சுட்டபொருட் கட்டியின்மெய்ச் செக்கமலப் பொற்கொடியைத்
துக்கமுறச் சொர்க்கமுறக் ...... கொடியாழார்
சுத்தரதத் திற்கொடுபுக் குக்கடுகித் தெற்கடைசிச்
சுற்றுவனத் திற்சிறைவைத் ...... திடுதீரன்
கொட்டமறப் புற்றரவச் செற்றமறச் சத்தமறக்
குற்றமறச் சுற்றமறப் ...... பலதோளின்
கொற்றமறப் பத்துமுடிக் கொத்துமறுத் திட்டதிறற்
கொற்றர்பணிக் கொட்டைநகர்ப் ...... பெருமாளே.
பாடல் 872 ( சிவபுரம் )
ராகம் - நீலாம்பரி தாளம் - அங்கதாளம் (7 1/2)
(எடுப்பு - 1 தள்ளி)
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தந்தன தானன தானன
தனன தந்தன தானன தானன
தனன தந்தன தானன தானன ...... தனதான
மனமெ னும்பொருள் வானறை கால்கனல்
புனலு டன்புவி கூடிய தோருடல்
வடிவு கொண்டதி லேபதி மூணெழு ...... வகையாலே
வருசு கந்துய ராசையி லேயுழல்
மதியை வென்றுப ராபர ஞானநல்
வழிபெ றும்படி நாயடி யேனைநி ...... னருள்சேராய்
செனனி சங்கரி ஆரணி நாரணி
விமலி யெண்குண பூரணி காரணி
சிவைப ரம்பரை யாகிய பார்வதி ...... அருள்பாலா
சிறைபு குஞ்சுரர் மாதவர் மேல்பெற
அசுரர் தங்கிளை யானது வேரற
சிவனு கந்தருள் கூர்தரு வேல்விடு ...... முருகோனே
கனக னங்கையி னாலறை தூணிடை
மனித சிங்கம் தாய்வரை பார்திசை
கடல்க லங்கிட வேபொரு தேயுகிர் ...... முனையாலே
கதற வென்றுடல் கீணவ னாருயி
ருதிர முஞ்சித றாதமு தாயுணு
கமல வுந்திய னாகிய மால்திரு ...... மருகோனே
தினக ரன்சிலை வேளருள் மாதவர்
சுரர்க ளிந்திர னாருர காதிபர்
திசைமு கன்செழு மாமறை யோர்புக ...... ழழகோனே
திரும டந்தையர் நாலிரு வோர்நிறை
அகமொ டம்பொனி னாலய நீடிய
சிவபு ரந்தனில் வாழ்குரு நாயக ...... பெருமாளே.
பாடல் 873 ( திருநாகேச்சுரம் )
ராகம் - ரேவதி தாளம் - அங்கதாளம் (8 1/2)
தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமி தகதிமி-4
தானான தானத் தனத்த தத்தன
தானான தானத் தனத்த தத்தன
தானான தானத் தனத்த தத்தன ...... தனதான
ஆசார வீனக் குதர்க்க துட்டர்கள்
மாதாபி தாவைப் பழித்த துட்டர்கள்
ஆமாவி னூனைச் செகுத்த துட்டர்கள் ...... பரதாரம்
ஆகாதே னாமற் பொசித்த துட்டர்கள்
நானாவு பாயச் சரித்ர துட்டர்கள்
ஆவேச நீரைக் குடித்த துட்டர்கள் ...... தமியோர்சொங்
கூசாது சேரப் பறித்த துட்டர்கள்
ஊரார்க ளாசைப் பிதற்று துட்டர்கள்
கோலால வாள்விற் செருக்கு துட்டர்கள் ...... குருசேவை
கூடாத பாவத் தவத்த துட்டர்கள்
ஈயாது தேடிப் புதைத்த துட்டர்கள்
கோமாள நாயிற் கடைப்பி றப்பினி ...... லுழல்வாரே
வீசாவி சாலப் பொருப்பெ டுத்தெறி
பேரார வாரச் சமுத்தி ரத்தினில்
மீளாம லோடித் துரத்தி யுட்குறு ...... மொருமாவை
வேரோடு வீழத் தறித்த டுக்கிய
போராடு சாமர்த் தியத்தி ருக்கையில்
வேலாயு தாமெய்த் திருப்பு கழ்ப்பெறு ...... வயலு¡ரா
நாசாதி ப்ராரத் ததுக்க மிக்கவர்
மாயாவி காரத் தியக்க றுத்தருள்
ஞானோப தேசப் ப்ரசித்த சற்குரு ...... வடிவான
நாதாவெ னாமுற் றுதித்தி டப்புவி
யாதார மாய்கைக் குமுட்ட முற்றருள்
நாகேச நாமத் தகப்பன் மெச்சிய ...... பெருமாளே.
பாடல் 874 ( கூந்தலு¡ர் )
ராகம் - லதாங்கி தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகதிமி தகதிமி-4, தகிட-1 1/2, தகதிமி-2
தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன ...... தனதான
தரையினில் வெகுவழி சார்ந்த மூடனை
வெறியனை நிறைபொறை வேண்டி டாமத
சடலனை மகிமைகள் தாழ்ந்த வீணணை ...... மீகுகேள்வி
தவநெறி தனைவிடு தாண்டு காலியை
யவமதி யதனில்பொ லாங்கு தீமைசெய்
சமடனை வலியஅ சாங்க மாகிய ...... தமியேனை
விரைசெறி குழலியர் வீம்பு நாரியர்
மதிமுக வனிதையர் வாஞ்சை மோகியர்
விழிவலை மகளிரொ டாங்கு கூடிய ...... வினையேனை
வெகுமல ரதுகொடு வேண்டி யாகிலு
மொருமல ரிலைகொடு மோர்ந்து யானுனை
விதமுறு பரிவொடு வீழ்ந்து தாடொழ ...... அருள்வாயே
ஒருபது சிரமிசை போந்த ராவண
னிருபது புயமுட னேந்து மேதியு
மொருகணை தனிலற வாங்கு மாயவன் ...... மருகோனே
உ னதடி யவர்புக ழாய்ந்த நூலின
ரமரர்கள் முனிவர்க ளீந்த பாலகர்
உ யர்கதி பெறஅரு ளோங்கு மாமயி ...... லுறைவோனே
குரைகழல் பணிவொடு கூம்பி டார்பொரு
களமிசை யறமது தீர்ந்த சூரர்கள்
குலமுழு தனைவரு மாய்ந்து தூளெழ ...... முனிவோனே
கொடுவிட மதுதனை வாங்கி யேதிரு
மிடறினி லிருவென ஏந்து மீசுரர்
குருபர னெனவரு கூந்த லு¡ருறை ...... பெருமாளே.
பாடல் 875 ( திருச்சத்திமுத்தம் )
ராகம் - ....; தாளம் - தனதனன தத்தத்த தத்தத்த தத்ததன
தனதனன தத்தத்த தத்தத்த தத்ததன
தனதனன தத்தத்த தத்தத்த தத்ததன ...... தனதான
கடகரிம ருப்பிற்க திர்த்துப்ர மிக்கமிக
வுரமிடநெ ருக்கிப்பி டித்துப்பு டைத்துவளர்
கனககுட மொத்துக்க னத்துப்பெ ருத்தமணி ...... யணியாலே
கதிர்திகழு செப்பைக்க திக்கப்ப தித்துமகிழ்
கமலமுகை பட்சத்தி ருத்திப்பொ ருத்துமுலை
கமழ்விரைகொள் செச்சைக்க லப்பைப்பொ தித்ததனை ...... விலகாது
கடுவைவடு வைப்பற்றி விற்சிக்க வைத்தசெய
லெனநிறமி யற்றிக்கு யிற்றிப்பு ரட்டிவரு
கயல்விழிவெ டுட்டித்து ரத்திச்செ விக்குழையின் ...... மிசைதாவுங்
களமதன னுக்குச்ச யத்தைப்ப டைத்துலவு
கடுமொழிப யிற்றக்க ளைத்துக்கொ டிச்சியர்கள்
கணியினில் கப்பட்ட ழுத்தத்து யர்ப்படுவ ...... தொழியேனோ
அடலைபுனை முக்கட்ப ரற்குப்பொ ருட்சொலரு
மறைதனையு ணர்த்திச்செ கத்தைப்பெ ருத்தமயில்
அதனைமுன டத்திக்க ணத்திற்றி ரித்துவரு ...... மழகோனே
அபகடமு ரைத்தத்த மெத்தப்ப டைத்துலகி
லெளியரைம ருட்டிச்செ கத்திற்பி ழைக்கவெணு
மசடர்தம னத்தைக்க லக்கித்து ணித்தடரு ...... மதிசூரா
விடவரவ ணைக்குட்டு யிற்கொட்க்ரு பைக்கடவுள்
உ லவுமலை செப்பைச்செ விக்கட்செ றித்துமிக
விரைவிலுவ ணத்திற்சி றக்கப்ரி யத்தில்வரு ...... மொருமாயோன்
விழைமருக கொக்கிற்ச முத்ரத்தி லுற்றவனை
நெறுநெறென வெட்டுக்ர சத்தித்த னிப்படைய
விடையவர்தி ருச்சத்தி முத்தத்தி னிற்குலவு ...... பெருமாளே.
பாடல் 876 ( திருவலஞ்சுழி )
ராகம் - ....; தாளம் - தனன தந்தன தானா தானன
தனன தந்தன தானா தானன
தனன தந்தன தானா தானன ...... தனதான
மகர குண்டல மீதே மோதுவ
வருண பங்கய மோபூ வோடையில்
மருவு செங்கழு நீரோநீவிடு ...... வடிவேலோ
மதன்வி டுங்கணை யோவா ளோசில
கயல்கள் கெண்டைக ளோசே லோகொலை
மறலி யென்பவ னோமா னோமது ...... நுகர்கீத
முகர வண்டின மோவான் மேலெழு
நிலவ ருந்துபு ளோமா தேவருண்
முதிய வெங்கடு வோதே மாவடு ...... வகிரோபார்
முடிவெ னுங்கட லோயா தோவென
வுலவுகண்கொடு நேரே சூறைகொள்
முறைய றிந்தப சாசே போல்பவ ...... ருறவாமோ
நிகரில் வஞ்சக மா¡£ சாதிகள்
தசமு கன்படை கோடா கோடிய
நிருத ரும்பட வோரே வேவியெ ...... யடுபோர்செய்
நெடிய னங்கனு மானோ டேயெழு
பதுவெ ளங்கவி சேனா சேவித
நிருப னம்பரர் கோமான் ராகவன் ...... மருகோனே
சிகர வும்பர்கள் பாகீ ராதிகள்
பிரபை யொன்றுபி ராசா தாதிகள்
சிவச டங்கமொ டீசா னாதிகள் ...... சிவமோனார்
தெளியு மந்த்ரக லாபா யோகிகள்
அயல்வி ளங்குசு வாமீ காமரு
திருவ லஞ்சுழி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.
பாடல் 877 ( திருப்பழையாறை )
ராகம் -.....; தாளம் - தானத்தத் தானன தானன
தானத்தத் தானன தானன
தானத்தத் தானன தானன ...... தனதான
தோடுற்றுக் காதள வோடிய
வேலுக்குத் தானிக ராயெழு
சூதத்திற் காமனி ராசத ...... விழியாலே
சோடுற்றத் தாமரை மாமுகை
போலக்கற் பூரம ளாவிய
தோல்முத்துக் கோடென வீறிய ...... முலைமானார்
கூடச்சிக் காயவ ரூழிய
மேபற்றிக் காதலி னோடிய
கூளச்சித் தாளனை மூளனை ...... வினையேனைக்
கோபித்துத் தாயென நீயொரு
போதத்தைப் பேசவ தாலருள்
கோடித்துத் தானடி யேனடி ...... பெறவேணும்
வேடிக்கைக் காரவு தாரகு
ணபத்மத் தாரணி காரண
வீரச்சுத் தாமகு டாசமர் ...... அடுதீரா
வேலைக்கட் டாணிம காரத
சூரர்க்குச் சூரனை வேல்விடு
வேழத்திற் சீரரு ளூறிய ...... இளையோனே
ஆடத்தக் காருமை பாதியர்
வேதப்பொற் கோவண வாடையர்
ஆலித்துத் தானரு ளூறிய ...... முருகோனே
ஆடப்பொற் கோபுர மேவிய
ஆடிக்கொப் பாமதிள் சூழ்பழை
யாறைப்பொற் கோயிலின் மேவிய ...... பெருமாளே.
பாடல் 878 ( திருச்சக்கிரப்பள்ளி )
ராகம் - ....; தாளம் - தத்த தத்தன தத்தன தத்தன
தத்த தத்தன தத்தன தத்தன
தத்த தத்தன தத்தன தத்தன ...... தனதான
திட்டெ னப்பல செப்பைய டிப்பன
பொற்கு டத்தையு டைப்பன வுத்தர
திக்கி னிற்பெரு வெற்பைவி டுப்பன ...... வதின்மேலே
செப்ப வத்திம ருப்பையொ டிப்பன
புற்பு தத்தையி மைப்பில ழிப்பன
செய்த்த லைக்கம லத்தைய லைப்பன ...... திறமேய
புட்ட னைக்கக னத்தில்வி டுப்பன
சித்த முற்பொர விட்டுமு றிப்பன
புட்ப விக்கன்மு டிக்குறி யுய்ப்பன ...... இளநீரைப்
புக்கு டைப்பன முத்திரை யிட்டத
னத்தை விற்பவர் பொய்க்கல விக்குழல்
புத்தி யுற்றமை யற்றிட எப்பொழு ...... தருள்வாயே
துட்ட நிக்ரக சத்தித ரப்ரப
லப்ர சித்தச மர்த்தத மிழ்த்ரய
துட்க ரக்கவி தைப்புக லிக்கர ...... செனுநாமச்
சொற்க நிற்கசொ லட்சண தட்சண
குத்த ரத்தில கத்திய னுக்கருள்
சொற்கு ருத்வம கத்துவ சத்வஷண் ...... முகநாத
தட்ட றச்சமை யத்தைவ ளர்ப்பவ
ளத்தன் முற்புகழ் செப்பவ நுக்ரக
சத்து வத்தைய ளித்திடு செய்ப்பதி ...... மயிலேறி
சட்ப தத்திரள் மொய்த்தம ணப்பொழில்
மிக்க ரத்நம திற்புடை சுற்றிய
சக்கி ரப்பளி முக்கணர் பெற்றருள் ...... பெருமாளே.
பாடல் 879 ( திருக்குரங்காடுதுறை )
ராகம் - பாகேஸ்ரீ தாளம் - திஸ்ரஏகம் (3)
தனந்தான தனத்தனனத் தனந்தான தனத்தனனத்
தனந்தான தனத்தனனத் ...... தனதான
அலங்கார முடிக்கிரணத் திரண்டாறு முகத்தழகிற்
கசைந்தாடு குழைக்கவசத் ...... திரடோளும்
அலந்தாம மணித்திரளை புரண்டாட நிரைத்ததகரத்
தணிந்தாழி வனைக்கடகச் ...... சுடர்வேலுஞ்
சிலம்போடு மணிச்சுருதிச் சலங்கோசை மிகுத்ததிரச்
சிவந்தேறி மணத்தமலர்ப் ...... புனைபாதந்
திமிந்தோதி திமித்திமிதித் தனந்தான தனத்தனனத்
தினந்தோறு நடிப்பதுமற் ...... புகல்வேனோ
இலங்கேசர் வனத்துள்வனக் குரங்கேவி யழற்புகையிட்
டிளந்தாது மலர்த்திருவைச் ...... சிறைமீளும்
இளங்காள முகிற் கடுமைச் சரங்கோடு கரத்திலெடுத்
திருங்கான நடக்குமவற் ...... கினியோனே
குலங்கோடு படைத்தசுரப் பெருஞ்சேனை யழிக்கமுனைக்
கொடுந்தாரை வெயிற்கயிலைத் ...... தொடும்வீரா
கொழுங்காவின் மலர்ப்பொழிலிற் கரும்பாலை புணர்க்குமிசைக்
குரங்காடு துறைக்குமரப் ...... பெருமாளே.
பாடல் 880 ( திருக்குரங்காடுதுறை )
ராகம் - ....; தாளம் - தனத்தனந் தான தனதன
தனத்தனந் தான தனதன
தனத்தனந் தான தனதன ...... தனதான
குறித்தநெஞ் சாசை விரகிகள்
நவிற்றுசங் கீத மிடறிகள்
குதித்தரங் கேறு நடனிகள் ...... எவரோடுங்
குறைப்படுங் காதல் குனகிகள்
அரைப்பணங் கூறு விலையினர்
கொலைக்கொடும் பார்வை நயனிகள் ...... நகரேகை
பொறித்தசிங் கார முலையினர்
வடுப்படுங் கோவை யிதழிகள்
பொருட்டினந் தேடு கபடிகள் ...... தவர்சோரப்
புரித்திடும் பாவ சொருபிகள்
உ ருக்குசம் போக சரசிகள்
புணர்ச்சிகொண் டாடு மருளது ...... தவிர்வேனோ
நெறித்திருண் டாறு பதமலர்
மணத்தபைங் கோதை வகைவகை
நெகிழ்க்குமஞ் சோதி வனசரி ...... மணவாளா
நெருக்குமிந்த் ராதி யமரர்கள்
வளப்பெருஞ் சேனை யுடையவர்
நினைக்குமென் போலு மடியவர் ...... பெருவாழ்வே
செறித்தமந் தாரை மகிழ்புனை
மிகுத்ததண் சோலை வகைவகை
தியக்கியம் பேறு நதியது ...... பலவாறுந்
திரைக்கரங் கோலி நவமணி
கொழித்திடுஞ் சாரல் வயலணி
திருக்குரங் காடு துறையுறை ...... பெருமாளே.
பாடல் 881 ( திருக்குரங்காடுதுறை )
ராகம் - ....; தாளம் - தனந்த தனத்தான தனந்த தனத்தான
தனந்த தனத்தான ...... தனதான
குடங்கள் நிரைத்தேறு தடங்கள் குறித்தார
வடங்கள் அசைத்தார ...... செயநீலங்
குதம்பை யிடத்தேறு வடிந்த குழைக்காது
குளிர்ந்த முகப்பார்வை ...... வலையாலே
உ டம்பு மறக்கூனி நடந்து மிகச்சாறி
யுலந்து மிகக்கோலு ...... மகலாதே
உ றங்கி விழிப்பாய பிறந்து பிறப்பேனு
முரங்கொள பொற்பாத ...... மருள்வாயே
விடங்கள் கதுப்பேறு படங்க ணடித்தாட
விதங்கொள் முதற்பாய ...... லுறைமாயன்
விலங்கை முறித்தோடி யிடங்கள் வளைத்தேறு
விளங்கு முகிற்கான ...... மருகோனே
தடங்கொள் வரைச்சாரல் நளுங்கு மயிற்பேடை
தழங்கு மியற்பாடி ...... யளிசூழத்
தயங்கு வயற்சாரல் குரங்கு குதித்தாடு
தலங்க ளிசைப்பான ...... பெருமாளே.
பாடல் 882 ( காவ்ளுர் )
ராகம் -....; தாளம் - தான தானன தத்தன தந்தன
தான தானன தத்தன தந்தன
தான தானன தத்தன தந்தன ...... தனதான
மானை நேர்விழி யொத்தம டந்தையர்
பாலை நேர்மொழி யொத்துவி ளம்பியர்
வாச மாமலர் கட்டும ரம்பைய ...... ரிருதோளும்
மார்பு மீதினு முத்துவ டம்புரள்
காம பூரண பொற்கட கம்பொர
வாரி நீலவ ளைக்கைபு லம்பிட ...... அநுராகம்
ஆன நேரில்வி தத்திர யங்களும்
நாண மாறம யக்கியி யம்பவும்
ஆடை சோரநெ கிழ்த்தியி ரங்கவும் ...... உ றவாடி
ஆர வாரந யத்தகு ணங்களில்
வேளி னூல்களை கற்றவி ளம்பவும்
ஆகு மோகவி பத்துமொ ழிந்துனை ...... யடைவேனோ
சான கீதுய ரத்தில ருஞ்சிறை
போன போதுதொ குத்தசி னங்களில்
தாப சோபமொ ழிப்பஇ லங்கையு ...... மழிவாகத்
தாரை மானொரு சுக்கிரி பன்பெற
வாலி வாகுத லத்தில்வி ழுந்திட
சாத வாளிதொ டுத்தமு குந்தனன் ...... மருகோனே
கான வேடர்சி றுக்குடி லம்புன
மீதில் வாழித ணத்திலு றைந்திடு
காவல் கூருகு றத்திபு ணர்ந்திடு ...... மணிமார்பா
காவு லாவிய பொற்கமு கின்திரள்
பாளை வீசம லர்த்தட முஞ்செறி
காவ ளூர்தனில் முத்தமி ழுந்தெரி ...... பெருமாளே.
பாடல் 883 ( தஞ்சை )
ராகம் - ....; தாளம் - தந்தன தானன ...... தனதான
அஞ்சன வேல்விழி ...... மடமாதர்
அங்கவர் மாயையி ...... லலைவேனோ
விஞ்சுறு மாவுன ...... தடிசேர
விம்பம தாயரு ...... ளருளாதோ
நஞ்சமு தாவுணு ...... மரனார்தம்
நன்கும ராவுமை ...... யருள்பாலா
தஞ்சென வாமடி ...... யவர்வாழத்
தஞ்சையில் மேவிய ...... பெருமாளே.
பாடல் 884 ( தஞ்சை )
ராகம் - ...; தாளம் - தந்த தானனத் தந்த தானனத்
தந்த தானனத் ...... தனதான
அம்பு ராசியிற் கெண்டை செலொளித்
தஞ்ச வேமணிக் ...... குழைவீசும்
அங்க ணாரிடத் தின்ப சாகரத்
தங்கி மூழ்குமிச் ...... சையினாலே
எம்பி ரானுனைச் சிந்தி யாதொழித்
திந்த்ர சாலஇப் ...... ப்ரமைதீர
எங்கு வாவெனப் பண்பி னாலழைத்
தெங்கு மானமெய்ப் ...... பொருள்தாராய்
கொம்பு போலிடைத் தொண்டை போலிதழ்க்
கொண்டல் போல்குழற் ...... கனமேருக்
குன்று போல்முலைப் பைங்கி ராதியைக்
கொண்ட கோலசற் ...... குணவேலா
சம்ப ராரியைக் கொன்ற தீவிழிச்
சம்பு போதகக் ...... குருநாதா
சண்ட கோபுரச் செம்பொன் மாளிகைத்
தஞ்சை மாநகர்ப் ...... பெருமாளே.
பாடல் 885 ( தஞ்சை )
ராகம் - ....; தாளம் - தந்த தானன தான தான தத்த தந்த
தந்த தானன தான தான தத்த தந்த
தந்த தானன தான தான தத்த தந்த ...... தனதான
கந்த வார்குழல் கோதி மாலை யைப்பு னைந்து
மஞ்ச ளாலழ காக மேனி யிற்றி மிர்ந்து
கண்ட மாலைக ளான ஆணி முத்த ணிந்து ...... தெருவூடே
கண்ட பேரையெ லாம வாவி னிற்கொ ணர்ந்து
வண்ப யோதர பார மேரு வைத்தி றந்து
கண்க ளாகிய கூர வேலை விட்டெ றிந்து ...... விலைகூறி
வந்த பேர்களை யேகை யாலே டுத்த ணைந்து
கொண்டு தேனித ழூறு வாயை வைத்த ருந்தி
மந்த மாருதம் வீசு பாய லிற்பு ணர்ந்து ...... மயல்பூணு
மங்கை மாரநு போக தீவி னைப்ப வங்கள்
மங்கி யேகிடு மாறு ஞான வித்தை தந்து
வண்டு லாவிய நீப மாலை சற்றி லங்க ...... வருவாயே
இந்த்ர தாருவை ஞால மீதி னிற்கொ ணர்ந்த
சங்க பாணிய னாதி கேச வப்ர சங்க
னென்று வாழ்மணி மார்பன் வீர விக்ர மன்றன் ...... மருகோனே
எண்டி சாமுக வேலை ஞால முற்று மண்டு
கந்த தாருக சேனை நீறு பட்டொ துங்க
வென்று பேரொளி சேர்ப்ர காசம் விட்டி லங்கு ...... கதிர்வேலா
சந்த்ர சேகரி நாக பூஷ ணத்தி யண்ட
முண்ட நாரணி யால போஜ னத்தி யம்பை
தந்த பூரண ஞான வேள்கு றத்தி துஞ்சு ...... மணிமார்பா
சண்ட நீலக லாப வாசி யிற்றி கழ்ந்து
கஞ்சன் வாசவன் மேவி வாழ்ப திக்கு யர்ந்த
தஞ்சை மாநகர் ராஜ கோபு ரத்த மர்ந்த ...... பெருமாளே.
பாடல் 886 ( சப்தஸ்தானம் )
ராகம் - ....; தாளம் - தனன தானன தான தனத்தன
தனன தானன தான தனத்தன
தனன தானன தான தனத்தன ...... தனதான
மருவு லாவிடு மோதி குலைப்பவர்
சமர வேலெனு நீடு விழிச்சியர்
மனதி லேகப டூரு பரத்தைய ...... ரதிகேள்வர்
மதன னோடுறழ் பூச லிடைச்சியர்
இளைஞ ராருயிர் வாழு முலைச்சியர்
மதுர மாமொழி பேசு குணத்தியர் ...... தெருமீதே
சருவி யாரையும் வாவெ னழைப்பவர்
பொருளி லேவெகு ஆசை பரப்பிகள்
சகல தோதக மாயை படிப்பரை ...... யணுகாதே
சலச மேவிய பாத நி¨த்துமுன்
அருணை நாடதி லோது திருப்புகழ்
தணிய வோகையி லோத எனக்கருள் ...... புரிவாயே
அரிய கானக மேவு குறத்திதன்
இதணி லேசில நாளு மனத்துடன்
அடவி தோறுமெ வாழியல் பத்தினி ...... மணவாளா
அசுரர் வீடுகள் நூறு பொடிப்பட
உ ழவர் சாகர மோடி யொளித்திட
அமரர் நாடுபொன் மாரி மிகுத்திட ...... நினைவோனே
திருவின் மாமர மார்பழ னப்பதி
அயிலு சோறவை யாளுது றைப்பதி
திசையி னான்மறை தேடிய முற்குடி ...... விதியாதிச்
சிரமு மாநிலம் வீழ்தரு மெய்ப்பதி
பதும நாயகன் வாழ்பதி நெய்ப்பதி
திருவை யாறுட னேழுதி ருப்பதி ...... பெருமாளே.
பாடல் 887 ( திருவையாறு )
ராகம் - ....; தாளம் - தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன ...... தனதான
சொரியு மாமுகி லோஇரு ளோகுழல்
சுடர்கொள் வாளிணை யோபிணை யோவிழி
சுரர்த மாரமு தோகுயி லோமொழி ...... யிதழ்கோவை
துவர தோஇல வோதெரி யாஇடை
துகளி லாவன மோபிடி யோநடை
துணைகொள் மாமலை யோமுலை தானென ...... உ ரையாடிப்
பரிவி னாலெனை யாளுக நானொரு
பழுதி லானென வாணுத லாரொடு
பகடி யேபடி யாவொழி யாஇடர் ...... படுமாயப்
பரவை மீதழி யாவகை ஞானிகள்
பரவு நீள்புக ழேயது வாமிகு
பரம வீடது சேர்வது மாவது ...... மொருநாளே
கரிய மேனிய னானிரை யாள்பவன்
அரிய ராவணை மேல்வளர் மாமுகில்
கனகன் மார்பது பீறிய வாளரி ...... கனமாயக்
கபடன் மாமுடி யாறுட னாலுமொர்
கணையி னால்நில மீதுற நூறிய
கருணை மால்கவி கோபக்ரு பாகரன் ...... மருகோனே
திரிபு ராதிகள் தூளெழ வானவர்
திகழ வேமுனி யாவருள் கூர்பவர்
தெரிவை பாதியர் சாதியி லாதவர் ...... தருசேயே
சிகர பூதர நீறுசெய் வேலவ
திமிர மோகர வீரதி வாகர
திருவை யாறுறை தேவக்ரு பாகர ...... பெருமாளே.
பாடல் 888 ( திருப்பூந்துருத்தி )
ராகம் - ....; தாளம் - தாந்த தத்தன தானா தானன
தாந்த தத்தன தானா தானன
தாந்த தத்தன தானா தானன ...... தந்ததான
வீங்கு பச்சிள நீர்போல் மாமுலை
சேர்ந்த ணைத்தெதிர் மார்பூ டேபொர
வேண்டு சர்க்கரை பால்தே னேரிதழ் ...... உ ண்டுதோயா
வேண்டு ரைத்துகில் வேறாய் மோகன
வாஞ்சை யிற்களி கூரா வாள்விழி
மேம்ப டக்குழை மீதே மோதிட ...... வண்டிராசி
ஓங்கு மைக்குழல் சாதா வீறென
வீந்து புட்குரல் கூவா வேள்கலை
யோர்ந்தி டப்பல க்¡£டா பேதமு ...... யங்குமாகா
ஊண்பு ணர்ச்சியு மாயா வாதனை
தீர்ந்து னக்கெளி தாயே மாதவ
மூன்று தற்குமெய்ஞ் ஞானா சாரம்வ ...... ழங்குவாயே
தாங்கு நிற்சரர் சேனா நீதரு
னாங்கு ருத்ரகு மாரா கோஷண
தாண்ட வற்கருள் கேகீ வாகன ...... துங்கவீரா
சாங்கி பற்சுகர் சீநா தீசுர
ரேந்த்ரன் மெச்சிய வேலா போதக
சாந்த வித்தக ஸ்வாமீ நீபவ ...... லங்கன்மார்பா
பூங்கு ளத்திடை தாரா வோடன
மேய்ந்த செய்ப்பதி நாதா மாமலை
போன்ற விக்ரக சூரா ¡£பகி ...... ரண்ட்ருபா
போந்த பத்தர்பொ லாநோய் போயிட
வேண்ட நுக்ரக போதா மேவிய
பூந்து ருத்தியில் வாழ்வே தேவர்கள் ...... தம்பிரானே.
பாடல் 889 ( திருநெய்த்தானம் )
ராகம் - ....; தாளம் - தனனத் தானத் தனதன தனதன
தனனத் தானத் தனதன தனதன
தனனத் தானத் தனதன தனதன ...... தனதான
முகிலைக் காரைச் சருவிய குழலது
சரியத் தாமத் தொடைவகை நெகிழ்தர
முளரிப் பூவைப் பனிமதி தனைநிகர் ...... முகம்வேர்வ
முனையிற் காதிப் பொருகணை யினையிள
வடுவைப் பானற் பரிமள நறையிதழ்
முகையைப் போலச் சமர்செயு மிருவிழி ...... குழைமோதத்
துகிரைக் கோவைக் கனிதனை நிகரிதழ்
பருகிக் காதற் றுயரற வளநிறை
துணைபொற் றோளிற் குழைவுற மனமது ...... களிகூரச்
சுடர்முத் தாரப் பணியணி ம்ருகமத
நிறைபொற் பாரத் திளகிய முகிழ்முலை
துவளக் கூடித் துயில்கினு முனதடி ...... மறவேனே
குகுகுக் கூகுக் குகுகுகு குகுவென
திமிதித் தீதித் திமிதியென் முரசொடு
குழுமிச் சீறிச் சமர்செயு மசுரர்கள் ...... களமீதே
குழறிக் கூளித் திரளெழ வயிரவர்
குவியக் கூடிக் கொடுவர அலகைகள்
குணலிட் டாடிப் பசிகெட அயில்வெடு ...... குமரேசா
செகசெச் சேசெச் செகவென முரசொலி
திகழச் சூழத் திருநட மிடுபவர்
செறிகட் காளப் பணியணி யிறையவர் ...... தருசேயே
சிகரப் பாரக் கிரியுறை குறமகள்
கலசத் தாமத் தனகிரி தழுவிய
திருநெய்த் தானத் துறைபவ சுரபதி ...... பெருமாளே.
பாடல் 890 ( திருப்பழுவூர் )
ராகம் - ....; தாளம் - தனன தந்தன தாத்த தானன
தனன தந்தன தாத்த தானன
தனன தந்தன தாத்த தானன ...... தனதான
விகட சங்கட வார்த்தை பேசிகள்
அவல மங்கைய ரூத்தை நாறிகள்
விரிவ டங்கிட மாற்றும் வாறென ...... வருவார்தம்
விதம்வி தங்களை நோக்கி யாசையி
லுபரி தங்களை மூட்டி யேதம
இடும ருந்தொடு சோற்றை யேயிடு ...... விலைமாதர்
சகல மஞ்சன மாட்டி யேமுலை
படவ ளைந்திசை மூட்டி யேவரு
சரச இங்கித நேத்தி யாகிய ...... சுழலாலே
சதிமு ழங்கிட வாய்ப்ப ணானது
மலர வுந்தியை வாட்டி யேயிடை
தளர வுங்கணை யாட்டும் வேசிய ...... ருறவாமோ
திகிரி கொண்டிரு ளாக்கி யேயிரு
தமையர் தம்பியர் மூத்த தாதையர்
திலக மைந்தரை யேற்ற சூரரை ...... வெகுவான
செனம டங்கலு மாற்றி யேயுடல்
தகர அங்கவர் கூட்டை யேநரி
திருகி யுண்டிட ஆர்த்த கூளிக ...... ளடர்பூமி
அகடு துஞ்சிட மூட்டு பாரத
முடிய அன்பர்க ளேத்த வேயரி
யருளு மைந்தர்கள் வாழ்த்து மாயவன் ...... மருகோனே
அமர ரந்தணர் போற்ற வேகிரி
கடல திர்ந்திட நோக்கு மாமயில்
அழகொ டும்பழு வூர்க்குள் மேவிய ...... பெருமாளே.
பாடல் 891 ( பெரும்புலியூர் )
ராகம் - ....; தாளம் - தனந்தனன தானத் தனந்தனன தானத்
தனந்தனன தானத் ...... தனதான
சதங்கைமணி வீரச் சிலம்பினிசை பாடச்
சரங்களொளி வீசப் ...... புயமீதே
தனங்கள்குவ டாடப் படர்ந்தபொறி மால்பொற்
சரங்கண்மறி காதிற் ...... குழையாட
இதங்கொள்மயி லேரொத் துகந்தநகை பேசுற்
றிரம்பையழ கார்மைக் ...... குழலாரோ
டிழைந்தமளி யோடுற் றழுந்துமெனை நீசற்
றிரங்கியிரு தாளைத் ...... தருவாயே
சிதம்பரகு மாரக் கடம்புதொடை யாடச்
சிறந்தமயில் மேலுற் ...... றிடுவோனே
சிவந்தகழு காடப் பிணங்கள்மலை சாயச்
சினந்தசுரர் வேரைக் ...... களைவோனே
பெதும்பையெழு கோலச் செயங்கொள்சிவ காமிப்
ப்ரசண்டஅபி ராமிக் ...... கொருபாலா
பெரும்புனம தேகிக் குறம்பெணொடு கூடிப்
பெரும்புலியுர் வாழ்பொற் ...... பெருமாளே.
பாடல் 892 ( நெடுங்களம் )
ராகம் - ....; தாளம் - தந்ததன தந்ததன தந்ததன தந்ததன
தந்ததன தந்ததன ...... தந்ததான
பஞ்சபுல னும்பழைய ரண்டுவினை யும்பிணிகள்
பஞ்செனஎ ரிந்துபொடி ...... யங்கமாகிப்
பண்டறவுடன்பழைய தொண்டர்களு டன்பழகி
பஞ்சவர்வி யன்பதியு ...... டன்குலாவக்
குஞ்சரமு கன்குணமொ டந்தவனம் வந்துலவ
கொஞ்சியசி லம்புகழல் ...... விந்துநாதங்
கொஞ்சமயி லினற்புறமெல் வந்தருளி யென்கவலை
கொன்றருள்நி றைந்தகழ ...... லின்றுதாராய்
எஞ்சியிடை யுஞ்சுழல அம்புவிழி யுஞ்சுழல
இன்பரச கொங்கைகர ...... முங்கொளாமல்
எந்தவுடை சிந்தபெல மிஞ்சியமு தம்புரள
இந்துநுத லும்புரள ...... கங்குல்மேகம்
அஞ்சுமள கம்புரள மென்குழைக ளும்புரள
அம்பொனுரு மங்கைமண ...... முண்டபாலா
அன்பர்குல வுந்திருநெ டுங்களவ ளம்பதியில்
அண்டரய னும்பரவு ...... தம்பிரானே.
பாடல் 893 ( குறட்டி )
ராகம் - ....; தாளம் - தானன தனத்த தான, தானன தனத்த தான
தானன தனத்த தான ...... தனதான
கூரிய கடைக்க ணாலு மேருநி கரொப்ப தான
கோடதனில் மெத்த வீறு ...... முலையாலுங்
கோபவ தரத்தி னாலு மேவிடு விதத்து ளால
கோலவு தரத்தி னாலு ...... மொழியாலும்
சீரிய வளைக்கை யாலு மேகலை நெகிழ்ச்சி யேசெய்
சீருறு நுசுப்பி னாலும் ...... விலைமாதர்
சேறுத னினித்த மூழ்கி நாளவ மிறைத்து மாயை
சேர்தரு முளத்த னாகி ...... யுழல்வேனோ
தாரணி தனக்குள் வீறி யேசம ரதுட்டனான
ராவணன் மிகுத்த தானை ...... பொடியாகச்
சாடுமு வணப்ப தாகை நீடுமு கிலொத்த மேனி
தாதுறை புயத்து மாயன் ...... மருகோனே
வாரண முரித்து மாதர் மேகலை வளைக்கை நாண
மாபலி முதற்கொ ணாதன் ...... முருகோனே
வாருறு தனத்தி னார்கள் சேரும திளுப்ப ¡£கை
வாகுள குறட்டி மேவு ...... பெருமாளே.
பாடல் 894 ( குறட்டி )
ராகம் -....; தாளம் - தானன தனத்த தான தானன தனத்த தான
தானன தனத்த தான ...... தனதான
நீரிழிவு குட்ட மீளை வாதமொடு பித்த மூல
நீள்குளிர் வெதுப்பு வேறு ...... முளநோய்கள்
நேருறு புழுக்கள் கூடு நான்முக னெடுத்த வீடு
நீடிய விரத்த மூளை ...... தசைதோல்சீ
பாரிய நவத்து வார நாறுமு மலத்தி லாறு
பாய்பிணி யியற்று பாவை ...... நரிநாய்பேய்
பாறோடு கழுக்கள் கூகை தாமிவை புசிப்ப தான
பாழுட லெடுத்து வீணி ...... லுழல்வேனோ
நாரணி யறத்தி னாரி ஆறுச மயத்தி பூத
நாயக ரிடத்து காமி ...... மகமாயி
நாடக நடத்தி கோல நீலவ ருணத்தி வேத
நாயகி யுமைச்சி நீலி ...... திரிசூலி
வாரணி முலைச்சி ஞான பூரணி கலைச்சி நாக
வாணுத லளித்த வீர ...... மயிலோனே
மாடம தில்முத்து மேடை கோபுர மணத்த சோலை
வாகுள குறட்டி மேவு ...... பெருமாளே.
பாடல் 895 ( அத்திப்பட்டு )
ராகம் - ....; தாளம் - தனதனன தனதனன தத்தத் தத்ததன
தனதனன தனதனன தத்தத் தத்ததன
தனதனன தனதனன தத்தத் தத்ததன ...... தனதான
கருகியறி வகலவுயிர் விட்டுக் கிக்கிளைஞர்
கதறியழ விரவுபறை முட்டக் கொட்டியிட
கனகமணி சிவிகையில மர்த்திக் கட்டையினி ...... லிடைபோடாக்
கரமலர்கொ டரிசியினை யிட்டுச் சித்ரமிகு
கலையைபுரி செய்துமறைகள் பற்றப் பற்றுகனல்
கணகணென எரியவுடல் சுட்டுக் கக்ஷ¢யவர் ...... வழியேபோய்
மருவுபுனல் முழுகிமனை புக்குத் துக்கமறு
மனிதர்தமை யுறவுநிலை சுட்டுச் சுட்டியுற
மகிழ்வுசெய்து அழுதுபட வைத்தத் துட்டன்மதன் ...... மலராலே
மயல்விளைய அரியையர்கள் கைப்பட் டெய்த்துமிக
மனமழியு மடிமையைநி னைத்துச் சொர்க்கபதி
வழியையிது வழியெனவு ரைத்துப் பொற்கழல்கள் ...... தருவாயே
பொருவின்மலை யரையனருள் பச்சைச் சித்ரமயில்
புரமெரிய இரணியத னுக்கைப் பற்றியியல்
புதியமுடு கரியதவ முற்றுக் கச்சியினி ...... லுறமேவும்
புகழ்வனிதை தருபுதல்வ பத்துக் கொத்துமுடி
புயமிருப தறவுமெய்த சக்ரக் கைக்கடவுள்
பொறியரவின் மிசைதுயிலு சுத்தப் பச்சைமுகில் ...... மருகோனே
அரியமர கதமயிலி லுற்றுக் கத்துகட
லதுசுவற அசுரர்கிளை கெட்டுக் கட்டையற
அமரர்பதி யினியகுடி வைத்தற் குற்றமிகு ...... மிளையோனே
அருணமணி வெயில்பரவு பத்துத் திக்குமிகு
மழகுபொதி மதர்மகுட தத்தித் தத்திவளர்
அணியகய லுகளும்வயல் அத்திப் பட்டிலுறை ...... பெருமாளே.
பாடல் 896 ( அத்திக்கரை )
ராகம் - ....; தாளம் - தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான
தொக்கைக்கழு விப்பொற் றகுமுடை
சுற்றிக்கல னிட்டுக் கடிதரு
சொக்குப் புலியப்பிப் புகழுறு ...... களியாலே
சுத்தத்தைய கற்றிப் பெரியவர்
சொற்றப்பிய கத்தைப் புரிபுல
சுற்றத்துட னுற்றிப் புவியிடை ...... யலையாமல்
முக்குற்றம கற்றிப் பலகலை
கற்றுப்பிழை யற்றுத் தனையுணர்
முத்தர்க்கடி மைப்பட் டிலகிய ...... அறிவாலே
முத்தித்தவ சுற்றுக் கதியுறு
சத்தைத்தெரி சித்துக் கரையகல்
முத்திப்புண ரிக்குட் புகவர ...... மருள்வாயே
திக்கெட்டும டக்கிக் கடவுள
ருக்குப்பணி கற்பித் தருளறு
சித்தத்தொட டுத்துப் படைகொடு ...... பொருசூரர்
செச்சைப்புய மற்றுப் புகவொரு
சத்திப்படை விட்டுச் சுரர்பதி
சித்தத்துயர் கெட்டுப் பதிபெற ...... அருள்வோனே
அக்கைப்புனை கொச்சைக் குறமகள்
அச்சத்தையொ ழித்துக் கரிவரும்
அத்தத்தி லழைத்துப் பரிவுட ...... னணைவோனே
அப்பைப்பிறை யைக்கட் டியசடை
அத்தர்க்கரு மைப்புத் திரவிரி
அத்திக்கரை யிச்சித் துறைதரு ...... பெருமாளே.
பாடல் 897 ( கந்தனூர் )
ராகம் - பூர்விகல்யாணி தாளம் - கண்டசாபு (2 1/2)
தகிட-1 1/2, தக-1
தந்தனா தத்தனா தந்தனா தத்தனா
தந்தனா தத்தனா ...... தந்ததான
விந்துபே தித்தவடி வங்களா யெத்திசையு
மின்சரா சர்க்குலமும் ...... வந்துலாவி
விண்டுபோய் விட்டவுடல் சிந்தைதா னுற்றறியு
மிஞ்சநீ விட்டவடி ...... வங்களாலே
வந்துநா யிற்கடைய னொந்துஞா னப்பதவி
வந்துதா இக்கணமெ ...... யென்றுகூற
மைந்தர்தா விப்புகழ தந்தைதா யுற்றுருகி
வந்துசே யைத்தழுவல் ...... சிந்தியாதோ
அந்தகா ரத்திலிடி யென்பவாய் விட்டுவரு
மங்கிபார் வைப்பறையர் ...... மங்கிமாள
அங்கைவேல் விட்டருளி யிந்த்ரலோ கத்தின்மகிழ்
அண்டரே றக்கிருபை ...... கொண்டபாலா
எந்தனா விக்குதவு சந்த்ரசேர் வைச்சடையர்
எந்தைபா கத்துறையு ...... மந்தமாது
எங்குமாய் நிற்குமொரு கந்தனூர் சத்திபுகழ்
எந்தைபூ சித்துமகிழ் ...... தம்பிரானே.
பாடல் 898 ( வாலிகொண்டபுரம் )
ராகம் - மத்யமாவதி தாளம் - சதுஸ்ரத்ருபுடை - 4 களை (32)
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தான தந்ததன தான தந்ததன
தான தந்ததன தான தந்ததன
தான தந்ததன தான தந்ததன ...... தந்ததான
ஈயெ றும்புநரி நாய்க ணங்கழுகு
காக முண்பவுட லேசு மந்துஇது
ஏல்வ தென்றுமத மேமொ ழிந்துமத ...... வும்பல்போலே
ஏது மென்றனிட §ர்¡லெ னும்பரிவு
மேவி நம்பியிது போது மென்கசில
ரேய்த னங்கள்தனி வாகு சிந்தைவச ...... னங்கள்பேசிச்
சீத தொங்கலழ காவ ணிந்துமணம்
வீச மங்கையர்க ளாட வெண்கவரி
சீற கொம்புகுழ லு¡த தண்டிகையி ...... லந்தமாகச்
சேர்க னம்பெரிய வாழ்வு கொண்டுழலு
மாசை வெந்திடவு னாசை மிஞ்சிசிவ
சேவை கண்டுனது பாத தொண்டனென ...... அன்புதாராய்
சூதி ருந்தவிடர் மேயி ருண்டகிரி
சூரர் வெந்துபொடி யாகி மங்கிவிழ
சூரி யன்புரவி தேர்ந டந்துநடு ...... பங்கினோடச்
சோதி யந்தபிர மாபு ரந்தரனு
மாதி யந்தமுதல் தேவ ருந்தொழுது
சூழ மன்றில்நட மாடு மெந்தைமுத ...... லன்புகூர
வாது கொண்டவுணர் மாள செங்கையயி
லேவி யண்டர்குடி யேற விஞ்சையர்கள்
மாதர் சிந்தைகளி கூர நின்றுநட ...... னங்கொள்வோனே
வாச கும்பதன மானை வந்துதினை
காவல் கொண்டமுரு காஎ ணும்பெரிய
வாலி கொண்டபுர மர்ந்துவளர் ...... தம்பிரானே.
பாடல் 899 ( திருமாந்துறை )
ராகம் - ஆஹிரி தாளம் - ஆதி
தாந்தன தனந்த தாந்தன தனந்த
தாந்தன தனந்த ...... தனதான
ஆங்குடல் வளைந்து நீங்குபல் நெகிழ்ந்து
ஆய்ஞ்சுதளர் சிந்தை ...... தடுமாறி
ஆர்ந்துள கடன்கள் வாங்கவு மறிந்து
ஆண்டுபல சென்று ...... கிடையோடே
ஊங்கிருமல் வந்து வீங்குகுடல் நொந்து
ஓய்ந்துணர் வழிந்து ...... உ யிர்போமுன்
ஓங்குமயில் வந்து சேண்பெறஇ சைந்து
ஊன்றிய பதங்கள் ...... தருவாயே
வேங்கையு முயர்ந்த தீம்புன மிருந்த
வேந்திழையி னின்ப ...... மணவாளா
வேண்டுமவர் தங்கள் பூண்டபத மிஞ்ச
வேண்டிய பதங்கள் ...... புரிவோனே
மாங்கனி யுடைந்து தேங்கவயல் வந்து
மாண்புநெல் விளைந்த ...... வளநாடா
மாந்தர்வ ரும்பர் கோன்பரவி நின்ற
மாந்துறை யமர்ந்த ...... பெருமாளே.
பாடல் 900 ( வயலு¡ர் )
ராகம் - கேதாரம் தாளம் - சதுஸ்ர ரூபகம் (6)
(எடுப்பு - 1/2 இடம்)
தனதன தானான தானந் தனதன தானான தானந்
தனதன தானான தானந் ...... தனதான
அரிமரு கோனே நமோவென் றறுதியி லானே நமோவென்
றறுமுக வேளே நமோவென் ...... றுனபாதம்
அரகர சேயே நமோவென் றிமையவர் வாழ்வே நமோவென்
றருண செர்ருபா நமோவென் ...... றுளதாசை
பரிபுர பாதா சுரேசன் றருமக ணாதா வராவின்
பகைமயில் வேலா யுதாடம் ...... பரநாளும்
பகர்தலி லாதாளை யேதுஞ் சிலதறி யாவேழை நானுன்
பதிபசு பாசோப தேசம் ...... பெறவேணும்
கரதல சூலாயு தாமுன் சலபதி போலார வாரங்
கடினசு ராபான சாமுண் ...... டியுமாடக்
கரிபரி மேலேறு வானுஞ் செயசெய சேனா பதீயென்
களமிசை தானேறி யேயஞ் ...... சியசூரன்
குரல்விட நாய்பேய்கள் பூதங் கழுகுகள் கோமாயு காகங்
குடல்கொள வேபூச லாடும் ...... பலதோளா
குடதிசை வாராழி போலும் படர்நதி காவேரி சூழுங்
குளிர்வய லு¡ரார மேவும் ...... பெருமாளே.
பாடல் 901 ( வயலு¡ர் )
ராகம் - : தாளம் - தானதன தாத்த தானதன தாத்த
தானதன தாத்த ...... தனதான
ஆரமுலை காட்டி மாரநிலை காட்டி
யாடையணி காட்டி ...... அநுராக
ஆலவிழி காட்டி ஓசைமொழி காட்டி
ஆதரவு காட்டி ...... எவரோடும்
ஈரநகை காட்டி நேரமிகை காட்டி
யேவினைகள் காட்டி ...... யுறவாடி
ஏதமயல் காட்டு மாதர்வலை காட்டி
யீடழிதல் காட்ட ...... லமையாதோ
வீரவப ராட்டு சூரர்படை காட்டில்
வீழனலை யூட்டி ...... மயிலு¡ர்தி
வேலையுறை நீட்டி வேலைதனி லோட்டு
வேலைவிளை யாட்டு ...... வயலு¡ரா
சேரமலை நாட்டில் வாரமுடன் வேட்ட
சீலிகுற வாட்டி ...... மணவாளா
தேசுபுகழ் தீட்டி யாசைவரு கோட்டி
தேவர்சிறை மீட்ட ...... பெருமாளே.
பாடல் 902 ( வயலு¡ர் )
ராகம் - : தாளம் - தனதனன தனதனன தத்தத்த தத்ததன
தத்தத்த தத்ததன
---------- 3 முறை --------- ...... தந்ததான
இகல்கடின முகபடவி சித்ரத்து திக்கைமத
மத்தக்க ளிற்றையெதிர்
புளகதன மிளகஇனி தெட்டிக்க ழுத்தொடுகை
கட்டிப்பி ணித்திறுகி
யிதழ்பொதியி னமுதுமுறை மெத்தப்பு சித்துருகி
முத்தத்தை யிட்டுநக ...... தந்தமான
இடுகுறியும் வரையையுற நெற்றித்த லத்திடையில்
எற்றிக்க லக்கமுற
இடைதுவள வுடைகழல இட்டத்த ரைப்பையது
தொட்டுத்தி ரித்துமிக
இரணமிடு முரணர்விழி யொக்கக்க றுத்தவிழி
செக்கச்சி வக்கவளை ...... செங்கைசோர
அகருவிடு ம்ருகமதம ணத்துக்க னத்தபல
கொத்துக்கு ழற்குலைய
மயில்புறவு குயில்ஞிமிறு குக்கிற்கு ரற்பகர
நெக்குக்க ருத்தழிய
அமளிபெரி தமளிபட வக்கிட்டு மெய்க்கரண
வர்க்கத்தி னிற்புணரு ...... மின்பவேலை
அலையின்விழி மணியின்வலை யிட்டுப்பொ ருட்கவர
கட்டுப்பொ றிச்சியர்கள்
மதனகலை விதனமறு வித்துத்தி ருப்புகழை
யுற்றுத்து திக்கும்வகை
அபரிமித சிவஅறிவு சிக்குற்று ணர்ச்சியினில்
ரக்ஷ¢த்த ளித்தருள்வ ...... தெந்தநாளோ
திகுடதிகு தகுடதகு திக்குத்தி குத்திகுட
தத்தித்த ரித்தகுட
செகணசெக சகணசக செக்கச் செகச்செகண
சத்தச்ச கச்சகண
திகுதிகுர்தி தகுதகுர்த திக்குத்தி குத்திகுர்தி
தக்குத்த குத்தகுர்த ...... திங்குதீதோ
திரிரிதிரி தரிரிதரி தித்தித்தி ரித்திரிரி
தத்தித்த ரித்தரிரி
டிகுடடகு டகுடடிகு டிட்டிட்டி குட்டிகுடி
டட்டட்ட குட்டகுட
தெனதிமிர்த தவில்மிருக டக்கைத்தி ரட்சலிகை
பக்கக்க ணப்பறைத ...... வண்டைபேரி
வகைவகையின் மிகவதிர வுக்ரத்த ரக்கர்படை
பக்கத்தி னிற்சரிய
எழுதுதுகில் முழுதுலவி பட்டப்ப கற்பருதி
விட்டத்த மித்ததென
வருகுறளி பெருகுகுரு திக்குட்கு ளித்துழுது
தொக்குக்கு னிப்புவிட ...... வென்றவேலா
வயலிநகர் பயில்குமர பத்தர்க்க நுக்ரகவி
சித்ரப்ர சித்தமுறு
அரிமருக அறுமுகவ முக்கட்க ணத்தர்துதி
த்தவத்தி றச்சிகர
வடகுவடில் நடனமிடு மப்பர்க்கு முத்திநெறி
தப்பற்று ரைக்கவல ...... தம்பிரானே.
(0774-0000-5640)
பாடல் 903 ( வயலு¡ர் )
ராகம் - ....; தாளம் - தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
இலகு முலைவிலை யசடிகள் கசடிகள்
கலைகள் பலவறி தெருளிகள் மருளிகள்
எயிறு கடிபடு முதடிகள் பதடிகள் ...... எவரோடும்
இனிய நயமொழி பழகிக ளழகிகள்
மடையர் பொருள்பெற மருவிகள் சருவிகள்
யமனு மிகையென வழிதரு முழிதரும் ...... விழிவாளால்
உ லக மிடர்செயு நடலிகள் மடலிகள்
சிலுகு சிலரொடு புகலிக ளிகலிகள்
உ றவு சொலவல துரகிகள் விரகிகள் ...... பிறைபோலே
உ கிர்கை குறியிடு கமுகிகள் சமுகிகள்
பகடி யிடவல கபடிகள் முகடிகள்
உ ணர்வு கெடும்வகை பருவிக ளுருவிக ...... ளுறவாமோ
அலகை புடைபட வருவன பொருவன
கலக கணநிரை நகுவன தகவன
அசுரர் தசைவழி நிமிர்வன திமிர்வன ...... பொடியாடி
அலரி குடதிசை யடைவன குடைவன
தரும வநிதையு மகிழ்வன புகழ்வன
அகில புவனமு மரகர கரவென ...... அமர்வேள்வி
திலக நுதலுமை பணிவரு செயமகள்
கலையி னடமிட வெரிவிரி முடியினர்
திரள்ப லுயிருடல் குவடுக ளெனநட ...... மயிலேறிச்
சிறிது பொழுதினி லயில்விடு குருபர
அறிவு நெறியுள அறுமுக இறையவ
த்ரிசிரி கிரியயல் வயலியி லினிதுறை ...... பெருமாளே.
பாடல் 904 ( வயலு¡ர் )
ராகம் - பேகடா தாளம் - ஆதி
தன்னா தனத்தன தன்னா தனத்தன
தன்னா தனத்தன ...... தந்ததான
என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும்
என்னால் துதிக்கவும் ...... கண்களாலே
என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும்
என்னா லிருக்கவும் ...... பெண்டிர்வீடு
என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்
என்னால் சலிக்கவும் ...... தொந்தநோயை
என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும்
என்னால் தரிக்கவும் ...... இங்குநானார்
கன்னா ருரித்தஎன் மன்னா எனக்குநல்
கர்ணா மிர்தப்பதம் ...... தந்தகோவே
கல்லார் மனத்துட னில்லா மனத்தவ
கண்ணா டியிற்றடம் ...... கண்டவேலா
மன்னான தக்கனை முன்னாள்மு டித்தலை
வன்வாளி யிற்கொளும் ...... தங்க்ருபன்
மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி
மன்னா முவர்க்கொரு ...... தம்பிரானே.
பாடல் 905 ( வயலு¡ர் )
ராகம் - ....; தாளம் - தனனாத் தனதன தனனாத் தனதன
தனனாத் தனதன ...... தனதான
கடல்போற் கணைவிழி சிலைபோற் பிறைநுதல்
கனிபோற் றுகிரிதழ் ...... எழிலாகும்
கரிபோற் கிரிமுலை கொடிபோற் றுடியிடை
கடிபோற் பணியரை ...... யெனவாகும்
உ டல்காட் டினிமையி லெழில்பாத் திரமிவ
ளுடையாற் கெறுவித ...... நடையாலும்
ஒருநாட் பிரிவது மரிதாய்ச் சுழல்படும்
ஒழியாத் துயரது ...... தவிரேனோ
குடலீர்த் தசுரர்க ளுடல்காக் கைகள்நரி
கொளிவாய்ப் பலஅல ...... கைகள்பேய்கள்
கொலைபோர்க் களமிசை தினமேற் றமரர்கள்
குடியேற் றியகுக ...... வுயர்தாழை
மடல்கீற் றினிலெழு விரைபூப் பொழில்செறி
வயலு¡ர்ப் பதிதனி ...... லுறைவோனே
மலைமேற் குடியுறை கொடுவேட் டுவருடை
மகள்மேற் ப்ரியமுள ...... பெருமாளே.
பாடல் 906 ( வயலு¡ர் )
ராகம் - ....; தாளம் - தனனத் தான தான தனதன
தனனத் தான தான தனதன
தனனத் தான தான தனதன ...... தனதான
கமலத் தேகு லாவு மரிவையை
நிகர்பொற் கோல மாதர் மருள்தரு
கலகக் காம நூலை முழுதுண ...... ரிளைஞோர்கள்
கலவிக் காசை கூர வளர்பரி
மளகற் பூர தூம கனதன
கலகத் தாலும் வானி னழையுமி ...... னிடையாலும்
விமலச் சோதி ரூப இமகர
வதனத் தாலு நாத முதலிய
விரவுற் றாறு கால்கள் சுழலிருள் ...... குழலாலும்
வெயிலெப் போதும் வீசு மணிவளை
அணிபொற் றோள்க ளாலும் வடுவகிர்
விழியிற் பார்வை யாலு மினியிடர் ...... படுவேனோ
சமரிற் பூதம் யாளி பரிபிணி
கனகத் தேர்கள் யானை யவுணர்கள்
தகரக் கூர்கொள் வேலை விடுதிற ...... லு§வோனே
சமுகப் பேய்கள் வாழி யெனஎதிர்
புகழக் கானி லாடு பரிபுர
சரணத் தேக வீர அமைமன ...... மகிழ்வீரா
அமரர்க் கீச னான சசிபதி
மகள்மெய்த் தோயு நாத குறமகள்
அணையச் சூழ நீத கரமிசை ...... யுறுவேலா
அருளிற் சீர்பொ யாத கணபதி
திருவக் கீசன் வாழும் வயலியின்
அழகுக் கோயில் மீதில மருவிய ...... பெருமாளே.
பாடல் 907 ( வயலு¡ர் )
ராகம் -....; தாளம் - தனத்தத தானான தனதத்த தானான
தனதத்த தானனா ...... தந்ததான
கமையற்ற சீர்கேடர் வெகுதர்க்க கோலாலர்
களையுற்று மாயாது ...... மந்த்ரவாதக்
கடைகெட்ட ஆபாத முறுசித்ர கோமாளர்
கருமத்தின் மாயாது ...... கொண்டுபூணுஞ்
சமயத்த ராசார நியமத்தின் மாயாது
சகளத்து ளேநாளு ...... நண்புளோர்செய்
சரியைக்ரி யாயோக நியமத்தின் மாயாது
சலனப்ப டாஞானம் ...... வந்துதாராய்
அமரிற்சு ராபான திதிபுத்ர ராலோக
மதுதுக்க மேயாக ...... மிஞ்சிடாமல்
அடமிட்ட வேல்வீர திருவொற்றி யுர்நாதர்
அருணச்சி காநீல ...... கண்டபார
மமபட்ச மாதேவ ரருமைச்சு வாமீநி
மலநிட்க ளாமாயை ...... விந்துநாதம்
வரசத்தி மேலான பரவத்து வேமேலை
வயலிக்குள் வாழ்தேவர் ...... தம்பிரானே.
பாடல் 908 ( வயலு¡ர் )
ராகம் - கேதாரம் தாளம் - அங்கதாளம்
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
குருதி கிருமிகள் சலமல மயிர்தசை
மருவு முருவமு மலமல மழகொடு
குலவு பலபணி பரிமள மறசுவை ...... மடைபாயல்
குளிரி லறையக மிவைகளு மலமல
மனைவி மகவனை யநுசர்கள் முறைமுறை
குனகு கிளைஞர்க ளிவர்களு மலமல ...... மொருநாலு
சுருதி வழிமொழி சிவகலை யலதினி
யுலக கலைகளு மலமல மிலகிய
தொலைவி லுனைநினை பவருற வலதினி ...... யயலார்பால்
சுழல்வ தினிதென வசமுடன் வழிபடு
முறவு மலமல மருளலை கடல்கழி
துறைசெ லறிவினை யெனதுள மகிழ்வுற ...... அருள்வாயே
விருது முரசுகள் மொகுமொகு மொகுவென
முகுற ககபதி முகில்திகழ் முகடதில்
விகட இறகுகள் பறையிட அலகைகள் ...... நடமாட
விபுத ரரகர சிவசிவ சரணென
விரவு கதிர்முதி ரிமகரன் வலம்வர
வினைகொள் நிசிசரர் பொடிபட அடல்செயும் ...... வடிவேலா
மருது நெறுநெறு நெறுவென முறிபட
வுருளு முரலொடு தவழரி மருகசெ
வனச மலர்சுனை புலிநுழை முழையுடை ...... யவிராலி
மலையி லுறைகிற அறுமுக குருபர
கயலு மயிலையு மகரமு முகள்செநெல்
வயலி நகரியி லிறையவ அருள்தரு ...... பெருமாளே.
பாடல் 909 ( வயலு¡ர் )
ராகம் - ....; தாளம் - தனதானன தனதானன தனதானன தனதானன
தனதானன தனதானன ...... தந்ததான
குயிலோமொழி அயிலோவிழி கொடியோஇடை பிடியோநடை
குறியீர்தனி செறியீரினி ...... யென்றுபாடிக்
குனகாவடி பிடியாவிதழ் கடியாநகம் வகிராவுடை
குலையாவல்கு லளையாவிரு ...... கொங்கைமீதிற்
பயிலாமன மகிழ்மோகித சுகசாகர மடமாதர்கள்
பகையேயென நினையாதுற ...... நண்புகூரும்
பசுபாசமு மகிலாதிக பரிபூரண புரணாகர
பதிநேருநி னருளால் மெயு ...... ணர்ந்திடேனோ
வெயில்வீசிய கதிராயிர வருணோதய விருணாசன
விசையேழ்பரி ரவிசேயெனு ...... மங்கராசன்
விசிகாகவ மயல்பேடிகை படுபோதுசன் னிதியானவன்
விதிதேடிய திருவாளிய ...... ரன்குமாரா
அயலு¡ருறை மயிலாபல கலைமானுழை புலிதோல்களை
யகிலாரம தெறிகாவிரி ...... வண்டல்மேவும்
அதிமோகர வயலு¡ர்மிசை திரிசேவக முருகேசுர
அமராபதி யதில்வாழ்பவர் ...... தம்பிரானே.
பாடல் 910 ( வயலு¡ர் )
ராகம் - ....; தாளம் - தான தான தனத்தந் தான தான தனத்தந்
தான தான தனத்தந் ...... தனதான
கோவை வாயி தழுக்குந் தாக போக மளிக்குங்
கோதை மாதர் முலைக்குங் ...... குறியாலும்
கோல மாலை வளைக்குந் தோளி னாலு மணத்தங்
கோதி வாரி முடிக்குங் ...... குழலாலும்
ஆவி கோடி யவிக்குஞ் சேலி னாலு மயக்குண்
டாசை யாயி னுநித்தந் ...... தளராதே
ஆசி லாத மறைக்குந் தேடொ ணாதொரு வர்க்கொன்
றாடல் தாள்க ளெனக்கின் ...... றருள்வாயே
சேவி லேறு நிருத்தன் தோகை பாக னளிக்குந்
த்யாக சீல குணத்தன் ...... திருமாலும்
தேடொ ணாத பதத்தன் தீதி லாத மனத்தன்
தேயு வான நிறத்தன் ...... புதல்வோனே
காவி டாத திருச்செங் கோடு நாடு தனக்குங்
காவி சூழ் வயலிக்கும் ...... ப்ரியமானாய்
காதி மோதி யெதிர்க்குஞ் சூர தீரர் ப்ரமிக்குங்
கால னாடல் தவிர்க்கும் ...... பெருமாளே.
பாடல் 911 ( வயலு¡ர் )
ராகம் - தர்பாரி கானடா தாளம் - ஆதி
தானன தனத்த தானன தனத்த
தானன தனத்த ...... தனதான
தாமரையின் மட்டு வாசமல ரொத்த
தாளிணை நினைப்பி ...... லடியேனைத்
தாதவிழ் கடுக்கை நாகமகிழ் கற்ப
தாருவென மெத்தி ...... யவிராலி
மாமலையி னிற்ப நீகருதி யுற்று
வாவென அழைத்தென் ...... மனதாசை
மாசினை யறுத்து ஞானமு தளித்த
வாரமினி நித்த ...... மறவேனே
காமனை யெரித்த தீநயன நெற்றி
காதிய சுவர்க்க ...... நதிவேணி
கானிலுறை புற்றி லாடுபணி யிட்ட
காதுடைய அப்பர் ...... குருநாதா
சோமனொ டருக்கன் மீனுலவு மிக்க
சோலைபுடை சுற்று ...... வயலு¡ரா
சூடிய தடக்கை வேல்கொடு விடுத்து
சூர்தலை துணித்த ...... பெருமாளே.
பாடல் 912 ( வயலு¡ர் )
ராகம் - ....; தாளம் - தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
திருவு ரூப நேராக அழக தான மாமாய
திமிர மோக மானார்கள் ...... க¨ல்முடுஞ்
சிகரி யூடு தேமாலை யடவி யூடு போயாவி
செருகு மால னாசார ...... வினையேனைக்
கருவி ழாது சீரோதி யடிமை பூண லாமாறு
கனவி லாள்சு வாமீநின் ...... மயில்வாழ்வுங்
கருணை வாரி கூரேக முகமும் வீர மாறாத
கழலு நீப வேல்வாகு ...... மறவேனே
சருவ தேவ தேவாதி நமசி வாய நாமாதி
சயில நாரி பாகாதி ...... புதல்வோனே
சதம கீவல் போர்மேவு குலிச பாணி மால்யானை
சகச மான சா¡£செ ...... யிளையோனே
மருவு லோக மீரேழு மளவிடாவொ ணாவான
வரையில் வீசு தாள்மாயன் ...... மருகோனே
மநு நியாய சோணாடு தலைமை யாக வேமேலை
வயலி மீது வாழ்தேவர் ...... பெருமாளே.
பாடல் 913 ( வயலு¡ர் )
ராகம் - ....; தாளம் - தத்த தனதன தனனா தனனா
தத்த தனதன தனனா தனனா
தத்த தனதன தனனா தனனா ...... தனதான
நெய்த்த சுரிகுழ லறலோ முகிலோ
பத்ம நறுநுதல் சிலையோ பிறையோ
நெட்டை யிணைவிழி கணையோ பிணையோ ...... இனிதூறும்
நெக்க அமுதிதழ் கனியோ துவரோ
சுத்த மிடறது வளையோ கமுகோ
நிற்கு மிளமுலை குடமோ மலையோ ...... அறவேதேய்ந்
தெய்த்த இடையது கொடியோ துடியோ
மிக்க திருவரை அரவோ ரதமோ
இப்பொ னடியிணை மலரோ தளிரோ ...... எனமாலாய்
இச்சை விரகுடன் மடவா ருடனே
செப்ப மருளுட னவமே திரிவேன்
ரத்ந பரிபுர இருகா லொருகால் ...... மறவேனே
புத்த ரமணர்கள் மிகவே கெடவே
தெற்கு நரபதி திருநீ றிடவே
புக்க அனல்வய மிகஏ டுயவே ...... உ மையாள்தன்
புத்ர னென இசை பகர்நூல் மறைநூல்
கற்ற தவமுனி பிரமா புரம்வாழ்
பொற்ப கவுணியர் பெருமானுருவாய் ...... வருவோனே
சத்த முடையஷண் முகனே குகனே
வெற்பி லெறிசுட ரயிலா மயிலா
சத்தி கணபதி யிளையா யுளையா ...... யொளிகூருஞ்
சக்ர தரஅரி மருகா முருகா
உ க்ர இறையவர் புதல்வா முதல்வா
தட்ப முளதட வயலு¡ ரியலு¡ர் ...... பெருமாளே.
பாடல் 914 ( வயலு¡ர் )
ராகம் - ....; தாளம் - தனன தத்தன தானன தானன
தனன தத்தன தானன தானன
தனன தத்தன தானன தானன ...... தனதான
முலைம றைக்கவும் வாசலி லேதலை
மறைய நிற்கவும் ஆசையு ளோரென
முகிழ்ந கைச்சிறு தூதினை யேவவு ...... முகமோடே
முகம ழுத்தவும் ஆசைகள் கூறவு
நகம ழுத்தவும் லீலையி லேயுற
முறைம சக்கவும் வாசமு லாமல ...... ரணைமீதே
கலைநெ கிழ்க்கவும் வாலிப ரானவர்
உ டல்ச ளப்பட நாள்வழி நாள்வழி
கறைய ழிக்கவு நானென வேயணி ...... விலையீதே
கடிய சத்திய மாமென வேசொலி
யவர்கொ டப்பண மாறிட வீறொடு
கடுக டுத்திடு வாரொடு கூடிய ...... தமையாதோ
மலையை மத்தென வாசுகி யேகடை
கயிறெ னத்திரு மாலொரு பாதியு
மருவு மற்றது வாலியு மேலிட ...... அலையாழி
வலய முட்டவொ ரோசைய தாயொலி
திமிதி மித்திமெ னாவெழ வேயலை
மறுகி டக்கடை யாவெழ மேலெழு ...... மமுதோடே
துலைவ ருத்திரு மாமயில் வாழ்வுள
வயலை யற்புத னேவினை யானவை
தொடர றுத்திடு மாரிய கேவலி ...... மணவாளா
துவள்க டிச்சிலை வேள்பகை வாதிரு
மறுவொ ரெட்டுட னாயிர மேலொரு
துகள றுத்தணி யாரழ காசுரர் ...... பெருமாளே.
பாடல் 915 ( வயலு¡ர் )
ராகம் -....; தாளம் - தானன தனத்தத் தாத்த, தானன தனத்தத் தாத்த
தானன தனத்தத் தாத்த ...... தனதான
மேகலை நெகிழ்த்துக் காட்டி வார்குழல் விரித்துக் காட்டி
வேல்விழி புரட்டிக் காட்டி ...... யழகாக
மேனியை மினுக்கிக் காட்டி நாடக நடித்துக் காட்டி
வீடுக ளழைத்துக் காட்டி ...... மதராசன்
ஆகம முரைத்துக் காட்டி வாரணி தனத்தைக் காட்டி
யாரொடு நகைத்துக் காட்டி ...... விரகாலே
ஆதர மனத்தைக் காட்டி வேசைகள் மயக்கைக் காட்ட
ஆசையை யவர்க்குக் காட்டி ...... யழிவேனோ
மோகன விருப்பைக் காட்டி ஞானமு மெடுத்துக் காட்டி
மூதமிழ் முனிக்குக் கூட்டு ...... குருநாதா
மூவுல களித்துக் காட்டி சேவலை யுயர்த்திக் காட்டு
மூரிவில் மதற்குக் காட்டு ...... வயலு¡ரா
வாகையை முடித்துக் காட்டி கானவர் சமர்த்தைக் காட்டி
வாழ்மயில் நடத்திக் காட்டு ...... மிளையோனே
மாமலை வெதுப்பிக் காட்டி தானவர் திறத்தைக் காட்டி
வானவர் சிரத்தைக் காத்த ...... பெருமாளே.
பாடல் 916 ( வயலு¡ர் )
ராகம் - ....; தாளம் - தான தனதன தந்தன தந்தன
தான தனதன தந்தன தந்தன
தான தனதன தந்தன தந்தன ...... தனதான
வாளின் முனையினு நஞ்சினும் வெஞ்சம
ராஜ நடையினு மம்பதி னும்பெரு
வாதை வகைசெய்க ருங்கணு மெங்கணு ...... மரிதான
வாரி யமுதுபொ சிந்துக சிந்தசெ
வாயு நகைமுக வெண்பலு நண்புடன்
வாரு மிருமெனு மின்சொலு மிஞ்சிய ...... பனிநீருந்
தூளி படுநவ குங்கும முங்குளி
ரார மகில்புழு கும்புனை சம்ப்ரம
சோதி வளர்வன கொங்கையு மங்கையு ...... மெவரேனுந்
தோயு மளறெனி தம்பமு முந்தியு
மாயை குடிகொள்கு டம்பையுள் மன்பயில்
சூளை யரையெதிர் கண்டும ருண்டிட ...... லொழிவேனோ
காளி திரிபுரை யந்தரி சுந்தரி
நீலி கவுரிப யங்கரி சங்கரி
காரு ணியசிவை குண்டலி சண்டிகை ...... த்ரிபுராரி
காதல் மனைவிப ரம்பரை யம்பிகை
ஆதி மலைமகள் மங்கலை பிங்கலை
கான நடனமு கந்தவள் செந்திரு ...... அயன்மாது
வேளி னிரதிய ருந்ததி யிந்திர
தேவி முதல்வர்வ ணங்குத்ரி யம்பகி
மேக வடிவர்பின் வந்தவள் தந்தரு ...... ளிளையோனே
வேலு மயிலுநி னைந்தவர் தந்துயர்
தீர வருள்தரு கந்தநி ரந்தர
மேலை வயலையு கந்துள நின்றருள் ...... பெருமாளே.
பாடல் 917 ( வயலு¡ர் )
ராகம் - ....; தாளம் - தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன
------------ 3 முறை --------- ...... தந்ததான
விகட பரிமள ம்ருகமத இமசல
வகிர படிரமு மளவிய களபமு
மட்டித்தி தழ்த்தொடைமு டித்துத்தெ ருத்தலையில்
உ லவி யிளைஞர்கள் பொருளுட னுயிர்கவர்
கலவி விதவிய னரிவையர் மருள்வலை
யிட்டுத்து வக்கியிடர் பட்டுத் தியக்கியவர்
விரவு நவமணி முகபட எதிர்பொரு
பரண புளகித இளமுலை யுரமிசை
தைக்கக் கழுத்தொடுகை யொக்கப்பி ணித்திறுகி ...... யன்புகூர
விபுத ரமுதென மதுவென அறுசுவை
அபரி மிதமென இலவிதழ் முறைமுறை
துய்த்துக்க ளித்துநகம் வைத்துப்ப லிற்குறியின்
வரையு முறைசெய்து முனிவரு மனவலி
கரையு மரிசன பரிசன ப்ரியவுடை
தொட்டுக்கு லைத்துநுதல் பொட்டுப்ப டுத்திமதர்
விழிகள் குழைபொர மதிமுகம் வெயர்வெழ
மொழிகள் பதறிட ரதிபதி கலைவழி
கற்றிட்ட புட்குரல்மி டற்றிற்ப யிற்றிமடு ...... வுந்த§முழ்கிப்
புகடு வெகுவித கரணமு மருவிய
வகையின் முகிலென இருளென வனமென
ஒப்பித்த நெய்த்தபல புட்பக்கு ழற்சரிய
அமுத நிலைமல ரடிமுதல் முடிகடை
குமுத பதிகலை குறைகலை நிறைகலை
சித்தத்த ழுத்தியநு வர்க்கத்து ருக்கியொரு
பொழுதும் விடலரி தெனுமநு பவமவை
முழுது மொழிவற மருவிய கலவியி
தத்துப்ரி யப்படந டித்துத்து வட்சியினில் ...... நைந்துசோரப்
புணரு மிதுசிறு சுகமென இகபரம்
உ ணரு மறிவிலி ப்ரைமைதரு திரிமலம்
அற்றுக்க ருத்தொருமை யுற்றுப்பு லத்தலையில்
மறுகு பொறிகழல் நிறுவியெ சிறிதுமெய்
உ ணர்வு முணர்வுற வழுவற வொருஜக
வித்தைக்கு ணத்ரயமும் நிர்த்தத்து வைத்துமறை
புகலு மநுபவ வடிவினை யளவறு
அகில வெளியையு மொளியையு மறிசிவ
தத்வப்ர சித்திதனை முத்திச்சி வக்கடலை ...... யென்றுசேர்வேன்
திகுட திகுகுட திகுகுட திகுகுட
தகுட தகுகுட தகுகுட தகுகுட
திக்குத்தி குத்திகுட தக்குத்த குத்தகுட
டுமிட டுமிமிட டுமிமிட டுமிமிட
டமட டமமட டமமட டமமட
டுட்டுட்டு டுட்டுமிட டட்டட்ட டட்டமட
திகுர்தி திகுதிகு திகுகுர்தி திகுகுர்தி
தகுர்தி தகுதகு தகுகுர்தி தகுகுர்தி
திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்தி ...... என்றுபேரி
திமிலை கரடிகை பதலைச லரிதவில்
தமர முரசுகள் குடமுழ வொடுதுடி
சத்தக்க ணப்பறைகள் மெத்தத்தொ னித்ததிர
அசுரர் குலஅரி அமரர்கள் ஜயபதி
குசல பசுபதி குருவென விருதுகள்
ஒத்தத்தி ரட்பலவு முற்றிக்க லிக்கஎழு
சிகர கொடுமுடி கிடுகிடு கிடுவென
மகர சலநிதி மொகுமொகு மொகுவென
எட்டுத்தி சைக்களிறு மட்டற்ற றப்பிளிற ...... நின்றசேடன்
மகுட சிரதலம் நெறுநெறு நெறுவென
அகில புவனமும் ஹரஹர ஹரவென
நக்ஷத்ர முக்கிவிழ வக்கிட்ட துட்டகுண
நிருதர் தலையற வடிவெனு மலைசொரி
குருதி யருவியின் முழுகிய கழுகுகள்
பக்கப்ப ழுத்தவுடல் செக்கச்சி வத்துவிட
வயிறு சரிகுடல் நரிதின நிணமவை
எயிறு அலைகள் நெடுகிய குறளிகள்
பக்ஷ¢த்து நிர்த்தமிட ரக்ஷ¢த்த லைப்பரவி ...... யும்பர்வாழ
மடிய அவுணர்கள் குரகத கஜரத
கடக முடைபட வெடிபட எழுகிரி
அற்றுப்ப றக்கவெகு திக்குப்ப டித்துநவ
நதிகள் குழைதர இபபதி மகிழ்வுற
அமர்செய் தயில்கையில் வெயிலெழ மயில்மிசை
அக்குக்கு டக்கொடிசெ ருக்கப்பெ ருக்கமுடன்
வயலி நகருறை சரவண பவகுக
இயலு மிசைகளு நடனமும் வகைவகை
சத்யப்ப டிக்கினித கஸ்த்யர்க்கு ணர்த்தியருள் ...... தம்பிரானே.
பாடல் 918 ( திருத்தவத்துறை )
ராகம் - ....; தாளம் - தானன தந்தன தத்த தத்தன
தானன தந்தன தத்த தத்தன
தானன தந்தன தத்த தத்தன ...... தனதான
காரணி யுங்குழ லைக்கு வித்திடு
கோகன கங்கொடு மெத்தெ னப்பிறர்
காணவ ருந்திமு டித்தி டக்கடு ...... விரகாலே
காதள வுங்கய லைப்பு ரட்டிம
னாதிகள் வஞ்சமி குத்தி டப்படி
காமுக ரன்புகு வித்த கைப்பொரு ...... ளுறவாகிப்
பூரண கும்பமெ னப்பு டைத்தெழு
சீதள குங்கும மொத்த சித்திர
பூஷித கொங்கையி லுற்று முத்தணி ...... பிறையான
போருவை யொன்றுநெ கிழ்த்து ருக்கிமெய்
யாரையும் நெஞ்சைவி லைப்ப டுத்திடு
பூவையர் தங்கள்ம யக்கை விட்டிட ...... அருள்வாயே
வீரபு யங்கிரி யுக்ர விக்ரம
பூதக ணம்பல நிர்த்த மிட்டிட
வேகமு டன்பறை கொட்டி டக்கழு ...... கினமாட
வீசிய பம்பர மொப்பெ னக்களி
வீசந டஞ்செய் விடைத்த னித்துசர்
வேதப ரம்பரை யுட்க ளித்திட ...... வரும்வீரா
சீரணி யுந்திரை தத்து முத்தெறி
காவிரி யின்கரை மொத்து மெத்திய
சீர்புனை கின்றதி ருத்த வத்துறை ...... வரும்வாழ்வே
சீறியெ திர்ந்தவ ரக்க ரைக்கெட
மோதிய டர்ந்தருள் பட்ச முற்றிய
தேவர்கள் தஞ்சிறை வெட்டி விட்டருள் ...... பெருமாளே.
பாடல் 919 ( திருத்தவத்துறை )
ராகம் -....; தாளம் - தனத்த தத்தன தானன தானன
தனத்த தத்தன தானன தானன
தனத்த தத்தன தானன தானன ...... தனதான
நிரைத்த நித்தில நீள்மணி மாலைகள்
பொருத்த வெற்பிணை மார்முலை மேலணி
நெறித்த நெய்க்குழல் வாள்விழி மாமதி ...... முகமானார்
நெளித்த சிற்றிடை மேல்கலை ய¨டையை
யுடுத்தி யத்தமு ளோர்தமை யேமயல்
நிரப்பி நித்தமும் வீதியில் நேருறு ...... நெறியாலே
கரைத்தி தக்குயில் போல்மொழி மாதர்கள்
வலைக்கு ளிற்சுழ லாவகை யேயுன
கழற்று தித்திடு வாழ்வது தான்மன ...... துறமேவிக்
கதித்த பத்திமை சாலடி யார்சபை
மிகுத்தி ழிக்குண பாதக னேனுயர்
கதிக்க டுத்துயர் வாகவு மேயரு ...... ளுரையாதோ
வரைத்த நுக்கரர் மாதவ மேவின
ரகத்தி டத்தினில் வாழ்சிவ னார்திரு
மணிச்செ விக்குள்மெய்ஞ் ஞானம தோதிய ...... வடிவேலா
மதித்த முத்தமி ழாய்வினர் மேலவ
ருரைத்து ளத்திரு வாசக மானது
மனத்து ளெத்தழ கார்புகழ் வீசிய ...... மணிமாடத்
திரைக்க டற்பொரு காவிரி மாநதி
பெருக்கெ டுத்துமெ பாய்வள நீர்பொலி
செழித்த நெற்செநெல் வாரிக ளேகுவை ...... குவையாகச்
செருக்கு செய்ப்பதி வாழ்முரு காஅறம்
வளர்த்த நித்யகல் யாணிக்ரு பாகரி
திருத்த வத்துறை மாநகர் தானுறை ...... பெருமாளே.
பாடல் 920 ( பூவர்ளுர் )
பாடல் 920 ( பூவாளுர் ) ராகம் - ...; தாளம் -
தான தாத்தன தானா தானன
தான தாத்தன தானா தானன
தான தாத்தன தானா தானன ...... தனதான
காலன் வேற்கணை யீர்வா ளாலமு
நேர்க ணாற்கொலை சூழ்மா பாவிகள்
காம சாத்திர வாய்ப்பா டேணிக ...... ளெவரேனுங்
காத லார்க்கும்வி னாவாய் கூறிகள்
போக பாத்திர மர்மு தேவிகள்
காசு கேட்டிடு மாயா ரூபிக ...... ளதிமோக
மாலை மூட்டிகள் வானூ டேநிமிர்
ஆனை போற்பொர நேரே போர்முலை
மார்பு காட்டிகள் நானா பேதக ...... மெனமாயா
மாப ராக்கிக ளோடே சீரிய
போது போக்குத லாமோ நீயினி
வாவெ னாப்பரி வாலே யாள்வது ...... மொருநாளே
பால றாத்திரு வாயா லோதிய
ஏடு நீர்க்கெதிர் போயே வாதுசெய்
பாடல் தோற்றிரு நாலா மாயிர ...... சமண்மூடர்
பாரின் மேற்கழு மீதே யேறிட
நீறி டாத்தமிழ் நாடீ டேறிட
பாது காத்தரு ளாலே கூனிமி ...... ரிறையோனும்
ஞால மேத்திய தோர்மா தேவியும்
ஆல வாய்ப்பதி வாழ்வா மாறெணு
ஞான பாக்கிய பாலா வேலவ ...... மயில்வீரா
ஞான தீக்ஷ¢த சேயே காவிரி
யாறு தேக்கிய கால்வாய் மாமழ
நாடு போற்றிய பூவா ளுருறை ...... பெருமாளே.
பாடல் 921 ( திருப்பராய்த்துறை )
ராகம் -....; தாளம் - தானன தந்தன தாத்த தத்தன
தானன தந்தன தாத்த தத்தன
தானன தந்தன தாத்த தத்தன ...... தனதான
வாசனை மங்கையர் போற்று சிற்றடி
பூஷண கிண்கிணி யார்ப்ப ரித்திட
மாமலை ரண்டென நாட்டு மத்தக ...... முலையானை
வாடைம யங்கிட நூற்ற சிற்றிழை
நூலிடை நன்கலை தேக்க இக்குவில்
மாரன்வி டுங்கணை போற்சி வத்திடு ...... விழியார்கள்
நேசிகள் வம்பிக ளாட்ட மிட்டவர்
தீயர்வி ரும்புவர் போற்சு ழற்றியெ
நீசனெ னும்படி யாக்கி விட்டொரு ...... பிணியான
நீரின்மி குந்துழ லாக்கை யிற்றிட
யோகமி குந்திட நீக்கி யிப்படி
நீயக லந்தனில் வீற்றி ருப்பது ...... மொருநாளே
தேசம டங்கலு மேத்து மைப்புய
லாயநெ டுந்தகை வாழ்த்த வச்சிர
தேகமி லங்கிய தீர்க்க புத்திர ...... முதல்வோனே
தீரனெ னும்படி சாற்று விக்ரம
சூரன டுங்கிட வாய்த்த வெற்புடல்
தேயந டந்திடு கீர்த்தி பெற்றிடு ...... கதிர்வேலா
மூசளி பம்பிய நூற்றி தழ்க்கம
லாசனன் வந்துல காக்கி வைத்திடு
வேதன கந்தையை மாற்றி முக்கண ...... ¡றிவாக
மூதறி வுந்திய தீ¨க்ஷ செப்பிய
ஞானம்வி ளங்கிய மூர்த்தி யற்புத
மூவரி லங்குப ராய்த்து றைப்பதி ...... பெருமாளே.
பாடல் 922 ( தென்கடம்பந்துறை )
ராகம் - ....; தாளம் - தனதனன தந்தனந் தந்தனந் தந்தனந்
ன தந்தனந் தந்தனந் தந்தனந்
தனதனன தந்தனந் தந்தனந் தந்தனந் ...... தனதான
புணரியும னங்கனம் புஞ்சுரும் புங்கருங்
கயலினொடு கெண்டையுஞ் சண்டனுங் கஞ்சமும்
புதுநிலவ ருந்தியுந் துஞ்சுநஞ் சும்பொருப் ...... பெறிவேலும்
பொருவெனஇ கன்றகன் றங்குமிங் குஞ்சுழன்
றிடைகடைசி வந்துவஞ் சம்பொதிந் திங்கிதம்
புவியிளைஞர் முன்பயின் றம்பொனின் கம்பிதக் ...... குழைமோதிக்
குணலையொடு மிந்த்ரியஞ் சஞ்சலங் கண்டிடும்
படியமர்பு ரிந்தருஞ் சங்கடஞ் சந்ததங்
கொடுமைசெய்து சங்கொடுஞ் சிங்கிதங் குங்கடைக் ...... கணினார்பால்
குலவுபல செந்தனந் தந்துதந் தின்புறுந்
த்ரிவிதகர ணங்களுங் கந்தநின் செம்பதங்
குறுகும்வகை யந்தியுஞ் சந்தியுந் தொந்தமற் ...... றமைவேனோ
துணர்விரிக டம்பமென் தொங்கலும் பம்புறும்
புழுகுமச லம்பசுஞ் சந்தனங் குங்குமந்
தொகுகளப முந்துதைந் தென்றுநன் கொன்றுபத் ...... திருதோளுந்
தொலைவில்சண்மு கங்களுந் தந்த்ரமந் த்ரங்களும்
பழநிமலை யும்பரங் குன்றமுஞ் செந்திலுந்
துதிசெயுமெ யன்பர்தஞ் சிந்தையுஞ் சென்றுசெய்ப் ...... பதிவாழ்வாய்
கணபணபு யங்கமுங் கங்கையுந் திங்களுங்
குரவுமறு குங்குறுந் தும்பையுங் கொன்றையுங்
கமழ்சடில சம்புவுங் கும்பிடும் பண்புடைக் ...... குருநாதா
கனகுடகில் நின்றகுன் றந்தருஞ் சங்கரன்
குறுமுனிக மண்டலங் கொண்டுமுன் கண்டிடுங்
கதிசெய்நதி வந்துறுந் தென்கடம் பந்துறைப் ...... பெருமாளே.
பாடல் 922 ( தென்கடம்பந்துறை )
ராகம் -....; தாளம் - தனதனன தந்தனந் தந்தனந் தந்தனந்
ன தந்தனந் தந்தனந் தந்தனந்
தனதனன தந்தனந் தந்தனந் தந்தனந் ...... தனதான
புணரியும னங்கனம் புஞ்சுரும் புங்கருங்
கயலினொடு கெண்டையுஞ் சண்டனுங் கஞ்சமும்
புதுநிலவ ருந்தியுந் துஞ்சுநஞ் சும்பொருப் ...... பெறிவேலும்
பொருவெனஇ கன்றகன் றங்குமிங் குஞ்சுழன்
றிடைகடைசி வந்துவஞ் சம்பொதிந் திங்கிதம்
புவியிளைஞர் முன்பயின் றம்பொனின் கம்பிதக் ...... குழைமோதிக்
குணலையொடு மிந்த்ரியஞ் சஞ்சலங் கண்டிடும்
படியமர்பு ரிந்தருஞ் சங்கடஞ் சந்ததங்
கொடுமைசெய்து சங்கொடுஞ் சிங்கிதங் குங்கடைக் ...... கணினார்பால்
குலவுபல செந்தனந் தந்துதந் தின்புறுந்
த்ரிவிதகர ணங்களுங் கந்தநின் செம்பதங்
குறுகும்வகை யந்தியுஞ் சந்தியுந் தொந்தமற் ...... றமைவேனோ
துணர்விரிக டம்பமென் தொங்கலும் பம்புறும்
புழுகுமச லம்பசுஞ் சந்தனங் குங்குமந்
தொகுகளப முந்துதைந் தென்றுநன் கொன்றுபத் ...... திருதோளுந்
தொலைவில்சண்மு கங்களுந் தந்த்ரமந் த்ரங்களும்
பழநிமலை யும்பரங் குன்றமுஞ் செந்திலுந்
துதிசெயுமெ யன்பர்தஞ் சிந்தையுஞ் சென்றுசெய்ப் ...... பதிவாழ்வாய்
கணபணபு யங்கமுங் கங்கையுந் திங்களுங்
குரவுமறு குங்குறுந் தும்பையுங் கொன்றையுங்
கமழ்சடில சம்புவுங் கும்பிடும் பண்புடைக் ...... குருநாதா
கனகுடகில் நின்றகுன் றந்தருஞ் சங்கரன்
குறுமுனிக மண்டலங் கொண்டுமுன் கண்டிடுங்
கதிசெய்நதி வந்துறுந் தென்கடம் பந்துறைப் ...... பெருமாளே.
பாடல் 923 ( கருவூர் )
ராகம் - பூர்விகல்யாணி தாளம் - கண்டசாபு (2 1/2)
தனதானத் தனதான தனதானத் ...... தனதான
மதியால்வித் தகனாகி மனதாலுத் ...... தமனாகிப்
பதிவாகிச் சிவஞான பரயோகத் ...... தருள்வாயே
நிதியேநித் தியமேயென் நினைவேநற் ...... பொருளாயோய்
கதியேசொற் பரவேளே கருவூரிற் ...... பெருமாளே.
பாடல் 924 ( கருவூர் )
ராகம் - ....; தாளம் - தனனத் தனத்ததன தனனத் தனத்ததன
தனனத் தனத்ததன ...... தனதான
இளநிர்க் குவட்டுமுலை யமுதத் தடத்தைகனி
யிரதக் குடத்தையெணு ...... மரபோடே
இருகைக் கடைத்துஇடை துவளக் குழற்சரிய
இதழ்சர்க்க ரைப்பழமொ ...... டுற்ழுறல்
முளரிப்பு வொத்தமுக முகம்வைத் தருத்திநல
முதிரத்து வற்பஅல்குல் ...... மி¨ச்முழ்கி
மொழிதத்தை யொப்பகடை விழிகட் சிவப்பமளி
முழுகிச்சு கிக்கும்வினை ...... யறஆளாய்
நளினப் பதக்கழலு மொளிர்செச்சை பொற்புயமெ
னயனத்தி லுற்றுநட ...... மிடும்வேலா
நரனுக் கமைத்தகொடி யிரதச்சு தக்களவ
னறைபுட்ப நற்றுளவன் ...... மருகோனே
களபத் தனத்திசுக சரசக் குறத்திமுக
கமலப் புயத்துவளி ...... மணவாளா
கடலைக் குவட்டவுணை யிரணப் படுத்தியுயர்
கருவைப் பதிக்குளுறை ...... பெருமாளே.
பாடல் 925 ( கருவூர் )
ராகம் - கீரவாணி தாளம் - ஆதி
தனனா தனனத் தனனா தனனத்
தனனா தனனத் ...... தனதான
தசையா கியற் றையினால் முடியத்
தலைகா லளவொப் ...... பனையாயே
தடுமா றுதல்சற் றொருநா ளுலகிற்
றவிரா வுடலத் ...... தினைநாயேன்
பசுபா சமும்விட் டறிவா லறியப்
படுபூ ரணநிட் ...... களமான
பதிபா வனையுற் றநுபூ தியிலப்
படியே யடைவித் ...... தருள்வாயே
அசலே சுரர்புத் திரனே குணதிக்
கருணோ தயமுத் ...... தமிழோனே
அகிலா கமவித் தகனை துகளற்
றவர்வாழ் வயலித் ...... திருநாடா
கசிவா ரிதயத் தமிர்தே மதுபக்
கமலா லயன்மைத் ...... துனவேளே
கருணா கரசற் குருவே குடகிற்
கருவூ ரழகப் ...... பெருமாளே.
பாடல் 926 ( கருவூர் )
ராகம் -....; தாளம் - தத்தத் தனதன தானன தானன
தத்தத் தனதன தானன தானன
தத்தத் தனதன தானன தானன ...... தனதான
நித்தப் பிணிகொடு மேவிய காயமி
தப்புப் பிருதிவி வாயுவு தேயுவு
நிற்பொற் ககனமொ டாமிவை பூதக ...... லவைமேவி
நிற்கப் படுமுல காளவு மாகரி
டத்தைக் கொளவுமெ நாடிடு மோடிடு
நெட்டுப் பணிகலை பூணிடு நானெனு ...... மடவாண்மை
எத்தித் திரியுமி தேதுபொ யாதென
வுற்றுத் தெளிவுண ராதுமெய் ஞானமொ
டிச்சைப் படஅறி யாதுபொய் மாயையி ...... லுழல்வேனை
எத்திற் கொடுநின தாரடி யாரொடு
முய்த்திட் டுனதரு ளாலுயர் ஞானமு
திட்டுத் திருவடி யாமுயர் வாழ்வுற ...... இனிதாள்வாய்
தத்தத் தனதன தானன தானன
தித்தித் திமிதிமி தீதக தோதக
டத்தக் குடகுகு தாகுட தீகுட ...... வெனபேரிச்
சத்தத் தொலிதிகை தாவிட வானவர்
திக்குக் கெடவரு சூரர்கள் தூள்பட
சர்ப்பச் சதமுடி நாணிட வேலதை ...... யெறிவோனே
வெற்றிப் பொடியணி மேனியர் கோகுல
சத்திக் கிடமருள் தாதகி வேணியர்
வெற்புப் புரமது நீறெழ காணிய ...... ரருள்பாலா
வெற்புத் தடமலை யாள்வளி நாயகி
சித்தத் தமர்கும ராஎமை யாள்கொள
வெற்றிப் புகழ்கரு வூர்தனில் மேவிய ...... பெருமாளே.
பாடல் 927 ( கருவூர் )
ராகம் - ....; தாளம் - தத்தன தத்த தனதன, தத்தன தத்த தனதன
தத்தன தத்த தனதனத் ...... தனதான
முட்டம ருட்டி யிருகுழை தொட்டக டைக்க ணியலென
மொட்பைவி ளைத்து முறையளித் ...... திடுமாதர்
முத்தமி ரத்ந மரகதம் வைத்தவி சித்ர முகபட
மொச்சிய பச்சை யகில்மணத் ...... தனபாரம்
கட்டிய ணைத்து நகநுதி பட்டக ழுத்தி லிறுகிய
கைத்தல மெய்த்து வசனமற் ...... றுயிர்சோருங்
கட்டமு யக்கி னநுபவம் விட்டவி டற்கு நியமித
கற்பனை பக்ஷ முடனளித் ...... தருளாதோ
வெட்டிய கட்க முனைகொடு வட்டகு ணத்து ரணமுக
விக்ரம வுக்ர வெகுவிதப் ...... படைவீரா
வெற்றியை யுற்ற குறவர்கள் பெற்றகொ டிக்கு மிகமகிழ்
வித்தக சித்த வயலியிற் ...... குமரேசா
கிட்டிய பற்கொ டசுரர்கள் மட்டற வுட்க வடலொடு
கித்திந டக்கு மலகைசுற் ...... றியவேலா
கெட்டவ ருற்ற துணையென நட்டருள் சிட்ட பசுபதி
கெர்ப்பபு ரத்தி லறுமுகப் ...... பெருமாளே.
பாடல் 928 ( கருவூர் )
ராகம் - ....; தாளம் - தந்தன தனன தனதாத்தன
தந்தன தனன தனதாத்தன
தந்தன தனன தனதாத்தன ...... தனதான
சஞ்சல சரித பரநாட்டர்கள்
மந்திரி குமரர் படையாட்சிகள்
சங்கட மகிபர் தொழஆக்கினை ...... முடிசூடித்
தண்டிகை களிறு பரிமேற்றனி
வெண்குடை நிழலி லுலவாக்கன
சம்ப்ரம விபவ சவுபாக்கிய ...... முடையோராய்க்
குஞ்சமும் விசிற இறுமாப்பொடு
பஞ்சணை மிசையி லிசையாத்திரள்
கொம்புகள் குழல்கள் வெகுவாத்திய ...... மியல்கீதங்
கொங்கணி மகளிர் பெருநாட்டிய
நன்றென மனது மகிழ்பார்த்திபர்
கொண்டய னெழுதும் யமகோட்டியை ...... யுணராரே
பஞ்சவர் கொடிய வினைநூற்றுவர்
வென்றிட சகுனி கவறாற்பொருள்
பங்குடை யவனி பதிதோற்றிட ...... அயலேபோய்ப்
பண்டையில் விதியை நினையாப்பனி
ரண்டுடை வருக்ஷ முறையாப்பல
பண்புடன் மறைவின் முறையாற்றிரு ...... வருளாலே
வஞ்சனை நழுவி நிரைமீட்சியில்
முந்துத முடைய மனைவாழ்க்கையின்
வந்தபி னுரிமை யதுகேட்டிட ...... இசையாநாள்
மண்கொள விசையன் விடுதேர்ப்பரி
யுந்தினன் மருக வயலு¡ர்க்குக
வஞ்சியி லமரர் சிறைமீட்டருள் ...... பெருமாளே.
பாடல் 929 ( கருவூர் )
ராகம் - ....; தாளம் - தனதன தந்தன தாத்தன தனதன தந்தன தாத்தன
தனதன தந்தன தாத்தன ...... தனதான
முகிலள கஞ்சரி யாக்குழை யிகல்வன கண்சிவ வாச்சிவ
முறுவல்மு கங்குறு வேர்ப்பெழ ...... வநுபோக
முளைபுள கஞ்செய வார்த்தையு நிலையழி யும்படி கூப்பிட
முகுளித பங்கய மாக்கர ...... நுதல்சேரத்
துயரொழு குஞ்செல பாத்திர மெலியமி குந்துத ராக்கினி
துவளமு யங்கிவி டாய்த்தரி ...... வையர்தோளின்
துவயலி நின்றன வ்யாத்தமும் வயலியல் வஞ்சியில் மேற்பயில்
சொருபமு நெஞ்சிலி ராப்பகல் ...... மறவேனே
சகலம யம்பர மேச்சுரன் மகபதி யுய்ந்திட வாய்த்தருள்
சரவண சம்பவ தீர்க்கஷண் ...... முகமாகிச்
சருவுக்ர வுஞ்சசி லோச்சய முருவவெ றிந்தகை வேற்கொடு
சமர முகந்தனில் நாட்டிய ...... மயிலேறி
அகிலமு மஞ்சிய வாக்ரம விகடப யங்கர ராக்கத
அசுரர கங்கெட வார்த்திடு ...... கொடிகூவ
அமரர டங்கலு மாட்கொள அமரர்த லங்குடி யேற்றிட
அமரரை யுஞ்சிறை மீட்டருள் ...... பெருமாளே.
பாடல் 930 ( நெருவூர் )
ராகம் - ....; தாளம் - தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
குருவு மடியவ ரடியவ ரடிமையு
மருண மணியணி கணபண விதகர
குடில செடிலினு நிகரென வழிபடு ...... குணசீலர்
குழுவி லொழுகுதல் தொழுகுதல் விழுகுதல்
அழுகு தலுமிலி நலமிலி பொறையிலி
குசல கலையிலி தலையிலி நிலையிலி ...... விலைமாதர்
மருவு முலையெனு மலையினி லிடறியும்
அளக மெனவள ரடவியில் மறுகியு
மகர மெறியிரு கடலினில் முழுகியு ...... முழலாமே
வயலி நகரியி லருள்பெற மயில்மிசை
யுதவு பரிமள மதுகர வெகுவித
வனச மலரடி கனவிலு நனவிலு ...... மறவேனே
உ ருவு பெருகயல் கரியதொர் முகிலெனு
மருது நெறிபட முறைபட வரைதனில்
உ ரலி னொடுதவழ் விரகுள இளமையு ...... மிகமாரி
உ மிழ நிரைகளி னிடர்கெட வடர்கிரி
கவிகை யிடவல மதுகையு நிலைகெட
வுலவில் நிலவறை யுருவிய வருமையு ...... மொருநூறு
நிருப ரணமுக வரசர்கள் வலிதப
விசயன் ரதமுதல் நடவிய வெளிமையு
நிகில செகதல முரைசெயு மரிதிரு ...... மருகோனே
நிலவு சொரிவளை வயல்களு நெடுகிய
குடக தமனியு நளினமு மருவிய
நெருவை நகருறை திருவுரு வழகிய ...... பெருமாளே.
பாடல் 931 ( திருவெஞ்சமாக்கூடல் )
ராகம் - சுத்த தன்யாஸி தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகிட-1 1/2, தக-1, தகதிமி-2, தகதிமிதக-3
தந்தனாத் தானத் ...... தனதான
வண்டுபோற் சாரத் ...... தருள்தேடி
மந்திபோற்ள காலப் ...... பிணிசாடிச்
செண்டுபோற் பாசத் ...... துடனாடிச்
சிந்தைமாய்த் தேசித் ...... தருள்வாயே
தொண்டராற் காணப் ...... பெறுவோனே
துங்கவேற் கானத் ...... துறைவோனே
மிண்டராற் காணக் ...... கிடையானே
வெஞ்சமாக் கூடற் ...... பெருமாளே.
பாடல் 932 ( திருப்பாண்டிக்கொடுமுடி )
ராகம் - மாண்ட் தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)
தகதிமி-2, தகிட-1 1/2
தனதனத் தனனத் ...... தனதான
இருவினைப் பிறவிக் ...... கடல்மூழ்கி
இடர்கள்பட் டலையப் ...... புகுதாதே
திருவருட் கருணைப் ...... ப்ரபையாலே
திரமெனக் கதியைப் ...... பெறுவேனோ
அரியயற் கறிதற் ...... கரியானே
அடியவர்க் கெளியற் ...... புதநேயா
குருவெனச் சிவனுக் ...... கருள்போதா
கொடுமுடிக் குமரப் ...... பெருமாளே.
பாடல் 933 ( திருப்பாண்டிக்கொடுமுடி )
ராகம் - ....; தாளம் - தாந்தத் தனதன தாந்தத் தனதன
தாந்தத் தனதன ...... தனதான
காந்தட் கரவளை சேந்துற் றிடமத
காண்டத் தரிவைய ...... ருடனூசி
காந்தத் துறவென வீழ்ந்தப் படிகுறி
காண்டற் கநுபவ ...... விதமேவிச்
சாந்தைத் தடவிய கூந்தற் கருமுகில்
சாய்ந்திட் டயில்விழி ...... குழைமீதே
தாண்டிப் பொரவுடை தீண்டித் தனகிரி
தாங்கித் தழுவுத ...... லொழியேனோ
மாந்தர்க் கமரர்கள் வேந்தற் கவரவர்
வாஞ்சைப் படியருள் ...... வயலு¡ரா
வான்கிட் டியபெரு மூங்கிற் புனமிசை
மான்சிற் றடிதொழு ...... மதிகாமி
பாந்தட் சடைமுடி யேந்திக் குலவிய
பாண்டிக் கொடுமுடி ...... யுடையாரும்
பாங்கிற் பரகுரு வாங்கற் பனையொடு
பாண்சொற் பரவிய ...... பெருமாளே.
பாடல் 934 ( சேலம் )
ராகம் - கானடா தாளம் - ஆதி
தனதன தானத் தனதன தானத்
தனதன தானத் ...... தனதான
பரிவுறு நாரற் றழல்மதி வீசச்
சிலைபொரு காலுற் ...... றதனாலே
பனிபடு சோலைக் குயிலது கூவக்
குழல்தனி யோசைத் ...... தரலாலே
மருவியல் மாதுக் கிருகயல் சோரத்
தனிமிக வாடித் ...... தளராதே
மனமுற வாழத் திருமணி மார்பத்
தருள்முரு காவுற் ...... றணைவாயே
கிரிதனில் வேல்விட் டிருதொளை யாகத்
தொடுகும ராமுத் ...... தமிழோனே
கிளரொளி நாதர்க் கொருமக னாகித்
திருவளர் சேலத் ...... தமர்வோனே
பொருகிரி சூரக் கிளையது மாளத்
தனிமயி லேறித் ...... திரிவோனே
புகர்முக வேழக் கணபதி யாருக்
கிளையவி நோதப் ...... பெருமாளே.
பாடல் 935 ( ராஜபுரம் )
ராகம் - ....; தாளம் - தந்த தானன தத்தன, தந்த தானன தத்தன
தந்த தானன தத்தன ...... தனதான
சங்கு வார்முடி பொற்கழல் பொங்கு சாமரை கத்திகை
தண்டு மாகரி பெற்றவன் ...... வெகுகோடிச்
சந்த பாஷைகள் கற்றவன் மந்த்ர வாதிச துர்க்கவி
சண்ட மாருத மற்றுள ...... கவிராஜப்
பங்கி பாலச ரச்வதி சங்க நூல்கள்வி தித்தப்ர
பந்த போதமு ரைத்திடு ...... புலவோன்யான்
பண்டை மூவெழு வர்க்கெதிர் கண்ட நீயுமெ னச்சில
பஞ்ச பாதக ரைப்புகழ் ...... செயலாமோ
வெங்கை யானை வனத்திடை துங்க மாமுத லைக்குவெ
ருண்டு மூலமெ னக்கரு ...... டனிலேறி
விண்ப ராவஅ டுக்கிய மண்ப ராவஅ தற்குவி
தம்ப ராவஅ டுப்பவன் ...... மருகோனே
கொங்க ணாதித ரப்பெறு கொங்கி னூடுசு கித்திடு
கொங்கின் வீரக ணப்ரிய ...... குமராபொற்
கொங்கு லாவுகு றக்கொடி கொங்கை யேதழு விச்செறி
கொங்கு ராஜபு ரத்துறை ...... பெருமாளே.
பாடல் 936 ( விஜயமங்கலம் )
ராகம் - ......; தாளம் - தனன தந்தனத் தானான தானன
தனன தந்தனத் தானான தானன
தனன தந்தனத் தானான தானன ...... தனதான
கலக சம்ப்ரமத் தாலேவி லோசன
மலர்சி வந்திடப் பூணார மானவை
கழல வண்டெனச் சா¡£ரம் வாய்விட ...... அபிராமக்
கனத னங்களிற் கோமாள மாகியெ
பலந கம்படச் சீரோடு பேதக
கரண முஞ்செய்துட் பாலு¡று தேனித ...... ழமுதூறல்
செலுவி மென்பணைத் தோளோடு தோள்பொர
நிலைகு லைந்திளைத் தேராகு மாருயிர்
செருகு முந்தியிற் போய்வீழு மாலுட ...... னநுராகந்
தெரிகு மண்டையிட் டாராத சேர்வையி
லுருகி மங்கையர்க் காளாகி யேவல்செய்
திடினு நின்கழற் சீர்பாத நானினி ...... மறவேனே
உ லக கண்டமிட் டாகாச மேல்விரி
சலதி கண்டிடச் சேராய மாமவ
ருடன்ம டிந்திடக் கோபாலர் சேரியில் ...... மகவாயும்
உ ணர்சி றந்தசக் ராதார நாரணன்
மருக மந்திரக் காபாலி யாகிய
உ ரக கங்கணப் பூதேசர் பாலக ...... வயலு¡ரா
விலைத ருங்கொலைப் போர்வேடர் கோவென
இனையு மங்குறப் பாவாய்வி யாகுலம்
விடுவி டென்றுகைக் கூர்வேலை யேவிய ...... இளையோனே
விறல்சு ரும்புநற் க்¡£தேசி பாடிய
விரைசெய் பங்கயப் பூவோடை மேவிய
விஜய மங்கலத் தேவாதி தேவர்கள் ...... பெருமாளே.
பாடல் 937 ( சிங்கை - காங்கேயம் - )
ராகம் - ....; தாளம் - தந்ததன தந்த தந்ததன தந்த
தந்ததன தந்த ...... தனதான
சஞ்சரியு கந்து நின்றுமுரல் கின்ற
தண்குவளை யுந்து ...... குழலாலுந்
தண்டரள தங்க மங்கமணி கின்ற
சண்டவித கும்ப ...... கிரியாலும்
நஞ்சவினை யொன்றி தஞ்சமென வந்து
நம்பிவிட நங்கை ...... யுடனாசை
நண்புறெனை யின்று நன்றில்வினை கொன்று
நன்றுமயில் துன்றி ...... வரவேணும்
கஞ்சமலர் கொன்றை தும்பைமகிழ் விஞ்சி
கந்திகமழ் கின்ற ...... கதிர்வேலா
கன்றிடுபி ணங்கள் தின்றிடுக ணங்கள்
கண்டுபொரு கின்ற ...... கதிர்வேலா
செஞ்சொல்புனை கின்ற எங்கள்குற மங்கை
திண்குயம ணைந்த ...... திருமார்பா
செண்பகமி லங்கு மின்பொழில்சி றந்த
சிங்கையில மர்ந்த ...... பெருமாளே.
பாடல் 938 ( சிங்கை - காங்கேயம் )
ராகம் - ....; தாளம் - தந்ததன தான தந்ததன தான
தந்ததன தான ...... தனதான
சந்திதொறு நாண மின்றியகம் வாடி
உ ந்திபொரு ளாக ...... அலைவேனோ
சங்கைபெற நாளு மங்கமுள மாதர்
தங்கள்வச மாகி ...... அலையாமற்
சுந்தரம தாக எந்தன்வினை யேக
சிந்தைகளி கூர ...... அருள்வாயே
தொங்குசடை மீது திங்களணி நாதர்
மங்கைரண காளி ...... தலைசாயத்
தொந்திதிமி தோதி தந்திதிமி தாதி
என்றுநட மாடு ...... மவர்பாலா
துங்கமுள வேடர் தங்கள்குல மாதை
மங்களம தாக ...... அணைவோனே
கந்தமுரு கேச மிண்டசுரர் மாள
அந்தமுனை வேல்கொ ...... டெறிவோனே
கம்பர்கயி லாசர் மைந்தவடி வேல
சிங்கைநகர் மேவு ...... பெருமாளே.
பாடல் 939 ( பட்டாலியூர் )
ராகம் - ....; தாளம் - தனதன தனனத் தான தானன
தனதன தனனத் தான தானன
தனதன தனனத் தான தானன ...... தனதான
இருகுழை யிடறிக் காது மோதுவ
பரிமள நளினத் தோடு சீறுவ
இணையறு வினையைத் தாவி மீளுவ ...... வதிசூர
எமபடர் படைகெட் டோட நாடுவ
அமுதுடன் விடமொத் தாளை யீருவ
ரதிபதி கலைதப் பாது சூழுவ ...... முநிவோரும்
உ ருகிட விரகிற் பார்வை மேவுவ
பொருளது திருடற் காசை கூறுவ
யுகமுடி விதெனப் பூச லாடுவ ...... வடிவேல்போல்
உ யிர்வதை நயனக் காதல் மாதர்கள்
மயல்தரு கமரிற் போய்வி ழாவகை
உ னதடி நிழலிற் சேர வாழ்வது ...... மொருநாளே
முருகவிழ் தொடையைச் சூடி நாடிய
மரகத கிரணப் பீலி மாமயில்
முதுரவி கிரணச் சோதி போல்வய ...... லியில்வாழ்வே
முரண்முடி யிரணச் சூலி மாலினி
சரணெனு மவர்பற் றான சாதகி
முடுகிய கடினத் தாளி வாகினி ...... மதுபானம்
பருகினர் பரமப் போக மோகினி
அரகர வெனும்வித் தாரி யாமளி
பரிபுர சரணக் காளி கூளிகள் ...... நடமாடும்
பறையறை சுடலைக் கோயில் நாயகி
இறையோடு மிடமிட் டாடு காரணி
பயிரவி யருள்பட் டாலி யூர்வரு ...... பெருமாளே.
பாடல் 940 ( பட்டாலியூர் )
ராகம் - ....; தாளம் - தத்தான தனன தனதன தத்தான தனன தனதன
தத்தான தனன தனதன ...... தனதான
கத்தூரி யகரு ம்ருகமத வித்தார படிர இமசல
கற்பூர களப மணிவன ...... மணிசேரக்
கட்டார வடமு மடர்வன நிட்டூர கலக மிடுவன
கச்சோடு பொருது நிமிர்வன ...... தனமாதர்
கொத்தூரு நறவ மெனவத ரத்தூறல் பருகி யவரொடு
கொற்சேரி யுலையில் மெழுகென ...... வுருகாமே
கொக்காக நரைகள் வருமன மிக்காய விளமை யுடன்முயல்
குற்றேவல் அடிமை செயும்வகை ...... யருளாதோ
அத்தூர புவன தரிசன நித்தார கனக நெடுமதி
லச்சான வயலி நகரியி ...... லுறைவேலா
அச்சோவெ னவச வுவகையி லுட்சோர்த லுடைய பரவையொ
டக்காகி விரக பரிபவ ...... மறவேபார்
பத்தூரர் பரவ விரைவுசெல் மெய்த்தூதர் விரவ வருடரு
பற்றாய பரம பவுருஷ ...... குருநாதா
பச்சோலை குலவு பனைவளர் மைச்சோலை மயில்கள் நடமிடு
பட்டாலி மருவு மமரர்கள் ...... பெருமாளே.
பாடல் 941 ( பட்டாலியூர் )
ராகம் - ....; தாளம் - தந்தத்தத் தான தனதன தந்தத்தத் தான தனதன
தந்தத்தத் தான தனதன ...... தனதான
சங்கைக்கத் தோடு சிலுகிடு சங்கிச்சட் கோல சமயிகள்
சங்கற்பித் தோதும் வெகுவித ...... கலைஞானச்
சண்டைக்குட் கேள்வி யலமல மண்டற்குப் பூசை யிடுமவர்
சம்பத்துக் கேள்வி யலமல ...... மிமவானின்
மங்கைக்குப் பாக னிருடிக ளெங்கட்குச் சாமி யெனவடி
வந்திக்கப் பேசி யருளிய ...... சிவநூலின்
மந்த்ரப்ரஸ்த் தார தரிசன யந்த்ரத்துக் கேள்வி யலமலம்
வம்பிற்சுற் றாது பரகதி ...... யருள்வாயே
வெங்கைச்சுக் ¡£பர் படையையி லங்கைக்குப் போக விடவல
வென்றிச்சக் ரேசன் மிகமகிழ் ...... மருகோனே
வெண்பட்டுப் பூணல் வனகமு கெண்பட்டுப் பாளை விரிபொழில்
விஞ்சிட்டுச் சூழ வெயில்மறை ...... வயலு¡ரா
கொங்கைக்கொப் பாகும் வடகிரி செங்கைக்கொப் பாகு நறுமலர்
கொண்டைக்கொப் பாகு முகிலென ...... வனமாதைக்
கும்பிட்டுக் காதல் குனகிய இன்பச்சொற் பாடு மிளையவ
கொங்கிற்பட் டாலி நகருறை ...... பெருமாளே.
பாடல் 942 ( திருமுருகன்பூண்டி )
ராகம் - துர்கா தாளம் - சதுஸ்ர ஜம்பை
தனதனனந் தாந்தத் ...... தனதான
அவசியமுன் வேண்டிப் ...... பலகாலும்
அறிவினுணர்ந் தாண்டுக் ...... கொருநாளில்
தவசெபமுந் தீண்டிக் ...... கனிவாகிச்
சரணமதும் புண்டற் ...... கருள்வாயே
சவதமொடுந் தாண்டித் ...... தக்ருர்வாய்
சடுசமயங் காண்டற் ...... கரியானே
சிவகுமரன் பீண்டிற் ...... பெயரானே
திருமுருகன் பூண்டிப் ...... பெருமாளே.
பாடல் 943 ( அவிநாசி )
ராகம் - காபி தாளம் - கண்டசாபு (2 1/2)
தனதானத் தனதான தனதானத் ...... தனதான
இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ...... குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ...... தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ...... குமரேசா
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ...... பெருமாளே.
பாடல் 944 ( அவிநாசி )
ராகம் - ....; தாளம் - தந்தத்தத் தானன தானன
தந்தத்தத் தானன தானன
தந்தத்தத் தானன தானன ...... தனதான
பந்தப்பொற் பாரப யோதர
முந்திற் றாடகை மேகலை
பண்புற்றுத் தாளொடு மேவிய ...... துகிலோடே
பண்டெச்சிற் சேரியில் வீதியில்
கண்டிச்சிச் சாரொடு மேவியெ
பங்குக்கைக் காசுகொள் வேசியர் ...... பனிநீர்தோய்
கொந்துச்சிப் பூவணி கோதையர்
சந்தச்செத் தாமரை வாயினர்
கும்பிட்டுப் பாணியர் வீணிய ...... ரநுராகங்
கொண்டுற்றுப் பாயலின் மூழ்கினு
மண்டிச்செச் சேயென வானவர்
கொஞ்சுற்றுத் தாழ்பத தாமரை ...... மறவேனே
அந்தத் தொக் காதியு மாதியும்
வந்திக்கத் தானவர் வாழ்வுறும்
அண்டத்துப் பாலுற மாமணி ...... யொளிவீசி
அங்கத்தைப் பாவைசெய் தாமென
சங்கத்துற் றார்தமி ழோதவு
வந்துக்கிட் டார்கழு வேறிட ...... வொருகோடிச்
சந்தச்செக் காளநி சாசரர்
வெந்துக்கத் தூளிப டாமெழ
சண்டைக்கெய்த் தாரம ராபதி ...... குடியேறத்
தங்கச்செக் கோலசை சேவக
கொங்கிற்றொக் காரவி நாசியில்
தண்டைச்சிக் காரயில் வேல்விடு ...... பெருமாளே.
பாடல் 945 ( அவிநாசி )
ராகம் - முகாரி தாளம் - ஆதி
தனத்த தந்தன தானன தானன
தனத்த தந்தன தானன தானன
தனத்த தந்தன தானன தானன ...... தனதான
மனத்தி ரைந்தெழு மீளையு மேலிட
கறுத்த குஞ்சியு மேநரை யாயிட
மலர்க்க ணண்டிரு ளாகியு மேநடை ...... தடுமாறி
வருத்த முந்தர தாய்மனை யாள்மக
வெறுத்தி டங்கிளை யோருடன் யாவரும்
வசைக்கு றுஞ்சொலி னால்மிக வேதின ...... நகையாட
எனைக்க டந்திடு பாசமு மேகொடு
சினத்து வந்தெதிர் சூலமு மேகையி
லெடுத்தெ றிந்தழல் வாய்விட வேபய ...... முறவேதான்
இழுக்க வந்திடு தூதர்க ளானவர்
பிடிக்கு முன்புன தாள்மல ராகிய
இணைப்ப தந்தர வேமயில் மீதினில் ...... வரவேணும்
கனத்த செந்தமி ழால்நினை யேதின
நினைக்க வுந்தரு வாயுன தாரருள்
கருத்தி ருந்துறை வாயென தாருயிர் ...... துணையாகக்
கடற்ச லந்தனி லேயொளி சூரனை
யுடற்ப குந்திரு கூறென வேயது
கதித்தெ ழுந்தொரு சேவலு மாமயில் ...... விடும்வேலா
அனத்த னுங்கம லாலய மீதுறை
திருக்க லந்திடு மாலடி நேடிய
அரற்க ரும்பொருள் தானுரை கூறிய ...... குமரேசா
அறத்தை யுந்தரு வோர்கன பூசுரர்
நீனைத்தி னந்தொழு வாரம ராய்புரி
யருட்செ றிந்தவி நாசியுள் மேவிய ...... பெருமாளே.
பாடல் 946 ( திருப்புக்கொளியூர் )
ராகம் - தேஷ் தாளம் - ஸங்கீர்ணசாபு (4 1/2)
(எடுப்பு - 3/4 இடம்)
தகதிமி-2, தகதகிட-2 1/2
தத்தன தானான தத்தன தானான
தத்தன தானான ...... தனதான
பக்குவ வாசார லட்சண சாகாதி
பட்சண மாமோன ...... சிவயோகர்
பத்தியி லாறாறு தத்துவ மேல்வீடு
பற்றுநி ராதார ...... நிலையாக
அக்கண மேமாய துர்க்குணம் வேறாக
அப்படை யேஞான ...... வுபதேசம்
அக்கற வாய்பேசு சற்குரு நாதாவு
னற்புத சீர்பாத ...... மறவேனே
உ க்கிர வீராறு மெய்ப்புய னேநீல
வுற்பல வீராசி ...... மணநாற
ஒத்தநி லாவீசு நித்தில நீராவி
யுற்பல ராசீவ ...... வயலு¡ரா
பொக்கமி லாவீர விக்ரம மாமேனி
பொற்ப்ரபை யாகார ...... அவிநாசிப்
பொய்க்கலி போமாறு மெய்க்கருள் சீரான
புக்கொளி யூர்மேவு ...... பெருமாளே.
பாடல் 947 ( திருப்புக்கொளியூர் )
ராகம் - ....; தாளம் - தனத்தத்தன தானன தானன
தனத்தத்தன தானன தானன
தனத்தத்தன தானன தானன தந்ததான
மதப்பட்டவி சாலக போலமு
முகப்பிற்சன வாடையு மோடையு
மருக்கற்புர லேபல லாடமு ...... மஞ்சையாரி
வயிற்றுக்கிடு சீகர பாணியு
மிதற்செக்கர்வி லோசன வேகமு
மணிச்சத்தக டோரபு ரோசமு ...... மொன்றுகோல
விதப்பட்டவெ ளானையி லேறியு
நிறைக்கற்பக நீழலி லாறியும்
விஷத்துர்க்கன சூளிகை மாளிகை ...... யிந்த்ரலோகம்
விளக்கச்சுரர் சூழ்தர வாழ்தரு
பிரப்புத்வகு மாரசொ ரூபக
வெளிப்பட்டெனை யாள்வய லு¡ரிலி ...... ருந்துவாழ்வே
இதப்பட்டிட வேகம லாலய
வொருத்திக்கிசை வானபொ னாயிர
மியற்றப்பதி தோறுமு லாவிய ...... தொண்டர்தாள
இசைக்கொக்கவி ராசத பாவனை
யுளப்பெற்றொடு பாடிட வேடையி
லிளைப்புக்கிட வார்மறை யோனென ...... வந்துகானிற்
றிதப்பட்டெதி ரேபொதி சோறினை
யவிழ்த்திட்டவி நாசியி லேவரு
திசைக்குற்றச காயனு மாகிம ...... றைந்துபோமுன்
செறிப்பித்த கராவதின் வாய்மக
வழைப்பித்தபு ராணக்ரு பாகர
திருப்புக்கொளி யூருடை யார்புகழ் ...... தம்பிரானே.
பாடல் 948 ( திருப்புக்கொளியூர் )
ராகம் - ....; தாளம் - தனத்தத்தன தான தான தானன
தனத்தத்தன தான தான தானன
தனத்தத்தன தான தான தானன ...... தந்ததான
வனப்புற்றெழு கேத மேவு கோகிலம்
அழைக்கப்பொரு மார னேவ தாமலர்
மருத்துப்பயில் தேரி லேறி மாமதி ...... தொங்கலாக
மறுத்துக்கடல் பேரி மோத வேயிசை
பெருக்கப்படை கூடி மேலெ ழாவணி
வகுத்துக்கொடு சேம மாக மாலையில் ...... வந்துகாதிக்
கனக்கப்பறை தாய ளாவ நீள்கன
கருப்புச்சிலை காம ரோவில் வாளிகள்
களித்துப்பொர வாசம் வீசு வார்குழல் ...... மங்கைமார்கள்
கலைக்குட்படு பேத மாகி மாயும
துனக்குப்ரிய மோக்ரு பாக ராஇது
கடக்கப்படு நாம மான ஞானம ...... தென்றுசேர்வேன்
புனத்திற்றினை காவ லான காரிகை
தனப்பொற்குவ டேயு மோக சாதக
குனித்தப்பிறை சூடும் வேணி நாயகர் ...... நன்குமாரா
பொறைக்குப்புவி போலு நீதி மாதவர்
சிறக்கத்தொகு பாசி சோலை மாலைகள்
புயத்துற்றணி பாவ சூர னாருயிர் ...... கொண்டவேலா
சினத்துக்கடி வீசி மோது மாகட
லடைத்துப்பிசி தாச னாதி மாமுடி
தெறிக்கக்கணை யேவு வீர மாமனும் ...... உ ந்திமீதே
செனித்துச்சதுர் வேத மோது நாமனு
மதித்துப்புகழ் சேவ காவி ழாமலி
திருப்புக்கொளி மேவு தேவர்கள் ...... தம்பிரானே.
பாடல் 949 ( §ப்ருர் )
ராகம் - சாருகேசி தாளம் - ஸங்கீர்ணசாபு (4 1/2)
தகதிமிதக-3, தகிட-1 1/2
தானாத் தனதான தானாத் ...... தனதான
தீராப் பிணிதீர சீவாத் ...... துமஞான
ஊராட் சியதான ஓர்வாக் ...... கருள்வாயே
பாரோர்க் கிறைசேயே பாலாக் ...... கிரிராசே
போராற் பெரியோனே §ப்ருர்ப் ...... பெருமாளே.
பாடல் 950 ( §ப்ருர் )
ராகம் - ....; தாளம் - தத்த தானன தத்த தானன
தானா தானா தானா தானா ...... தனதான
மைச்ச ரோருக நச்சு வாள்விழி
மானா ரோடே நானார் நீயா ...... ரெனுமாறு
வைத்த போதக சித்த யோகியர்
வாணாள் கோணாள் வீணாள் காணா ...... ரதுபோலே
நிச்ச மாகவு மிச்சை யானவை
நேரே தீரா யூரே பேரே ...... பிறவேயென்
நிட்க ராதிகண் முற்பு காதினி
நீயே தாயாய் நாயேன் மாயா ...... தருள்வாயே
மிச்ச ரோருக வச்ர பாணியன்
வேதா வாழ்வே நாதா தீதா ...... வயலு¡ரா
வெற்பை யூடுரு வப்ப டாவரு
வேலா சீலா பாலா காலா ...... யுதமாளி
பச்சை மாமயில் மெச்ச வேறிய
பாகா சூரா வாகா போகா ...... தெனும்வீரா
பட்டி யாள்பவர் கொட்டி யாடினர்
பர்ரு ராசூழ் §ப்ரு ராள்வார் ...... பெருமாளே.
பாடல் 951 ( கொடும்பாளுர் )
ராகம் - ....; தாளம் - தனதனனந் தத்தத் தனதனனந் தத்தத்
தனதனனந் தத்தத் ...... தனதான
கலைஞரெணுங் கற்புக் கலியுகபந் தத்துக்
கடனபயம் பட்டுக் ...... கசடாகுங்
கருமசடங் கச்சட் சமயிகள்பங் கிட்டுக்
கலகலெனுங் கொட்புற் ...... றுடன்மோதும்
அலகில்பெருந் தர்க்கப் பலகலையின் பற்றற்
றரவியிடந் தப்பிக் ...... குறியாத
அறிவையறிந் தப்பற் றதனினொடுஞ் சற்றுற்
றருள்வசனங் கிட்டப் ...... பெறலாமோ
கொலைஞரெனுங் கொச்சைக் குறவரிளம் பச்சைக்
கொடிமருவுஞ் செச்சை ...... புயமார்பா
கொடியநெடுங் கொக்குக் குறுகவுணன் பட்டுக்
குரைகடல்செம் பச்சக் ...... கரவாளச்
சிலைபகஎண் டிக்குத் திகிரிகளும் பத்துத்
திசைகளினுந் தத்தச் ...... செகமேழுந்
திருகுசிகண் டிப்பொற் குதிரைவிடுஞ் செட்டித்
திறல கொடும் பைக்குட் ...... பெருமாளே.
பாடல் 952 ( கீரனூர் )
ராகம் - ...; தாளம் - தான தானன தத்தன தத்தன
தான தானன தத்தன தத்தன
தான தானன தத்தன தத்தன ...... தனதான
ஈர மோடுசி ரித்துவ ருத்தவும்
நாத கீதந டிப்பிலு ருக்கவும்
ஏவ ராயினு மெத்திய ழைக்கவு ...... மதராஜன்
ஏவின் மோதுக ணிட்டும ருட்டவும்
வீதி மீதுத லைக்கடை நிற்கவும்
ஏறு மாறும னத்தினி னைக்கவும் ...... விலைகூறி
ஆர பாரத னத்தைய சைக்கவு
மாலை யோதிகு லைத்துமு டிக்கவும்
ஆடை சோரஅ விழ்த்தரை சுற்றவும் ...... அதிமோக
ஆசை போல்மன இஷ்டமு ரைக்கவு
மேல்வி ழாவெகு துக்கம்வி ளைக்கவும்
ஆன தோதக வித்தைகள் கற்பவ ...... ருறவாமோ
பார மேருப ருப்பத மத்தென
நேரி தாகஎ டுத்துட னட்டுமை
பாக ராரப டப்பணி சுற்றிடு ...... கயிறாகப்
பாதி வாலிபி டித்திட மற்றொரு
பாதி தேவர்பி டித்திட லக்ஷ¤மி
பாரி சாதமு தற்பல சித்திகள் ...... வருமாறு
கீர வாரிதி யைக்கடை வித்ததி
காரி யாயமு தத்தைய ளித்தக்ரு
பாளு வாகிய பச்சுரு வச்சுதன் ...... மருகோனே
கேடி லாவள கைப்பதி யிற்பல
மாட கூடம லர்ப்பொழில் சுற்றிய
கீர னுருறை சத்தித ரித்தருள் ...... பெருமாளே.
பாடல் 953 ( குளந்தைநகர் )
ராகம் - ....; தாளம் - தனந்த தானனத் தனதன ...... தனதான
தரங்க வார்குழற் றநுநுதல் ...... விழியாலம்
தகைந்த மாமுலைத் துடியிடை ...... மடமாதர்
பரந்த மாலிருட் படுகுழி ...... வசமாகிப்
பயந்து காலனுக் குயிர்கொடு ...... தவியாமல்
வரந்த ராவிடிற் பிறரெவர் ...... தருவாரே
மகிழ்ந்து தோகையிற் புவிவலம் ...... வருவோனே
குரும்பை மாமுலைக் குறமகண் ...... மணவாளா
குளந்தை மாநகர்த் தளியுறை ...... பெருமாளே.
பாடல் 954 ( தனிச்சயம் )
ராகம் - ....; தாளம் - தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்
தனத்தனத் தனத்தனத் ...... தனதான
இலைச்சுருட் கொடுத்தணைத் தலத்திருத் திமட்டைகட்
கிதத்தபுட் குரற்கள்விட் ...... டநுராகம்
எழுப்பிமைக் கயற்கணைக் கழுத்தைமுத் தமிட்டணைத்
தெடுத்திதழ்க் கடித்துரத் ...... திடைதாவி
அலைச்சலுற் றிலச்சையற் றரைப்பைதொட் டுழைத்துழைத்
தலக்கணுற் றுயிர்க்களைத் ...... திடவேதான்
அறத்தவித் திளைத்துறத் தனத்தினிற் புணர்ச்சிபட்
டயர்க்குமிப் பிறப்பினித் ...... தவிராதோ
கொலைச்செருக் கரக்கரைக் கலக்குமிக் ககுக்குடக்
கொடித்திருக் கரத்தபொற் ...... பதிபாடுங்
குறித்தநற் றிருப்புகழ்ப் ப்ரபுத்துவக் கவித்துவக்
குருத்துவத் தெனைப்பணித் ...... தருள்வோனே
தலைச்சுமைச் சடைச்சிவற் கிலக்கணத் திலக்கியத்
தமிழ்த்ரயத் தகத்தியற் ...... கறிவோதுஞ்
சமர்த்தரிற் சமர்த்தபச் சிமத்திசைக் குளுத்தமத்
தனிச்சயத் தினிற்பிளைப் ...... பெருமாளே.
பாடல் 955 ( தனிச்சயம் )
ராகம் - சங்கரானந்தப்ரியா தாளம் - ஆதி
தனத்த தந்தன தனதன தந்தத்
தனத்த தந்தன தனதன தந்தத்
தனத்த தந்தன தனதன தந்தத் ...... தனதான
உ ரைத்த சம்ப்ரம வடிவு திரங்கிக்
கறுத்த குஞ்சியும் வெளிறிய பஞ்சொத்
தொலித்தி டுஞ்செவி செவிடுற வொண்கட் ...... குருடாகி
உ ரத்த வெண்பலு நழுவிம தங்கெட்
டிரைத்து கிண்கிணெ னிருமலெ ழுந்திட்
டுளைப்பு டன்தலை கிறுகிறெ னும்பித் ...... தமுமேல்கொண்
டரத்த மின்றிய புழுவினும் விஞ்சிப்
பழுத்து ளஞ்செயல் வசனம் வரம்பற்
றடுத்த பெண்டிரு மெதிர்வர நிந்தித் ...... தனைவோரும்
அசுத்த னென்றிட வுணர்வத குன்றித்
துடிப்ப துஞ்சிறி துளதில தென்கைக்
கவத்தை வந்துயி ரலமரு மன்றைக் ...... கருள்வாயே
திரித்தி ரிந்திரி ரிரிரிரி ரின்றிட்
டுடுட்டு டுண்டுடு டுடுடுடு டுண்டுட்
டிகுட்டி குண்டிகு டிகுடிகு டிண்டிட் ...... டிகுதீதோ
திமித்தி மிந்திமி திமிதிமி யென்றிட்
டிடக்கை துந்துமி முரசு முழங்கச்
செருக்க ளந்தனில் நிருதர் தயங்கச் ...... சிலபேய்கள்
தரித்து மண்டையி லுதிர மருந்தத்
திரட்ப ருந்துகள் குடர்கள் பிடுங்கத்
தருக்கு சம்புகள் நிணமது சிந்தப் ...... பொரும்வேலா
தடச்சி கண்டியில் வயலியி லன்பைப்
படைத்த நெஞ்சினி லியல்செறி கொங்கிற்
றனிச்ச யந்தனி லினிதுறை கந்தப் ...... பெருமாளே.
பாடல் 956 ( மதுரை )
ராகம் - ....; தாளம் - தனதன தனனத் தந்த தானன
தனதன தனனத் தந்த தானன
தனதன தனனத் தந்த தானன ...... தந்ததான
அலகில வுணரைக் கொன்ற தோளென
மலைதொளை யுருவச் சென்ற வேலென
அழகிய கனகத் தண்டை சூழ்வன ...... புண்டா£க
அடியென முடியிற் கொண்ட கூதள
மெனவன சரியைக் கொண்ட மார்பென
அறுமுக மெனநெக் கென்பெ லாமுரு ...... கன்புறாதோ
கலகல கலெனக் கண்ட பேரொடு
சிலுகிடு சமயப் பங்க வாதிகள்
கதறிய வெகுசொற் பங்க மாகிய ...... பொங்களாவுங்
கலைகளு மொழியப் பஞ்ச பூதமு
மொழியுற மொழியிற் றுஞ்சு றாதன
கரணமு மொழியத் தந்த ஞானமி ...... ருந்தவாறென்
இலகுக டலைகற் கண்டு தேனொடு
மிரதமு றுதினைப் பிண்டி பாகுடன்
இனிமையி னுகருற் றெம்பி ரானொரு ...... கொம்பினாலே
எழுதென மொழியப் பண்டு பாரதம்
வடகன சிகரச் செம்பொன் மேருவில்
எழுதிய பவளக் குன்று தாதையை ...... யன்றுசூழ்
வலம்வரு மளவிற் சண்ட மாருத
விசையினும் விசையுற் றெண்டி சாமுக
மகிதல மடையக் கண்டு மாசுண ...... முண்டுலாவு
மரகத கலபச் செம்புள் வாகன
மிசைவரு முருகச் சிம்பு ளேயென
மதுரையில் வழிபட் டும்ப ரார்தொழு ...... தம்பிரானே.
பாடல் 957 ( மதுரை )
ராகம் - நீலாம்பரி தாளம் - ஆதி 2 களை
(எடுப்பு - 3/4 இடம்)
தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த ...... தனதான
ஆனைமுக வற்கு நேரிளைய பத்த
ஆறுமுக வித்த ...... கமரேசா
ஆதியர னுக்கும் வேதமுதல் வற்கும்
ஆரணமு ரைத்த ...... குருநாதா
தானவர் குலத்தை வாள்கொடு துணித்த
சால்சதுர் மிகுத்த ...... திறல்வீரா
தாளிணைக ளுற்று மேவியப தத்தில்
வாழ்வொடு சிறக்க ...... அருள்வாயே
வானெழு புவிக்கு மாலுமய னுக்கும்
யாவரொரு வர்க்கு ...... மறியாத
மாமதுரை சொக்கர் மாதுமை களிக்க
மாமயில் நடத்து ...... முருகோனே
தேனெழு புனத்தில் மான்விழி குறத்தி
சேரமரு வுற்ற ...... திரள்தோளா
தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை
வேல்கொடு தணித்த ...... பெருமாளே.
பாடல் 958 ( மதுரை )
ராகம் - தேவ மனோஹரி தாளம் - ஆதி
தனன தனந்தன தனன தனந்தன
தனன தனந்தன ...... தனதான
பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய
பவனி வரும்படி ...... யதனாலே
பகர வளங்களு நிகர விளங்கிய
இருளை விடிந்தது ...... நிலவாலே
வரையினி லெங்கணு முலவி நிறைந்தது
வரிசை தரும்பத ...... மதுபாடி
வளமொடு செந்தமி ழுரைசெய அன்பரு
மகிழ வரங்களு ...... மருள்வாயே
அரஹர சுந்தர அறுமுக என்றுனி
அடியர் பணிந்திட ...... மகிழ்வோனே
அசலநெ டுங்கொடி அமையுமை தன்சுத
குறமக ளிங்கித ...... மணவாளா
கருதரு திண்புய சரவண குங்கும
களபம ணிந்திடு ...... மணிமார்பா
கனக மிகும்பதி மதுரை வளம்பதி
யதனில் வளர்ந்தருள் ...... பெருமாளே.
பாடல் 959 ( மதுரை )
ராகம் - ....; தாளம் - தனத்த தாத்தன தனதன தனதன
தனத்த தாத்தன தனதன தனதன
தனத்த தாத்தன தனதன தனதன ...... தனதனத் தனதான
பழிப்பர் வாழ்த்துவர் சிலசில பெயர்தமை
ஒருத்தர் வாய்ச்சுரு ளொருவர்கை யுதவுவர்
பணத்தை நோக்குவர் பிணமது தழுவுவர் ...... அளவளப் பதனாலே
படுக்கை வீட்டுனு ளவுஷத முதவுவர்
அணைப்பர் கார்த்திகை வருதென வுறுபொருள்
பறிப்பர் மாத்தையி லொருவிசை வருகென ...... அவரவர்க் குறவாயே
அழைப்ப ராஸ்திகள் கருதுவ ரொருவரை
முடிக்கி யோட்டுவ ரழிகுடி யரிவையர்
அலட்டி னாற்பிணை யெருதென மயலெனு ...... நரகினிற் சுழல்வேனோ
அவத்த மாய்ச்சில படுகுழி தனில்விழும்
விபத்தை நீக்கியு னடியவ ரருடனெனை
அமர்த்தி யாட்கொள மனதினி லருள்செய்து ...... கதிதனைத் தருவாயே
தழைத்த சாத்திர மறைபொரு ளறிவுள
குருக்கள் போற்சிவ நெறிதனை யடைவொடு
தகப்ப னார்க்கொரு செவிதனி லுரைசெய்த ...... முருகவித் தகவேளே
சமத்தி னாற்புகழ் சனகியை நலிவுசெய்
திருட்டு ராக்கத னுடலது துணிசெய்து
சயத்த யோத்தியில் வருபவ னரிதிரு ...... மருமகப் பரிவோனே
செழித்த வேற்றனை யசுரர்க ளுடலது
பிளக்க வோச்சிய பிறகம ரர்கள்பதி
செலுத்தி யீட்டிய சுரபதி மகள்தனை ...... மணமதுற் றிடுவோனே
திறத்தி னாற்பல சமணரை யெதிரெதிர்
கழுக்க ளேற்றிய புதுமையை யினிதொடு
திருத்த மாய்ப்புகழ் மதுரையி லுறைதரும் ...... அறுமுகப் பெருமாளே.
பாடல் 960 ( மதுரை )
ராகம் - ....; தாளம் - தான தானதன தத்ததன தத்ததன
தான தானதன தத்ததன தத்ததன
தான தானதன தத்ததன தத்ததன ...... தத்ததான
கீத வாசனைம லர்க்குழல்பி லுக்கிமுக
மாய வேல்விழிபு ரட்டிநகை முத்தமெழ
தேமல் மார்பினிள பொற்கிரிப ளப்பளென ...... தொங்கலாரஞ்
சேரு மோவியமெ னச்சடமி னுக்கிவெகு
வாசை நேசமும்வி ளைத்துஇடை யுற்றவரி
சேலை காலில்விழ விட்டுநடை யிட்டுமயி ...... லின்கலாபச்
சாதி யாமெனவெ ருட்டிநட மிட்டுவலை
யான பேர்தமையி ரக்கவகை யிட்டுகொடி
சாக நோய்பிணிகொ டுத்திடர்ப டுத்துவர்கள் ...... பங்கினூடே
தாவி மூழ்கிமதி கெட்டவல முற்றவனை
பாவ மானபிற விக்கடலு ழப்பவனை
தாரு லாவுபத பத்தியிலி ருத்துவது ...... மெந்தநாளோ
வாத வூரனைம தித்தொருகு ருக்களென
ஞான பாதம்வெளி யிட்டுநரி யிற்குழுவை
வாசி யாமெனந டத்துவகை யுற்றரச ...... னன்புகாண
மாடை யாடைதர பற்றிமுன கைத்துவைகை
யாறின் மீதுநட மிட்டுமணெ டுத்துமகிழ்
மாது வாணிதரு பிட்டுநுகர் பித்தனருள் ...... கந்தவேளே
வேத லோகர்பொனி லத்தர்தவ சித்தரதி
பார சீலமுனி வர்க்கமுறை யிட்டலற
வேலை யேவியவு ணக்குலமி றக்கநகை ...... கொண்டசீலா
வேத மீணகம லக்கணர்மெய் பச்சைரகு
ராம ¡£ணமயி லொக்கமது ரைப்பதியின்
மேவி வாழமரர் முத்தர்சிவ பத்தர்பணி ...... தம்பிரானே.
பாடல் 961 ( மதுரை )
ராகம் -....; தாளம் - தனனத் தந்தன தந்தன தனதன
தனனத் தந்தன தந்தன தனதன
தனனத் தந்தன தந்தன தனதன ...... தனதான
புருவச் செஞ்சிலை கொண்டிரு கணைவிழி
யெறியக் கொங்கையி ரண்டெனு மதகரி
பொரமுத் தந்தரு மிங்கித நயவித ...... மதனாலே
புகலச் சங்கிசை கண்டம தனிலெழ
உ ருவச் செந்துவர் தந்தத ரமுமருள்
புதுமைத் தம்பல முஞ்சில தரவரு ...... மனதாலே
பருகித் தின்றிட லஞ்சுக மெனமன
துருகிக் குங்கும சந்தன மதிவியர்
படியச் சம்ப்ரம ரஞ்சித மருள்கல ...... வியினாலே
பலருக் குங்கடை யென்றனை யிகழவு
மயலைத் தந்தரு மங்கையர் தமைவெகு
பலமிற் கொண்டிடு வண்டனு முனதடி ...... பணிவேனோ
திருவைக் கொண்டொரு தண்டக வனமிசை
வரவச் சங்கொடு வந்திடு முழையுடல்
சிதறக் கண்டக வெங்கர னொடுதிரி ...... சிரனோடு
திரமிற் றங்கிய கும்பக னொருபது
தலைபெற் றும்பரை வென்றிடு மவனொடு
சிலையிற் கொன்றமு குந்தன லகமகிழ் ...... மருகோனே
மருவைத் துன்றிய பைங்குழ லுமையவள்
சிவனுக் கன்பரு ளம்பிகை கவுரிகை
மலையத் தன்தரு சங்கரி கருணைசெய் ...... முருகோனே
வடவெற் பங்கய லன்றணி குசசர
வணையிற் றங்கிய பங்கய முகதமிழ்
மதுரைச் சங்கிலி மண்டப இமையவர் ...... பெருமாளே.
பாடல் 962 ( மதுரை )
ராகம் - ....; தாளம் - தனன தான தானத் தனந்த
தனன தான தானத் தனந்த
தனன தான தானத் தனந்த ...... தனதான
முகமெ லாநெய் பூசித் தயங்கு
நுதலின் மீதி லேபொட் டணிந்து
முருகு மாலை யோதிக் கணிந்த ...... மடமாதர்
முதிரு மார பாரத் தனங்கள்
மிசையி லாவி யாய்நெக் கழிந்து
முடிய மாலி லேபட் டலைந்து ...... பொருள்தேடிச்
செகமெ லாமு லாவிக் கரந்து
திருட னாகி யேசற் றுழன்று
திமிர னாகி யோடிப் பறந்து ...... திரியாமல்
தெளியு ஞான மோதிக் கரைந்து
சிவபு ராண நூலிற் பயின்று
செறியு மாறு தாளைப் பரிந்து ...... தரவேணும்
அகர மாதி யாமக்ஷ ரங்க
ளவனி கால்வி ணாரப் பொடங்கி
அடைய வேக ரூபத்தி லொன்றி ...... முதலாகி
அமரர் காண வேயத்த மன்றில்
அரிவை பாட ஆடிக் கலந்த
அமல நாத னார்முற் பயந்த ...... முருகோனே
சகல வேத சாமுத்ரி யங்கள்
சமய மாறு லோகத்ர யங்கள்
தரும நீதி சேர்தத் துவங்கள் ...... தவயோகம்
தவறி லாம லாளப் பிறந்த
தமிழ்செய் மாறர் கூன்வெப் பொடன்று
தவிர ஆல வாயிற் சிறந்த ...... பெருமாளே.
பாடல் 963 ( மதுரை )
ராகம் - ....; தாளம் - தானத்தன தானன தானன
தானத்தன தானன தானன
தானத்தன தானன தானன ...... தனதான
ஏலப்பனி நீரணி மாதர்கள்
கானத்தினு மேயுற வாடிடு
மீரத்தினு மேவளை சேர்கர ...... மதனாலும்
ஏமக்கிரி மீதினி லேகரு
நீலக்கய மேறிய னேரென
ஏதுற்றிடு மாதன மீதினு ...... மயலாகிச்
சோலைக்குயில் போல்மொழி யாலுமெ
தூசுற்றிடு நூலிடை யாலுமெ
தோமிற்கத லீநிக ராகிய ...... தொடையாலும்
சோமப்ரபை வீசிய மாமுக
சாலத்திலு மாகடு வேல்விழி
சூதத்தினு நானவ மேதின ...... முழல்வேனோ
ஆலப்பணி மீதினில் மாசறு
மாழிக்கிடை யேதுயில் மாதவ
னானைக்கினி தாயுத வீயருள் ...... நெடுமாயன்
ஆதித்திரு நேமியன் வாமன
னீலப்புயல் நேர்தரு மேனியன்
ஆரத்துள வார்திரு மார்பினன் ...... மருகோனே
கோலக்கய மாவுரி போர்வையர்
ஆலக்கடு வார்கள் நாயகர்
கோவிற்பொறி யால்வரு மாசுத ...... குமரேசா
கூர்முத்தமிழ் வாணர்கள் வீறிய
சீரற்புத மாநக ராகிய
கூடற்பதி மீதினில் மேவிய ...... பெருமாளே.
பாடல் 964 ( மதுரை )
ராகம் - மோஹனம் தாளம் - சதுஸ்ர ஜம்பை (7) /4 யு 0
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தனதான தானத் தனதான தனதான தானத் ...... தனதான
கலைமேவு ஞானப் பிரகாசக் கடலாடி ஆசைக் ...... கடலேறிப்
பலமாய வாதிற் பிறழாதே பதிஞான வாழ்வைத் ...... தருவாயே
மலைமேவு மாயக் குறமாதின் மனைமேவு வாலக் ...... குமரேசா
சிலைவேட சேவற் கொடியோனே திருவாணி கூடற் ...... பெருமாளே.
பாடல் 965 ( மதுரை )
ராகம் - ஷண்முகப்ரியா தாளம் - ஸங்கீர்ணசாபு (4 1/2)
தகதிமி-2, தகதகிட-2 1/2
தானத் தனதான தானத் ...... தனதான
நீதத் துவமாகி - நேமத் ...... துணையாகிப்
பூதத் தயவான - போதைத் ...... தருவாயே
நாதத் தொனியோனே - ஞானக் ...... கடலோனே
கோதற் றமுதானே - கூடற் ...... பெருமாளே.
பாடல் 966 ( மதுரை )
ராகம் - ....; தாளம் - தனதன தத்தந் தான தானன
தனதன தத்தந் தான தானன
தனதன தத்தந் தான தானன ...... தனதான
மனநினை சுத்தஞ் சூது காரிகள்
அமளிவி ளைக்குங் கூளி மூளிகள்
மதபல நித்தம் பாரி நாரிக ...... ளழகாக
வளைகுழை முத்தும் பூணும் வீணிகள்
விழலிகள் மெச்சுண் டாடி பாடிகள்
வரமிகு வெட்கம் போல வோடிகள் ...... தெருவூடே
குனகிகள் பக்ஷம் போல பேசிகள்
தனகிக ளிச்சம் பேசி கூசிகள்
குசலிகள் வர்க்கஞ் சூறை காரிகள் ...... பொருளாசைக்
கொளுவிக ளிஷ்டம் பாறி வீழ்பட
அருளமு தத்தின் சேரு மோர்வழி
குறிதனி லுய்த்துன் பாத மேறிட ...... அருள்தாராய்
தனதன தத்தந் தான தானன
டுடுடுடு டுட்டுண் டூடு டூடுடு
தகுதிகு தத்தந் தீத தோதக ...... எனபேரி
தவில்முர சத்தந் தாரை பூரிகை
வளைதுடி பொற்கொம் பார சூரரை
சமர்தனில் முற்றும் பாறி நூறிட ...... விடும்வேலா
தினைவன நித்தங் காவ லாளியள்
நகைமுறை முத்தின் பாவை மான்மகள்
திகழ்பெற நித்தங் கூடி யாடிய ...... முருகோனே
திரிபுர நக்கன் பாதி மாதுறை
யழகிய சொக்கன் காதி லோர்பொருள்
செலவரு ளித்தென் கூடல்மேவிய ...... பெருமாளே.
பாடல் 967 ( மதுரை )
ராகம் - ....; தாளம் - தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன ...... தனதான
முத்துநவ ரத்நமணி பத்திநிறை சத்தியிட
மொய்த்தகிரி முத்திதரு ...... வெனவோதும்
முக்கணிறை வாக்குமருள் வைத்தமுரு கக்கடவுள்
முப்பதுமு வர்க்கசுர ...... ரடிபேணி
பத்துமுடி தத்தும்வகை யுற்றகணை விட்டஅரி
பற்குனனை வெற்றிபெற ...... ரத்முரும்
பச்சைநிற முற்றபுய லச்சமற வைத்தபொருள்
பத்தர்மன துற்றசிவம் ...... அருள்வாயே
தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு
தெய்த்ததென தெய்தததென ...... தெனனான
திக்குவென மத்தளமி டக்கைதுடி தத்ததகு
செச்சரிகை செச்சரிகை ...... யெனஆடும்
அத்தனுட னொத்தநட நித்ரிபுவ னத்திநவ
சித்தியருள் சத்தியருள் ...... புரிபாலா
அற்பவிடை தற்பமது முற்றுநிலை பெற்றுவள
ரற்கனக பத்மபுரி ...... பெருமாளே.
பாடல் 968 ( ஸ்ரீ புருஷமங்கை )
ராகம் - ....; தாளம் - தானதன தந்த தந்தன
தானதன தந்த தந்தன
தானதன தந்த தந்தன ...... தனதான
ஆடல்மத னம்பின் மங்கைய
ராலவிழி யின்பி றங்கொளி
யாரமத லமபு கொங்கையின் ...... மயலாகி
ஆதிகுரு வின்ப தங்களை
நீதியுட னன்பு டன்பணி
யாமல்மன நைந்து நொந்துட ...... லழியாதே
வேடரென நின்ற ஐம்புல
ணாலுகர ணங்க ளின்தொழில்
வேறுபட நின்று ணர்ந்தருள் ...... பெறுமாறென்
வேடைகெட வந்து சிந்தனை
மாயையற வென்று துன்றிய
வேதமுடி வின்ப ரம்பொரு ...... ளருள்வாயே
தாடகையு ரங்க டிந்தொளிர்
மாமுனிம கஞ்சி றந்தொரு
தாழ்வறந டந்து திண்சிலை ...... முறியாவொண்
ஜாநகித னங்க லந்தபின்
ஊரில்மகு டங்க டந்தொரு
தாயர்வ சனஞ்சி றந்தவன் ...... மருகோனே
சேடன்முடி யுங்க லங்கிட
வாடைமுழு தும்ப ரந்தெழ
தேவர்கள்ம கிழ்ந்து பொங்கிட ...... நடமாடுஞ்
சீர்மயில மஞ்சு துஞ்சிய
சோலைவளர் செம்பொ னுந்திய
ஸ்ரீபுருட மங்கை தங்கிய ...... பெருமாளே.
பாடல் 969 ( ஸ்ரீ புருஷமங்கை )
ராகம் - ....; தாளம் - தானதன தந்த தந்த தானதன தந்த தந்த
தானதன தந்த தந்த ...... தனதானா
கார்குழல்கு லைந்த லைந்து வார்குழையி சைந்த சைந்து
காதலுறு சிந்தை யுந்து ...... மடமானார்
காமுகர கங்க லங்க போர்மருவ முந்தி வந்த
காழ்கடிய கும்ப தம்ப ...... இருகோடார்
பேர்மருவு மந்தி தந்தி வாரணஅ னங்க னங்க
பேதையர்கள் தங்கள் கண்கள் ...... வலையாலே
பேரறிவு குந்து நொந்து காதலில லைந்த சிந்தை
பீடையற வந்து நின்ற ...... னருள்தாராய்
ஏர்மருவு தண்டை கொண்ட தாளசைய வந்த கந்த
ஏகமயி லங்க துங்க ...... வடிவேலா
ஏமனுமை மைந்த சந்தி சேவலணி கொண்டு அண்டர்
ஈடேறஇ ருந்த செந்தில் ...... நகர்வாழ்வே
தேருகள்மி குந்த சந்தி வீதிகள ணிந்த கெந்த
சீரலர்கு ளுந்து யர்ந்த ...... பொழிலோடே
சேரவெ யிலங்கு துங்க வாவிக ளிசைந்தி ருந்த
ஸ்ரீ புருட மங்கை தங்கு ...... பெருமாளே.
பாடல் 970 ( ஸ்ரீ புருஷமங்கை )
ராகம் - ....; தாளம் - தானதன தந்த தானதன தந்த
தானதன தந்த ...... தனதான
வேனின்மத னைந்து பாணம்விட நொந்து
வீதிதொறு நின்ற ...... மடவார்பால்
வேளையென வந்து தாளினில் விழுந்து
வேடைகெட நண்பு ...... பலபேசித்
தேனினு மணந்த வாயமுத முண்டு
சீதள தனங்க ...... ளினின்மூழ்கித்
தேடிய தனங்கள் பாழ்பட முயன்று
சேர்கதிய தின்றி ...... யுழல்வேனோ
ஆனிரை துரந்து மாநில மளந்தொ
ராலிலையி லன்று ...... துயில்மாயன்
ஆயர்மனை சென்று பால்தயி ரளைந்த
ஆரண முகுந்தன் ...... மருகோனே
வானவர் புகழ்ந்த கானவர் பயந்த
மானொடு விளங்கு ...... மணிமார்பா
மாமறை முழங்கு ஸ்ரீபுருட மங்கை
மாநக ரமர்ந்த ...... பெருமாளே.
பாடல் 971 ( இலஞ்சி )
ராகம் -....; தாளம் - தனந்த தனதன தனந்த தனதன
தனந்த தனதன ...... தனதான
கரங்க மலமின தரம்ப வளம்வளை
களம்ப கழிவிழி ...... மொழிபாகு
கரும்ப முதுமலை குரும்பை குருகுப
கரும்பி டியினடை ...... யெயின்மாதோ
டரங்க நககன தனங்கு தலையிசை
யலங்க நியமுற ...... மயில்மீதே
அமர்ந்து பவவினை களைந்து வருகொடி
யவந்த கனகல ...... வருவாயே
தரங்க முதியம கரம்பொ ருததிரை
சலந்தி நதிகும ...... ரெனவான
தலம்ப ரவ மறை புலம்ப வருசிறு
சதங்கை யடிதொழு ...... பவராழி
இரங்கு தொலைதிரு வரங்கர் மருகப
னிரண்டு புயமலை ...... கிழவோனே
இலங்கு தரதமிழ் விளங்க வருதிரு
இலஞ்சி மருவிய ...... பெருமாளே.
பாடல் 972 ( இலஞ்சி )
ராகம் - ....; தாளம் - தந்தன தான தனந்தன தானத்
தந்தன தான தனந்தன தானத்
தந்தன தான தனந்தன தானத் ...... தனதான
கொந்தள வோலை குலுங்கிட வாளிச்
சங்குட னாழி கழன்றிட மேகக்
கொண்டைகள் மாலை சரிந்திட வாசப் ...... பனிநீர்சேர்
கொங்கைகள் மார்பு குழைந்திட வாளிக்
கண்கயல் மேனி சிவந்திட கோவைக்
கொஞ்சிய வாயி ரசங்கொடு மோகக் ...... கடலு¡டே
சந்திர ஆர மழிந்திட நூலிற்
பங்கிடை யாடை துவண்டிட நேசத்
தந்திட மாலு ததும்பியு மூழ்குற் ...... றிடுபோதுன்
சந்திர மேனி முகங்களு நீலச்
சந்த்ரகி மேல்கொ டமர்ந்திடு பாதச்
சந்திர வாகு சதங்கையு மோசற் ...... றருள்வாயே
சுந்தரர் பாட லுகந்திரு தாளைக்
கொண்டுநல் தூது நடந்தவ ராகத்
தொந்தமொ டாடி யிருந்தவள் ஞானச் ...... சிவகாமி
தொண்டர்க ளாக மமர்ந்தவள் நீலச்
சங்கரி மோக சவுந்தரி கோலச்
சுந்தரி காளி பயந்தரு ளானைக் ...... கிளியோனே
இந்திர வேதர் பயங்கெட சூரைச்
சிந்திட வேல்கொ டெறிந்துநல் தோகைக்
கின்புற மேவி யிருந்திடு வேதப் ...... பொருளோனே
எண்புன மேவி யிருந்தவள் மோகப்
பெண்திரு வாளை மணந்திய லார்சொற்
கிஞ்சியளாவு மிலஞ்சி விசாகப் ...... பெருமாளே.
பாடல் 973 ( இலஞ்சி )
ராகம் - ....; தாளம் - தனந்த தனந்த தனந்த தனந்த
தனந்த தணந்த ...... தனதானா
சுரும்பணி கொண்டல் நெடுங்குழல் கண்டு
துரந்தெறி கின்ற ...... விழிவேலால்
சுழன்று சுழன்று துவண்டு துவண்டு
சுருண்டு மயங்கி ...... மடவார்தோள்
விரும்பி வரம்பு கடந்து நடந்து
மெலிந்து தளர்ந்து ...... மடியாதே
விளங்கு கடம்பு விழைந்தணி தண்டை
விதங்கொள் சதங்கை ...... யடிதாராய்
பொருந்த லமைந்து சிதம்பெற நின்ற
பொலங்கிரி யொன்றை ...... யெறிவோனே
புகழ்ந்து மகிழ்ந்து வணங்கு குணங்கொள்
புரந்தரன் வஞ்சி ...... மணவாளா
இரும்புன மங்கை பெரும்புள கஞ்செய்
குரும்பை மணந்த ...... மணிமார்பா
இலஞ்சியில் வந்த இலஞ்சிய மென்று
இலஞ்சி யமர்ந்த ...... பெருமாளே.
பாடல் 974 ( இலஞ்சி )
ராகம் - ....; தாளம் - தான தனந்த தான தனந்த
தனா தனந்த ...... தனதான
மாலையில் வந்து மாலை வழங்கு
மாலை யநங்கன் ...... மலராலும்
வாடை யெழுந்து வாடை செறிந்து
வாடை யெறிந்த ...... அனலாலுங்
கோல மழிந்து சால மெலிந்து
கோமள வஞ்சி ...... தளராமுன்
கூடிய கொங்கை நீடிய அன்பு
கூரவு மின்று ...... வரவேணும்
கால னடுங்க வேலது கொண்டு
கானில் நடந்த ...... முருகோனே
கான மடந்தை நாண மொழிந்து
காத லிரங்கு ...... குமரேசா
சோலை வளைந்து சாலி விளைந்து
சூழ மிலஞ்சி ...... மகிழ்வோனே
சூரிய னஞ்ச வாரியில் வந்த
சூரனை வென்ற ...... பெருமாளே.
பாடல் 975 ( திருக்குற்றாலம் )
ராகம் - ....; தாளம் - தானத்தத் தானன தானன
தானத்தத் தானன தானன
தானத்தத் தானன தானன ...... தனதான
ஏடுக்கொத் தாரலர் வார்குழ
லாடப்பட் டாடைநி லாவிய
ஏதப்பொற் றோள்மிசை மூடிய ...... கரமாதர்
ஏதத்தைப் பேசுப ணாளிகள்
வீசத்துக் காசைகொ டாடிகள்
ஏறிட்டிட் டேணியை வீழ்விடு ...... முழுமாயர்
ம¨டொக்கக் கூடிய காமுகர்
மூழ்குற்றுக் காயமொ டேவரு
வாயுப்புற் சூலைவி யாதிக ...... ளிவைமேலாய்
மாசுற்றுப் பாசம் விடாசம
னூர்புக்குப் பாழ்நர கேவிழு
மாயத்தைச் சீவியு னாதர ...... வருள்வாயே
தாடுட்டுட் டூடுடு டீடிமி
டூடுட்டுட் டூடுடு டாடமி
தானத்தத் தானத னாவென ...... வெகுபேரி
தானொத்தப் பூதப சாசுகள்
வாய்விட்டுச் சூரர்கள் சேனைகள்
சாகப்பொற் றோகையி லேறிய ...... சதிரோனே
கூடற்கச் சாலைசி ராமலை
காவைப்பொற் காழிவெ ளூர்திகழ்
கோடைக்கச் சூர்கரு வூரிலு ...... முயர்வான
கோதிற்பத் தாரொடு மாதவ
சீலச்சித் தாதியர் சூழ்தரு
கோலக்குற் றாலமு லாவிய ...... பெருமாளே.
பாடல் 976 ( திருக்குற்றாலம் )
ராகம் - ஸ்ரீ ரஞ்சனி தாளம் - திஸ்ர த்ருபுடை
தானத்தத் தானன தானன
தானத்தத் தானன தானன
தானத்தத் தானன தானன ...... தனதான
வேதத்திற் கேள்வி யிலாதது
போதத்திற் காண வொணாதது
வீசத்திற் று¡ர மிலாதது ...... கதியாளர்
வீதித்துத் தேடரி தானது
ஆதித்தற் காய வோணாதது
வேகெத்துத் தீயில் வெகாதது ...... சுடர்கானம்
வாதத்துக் கேயவி யாதது
காதத்திற் பூவிய லானது
வாசத்திற் பேரொளி யானது ...... மத்முறு
மாயத்திற் காய மதாசல
தீதர்க்குத் தூரம தாகிய
வாழ்வைச்சற் காரம தாஇனி ...... யருள்வாயே
கதத்திற் காயம தாகும
தீதித்தித் தீதிது தீதென
காதற்பட் டோதியு மேவிடு ...... கதிகாணார்
காணப்பட் டேகொடு நோய்கொடு
வாதைப்பட் டேமதி தீதக
லாமற்கெட் டேதடு மாறிட ...... அடுவோனே
கோதைப்பித் தாயொரு வேடுவ
ரூபைப்பெற் றேவன வேடுவர்
கூடத்துக் கேகுடி யாய்வரு ...... முருகோனே
கோதிற்பத் தாரொடு மாதவ
சீலச்சித் தாதியர் சூழ்தரு
கோலக்குற் றாலமு லாவிய ...... பெருமாளே.
பாடல் 977 ( திருக்குற்றாலம் )
ராகம் -....; தாளம் - தத்தான தனத்த தத்தன
தத்தான தனத்த தத்தன
தத்தான தனத்த தத்தன ...... தனதான
முத்தோலை தனைக்கி ழித்தயி
லைப்போரிக லிச்சி வத்துமு
கத்தாமரை யிற்செ ருக்கிடும் ...... விழிமானார்
முற்றாதிள கிப்ப ணைத்தணி
கச்சார மறுத்த நித்தில
முத்தார மழுத்து கிர்க்குறி ...... யதனாலே
வித்தார கவித்தி றத்தினர்
பட்டோலை நிகர்த்தி ணைத்தெழு
வெற்பான தனத்தில் நித்தலு ...... முழல்வேனோ
மெய்த்தேவர் துதித்தி டத்தரு
பொற்பர்கம லப்ப தத்தினை
மெய்ப்பாக வழுத்தி டக்ருபை ...... புரிவாயே
பத்தான முடித்த லைக்குவ
டிற்றாட வரக்க ருக்கிறை
பட்டாவி விடச்செ யித்தவன் ...... மருகோனே
பற்பாசன்மி கைச்சி ரத்தைய
றுத்தாதவ னைச்சி னத்துறு
பற்போகவு டைத்த தற்பரன் ...... மகிழ்வோனே
கொத்தார்கத லிப்ப ழக்குலை
வித்தாரவ ருக்கை யிற்சுளை
கொத்தோடுதி ரக்கு தித்தெழு ...... கயலாரங்
கொட்டாசுழி யிற்கொ ழித்தெறி
சிற்றாறுத னிற்க ளித்திடு
குற்றாலரி டத்தி லுற்றருள் ...... பெருமாளே.
பாடல் 978 ( ஆய்க்குடி )
ராகம் - சாருகேசி தாளம் - கண்டசாபு (2 1/2)
தாத்தனத் தானதன தாத்தனத் தானதன
தாத்தனத் தானதன ...... தனதான
வாட்படச் சேனைபட வோட்டியொட் டாரையிறு
மாப்புடைத் தாளரசர் ...... பெருவாழ்வும்
மாத்திரைப் போதிலிடு காட்டினிற் போமெனஇல்
வாழ்க்கைவிட் டேறுமடி ...... யவர்போலக்
கோட்படப் பாதமலர் பார்த்திளைப் பாறவினை
கோத்தமெய்க் கோலமுடன் ...... வெருபக்
கோப்புடைத் தாகியல மாப்பினிற் பாரிவரு
கூத்தினிப் பூரையிட ...... அமையாதோ
தாட்படக் கோபவிஷ பாப்பினிற் பாலன்மிசை
சாய்த்தொடுப் பாரவுநிள் ...... கழல்தாவிச்
சாற்றுமக் கோரவுரு கூற்றுதை தார்மவுலி
தாழ்க்கவஜ் ராயுதனு ...... மிமையோரும்
ஆட்படச் சாமபர மேட்டியைக் காவலிடு
மாய்க்குடிக் காவலவு ...... ததிமீதே
ஆர்க்குமத் தானவரை வேற் கரத் தால்வரையை
ஆர்ப்பெழச் சாடவல ...... பெருமாளே.
பாடல் 979 ( திருப்புத்தூர் )
ராகம் - ....; தாளம் - தனத்தத் தான தனன தனதன
தனத்தத் தான தனன தனதன
தனத்தத் தான தனன தனதன ...... தனதான
கருப்புச் சாப னனைய இளைஞர்கள்
ப்ரமிக்கக் காத லுலவு நெடுகிய
கடைக்கட் பார்வை யினிய வனிதையர் ...... தனபாரங்
களிற்றுக் கோடு கலச மலிநவ
மணிச்செப் போடை வனச நறுமலர்
கனத்துப் பாளை முறிய வருநிக ...... ரிளநீர்போற்
பொருப்பைச் சாடும் வலியை யுடையன
அறச்சற் றான இடையை நலிவன
புதுக்கச் சார வடமொ டடர்வன ...... எனநாளும்
புகழ்ச்சிப் பாட லடிமை யவரவர்
ப்ரியப்பட் டாள வுரைசெ யிழிதொழில்
பொகட்டெப் போது சரியை கிரியைசெய் ...... துயிர்வாழ்வேன்
இருட்டுப் பாரில் மறலி தனதுடல்
பதைக்கக் கால்கொ டுதைசெய் தவன்விழ
எயிற்றுப் போவி யமர ருடலவர் ...... தலைமாலை
எலுப்புக் கோவை யணியு மவர்மிக
அதிர்த்துக் காளி வெருவ நொடியினில்
எதிர்த்திட் டாடும் வயிர பயிரவர் ...... நவநீத
திருட்டுப் பாணி யிடப முதுகிடை
சமுக்கிட் டேறி யதிர வருபவர்
செலுத்துப் பூத மலகை யிலகிய ...... படையாளி
செடைக்குட் பூளை மதிய மிதழிவெ
ளெருக்குச் சூடி குமர வயலியல்
திருப்புத் தூரில் மருவி யுறைதரு ...... பெருமாளே.
பாடல் 980 ( திருப்புத்தூர் )
ராகம் - ....; தாளம் - தான தாத்த தனத்தத் தானன
தான தாத்த தனத்தத் தானன
தான தாத்த தனத்தத் தானன ...... தனதான
வேலை தோற்க விழித்துக் காதினில்
ஓலை காட்டி நகைத்துப் போதொரு
வீடுகாட்டி யுடுத்தப் போர்வையை ...... நெகிழ்வாகி
மேனி காட்டி வளைத்துப் போர்முலை
யானை காட்டி மறைத்தத் தோதக
வீறு காட்டி யெதிர்த்துப் போரெதிர் ...... வருவார்மேல்
கால மேற்க வுழப்பிக் கூறிய
காசு கேட்டது கைப்பற் றாஇடை
காதி யோட்டி வருத்தப் பாடுடன் ...... வருவார்போல்
காதல் போற்று மலர்ப்பொற் பாயலின்
மீத ணாப்பு மசட்டுச் சூளைகள்
காம நோய்ப்படு சித்தத் தீவினை ...... யொழியேனோ
ஆல கோட்டு மிடற்றுச் சோதிக
பாலி பார்ப்பதி பக்ஷத் தால்நட
மாடி தாத்திரி பட்சித் தாவென ...... வுமிழ்வாளி
ஆடல் கோத்த சிலைக்கைச் சேவக
னோடை பூத்த தளக்கட் சானவி
யாறு தேக்கிய கற்றைச் சேகர ...... சடதாரி
சீல மாப்பதி மத்தப் பாரிட
சேனை போற்றிடு மப்பர்க் கோதிய
சேத னார்த்தப்ர சித்திக் கேவரு ...... முருகோனே
சேல றாக்கயல் தத்தச் சூழ்வய
லு¡ர வேற்கர விப்ரர்க் காதர
தீர தீர்த்த திருப்புத் தூருறை ...... பெருமாளே.
பாடல் 981 ( திருவாடனை )
ராகம் - ராகமாலிகை தாளம் - கண்டசாபு (2 1/2)
தானான தத்ததன தானான தத்ததன
தானான தத்ததன ...... தனதான
ஊனாரு முட்பிணியு மானாக வித்தவுதட
லு¡தாரி பட்டொழிய ...... வுயிர்போனால்
ஊரார் குவித்துவர ஆவா வெனக்குறுகி
ஓயா முழக்கமெழ ...... அழுதோய
நானா விதச்சிவிகை மேலே கிடத்தியது
நாறா தெடுத்தடவி ...... யெரியூடே
நாணாமல் வைத்துவிட நீறாமெ னிப்பிறவி
நாடா தெனக்குனருள் ...... புரிவாயே
மானாக துத்திமுடி மீதே நிருத்தமிடு
மாயோனு மட்டொழுகு ...... மலர்மீதே
வாழ்வா யிருக்குமொரு வேதாவு மெட்டிசையும்
வானோரு மட்டகுல ...... கிரியாவும்
ஆனா வரக்கருடன் வானார் பிழைக்கவரு
மாலால முற்றவமு ...... தயில்வோன்முன்
ஆசார பத்தியுடன் ஞானாக மத்தையருள்
ஆடானை நித்தமுறை ...... பெருமாளே.
பாடல் 982 ( உ த்தரகோசமங்கை )
ராகம் - ....; தாளம் - தத்தன தானத் தனதன தந்தத்
தத்தன தானத் தனதன தந்தத்
தத்தன தானத் தனதன தந்தத் ...... தனதான
கற்பக ஞானக் கடவுண்மு னண்டத்
திற்புத சேனைக் கதிபதி யின்பக்
கட்கழை பாகப் பமமுது வெண்சர்க் ...... கரைபால்தேன்
கட்டிள நீர்முக் கனிபய றம்பொற்
றொப்பையி னேறிட் டருளிய தந்திக்
கட்டிளை யாய்பொற் பதமதி றைஞ்சிப் ...... பரியாய
பொற்சிகி யாய்கொத் துருண்மணி தண்டைப்
பொற்சரி நாதப் பரிபுர என்றுப்
பொற்புற வோதிக் கசிவொடு சிந்தித் ...... தினிதேயான்
பொற்புகழ் பாடிச் சிவபத மும்பெற்
றுப்பொருள் ஞானப் பெருவெளி யும்பெற்
றுப்புக லாகத் தமுதையு முண்டிட் ...... டிடுவேனோ
தெற்பமு ளாகத் திரள்பரி யும்பற்
குப்பைக ளாகத் தசுரர்பி ணந்திக்
கெட்டையு மூடிக் குருதிகள் மங்குற் ...... செவையாகித்
திக்கய மாடச் சிலசில பம்பைத்
தத்தன தானத் தடுடுடு வென்கச்
செப்பறை தாளத் தகுதொகு வென்கச் ...... சிலபேரி
உ ற்பன மாகத் தடிபடு சம்பத்
தற்புத மாகத் தமரர்பு ரம்பெற்
றுட்செல்வ மேவிக் கனமலர் சிந்தத் ...... தொடுவேலா
உ ட்பொருள் ஞானக் குறமக ளும்பற்
சித்திரை நீடப் பரிமயில் முன்பெற்
றுத்தர கோசத் தலமுறை கந்தப் ...... பெருமாளே.
பாடல் 983 ( இராமேசுரம் )
ராகம் - ஆனந்த பைரவி தாளம் - சதுஸ்ரத்ருவம் - கண்டநடை (35)
(எடுப்பு - /4/4/4 0 )
நடை தகதகிட
தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன தானதன தானதன ...... தனதான
வாலவயதாகி தாகியழ காகிமத னாகிபணி
வாணிபமொ டாடிமரு ளாடிவிளை யாடிவிழல்
வாழ்வுசத மாகிவலு வாகிமட கூடமொடு ...... பொருள்தேடி
வாசபுழு கேடுமல ரோடுமன மாகிமகிழ்
வாசனைக ளாதியிட லாகிமய லாகிவிலை
மாதர்களை மேவியவ ராசைதனி லேசுழல ...... சிலநாள்போய்த்
தோல்திரைக ளாகிநரை யாகிகுரு டாகியிரு
கால்கள்தடு மாறிசெவி மாறிபசு பாசபதி
சூழ்கதிகள் மாறிசுக மாறிதடி யோடுதிரி ...... யுறுநாளிற்
சூலைசொறி யீளைவலி வாதமொடு நீரிழிவு
சோகைகள மாலைசுர மோடுபிணி தூறிருமல்
சூழலுற மூலகசு மாலமென நாறியுட ...... லழிவேனோ
நாலுமுக னாதியரி யோமெனஅ தாரமுரை
யாதபிர மாவைவிழ மோதிபொரு ளோதுகென
நாலுசிர மோடுசிகை தூளிபட தாளமிடு ...... மிளையோனே
நாறிதழி வேணிசிவ ரூபகலி யாணிமுத
லீணமக வானைமகிழ் தோழவன மீதுசெறி
ஞானகுற மாதைதின காவில்மண மேவுபுகழ் ...... மயில்வீரா
ஓலமிடு தாடகைசு வாகுவள ரேழுமரம்
வாலியொடு நீலிபக னோடொருவி ராதனெழு
மோதகட லோடுவிறல் ராவணகு ழாமமரில் ...... பொடியாக
ஓகைதழல் வாளிவிடு மூரிதநு நேமிவளை
பாணிதிரு மார்பனரி கோசன்மரு காஎனவெ
யோதமறை ராமெசுர மேவுகும ராவமரர் ...... பெருமாளே.
பாடல் 984 ( இராமேசுரம் )
ராகம் - ....; தாளம் - தானா தனத்ததன தானா தனத்ததன
தானா தனத்ததன ...... தனதான
வானோர் வழுத்துனது பாதார பத்மமலர்
மீதே பணிக்கும்வகை ...... யறியாதே
மானார் வலைக்கணதி லேதூளி மெத்தையினி
லு¡டே யணைத்துதவு ...... மதனாலே
தேனோ கருப்பிலெழு பாகோ விதற்கிணைக
ளேதோ வெனக்கலவி ...... பலகோடி
தீரா மயக்கினொடு நாகா படத்திலெழு
சேறாடல் பெற்றதுய ...... ரொழியேனோ
மேனாடு பெற்றுவளர் சூராதி பற்கெதிரி
னூடேகி நிற்குமிரு ...... கழலோனே
மேகார வுக்ரபரி தானேறி வெற்றிபுனை
வீரா குறச்சிறுமி ...... மணவாளா
ஞானா பரற்கினிய வேதாக மப்பொருளை
நாணா துரைக்குமொரு ...... பெரியோனே
நாரா யணற்குமரு காவீறு பெற்றிலகு
ராமே சுரத்திலுறை ...... பெருமாளே.
பாடல் 985 ( இந்தம்பலம் )
ராகம் - ....; தாளம் - தனன தனதனன தந்தந் தனத்ததன
தனன தனதனன தந்தந் தனத்ததன
தனன தனதனன தந்தந் தனத்ததன ...... தனதான
அமல கமலவுரு சங்கந் தொனித்தமறை
அரிய பரமவெளி யெங்கும் பொலித்தசெய
லளவு மசலமது கண்டங் கொருத்தருள ...... வறியாத
தகர முதலுருகொ ளைம்பந் தொரக்ஷரமொ
டகில புவனநதி யண்டங் களுக்குமுத
லருண கிரணவொளி யெங்கெங் குமுற்றுமுதல் ...... நடுவான
கமல துரியமயி லிந்துங் கதிர்ப்பரவு
கனக நிறமுடைய பண்பம் படிக்கதவ
ககன சுழிமுனையி லஞ்சுங் களித்தமுத ...... சிவயோகம்
கருணை யுடனறிவி தங்கொண் டிடக்கவுரி
குமர குமரகுரு வென்றென் றுரைப்பமுது
கனிவு வரஇளமை தந்துன் பதத்திலெனை ...... யருள்வாயே
திமிலை பலமுருடு திந்திந் திமித்திமித
டுமுட டுமுடுமுட டுண்டுண் டுமுட்டுமுட
திகுட திகுடதிகு திந்திந் திகுர்த்திகுர்த ...... திகுதீதோ
செகண செகணசெக செஞ்செஞ் செகக்கணென
அகில முரகன்முடி யண்டம் பிளக்கவெகு
திமிர்த குலவிருது சங்கந் தொனித்தசுரர் ...... களமீதே
அமரர் முழுமிமலர் கொண்டங் கிறைத் தருள
அரிய குருகுகொடி யெங்குந் தழைத்தருள
அரியொ டயன்முனிவ ரண்டம் பிழைத்தருள ...... விடும்வேலா
அரியின் மகள்தனமொ டங்கம் புதைக்க முக
அழகு புயமொடணை யினபங் களித்துமகிழ்
அரிய மயிலயில்கொ டிந்தம் பலத்தின்மகிழ் ...... பெருமாளே.
பாடல் 986 ( எழுகரைநாடு )
ராகம் - மனோலயம் தாளம் - ஆதி
தனதன தாத்தன தனதன தாத்தன
தனதன தாத்தன ...... தந்ததான
விரகற நோக்கியு முருகியும் வாழ்த்தியும்
விழிபுனல் தேக்கிட ...... அன்புமேன்மேல்
மிகவுமி ராப்பகல் பிறிதுப ராக்கற
விழைவுகு ராப்புனை ...... யுங்குமார
முருகஷ டாக்ஷர சரவண கார்த்திகை
முலைநுகர் பார்த்திப ...... என்றுபாடி
மொழிகுழ றாத்தொழு தழுதழு தாட்பட
முழுதும லாப்பொருள் தந்திடாயோ
பரகதி காட்டிய விரகசி லோச்சய
பரமப ராக்ரம ...... சம்பராரி
படவிழி யாற்பொரு பசுபதி போற்றிய
பகவதி பார்ப்பதி ...... தந்தவாழ்வே
இரைகடல் தீப்பட நிசிசரர் கூப்பிட
எழுகிரி யார்ப்பெழ ...... வென்றவேலா
இமையவர் நாட்டினில் நிறைகுடி யேற்றிய
எழுகரை நாட்டவர் ...... தம்பிரானே.
பாடல் 987 ( ஒடுக்கத்துச் செறிவாய் )
ராகம் - ....; தாளம் - தனத்தத் தத்தன தாத்த தத்தன
தனத்தத் தத்தன தாத்த தத்தன
தனத்தத் தத்தன தாத்த தத்தன ...... தனதான
வழக்குச் சொற்பயில் வாற்ச ளப்படு
மருத்துப் பச்சிலை தீற்று மட்டைகள்
வளைத்துச் சித்தச சாத்தி ரக்கள ...... வதனாலே
மனத்துக் கற்களை நீற்று ருக்கிகள்
சுகித்துத் தெட்டிக ளூர்த்து திப்பரை
மருட்டிக் குத்திர வார்த்தை செப்பிகள் ...... மதியாதே
கழுத்தைக் கட்டிய ணாப்பி நட்பொடு
சிரித்துப் பற்கறை காட்டி கைப்பொருள்
கழற்றிக் கற்புகர் மாற்று ரைப்பது ...... கரிசாணி
கணக்கிட் டுப்பொழு தேற்றி வைத்தொரு
பிணக்கிட் டுச்சிலு காக்கு பட்டிகள்
கலைக்குட் புக்கிடு பாழ்த்த புத்தியை ...... யொழியேனோ
அழற்கட் டப்பறை மோட்ட ரக்கரை
நெருக்கிப் பொட்டெழ நூக்கி யக்கணம்
அழித்திட் டுக்குற வாட்டி பொற்றன ...... கிரிதோய்வாய்
அகப்பட் டுத்தமிழ் தேர்த்த வித்தகர்
சமத்துக் கட்டியி லாத்த முற்றவன்
அலைக்குட் கட்செவி மேற்ப டுக்கையி ...... லுறைமாயன்
உ ழைக்கட் பொற்கொடி மாக்கு லக்குயில்
விருப்புற் றுப்புணர் தோட்க்ரு பைக்கடல்
உ றிக்குட் கைத்தல நீட்டு மச்சுதன் ...... மருகோனே
உ ரைக்கச் செட்டிய னாய்ப்பன் முத்தமிழ்
மதித்திட் டுச்செறி நாற்க விப்பணர்
ஒடுக்கத் துச்செறி வாய்த்த லத்துறை ...... பெருமாளே.
பாடல் 988 ( காமத்தூர் )
ராகம் - ....; தாளம் - தானத் தானத் தானத் தானத்
தானத் தானத் ...... தனதானா
ஆகத் தேதப் பாமற் சேரிக்
கார்கைத் தேறற் ...... கணையாலே
ஆலப் பாலைப் போலக் கோலத்
தாயக் காயப் ...... பிறையாலே
போகத் தேசற் றேதற் பாயற்
பூவிற் றீயிற் ...... கருகாதே
போதக் காதற் போகத் தாளைப்
பூரித் தாரப் ...... பூணராயே
தோகைக் கேயுற் றேறித் தோயச்
சூர்கெட் டோடப் ...... பொரும்வேலா
சோதிக் காலைப் போதக் கூவத்
தூவற் சேவற் ...... கொடியோனே
பாகொத் தேசொற் பாகத் தாளைப்
பாரித் தார்நற் ...... குமரேசா
பாரிற் காமத் தூரிற் சீலப்
பாலத் தேவப் ...... பெருமாளே.
பாடல் 989 ( முள்வாய் )
ராகம் - ....; தாளம் - தன்னா தனந்த தந்த, தன்னா தனந்த தந்த
தன்னா தனந்த தந்த ...... தனதான
மின்னார் பயந்த மைந்தர் தன்னா டினங்கு விந்து
வெவ்வே றுழன்று றன்று ...... மொழிகூற
விண்மேல் நமன்க ரந்து மண்மே லுடம்பொ ருங்க
மென்னா ளறிந்த டைந்து ...... உ யிர்போமுன்
பொன்னார் சதங்கை தண்டை முந்நூல் கடம்ப ணிந்து
பொய்யார் மனங்கள் தங்கு ...... மதுபோலப்
பொல்லே னிறைஞ்சி ரந்த சொன்னீ தெரிந்த ழுங்கு
புன்னா யுளுங்க வின்று ...... புகுவாயே
பன்னா ளிறைஞ்சு மன்பர் பொன்னா டுறங்கை தந்து
பன்னா கணைந்து சங்க ...... முறவாயிற்
பன்னூல் முழங்க லென்று விண்ணோர் மயங்க நின்று
பண்ணாது கின்ற கொண்டல் ...... மருகோனே
முன்னாய் மதன்க ரும்பு வின்னேர் தடந்தெ ரிந்து
முன்னோர் பொருங்கை யென்று ...... முனையாட
மொய்வார் நிமிர்ந்த கொங்கை மெய்ம்மாதர் வந்தி றைஞ்சு
முள்வாய் விளங்க நின்ற ...... பெருமாளே.
பாடல் 990 ( வாகைமாநகர் )
ராகம் - ....; தாளம் - தான தான தனத்த, தான தான தனத்த
தான தான தனத்த ...... தனதான
ஆலை யான மொழிக்கு மாளை யூடு கிழிக்கு
மால கால விழிக்கு ...... முறுகாதல்
ஆசை மாத ரழைக்கு மோசை யான தொனிக்கு
மார பார முலைக்கு ...... மழகான
ஓலை மேவு குழைக்கு மோடை யானை நடைக்கு
மோரை சாயு மிடைக்கு ...... மயல்மேவி
ஊறு பாவ வுறுப்பி லு¡றல் தேறு கரிப்பி
லு¡ர வோடு விருப்பி ...... லுழல்வேனோ
வேலை யாக வளைக்கை வேடர் பாவை தனக்கு
மீறு காத லளிக்கு ...... முகமாய
மேவு வேடை யளித்து நீடு கோல மளித்து
மீள வாய்மை தெளித்து ...... மிதண்மீது
மாலை யோதி முடித்து மாது தாள்கள் பிடித்து
வாயி லு¡றல் குடித்து ...... மயல்தீர
வாகு தோளி லணைத்து மாக மார்பொழி லுற்ற
வாகை மாநகர் பற்று ...... பெருமாளே.
பாடல் 991 ( விசுவை )
ராகம் - ...; தாளம் - தனன தனந்த தனன தனந்த
தனன தனந்த ...... தனதான
திருகு செறிந்த குழலை வகிர்ந்து
முடிமலர் கொண்டொ ...... ரழகாகச்
செயவரு துங்க முகமும் விளங்க
முலைகள் குலுங்க ...... வருமோக
அரிவையர் தங்கள் வலையில் விழுந்து
அறிவு மெலிந்து ...... தளராதே
அமரர் மகிழ்ந்து தொழுது வணங்கு
னடியிணை யன்பொ ...... டருள்வாயே
வரையை முனிந்து விழவெ கடிந்து
வடிவெ லெறிந்த ...... திறலோனே
மதுரித செஞ்சொல் குறமட மங்கை
நகிலது பொங்க ...... வரும்வேலா
விரைசெறி கொன்றை யறுக புனைந்த
விடையரர் தந்த ...... முருகோனே
விரைமிகு சந்து பொழில்கள் துலங்கு
விசுவை விளங்கு ...... பெருமாளே.
பாடல் 992 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ஸ¥நாத விநோதினி தாளம் - அங்கதாளம் (8)
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2, தக-1
தான தத்தன தானா தனாதன
தான தத்தன தானா தனாதன
தான தத்தன தானா தனாதன ...... தந்ததான
போத நிர்க்குண போதா நமோநம
நாத நிஷ்கள நாதா நமோநம
பூர ணக்கலை சாரா நமோநம ...... பஞ்சபாண
பூபன் மைத்துன பூபா நமோநம
நீப புஷ்பக தாளா நமோநம
போக சொர்க்கபு பாலா நமோநம ...... சங்கமேறும்
மாத மிழத்ரய சேயே நமோநம
வேத னத்ரய வேளே நமோநம
வாழ்ஜ கத்ரய வாழ்வே நமோநம ...... என்றுபாத
வாரி ஜத்தில்வி ழாதே மகோததி
யேழ்பி றப்பினில் மூழ்கா மனோபவ
மாயை யிற்சுழி யூடே விடாதுக ...... லங்கலாமோ
கீத நிர்த்தவெ தாளா டவீநட
நாத புத்திர பாகீ ரதீகிரு
பாச முத்திர ஜ¨முத வாகனர் ...... தந்திபாகா
கேக யப்பிர தாபா முலாதிப
மாலி கைக்கும ரேசா விசாகக்ரு
பாலு வித்ரும காரா ஷடானன ...... புண்டா£கா
வேத வித்தக வேதா விநோதகி
ராத லஷ்மிகி ¡£டா மகாசல
வீர விக்ரம பாரா வதானவ ...... கண்டசூரா
வீர நிட்டுர வீராதி காரண
தீர நிர்ப்பய தீராபி ராமவி
நாய கப்ரிய வேலாயு தாசுரர் ...... தம்பிரானே.
பாடல் 993 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ஸாவேரி தாளம் - அங்கதாளம் (8)
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகிடதக-2 1/2
தான தத்தன தானா தனாதன
தான தத்தன தானா தனாதன
தான தத்தன தானா தனாதன ...... தந்ததான
ஓது முத்தமிழ் தேராவ்ரு தாவனை
வேத னைப்படு காமாவி காரனை
ஊன முற்றுழல் ஆசாப ஈனனை ...... அந்தர்யாமி
யோக மற்றுழல் ஆசாப சாசனை
மோக முற்றிய மோடாதி மோடனை
ஊதி யத்தவம் நாடாத கேடனை ...... அன்றிலாதி
பாத கக்கொலை யேசூழ்க பாடனை
நீதி சற்றுமி லாகீத நாடனை
பாவி யர்க்குளெ லாமாது ரோகனை ...... மண்ணின்மீதில்
பாடு பட்டலை மாகோப லோபனை
வீடு பட்டழி கோமாள வீணனை
பாச சிக்கினில் வாழ்வேனை யாளுவ ...... தெந்தநாளோ
ஆதி சற்குண சீலா நமோநம
ஆட கத்திரி சூலா நமோநம
ஆத ரித்தருள் பாலா நமோநம ...... உ ந்தியாமை
ஆன வர்க்கினி யானே நமோநம
ஞான முத்தமிழ் தேனே நமோநம
ஆர ணற்கரி யானே நமோநம ...... மன்றுளாடும்
தோதி தித்திமி தீதா நமோநம
வேத சித்திர ரூபா நமோநம
சோப மற்றவர் சாமீ நமோநம ...... தன்மராச
தூத னைத்துகை பாதா நமோநம
நாத சற்குரு நாதா நமோநம
ஜோதி யிற்ஜக ஜோதீ மஹாதெவர் ...... தம்பிரானே.
பாடல் 994 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ஸாமா தாளம் - அங்கதாளம் (8 1/2)
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தகதகிட-2 1/2, தகதிமி-2
தான தத்தனா தானா தனாதன
தான தத்தனா தானா தனாதன
தான தத்தனா தானா தனாதன ...... தந்ததான
வேத வித்தகா சாமீ நமோநம
வேல்மி குத்தமா சூரா நமோநம
வீம சக்ரயூ காளா நமோநம ...... விந்துநாத
வீர பத்மசீர் பாதா நமோநம
நீல மிக்ககூ தாளா நமோநம
மேக மொத்தமா யூரா நமோநம ...... விண்டிடாத
போத மொத்தபேர் போதா நமோநம
பூத மற்றுமே யானாய் நமோநம
பூர ணத்துளே வாழ்வாய் நமோநம ...... துங்கமேவும்
பூத ரத்தெலாம் வாழ்வாய் நமோநம
ஆறி ரட்டிநீள் தோளா நமோநம
பூஷ ணத்துமா மார்பா நமோநம ...... புண்டா£க
மீதி ருக்குநா மாதோடு சேயிதழ்
மீதி ருக்குமே ரார்மாபு லோமசை
வீர மிக்கஏழ் பேர்மாதர் நீடினம் ...... நின்றுநாளும்
வேத வித்தகீ வீமா விராகிணி
வீறு மிக்கமா வீணா கரேமக
மேரு வுற்றுவாழ் சீரெ சிவாதரெ ...... யங்கராகீ
ஆதி சத்திசா மாதேவி பார்வதி
நீலி துத்தியார் நீணாக பூஷணி
ஆயி நித்தியே கோடீர மாதவி ...... யென்றுதாழும்
ஆர்யை பெற்றசீ ராளா நமோநம
சூரை யட்டுநீள் பேரா நமோநம
ஆர ணத்தினார் வாழ்வே நமோநம ...... தம்பிரானே.
பாடல் 995 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ஆரபி தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2
தான தாத்தன தாத்தன தான தாத்தன தாத்தன
தான தாத்தன தாத்தன ...... தனதானா
ஆவி காப்பது மேற்பத மாத லாற்புரு டார்த்தமி
தாமெ னாப்பர மார்த்தம ...... துணராதே
ஆனை மேற்பரி மேற்பல சேனை போற்றிட வீட்டொட
நேக நாட்டொடு காட்டொடு ...... தடுமாறிப்
பூவை மார்க்குரு காப்புதி தான கூத்தொடு பாட்டொடு
பூவி னாற்றம றாத்தன ...... கிரிதோயும்
பொக போக்யக லாத்தொடு வாழ்ப ராக்கொடி ராப்பகல்
போது போக்கியே னாக்கையை ...... விடலாமோ
தேவி பார்ப்பதி சேர்ப்பர பாவ னார்க்கொரு சாக்ரஅ
தீத தீ¨க்ஷப ¡£¨க்ஷக ...... ளறவோதுந்
தேவ பாற்கர நாற்கவி பாடு லாக்ஷண மோக்ஷதி
யாக ராத்திகழ் கார்த்திகை ...... பெறுவாழ்வே
மேவி னார்க்கருள் தேக்குது வாத சாக்ஷ ஷடாக்ஷர
மேரு வீழ்த்தப ராக்ரம ...... வடிவேலா
வீர ராக்கத ரார்ப்பெழ வேத தாக்ஷக னாக்கெட
வேலை கூப்பிட வீக்கிய ...... பெருமாளே.
பாடல் 996 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ....; தாளம் - தான தாத்தன தாத்தன தான தாத்தன தாத்தன
தான தாத்தன தாத்தன ...... தனதானா
ஏக மாய்ப்பல வாய்ச்சிவ போக மாய்த்தெளி வாய்ச்சிவ
மீதெ னாக்குரு வார்த்தையை ...... யுணராதே
ஏழு பார்க்கும்வி யாக்கிரன் யானெ னாப்பரி தேர்க்கரி
யேறு மாப்பிறு மாப்புட ...... னரசாகி
தோகை மார்க்கொரு காற்றொலை யாத வேட்கையி னாற்கெடு
சோர்வி னாற்கொடி தாக்கையை ...... யிழவாமுன்
சோதி காட்டவ ராச்சுத நாத னார்க்கருள் போற்றிய
தூரி தாப்பர மார்த்தம ...... தருள்வாயே
நாக மேற்றுயில் வார்க்கய னான பேர்க்கரி யார்க்கொரு
ஞான வார்த்தையி னாற்குரு ...... பரனாய
நாத நாட்டமு றாப்பல காலும் வேட்கையி னாற்புகல்
நாவ லோர்க்கரு ளாற்பத ...... மருள்வாழ்வே
வேக மேற்கொ ளராப்புடை தோகை மேற்கொடு வேற்கொடு
வீர மாக்குலை யாக்குல ...... வரைசாய
மோல நாட்டவர் பூக்கொடு வேல போற்றியெ னாத்தொழ
வேலை கூப்பிட வீக்கிய ...... பெருமாளே.
பாடல் 997 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ....; தாளம் - தான தந்தன தானா தானன
தான தந்தன தானா தானன
தான தந்தன தானா தானன ...... தனதானா
தோடு மென்குழை யூடே போரிடு
வாணெ டுங்கயல் போலே யாருயிர்
சூறை கொண்டிடு வேல்போ லேதொடர் ...... விழிமானார்
சூத கந்தனி லேமா லாயவர்
ஓது மன்றறி யாதே யூழ்வினை
சூழும் வெந்துய ராலே தானுயிர் ...... சுழலாதே
ஆடு வெம்பண காகோ தாசன
மூறு கண்டிட மேல்வீழ் தோகையி
லாரும் வண்கும ரேசா ஆறிரு ...... புயவேளே
ஆரு நின்றரு ளாலே தாடொழ
ஆண்மை தந்தருள் வாழ்வே தாழ்வற
ஆதி தந்தவ நாயேன் வாழ்வுற ...... அருள்வாயே
ஓடு வெங்கதி ரோடே சோமனு
மூழி யண்டமும் லோகா லோகமு
மூரு மந்தர நானா தேவரு ...... மடிபேண
ஊழி டம்புயன் வேலா வாலய
மூடு தங்கிய மாலா ராதர
வோத வெண்டிரை சூர்மார் பூடுற ...... விடும்வேலா
வேடு கொண்டுள வேடா வேடைய
வேழ வெம்புலி போலே வேடர்கள்
மேவு திண்புன மீதே மாதொடு ...... மிகமாலாய்
மேக மென்குழ லாய்நீ கேளினி
வேறு தஞ்சமு நீயே யாமென
வேளை கொண்டபி ரானே வானவர் ...... பெருமாளே.
பாடல் 998 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - துர்கா தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தான தந்தன தானா தானன
தான தந்தன தானா தானன
தான தந்தன தானா தானன ...... தனதான
நாலி ரண்டித ழாலே கோலிய
ஞால முண்டக மேலே தானிள
ஞாயி றென்றுறு கோலா காலனு ...... மதின்மேலே
ஞால முண்டபி ராணா தாரனும்
யோக மந்திர மூலா தாரனு
நாடி நின்றப்ர பாவா காரனு ...... நடுவாக
மேலி ருந்தகி ரீடா பீடமு
நூல றிந்தம ணீமா மாடமு
மேத கும்ப்ரபை கோடா கோடியு ...... மிடமாக
வீசி நின்றுள தூபா தீபவி
சால மண்டப மீதே யேறிய
வீர பண்டித வீரா சாரிய ...... வினைதீராய்
ஆல கந்தரி மோடா மோடிகு
மாரி பிங்கலை நானா தேசிய
மோகி மங்கலை லோகா லோகியெ ...... வுயிர்பாலும்
ஆன சம்ப்ரமி மாதா மாதவி
ஆதி யம்பகை ஞாதா வானவ
ராட மன்றினி லாடா நாடிய ...... அபிராமி
கால சங்கரி சீலா சீலித்ரி
சூலி மந்த்ரசு பாஷா பாஷணி
காள கண்டிக பாலீ மாலினி ...... கலியாணி
காம தந்திர லீலா லோகினி
வாம தந்திர நூலாய் வாள்சிவ
காம சுந்தரி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.
பாடல் 999 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ....; தாளம் - தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன
தானன தந்தன தாத்தன ...... தனதான
போதிலி ருந்துவி டாச்சதுர் வேதமொ ழிந்தவ னாற்புளி
னாகமு கந்தவ னாற்றெரி ...... வரிதான
போதுயர் செந்தழ லாப்பெரு வானநி றைந்த விடாப்புக
ழாளன ருஞ்சிவ கீர்த்திய ...... னெறிகாண
ஆதர வின்பருள் மாக்குரு நாதனெ னும்படி போற்றிட
ஆனப தங்களை நாக்கரு ...... திடவேயென்
ஆசையெ ணும்படி மேற்கவி பாடுமி தம்பல பார்த்தடி
யேனும றிந்துனை யேத்துவ ...... தொருநாளே
காதட ரும்படி போய்ப்பல பூசலி டுங்கய லாற்கனி
வாயித ழின்சுவை யாற்பயில் ...... குறமாதின்
காரட ருங்குழ லாற்கிரி யானத னங்களி னாற்கலை
மேவும ருங்கத னாற்செறி ...... குழையோலை
சாதன மென்றுரை யாப்பரி தாபமெ னும்படி வாய்த்திடு
மாறிம னந்தள ராத்தனி ...... திரிவோனே
சாகர மன்றெரி யாக்கொடு சூரரு கும்படி யாத்திணி
வேலையு ரம்பெற வோட்டிய ...... பெருமாளே.
பாடல் 1000 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ஸிம்மேந்திர மத்யமம் தாளம் - திஸ்ரத்ருவம் - 2 களை (22)
(எடுப்பு - /3/3/3 0)
தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன
தானன தந்தன தாத்தன ...... தனதான
வேடர்செ ழுந்தினை காத்திதண் மீதிலி ருந்தபி ராட்டிவி
லோசன அம்புக ளாற்செயல் ...... தடுமாறி
மேனித ளர்ந்துரு காப்பரி தாபமு டன்புன மேற்றிரு
வேளைபு குந்தப ராக்ரம ...... மதுபாடி
நாடறி யும்படி கூப்பிடு நாவலர் தங்களை யார்ப்பதி
னாலுல கங்களு மேத்திய ...... இருதாளில்
நாறுக டம்பணி யாப்பரி வோடுபு ரந்தப ராக்ரம
நாடஅ ருந்தவம் வாய்ப்பது ...... மொருநாளே
ஆடக மந்தர நீர்க்கசை யாமலு ரம்பெற நாட்டியொ
ராயிர வெம்பகு வாய்ப்பணி ...... கயிறாக
ஆழிக டைந்தமு தாக்கிய நேகர்பெ ரும்பசி தீர்த்தரு
ளாயனு மன்றெயில் தீப்பட ...... அதிபார
வாடைநெ டுங்கிரி கோட்டிய வீரனு மெம்பர மாற்றிய
வாழ்வென வஞ்சக ராக்ஷதர் ...... குலமாள
வாசவன் வன்சிறை மீட்டவ னூரும டங்கலு மீட்டவன்
வானுல குங்குடி யேற்றிய ...... பெருமாளே.
கருத்துகள்
கருத்துரையிடுக