இடுகைகள்

ஜூன், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அறிவுக் கனிகள்

படம்
உலகில் செல்வம் நிலை நிற்பதில்லை. அதிகாரமும் இதர மேம்பாடுகளும் நம்முடன் அழிந்து வருகின்றன. ஆனல் உயர்ந்தோர் கூறும் உறுதி மொழிகள் பல ஆயிர ஆண்டுகளுக்குப் பின்னும், என்றும் அழியாதனவாய், பின்வரும் மக்கள் அனைவருக்கும் சுடர் விளக்காய் இருந்து வருகின்றன. இவைகளே மனித வர்க்கத்தின் இணையற்ற பொக்கிஷங்களாகும். கோடிக்கணக்கான மக்களுக்கு இவை அறிவும் ஆற்றலும் கொடுத்து, அவர்கள் மனதை மலரச் செய்கின்றன... அறிவுக் கனிகள் (Philosophy) பொ. திருகூடசுந்தரம் Read Books

கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்

படம்
கிருஸ்துப் பெருமான் பிறப்பதற்குப் பதின் மூன்று நூற்றாண்டுகட்கு முன், அஃதாவது ஏறக்  குறைய மூவாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன் கிரேக்க மொழியைப் பேசும் மரபினரான அக்கேயர்கள் (Achaeans) கிழக்கு ஐரோப்பாக் கண்டத் தினின்றும் கிரீஸ் நகரம் வந்து குடியேறினர். இவர்கள் குடிபுகுமுன் உள்நாட்டுக் குடிகளான பண்டைய கிரீஸ் நகர மக்கள், மிகவும் உயர்வான நிலையில் நாகரிகம் வாய்ந்தவர்களாக இருந்தனர். அவர்கள் அந்நிலையில் இருந்தனர் என்பதை, அவர்கள் அமைத்திருந்த அழகிய அரண்மனைகளும், அவற்றில் அமைந்திருந்த திண்மைமிக்க சுவர்களும், கோட்டை கொத்தளங்களும், நன்கு சான்று கூற வல்லனவாக இருந்தன. இன்னோரன்ன இயல்பு வாய்ந்த கட்டட அமைப்பினைக் கண்ட அக்கேயர்கள் கிரீஸ் நகரிலேயே தாம் வாழ உறுதிகொண்டு, அதற்கு ஆவன அமைத்துக் கொண்டனர். நல் வாழ்வுக்கு இது நல்லிடம் என்று கண்ட இடங்களில், மக்கள் குடியேறி வசிக்க விரும்புவது இயற்கை தானே!... கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள் (History) பாலூர் கண்ணப்ப முதலியார் Read Books

சிறுவர் கதைக் களஞ்சியம்

படம்
நில உலகத்தைவிடக் கடலுலகம் மும்மடங்கு பெரிது, ஆழ் கடலுலகம் இன்னும் பல மடங்கு இடமகன்றது. அதில் எண்ணற்ற அழகுக் காட்சிகள் இருந்தன. எல்லையற்ற அருள்பொருட் செல்வங்கள் கொட்டிக்கிடந்தன. இந்த ஆழ்கடலுலகின் தலைநாயகமாய் அமைந்தது குமரிக்கடல், முத்தும் சங்கும் அதையே தம் தாயகமாகக் கொண்டிருந்தன. அங்கேயே அவை கருவீன்று செழித்துக் கொழித்தன. குமரிக்கோடு - பன்மலை போன்ற மலைத்தொடர்களும் கடலடியும் பவளப் பாறைகளுமாகவே அமைந்திருந்தன. ஆறுகள் போன்ற கடல் நீரோட்டங்கள் கடலுலக மெங்கணுமிருந்து வந்து, இவ்விடத்தில் பிணைந்து கலந்தன. பலவகை மணிக்கற்கள், ஆமைத் தோடுகள், திமிங்கில எலும்புகள், பாசிகள், சிப்பிகள் ஆகியவற்றை அவை அடித்துக் கொணர்ந்தன. மலைகள் அவற்றைத் தேக்கித் தம் அருகே படியவைத்தன... சிறுவர் கதைக் களஞ்சியம் (Childrens) கா. அப்பாத்துரையார் Read Books

விக்கிரமாதித்தன் கதைகள்

படம்
விக்கிரமாதித்தன் கதைகள் இருபத்துநான்கும் இரண்டாவது பதுமையாகிய மதனாபிஷேகப் பதுமை சொன்னவை ஆகும். இதில் பதுமைகள் சொல்லும் கதைகள் விக்கிரமாதித்யனின் அறிவு ஆற்றல் பராக்கிரமங்களைப் பறைசாற்றும் விதமாக உள்ளன. ஒவ்வொரு பதுமையும் ஒற்றைக்கதையாகச் சொல்லவில்லை. ஒரு கதை ஆரம்பித்து கதைக்குள் கதைக்குள் கதைக்குள் கதை என்கிற பாணியில் சொல்வதால் மொத்தப் புத்தகத்தில் பல நூறு கதைகள் உள்ளன... விக்கிரமாதித்தன் கதைகள் (Short Stories) விக்கிரமாதித்தன் கதைகள் (Adventure) Vikram and the Vampire

அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவை கதைகள்

படம்
அப்புசாமி (appusaamy) எழுத்தாளர் பாக்கியம் ராமசாமியால் எழுதப்பட்ட புதினங்களிலும் சிறுகதைகளிலும் வரும் முக்கிய நகைச்சுவைக் கதாபாத்திரத்தின் பெயர் ஆகும். முதன்முதலாக 1963 ஆம் ஆண்டு குமுதம் இதழில் வெளிவந்த சிறுகதைகளில் இக்கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த நான்கு தலைமுறைகளாக பல்வேறு கதைகளிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் மற்றும் நாடகங்களிலும் அப்புசாமி என்ற இக்கதாபாத்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஒரு நகைச்சுவை மன்றத்திற்கு இக்கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையிலும் இத்தொடர் கதைகளை ஊக்குவிக்கும் வகையிலும் "அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவை மன்றம்" என்று பெயரிடப்பட்டுள்ளது... அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவை கதைகள் (Short Stories) பாக்கியம் ராமசாமி Read Books

இந்திய இலக்கியச் சிற்பிகள்: ஔவையார்

படம்
ஒளவையார் உலகப் பெண்பாற் புலவர்களில் தலைசிறந்தவர். தமிழர்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நீங்கா இடம் பெற்றவர். சங்ககால ஒளவையாரும் இடைக்காலத்தில் சோழப் பேரரசு சிறந்து விளங்கிய போது தோன்றிய நீதிநூல் ஒளவையாரும் ஆகிய இருவருமே மிகுந்த சிறப்புக்குரியவர்கள். நீதிநூல் ஒளவையார் புகழ் தமிழகம் முழுவதும் பரவி, கற்றோரேயன்றி மற்றோரும் நினைவில் வைத்துக் கொண்டாடும்படி அமைந்தது. அதற்கு அவர் பாடிய எளிமைமிகுந்த ஆத்தி சூடி, கொன்றை வேந்தன் போலும் நீதி நூல்களே காரணமாகும். அவர் பாடல்களில் அமைந்த நெஞ்சில் ஆழப் பதியும்படியான கருத்தும் வடிவமும் நிறைந்த சிறுசிறு தொடர்களே அவரை அடிக்கடி நினைப்பூட்டுகின்றன. அதனுடன் அவர் பாடிய தனிப்பாடல்களும் மக்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்றன. அவரது புலமை, பாப்புனையும் திறன், எளியோரிடமும் கலந்து பழகி மக்கள் கவிஞராக விளங்கியமை என்பனவற்றால் பல கதைகளும் கற்பனை நிகழ்ச்சிகளும் மக்களால் சொல்லப்பட்டு வாய்மொழியாக வழங்கலாயின. அவர் இயற்றியன வல்லாத சில பாடல்களும் நூல்களும் அவரோடு தொடர்பு படுத்தப்பட்டும் காலப்போக்கில் கதைகள் பல வழங்கலாயின... இந்திய இலக்கியச் சிற்பிகள்: ஔவைய...

தண்ணீர் தேசம்

படம்
தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய புதுக்கவிதை /நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அறிவியல் உண்மைகள் இப்புத்தகத்தில் எளிய கவிதை நடையில் விவரிக்கப் பட்டுள்ளன. இக் கதையின் கதாநாயகன் கலைவண்ணன், நாயகி தமிழ்ரோஜா. கலைவண்ணன் ஒரு புரட்சிகரமான பத்திரிகை நிருபராகவும், தமிழ்ரோஜா ஒரு பணக்கார குடும்பத்து பெண்ணாகவும், இவர்களின் காதலையும், ஊடலையும் சொல்லும்போது கடல், தண்ணீர் பற்றிய அறிவியல் விவரங்களும் எடுத்துரைக்கப் பட்டுள்ளன. மீனவர்கள் வாழ்வியல் பற்றியும் பல விவரங்கள் தொகுக்கப் பட்டுள்ளன. -------------... தண்ணீர் தேசம் (நாட்டுப் பாடல்கள்) கவிஞர் வைரமுத்து Read Books

கலேவலா - பின்லாந்தின் தேசிய காவியம்

படம்
பின்னிஷ் மொழியில் vilja 'வில்யா' என்ற சொல்லுக்குத் தானியம் என்று பொருள். இந்தச் சொல் இதே பொருளில் இன்றும் வழக்கில் இருக்கிறது. ஆனால் 'கலேவலா' காவியத்தில் இச்சொல் பல இடங்களில் 'செல்வம்' என்ற பொதுச் பொருளில்தான் வருகிறது. ஆங்காங்கு இந்தச் செல்வம் என்ன என்று பார்த்தால் பின்வருவனவற்றில் ஏதாவது ஒன்றைத்தான் அது குறிக்கும்: தானியம், கால்நடை, வேட்டையின் இலக்கு. வாழ்க்கைக்கு முக்கியமான தானியம் என்னும் 'வில்யா' மனிதனின் செல்வமாயிற்று. பின்னர் வாழ்க்கைக்கு முக்கியமான எல்லாம் [உ.ம். கால்நடை] செல்வம் vilja என்று கருதப்பட்டது. தமிழரும் பண்டைக் காலத்தில் கால்நடையைச் செல்வமாகவே கருதினர். மாடு என்றால் செல்வம் என்ற ஒரு பொருளும் உண்டு... கலேவலா - பின்லாந்தின் தேசிய காவியம் (காப்பியங்கள்) ஆர். சிவலிங்கம் (உதயணன்) Read Books

தத்துவம், காமதேனு, உண்மை, ஓம் சக்தி, மாதர்

படம்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கையைஉடையவராயிருக்கலாம். அதாவது, மற்ற எல்லாரையும்விடஒரு நியாயம் அல்லது ஒரு தர்மம் அல்லது ஒரு மதம்இவற்றில் ஒன்றில் ஒருவன் விசேஷ மனப்பற்றுடையவனாய்இருக்கலாம். இவை ஒவ்வொன்றும் ஸர்வ ஸம்மதமாய் நன்மை பயக்கத் தக்கதாய் இருக்கவேண்டும் என்பது அவசியமிலை. ஒரு கொள்கை தீமையை விளையச் செய்யினும் செய்யும். ஆனால், ஒருவர் ஒரு கொள்கைப்படிகருமங்களைச் செய்யும்பொழுது அது தனக்காகவது பிறருக்காகவது நன்மை தருமென்றே செய்வார்... தத்துவம், காமதேனு, உண்மை, ஓம் சக்தி, மாதர் (கட்டுரைகள்) மகாகவி சுப்பிரமணிய பாரதியார் Read Books

ஞானரதம்

படம்
எனது ஞானத் தேரை நோக்கி "இந்த க்ஷணமே என்னை, துக்கமில்லாத பூமி எங்கேனும் உளதாயின், அங்கு கொண்டு போ" என்று ஏவினேன். ஆகா! இந்த ரதத்தை வைத்துக்கொண்டிருந்தும், இத்தனை நாள் எனக்குக் கவலையும், மன உளைச்சலும் இல்லாதிருக்க வழி தெரியாமல் போய்விட்டதே! எத்தனை நாள் எனது மனம் தூண்டிற் புழுவைப் போலத்துடித்துக் கொண்டிருக்க, அதை நிவிருத்தி செய்வதற்கு யாதொரு உபாயமும் அறியால் பரிதபித்திருக்கின்றேன். அம்மம்மா! இந்த உலகத்துக் கவலைகளை நினைக்கும்போதே நெஞ்சம் பகீரென்கிறது... ஞானரதம் (கட்டுரைகள்) மகாகவி சுப்பிரமணிய பாரதியார் Read Books

தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்

படம்
கதைகளில் அதிசயமும் அற்புதமும் கலந்திருந்தமையால் கேட்ட மக்களுக்கு ஆர்வம் அதிகமாயிற்று, நாள்தோறும் நாம் காணுகிற வாழ்வுக்குப் புறம்பாக, நம்முடைய வாழ்வினும் வளம் பெற்றதாக இருப்பதைக் கேட்கும் போது ஒரு கிளுகிளுப்பு உண்டாயிற்று. அதனால் பழங்காலக் கதைகள் பெரும்பாலும், "ஒரே ஓர் ஊரிலே ஒரே ஒரு ராஜா. அவனுக்கு ஒரு மனைவி. அவள்தான் பட்டத்து ராணி” என்று ஆரம்பித்தன. எல்லோரும் அரசர்களாவதில்லை. அந்தக் கால எண்ணத்தின்படி அரசன் எல்லாரினும் உயர்ந்தவன்; எல்லாரைக் காட்டிலும் ஆற்றலுடையவன்; எல்லாரையும்விட அதிக இன்பம் அநுபவிக்கிறவன். நம்மிடம் இல்லாத சிறந்த குணங்களும் ஆற்றலும் அவனிடம் இருந்தன. நமக்கு எவை எவை கிடைக்கவில்லையோ, நாம் எவற்றிற்காக ஏங்கி நிற்கிறோமோ, அவை அவனிடம் நிரம்ப இருந்தன. அத்தகையவனுடைய கதையைக் கேட்பவர்கள் கதையோடு ஒன்றிச் சில கணம் அந்த அரசனே ஆகிவிடுவார்கள். இனிய கனவு கண்டவர்களைப் போல கனவில் நுகர இயலாத இன்பங்களை நுகர்ந்தது போன்ற திருப்தி அவர்களுக்கு உண்டாயிற்று. இந்தத் திருப்தியே, இந்தப் போலி மன நிறைவே, கதைகளைக் கேட்கும் ஆவலைத் தூண்டியது; கேட்பவர்கள் இருந்ததனால் சொல்பவர்களுக்கும் கற்...

குழந்தைக் கல்விச் சிந்தனைகள்

படம்
குழந்தைகள் கல்வியிலும், குழந்தைகளுக்கான பிரயோக உளவியற் புலத்திலும் பிரெட்ரிக் புரோபல் தனித்துவமான பங்களிப் பினைச் செய்துள்ளார். துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கிக் குழந்தை களுக்குக் கற்பிக்கும் எதிர்மறைப் பாரம்பரியத்தை உடைத்தெறிந்த வர்களுள் இவர் குறிப்பிட்டுக் கூறப்படக் கூடியவர். குழந்தைக் கல்வி என்பது ஒரு மகிழ்ச்சி தரும் பூங்காவாகவும், உற்சாகம் தரும் நந்தவன மாகவும் இருத்தல் அவரது இலட்சியமாக அமைந்தது... குழந்தைக் கல்விச் சிந்தனைகள் (Philosophy) ஜோன் கென்றி பெஸ்டலோசி Read Books

தமிழ்ச் சொல்லாக்கம்

படம்
புதுப்புது தேடல்களை ஆர்வத்தோடு எல்லாத் துறைகளிலும் ஈடுபாட்டோடு அணுகும்போது பழைய சுவடுகளையும் நினைத்துப் பார்ப்பது ஒருவகையில் ஆர்வத்தைக் கிளறச் செய்யும். இந்த மலரும் நினைவுகள் எல்லாவற்றுக்கும் பொருந்தும். பழைய திரைப்படப் பாடல்களில் மனம் பதித்து அதிலேயே பற்றுக்கொண்டிருப்பவர்களை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். இப்படிப்பட்ட உணர்வை, உவமைக் கவிஞர் சுரதா, பழைய நூல்களிலிருந்து திரட்டி வைத்திருந்த அரிய சொல்லாக்கங்களைச் சுவைபடத் தொகுத்ததன் மூலம் தந்திருக்கிறார்... தமிழ்ச் சொல்லாக்கம் (Literary) உவமைக்கவிஞர் சுரதா Read Books

வாழ்க்கை நலம்

படம்
ஒரு மனிதன் எந்த மொழியைக் கற்பது என்ற வினா எழுமானால் ஐயத்திற்கிடமின்றிக் கிடைக்கக் கூடிய முதல் விடை அவனுடைய தாய்மொழி என்பதே. தாய் மொழியை ஆரம்பக் கல்வியிலிருந்து பல்கலைக் கழகம் ஈறாக ஆய்வு நிலையில் கூடப் பயிற்று மொழியாகவும் எழுதும் மொழியாகவும் கற்கும் மொழியாகவும் இருக்க வேண்டும். இது மனிதவியல் விஞ்ஞானத்தின் தெளிந்த முடிவு... வாழ்க்கை நலம் (General) குன்றக்குடி அடிகளார் Read Books

பொன்னியின் செல்வன்

படம்
ஏரிக் கரையிலிருந்து கீழிறங்கித் தென்திசை சென்ற பாதையில் குதிரையைச் செலுத்தியபோது வந்தியத்தேவனுடைய உள்ளம் ஏரி அலைகளின் மீது நடனமாடிய படகைப் போல் ஆனந்தக் கூத்தாடியது. உள்ளத்தின் உள்ளே மறைந்து கிடந்த குதூகலம் பொங்கித் ததும்பியது. வாழ்க்கையில் வேறு யாரும் காணாத அதிசய அனுபவங்களைத் தான் அடையும் காலம் நெருங்கி விட்டதென்று அவனுடைய உள்ளுணர்ச்சி சொல்லியது. சோழ நாட்டை அணுகும்போதே இவ்வளவு ஆனந்தக் கோலாகலமாயிருக்கிறதே? கொள்ளிடத்தைத் தாண்டி விட்ட பின்னர் அச்சோழ நாட்டின் நீர்வளமும் நிலவளமும் எப்படியிருக்கும்? அந்நாட்டில் வாழும் மக்களும் மங்கையரும் எப்படியிருப்பார்கள்? எத்தனை நதிகள்? எத்தனை குளங்கள்? எத்தனை தௌிநீர் ஓடைகள்? கவிகளிலும் காவியங்களிலும் பாடப்பெற்ற பொன்னி நதியின் காட்சி எப்படியிருக்கும்? அதன் கரைகளிலே பூத்துக் குலுங்கும் புன்னை மரங்களும் கொன்னை மரங்களும் கடம்ப மரங்களும் எத்தகைய மனோகரமான காட்சியாயிருக்கும்? நீரோடைகளில் குவளைகளும் குமுதங்களும் கண்காட்டி அழைப்பதும் செந்தாமரைகள் முகமலர்ந்து வரவேற்பதும் எத்தகைய இனிய காட்சியாயிருக்கும்? காவேரியின் இரு கரைகளிலும் சிவபக்திச் செல்வர்களான...

நேமிநாதம் மூலம் உரையுடன்

படம்
நேமிநாதம் என்னும் இந்நூல் எழுத்து இலக்கணத்தையும் சொல் இலக்கணத்தையும் சுருக்கிக் கூறும் நூல் ஆகும். அதனால், இதனைச் சின்னூல் என்று கூறலாயினர். இஃது எழுத்து அதிகாரம் சொல் அதிகாரம் என்னும் இரண்டு அதிகாரங்களை உடையது. இது தொல்காப்பியத்தை முதல் நூலாகக் கொண்டு இயற்றப்பட்ட நூல் ஆகும்... நேமிநாதம் மூலம் உரையுடன் (இலக்கண நூல்கள்) குணவீரபண்டிதர் Read Books

தமிழ்மொழியின் வரலாறு

படம்
நூல்களின் வரலாறும் நூலாசிரியர்களின் வரலாறும் பாஷை வரலாற்றொடு நேரே சம்பந்தப் பட்டனவல்ல. எனினும் ஓராற்றாற் சிறிதளவு இயைபுண்டு. அவ்வியைபு நினைவிலிருக்கவேண்டும். பொருள் அறிவுறுக்கும் ஒலிகளின் தோற்றமும் சொல்லாக்கமும் பேச்சுவழக்கும்- அது பரவியவாறும் பாஷையாயினமையும், பாஷையின் நெடுங்கணக்கும், எழுதப்படுமாறும், ஏட்டுவழக்கும், இலக்கண வரம்பும், பாஷையமைப்பும், சொன்மரபும், நூன்மரபுமாகிய இவையனைத்துமே பாஷை வரலாற்றின் விஷயங்களாம்... தமிழ்மொழியின் வரலாறு (வரலாறு) வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் Read Books

இலக்கிய இன்பம்

படம்
அறிவு நூல்கள் நமக்கு நம்முடைய வாழ்வின் லட்சியத்தைக் காட்டும், அதை அடைவதற்கு வேண்டிய சாதனங்களையும் செய்து தரும். லட்சியம் தெரிந்தாலும் போதாது, சாதனங்களைப் பெற்றாலும் போதாது. லட்சியத்தை அடைந்து தீர வேண்டுமென்ற அடங்காத ஆர்வம் உண்டானால் தான் லட்சியத்தை அடைவோம். அத்தகைய ஆர்வத்தை உண்டாக்குவது தான் இலக்கியத்தின் தனிப்பெரும் நோக்கம். ஆயினும் அதன் அற்புத லட்சணம் யாதெனில் லட்சியம் இது என்று அறிவு நூல் கூறுகிறது போல் அதைக் குறித்து விவரித்துக் கூறாமலே நம்முடைய மனத்தில் ஆசையை எழுப்புவதேயாகும். இப்படி அறிவு மூலமாக எதையும் கூறாமல் நம்மை உயர்த்துவதனாலேயே இலக்கியத்தை வாழ்வின் ஜீவ நாடி என்று பெரியோர்கள் கூறுகிறார்கள்... இலக்கிய இன்பம் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை Read Books