';" aria-label="breadcrumb"> Home Tamil Novel Love Stories உத்தரகாண்டம் காதல் கதைகள் Back உத்தரகாண்டம் ராஜம் கிருஷ்ணன் உத்தரகாண்டம் (சமூக நாவல்) ராஜம் கிருஷ்ணன் -------------- முன்னுரை இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், தொண்ணுறுகளின் பிற்பகுதியில் இந்திய சுதந்தரத் திருநாளின் பொன்விழா கொண்டாடப்பட்டது. முதல் சுதந்தரத் திருநாளின் பரவச உணர்வுகளை, அநுபவித்த அந்நாளை மக்கள், அன்றைய மகிழ்ச்சி அநுபவத்தில் நூற்றில் ஒரு பங்கு கூடப் பிரதிபலிக்காத கொண்டாட்டத்தைக் காண்கையில், பழைய நினைவுகளையே அசைபோடுவது தவிர்க்க இயலாததாக இருந்தது. புதிய தலைமுறைகள், நுகர்பொருள் வாணிப அலையிலும், சினிமா, சின்னத்திரை மாயைகளிலும், வெளிநாட்டு வாய்ப்புகளைத் தேடி, நுழைவுக்கான அனுமதிதேடி அந்...